வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஏப்ரல் 2014
- ஏப்ரல் 30:
- இலங்கையில் பளை நோக்கிச் சென்ற விரைவு தொடருந்து ஒன்று மாத்தறை நோக்கிச் சென்ற விரைவு வண்டி ஒன்றுடன் குருணாகல் பொத்துகெர என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதியதில் 75 பேர் காயமடைந்தனர். (தமிழ்மிரர்)
- பாக்கித்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பைச் சேர்ந்தவராகக் கருதப்படும் இலங்கையின் கண்டியைச் சேர்ந்த ஒரு நபர் சென்னையில் கைது செய்யப்பட்டார். (பிபிசி)
- யெமனில் அல் காயிதா போராளிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். (டெய்லி ஸ்டார்)
- சிரிய உள்நாட்டுப் போர்: சிரியாவில் துவக்கப் பள்ளி ஒன்றின் மீது விமானப் படையினர் குண்டு வீசியதில் 25 மாணவர்கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- புரூணையில் கடுமையான இசுலாமியச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. (அல்ஜசீரா)
- இந்தியப் பொதுத் தேர்தல், 2014: இந்தியாவின் 7 மாநிலங்களிலும் இரண்டு ஆட்சிப்பகுதிகளிலும் வாக்கெடுப்பு இடம்பெற்றன. (பிபிசி)
- ஏப்ரல் 29:
- அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தின் பல பகுதியை பயங்கர சூறாவளி தாக்கியது. (சென்னை ஆன்லைன்), (மாலை மலர்)
- அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் உருவாகிய பயங்கர சூறாவளி 200 மைல் தொலைவிலுள்ள குவாபாவ் பகுதியில் மையம் கொண்டது (லங்கா ஸ்ரீ)
- ஈராக்கில் கார் குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர். 30 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். (தினத்தந்தி)
- சிரியாவொன் ஓம்சு நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 37 பேர் கொல்லப்பட்டனர். 85 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- ஏப்ரல் 28:
- 17ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற எசுப்பானிய எழுத்தாளர் மிகெல் தே செர்வாந்தெசின் உடல் எச்சங்களைக் கண்டுபிடிப்பதற்காக மாட்ரிட் நகரத்து மடம் ஒன்றில் லட்சம் யூரோ செலவில் தோண்டித் தேடப்போவதாக ஸ்பெயினின் தடயவியல் நிபுணர்கள் அறிவித்தனர். (பிபிசி), (ஒன் இந்தியா)
- 2013இல் எகிப்து மின்யா காவல் நிலையத்தை தாக்கினார்கள் என்ற வழக்கில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் முகமது பேடி உட்பட 638 பேருக்கு எகிப்திய நீதிமன்றம் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. (ராய்ட்டர்சு)
- போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை நடுவானில் தாக்கி அழிக்கும் நவீன ரக ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது. (தினகரன்)
- ஐக்கிய அமெரிக்காவின் மத்திய, தெற்குப் பகுதிகளைத் தாக்கிய சுழற்காற்றினால் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- மத்திய ஐரோப்பாவில் இருந்து சிலோவாக்கியாவூடாக உக்ரைனுக்கு எரிபொருள் கொண்டு செல்வதற்கான உடன்பாடு இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்டது. (பிபிசி)
- ஏப்ரல் 27:
- தென் கொரியாவில் 475 பயணிகளோடு மூழ்கிய படகு விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் சங் ஹாங் வொன் தனது பதவியைத் துறப்பதாக அறிவித்தார். (அல்ஜசீரா)
- முன்னாள் திருத்தந்தைகள் 23ம் யோவான், மற்றும் 2ம் அருள் சின்னப்பர் ஆகியோரைக் கத்தோலிக்கத் திருச்சபை புனிதர்களாக அறிவித்தது. (டெலிகிராப்)
- உருசியாவின் கிழக்கு அல்த்தாய் பகுதியில் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். (பிபிசி)
- ஓக்லகோமாவில் சுழல் காற்று தரை தட்டியதில் 2 பேர் கொல்லப்பட்டனர். (ஏபிசி)
- ஏப்ரல் 26:
- உக்ரைன் விவகாரத்தின் எதிரொலியாக உருசியா மீது புதிதாக கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க ஜி-7 நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர். (லங்காஸ்ரீ)
- ஆப்கானித்தானின் தெற்கே உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 5 பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஆப்கானித்தான் அரசுத்தலைவர் தேர்தல் எவரும் அறுதிப் பெரும்பான்மை பெறாததால் இரண்டாம் வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. (ராய்ட்டர்சு)
- வெனிசுவேலாவின் புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். (BBC)
- ஏப்ரல் 25:
- கிழக்கு உக்ரைனில் இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று எறிகணையினால் உந்தப்படும் எறிகுண்டு ஒன்றினால் தாக்கப்பட்டு சேதமடைந்தது. (டெலிகிராப்)
- இந்தியாவின் சார்க்கண்ட் மாநிலத்தில் பேருந்து ஒன்று மாவோயிசத் தீவிரவாதிகளின் நிலக்கண்ணி ஒன்றினால் தாக்கப்பட்டதில் 3 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- இந்தியாவின் தில்லியின் தெற்கு பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தில் குடிசைகள் எரிந்து நாசமாயின. (புதியதலைமுறை தொலைக்காட்சி)
- இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்த வழக்கை இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. (பிபிசி)
- ஏப்ரல் 24:
- இலங்கையின் வடக்கே யாழ் பல்கலைக்கழக விடுதியில் இராணுவத்தினர் திடீர் சோதனை நடத்தினர். (தமிழ்மிரர்)
- இந்தியா, சீனா, பாக்கித்தான் உள்ளிட்ட 8 நாடுகள் ஒன்றாக இணைந்து சீனக் கடல் பகுதியில் கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டன. (தினமணி)
- ஆப்கானித்தான் தலைநகர் காபூலில் ஆப்கானியக் காவல்துறையினன் ஒருவன் மூன்று அமெரிக்க மருத்துவ அதிகாரிகளைச் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டான். (பிபிசி)
- இந்தியாவின் காச்மீரில் மாவோயிஸ்டுகளுடன் இடம்பெற்ற மோதலில் ஆறு காவல்துறையினரும், தேர்தல் அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- இந்தியப் பொதுத் தேர்தல், 2014: தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் மக்களவைத் தேர்தல்கள் இடம்பெற்றன. (டைம்ஸ் ஒஃப் இந்தியா)
- ஏப்ரல் 23:
- மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் முன்னாள் தலைவர் பிரான்சுவா பொசீசே மீது ஐநா அவையில் அமெரிக்கா மற்றும் பிரான்சு கொண்டுவரவிருந்த தடைகளை உருசியாவும் சீனாவும் இடைநிறுத்தின. 2013 மார்ச் மாதத்தில் பொசீசே முசுலிம் செலெக்கா போராளிகளால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். (ராய்ட்டர்சு)
- கொங்கோவில் தொடருந்து விபத்து ஒன்றில் 63 பேர் கொல்லப்பட்டனர், 80 பேர் காயமடைந்தனர். (ராய்ட்டர்சு)
- பாலத்தீனப் போராளிக் குழுக்கள் ஃபதஹ், மற்றும் ஹமாஸ் ஆகியன கூட்டு அரசு ஒன்றை அமைக்கவிருப்பதாக அறிவித்தன. இவர்கள் 2007 இல் பிரிந்து சென்றனர். (பிபிசி)
- இலங்கையின் வடமாகாண சபையில் வெற்றிடமாக இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இடத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். தவராஜா நியமிக்கப்பட்டார். (தமிழ்மிரர்)
- ஏப்ரல் 22:
- பாக்கித்தானின் வடமேற்கே இடம்பெற்ற இரண்டு குண்டுத் தாக்குதல்களில் 9 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். (ராய்ட்டர்சு)
- சோமாலி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மொகடிசுவில் சுட்டுக் கொல்லப்பட்டார். (ஏபிசி)
- ஏப்ரல் 21:
- புத்தரின் உருவத்தை தனது கையில் பச்சைக் குத்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் பிரித்தானியப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவரை இலங்கை நாடு கடத்தியது. (உதயன்)
- யெமனில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்றில் 30 அல் காயிதா போராளிகளும், 6 பொதுமக்களும் கொல்லப்பட்டனர். (சீஎன்என்)
- 166 பேருடன் சென்ற மலேசியா எயர்லைன்ஸ் போயிங் 737 விமானம் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. (ஏபிசி)
- கலிபோர்னியாவில் இருந்து ஹவாய் நோக்கிச் என்ற விமானத்தின் சக்கரங்களுக்குள் அமர்ந்து சென்ற 16 வயது சிறுவன் -80°ப வெப்பநிலை, ஒக்சிசன் பற்றாக்குறையுடன் 5 மணி நேரம் பயணித்து உயிருடன் மீண்டான். (எல்லே டைம்சு)
- மார்ச் 8 இல் 239 பேருடன் காணாமல் போன மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 ஐத் தேடும் பணியில் அமெரிக்கக் கடற்படையின் நீர்மூழ்கி ஈடுபடுத்தப்பட்டது. (ராய்ட்டர்சு)
- விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த மேலும் ஒரு வீட்டை இலங்கை ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர். (ஒன் இந்தியா)
- யெமனில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்றில் 30 அல் காயிதா போராளிகளும், 6 பொதுமக்களும் கொல்லப்பட்டனர். (ஏபி)
- தென் கொரியாவில் ஏப்ரல் 16 இல் நடந்த படகு விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. 238 பேரைக் காணவில்லை. (ராய்ட்டர்சு)
- ஏப்ரல் 20:
- உக்ரைனின் கிழக்கே உருசிய ஆதரவாளர்கள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். (அல்ஜசீரா)
- அல்சீரியாவில் போராளிகள் நடத்திய தாக்குதல் ஒன்றில் 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (பிடிசி)
- திருத்தந்தை பிரான்சிசு தலைமையில் நடைபெற்ற உயிர்ப்பு ஞாயிறு ஆராதனையில் 150,000 பேர் வரை கலந்து கொண்டனர். (டைம்)
- பாகிஸ்தானில் நடைபெற்ற சாலை விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர். (தினமணி)
- ஏப்ரல் 19:
- உருசியாவின் மூர்மன்ஸ்க் நகரில் விண்வீழ்கல் ஒன்று வீழ்ந்து வெடித்தது. (மிரர்)
- ஏப்ரல் 18:
- சிரிய உள்நாட்டுப் போரில் உயிரிழந்த சிறுவர்களின் எண்ணிக்கை 15,000 எனக் கணிக்கப்பட்டுள்ளது. (துருக்கியப் பிரசு)
- தெற்கு சூடான், போர் நகரில் ஐநா முகாமில் தங்கியிருந்த பொதுமக்கள் பலர் ஆயுததாரிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- எவரெஸ்டு மலையில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக 12 பேர் உயிரிழந்தனர். (கார்டியன்)
- மெக்சிகோவின் பெட்டாத்திலான் நகருக்கு அருகே 7.5-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. (யூஎஸ்ஜிஎஸ்)
- சனிக் கோளின் புதிய துணைக்கோள் ஒன்று உருவாகுவது கண்டுபிடிக்கப்பட்டது. (பிபிசி)
- ஏப்ரல் 17:
- பன்றிக் காய்ச்சல், இந்தியாவின் தலைநகர் டெல்லியில் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது (நியூ இந்தியா நியூஸ்)
- ஏப்ரல் 16:
- நியு யார்க் நகரில் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து கண்காணிக்கும் சர்ச்சைக்குரிய கண்காணிப்புத் திட்டத்தை நியுயார்க் போலிஸ் திட்டம் கைவிடப்பட்டது. (பிபிசி)
- ஈழப் போரில் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு மனநல சிகிச்சை அளிக்க இலங்கை அரசு திட்டம். (தினமலர்)
- திருநங்கைகள் இந்தியாவின் மூன்றாவது பாலினமாக அங்கீகரித்து இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது (மாலைமலர்)
- இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 50 பேர் படுகாயமடைந்தனர் (என்.டி-டிவி)
- தென் கொரியாவில் 470 பேருடன் கப்பல் கவிழ்ந்தது (பிபிசி)
- ஏப்ரல் 12:
- தமிழகத்தின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் மே 29ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு விசைப்படகு மற்றும் இழுவலை படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. (தினமணி)
- ஈராக்கில் பல்வேறு கார்க் குண்டு தாக்குதல்களில் 34 பேர் உயிரிழந்தனர். (மாலைமலர்)
- ஏப்ரல் 11:
- விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 65 விடுதலைப்புலிகளை இலங்கை ராணுவம் கைது செய்திருக்கிறது (ஒன் இந்திய தமிழ்)
- இலங்கை வவுனியா மாவட்டத்தில் இலங்கை ராணுவத்துடன் நிகழ்ந்த சண்டையில் விடுதலைப்புலிகள் எனக் கருதப்படும் இருவர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர் (தினமணி)
- ஏப்ரல் 10:
- இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பணி பாதுகாப்புக்கு சென்ற மத்திய போலீஸ் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் கண்ணிவெடியில் சிக்கி உயிரிழந்தனர்.(தமிழன் தொலைக்கட்சி)
- ஏப்ரல் 9:
- ஏப்ரல் 8:
- விடுதலைப் புலிகள் இயக்கத்தில் செயல்பட்டதாகக் கூறப்படும் முக்கிய உறுப்பினர் சுப்ரமணியம் கபிலன் என்பவரை இலங்கைப் போலிசார் கைது செய்திருக்கிறார்கள்.(பி பி சி )
- ஏப்ரல் 7:
- இந்தியாவில் 32 விடுதலைப்புலிகள் தங்கி இருப்பதாக இலங்கை அரசு தகவல் வெளியிட்டுள்ளது. (புதியதலைமுறை தொலைக்காட்சி)
- தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 32 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில்(சீனா டெய்லி)
- ஏப்ரல் 6:
- டாக்காவில் நடந்த 2014 ஐசிசி உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப் போட்டியில் வென்று இலங்கைத் துடுப்பாட்ட அணி (படம்) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. (பிபிசி)
- வட கிழக்கு நைஜீரியாவில் உள்ள மசூதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் இறந்தனர். (தினகரன்)
- ஏப்ரல் 5:
- பாகிஸ்தானின் மத்திய மகாணமான பஞ்சாபில் மலை பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து 16 பேர் பலி. (தினத் தந்தி)
- ஏப்ரல் 4:
- சமூக வளர்ச்சி படிமுறை சுட்டியில் 132நாடுகளில் ;இலங்கைக்கு 85வது இடம் (உதயன்)
- ஏப்ரல் 3:
- பாக்கித்தானின் முன்னாள் அரசுத்தலைவர் பெர்வேஸ் முஷாரஃப் இஸ்லாமாபாத்தில் படுகொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார். (டைம்ஸ் ஒஃப் இந்தியா)
- சனிக் கோளின் துணைக்கோளான என்சலடசுவின் மேற்பரப்பின் அடியில் பெருமளவு திரவ நீர் இருப்பதாக நாசா, மற்றும் ஈசா கண்டுபிடித்துள்ளனர். (பிபிசி)
- ஏப்ரல் 2:
- திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து ஆத்திரேலியாவின் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. (ஏஎஃப்பி)
- ஏப்ரல் 1:
- சிலியின் அருகே அமைதிப் பெருங்கடலில் இடம்பெற்ற 8.2 அளவு நலநடுக்கத்தினால் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் 5 பேர் கொல்லப்பட்டனர். ஆழிப்பேரலை எச்சரிக்கை விடபட்டுள்ளது. (ஏபி)
- கினியில் பரவிய எபோலா நோயின் தாக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது. லைபீரியாவில் இருவர் உயிரிழந்தனர். (ஸ்கை நியூஸ்)