பயனர்:Prash/திரவியம் (சமணம்)

ஆறு நிலைபேறான பண்டங்களின் வகைப்பாடு

திரவியம் (சமக்கிருதம்: द्रव्य) என்பது பண்டம் அல்லது கூறுகளைக் குறிக்கும். சமண மெய்யியலின் படி, இவ் அண்டம் ஆறு நிலைபேறான பண்டங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அவையாவன: தன்னுணர்வுள்ளவை அல்லது உயிர்கள் (சீவன்), தன்னுணர்வற்றவை அல்லது பருப்பொருள் (புத்கலம்), இயக்கக் கோட்பாடு (தர்மம்), ஓய்வுக் கோட்பாடு (அதர்மம்), வெளி (ஆகாசம்), மற்றும் காலம் (காலம்) என்பனவாகும்.[1][2] இவற்றுள் பின்னைய ஐந்தும் அசீவன் (உயிரற்றவை) என வகைப்படுத்தப்படுகின்றன. சமசுகிருதச் சொற்பிறப்பியலின் படி, திரவியம் என்பது பண்டம் அல்லது கூறு எனப் பொருள்படும். ஆயினும், இச்சொல்லுக்கு, உண்மையான அல்லது அடிப்படை வகைகள் எனும் பொருளும் உண்டு.[2]

சமண மெய்யியலாளர்கள் பண்டங்களை ஒரு உடல் அல்லது பொருளிலிருந்து வேறுபடுத்தி அறிகின்றனர். இதன்படி, பண்டங்கள் எளிய மூலங்களாக அல்லது உண்மைகளாக இருக்கும் அதேவேளை, உடல்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பண்டங்கள் அல்லது அணுக்களாலான கூட்டுப் பொருட்களாகும். மேலும், பண்டங்கள் பகுதியளவிலோ அல்லது முற்றாகவோ அழியக்கூடுமெனினும், திரவியங்கள் எப்போதும் அழிக்கப்பட முடியாதவை எனக் கருதுகின்றனர்.[3]

வகைப்பாடும் சமணத்தில் இதன் முக்கியத்துவமும்

தொகு
 
திரவியம் மற்றும் அசுதிகாயம் ஆகியவற்றின் வகைப்படுத்தலை விளக்கும் விளக்கப்படம்

சமணத்தில் திரவியம் என்பது அசுதிகாயம் (நேரடிப் பெயர்ப்பு 'இருப்பிலுள்ளவற்றின் கூட்டம்') எனப்படும் அடிப்படைக் கூறுகளைக் குறிக்கும்.[4] இவை நிலையானவையாகக் கருதப்படுவதோடு, இவற்றின் இருப்பு உணரப்பட்டாலோ அல்லது படாவிட்டாலோ கூட இவை இருப்பாய்வியல் அடிப்படையாக விளங்கி அனைத்தினதும் இருப்பைக் கொண்டிருப்பதாயும் அவற்றை விளாக்குவதாயும் காணப்படுகின்றன.[4][5] சமணத்தின் இரு மரபுகளான சுவேதாம்பர மற்றும் திகம்பர மரபுகளின் படியும், ஆறு நிலைபேறான பண்டங்கள் நிலவில் உள்ளன. அவையாவன: உயிர்கள் (சீவன்), பருப்பொருள் (புத்கலம்), வெளி (ஆகாசம்), இயக்கம் (தர்மம்), ஓய்வு (அதர்மம்) மற்றும் காலம் (காலம்) என்பனவாகும்.[6][a][4][8] இவ்விரு மரபுகளிலும் வெளி எனும் பண்டம் "உலகியல் வெளி" (லோகாகாசம்) மற்றும் "உலகிலா வெளி" (அலோகியாகாசம்) எனக் கருத்தாக்கம் பெற்றுள்ளன. மேலும், உயிர் மற்றும் பருப்பொருள் ஆகியன உயிர்ப்புள்ள இருப்பாய்வியற் பண்டங்களாகவும், ஓய்வு என்பது செயலற்றதாகவும் கருதப்படுகின்றன.[6] சமண மெய்யியலில் காணப்படும் இன்னொரு வகைப்பாடு இவற்றை சீவன் மற்றும் அசீவன் எனப் பிரிப்பதோடு, சீவன் தவிர்ந்த ஏனைய அனைத்துத் திரவியங்களும் அசீவன் என வகைப்படுத்தப்படுகின்றன'.[4][5]

ஆறு திரவியங்களில், காலம் தவிர்ந்த ஏனைய ஐந்தும் அசுதிகாயங்கள், அதாவது விரிவாக்கங்கள் அல்லது கூட்டுக்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. கூட்டுக்களைப் போன்றே இவையும் எண்ணிறந்த வெளிப் புள்ளிகளைக் கொண்டிருப்பதால், இவை அசுதிகாயங்கள் என விளிக்கப்படுகின்றன. தன்னுணர்வுள்ள பண்டங்கள், மற்றும் இயக்க மற்றும் ஓய்வு ஊடகங்களில் எண்ணிறந்த வெளிப்புள்ளிகள் உள்ளன. வெளியில் முடிவிலி வெளிப் புள்ளிகள் உள்ளதோடு, பருப்பொருளில் இவை மூன்று விதமாக உள்ளன (அதாவது, எண்ணக்கூடியன, எண்ணிறந்தன மற்றும் முடிவிலி). நேரம் ஒரேயொரு புள்ளியைக் கொண்டிருப்பதால் அது கூட்டுப் பொருளாகக் கருதப்படுவதில்லை.[9] ஆகவே, இக்கூட்டுப்பொருட்கள் அல்லது விரிவாக்கங்கள் முறையே, சீவாசுதிகாயம் (உயிர்க் கூட்டு அல்லது விரிவு), புத்கலாசுதிகாயம் (பருப்பொருட் கூட்டு), தர்மாசுதிகாயம் (இயக்கக் கூட்டு), அதர்மாசுதிகாயம் (ஓய்வுக் கூட்டு) மற்றும் ஆகாசாசுதிகாயம் (வெளிக் கூட்டு) என அழைக்கப்படுகின்றன. இவை ஐந்தும் ஒருங்கே பஞ்சாசுதிகாயம் அல்லது ஐந்து அசுதிகாயங்கள் என அழைக்கப்படுகின்றன.[10]

சீவன் (உயிர்கள்)

தொகு

சமணத்தில், சீவன் என்பது "உயிர்" எனப் பொருள்படுவதோடு, சீவாத்மன் எனவும் அழைக்கப்படுகிறது.[11] இது சமண இறையியலின் மையக் கொள்கையும், அடிப்படைக் கருத்துருவுமாகும்.[4][12] உயிர் நிலைபேறுடையதாக நம்பப்படுவதோடு, ஒரு உயிரினம் தனது ஒவ்வொரு மறுபிறப்பின் பின்னர், ஒவ்வொரு வாழ்க்கையின்போதும் உயிர் தொடர்ந்து மாற்றங்களுக்குட்படுவதாகவும் கருதப்படுகிறது.[4][13] சமணச் சித்தாந்தத்தில், சீவன் தூய விழிப்புணர்வு பெற்றதாயுள்ளதோடு, உள்ளார்ந்த முடிவெடுக்கும் உரிமையையும் கொண்டுள்ளது. இம் முடிவெடுக்கும் உரிமை அதன் இயக்கத்துக்கு மூலமாக உள்ளது. மேலும், உயிர், தொடமுடியாததாகவும், உருவமற்றதாகவும் கருதப்படுகிறது.[4] உயிரே இருப்பை உணர்வதாயும், அறிவைப் பெறுவதாயும் உள்ளதோடு, உள்ளமோ அல்லது உடலோ வெறும் பருப்பொருட் குவியலாகவே கருதப்படுகிறது.[14][15] உயிரானது மீள்பிறப்பு மற்றும் கர்மவினையைச் சேர்க்கும் ஒரு பொறிமுறை எனச் சமண மெய்யியல் நம்புகிறது. மனிதர், சிறு பூச்சிகளிலிருந்து யானை போன்ற பெரிய உயிரினங்கள் வரை உயிர் ஒரே அளவினதாயுள்ளது. சீவன் எங்கும் நிறைந்த, அனைத்து லோகங்களினதும் (இருப்புக்கான வெளி) ஒவ்வொரு சிறு பகுதியோடும் நிறைந்து பின்னிப் பிணைந்த ஒரு பண்டமாகச் சமணத்தில் கருதப்படுகிறது.[14] உயிர், முற்றறிவு பெறுதல் மற்றும் இறுதிப் பேரின்ப வாழ்வு ஆகியவற்றை அடைவதற்கான தகுதியைக் கொண்டுள்ளது. மேலும், சமண அகநிலைசார் கருத்தின் இறுதி இலக்காகிய மறுபிறப்பு மற்றும் அதனோடிணைந்த துன்பம் ஆகியவற்றிலிருந்து விடுபடும் ஆற்றலையும் உயிர் தன்னகத்தே கொண்டுள்ளது.[14][16]

சமண மெய்யியலின் படி, இந்த அண்டத்தில், உருவாக்கப்படாத, என்றுமுள்ள எண்ணற்ற சீவன்கள் அல்லது உயிர்கள் காணப்படுகின்றன. இவற்றைப் பொதுவாக இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் வகையினர், விடுதலை பெறாத, பொதுவான உயிர்களாவர். இவர்கள் கர்மவினைக் கட்டுக்களால், ஓருடலிலிருந்து இன்னோர் உடலுக்குச் செல்லல் மற்றும் மறுபிறப்பு ஆகிய சம்சாரச் சுழலில் உழல்வர். மற்றைய வகையினர் பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற்ற சித்தர்களாவர். அனைத்து உயிர்களும் உள்ளார்ந்து தூயவை ஆயினும், துவக்கமறியாக் காலத்திலிருந்து கர்மப் பிணைப்புகளால் சூழப்பட்டுள்ளன. ஒரு உயிர் தனது கர்மவினைகளை ஒழித்து அதன் உண்மையான மற்றும் தூய உருவைப் பெறுவதற்குக் கடுமையாக முயற்சிக்கவேண்டும்.

10ம் நூற்றாண்டுச் சமணத் துறவியான நேமிசந்திரர் தனது திரவிய சங்கிரகம் எனும் நூலில் உயிர் பற்றிப் பின்வருமாறு விளக்குகிறார்:[17]

தன்னுணர்வுள்ள பண்டம் (உயிர்) The sentient substance (soul) is characterized by the function of understanding, is incorporeal, performs actions (doer), is co-extensive with its own body. It is the enjoyer (of its actions), located in the world of rebirth (samsara) (or) emancipated (moksa) (and) has the intrinsic movement upwards.

— Dravyasaṃgraha (2)

The qualities of the soul are chetana (consciousness) and upyoga (knowledge and perception). Though the soul experiences both birth and death, it is neither really destroyed nor created. Decay and origin refer respectively to the disappearing of one state and appearing of another state and these are merely the modes of the soul. Thus Jiva with its attributes and modes, roaming in samsara (universe), may lose its particular form and assume a new one. Again this form may be lost and the original acquired.[18]

Jivas are believed to be of two types: stationary and mobile. Illustration of the former are plants, while moving jivas include examples such as human beings, animals, gods, hell beings and insects.[19] Jivas are further classified in Jain philosophy by an assigned number of senses which range from one to five sensory organs.[19] Inert world such as air, fire or clod of dirt, considered non-sensate in contemporary science, are asserted in historic texts of Jainism to be living and with sensory powers.[20]

Ajiva (five non-living entities)

தொகு

The jiva is believed to rely on other dravya to function.[4] The Jain philosophy completely separates body (matter) from the soul (consciousness).[6] Souls reside in bodies and journey endlessly through saṃsāra (that is, realms of existence through cycles of rebirths and redeaths).[21] Ajiva consists of everything other than jiva.[22] Life processes such as breath means of knowledge such as language, all emotional and biological experiences such as pleasure and pain are all believed in Jainism to be made of pudgala (matter). These interact with tattva or reality to create, bind, destroy or unbind karma particles to the soul.[23][24] According to Dundas, Dharma as a metaphysical substance in Jain philosophy may be understood as "that which carries" instead of the literal sense of ordinary physical motion. Thus, dharma includes all verbal and mental activity that contributes to karma and purification of the soul.[19]

Pudgala (Matter)

தொகு

Matter is classified as solid, liquid, gaseous, energy, fine Karmic materials and extra-fine matter i.e. ultimate particles. Paramāṇu or ultimate particle (atoms or sub-atomic particles) is the basic building block of all matter. It possesses at all times four qualities, namely, a color (varna), a taste (rasa), a smell (gandha), and a certain kind of palpability (sparsha, touch).[25] One of the qualities of the paramāṇu and pudgala is that of permanence and indestructibility. It combines and changes its modes but its basic qualities remain the same.[26] It cannot be created nor destroyed and the total amount of matter in the universe remains the same.

Dharmastikaay

தொகு

Dharmastikaay means the principles of Motion that pervade the entire universe. Dharmastikaay and Adharmastikaay are by themselves not motion or rest but mediate motion and rest in other bodies. Without Dharmastikaay motion is not possible. The medium of motion helps matter and the sentient that are prone to motion to move, like water (helps) fish. However, it does not set in motion those that do not move.[27]

Adharmastikaay

தொகு

Without adharmastikaay, rest and stability is not possible in the universe. The principle of rest helps matter and the sentient that are liable to stay without moving, like the shade helps travellers. It does not stabilize those that move.[28] According to Champat Rai Jain:

The necessity of Adharmastikaay as the accompanying cause of rest, that is, of cessation of motion will be clearly perceived by any one who will put to himself the question, how jīvas and bodies of matter support themselves when coming to rest from a state of motion. Obviously gravitation will not do, for that is concerned with the determination of the direction which a moving body may take...[29]

ஆகாசம் (வெளி)

தொகு

வெளி என்பது உயிர்வாழிகள், பருப்பொருள், இயக்க விதிகள், ஓய்வு மற்றும் கால விதிகளை உள்ளடக்கியுள்ளது. இது எங்கும் பரவியுள்ளதும், முடிவில்லாததும், முடிவற்ற வெளிப்புள்ளிகளால் ஆனதுமாகும்.[30]

Kāla (time)

தொகு

Kāla is a real entity according to Jainism and is said to be the cause of continuity and succession. Champat Rai Jain in his book "The Key of Knowledge wrote:[29]

...As a substance which assists other things in performing their ‘temporal’ gyrations, Time can be conceived only in the form of whirling posts. That these whirling posts, as we have called the units of Time, cannot, in any manner, be conceived as parts of the substances that revolve around them, is obvious from the fact that they are necessary for the continuance of all other substances, including souls and atoms of matter which are simple ultimate units, and cannot be imagined as carrying a pin each to revolve upon. Time must, therefore, be considered as a separate substance which assists other substances and things in their movements of continuity.

Jaina philosophers call the substance of Time as Niścay Time to distinguish it from vyavhāra (practical) Time which is a measure of duration- hours, days and the like.[29]

திரவியங்களின் பண்புகள்

தொகு

இப்பண்டங்கள் பின்வரும் சில பொதுவான பண்புகள் அல்லது குணங்களைக் கொண்டுள்ளன. அவையாவன:[31]

  • அசுதித்துவம் (இருப்பு): அழியாத்தன்மை; நிலைபேறுடைமை; ஒரு பண்டத்தின் அழிக்கமுடியாத் திறன்.
  • வசுத்துத்துவம் (செயற்பாடு): ஒரு பண்டத்தின் செயற்படு திறன்.
  • திரவியத்துவம் (மாறுந்தன்மை): ஒரு பண்டத்தின் மாற்றத்தின் போதான திரிபடையுந் திறன்.
  • பிரமேயத்துவம் (அறிநிலை): ஒரு நபரால் அறியப்படக்கூடிய அல்லது அறிவின் நுதல்பொருளாயிருக்கும் (subject-matter) தன்மை.
  • அகுருலகுத்துவம் (தனித்தன்மை): ஒரு பண்பு அல்லது பண்டம் இன்னொன்றாக மாறவியலாத் தன்மை மற்றும் ஒரு பண்டம் சேர்க்கப்படுமிடத்து தனது பண்புகளை இழந்துவிடாது காக்குந் திறன்.
  • பிரதேசத்துவம் (வெளிப்பண்பு): வெளியில் ஓரிடத்தைப் பெற்றிருக்கும் திறன்.

திரவியங்களை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்தத்தக்க சில குறிப்பிட்ட பண்புகள் உள்ளன. அவையாவன:[31]

  • சேதனத்துவம் (விழிப்புணர்வு) மற்றும் அமூர்த்தத்துவம் (பொருட்படாத்தன்மை) என்பன உயிர் அல்லது சீவன் எனும் பண்ட வகையின் பொதுவான பண்புகளாகும்.
  • அசேதனத்துவம் (விழிப்புணர்வின்மை) மற்றும் மூர்த்தத்துவம் (பொருட்படுதன்மை) என்பன பருப்பொருளின் பொதுவான பண்புகளாகும்.
  • அசேதனத்துவம் (விழிப்புணர்வின்மை) மற்றும் அமூர்த்தத்துவம் (பொருட்படாத்தன்மை) என்பன இயக்கம், ஓய்வு, காலம் மற்றும் வெளி ஆகியவற்றின் பொதுவான பண்புகளாகும்.
  1. The ontological categories and definition of dharma as motion, and adharma as rest, is unique to Jainism among Indian religions.[7] However, like other Indian religions, dharma also means "moral virtue" in Jainism, while adharma also means "immorality, unethical behavior".[6]

References

தொகு
  1. Acarya Nemicandra; Nalini Balbir (2010) p. 1 of Introduction
  2. 2.0 2.1 Grimes, John (1996). Pp.118–119
  3. Champat Rai Jain 1917, ப. 15.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 Dundas 2002, ப. 93–94.
  5. 5.0 5.1 Jaini 1998, ப. 81–89.
  6. 6.0 6.1 6.2 6.3 "Dravya – Jainism", பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், archived from the original on 1 ஏப்பிரல் 2016, பார்க்கப்பட்ட நாள் 12 மே 2016
  7. Dundas 2002, ப. 95.
  8. Doniger 1999, ப. 551.
  9. Acarya Nemicandra; Nalini Balbir (2010) p.12–13
  10. J. C. Sikdar (2001) p. 1107
  11. Long 2013, ப. 83–85.
  12. Jaini 1998, ப. 97–101.
  13. Long 2013, ப. 122–125.
  14. 14.0 14.1 14.2 Dundas 2002, ப. 94–95.
  15. Champat Rai Jain 1929b, ப. 15–16.
  16. Jaini 1998, ப. 97–106.
  17. Acarya Nemicandra; Nalini Balbir (2010) p. 4
  18. Nayanar, Prof. A. Chakravarti (2005). verses 16–21
  19. 19.0 19.1 19.2 Dundas 2002, ப. 95–96.
  20. Christopher Key Chapple (2001), The Living Cosmos of Jainism: A Traditional Science Grounded in Environmental Ethics பரணிடப்பட்டது 16 ஆகத்து 2015 at the வந்தவழி இயந்திரம், Daedalus, MIT Press, Vol. 130, No. 4, pp. 207–224
  21. Wiley 2009, ப. 91.
  22. Dundas 2002, ப. 93–96.
  23. Dundas 2002, ப. 96–98.
  24. Soni 2000, ப. 75–88.
  25. Jaini 1998, ப. 90.
  26. Grimes, John (1996). p. 249
  27. Acarya Nemicandra; Nalini Balbir (2010) p.10
  28. Acarya Nemicandra; Nalini Balbir (2010) p.11
  29. 29.0 29.1 29.2 Jain, Champat Rai (1975). The Key Of Knowledge (Third ed.). New Delhi: Today and Tomorrow's Printers. p. 520–530.
  30. Acarya Nemicandra; Nalini Balbir (2010) p.11–12
  31. 31.0 31.1 Acarya Nemicandra; J. L. Jaini (1927) p. 4 (of introduction)

வார்ப்புரு:Indian philosophy

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Prash/திரவியம்_(சமணம்)&oldid=3613315" இலிருந்து மீள்விக்கப்பட்டது