பயனர் பேச்சு:Natkeeran/தொகுப்பு10
picture
தொகுஎன் கணினியில் உள்ள படங்களை எவ்வாறு கட்டுரையில் இணைப்பது?தென்காசி சுப்பிரமணியன்
table
தொகுநற்கீரன், how to form tabular column in wikipedia?தென்காசி சுப்பிரமணியன்
நான் புகுபதிகை செய்தும் என் IP முகவரி இயந்திரவியல் உட்பிரிவுகள் கட்டுரையில் பதிந்துவிட்டது. எவ்வாறு மாற்றுவது?தென்காசி சுப்பிரமணியன்
மெய்ப்பு
தொகுமெய்ப்பு பார்த்துவிட்டேன். ஒரு சில எழுத்துப்பிழைகளையும் 2-3 இடங்களில் மட்டுமே சொற்திருத்தங்களும் செய்துள்லேன். ted என்பதை டெட் என்றே எழுதுவது நல்லது. ரெட் என்றால் red என்று படிக்க நேர்கின்றது. தமிழரிடையே குழப்பங்களைக் குறைப்பது நல்லது. சொல் வேறுபாடு வேறு அடிப்படை ஒலிப்பு வேறுபாடு வேறு. நாம் ஒற்றுமையை சீர்மையை பொதுமையை வளர்ப்பது நல்லது. இது என் தனிக்கருத்துதான்.--செல்வா 01:28, 6 அக்டோபர் 2010 (UTC)
- நன்றி செல்வா. ஈழத் தமிழ் வழக்கில் ரெட், றெட் என்று வரும். --Natkeeran 01:30, 6 அக்டோபர் 2010 (UTC)
பகுப்பு:நோய்கள் பற்றிய கருத்துக்குப் பதில்
தொகுநன்றி, சில முக்கியமான பகுப்புகளை உருவாக்கினேன், ஏனெனில் அவை ஒவ்வொன்றில் இருந்தும் குறைந்த பட்சம் ஒரு கட்டுரையாவது மிகவிரைவில் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே. --சி. செந்தி 14:57, 10 அக்டோபர் 2010 (UTC)
- உதவவும் என்னால் விக்கி பக்கத்தை தொகுக்க முடியவில்லைகீழ்கண்டபடி அறிவுப்பு வருகிறது
இப்பக்கத்தைத் தொகுக்கவும்-க்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:
Your IP address has been blocked on all wikis by Shizhao (meta.wikimedia.org). The reason given was "Open proxy". The block 22 அக்டோபர் 2011-தேதியில், 06:20-மணிக்கு இது காலாவதியாகிறது.
- நீங்கள் இதன் மூலத்தை பார்கவும் அதனை நகலெடுக்கவும் முடியும்:--ஹிபாயத்துல்லா 14:57, 24 அக்டோபர் 2010 (UTC)
- எனது பேச்சுப் பக்கத்தையோ, எனது பயனர் பக்கத்தையோ ஒருமுறை மட்டும் தொகுக்க முடிகிறது. பொது இடத்தில்தான் தொகுப்புக்களை மேற்கொள்கிறேன்.--ஹிபாயத்துல்லா 16:56, 24 அக்டோபர் 2010 (UTC)
ஹோமியோபதி பரப்புரைக் கட்டுரை
தொகுஅந்த ஹோமியோபதி பரப்புரைக் கட்டுரையை நீக்கி விட்டேன். நீங்கள் குறிப்பிட்டிருந்த படி மிக அபாயமான கருத்துகளைக் கொண்டிருந்தது.--சோடாபாட்டில் 16:24, 31 அக்டோபர் 2010 (UTC)
நன்றி. சில சோதிடக் கட்டுரைகளும் முழுப் பிழையான தகவல்களைக் கொண்டிருந்தாலும், அவை அபாயமானதாக நான் கருதவில்லை. ஆனால் உடல் நலம் தொடர்பான கட்டுரைகளில் கூடிய கவனம் வேண்டும். அதை மருத்துவர்களிடமும், துறை சார்ந்தவர்களிடமும் விட்டுவிடுதல் நன்று. --Natkeeran 16:26, 31 அக்டோபர் 2010 (UTC)
இலங்கையில் பயிற்சிப் பட்டறை
தொகுவணக்கம் நக்கீரன். நல்லது. நான் கிழக்கு கல்முனையைச் சேர்ந்தவன்.கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகங்களில் இப்பயிற்சிப் பட்டறை பற்றி பட்டறைக்கான சாத்தியங்கள் பற்றி அறிந்துவிட்டு சில நாட்களில் பதிலளிக்கிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 23:59, 7 நவம்பர் 2010 (UTC)
- வணக்கம் நக்கீரன். பயிற்சிப் பட்டறை பற்றி சில ஏற்பாடுகள் செய்துள்ளேன். டிசம்பர் நடுப்பகுதியிலேயே பல்கலைக்கழகங்களில் நடாத்தக்கூடிய வாய்ப்புகளுள்ளன.மற்றொரு கணினி கற்கை நிலையத்திலும் இதை செயற்படுத்த முயலுகிறேன். திட்டமாக நாளை குறித்துவிட்டு தொடர்பு கொள்கிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 16:06, 13 நவம்பர் 2010 (UTC)
- கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் விக்கிப்பீடியா பட்டறை எதிர்வரும் 28.12.2010 செவ்வாய்க்கிழமை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.--சஞ்சீவி சிவகுமார் 16:18, 10 திசம்பர் 2010 (UTC)
இலங்கை மக்கள்தொகை
தொகுநற்கீரன், நீங்கள் எனது உரையாடல் பக்கத்தில் இட்ட கேள்வி தொடர்பாக:
1981 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பே இலங்கை முழுவதிலும் முறையாக எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு. இதன்படி மொத்த மக்கள் தொகை - 14.8 மில்லியன். இதில் சிங்களவர் 74%, தமிழர் மொத்தம் 18%, முசுலிம்கள் 7%. 2001 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தமிழர் மாவட்டங்களில் மதிப்பீட்டின் அடிப்படையில் மக்கள் தொகையைச் சேர்த்து வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, இலங்கையின் மொத்த மக்கள் தொகை 18.8 மில்லியன். இதில் சிங்களவர் 74.5%. தமிழர் 16.5 % (இலங்கை வம்சாவழி 11.9%, இந்திய வம்சாவழி 4.6%), முசுலிம்கள் 8.3%. 2001 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் ஏராளமான தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பதுடன், பெருமளவில் உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் பார்க்கும்போது தமிழரின் மொத்த அளவு 15%க்கும் கீழே குறைந்திருக்க வாய்ப்பு உண்டு. இதில் இலங்கை வம்சாவழித் தமிழர் 10% க்குக் குறைந்திருக்கக்கூடும் என்பது எனது கணிப்பு.
2001 ஆம் ஆண்டு மதிப்பீடுகளின்படி இலங்கை வம்சாவழித் தமிழர் தொகை 2.23 மில்லியன். இந்திய வம்சாவழித் தமிழர் 0.859 மில்லியன்கள். முசுலிம்கள் 1.56 மில்லியன். எனவே தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை வம்சாவழித் தமிழர் தொகை 2 மில்லியன் அளவுக்கோ அல்லது அதற்கும் குறைவாகவோ இருக்க வாய்ப்பு உண்டு. முசுலிம்களின் தொகை ஏறத்தாழ 1.8 - 1.9 மில்லியன் அளவை அண்மித்திருக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே 2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பில் இலங்கை வம்சாவழித் தமிழரும், முசுலிம்களும் கிட்டத்தட்டச் சம அளவில் இருக்கக்கூடும். இந்திய வம்சாவழித் தமிழரின் எண்ணிக்கை ஏறத்தாழ 1.0 மில்லியனாக இருக்கலாம். 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இலங்கைத் தமிழருக்குப் பல அதிர்ச்சிகளை அளிக்கக் காத்திருக்கிறது என்றே எண்ணுகிறேன்.
வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழும் முசுலிம்கள் தமிழையே பேசி வருகிறார்கள். பிற மாகாணங்களில் நிலைமை எனக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. ஆனால், அவர்கள் தமிழில் பேசினாலும் கூடப் பலர் சிங்கள மொழிமூலம் கல்விகற்பதை அறிந்திருக்கிறேன். மயூரநாதன் 19:30, 9 நவம்பர் 2010 (UTC)
தகவலுக்கு நன்றி மயூரநாதன். எனவே 4,900,000 தமிழ் பேசும் மக்கள் என்ற மதிப்பீடு ஓரளவு பொருந்தும் என்று நினைக்கிறன். --Natkeeran 00:24, 10 நவம்பர் 2010 (UTC)
மேற்கோள் இலக்கங்கள்
தொகுநற்கீரன், வார்ப்புருவில் ஏதோ சிக்கல் போலிருக்கிறது. {{ref}} வார்ப்புருவுக்கு மாற்றாக <ref name="instats"/> போன்ற நிரலைப் பயன்படுத்தலாம். -- சுந்தர் \பேச்சு 04:00, 10 நவம்பர் 2010 (UTC)
தமிழர் உணவுகள்
தொகுநற்கீரன், நீங்கள் பல 'சுவையான' கட்டுரைகளை உருவாக்கி வருவது கண்டு மகிழ்ச்சி. :) இயன்றால் 2kb-க்கு மிகுதியாக வரும்படி எழுதுங்கள். -- சுந்தர் \பேச்சு 04:40, 23 திசம்பர் 2010 (UTC)
இவரைத் தடை செய்யவும்!
தொகுஅண்மைய மாற்றங்கள் பக்கம் பார்க்கவும். அதில் புகுபதிகை செய்யாத ஒருவர் (IP : 14.96.72.182 ) அவரது வலைப்பூ முகவரியைப் பல இடங்களில் பதிகிறார். அவரைத் தடை செய்யவும்.
- அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 08:42, 27 திசம்பர் 2010 (UTC)
- 2 மணி நேரம் தடை செய்திருக்கிறேன். தொடர்ந்து இணைத்தால் தடையை நீட்டிக்கிறேன்.--சோடாபாட்டில் 08:56, 27 திசம்பர் 2010 (UTC)
தானியங்கி
தொகுபயனர்:Mjbmrbot என்பதற்குத் தானியங்கி அணுக்கம் கொடுக்கலாம்.--Kanags \உரையாடுக 21:06, 27 திசம்பர் 2010 (UTC)
முதற்பக்க அறிமுகம்
தொகுவணக்கம் நற்கீரன். தங்களைப் பற்றிய அறிமுகம் இடம்பெறாமல் முதற் பக்க பங்களிப்பாளர் அறிமுகப் பகுதி நிறைவடையாது ;) தயவு செய்து, முகம் அடையாளம் காட்டாமலேனும் தங்களின் விக்கி ஆர்வத்தைப் பற்றி விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/நற்கீரன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி--இரவி 08:54, 30 திசம்பர் 2010 (UTC)
மாற்றம் தேவை
தொகுநற்கீரன் நீங்கள் தொடங்கிய அனைத்துலக கருவிகள் கோப்பு எனும் கட்டுரையின் தலைப்பு தவறானது என்று கருதுகிறேன். ஏனெனில் Whole Earth Catalog என்பது பதிவு பெற்ற ஒரு நிறுவனத்தின் இதழ் (அல்லது நூல்) ஆகும். எனவே த இந்து, இந்தியன் எக்சுபிரசு, என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா என்பவற்றைப் போலவே வோள் எர்த் கேட்டலாக் என்று ஒலி பெயர்க்க வேண்டும் என்று கருதுகிறேன். உங்கள் கருத்தைக் கூறுங்கள்! அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 10:32, 2 சனவரி 2011 (UTC)
2010இல் தமிழ்விக்சனரி
தொகுகுடும்பசூழல் காரணமாக உடன் உங்களுடன் இணைய இயலவில்லை.ஏதேனும் என்னால் தடை ஏற்பட்டிருப்பின் மன்னிக்கவும்.
2010இல் தமிழ்விக்சனரியில் நடந்த ஒருசில முக்கியமான நிகழ்வுகளாக பின்வருவனவற்றைக் கூறலாம்.
- கடந்த ஆண்டு போலவே, ஒருசில பங்களிப்பாளர்களே புதியசொற்களை பதிந்தனர்.அவர்களுள் முதன்மையானவர் பயனர்:Pazha.kandasamy
- செம்மொழி மாநாட்டில், தமிழக அரசு கொடையாக 1,32,000 சொற்களை அளித்தது. அதிலுள்ள புதிய சொற்களை, ஏறத்தாழ 80,000சொற்களை TamilBOT என்ற பொதுகணக்கு பதிவேற்றியது. பலரது உழைப்பையும் ஒருங்கிணைக்க, இப்பொது கணக்கு உதவும்.
- சொல்வடிவமைப்பில் அதிகமானோர் கலந்து கொண்டனர்.பவுல்,செல்வா,நற்கீரன்,கந்தசாமி,இரவி,சுந்தர்,பெரியண்ணன்,கந்தசாமி,தகவலுழவன் போன்றோர் குறிப்பிடத்தகுந்தவர். ஒட்டுமொத்த தமிழ் விக்சனரியின் சொல் வடிவமைப்பும் ஒன்றாக இல்லை. அதனை மேம்படுத்தவேண்டும்.அதற்கு முன், நடத்தப்பட்ட உரையாடல்களை ஒருங்கிணைக்க வேண்டும்.
- மாகிர் சில தொழில்நுட்ப வசதிகளை அமைத்தளித்தார்.குறிப்பாக hotcat என்ற பகுப்புக்கான வசதி.
பலசொற்களுக்கு படமிடுதலும், புதிய சொற்களை உருவாக்கும் விதத்தினையும் பிறருக்கு கற்றுத்தர பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டால், அது புதியவர்களுக்கு பல சொற்களை கொண்டு, ஒரு கட்டுரையை தமிழ்விக்கிப்பீடியாவில் உருவாக்க உறுதுணையாக இருக்கும்.
தமிழ்விக்கிப்பீடியாவிலுள்ள பலவசதிகள், பிற விக்கியின் தமிழ் திட்டங்களில்லை. ஏற்கனவே, பங்களித்து வரும் பங்களிப்பாளர்களுக்கு தோன்றும் ஐயங்களை நீக்கிட, நமக்குள் தொடர்பு ஏற்படுத்த வசதியிருப்பின், அது மிகவும் முன்னேற்றத்தைத் தரும்.
- விக்சனரி திட்டத்தில் தமிழின் தற்போதைய நிலை
- பிற விக்சனரி திட்டங்களுடனான, தமிழ்விக்சனரியின் ஒப்பீடு
- பல்வேறு விக்கி கணக்கீடுகள் குறித்த புள்ளிவிவரங்கள்
தனிநபர் கட்டுரை
தொகு(நீக்கல் பதிவு); 01:31 . . Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) "அச்சடித்தல்" நீக்கப்பட்டது (இருந்த உள்ளடக்கம்: 'hello babies' (தவிர, '75.130.111.89' மட்டுமே பங்களித்திருந்தார்))
இதில் (தவிர, '75.130.111.89' மட்டுமே பங்களித்திருந்தார்)) என்ற வார்த்தையும் உடன் வருகிறது.
இதைதான் "ஒரே ஒரு நபர் மட்டும் பங்கேற்றக் கட்டுரைகளையும் நீக்கம் செய்வதாக அறிகிறேன். இது எதற்காக என புரியவில்லை." என்று கேட்டேன். உள்ளடக்கம் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருப்பதாக அறிவிப்பில்லை. புதுப்பயனர் என்பதால் விதிகளை அறிந்து கொள்ள உங்களை நாடினேன்.
கேள்வியை தெளிவில்லாமல் கேட்டமைக்கு மன்னிக்கவும்.
நன்றி!
இலங்கையில் விக்கிப்பீடியா கட்டுரைப்போட்டி
தொகுஇலங்கையில் மாணவர்கள் மத்தியில் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பான கட்டுரைப்போட்டி நடத்துவது தொடர்பான நீங்கள் முன்வைத்த யோசனை தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுக்கக் காத்திருக்கின்றொம். புன்னியாமீனுடனும் கதைத்தேன்.உங்கள் ஏற்பாடுகள் பற்றி அறியத்தரவும். சஞ்சீவி சிவகுமார்
Please see my request
தொகுI requested already on another user's talkpage, but they never responded: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Mayooranathan#SUL_Request Thanks, Computerwiz908 23:14, 2 பெப்ரவரி 2011 (UTC)
- I am not sure how to do this either. I will ask another admin. --Natkeeran 03:48, 3 பெப்ரவரி 2011 (UTC)
Usurpation request
தொகுI would like to change my user name to Sivanesh from SivaneshR. My home wiki is enwiki. I have already placed a request to Usurp Sivanesh in my home wiki. The only other wiki where there is an unattached account for Sivanesh is in Tamil wiki. The target user account does not have any any edits to I think You will not have any problem in granting thin rename. தயவு செய்து எனது வேண்டுகோளை நிறைவு செய்யவும்!--இரா.சிவனேஷ் 17:05, 1 மார்ச் 2011 (UTC)
I think this link will help you to to this Special:RenameUser--இரா.சிவனேஷ் 17:13, 1 மார்ச் 2011 (UTC)
நீங்கள் அந்த பயனரை வேறு பெயருக்கு மாற்றிவிட்டு. ஏன்னை Sivanesh என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இதற்க்கு Usurpation என்று பெயர்.இரா.சிவனேஷ் 19:25, 1 மார்ச் 2011 (UTC)
- அப்படிச் செய்ய இயலாது. யார் முதலில் பதிவு செய்கிறார்களோ, அவருக்கு அந்தப் பயனர் கணக்கு உரிமையாகும். --Natkeeran 20:09, 1 மார்ச் 2011 (UTC)
- இல்லை நீங்கள் சொல்வது தவறு. விதிகளுக்கு உட்பட்டு இதை செய்யலாம். மேலும் விபரம் அரிய en:Wikipedia:Changing_username/Usurpations பார்க்கவும். இது தமிழ் விக்கி இல்லும் செல்லும். ஆனால் அந்த பக்கம் இன்னும் உருவக்கபடவில்லை. இரா.சிவனேஷ் 08:44, 2 மார்ச் 2011 (UTC)
ஆதிகாரிகளுக்கான Usurpation வழிமுறை இங்கு ஊள்ளது en:Wikipedia:Bureaucrats#Usurpations. I have requested a English wiki Bureaucrat to explain this concept to you. She may approach you any time.இரா.சிவனேஷ் 08:52, 2 மார்ச் 2011 (UTC)
- Hello! I've been asked by SivaneshR to explain the concept of "usurpation" as it applies to usernames on the English Wikipedia and many other language Wikipedias as well. The reason usurpation exists is because quite often someone will register a username, but then never use it. As such, many desirable usernames are not available to users who would like to use them to edit.
So, you can see that the local account "Sivanesh" was registered a long time ago - in 2005 [1] - but never used at all. Since it is unlikely the person who registered the username over five years ago is going to return, it does not make sense for the user account to prevent our active user, SivaneshR, from taking the username and using it to edit. He will soon be adopting this username on the English Wikipedia and if he were granted the username here as well, he would be able to use the single-unified login facility to easily move between en. and ta. wiki without having to use two different usernames.
I hope this is message helpful, and you might consider developing a local policy on usurpation. You can review the English pages related to this procedure on this at en:WP:Bureaucrats#Usurpation, en:WP:USURP, en:WP:CHUG and en:WP:Handling SUL conflicts.
Feel free to let me know if you have any questions. Best regards, –xeno 14:00, 2 மார்ச் 2011 (UTC)
- Made the requested change. Let me know if it was successfull. --Natkeeran 23:46, 2 மார்ச் 2011 (UTC)
- ஒரு மற்றமும் தென்படவில்லை!. தயவு செய்து மீண்டும் முயற்சிக்கவும். இரா.சிவனேஷ் 08:54, 3 மார்ச் 2011 (UTC)
- Made the requested change. Let me know if it was successfull. --Natkeeran 23:46, 2 மார்ச் 2011 (UTC)
- நட்கீரன் அவர்களே, பயனர் பெயர் மாற்றத்தை சிறிது வேகமாக செய்யவும். ஆங்கில விக்கிபீடியாவில் பெயர் மாற்றம் செய்யபட்டு விட்டது. ஆதனால் என்னால் single-unified login செய்யமுடியவில்லை. அதனால் தயவு செய்து பயனர் பெயர் மாற்றத்தை சிறிது வேகமாக செய்யவும்.117.197.195.207 06:13, 4 மார்ச் 2011 (UTC)
shortest article
தொகுத. விக்கியில் குறும்கட்டுரைகளை பட்டியிட இரு வழிகள் உள்ளன. 1) சிறப்புப் பக்கங்களில் உள்ள குறும் பக்கங்கள் மூலம் 2) ஜிரா டூல்செர்வரில் கோரிக்கை எழுப்புப் காண்பது, இரண்டாவது மூலம் கொஞ்சம் personalisaiton செய்யல்லாம் (தரவு தளத்தில் sql நிரல் எழுதிப் பெற்றுத்தருவார்கள்) --சோடாபாட்டில்உரையாடுக 03:59, 3 மார்ச் 2011 (UTC)
நன்றி. --Natkeeran 00:02, 4 மார்ச் 2011 (UTC)
Please reply to the stewards
தொகுI requested the stewards to rename my user name. They said if you give your ok, they are ready to do it. So please reply to their request at meta:Steward_requests/SUL_requests#SivaneshR . Please reply at the earliest since this is urgent. நான் பாதி கிணறு தாண்டிவிட்டு முழிக்கிறேன் ஆகையால் விரைந்து செயல்படவும்.--இரா.சிவனேஷ் 12:44, 4 மார்ச் 2011 (UTC)
- Done-;--Natkeeran 15:40, 4 மார்ச் 2011 (UTC)
- நன்றி நட்கீரன் அவர்களே! தங்களை மிகவும் சிரமபடுத்திவிட்டேன் என்று நினைகிறேன். Stewards வரையில் இந்த விசயத்தை எடுத்து சென்றதற்க்கு மன்னிக்கவும்.--இரா.சிவனேஷ் 17:03, 4 மார்ச் 2011 (UTC)
- Done-;--Natkeeran 15:40, 4 மார்ச் 2011 (UTC)
- உதவி செய்ய முடிந்தது குறித்து மகிழ்ச்சி. உங்கள் பங்களிப்புகள் தொடர வாழ்த்துக்கள். --Natkeeran 21:54, 4 மார்ச் 2011 (UTC)
விக்கிசெய்தி
தொகுநற்கீரன், இதனைப் பாருங்கள். இதன்படி வேறு புதிய பெயரில் தான் உட்புக வேண்டும் போல் இருக்கிறது:(.--Kanags \உரையாடுக 11:28, 5 மார்ச் 2011 (UTC)
நன்றி. சிகனேசை நகர்த்தியது போன்று என்னையும் நகர்த்த முடியுமா என்று பார்க்க வேண்டும். ? --Natkeeran 16:27, 5 மார்ச் 2011 (UTC)
- நற்கீரன், Natkeeran2 என்ற பயனர் பெயரில் விக்கிசெய்தியில் உள்ளிட்டவர் நீங்கள் தானா?--Kanags \உரையாடுக 08:56, 7 மார்ச் 2011 (UTC)
- ஆமாம், அது நான்தான். --Natkeeran 15:59, 7 மார்ச் 2011 (UTC)
விளக்கம்
தொகுநற்கீரன் நான் மாற்ற வேண்டும் என்று கூறியது இதை மட்டும் தான்.
- விக்கிப்பீடியாவின் புத்தம்புதிய கட்டுரைகளிலிருந்து:
- காப்பகம் – புதிய கட்டுரையைத் தொடங்குங்கள் – ஒரு கட்டுரையைப் பரிந்துரைக்கவும்
என்ற இரு வரிகளை இணைக்கலாமா என்று கூறினேன். உங்கள் கூற்று படி முதல் வரி தேவையற்றதாகிறது. அதே போல இரண்டாம் வரியில் உள்ள புதிய கட்டுரையைத் தொடங்கவும் என்பதும் தேவையற்றதாகிறது. அவற்றை வேண்டுமானால் நீக்கி விடலாம். மேலும் தற்போதைய உங்களுக்குத் தெரியுமாவில் தொகுப்பு என்பதற்குத் தவறான இணைப்பு உள்ளது. அதனை நீக்க வேண்டும். (மேலதிகக் கருத்து தேவை.) --சூர்ய பிரகாசு.ச.அ. 16:57, 5 மார்ச் 2011 (UTC)
- விளக்கத்திற்கு நன்றி. தொகுப்பின் இணைப்பை சரிசெய்து விடுங்கள். --Natkeeran 17:06, 5 மார்ச் 2011 (UTC)
நகர்த்தல்
தொகுஆங்கில விக்கியில் பல செய்திகளைப் பற்றிப் படிக்கும் பொழுது, தலைப்பில் அத்தலைப்புக் குறித்த இடங்களைச் சேர்பதில்லை; கட்டுரையின் உள்ளே தான் இகங்கள் குறித்த செய்திகள் இருக்கின்றன. எனவே தான் தலைமைச் செயலகம் என்ற தலைப்பின் இறுதியில் (தமிழ் நாடு)- என்பதைச் சேர்க்கவில்லை. எனவே, நகர்த்தலைப் பற்றி மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்யவும். நன்றி. --Eldiaar 19:53, 5 மார்ச் 2011 (UTC)
- Eldiaar, தனித்துவத் தலைப்பென்றால் அடைப்பு தேவையில்லை. ஆனால் “தலைமைச் செயலகம்” என்பது ஒரு பொது வார்த்தை. இந்தியாவின் மாநிலங்களுள்ளேயே பல தலைமைச் செயலகங்கள் உள்ளன. ஆங்கில விக்கியில் கண்டிப்பாக இது "secretariat" என எழுதப்படாது காண்க en:Secretariat. ”Tamil Nadu Secreteriat" என்றே எழுதப்படும். இங்கு அடைப்புள் தமிழ்நாடு சேர்ப்பது மிக அவசியமானது.--சோடாபாட்டில்உரையாடுக 00:40, 6 மார்ச் 2011 (UTC)
விக்கிப்பீடியர் அறிமுகம்
தொகுவிக்கிப்பீடியா பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் விக்கிப்பீடியாவின் முக்கியப் பயனர்கள் சிலர் குறித்த தகவல்கள் இடம்பெற வேண்டுமென்று விரும்புகிறேன். தாங்கள் தமிழ் விக்கிப்பீடியா பயனர்களில் முதலிடத்தில் இருக்கிறீர்கள் தங்கள் குறிப்புகளை படத்துடன் சேர்த்திட வேண்டுகிறேன். தங்களுடைய அறிமுகம் பலரை தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வரச் செய்ய உதவும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:05, 10 மார்ச் 2011 (UTC)
- தேனியின் கருத்தை நானும் ஆதரிக்கின்றேன் மூத்த விக்கிபீடியர்களின் அறிமுகம் கட்டாயம் தேவை--P.M.Puniyameen 08:17, 10 மார்ச் 2011 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்க அறிமுகத்திற்கேற்றவாறு விக்கிப்பீடியா பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் தங்கள் படத்தையும் தகவல்களையும் பதிவேற்றம் செய்திட மீண்டும்.... மீண்டும்...வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:24, 2 ஏப்ரல் 2011 (UTC)
- அறிமுகம் ஒன்றை விரைவில் எழுதுகிறேன். நன்றி. --Natkeeran 03:31, 2 ஏப்ரல் 2011 (UTC)
- முதல் பக்கத்தில் உங்கள் அறிமுகத்தை இட்டுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:11, 27 ஏப்ரல் 2011 (UTC)
வாழ்த்துகள்
தொகு- தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கும் பன்முக கட்டுரைகள் ஆக்கத்திற்கும் கொள்கை வடித்தல் மற்றும் அதன் பயன்பாட்டை உன்னித்து கட்டுப்படுத்துவது என்று சிறப்பான நிர்வாகியாகயும் தளராது பணியாற்றி வரும் தங்களின் முதற்பக்க அறிமுகம் கண்டு அகமிக மகிழ்ந்தேன். வாழ்த்துகள்!!--மணியன் 06:27, 27 ஏப்ரல் 2011 (UTC)
- வாழ்த்துகள், நற்கீரன்! நம் தளத்தின் வளர்ச்சியை எண்ணிப்பார்த்துத் திட்டமிட்டு செயல்படுத்தியதில் உங்கள் பங்கு மெச்சத்தகுந்தது என்பதை பலர் அறிவோம். :) -- சுந்தர் \பேச்சு 07:34, 27 ஏப்ரல் 2011 (UTC)
- நற்கீரன் தங்களைப் பற்றிய முதற் பக்க அறிமுகம் கண்டு மகிழ்வடைகிறேன். விக்கியில் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள். தமிழ் விக்கிப்பீடியாவையும், விக்கி ஊடகங்களையும் அறிவியற் தமிழின் ஒரு முதன்மைக் தளமாக, கூட்டு மதிநுட்பத்திற்கு எடுத்துக்காட்டாக வடிவமைப்பது குறித்த தங்கள் நோக்கம் நிறைவேற பிரார்த்தித்துக் கொள்கின்றேன்--P.M.Puniyameen 07:55, 27 ஏப்ரல் 2011 (UTC)
- வாழ்த்துக்கள் நக்கீரன். நான் கற்பனையில் எதிர்பார்த்த முகத்தோற்றம் கொஞ்சமும் இல்லாதிருந்தது சுவரசியமாயிருந்தது. உங்கள் எதிர்பார்ப்பில் என்றும் பங்காளியாயிருப்போம்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 10:35, 27 ஏப்ரல் 2011 (UTC)
- வாழ்த்துகள் நற்கீரன் --அராபத்* عرفات 11:29, 27 ஏப்ரல் 2011 (UTC)
- வாழ்த்துக்கள் நற்கீரன்! தமிழ் விக்கிபீடியாவின் சிறப்பான பங்களிப்பாளரும் முதன்மைத் தொகுப்பாளருமான (2011-04-25 இன் தகவற்படி 48638 தொகுப்புக்களை மேற்கொண்டு அனைத்துப் பயனரிலும் முதலாவதாகத் திகழ்பவர்) தங்களது சிறப்பான குறிக்கோள் நிறைவேறவும், அதனை நாமும் இணைந்து நிறைவேற்றுவோம் என்றும் கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்!
--சி. செந்தி 13:48, 27 ஏப்ரல் 2011 (UTC)
•தமிழ் விக்கிப்பீடியாவின் முதலிடப் பங்களிப்பாளரின் அறிமுகம் முதற்பக்கத்தில் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. வாழ்த்துக்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:17, 28 ஏப்ரல் 2011 (UTC)
- வாழ்த்துகள் நற்கீரன்... மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகள்...
வாழ்த்துக்கள் நற்கீரன். உங்களைப் பற்றி முத்துலிங்கம் ஒரு ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்ததை வைத்து நீங்கள் வயதானவர் அல்ல என்று அறிந்துக்கொண்டேன். அதற்கு முன்பு உங்களை ஒரு வயதானவராகவே மனதில் பதிந்து போயிருந்தது (திருவிளையாடலில் வரும் நற்கீரன் போன்று) படத்தை இணைத்தமைக்கு நன்றி! --HK Arun 06:10, 29 ஏப்ரல் 2011 (UTC)
- அனைவருடைய வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள். --Natkeeran 13:11, 28 ஏப்ரல் 2011 (UTC)
தமிழ்த் தாயின் தவப்புதல்வரே... அனைத்துக் களங்களிலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் :)--இரவி 12:32, 29 ஏப்ரல் 2011 (UTC)
காரணம்?
தொகுஃபெடோரா என்ற பெயரை மாற்றி பெடோரா என்று இட்டது ஏன்? மேலும் வழிமாற்றையும் நீக்கியது ஏன் என்ற காரணைத்தை அறிந்து கொள்ளலாமா நக்கீரன்? --சூர்ய பிரகாசு.ச.அ. 18:21, 23 மார்ச் 2011 (UTC)
எழுத்துக்கு முன்னர் ஒரு எழுத்து இல்லாத glyph தவிர்க்கவே. பயர்பாக்சில் அப்படித் தெரிகிறது, ஒரு வேளை ஐ.ஈயில் அப்படி இல்லாமல் இருக்கலாம். --Natkeeran 18:59, 23 மார்ச் 2011 (UTC)
புரியவில்லை. சற்று விளக்கவும். தற்போது இதன் பெயர் பெடோரா என்றுதான் எனது ஃபயர்ஃபாக்சு உலவியில் தெரிகிறது. --சூர்ய பிரகாசு.ச.அ. 19:02, 23 மார்ச் 2011 (UTC)
- சில உலாவிகளில் நற்கீரன் குறிப்பிட்ட பிரச்சினை முன்னர் இருந்தது. இப்போதும் உள்ளதோ எனத் தெரியாது. என்றாலும் பெடோரா என்ற தலைப்பையே முன்னிலைப்படுத்துவது நல்லது.--Kanags \உரையாடுக 00:12, 24 மார்ச் 2011 (UTC)
- ஆமாம், பழைய பயர் பாக்சில் அப்படித் தெரிந்தது. இது தவிர வேறு சில சிக்கல்களும் பயர் பாக்சில் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு வார்ப்புருக்களில் இடைவெளி இடுவதற்காகப் பயன்படுத்தப்படும் புள்ளி வார்ப்புருக்கள் தமிழ் எழுத்துக்களாகத் தெரிகின்றன. --Natkeeran 00:34, 24 மார்ச் 2011 (UTC)
நக்கீரன் ஐயா, ஒரு சிறந்த பேச்சாளானாக வர விரும்புபவன், முதலில் சிறந்த கேட்பாளனாக இருக்க வேண்டும். என்பதை கேள்வி பட்டிருக்கிறீர்களா? அதுபோல நான் எழுத்தாளனாக ஆகும் முன், வாசிப்பாளனாக இருக்க வேண்டும். ஐமீன்... விக்கிபிடியாவில் உள்ள கட்டுரை, பேச்சு பக்கம், ஆலமர்ம் எல்லாம் வாசிக்கவோணும். அப்புறம் எழுதவோணும். - மொஹமட்
Copied from Tamil Pallar article talk page
தொகுநில வகைகள், உலக நாகரிகங்கள், நெல் கண்டுபிடிப்பு, வேந்தன்
நில வகைகள், உலக நாகரிகங்கள் பற்றிய தகவல்கள் இந்தக் கட்டுரையில் இடம் பெறத் தேவை இல்லை. அவற்றுக்குப் பிற கட்டுரைகள் உள்ளன. நெல்லை இவர், இவர்கள் தான் கண்டு பிடித்தார்கள் என்று கூற முடியாது. இதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. வேந்தன் என்ற சொல் பொதுச் சொல். அது ஒரு குழுவைத்தான் சுட்டியது என்று வாதிடுவதின் ஏரணத்தில் குறை. --Natkeeran 18:22, 13 மார்ச் 2011 (UTC)
விளக்கம்
1.நில வகைகள் பற்றி இக்கட்டுரையில் தகவல்கள் இடம் பெறக் காரணம் இச்சமூக மக்கள் விவசாயத்தை பூர்வீகத் தொழிலாக கொண்டவர்கள் எனவே இவர்களின் பண்டைய வரலாற்றைப் பற்றிய தகவல்களை கூறும் போது பண்டைய தமிழகத்தில் விவசாயம் நடைபெற்ற மருத நிலத்தை பற்றி கூறுவது மிகவும் அவசியமாகும் மற்றும் மருத நிலத்தைப் பற்றி கூறும் போது அன்று தமிழகத்தில் இருந்த நில வகைகளை பற்றிய சிறு தகவல் இடம்பெற்றதில் எந்த தவறும் இல்லை.
2.தமிழகத்தில் முதன்முதலில் ஆற்றோறங்களில் தான் மக்கள் விவசாயம் செய்தார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே, இதேப் போல் தான் உலகில் உள்ள மற்ற பகுதிகளிலும் விவசாயம் ஆற்றோறங்களில் தான் நடந்தது. இந்த ஆற்றங்கரை பகுதியில் தான் நாகரீகம் வளர்ந்தது என்று எல்லா அறிஞர்களும் கூறுவர்.எனவே இங்கே உலக நாகரீகங்கள் பற்றிய தகவல் வருவதில் எந்த தவறும் இல்லை.
3.நெல் பயிரை இவர்கள் தான் கண்டுபிடித்தார்கள் என்று கல்வெட்டுகளும், செப்பேடுகளும் கூறுகின்றன. அதுதான் உண்மை என்று யாராலும் கூற முடியாது ஏனெனில் நெல் பயிர் வரலாற்றுக் காலத்துக்கு முன்பே மனிதர்களால் கண்டுபிடிக்கபட்டது. ஆனால் நெல் விவசாயத்தை தமிழகத்தில் முதன்முதலில் தோற்றிவித்தவர்கள் இவர்கள் தான் என்பது அசைக்க முடியாத உண்மை. இதற்க்கு தமிழ் இலக்கியங்களும், பள்ளு நூல்களும், கல்வெட்டுகளும், பட்டயங்களும் ஆதாரங்களாகும் . மேலும் தமிழ் புலவர்கள் , அறிஞர்கள் , ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் கருத்துக்கள் வலு சேர்க்கின்றது.
4.வேந்தன் என்னும் பெயர் மருத நிலத்தின் மக்களாகிய மள்ளர்களின் கடவுளை குறிக்கும் மற்றும் முவேந்தர்களைக் குறிக்கும் வேறு யாரையும் அது குறிக்காது.Tamil1988 15:29, 19 ஏப்ரல் 2011 (UTC)
பரம்பரை அலகு ஆராய்ச்சி (தமிழர் - சிங்களவர்)
தொகுபரம்பரை அலகு ஆராய்ச்சி மூலம் விஞ்ஞானிகள் இலங்கை தமிழர் பெரும்பான்மை சிங்களவர்களுடன் 55வீதம் பொதுவான பரம்பரை அலகுகளை கொண்டுள்ளனர் ,அதாவது இலங்கை தமிழரும் சிங்களவரும் மிக நெறுங்கிய உறவினர்கள் என கூறியுள்ளனர் . இலங்கை தமிழருக்கும் இந்திய தமிழருக்கும் 15 வீதம் தான் பொதுவான பரம்பரை அலகுகள் உள்ளன.--Natkeeran 01:26, 25 ஜூலை 2009 (UTC)
நக்கீரன், இலங்கை தமிழ் சிங்கள மக்களின் வாழ்வியல் தன்மைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது உங்கள் கூற்றின் உண்மை வெளிப்படுகின்றது. ஆனால் இவ்விரண்டு இனங்கள் தொடர்பான ஒருமைப்பாட்டை இதுவரை எடுத்துக்காட்டிய எந்த ஆவணமும் இல்லை. ஆனால் உங்கள் கூற்று (55%) ஆச்சரியமாக உள்ளது. இந்த தகவலை ஒரு ஊகத்தின் அடிப்படையில் சொல்கிறீர்களா? அல்லது ஏதாவது ஆவணங்கள் ஊடாக சொல்கிறீர்களா என்பது விளங்கவில்லை. பரம்பரை அலகு ஆராய்ச்சி மூலம் விஞ்ஞானிகள்... இதனை சற்று விரிவாகக் கூறுவீர்களா? இந்த ஆய்வு எப்போது நடைப்பெற்றது? யாரால்? --HK Arun 06:03, 29 ஏப்ரல் 2011 (UTC)
முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன்
தொகுநற்கீரன், உங்கள் முதற்பக்க அறிமுகம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். முதன்மையான ஒரு பங்களிப்பாளரின் அறிமுகத்தைக் கண்டு விக்கியர்கள் அனைவருமே தனி ஊக்கம் பெறுவர்! இத்தனை காலமும் மிகக் கூடுதலான தொகுப்புகள் செய்தவர் நீங்களே, உலகெங்கும் உள்ள தமிழ் சாந்த செய்திகள் அனைத்தையும் அக்கறையுடன் தொகுத்து, வகைப்படுத்தி வருபவர் நீங்களே! வாழ்க உங்கள் நற்றமிழ் தொண்டு!--செல்வா 12:12, 10 மே 2011 (UTC)
நன்றி. --Natkeeran 13:16, 10 மே 2011 (UTC)
- எனக்கும் மிகவும் மகிழ்ச்சி :).--உமாபதி \பேச்சு 16:00, 11 மே 2011 (UTC)
natkeeranbot
தொகுnatkeeranbot பற்றி அறிய விரும்புகிறேன். தொடர்ச்சியாக செயல்படும் என்றால் தானியங்கி அணுக்கம் பெறக் கோரலாம்--இரவி 19:02, 30 மே 2011 (UTC)
- bot மூலம் கட்டுரைகளை மட்டுமே தரவேற்றுவதாக இருந்தால் தானியங்கி அணுக்கம் தேவையில்லை என்றே நினைக்கிறேன். தரவேற்றும் கட்டுரைகள் அண்மைய மாற்றங்கள் பகுதியில் தெரியவே விரும்புகிறேன்.--Kanags \உரையாடுக 20:53, 30 மே 2011 (UTC)
விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம் பகுதியில் மேலதிக விபரங்களைப் பெறலாம். இது ஒரு புது தானிங்கி அல்ல. pywikipedia நிரலையே பயன்படுத்துகிறது. அதற்குத் தேவையான உள்ளீட்டை உருவாக்குவதே இந்த நிரலின் பணி. ஒரே மாதிரியான தகவல்கள் இருந்தால், அவற்றை அட்டவணைப்படுத்தி, இலகுவாக வேகமாக இதழ்கள் மாதியான கட்டுரைகளை உருவாக்கிக் கொள்ளலாம். கனகு சுட்டியவாறு, கட்டுரைகளையே உருவாக்குவதாக திட்டம்மிட்டுள்ளேன். அண்மைய மாற்றங்களில் தெரிவதே தகுந்த மாற்றங்களை எல்லோரும் செய்ய உதவியாக இருக்கும். --Natkeeran 22:51, 30 மே 2011 (UTC)
கட்டுரை ஆக்கம் உட்பட எவ்விதப் பணியானாலும், தானியக்கமாகச் செய்யப்படுவது அனைத்தும் தானியங்கித் தொகுப்பு என்று வகைப்படுத்துவது முக்கியம் என்று கருதுகிறேன். தமிழக ஊர்கள் பற்றிய தானியங்கிக் கட்டுரைகள் பயனர்:Ganeshbot அவ்வாறே பதிவேற்றியதாக நினைவு. ஒரு பயனரைத் தானியங்கி என முன்வைத்து, அதன் தானியக்கப் பணிகளை முன் கூட்டியே அறிவித்து ஒட்டுமொத்தமாகப் பதிவேற்றுவதன் மூலம் பல்வேறு பயனர்களும் இதனை அண்மைய மாற்றங்களில் கவனிக்க இயலும். எனவே, அண்மைய மாற்றத்தில் காண வேண்டிய ஒரே காரணத்துக்காக தானியங்கி நிலவரத்தைத் தவிர்க்க வேண்டியது இல்லை.
தானியங்கி அணுக்கம் இல்லாமல் பதிவேற்றுவதால் natkeeranbotஐத் தனியொரு பயனராகத் தரவுகளில் கருத நேரிடும்.
தேவைப்பட்டால், இது குறித்து மேலும் உரையாடலாம்.--இரவி 14:57, 31 மே 2011 (UTC)
உங்களுக்குத் தெரியுமா? திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த ஃபிபனாச்சி எண்கள் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 18, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த முத்துப்பட்டன் கதை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 18, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த அறவழி தன்முனைப்பாக்கம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 11, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த கந்தன் கருணை (நாடகம்) என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் செப்டம்பர் 21, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த பறை (இசைக்கருவி) என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் பெப்ரவரி 22, 2012 அன்று வெளியானது. |
1972ஆம்
தொகுநற்கீரன், சரியாக எழுதுவதென்றால் 1972-ஆம் அல்லது 1972ம் அல்லது 1972-ம் என வர வேண்டும். பொதுவாக விக்கிப் பகுப்புகளில் 1972 திரைப்படங்கள் மற்றும் 1972 தமிழ்த் திரைப்படங்கள் எனப் பகுப்பிட்டால் போதும். 1972ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் என நீட்டி முழக்கி எழுத வேண்டிய அவசியம் இல்லை. ஆங்கில விக்கிப்பீடியாவிலும் இவ்வாறே பகுப்புகளைத் தொடங்கியிருக்கிறார்கள். இது போலவே 1972 நிகழ்வுகள், 1972 பிறப்புகள், 1972 இறப்புகள் என வரும். 1972 ஆம் ஆண்டில் இறந்தவர்கள் என எழுதத் தேவையில்லை. எனவே இவற்றை முழுவதுமாக மாற்றுவதானால் உங்கள் தானியங்கி அணுக்கம் பெற்று மாற்றுவது நல்லது. நேற்று அண்மைய மாற்றங்கள் பகுதியில் சில விசமத் தொகுப்புகள் கவனிக்கப்படாமலேயே போய் விட்டன.--Kanags \உரையாடுக 00:59, 12 சூன் 2011 (UTC)
நிருவாகி அணுக்கம்
தொகுசஞ்சீவி / சூர்யா நிருவாகி அணுக்கம் வேண்டுதல் தொடங்கி ஏழு நாட்கள் முடிந்து விட்டனவே. இன்னும் அணுக்கம் வழங்கப்படவில்லை?--சோடாபாட்டில்உரையாடுக 03:52, 14 சூன் 2011 (UTC)
- வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 02:59, 16 சூன் 2011 (UTC)
நோய்கள்
தொகுநோய்கள் குறித்து தானியங்கிக் கட்டுரைகள் உருவாக்குவதில் தாங்கள் காட்டும் முனைப்புக்கு நன்றி! துறைசார் கட்டுரைகள் என்றாலே கொஞ்சம் பயமாக இருக்கிறது. மேலும் பொதுவான நோய்கள் குறித்து ஏற்கனவ உள்ள கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை ஒழுங்குபடுத்துவதே மலை போன்ற பணியாக உள்ளது. எது எப்படி ஆயினும் தாங்கள் முன்மொழியும் முயற்சி விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு மைல்கல்லாக அமையும். தாங்கள் சற்று சிரமம் பாராமல் எந்தெந்த நோய்கள் குறித்த கட்டுரைகள் தேவைப்படுகின்றன என்று பட்டியலிட்டு விடுவீர்களானால் மிகவும் உதவியாக இருக்கும். அத்தோடு நோய்களில் ஆயிரக்கணக்கான கூட்டறிகுறிகள் உள்ளன. இவற்றையெல்லாம் தானியங்கி மூலம் எளிதாக ஏற்றி விடலமா ? (ஒரு முறை நோய்கள் குறித்த பகுப்புகள் குறித்து என் பேச்சுப் பக்கத்தில் எழுதி இருந்தீர்கள். அப்போதைக்கு எனக்கு பகுப்புகள் பற்றிய அறிவில்லாது இருந்ததால் என்ன செய்வதென்றே தெரியவில்லை.)
நன்றி!
(பி.கு:தாங்கள் வடிவமைத்துள்ள மாதிரிக் கட்டுரையாக்கம் நன்றாக வந்து உள்ளது.) --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 13:34, 17 சூன் 2011 (UTC)
- கருத்துக்களுக்கு நன்றி. நோய்கள் பற்றிய கட்டுரைகளுக்கு நாம் தகுந்த ஆதாரங்கள் சேர்க்க வேண்டும். 100-150 முக்கிய நோய்களை விரைவில் பட்டியல் போட்டு இதை நிறைவேற்றலாம். ஆமாம், தகவல்களை நாம் தொகுத்தால் நிரல் எழுதி ஏற்றி விடலாம். இந்த மாதிரி தகவல்கள் (data sets) தமிழில் பல வகைகளில் பயன்படக் கூடும். --Natkeeran 03:28, 18 சூன் 2011 (UTC)
நிர்வாக அணுக்கம் - நன்றி
தொகுதமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாக அணுக்கப் பணிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்து உதவிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:39, 28 சூன் 2011 (UTC)
Deliverable
தொகுநற்கீரன், Deliverables என்பதற்கு "வழங்கு பொருட்கள்" அல்லது "வழங்கல்கள்" என்றே சொல்லலாம் என்று நினைக்கிறேன். நல்ல வேறு சொற்கள் யோசித்துப் பார்க்கிறேன். -- மயூரநாதன் 17:01, 23 சூலை 2011 (UTC)
பத்தாண்டுகள்
தொகுநற்கீரன் பத்தாண்டு காலத்தை எழுதும் போது இடைவெளி இல்லாமல் எழுதுங்கள். உ+ம்: 1940 கள் என்பது தவறு. 1940கள் என்று இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 07:32, 3 ஆகத்து 2011 (UTC)
- நன்றி. அப்படியே செய்கிறேன். --Natkeeran 22:57, 3 ஆகத்து 2011 (UTC)
ஐந்தாம் அறிவிப்பு
தொகுநற்கீரன், விக்கிப்பீடியா:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள் பக்கத்தில் ஐந்தாம் அறிவிப்பு தொகுக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றங்கள் ஏதும் செய்ய விரும்பினால் மாற்றம் செய்து ஆகஸ்ட் ஐந்தாம் தேதியிலிருந்து இடம்பெறச் செய்திட வேண்டுகிறேன். இதைச் செய்து வந்த இரவி விக்கிமேனியா’2011 ல் கலந்து கொள்ளச் சென்றிருப்பதால் தாங்கள் இதைச் செய்திட வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:04, 4 ஆகத்து 2011 (UTC)
கட்டுரை பட்டியல்
தொகுNatkeeran, நான் தொடங்கிய கட்டுரைகளின் பட்டியலை என் பயனர் பக்கத்தில் எவ்வாறு கொடுப்பது.தென்காசி சுப்பிரமணியன்
கட்டுரை பட்டியல் பெறுவதில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா?--09:04, 4 ஆகத்து 2011 (UTC)தென்காசி சுப்பிரமணியன்
கட்டுரை பட்டியலுக்கு நன்றி,நற்கீரன்.--தென்காசி சுப்பிரமணியன் 05:10, 5 ஆகத்து 2011 (UTC)
missing bureaucrat noticeboard on this wiki
தொகுHi. You are listed as a bureaucrat on this wiki, but so is at least one other person. To contact a bureaucrat, in order to usurp accounts and similar, users have to send duplicate messages, rather than post at a single place. Please create a bureaucrat noticeboard of some sort and list it at meta:Index of pages where renaming can be requested. If it already exists, please list it there! Thank you. --Joy-temporary 11:48, 5 ஆகத்து 2011 (UTC)
பட்டியலில் கேள்வி
தொகுNatkeeran, நான் எழுதிய கட்டுரைகளில் கடைசி 2 கட்டுரைகள் பதினெண் உபநிடதங்கள் பதினெண் உபபுராணங்கள் பட்டியலில் இல்லை. அதை எவ்வாறு கொண்டு வருவது.--தென்காசி சுப்பிரமணியன் 11:58, 5 ஆகத்து 2011 (UTC)
Invite to WikiConference India 2011
தொகுHi Natkeeran,
The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011. But the activities start now with the 100 day long WikiOutreach. Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)
We look forward to see you at Mumbai on 18-20 November 2011 |
---|
உதவ முடியுமா?
தொகுநற்கீரன், தமிழ் விக்கி பற்றிய ஆய்வொன்றுக்காக வேண்டி தமிழ் விக்கியில் நடைமுறையிலுள்ள தொழிநுட்பங்கள் பற்றியும், அது தொடர்பாக பங்களிப்புச் செய்யும் விக்கியர்கள் பற்றியும் அறிய ஆசைப்படுகின்றேன். இது குறித்து எனக்கு உதவமுடியுமா?--P.M.Puniyameen 17:01, 12 ஆகத்து 2011 (UTC)
நிச்சியமா. என்ன மாதிரியான உதவி தேவை?--Natkeeran 00:23, 14 ஆகத்து 2011 (UTC)
முதற்பக்கம்
தொகுமற்ற தென்மொழி விக்கி முதற்பக்கங்களில் அதனதன் அடிப்படை எழுத்துக்கள்(உயிர், மெய்) உள்ளது போல் தமிழ் விக்கியில் 31 அடிப்படை எழுத்துக்களை எவ்வாறு கொண்டு வருவது?--தென்காசி சுப்பிரமணியன்
இந்தப் பக்கம் அப்படி உள்ளது.--Natkeeran 00:23, 14 ஆகத்து 2011 (UTC)
- மலையாள விக்கியில் [2] உள்ளது போன்று கேட்கிறார். ஆனால் அதன் அவசியம் என்ன?--Kanags \உரையாடுக 00:36, 14 ஆகத்து 2011 (UTC)
Mohamed ElGedawy → محمد الجداوي
தொகுHi, I want to change my name from: "Mohamed ElGedawy" to: "محمد الجداوي", Because i have changed my username on many wikipedias.--Mohamed ElGedawy 07:45, 14 ஆகத்து 2011 (UTC)
a warning is given: "User Mohamed ElGedawy has been migrated to the unified login system. Renaming it will cause the local user to be detached from the global one."
let me know if you want to go ahead. --Natkeeran 00:45, 19 ஆகத்து 2011 (UTC)
நாடுகளில் தமிழர்கள்
தொகுநக்கீரன், கத்தார் தமிழர், ஓமானில் தமிழர், இப்படியாக நீங்கள் உருவாக்கிவருபவற்றில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை. காரணம், அரபு நாடுகளில் எங்கும் குடியுரிமை வழங்கப்படுவதில்லை மட்டுமின்றி எங்கும் அவ்வாறு அழைக்கவும் இல்லை. அப்படியிருக்க குடியுரிமை இல்லாத நிலையில் அவ்வாறு அழைப்பது சரியா என்று தெரியவில்லை. அமெரிக்க தமிழர், ஆத்திரேலியத் தமிழர் என்பவை வழக்கில் உள்ளதை அறிவேன். அதனால் மத்திய கிழக்கு நாடுகளில் தமிழர்கள் எனும் பக்கத்தை உருவாக்கி அதில் எல்லா நாடுகளின் தமிழர்கள் பற்றி எழுதலாம். ஒருவேளை சில நாடுகளில் தமிழர்களின் கலாச்சார, வியாபார விசயங்களில் தாக்கம், அதிகாரம் அதிக அளவில் இருந்தாலோ, தெரிந்தாலோ தனி கட்டுரையாக எழுதலாம். -- மாகிர் 00:29, 19 ஆகத்து 2011 (UTC)
- உங்கள் அவதானிப்புச் சரியானதே. சரிப்படுத்துகிறேன். கத்தார் தமிழர் என்று இருக்காமல், கத்தாரில் தமிழர் என்று வர வேண்டும். ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒரு கட்டுரை இருப்பது பொருத்தமே. வரலாறு, அமைப்புகள், தமிழ்மொழிக் கல்வி, சிக்கல்கள் என்று பல வாரி இக் கட்டுரைகள் விரியலாம். --Natkeeran 00:31, 19 ஆகத்து 2011 (UTC)
- தலைப்புகளை இப்படி மாற்றலாம் சவூதி அரேபியத் தமிழர் என்பதற்கு பதில் சவூதி அரேபியாவில் தமிழர்கள், ஓமான் தமிழர் என்பதற்கு பதில் ஓமானில் தமிழர்கள் etc -- மாகிர் 00:34, 19 ஆகத்து 2011 (UTC)
- ஆமாம் அப்படியே. எனினும் தமிழர் என்பது பன்மையே. எனவே தமிழர்கள் என்று வராது. பிறர் இதை உறுதி செய்யலாம். --Natkeeran 00:36, 19 ஆகத்து 2011 (UTC)
நன்றி நற்கீரன், இப்பொழுதுதான் வார்ப்புரு பேச்சுப் பக்கத்தை பார்த்தேன். தலைப்பை மாற்றிய பிறகு தனிக்கட்டுரைகளாக இருப்பதில் தவறில்லை. பின்னர் வளர்க்கலாம். தமிழர்களுக்கு வழிமாற்று ஒன்றை உருவாக்கி வைக்கலாம்? -- மாகிர் 00:39, 19 ஆகத்து 2011 (UTC)
பேரண்டம்
தொகுnatkeeran, நீங்கள் பேச்சு:காட்சிக்குட்பட்ட பேரண்டம் பகுதியில் கூறியதை சற்று வளக்கி கூற முடியுமா. சரியாக விளங்கவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் 04:40, 25 ஆகத்து 2011 (UTC)
தானியங்கி அணுக்கம் பெற வேண்டுகோள்
தொகுஐயா,
விக்கிப்பீடியா:AWBயின் அரை தானியக்கி பயன்படுத்தி தமிழ் விக்கியில் துப்புரவு பனிகளை செய்ய விறும்புகின்றேன். அதற்காக விண்ணப்பித்தும் உள்ளேன். இதை என் முதன்மை கணக்கிலேயே செய்தால் விக்கி நிர்வாக வேலைகளுக்கு சிக்கல் ஏற்படுவதால், திரு. சோடாபாட்டில் மற்றும் திரு. கனகரத்தினம் சிறீதரனின் வழிகாட்டலின் பேரில் இக்கணக்கினை துவங்கியுள்ளேன் தயவு செய்து உதவவும். --JayarathinaAWB BOT 12:05, 1 செப்டெம்பர் 2011 (UTC)
நன்றி. வழங்கப்பட்டுள்ளது. --Natkeeran 13:04, 1 செப்டெம்பர் 2011 (UTC)
அண்ணமார்
தொகுநட்கீரன், நீங்கள் அண்ணமார் சாமி கதை கட்டுரையில் இயங்கு படம் உள்ளதாக தெரிவித்திருந்தீர்கள். அது எப்போது எங்கே வெளியானது. அறிந்து கொள்ள ஆவல்.--தென்காசி சுப்பிரமணியன் 15:07, 11 செப்டெம்பர் 2011 (UTC)
- அந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட ஆய்வாளர் உருவாக்கிய இயங்குபடம். இது தமிழகத்தில், தமிழ் ஓவிய மரபின்படி உருவாக்கப்பட்டது. தேடினால், இணையத்தில் பெறலாம் என்று நினைக்கிறேன். --Natkeeran 15:16, 11 செப்டெம்பர் 2011 (UTC)
safety and security
தொகுவணக்கம் நண்பரே, மேலே உள்ள இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் தமிழில் பாதுகாப்பு என்ற ஒற்றைசொல்லே உள்ளதா? இல்லை இவற்றை வேறுபடுத்தும் சொற்கள் உள்ளனவா?--Jenakarthik 04:28, 14 செப்டெம்பர் 2011 (UTC)
- ம், இந்த விடயம் பிற இடங்களிலும் உரையாடப் பட்ட ஒன்று. ஆங்கிலத்தில் கூட பொருள் மயக்கம் இருக்கிறது. சட்ட, அரசியல், காவல் சூழ்நிலைகளில் security என்பதையும் தொழில், உணவு, உடல் போன்ற சூழ்நிலைகளில் safety பயன்படுத்துகிறார்கள். காவல், காப்பு போன்ற சொற்கள் தொடர்புடைய சொற்கள். இதற்கு உடனடியாகப் பதில் தெரியவில்லை. --Natkeeran 01:37, 15 செப்டெம்பர் 2011 (UTC)
தமிழ் விக்கி நூல்களுக்கு அழைப்பு
தொகு
தமிழ் விக்கி நூல்கள் சமுதாயம் தங்களின் உதவியை நாடுகிறது தமிழ் விக்கி நூல்கள் தங்களின் உதவியை நோக்கி உள்ளது. இதுவரை எந்த ஒரு உருப்படியான தமிழ் நூல்கள் (விக்கி மூலத்தில் உள்ள நூல்களைத் தவிர்த்து) எதுவும் இதுவரை இயற்றப்படவில்லை. எனவே தங்களின் உதவி விக்கி நூல்களுக்குத் தேவைப்படுகிறது. இதுவரை சுமார் 500 பக்கங்களிலே அங்கு நாம் கொண்டு உள்ளோம். எனவே நமது கவனம் விக்கி நூல்களின் பக்கமும் செலுத்தவேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம். எனவே தங்களிடம் சில வேண்டுகோளை வைக்க விரும்புகிறோம். அவைகள்
|
கூடங்குள போராட்டம்
தொகுதலைப்பை மாற்றியிருக்கிறேன். சரியா? -- மாகிர் 04:34, 22 செப்டெம்பர் 2011 (UTC)
ஊடகப் போட்டி
தொகுகருத்து வேண்டல் அறிவிப்பினை ஆலமரத்தடி்யில் இட்டிருக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 18:33, 29 செப்டெம்பர் 2011 (UTC)
தமிழ் விக்கி ஊடகப் போட்டி
தொகுஆலமரத்தடியில் தங்கள் கருத்தினைத் தெரிவித்தற்கு நன்றி. அனைவரது கருத்துகளையும் உள்வாங்கி போட்டிக்கான திட்ட முன்மொழிவைத் தயாரித்துள்ளேன். அது குறித்த உங்கள் கருத்துகளை - இப்பக்கத்தில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கி ஊடகப் போட்டி இட வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 16:23, 4 அக்டோபர் 2011 (UTC)
தலைமை ஒருங்கிணைப்பாளர்
தொகுபோட்டியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் நல்கை முதல்வராகவும் ஒருவராக உங்களையும் முன்மொழிந்துள்ளேன். மொத்தம் ஐந்து பேர் உள்ளோம். பிறர் - நான், சஞ்சீவி சிவக்குமார், கலை, ஸ்ரீகாந்த்
ஒருங்கிணைப்பாளர்களின் பணிகள் -
- பரப்புரை செய்தல்
- போட்டியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தல் + வழிகாட்டுதல் (மின்னஞ்சல் + சமூக வலை)
- போட்டிப் பக்கம் பராமரிப்பு
- நடுவர் பணி (மதிப்பீடு மற்றும் பதிப்புரிமை மீறல்களை கண்டுபிடித்தல்)
தலைமை ஒருங்கிணைப்பாளரின் கூடுதல் பணிகள்
- நல்கை பணம் கையாளும் பொருளாளர்
- ஒருங்கிணைப்பளர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்படும் போது இறுதி முடிவு எடுக்கும் உரிமை (casting vote)
ஒருங்கிணைப்பாளர்களாவதால் வரும் தடைகள்
- போட்டியில் நாமும் நமது நெருங்கிய உறவினர்களும் கலந்து கொள்ளலாம். ஆனால் நமது ஆக்கங்கள் பரிசுகள் தேர்வுக்காக பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படாது.
--சோடாபாட்டில்உரையாடுக 09:24, 7 அக்டோபர் 2011 (UTC)
- நன்றி. பணியை ஏற்றுக் கொள்கிறேன். நாடு சார் ஒருங்கிணைப்பாளர்களும் தேவை. --Natkeeran 17:34, 7 அக்டோபர் 2011 (UTC)
நல்கை விண்ணப்ப வரைவு
தொகுபோட்டித் திட்டத்துக்கான விதிகள் மேல்நிலை அளவில் உறுதியாகிவிட்ட நிலையில் அக்டோபர் 11ம் தேதி நல்கை விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என நினைக்கிறேன். வரைவு விண்ணபத்தைப் பரிசீலித்து திருத்தங்கள் ஏதும் இருப்பின் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:28, 9 அக்டோபர் 2011 (UTC)
- விண்ணப்பம் செய்தாயிற்று- Meta:Grants:Tamil Wikimedians/TamilWiki Media Contest--சோடாபாட்டில்உரையாடுக 06:52, 11 அக்டோபர் 2011 (UTC)
வேண்டுகோள்
தொகுHajaece08 என்ற பயனர் விசமத்தனமான செயலில் ஈடுபடுகிறார். அவரைத் தடைசெய்ய முடியுமா?--பாஹிம் 03:51, 9 நவம்பர் 2011 (UTC)
மலம் கட்டுரையை மீளமைக்க வேண்டும். என்னால் முடியவில்லை.--பாஹிம் 04:03, 9 நவம்பர் 2011 (UTC)
நீர்ப்பாசனம் என்பதில் ப் வரவேண்டும், நற்கீரன். எனவே, அந்தப் பகுப்புக்களைத் திருத்தினால் நல்லது.--பாஹிம் 03:54, 21 நவம்பர் 2011 (UTC)
- செய்து விடுகிறேன். நன்றி. --Natkeeran 02:57, 22 நவம்பர் 2011 (UTC)
நற்கீரன், பயனர்:AswnBotக்கு தானியங்கி அணுக்கம் வழங்கலாம். நன்றி.--Kanags \உரையாடுக 01:05, 27 நவம்பர் 2011 (UTC)
பொது
தொகுபடிமம்:Stop the genocide in sri lanka.jpg நீங்கள் ஏற்றிய இப்படிமத்தை காமன்சில் ஏற்றிய போது அங்கே காப்பிரைட் பற்றி கேட்கிறார்கள். http://commons.wikimedia.org/wiki/File_talk:Stop_the_genocide_in_sri_lanka.jpg. {{Logo}}, {{Template:Cc-by-sa}} போன்ற வார்ப்புருவை அங்கு பயன்படுத்த முடியவில்லை. அங்குள்ள பயனர் கேட்கும் கேள்விகளுக்கு என் அரைகுறை ஆங்கில அறிவை கொண்டு பதிலளிக்க இயலவில்லை. தாங்கள் உதவவும்.--தென்காசி சுப்பிரமணியன் 04:47, 2 திசம்பர் 2011 (UTC)
சோழர் கட்டுரை
தொகுவணக்கம். ( நற்கீரன், சோழர் காலத்தில் அடிமைகள் பற்றி நீங்கள் எழுதிய குறிப்புக்குக் கொடுத்திருந்த இணைப்புக்குச் சென்று பார்த்தேன். அங்கே இருந்த குறித்த கட்டுரையின் சுருக்கத்தில், வேழத்தில் பெண்கள் பாலியல் நோக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பு இல்லை. அத்துடன் ஆண் அடிமைகள் சிலர் இருந்தது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர பெண்கள் அடிமைகளாக இருந்தது பற்றிக் குறிப்பிடப்படவில்லை. இதனால் இந்த வேழம் பற்றிய குறிப்பை அடிமைகள் என்ற தலைப்பின் கீழ் தரலாமா என்பது சந்தேகமாக உள்ளது. சிலவேளை நீங்கள் முழுமையான கட்டுரையைப் படித்திருக்கக்கூடும். படித்திருந்தால் அக்கட்டுரையில் நீங்கள் கொடுத்த விபரங்கள் உள்ளனவா என்பதை அறியத்தாருங்கள். Mayooranathan 18:03, 27 அக்டோபர் 2006 (UTC))
- மேற்கண்ட உரையாடலில் தாங்கள் குறிப்பிட்டுள்ள 'வேழம்' என்ற சொல் 'வேளம்' என்றே இருக்க வேண்டும். வேழம் என்ற சொல்லின் பொருள்-யானை,நாகம்,மகுடி,தடி,கயிறு,கரும்பு. ஆகியன. ஆனால் வேளம் என்ற சொல் சோழரால் சிறை பிடிக்கப்பட்ட மகளிரைக் குடியமர்த்தும் மாளிகையைக் குறிக்கும். [[3]]
சோழர்காலத்தில் அரசர்கள் பகைவரை வென்றபின், தாம் பற்றிக் கொணர்ந்த அவர்களது மகளிர் வாழ்வதற்கென்றே தனி மாளிகை அமைப்பர். அது வேளம் எனப்பட்டது. கலிங்கத்துப் பரணியில் இதற்கான ஆதாரம் உள்ளது. கடை திறப்பு பகுதியில்,
- "மீனம்புகு கொடிமீனவர் விழிஅம்புக ஓடிக் கானம்புக வேளம்புகு மடவீர் கடை திறமின்" என வருதலைக் காணலாம். [பாண்டியர் தோற்றோட அவர்தம் நாட்டுப் பெண்கள் வேளம் புகுந்தனர்.]--Parvathisri 19:27, 11 திசம்பர் 2011 (UTC)
மிக்கநன்றி
தொகுNatkeeran வணக்கம், தங்கள் தகவலுக்கு மிக்கநன்றி. கடந்த சில மாதங்களாக எனது மின்னஞ்சலில் இந்தப் பிரச்சினை இருந்துவருகின்றது. இதை எவ்வாறு தீர்க்க வேண்டுமென பலரிடம் அலோசனை வேண்டியும் எனக்கு முறையான ஆலோசனைக் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் விக்கிப்பீடியாவில் என் புதிய மின்னஞ்சலை கடந்த வாரம் மாற்றம் செய்தேன். நீங்கள் குறிப்பிட்டது போல கடவுச் சொல்லை இன்று மாற்றியுள்ளேன். இதன் பின்பாவது சரிவருமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். இம்மாற்றத்திலும் சரிவராவிடின் யாகூவில் புதிய மின்னஞ்சல் முகவரியை பெறவே நாடியுள்ளேன். மேலும், இந்த மின்னஞ்சல் பிரச்சினையினால் கடந்த சில மாதங்களாக சில முக்கியமான தொடர்புகளை என்னால் இழக்க வேண்டியிருந்தது.
அத்துடன், எனது புதிய மின்னஞ்சல் முகவரியை கீழே இணைத்துள்ளேன்.
pmpuniyameen@gmail.com
மீண்டும் இதனைச் சுட்டிக் காட்டி ஆலோசனைகளைத் தந்த தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். --P.M.Puniyameen 05:13, 23 திசம்பர் 2011 (UTC)
Greetings
தொகுThe Tamil Wikipedia has reached 1,000,000 page edits... Congrats --Naveenpf 05:39, 26 திசம்பர் 2011 (UTC)
ஓர் அன்பு வேண்டுகோள்
தொகுஅன்புள்ள நற்கீரனுக்கு
பிற தமிழ் விக்கித் திட்டங்கள் போன்று வியூகத் திட்டமிடல் பிற பயனர்களின் நேரத்தையும் ஆற்றலையும் மேலாண்மை செய்வதற்கான ஒரு வழிமுறையாக மாறிவிடும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இத் தருணத்தில் அத்தகைய அச்சங்களைத் தவிர்ப்பது முக்கியம் என்பதால் நான் எண்ணம் பகிர்ந்த இதை இப்போதைக்கு பின்வாங்கிக் கொள்கிறேன் என்று விக்கி ஆலமரத்தடியில் நீங்கள் தெரிவித்த கருத்தை நீங்கள் மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
வியூகத் திட்டமிடல் ஒரு முக்கியமான விடயமாகும். தமிழ் விக்கித் திட்டங்களுக்கு அவசியமானதும் கூட. கடந்த எட்டாண்டுகளில் இது போன்ற திட்டமிடலொன்று இல்லாமை தமிழ் விக்கித் திட்டங்களின் வளர்ச்சிக்கு ஒரு தடைக்கல்லாகவும் இருந்திருக்கலாம். எனவே இதுபோன்றதொரு திட்டத்தை முன்வைத்த தங்கள் தூரதிருஸ்டி நோக்கை பாராட்டுகின்றேன்.
அடுத்து தமிழ் விக்கியைப் பொருத்தமட்டில் மயுரநாதன் ஐயாவுக்கு அடுத்ததாக நீங்கள் தான் மூத்தவர். அனுபவமிக்கவர். இத்திட்டத்தை வழிநடத்த சகல விதத்திலும் ஏற்புடையவர். எனவே தங்கள் பின்வாங்குதல் என்னை அதிர்ச்சியிலாழ்த்தியது. தயவுசெய்து முன்வைத்த காலை பின்னே எடுக்காதீர்கள். உங்களுடன் நாங்கள் இருப்போம். நல்ல விடயங்களை பிற்போடவும் கூடாது, காலத்தை வீணாடிக்கவும் கூடாது. விக்கியில் செயற்படும் நாம் அனைவரும் எத்தகைய வற்புறுத்தலுமின்றி சுயேட்சையாகவே செயற்படுகின்றோம். இங்கு நேர ஒதுக்கீட்டினை அவரவர் வசதிக்கேற்ப ஒதுக்கீடு செய்து கொள்கின்றனர். அவரவர் வசதிக்கும் வாய்ப்புக்குமேற்ப பங்களித்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் பிற பயனர்களின் நேரத்தையும் ஆற்றலையும் மேலாண்மை செய்வதற்கான ஒரு வழிமுறையாக அமைந்துவிடும் என்ற கருத்தை ஏற்க முடியாது. எனவே வியூகத் திட்டமிடலை தங்கள் தலைமையின் கீழ், தங்கள் வழிகாட்டலுடனே மேற்கொள்ளப்பட வேண்டுமென்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். இதனை ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.--P.M.Puniyameen 06:08, 3 சனவரி 2012 (UTC)
bot
தொகுNatkeeranBot என்ன வகையான கட்டுரை உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளது என்பதை அதன்பயனர் பக்கத்தில் தெரிவிக்க முடியுமா? இதற்கான தானியங்கி அணுக்கத்தை நீங்களே அளித்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன். பொதுவாக, நாம் இயக்கும் தானியங்கிக்கு இன்னொரு நிருவாகி மூலம் ஒப்புதல் பெறுவது நல்ல முற்காட்டாக இருக்கும் என்று நினைக்கிறேன்--இரவி 15:15, 25 சனவரி 2012 (UTC)
திரைப்படங்கள் பகுப்பு உதவி!
தொகுஇங்கு பார்க்கவும். திரைப்படங்கள் வெளிவந்த ஆண்டுகளின் பகுப்புகளில் எந்த வகையான தலைப்பினை பயன்படுத்துவது 1991 திரைப்படங்கள் அல்லது 1991ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள் என்றா? உதவவும். நன்றி --அஸ்வின் 11:44, 14 பெப்ரவரி 2012 (UTC)
- பகுப்பு:1991 திரைப்படங்கள் அதற்குள் பகுப்பு:1991 தமிழ்த் திரைப்படங்கள் என்று வரும். ஆங்கிலத்திலும் இப்படியே உள்ளது. இந்த வாறு எல்லாப் பகுப்புகளும் மாற்றுவது அரைவாசியில் உள்ளது. --Natkeeran 03:28, 16 பெப்ரவரி 2012 (UTC)
பக்கத்தைப் பரணில் ஏற்ற வேண்டல்
தொகுவணக்கம், Natkeeran/தொகுப்பு10! உங்கள் உரையாடல் பக்கம் நீண்ண்ண்டு கொண்டே போகிறது :) பொதுவாக, 50 உரையாடல் இழைகளைத் தாண்டும் போதோ பக்கத்தில் அளவு ஒரு இலட்சம் பைட்டுகளைத் தாண்டும் போதோ பரணேற்றினால் காணவும் கருத்திடவும் இலகுவாக இருக்கும். பார்க்க: உதவி:பேச்சுப் பக்கத் தொகுப்பு. பரணேற்றிய பிறகு இந்த வேண்டுகோளை நீக்கி விடலாம். நன்றி.--இரவி 23:03, 19 பெப்ரவரி 2012 (UTC)
Found a picture thanks to the competition
தொகுMy thanks to you and the others arranging the competition. Thanks to it I found a picture file:ThajaiPeriyaKovil Krishnan.JPGto use in an article on no-wp no:De store Chola-templene. Unfortunately the picture description is only in what I believe is Tamil. It would be nice with a description also in English. Haros (பேச்சு) 19:57, 7 மார்ச் 2012 (UTC)
- Thanks for using the image and r letting us know Haros. :-). I have added an english description now.--சோடாபாட்டில்உரையாடுக 03:03, 8 மார்ச் 2012 (UTC)