பதக்கம் தொகு

  சிறப்புப் பதக்கம்
தங்கள் பன்மொழி அறிவின் பயனாக பல்வேறு பக்கங்களில் சிறந்த கருத்துகள், தொகுப்புகளைச் செய்து வருவதைக் கண்டு இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். நன்றி. இரவி (பேச்சு) 19:21, 3 மே 2012 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி, இரவி.--பாஹிம் (பேச்சு) 01:29, 4 மே 2012 (UTC)Reply

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு தொகு













முதற்பக்கக் கட்டுரை தொகு












மலேசிய ஊர்கள் தொகு

வணக்கம் பாகிம்! மலேசியப் பெயர்களை எப்படி தமிழாக்குவது, மலேசியத் தமிழர் யார் விக்கியில் உள்ளார், எப்படி கேட்பது என தயங்கினேன். தாங்கள் செய்துவிட்டீர்கள்! :) தாங்கள் நகர்த்திய ஊர்களின் பெயர்களை மலாய்வழி பெயர்களுக்கு மாற்றினீர்களா, அல்லது அரபு வழியா, அல்லது ஆங்கில வழியா? ஊர்ப் பெயர்களை கீழே இட்டு அவற்றின் மூலப் பெயர்களுடன் தாங்கள் இட்ட பெயரையும் சேர்த்து விளக்குமாறு வேண்டுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:24, 25 ஆகத்து 2012 (UTC)Reply

அன்புடன் தமிழ்க்குரிசில்! மலேசிய, இந்தோனேசியப் பெயர்களை இந்தோனேசிய-மலேசிய மொழிகளின் அடிப்படையிலேயே நான் தமிழாக்குகிறேன். அரபுப் பெயர்களாக இருப்பின் அரபு மொழியைப் பின்பற்றுகிறேன். அடிப்படைப் பெயர் ஆங்கிலமல்லாவிடின் நான் ஒருபோதும் ஆங்கில வழியிற் தமிழ்ப்படுத்துவதில்லை. மலேசியத் தமிழர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்வதாயின் முத்துக் கிருஷ்ணன் மாத்திரமே பங்களிக்கிறார். எனினும், அவர் மலாயு மொழிப் பெயர்களைப் பொதுவாகச் சரிவரத் தமிழ்ப்படுத்துவதில்லை. நான் இங்கே இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருக்கிறேன். மலேசியாவில் இருப்பதைவிட மிகக் கூடுதலான மலாயு மொழி பேசுவோர் இந்தோனேசியாவிலேயே இருக்கின்றனர். எவ்வாறாயினும், இந்தோனேசிய-மலேசிய மொழிகளுக்கிடையில் ஒற்றுமைகள் ஏராளம். நூற்றுக் கணக்கான மொழிகள் இங்கு பேசப்படுகின்றன. இவற்றுக்குப் பொதுவான சில ஒலிப்புகள் இருக்கின்றன. எடுத்துக் காட்டாக "வட்டம்" என்ற சொல்லில் வருவது போன்ற டகர ஒலி இம்மொழிகளில் இல்லை என்பதுடன் இம்மொழிகளைப் பேசுவோரிற் பெரும்பாலோரினால் அதை மொழியவும் முடிவதில்லை. தமிழில் நாம் லகர, ளகர, ழகர வேறுபாடுகளையெல்லாம் கொண்டிருக்கிறோம். இந்தோனேசிய-மலேசிய மொழிகளில் லகரம் அல்லது ழகரம் காணப்படுவதில்லை. எடுத்ததற்கெல்லாம் ளகர ஒலிதான் வரும். அவ்வாறே, தமிழில் வேறுபடுத்திக் காட்டாத சில உயிரோசைகள் இம்மொழிகளுக்குப் பொது. எடுத்துக் காட்டாக "teman" என்பதும் "taman" என்பதும் ஒன்று போலத் தோன்றும். Teman என்பதைத் "த" - "தெ" ஆகியவற்றுக்கு இடைப்பட மொழிய வேண்டும். உண்மையில் "Negeri Sembilan" என்பது "நகரி சம்பிளான்" என்றும் "நெகெரி செம்பிளான்" என்றும் தமிழில் எழுதப்படலாம். ஏனெனில், அவற்றைக் குறிப்பதற்கான சரியான உயிர் மெய் வடிவம் தமிழிற் காணப்படுவதில்லை. இந்த வேறுபாடுகளை அறியாத பலர் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ள ஆங்கில வழித் தமிழாக்கங்கள் இப்போது குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன. ஒரு புதினமான செய்தி என்ன தெரியுமா? மலேசியா என்று தமிழிற் குறிப்பது வெறுமனே ஆங்கில வழித் தமிழாக்கம். மலாயு (மளாயு) மொழியில் அதனை "மளாய்சியா" என்றுதான் உள்ளது. வெவ்வேறு மொழிகளை நாம் நுணுக்கமாக ஆராயும்போது தான் சரியான வரிவடிவங்களை ஏற்படுத்த முடியும்.--பாஹிம் (பேச்சு) 00:13, 26 ஆகத்து 2012 (UTC)Reply

பாகிம், தமிழ்க்குரிசில், இந்தியா, இலங்கைக்கு அடுத்தபடியாகத் மலேசியா தமிழர்கள் வதியும் இடம் மலேசியா, அங்குள்ள இடப்பெயர்கள் தமிழர்களின் வழக்குப்படியே இங்கும் எழுதப்பட வேண்டும். மலாயு மொழிக்காரர்களின் வழக்கை கட்டுரையில் குறிக்கலாம். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் முத்துக்கிருஷ்ணனிடம் கேளுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 00:23, 26 ஆகத்து 2012 (UTC)Reply

தலைப்பு மாற்றம் தொகு

கட்டுரைத் தலைப்புகளை மாற்றும் போது உரையாடிவிட்டு மாற்றுங்கள். ஸ்கந்தகிரி எவ்வாறு சுகந்தகிரி ஆனது? ஸ்கைட்ரெக்ஸ் விருது எவ்வாறு சுக்கைற்றெட்சு விருது ஆனது? அந்தந்தப் பேச்சுப் பக்கங்களில் விளக்குங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 04:16, 31 ஆகத்து 2012 (UTC)Reply

+1 இங்கு உள்ள அத்துனை கட்டுரைகளையும் மாற்றப் போகிறீர்களா? மேலும் ட் என தொடங்கும் கட்டுரைகள் நிறைய உள்ளன. மேலும் ஸ்டாக்ஹோம் கட்டுரை சுட்டொக்ஹொல்ம் என்றானபோது இறுதியில் மெய்ம்மயக்கம் வருவது இலக்கணப் பிழையில்லையா?--சண்முகம்ப7 (பேச்சு) 05:07, 31 ஆகத்து 2012 (UTC)Reply

ஸகர மெய்யை அடுத்து வல்லினம் வந்தால் ஸகர மெய்யை விட்டு விட்டு எழுதுவது தான் முறை (எ-டு: ஸ்கந்தபுராணம்-கந்தபுராணம்). அதன்படி ஸ்கந்தகிரி என்பது கந்தகிரி என்று தான் வர வேண்டும். ஸ்கைட்ரெக்ஸ் விருது என்பது கைற்றெட்சு விருது என்றும் ஸ்டாக்ஹோம் என்பது தாக்கோம் (டகர வரிசையிற்றமிழ்ச் சொற்கள் தொடங்குவதில்லை.) என்றும் வருவதே சரியானது. --மதனாகரன் (பேச்சு) 06:56, 31 ஆகத்து 2012 (UTC)Reply

சண்முகம்ப7, மெய்யெழுத்தில் விக்கிப்பீடியாக் கட்டுரைகள் தொடங்குவதில்லையென்று முடிவெடுக்கப்பட்டதால், கிரந்த மெய்க்கும் அதே விதி பொருந்தும். ஆகவே, மேற்கூறிய கட்டுரைகளை நகர்த்த வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 06:56, 31 ஆகத்து 2012 (UTC)Reply

// மெய்யெழுத்தில் விக்கிப்பீடியாக் கட்டுரைகள் தொடங்குவதில்லையென்று முடிவெடுக்கப்பட்டதால்// எங்கு முடிவெடுக்கப்பட்டது, எத்துனை பேரின் ஆதரவுடன் என கூற முடியுமா மதன், எங்கோ ஓரிடத்தில் உரையாடலுடன் நின்று விட்டதாகத்தான் நினைவு.. --சண்முகம்ப7 (பேச்சு) 07:00, 31 ஆகத்து 2012 (UTC)Reply

முடிவு நிறைவேற்றப்படாவிடினும் மேற்கூறிய விதி வணிகப் பெயர்கள் தவிர்ந்த இடங்களில் பெரும்பாலானவர்களாற்கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. --மதனாகரன் (பேச்சு) 07:13, 31 ஆகத்து 2012 (UTC)Reply

ஊர்ப்பெயர்களுக்கு பெரும்பாலும் வழக்கில் உள்ள பெயரை பயன்படுத்த வேண்டும் என்பதும் பெரும்பாலானோர் கடைப்பிடிப்பதுதானே மதன். மேலும் எனக்கு ஒரு சந்தேகம்:தமிழ் விக்கியில் நாம் ஏன் தலைப்பில் மட்டும் இலக்கணப்பிழை பார்க்கிறோம் (அதுவும் மேற்கூறிய கட்டுரையில் முழுமையாக பார்க்கப்படவில்லை). மேலும் கொள்கை முடிவு எனில் மட்டுமே உரையாடாமல் மாற்ற இயலும். இல்லையெனில் ஒவ்வொரு பக்கத்திலும் உரையாடி மாற்ற வேண்டும் என்பதே விக்கி நடைமுறை/கொள்கை--சண்முகம்ப7 (பேச்சு) 07:36, 31 ஆகத்து 2012 (UTC)Reply

இங்கே ஏற்கனவே உரையாடல் நடந்திருப்பதைக் கவனிக்கிறேன். நான் அவற்றை எந்த அடிப்படையில் மாற்றினேனெனக் கனகு கேட்கிறார். ஸ்வீடன்-சுவீடன், ஸ்விட்ஸர்லண்ட்-சுவிட்சர்லாந்து, ஸ்கந்த (सगन्ध)-சுகந்தம் என்பன எந்த அடிப்படையில் மாறியுள்ளனவோ அதே அடிப்படையைப் பின்பற்றியுள்ளேன். சண்முகம், நீங்கள் கேட்ட லகர மெய்யைத் தொடரந்து மகர மெய் வந்தது தவறு என்பது சரிதான். எனினும், நாடு நகரங்கள் அழைக்கப்படும் வழக்கத்தைப் பின்பற்ற வேண்டுமென நீங்கள் கூறுவதானால், ஸ்டாக்ஹோம் என்பது முற்றிலும் பிழை என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அங்குள்ளவர்கள் யாரும் அப்படி மொழிவதில்லை. நான் சுவீடன் நாட்டு நீதிமன்றங்கள் பலவற்றுக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியுள்ளேன். அதனால், சுவீடன் நாட்டில் எப்படி அழைக்கிறார்கள் என்பது தெரியும்.--பாஹிம் (பேச்சு) 11:58, 31 ஆகத்து 2012 (UTC)Reply

அங்குள்ளவர்கள் எப்படி அழைக்கிறார்கள் என்பது இங்கு முக்கியமில்லை பாஹிம். தமிழ்நாட்டில்/இலங்கையில் எவ்வாறு அழைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அங்குள்ளவர்கள் எப்படி அழைக்கிறார்கள் என கட்டுரையில் குறிப்பிடலாம் அதில் தவறில்லை. ஆனால் தலைப்பை மட்டும் மாற்றுவதால் என்ன பயன், உள்ளே உள்ளடக்கத்தை கொஞ்சம் கூட மாற்றவில்லை/புதிய தலைப்பை சேர்க்கவும் இல்லை. மேலும் நீங்கள் குறிப்பிட்ட சுவீடன், சுவிட்சர்லாந்து உள்ளிட்டவை வழக்கத்திலுல்லவை, நீங்கள் மாற்றிய சுட்டொக்ஹொல்ம், சுக்கைற்றெட்சு விருது எங்கே தமிழர்கள் பயன்படுத்துகிறார்கள். மேலும் ஒரு உரையாடலைக் கொண்டு அனைத்தையும் மாற்றலாம் என ஏதாவது விதி உள்ளதா? (அந்த உரையாடலில் பங்கு கொள்ளாதவர்கள் மாற்றுக் கருத்தை கொண்டிருக்கலாம் அல்லவா?), கொள்கை இல்லாதபோது உரையாடித்தானே மாற்ற வேண்டும்.--சண்முகம்ப7 (பேச்சு) 12:54, 31 ஆகத்து 2012 (UTC)Reply

மொழிக்கு முதலில் வரும் ஸகர மெய்யை அடுத்து வல்லின மெய் வந்தால் ஸகர மெய்யை விட்டு விட்டு எழுதுவது தான் முறை. இடையினம் வந்தாலே ஸகர மெய் சு ஆக மாறும் (எ-டு: ஸ்லோகம்-சுலோகம், ஸ்வாசம்-சுவாசம்). --மதனாகரன் (பேச்சு) 06:39, 1 செப்டெம்பர் 2012 (UTC)Reply

சரிதான். எனினும், ஸ்கந்த (सगन्ध) என்பது சுகந்தம் (நறுமணம்) என மாறியுள்ளதே, மதனாகரன். இது ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சொல்லே.--பாஹிம் (பேச்சு) 06:54, 1 செப்டெம்பர் 2012 (UTC) நீங்கள் கூறியது சரி, மதனாகரன். நான்தான் தவறியுள்ளேன். அச்சொல் ஸுகந்த सुगन्ध என்றிருப்பதை நான் தவறுதலாக सगन्ध என நினைத்துவிட்டேன்.--பாஹிம் (பேச்சு) 06:57, 1 செப்டெம்பர் 2012 (UTC)Reply

எச்சரிக்கை தொகு

பாகிம், அண்மையில் பேச்சு:இலங்கைத் தமிழில் பயன்பாட்டிலுள்ள சிங்களச் சொற்கள் பக்கத்தில் ஒரு உரையாடலில் நீங்கள் தேவையில்லாமலும் ஒரு அடையாளம் காட்டாத பயனரை மிகவும் அவதூறாகக் கொள்ளக்கூடிய வகையில் விளித்தும் கருத்திட்டிருந்தீர்கள். தவிர அது அப்பயனருக்கு ஆபத்தாகவும் இருக்க வாய்ப்புண்டு. அதனால் அந்தத் தொகுப்புகளை வரலாற்றோடு நீக்கியுள்ளேன். இனி அவ்வாறு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். (அந்தக் கட்டுரையின் உள்ளடக்கத்தைப் பொருத்தவரை உங்கள் கருத்து சரியாக இருக்கலாம், நான் இன்னும் முழுவதும் உரையாடலைப் படிக்கவில்லை. அப்படி இருந்தாலும், நீக்கப்பட்ட அந்தத் அவதூறான தொகுப்பை ஏற்க முடியாது.) -- சுந்தர் \பேச்சு 09:54, 2 செப்டெம்பர் 2012 (UTC)Reply

பாஹிம். இவர் பயனர்களை அவதூறாக அவமதிபதொடு. கீழ்த்தனமான வார்த்தைகளை பாவிப்பதன் மூலம். விக்கிபீடியா செயல்பாட்டில் இருந்து நான் வெளிஎரிகிறேன். இவர் பொய்யான வேறு பயனர் பெயர்களின் இங்கு செயல்படுவது விக்கி நிர்வாகத்தை ஏமாத்துகிறார் ஆனால் மூத்த விக்கி அறிவாளிகளுக்கு இது புரியவில்லை அல்லது தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றனர். இவரின் செயலால் பல அதி உச்ச பயன்பட கூடிய பயனர்கள் வெளியேறுகின்றனர் அதேவேளை நானும் வெளியேறுகின்றேன் காரணம்: நடு நிலை அற்ற கொள்கை, விக்கியின் மேன்பாட்டுக்கு இவர் இடைஞ்சலாக உள்ளார்! விக்கியின் பாரிய வளர்ச்சிக்கு முன் வந்த பயனர்களை அடாவடி செய்தும், கொச்சை படுத்தியும் தனிப்பட்ட தாக்குதலை இவர் புரிந்துள்ளார்!!!--சிவம் 10:15, 21 செப்டெம்பர் 2012 (UTC)

உணர்ச்சி வசப்படாதீர்கள் நண்பரே தொகு

நமக்குள் கருத்து முறன்கள் இருக்கலாம். நான் அறிவற்றவனாகவோ, என் கொள்கை பொருள் அற்றதாகவோ இருக்கலாம். ஆனால் காலம் தோன்றியது முதல் மதமெனம் மூர்க்க தனத்தினை எதிர்த்துக் கொண்டிருக்கும் பகுத்தறிவுமிக்கவர்கள் இருந்துகொண்டே தான் இருக்கிறார்கள். எத்தனை மதங்களை உலகம் கண்டபின்னும் இன்னும் கூட கடவுளை நம்பாதவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். \\குரங்குகளும் பன்றிகளும் நாய்களும் நரிகளும் தம் மூதாதையரென மூட நம்பிக்கை கொண்டிருப்போரையா?\\ உண்மை அப்படிதான் என்றால் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். உங்கள் நம்பிக்கை எதிராக சிலர் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள். கடவுள்தான் மனிதனை படைத்தான் என்று நம்பிக்கை x மதத்தினர் நம்புகிறார்கள் என்று இருக்க வேண்டிய இடத்தில், "கடவுள்தான் மனிதனை படைத்தார்" என்றிருத்தலை நடுநிலை என்றா நீங்கள் கருதுகின்றீர்கள்.

என்னுடைய வாதங்கள் தவறிருக்கலாம், என்னுடைய மேற்கோள்களில் தவறிருக்கலாம், என் கொள்கையில் தவறிருக்கலாம்,.. ஆனால் இப்படி தவறாக ஒன்றை சிலர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிய வேண்டும். எங்களுக்கு நரகம்தான் கிடைக்குமென ஆத்திகவாதிகள் சொல்லும் போதும், நாங்கள் இந்த மண்ணிலேயே சொர்க்த்தினை உருவாக்கி கொண்டிருக்கிறோம். எங்களுக்கு தனிமனித தாக்குதல்களும் பெரிய விஷயமில்லை. பெரியாரை விட அதிகமாக நாங்கள் தூற்றப்படப் போவதில்லை. எனினும் வரும் தலைமுறைக்கு நல் வழிகாட்டுகள், பொது இடத்தில் இருக்கின்றீர்கள். நாளைய தலைமுறை விக்கியைப் படித்து கடவுள் இருக்கிறார் என்று தவறாக நம்பும் அளவிற்கு வழிவகை செய்துவிடாதீர்கள்.

Sivane (பேச்சு) 11:39, 24 செப்டெம்பர் 2012 (UTC)Reply

சிவனே, முதலில் //முதல் மதமெனம் மூர்க்க தனத்தினை எதிர்த்துக் கொண்டிருக்கும் பகுத்தறிவுமிக்கவர்கள்// என்று கூறுவதன் மூலம் எங்களையெல்லாம் நீங்கள் இழிவாகவும் மூர்க்கமானவர்களாகவும் பிரச்சாரம் செய்கிறீர்கள். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்களைப் பகுத்தறிவு மிக்கவர்களாகவும் சமயத்தைப் பின்பற்றும் எங்களைப் பகுத்தறிவற்றவர்களாகவும் காண்பிக்க முயல்கிறீர்கள். எங்களுடைய சமயம் எங்களுக்கு வழிகாட்டுகிறது. எங்களுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் விட எங்களுக்கு எங்களது சமயமே முக்கியம். அடுத்தது, சமயம் பற்றிய கட்டுரைகளில் நடுநிலை இல்லையெனக் கூறி நீங்கள் பொய்யான கருத்துக்களைத் திணிக்க முயன்றீர்கள். தப்சீர் அத்-தபரீயில் இல்லாத ஒரு செய்தியை இருப்பதாகப் பொய்யுரைத்தீர்கள். முகம்மது நபியவர்கள் மீது அவதூறான செய்தியைப் பரப்ப முயல்கிறீர்கள். அதே நேரம், உங்களை நடுநிலையாளராகக் கூறிக்கொள்கிறீர்கள். மேலும், //\\குரங்குகளும் பன்றிகளும் நாய்களும் நரிகளும் தம் மூதாதையரென மூட நம்பிக்கை கொண்டிருப்போரையா?\\ உண்மை அப்படிதான் என்றால் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்// என்பதன் மூலம், இதுவரை அறிவியல் அடிப்படையில் ஒருபோதும் நிறுவப்படாத ஒரு கற்பனையை உண்மையென ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்கள். அது வெறும் கற்பனை மாத்திரமல்ல, அறிவியல் அடிப்படையில் நிறுவப்படாத ஒன்றை அறிவியல் உண்மையெனப் பரப்புரை செய்வது உங்களது மூடக்கொள்கைகளை ஏனையோர் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கான திணிப்பு ஆகும். பரிணாமம் என்ற ஒரு கற்பனைக் கோட்பாடு இருப்பதாயின் அதைப்பற்றிக் கூறுமிடமெல்லாம் பரிணாமமென்ற கற்பனைக் கோட்பாடு இப்படக் கூறுகிறது என்றுதான் கூற வேண்டும். அது ஒன்றும் முடிந்த முடிவல்ல. அத்துடன், //எங்களுக்கு தனிமனித தாக்குதல்களும் பெரிய விஷயமில்லை// என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆம், முகம்மது நபி என்ற மனிதரைத் தரக்குறைவாகத் தாக்கியெழுதுவது உங்களுக்குப் பெரிய செய்தியல்லாமல் இருக்கலாம். ஆனால், அது உலக வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் புண்படுத்தும் ஒரு இழிசெயல் என்பதை உணர மறுக்கிறீர்கள். ஏனென்றால், நீங்கள் அதனை வேண்டுமென்றே செய்கிறீர்கள். அதனாற்றானே நீங்கள் வேறோரிடத்தில் உங்களது விமர்சனத்தைக் கண்டு மக்கள் நடுங்குவதாகக் கூறுகிறீர்கள். அஃதாவது, மக்களை நடுங்க வைப்பது உங்களுக்கு இன்பம் தருகிறது. நீங்களென்ன ஒரு பயங்கரவாதியா? //விக்கியைப் படித்து கடவுள் இருக்கிறார் என்று தவறாக நம்பும் அளவிற்கு வழிவகை செய்துவிடாதீர்கள்// என்று எனக்குக் கட்டளையிடுவதற்கு உங்களுக்கு உரிமையில்லை. கடவுளை மறுக்கும் கேடுகெட்ட செயலை நாம் அனுமதிக்கப் போவதில்லை என்பதுடன் உங்களது கொள்கையே தவறானதாயிருக்க, உலக மக்கட்டொகையில் நான்கிலொரு பங்கினர் தம் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள முகம்மது நபியவர்கள் மீது பொய்யான அவதூறுகளைப் பரப்புவதன் மூலம் நீங்களே நேர்மையில்லாமல் நடக்கிறீர்கள். உங்களைப் போன்றவர்கள் அண்மையில் எமது தலைவரை அவமதிக்கும் வகையில் எடுத்துள்ள திரைப்படம் முஸ்லிம் நாடுகளிலும் இலங்கையிலும் தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் செய்யும் இழிவுப் பிரச்சாரத்தின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவையும் இலங்கையிலும் முஸ்லிம் நாடுகளிலும் தடைசெய்வதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்குத் தமிழுலகமே உங்களுக்கு நன்றி சொல்லுமென்றா எதிர்பார்க்கிறீர்கள்? இறுதியாக, இது தொடர்பான எந்தவொரு உரையாடலையும் நான் பொது இடமான ஆலமரத்தடியில் வைத்துக்கொள்ளவே விரும்புகிறேன். ஏனெனில், நீங்கள் உங்களது கொள்கையைத் தனிப்பட்ட முறையில் என்னிடம் திணிக்க முயல்கிறீர்கள் என்பதுடன் எங்களது தலைவரை அவமதிக்கும் வகையிலேயே தொடர்ந்து எழுதிவருகிறீர்கள்.--பாஹிம் (பேச்சு) 15:05, 24 செப்டெம்பர் 2012 (UTC)Reply

நீங்கள் ஓர் தமிழர் தொகு

வணக்கம் பாகிம்! சிவம் பேச்சுப் பக்கத்தில் உங்கள் மறுமொழியைக் கண்டேன். செல்லும் நாடெங்கும் நீங்கள் தமிழிலேயே பேசுவதையும், பிறருக்கு கற்றுக் கொடுத்து தமிழை வளர்ப்பதையும் அறிந்து மகிழ்ந்தேன். தவறுதலாக, நீங்கள் தமிழல்லர் என்ற வரியைச் சேர்த்திருக்கிறீர்கள். இன வழியில் தமிழர் மட்டும் தான் தமிழரா?? இது என் போன்றோரை வருத்தமடையச் செய்யும் கருத்தாகும். தமிழை விரும்பி, போற்றி, மகிழ்ந்து பேசும் நீங்கள் தமிழர் அன்றி வேறு யார்? தயவு செய்து இதுபோன்ற சொற்களை இனி பயன்படுத்த வேன்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:30, 28 செப்டெம்பர் 2012 (UTC)Reply

அன்புக்கு நன்றி, தமிழ்க்குரிசில். இனி அப்படியே செய்ய முயல்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 15:21, 28 செப்டெம்பர் 2012 (UTC)Reply
இதில் பாகிமைக் குறை சொல்ல முடியாது. இலங்கையில் சில அரசியல் காரணங்களுக்காக முசுலிம்கள் தம்மைத் தமிழர் என அடையாளப்படுத்துவதில்லை. இது ஒரு வருந்தத்தக்க நிலையே.--Kanags \உரையாடுக 22:56, 28 செப்டெம்பர் 2012 (UTC)Reply

முதற்பக்கப் படிமம் அறிவிப்பு தொகு


தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு தொகு

இம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) இலோ அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும். --Natkeeran (பேச்சு) 19:23, 26 திசம்பர் 2012 (UTC)Reply

நன்றி தொகு

  நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:13, 14 சனவரி 2013 (UTC)Reply


நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:30, 14 சனவரி 2013 (UTC) +1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:57, 15 சனவரி 2013 (UTC)Reply

ஜூம்மா மசூதி தொகு

பாஹிம், ஜூம்மா மசூதி என்றால் என்ன? கட்டிடங்களின் வடிவமைப்பு பெயரா? மேலும் பேச்சு:சேரமான் பெருமாள் கட்டுரையை பார்க்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:26, 16 சனவரி 2013 (UTC)Reply

ஜும்ஆ மஸ்ஜித் என்பதே சரியான சொல். அதன் பொருள், வெள்ளிக் கிழமைகளில் பகல் நேரத் தொழுகைக்கு முன்னர் பிரசங்கம் நிகழும் பள்ளிவாசல் என்பதாகும்.--பாஹிம் (பேச்சு) 10:16, 16 சனவரி 2013 (UTC)Reply


மகாவம்சம் மாத்திரமே ஆதாரம் தொகு

எல்லாளன் ஆக்கிரமிப்பாளன் என மகாவம்சம் மாத்திரமே கூறுகின்றது. இக்கட்டுரை தனியே மகாவம்சமும் அதனை ஆதாரமாகக் கொண்ட பல வரலாற்று நூல்களை மையப்படுத்தி மாத்திரமே எழுதப்பட்டுள்ளது. எனவே இக்கட்டுரை நம்பகத்தன்மை அற்றது. சில நூல்கள் எல்லாளன் இலங்கையின் வட பிரதேச மன்னனென குறிப்பிடுகின்றது. எப்படிப்பார்த்தாலும் எல்லாளன் ஒரு ஆக்கிரமிப்பாளனே. எனவே இக்கட்டுரையை நடுநிலமையற்றதாக்கவும். எனினும் இக்கட்டுரையிலுள்ள இனவெறியூட்டும் கருத்துக்களை மகாவம்சத்தை ஆதாரமாகக் கொண்ட குமுதினி டையஸ் ஹபுதானிதி எழுதிய தரம் 10 வரலாறு என்ற புத்தகமே கூறுகின்றது.

சிங்களச் சொற்கள் தொகு

வணக்கம் பாஹிம், சில தமிழ் விக்கி கட்டுரைகளின் ஆரம்ப வரிகளில் அக்கட்டுரைச் சொல்லுக்கு இணையான சிங்கள மொழிச் சொல்லையும் சேர்த்திருக்கிறீர்கள். இவை அவசியம் அற்றது. பொதுவாக கட்டுரைத் தலைப்பின் மூல மொழி சிங்களம் (அல்லது வேறு மொழி) என்றால் மட்டுமே அந்தந்த மொழிச் சொல்லையும் இணைத்தல் வேண்டும். உதாரணத்திற்கு சுண்டை என்ற கட்டுரையில் எதற்காக சிங்களச் சொல்லைச் சேர்க்க வேண்டும். அல்லது இது சிங்கள மூலம் தான் தமிழுக்கு வந்ததோ நானறியேன். அது குறித்துக் கட்டுரையிலும் நீங்கள் எழுதவில்லை. பொதுவாக தமிழ் விக்கிக் கட்டுரையில் பிறமொழிசார் கட்டுரைகளில் தமிழ்ச் சொல், (இணையான ஆங்கிலச் சொல், இணையான மூல மொழிச் சொல்) என்ற வகையிலேயே இருத்தல் வேண்டும்.--Kanags \உரையாடுக 08:26, 6 பெப்ரவரி 2013 (UTC)

கனகு, நான் அச்சொற்களைக் குறிப்பிடக் காரணம் இருக்கிறது. எமது பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் தமிழ் மூலமே கல்வி கற்றாலும் அவர்களில் பலருக்கும் சிங்களப் பெயரைச் சொன்னாற்றான் சரியான தாவரங்களைக் கண்டுகொள்ள முடிகிறது. குறிப்பாக, மருத்துவத் தேவைகளுக்காக பலரும் பல்வேறு வகையான தாவரங்களைத் தேடிச் செல்கின்றனர். அவ்வேளையில் வெறும் தமிழ்ப் பெயரை மாத்திரம் வைத்துக் கொண்டு அவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பது தென்னிலங்கையில் எளிய வேலையன்று. சிங்களப் பெயர்களும் சேர்ந்திருக்கும் போது அவ்வாறான தாவரங்களைக் கண்டறிவது எளிதாகின்றது. எம்முடைய கட்டுரை ஆக்கங்களால் எம்மவர் பயனடையாவிடின், எதற்காக எழுத வேண்டும்?--பாஹிம் (பேச்சு) 08:46, 6 பெப்ரவரி 2013 (UTC)

அது முறையல்ல. அப்படியானால், விக்கிக் கட்டுரைகள் அனைத்திலும் சேர்க்கப் போகிறீர்களா? ஏனைய இந்திய மொழிகள் அனைத்தையும் எழுதலாமா? நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். சிங்கள மொழி மூலம் தமிழ்ப் படிப்பிக்கிறீர்களா? இதனாலேயே தமிழ் இலங்கையில் அழிகிறது. உதாரணத்திற்கு தினகரன் பத்திரிகை.--Kanags \உரையாடுக 10:08, 6 பெப்ரவரி 2013 (UTC)
நீங்கள் பங்களித்த கட்டுரைகள் அனைத்தையும் மீள்பார்வையிட வேண்டியிருக்கிறது.--Kanags \உரையாடுக 10:12, 6 பெப்ரவரி 2013 (UTC)

நான் பொதுமக்களைக் குறிப்பிட்டுச் சொன்னால், நீங்களென்னவோ நான் தமிழ்க் கற்பிப்பது தவறான முறையிலென்கிறீர்கள். நான் ஏற்கனவே சிங்களப் பாடசாலைகளிலுள்ள மாணாக்கருக்குச் சிங்கள மொழி மூலம் தமிழ் கற்பித்துள்ளேன். அது என்ன பிழையான செயலா? என்னுடைய கட்டுரைகள் அனைத்தையும் மீள்பார்வையிடுங்கள். வேண்டுமானால் அழித்தும் விடுங்கள். ஆனால், நீங்கள் செய்வது முறையல்ல என்பதை ஆணித்தரமாகக் கூறிக்கொள்கிறேன். தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழிலக்கணத்துக்கு மாற்றமான கருத்துக்கள் ஏராளமாகப் பின்பற்றப்படுவதைக் காண்கிறேன். நீங்களே அவற்றை ஆதரிக்கிறீர்கள். அதன் மூலம் தமிழைச் சிதைப்பது நீங்களென்பதை உறுதியாகக் கூறிக்கொள்கிறேன். உங்களுக்கும் ஏனைய சில பயனர்களுக்கும் சிங்கள மொழியின் மீது வெறுப்பிருந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல. நான் இங்கே எழுத வந்தது என் எழுத்துக்களால் என் சமூகத்தவருக்குச் சிறிதேனும் பயன் கிடைக்கட்டுமே என்றுதான். ஆனால் நீங்கள் அதனை வெறுக்கிறீர்களென்பது இங்கு தெளிவு.--பாஹிம் (பேச்சு) 10:37, 6 பெப்ரவரி 2013 (UTC)

நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்துள்ளீர்கள். சிங்கள மொழி மூலம் தமிழ் கற்பிப்பது தவறென்று சொல்ல வரவில்லை. ஆனால் அதற்கு தமிழ் விக்கிப்பீடியாவைக் களமாகப் பயன்படுத்தாதீர்கள். சிங்களச் சொற்கள் சேர்க்க வேண்டிய கட்டுரைகளில் அவற்றை நானே சேர்த்திருக்கிறேன். எனது கட்டுரைகளைப் பாருங்கள். சிங்களம் படிப்பிப்பதல்ல தமிழ் விக்கியின் நோக்கம். சிங்கள மொழி விக்கிப்பீடியாவில் சிங்களக் கட்டுரைகளை எழுதி அங்கும் இங்கும் இணைப்புக் கொடுங்கள். இதனால் சிங்களமும் வளரும், தமிழும் வளரும். புரிதலுக்கு நன்றி.--Kanags \உரையாடுக 10:52, 6 பெப்ரவரி 2013 (UTC)

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:05, 24 சூன் 2013 (UTC)Reply

நீங்கள் வர விரும்புவது அறிந்து மகிழ்கிறேன். 99.9% செப்டம்பர் 28, 29 ஆகிய நாட்களில் கூடல் நடக்கும்.--இரவி (பேச்சு) 12:52, 24 சூன் 2013 (UTC)Reply

வேண்டல் தொகு

தொகுக்கப்படுகிறது வார்ப்புரு இட்டிருக்கும் பொழுதே பக்கத்தினை நகர்த்தியுள்ளீரகள் , தொகுப்பும் செய்துள்ளீர்கள். இவ்வாறு இனி நடவாது பார்த்துக்கொள்ளவும். ஏற்கனவே தினேஷ்குமார் பொன்னுசாமி அறிவுறுத்தியிருந்தார். அந்தநிலை எனக்கு ஏற்பட்டுள்ளது.//அவ்வாறு ஒருவருடைய உழைப்பும் நேரமும் பயன் தருவதாயிருக்குமிடத்து அவற்றுக்குக் கட்டாயம் மதிப்பளிக்க வேண்டும். ஆதலின், நான் நகர்த்தியதனால் ஏற்பட்டை வசதிக் குறைவை அருள் கூர்ந்து பொறுத்துக் கொள்க// என கூறியிருந்தீர்கள் . அவரைப்போலவே நான் தட்டச்சு செய்தவை வீணாயிற்று. ஆகவே இதனை இனிமேல் தவிர்க்குமாறு தழ்வன்புடன் கேட்கிறன். நன்றி -- நி ♣ ஆதவன் ♦   (உரையாட படத்தை சொடுக்கவும்) 15:04, 29 சூலை 2013 (UTC)Reply

பெயர்த் தலைப்பு தவறாக இடப்பட்டிருந்தமையாற்றான் நகர்த்தினேன். பொதுவாக நான் வேறொவர் தொகுத்துக் கொண்டிருக்கும் போது திருத்தங்களைச் செய்வதில்லை. ஆயினும் பெயரே பிழையாக இடப்பட்டிருந்தால் அதைத் திருத்துவது கடமையல்லவா. மாறாக, உங்களது தொகுப்புக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்.--பாஹிம் (பேச்சு) 15:06, 29 சூலை 2013 (UTC)Reply

அது வழிமாற்றுக் கொடுக்கப்படவேண்டிய பக்கம். ஆகையால் தான் அப்படி உருவாக்கினேன். //ஆயினும் பெயரே பிழையாக இடப்பட்டிருந்தால் அதைத் திருத்துவது கடமையல்லவா// ,தொகுக்கப்படுகிறது வார்ப்புரு இடப்பட்டிருந்தால் கட்டுரையின் பேச்சுப்பக்கத்திலோ எழுதியவரின் பேச்சுப் பக்கத்திலோ கேட்டு அவர் சம்மத்தித்த பின் நகர்த்திவிடலாம். புரிதலுக்கு நன்றி பாகிம் . அன்புடன் -- நி ♣ ஆதவன் ♦   (உரையாட படத்தை சொடுக்கவும்) 15:10, 29 சூலை 2013 (UTC)Reply

கட்டுரைக் வேண்டுதல் தொகு

வணக்கம். விக்கிப்பீடியா பற்றி பொது ஊடகங்களில் பரப்புரை செய்யவும், பத்தாண்டுகளை பதிவு செய்யவும் சிறப்புக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிடுதல் உதவும். அந்த வகையில் தொடர் பங்களிப்பாளரான நீங்கள் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள்#கட்டுரைத் தலைப்புக்கள் கட்டுரை எழுதித் தர முடிந்தால் சிறப்பு. குறிப்பாக பின்வரும் தலைப்புக்களில்:

  • இலங்கையில் தமிழ் விக்கியூடகங்களின் வளர்ச்சியும் வாய்ப்புக்களும்
  • தமிழை இணையத்தில் பயன்படுத்துவதில் விக்கியூடக அனுபவங்கள்

400 அல்லது 800 சொற்கள். செப்டெம்பர் 15 2013 திகதிக்குள். உங்கள் பரிசீலனைக்கும் பங்களிப்புக்கும் நன்றி. --Natkeeran (பேச்சு) 17:11, 18 ஆகத்து 2013 (UTC)Reply

நல்லது.--பாஹிம் (பேச்சு) 17:51, 18 ஆகத்து 2013 (UTC)Reply

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:03, 18 செப்டம்பர் 2013 (UTC)


வரலியா :( --இரவி (பேச்சு) 21:20, 26 செப்டம்பர் 2013 (UTC)
மன்னிக்க வேண்டும், இரவி. சில நாட்களாக சுகவீனமுற்றிருக்கிறேன். வேலைகளைக்கூடச் சரியாகச் செய்ய முடியவில்லை. இப்பொழுதுதான் உங்களது குறிப்பைப் பார்க்கிறேன். தற்போது பயணம் செய்யும் நிலையில் இல்லை. உண்மையிலேயே அதற்காக மிகவும் வருந்துகிறேன். எனினும், மாநாட்டு ஏற்பாடுகள் அல்லது டி-சட்டை போன்ற எதுவும் செய்யப்பட்டிருந்தால் அதற்கான என் பங்களிப்பை இலங்கையிலுள்ள என் உறவினர் யாரின் மூலமாவது இலங்கையிலிருந்து கலந்து கொள்ளும் யாரிடமாவது கொடுக்க ஏற்பாடு செய்யலாம்.--பாஹிம் (பேச்சு) 00:11, 27 செப்டம்பர் 2013 (UTC)

உதுமானியப் பேரரசு தொகு

ஒட்டோமான் பேரரசு தமிழில் உதுமானியப் பேரரசு என்று அழைக்கப்பட காரணம்?--குறும்பன் (பேச்சு) 00:01, 25 செப்டம்பர் 2013 (UTC)

அது அரபுப் பெயர். ஒட்டோமன் என்பது ஆங்கிலமாக்கப்பட்ட பெயர். அத்துடன் பல காலமாகவே உதுமானியப் பேரரசு என்று எழுதப்படுவதைப் பார்த்திருக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 00:13, 27 செப்டம்பர் 2013 (UTC)

நன்றி பாகிம். மாற்றுவதற்கு முன்பு பேச்சுப்பக்கத்தில் ஏன் மாற்றுகிறோம் என்று குறிப்பிட்டால் பின்னால் அக்கட்டுரையை பார்க்கும் மற்றவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். --குறும்பன் (பேச்சு) 00:58, 27 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்... தொகு

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:05, 27 செப்டம்பர் 2013 (UTC)

மெகமுத் தொகு

உதுமானியப் பேரரசன் இரண்டாம் மெகமுதுவை - மெகமுத் என்பதா மெகமத் என்பதா?--குறும்பன் (பேச்சு) 22:31, 27 செப்டம்பர் 2013 (UTC)

முகம்மது எனப்பட வேண்டும்.

Muhammad என்றால் முகம்மது என்கிறோம் Mehmed என்றாலும் முகம்மதுவா? --குறும்பன் (பேச்சு) 23:24, 28 செப்டம்பர் 2013 (UTC)

ஆம். அதுவும் முகம்மது என்றே தமிழில் எழுதப்பட வேண்டும். துருக்கிய வழக்கில் Mehmed என்றும் Mehmet என்றும், சில நாடுகளில் அதையே Muhammad, Muhammed, Mohamed, Mohammed என்றெல்லாம் எழுதுகிறார்கள். Memet என்று கூட சில இடங்களில் சொல்கிறார்கள். தமிழிலும் சிற்சில ஊர்களில் மம்மது, மொம்மது, முகமட், மொகமட், மம என்றெல்லாம் எழுதுவதும் அழைப்பதும் வழக்கத்தில் இருக்கிறது. எனினும், இவற்றுக்கெல்லாம் சரியான தமிழ் வரிவடிவம் "முகம்மது" என்பதேயாகும். மகுமூது என்ற பெயர் இருந்தாலும் அதற்கான வடிவங்கள் வேறு இருக்கின்றன.--பாஹிம் (பேச்சு) 08:29, 29 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டி தொகு

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:52, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

இசுலாம் பிரிவு தொகு

இங்கே கருத்து வழங்க முடியுமா? பேச்சு:சுன்னி இசுலாம் --Anton·٠•●♥Talk♥●•٠· 12:38, 3 நவம்பர் 2013 (UTC)Reply

பதக்கம் தொகு

  சிறந்த உரைதிருத்துனர் பதக்கம்
நுணுக்கமாக கவனித்து உரை திருத்துவதற்காகவும் இலக்கண விதிகளைச் சுட்டிக் காட்டி விளக்குவதற்காகவும் மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். உங்கள் பங்களிப்பு தொடர வாழ்த்துகள். இரவி (பேச்சு) 18:25, 30 சூலை 2014 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம்--AntonTalk 02:14, 1 ஆகத்து 2014 (UTC)Reply

நன்றி இரவி.--பாஹிம் (பேச்சு) 23:58, 30 சூலை 2014 (UTC)Reply

  விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 04:54, 5 ஆகத்து 2014 (UTC)Reply

விக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு தொகு

 
அனைவரும் வருக

வணக்கம் Fahimrazick/2015!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--Mohamed ijazz (பேச்சு) 10:30, 30 திசம்பர் 2014 (UTC)Reply

பாகிம், இந்த மாதம் பட்டையைக் கிளப்புவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் பங்களிப்புகளை வேண்டி :)--இரவி (பேச்சு) 15:33, 11 சனவரி 2015 (UTC)Reply

கட்டுரை நகர்த்தல் காரணம் தொகு

பத்து இலட்சம் மக்கள்தொகை கட்டுரையை ஏன் பத்து இலட்சம் மக்கட்டொகைக்கு நகர்த்தினீர்கள்? - Mohammed Ammar (பேச்சு) 10:57, 9 மார்ச் 2015 (UTC)

மக்கட்டொகை என்பது இலக்கணப்படி சரியாக இருந்தாலும், பயன்பாட்டில் இல்லை மட்டுமல்ல, அவ்வாறு எழுத வேண்டும் என்ற அவசியமும் இல்லை. மக்கட்தொகை அல்லது மக்கள்தொகை என்பதே பயன்பாட்டில் உள்ளது.--Kanags \உரையாடுக 11:24, 9 மார்ச் 2015 (UTC)

மக்கள்தொகை என்பது பிழை. அது மக்கட்டொகை என்றோ மக்கள் தொகை என்று இரு சொற்களிலோ இருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 11:52, 9 மார்ச் 2015 (UTC)

Bahlul Lodi தொகு

Bahlul Lodi என்னும் பெயரின் தமிழ் மொழிபெயர்ப்பு என்ன? பகுல் லெளதி என்பது சரியாக இருக்குமா பாஹிம். --நந்தினிகந்தசாமி (பேச்சு) 04:26, 16 மார்ச் 2015 (UTC)

பஹ்லூல் லௌதி என்றிருக்கிறது. ஆகவே, பகுலூல் லௌதி என்று பெயரிடலாம்.--பாஹிம் (பேச்சு) 04:31, 16 மார்ச் 2015 (UTC)

நன்றி பாஹிம் --நந்தினிகந்தசாமி (பேச்சு) 04:32, 16 மார்ச் 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு தொகு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:48, 7 மே 2015 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு தொகு

 
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:09, 8 சூலை 2015 (UTC)Reply

கிரந்தம் தொகு

பயனர்கள் ஒவ்வொரு கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலும் கிரந்தம் வேண்டும் / வேண்டாம் என்று உரையாடி ஆற்றலை வீணாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இது தொடர்பான என்னுடைய கருத்துகளை இன்றிரவுக்குள் பகிர்ந்து கொள்கிறேன். அது வரைப் பொறுத்திருந்து மற்றவர்கள் தொடரக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 06:45, 25 ஆகத்து 2015 (UTC)Reply

ழ் + ந தொகு

ழ் + ந இயல்புப் புணர்ச்சியாகவே அமையும். வாணாள் என்பது மரூஉ. தமிழ்நாடு என்பதில் தவறில்லை. --மதனாகரன் (பேச்சு) 07:16, 25 ஆகத்து 2015 (UTC)Reply

குறிப்பிடத்தக்கமை தொகு

இங்கு உங்களால் குறிப்பிடத்தக்கமை வார்ப்புரு இணைக்கப்பட்ட கட்டுரைகளில் மேற்கோள்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அக்கட்டுரைகளில் கருத்துத் தெரிவித்தால் மேற்கொண்டு செயல்பட அல்லது மேம்படுத்த உதவியாக இருக்கும். --AntanO 13:36, 14 அக்டோபர் 2015 (UTC)Reply


தரவமைத்தமைக்கு நன்றிகள் தொகு

தோழமைக்கு அடியேனின் அன்பு வணக்கம் "ஹெரத்" என்கிற என் கட்டுரை தலைப்புக்கு, "ஹெறாத்" என்ற சரியான தரவமைத்தமைக்கு நன்றிகள்...  அன்புமுனுசாமி (பேச்சு) 12:43, 3 செப்டம்பர் 2015 (UTC)

தலைப்பு மாற்றல் தொகு

கிளியோபாட்ரா, பெட்ரோல், மெட்ரோ போன்ற பொதுப் பயன்பாட்டில் உள்ள சொற்களை மாற்றுவதற்கு விக்கி சமூகத்திடம் இருந்து (ஆலமரத்தடியிலோ அல்லது வேறு ஒரு பொருத்தமான இடத்திலோ) ஒப்புதல் பெறுங்கள்.--Kanags \உரையாடுக 03:14, 7 நவம்பர் 2015 (UTC)Reply

ஏற்கனவே, இலக்கணக் குற்றமுள்ள இடங்களைத் திருத்தலாமென்று புரிந்துணர்வு நிகழ்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். அப்படி எதுவும் கிடையாதா?--பாஹிம் (பேச்சு) 03:15, 7 நவம்பர் 2015 (UTC)Reply

ஐயம்... தொகு

வணக்கம். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (Depression) என்பது சரியா அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது சரியா? Depression likely to cross TN coast today--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:54, 9 நவம்பர் 2015 (UTC)Reply

நாம் அதனை வெறுமனே தாழமுக்கம் என்கிறோம். உதாரணமாக, வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் நிலவுகிறது.--பாஹிம் (பேச்சு) 16:59, 9 நவம்பர் 2015 (UTC)Reply
நீங்கள் குறிப்பிடும் சொற்றொடரைப் பயன்படுத்துவதாயின் த் சேர்க்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 17:00, 9 நவம்பர் 2015 (UTC)Reply

நன்றி! நான் இன்று கவனித்த தமிழக ஊடகங்கள் அனைத்தும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்றே குறிப்பிட்டுள்ளன! கரையை கடந்தது என்றும் பிழை!

பத்திரிகைக்காரர்களே இப்படித்தான். முன்னர் இலங்கையின் தினகரன், வீரகேசரி போன்றன நற்றமிழில் எழுதின. இப்போது கெட்டு விட்டன. தமிழ் மிரர் போன்றவற்றைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். படு மோசம். பெயரில் தமிழிருந்தாலும் செய்வது தமிழ்க் கொலை. என்ன செய்ய! எங்களது தலைவிதி இத்தகையவற்றைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்பது! உண்மையில் மனம் வெதும்புகிறது.--பாஹிம் (பேச்சு) 17:22, 9 நவம்பர் 2015 (UTC)Reply

பாஹிம் நன்றி. பிரித்தானிய தொல்பொருள் அறிக்கை --கி.மூர்த்தி 03:35, 11 நவம்பர் 2015 (UTC)என்றே மாற்றி விடலாம்.Reply

பாரசீகப் பெயர்கள் தொகு

இங்குள்ள பெயர்கள் சரியானவையான என்பதைப் பாருங்கள்:

--AntanO 16:41, 14 நவம்பர் 2015 (UTC)Reply

கட்டுரைகளில் மாற்றியிருக்கிறேன். முன்னையது நக்ஷே ஜஹான் சதுக்கம், அடுத்தது ஆசாதி கோபுரம். நக்ஷ் என்றால் வடிவம். ஆசாத் என்றால் சுதந்திரம் என்று பொருள். ஆசாத் காஷ்மீர், மௌலானா ஆசாத் போன்ற பெயர்களிலுள்ள பொருளும் இதுவே.--பாஹிம் (பேச்சு) 19:51, 14 நவம்பர் 2015 (UTC)Reply

  நன்றி!--AntanO 20:08, 14 நவம்பர் 2015 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Fahimrazick/2015&oldid=1964437" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Fahimrazick/2015".