பயனர் பேச்சு:AhamSarvatra/தொகுப்பு 1
வாருங்கள், AhamSarvatra/தொகுப்பு 1!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
கூகுள் கட்டுரைத் தெரிவுக் குழு
தொகுகூகுள் கட்டுரைத் தெரிவுக் குழுவில் பங்காற்ற இயலுமா? நன்றி. ஒவ்வொரு மாதமும் ஆர்வமுள்ள பயனர்கள் தங்களுக்குள் இப்பொறுப்பை மாற்றிப் பகிர்ந்து கொள்ளலாம். நன்றி--ரவி 17:19, 21 பெப்ரவரி 2010 (UTC)
மொழிபெயர்ப்பு
தொகுவணக்கம் வத்சன், விக்கிப்பீடியாவில் உங்கள் பங்களிப்பு கண்டு மகிழ்ச்சி. நீங்கள் உங்களுக்கு விருப்பமான எந்தத் துறையிலும் கட்டுரைகளை எழுதலாம், அல்லது மொழிபெயர்க்கலாம். தமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள் பக்கத்தைப் பாருங்கள். உங்களுக்கு விருப்பமான கட்டுரையைத் தேர்ந்தெடுத்து தமிழாக்கம் செய்யலாம். புதிதாகக் கட்டுரை எழுத விரும்பினால், ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள (தமிழ் விக்கியில் இல்லாத) கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து தமிழாக்கலாம். அக்கட்டுரை தமிழில் இருந்தால் அனேகமாக அங்கு இடப்பக்கத்தில் தமிழ்க்கட்டுரைக்கான இணைப்புத் தரப்பட்டிருக்கும். உதவி தேவைப்படின் தயங்காது ஏனைய பயனர்களிடமோ அல்லது ஆலமரத்தடியிலோ கேளுங்கள். வாழ்த்துகள்.--Kanags \பேச்சு 00:47, 6 அக்டோபர் 2009 (UTC)
வரவேற்பு
தொகுவத்சன், புதுப் பயனர்களை யாரும் வரவேற்கலாம். வரவேற்பதற்கு {{subst:புதுப்பயனர்}} என்ற வார்ப்புருவை எழுதி உங்கள் கையொப்பத்தையும் இட்டால் போதும். மேலும், உங்கள் கட்டுரைகளின் பட்டியல்களுக்கான தொடுப்புகள் பின்வரும் இணைப்புகள் உள்ளன. அவற்றை நீங்கள் உங்கள் முதற்பக்கத்தில் இடலாம்: விக்கியில் தொடங்கிய கட்டுரைகள், தமிழ்விக்கியில் மொத்தப் பங்களிப்புகள். நன்றி.--Kanags \பேச்சு 05:23, 8 அக்டோபர் 2009 (UTC)
- வத்சன் வரவேற்புப் பணிகளில் நீங்கள் ஈடுபடுவது கண்டு மகிழ்ச்சி. வரவேற்புத் தொகுப்புகளைச் சிறிய தொகுப்புகள் என்று குறித்தால் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் விலக்கிக் காண உதவும். தவிர, புதிய பயனர் பக்கத்தில் account created automatically என்று குறிப்பிடப்பட்டு வரும் பயனர்களை வரவேற்கத் தேவை இல்லை. இவர்கள் பிறர் விக்கியில் சேர்ந்ததால் இங்கும் தானியக்கமாகச் சேர்பவர்கள். new user account என்று குறிப்பிடப்படுபவர்கள் தமிழ் விக்கியில் இருந்தே நேரடியாக இணையும் தமிழர்களாக இருக்க வாய்ப்புண்டு. இவர்களை மட்டும் வரவேற்றால் போதுமானது. இத்தகைய பயனர்களின் சேர்க்கைகள் அண்மைய மாற்றங்கள் பக்கத்திலும் காணக் கிடைக்கும். புதிதாக வரும் குப்பைப் பக்கங்களை எப்படியும் நிருவாகிகள் கண்டு உடன் நீக்கிவிடுவர். எனவே, அவற்றில் delete வார்ப்புரு இடத் தேவை இல்லை. பழைய பக்கங்கள் ஏதாவது பொருந்தாமல் இருந்தால் delete வார்ப்புரு இடலாம். நன்றி--ரவி 10:06, 8 அக்டோபர் 2009 (UTC)
- நன்றி அய்யா. அவ்வாறே செய்கிறேன்.நாம் வரவேற்பு குழுமம் மற்றும் பிறந்தநாள் குழுமம் அமைத்தால் என்ன?? Vatsan34 15:51, 8 அக்டோபர் 2009 (UTC)
வத்சன், ரவி என்றே என்னை அழைக்கலாம். அடையாளம் காட்டாத பயனர் சோதனைத் தொகுப்புகள் செய்தால் {{test}} வார்ப்புரு இடலாம். பயனுள்ள தொகுப்புகள் செய்தால் மட்டும் {{anonymous}} வார்ப்புரு இடலாம். மின்மடல் முகவரி தருவது போன்ற பொருந்தாத தொகுப்புகளைத் தொடர்ந்து செய்வோரிடம், விக்கி ஒரு கலைக்களஞ்சியம் என்பதைச் சுட்டி நல்ல பங்களிப்புகள் தர வேண்டலாம்--ரவி 05:13, 12 அக்டோபர் 2009 (UTC)
பிறந்தநாள் குழுமம்
தொகு- வத்சன், பிறந்தநாள் குழுமம் ஒன்றை ஆரம்பித்து வைத்தமைக்கு நன்றி. இதன் தலைப்பை விக்கிப்பீடியா:பிறந்தநாள் குழுமம் என மாற்றியுள்ளேன். கவனிக்கவும். விக்கிப்பீடியா என்பதை சேர்க்காவிடின் அது தனியே ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரையாகவே கருதப்படும். விக்கித்திட்டங்களுக்கு தலைப்புடன் விக்கிப்பீடியா: எனச் சேர்ப்பது முறை. நன்றி.--Kanags \பேச்சு 23:34, 12 அக்டோபர் 2009 (UTC)
Hi
தொகுHi Vatsan34. Thanks a lot for your munificent gesture! I wonder if you could create a stub about Emperor Wu of Han in Tamil? Regards:)--Amaqqut 01:08, 6 நவம்பர் 2009 (UTC)
குறுங்கட்டுரைகள்
தொகுவத்சன்,குறுங்கட்டுரைகளுக்கான தனித்தனி வார்ப்புருக்களை உருவாக்கி இடுவது மிக்க பயனுள்ள செயலாகும்.விக்கியில் குறுங்கட்டுரை வார்ப்புருவை கட்டுரை இறுதியில் இடுவதே வழமையாகும்.ஆங்கில,பிறமொழி விக்கிகளைக் காணுக.அதே முறையை நீங்களும் பின்பற்றுதல் நலம்.நீக்கல்,துப்புரவு போன்ற சில வார்ப்புருக்களே கட்டுரைத் தலைப்பில் இடப்படுகின்றன.--மணியன் 08:51, 11 நவம்பர் 2009 (UTC)
- சரி. குறுங்கட்டுரைகளை அந்த வார்ப்புருவின் கீழ் இணைப்பது எப்படி?--Vatsan34 08:57, 11 நவம்பர் 2009 (UTC)
- வத்சன், குறுங்கட்டுரைகளின் அடியில் அதற்கேற்ற வார்ப்புருக்களை உ+ம்: {{இலங்கை-குறுங்கட்டுரை}} என்று எழுதி இணைத்து விடுங்கள்.--Kanags \பேச்சு 07:15, 13 நவம்பர் 2009 (UTC)
பயனர் பக்க வரவேற்பு
தொகுபயனர் பக்க வரவேற்பு போன்ற ஒரே மாதிரியான சிறிய மாற்றங்களை சிறு தொகுப்புகளாக குறிக்க வேண்டுகிறேன். அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் சிறு தொகுப்புகளை மறைத்துப் பார்க்கலாம் என்பது முக்கியமான மாற்றங்களை மட்டும் கவனிக்க இயலும். நன்றி--ரவி 10:07, 12 நவம்பர் 2009 (UTC)
திரைப்பட வார்ப்புருக்கள்
தொகுவத்சன், நீங்கள் திரைப்படங்கள் தொடர்பில் புதிதாக வார்ப்புரு, மற்றும் ஆண்டு வாரியாகப் பட்டியல்களையும் உருவாக்குகிறீர்கள் போலிருக்கிறது. இப்படியான வார்ப்புருக்கள் ஏற்கனவே பல உள்ளன. அவற்றைப் பாருங்கள். புதிதாக எதுவும் உருவாக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். பார்க்க:
- வார்ப்புரு:தமிழ்த் திரைப்படம்
- வார்ப்புரு:தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
- தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1993
இவ்வாறு 1931 முதல் 2010 வரை ஒவ்வோர் ஆண்டுக்கும் பட்டியல்கள் உள்ளன.--Kanags \பேச்சு 09:14, 24 நவம்பர் 2009 (UTC)
- நல்ல வேலை,நீங்கள் சொல்லியதால் எனது வேலைபளு குறைந்தது. நன்றி! Vatsan34 09:52, 24 நவம்பர் 2009 (UTC)
- மேலும் ஒன்று, delete வார்ப்புருவை ஒரு கட்டுரையில் சேர்க்கும் போது கட்டுரையில் ஏற்கனவே உள்ள பகுதிகளை அழிக்காதீர்கள். அதற்கு மேலேயே delete வார்ப்புருவைச் சேருங்கள். ஏன் அக்கட்டுரையை அழிக்கப் பரிந்துரைக்கிறீர்கள் என மற்றவர்கள் அறியத் தானே வேண்டும்?--Kanags \பேச்சு 10:28, 24 நவம்பர் 2009 (UTC)
கருத்து வேண்டல்
தொகுஅண்மையில் தொடங்கினாலும், த.வி சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு உள்ளீர்கள். நன்றி.
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், ஒரு மீளாய்வும் செய்து, அடுத்த ஆண்டு தொடர்பாக ஒரு திட்டமிடல் செய்வோம். 2010 இல் தமிழ் விக்கிப்பீடியாவின், தமிழ் விக்கித் திட்டங்களில் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான உங்கள் எண்ணக்கருக்களை பகிர்ந்தால் உதவியாக இருக்கும். குறிப்பான செயற்படுத்தக்கூடிய பரிந்துரைகளாக இருந்தால் நன்று.
- விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
- விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
--Natkeeran 03:27, 19 டிசம்பர் 2009 (UTC)
விளக்கம்
தொகுவத்சன், நீங்கள் எனது பேச்சுப் பக்கத்தில் எழுதிய ஐயத்துக்கான விளக்கம்:
இருவர் ஒரே நேரத்தில் ஒரு கட்டுரையைத் தொகுத்தால் இரண்டாமவர் சேமிக்க முயலும்போது இது தொடர்பான எச்சரிக்கை ஒன்று திரையில் தோன்றும். அத்துடன், முதலாமவரால் சேமிக்கப்பட்ட பதிப்பும், இரண்டாமவருடைய பதிப்பும் இரண்டு வெவ்வேறு தொகுப்புக் கட்டங்களுக்குள் காணப்படும். இரண்டாமவர் மீண்டும் சேமிக்க முயலுமுன், தனது திருத்தங்களை ஏற்கெனவே சேமிக்கப்பட்ட பதிப்புடன் சேர்த்தபின் சேமிக்கலாம். எச்சரிக்கையைக் கவனியாமல் சேமித்தால் இரண்டாமவரின் திருத்தங்கள் சேமிக்கப்படாமல் அழிந்துவிடும். மயூரநாதன் 05:51, 25 டிசம்பர் 2009 (UTC)
சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்
தொகுவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:44, 18 பெப்ரவரி 2010 (UTC)
முதற்பக்க அறிமுகம்
தொகுவணக்கம் வத்சன். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/வத்சன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி--ரவி 10:52, 15 மே 2010 (UTC)
- நன்றி ரவி! நான் வெகு நாளாக தமிழில் ஏதும் கட்டுரை எழுதவில்லை என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எனினும் இன்று இந்த பதிவால், நான் தினமும் ஒரு கட்டுரையாவது எழுத முயல்வேன் என்று எனக்கு நானே உறுதி அளித்து கொள்கிறேன். Vatsan34 13:27, 15 மே 2010 (UTC)
நல்லது வத்சன். உங்கள் தொடர் பங்களிப்பை எதிர்பார்க்கிறேன். உங்களைப் பற்றிய விவரங்களில் சில திருத்தங்கள் செய்துள்ளேன். சரி பார்க்கவும். எஞ்சிய விவரங்களை உங்கள் பயனர் பக்கத்திலேயே தரலாம். சூலை 16 - சூலை 30 நாட்களில் உங்களைப் பற்றிய முதற்பக்க அறிமுகம் இடம பெறும்--ரவி 14:38, 15 மே 2010 (UTC)
- மிக்க நன்றி ரவி. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை!-- Vatsan34 11:21, 17 மே 2010 (UTC)
பாராட்டுகள்
தொகுவத்சன், உங்கள் அறிமுகத்தை முதற்பக்கத்தில் கண்டு மகிழ்ந்தேன். வாழ்த்துகள்! --செல்வா 23:00, 6 செப்டெம்பர் 2010 (UTC)
வணக்கம் வத்சன். அடுத்த இரு வாரங்களுக்கு உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம்--இரவி 18:03, 10 ஆகஸ்ட் 2010 (UTC)
உலகக் கோப்பை கால்பந்து
தொகுவருடம் | இடம் | வெற்றி பெற்ற நாடு | இரண்டாவது இடம் |
1930 | உருகுவே | உருகுவே | அர்ஜெண்டினா |
1934 | இத்தாலி | இத்தாலி | செக்கோஸ்லோவேகியா |
1938 | பிரான்ஸ் | இத்தாலி | ஹங்கேரி |
2ம் உலகப்போர் | |||
1950 | பிரேசில் | உருகுவே | பிரேசில் |
1954 | ஸ்விட்சர்லாந்து | மே. ஜெர்மனி | ஹங்கேரி |
1958 | ஸ்வீடன் | பிரேசில் | ஸ்வீடன் |
1962 | சிலி | பிரேசில் | செக்கோஸ்லோவேகியா |
1966 | இங்கிலாந்து | இங்கிலாந்து | ஜெர்மனி |
1970 | மெக்ஸிகோ | பிரேசில் | இத்தாலி |
1974 | மே. ஜெர்மனி | மே. ஜெர்மனி | நெதர்லாந்து |
1978 | அர்ஜெண்டினா | அர்ஜெண்டினா | நெதர்லாந்து |
1982 | ஸ்பெயின் | இத்தாலி | ஜெர்மனி |
1986 | மெக்ஸிகோ | அர்ஜெண்டினா | மே. ஜெர்மனி |
1990 | இத்தாலி | மே. ஜெர்மனி | அர்ஜெண்டினா |
1994 | USA | பிரேசில் | இத்தாலி |
1998 | பிரான்ஸ் | பிரான்ஸ் | பிரேசில் |
2002 | Korea / Japan | பிரேசில் | ஜெர்மனி |
2006 | ஜெர்மனி | இத்தாலி | பிரான்ஸ் |
2010 | தென் ஆப்பிரிக்கா | ஸ்பெயின் | நெதர்லாந்து |
2014 | பிரேசில் | ... | ... |
விக்கி மாரத்தான்
தொகுவிக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:25, 27 அக்டோபர் 2010 (UTC)
விக்கி மாரத்தான்
தொகுநினைவூட்டல்: இன்று விக்கி மாரத்தான் :) --இரவி 09:38, 14 நவம்பர் 2010 (UTC)
மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்
தொகுவணக்கம் வத்சன். நலமா? கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா? நன்றி--இரவி 13:24, 2 மே 2011 (UTC)
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தொகு-- சூர்யபிரகாஷ் உரையாடுக 13:07, 28 சனவரி 2012 (UTC)
- நன்றி சூர்யபிரகாஷ்!! - Vatsan34 17:54, 28 சனவரி 2012 (UTC)
நன்றிகள்
தொகுவத்சன், நான் அமீரகத்துக்கு வெளியே சென்றிருந்ததால் இன்றுதான் உங்கள் வாழ்த்துக்களைப் பார்க்க முடிந்தது. உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். --- மயூரநாதன் (பேச்சு) 18:22, 18 செப்டெம்பர் 2012 (UTC)
சென்னை விக்கியர் சந்திப்பு
தொகுவரும் சனிக்கிழமை (9 மார்ச்) அன்று மாலை சென்னை ஐஐடி வளாகத்தில் விக்கிப்பீடியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இரு ஆண்டுகளுக்குப் பின் இத்தகைய சந்திப்பொன்றை நடத்துகிறோம். அவசியம் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 15:02, 4 மார்ச் 2013 (UTC)
முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு
தொகுநீங்கள் பங்களித்த நோபல் பரிசு என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஏப்ரல் 7, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
பாஞ்சசன்ய கட்டுரையில் என்ன பிரட்சனை
தொகுவணக்கம், தாங்களுக்கு இங்கு ஒரு செய்தியுள்ளது. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:04, 29 மே 2013 (UTC)
இந்து சமயம்-குறுங்கட்டுரை
தொகுநண்பரே, இந்து சமயம்-குறுங்கட்டுரை வார்ப்பருவை துவாபர யுகம் கட்டரையில் கீழிருந்தை மேல் நோக்கி நகர்த்தியிருக்கின்றீர்களே, கட்டுரையை காண வருபவர்களுக்கு முதலில் குறுங்கட்டுரை என்ற தகவலே தெரியுமல்லவா. அந்த வார்ப்புரு விக்கிப்பீடியர்களுக்கானது எனவே, கட்டுரையின் இறுதியில் இருந்தாலும், விக்கிப்பீடியர்களால் கண்டுகொள்ள இயலும், அதற்காகவே இந்து சமயம் குறுங்கட்டுரைகள் என்ற பகுப்பும் இணைக்கப்பெற்றுள்ளது. இதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். நன்றி,.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:33, 31 மே 2013 (UTC)
- வத்சன், மேற்கோள்கள், ஆதாரம், உசாத்துணை இவற்றைப் போன்ற ஒத்த சொற்கள் விக்கி கட்டுரைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே மேற்கோள் என எழுதப்படாததால் மேற்கோள் இல்லை என்ற வார்ப்புருவைச் சேர்க்க வேண்டாம். மேலும், பொதுவாக குறுங்கட்டுரை வார்ப்புரு கட்டுரையின் இறுதியிலேயே சேர்க்கப்பட வேண்டும். ஆரம்பத்தில் அல்ல. ஏனைய மொழிகளிலும் இந்த நடைமுறையே உள்ளது. தகிட்டிய மொழிகள் கட்டுரையில் அடிப்படைத் தகவல்கள் உள்ளன. இதற்கு குறுங்கட்டுரை வார்ப்புரு தேவையற்றது. நவ திருப்பதி கட்டுரைக்கு wikify வார்ப்புரு எதற்கு? நன்றி.--Kanags \உரையாடுக 00:21, 1 சூன் 2013 (UTC)
- நீங்கள் கூறுவது சரிதான். விக்கிப்பீடியா முழுவதும் எல்லா கட்டுரைகளிலும் தலைப்புகள் ஒன்றாக இருக்கணும் என்று எண்ணி அவ்வாறு செய்து விட்டேன். இனி வரும் காலங்களில் கவனமாக இருக்கிறேன். நவ திருப்பதி போன்ற பல கட்டுரைகள், விக்கிப்பீடிய கட்டுரைகள் போன்றே இல்லை. பெட்டிகள் இல்லை, புகைப்படம் இல்லை, தனி பிரிவுகள் இல்லை. ஆதலால் தான் அந்த மாதிரி கட்டுரைகளுக்கு விக்கியாக்கம் செய்ய சொல்லி பரிந்துரை செய்தேன்.-Vatsan34 (பேச்சு) 09:06, 1 சூன் 2013 (UTC)
மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்
தொகுவணக்கம், AhamSarvatra/தொகுப்பு 1!
நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு
தொகுதமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:02, 24 சூன் 2013 (UTC)
பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு
தொகுவணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:16, 18 செப்டம்பர் 2013 (UTC)
வேண்டுகோள்...
தொகுவணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:24, 27 செப்டம்பர் 2013 (UTC)
நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?
தொகுவணக்கம், வத்சன். பத்தாண்டுகளைக் கடந்துள்ள தமிழ் விக்கிப்பீடியா அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராக இன்னும் பல கைகள் தேவை. தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பம் என்றால் தெரிவியுங்கள். பரிந்துரைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 08:28, 2 அக்டோபர் 2013 (UTC)
- விருப்பம். நன்றி இரவி. நிர்வாக பொறுப்புக்கான கடமைகள் என்னவென்று கூறும் பக்கம் இருந்தால் அதன் இணைப்பை இங்கே தாருங்கள்! - Vatsan34 (பேச்சு) 12:25, 2 அக்டோபர் 2013 (UTC)
- காக்னிசன்டு தொழில்நுட்பத் தீர்வகத்தில் இருந்து இரண்டாவது நிர்வாகி. வருக வருக. வளம் சேர்க்க.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:30, 2 அக்டோபர் 2013 (UTC)
- இன்னும் நிர்வாகியாகவில்லையே. அது வரை நீங்கள் தான் நம் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரே விக்கிப்பீடியா நிர்வாகி! - Vatsan34 (பேச்சு) 06:00, 5 அக்டோபர் 2013 (UTC)
- காக்னிசன்டு தொழில்நுட்பத் தீர்வகத்தில் இருந்து இரண்டாவது நிர்வாகி. வருக வருக. வளம் சேர்க்க.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:30, 2 அக்டோபர் 2013 (UTC)
- வத்சன், நிருவாகப் பொறுப்பு ஏற்பதன் மூலம் உங்களுக்குச் சில கூடுதல் அணுக்கங்கள் கிடைக்கும். பக்கங்களை நீக்கலாம். நீக்கிய பக்கங்களை பார்க்கலாம் / மீட்கலாம். இரு பக்கங்களை வரலாற்றோடு இணைக்கலாம். தவறான தொகுப்புகளை இலகுவாக முன்னிலைப்படுத்தலாம். விசமப் பயனர்களைத் தடுக்கலாம். பக்கங்களைக் காக்கலாம். இவையனைத்தையும் விக்கிப்பீடியாவின் கொள்கைகளையும் விக்கிச் சமூகத்தையும் கருத்தில் கொண்டு செயற்படுத்த வேண்டும். வழமையான பங்களிப்புகள் போலவே இவற்றையும் உங்களால் இயன்ற போது செய்யலாம். கட்டாயம் இல்லை. ஒரு நிருவாகி என்ற முறையில் உங்கள் உரையாடல்களும் செயல்பாடுகளும் மற்ற பயனர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. இன்னும் சில பயனர்களிடம் நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா என்று கேட்டுள்ளேன். எனவே, அனைவருக்கும் பதில் தர அவகாசம் தந்து வரும் திங்களன்று உங்களை நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரைக்கிறேன். --இரவி (பேச்சு) 04:43, 4 அக்டோபர் 2013 (UTC)
- மிக்க நன்றி இரவி! நிர்வாக பொறுப்பை சிறப்பாக செய்வேன் என நம்புகிறேன். அறிவிப்புக்காக காத்திருக்கிறேன். - Vatsan34 (பேச்சு) 06:00, 5 அக்டோபர் 2013 (UTC)
- விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் உங்களை நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரைத்துள்ளேன். பரிந்துரையை ஏற்றுக் கொள்வதாக முறைப்படி அப்பக்கத்தில் தெரிவித்து விடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 08:53, 7 அக்டோபர் 2013 (UTC)
- நிர்வாக பொறுப்புக்கு பரிந்துரைத்ததற்க்கு நன்றி. - Vatsan34 (பேச்சு) 16:16, 7 அக்டோபர் 2013 (UTC)
- விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் உங்களை நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரைத்துள்ளேன். பரிந்துரையை ஏற்றுக் கொள்வதாக முறைப்படி அப்பக்கத்தில் தெரிவித்து விடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 08:53, 7 அக்டோபர் 2013 (UTC)
- மிக்க நன்றி இரவி! நிர்வாக பொறுப்பை சிறப்பாக செய்வேன் என நம்புகிறேன். அறிவிப்புக்காக காத்திருக்கிறேன். - Vatsan34 (பேச்சு) 06:00, 5 அக்டோபர் 2013 (UTC)
- வத்சன், நிருவாகப் பொறுப்பு ஏற்பதன் மூலம் உங்களுக்குச் சில கூடுதல் அணுக்கங்கள் கிடைக்கும். பக்கங்களை நீக்கலாம். நீக்கிய பக்கங்களை பார்க்கலாம் / மீட்கலாம். இரு பக்கங்களை வரலாற்றோடு இணைக்கலாம். தவறான தொகுப்புகளை இலகுவாக முன்னிலைப்படுத்தலாம். விசமப் பயனர்களைத் தடுக்கலாம். பக்கங்களைக் காக்கலாம். இவையனைத்தையும் விக்கிப்பீடியாவின் கொள்கைகளையும் விக்கிச் சமூகத்தையும் கருத்தில் கொண்டு செயற்படுத்த வேண்டும். வழமையான பங்களிப்புகள் போலவே இவற்றையும் உங்களால் இயன்ற போது செய்யலாம். கட்டாயம் இல்லை. ஒரு நிருவாகி என்ற முறையில் உங்கள் உரையாடல்களும் செயல்பாடுகளும் மற்ற பயனர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. இன்னும் சில பயனர்களிடம் நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா என்று கேட்டுள்ளேன். எனவே, அனைவருக்கும் பதில் தர அவகாசம் தந்து வரும் திங்களன்று உங்களை நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரைக்கிறேன். --இரவி (பேச்சு) 04:43, 4 அக்டோபர் 2013 (UTC)
நன்றியுரைத்தல்
தொகுநிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல் | ||
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:52, 15 அக்டோபர் 2013 (UTC) |
கருத்துக்களுக்கு பதிலளிக்க நிருவாக அணுக்கப் பரிந்துரைக்காலம் நீட்டிப்பு
தொகுவத்சன், இங்கு அறிவித்தபடி உங்களுக்கு நிருவாக அணுக்கம் வழங்குவதற்கான பரிந்துரையின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பை மாற்றுக் கருத்து இட்டவர்களிடம் கூடுதல் தகவல்கள் தேவையெனில் கேட்டுப்பெற்று, தேவைப்படும் இடங்களில் உங்கள் நிலை மாறியிருந்தால் அதைக் குறிப்பிடவும், கருத்திட்டவரின் புரிதல் தவறாக இருப்பதாக எண்ணினால் உங்கள் நிலையை விளக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு செய்வது, விக்கியில் மிகத்தேவையான பண்பாக உரையாடி இணக்க முடிவை எட்டும் முறைக்கு வலுச்சேர்க்கும். நன்றி. -- சுந்தர் \பேச்சு 07:29, 16 அக்டோபர் 2013 (UTC)
நிர்வாக அணுக்கம்
தொகுஉங்களின் சிறப்பான பங்களிப்புக்களுக்கு நன்றி. 25 மேற்பட்ட சக பயனர்களால் நீங்கள் நிர்வாகியாகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். உங்களுக்கு நிர்வாக அணுக்கம் ஏதுவாக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். --Natkeeran (பேச்சு) 13:11, 22 அக்டோபர் 2013 (UTC)
- நிருவாகியாக ஆனதற்கு என் நல்வாழ்த்துகள் வத்சன்!--செல்வா (பேச்சு) 14:05, 22 அக்டோபர் 2013 (UTC)
- வாழ்த்துகள் நண்பரே, மேற்கோள் இல்லா கட்டுரைகளை இனம் கண்டு வார்ப்புருவிட ஏதேனும் தானியங்கி இருந்தால் அதன் அணுக்கத்தினையும் பெற்று சிறப்பாக பங்களியுங்கள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:43, 22 அக்டோபர் 2013 (UTC)
- எனது வாழ்த்துகளும்! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:57, 22 அக்டோபர் 2013 (UTC)
- உங்களுக்கு எனது வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 01:02, 23 அக்டோபர் 2013 (UTC)
- நற்கீரன், kanags, செல்வா, ஜெகதீஸ்வரன் மற்றும் தமிழ்க்குரிசில் அவர்களுக்கு எனது நன்றிகள். எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக குழிகள் தோண்டியப்போழுது தொலைப்பேசி இணைப்புகளையும் அறுத்து விட்டனர். இணைப்பு கொஞ்ச நாட்களில் சரியாகும் என நம்புகிறேன். அதுவரை, எனது நிருவாக பணியை தொடங்குவதில் தாமதம் நேரும். மன்னிக்கவும்! :(( - Vatsan34 (பேச்சு) 10:22, 23 அக்டோபர் 2013 (UTC)
- லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருபவர் நீங்கள்! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:14, 23 அக்டோபர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டி
தொகு- வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
- விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:12, 27 அக்டோபர் 2013 (UTC)