பயனர் பேச்சு:Ravidreams/தொகுப்பு 8
நன்றி
தொகுவணக்கம் ஐயா,என் மணல் தொட்டி கட்டுரை பற்றிய தங்களது கருத்துக்கு நன்றி. சிறிது காலம் நான் விக்கியிற்கு வராததாலும் தேர்வுகளுக்கு தயார் செய்து கொண்டிருந்ததாலும் என் பேச்சு பக்கத்தில் நீங்கள் தெரிவித்ததை நான் கவனிக்கவில்லை. நாங்கள் ஐ.ஐ.டி. சென்னையில் ஒரு பத்து பேர் இங்கு இருக்கும் N.S.S.யின் பல்வேறு செயல்திட்டங்களில் ஒன்றான விக்கிபீடியா கட்டுரை மொழிபெயர்த்தலில் செயல்படுகிறோம். நாங்கள் செய்யும் மொழிபெயர்த்தல்களை எங்களுள் இருக்கும் இரண்டு அண்ணன்கள் சரிபார்த்து அவைகளை கட்டுரை பக்கத்தில் இடுவார்கள். நீங்கள் பார்த்தபோது நான் எந்த கட்டுரையை எழுதியிருந்தேன் என்று எனக்கு ஞாபகமில்லை. ஆனால் நான் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் தமிழ் விக்கியில் கட்டுரைகளாக அவர்களால் இடப்பட்டுவிடும். வெறேதும் உதவி தேவையெனில் தங்களை தவறாமல் தொடர்பு கொள்கிறேன். மீண்டும் நன்றி. --மோசி (பேச்சு) 21:11, 15 ஏப்ரல் 2013
தேவரின் திருக்குறள் அஷ்டாவதானம்
தொகுதிரு ரவி அவர்களுக்கு,
இந்த கட்டுரை ஏன் விக்கிபீடியாவுக்கு பொருத்தமற்றது என்று தெரிந்துகொள்ளலாமா?
வழிமாற்று
தொகுஒரு வேற்றுமொழிப் பெயரைத் தமிழாக்கும்போது, அதற்கு விதவிதமான பெயர்கள் உள்ளன. உதாரணம்: மாஸ்கோ, மாஸ்க்கோ, மாசுக்கோ, மஸ்குவா, மசுகுவா. இங்கு நாம் என்னதான் ஒரு வழிமுறையைப் பின்பற்றினாலும், செய்தித்தாள்கள் வேறு பெயர்களைப் பயன்படுத்துகின்றன. இதனால் மக்கள் அப்பெயர்களிலேயே இங்கு தேடுவர். என் ஐயம் என்னவெனில், ஒரு பக்கத்திற்கு நிறைய வழிமாற்றுக்களை உருவாக்க அனுமதிப்பீரகளா? விக்கியில் இதற்கு அனுமதி உண்டா?
(நான் இதுவரை இரண்டு வழிமாற்றுகளைக் கொண்டவைகளையே பார்த்திருக்கிறேன்.) நிறைய பேர் ஒரே தலைப்பை வேறு எழுத்துக்களால் உருவாக்குகின்றனர். இதைத் தடுக்க ஏற்கக்கூடிய பல வழிமாற்றுகளை உருவாக்குதல் நலம் என்று கருதுகிறேன். :) மறுமொழியிடவும். --தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:52, 14 சூலை 2012 (UTC)
- ஊடகங்களில் வரும் அனைத்துப் பெயர்களிலும் வழிமாற்றுகள் உருவாக்கலாம். இதற்குத் தடை இல்லை. தெளிவாக எழுத்துப் பிழைகள் என்று அறிப்படுவனவற்றுக்கு மட்டும் வழிமாற்றுகள் உருவாக்குவதைத் தவிர்க்கலாம்.--இரவி (பேச்சு) 08:54, 14 சூலை 2012 (UTC)
- வழிமாற்றுகள் அனைத்தும் கூகுள் ஊர்தலின் (crawling) போது கையாளப்படுமா அல்லது கட்டுரையின் முதல் வரியில் ஒரு முறை சேர்க்க வேண்டுமா?. --எஸ்ஸார் (பேச்சு) 11:38, 14 சூலை 2012 (UTC)
- வழிமாற்றுகளாக மட்டும் இருந்தால் அகப்பட வாய்ப்பிலை. ஏதேனும் ஒரு பக்கத்தின் உள்ளடக்கத்தில் உள்ள சொற்களே கூகுள் தேடலில் அகப்படும். எனவே, இதன் பொருட்டு மாற்றுச் சொற்களைத் தகுந்த முறையில் பயன்படுத்தலாம். முதன்மையான மாற்றுப் பயன்பாடுகளை முதல் வரியில் அடைப்புக்குறிக்குள்ளோ அல்லது என்று குறிப்பிட்டோ தரலாம். ஒரு கட்டுரைக்குள் உள்ள சொற்களில் சீர்மை வேண்டும் என்பதால் இப்படி முதன்மைப் பத்தியில் குறிப்பிடுவது தவிர மற்ற இடங்களில் முதன்மைச் சொல்லை மட்டும் பயன்படுத்தலாம். அதே வேளை, பிற கட்டுரைகளில் மாற்றுச் சொற்களைப் பயன்படுத்தலாம்.--இரவி (பேச்சு) 12:03, 14 சூலை 2012 (UTC)
- முழு இறுக்கமான கொள்கை வேண்டாம் எனினும் சில நல்ல வழிமுறைகளைப் பின்பற்றுவது நல்லது. முதல்மொழி ஒலிப்புக்கு ஏற்ப, அதே நேரம் கூடியமட்டிலும் தமிழ்முறைக்கு முரண்படாத பெயரை முதன்மைப்படுத்தி, ஒரே ஒரு சொல்லையோ அல்லது இரண்டு சொற்களையோ மட்டும் கட்டுரையில் குறிப்பிட்டு எழுதலாம். அல்லது அடிக்குறிப்பாக பிற பெயர்களைக் குறிப்பிடலாம். ஒருசில பெயர்கள் முதல்மொழியில் இருப்பதற்கு மாறாக ஆங்கிலம் அல்லது பிரான்சிய, அல்லது அரபு மொழி வழி நமக்கு அதிகம் அறிமுகம் ஆகியிருந்தால், ஒரோவொருகால் அந்த இரண்டாம் மொழிவழி அறிந்த பெயரையே, ஆனால் தமிழ்மொழிக்கு முரண்படாத வகையில் வழங்கலாம். மேலே காட்டியுள்ள எடுத்துக்காட்டில் மாசுக்கோ என்னும் நகரத்தின் பெயர் உருசிய மொழியில் ஏறத்தாழ மசுக்வா என்பது போல ஒலிக்கும், ஆனால் ஆங்கிலத்தின் வழி அறியும் பெயர் அதிகம் தெரிந்திருக்கலாம். எனவே மாசுக்கோ என்னும் பெயரை முதன்மைப்படுத்தலாம். மாஸ்கோ என்னும் பெயரையும் கட்டுரையின் முதல் வரியிலேயே தரலாம். பிற வடிவங்களை அடிக்குறிப்பாகத்தரலாம். அடிக்குறிப்பாகத் தருவதால், கூகுள் போன்ற தேடுபொறிகளில் சிக்கும் என நினைக்கின்றேன். கட்டுரையின் முதல் வரியிலேயே பல பெயர்கள் குறிப்பிடப்பெற்றால் ஓட்டம் கெடுகின்றது. மேலும், ஒரு கட்டுரையில் அக்கட்டுரை முழுவதும் ஒரே பெயரில் இருப்பதே நல்லது. இவ்வகையான உரையாடல்களை ஒரு கொள்கைப்பக்கத்தில் உரையாடுவது நல்லது. பொதுவாக தமிழ்ச் செய்தி ஊடகங்கள் செய்யும் சீர்கேடுகளை நாம் பின்பற்றக்கூடாது என்பது என் தனிக்கருத்து. கலைகளஞ்சியம் என்பது பெரும்பாலும் தரம் பேணும் ஒரு படைப்பாகவே கருத்தப்படுகின்றது. இங்கு தக்க மொழிநடை ஒழுக்கங்கள் பின்பற்றுவது தேவை. --செல்வா (பேச்சு) 14:34, 14 சூலை 2012 (UTC)
Hello. I'm sorry if this is not the right place to request it, but I request renaming my following accounts:
- محمد الجداوي → Avocato
- GedawyBot → AvocatoBot
- Confirmation link: [1]
- Reason: Privacy reasons
Please, delete all my userpages and talk pages of these accounts before renaming and I will create them later .Thanks in advance.--M.Gedawy 00:20, 16 சூலை 2012 (UTC)
முதற்பக்க கட்டுரை மாற்றம்
தொகுஇக்கட்டுரை தலைப்பு மாற்றம் தவிர்த்து வேறு சில சிக்கல்களும் இருப்பது போல் தெரிகிறதே. சற்று கலந்துரையாடவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:08, 23 சூலை 2012 (UTC)
லட்சுமி சாகல் இன்று மரணம் அடைந்தார். அவர் பற்றிய கட்டுரையை காட்சிப்படுத்துவது சிறந்ததாக இருக்கலாம். பரிந்துரை வடிவங்களில் உள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:05, 23 சூலை 2012 (UTC)
- செப்டம்பர் முதல் வாரத்தில் காட்சிப்படுத்தினால் சரியாக இருக்குமா? அதற்கு முந்தைய வாரங்களுக்கு ஏற்கனவே முடிவு செய்துள்ளோமே?--இரவி (பேச்சு) 10:13, 23 சூலை 2012 (UTC)
வார்ப்புரு:இன்றைய நாளில்
தொகுதகவல் மீண்டும் மீண்டும் வெளியானால் தொடர்ந்து பல திகதிகளை இடுவது போல செய்யலாமே--பிரஷாந் (பேச்சு) 06:06, 26 சூலை 2012 (UTC)
- இப்போதுதான் புரிகிறது. நீங்கள் சொல்வது போலவே ஆண்டைக் குறிப்பிடாமல் விடலாம். முடிந்தவரை மாற்றிவிடுகிறேன்.--பிரஷாந் (பேச்சு) 06:20, 26 சூலை 2012 (UTC)
ஒட்டு மொத்த நீக்கல்
தொகுவிக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்#ஒட்டு மொத்த நீக்கல் என்பதில் உங்கின் தீர்வு/ கருத்தறிய ஆவல்.--த♥ உழவன் +உரை.. 07:37, 26 சூலை 2012 (UTC)
- இதற்கு வழி இல்லை என்றே நினைக்கிறேன். ஏற்கனவே ஒரு தேவைக்காக இது குறித்துத் தேடிப் பார்த்து இருந்தேன். இதற்கு வழி இல்லை என்றே நினைக்கிறேன்.--இரவி (பேச்சு) 06:19, 27 சூலை 2012 (UTC)
On Tamil Wiki
தொகுCan you please assist me on translating english and italian script to Tamil language?I used Google Translate for that Railway edit, but also note i added some informative pictures which you have wholly reverted back.Can you tell me a way to help considering im not fluent in speaking Tamil and totally do not know the script(reading and composing).Thanks.
Coppercholride (பேச்சு) 09:35, 28 சூலை 2012 (UTC)
Sorry then, but please do keep in touch.I may be of help for scouting information(in case you can do the translation part), and i can help in adding common files and images to articles where you could need, i hope you agree on the second one since it involves very minimum translation.
வரைகலை மின்னஞ்சல்
தொகுநீங்கள் இந்த அறிவிப்பை {{மின்னஞ்சல்}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்!
Username change
தொகுHello. Could you please deal with this request?--M.Gedawy 02:00, 2 ஆகத்து 2012 (UTC)
Dear Ravidreams,
I'm Nemo from Betawiki/translatewiki.net and I'm writing to you because I'm collecting some information about the history of the project and the people and facts who made the difference in it. You are user number 13, so you're probably among those; maybe you even remember that it used to be named Nuka-Wiki (from 2005 on).
It would be wonderful if you could tell me something about how you first reached the wiki (who/what told you about it and how), why you decided to register and contribute, what it meant to you, what made you come back (or not) in the following years, if you spread the word about it, what have been in your opinion the most important facts or discussions in these years, etc.: just anything you want and as much as you can or want.
You can reply here (I'm watching this page), or email me, or just use this page to add comments, missing points and/or links to other resources, summaries, blogposts, articles, wiki or mailing lists discussions, as you want. Thank you very much for you help!
Regards, Nemo 10:46, 7 செப்டெம்பர் 2012 (UTC)
பார்க்கவும்
தொகுபேச்சு:எமிலி செங்கல் -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:47, 20 அக்டோபர் 2012 (UTC)
வார்ப்புரு:பொன்னியின் செல்வன் காட்சிக்கு தயார் நண்பரே. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:24, 29 அக்டோபர் 2012 (UTC)
வணக்கம்
தொகுவணக்கம் ரவி. இன்றுடன் என்னை விக்கி பயனர் பக்கத்தில் இருந்து நீக்கவும்!! உண்மையை சொன்னால் இங்கு குற்றமானால் இதுக்கு மேல் எனக்கு இந்த இடம் தேவையும் இல்லை!!! அதிகாரம் உங்கள் கையில். அதனால் அப்பாவிகள் உண்மை சொல்ல முடியாது உள்ளன!! சொன்னாலும் தண்டனைக்குரியவர்கள் ஆவார்!! அதுதான் தமிழ் விக்கி!! நான் பழைய படி ஜேர்மன் விக்கிக்கி போகிறேன்!! நன்றி வணக்கம்!! பிச்சை எடுப்பதுக்கு பல இடம் எனக்கு இருக்கு ஆனால் வேலை செய்வதுக்கும் எனக்கு பல இடம் இருக்கு!! சும்மா தேவை அற்ற விதண்டா வாதத்தில் ஈடுபடுவதனால் எனக்கு விருப்பம் இல்லை!! என்னுடன் தொடர்புடைய அனைத்து பேச்சு பங்கங்களையும் பார்த்து நின்மதியாக இருங்கள். இப்போது என்னை நீக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!! நன்றி வணக்கம். நான் ஒன்றும் அடிமை இல்லை!!! உங்களை போன்று!! Dr.En. sivam --சிவம் 09:14, 30 அக்டோபர் 2012 (UTC)
Tamil Article Redirection Problem of Tamil Nadu Government Organizations
தொகுProblem:
- The Tamil Article of Tamil Nadu Government Organizations is தமிழ்நாடு அரசின் அமைப்புகள் (http://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_அரசின்_அமைப்புகள்).
- But while redirecting from English Article Tamil Nadu Government Organizations (Left side - Languages section "தமிழ்") to Tamil Article தமிழ்நாடு அரசின் அமைப்புகள், It wrongly redirects to Tamil Article வார்ப்புரு:தமிழ்நாடு அரசின் அமைப்புகள் (this is the Tamil language version of English article "Template:State Organizations of Tamil Nadu")
Request:
- Please help by redirecting English article Tamil Nadu Government Organizations to Tamil Article தமிழ்நாடு அரசின் அமைப்புகள் (http://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_அரசின்_அமைப்புகள்).
Thanking You Karuppan.Muniyappan Muniyankaruppan (பேச்சு) 07:18, 16 நவம்பர் 2012 (UTC)
தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு
தொகுஇம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும்.
ரவி, நீங்கள் கட்டாயம் ஒரு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும் :). --Natkeeran (பேச்சு) 19:50, 26 திசம்பர் 2012 (UTC)
நிருவாகப் பொறுப்பு
தொகுநிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரைப்பதில் எனக்கு உடன்பாடே. நன்றி இரவி! --மதனாகரன் (பேச்சு) 05:19, 6 சனவரி 2013 (UTC)
நன்றி
தொகுநன்றி | ||
எனக்கு நிருவாகி அணுக்கத்தை வழங்கியதற்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:17, 14 சனவரி 2013 (UTC) |
நன்றிகள்
நிருவாகி தரத்துக்காக பரிந்துரைத்ததற்கும் நிருவாகி அணுக்கத்தை வழங்கியதற்கும் நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:42, 14 சனவரி 2013 (UTC)
தெளிவு வேண்டி
தொகுஇரவி, முதற்பக்க செய்திகளில் ஆசுகார் விருது குறித்த செய்தியில் உங்கள் திருத்தம் குறித்த ஐயம் இது. ஆசுகாரில் Nomination என்பது முதற்கட்டத் தேர்வு முடிந்து இறுதிநிலைத் தேர்வுக்கு செல்கின்ற நிலையாகும். எனவேதான் முன்தெரிவு செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டிருந்தேன். பரிந்துரை என்பது முதல்நிலையில் ஒரு நாட்டிலிருந்து nominate செய்யப்படுவதைக் குறிக்கலாம். அல்லது தெளிவாக இறுதிநிலைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனலாமா ? இரண்டாவதாக முதற்பக்க வார்ப்புரு பல நாட்களாக மாற்றப்படாது உள்ளது. குடியரசு நாள் வரும் வேளையில் வார்ப்புரு:இந்திய விடுதலை இயக்கம் காட்சிப்படுத்தலாமா ? --மணியன் (பேச்சு) 04:54, 15 சனவரி 2013 (UTC)
- மணியன், முன்தெரிவு என்பது முன்பதிவுஎன்பது போல் உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றாக புரிந்து கொள்ளக்கூடிய குழப்பம் இருந்ததால் பரிந்துரை என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். nomination என்பதற்கு ஈடாக முன்மொழிவு என்ற சொல்லும் பயன்பாட்டில் இருக்கிறது. அதனைப் பயன்படுத்தலாம்.
- முதற்பக்க வார்ப்புரு இற்றைப் பணியை மறந்து விட்டேன் :( வாரம் ஒரு முறை தகுந்த வார்ப்புருவை யாராவது மாற்றினால் உதவியாக இருக்கும். நன்றி--இரவி (பேச்சு) 16:43, 16 சனவரி 2013 (UTC)
பயனர்பெயர் மாற்றல்
தொகுபார்க்கவும்--சங்கீர்த்தன் (பேச்சு) 13:56, 21 சனவரி 2013 (UTC)
- நன்றி ரவியண்ண--சங்கீர்த்தன் (பேச்சு) 06:38, 23 சனவரி 2013 (UTC)
தள அறிவிப்பு
தொகுபுதிய பங்களிப்பாளர்களை தள அறிவிப்பில் விடலாமே.
- தமிழ்குரிசில்
- Prash
- mathanakaran
- Anton--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:45, 24 சனவரி 2013 (UTC)
- ரொம்ப நாளாக இந்தப் பணி தள்ளிப் போனதால், உடனடியாக தொடங்கும் பொருட்டு, ஏற்கனவே இருந்த வார்ப்புருவை இட்டேன். புதிய பயனர் பற்றிய விவரங்களை விக்கிப்பீடியா:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள் பகுதியில் இட்டு உதவுங்கள். இன்னும் ஓரிரு நாளில் காட்சிப்படுத்துவோம். இந்தப் பரப்புரை இன்னும் எப்படி மேம்படுத்தலாம் என்றும் தெரிவியுங்கள். நன்றி--இரவி (பேச்சு) 06:53, 24 சனவரி 2013 (UTC)
முதற்பக்கக் கட்டுரைக்கான பரிந்துரைகள்
தொகுநீங்கள் பங்களித்த சிறந்த கட்டுரை அல்லது நீங்கள் சிறந்த கட்டுரையாகக் கருதும் கட்டுரையை முதல் பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்காக இப்பக்கத்தில் தங்களின் பரிந்துரைகள் வேண்டப்படுகின்றன.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:41, 31 சனவரி 2013 (UTC)
Alangar Manickam
தொகுDear Ravi, Thanks for your wishes, yes sure, my contributions to Tamil & English Wiki will always be there. Time management is the key. Nothing gives me better satisfaction than being a wikipedian. Quick question, i wanted to buy a bilingual Keyboard with both Tamil & English characters on it. Do we get in Chennai ? Also pls keep me posted for any major wiki events in Canada or in Tamil Nadu.
Thank you,
Alangar Manickam
விக்கித் திட்டம் 100
தொகுவிக்கித் திட்டம் 100 தங்களிடம் நான் எதிர்பார்ததுதான் புதுசு புதுசா யோசிக்கிறீங்களே! பாராட்டுக்கள்--ஸ்ரீதர் (பேச்சு) 11:27, 2 பெப்ரவரி 2013 (UTC)
விருப்பம் --Anton (பேச்சு) 11:37, 2 பெப்ரவரி 2013 (UTC)
- பாராட்டுக்கும் விருப்பத்துக்கும், நன்றி :) திட்டத்தை மெருகேற்ற அனைவரின் பங்களிப்புகளையும் கருத்துகளையும் எதிர்பார்க்கிறேன்.--இரவி (பேச்சு) 13:39, 2 பெப்ரவரி 2013 (UTC)
இரவி, திட்டத்தை வரையறுத்து மிக விரைவாக செயலாற்றுகிறீர்கள்.. பாராட்டுக்கள் !! உங்களது பல வார்ப்புருக்களும் சரியான நோக்கிலேயே உள்ளன. தற்போது கூடுதலாக கூறிட எனக்கு எதுவும் இல்லை..கவனத்திற்கு வந்தால் எடுத்துரைக்கிறேன். நானும் என்னாலியன்றளவில் கூடுதலாக பங்களிக்கிறேன்.--மணியன் (பேச்சு) 16:02, 3 பெப்ரவரி 2013 (UTC)
நன்றி
தொகுஅன்புடைய ரவி டிரிம்ஸ் அவர்களே என்னுடைய நீண்ட பயணம் குறித்து தாங்கள் அளித்துள்ள கருத்து உதவிகள் குறித்து மிகவும் நன்றி. தமிழ் விக்கியில் தரமான கட்டுரைகள் வர உறுதிகொள்கிறேன். தங்களன்புள்ள மூசனேஜ்
மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்
தொகுவணக்கம், Ravidreams/தொகுப்பு 8!
நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.பெருமிதம் அடைகிறேன்...
தொகுஅன்பிற்கினிய தோழர் இரவி அவர்களுக்கு, தங்களின் பாராட்டு இன்னும் என்னை உற்சாகப்படுத்துகிறது. விக்கிபீடியாவிற்கு ஒரு பகுதிகூட இன்னும் முழுமையாகச் செய்து முடிக்காத வருத்தத்தில் உள்ளேன். எனது மாணவர்களுக்கும்,நண்பர்களுக்கும் விக்கிபீடியாவை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன். எனது கனவெல்லாம் தமிழ் இலக்கியத்தின், தமிழ்மொழியின் எந்த ஒன்றையும் விக்கிபீடியா துல்லியமாக அடையாளம் காட்ட வேண்டும் என்பதே. ஆராய்ச்சிக்காகவும், பயிற்சிக்காகவும் தேடுகிற ஒவ்வொரு தேடலின் நுனியிலும் விக்கிபீடியாவின் தகவல்கள் முன்னின்று உதவவேண்டும். அத்தகைய எனது கனவு பலிக்கும் வண்ணம் தாங்கள் கூறியவாறே பல்துறை அறிஞர்களான விக்கிபீடியர்கள் உழைத்து வருகிறார்கள். தன்னலம் கடந்த அவர்களின் பொதுத்தொண்டுக்கும், மொழித்தொண்டுக்கும் உதவி செய்வதே பெரும்பேறு. தமிழுக்குத் தொண்டு செய்வோர் தரணியில் நிலைபெறுவார் என்னும் கூற்றுக்கேற்ப விக்கிபீடியா கணினி யுகத்தில் தமிழ் வளர்க்கும் சங்கமாகத் திகழுகிறது என்பதே பெருமை. தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிட்டு வருகிறேன். விரைவில் தங்களை அணுகுகிறேன். மீண்டும் ஒருமுறை தங்களின் தூய அன்புக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். விக்கிபீடியனாக இருப்பதில் பெருமிதம் அடைகிறேன்.
தங்கள் அன்புள்ள தோழன், அருணன்கபிலன்--"அருணன் கபிலன்
பங்களிப்பைப் பாராட்டும் வார்ப்புருக்கள்
தொகுநீங்கள் இங்கு மீடியாவிக்கி:Edittools சேர்த்திருப்பதற்கு மாற்றாக பயனர் பேச்சுப்பக்க dropdownஇல் சேர்க்கலாமே.. தற்போது பிற பாராட்டுக்களைப் போல..--மணியன் (பேச்சு) 13:31, 7 பெப்ரவரி 2013 (UTC)
- மணியன், நீங்கள் கூறியவாறு முதலிலேயே எண்ணிப்பார்த்தேன்.தொடுப்பிணைப்பியில் சேர்த்தால் பக்கத்தின் தொடக்கத்தில் வார்ப்புரு இடப்படுகிறது. சரி விக்கியன்பு மூலம் ஒரு பதக்கமாக அளிக்கலாம் என்றால் பதக்கம் அளிப்பது அகவயமாக ஒரு பயனர் இன்னொரு பயனருக்கு அளிப்பது. தவிர, சிறு தொகுப்பாக குறிக்கவும், கூடுதல் செய்தியை இடவும் வாய்ப்பில்லை. ஆனால், இது புதுப்பயனர் வரவேற்பு போல், அனைத்துப் பயனர்களுக்கும் செய்ய வேண்டிய ஒரு கடமையாக இருப்பதால் edittoolsல் இடுவது சரியானதாகவும் இலகுவானதாகவும் தோன்றியது. --இரவி (பேச்சு) 05:06, 8 பெப்ரவரி 2013 (UTC)
importScript('பயனர்:Shanmugamp7/UserMessages.js');
- இதனை உங்களின் Special:mypage/common.jsல் சேர்ப்பதன் மூலம் தொடுப்பிணைப்பி போன்ற கருவியைப் பெறலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 08:18, 14 பெப்ரவரி 2013 (UTC)
- சண்முகம், பயனுள்ள கருவி. நன்றி. இதில் சில மாற்றங்கள் செய்ய இயலுமா? 1. substக்குப் பதிலாக, வார்ப்புருவுக்கான குறியீடு மட்டும் இட வேண்டும். வார்ப்புருவில் பிற்காலத்தில் வரும் மாற்றங்களையும் இற்றைப்படுத்த இது உதவும். 2. தொகுப்புகளைச் சிறு தொகுப்புகளாக குறிக்க வேண்டும். இவற்றைச் செய்தாலும் கூட, அனைவரும் இக்கருவியை அறிந்து பயன்படுத்துவார்கள் என்று சொல்ல இயலாது என்பதால், மீடியாவிக்கி:Edittools பக்கத்திலும் தேவையான இணைப்புகள் இருப்பது நன்று--இரவி (பேச்சு) 13:25, 18 பெப்ரவரி 2013 (UTC)
இயந்திரவியல் விக்கி
தொகுஇயந்திரவியலில் தொகுக்கப்பட வேண்டிய தலைப்புக்கள் மற்றும் தலைப்புகளுக்கு தமிழில் மொழிபெயர்ப்பை அளித்தால் என்னால் முடிந்த பங்களிப்பை அளிக்க முடியும். இதற்கு உங்கள் உதவியை எதிர்பார்கிறேன்.- சதீஷ்
- செல்வசிவகுருநாதன், இயந்திரவியலில் ஆர்வம் உள்ளவர். அவருடன் இணைந்து இதற்கு ஒரு விக்கித்திட்டம் உருவாக்கிச் செயற்பட முனையலாம். --இரவி (பேச்சு) 13:25, 18 பெப்ரவரி 2013 (UTC)
Question regarding Interwiki Links
தொகுவணக்கம் ரவி !
Regarding Interwiki Language links. As per WDATA , the links should come up default if other language equivalents are present . Any Idea on this ?
Example Article : சென்னை
-சுபாஷ் சந்திரன் 007 13:58, 17 பெப்ரவரி 2013 (UTC)
- Seems WDATA is not yet ready for TA Wiki. Please confirm if possible -சுபாஷ் சந்திரன் 007 15:43, 17 பெப்ரவரி 2013 (UTC)
- வணக்கம் சுபாசு. http://en.wikipedia.org/wiki/Wikipedia:WDATA படித்துப் பார்த்த வரைக்கும் தமிழ் விக்கிப்பீடியாவில் இன்னும் இது செயற்பாட்டுக்கு வரவில்லை என்றே தோன்றுகிறது.--இரவி (பேச்சு) 13:25, 18 பெப்ரவரி 2013 (UTC)
- நன்றி ரவி :) கட்டுரைகளில் உபயோகிக்க தமிழ் வரைபடங்கள் எங்கு எடுக்க முடியும் ? -சுபாஷ் சந்திரன் 007 14:00, 18 பெப்ரவரி 2013 (UTC)
- இதற்கு நீங்கள் அணுக வேண்டிய பயனர்: அன்டன் :)--இரவி (பேச்சு) 14:55, 18 பெப்ரவரி 2013 (UTC)
- மிக்க நன்றி :) -சுபாஷ் சந்திரன் 007 15:42, 18 பெப்ரவரி 2013 (UTC)
பயனர்களின் படங்கள்
தொகுபார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள்#வடிவமைப்பு, பார்க்க:விக்கிப்பீடியா பேச்சு:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள்#வடிவமைப்பு 2 --Anton (பேச்சு) 01:17, 1 மார்ச் 2013 (UTC)
உதவி
தொகுஅடுத்த சனிக்கிழமை சென்னையில் ஒரு விக்கியர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். இதைப் பற்றிய குறிப்பை தள அறிவிப்பில் இட இடம் வேண்டும். தற்போதைய பங்களிப்பாளர் பதாகைகளுக்குக் கீழ் இட்டால் மிகப் பெரியதாகி விடும் என தோன்றுகிறது. அதற்குள்ளேயே switch case இல் ஒரு 25-50 % இடம் ஒதுக்க வேண்டுகிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 17:16, 3 மார்ச் 2013 (UTC)
- அறிவிப்பில் சேர்த்துள்ளேன், பாலா. சென்னை விக்கிக் களம் சூடு பிடிப்பது மகிழ்ச்சி. சந்திப்புக்கு வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 17:32, 3 மார்ச் 2013 (UTC)
- நன்றி ரவி. :-)--சோடாபாட்டில்உரையாடுக 17:45, 3 மார்ச் 2013 (UTC)
மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்
தொகுவணக்கம், Ravidreams/தொகுப்பு 8!
நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
--Anton (பேச்சு) 14:08, 4 மார்ச் 2013 (UTC)
பதாகைப் படங்கள்
தொகுஇரவி! பங்களிப்பாளர்கள் படங்கள் அனைத்தும் ஒரே அளவில் இருப்பின், மேலும் சிறப்பாக இருக்கும். இப்பதாகையினை வடிவத்தை மேம்படுத்தக் கோருகிறேன். நமது நுட்பமின்மையை இது காட்டுவதாக எனக்குப் படுகிறது. தங்களின் வருகை எனக்கும் புத்துணர்ச்சியூட்டுவதாக இருக்கிறது.நன்றி. தங்களின் மேலாண்மை ஓங்குக. வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 05:11, 5 மார்ச் 2013 (UTC)
- த. உழவன், கருத்துக்கு நன்றி. இது குறித்த உரையாடலும் முயற்சியும் ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கிறது. பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள்--இரவி (பேச்சு) 05:14, 5 மார்ச் 2013 (UTC)
முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு
தொகு
நீங்கள் பங்களித்த பரப்பளவு என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் மார்ச் 3, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் பங்களித்த நோபல் பரிசு என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஏப்ரல் 7, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
உங்களுக்குத் தெரியுமா
தொகு
நீங்கள் பங்களித்த நியூட்டன் (அலகு) என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மார்ச்சு 6, 2013 அன்று வெளியானது. |
மகிழ்ச்சி
தொகுநன்றி ரவி. பயனளிப்பு கண்டிப்பாக இருக்கும். --பரிதிமதி (பேச்சு) 15:28, 6 மார்ச் 2013 (UTC)
குறும் கட்டுரைகள்
தொகுஅன்பு ரவி அவர்களுக்கு, அதிவிரைவு இணையத் தொடர்பைப் பயன்படுத்துகிறேன். மின்வெட்டு என்பது இங்கு கேள்விப்படாதச் சொல். ஏன் விட்டு விட்டு வருகிறது என்று கேட்டு இருந்தீர்கள். நான் எழுதும் கட்டுரையின் பகுதிகளை Notepadஇல் தட்டச்சு செய்து, பின்னர் அதை விக்கிப்பீடியாவில் பதிவேற்றம் செய்கிறேன். இந்த முறை எனக்கு எளிதாகத் தெரிகின்றது. வழக்கமாகவும் போய்விட்டது. ஒரு கட்டுரையை எழுதத் தொடங்கினால், அதைச் சின்னதாக முடித்துவிட முடியும். பல குறும் கட்டுரைகளை உருவாக்கவும் முடியும். அந்த முறை எனக்கு சரிபட்டு வரவில்லை. முயற்சி செய்து பார்க்கிறேன். தங்கள் கருத்துகளுக்கு நன்றி.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 15:44, 8 மார்ச் 2013 (UTC)
பங்களிப்பாளர் பதாகை வடிவமைப்பும் கருத்தும்
தொகுவணக்கம் இரவி, தாங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பதாகைகள் பற்றிய கருத்துக்களையும் எனது சில பதாகை வடிவமைப்புகளையும் விக்கிப்பீடியா பேச்சு:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள் பக்கத்தில் சேர்த்துள்ளேன். அங்கு காண்க. நன்றி --தாரிக் அஸீஸ் உரையாடுக 21:20, 10 மார்ச் 2013 (UTC)
- இரவி, தங்கள் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு, அது தொடர்பான விடயங்களை விக்கிப்பீடியா பேச்சு:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள் பக்கத்தில் சேர்த்துள்ளேன். புதிய வடிவமைப்பையும் இணைத்துள்ளேன். அங்கு சென்று காண்க. நன்றி. --தாரிக் அஸீஸ் உரையாடுக 20:41, 3 ஏப்ரல் 2013 (UTC)
பயனர் பெயர் மாற்றம்
தொகுநான் எனது பயனர் பெயரை தமிழில் மாற்ற முடியுமா? அதற்கு வசதிகள் இருந்தால் நன்றாக இருக்கும்.நன்றி--Aathavan jaffna (பேச்சு) 15:14, 24 மார்ச் 2013 (UTC)
நெஞ்சைத் தொட்ட நெகிழ்ச்சிகள்
தொகுஅன்பு ரவி அவர்களுக்கு, என் நெஞ்சைத் தொட்டுவிட்டீர்கள். நன்றி. சிபில் கார்த்திகேசுவின் கல்லறை இங்கே ஈப்போ கோனாலி சாலையில் இருக்கிறது. ஈப்போவில் இருக்கும் பலருக்குகூட அந்த கல்லறையைப் பற்றி தெரியாது. அதைப் பற்றி மலேசியாவின் ‘மயில்’ மாத இதழில் எழுதினேன். இப்போது பலர் அங்கு சென்று சிபில் கார்த்திகேசுவிற்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
மலேசிய வரலாற்றில் மறக்க முடியாத இந்தியர்களில் சிபில் கார்த்திகேசுவும் ஒருவர். இறந்தும் வாழ்ந்து கொண்டு இருக்கும் மண்ணின் மைந்தர். அவர் வாழ்ந்த அந்த பாப்பான் நகரத்து வீட்டை நானும் சென்று பார்த்தேன். அப்போது ஐந்தாறு சீனர்கள் மௌனமாகக் கண்களை மூடிக் கொண்டு நின்றனர். அனைவரும் மிக மிக வயதானவர்கள்.
அவர்களின் அத்தனை பேரின் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதைப் பார்த்தேன். அதைப் பார்த்த என் கண்களும் குளமாகிப் போயின. என் மனதில் ஓர் இறுக்கம். அவர் பயன் படுத்திய சில பொருட்களையும் தடவிப் பார்த்தேன். அதைப்பற்றி கார்த்திகேசு எனும் தலைப்பில் என் வலைப்பதிவில் எழுதி இருக்கிறேன்.
ஒருவரை கமுந்திங் தடுப்புக் காவலில் வைப்பது பெரிய விஷயம் அல்ல. ஆனால், வெளியே வருவதுதான் சிம்ம சொப்பனம். எனக்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சிலரைத் தெரியும். அவர்கள் எப்போதும் என்னுடன் தொடர்பு கொண்டு இருப்பார்கள். அவர்களின் தலையீடுகளினால்தான் அவ்வளவு சீக்கிரமாக வெளியே வர முடிந்தது.
நடந்த முடிந்த அந்த நிகழ்ச்சியை மறுபடியும் நினைத்துப் பார்க்க வேண்டாம். வேதனைகள் ஆர்ப்பரிக்கும். நாம் தொடர்ந்து நம்முடைய விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பாடுபடுவோம். என்னைப்பற்றி இந்திய விக்கிமீடியா மடற்குழுமத்தில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கூறுகின்றேன். நன்றி ரவி.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 19:27, 27 மார்ச் 2013 (UTC)
பதக்கம்
தொகுசிறந்த வழிகாட்டுனர் பதக்கம் | ||
உதவிகளுக்கு நன்றி.இப்பதக்கம் உங்களுக்கு பொருத்தமானது. Aathavan jaffna (பேச்சு) 14:23, 28 மார்ச் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- ரவி, வணக்கம்; அண்மையில் நிறைய பயனர்கள் (பழைய/புதிய) நமது விக்கிப்பீடியாவில் மீண்டும் பெருமளவில் தங்களின் பங்களிப்பினை செய்துவருகின்றனர். இந்த மாதிரியான ஒரு நிலைக்கு நீங்களும் ஒரு முக்கிய காரணம் என்றால், அது மிகையல்ல! நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:58, 20 ஏப்ரல் 2013 (UTC)
- விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:10, 22 ஏப்ரல் 2013 (UTC)
ஒரு யோசனை
தொகுஎன்னை போன்ற புது பயனர்களுக்ககாக ஒரு பக்கத்தை உருவாகலாம்.அதில் தொகுக்கப்படவேண்டிய கட்டுரை களையும் விக்கிபீடியாவில் இல்லாத உருவாக்கப்பட வேண்டியவை பற்றியும் குறிப்பிடலாம். இது எமக்கு உதவும். குறிப்பு:பிழையானதானால் மன்னிக்கவும்.நன்றி.--Aathavan jaffna (பேச்சு) 08:07, 29 மார்ச் 2013 (UTC)
- நல்ல யோசனை, ஆதவன். இது நீண்ட நாட்களாக நிலுவையில் போட்டு வைத்திருக்கும் பணி. கண்டிப்பாக செய்வோம். உங்களின் எந்த ஒரு கருத்தையும் கூற தயங்க வேண்டாம். இதில் பிழை என்றும் சரி என்றும் ஏதும் இல்லை.--இரவி (பேச்சு) 14:17, 29 மார்ச் 2013 (UTC)
நன்றி--Aathavan jaffna (பேச்சு) 09:23, 2 ஏப்ரல் 2013 (UTC)
- விருப்பம் நான் கூட வேற்றுமொழிப் பயனர்கள் விரும்பினால் செய்யக் கூடிய எளிய வேலைகள் இருந்தால் அவற்றையும் குறிப்பிடலாம் என்று இருந்தேன். (பிழையுள்ள சொற்களைத் திருத்துதல், பகுப்புகள் சேர்த்தல் போன்று... ) :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:22, 29 மார்ச் 2013 (UTC)
- விருப்பம்--ksmuthukrishnan 02:18, 31 மார்ச் 2013 (UTC)
சஞ்சிக்கூலி
தொகுஅன்பு ரவி அவர்களுக்கு, வணக்கம். சஞ்சிக்கூலி எனும் தலைப்பில் கட்டுரை எழுதி வருகிறேன். இதில் ஓர் ஐயப்பாடு. எழுதிக் கொண்டு இருக்கும் போது இதை ஏன் ஓர் ஆய்வுக் கட்டுரையாக எழுதலாமே என்று எண்ணம் ஏற்பட்டது. அதை ஒரு வரலாற்று ஆவணமாக அமைக்க வேண்டும் என்பது ஒரு சின்ன ஆசை. தவிர சஞ்சிக்கூலி எனும் தலைப்பு சரியாக இருக்குமா இல்லை //சஞ்சிக்கூலிகள்// சரியாக அமையுமா?மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 02:18, 31 மார்ச் 2013 (UTC)
வார்ப்புரு:பதிப்புரிமை மீறல் விளக்கம்
தொகு{{பதிப்புரிமை மீறல் விளக்கம்}} என்ற வார்ப்புருவை {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}} என்ற வார்ப்புருக் கொண்டு உருவாக்கியுள்ளேன். இது பதிப்புரிமை மீறல் இல்லையென நினைக்கின்றேன். :) இதில் மாற்றங்கள் தேவையெனின் மேற்கொள்ளவும். நன்றி. --Anton (பேச்சு) 12:06, 7 ஏப்ரல் 2013 (UTC)
- மிகவும் தேவையான வார்ப்புரு. உருவாக்கியதற்கு நன்றி, அன்டன். வார்ப்புருவில் சிறு மாற்ற்ம செய்துள்ளேன். ரொம்பக் குழப்புவதாகத் தோன்றினால் முந்தைய வடிவத்துக்கே மாற்றி விட்டுத் தகுந்த இடத்தில் அந்த விவரங்களைச் சேர்க்கலாம். நான் உருவாக்கும் வார்ப்புருக்களே ஏற்கனவே இருப்பவற்றின் வெட்டு ஒட்டு தான் :) --இரவி (பேச்சு) 19:27, 7 ஏப்ரல் 2013 (UTC)
உதவி
தொகுவணக்கம் இரவி, அண்மையில் எனது கணக்கின் பெயரை Sank--> Sankmrt ஆகமாற்றிக்கொண்டேன் தற்போது இருகணக்குகளாக பிரிந்து போய் உள்ளது, கனக்சிடம் கேட்க உங்களை கேட்கும் படி சொன்னார். இதற்கு என்ன பண்ணலாம்? கனக்சின் பேச்சுப்பக்க உரையாடல்--சங்கீர்த்தன் (பேச்சு) 06:50, 12 ஏப்ரல் 2013 (UTC)
மலாயா பல்கலைக்கழகம்
தொகுஅன்பு ரவி, உங்கள் கருத்துகளும் எண்ணங்களும் என்னை மிகவும் ஈர்க்கின்றன. அதையும் தாண்டிப் போய் அழகான சித்திரமாய்ப் பார்க்கவும் வைக்கின்றன. அண்மையில் என் மாணவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தேன். உங்களைப் பற்றிச் சொன்னேன். தவிர, நம்முடைய கனகு போல ஓர் அறிவார்ந்த பையன் இருப்பைதையும் சொன்னேன். அசந்து போகிறார்கள். உங்களையும் சேர்த்துதான். பல்கலைக்கழகத்தில் பகுதி நேர மலாய் இலக்கிய விரிவுரையாளராக பணி புரிகின்றேன்.மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு)--ksmuthukrishnan 09:20, 12 ஏப்ரல் 2013 (UTC)
- வணக்கங்க.. என்னைப் பற்றிய செய்தியைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. விக்கிப்பீடியர்கள் அனைவருமே தமிழ்ச் சமூகத்தின் நல் முத்துக்கள் :) இவர்களைப் பற்றி உங்கள் மாணவர்களிடம் பகிர்வதன் மூலம் இன்னும் பலரைப் பங்களிக்கத் தூண்டலாம். உங்கள் பல்கலைக்கழகப் பணி குறித்து அறிய மகிழ்ச்சி. அப்புறம், kanags என்ற பெயரில் பங்களிக்கும் சிறீதரன் ஒரு பையனா / பெரியவரா என்று அவரிடமே கேட்டுப் பார்த்து விடுங்கள் :)--இரவி (பேச்சு) 17:39, 13 ஏப்ரல் 2013 (UTC)
குழப்பம்
தொகுஇரவி, இந்த பக்கத்தில் நான் செய்ததாக கூறும் மாற்றங்களை நான் செய்யவே இல்லை. வரிசை 86ல் இருந்த ALL INDIA NR CONGIRESS என்பதை நீக்கிவிட்டு அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் என்பதை மட்டுமே சேர்த்தேன். இதில் ஏன் இந்த குழப்பம்??
- அராபத், பழைய பதிப்பொன்றைத் தொகுத்து சேமித்திருக்கிறீர்கள். அதனால் தமிழ்க்குரிசிலின் இடைப்பட்ட மாற்றங்களையும் சேர்த்து மீளமைத்தது போல் தெரிகிறது. --சோடாபாட்டில்உரையாடுக 13:51, 19 ஏப்ரல் 2013 (UTC)
புதுமையான தமிழ்ப் பெயர்கள் போட்டி.
தொகுகுழந்தைகளுக்குச் சூட்டுவதற்கு புதுமையான தமிழ்ப் பெயர்கள் தேவை.
மொத்தப் பரிசு: இந்திய ரூபாய் 1000/- அல்லது அதற்கு ஈடான புத்தகங்கள்.
போட்டி நடைபெறும் காலம்: ஏப்ரல் 20, 2013 முதல் மே 20, 2013 வரை.--இரவி (பேச்சு) 20:09, 19 ஏப்ரல் 2013 (UTC)
ஆங்கில விக்கிக்கு இணைப்பு
தொகுவணக்கம் ரவி, என் கணினி வழியாக இணையத்தைப் பயன்படுத்தினால் தமிழில் பயன்படுத்துகிறேன். இயல்பிருப்பாக தமிழ் எழுத்துக்களையே அமைத்திருக்கிறேன். கணினிக்கு பித்து பிடித்து பல இடங்களில் லத்தீன் எழுத்துக்களையும் தமிழில் காட்டுகிறது!! :) கைபேசியிலும் தமிழ் எழுத்தே இயல்பிருப்பு. ஆங்கில இணைப்பு தருவதற்காக ஆங்கிலத்திற்கு மாற்றி பிறகு தமிழுக்கு மாற்ற கடுப்பாய் இருக்கிறது. (விக்கித்தரவு இருப்பது வேறு விடயம்) புது இணைப்பை விக்கித்தரவில் தர முடியவில்லை. ஆகவே, [[en: என்பதை கீழே உள்ள கருவிகள் பெட்டியில் உடனே போட்டுத் தருமாறு வேண்டுகிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:03, 20 ஏப்ரல் 2013 (UTC)
- மீடியாவிக்கி:Edittools பக்கத்தில் [[en:]] என்பதைச் சேர்த்திருக்கிறேன். இதைத் தான் வேண்டினீர்கள் என்று நினைக்கிறேன். எனினும், இயன்றளவு விக்கி தரவைப் பயன்படுத்த வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 06:31, 20 ஏப்ரல் 2013 (UTC)
- நன்றி இரவி, இதைத் தான் கேட்டேன். இடம்தான் இருக்கிறதே, bn, gu, hi, kn, ml, te, si, ur ஆகியவற்றிற்கும் இணைப்புகளைச் சேர்த்தால் நன்றாக இருக்கும் ;) வேண்டாமென்றால் விட்டுவிடலாம். பல கட்டுரைகளில் விக்கித்தரவிற்கான இணைப்பு இல்லையே! அதனால் விக்கித்தரவில் புதிதாக தகவலைச் சேர்க்க விரும்பி துயருற்றேன். :( -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:50, 20 ஏப்ரல் 2013 (UTC)
- எனக்கு இப்ப கன்னடக் காய்ச்சல்!! ஆங்கிலத்தில் இல்லாத சில கட்டுரைகள் கன்னடத்தில் உள்ளன. கன்னடப் புலவர்கள், மொழி தொடர்பான குறுங்கட்டுரைகளாகத் தேடியெடுத்து தமிழாக்கம் செய்கிறேன். ஆகவே தான் கன்னட இணைப்பு கேட்டேன். இந்திய மொழிகளுக்கு மட்டும், குறிப்பாக முதன்மையாக உள்ள, ஆறேழு மொழிகளுக்கு இணைப்பு தரலாம் என்று கேட்டேன். நன்றாக இல்லை என்றால் விட்டுவிடுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:05, 20 ஏப்ரல் 2013 (UTC)
- தமிழ்க்குரிசில், உங்கள் தேவையைப் புரிந்து கொள்ள முடியாததாலேயே வினவினேன். இதில் என் தனிப்பட்ட விருப்பம் எதுவுமில்லை. இந்த மாற்றத்தை எந்த ஒரு நிருவாகப் பயனரும் செய்யலாம். நீங்கள் கேட்டபடி, இந்திய மொழி இணைப்புகளைச் சேர்த்துள்ளேன். நீங்கள் கன்னடத்தில் இருந்து மொழிபெயர்க்கிறீர்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள் :)--இரவி (பேச்சு) 19:53, 20 ஏப்ரல் 2013 (UTC)
உதவி
தொகுவணக்கம் இரவி. ஒவ்வொரு மாதமும் ஒரு இலக்கு வைத்துக்கொள்ளலாம் என எண்ணுகிறேன். நான் இம்மாதத்தில் எத்தனை தொகுப்புகள், கட்டுரைகள் எழுதியிருக்கேன். அதன் தரம் போன்ற தகவலை எங்கு காண்பது. உதவினால் நன்று.--இராஜ்குமார் (பேச்சு) 19:35, 20 ஏப்ரல் 2013 (UTC)
- நீங்கள் இலக்கு வைத்து பங்களிக்க முனைவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்கு என்று ஒரு திட்டப் பக்கத்தை உருவாக்கி, அப்பட்டியில் உள்ள பணியை ஒவ்வென்றாகச் செய்து முடிக்கலாம் (எடுத்துக்காட்டுத் திட்டப் பக்கம்). இந்த மாதம் இவ்வளவு கட்டுரைகள், இத்தனைத் தொகுப்புகள் என்று எண்ணிக்கை சார்ந்து இருப்பதை விட செயற்பாடு சார்ந்து உங்கள் இலக்கு இருப்பது நன்று. எடுத்துக்காட்டுக்கு, ஒரு துறை சார்ந்த கட்டுரைகளை உருவாக்குவது, குறுங்கட்டுரைகளை விரிவாக்குவது, உதவிக் கட்டுரைகள் உருவாக்குவது என முனையலாம். தேவைப்படும் துப்புரவுப் பணி ஒன்றைச் செய்து முடிக்க முனையலாம். கட்டுரையின் தரத்தை அளவிடுவதற்கு என்று தானியக்க வழி ஏதும் இல்லை. வேண்டுமானால், கட்டுரையின் பைட்டு அளவைக் கருத்தில் கொள்ளலாம். இதனைக் கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்தில் காணலாம். இயன்ற அளவு ஆதாரங்கள், வெளியிணைப்புகள் தரலாம். உங்கள் பங்களிப்புகள் பற்றிய புள்ளி விவரங்களை அறிய பின்வரும் பக்கங்கள் உதவலாம். http://toolserver.org/~tparis/pcount/index.php?name=Inbamkumar86&lang=ta&wiki=wikipedia , http://toolserver.org/~vvv/yaec.php?user=Inbamkumar86&wiki=tawiki_p , http://toolserver.org/~tparis/pages/index.php?name=Inbamkumar86&namespace=0&redirects=noredirects&lang=ta&wiki=wikipedia&getall=1 --இரவி (பேச்சு) 20:03, 20 ஏப்ரல் 2013 (UTC)
- நன்றி. இரவி. திட்டத்தை உருவாக்கிக் கொள்கிறேன். எனது பங்களிப்பு பெரும்பாலும் அறிவியல், மின்னணுவியல் துறை சார்ந்ததாக இருக்கும். துப்புரவு வேலைகளையும் செய்ய ஆர்வமுண்டு. --இராஜ்குமார் (பேச்சு) 20:37, 20 ஏப்ரல் 2013 (UTC)
இனிசியல்(Initial) சுருக்கப் பெயருக்கு வழிமாற்று உருவாக்கலாமா?
தொகுசில நபர்கள் தங்கள் பெயர்களைப்போலவே தங்கள் இனிசியலினாலும் பரவலாக அறியப்படுகிறார்கள், அதுபோன்ற நபர்களின் கட்டுரைகளுக்கு இனிசியல் தலைப்பில் ஒரு வழிமாற்று உருவாக்க (எம். ஜி. ஆர்-க்கு இருக்கிறது) விதிமுறைகள் ஏதேனும் இருக்கிறதா?. இந்தப்பக்கத்தைக் எஸ். எஸ். ஆர் கவனிக்கவும் இதற்காகத்தான் கேட்டுள்ளேன். சில பக்கங்களில் எஸ். எஸ். ஆர்-க்கு, எஸ். எஸ். ராஜேந்திரன் கட்டுரைக்கு நான் இணைப்பு ஏற்படுத்தியுள்ளேன். ஆனாலும், இதன் பிறகு உருவாக்கப்படும் கட்டுரைகளிலும் விக்கியர்கள் எஸ். எஸ். ஆர் என்று பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம், மீண்டும் சிகப்பிணைப்புகளைக் கண்டறிந்து மாற்றுவது ஒரு வேலையாகவே தொடரக்கூடும். கி. கார்த்திகேயன் (பேச்சு) 06:30, 24 ஏப்ரல் 2013 (UTC)
Hi, sorry for writing in English. I'm writing to ask you, as a bureaucrat of this wiki, to translate and review the notification that will be sent to all users, also on this wiki, who will be forced to change their user name on May 27 and will probably need your help with renames. You may also want to help with the pages m:Rename practices and m:Global rename policy. Thank you, Nemo 17:16, 3 மே 2013 (UTC)
விக்கித்திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம், Ravidreams/தொகுப்பு 8!
தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் சைவம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
இந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.
- உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவலாம். குறுங்கட்டுரையாக தொடங்கி, தக்க ஆதாரங்களைச் சேர்த்து உதவலாம். படங்களை இணைத்து கட்டுரைகளை மேம்படுத்தலாம்.
- சைவ சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள் என்ற பகுப்பிலுள்ள குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி சிறப்புக் கட்டுரைகளாக மாற்றலாம்.
- ஏற்கனவே உள்ள சைவ சமய கட்டுரைகளில் உள்ள பிழைகளை திருத்தலாம்.
- விக்கித்திட்டம் சைவத்தில் பங்களிப்பவர்களுக்கு வழிகாட்டலாம். சிறப்பாக பங்களிப்போருக்கு பதக்கங்களை கொடுத்து ஊக்கப்படுத்தலாம்.
தங்களுடைய நிர்வாகப்பணிகளுக்கிடையே சில வழிகாட்டல்களை விக்கித்திட்டம் சைவத்திற்கு அளித்து மேம்படுத்த உதவிபுரிய வேண்டும் நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:30, 5 மே 2013 (UTC)