சந்தேகம்

தொகு

குறிப்பிட்ட ஒரு நேரத்தில் பல பயனர் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. [1]--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:47, 20 மார்ச் 2017 (UTC)

@Kanags:, @AntanO:, @Aswn:, @Ravidreams:, மேலே குறிப்பிட்ட இடத்தில் பார்க்கவும். சந்தேகமாக உள்ளது.--நந்தகுமார் (பேச்சு) 11:39, 20 மார்ச் 2017 (UTC)
அனேகமாக இவர்களுக்கு தமிழ்க் கணினிப் பயிற்சி கொடுக்கிறார்கள் போல் தெரிகிறது. விக்கிப்பீடியாவில் பயனர் கணக்கு எண்ணிக்கையும் ஒரு தரவு (மைல்கல்) தானே:)--Kanags \உரையாடுக 11:56, 20 மார்ச் 2017 (UTC)
மகிழ்ச்சி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:13, 20 மார்ச் 2017 (UTC)
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 23:55, 20 மார்ச் 2017 (UTC)

ஐயா வணக்கம் எனது பயனர் பக்கத்தில் உள்ள புகைப்படத்தை காணவில்லை எனவே இது மற்றவர்களால் அழிக்கப்பட்டிருக்குமா விகிபீடியா தரப்பில் நீக்கப்பட்டு இருக்குமா என்று சந்தேகம் இராமன் காசம் (பேச்சு) 13:20, 12 ஏப்ரல் 2018 (UTC)

@இராமன் காசம்:, நீங்கள் உங்கள் படத்தினை நீக்கியவரின் பேச்சுப் பக்கத்தில் இங்கு சென்று படம் நீக்கப்பட்டதற்கான காரணத்தைக் கேட்டால் விளக்கமளிப்பார்.--நந்தகுமார் (பேச்சு) 14:08, 12 ஏப்ரல் 2018 (UTC)

வேண்டுகோள்

தொகு

தள அறிவிப்பில் போட்டியின் பரிசுவிபரம் பற்றிக்குறிப்பிட வேண்ட்டுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:05, 31 மார்ச் 2017 (UTC)

பரிசுத் தொகையை விளம்பரப்படுத்துவது ஊக்குவிக்கப்படுவதில்லை. இங்குபாருங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 14:31, 31 மார்ச் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017

தொகு

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:31, 10 ஏப்ரல் 2017 (UTC)

பகுப்பு மாற்றம்

தொகு

வணக்கம் நந்தகுமார், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிவாலயங்கள் என்று பெயரிடப்பட்டுள்ள பகுப்பில் உள்ள கட்டுரைகளை அந்தந்த மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள் என்ற பகுப்பிற்கு மாற்றுவதற்குப் பதில், சிவாலயங்கள் என்றுள்ள பகுப்பின் பெயரை வழிமாற்றின்றி சிவன் கோயில்கள் எனப் பெயர் மாற்றம் செய்தால் (எடுத்துக்காட்டாக, ’ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்’ என்பதை ’ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்’ என வழிமாற்றின்றி நகர்த்தல்) ஏற்கனவே உள்ள கட்டுரைகளும் புதிதாக தானியிங்கி உருவாக்கிய கட்டுரைகளும் ஒரே பகுப்பினுள் அடங்கிவிடுமா? ஒவ்வொன்றாக மாற்றுவது அதிக வேலையாகத் தோன்றுகிறது. --Booradleyp1 (பேச்சு) 16:18, 16 ஏப்ரல் 2017 (UTC)

வணக்கம் பூங்கோதை, சில நேரங்களில் நீங்கள் கூறியவிதம் பகுப்பை நகர்த்தினால் அனைத்துக் கட்டுரைகளும் நகர்த்தப்பட்டுவிடுகின்றன. ஆனால் ஒருமுறை கனக்ஸ் இவ்விதம் செய்யாமல் ஒவ்வொரு கட்டுரையாக நகர்த்த வேண்டும் எனக் கூறியது என் நினைவிலுள்ளது. @Kanags:உங்களுக்கு வேறு கருத்துகள் உள்ளனவா?--நந்தகுமார் (பேச்சு) 16:23, 16 ஏப்ரல் 2017 (UTC)
பூங்கோதை (@Booradleyp1:), பகுப்பை நகர்த்த முயற்சிக்கும்போது கீழ் காணும் செய்தி வருகிறது. எனவே, ஒவ்வொன்றாக மாற்ற வேண்டும் அல்லது தானியங்கி கொண்டு மாற்றலாம் என எண்ணுகிறேன். @Aswn:, @Kalaiarasy: அசுவின், கலை உதவக்கூடும்.--நந்தகுமார் (பேச்சு) 17:00, 16 ஏப்ரல் 2017 (UTC)

Warning: You are about to move a category page. Please note that only the page will be moved and any pages in the old category will not be recategorized into the new one.

ஆம், அனைத்துக் கட்டுரைகளிலும் பழைய பகுப்பு நீக்கப்பட்டு புதிய பகுப்பு சேர்க்கப்பட வேண்டும். அதன் பின்னர் பழைய பகுப்பை புதிய பகுப்பிற்கு வழிமாற்றின்றி மாற்றலாம். ஒரு பகுப்பில் மிக அதிகமான கட்டுரைகள் இருந்தால் அவற்றை தானியங்கி அணுக்கம் உள்ளவர்களால் மாற்றுவது நல்லது.--Kanags \உரையாடுக 22:12, 16 ஏப்ரல் 2017 (UTC)
@Nan:, @Kanags: வழிகாட்டலுக்கு நன்றி.
தானியிங்கி கோயில் கட்டுரைகளில்

”---- மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்” பகுப்பை உருவாக்கி விட்டு, ”----- மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்” பகுப்பில் சிறியளவில் கட்டுரைகள் இருந்தால் அவற்றில் பழைய பகுப்பை நீக்கி புதுப் பகுப்பை சேர்த்துவிட்டு பழைய பகுப்பில் வழிமாற்றுமாறு வேண்டுகோள் அல்லது வார்ப்புரு இட்டு விடுகிறேன்; நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் இருப்பின் தானியிங்கி இயக்க முடிந்தவர்களிடம் உதவியை நாடலாம்.

”---- மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்” பகுப்பிற்கான தாய்ப் பகுப்புகளிலும் இதே சிக்கல் வருமென நினைக்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 04:40, 17 ஏப்ரல் 2017 (UTC)
சிக்கலொன்றும் இல்லை. பழைய பகுப்புகளை பின்னர் மாற்றலாம். இனிமேல் உருவாக்கும் பகுப்புகளை சரியான தலைப்பில் வையுங்கள்.--Kanags \உரையாடுக 05:00, 17 ஏப்ரல் 2017 (UTC)
  • மிக அதிகமான கட்டுரைகள் இருக்கும் நிலையில் தானியங்கி மூலம் மாற்றுவது மிகவும் இலகுவானதே, ஆனால் ஏதோ சில காரணங்களால், எனது தானியங்கிக்குள் என்னால் உட்செல்ல முடியாமல் உள்ளது. @Neechalkaran: உதவியை நாடியுள்ளேன். முடிந்தால் அதனைப் பயன்படுத்தலாம்.--கலை (பேச்சு) 08:12, 17 ஏப்ரல் 2017 (UTC)
  • @Booradleyp1: இதன் நோக்கம் சிவாலயங்கள் என்பதை சிவன் கோயில்கள் என்று மாற்றுவதுதானா? அவ்வாறாயின் பகுப்பு:நாடுகள் வாரியாக சிவாலயங்கள், பகுப்பு:இந்தியாவில் உள்ள சிவாலயங்கள் என்பவற்றிலும் அதே மாற்றங்கள் தேவையா? அதாவது பகுப்பு:நாடுகள் வாரியாக சிவன் கோயில்கள், பகுப்பு:இந்தியாவில் உள்ள சிவன் கோயில்கள் என்ற பகுப்புகளுக்கு மாற்ற வேண்டுமா? அனைத்தையும் மாற்றிய பின்னர், பகுப்பு:நாடுகள் வாரியாக சிவாலயங்கள், பகுப்பு:இந்தியாவில் உள்ள சிவாலயங்கள் என்பவற்றை நீக்க வேண்டுமா? பகுப்பு:பிஜியில் உள்ள சிவாலயங்கள் பக்கம் வெறுமையாக உள்ளதே காரணம் ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டுவிட்டதா? அவ்வாறாயின் எங்கே? பகுப்பு:பிஜியில் உள்ள சிவன் கோயில்கள் என்று தேடும்போதும் வரவில்லை. பகுப்பு:ஆத்திரேலியாவில் உள்ள சிவாலயங்கள் பக்கத்தில் மூன்று கட்டுரைகளே உள்ளன. அவற்றை பகுப்பு:ஆத்திரேலியாவில் உள்ள சிவன் கோயில்கள் என்ற பகுப்புக்கு மாற்றிவிட்டு, பகுப்பு:ஆத்திரேலியாவில் உள்ள சிவாலயங்கள் பக்கத்தை நீக்க வேண்டும். சரிதானா? தவறாக எதனையும் செய்துவிடாமல் இருக்கத்தான் இத்தனை கேள்விகள்  . --கலை (பேச்சு) 08:43, 17 ஏப்ரல் 2017 (UTC)
ஆம், சிவாலயங்கள் என உள்ள அனைத்துப் பகுப்புகளும் சிவன் கோயில்கள் என மாற்ற வேண்டும். இவற்றை நேரம் கிடைக்கும் போது மாற்றலாம். தேவையானால் புதிதாக பகுப்புகள் உருவாக்கலாம். பயனர்:AntanO ஏற்கனவே தனது தானியங்கிக் கணக்கு மூலம் மாற்றி வருகிறார். எனவே அவரிடமே இப்பணியை விட்டு விடலாம்.--Kanags \உரையாடுக 09:43, 17 ஏப்ரல் 2017 (UTC)
சரி Kanags. எனது தானியங்கியின் உள்ளே நுழைவதில் பிரச்சனை தொடர்கிறது. எனவே அன்ரனே இந்தப் பணியைச் செய்யட்டும். எனது தானியங்கி இயங்கத் தொடங்கினால், நானும் உதவலாம். நன்றி--கலை (பேச்சு) 10:03, 17 ஏப்ரல் 2017 (UTC)
பகுப்பு:நாடுகள் வாரியாக சிவன் கோயில்கள் என்பதில் இருந்த இலங்கை, கம்போடியா, ஆத்திரேலியா பகுப்புக்களில் குறைவான கட்டுரைகளே இருந்தன. அவை அனைத்தையும் மாற்றிவிட்டேன். தற்போது, இந்தியாவில் உள்ள சிவன் கோயில்கள் பகுப்புக்கே மாற்றம் தேவை.@Kanags:,@Booradleyp1:,@AntanO:.--கலை (பேச்சு) 12:07, 17 ஏப்ரல் 2017 (UTC)

நந்தகுமார், விரைவுப் பகுப்பியில் காணும் ± குறியைத் தேர்ந்தெடுத்து ஒரே தொகுப்பில் ஏற்கனவே உள்ள பகுப்புக்குப் பதில் புது பகுப்பை இணைக்கலாமே, காலமும் வேலையும் மிச்சப்படும். --Booradleyp1 (பேச்சு) 15:07, 17 ஏப்ரல் 2017 (UTC)

நன்றி பூங்கோதை. இதை (± குறியை) நான் முன்னர் கவனிக்கவில்லை.--நந்தகுமார் (பேச்சு) 15:09, 17 ஏப்ரல் 2017 (UTC)

15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்பு

தொகு

அருள்கூர்ந்து இங்கு உங்கள் கருத்துக்களினை இட வேண்டுகின்றேன். உங்கள் பதில்கள் எம் விக்கியின் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க உதவியாக அமையும். தாங்கள் நிச்சயம் கருத்திடுவீர்கள் என நம்புகின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:12, 26 ஏப்ரல் 2017 (UTC)

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!

தொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:03, 30 ஏப்ரல் 2017 (UTC)

நீக்கல்

தொகு

தற்போது கட்டுரைகளை நீக்க வேன்டாம், விரிவாக்கிவிடுவேன், உடனே--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:11, 8 மே 2017 (UTC)Reply

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

தொகு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு

தொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:57, 21 மே 2017 (UTC)Reply

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

தொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:31, 31 மே 2017 (UTC)Reply

கவனிக்க

தொகு

பயிற்சி ஆசிரியர்கள் சிலர் தமது கட்டுரைகளை முதலில் தமது மணல்தொட்டியில் எழுதி விட்டு பின்னர் பொதுவெளிக்கு மாற்றுகிறார்கள். இவ்வாறான கட்டுரைகளைக் காணும் போது அக்கட்டுரைகளுக்கு cleanup May 2017 என்ற வார்ப்புருவை மறக்காமல் இணைத்து விடுங்கள். வழிமாற்றுகளையும் நீக்கி விடுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 00:23, 3 சூன் 2017 (UTC)Reply

உதவி...

தொகு

வணக்கம். பகுப்பு பேச்சு:துப்புரவு தேவைப்படும் மே 2017 கட்டுரைகள்#இணைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்டுரைகள் என்பதனைக் கவனித்து, தங்களால் இயன்ற பங்களிப்பினை தர வேண்டுகிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:54, 4 சூன் 2017 (UTC)Reply

ஐயா வணக்கம் எனது பெயர் இராமன் விக்கிபீடியா வில் புதிய பயனர் நான். நீற்று நான் புதிய கட்டுரை ஒன்றை வடிவமைத்தேன் (இராமன் காசம்) என்ற தலைப்பில் அதை ஏன் நீங்கள் நீக்குநீர்கள் என்று தெரியவில்லை காரணம் சொல்லுங்களேன் ஐயா. இராமன் காசம் (பேச்சு) 13:37, 17 மார்ச் 2018 (UTC)

@இராமன் காசம்:, வணக்கம் இராமன். நீங்களே உங்களைக் குறித்து கட்டுரை எழுதுவது விக்கிப்பீடியாவில் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, நீங்கள் உங்களைக் குறித்து எழுதியுள்ள கட்டுரையை உங்கள் பயனர் பக்கத்திற்கு நகர்த்தியுள்ளேன்.--நந்தகுமார் (பேச்சு) 15:19, 17 மார்ச் 2018 (UTC)
நன்றி ஐயா .விக்கிப்பீடியாவிற்கு நான் புதிது என்பதால் கட்டுரைகளை எப்படி சிறப்பாக வடிவமைப்பது  எத்தனை பார்த்து கற்றுக்கொள்வது. இராமன் காசம் (பேச்சு) 15:42, 17 மார்ச் 2018 (UTC)

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

தொகு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

தொகு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

வேண்டுகோள்...

தொகு

வணக்கம். உங்களின் அனுபவங்களையும், நீங்கள் மற்றவர்களுக்கு தெரிவிக்க விரும்பும் உதவிக் குறிப்புகளையும் விக்கிப்பீடியா பேச்சு:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/கட்டுரைகளை மேம்படுத்துதல் எனும் பக்கத்தில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:43, 4 சூலை 2017 (UTC)Reply

உதவி தேவை

தொகு

நந்தகுமார் அய்யா அவர்களுக்கு வணக்கம்; விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நெற்களஞ்சியம் எனும் திட்டம் தொடங்கியுள்ளேன், அத்திட்டத்தின் நோக்கம் யாதெனில், உலகளாவிய நெல்வகைகளை கண்டறிந்து நாடுகள் வாரியாகவும், மாநிலங்கள் வாரியாகவும், பாரம்பரிய மற்றும் புதிய இரகங்கள் வாரியாகவும் பட்டியலிட்டு கட்டுரைகளாக உருவாக்கும் நோக்கமுள்ளது. மூத்த விக்கிபீடியர், மற்றும் அனுபவமிக்கவரான தாங்கள், இத்திட்டத்திற்கான அறிவுரையும், ஆலோசனையும் வழங்குபடியும், மேலும் அத்திட்டத்திற்கான வார்ப்புருக்களும், வழிகாட்டுதலும் வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.நன்றிகள்...--அன்பு முனுசாமி 04:20. 30 சூலை 2017 (UTC)

ஐயா வணக்கம், நான் புதிய பயனர், நான் உருவாக்கும் கட்டுரைகளுக்கு பிற மொழி (விக்கித்தரவு) இணைப்பது எவ்வாறு என்று எனக்கு உதவுங்கள். --தே.நீதிதாஸ் (பேச்சு) 5 நவம்பர் 2017 (UTC)

@TNSE NEETHI VPM:, தே.நீதிதாஸ்,

புதிதாக உருவாக்கிய கட்டுரைகளை எவ்வாறு விக்கித்தரவில் இணைப்பது

தொகு
  1. புதிதாக உருவாக்கிய கட்டுரைப் பக்கத்தை உங்கள் உலாவியில் திறந்துகொள்ளுங்கள்.
  2. கட்டுரையில் இடப்பக்கம் பல சுட்டிகள் இருக்கும்.
  3. அவற்றில் கடைசியாக உள்ள Languages என்பதன் கீழ் உள்ள Add links என்பதைச் செடுக்குங்கள்.
  4. அடுத்துவரும் பெட்டியில் Language என்பதில் குறிப்பிட்ட மொழியின் குறியீட்டைக் கொடுக்கவும். எ.கா: ஆங்கிலமாயின் en / EN என உள்ளீடு செய்ய வேண்டும்.
  5. அடுத்து, Page என்பதில் ஆங்கிலக் கட்டுரையின் பெயரை உள்ளீடு செய்யுங்கள். பின்பு "Link with page" என்பதை அழுத்தவும்.
  6. அதன் பின், கட்டுரையின் பெயர் சரியாக உள்ளதா எனப்பார்த்து Confirm என்பதையும்.
  7. பின் Close dialog and reload page என்பதையும் அழுத்தவும்.

வணக்கம் ஐயா நான் உருவாக்கியுள்ள இந்த பக்கத்தில் என்ன தப்பு இருக்கறது என்று எனக்கு புரியவில்லை நான் தகவலை சேகரித்தால் தாங்கள் அதை எடுத்து விடுகிறீர்கள் அது எனக்கு ஏன் என்று புரியவில்லை தயவுகூர்ந்து என்னோட பக்கத்தில் யாதும் பிழை இருந்தால் திருத்தங்கள் தகவலையடுத்து விடாதீர்கள் தயவுசெய்து. Karthick BE (பேச்சு) 03:29, 15 அக்டோபர் 2017 (UTC)Reply

ஐயா நான் என்னுடைய ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாறு படைத்துள்ளேன் அதை அவர்கள் தமிழ் வலியின் மூலமே காண முடியும் அதனால் தாங்கள் என்னுடைய பக்கத்தில் இருப்பதை நீக்க வேண்டாம் என்று தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன். அடுமட்டுமல்லமல் என்னோட பக்கம் அனைத்திருக்கு செரியான சான்று உள்ளது. நன்றி ஐயா Karthick BE (பேச்சு) 03:35, 15 அக்டோபர் 2017 (UTC)Reply

மதிப்பிற்குரிய ஐயா

தொகு

ஐயா நான் என்னுடைய பிழைகளை திருத்தி விட்டேன் நன்றி. தயவுகூர்ந்து வரலாற்றை எடுத்து விட வேண்டாம் நன்றி Karthick BE (பேச்சு) 05:37, 15 அக்டோபர் 2017 (UTC)Reply

இணைப்பு வேண்டுகோள்

தொகு

வணக்கம் நந்தகுமார், ஈ எம் நுண்ணுயிர்கள் கட்டுரையை திறன்மிகு நுண்ணுயிரி கட்டுரையை முதன்மையாக்கி இணைத்துவிடவும் நன்றி--அருளரசன் (பேச்சு) 13:38, 17 அக்டோபர் 2017 (UTC)Reply

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 13:47, 17 அக்டோபர் 2017 (UTC)Reply

நன்றி நந்தகுமார் அவ்வாறே உவர்ப்பியம் கட்டுரையை உவர்ப்புத் தன்மை கட்டுரையை முதன்மையாக்கி இணைத்துவிடவும் நன்றி --Arulghsr (பேச்சு) 13:57, 17 அக்டோபர் 2017 (UTC)Reply

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 23:54, 17 அக்டோபர் 2017 (UTC)Reply

நன்றி நந்தகுமார் அவ்வாறே எருக்கன் செடி கட்டுரையை எருக்கு கட்டுரையை முதன்மையாக்கி இணைக்கவும், அவ்வாறே கல்லுருவி கட்டுரையை நீர்மேல் நெருப்பு கட்டுரையை முதன்மையாக்கி இணைக்க வேண்டுகிறேன் நன்றி--அருளரசன் (பேச்சு) 04:27, 18 அக்டோபர் 2017 (UTC)Reply

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 05:15, 18 அக்டோபர் 2017 (UTC)Reply

நன்றி குழந்தைகளின் அடிப்படை உாிமைகள் கட்டுரையை குழந்தைகளின் உரிமைகள் கட்டுரையை முதன்மையாக்கி இணைத்துவடவும் நன்றி அருளரசன்

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 06:07, 18 அக்டோபர் 2017 (UTC)Reply

நன்றி குழந்தைப் பாடல்கள் கட்டுரையை தாலாட்டுப் பாடல் கட்டுரையை முதன்மையாக்கி வழிமாற்றின்றி இணைத்து விடவும் ஏனொன்றால் குழந்தைப் பாடல்கள் என்பது தாலாட்டைக் குறிக்காது நன்றி--Arulghsr (பேச்சு) 06:31, 18 அக்டோபர் 2017 (UTC)Reply

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 06:40, 18 அக்டோபர் 2017 (UTC)Reply

நன்றி சு.சந்திரசேகர் விஞ்ஞானி கண்டுபிடிப்பு கட்டுரையை சுப்பிரமணியன் சந்திரசேகர் கட்டுரையுடன் இணைத்து விடுங்கள். அப்படியே டால்டனின் அணுக் கோட்பாடு கட்டுரையை அணுக் கோட்பாடு கட்டுரையுடன் இணைத்து விடுங்கள் நன்றி--Arulghsr (பேச்சு) 12:39, 19 அக்டோபர் 2017 (UTC)Reply

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 13:05, 19 அக்டோபர் 2017 (UTC)Reply

நன்றி தருமபுாி தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறை கட்டுரையை தமிழ் நாடு தீயணைப்பு மீட்பு சேவை என்ற கட்டுரையுடன் இணைத்து உதவுங்கள் நன்றி--அருளரசன்

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 14:19, 19 அக்டோபர் 2017 (UTC)Reply

நன்றி ஜாம் தயாரித்தல் கட்டுரையை பழப்பாகு கட்டுரையுடனும், வெங்கட்ரமண ஸ்வாமி கோவில் கட்டுரையை மணியம்பாடி வெங்கட்ரமண சுவாமி கோயில் கட்டுரையுடனும் இணைத்துவிடவும் நன்றி--அருளரசன் (பேச்சு) 13:45, 21 அக்டோபர் 2017 (UTC)Reply

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 00:03, 22 அக்டோபர் 2017 (UTC)Reply

நன்றி நந்தகுமார் மத்திகிரி கால்நடைப்பண்ணை கட்டுரையை மாவட்ட கால்நடை பண்ணை (ஒசூர்) என்ற கட்டுரையுடன் இணைத்து உதவிடுங்கள் நன்றி--Arulghsr (பேச்சு) 13:39, 23 அக்டோபர் 2017 (UTC)Reply

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 13:53, 23 அக்டோபர் 2017 (UTC)Reply

நன்றி நந்தகுமார் பேராழி நீரோட்டங்கள் கட்டுரையை பெருங்கடல் நீரோட்டம் என்ற கட்டுரையுடனும், மல்லப்பாடி குகை ஓவியம் என்ற கட்டுரையை மல்லபாடி பாறை ஓவியங்கள் என்ற கட்டுரையுடனும், மார்கழி மாத குளிர் கட்டுரையை மார்கழி கட்டுரையுடனும் இணைத்து உதவுங்கள்--அருளரசன் (பேச்சு) 13:23, 24 அக்டோபர் 2017 (UTC)Reply

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 13:56, 24 அக்டோபர் 2017 (UTC)Reply

இணைத்ததற்கு நன்றி அப்படியே மின் உருகி கட்டுரையை உருகுக்கம்பி கட்டுரையுடன் இணைத்து உதவுங்கள் --அருளரசன்

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 14:06, 24 அக்டோபர் 2017 (UTC)Reply

மிக்க நன்றி அப்படியே பையூர் மண்டல ஆராய்ச்சி மையம் கட்டுரையை பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம் என்ற கட்டுரையுடன் இணைத்து உதவிடுங்கள் --அருளரசன்

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 20:16, 24 அக்டோபர் 2017 (UTC)Reply

நன்றி விளையாட்டு பாடல்கள் கட்டுரையை விளையாட்டுப் பாடல் கட்டுரையுடன் இணைத்து உதவிடுங்கள் நன்றி--Arulghsr (பேச்சு) 12:12, 26 அக்டோபர் 2017 (UTC)Reply

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 13:18, 26 அக்டோபர் 2017 (UTC)Reply

நன்றி ந்ந்தகுமார் பேரிகை, கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற கட்டுரையை பேரிகை (ஊர்) என்ற கட்டுரையுடன் இணைத்தும், மெய்நிகர் உண்மை கட்டுரையை தோற்ற மெய்ம்மை என்ற கட்டுரையுடன் இணைத்து உதவிடுங்கள்--அருளரசன் (பேச்சு) 13:45, 27 அக்டோபர் 2017 (UTC)Reply

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 14:27, 27 அக்டோபர் 2017 (UTC)Reply

நன்றி அப்படியே மொழியியல் – இலக்கியக் கூறுகள் என்ற கட்டுரையை ஊர்ப் பெயரின் பொதுக்கூற்று வடிவங்கள் என்ற கட்டுரையில் வழிமாற்று இன்றி இணைத்து உதவிடுங்கள் நன்றி--அருளரசன்

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 00:46, 28 அக்டோபர் 2017 (UTC)Reply

நன்றி சந்தாரா என்னும் கட்டுரையை சல்லேகனை என்ற கட்டுரையுடன் இணைத்து உதவுங்கள்--Arulghsr (பேச்சு) 03:27, 30 அக்டோபர் 2017 (UTC)Reply

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 01:21, 31 அக்டோபர் 2017 (UTC)Reply

நன்றி தியாகி விஸ்வநாததாஸ் கட்டுரையை விஸ்வநாத தாஸ் கட்டுரையுடனும், பெயர் சூட்டுவிழா கட்டுரையை குழந்தைக்குப் பெயர் வைத்தல் கட்டுரையுடனும், நாக்கு கட்டுரையுடன் பல்லி நாக்கு கட்டுரையுடனும், சங்கு கட்டுரையுடன் சங்கும் சோழியும் கட்டுரையுடனும், விதை உற்பத்தி என்ற கட்டுரையுடன் விதை சுத்தம் செய்தல் என்ற கட்டுரையை இணைத்து உதவுங்கள்--அருளரசன் (பேச்சு) 04:30, 11 நவம்பர் 2017 (UTC)Reply

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 08:52, 12 நவம்பர் 2017 (UTC)Reply

வணக்கம் நந்தகுமார் ஆட்டுச் சண்டை கட்டுரையை தகர்ச்சண்டை கட்டுரையில் வெட்டி ஒட்டியுள்ளேன் இரண்டு கட்டுரைகளையும் இணைத்துவிடவும். ஆட்டுச் சண்டை என்ற பெயரை முதன்மையாகவும், தகர்ச்சண்டை என்ற பெயரை வழிமாற்றாவும் வைக்கலாம் என கருதுகிறேன் நன்றி--அருளரசன் (பேச்சு) 04:45, 30 சூலை 2018 (UTC)Reply

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 05:09, 30 சூலை 2018 (UTC)Reply

@Arulghsr:, please follow this procedure. Some requests could be discussed / opposed. --AntanO (பேச்சு) 12:20, 12 நவம்பர் 2017 (UTC)Reply

கட்டுரைகளை ஒன்றிணைத்த நந்தகுமாருக்கு நன்றி AntanO எனக்கு நீக்கல் அணுக்கம் இல்லாத காரணத்தால் இரண்டு கட்டுரைகளில் இணைக்க வேண்டிய கட்டுரையை ஒட்டி அதை முதன்மைக கட்டுரையில் ஒட்டி இணைப்பு கோரிக்கை விடுக்கிறேன் எதாகினும் பிழை நேர்ந்திருந்தால் அது என்னவென்று குறிப்பிட்டால் திருத்திக் கொள்வேன் நன்றி --Arulghsr (பேச்சு) 12:36, 14 நவம்பர் 2017 (UTC)Reply

வணக்கம் நந்தகுமார் செ. மாதவன் கட்டுரையையின் பகுதிகளை எசு. மாதவன் கட்டுரையில் எடுத்து ஒட்டியுள்ளேன் இரு கட்டுரைகளையும் இணைத்து செ. மாதவன் பெயரில் கட்டுரையை ஆக்கிவிடுங்கள் நன்றி--அருளரசன் (பேச்சு) 13:10, 15 சூலை 2018 (UTC)Reply

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 13:24, 15 சூலை 2018 (UTC)Reply

SiteNotice இல் மாற்றம்

தொகு

'தொடர்பங்களிப்பாளர் போட்டி தொடங்கியுள்ளது. பங்குபெற வாருங்கள்!' என்று Site Notice இல் உள்ள வாசகத்தை ஏற்றாற்போல மாற்றியமைக்க வேண்டும். போட்டி இன்னும் ஒருசில நாட்களில் முடிய உள்ளது. ஆனால் Site Notice இல் பொருத்தமே இல்லாத வாக்க்கியம் காணப்படுகின்றது. தருணத்திற்கு ஏற்றாற் போல வாக்கியம் ஒன்றை அமைத்து அத்னை மாற்றிவிட தயவாக வேண்டுகின்றேன். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:05, 18 அக்டோபர் 2017 (UTC)Reply

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 11:38, 18 அக்டோபர் 2017 (UTC)Reply

ஐயா வணக்கம் உதவி வேணும்

தொகு
என்னுடைய தமிழ் கட்டுரையை ஆங்கிலச் கட்டுரையுடன் இணைக்க வேண்டும். 

எம். என். எத்திராஜ் வண்ணார் (https://ta.m.wikipedia.org/wiki/எம்._என்._எத்திராஜ்_வண்ணார்) இணைக்க வேண்டிய பக்கம் M. N. Ethiraj Vannar (https://en.m.wikipedia.org/wiki/M._N._Ethiraj_Vannar) இதை தாங்கள் மாற்றம் செய்து தர வேண்டும் ஐயா நன்றி. Karthick BE (பேச்சு) 02:50, 19 அக்டோபர் 2017 (UTC)Reply

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 06:37, 19 அக்டோபர் 2017 (UTC)Reply
@Karthick BE: உரையாடல் பக்கத்தில் உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். நன்றி.--Kanags (பேச்சு) 07:07, 19 அக்டோபர் 2017 (UTC)Reply

ஐயா மன்னிக்கவும் இன்னும் yennudaiya எம். என். எத்திராஜ் வண்ணார் பக்கத்தில் ஆங்கிலச் விக்கிப்பீடியாவின் M. N. Ethiraj Vannar லிங்க் வரவில்லை என்ன காரணம் ஐயா. எம். என். எத்திராஜ் வண்ணார் விக்கிப்பீடியாவில் நான் தற்போது எத்தனை மொழியில் இந்த article உள்ளது என பார்த்தேன் ஆனால் அது ஆங்கிலச் விக்கிப்பீடியா மொழியில் சேர்ந்த மாதிரி தெரியவில்லை ஐயா.

Karthick BE (பேச்சு) 09:08, 19 அக்டோபர் 2017 (UTC)Reply

ஆசிய மாதம் பங்கேற்பாளர்கள் பக்கம் =

தொகு

வணக்கம், ஆசிய மாதம் பங்கேற்பாளர்கள் பக்கத்தினை மீளமை செய்து, அதிலுள்ள தேவையற்ற பதிவுகளை மட்டும் நீக்கவும். நன்றி. நிருவாக அணுக்கம் இல்லாததால் என்னால் அதை செய்ய இயலாது. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:37, 7 நவம்பர் 2017 (UTC)Reply

வணக்கம். மன்னிக்கவும். பக்க வரலாற்றை கவனிக்கவில்லை. ஆன்டன் மீளமை செய்துள்ளார்.--நந்தகுமார் (பேச்சு) 03:49, 8 நவம்பர் 2017 (UTC)Reply

வேண்டுகோள்

தொகு

வணக்கம். பா. அ. ஜயகரன் - இக்கட்டுரை விளக்கும் நபரும், கட்டுரையை உருவாக்கியவரும் ஒருவராக உள்ளனர். கவனித்து ஆவன செய்யுமாறு கேட்டுகொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 03:57, 22 நவம்பர் 2017 (UTC)Reply

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 13:39, 22 நவம்பர் 2017 (UTC)Reply
கட்டுரையை விக்கித் தரவில் இணைத்த பின்னரும் ஆ.வி கட்டுரையில் தமிழ் இணைப்பு தெரியவில்லை. சரிசெய்யவும்--கி.மூர்த்தி (பேச்சு) 02:25, 26 நவம்பர் 2017 (UTC)Reply
ஆ.வி கட்டுரையில் தமிழ் இணைப்பு சரியாகிவிட்டது.--நந்தகுமார் (பேச்சு) 13:27, 26 நவம்பர் 2017 (UTC)Reply
தைட்டனோசென் பெண்டாசல்பைடு கட்டுரையை விக்கித் தரவில் இணைத்த பின்னரும் ஆ.வி கட்டுரையில் தமிழ் இணைப்பு தெரியவில்லை. கவனிக்கவும் --கி.மூர்த்தி (பேச்சு) 01:55, 16 திசம்பர் 2017 (UTC)Reply

Invitation to Blocking tools consultation

தொகு

Hello,

The Wikimedia Foundation's Anti-Harassment Tools team is inviting all Wikimedians to discuss new blocking tools and improvements to existing blocking tools in December 2017 for development work in early 2018.

We are specifically contacting you for your ideas because you are one of the top users of the blocking tool on ta Wikipedia. We think that your comments will help us make better improvements. You can post to the discussion in the language that you are most comfortable expressing your ideas.

Other ways that you can help

தொகு
  1. Spread the word that the consultation is happening; this is an important discussion for making decisions about improving the blocking tools.
  2. Help with translation.
  3. If you know of current or previous discussions about blocking tools that happened on your wiki, share the links.
  4. Help summarize the discussion to share back to your wiki.

If you have questions you can contact me on wiki or send an email to the Anti-Harassment Tools team.

For the Anti-Harassment Tools team, SPoore (WMF), Community Advocate, Community health initiative (talk) 20:55, 18 திசம்பர் 2017 (UTC)Reply

  • I apologize for posting in English.
  • Please let us know if you wish to opt-out of all massmessage mailings from the Anti-harassment tools team.

உதவி

தொகு

இட்ரியம் ஆக்சைடு என்ற கட்டுரையை இட்ரியம்III) ஆக்சைடு என்ற தலைப்புக்கு நகர்த்த உதவி செய்யவும்--கி.மூர்த்தி (பேச்சு) 16:32, 19 திசம்பர் 2017 (UTC)Reply

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 06:00, 20 திசம்பர் 2017 (UTC)Reply

Reminder about Blocking consultation

தொகு

Hello again,

The discussion about new blocking tools and improvements to existing blocking tools is happening on meta now and is in the final days.

We contacted you because you are one of the top users of the blocking tool on this wiki. We think that your comments will help us make better improvements. There is still time to share your ideas. You can post to the discussion in any language.

Thank you if you have already shared your thoughts. You can also help out by sharing a link to the meta discussion with users on this wiki. Or you can translate the summary of the discussion and share it on this wiki.

If you have questions you can contact me on wiki or by email.

  • I apologize for posting in English.

For the Anti-Harassment Tools team, SPoore (WMF), Community Advocate, Community health initiative (talk) 22:52, 16 சனவரி 2018 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்

தொகு

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 09:34, 18 பெப்ரவரி 2018 (UTC)

கட்டுரையை நீக்குக

தொகு

தமிழக முன்னேற்ற கழகம் இந்த பெயருடைய தலைப்பில் தமிழ்நாட்டில் ஒரு கட்சியே கிடையாது. தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இந்த பெயருடைய கட்சிய தான் அங்கு தவறுதலாக கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த கட்டுரையை நீக்குக ... . Gowtham Sampath (பேச்சு) 15:40, 26 பெப்ரவரி 2018 (UTC)

மராட்டி / மராத்தி

தொகு

வணக்கம் சார்,

ஆங்கிலத்தில் Marathi என்று எழுதுவார்கள். அதோட தமிழாக்கம்தான் ‘மராத்தி’ என்று ஆகிறது. ஆனால் ‘மராத்தி’ என்று எழுதுவதும், அப்படி உச்சரிப்பதும் தவறுதான். ஏனென்றால், அம்மொழியின் நிஜப் பெயர் ‘மராட்ஹீ’ என்பதாகும். மராட்டி பேசுபவர்களை கேட்டால், அவர் தமது மொழியின் பெயர் ‘மராட்ஹீ’ என்றுதான் சொல்வார்கள். ஏன் ஆங்கிலத்தை இங்கும் இடைவாதியாக்க விடவேண்டும்? https://www.facebook.com/nchokkan/posts/10154628603608292 https://www.facebook.com/nchokkan/posts/10150196055793292

Karyakarta (பேச்சு) 08:23, 20 மார்ச் 2018 (UTC)

வணக்கம். இங்கு பார்க்கவும்.--நந்தகுமார் (பேச்சு) 09:05, 20 மார்ச் 2018 (UTC)

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

தொகு

அன்புள்ள நந்தகுமார்,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது தான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படு்ம் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாக்கச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேச்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில் நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன் மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியில் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழ வாய்ப்பாகவும் அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். இங்கு காணப்படும் தலைப்புகள் யாவும் தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் தேடி ஆங்கில விக்கிப்பீடியாவில் படிக்கப்படும் பக்கங்கள். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தல் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதலாகப் பல புதிய வாசகர்களும் பங்களிப்பாளர்களும் கிடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், அறிவியல், நுட்பம், நல வாழ்வு, பெண்கள் என்று இன்னும் பல்வேறு துறைகளில் கூடுதல் தலைப்புகளைப் பெற முயன்று கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமைய போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி. --இரவி (பேச்சு) 09:39, 10 மார்ச் 2018 (UTC)

@Ravidreams:. வணக்கம் இரவி. கட்டுரைத் தலைப்புகள் எனக்கு ஆர்வம் கொடுப்பவையாக இல்லை. ஆங்கிலத்தில் இத்தலைப்பில் தேடுவதாலேயே நம் தமிழ் சமூகத்திற்கு இத்தலைப்புகள் பயன்தரக்கூடியவையா என்பது கேள்விக்குறியே. தலைப்புகள் நம் சமூகம் சார்ந்தது இருக்கவேண்டும் என எண்ணுகிறேன். நம் மாணவர்களுக்கு, பொது பயனானிகளுக்குப் பயன்பட்டால் வேறு தலைப்புகளில் பங்களிக்கலாம். கொடுக்கப்பட்டுள்ளத் தலைப்புகள் தேடுபொறியில் அதிகம் வருவதாலேயே இத்தலைப்புகளை முதன்மையானதாகக் கருதலாமா? முயற்சிக்கு வாழ்த்துகள். என் கருத்தை பதிவு செய்யவே இதை எழுதுகிறேன். தங்கள் அழைப்பிற்கு நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 12:50, 10 மார்ச் 2018 (UTC)
வணக்கம். கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைப் பற்றிய உங்கள் கருத்து முற்றிலும் சரியே. இது போன்ற திட்டங்களைச் செயற்படுத்துவதில் உள்ள சிக்கலாக நான் குறிப்பிட்டதில் தலைப்புகளைத் தேர்ந்தெடுப்பது குறித்த சிக்கலும் அடங்கும். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியின் கீழ், ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். போட்டியில் கலந்து கொண்டு திட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 11:41, 13 மார்ச் 2018 (UTC)

Share your experience and feedback as a Wikimedian in this global survey

தொகு
WMF Surveys, 18:19, 29 மார்ச் 2018 (UTC)

Reminder: Share your feedback in this Wikimedia survey

தொகு
WMF Surveys, 01:17, 13 ஏப்ரல் 2018 (UTC)

Thank you for deleting the pages that I've tagged as delete|இல்லை கலைக்கலமஞ்சியம். --Cyrus noto3at bulaga என்னிடம் பேசு 09:52, 13 ஏப்ரல் 2018 (UTC)

உதவி

தொகு

வணக்கம். மக்னீசியம் சல்பேட்டு என்ற கட்டுரையை கவனிக்கவும். இடைவெளியைக் குறைக்க உதவி தேவை. அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 17:09, 12 மே 2018 (UTC)Reply

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey

தொகு
WMF Surveys, 00:27, 20 ஏப்ரல் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறது

தொகு

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவோர் அனைவருக்கும் பொதுவான செய்தி.

நேற்று (சனி) அனைவரும் அயராது கட்டுரைகளை அளித்ததில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் பஞ்சாபியை முந்தி இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் - 981. பஞ்சாபி - 974. இந்த முன்னணியைத் தக்க வைப்பது நமது வெற்றிக்கு மிகவும் முக்கியம். இன்று முதல் போட்டி முடியும் மே 31 வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 50+ கட்டுரைகளை எழுதுவது வெற்றியை உறுதி செய்யும். இது வரை 44 பேர் போட்டியில் கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். எல்லாராலும் இந்த வாரம் பங்களிப்பது இயலாது என்பதால், ஒவ்வொருவரும் அடுத்த ஐந்த நாட்களும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் போட்டியை வெல்லலாம். போட்டி முடியும் வரை ஒவ்வொரு நாள் நிலவரத்தை இங்கு இற்றைப்படுத்துகிறேன். நன்றி -- இரவி

மீண்டும் பஞ்சாபியர் முன்னணி!!

தொகு

வணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள்! தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி

வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை!

தொகு

வணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --இரவி

வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்

தொகு

வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Nan/தொகுப்பு05&oldid=2558003" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Nan/தொகுப்பு05".