7வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்

இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழா

7வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் (7th Cinema Express Awards) விழா என்பது 1987 ஏப்ரல் 12 அன்று நடைபெற்றது.[1] இதில் 1986ஆம் ஆண்டு வெளியான தென்னிந்திய படங்களில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்து கௌரவித்தார். இந்த விருதுகள் பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டன.[2]

7-ஆம் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்
திகதி12 ஏப்ரல் 1987
சிறப்புக் கூறுகள்
Best Pictureசம்சாரம் அது மின்சாரம்
  சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் 8வது > 

தமிழ்

தொகு
வகை பெறுநர் படம்
சிறந்த படம் சம்சாரம் அது மின்சாரம்
சிறந்த நடிகர் விஜயகாந்த் அம்மன் கோவில் கிழக்காலே
சிறந்த நடிகை லட்சுமி சம்சாரம் அது மின்சாரம்
சிறந்த இயக்குநர் மணிரத்தினம் மௌன ராகம்
இயக்கத்திற்கு சிறப்புப் பாராட்டு விசு சம்சாரம் அது மின்சாரம்
சிறந்த அறிமுக நடிகர் ராமராஜன் நம்ம ஊரு நல்ல ஊரு
சிறந்த அறிமுக நடிகை ரேகா கடலோரக் கவிதைகள்
சிறந்த அறிமுக இயக்குநர் ஆர். அரவிந்த்ராஜ் ஊமை விழிகள்
சிறந்த இசையமைப்பாளர் டி. ராஜேந்தர் மைதிலி என்னை காதலி[a]
சிறந்த ஒளிப்பதிவாளர் ரமேஷ் குமார் ஊமை விழிகள்
சிறந்த நகைச்சுவை நடிகர் செந்தில் நட்பு
சிறந்த நகைச்சுவை நடிகை கோவை சரளா பல்வேறு
சிறந்த குழந்தை நட்சத்திரம் பேபி ஷாலினி நிலவே மலரே
சிறந்த பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன் பல்வேறு
சிறந்த பின்னணிப் பாடகி கே. எஸ். சித்ரா பல்வேறு

தெலுங்கு

தொகு
வகை பெறுநர் படம்
சிறந்த படம் சுவாதி முத்தியம்
சிறந்த நடிகர் கமல்ஹாசன் சுவாதி முத்தியம்
சிறந்த நடிகை ராதிகா சுவாதி முத்தியம்
சிறந்த இயக்குநர் கே. விஸ்வநாத் சுவாதி முத்தியம்

கன்னடம்

தொகு
வகை பெறுநர் படம்
சிறந்த படம் சுந்தர ஸ்வப்னகலு
சிறந்த நடிகர் சிவ ராஜ்குமார் ஆனந்த்
சிறந்த நடிகை சரிதா மௌன கீதே
சிறந்த இயக்குநர் கே. பாலச்சந்தர் சுந்தர ஸ்வப்னகலு

மலையாளம்

தொகு
வகை பெறுநர் படம்
சிறந்த படம் வர்தா
சிறந்த நடிகர் மோகன்லால் பஞ்சாக்னி[b]
சிறந்த நடிகை சோபனா பல்வேறு[c]
சிறந்த இயக்குநர் ஐ. வி. சசி வர்தா

சிறப்பு விருதுகள்

தொகு

ராதாரவி மற்றும் அம்பிகா ஆகியோருக்கு முறையே தழுவாத கைகள், நட்பு ஆகிய படங்களில் நடித்ததற்காக தனித்தனியாக சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

குறிப்புகள்

தொகு
  1. While the awards announcement also included பூக்களை பறிக்காதீர்கள், it was not mentioned during the presentation.
  2. While the awards announcement also included "other films", only Panchagni was mentioned during the presentation.
  3. While the awards announcement mentioned "many films", only Rareeram was mentioned during the presentation.

மேற்கோள்கள்

தொகு