வரலாற்றுக்கு முந்தைய எகிப்து

வரலாற்றுக்கு முந்தைய எகிப்து (prehistory of Egypt), புதிய கற்காலத்தில் கிமு 6,000 முதல் துவங்குகிறது. எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் காலம் கிமு 3150 முதல் துவங்குகிறது.[1] கிமு 6,000 முதல் கிமு 3150 வரையிலான காலத்தை எகிப்தின் வரலாற்றுக்கு முந்தைய காலம் ஆகும்.

எகிப்தின் வரலாற்று காலத்திற்கு முந்தைய தொல்பொருட்கள்
கெபல் எல்-அராக் கத்தியின் கைப்பிடி, பின் பக்கக் காட்சி, காலம், கிமு 3450
கெபல் எல்-அராக் கத்திகைப்பிடி, முன் பக்கக் காட்சி, காலம், கிமு 3450

முன்னுரை தொகு

எகிப்தின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை, பொதுவாக குறிப்பிட்ட இடங்களில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டு வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வரையறுப்பர். இருப்பினும் வரலாற்று முந்தைய காலத்தை வகைப்படுத்தும் அதே படிப்படியான வளர்ச்சி, முழு முன்கணிப்பு காலத்திலும் உள்ளது. மேலும் தனிப்பட்ட "பண்பாடுகள்" தனி நிறுவனங்களாக விளங்கப்படக்கூடாது. ஆனால் முழு காலத்தையும் ஆய்வு செய்ய வசதியாக பெரும்பாலும் அகநிலை பிரிவுகளாக பயன்படுத்தப்படுகின்றன.

பண்டைய எகிப்தில் நைல் நதி பாயும் மேல் எகிப்தில் நடைபெற்ற பல அகழாய்வுகளில் மிகவும் தொன்மையான தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகளை ஆய்வு செய்கையில் எகிப்தின் வரலாற்றுக்கு முந்தைய நிலையை அறிய முடிந்தது.[2]

பழைய கற்காலம் தொகு

நைல் நதி வடிநிலத்தில் 1,60,000 முதல் 6,00,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால ஆயுதங்கள் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.[3]

பிந்தைய பழைய கற்கலம் தொகு

பண்டைய எகிப்தில் பிந்தைய கற்காலம் கிமு 30,000-இல் துவங்குகிறது.[4] 1980-இல் அகழ்வாய்வில் கண்டெடுத்த நஸ்லெத் காட்டர் எலும்புக் கூடு 35,000 முதல் 30,360 ஆண்டுகளுக்கு முந்தையது எனக்கணிக்கப்பட்டுள்ளது.[5][6]

இடைக் கற்காலம் தொகு

ஹல்பன் மற்றும் குப்பானியன் பண்பாடு தொகு

1,30,000 முதல் 10,000 ஆண்டுகள் வரை நைல் நதியின் தெற்கு எகிப்தில் உள்ள வடிநிலப் பகுதிகளின், தற்கால வடக்கு சூடான் பகுதியில் ஹல்பன் மற்றும் குப்பானியப் பண்பாடுகள் செழித்து விளங்கின.[7] இந்த நாடோடிப் பண்பாட்டு மக்கள் பெரிய மேய்ச்சல் கால்நடைகளைக் கொண்டிருந்தனர். மீன் பிடி தொழிலையும் சார்ந்து இருந்தனர். [a][9] மேலும் விலங்குகளை வேட்டையாடவும் மற்றும் தேன், கிழங்கு, மீன் போன்றவைகளைச் சேகரிப்பதற்கான தொழில்நுட்பங்களைக் கொண்டிருந்தனர். இவற்றிற்குக் கூரிய கல் ஆயுதங்களையே பயன்படுத்தினர். இம்மக்கள் பாறைகளில் ஓவியங்கள் வரைந்தனர்.

செபிலியன் பண்பாடு தொகு

கிமு 13,000 ஆண்டுகளுக்கு முன்னரே பண்டைய எகிப்தின் செபிலியன் பண்பாட்டு மக்கள் கோதுமை மற்றும் பார்லி பயிரிடும் முறை பற்றி அறிந்திருந்தனர். செபிலியன் பண்பாடு கிமு 10,000-இல் எகிப்திலிருந்து மறைந்தது.

குடான் பண்பாடு தொகு

கிமு 13,000 முதல் கிமு 9,000 வரை தெற்கு எகிப்தில் குடானியப் பண்பாடு செழித்து விளங்கியது.[10][11] குடான் பண்பாட்டு மக்கள் உணவிற்காக விலங்குகளை வேட்டையாடுதல், காட்டில் சிறுதானியங்களை சேகரித்தல் ஆகியவற்றை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்தனர்.[10][11] ஆனால் இவர்கள் பயிர்களை வரிசையாக நடவு செய்யும் முறை பற்றி அறிந்திருக்கவில்லை.[12]

வடக்கு நூபியாவில் 20 தொல்லியல் களங்களை ஆய்வு செய்ததில் குடான் பண்பாட்டு மக்கள் சிறுதானியங்களை அரைத்து மாவாக்கி உண்டனர் என அறியமுடிகிறது.[13][14]

முதன்முதலில் சூடானிய மக்கள் அரிவாளை பயன்படுத்தும் முறையையும், உண்பதற்கு முன் தானியங்களைக் கல் இயந்திரத்தில் அரைக்கும் முறையையும், உண்பதற்கு முன் உணவைச் சமைக்கும் முறையையும் அறிந்து வைத்திருந்தனர்.[4] இருப்பினும் கிமு 10,000-க்குப் பிறகு இந்த கருவிகளைப் பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.[4]

அரிப்பியன் பண்பாடு தொகு

அரிப்பியப் பண்பாட்டு மக்கள், எகிப்திற்கு வெளியே மத்திய தரைக் கடல் பகுதியில், அண்மை கிழக்கில் இருந்து இடம் பெயர்ந்த நூத்துபியப் பண்பாட்டை சார்ந்தவர்கள் ஆவார். அரிப்பிய பண்பாட்டு மக்கள் எகிப்தில் 300 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தனர். கிமு 12,000-இல் இப்பண்பாடு முடிவிற்கு வந்தது.[15][16]

புதிய கற்காலம் தொகு

பையூம் பண்பாடு தொகு

 
பையூம் பாலைவனச் சோலை
 
பையூர் பண்பாட்டின் அம்புகள்

பாலைவனத்தின் தொடர்ச்சியான விரிவாக்கம் எகிப்தியர்களின் ஆரம்பகால மூதாதையர்களை நைல் நதியைச் சுற்றி நிரந்தரமாக குடியேறவும், கற்காலத்தின் போது மிகவும் நிலையான வாழ்க்கை முறையை பின்பற்றவும் கட்டாயப்படுத்தியது. கிமு 9,000 முதல் 6,000 வரையிலான காலகட்டத்தில் தொல்பொருள் சான்றுகளின் மூலம் மிகக் குறைவான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. கிமு 6000-இல், புதிய கற்கால குடியிருப்புகள் எகிப்து முழுவதும் தோன்றியது. தொல்பொருள் தரவுகளின் அடிப்படையிலான ஆய்வுகள் இந்த குடியேற்றங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் காரணம் என்று கூறுகின்றது. அண்மைக் கிழக்கின் வளமான பிறை பிரதேசத்திலிருந்து பண்டைய எகிப்து மற்றும் வட ஆபிரிக்காவில் வேளாண்மைத் தொழில் முன்னெடுக்கப்பட்டது.

பையும் பண்பாட்டுக் காலத்தில் நெசவுத் தொழில் இருந்தது நிருபிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த மக்கள், பிற்கால எகிப்தியர்களைப் போலல்லாமல், தங்களின் இறந்தவர்களை அவர்களின் குடியிருப்புகளுக்கு மிக அருகில், சில சமயங்களில் உள்ளே புதைத்தனர். தொல்பொருள் தளங்கள் இந்த நேரத்தைப் பற்றி மிகக் குறைவாகவே வெளிப்படுத்துகின்றன என்றாலும், நகரம் என்பதற்கான பல எகிப்திய சொற்களின் ஆய்வு, எகிப்தியர்கள் குடியேறியதற்கான காரணங்களின் கற்பனையான பட்டியலை வழங்குகிறது. மேல் எகிப்தின் கலைச்சொற்கள் வணிகம், கால்நடைகளின் பாதுகாப்பு, வெள்ளப் புகலிடத்திற்கான உயரமான நிலம் மற்றும் தெய்வங்களுக்கான புனிதத் தலங்களைக் குறிக்கிறது.

மெரிம்தி பண்பாடு தொகு

கிமு 5000 முதல் கிமு 4200 வரை, நைல் நதியின் மேற்கு வடிநிலத்தின் விளிம்பில் உள்ள ஒரு பெரிய குடியேற்ற தளத்திலிருந்து மட்டுமே அறியப்பட்ட மெரிம்தி பண்பாடு வடக்கு எகிப்தில் செழித்தது. இந்த பண்பாடு பையூம் (அ) பண்பாடு மற்றும் அண்மைக் கிழக்கின் லெவண்ட் ஆகியவற்றுடன் வலுவான தொடர்புகளைக் கொண்டுள்ளது. மக்கள் சிறிய குடிசைகளில் வாழ்ந்தனர். எளிமையான அலங்காரமற்ற மட்பாண்டங்களை தயாரித்தனர் மற்றும் கல் கருவிகளை வைத்திருந்தனர். கால்நடைகள், செம்மறி ஆடுகள், பன்றிகள் வளர்க்கப்பட்டது. கோதுமை, சோளம், பார்லி பயிரிடப்பட்டது. மெரிம்தி மக்கள் தங்கள் இறந்தவர்களை வாழும் பகுதிகளில் புதைத்து களிமண் சிலைகளை உருவாக்கினர். களிமண்ணால் செய்யப்பட்ட முதல் எகிப்திய உயிர்த் தலை மெரிம்டேவிலிருந்து வந்தது.

எல் ஓமரி பண்பாடு தொகு

எல் ஓமரி பண்பாடு தற்கால கெய்ரோவிற்கு அருகிலுள்ள ஒரு சிறிய குடியேற்றத்திலிருந்து அறியப்படுகிறது. மக்கள் குடிசைகளில் வாழ்ந்ததாகத் தெரிகிறது, மட்பாண்டங்கள் அலங்கரிக்கப்படவில்லை. கல் கருவிகளில் கோடரிகள் மற்றும் அரிவாள்கள் அடங்கும். இக்காலத்தில் உலோகம் இன்னும் அறியப்படவில்லை. அவர்களின் தளங்கள் கிமு 4000 முதல் தொன்மையான காலம் வரை ஆக்கிரமிக்கப்பட்டன.

மாதி பண்பாடு தொகு

வடக்கு எகிப்தில் மலர்ந்த நிலவிய மாதி பண்பாடு, தெற்கு எகிப்தில் நிலவிய நக்காடா I மற்றும் II பண்பாட்டின் சமகாலத்தவையாகும்.இந்தப் பண்பாட்டின் கட்டிடக்கலை மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் குறிக்கப்பட்டது. அது அலங்கரிக்கப்படாத மட்பாண்டங்கள் வரும்போது அதன் முன்னோடி கலாச்சாரங்களையும் பின்பற்றியது. தாமிரம் அறியப்பட்டது, மேலும் சில செப்பு உலோகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மட்பாண்டங்கள் எளிமையானது மற்றும் அலங்கரிக்கப்படாதது மற்றும் சில வடிவங்களில் தெற்கு லெவண்டுடன் வலுவான தொடர்புகளைக் கொண்டிரந்தது. இறந்தவர்களை சில பொருட்களுடன் கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டனர்.

தஸ்சியப் பண்பாடு தொகு

தஸ்சியப் பண்பாடு தெற்கு எகிப்தில் பாயும் நைல் நதியின் கிழக்குக் கரையில் கண்டெடுத்த புதைகுழிகளுக்காக இந்தப்பண்பாட்டிற்கு பெயரிடப்பட்டது. தஸ்சியன் பண்பாட்டுக் காலத்தின் துவக்கத்தில் ஆரம்பகால மட்பாண்டங்களின் மேற்புறத்தில் கருப்பு வண்ணம் கொண்டிருந்தது. சிவப்பு மற்றும் பழுப்பு மட்பாண்டங்களின் மேல் மற்றும் உட்புறத்தில் கருப்பு வண்ணம் பூசப்பட்டிருந்தது. இந்த மட்பாண்டங்களில் எகிப்தின் துவக்க கால அரச அரசமரபுகளின் தோற்றத்தின் குறிப்புகள் கொண்டிருந்தது.

தஸ்சியப் பண்பாட்டின் மட்பாண்டங்கள் மற்றும் பதாரியப் பண்பாட்டின் மட்பாண்டங்களுக்கு இடையே சிறிய வித்தியாசம் இருப்பதால், தஸ்சியப் பண்பாடு பதாரியப் பண்பாட்டின் வரம்பில் குறிப்பிடத்தக்க அளவில் ஒன்றுடன் ஒன்று கல்ந்து உள்ளது. தஸ்சியன் காலத்திலிருந்து மேல் எகிப்து, கீழ் எகிப்தின் பண்பாட்டால் வலுவாக தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.

பதாரியப் பண்பாடு தொகு

 
பதாரியப் பண்பாட்டுக் காலத்திய பெண் மரச்சிற்பம்

ஏறத்தாழ கிமு 5000 முதல் கிமு 4000 வரை மேல் எகிப்தில் நிலவியது. பதாரி தொல்லியல் களத்தில் இப்பண்பாட்டிற்கான ஆதாரங்கள் கிடைத்தது. இது தஸ்சியன் பண்பாட்டைப் பின்பற்றி, அதனை ஒத்ததாக உள்ளது. பலர் இதனை ஒரு தொடர்ச்சியான காலமாக கருதுகின்றனர். பதாரியப் பணபாட்டு காலத்தில் தரமான வண்ண மேற்புற கருப்பு மட்பாண்டங்கள் தயாரித்தனர். பதாரியன் தளங்கள் கல்லுடன் கூடுதலாக தாமிரத்தைப் பயன்படுத்தினர். எனவே அவை கல்கோலிதிக் குடியிருப்புகளாக இருக்கின்றன. அதே சமயம் புதிய கற்கால தஸ்சியன் தளங்கள் இன்னும் கற்காலமாகக் கருதப்படுகின்றன. நெக்கெனிலிருந்து அபிதோஸ் நகரத்திற்கு வடக்கே நெகெனில் இருந்து அபிதோசின் வடக்கே பதாரியன் பண்பாட்டின் தொல்லியல் களங்கள் அமைந்துள்ளன.

நக்காடா பண்பாடு தொகு

செப்புக் காலம் காலத்திய வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் தொல்லியல் நக்காடா பண்பாட்டுக் காலம் கிமு 4,000 முதல் கிமு 3,000 முடிய விளங்கியது. நக்காடா எனும் பண்டைய எகிப்திய நகரத்தின் பெயரால் இப்பண்பாட்டிற்கு நக்காடா பண்பாடு எனத்தொல்லியல் அறிஞர்கள் பெயரிட்டனர். நக்காடா பண்பாட்டுக் காலத்தை முதலாம் நக்காடா, இரண்டாம் நக்காடா மற்றும் மூன்றாம் நக்காடா எனப்பிரிப்பர்.

அமராதியன் பண்பாடு (நக்காடா I) தொகு

 
கருப்பு சிவப்பு நிற சுடுமண் தாழி, (கிமு 3800-3500)

அமராத்தியப் பண்பாடு அல்லது முதல் நக்காடா காலம் கிமு 4,000 முதல் கிமு 3,500 முடிய தெற்கு எகிப்தில் விளங்கியது.[17] அம்ரா எனும் தொல்லியல் களத்தின் பெயரால் இப்பண்பாடு அமராதியன் பண்பாட்டிற்கு பெயரிட்டனர்.[18] இக்காலத்திய மட்பாண்டத்தில் மேற்பகுதி கருப்பு நிறமும், வெள்ளைக் குறுக்குக் கோடுகளும் கொண்டிருந்தது.[19]

இக்காலத்தில் மேல் எகிப்திற்கும், கீழ் எகிப்திற்கிடையே வணிகம் நடைபெற்றதை புதிய அகழ்வாராய்ச்சிகள் வெளிப்பட்ட தொல் பொருட்கள் மூலம் கண்டறிப்பட்டுள்ளது. எல்-அம்ராவில் கிடைத்த கல் பாண்டம் மற்றும் செப்பு பாண்டங்கள், சினாய் அல்லது நூபியா பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் எனக்கருதப்படுகிறது.[20][20]

சிறு அளவிலான களிமண் செங்கற்கள் முதன்முதலாக அமராதியன் பண்பாட்டுக் காலத்தில் பயன்பட்டது.[21] கூடுதலாக முட்டை வடிவிலான அழகியத் தட்டுகள் இக்காலத்தில் பயன்படுத்தப்பட்டது. .[22][23]

கெர்செக் பண்பாடு (நக்காடா II) தொகு

 
உருவப் பொறிப்புகளுடன் கூடிய கெபல் எல்-அராக் கத்தியின் கைப்பிடி, நக்காடா II, கிமு 3450
 
படகு உருவம் வரையப்பட்ட பானை

பண்டைய எகிப்தில் இரண்டாம் நக்காடா காலத்தில் கெர்செக் பண்பாடு கிமு 3,500 முதல் கிமு 3200 முடிய விளங்கியது.[17] ஜெர்செக் தொல்லியல் களத்தின் பெயரால் இப்பண்பாட்டை அழைத்தனர். இக்காலத்தில் பண்டைய எகிப்தின் பண்பாடு வளர்ச்சியுற்றது. மேலும் இக்காலத்தில் துவக்க கால அரசமரபுகளுக்கு அடித்தளமிட்டது.

கெர்செக் பண்பாட்டுக் காலத்தில் (கிமு 3450 ஆண்டில் நெக்கன் தொல்லியல் களத்தில் கெபல் எல்-அராக் கத்தி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கத்தியின் கைப்பிடி யானையின் தந்ததாலும், கத்தி விண்கல்லாலும் செய்யப்பட்ட இத்தொல்பொருள், பண்டைய அண்மை கிழக்கின் உரூக் காலத்திய மெசொப்பொத்தேமியாவின் பண்பாட்டுத் தாக்கங்கள் அதிகம் கொண்டுள்ளது. தந்த கைப்பிடியில் போர் வீரர்கள், மன்னர் மற்றும் விலங்குகளின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டிருந்தது.

இப்பண்பாட்டுக் காலத்திய மட்பாண்டங்களில் அடர் சிவப்பு நிறத்துடன், விலங்குகள், மனிதர்கள், படகுகள் உருவங்கள் வரையப்பட்டிருந்தது.[24] இப்பண்பாட்டுக் காலத்தில் வேட்டைத் தொழிலுடன், நைல் நதி கரையோரங்களில் உணவு தானியங்கள் வேளாண்மை செய்யப்பட்டது.[24][24] இக்காலத்தில் பல அறைகள் கொண்ட எகிப்திய நகரக் குடியிருப்புகள் சுட்ட களிமண் செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது.[24] அனைத்து கருவிகளும் செப்பு உலோகத்தில் செய்யப்பட்டிருந்தன.[24] ref name="Gardiner 391"/>பெண்கள் வெள்ளி, தங்கத்தினால் செய்யப்பட்ட அழகிய நகைகள் அணிந்தனர்.[24] தானியங்களை அரைக்கும் கருவிகள் பயன்படுத்தப்பட்டது.மெசொப்பொத்தேமியாவின் உரூக் பண்பாட்டுக் காலத்திய உருளை முத்திரைகள் எகிப்தின் தொல்லியல் அகழாய்வில் கண்டறியப்பட்டது.[25]

கெபல் எல்-அராக் கத்தியின் தந்தக் கைப்பிடி பின்புறத்தில் பொறிக்கப்பட்ட உருவங்கள், அபிதோஸ்[26]
கெபல் எல்-அராக் கத்தியின் தந்தக் கைப்பிடியில் மெசொப்பொத்தேமியாவின் விலங்குகளின் அரசன் உருவம், கிமு 3450[26][27]
 
வண்ணம் தீட்டப்பட்ட சுடுமண் பெண் உருவம், கிமு 3500–3400 11+12 அங் × 5+12 அங் × 2+14 அங் (29.2 cm × 14.0 cm × 5.7 cm).

நக்காடா III தொகு

 
மூன்றாம் நக்காடா காலத்திய எருது உருவம் பொறித்த தட்டு

பண்டைய எகிப்தில் மூன்றாம் நக்காடா காலம் கிமு 3200 முதல் கிமு 3000 வரை விளங்கியது.[17]கிமு 3200 முற்பகுதியில் மேல் எகிப்தை மன்னர் மன்னர் கா ஆட்சி செய்தார். பின்னர் இரண்டாம் இசுகோர்ப்பியோன் ஆட்சி செய்தார். பின்னர் மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்துகளை ஒன்றிணைத்து முதல் வம்ச ஆட்சியை மன்னர் நார்மெர் நிறுவினார்.

இக்காலத்தை பொதுவாக எகிப்தின் ஆதி வம்ச காலத்தின் துவக்கத்துடன் ஒப்பிடப்படுகிறது. இக்காலத்தில் நைல் நதியிலிருந்து கால்வாய்கள் முலம் வயல் பகுதிகளுக்கு நீர் கொண்டு சென்றனர். மேலும் இறந்த அரச குடும்பத்தினரின் உடல்கள் கல்லறைகள் கட்டி புதைத்தனர். வயல் பகுதிகளுக்கு [28] கெய்ரோவின் நகரபுறப்பகுதியான மாடியை உறுதியான அரணாக கட்டினர்.[29]

வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய எகிப்தின் காலக் கோடுகள் தொகு

(அனைத்து காலங்களும் தேரயமானது )
  • பிந்தைய பழைய கற்காலம், கிமு 40,00,000
    • அதேரியன் கற் கருவிகள் உற்பத்தி[4]
    • வாடி ஹால்பா பண்பாட்டுக் காலத்தில் பகுதி நிரந்தர குடியேற்றக் காலம்[4]
    • விலங்கு எலும்புகள் மற்றும் கொம்புகளிலிருந்து வேட்டை மற்றும் பிற ஆயுதகளை உற்பத்தி செய்தல்
  • புதிய கற்காலம் கிமு 11,00,000 முதல்
    • கிமு 10,500: நைல் நதியை ஒட்டிய காட்டுத் தானியங்கள் அறுவடை செய்தல், தானியங்களை அரைக்கும் கற்கள் மற்றும் அரிவாள்களை உற்பத்தி செய்தல்[4]
    • கிமு 8000 : நைல் நதி கரைகளில் மக்கள் குடியேறுதல், மையப்படுத்தப்பட்ட சமுதாயத்தை கட்டமைத்தல், வேளாண் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு நிரந்தர குடியிருப்புகளை அமைத்தல்.
    • கிமு 7500: பண்டைய அண்மை கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவிலிருந்து விலங்குகளை சகாராவிற்கு இறக்குமதி செய்தல்.
    • கிமு 7000 : கிழக்கு சகாராவில் வேளாண்மை-விலங்குகள் மூலம் தானியங்களை உற்பத்தி செய்தல்.
    • கிமு 7000: தெற்கு எகிப்தின் நப்தா பிளையா பிர்தேசத்தில் நைல் நதி அருகே பெரிய அளவில் நீர் நிலைகள் தோண்டப்பட்டு, பெரும் மனிதக் குடியிருப்புகள் நிறுவப்படல்
    • கிமு 6000 : போக்குவரத்திற்கு படகுகள் கட்டி நைல் நதியில் ஓட்டுதல்
    • கிமு 5500 : தெற்கு எகிப்தின் நப்தா பிளையா பிரதேசத்தில், பலி விலங்குகளை புதைக்க கல்-கூரை கொண்ட நிலத்தடி அறைகள் மற்றும் பிற நிலத்தடி வளாகங்கள் அமைத்தல்
    • கிமு 5000: தெற்கு எகிப்தின் நப்தா பிளையா பிரதேசத்தில் தொன்மையான வானவியல் அறியம் பெருங்கற்காலத்திய கல் கண்டறியப்பட்டது.[30][31]
    • கிமு 5000 : பாதாரியப் பண்பாட்டுக் காலத்திய தளவாடங்கள், மேசைகள், செவ்வக வடிவ வீடுகளின் மாதிரிகளும், மட்பாண்டங்கள், தட்டுகள், கோப்பைகள், கிண்ணங்கள், சீப்புகள் கண்டறியப்பட்டது.
    • கிமு 4400: நன்கு நெய்யப்பட்ட லினன் துணிக்ளின் துண்டுகள் கண்டறியப்பட்டது.[32]
    • கிமு 4,000 முதல், புதிய தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் பரவலாயிற்று
    • கிமு 4000: பண்டைய அண்மை கிழக்கு நகரங்களுடன் கடல்வழி வணிகம் துவங்கியது[33]
    • கிமு 4000: ஜெர்செக் பண்பாட்டின் தானிய சேமிப்புக்காக நிலத்தடி அறைகள் கொண்ட ஜெர்சியன் குவிமாடம் கண்டுபிடிக்கப்பட்டது.
    • கிமு 4000: முதலாம் நக்காடா பண்பாட்டுக் காலம் தேவதாரு மரக்கட்டைகள் தற்கால லெபனான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
    • கிமு 3900 : தெற்கு சகாராவிலிருந்து நைல் வடிநிலப் பகுதிகளில் மக்கள் புலம்பெயர்ந்தனர்.[34]
    • கிமு 3500: நவரத்தினக் கற்கள் தற்கால ஆப்கானித்தான் நாட்டின் [படாக்சன்னிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
    • கிமு 3500 :உலகின் பழைமையான பொழுதுபோக்கு விளையாட்டுப் பலகையை பயன்படுத்தி விளையாடினர்.
    • கிமு 3500: உலகின் பழைமையான பளிங்குக் கல்லாலான அழகிய மட்பாண்டங்கள், பளிங்குக் கல் மணிகளைப் தயாரித்தனர்.
    • கிமு 3400: கழுதைகளை வீட்டு விலங்குகளாக பழக்கினர், இரும்பிலான மணிகளை அணிந்தனர்.[35] கட்டுமானங்களுக்கு சுண்ணாம்புக்கலவையின் பயன்பாட்டை அறிந்து கொண்டனர்.
    • கிமு 3300: இரட்டை குழல் கொண்ட ஊது குழல் இசைக்கருவிகள் மற்றும் தந்திக் கருவிகளும் இசைத்தனர்.
    • கிமு 3200:மூன்றாம் நக்காடா காலம், கிமு 3200 முதல் கிமு 3100 வரை
    • கிமு 3100:எகிப்தின் முதல் வம்ச பார்வோன் நார்மெர் அல்லது மெனஸ் மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்தையும் ஒன்றினைத்து துவக்க கால எகிப்திய இராச்சியத்தை நிறுவினர்.

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. The Khormusan is defined as a Middle Palaeolithic industry while the Halfan is defined as an Epipalaeolithic industry. According to scholarly opinion the Khormusan and the Halfan are viewed as separate and distinct cultures.[8]

மேற்கோள்கள் தொகு

  1. Leprohon, Ronald, J. (2013). The great name : ancient Egyptian royal titulary. Society of Biblical Literature. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-58983-735-5. 
  2. Redford, Donald B. (1992). Egypt, Canaan, and Israel in Ancient Times. Princeton: University Press. பக். 10. https://archive.org/details/egyptcanaanisrae00redf. 
  3. Langer, William L., தொகுப்பாசிரியர் (1972). An Encyclopedia of World History (5th ). Boston, MA: Houghton Mifflin Company. பக். 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-395-13592-3. https://archive.org/details/encyclopediaworl00will/page/9. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 "Ancient Egyptian Culture: Paleolithic Egypt". Emuseum. Minnesota: Minnesota State University. Archived from the original on 1 June 2010. பார்க்கப்பட்ட நாள் 13 April 2012.
  5. "Dental Anthropology" (PDF). Anthropology.osu.edu. Archived from the original (PDF) on 29 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2013.
  6. Bouchneba, L.; Crevecoeur, I. (2009). "The inner ear of Nazlet Khater 2 (Upper Paleolithic, Egypt)". Journal of Human Evolution 56 (3): 257–262. doi:10.1016/j.jhevol.2008.12.003. பப்மெட்:19144388. 
  7. "Late Palaeolithic Hunter-Gatherers in the Nile Valley of Nubia and Upper Egypt". South-Eastern Mediterranean Peoples Between 130,000 and 10,000 years ago. (2014). Oxbow Books. 89–125. 
  8. "Prehistory of Nubia". Numibia.net. Archived from the original on 29 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2013.
  9. Reynes, Midant-Beatrix (2000). The Prehistory of Egypt: From the First Egyptians to the First Pharohs. Wiley-Blackwell. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-631-21787-8. https://archive.org/details/prehistoryofegyp0000mida. 
  10. 10.0 10.1 Phillipson, DW: African Archaeology p. 149. Cambridge University Press, 2005.
  11. 11.0 11.1 Shaw, I & Jameson, R: A Dictionary of Archaeology, p. 136. Blackwell Publishers Ltd, 2002.
  12. Darvill, T: The Concise Oxford Dictionary of Archaeology, Copyright © 2002, 2003 by Oxford University Press.
  13. Grimal, Nicolas (1988). A History of Ancient Egypt. Librairie Arthéme Fayard. பக். 21. 
  14. Kelly, Raymond (October 2005). "The evolution of lethal intergroup violence". PNAS 102 (43): 24–29. doi:10.1073/pnas.0505955102. பப்மெட்:16129826. Bibcode: 2005PNAS..10215294K. 
  15. Bar Yosef, Ofer (1998). "The Natufian Culture in the Levant, Threshold to the Origins of Agriculture". Evolutionary Anthropology 6 (5): 159–177. doi:10.1002/(sici)1520-6505(1998)6:5<159::aid-evan4>3.0.co;2-7. https://semanticscholar.org/paper/a55a1fde182dadd5488bce10f3d3b478d6bf47f6. 
  16. Richter, Tobias (2011). "Interaction before Agriculture: Exchanging Material and Sharing Knowledge in the Final Pleistocene Levant". Cambridge Archaeological Journal 21 (1): 95–114. doi:10.1017/S0959774311000060. http://discovery.ucl.ac.uk/1343637/1/download20.pdf. 
  17. 17.0 17.1 17.2 Shaw, Ian, தொகுப்பாசிரியர் (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. பக். 479. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-815034-2. https://archive.org/details/oxfordhisto00shaw/page/479. 
  18. Grimal, Nicolas. A History of Ancient Egypt. p.24. Librairie Arthéme Fayard, 1988
  19. Gardiner, Alan, Egypt of the Pharaohs (Oxford: University Press, 1964), p. 390.
  20. 20.0 20.1 Grimal, Nicolas. A History of Ancient Egypt. p. 28. Librairie Arthéme Fayard, 1988
  21. Redford, Donald B. Egypt, Canaan, and Israel in Ancient Times. Princeton: University Press, 1992, p. 7.
  22. Gardiner, Alan, Egypt of the Pharaohs. Oxford: University Press, 1964, p. 393.
  23. Newell, G. D., "The Relative chronology of PNC I" (Academia.Edu: 2012)
  24. 24.0 24.1 24.2 24.3 24.4 24.5 Redford, Donald B. Egypt, Canaan, and Israel in Ancient Times. (Princeton: University Press, 1992), p. 16.
  25. Redford, Donald B. Egypt, Canaan, and Israel in Ancient Times. (Princeton: University Press, 1992), p. 17.
  26. 26.0 26.1 "Site officiel du musée du Louvre". cartelfr.louvre.fr.
  27. Cooper, Jerrol S. (1996) (in en). The Study of the Ancient Near East in the Twenty-first Century: The William Foxwell Albright Centennial Conference. Eisenbrauns. பக். 10–14. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780931464966. https://books.google.com/books?id=3hc1Yp0VcjoC&pg=PA10. 
  28. "Naqada III". Faiyum.com. பார்க்கப்பட்ட நாள் 1 May 2012.
  29. "Maadi Culture". www.ucl.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 3 April 2018.
  30. Malville, J. McKim (2015), "Astronomy at Nabta Playa, Egypt", in Ruggles, C.L.N. (ed.), Handbook of Archaeoastronomy and Ethnoastronomy, vol. 2, New York: Springer Science+Business Media, pp. 1079–1091, ISBN 978-1-4614-6140-1
  31. Belmonte, Juan Antonio (2010), "Ancient Egypt", in Ruggles, Clive; Cotte, Michel (eds.), Heritage Sites of Astronomy and Archaeoastronomy in the context of the UNESCO World Heritage Convention: A Thematic Study, Paris: International Council on Monuments and Sites/International Astronomical Union, pp. 119–129, ISBN 978-2-918086-07-9
  32. "linen fragment". Digitalegypt.ucl.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 1 May 2012.
  33. Shaw (2000), p. 61
  34. Brooks, Nick (2006). "Cultural responses to aridity in the Middle Holocene and increased social complexity". Quaternary International 151 (1): 29–49. doi:10.1016/j.quaint.2006.01.013. Bibcode: 2006QuInt.151...29B. 
  35. "Iron beads were worn in Egypt as early as 4000 B.C., but these were of meteoric iron, evidently shaped by the rubbing process used in shaping implements of stone", quoted under the heading "Columbia Encyclopedia: Iron Age" at Iron Age, Answers.com. Also, see History of ferrous metallurgy#Meteoric iron—"Around 4000 BC small items, such as the tips of spears and ornaments, were being fashioned from iron recovered from meteorites" – attributed to R. F. Tylecote, A History of Metallurgy (2nd edition, 1992), p. 3.

வெளி இணைப்புகள் தொகு