தும்பாட் மக்களவைத் தொகுதி

தும்பாட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tumpat; ஆங்கிலம்: Tumpat Federal Constituency; சீனம்: 道北联邦选区) என்பது மலேசியா, கிளாந்தான், தும்பாட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P019) ஆகும்.[7]

தும்பாட் (P019)
மலேசிய மக்களவைத் தொகுதி
கிளாந்தான்
Tumpat (P019)
Federal Constituency in Kelantan
தும்பாட் மக்களவைத் தொகுதி
(P019 Tumpat)
மாவட்டம் தும்பாட் மாவட்டம்
கிளாந்தான்
வாக்காளர்களின் எண்ணிக்கை150,248 (2023)[1]
வாக்காளர் தொகுதிதும்பாட் தொகுதி[2]
முக்கிய நகரங்கள்தும்பாட், வாக்காப் பாரு, கோத்தா பாரு
பரப்பளவு180 ச.கி.மீ[3]
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1958
கட்சி பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்மும்தாஸ் நவி
(Mumtaz Md. Nawi)
மக்கள் தொகை179,944 (2020)[4]
முதல் தேர்தல்மலாயா பொதுத் தேர்தல், 1959
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]




2022-இல் தும்பாட் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:[6]

  சீனர் (3.9%)
  மலாயர் (92.7%)
  இதர இனத்தவர் (2.9%)

தும்பாட் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1959-ஆம் ஆண்டில் இருந்து தும்பாட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

தும்பாட் மாவட்டம்

தொகு

தும்பாட் நகரம் தாய்லாந்து எல்லையில் கிளாந்தான் மாநிலத்தின் வடக்கில் உள்ளது. இந்த நகரத்தின் மேற்கில் கோலோக் ஆறு; கிழக்கில் கிளாந்தான் ஆறு; தெற்கில் பாசீர் மாஸ், கோத்தா பாரு; மேற்கில் தாய்லாந்து தாக் பாய் மாவட்டம் (Tak Bai District) ஆகியவை உள்ளன.

தும்பாட் நகரம் கிளாந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாரு நகரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. மலேசியக் கிழக்கு கடற்கரை தொடருந்து சேவையின் (East Coast Line Malaysia) இறுதி முனையில் அமைந்துள்ளது.

2022-ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, தும்பாட் மாவட்டத்தின் மக்கள்தொகை ஏறக்குறைய 183,100. பெரும்பான்மையான மக்கள் மலேசிய மலாயர் ஆவர். குறிப்பிடத்தக்க அளவில் மலேசிய சயாமியர் (Malaysian Siamese); மலேசிய இந்தியர் மற்றும் மலேசிய சீனர் வாழ்கின்றனர்.

தும்பாட் மக்களவைத் தொகுதி

தொகு
தும்பாட் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1958-ஆம் ஆண்டில் கிளாந்தான் உத்தாரா தொகுதியில் இருந்து
தும்பாட் தொகுதி உருவாக்கப்பட்டது
மலாயா கூட்டரசின் மக்களவை
1-ஆவது மலாயா மக்களவை P015 1959–1963 அசன் அகமது
(Hassan Ahmad)
மலேசிய இசுலாமிய கட்சி
மலேசிய மக்களவை
1-ஆவது மக்களவை P015 1963–1964 அசன் அகமது
(Hassan Ahmad)
மலேசிய இசுலாமிய கட்சி
2-ஆவது மக்களவை 1964–1969 வான் அசன் வான் தாவூத்
(Wan Hassan Wan Daud)
1969–1971 நாடாளுமன்ற இடைநிறுத்தம்[8][9]
3-ஆவது மக்களவை P015 1971–1973 அப்துல் அசீஸ் உமர்
(Abdul Aziz Omar)
மலேசிய கூட்டணி
(அம்னோ)
1973-1974 பாரிசான் நேசனல்
(அம்னோ)
4-ஆவது மக்களவை P016 1974–1978 தெங்கு நூர் அசியா
(Tengku Noor Asiah)
5-ஆவது மக்களவை 1978–1982
6-ஆவது மக்களவை 1982–1986 துசுக்கி அகமது
(Dusuki Ahmad)
7-ஆவது மக்களவை P017 1986–1990
8-ஆவது மக்களவை 1990–1995 வான் சமீல் மகமூத்
(Wan Jamil Wan Mahmood)
மலேசிய இசுலாமிய கட்சி
9-ஆவது மக்களவை P019 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004 கமருதீன் ஜாபர்
(Kamarudin Jaffar)
மாற்று முன்னணி
(மலேசிய இசுலாமிய கட்சி)
11-ஆவது மக்களவை 2004–2008 மலேசிய இசுலாமிய கட்சி
12-ஆவது மக்களவை 2008–2013 பாக்காத்தான் ராக்யாட்
(மலேசிய இசுலாமிய கட்சி)
13-ஆவது மக்களவை 2013–2015
2015–2018 பாக்காத்தான் ராக்யாட்
(மக்கள் நீதிக் கட்சி)
14-ஆவது மக்களவை 2018–2020 சே அப்துல்லா மாட் நவி
(Che Abdullah Mat Nawi)
மலேசிய இசுலாமிய கட்சி
2020–2022 பெரிக்காத்தான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் மும்தாஸ் நவி
(Mumtaz Md. Nawi)

தும்பாட் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
149,371
வாக்களித்தவர்கள்
(Turnout)
106,131 70.07%   - 9.92%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
104,659 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
281
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
1,233
பெரும்பான்மை
(Majority)
34,793 33.24%   + 13.03
வெற்றி பெற்ற கட்சி மலேசிய இசுலாமிய கட்சி
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[10]

தும்பாட் மக்களவை வேட்பாளர் விவரங்கள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
கட்சி வேட்பாளர் செல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
% ∆%
மலேசிய இசுலாமிய கட்சி மும்தாஸ் நவி
(Mumtaz Md. Nawi)
104,659 65,426 62.51% + 9.36%  
பாரிசான் நேசனல் சே அப்துல்லா மாட் நவி
(Che Abdullah Mat Nawi)
- 30,633 29.27% - 29.27%  
பாக்காத்தான் அரப்பான் வான் அலமது ஜொகாரி
(Wan Ahmad Johari Wan Omar)
- 7,762 7.42% - 5.48  %  
பூமிபுத்ரா கட்சி சே முகமது அசுவாரி
(Che Mohamad Aswari Che Ali)
- 593 0.57% + 0.57%  
வாரிசான் கைருல் அசுவான் கமருதீன்
(Khairul Azwan Kamarrudin)
- 245 0.23% + 0.23%  

மேற்கோள்கள்

தொகு
  1. "Senarai Harga Daftar Pemilih Untuk Pilihan Raya Umum Ke-14 Yang Diwartakan Pada 10 April 2018" (PDF). Suruhanjaya Pilihan Raya Malaysia. 2018-04-16. p. 5. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  7. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  8. Ahmad Fauzi Mustafa (2012-03-12). "Hanya Yang di-Pertuan Agong ada kuasa panggil Parlimen bersidang". Utusan Online. http://ww1.utusan.com.my/utusan/info.asp?y=2012&dt=0312&pub=Utusan_Malaysia&sec=Rencana&pg=re_05.htm. 
  9. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-12.
  10. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு