விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு67
ஐந்தாயிரம் கோப்புகள்
தொகுதமிழ் விக்கி ஊடகப்போட்டியின் மூலமாக இதுவரை (27 டிசம்பர் 2011) 5000+ ஊடகக்கோப்புகள் பதிவேற்றப்பட்டுள்ளன. இதுவரை பலரும் கண்டிராத தொழிற்கலைகளும் தமிழர் வாழ்விடங்களும் சுற்றுலாத் தலங்கள், ஊர்கள், மக்கள் எனப் பல தரப்பு சார் படங்களும், நிகழ்படங்களும், ஒலிக்கோப்புகளும் பதிவேற்றப்பட்டுள்ளன. சோடாபாட்டில் நல்கை விண்ணப்பத்தில் 3000 கோப்புகளை பொதுவிற்கு வழங்குவது என்று கூறியிருந்தது நினைவிருக்கலாம். தற்போது அதனை மிஞ்சி 2000++ என்ற அளவில் பயணித்து வருகிறோம்.
போட்டியை நடத்திவரும் குழுவிற்கும் உடன் உதவி புரியும் தகவலுழவன் போன்றோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் பல கோப்புகளைப் பெற்று நாம் 8000+ என்ற இலக்கை அடைவோம் எனபதில் எனக்கு ஐயம் இல்லை. :) --சூர்யபிரகாசு உரையாடுக... 17:18, 27 திசம்பர் 2011 (UTC)
மகிழ்ச்சியான செய்தி, சூரியா. புதிய பயனர்களை மட்டும் அல்லாது ஏற்கனவே இருக்கும் பங்களிப்பாளர்களும் ஊடகக் கோப்புகளைப் பதிவேற்றத் தூண்டுதலாக உள்ளவாறு இப்போட்டி உள்ளது சிறப்பு. --இரவி 05:19, 30 திசம்பர் 2011 (UTC)
விக்கி ஊடகப்போட்டிக்கு விக்கிச் சமூகத்தினரும் அதற்கு வெளியிலுள்ளோரும் பரப்புரை உள்ளிட்ட பலவழிகளில் பங்களிப்பு செய்து வருகின்றனர். அனைவருக்கும் நன்றியுடையோம்.--சஞ்சீவி சிவகுமார் 10:42, 30 திசம்பர் 2011 (UTC)
2011 ஆண்டு அறிக்கை
தொகுதமிழ் விக்கியின் 2011 ஆண்டு அறிக்கையை இங்கு படிக்கலாம்: விக்கிப்பீடியா:2011 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2011 Tamil Wikipedia Annual Review. திருத்தங்கள், தகவல் சேர்ப்புக்களை நீங்கள் அந்த அறிக்கையில் நேரடியாகச் செய்யலாம்.--Natkeeran 21:19, 2 சனவரி 2012 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா 43,000 கட்டுரைகள்
தொகுதமிழ் விக்கிப்பீடியா 43,000 கட்டுரை எண்ணிக்கையை அடைந்த இந்த வினாடியில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். பங்களித்த அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்--P.M.Puniyameen 02:04, 29 திசம்பர் 2011 (UTC)
- கடந்த ஆண்டு கட்டுரை எண்ணிக்கை கூடியதில் உங்கள் பங்கு கணிசமானது. எனவே, எனது நன்றியையும் வாழ்த்தையும் உங்களுக்குச் சிறப்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் 50,000 கட்டுரைகளை எட்டிய பிறகு ஒட்டு மொத்தமாக கொண்டாடலாம் என்று இருக்கிறேன் :)--இரவி 05:17, 30 திசம்பர் 2011 (UTC)
- 50,000 கட்டுரைகள் என்னும் அளவு இப்போது கைக்கு எட்டிய தொலைவிலேயே உள்ளது. இன்னும் 7,000 கட்டுரைகளே தேவை. மிக விரைவில் இலக்கை அடைந்து விடலாம். --- மயூரநாதன் 05:55, 30 திசம்பர் 2011 (UTC)
- மிக்க நன்றி இரவி, 50000 என்பது மயூரநாதன் ஐயா கூறியதைப் போல பெரிய இலக்கல்ல. தமிழ் விக்கியின் தற்போதைய பயனர்களின் உத்வேகத்தைப் பார்க்கும் போது ஆறு மாதங்களுக்குள் இவ்விலக்கை அடையலாம் என நினைக்கின்றேன். இதனை ஓர் இலக்காக வைத்து அனைவரும் கூட்டிணைப்புடன் செயற்படுவோம். முடியும். நிச்சயமாக முடியும்.--P.M.Puniyameen 15:55, 30 திசம்பர் 2011 (UTC)
- தற்போது நாள்தோறும் சராசரியாக 35 புதிய கட்டுரைகள் துவக்கப்படுகிறது, வரும் தமிழ் புத்தாண்டு அன்று (சித்திரை திங்கள் முதல் நாளில்) நமது திட்ட இலக்கான 50000 கட்டுரைகள் அடைய நாள்தோறும் சராசரியாக 75 புதிய கட்டுரைகள் துவக்கப்படவேண்டும். பயனர்கள் விரைந்து செயல்படவேண்டும். --ஸ்ரீதர் /பேசுக 01:13, 23 சனவரி 2012 (UTC)
இது பெரிய விடயமல்ல ஸ்ரீதர், இருந்தாலும் சில நேரங்களில் எமது சில மூத்தவர்களின் அன்பு (அம்பு) வார்த்தைப் பிரயோகங்கள் இதயத்தைத் தைத்து விடுவதால் 50000 ஆயிரம் என்ற இலக்கிற்கு காலவரையரை விதிப்பதென்பது தமிழ் விக்கிப்பீடியாவைப் பொருத்தவரையில் மனக்கிலேசங்களை உருவாக்கக்கூடியதே. இதுபோன்ற ஒரு பயணத்தில் இலக்கு வகுத்து வேகமாக செல்வதைவிட மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விக்கிப்பயணத்த வேகத்தில் பயணிப்பதே புதிய பயனர்கள் என்ற அடிப்படையில் தமிழ் விக்கியில் எமது நிலைப்புக்கு ஆரோக்கியமானதாக இருக்கும்--P.M.Puniyameen 07:08, 23 சனவரி 2012 (UTC)
- தாங்கள் மனவேதனையை என்னிடம் பகிர்ந்து கொண்டதை பற்றி தங்கள் மீது நான் மேலும் பெருமதிப்பு கொள்கிறேன்.விமரிசனங்கள் நம்மை மேம்படுத்தும் என்பதை தாங்கள் அறிந்ததுதானே! சமூக நோக்கில் செயல்படுவோர் இலக்கை நோக்கி செல்ல வேண்டுமே அன்றி பலனை எதிர்பார்க்ககூடாது.
- தங்கள் கடமையை சோர்வின்றி, ஓயாது நிறைவேற்றுங்கள்.தங்களிடம் நாங்கள் அதிகம் எதிர்பார்க்கின்றோம். --ஸ்ரீதர் /பேசுக 03:08, 24 சனவரி 2012 (UTC)
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
தொகுஇன்று மலர்ந்துள்ள 2012 ஆம் ஆண்டு அனைவருக்கும் சௌபாக்கியமிக்க ஆண்டாக அமையட்டும். அனைத்து விக்கி அன்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்--P.M.Puniyameen 01:08, 1 சனவரி 2012 (UTC)
- அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:42, 1 சனவரி 2012 (UTC)
பிறந்திருக்கும் ஆங்கிலப் புத்தாண்டில் எல்லோரும் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள். --- மயூரநாதன் 03:54, 1 சனவரி 2012 (UTC)
- அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் !! வரும் ஆண்டில் தமிழ் விக்கிப்பீடியாவும் பல புதிய மைல்கற்களை எட்டி தரத்திலும் வளத்திலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன் !!--மணியன் 04:50, 1 சனவரி 2012 (UTC)
- அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். --Natkeeran 20:01, 1 சனவரி 2012 (UTC)
விக்கி நண்பர்களுக்கு, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2012 சேலம் அன்பன்
- அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.--கலை 13:02, 2 சனவரி 2012 (UTC)
தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல்
தொகுதமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி தமிழ் விக்கியூடகங்களில் (விக்கிப்பீடியா, விக்சனரி, செய்திகள், மூலம், நூல்கள், மேற்கோள்) ஒர் பரந்த உரையாடலை மேற்கொண்டு ஒரு திறனான வியூகத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்படுகிறது. இதில் தமிழ் விக்கியூடகங்கள் மீது அக்கறை உள்ள யாரும் கலந்து கொள்ளலாம். இந்தப் பணிக்கு கூடிய நேரம் அல்லது ஆற்றல் வழங்கக்கூடியவர்கள் செயற்பாட்டுக் குழுவில் சேர்ந்துகொள்ள வேண்டுகிறோம். இதன் நோக்கங்கள் பின்வருமாறு:
- அக்கறை உள்ள அனைவரையும், அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கி, மதிப்பீடு செய்து ஒரு திறனான 2012, மற்றும் 2015 வியூகம் ஒன்றை உருவாக்கல்.
- வியூகத்தை நிறைவேற்ற உதவும் செயற்திட்டங்களை வரையறை செய்தல்.
- வியூகத்தை, அதன் செயற்திட்டங்களை நிறைவேற்ற தேவையான வளங்களைத் திரட்டல்.
- வியூக நிறைவேற்றாலைக் கண்காணித்து, பின்னூட்டுகள் பெற்று, தகுந்த மாற்றங்களைச் செய்துகொள்ளல்.
மேலும் தகவல்களுக்கு: தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி
தமிழ் விக்கியூடக திட்டமிடலிலின் முதல் கட்டமாக ஒரு கேள்விக் கொத்தை தயாரித்து, பரந்த பயனர்களிக் கருத்துகளைப் பெறப்படவுள்ளது. அதற்கான கேள்விகளைப் கீழே பரிந்துரையுங்கள். அதி கூடியதாக 20-25 கேள்விகளை எடுத்துக் கொள்ளப்படும்.
மேலதிக தகவல்களுக்கு:தமிழ் விக்கியூடக கருத்தாய்வுக் கேள்விக் கொத்து (வரைவு) --Natkeeran 19:44, 1 சனவரி 2012 (UTC)
- நல்ல முயற்சி நற்கீரன்.
ஆனால் ஏன் விக்கியூடகங்கள் எனத் தலைப்பிட்டீர்கள்? தமிழ் விக்கித் திட்டங்கள் என்றிருக்க வேண்டுமா?--Kanags \உரையாடுக 21:53, 1 சனவரி 2012 (UTC)
- Wiki Media என்பதற்கு இணையான தமிழ் சொல்லாக விக்கி ஊடகம் என்று குறிப்பிட்டேன். விக்கித் திட்டங்கள் என்பதும் பொருந்தியே வருகிறது. --Natkeeran 23:33, 1 சனவரி 2012 (UTC)
- புத்தாண்டில் நல்ல துவக்கம். முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள் !!--மணியன் 03:41, 2 சனவரி 2012 (UTC)
உதவி தேவை
தொகுபுதிய பக்கம் உருவாக்கினால் அதில் எழுதியவை எதுவும் தெரியவில்லை (காலி பக்கம் மட்டுமே தெரிகிறது). உதாரணம்: லினோலெயிக் அமிலம். ஆனால், அண்மைய மாற்றங்களில் பைட் அளவுகள் உள்ளது. தொகுவை அழுத்திப் பார்த்தால் எழுதியது தெரிகிறது. உங்களால் உதவ முடியுமா?--Nan 13:10, 8 சனவரி 2012 (UTC)
உடனடியாக உதவியமைக்கு நன்றி சோடா பாட்டில்--Nan 13:28, 8 சனவரி 2012 (UTC)
கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்
தொகுமீண்டும் பெருவேகத்துடன் தானியக்கி மொழிபெயர்ப்பு கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவை தாக்குகின்றன. இவற்றை உடனடியாக கண்டறிந்து நீக்க/தடுக்க வேண்டும்.--மணியன் 14:47, 12 சனவரி 2012 (UTC)
- சுட்டியமைக்கு நன்றி மணியன். நீக்குகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 15:53, 12 சனவரி 2012 (UTC)
- தமிழ்ப் புத்தாண்டு மோகமோ! :) -- சூர்யபிரகாஷ் உரையாடுக... 17:39, 12 சனவரி 2012 (UTC)
பொங்கல் நல்வாழ்த்துகள்
தொகுஅனைத்து விக்கியர்களுக்கும் எனது இனிய முன்னதான பொங்கல் நல்வாழ்த்துகள். அன்புடன் கி. கார்த்திகேயன் 12:08, 13 சனவரி 2012 (UTC)
- அனைத்து விக்கிப்பீடியர்களுக்கும் எனது இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் !!--மணியன் 02:20, 15 சனவரி 2012 (UTC)
- அனைத்து விக்கிப்பீடியர்களுக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்--P.M.Puniyameen 02:39, 15 சனவரி 2012 (UTC)
- அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள். :) --தாரிக் அஸீஸ் உரையாடுக 15:44, 15 சனவரி 2012 (UTC)
மாணவர்களுக்கு இணையம்
தொகுசேலம் மாவட்ட அளவிலான, ஆசிரியர்களுக்கான மூன்று நாள் தமிழ்ப் பாடநூல்-பாடப்பொருள் வலுவூட்டும் பயிற்சியில் கலந்து கொண்டேன். அப்பயிற்சியின் ஒரு பகுதியாக வரும் ஆண்டுமுதல் மாணவர்களுக்கு இணையத்தைப் பயன்படுத்திக் கற்பித்தல் என்பதும், ஆசிரியர்களும் மாணவர்களும் இணையத்தை பயன்படுத்தி கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் ஈடுபடுதல் என்பதும் ஒரு செயல்திட்டமாக உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களில் இருந்தும் ஒன்றியத்திற்கு இருவர் கலந்து கொண்டோம். நான் நம் தமிழ் விக்கிபீடியாவைப் பற்றியும்,விக்கியில் உள்ள கட்டுரைகள் படங்கள், விக்சனரி பற்றியும் அதனை ஆசிரியர்களும் மாணவர்களும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றியும் பரப்புரை ஆற்றிவிட்டு வந்தேன். பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் விக்கிபீடியா பற்றி கேட்டனர்.--Parvathisri 14:56, 13 சனவரி 2012 (UTC)
- மகிழ்ச்சியான செய்தி, பார்வதி. எனது கல்லூரிப் பேராசிரியர் மூலமாகவே நான் விக்கிப்பீடியா பற்றி அறிந்தேன். இதைப் போல ஆசிரியர்கள், பள்ளிகள் மூலமாக தமிழ் விக்கிப்பீடியாவின் பயன்பாட்டைப் பெருக்க முடியும் என்று நம்புகிறேன். நன்றி--இரவி 15:08, 13 சனவரி 2012 (UTC)
- கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் விக்கியை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி பார்வதி.--சோடாபாட்டில்உரையாடுக 15:15, 13 சனவரி 2012 (UTC)
- நல்ல செய்தி. மிக்க நன்றி பார்வதி. -- சுந்தர் \பேச்சு 18:57, 13 சனவரி 2012 (UTC)
வாழ்த்துகள் பார்வதி.--Kanags \உரையாடுக 21:52, 13 சனவரி 2012 (UTC)
- நல்லதொரு முன்னெடுப்பு. ஆசிரியர்கள் விக்கியைப் பயன்படுத்துவது அதன் வளர்ச்சியிலும் கட்டுரைப் பண்புகளிலும் முன்னேற்றத்தைத் தரும்.--சஞ்சீவி சிவகுமார் 00:03, 14 சனவரி 2012 (UTC)
- வாழ்த்துகள் பார்வதி, பள்ளிகள் மூலமாக தமிழ் விக்கியைப் பயன்படுத்துவது அதன் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றத்தைத் தரும்--P.M.Puniyameen 03:35, 14 சனவரி 2012 (UTC)
- நல்ல முயற்சி பார்வதி. வாழ்த்துக்கள். --மயூரநாதன் 18:11, 17 சனவரி 2012 (UTC)
மகிழ்ச்சியான செய்தி பயனர் பார்வதி. மின்வழி கற்றல் கற்பித்தல் பற்றியும், தமிழ்விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது பற்றியும் மலேசியாவில் நடந்த அனைத்துலக் கருத்தரங்கில் எடுத்துரைத்தேன். முனைவர், பேராசிரியர் சுப திண்ணப்பன் அவகளின் மிக அருமையான நூலைக் கட்டாயம் படித்துப் பாருங்கள் (இது 1995 இலேயே எழுதிய மிக அருமையான நூல். "சுப. திண்ணப்பன், “கணினியும் தமிழ் கற்பித்தலும்”, புலமை வெளியீடு , சனவரி 1995 பக். 1-209.). 21 ஆம் நூற்றாண்டில் மி-கல்வி என்னும் தலைப்பில் இராண்டி காரிசன் எழுதிய 2 ஆவது பதிப்பாக 2011 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகமும் பயன் தரும் (Garrison, Randy D, “E-Learning in the 21st Century” 2nd Edition, Routledge 2011). தமிழ் விக்கிப்பீடியா பற்றியும் அதில் பங்களிப்பது பற்றியும் மிகப் பெரும்பான்மையருக்கு (கல்லூரிகளில்) தெரியவில்லை என்பதை என் அண்மைய இந்தியப் பயணத்தில் நான் அறிந்து கொண்டேன் (ஒருசில கல்லூரிகளில் இருந்த ஏறத்தாழ 600-700 மாணவர்கள், ஆசிரியர்களிடம் உரையாடியதில் இருந்து அறிந்து கொண்டேன்). நான் சேலம் வருவதாகவும் இருந்தது (திசம்பர் 2011), அழைப்பும் இருந்தது, ஆனால் வர இயலாது போயிற்று. பலரும் பல இடங்களிலும் பரப்புரை செய்தல் மிகவும் தேவை. பள்ளி-கல்லூரிகள் அனைத்திலும் இப்பரப்புரை செய்தல் வேண்டும்.--செல்வா 20:06, 17 சனவரி 2012 (UTC)
வாழ்த்துகள் பார்வதி.--Nan 20:31, 17 சனவரி 2012 (UTC)
- வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல.
செல்வா அய்யா அவர்களுக்கு, தகவலுக்கு நன்றி. நான் அந்த நூலை கட்டாயம் வாங்கிப் படிக்கிறேன். வரும் வாரங்களில் மேற்கண்ட பாடப்பொருள் பயிற்சியை ஆசிரியர்களிடம் சேர்ப்பிக்கும் பணிக்கு கருத்தாளராக நியமித்து உள்ளனர். அப்போது பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களிடமும் கண்டிப்பாக விக்கிபீடியா பற்றி விளக்குவேன்.--Parvathisri 12:19, 18 சனவரி 2012 (UTC)
ஒலிக்கோப்புகள்
தொகுவிக்கிப்பீடியா கட்டுரைகள் பலவற்றை ஒலிக்கோப்பாகப் பதிவேற்றி கட்டுரைகளில் ஒரு பயனர் இணைத்து வருகிறார். உ+ம்: 1997 கோயம்புத்தூர் கலவரம். இவை அனைத்தும் மிக மோசமான தரம் குறைவான ஒலிக்கோப்புகள் ஆகும். இவ்வாறான தரம் குறைவான ஒலிக்கோப்புகளைப் பதிவேற்றுவதை நாம் ஊக்குவிக்கக் கூடாது என்றே நினைக்கிறேன். இவற்றை நீக்கலாமா?--Kanags \உரையாடுக 03:22, 14 சனவரி 2012 (UTC)
- இவை விக்கிப்பீடியா:ஒலிக் கட்டுரைகள் திட்டம் இன் பகுதியாக thirdeye group அமைப்பினால் உருவாக்கப்பட்டவை. பார்வை குன்றியோருக்காக இவ்வமைப்பு இந்த ஒலிக்கோப்புகளை உருவாக்கி வைத்திருந்தது. இவை espeak கட்டற்ற மென்பொருளால் உருவாக்கப்பட்டவை. திரை ஒலிப்பான்களில் தமிழில் அதிகத் தரமான நிலையில் உள்ளது இந்த மென்பொருள் தான். ஆனால் உலாவியுடன் இது இன்னும் ஒன்றிணைக்கப்படவில்லை. எனவே நானும் சூரியாவும் காமன்சில் இவற்றை ஏற்றி விக்கிப்பீடியாவில் சேர்க்கும்படி இவ்வமைப்பினைக் கேட்டுக் கொண்டோம். பார்வை குன்றியோருக்காக இதுவரை இந்த தரத்தில் கூட வேறெந்த ஒலிப்பு வளமும் தமிழில் இல்லை. கட்டுரைகளில் இணைக்குள் அளவுக்குத் தரமில்லாமல் இருந்தால், இவற்றைத் திட்டப்பக்கத்தில் பட்டியலிட்டு கட்டுரையில் அங்கு செல்ல ஒரு சிறு இணைப்பு தரலாம் (நூலகம் திட்ட வார்ப்புரு போல). --சோடாபாட்டில்உரையாடுக 03:36, 14 சனவரி 2012 (UTC)
- விளக்கியமைக்கு நன்றி பாலா. திரை ஒலிப்பான்களில் தமிழில் அதிகத் தரமான நிலையில் உள்ளது இந்த மென்பொருள் தான் என்று கூறுகிறீர்கள். ஆனால் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வகையான மென்பொருள் ஒன்று இணையத்தில் உலாவியது. ஓரளவு தரமாகவே அது இருந்தது. அதன் இணைய இணைப்பைத் தேடி வருகிறேன். கிடைக்கவில்லை.--Kanags \உரையாடுக 03:55, 14 சனவரி 2012 (UTC)
- ஆம் கனக்ஸ். விக்கி செய்திகளில் அதைப் பயன்படுத்தி ஒரு கோப்பு உருவாக்கியதை நீங்கள் முன்பே சொல்லியதாக நினைவு. நானும் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. பார்வை குன்றியோரிடம் விசாரித்ததில் சில கட்டுள்ள வணிக மென்பொருட்கள் முன்பு இருந்தன என்றும், அவை என்ன ஆயின என்றும் தெரியவில்லை எனக் கூறினர். இந்திய மொழிகளுக்கென வேறு சில எழுத்து-ஒலிப்பு மாற்ற மென்பொருட்களும் தமிழில் உள்ளன.--சோடாபாட்டில்உரையாடுக 04:20, 14 சனவரி 2012 (UTC)
- இந்தப் பக்கத்தில் 100+ கோப்புகள் உள்ளன. மேலும் பல கோப்புகள் சேர்க்கப்படலாம். இவை அனைத்தும் கட்டுரையின் அடிப்பகுதியில் இருந்து வெளி இணைப்பாகத் தரும் தரத்தில் கூட இல்லை. எனவே, தயவு செய்து இவற்றை நீக்க வேண்டுகிறேன். //உலாவியுடன் espeak இன்னும் ஒன்றிணைக்கப்படவில்லை//. இதைச் செய்ய முனைவது சரியான தீர்வாக இருக்கும். இது குறித்து விக்கிமீடியா தொழில்நுட்பக் குழு ஆர்வம் காட்டலாம். மலையாள விக்கியர்களிடையேயும் espeak பயன்பாடு உள்ளதால் அவர்களும் ஆர்வம் காட்டலாம்--இரவி 04:36, 14 சனவரி 2012 (UTC)
- தரம் என்பதை பார்வையுள்ளவர்களின் தரப்பிலிருந்து அணுகுகிறீர்கள். பார்வையற்றவர்கள் தரப்பிலிருந்து அணுக வேண்டுகிறேன். தற்போதுள்ள சூழலில் வெளி இணைப்பாகத் தரும் அளவுக்கு இவை போதிய தரமுள்ளவை/உபயோகமமானவை என்பதே என் கருத்து. --சோடாபாட்டில்உரையாடுக 04:57, 14 சனவரி 2012 (UTC)
- விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம் என்பதால் அதில் இருக்கும் அனைத்து உள்ளடக்கமும் அதற்கேற்ற தரத்தில் இருக்க வேண்டும். அல்லது, அதற்கான முயற்சியை நாம் செய்ய வேண்டும். தரம் என்பது ஒரே அளவுகோல் தான். "பார்வை குன்றியோருக்கான வெளி இணைப்பு" என்று இதனை நாம் குறிப்பிட்டால் நன்றாக இருக்குமா? ஒரு கட்டுரையும் இல்லாதவர்கள் இந்த இயந்திர மொழிபெயர்ப்புகளையாவது வைத்துக் கொள்ளலாமே என்று கூகுள் சொல்வது மாதிரி இருக்கிறது. எப்படி தானியக்க மொழிபெயர்ப்புகளில் சோதனை நிலை மென்பொருள்களைப் பயன்படுத்தக்கூடாது என்கிறோமோ அதே போல் தானியக்க ஒலிப்பதிவுகளிலும் நிலைப்பாடு எடுப்பது நல்லது. இத்தகைய தானியக்கக் கருவிகள் விக்கிப்பீடியாவுக்கு வெளியே உள்ள கூடுதல் வசதியாகவோ உலாவியுடன் ஒன்றிணைந்ததாகவோ இருப்பதே நல்லது. பார்வை குன்றியோருக்கு கண்டிப்பாக நாம் உதவ வேண்டும். ஆனால், அதே வேளை தமிழ் விக்கிப்பீடியாவின் பராமரிப்புச் சுமையையும் கூட்டக்கூடாது. தேர்ந்தெடுத்த கட்டுரைகளை நாமே மனித முறையில் வாசித்து ஒலிப்பதிவாக்க முனையலாம். குறுந்தட்டுத் திட்டத்தில் உள்ள 200+ கட்டுரைகளுக்கு இதைச் செய்ய முனைவது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். --இரவி 05:14, 14 சனவரி 2012 (UTC)
- இரவியின் கருத்துடன் உடன்படுகிறேன். இது குறித்து ஒருமித்த நிலைப்பாடு எடுப்பது நல்லது. தானியங்கியால் ஒலிமாற்றம் செய்த விக்கிச்செய்தி ஒலிக்கட்டுரை இங்கே உள்ளது. இந்த பீட்டா மென்பொருளின் இணைய இணைப்புத் தெரியவில்லை. பதிவு செய்ய மறந்து விட்டேன்.--Kanags \உரையாடுக 05:46, 14 சனவரி 2012 (UTC)
- அந்த பீட்டா மென்பொருள் தற்போது இங்கே உள்ளது. இம்மென்பொருள் மூலம் சோதித்துப் பார்த்தேன். espeak ஐ விட ஓரளவு தரம் கூடியதாக உள்ளது.--Kanags \உரையாடுக 06:00, 14 சனவரி 2012 (UTC)
தரம் பற்றிய கருத்துகளில் எனக்கு ஒப்புதல் இல்லையெனினும், கட்டுரைகளில் சேர்த்தலுக்கு எதிர்ப்புள்ளதால் நீக்குவதற்கு நானும் இணங்குகிறேன். காமன்சில் ஏற்றி விட்டும் திட்டப்பக்கத்தில் மட்டும் இணைப்புகளாக் சேர்த்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 06:04, 14 சனவரி 2012 (UTC)
- //குறுந்தட்டுத் திட்டத்தில் உள்ள 200+ கட்டுரைகளுக்கு இதைச் செய்ய முனைவது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்//
- இப்போதைக்கு வேண்டாம். குறுந்தட்டுத் திட்டம் பல இன்னல்களைத் தாண்டி இப்போதுதான் ஓரளவு உருப்பெற்று வருகிறது. பலரும் ஆர்வத்துடன் கட்டுரைகளை உரைத்திருத்தியும் வருகின்றனர். ஏற்கனவே, படங்களும் உங்களுக்குத் தெரியுமா வகையறாக்களும் முடிந்துவிட்டன. இத்திட்டம் Visual CD திட்டமாகவே இருக்கட்டும். Audio CD போன்ற கிளைத்திட்ட முன்மொழிவுகள் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம். :) -- சூர்யபிரகாஷ் உரையாடுக... 09:45, 18 சனவரி 2012 (UTC)
கொழுப்பு தலைப்பு
தொகுமுன்பு கொழுப்பு என்றிருந்த கொலஸ்டிரால் (cholesterol) குறித்தக் கட்டுரையை (கூகுள் தமிழாக்கக் கருவி கட்டுரை) கொலஸ்டிரால் என்னும் தலைப்புக்கு நகர்த்தினேன். தற்போது, கொழுப்பு (Fat) என்னும் தலைப்பில் கட்டுரை எழுத ஆரம்பித்தால் அது உடனே # வழிமாற்று கொலஸ்டிரால் என்று காண்பிக்கிறது. இதை சரி செய்து உதவ முடியுமா? நன்றி --Nan 17:22, 14 சனவரி 2012 (UTC)
- கொழுப்பு தலைப்பை நீக்கியிருக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 17:38, 14 சனவரி 2012 (UTC)
நன்றி சோடாபாட்டில்--Nan 17:44, 14 சனவரி 2012 (UTC)
- கொழுப்பு அடங்கியதா ? :))--மணியன் 02:23, 15 சனவரி 2012 (UTC)
விருப்பம் -- சூர்யபிரகாஷ் உரையாடுக... 09:46, 18 சனவரி 2012 (UTC)
Announcing Wikipedia 1.19 beta
தொகுWikimedia Foundation is getting ready to push out 1.19 to all the WMF-hosted wikis. As we finish wrapping up our code review, you can test the new version right now on beta.wmflabs.org. For more information, please read the release notes or the start of the final announcement.
The following are the areas that you will probably be most interested in:
- Faster loading of javascript files makes dependency tracking more important.
- New common*.css files usable by skins instead of having to copy piles of generic styles from MonoBook or Vector's css.
- The default user signature now contains a talk link in addition to the user link.
- Searching blocked usernames in block log is now clearer.
- Better timezone recognition in user preferences.
- Improved diff readability for colorblind people.
- The interwiki links table can now be accessed also when the interwiki cache is used (used in the API and the Interwiki extension).
- More gender support (for instance in logs and user lists).
- Language converter improved, e.g. it now works depending on the page content language.
- Time and number-formatting magic words also now depend on the page content language.
- Bidirectional support further improved after 1.18.
Report any problems on the labs beta wiki and we'll work to address them before they software is released to the production wikis.
Note that this cluster does have SUL but it is not integrated with SUL in production, so you'll need to create another account. You should avoid using the same password as you use here. — Global message delivery 16:36, 15 சனவரி 2012 (UTC)
Wikipedia to go dark.
தொகுWikipedia to go dark to protest web piracy drafts -- மாகிர் 02:06, 17 சனவரி 2012 (UTC)
- ஆங்கில விக்கி மட்டுமே கிடைக்காது ....அதிகாரபூர்வ அறிவிப்பு --மணியன் 05:24, 17 சனவரி 2012 (UTC)
- Though the darkness is only for English wiki, I think the problems remain global / sitewide (remember ta is just a subdomain of wikipedia.org) and sopa makes it possible for the US govt to even block dns resolution for the entire domain. There needs to be greater awareness. I suggest we put up a sitenotice tomorrow the same time(removing media contest notices) for a day to educate more users about what the issue is. The notice apart from having the wmf blog links, will also have இணையத்_திருட்டு_நிறுத்தல்_சட்டம் and இணையத்_திருட்டு_நிறுத்தல்_சட்டமூலத்துக்கு_எதிராக_விக்கிப்பீடியா_குரல். I think its important for everyone to know more irrespective of taking political positions. Bengali Wikipedia has already put such a notice. Please post your views in next 12 hours(UTC -500, when english wiki goes dark) incase you have reservations / objection in using such a site notice for 1 day. ஸ்ரீகாந்த் 17:31, 17 சனவரி 2012 (UTC)
- ஆதரவு +1--மணியன் 03:55, 18 சனவரி 2012 (UTC)
- ஆதரவு +1 செய்யவேண்டிய ஒன்று என நினைக்கிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 04:03, 18 சனவரி 2012 (UTC)
- ஆதரவு +1--P.M.Puniyameen 04:06, 18 சனவரி 2012 (UTC)
- ஆதரவு +1--சோடாபாட்டில்உரையாடுக 05:17, 18 சனவரி 2012 (UTC)
பதாகை தயார். பயனர்:Logicwiki/Sandbox பக்கத்தில் 2ஆம் பாதாகையை மீடியாவிக்கி:Sitenotice மற்றும் மீடியாவிக்கி:Anonnotice இல் முழுவதுமாக பயன்படுத்துமாரு வேண்டுகிறேன். நன்றி ஸ்ரீகாந்த் 04:32, 18 சனவரி 2012 (UTC)
மேற்கண்ட முன்மொழிவை அடுத்து, கடந்த 24 மணி நேரத்துக்குப் பதாகை காட்சிப்படுத்தப்பட்டு, தற்போது நீக்கப்பட்டுள்ளது--இரவி 05:45, 19 சனவரி 2012 (UTC)
24 மணி நேரத்திற்கு...
தொகுஇணையத் திருட்டு நிறுத்தல் சட்டமூலத்துக்கு எதிராக ஆங்கில விக்கிப்பீடியாவின் குரலுக்கு ஆதரவு தெரிவிக்குமுகமாக இன்னும் 24 மணி நேரத்திற்கு நான் விக்கிப்பீடியாவில் எழுதமாட்டேன்.--P.M.Puniyameen 05:25, 18 சனவரி 2012 (UTC)
- :-) --சோடாபாட்டில்உரையாடுக 08:03, 18 சனவரி 2012 (UTC)
- +1 -- சூர்யபிரகாஷ் உரையாடுக... 09:50, 18 சனவரி 2012 (UTC)
- தமிழ்விக்கிப்பீடியாவில் 24 மணித்தியாலங்கள் எழுதமாட்டேன் என்ற எனது தனிப்பட்ட முடிவை 19ம் திகதி காலை 10.45 மணிவுடன் முடித்துக் கொள்கின்றேன். நான் எழுதமாட்டேன் என்று என்னால் மேற்கொள்ளப்பட்ட முடிவால் தமிழ்விக்கிப்பீடியாவிலோ அல்லது ஆங்கில விக்கிப்பீடியா போராட்டத்திலோ எந்தவித தாக்கமும் ஏற்பட்ட மாட்டாது. இதுபோன்ற தனி முடிவால் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. இருப்பினும் ஆங்கில விக்கிப்பீடியாவின் நியாயமான போராட்டத்தை நான் ஆதரிக்கின்றேன். அவர்களின் நியாயத்துடன் முழுமையாக இணைகின்றேன். இந்நிலையில் அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க எனக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை. 24 மணித்தியாலங்கள் எழுதமாட்டேன் என்ற எனது முடிவு ஒரு சிறுபிள்ளைத்தனமான முடிவாக இருந்தாலும்கூட என் உணர்வின் வெளிப்பாடே அது.
- இணையத்தளங்களை தணிக்கை செய்யும் அமெரிக்க காங்கிரஸ் சபையின் சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகில் அதிகம் பேர் பார்வையிடும் விக்கிபீடியா இணையதளம் நேற்று காலை 10.30 முதல் 24 மணிநேரத்திற்கு தனது சேவையை நிறுத்திக்கொண்டது. இதனால் ஆங்கில விக்கிப்பீடியாவை பார்வையிடும் பலர் பாதிப்புக்குட்பட்டிருக்கலாம். அவர்களின் இத்தகைய போராட்டம் நியாயமானது. அதேநேரம், உலகளாவிய ரீதியில் செயல்படக்கூடிய 283 விக்கிப்பீடியாக்களும் இத்தகைய நடவடிக்கையில் ஒரே நேரத்தில் ஈடுபட்டிருந்தால் முழு உலகத்தினதும் எதிர்ப்புக் குரலாக அமைந்திருக்கும். --P.M.Puniyameen 05:16, 19 சனவரி 2012 (UTC)
- அடையாள புறப்பணிப்புகள் நேரடியான மாற்றங்கள் ஏற்படுத்தாது என்பது உண்மை, ஆனால் அதையே கூட்டாக பல ஆயிரம் மக்கள் செய்யும் பொழுது அதற்கு ஒரு தாக்கம் உள்ளது. நேற்றைய எதிர்ப்பு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க பெரும் புள்ளிகளின் மேற்கோள்கள், எதிர்ப்பைப் பற்றி மேலதிக விவரங்கள் இதனை எடுத்துக்காட்டுகின்றன. ஸ்ரீகாந்த் 08:46, 19 சனவரி 2012 (UTC)
- இங்கு படித்துப் பார்க்கவும். இணைப்பு -- சூர்யபிரகாஷ் உரையாடுக... 12:11, 19 சனவரி 2012 (UTC)
நரையம் வழு களைதல்
தொகுவிக்கிமீடியா தொழில்நுட்பக்குழு இன்று (18 சனவரி) மாலை 6:30 IST (1300 UTC) ஓர் இணைய தொடர் அரட்டை சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது. விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு/நரையம் நீட்சியின் அம்சங்கள் குறித்தவை ஆலோசிக்கப்படும். விவரங்கள் இங்கே. குறிப்பாக பாமினி முறை தட்டச்சு அறிந்தவராயிருப்பின், உங்களை நான் இக்கூட்டத்திற்கு வருமாரு வேண்டிக்கொள்கிறேன். நன்றி ஸ்ரீகாந்த் 07:52, 18 சனவரி 2012 (UTC)
Building on the Foundation of a Strong and Vibrant Tamil Community
தொகுDear All,
Over the past couple of weeks, I have been sharing ideas on village pumps and mailing lists for more than 10 Indic language communities to drive community growth and project quality. In all cases, I have made sure that the ideas are specific to that community. In some cases, the ideas are somewhat similar because most of the Indic communities are at a similar stage in their evolution. I had taken some time to share this with Tamil community because I came to know that Tamil community is having some community discussions on various strategic questions related to Tamil projects.
For Tamil, my ideas/suggestions are different because of the presence of relatively larger and stronger community and the relatively higher maturity of the projecs. I would like to suggest the following 4 different ideas and request your feedback on that.
a) An Offline project
I know much have been discussed in Tamil wikipedia regarding this topic. I still recommend to go forward and release an offline version of 500/1000 selected articles from Tamil wikipedia. I am sure such a release will help Tamil wikipedia to spread its wings not only in Tamil Nadu but also in all places where Tamilians live. I can provide all external support for this project if copmmunity decides to do such a project.
b) An education program to attract students
In the Wikipedia world, a very large number of editors are students - both in college and in secondary school. The reason for this is that students are in an environment where they are absorbing (in classes and libraries) and disseminating knowledge (in submissions and tests.) This makes them ideal to be contributors to Wikipedia. It will be very useful to explore a potential education program where students and teachers can be encouraged to. In Kerala, for example, Wikipedia is already taught in 8th/9th/10th standard so there is already some academic "blessing" for it.
An education program can encourage new editors, but please be aware of the complexities. It requires a strong local community to provide training and support. It will require frequent in-class sessions to explain, repeat explanations, and clear doubts. It will need online support for newbies. It will be encouraged by frequent community meet-ups. It is important that you start on a small scale so that it is manageable. I will not recommend a number more than 50. The selection of students and teachers is critical - and you should apply great thought to making sure that the students and teachers selected have the right calibre to right in the Tamil have a strong academic foundation that controls plagiarism (which plagues our education system) and a history of innovative teaching techniques. Each community will need to take a call on whether to make it voluntary or compulsory for students.
However, the opportunity is massive given our young population (infact they are the future Tamil Wikimedians). It can be a great vehicle to bring newbies and to bring new energy to our projects. If the community is interested I can help to design and roll out this project with interested community members according to the need of Tamil wiki community. This will be done openly and collaboratively with the Tamil community.
c) GLAM
For those of you who donot know, GLAM stands for Galleries, Libraries, Archives & Museums. They are an important source of content for our projects and many of the topics assocaited with these institutions are very poorly (digitally) documented.
The advantage for the institution is that an initiative with Wikipedia serves to share knowledge (which is in any case their mission), increases footfalls for them (which is their objective) and gives them publicity (which is their motivation). The advantage for Tamil Wikipedia is that it improves very locally relevant content with strong references and pictures (where applicable.)
In summary, a way of doing GLAM is to have volunteer work as a "Wikipedia In Residence" at a GLAM. This person would explain the concept to the GLAM authorities and staff. He/she would then conduct a detailed workshop with that the staff on Wikipedia editing. After this, he/she co-ordinates editing sessions (maybe every week on a Saturday morning - as most GLAMs work on Saturdays) where local community members and GLAM staff work on creating / improving one or more articles about one or more artifacts at that GLAM. He/she will co-ordinate these sessions but over time, GLAM staff will take up the primary role. Progressively, the Wikipedian In Residence will reduce his direct involvement at that GLAM and move onto another GLAM as the staff in the first GLAM take over the project and sustain it.
Apart from the content created and the community collaboration and new editors (from GLAM staff), GLAM projects have additional benefits because media coverage can be encouraged for the intiative and visitors to the GLAM can be encouraged to participate in the editing sessions (thereby attracting even more newbies.) Tamil Nadu has a large number of GLAMs. asi.nic.in/asi_monu_alphalist_tamilnadu.asp list shows more than 400. http://www.tnarch.gov.in/ (Department of Archaeology, Government of Tamil Nadu) is definitely a place where we can get lot of information. Two institutons that I suggest in the initial phase are:
- Government State Museum : http://www.tamilselvi.com/government-state-museum.htm
- Fort Museum, Fort, St. George (Chennai) - http://asi.nic.in/asi_museums_chennai.asp
In terms of specific next steps, here is what I would suggest:
- Think about the idea and share your views
- Put together a formal proposal that can be shared with the GLAM. The proposal must include introduction to Wikipedia, benefits for the GLAM and mechanics of the Wikipedian In Residence. (I can work with and support and help interested community members put together this proposal.)
- Interested community members should volunteer to be Wikipedians In Residence.
- Individual GLAMs should be contacted with the proposal by the (proposed) Wikipedian In Residence and other community members.
You can contact Wikimedia India Chapter also for any help as chapter is also supporting GLAM initiatives.
d) Free Licensing
A great initiative that you are already doing is to encourage state governments to release all their content on free license. A fantastic thing to request is for releasing the State Encyclopadia - which is in the Tamil in Free License. It might be available in digital format and will help in creating / improvement content of Tamil wikipedia. Another thing you can explore is local government data (at a panchayat or lower level) which can be used to improve articles on villages and towns.
e) Continued outreach
Many times you might have read that Tamil/Malayalam communities are the biggest in India - which is true. It is also heartening to see outreach acitivities being conducted in Tamil Nadu. Thank you so much to all those for these efforts. We need to continue our strong outreach efforts because in absolute terms, the community sizes are still very small (compared to number of language speakers.) We desperately need more outreach programs.
Can I request all of you to share your thoughts about these ideas. Do you think they are the right ideas for Tamil? Would you suggest any alternate ideas? Please share your ideas. We shall discuss and see how we can work together. Thank you. --Shiju Alex (WMF) 11:37, 18 சனவரி 2012 (UTC)
- Hi Shiju, thanks for your efforts. Regarding your suggestions, we are already doing a featured content CD. Education program to attract students is really out of scope considering the current strength of the community. GLAM initiative could be done if we have couple of interested volunteers. As always, we will continue lobbying for free content and outreach. For small communities, we need to come up with innovative and indigenous ideas to promote the wiki culture. --இரவி 05:45, 19 சனவரி 2012 (UTC)
- Shiju, thanks for offering help. A team of volunteers is currently working on curating content for the CD. I'm sure we'll be able to use your help once the content is finalised. User:Sodabottle or User:Logicwiki may contact you when they need any support. -- சுந்தர் \பேச்சு 11:22, 25 சனவரி 2012 (UTC)
Thank you very much Ravi and Sundar for the reply.
//Education program to attract students is really out of scope considering the current strength of the community.//
I understand that considering the current strenghth of community an Education program may not viable at this point of time. We shall take it up later (when the community strenghth reaches a critical number) or we shall do it very small number. For Malayalam we tried doing two small education programs (One, two) for Malayalam Wikisource involving about 35 students (see the talk pages of the pages I provided) to digitize two old malayalam source texts. It was a success. Few of these students are editing in malayalam wikipedia now. Again as you know since number was low and since it was Wikisource managing was little easier. Few community members has plan to extend the education program for wikipedia also. They are discussing the right way (and right time also) of doing that considering the nature of malayalam wikipedia and considering various other challenges encountered in the other education programs of Wikipedia. Again the number will be very small (not more than 50, considering the strenghth of ml community)
//GLAM initiative could be done if we have couple of interested volunteers. ]]
Sure we shall work on this. Do communiuty have any prefernce on the type of institution (or a list of good institutions)that we can do a pilot GLAM for Tamil? I recommend a small (but where we get a valubale treasure of information for Tamil community) institution in which the management and staff will be supportive. Again in Malayalam, community is looking for a small institution (rather than going after big institutions) where management and staff are cooperative. If we prepare a small list of such instituions we can start preparing a proposal and approach some those institutions. I am really keen on some thing happening on GLAM in indic wikis rather than we always talk and plan for GLAM. I am sure if community decides this can be easily done since we do not require a big team of community members to manage this. I suggest to discuss this and let me know your thoughts.
//A team of volunteers is currently working on curating content for the CD. I'm sure we'll be able to use your help once the content is finalised. User:Sodabottle or User:Logicwiki may contact you when they need any support. //
Sure. I will extend all support. Please let me know when ever you require any assitance on this. I think it is a good idea that while User:Sodabottle, User:Logicwiki, and other Tamil wikipedians work on the actual article content, one or two volunteers can start working on the non-artcle pages (copyright, disclaimer, behind the scene, and other similar pages) that need to be included in the CD. I can help with that. Also start thinking about releasing the content of the CD in multiple formats, like an Android/iphone app, epub format, and other potentail mobile device formats.
Please let me know if any assistance required on any of these,
Thanks once again for the replies. --Shiju Alex (WMF) 04:25, 26 சனவரி 2012 (UTC)
விக்கிமேனியா 2012
தொகு2009, 2010, 2011 என கடந்த மூன்று ஆண்டுகளாகத் தமிழ் விக்கிப்பீடியர் விக்கிமேனியாவில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் விக்கிமேனியா நடைபெறுவதால் அந்த வட்டாரத்தில் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் கூடுதலாகப் பங்கு கொள்ள முடியும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.விக்கிமேனியா 2012க்கான உதவித்தொகை விண்ணப்பங்கள், கட்டுரை அளிப்பு விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் ஆர்வமுள்ளோர் முந்தி விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு வேண்டுகிறேன். நான் கடந்த ஆண்டு கலந்து கொண்டதால், புதிய விக்கிப்பீடியர் பலரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அடுத்த சில ஆண்டுகளுக்கு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கப் போவதில்லை என முடிவெடுத்திருக்கிறேன் :) --இரவி 05:45, 19 சனவரி 2012 (UTC)
- //புதிய விக்கிப்பீடியர் பலரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அடுத்த சில ஆண்டுகளுக்கு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கப் போவதில்லை என முடிவெடுத்திருக்கிறேன் :)// விருப்பம் -- சூர்யபிரகாஷ் உரையாடுக... 12:13, 19 சனவரி 2012 (UTC)
தமிழ் விக்கி ஊடகப்போட்டியின் பதாகை
தொகுதமிழ் விக்கி ஊடகப்போட்டியின் பதாகை காணாமல் போய்விட்டது. புதியவர்களுக்கு இது சிரமத்தைக் கொடுக்கும் என கருதுகிறேன். --Anton 20:01, 20 சனவரி 2012 (UTC)
- புகுபதிகை செய்யாதவர்களுக்கு இன்னும் இருக்கிறது அன்டன் (வெறு சிலவற்றுடன் கலந்து வரும்). புகுபதிகை செய்தவர்களுக்கு மட்டும் நீக்கியுள்ளேன். (பயனர்கள் அனைவரும் அது பற்றி இதற்குள் அறிந்திருப்பர் என்பதால்)--சோடாபாட்டில்உரையாடுக 20:32, 20 சனவரி 2012 (UTC)
- நன்றி! --Anton 20:37, 20 சனவரி 2012 (UTC)
- போட்டி முடியும் வரை (இன்னும் 1 மாதம் தான் உள்ளது) அனைவருக்கும் காட்சியில் வைப்பது நல்லது என்றே நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 22:24, 20 சனவரி 2012 (UTC)
+1 நானே மாற்றிவிடுகிறேன். :) -- சூர்யபிரகாஷ் உரையாடுக 15:30, 21 சனவரி 2012 (UTC)
- நன்றி சூர்யா.--சோடாபாட்டில்உரையாடுக 15:34, 21 சனவரி 2012 (UTC)
படத் திருட்டு
தொகுஎன்னால் தமிழ் விக்கி ஊடகப்போட்டிக்காக பதிவேற்றிய 6 படங்கள் மட்டக்களப்பு ஆங்கில கட்டுரையில் en:Batticaloa படமாற்று செய்யப்பட்டுள்ளன. என்னைப் போன்று பலருடைய படங்களும் படமாற்று செய்யப்பட்டு காணப்படுகின்றன. துரதிஸ்டம் என்னவென்றால், அழகிய படங்கள் அலங்கோலமாகக் காணப்படுகின்றன. இது பற்றி ஆங்கில, காமன்ஸ் விக்கிமீடியா தளங்களிலும் முறையிட்டுள்ளேன். --Anton 20:01, 20 சனவரி 2012 (UTC)
- எந்தப் படங்கள் செய்தவர் யாரென்று சொல்லுங்கள் அன்டன். காமன்சில் நானும் முறையிடுகிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 20:17, 20 சனவரி 2012 (UTC)
- http://commons.wikimedia.org/wiki/Commons:Deletion_requests/Images_by_User:PittyPavi இந்த சுட்டியில் "Original author of the pictures" என்பதின் கீழ் படங்களைக் குறிப்பிட்டுள்ளேன். பயனர் commons:User:PittyPavi. --Anton 20:44, 20 சனவரி 2012 (UTC)
- விரைந்து நீக்குவதற்கு எனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 22:02, 20 சனவரி 2012 (UTC)
- விரைந்து நீக்கப்படவேண்டும்.--சஞ்சீவி சிவகுமார் 23:05, 20 சனவரி 2012 (UTC)
- விரைந்து நீக்கலுக்கான வேண்டுகோள்களை திருடப்பட்ட படங்களில் சேர்த்திருக்கிறேன். நமக்கு உதவி வரும் காமன்சு நிருவாகி தன்வீரிடமும் இது பற்றி உதவி கேட்டிருக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 09:06, 21 சனவரி 2012 (UTC)
ஆயிற்று நீங்கள் பட்டியிலிட்டிருந்த படங்களை காமன்சு நிருவாகி யான் விரைந்து நீக்கியுள்ளார்.--சோடாபாட்டில்உரையாடுக 08:01, 22 சனவரி 2012 (UTC)
புதிய கொள்கை கருத்து வேண்டல் - சட்ட மிரட்டல் கூடாது
தொகுசில நாட்களுக்கு முன்னர் ஒருவர் ஒரு கட்டுரையின் பெச்சுப் பக்கத்தில் சட்ட மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார். ஆங்கில விக்கி மற்றும் பல பிற விக்கிகளில் இம்மாதிரியான சட்ட மிரட்டல் விடுபவர்களை உடனடியாக தடைசெய்து விக்கியிலிருந்து வெளியேற்ற கொள்கை உள்ளது. - en:WP:NLT. இக்கொள்கையை நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?. தமிழ் விக்கி வளர வளர இது போன்ற மிரட்டல்கள் அதிகமாக வாய்ப்புண்டு. பதில் சொல்லும் பயனர்களுக்கு அச்சம் ஏற்படுவதைத் தவிர்க்க பிற விக்கிகளில் இது போன்ற செயல்களைக் கடுமையாக எதிர் கொள்கின்றனர். இக்கொள்கையை நாம் ஏற்க வேண்டுமா என்பது பற்றி விக்கி சமூகத்தின் கருத்தை வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 16:02, 21 சனவரி 2012 (UTC)
- சட்ட மிரட்டல்களை 0.01% கூட அனுமதிக்கமுடியாது, அது பயனர்களை பயமுறுத்தும் செயல். சட்ட மிரட்டல் விடுபவர்களை உடனடியாக தடை செய்ய என் ஆதரவு. --குறும்பன் 00:54, 22 சனவரி 2012 (UTC)
- சோடாபாட்டில், நீங்கள் குறிப்பிடும் பயனர் விக்கியின் வழிமுறைகள் தெரியாமல் ஏதோ எழுதியதுபோல் தெரிகிறது. அவருக்கு விக்கி வழிமுறைகளை விளக்கிச் சொன்னால் போதும் என்று நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக, "நீங்கள் குறிப்பிடும் கட்டுரையில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றால் (வழிமுறை எண்....படி) அத்திருத்தங்களைச் செய்யுங்கள். ஆதாரமும் காட்டுங்கள்" என்று கூறலாம். இவ்வாறு தமிழ் விக்கிக்கு ஒரு நட்பான பயனர் கிடைக்கமாட்டாரா?!--பவுல்-Paul 02:45, 22 சனவரி 2012 (UTC)
- எனக்கு இரு மாதிரியான எண்ணங்களும் உள்ளன பவுல். நீங்கள் சொல்வது போல் பொறுமையாக எடுத்துச் சொல்லி அவருக்குப் புரிய வைக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 298 போன்ற எளிதான அவதூறுச் சட்டங்கள் இருக்குமிடங்களில் இவர் போன்றோருடன் பேசுவதே பிற பயனர்களுக்கு கடுமையான அச்சுறுத்தல். அதுவும் குறிப்பாக சாதி/சமய விசயங்களில் கடுமையான முன்னுதாரணங்கள் இங்கு உள்ளன. அவருடன் பதில் பேசி அது பொது வெளியில் பதிவாவதையே நான் தவிர்க்க விரும்புகிறேன். ஆங்கில விக்கி போலின்றி இங்கு ஒரு சிலர் தவிர பிறர் அனைவரும் பெயரியாக இல்லாமல் தம் அடையாளம் காட்டியே பங்களித்து வருகிறார்கள். இம்மாதிரிச் சூழலில் சட்ட மிரட்டலை விக்கி எதிர்கொள்ளும் முறை நமது பயனர்களுக்கு பாதுகாப்புணர்வைத் தருவதாக அமைய வேண்டும் என்று நினைக்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 04:11, 22 சனவரி 2012 (UTC)
- நாம் உருவாக்கும் கொள்கைகள் உள்ளடக்கத்தைப் பொறுத்தே அமைய வேண்டும். சட்ட விதயங்களில் அறியாமை ஒரு காரணியாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. எனவே சட்ட மிரட்டல்களை விடுமவர்களை உடனடியாகத் தடை செய்ய என் ஆதரவு.--மணியன் 05:23, 22 சனவரி 2012 (UTC)
விருப்பம்--Nan 07:37, 22 சனவரி 2012 (UTC)
- இங்கு சட்ட மிரட்டலுக்கு அவசியம் என்ன இருகிறது! விக்கிப்பீடியாவானது யாவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு கலைக்களஞ்சியம். தவறான கருத்துக்கள் நிரந்தரம் இல்லையே, கருத்து சுதந்திரம் உள்ளது, குறைகளை திருத்திக்கொள்ளலாம், புதுப்பயனர்கள் அச்சப்படத்தேவையில்லை.--ஸ்ரீதர் /பேசுக 06:23, 22 சனவரி 2012 (UTC)
- ஸ்ரீதர், இணையத்தில் அவதூறாகக் குறிப்பிட்டுவிட்டார்கள் என்று வழக்குப் பதிவு செய்வது, வக்கீல் நோட்டீஸ் அனுப்புவதும் அதிகரித்துள்ளது. ஓரிடத்தில் உள்ளது பிடிக்கவில்லையா உடனடியாக மாற்று அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டுவதும் அதிகரித்து வருகிறது. ”கருத்து சுதந்திரம்” என்பது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் (நமது விக்கியின் பெரும்பாலான பயனர்கள் வாழும் இடங்கள்) சமய/சாதி/இனம்/மொழி அவதூறென வரும்போது காணாமல் போய்விடும். இதற்கு இணையத்தில் பல முன்னுதாரணங்கள் உள்ளன. இதே போன்று மேலை நாடுகளில் தனி மனித அவதூறு என்ற அச்சுறுத்தல்கள் அதிகம். நானறிந்து முதல் முறையாக தமிழ் விக்கியில் இப்படியொரு வெளிப்படையான சட்ட மிரட்டலைக் காண்கிறேன் (முன்பும் வந்திருக்கலாம்). இச்சூழலை முன்னரே எதிர்கொண்டுள்ள பிற விக்கிகள் இப்படியொரு விதியினைக் கையாளுகிறார்கள் - சட்டமிரட்டல் விடுபவரிடம் பொறுமையாகப் பேசுவதில்லை, உடனடியாகத் தடை செய்து விடுகிறார்கள். இதனால் அச்சுறுத்திப் பணியவைக்க சட்டமிரட்டல் விடுபவர்கள் அதை ஒரு உத்தியாகப் பயன்படுத்த முடியாது, பிற பயனர்களுக்கு பாதுகாப்பு உணர்வும் கிடைக்கிறது. --சோடாபாட்டில்உரையாடுக 06:39, 22 சனவரி 2012 (UTC)
- சட்ட மிரட்டல் விடுத்தவர் முதலில் அவருடைய கருத்தைத் தெரிவித்திருக்கலாம் அல்லது மாற்றக் கோரியிருக்கலாம் அல்லது அவரே தகுந்த ஆதாரங்களுடன் கட்டுரையில் மாற்றம் செய்திருக்கலாம். அதை விடுத்து, சட்ட மிரட்டல் விடுவது என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட உள்நோக்கத்துடன் செயல்படுவதுதான். இதுபோன்றவர்களின் மிரட்டலைக் கண்டு பயப்படத் தேவையில்லை. இவர்களைப் போன்றவர்கள் பங்களிப்பு செய்வதை உடனடியாகத் தடை செய்ய என் ஆதரவு.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 07:03, 22 சனவரி 2012 (UTC)
வழக்குத் தொடுப்பேன் என அச்சுறுத்துவோரை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்பது விக்கமீடியாவின் கொள்கை என்றல்லவா நினைத்து வந்தேன்.ஆங்கில விக்கிப்பீடியாவின் கொள்கை மட்டும் தானா? எது எப்படியோ, இவர்களைச் சமாளிப்பது விக்கிமீடியாவிற்கும் விக்கிப்பீடியர்களுக்கும் தேவையற்ற கூடுதல் பணி. ஒருவர் முன்னேறினால் போலி நண்பர்களும் உண்மை எதிரிகளும் பெருகுவர். தமிழ் விக்கிப்பீடியா வளர வளர இது நிகழ்வது இயற்கையே! சாம பேத தானம் தண்டம் என நான்கு வழிமுறைகள் இருக்க, பேசித் தீர்க்க நினைப்பவர் வழக்குத் தொடுப்பேன் என முதலிலேயே மிரட்ட மாட்டார். மின்னஞ்சலும் தர மாட்டார். இவர்களோடு பேசிக்கொண்டிராமல் இவர்களைத் தடை செய்வதே அனைவருக்கும் நல்லது. (நாணல் போல வளைவது தான் சட்டம் என ஒரு பாட்டே இருக்கிறது. நாமும் நாணல் போல் வளைந்தால் ...) --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 07:25, 22 சனவரி 2012 (UTC) விருப்பம்--shanmugam 07:27, 22 சனவரி 2012 (UTC)
பயனரைத் தடை செய்வதால் மட்டும் உண்மையிலேயே வழக்கு போட நினைப்பவரைத் தடுக்க முடியாது. தற்போதைக்கு அந்தப் பயனரின் பேச்சுப் பக்கத்தில் வேண்டுகோள் இட்டுள்ளேன். அவரோ வேறு யாருமோ தொடர்ந்து இது போன்ற எச்சரிக்கைகளை விடுத்தால் பயனர்களைத் தடை செய்ய விதி இயற்றலாம். அச்சப்பட்டு அல்ல. இவற்றை எரிதம் போல் கணக்கில் கொள்ளலாம் :) --இரவி 07:32, 22 சனவரி 2012 (UTC)
சட்ட மிரட்டல் விடுப்பவர்களிடம் பேசித் தீர்க்க என்ன இருக்கிறது? அவர்களுக்குத் தேவை அவர்களது பெருமை பேசுவது அல்லது எங்களது வேலையைப் பாழாக்குவது. அவர்களிடம் கிஞ்சித்தும் நல்லெண்ணம் கிடையாது. அவர்களை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். மற்றப்படி, உண்மையிலேயே பிழையிருந்து திருத்த வேண்டுமாயின் அதற்குரிய வழிமுறைகளைக் கூறுவதும் தேவையான ஆதாரங்களைத் தருவதுமே பண்பாடாகும்.--பாஹிம் 07:49, 22 சனவரி 2012 (UTC)
விருப்பம் ஆ.விக்கியில் நான் பார்த்த வரை சட்ட மிரட்டல் விட்டவுடன் யாரையும் உடனடியாக தடைசெய்வதில்லை. சட்ட மிரட்டல் விடுத்தால், அது தவறு, மீண்டும் விடுத்தால் தடை செய்யப்படுவீர்கள் என கொள்கைப் பக்கத்தை சுட்டி, மறுமொழி அளிப்பார்கள். அதற்குப் பிறகும் சட்ட மிரட்டல் விடுத்தால் தடை செய்வார்கள். நாமும் அது போல் செய்யலாம் என கருதுகிறேன். ஸ்ரீகாந்த் 07:55, 22 சனவரி 2012 (UTC) விருப்பம்--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 08:21, 22 சனவரி 2012 (UTC)
- //en:WP:NLT. இக்கொள்கையை நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?.// ஒரே பதில்: ஆம்.
- நாமும் விக்கிப்பீடியாதான். எனவே, ஆங்கில விக்கியில் இயற்றப்பட்டுள்ள சட்டதிட்டங்கள் பொறுப்புத் துறப்புகள் நமக்கும் பொருந்தும். :) -- சூர்யபிரகாஷ் உரையாடுக 13:19, 23 சனவரி 2012 (UTC)
- சட்ட மிரட்டல் மட்டுமல்ல, வேறு விதமான அச்சுறுத்தல்களும் இந்தியச் சூழலில் கவலையளிப்பனவே. உடனடியாகத் தடை செய்வதில் பயன் இருக்குமா என்று பார்க்க வேண்டும். இருக்குமானால் அதையே தீர்வாகக் கொள்ளலாம். ஏனெனில் இப்போதெல்லாம் விக்கிக்கு வெளியேயும் இதுபோன்ற சிக்கல்கள் தொடர்கின்றன. கன்னட ஆங்கில விக்கிக்களில் உள்ள சில தகவல்கள் தொடர்பாக ஒருவர் இது போன்ற மிரட்டல்களை விடுத்தார். விக்கிக்கு வெளியேயும், முகநூலில், மடற்குழுக்களிலும் தொடர்ந்தது. அனைவரும் சேர்ந்து பேசி சரி செய்தனர் என நினைக்கிறேன். மிரட்டியவர் ஒரு நாளிதழ் நிருபர் என நினைக்கிறேன். சில இடங்களில் உடனடியாகத் தடை செய்வதால் விளைவு கடுமையாகலாம்.
- வேறு சில நடவடிக்கைகளும் தேவைப்படலாம். எந்த ஒரு தனிநபர் விக்கிப் பங்களிப்பாளரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகாமல் இருக்க, இது போன்ற நேரங்களில் அலுவல் கணக்கு ஒன்றின் வழியாகப் பேசுமாறு செய்யலாமா? கூடியவரை அச்சுறுத்துபவர் சார்ந்துள்ள நாட்டுக்கு வெளியே உள்ள பங்களிப்பாளர் யாராவது எதிர்கொள்வதும் பயன் தரலாம்.
- இது முக்கிய சிக்கல் என உணர்கிறேன். நமது சூழலில் இதற்கான தீர்வு என்ன என்று தெரியவில்லை. -- சுந்தர் \பேச்சு 13:38, 23 சனவரி 2012 (UTC)
- மீண்டுமொரு முறை சட்டமிரட்டல் நிகழ்ந்தால், பெரும்பாலோனோர் பரிந்துரையின் படி கொள்கையை உருவாக்கி விடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 11:56, 28 சனவரி 2012 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி நிலைகள்
தொகுஆலமரத்தடித் தொகுப்பு ஒன்றில் நேற்று நடந்த உரையாடல் பின்வருமாறு உள்ளது:
//இது பெரிய விடயமல்ல ஸ்ரீதர், இருந்தாலும் சில நேரங்களில் எமது சில மூத்தவர்களின் அன்பு (அம்பு) வார்த்தைப் பிரயோகங்கள் இதயத்தைத் தைத்து விடுவதால் 50000 ஆயிரம் என்ற இலக்கிற்கு காலவரையரை விதிப்பதென்பது தமிழ் விக்கிப்பீடியாவைப் பொருத்தவரையில் மனக்கிலேசங்களை உருவாக்கக்கூடியதே. இதுபோன்ற ஒரு பயணத்தில் இலக்கு வகுத்து வேகமாக செல்வதைவிட மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விக்கிப்பயணத்த வேகத்தில் பயணிப்பதே புதிய பயனர்கள் என்ற அடிப்படையில் தமிழ் விக்கியில் எமது நிலைப்புக்கு ஆரோக்கியமானதாக இருக்கும்//
இது குறித்துச் சிலவற்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
- தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலம் தொட்டு உள்ள வளர்ச்சி நிலையை இங்கு காணலாம். இந்த வளர்ச்சி விகிதமானது இயற்கையான வளர்ச்சியும், உயிர்ப்பும் (sustained and organic growth) கூடியுள்ள எல்லா இடங்களிலும் வழக்கமாகக் காணக்கூடியது என்பதைத் தொழில்முறையாக உயிரியல், உயிரிப் பொறியியல், பொருளாதாரம் படித்த அனைவராலும் உணர முடியும். பல வெற்றிகரமான திட்டங்களில் இந்த வளர்ச்சி வளைவைக் காண முடியும்.
- 2011 அக்டோபர், 2011 செப்டம்பர், 2010ஆம் ஆண்டு ஆகியவற்றுக்கான இந்திய விக்கிகள் ஒப்பீட்டைக் காணலாம். இவை அனைத்திலும் தமிழ் விக்கிப்பீடியா தரத்திலும் அதற்கேற்ற கட்டுரை எண்ணிக்கையிலும் முந்தி உள்ளது. அதே வேளை, வெறும் கட்டுரை எண்ணிக்கையை மட்டும் கணக்கில் கொண்டு செயல்பட்ட பல இந்திய விக்கிப்பீடியாக்கள் இன்று சிக்கலான நிலையை எதிர்நோக்கி உள்ளன. அளவுக்கு மீறிய ஒரே மாதிரியான பிழை மலிந்த சில வரிக் கட்டுரைகள் இந்த விக்கிப்பீடியா சமூகங்களை ஊக்கம் குன்றச் செய்து விட்டன. இருக்கும் கட்டுரைகளைச் சீர்திருத்தத் தேவைப்படும் உழைப்பும் இருக்கிற பயனர்களின் எண்ணிக்கையும் சரியான விகிதத்தில் இல்லாதது ஒரு முக்கியக் காரணம். தெலுங்கு விக்கிப்பீடியாவில் ஒருவரிக் கட்டுரைகளால் என்னென்ன பிரச்சினைகள் வந்தன என்று சென்ற இந்திய விக்கி மாநாட்டில் கட்டுரையே வாசிக்கப்பட்டது. கூகுள் திட்டம் நமக்கு 1000க்கும் மேற்பட்ட பெரிய கட்டுரைகளைத் தந்தது. ஆனால், அவற்றின் தரமும் நிறைவாக இல்லை. கூகுள் திட்டத்தை வங்காள விக்கியர் முதலிலேயே தடுத்து விட்டனர். மலையாள் விக்கியரோ உள்ளேயே விட வேண்டாம் என்ற அளவில் கடினமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். ஆக, எண்ணிகை, அளவு ஆகியவற்றைத் தாண்டி தரமே முக்கியக் குறிக்கோளாக நம்மை ஒத்த நலமான விக்கிகளில் உள்ளதை அறியலாம். தமிழ், மலையாளம், வங்காள விக்கிப்பீடியாக்கள் தொடக்கக் காலம் முதற்கொண்டே இத்தகைய பிரச்சினையைத் தவிர்க்கும் பொருட்டு கவனமாகவே செயற்பட்டு வந்திருக்கின்றன. கட்டுரை எண்ணிக்கை மட்டும் முக்கியம் அல்ல, தரமும் முக்கியம் என்று பல்வேறு வழிகளில் தரம் கண்காணிக்கப்பட்டது. 2005 முதல் 2008 வரை தொடர்ந்து இந்தச் செயற்பாடுகள் இருந்தன.மேற்கண்ட காரணங்களாலேயே, தானியங்கியாகப் பல ஊர்களின் கட்டுரைகளை உருவாக்கும் வாய்ப்பு இருந்தும் கூட அது மிதமான அளவிலேயே பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. மயூரநாதன் எழுதிய 3000+ கட்டுரைகளை மட்டும் மூன்று மூன்று வரிகளாகப் பிரித்துத் தனித்தனிக் கட்டுரையாக எழுதி இருந்தாரானால் தமிழ் விக்கிப்பீடியா இலட்சம் கட்டுரை எண்ணிக்கையைக் கூட தாண்டி இருக்கும். கட்டுரை எண்ணிக்கைகள் என்பவை மைல்கற்களைப் போலவே நாம் எங்கிருக்கிறோம் என்று பார்த்து ஒரு புன்னகை பூக்கவே தவிர, அவை நமது இலக்கு அல்ல. எத்தனைக் கட்டுரைகளைக் கொண்டிருக்கிறோம் என்பதை விட என்ன வகையான கட்டுரைகளைக் கொண்டிருக்கிறோம், அவை பயனுள்ளவையா, பிழை இன்றி விரிவான செறிவான தகவலை வாசிப்பவருக்குத் தருகின்றதா என்பதே முக்கியம். கலைக்களஞ்சியப் பணி என்பதை ஒரு பண்பாட்டின் உச்சங்களில் ஒன்று எனக் கருதலாம். பல மொழிகளில் பல ஆண்டுகள் பல அறிஞர்கள் உழைத்த பின்னரே முழுப் பயன்பாட்டுக்கு உகந்த கலைக்களஞ்சியங்கள் கிடைக்கின்றன.
- எந்த ஒரு திட்டத்தின் தொடக்க காலத்திலும் பல்வேறு வகையான அடிப்படைப் பணிகளைச் செய்ய வேண்டி இருக்கும். கலைச்சொல் ஒருங்கிணைவு, முதற் பக்க ஒருங்கிணைவு, பகுப்பாக்கம், வார்ப்புரு தமிழாக்கம், உறவுத் திட்டங்கள் தொடக்கம், விக்கி பரப்புரை, உதவிப் பக்கங்கள் உருவாக்கம், பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல், படிமங்கள் சரிபார்த்தல், ஒட்டு மொத்தமாக விக்கியைப் புரிந்து கொள்ளல் என்று பல நிலைகள் உள்ளன. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி, கூகுள் திட்டம் ஆகியவை நேரடியாக பலனைத் தராவிட்டாலும் பல பயனர்களின் பல மாதத்து உழைப்பு இத்திட்டங்களில் இருந்தது.
- தமிழ் விக்கிப்பீடியாவோடு சேர்ந்து தமிழ் விக்சனரியின் வளர்ச்சிக்கும் வெகுவான கவனம் செலுத்தப்பட்டது. 2008 வாக்கில் தமிழ் விக்சனரி ஒரு இலட்சம் சொற்களுக்கு மேல் கொண்டு உலக அளவில் முதல் பத்து விக்சனரிகளுள் ஒன்றாக வளர்ந்திருந்தது. அந்த நிலை இன்று வரை தக்க வைக்கப்பட்டு வருகிறது. விக்சனரி அளவு இல்லாவிட்டாலும், மற்ற திட்டங்களான விக்கி மூலம், விக்கி நூல்கள், விக்கி செய்திகள் ஆகியவற்றுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.
//மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விக்கிப்பயணத்த வேகத்தில் பயணிப்பதே //
குறிப்பிடப்பட்டுள்ள வேகத்துக்கு என்ன காரணம் என்று மேலே தெரிவித்து உள்ளேன். கட்டுரை எண்ணிக்கை மட்டுமே ஒரு விக்கியின் வளர்ச்சி நிலையைக் குறிப்பிடாது என்பதையும் விளக்கி இருக்கிறேன். மற்றபடி,
எந்த ஒரு பயனரோ கூட்டுத் திட்டமோ குறிப்பிட்ட கட்டுரை எண்ணிக்கையை முன்வைத்துச் செயற்படுவது தவறு அன்று. இது வரை அப்படிப்பட்ட இலக்குகளைத் தனிப்பட்ட அளவில் சிலர் முன்வைத்தபோது ஊக்கம் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. கட்டுரைத் துறைகளில் அவரவர் விருப்பங்களைத் தெரிவித்திருக்கலாமே ஒழிய, கட்டுரை எண்ணிக்கை அடிப்படையில் ஒரு முயற்சி முடக்கப்பட்டது கிடையாது.
பொதுவாக ஒருவர் விக்கிப்பீடியாவில் புகுந்து கட்டுரை எழுதும் நுட்பங்களைப் புரிந்து கொண்டு செயற்படத் துவங்கி விட்டாலே, புதுப்பயனர் என்ற நிலையைத் தாண்டி விடுகிறார். இன்னும் குறிப்பாக, மூன்று முதல் ஆறு மாத காலங்களுக்குள் நிருவாகிகளாகப் பொறுப்பேற்கும் அளவுக்குச் சிறந்த பங்களிப்புகளை நல்கியவர்கள் நம்மிடையே உள்ளனர். இந்திய விக்கிப்பீடியாக்களை ஒப்பு நோக்கும் போது, தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகிகள் தேர்வும் தொடர்ச்சியாகவும் சீராகவும் நடைபெற்று வருகிறது. அதிக அளவிலான நிருவாகிகளையும் கொண்டு உள்ளோம். தொடர்ந்தும் வழமையாகவும் புதிது புதிதாக வரும் பயனர்களை இனங்கண்டு முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தி வருகிறோம். இந்நிலையில்,
//மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விக்கிப்பயணத்த வேகத்தில் பயணிப்பதே புதிய பயனர்கள் என்ற அடிப்படையில் தமிழ் விக்கியில் எமது நிலைப்புக்கு ஆரோக்கியமானதாக இருக்கும்//
போன்ற எண்ணம் ஏன் எழுகிறது எனப் புரியவில்லை. நான் வெளிப்படையாகவே கேட்கிறேன்: புதிய பயனர்களின் நிலைப்புக்கு இங்கு என்ன பிரச்சினை உள்ளது? புதிய பயனர்கள் யாராவது எந்த விதத்திலாவது கட்டுப்படுத்தப்படுவதாக உணர்கிறார்களா? உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டால், என்ன நிலவரம் என்பதை உரையாடி அறிந்து கொள்ளலாம். அப்படி இல்லாத பட்சத்தில், இது போன்ற கருத்துகளைப் பகிர்ந்து விக்கி சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி--இரவி 04:24, 24 சனவரி 2012 (UTC)
பி.கு:காண்க - விக்கிப்பீடியா:Tamil Wikipedia: A Case Study
- ரவி அவர்கள் மிக துடிப்புடன் செயலாற்றுவது அருமை, வாழ்த்துக்கள் தமிழ்விக்கிப்பீடியா ஆங்கிலவிக்கிப்பீடியா உடன் ஒப்பிட சுயேட்சையாக உள்ளதா! பல கட்டுப்பாடுகள் இருப்பதால்தானே பலதுறைகளில் அனுபவம் வாய்ந்தவர்கள் (ஓய்வுபெற்ற கல்விமான்கள், அதிகாரிகள் மற்றும் பலதுறையினர்)
விக்கிப்பீடியாவில் பங்களிக்க தயங்குகின்றனர். தமிழ்விக்கிப்பீடியா வலுவான கட்டமைபாகும் வரையிலாவது பயனர்களை ஊக்கப்படுத்த விமரிசனங்களை தவிர்த்து இலக்கை அடைய வேண்டும். கலைக்களஞ்சியமானது அனைத்து துறைகளிலும் சீரான வளர்ச்சியுடைதாக இருக்கவேண்டும்தான் ஆனால் தமிழ்விக்கிப்பீடியாவில் தற்கால விஞ்ஞான வளர்சியில் அனுபவமுள்ளவர்கள் மிகக்குறைவே. விதிமுறைகளை மட்டும் பாராது அனுபவமுள்ளவர்களை பயன்படுத்தி தமிழ்விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும். குறைகளை திருத்தி கொள்ளலாம். இங்கு எதுவும் நிரந்தரம் அல்ல மாற்றம் என்ற சொல்லே மாறாதது --ஸ்ரீதர் /பேசுக 05:51, 24 சனவரி 2012 (UTC)
// தமிழ்விக்கிப்பீடியா ஆங்கிலவிக்கிப்பீடியா உடன் ஒப்பிட சுயேட்சையாக உள்ளதா! //
சுயேட்சையாக என்று நீங்கள் கூறுவதன் பொருள் சரியாகப் புரியவில்லை. பயனர்கள் யாராலும் கட்டுப்படுத்தப்படாமல் சுதந்திரமாகப் பங்களிக்கிறார்களா? எந்த ஒரு விக்கியிலும் யாரும் எந்தப் பயனரையும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், பயனர்கள் எழுதும் கட்டுரைகள் ஒரு குறைந்தபட்ச தரத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், அவற்றை மற்றவர்கள் திருத்துவதும், ஒரு பயனர் தொடர்ந்து ஒரே மாரிதியான பங்களிப்புகளை நல்கும்போது அது குறித்த கருத்து பகிரப்படுவதும், விக்கிப்பீடியா கொள்கைகள்-வழிமுறைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பது வழமையே.
ஆங்கில விக்கிப்பீடியாவின் மொழி நடை உள்ளிட்ட அனைத்துத் தர அளவீடுகளும் மிகக் கடுமையானவை. பல்வேறு காரணங்களால் புதிய பயனர்கள் வரத்து குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழ் விக்கிப்பீடியா சுயேட்சையாக உள்ளதா என்று நீங்கள் கேட்டுள்ளதா விரிவாக விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதை எதிர் கருத்தாக தெரிவிக்கவில்லை. எனக்கு உண்மையிலேயே புரியவில்லை.
//பல கட்டுப்பாடுகள் இருப்பதால்தானே பலதுறைகளில் அனுபவம் வாய்ந்தவர்கள் (ஓய்வுபெற்ற கல்விமான்கள், அதிகாரிகள் மற்றும் பலதுறையினர்) விக்கிப்பீடியாவில் பங்களிக்க தயங்குகின்றனர்.//
தமிழ் விக்கிப்பீடியாவின் மொழிநடை பலரைத் தயங்கச் செய்வதாக ஏற்கனவே சிலர் தெரிவித்துள்ளனர். இது குறித்து இந்த இடத்தில் உரையாடுவது உரையாடலைத் திசை திருப்பும் என்பதால் அதனைத் தனியாகச் செய்வோம். தமிழ் விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம் என்பதைக் கருத்தில் கொண்டால், தமிழ் நடை அளவில் நாம் இன்னும் கூட இளக்கத்தன்மையுடனேயே இருக்கிறோம். இல்லையென்றால், முதற்பக்கக் கட்டுரைகளை மீண்டும் இரு முறை உரை திருத்தும் தேவை இருக்காது. இந்நிலையில், மொழி நடை தவிர என்ன வகையான கட்டுப்பாடுகள் புதுப்பயர்களைத் தயங்கச் செய்வதாக உணர்கிறீர்கள்? பயனர்கள் இவ்வாறு உணர்வதாக எப்படி அறிகிறீர்கள்? நீங்கள் இவ்வாறு உணர்ந்தது உண்டா? எந்நிலையில்? தற்போது உள்ள புதிய பயனர்களோ நீங்கள் விக்கிப்பீடியாவுக்கு வெளியே பேசிப் பார்த்தவர்களோ இவ்வாறான கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்களா? இவற்றில் என்னென்ன கட்டுப்பாடுகள் பிற விக்கிப்பீடியாக்களில் இல்லாமல் தமிழ் விக்கிப்பீடியாவில் மட்டும் உள்ளன? அருள் கூர்ந்த இவற்றை மிக விரிவாக விளக்க வேண்டுகிறேன்.
//தமிழ்விக்கிப்பீடியா வலுவான கட்டமைபாகும் வரையிலாவது பயனர்களை ஊக்கப்படுத்த விமரிசனங்களை தவிர்த்து இலக்கை அடைய வேண்டும்.//
உங்கள் பார்வையில் வலுவான கட்டமைப்பு என்றால் என்ன? எண்ணிக்கை, தரம், வீச்சு அடிப்படையில் இதை எப்படி அளக்கலாம் என நினைக்கிறீர்கள்? தமிழ் விக்கிப்பீடியா உலகளாவிய ஒரு கூட்டுத் திட்டத்தின் பகுதி. எனவே, அத்திட்டத்தின் நோக்கத்துக்கு உட்பட்டு சில கருத்துகளைப் பிற பயனர் பகிரலாம். நல்ல கருத்தாகத் தோன்றினால் ஏற்கலாம். இல்லை என்றால்புறக்கணிக்கலாம். யாரும் இங்கு தனிப்பட்ட அளவில் தாக்குதல் செய்வது ஊக்குவிக்கப்படுவதில்லை. எனவே, ஒருவருடைய பங்களிப்புகளைப் பற்றி வரும் கருத்துகளை விமர்சனமாக அல்லாமல் வளர்முக நோக்கிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும். எது போன்ற கருத்துகள் ஒரு புதுப்பயனரின் ஆர்வதைக் குறைத்து விடக்கூடும் என்று நினைக்கிறீர்கள்?
//கலைக்களஞ்சியமானது அனைத்து துறைகளிலும் சீரான வளர்ச்சியுடைதாக இருக்கவேண்டும்தான் ஆனால் தமிழ்விக்கிப்பீடியாவில் தற்கால விஞ்ஞான வளர்சியில் அனுபவமுள்ளவர்கள் மிகக்குறைவே. விதிமுறைகளை மட்டும் பாராது அனுபவமுள்ளவர்களை பயன்படுத்தி தமிழ்விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்.//
தங்கள் கூற்றில் இருந்து நான் புரிந்து கொள்வது: "தமிழ் விக்கிப்பீடியாவில் அறிவியல் துறையில் பங்களிப்பு நல்குபவர்கள் குறைவு. இத்தகையோர் வெளியே நிறைய உள்ளனர். அவர்களையும் அரவணைத்துப் பங்களிப்புகளைக் கூட்டும் வகையில் விதிமுறைகளைச் சற்றுத் தளர்த்த வேண்டும்".
என்னென்ன விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும் என்று சில எடுத்துக்காட்டுகளைத் தருவீர்களா? ஏற்கனவே இந்தக் கட்டுப்பாடுகள் இருந்திருக்கக்கூடிய நிலையிலேயே பங்களிப்பாளர் அறிமுகப் பக்கத்தைக் கண்டோம் என்றால் அதில் தாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள ஓய்வு பெற்ற கல்வியாளர்கள் (ProfVK, செங்கைப் பொதுவன்), அதிகாரிகள் (மணியன்), அறிவியல் துறையினர் (நந்தகுமார், மகிழ்நன், கலை, செல்வா, தானியல் பாண்டியன், தெரன்சு முதலானோர்) முதலிய பலர் உள்ளனர்.
//குறைகளை திருத்தி கொள்ளலாம். இங்கு எதுவும் நிரந்தரம் அல்ல மாற்றம் என்ற சொல்லே மாறாதது//
தமிழ் விக்கிப்பீடியா போன்ற சிறு திட்டங்களைப் பொறுத்தவரை கட்டுரையை முதலில் தொடங்குபவரே செப்பனாக, விரிவாக எழுதாவிட்டால் அக்கட்டுரை மேம்படுவதற்கான வாய்ப்பு குறைவே. குறிப்பாக: குறுகிய காலத்தில் கூடுதல் எண்ணிக்கையில் இடப்படும் கட்டுரைகள், கூகுள் தமிழாக்கியது போன்ற கட்டுரைகள் இவற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு. தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் மட்டும் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் உள்ளன. ஒரே வகையான நிறுத்தக்குறி பிழை அத்தனைக் கட்டுரைகளிலும் உள்ளது. உரை திருத்தும் போது கூட இவற்றைத் திருத்தும் ஊக்கம் இன்றி கடந்து போக நேரிடுகிறது. இது போன்ற காரணங்களால் தான் பயனர்கள் இயன்ற அளவு செம்மையாக எழுத வேண்டும் என்றும், கட்டுரைகள் உருவாகும் வேகத்துக்கும் அவற்றை மேம்படுத்தவல்ல விக்கிப்பீடியர் எண்ணிக்கைக்கும் ஒரு சமநிலை வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாங்கள் எழுதியுள்ளது ஒரு சில வரிகள் தாம் என்றாலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு கவலை அளிக்கக்கூடிய பல விசயங்களை அவற்றில் தொட்டுள்ளீர்கள். எனவே, அருள் கூர்ந்து மேற்கண்ட எனது ஐயங்களுக்கு விரிவாக பதில் அளித்து உதவுமாறு வேண்டுகிறேன். நன்றி--இரவி 11:57, 24 சனவரி 2012 (UTC)
- // தெலுங்கு விக்கிப்பீடியாவில் ஒருவரிக் கட்டுரைகளால் என்னென்ன பிரச்சினைகள் வந்தன என்று சென்ற இந்திய விக்கி மாநாட்டில் கட்டுரையே வாசிக்கப்பட்டது.// அந்தக் மாநாட்டுக் கட்டுரை, ஒருவரிக் கட்டுரைகளின் சாதக பாதக தாக்கங்களை ஆராய்ந்தது. மாநாட்டில் வாசிக்கப்பட்ட அனைத்து கட்டுரைகள் / விவாதங்களின் காட்சிப்படங்கள் கூடிய விரைவில் உங்கள்குழாயில்(முகநூல் என சொல்வது சரினா,இதயும் சொல்லுங்க) வெளிவரும். இந்திய மொழி விக்கிகள், அவற்றின் செயல்பாடுகளை வெரும் எண்கள் மூலமல்லாமல், அவற்றின் பயனர்கள் மூலம் கேட்டறிய இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என எண்ணுகிறேன். ஆங்கில விக்கிப்பீடியாவில் நான் பார்த்தை வைத்து, "தரம்" என்பதற்கான என்னுடைய புரிதலையும்,த.விக்கியில் நான் காணும் (நம் மனிதவளத்தினுள் சரிசெய்யக்கூடிய) சில இடைவெளிகளையும் மற்றொரு இழையில் விரைவில் இடுகிறேன். ஸ்ரீகாந்த் 09:10, 24 சனவரி 2012 (UTC)
ஒரு வரிக்கட்டுரைகளின் இடர்களுடன் பயனும் தாக்கமும் ஆராயப்பட்டது என்று சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. பல நாட்டு, பல மொழி விக்கிப்பீடியர் சமூகங்களிடம் பேசிப் பார்த்ததில் இருந்து இக்கட்டுரைகளால் வரும் பயனை விட இடரே கூடுதலாக உள்ளதாகவே அறிகிறேன். அதனாலேயே சுட்டிக் காட்டினேன்.
பொதுவாக நான் வணிகப்பெயர்களைத் தமிழாக்குவது கிடையாது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊர்ப் பெயரையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் நாம் சில ஆங்கில நிறுவனப் பெயர்களைத் தமிழில் கூறுவது அவ்வளவு பெரிய குற்றம் கிடையாது ;)
ஆங்கில விக்கியை ஒப்பிட்டு நீங்கள் தரவிருக்கும் பரிந்துரையை எதிர்பார்க்கிறேன். நன்றி--இரவி 11:57, 24 சனவரி 2012 (UTC)
- ஸ்ரீதர், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. இந்திய விக்கிகளில் பிற எந்த விக்கிகளிலும் பார்க்க பல்துறை அனுபவம் வாய்ந்தவர்கள் தமிழ் விக்கியில் உள்ளார்கள் எனலாம். தமிழ் விக்கியின் வளர்ச்சி பிற இந்திய விக்கிகளுடன், மலையாளம் தவிர்த்து ஒப்பிடுகையில் சிறந்தே இருக்கிறது. மலையாள விக்கி தரத்தில் உயர்ந்து இருக்கிறது, ஆனால் எண்ணிக்கையில் தமிழ் விக்கியில் அரைவாசி. உங்கள் ஒப்பீட்டு இந்தியா ஏன் மேற்குநாடுகள் போல் வளர்ச்சி பெறாமல் இருக்கின்றது. அதற்கு இந்தியப் பண்பாடுதான் காரணம் என்பது போல் இருக்கிறது. "பல கட்டுப்பாடுகள்" என்றும், "விதிமுறைகளை மட்டும் பாராது" என்று குறிப்பாக எதைக் கூறுகிறீர்கள். துல்லியமாக, ஒவ்வொன்றாகச் சுட்டிக் காட்டினால் அவை பற்றி உரையாடலாம். இலக்கு என்பது வெறும் எண்ணிக்கை இல்லை, அது தரம், கட்டுரை பல்வகைத்தன்மை போன்று பல்வேறு கூறுகளைக் உள்ளடக்கியது. --Natkeeran 18:13, 24 சனவரி 2012 (UTC)
- தமிழ் விக்கியின் வளர்ச்சி சிறந்தே இருக்கிறது
விக்கிப்பீடியா:மைல்கற்கள் , புள்ளிவிவரங்கள் தெளிவாக காட்டுகின்றன. மேலோட்டமாக நான் கூறிய கருத்துக்கு மதிப்பளித்து பயனர்களின் மனதை படம் பிடித்ததுபோல சரியாக யூகித்ததை கண்டு வியப்படைகிறேன். //தமிழ் விக்கிப்பீடியாவில் அறிவியல் துறையில் பங்களிப்பு நல்குபவர்கள் குறைவு. இத்தகையோர் வெளியே நிறைய உள்ளனர்// இப்பக்கத்தில் மேலே கண்ட தங்களின் உரையாடலை கண்டு நான் மகிழ்சியடைகிறேன். தமிழ் விக்கியின் தரம் பேணப்படுவதற்க்கு இதுவே சான்று.
- தமிழ் விக்கிப்பீடியா 43,000 கட்டுரைகள் என்ற நிலையில் இப்பக்கத்தில் கண்ட உரையாடல் விக்கிப்பீடியா:பன்மொழி விக்கிப்பீடியாக்களின் பட்டியல் வரிசையில் தமிழ் விக்கி சிறப்புநிலை அடைய 50,000 கட்டுரைகள் எட்டும்நிலை அவசியம் எனும் எண்ணத்தை உணர்த்தியது.
50,000 கட்டுரைகள் என்னும் அளவு இப்போது கைக்கு எட்டிய தொலைவிலேயே உள்ளது. இன்னும் 7,000 கட்டுரைகளே தேவை. மிக விரைவில் இலக்கை அடைந்து விடலாம். --- மயூரநாதன் 05:55, 30 திசம்பர் 2011 (UTC)
- ஒரு வரிக்கட்டுரைகள் ஆங்கிலவிக்கியிலும் இருக்கின்றது. (எ.கா) :en:Category:Revenue blocks of Tamil Nadu ,:en:Category:Rivers of Tamil Nadu
// தமிழ்விக்கிப்பீடியா ஆங்கிலவிக்கிப்பீடியா உடன் ஒப்பிட சுயேட்சையாக உள்ளதா! //
- தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் இணைகப்பட்ட படிமத்தை பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கும்போது கால அவகாசத்தை நீட்டித்து தமிழ் விக்கிப்பீடியா:நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டுவந்த பின்னரே அப்படிமத்தை நீக்க தமிழ் விக்கிப்பீடியா சிறப்பு அனுமதி பெற வேண்டும். (எ.கா)
மொழி நடை பிரச்சினை தமிழ் விக்கியின் வளர்ச்சியில் சில தருணங்களில் தடையாக உள்ளது (எ.கா) அறிவியல். இத்தொகுப்பில் அடுத்துவரும் தலைப்பு இருசொல் பெயரீடு தாங்கள் எடுத்த அடுத்த கட்ட நடவடிக்கை நன்று.
- கூகுள் தமிழாக்க கட்டுரைகளை முற்றிலும் தடை செய்யாது அறிவியல் துறையில் அதிகம் இடம் பெற அனுமதிக்க வேண்டுகிறேன். பெயர் சொற்கள் தூய தமிழ் படுத்துதல் சிறிது காலம் தாழ்த்தி நடைமுறைப்படுதலாம்..(எ.கா) ஜவகர்லால் நேரு , இரத்த வகை
- விக்கிப்பீடியா அறிமுகப்பட்டறை தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக நடத்தும் திட்டம் மூலம் விழிபுணர்வு ஏற்படுத்தலாம்.
- சட்ட மிரட்டல் - ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரிகளை விக்கிப்பீடியா:நிர்வாகிகள் குழுவில் இடம்பெற ஆலோசிக்கலாம்.
துல்லியமாக, ஒவ்வொன்றாகச் சுட்டிக் காட்ட இயலாவிட்டாலும் பொதுவான சந்தேகங்களை குறிப்பிட்டுள்ளேன். இவ்வுரையாடலின் மூலம் பலரின் குழப்பங்கள் தீரும் என நம்புகின்றேன். நன்றி. --ஸ்ரீதர் /பேசுக 08:05, 25 சனவரி 2012 (UTC)
//தமிழ் விக்கி சிறப்புநிலை அடைய 50,000 கட்டுரைகள் எட்டும்நிலை அவசியம் எனும் எண்ணத்தை உணர்த்தியது. //
எண்ணிக்கை இலக்குகள் அவ்வப்போது நம்மை உற்சாகப்படுத்திக் கொள்ள உதவுபவை தாம். யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், எண்ணிக்கை மட்டும் இலக்காக அல்லாமல் ஆக்கும் ஒவ்வொரு கட்டுரையும் மற்ற தர அளவீடுகளிலும் சிறப்பாக அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
//ஒரு வரிக்கட்டுரைகள் ஆங்கிலவிக்கியிலும் இருக்கின்றது//
ஆங்கில விக்கியில் பல பெரிய, பயனுள்ள கட்டுரைகள் உள்ளன. அவற்றுக்கு இடையே இவை போன்ற சிறிய கட்டுரைகளும் உள்ளன. அவர்களின் பயனர் சமூகம் பெரியது என்பதால் சிறிய கட்டுரைகள் வளர்வதற்கான வாய்ப்பு மிகுதி. ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் சமூகம் சிறியது என்பதால் கட்டுரை வளராமல் பல ஆண்டுகளாக அப்படியே உள்ளதற்கான வாய்ப்பு உள்ளது. தவிர, ஒரு வரியாக இடக்கூடிய கட்டுரைகள் பலவும் ஒரு பட்டியலாகவோ தரவுத் தளமாகவோ இட வல்லவை தான். தகவலைச் சேர்ப்பதை யாரும் தடுப்பதில்லை. ஆனால், ஒவ்வொன்றையும் கண்டிப்பாகத் தனித்தனி ஒரு வரிக்கட்டுரையாகத் தான் சேர்க்க வேண்டும் என்றில்லையே? தமிழ் விக்கிப்பீடியாவைப் பொறுத்தவரை கட்டுரையின் குறைந்தபட்ச அளவு மூன்று வரியாக இருக்க வேண்டும். இத்தகைய குறைந்தபட்ச விதிகளை வைத்திருப்பது தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய நல்லெண்ணம் வளர உதவும். பல இந்திய விக்கிப்பீடியாக்கள் வெறும் ஒரு வரிக் கட்டுரைகளையே கொண்டுள்ளன என்ற விமரிசனம் உண்டு. குறைந்தபட்ச தரம் மட்டுமே இப்படி வைத்திருக்கிறோம். ஆனால், முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்கோ சிறப்புக் கட்டுரை ஆக்குவதற்கோ விதிகள் மிகவும் இளக்கமானவை தாம்.
//தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் இணைகப்பட்ட படிமத்தை பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கும்போது கால அவகாசத்தை நீட்டித்து தமிழ் விக்கிப்பீடியா:நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டுவந்த பின்னரே அப்படிமத்தை நீக்க தமிழ் விக்கிப்பீடியா சிறப்பு அனுமதி பெற வேண்டும்.//
இது நடைமுறைச் சாத்தியம் அற்றது. விக்கிமீடியாவின் ஒவ்வொரு திட்டமும் தன்னாட்சி கொண்டது. ஒன்று மற்றொன்றில் தலையிட இயலாது. காமன்சில் நீங்கள் பதிவேற்றும் கோப்புகளை உங்கள் கவனிப்புப் பட்டியலில் வைத்து, நீக்கல் தொடர்பான மறுப்புகளை அங்கு நீங்களே நேரடியாகவே உரையாட வேண்டும். உரையாடுவதற்கு உதவி தேவை எனில், தமிழ் விக்கிப்பீடியா ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கலாம். அல்லது, நீங்கள் பதிவேற்றும் கோப்புகளை தமிழ் விக்கிப்பீடியாவிலேயே நேரடியாகப் பதிவேற்றலாம். இங்கேயே நேரடியாகப் பதிவேற்றுவது ஊக்குவிக்கப்படுவதில்லையா என்று யாரேனும் தெளிவுபடுத்தலாம்.
//மொழி நடை பிரச்சினை தமிழ் விக்கியின் வளர்ச்சியில் சில தருணங்களில் தடையாக உள்ளது//
குறுந்தட்டுத் திட்டம் முடிந்ததும் இதைப் பற்றி விரிவாக உரையாடுவோமே?
//கூகுள் தமிழாக்க கட்டுரைகளை முற்றிலும் தடை செய்யாது அறிவியல் துறையில் அதிகம் இடம் பெற அனுமதிக்க வேண்டுகிறேன். //
கூகுளே இந்தத் திட்டத்தைக் கை விட்டு விட்டது. ஏற்கனவே கூகுள் உருவாக்கிய கட்டுரைகளை சீராக்குவதே இப்போது உள்ள பணி. கூகுளைச் சாராத தனிப்பட்ட பயனர்கள் இது போன்ற கருவிகளைப் பயன்படுத்திப் பங்களிப்பதைத் தடுப்பது என்பது தற்போது முறையான கொள்கையாக உள்ளது. இக்கொள்கையில் மாற்றம் வேண்டும் எனில் இங்கு உரையாடலாம்.
//விக்கிப்பீடியா அறிமுகப்பட்டறை தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக நடத்தும் திட்டம்//
பொதுவாக, இணையத்துக்கு வெளியே நடக்கும் பரப்புரைகளில் கூடுதல் மனித உழைப்பு, நேரம், பணம் தேவைப்படும். விக்கிப்பீடியா பயனர்கள் அனைவரும் தன்னார்வலர்கள். பலரும் முழு நேரப் பணி அல்லது படிப்பில் உள்ளார்கள். எனவே, திட்டமிட்டு ஒவ்வொரு மாவட்டமாக நடத்துவதில் நடைமுறைச் சிக்கல் உள்ளது. மற்றபடி, ஆர்வமுள்ள பயனர்கள் தத்தம் வசதிக்கு ஏற்ப பரப்புரை முயற்சிகளை ஒருங்கிணைக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். தங்கள் ஊரில் உள்ள ஒரு கல்லூரி, பள்ளி என்பதில் இருந்து கூட நீங்கள் இதைத் தொடங்கலாம். மாவட்டம் தோறும் நடத்துவதை ஒரு திட்டமாகச் செய்ய விரும்பினீர்கள் என்றால், இதற்கான திட்டப் பக்கம் தொடங்கி உங்கள் கருத்துகளை முன்வைக்கலாம். ஆர்வமுள்ள பயனர்கள் இணைந்து கொள்வார்கள்.
//சட்ட மிரட்டல்//
இது குறித்த அண்மைய ஆலமரத்தடி உரையாடலில் இத்தகைய பயனர்களை உடனே தடுக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துப் பிறகு தடுக்கலாம் என்றும் இரு வகையான கருத்துகள் தென்பட்டன. தேவைப்பட்டால், விதி இயற்றி இப்பயனர்களைத் தடுக்கலாம். மேலதிக சட்ட உதவி தேவை என்றால் இந்திய விக்கிமீடியா பிரிவையும் விக்கிமீடியா நிறுவனத்தையும் அணுகலாம்.
//ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரிகளை விக்கிப்பீடியா:நிர்வாகிகள் குழுவில் இடம்பெற ஆலோசிக்கலாம்.//
பயனர்கள் நேரடியாக விக்கிப்பீடியாவில் செய்யும் பணிகளே விக்கிப்பீடியா நிருவாகிகளைத் தேர்ந்தெடுத்துக்கும் போது கணக்கில் கொள்ளப்படும். இந்த நிருவாகிகளும் துப்புரவுப் பணியாளர் போன்றவர்களே தவிர இவர்களுக்கு என சிறப்பு அதிகாரம் ஏதும் இல்லை. எனவே, வெளியாட்களை நிருவாகிகள் ஆக்குவது விக்கிமீடியா கொள்கைக்கு முரண்பட்டது. அப்படியே யாராவது ஆனாலும், இந்த விசயத்தில் ஒன்றும் செய்ய இயலாது.
மேலோட்டமான கருத்துகள் விக்கிப்பீடியா சமூகத்திலும் வெளியேயும் தேவையற்ற குழப்பங்களை உருவாக்கும் என்பதை உணர்ந்து, உங்கள் கருத்துகளை இது போல் தெளிவாக முன்வைத்தால் நன்று. நன்றி--இரவி 10:57, 25 சனவரி 2012 (UTC)
- // அல்லது, நீங்கள் பதிவேற்றும் கோப்புகளை தமிழ் விக்கிப்பீடியாவிலேயே நேரடியாகப் பதிவேற்றலாம். இங்கேயே நேரடியாகப் பதிவேற்றுவது ஊக்குவிக்கப்படுவதில்லையா என்று யாரேனும் தெளிவுபடுத்தலாம். //
- ஆம் இரவி. நல்லெண்ணப் பயன்பாட்டு அடிப்படைக் (fair-use) கோப்புகளைத் தவிர பிறவற்றை பொதுக்கோப்பகத்திலேயே (காமன்சிலேயே) பதிவேற்றுவது நல்லது. அங்கு இருப்பதால் மற்ற விக்கிகளிலும் பயன்படும். மேலும், காப்புரிமையைச் சரிபார்ப்பதற்கு அங்கு பலர் இருக்கிறார்கள். வேறு ஏதாவது சிறப்புத் தேவை இருந்தால் தமிழ் விக்கியில் பதிவேற்றலாமென நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 11:09, 25 சனவரி 2012 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி நிலைகள்-2
தொகுஇரவி, மேலே மிகவும் பொறுமையாகப் பலவற்றைச் சுட்டிக்காட்டியுள்ளார். இன்னும் இது பற்றி நிறைய கருத்தாடலாம், ஆனால் விக்கிப்பீடியர்களிடையே "புதுப்பயனர்", "பழைய பயனர்" என்ற வேறுபாடெல்லாம் இல்லை. எல்லோருமே பங்களிப்பாளர்கள்தாம். கலைக்களஞ்சிய உருவாக்கம் என்பது ஒரு சீரிய முயற்சி. அதில் பயன்படுத்தும் நடையும் அதற்கேற்ற சீரிய முறையிலே இருக்கும். எளிதாகப் புரிந்துகொள்ளத் தக்கதாக இருக்கவும் வேண்டும், அதே நேரம் சீர்மை, ஒழுங்கு உடையதாகவும், பயன் பெருக்குவதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக, ஏறக்குறைய ஒரு 10,000-20,000 நல்ல தரமான கட்டுரைகளே ஓரு கலைக்களஞ்சியத்தில் இருக்கும் அத்தகு கலைக்களஞ்சியங்கள் அரிய தொகுப்புகளில் ஒன்றாக அடையாளப்படுத்தும் (இதுவே 20-25 தொகுதிகளில் நிற்கும்). நல்ல கலைக்களஞ்சியங்களில் பதிவாகும் கட்டுரைகளுக்கு ஒரு தேர்வுமுறை இருக்கும் (தொகுப்பாளர்களால்). ஒரு நூல் எழுதிய ஆசிரியர்கள் அல்லது 50 நூல்கள் எழுதிய ஆசிரியர்கள் அனைவரின் பெயர்களும் இருக்காது. அவை நல்ல தாக்கம் ஏற்படுத்தியதாக, அறிவாளிகளால் கருதப்பட்டால் மட்டுமே (அவர்கள் கணிப்பில்), அடையாளம் அறியப்பட வேண்டியவர்களாக இருப்பவர்களைத் தேர்ந்தெடுப்பர். ஆனால் விக்கியில் அப்படியான இறுக்கம் கிடையாது. வணிக நிறுவனங்கள் முதல், ஒரே ஒரு படத்தில் நடித்த நடிகர் முதல், சிறுசிறு வேதிப்பொருள் முதல் மிகப்பலவற்றைப் பற்றியும் கட்டுரைப் பொருள்கள் இருக்கலாம். என்றாலும், ஆங்கிலத்திலே சொல்லப்படும் "notability" ( குறிப்பிடத்தக்க தன்மை ), "significant" ("முக்கியமான", குறிக்கத்தக்க) முதலான பண்புகளும் வேண்டும். நாம் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் கொண்டு இயங்கினால், , அதுவும் ஒரு சில தலைப்புகளில் மட்டும் ஒரே மாதிரியான கட்டுரைகள் (சிறு தரவு வேறுபாடுகளுடன்) எழுதினால், அது விக்கிப்பீடியாவின் தரத்தைக் குறைக்கும் வாய்ப்பு உள்ளது. சில தனிமாந்தர் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் (அவர்கள் எழுத்தாளராக இருந்தாலும் நடிகராக இருந்தாலும், விளையாட்டு வீரராக இருந்தாலும்) கட்டாயம் வேண்டும் என்றால் அவற்றை அட்டவணையில் இட்டு ஓரிரு கட்டுரையாக இடலாம் ("Wikipedia is not directory" w:en:WP:NOT என்பதையுன் கருத்தில் கொள்வது நன்று). தமிழ் விக்கிப்பீடியாவில், தரமான கட்டுரைகள் (ஒரு பக்கமோ 2, 3 பக்கமோ கொண்டவை, நல்ல அறிவைத் தூண்டும் படங்களுடனும், விளக்கங்களுடனும்) ஒரு 20,000-30,000 கட்டுரைகள் நாம் கூட்டாக உருவாக்க முடிந்தால் அதனை ஒரு பயன்மிகு வெற்றியாக நான் கருதுவேன். த.வி-யில் நாம் கட்டுரைகளைத் தரப்படுத்தவும் (தரம் குறிக்க) வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, வளர்முகமாகவும், தக்க உரையாடல் பண்போடும், நல்லுணர்வோடும் நட்புணர்வோடும் கருத்தாடி இயங்குவது மிகவும் தேவை. கருத்து வேறுபாடுகள் இருப்பினும் (கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பு, சொல்லப்போனால் அவை அடிப்படைத் தேவையும்(!!!) ஆகும்), அவற்றை முறையாக பண்புடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்னும் கருத்தை முன்வைக்கின்றேன்--செல்வா 15:53, 26 சனவரி 2012 (UTC)
- +1 நல்ல நினைவூட்டல். --மாகிர் 16:05, 26 சனவரி 2012 (UTC)
- நன்றி மாகிர் :) --செல்வா 16:10, 26 சனவரி 2012 (UTC)
- +1 நல்ல நினைவூட்டல். --மாகிர் 16:05, 26 சனவரி 2012 (UTC)
- தற்போது தமிழ் விக்கியில் நிலவும் சூழலில் விக்கியாக்கத்தை இரண்டாகப் பிரித்து செந்தரப் பதிப்பு என்று ஒன்றும் ஜனரஞ்சகப் பதிப்பு என்றும் fork out செய்யலாம்.--மணியன் 17:37, 26 சனவரி 2012 (UTC)
இருசொல் பெயரீடு
தொகுதாவரம் மற்றும் விலங்குகளை இரு சொற்பெயரீட்டினால் குறிக்கும் போது அவை இலத்தினாக்கப்பட்ட ஆங்கிலத்தில் எழுதப்படவேண்டும் என்பது விதி. பல கட்டுரைகளில் இருசொற் பெயரீட்டை தமிழில் எழுதியிருக்கின்றோம்.
எ.கா:குன்றி.கலந்துரையாடல் தேவை.--சஞ்சீவி சிவகுமார் 07:49, 24 சனவரி 2012 (UTC)
- ஆங்கிலத்தில் எழுதிவிட்டு தமிழில் அடைப்புக்குள் இடலாம் என நினைக்கிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 07:54, 24 சனவரி 2012 (UTC)
- தமிழ்நாட்டுப் பாட நூல்களில் தமிழ் எழுத்துப்பெயர்ப்புகள் தான் உள்ளன (ஆங்காங்கே லத்தீன் எழுத்துப்பெயர்ப்பு அடைபுகளில் உள்ளது) கண்டிப்பாக லத்தீன் எழுத்துருவில் இருக்க வேண்டும். அதன் தமிழ் எழுத்துப்பெயர்ப்பு கூடுதலாக இருப்பின் அதுவும் இருந்துவிட்டுப் போகட்டுமே. (குறிப்பு: தாவரவியல்/உயிரியல் துறை அறிவு எனக்கு மிகக் குறைவு. ஒரு layman ஆக இக்கருத்தினை முன்வைக்கிறேன். இது முற்றிலும் அபத்தமாகக் கூட இருக்கலாம் :-) )--சோடாபாட்டில்உரையாடுக 08:07, 24 சனவரி 2012 (UTC)
- உடனடியாகக் கருத்துத் தெரிவித்தமைக்கு நன்றி சோடாபாட்டில். ஆயினும் இவை இலத்தினாக்கப்பட்ட ஆங்கிலத்தில் எழுதப்பட வேண்டும் என்பதை ஒரு விதியாக எனது உயர்தர வகுப்பு உயிரியல் ஆசிரியர் கற்பித்ததாக ஞாபகம்.தமிழில் எழுதினால் முதலாவதாக அமையும் சாதிப்பெயரின் முன்னெழுத்து பெரிய எழுத்தாக (Capital)ஆக இருக்க வேண்டும் எனும் விதியும் ஏனைய எழுத்துக்கள் சிறிய (small)ஆக இருக்க வேண்டும் என்பதுவும் விதிகளாகப் பேணப்படுவது கடினம் --192.248.66.3 09:31, 24 சனவரி 2012 (UTC)--சஞ்சீவி சிவகுமார் 09:32, 24 சனவரி 2012 (UTC)
தமிழ், இலத்தீனம் ஆகிய இரு மொழிகளிலும் இருப்பது நன்று. ஒரு மொழி விடுபட்டுள்ள இடத்தில் மற்றொன்றையும் சேர்ப்பது ஏற்புடையதே. இலத்தீனத்தில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்று விதி இல்லை. இலத்தீன ஒலிப்பு தெரியாத மாணவர்களுக்குத் தமிழ் எழுத்துபெயர்ப்பு உதவும். //.தமிழில் எழுதினால் முதலாவதாக அமையும் சாதிப்பெயரின் முன்னெழுத்து பெரிய எழுத்தாக (Capital)ஆக இருக்க வேண்டும் எனும் விதியும் ஏனைய எழுத்துக்கள் சிறிய (small)ஆக இருக்க வேண்டும் என்பதுவும் விதிகளாகப் பேணப்படுவது கடினம்// இந்த விதி இலத்தீனத்துக்குத் தான் பொருந்தும்.--இரவி 12:05, 24 சனவரி 2012 (UTC)
இது போன்ற உரையாடல்களை விக்கிப்பீடியா பேச்சு:நடைக் கையேடு பக்கத்தில் மேற்கொள்ள வேண்டுகிறேன். அப்போது தான் பிற்காலத்தில் நடை குறித்த கேள்விகள் உள்ளோருக்குச் சிக்கும். ஆலமரத்தடியில் தமிழ் விக்கிப்பீடியா திட்டம் குறித்த பொதுவான உரையாடல்களை மேற்கொள்ளலாம்--இரவி 12:07, 24 சனவரி 2012 (UTC)
- அறிவியற்பெயர் ("Scientific name") என்பது இலத்தீனில்தான் இருக்க வேண்டும் (இலத்தீன் இலக்கண விதிகளுடன்) என்பது கரோலினசு லின்னேயசு 250 ஆண்டுகளுக்கு முன் விதித்த விதி. இன்றும் பின்பற்றப்பட்டாலும், இடாய்ச்சு (செருமன்) போன்றவற்றில் பிறைக்குறிகளுக்குள் இலத்தீனைத் தருகின்றார்கள் அல்லது தராமலும் இருக்கின்றார்கள். நாம் கட்டாயம் உரோமன் எழுத்தில் இலத்தீன் பெயரைத் தருதல் வேண்டும். ஆனால் கூடியமட்டிலும் அதன் நெருக்கமான தமிழ் ஒலிப்பையும் கட்டாயம் தர வேண்டு. பிறமொழியாளர்களைப் போலவே அறிவிய்ற்பெயரை ஒட்டிய அல்லது பொருத்தமான நற்றமிழ் அறிவியற் பெயரும் கொள்வது நல்லது. வருங்காலத்தில் ஒரு மொழியில் உள்ள ஒரு சொல்லுக்கு ஈடான பன்னூறு மொழிச்சொற்கள் மிக எளிதாகக் கிடைக்கும். எனவே கவலை வேண்டாம். தொடர்பு இருக்க வேண்டும் என்பதே தேவை. நமக்குப் பொருள் உடையதாக இருகக் வேண்டும் என்பதும் தேவை. அமெரிக்காவில் உள்ள ஒரேகான் மாநிலப் பல்கலைக்கழக வலைப்பக்கத்தில் சுருக்கமாகவும் தெளிவாகவும் அறிவியற் பெயர்கள் பற்றி தந்துள்ளார்கள், இங்குப் பார்க்கவும். அறிவியற்பெயர்கள் சில நல்ல பொருத்தம் இல்லாதனவாகவும் சில தவறாகவும் அமைவதும் உண்டு. வகைப்பாட்டியலிலும் அடையாளப்படுத்தும் முறைகளிலும் இன்று பல புதிய முறைகள் முன்னுக்கு வந்துகொண்டு இருக்கின்றன கிளைப்பியல் (cladistics) முதல், மரபணு அடிப்படையில் எண்ணிமத் தனியடையாளக் குறியீடுகள் (DNA barcoding)முறைகள் வரை (எ.கா அனைத்துலக உயிரின அடையாளக் கோடடைதிட்டம் (International Barcode of Life Project (iBOL))பல முயற்சிகளும் திட்டங்களும் உள்ளன.
--செல்வா 13:59, 24 சனவரி 2012 (UTC)
- அறிவியற்பெயர்களைத் தமிழ் விக்கிக் கட்டுரைகளில் இலத்தீன் மொழியில் (சில வேளைகளில் கிரேக்கம்) உரோமன் எழுத்தில் தரவேண்டும் என்னும் கருத்தோடு முழுமையாக உடன்படுகின்றேன். ஆங்கில விக்கியில் ஒரு பட்டியல் பார்த்தேன் (இங்கே). அதில் வரும் அறிவியற்பெயர்களுக்குத் தமிழாக்கம் உளதா? --பவுல்-Paul 15:43, 24 சனவரி 2012 (UTC)
- இப்பட்டியலை நானும் பலமுறை பார்த்து, இப்படி ஒரு முறையான பட்டியல் ஒன்றினை, இலத்தீன எழுத்திலும், தமிழ் எழுத்திலும் ஆஅ அகரவரிசையுடன் உருவாக்க நினைத்து சிறிது செய்தும் வைத்துள்ளேன். உங்களைப் போல் இலத்தீன் மொழிப்புலமை உடையவர்கள் துணையும், இன்னும் ஒரு 10-15 பேர் சேர்ந்தாலும், அனைத்தையும் நல்ல தமிழில் ஆக்கி இங்கே ஆவணப்படுத்தலாம். கடினமான வேலை இல்லை (!!), ஆனால் சீர்தரத்துடன் செய்வதும், கூடவே தக்க குறுவிளக்கங்கள் சேர்த்து எழுதுவதும், தமிழ்பேசுநிலங்களில் வாழ் துறையறிஞர்களின் ஒப்புதல் கிடைப்பது சற்று கடினமானதாக இருக்கலாம். சொல்லுங்கள், நீங்களும், மயூரநாதன், மணியன், சோடாபாட்டில், செந்தி, கலை, சுந்தர், கனகு சிறீதரன், நற்கீரன், பார்வதி, பரிதிமதி, பாஃகிம், நந்தகுமார், மகிழ்நன், கார்த்திக் பாலா, மரு. கார்த்தி, சூர்யபிரகாசு போன்று (++இன்னும் பலரும்) விக்கியில் உள்ளவர்கள் மட்டுமே சேர்ந்து இயங்கினாலும் கூட ஒரு சில மாதங்களுக்குள் நல்ல தரமான ஈடான பட்டியல் உருவாக்க முடியும். அதே நேரம் என் தனிக்கருத்து ஒன்று: சூழலோடு அக்கலைச்சொற்களை விளக்கி எழுதினால்தான் அவை பயன் மிக்கதாகவும், வேர்பற்றுவனவாகவும் இருக்கும் (இது சில மாதங்களில் முடிவது கடினம், என்றாலும் தக்கவாறு சேர்ந்தியங்கினால் இயலும் பல மாதங்களில்). சொல்லுங்கள் அடுத்த திட்டமாக இதனைச் செய்யலாம்! நான் அணியம்!--செல்வா 16:12, 24 சனவரி 2012 (UTC)
- பவுல், நான் சொன்னது இந்தப் பட்டியல் அன்று (அது சில ஆயிரம் சொற்கள் கொண்டது). இப்பட்டியலில் உள்ளதை ஒரு நாளிலோ, சில நாள்களிலோ செய்துவிடலாம். நான் செய்யத் தொடங்கிவிடுகிறேன். மொத்தம் 227 சொற்கள்தாம் உள்ளன.--செல்வா 16:53, 24 சனவரி 2012 (UTC)
- இப்பட்டியலை நானும் பலமுறை பார்த்து, இப்படி ஒரு முறையான பட்டியல் ஒன்றினை, இலத்தீன எழுத்திலும், தமிழ் எழுத்திலும் ஆஅ அகரவரிசையுடன் உருவாக்க நினைத்து சிறிது செய்தும் வைத்துள்ளேன். உங்களைப் போல் இலத்தீன் மொழிப்புலமை உடையவர்கள் துணையும், இன்னும் ஒரு 10-15 பேர் சேர்ந்தாலும், அனைத்தையும் நல்ல தமிழில் ஆக்கி இங்கே ஆவணப்படுத்தலாம். கடினமான வேலை இல்லை (!!), ஆனால் சீர்தரத்துடன் செய்வதும், கூடவே தக்க குறுவிளக்கங்கள் சேர்த்து எழுதுவதும், தமிழ்பேசுநிலங்களில் வாழ் துறையறிஞர்களின் ஒப்புதல் கிடைப்பது சற்று கடினமானதாக இருக்கலாம். சொல்லுங்கள், நீங்களும், மயூரநாதன், மணியன், சோடாபாட்டில், செந்தி, கலை, சுந்தர், கனகு சிறீதரன், நற்கீரன், பார்வதி, பரிதிமதி, பாஃகிம், நந்தகுமார், மகிழ்நன், கார்த்திக் பாலா, மரு. கார்த்தி, சூர்யபிரகாசு போன்று (++இன்னும் பலரும்) விக்கியில் உள்ளவர்கள் மட்டுமே சேர்ந்து இயங்கினாலும் கூட ஒரு சில மாதங்களுக்குள் நல்ல தரமான ஈடான பட்டியல் உருவாக்க முடியும். அதே நேரம் என் தனிக்கருத்து ஒன்று: சூழலோடு அக்கலைச்சொற்களை விளக்கி எழுதினால்தான் அவை பயன் மிக்கதாகவும், வேர்பற்றுவனவாகவும் இருக்கும் (இது சில மாதங்களில் முடிவது கடினம், என்றாலும் தக்கவாறு சேர்ந்தியங்கினால் இயலும் பல மாதங்களில்). சொல்லுங்கள் அடுத்த திட்டமாக இதனைச் செய்யலாம்! நான் அணியம்!--செல்வா 16:12, 24 சனவரி 2012 (UTC)
பவுல் ஐயா, அங்கிருந்த 227 இலத்தீன் கிரேக்கச் சொற்கள் அனைத்திற்கும் தமிழில் சொற்கள் தந்திருக்கின்றேன். நீங்களும் சரிபார்த்து மேம்படுத்துங்கள். அவற்றின் பயன்பாடுகளைச் சில தமிழ் அறிவியற்பெயர்களில் காட்டி, இணைப்புக்கொடுக்க வேண்டும். அதனை அடுத்ததாகச் செய்கிறேன்.--செல்வா 23:04, 24 சனவரி 2012 (UTC)
- நன்றி செல்வா. உயிரியற் பெயற்களின் வழக்கமான இலத்தீன் சொற்களுக்கான எளிய தமிழ்ச்சொற்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. இனி நான் ஏதேனும் உயிரினத்தின் இருசொல் பெயரைக் காணும்போது பொருளை உணர்ந்து படிக்க முடியும். -- சுந்தர் \பேச்சு 06:57, 25 சனவரி 2012 (UTC)
- நன்றி சுந்தர் :) --செல்வா 15:23, 25 சனவரி 2012 (UTC)