பயனர் பேச்சு:Ravidreams/தொகுப்பு 9
உங்களுக்குத் தெரியுமா?
தொகுநீங்கள் பங்களித்த அந்துருண்டை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 15, 2013 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த பிபிசி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஆகத்து 28, 2013 அன்று வெளியானது. |
தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்...
தொகுவணக்கம், ரவி!
- விக்கிப்பீடியா:ஆலமரத்தடி பகுதியில் நீங்கள் ஆரம்பித்த 'தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்' எனும் தலைப்பின் கீழ் எனது 'முன்மொழிவு' ஒன்றினை வைத்துள்ளேன்; பாருங்கள்!
- 'தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்' எனும் தலைப்பில் திட்டப் பக்கம் ஒன்றினை ஆரம்பித்துவிடுங்களேன். முன்மொழிவுகள், திட்டமிடல் அனைத்தையும் அங்கு இற்றைப்படுத்தி வந்தால் பணிகள் கொஞ்சமாவது எளிதாக இருக்கும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:48, 25 மே 2013 (UTC)
வணக்கம், ரவி!
கடந்தஓராண்டாக நாகப்பட்டினத்தில் தினத்தந்தி செய்தியாளராக பணியாற்றி வருகிறேன்.--ஹிபாயத்துல்லா (பேச்சு) 09:18, 29 சூன் 2013 (UTC)
கருத்து தேவை
தொகுமுதற்பக்க இற்றைப்படுத்தல் மாற்றம் பற்றி தங்கள் கருத்தினைத் தர வேண்டுகிறேன் - விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு--சோடாபாட்டில்உரையாடுக 06:13, 29 மே 2013 (UTC)
இந்து, வைணவ, சைவம் சார் கட்டுரைகளை இணைக்க வேண்டல்
தொகுதொடர் கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகளில் குறைந்த அளவே இந்து சமயம் சார்ந்த கட்டுரைகள் இருக்கின்றன. இவற்றை வரும்காலத்தில் அதிகப்படுத்த கீழ்கண்ட பட்டியல் கட்டுரைகளை தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள்
- வலைவாசல்:இந்து சமயம்/தேவைப்படும் கட்டுரைகள்
மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:55, 31 மே 2013 (UTC)
- செகதீசுவரன், நீங்கள் போட்டியில் பங்கெடுப்பது கண்டு மகிழ்ச்சி. போட்டிக்கான தலைப்புகள் யாவும் http://meta.wikimedia.org/wiki/List_of_articles_every_Wikipedia_should_have பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளே. எனவே, குறிப்பிட்ட எந்த ஒரு துறை குறித்தும் குறைவான கட்டுரைகளே இருக்கும். இங்குள்ள கட்டுரைகளை விரிவாக்கி முடிந்தவுடன் ஒவ்வொரு துறை சார்ந்தும் முக்கியமான கட்டுரைகளைத் தலைப்புகளாக அறிவிக்க முனைவோம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்-2 இன்னும் கூடுதல் கட்டுரைகள் காணக் கிடைக்கும்.--இரவி (பேச்சு) 06:24, 1 சூன் 2013 (UTC)
- கிறிஸ்தவம் சார்ந்த ஏகம் கட்டுரைகள் முக்கியமானவையாக உள்ளன. ஆங்கில விக்கியில் அதிகம் பங்களிப்பவர்கள் அவர்கள் என்பதாலும் இருக்கலாம். தேவைப்படும் கட்டுரைகளை உருவாக்க இது சிபாரிக இருக்குமென கூறினேன். எல்லாவற்றிக்கும் விக்கப்பீடியா ஒரு வழமையைப் பின்பற்றுகிறது என்பதை அறிந்து வியப்புருகிறேன் நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:44, 25 சூன் 2013 (UTC)
மலேசிய வானொலி பேட்டி
தொகுஅன்புள்ள சகோதர்களுக்கு, நம்முடைய விக்கிப்பீடியாவின் அதிகாரிகளில் ஒருவரான செல்வசிவகுருநாதன் Selvasivagurunathan நேற்று 30.05.2013இல் மலேசிய வானொலிக்கு ஒரு பேட்டி அளித்து இருந்தார். அதில் விக்கிப்பீடியாவின் செயலாக்கங்ளைப் பற்றி விரிவாகச் சொல்லி இருந்தார். மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பேட்டியின் இறுதியில் அவர் பயன்படுத்திய வாசகங்கள் என்னை மிகவும் பாதித்துவிட்டன.
அவர் சொன்னார் ‘மலேசியாவில் இருந்து இதுவரை யாரும் எழுதவில்லை. நிறைய பங்களிப்பாளர்கள் தேவை. நீங்களும் எழுதலாமே’ என்று பேட்டி எடுத்தவரையே கேட்டுக் கொண்டார்.
அதைக் கேட்ட போது என் மனம் நொறுங்கிப் போனது. என் பெயரைச் சொல்ல வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்க்கவும் கூடாது. ஆனால், யாருமே எழுதவில்லை என்று சொன்னதுதான் என்னையும் என் மனைவியையும் மிக மிகப் பாதித்துவிட்டது.
யார் என்ன சொன்னாலும் சரி சொல்லாவிட்டாலும் சரி, நான் எழுதிக் கொண்டுதான் இருப்பேன். இது என்னுடைய விக்கிப்பீடியா.மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு) --ksmuthukrishnan 05:43, 1 சூன் 2013 (UTC)
மலேசிய வானொலியின் தலைவர் பார்த்தசாரதி
தொகுவணக்கம். selvasivagurunathan பேட்டி கொடுக்கவில்லை என்று சொல்கிறார். நல்லது. மலேசிய வானொலியின் தலைவர் பார்த்தசாரதி அவர்களுடன் பேசினேன். selvasivagurunathan கொடுத்த பேட்டியை விக்கிப்பீடியாவுக்கு அனுப்பலாமா? போதுமான சான்றுகள் இல்லாமல் எதையும் எழுதக்கூடாது என்பது தொடர்ந்து வரும் நம்முடைய நம்பிக்கை.--ksmuthukrishnan 05:52, 2 சூன் 2013 (UTC)
வலி சுமக்கும் வரலாறு
தொகுஇந்தத் தலைப்பில் என்னுடைய வலைப்பதிவில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். இதை எப்படி திருத்தி நம்முடைய விக்கிப்பீடியாவிற்கு கொண்டு வரலாம். உங்கள் கருத்துகள் தேவை. (மலாக்கா முத்துக்கிருஷ்ணன்) (பேச்சு)--ksmuthukrishnan 06:11, 3 சூன் 2013 (UTC)
கடல் அலை ஆற்றல் எதிர் அலை மின்சாரம்
தொகுதங்களின் கவனம் [இங்கு] ஈர்க்கப்படுகிறது.--மணியன் (பேச்சு) 04:47, 10 சூன் 2013 (UTC)
பாராட்டுப் பத்திரப் பணி!
தொகுவணக்கம், ரவி!
இப்பணி குறித்த எனது மறுமொழி, எனது பேச்சுப்பக்கத்தில் இருக்கிறது; பார்க்கவும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:50, 27 சூன் 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்
தொகுஇது ஒரு நல்ல ஏற்பாடு. அந்த நாட்களில் நான் சென்னையில் இருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். ஆதலால் கலந்துகொள்ள இயலாது என்று நினைக்கிறேன். வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 14:02, 1 சூலை 2013 (UTC)
வாழ்த்துக்கள் இரவி
தொகுமுன்னின்று நடாத்தும் தொடர்கட்டுரைப் போட்டி பெருவெற்றி கண்டுள்ளதாக உணர்கின்றேன். வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:15, 2 சூலை 2013 (UTC)
- நன்றி, சிவக்குமார். இந்தப் பாராட்டை ஒரு பதக்கமா கொடுத்தீங்கன்னா சட்டையில குத்திக்குவேன் :)--இரவி (பேச்சு) 12:37, 4 சூலை 2013 (UTC)
2013 தொடர் கட்டுரைப் போட்டி. சூலை, 2013
தொகுதேதி இன்றோடு ஐந்தாகிவிட்டது :) தாமதமில்லாமல் விரைந்து உங்கள் பங்களிப்புகளை தரவும்.--அராபத் (பேச்சு) 05:02, 5 சூலை 2013 (UTC)
- அடடா, நான் மற்றவர்களை வேண்டலாம் என்றிருந்தால் நீங்கள் என்னை வேண்டுகிறீர்கள் ! போன மாதமே போட்டியில் பங்கு கொண்டு நானும் (இ)ரவுடி தான்னு காட்டலாம்னு நினைச்சேன் :) இந்த முறை கண்டிப்பா வண்டியில ஏறிடுறேன் :)--இரவி (பேச்சு) 05:37, 5 சூலை 2013 (UTC)
- வாங்க வாங்க. வண்டி தயாரா இருக்கு :)--அராபத் (பேச்சு) 06:53, 5 சூலை 2013 (UTC)
தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு
தொகுகண்டிப்பாகக் கலந்து கொள்கிறேன். தேவைகள் இருப்பின் பிறகு சொல்கிறேன். நன்றி. காலம் தாழ்ந்து பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்.--பரிதிமதி (பேச்சு) 04:27, 20 சூலை 2013 (UTC)
சிவன் கட்டுரையை கவனிக்கவும்
தொகுசிவன் கட்டுரையை சற்று மேம்படுத்தியுள்ளேன். எனினும் உள்ளடக்கங்கள் போதுமானவையாக உள்ளமையா அல்லது இணைக்கப்படவேண்டியது ஏதேனும் விடுபட்டுள்ளதா என்று கண்டு பரிந்துரைக்க வேண்டுகிறேன். அத்துடன் போதுமான இடங்களில் ஆதாரங்கள் இல்லாத பொழுது அவ்வரிகளில் ஆதாரம் தேவை என்பதையும் இணைத்தால் இன்னும் சிறப்பாக்க முடியும். தென்காசியாரின் பேச்சுப் பக்கத்தில் சிறப்பு கட்டுரைகள் குறித்து ஆதரவு தெரிவித்தமைக்கு நன்றி. எனினும் போதுமான கவனம் பெறாமலேயே அப்பக்கம் உள்ளது. சிவன் கட்டுரை வருங்காலத்தில் சிறப்புகட்டுரையாகும் என்பதில் ஐயமில்லை.அதற்கு தங்கள் வழிகாட்டல்களையும் தர வேண்டுகிறேன். அன்புடன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:33, 21 சூலை 2013 (UTC)
உதவி இரவி!
தொகு- வணக்கம். இந்த பயனர் ( krishnamoorthy1952) தன்னுடைய கடவுச்சொல்லை மறந்து விட்டதால் பயனர் கணக்கை உபயோகப்படுத்த முடியாமல் உள்ளார். நீங்கள் இவருக்கு உதவ முடியுமா? நன்றி! --நந்தகுமார் (பேச்சு) 17:40, 31 சூலை 2013 (UTC)
- sysop அணுக்கத்துடன் இதனைச் சரி செய்ய முடியாது. அதிகாரிகளாலும் முடியுமோ தெரியாது. இரவியிடம் கேட்டுப் பாருங்கள். மின்னஞ்சல் முகவரி விக்கியில் பதியப்பட்டிருக்கவில்லையா? மின்னஞ்சல் பதியப்பட்டிருந்தால் இலகுவாக அவரே மாற்றலாம்.--Kanags \உரையாடுக 21:03, 31 சூலை 2013 (UTC)
- இதில் அதிகாரி அணுக்கம் உள்ள பயனர்களும் ஒன்றும் செய்ய இயலாது. அவர் பதிவு செய்த மின்மடல் முகவரிக்கு அணுக்கம் இருந்தால் http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:PasswordReset சென்று கடவுச் சொல்லை மீட்க முனையலாம். எது அவரது மின்மடல் முகவரி என்ற குழப்பம் இருந்தால், அதனைத் தெளிவுபடுத்தும் பொருட்டு அவரது பயனர் பக்கத்தில் இருந்து ஒரு சோதனை மின்மடலை அனுப்பியுள்ளேன். அவருடன் தொலைப்பேசியில் பார்த்துவிட்டு என்ன செயலும் என்று பார்க்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 09:35, 1 ஆகத்து 2013 (UTC)
காந்தி
தொகுகாந்தி பேச்சுப்பக்கத்தை பார்க்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:06, 17 ஆகத்து 2013 (UTC)
பாராட்டுப் பத்திரப் பணி...
தொகுசில சொந்தக் காரணங்களுக்காக வேறு வேலைகளில் மனதளவிலும், உடல்ரீதியாகவும் செயல்பட வேண்டியிருப்பதால்... 'பாராட்டுப் பத்திரப் பணியினை செய்ய இயலவில்லை' என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேவைப்படுவதை நிறைவு செய்ய இயலாமைக்கு மிகவும் வருந்துகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:52, 20 ஆகத்து 2013 (UTC)
- பரவாயில்லீங்க. வேறு யாரும் இப்பணியைப் பொறுப்பெடுக்க முன்வருகிறார்களா பார்ப்போம். விரைவில் உங்கள் சிக்கல்கள் தீர வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 16:34, 21 ஆகத்து 2013 (UTC)
விக்கி பயிற்சி பட்டறை
தொகுஆம். எங்கள் பள்ளியின் (அறிவியல் மன்றம்/தகவல் தொழில்நுட்ப மன்றம் சார்பாக) விக்கி பயிற்சி பட்டறை ஒன்றை சூர்யாவின் உதவியுடன் நடத்தினோம்; படிமங்களை ஓரிரு நாட்களில் பதிவேற்றிடலாம் என எண்ணுகிறேன். ஊக்கத்திற்கு நன்றி.--பரிதிமதி (பேச்சு) 17:07, 25 ஆகத்து 2013 (UTC)
- இரவி!
எம் பள்ளியில் நடந்த விக்கிபீடியா விழிப்புணர்வு பட்டறையின் நிகழ்வுகளை இங்கு [1] பதிவேற்றியுள்ளேன். த. வி. யில் உரிய இடத்தில் உரிய உரையுடன் பதிவேற்றிடுமாறு வேண்டுகிறேன்.--பரிதிமதி (பேச்சு) 15:57, 26 ஆகத்து 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா சட்டைகள் தொடர்பாக
தொகுவணக்கம் நண்பரே, சட்டை வடிவமைப்பு பணிகளை அன்டன் அவர்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார் என்பதை தாங்கள் அறிவீர்கள். அடுத்த கட்டமாக தயாரிப்பு பணிகளில் தெளிவு பெறலாம் என்றிருக்கிறேன். 300 உரூபாய் மானியத்துடன் 50 சட்டைகள் என தாங்கள் விக்கிமீடியாவிடமிருந்து நிதி கோரியிருக்கின்றீர்கள். அதன் அடிப்படையில் small 3 (5%), medium 10(20%), large 20(40%), extra large 15(30%), XXL 2(5%) என உறுதி செய்திடலாம். (கிடைக்கும் நிதியடிப்படையிலும், சட்டை அச்சாளர்கள் ரூ 300 விடக் குறைத்துக் கொண்டாலும் இவ்வெண்ணிக்கையை மாற்றம் செய்திடலாம்). வருகின்ற வாரவிடுமுறையில் சில அச்சகங்களை அனுகி தங்களுக்கு தெரிவிக்கின்றேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:50, 29 ஆகத்து 2013 (UTC)
வடிவமைப்பு
தொகுவடிவமைப்பு தொடர்பான கருத்துக்களுக்கு நன்றி இரவி. அவசர வேலை நிமித்தம் 2-3 நாட்கள் வெளியூரில் இருப்பேன். உங்களதும் மற்றவர்களதும் கருத்துக்களுக்கேற்ப இறுதி வடிவமைப்பை அமைத்துவிடலாம். தாரிக்கிடமும் வடிவமைப்பு தொடர்பான உதவி கேட்டுள்ளேன். --Anton (பேச்சு) 14:45, 29 ஆகத்து 2013 (UTC)
- சரி, அன்டன். ஏற்கனவே நிறைய வடிவமைப்புகளை விரைந்து தந்து திக்குமுக்காட வைத்து விட்டீர்கள் :) ஊருக்குப் போய் வந்து விட்டுத் தொடருங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 17:33, 29 ஆகத்து 2013 (UTC)
நன்றி
தொகுநன்றி ஐயா, வெற்றியாளர்கள் எப்போது அறிவிக்கப்படுவர்?
நன்றி ரவி நந்தினிகந்தசாமி (பேச்சு) 22:11, 31 ஆகத்து 2013 (UTC)
கண்டிப்பாக, இவ்வளவு விருவிப்பாக கடைசி நேரத்தில் போட்டி ஏற்படும் என்று தெரிந்திருந்தால், ஆரம்பத்திலிருந்தே பணியாற்றி இருப்பேன்.
மிக்க நன்றி. உங்களால் தான் இத்தன கட்டுரை நான் எழுதினேன் , அத மறுக்க முடியாது.நீங்க மட்டும் எச்சரிக்கை செய்யலனா நான் மட்டும் இல்ல முத்துராமன் அவர்களும் இவ்வளவு எழுதி இருக்க மாட்டார். சொல்ல போனா உங்களுக்கு தான் பதக்கம் கொடுக்கனும், நந்தினிகந்தசாமி (பேச்சு) 06:48, 2 செப்டம்பர் 2013 (UTC)
தங்கள் பாரட்டுக்களுக்கு நன்றி ரவி முத்துராமன் (பேச்சு) 08:54, 2 செப்டம்பர் 2013 (UTC)
என்னை இன்னும் எத்தனை முறை நன்றி சொல்ல வைக்க போகிறீர்களோ! அடுத்த மாதமே 250 ப்க்கங்கள் வரும் என நினைக்கிறேன்.நந்தினிகந்தசாமி (பேச்சு) 08:59, 2 செப்டம்பர் 2013 (UTC)
பதிவேற்றம்
தொகுபதிவேற்றம் எவ்வாறு செய்ய வேண்டும்?நந்தினிகந்தசாமி (பேச்சு) 09:06, 2 செப்டம்பர் 2013 (UTC)
புகைபடத்தை பதிவேற்றம் செய்துவிட்டேன்.நந்தினிகந்தசாமி (பேச்சு) 09:50, 2 செப்டம்பர் 2013 (UTC) தாங்களுக்கு எனது நன்றி.--Muthuppandy pandian (பேச்சு) 09:54, 2 செப்டம்பர் 2013 (UTC)
250 முறை
தொகு250 முறை தான் தொகுக்க போகிறேன்.இவ்ளோ நம்பிக்கைய எம் மேல விக்கிபீடியர் எல்லாரும் வச்சிருக்கீங்களே!!!!!!! நான் ஒன்னும் அவ்ளோ நல்லவலாம் இல்ல...........நந்தினிகந்தசாமி (பேச்சு) 03:03, 3 செப்டம்பர் 2013 (UTC)
- விருப்பம்
- இருநூற்று ஐம்பது மைல்கல்லா?? சபா இப்பதான் ஆருதலா இருக்கு.இல்லனா நானும் தென்காசியாரும் பிறகு விட்டத்தப்பார்த்து வெறித்திருப்போம். :) :) :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 09:55, 3 செப்டம்பர் 2013 (UTC)
நன்றி
தொகு- நீங்கள் கூறியதை கருத்தில் கொள்கிறேன். தங்கள் ஆதரவுக்கு மிக்க நான்றி --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 16:10, 3 செப்டம்பர் 2013 (UTC)
இந்திய மொழிகள் விக்கி ஒப்பீடு
தொகுஉங்கள் கருத்திற்கு ஏற்ப சில கேள்விகளைத் தயாரித்துள்ளேன். அவற்றைத் திருத்தி, உங்களுக்கு அறிமுகமான பிற மொழி விக்கியரிடம் இவற்றைக் கூறி பதில் பெற்றுத் தந்தால் நன்றாக இருக்கும் நன்றி! இங்கே காண்க -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:02, 11 செப்டம்பர் 2013 (UTC)
வேண்டுகோள்...
தொகுவணக்கம் ரவி!
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/நிதித் திரட்டு/புரவலர்கள் எனும் பக்கத்தை துவக்கியுள்ளேன். இப்பக்கத்தினை தேவைக்கேற்ப உரிய முறையில் வடிவமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- 'பத்தாண்டுகள்' கொண்டாடுவது குறித்து நீங்கள் முனைப்புடன் செயல்படுவது, மனதை நெகிழச் செய்கிறது. உங்களுக்கு உறுதுணையாக இருந்து பணியாற்ற என்னால் இயலாத சூழல் உள்ளது; வருந்துகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:54, 12 செப்டம்பர் 2013 (UTC)
- வணக்கம், சிவகுரு. புரவலர்கள் பக்கத்தை இற்றைப்படுத்தியுள்ளேன். அங்கு உங்களுக்கான குறிப்பும் உண்டு :) ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு பங்களிப்புகளைச் செய்து வருகின்றனர். உங்கள் சூழல் அறிவேன். எனவே, கவலை வேண்டாம். நிகழ்வில் சந்திப்போம் :)--இரவி (பேச்சு) 09:30, 13 செப்டம்பர் 2013 (UTC)
- கலந்து கொள்வோர் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் சௌந்தர மகாதேவன் என்பவருக்கான பேச்சுப் பக்கத்தில் எந்தவிதமான அழைப்புமிடப்படவில்லையே... ஏன்? அழைப்பு விடுங்கள்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 04:34, 19 செப்டம்பர் 2013 (UTC)
நன்றி
தொகுவணக்கம், அழைப்பிற்க்கு நன்றி. சில காரணங்களால் என்னால் வரமுடியவில்லை.--Muthuppandy pandian (பேச்சு) 05:04, 19 செப்டம்பர் 2013 (UTC)
அரங்கப் பதாகை
தொகுஅரங்கப் பதாகையின் அளவு (நீளம் x அகலம்) எப்படியிருக்க வேண்டும்? --Anton (பேச்சு) 03:56, 21 செப்டம்பர் 2013 (UTC)
அழைப்பிற்கு நன்றி
தொகுவணக்கம், தமிழ் விக்கி பத்தாம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவிற்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி. அலுவலக பணியின் காரணங்களால் என்னால் வர இயலாது..:( ஆனால், ஞாயிற்றுக்கிழமை கூடலுக்கு என்னை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்--ரத்ன சபாபதி (பேச்சு) 16:40, 21 செப்டம்பர் 2013 (UTC)
நன்றி
தொகுதங்களின் எதிர்பார்ப்புக்கு நன்றி.என்னிடம் நெட் பேக் இல்லை.அதனால் தான் பங்கு கொள்ளவில்லை.பதுங்கலாம் இல்லை. எல்லா நேரமும் வீசிக்கிட்டே இருந்தா அது பேரு காத்து, சூறாவளி எப்பயாவது தான் வீசும்.
பரிந்துரைகள் / ஆலோசனைகள் ...
தொகு- '(பாராட்டுச் சான்றிதழில்) யார் யாருக்கு யார் யார் கையெழுத்து வேண்டும், பட்டியல் தாருங்கள்' எனக் கேட்டுள்ளீர்கள். பயனர்கள் தானாகவே முன்வந்து இதைச் சொல்வதற்கு தயங்குவார்கள் என கருதுகிறேன். (உதாரணம்: தமிழ் விக்கி குமுகாயம் தனக்கு சான்றிதல் தருமா/தராதா என்பதனை சிவகுரு எப்படி தீர்மானிக்க இயலும்?) யார் யாருக்கெல்லாம் சான்றிதல் தரப்படவிருக்கிறதோ, அவர்களின் பெயர்களை நீங்களே பட்டியலிடுங்கள். உங்களால் விடுபட்ட பெயர்களை மற்ற பயனர்களும் சேர்க்கலாம். அதன்பிறகு பயனர்கள், நீங்கள் கேட்கும் தகவல்களை இடுவர். உங்கள் எண்ணமென்ன? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:08, 25 செப்டம்பர் 2013 (UTC)
- நெருங்கிய உறவினர் அல்லது நண்பரின் திருமண நிகழ்விற்கு செல்ல இயலாத சூழ்நிலையில், நாம் வாழ்த்துச் செய்தி அனுப்புகிறோம். வாழ்வுடன் ஒருங்கிணைந்துவிட்ட உறவான தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவையொட்டி நடக்கும் விழாவினில் கலந்துகொள்ள இயலாதவர்கள் (உதாரணம்: சிவகுரு), தங்களின் வாழ்த்துச் செய்தியினை தெரிவிக்க ஒரு வழி செய்யுங்கள். ஒரு திட்டத் துணைப் பக்கத்தினை இதற்காக ஆரம்பிக்கலாம். அவ்வப்போது வந்து சிறிய அளவில் பங்களிப்பு தரும் பயனர்களும் தமது வாழ்த்துகளைத் தெரிவிக்க இது ஏதுவாகும். விக்கியின் பயனீட்டாளர்களும் (வாசகர்கள்) தமது வாழ்த்துகளைத் தெரிவிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலமும் ஒரு ஒருங்கிணைப்பினை நாம் பெற இயலும். என்ன நினைக்கிறீர்கள்?--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:20, 25 செப்டம்பர் 2013 (UTC)
- ஆம் ஒரு பக்கத்தைத் தொடங்குவது அருமையான யோசனை.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:17, 25 செப்டம்பர் 2013 (UTC)
- பயனுள்ள பரிந்துரை! புதிய பயனர்களை ஈர்ப்பதற்கான நல்லதொரு வழியும் கூட!--பவுல்-Paul (பேச்சு) 16:59, 25 செப்டம்பர் 2013 (UTC)
பயனர்கள் தங்களுக்குச் சான்றிதழ் தாருங்கள் எனக் கேட்க கூச்சப்படலாம் என்பதை எண்ணிப் பார்க்கவில்லை. விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பகுதியில் உள்ள அனைவரும் சான்றிதழுக்கு உரியவர்களே. சிலர் அதில் இடம்பெறவில்லை. சிலர் அதற்குரிய தகவலை இன்னும் தரவில்லை. இன்னும் பலர் கடந்த சில மாதங்களில் நல்ல பங்களிப்புகளைத் தந்திருக்கிறார்கள். இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு சான்றிதழ் பெற இருப்போரின் பட்டியலை நீங்களோ இன்னும் சிலருடன் இணைந்து குழுவாகவோ செய்து தந்தால் உதவியாக இருக்கும். தொகுப்புகள் எண்ணிக்கை, ஒட்டு மொத்தப் பங்களிப்பு என்பது போல் ஏதேனும் ஒரு வரையறையைக் கொண்டால் பட்டியல் தெரிவு புறவயமாக இருக்கும். இந்த சான்றிதழ் யோசனையை வழங்கியவர் என்ற முறையில் இதனைப் பொறுப்பெடுக்க முடியுமா? பட்டியல் இறுதியான பின் ஒவ்வொருவரிடம் யார் கையெழுத்து வேண்டும் எனக் கேட்கலாம். நிகழ்வுக்கு வருபவர்கள் நேரடியாக இந்த விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.
நிகழ்வுக்கான நாட்கள் குறைவாக இருப்பதால் இதனை விரைந்து செய்து முடிக்கவேண்டியுள்ளது.
ஏற்கனவே விக்கிப்பீடியா வாழ்த்துகள் பக்கத்தை இதற்காகவே தொடங்கி உள்ளேன். அதில் /பொது என்று ஒரு துணைப்பக்கம் உருவாக்கி அனைவரின் வாழ்த்துகளையும் கோரலாம். நன்றி. --இரவி (பேச்சு) 19:45, 25 செப்டம்பர் 2013 (UTC) ஆயிற்று --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:59, 26 செப்டம்பர் 2013 (UTC)
- 3. 'பத்தாண்டுகள் கொண்டாட்டம்' குறித்து பல்வேறு ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஒரு திட்டத் துணைப் பக்கத்தினை துவக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நமது விரைவான பார்வைக்கு இது எந்நாளும் உதவிகரமாக இருக்கும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:50, 25 செப்டம்பர் 2013 (UTC)
சிவகுரு, இதை நீங்கள் என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கக்கூட வேண்டாம் :) நீச்சல்காரன் புதிர் போட்டி செய்வது போல் அனைத்துப் பயனர்களும் தத்தம் பரிந்துரைகளைத் தாங்களே முன் வந்து ஒருங்கிணைத்தால் நன்றாக இருக்கும். வழக்கம் போல் தேவைப்படும் மாற்றங்களை மற்ற பயனர்கள் பேச்சுப் பக்கத்தில் தெரிவிப்பார்கள். ஒரு சில பேரே களப்பணிகளில் ஈடுபட்டிருப்பதால் கடுமையான பணிப்பளுவில் இருக்கிறோம். --இரவி (பேச்சு) 19:53, 25 செப்டம்பர் 2013 (UTC) ஆயிற்று --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:59, 26 செப்டம்பர் 2013 (UTC)
- ரவி, எனக்குப் புரிகிறது. வழக்கம்போல, அலுவலகப் பணியின் காரணமாக நான் பூட்டப்பட்டுவிட்டேன். எனக்கும் வேறு யாரிடம் என்னுள் தோன்றுவதைத் தெரிவிப்பது எனத் தெரியவில்லை; எனவே உங்களிடம் கொட்டுகிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:00, 25 செப்டம்பர் 2013 (UTC)
ஓ..அப்ப சரி :) எனக்கும் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக ஏதாவது தோன்றுகிறது. 2014 செப்டம்பர் முடியும் வரை கூட பத்தாண்டுகளைக் கொண்டாடலாம். நிகழ்வுக்குப் பிறகும் என்ன செய்யலாம் என்பது குறித்த ஆலோசனைகளை WP:10t பக்கத்திலோ உரிய விக்கிப்பீடியா பக்கம், துணைப்பக்கத்தின் பேச்சுப் பக்கத்திலோ குறிப்பிடுங்கள். என்னுடைய பேச்சுப் பக்கத்தில் இடுவது பலரது கவனிப்புக்கு வராமல் போகலாம். வருங்கால ஆவணப்படுத்தல்களுக்கும் பயனர் பேச்சுப் பக்கங்கள் அவ்வளவாக உதவ மாட்டா. --இரவி (பேச்சு) 20:04, 25 செப்டம்பர் 2013 (UTC)
- சரி, அவ்விதமே செய்கிறேன். உங்களின் ஓய்வற்ற களப்பணியின் கடுமையினை என்னால் உணர முடிகிறது.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:16, 25 செப்டம்பர் 2013 (UTC)
வேண்டுகோள்...
தொகுவணக்கம் இரவி
விக்கியின் பத்தாம் ஆண்டு கொண்ட்டாத்திற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும் திருச்சியிலும் (குறிப்பாக புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில்) பத்தாம் ஆண்டு நிறைவு விழாவினை நடத்த முடிந்தால் நன்றாக இருக்கும். --முரளிதரன்
ஏன் மறந்துவிட்டீர்கள்
தொகுவணக்கம் இரவி. விக்சனரியில் அதிகமாகப் பங்களித்து வரும் பயனர்:பழ.கந்தசாமி அவர்களை ஏன் மறந்துவிட்டீர்கள்? தற்பொழுது, எனக்கு அளிக்க உள்ள சான்றிதழை அவருக்கு அளித்துவிடுங்கள். எனக்குப் பிறகு புதியதாக அடிக்கும்போது பார்த்துக்கொள்ளலாம். நன்றி--நந்தகுமார் (பேச்சு) 20:09, 27 செப்டம்பர் 2013 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியாவிற்கான பத்தாண்டுகள் என்பதால் விக்சனரி பயனர்கள் விடுபட்டுப்போயிருக்கலாம். :( மேலும், அவர் அமெரிக்காவில் இருக்கிறார் என நினைக்கிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:44, 2 அக்டோபர் 2013 (UTC)
- தமிழ்க்குரிசில், விக்கிப்பீடியா, விக்சனரி என்றெல்லாம் பிரித்துப் பார்க்கவில்லை. பண்பாட்டுச் சுற்றுலாவுக்கே அவரை அழைக்க வேண்டும் என்று தான் எண்ணினேன். ஆனால், அவர் அமெரிக்காவில் இருப்பதால் வர வாய்ப்பிலை என்று விட்டுவிட்டேன். சான்றிதழ் அளிக்கும் பணியை சிவகுரு பொறுப்பெடுத்துச் செய்து வருகிறார். யார் யாருக்குச் சான்றிதழ்கள் வழங்கலாம் என்ற பரிந்துரையை விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/பாராட்டுப் பத்திரங்கள் பக்கத்தில் இடலாம்.--இரவி (பேச்சு) 14:51, 2 அக்டோபர் 2013 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியாவிற்கான பத்தாண்டுகள் என்பதால் விக்சனரி பயனர்கள் விடுபட்டுப்போயிருக்கலாம். :( மேலும், அவர் அமெரிக்காவில் இருக்கிறார் என நினைக்கிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:44, 2 அக்டோபர் 2013 (UTC)
பதக்கம்
தொகுசிறந்த ஒருங்கிணைப்பாளர் | ||
தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாம் ஆண்டு விழாக் கொண்டாத்தை சிறப்பாக ஒருங்கிணைத்து வழிநடத்தியமைக்காக சிறந்த ஒருங்கிணைப்பாளர் என்னும் பட்டம் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். --Anton (பேச்சு) 02:07, 28 செப்டம்பர் 2013 (UTC) |
வழமையாக நீங்கள்தான் சக பயனர்களுக்கு பதக்கம் வழங்கவீர்கள். அதில் கொஞ்சம் மாற்றம் இருக்கட்டுமே! :) --Anton (பேச்சு) 02:07, 28 செப்டம்பர் 2013 (UTC)
- விருப்பம் இருநாட்கள் விக்கிப்பீடியர்களை சந்திக்கவும், அளவளாவ வாய்ப்பும் ஏற்படுத்தி தந்தமைக்காகவும், சட்டை அச்சுப்பணியில் இறுதி இருநாட்கள் மிகத்தீவிரமாக களப்பணியாளராக செயல்பட்டு எனக்கு ஓய்வளித்தமைக்கும் மிக்க நன்றிங்க. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:59, 30 செப்டம்பர் 2013 (UTC)
- விருப்பம் ஏற்கனவே கொண்டாட்டத்தின்போது பங்களிப்பாளர் அறிமுகத்தில் உங்களை வாழ்த்தி நான் அளித்த தமிழ் விக்கிப்பீடியா செயல்வீரர் பட்டத்தை இங்கும் பதிகிறேன், இரவி.
- விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:37, 2 அக்டோபர் 2013 (UTC)
- விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:54, 2 அக்டோபர் 2013 (UTC)
- விருப்பம் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 08:27, 2 அக்டோபர் 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா செயல்வீரர் | ||
கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ் விக்கிப்பீடியா முன்னெடுத்த முக்கிய திட்டங்கள் அனைத்திலும் அயராது உழைத்து முக்கிய பங்காற்றி வெற்றிபெறச் செய்தமைக்காக உங்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா செயல்வீரர் எனும் பட்டம் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இத்திட்டங்களில் உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள். -- சுந்தர் \பேச்சு 11:27, 30 செப்டம்பர் 2013 (UTC) |
- விருப்பம்--Kanags \உரையாடுக 11:56, 30 செப்டம்பர் 2013 (UTC)
- விருப்பம்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:12, 1 அக்டோபர் 2013 (UTC)
- விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:37, 2 அக்டோபர் 2013 (UTC)
- விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:53, 2 அக்டோபர் 2013 (UTC)
- விருப்பம் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 08:27, 2 அக்டோபர் 2013 (UTC)
- விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:42, 2 அக்டோபர் 2013 (UTC)
பதக்கம் அளித்துப் பாராட்டியோருக்கும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. சரியான நேரத்தில் கிடைத்த பதக்கம் :)--இரவி (பேச்சு) 14:40, 2 அக்டோபர் 2013 (UTC)
request
தொகுkindly give link from site notice to Vaazhththukal support page, so that tamil users and readers can pour their greetings! Mr. Paul has already posted his greetings there! regards selvasivagurunathan
முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு
தொகுநீங்கள் பங்களித்த ஆழிப்பேரலை என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் செப்டம்பர் 29, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
புதுப்பயனர் கட்டுரை வார்ப்புரு
தொகுவணக்கம் நண்பரே,
விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்த்தின் காரணமாக பல புதிய பயனர்கள் வருகை தருகின்றார்கள். அவர்களின் கட்டுரைகளில் விக்கியின் புரிதல் இன்றி இருப்பதனால் சில காலம் தாமதித்து நீக்கம் செய்ய வேண்டுகிறேன். உடனடியாக நீக்கப்பெறும் பொழுது பயனர்களுக்கு விக்கியின் மீதான ஆர்வம் குறையவும் புரிதலில் தவறு ஏற்படவும் வாய்ப்புள்ளது என்பதனால், புதிய பயனர்களின் கட்டுரைகளில் சேர்க்க புதிய வார்ப்புரு அமைக்கப்பெற்றுள்ளது. இதனை பயன்படுத்த: {{புதுப்பயனர் கட்டுரை|புதுப்பயனரின் பெயர்|date=இன்றய திகதி}} என இடுக. இதில் புதுப்பயனரின் பெயரும், திகதி கட்டாயமல்ல. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:55, 30 செப்டம்பர் 2013 (UTC)
- நன்றி செகதீசுவரன். மேலும், நம் கூடலில் இன்னும் சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன. காட்டாக, புதியோரின் கட்டுரைகள் முதலில் தனிப்பெயர்வெளியிலோ அவர்தம் பயனர்பக்கத்தின் துணைப்பக்கமாகவோ உருவாகும்படி செய்வது. இது போன்ற மாற்றங்களையும் செய்யலாம். -- சுந்தர் \பேச்சு 02:48, 1 அக்டோபர் 2013 (UTC)
- நல்ல ஆலோசனை. புதிய பயனர்கள் முதலில் தனிப்பெயர்வெளியிலோ அவர்தம் பயனர்பக்கத்தின் துணைப்பக்கத்திலோ எழுதி பழக வேண்டுகிறேன்.
இதை புதிய பயனர்களுக்கான குறிப்புகளில் சேர்க்கலாமே புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 08:25, 2 அக்டோபர் 2013 (UTC)
நன்றி
தொகுசெங்கைப்பொதுவன் ஐயாவின் கையெழுத்து கிடைக்காதோ என்ற மணக்குறை எனக்கு இருந்தது. அதனால் என்ன அவரை வைத்தே சான்றிதழை வழங்கி பட்டையை கிளப்பியதற்கு நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:09, 1 அக்டோபர் 2013 (UTC)
நன்றி
தொகுநண்பர் இரவி ,உங்களது பாராட்டிற்கு மிக்க நன்றி. ஆண்டிற்கு 1000 கட்டுரைகள் ( முடிந்த அளவு தரவுகளோடு ) எழுத வேண்டும் என்ற இலக்கோடு எழுதிக் கொண்டிருக்கிறேன்.இவ்வளவு நாட்களும் இதைச் செய்யாமல் தவறவிட்டுவிட்டேனே என்ற ஆதங்கத்துடனே எழுதுகிறேன். உங்களின் வழிகாட்டுதல்கள் எனக்குத் தேவை. உங்களின் பாராட்டு என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. தமிழோசையில் உங்களின் செவ்வி நன்றாக இருந்தது. நன்றி.ஆர்.பாலா (பேச்சு) 06:52, 2 அக்டோபர் 2013 (UTC) நண்பர் இரவி ,எனக்கு பாராட்டளித்து உற்சாகப்படுத்தியமைக்கு நன்றி ! நிச்சயமாய் பயன் கருதி கட்டுரைகளை எழுதுவேன் என நம்பிக்கை கூறுகிறேன்.ஆர்.பாலா (பேச்சு) 07:42, 2 அக்டோபர் 2013 (UTC)
- பாலா, எந்த உதவியானாலும் தயங்காமல் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். உங்கள் இலக்கை எட்டும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 14:42, 2 அக்டோபர் 2013 (UTC)
நிர்வாகப் பொறுப்பு பற்றிய உங்கள் உரைக்குப் பதில்
தொகுதங்களுக்கு எனது பேச்சுப் பக்கத்தில் தகவல் உள்ளது --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:08, 3 அக்டோபர் 2013 (UTC)
- என்னுடையப் பேச்சுப் பக்கத்திலும் தங்களுக்கு என் மறுமொழி உள்ளது.--நந்தகுமார் (பேச்சு) 07:43, 3 அக்டோபர் 2013 (UTC)
நன்றி
தொகுதாங்களின் பதக்கத்திற்க்கு நன்றி. தமிழ் விக்கிக்கு என்னால் முடிந்த உதவி செய்கிறேன்--Muthuppandy pandian (பேச்சு) 07:38, 3 அக்டோபர் 2013 (UTC)
தமிழ் விக்கிக்கு தேவைப்படும் கருவிகள் குறித்து வழிகாட்டல் தேவை
தொகுவணக்கம் நண்பரே, தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்ட சென்னை கூடலின் பொழுது பல பயனர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் தேவைப்படுகின்ற கருவிகள் குறித்து அறிய முடிந்தது. அவ்வாறான தேவைகளை ஒருங்கினைத்து ஒரே பக்கத்தில் சரியான விளக்கத்துடன் தரும் பொழுது நிரலியில் பயற்சிப் பெற்ற தன்னாலர்வர்கள் உதவ முன்வருவார்கள் என்பதால் இங்கு அதற்கான பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பக்கத்தில் தங்களுடைய மேலான வழிகாட்டல்களையும், சிறப்பான எண்ணங்களையும் முன்வைக்க வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:28, 4 அக்டோபர் 2013 (UTC)
சிறப்புப் படங்கள் பக்கம் குறித்து
தொகுவணக்கம் நண்பரே, விக்கிப்பீடியா:சிறப்புப் படங்கள் என்ற பக்கத்தினை 2006 ஆம் ஆண்டு உருவாக்கியிருக்கின்றீர்கள். அதன் நோக்கம் முதற்பக்கத்தில் படங்களை காட்சி படுத்துவது என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம் என்ற பக்கமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்தொகுப்பிலிருந்து காட்சிபடுத்தப்பட்ட கட்டுரைகளை எடுத்து சிறப்புப் படங்கள் பகுதியில் இயற்றைப்படுத்திவிடலாமா?. வலைவாசல்:உள்ளடக்கங்கள் பகுதியில் இணைப்பினை சொடுக்கி வரும் புதியவர்களுக்கு படங்கள் மட்டுமே காட்சிபடுத்தப்பட்டு இருக்கும் சிறப்புப் படங்கள் பகுதி உற்சாகம் தரும் என நினைக்கறேன். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:49, 5 அக்டோபர் 2013 (UTC)
- தற்போது இந்தத் திட்டத்தில் முனைப்பாக இருக்கும் பங்களிப்பாளர்களுடன் கலந்து பேசி உரிய மாற்றங்களைச் செய்து விடுங்கள். வெகு நாட்களாக இதில் ஈடுபடாததால், எனக்குத் தனிப்பட்ட கருத்து ஏதும் இல்லை.--இரவி (பேச்சு) 09:53, 5 அக்டோபர் 2013 (UTC)
- நன்றி நண்பரே, தற்போது ஓரளவிற்கு செய்துள்ளேன். கூடுதலாக சில தலைப்புகளின் கீழ் படங்களை கொண்டுவந்தால் சிறப்பானதாக மாறிவிடும். :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:25, 6 அக்டோபர் 2013 (UTC)
நன்றி..!
தொகுகுடும்பப் பொறுப்புகளையும், தொழிலையும் ஒதுக்கி வைத்துவிட்டு... தமிழ் விக்கிப்பீடியாவின் ஒரு முக்கிய நிகழ்வினை போராடி நடத்திக் காட்டினீர்கள். எந்த வேலையிலும் நான் உதவாவிட்டாலும், என்னென்ன வேலைகள் எல்லாம் நடக்கின்றன என்பதனை தொடர்ந்து திட்டத்தின் பக்கங்களில் நான் படித்து வந்தேன். என்னைப் போலவே மற்ற பயனரும் தங்களின் உழைப்பினை அறிவர். எது குறித்தும் வருந்தாது, கலங்காது... அடுத்து வரும் நாட்களில் உங்களின் சொந்த வேலைகளில் கவனம் செலுத்துங்கள். புத்துணர்வு பெற்று மீண்டும் வாருங்கள்; அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழ் விக்கியின் அடுத்த நிலைக்கு நம்மால் இயன்றதைச் செய்வோம். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:01, 5 அக்டோபர் 2013 (UTC)
- ஊக்கத்துக்கு நன்றி, சிவகுரு. உங்களை நிகழ்வில் காண முடியாதது பலருக்கும் ஒரு பெரும் குறையாக இருந்தது :( --இரவி (பேச்சு) 07:54, 7 அக்டோபர் 2013 (UTC)
விக்கிமூலம் - உதவி தேவை
தொகுதற்பொழுது விக்கிமூலத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கு சில நிரல்களில் மாற்றம் வேண்டும் (நான்கடி செய்யுள், ஈரடி செய்யுள் ஒவ்வொரு வரியிலும் <br/> குறியீடு இட வேண்டியுள்ளது), உதவி தேவை. யாரிடம் கேட்பது? -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:22, 7 அக்டோபர் 2013 (UTC)
- குறிப்பாக, யாரும் தோன்றவில்லை. தொழில்நுட்ப ஆலமரத்தடியில் கேட்டுப் பாருங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:22, 9 அக்டோபர் 2013 (UTC)
பெயர் மாற்றம்
தொகுவிக்கிப்பீடியா:அதிகாரிகளுக்கான அறிவிப்புப்பலகை - இங்கே கொஞ்சம் கவனியுங்கள். --Anton (பேச்சு) 02:38, 8 அக்டோபர் 2013 (UTC)
- ஆயிற்று--இரவி (பேச்சு) 04:55, 8 அக்டோபர் 2013 (UTC)
- நன்றி இரவி. --Anton·٠•●♥Talk♥●•٠· 04:58, 8 அக்டோபர் 2013 (UTC)
முன்பக்க இற்றைப்படுத்தல்
தொகுமுன்பக்க இற்றைப்படுத்தல் தொடர்பாக ஆலமரத்தடியில் கருத்திட்டுள்ளேன். ஆர்முள்ள பயனர்களை இதில் சேர்த்துக் கொள்ளப்படுவது ஏற்கெனவே இற்றைப்படுத்தலில் ஈடுபட்டுள்ள உங்களுக்கு உதவியாக அமையும். உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். நன்றி. --Anton·٠•●♥Talk♥●•٠· 03:17, 11 அக்டோபர் 2013 (UTC)
வரவுசெலவு கணக்கு
தொகுவிக்கிமீடியா அமைப்பிடமிருந்து பெறப்படும் நல்கைத் தொகைக்குத் தங்கள் வங்கிக் கணக்கைத் தந்து பேருதவி செய்தீர்கள். அதன்பொருட்டு, நிகழ்ச்சி நிறைவடைந்தபின் வரவு செலவு கணக்கைத் தாங்கள் பதிப்பித்தால், திட்டப் பக்கம் இனிதாக நிறைவுரும். இன்னும் கணக்குப் பணிகள் நிலுவையிலிருந்தால் நிதானமாகவே பதியுங்கள். வருங்கால விழாவிற்கு இந்த வரவுகள், செலவுகள் மற்றும் மீதி(-/+) கணக்கு உதவும். அனைவரும் மேற்கொண்டு திட்டங்கள் வகுக்க இலகுவாகும்.--நீச்சல்காரன் (பேச்சு) 01:41, 12 அக்டோபர் 2013 (UTC)
- நீச்சல்காரன், வரவு செலவு விவரங்களைத் தொடர்ந்து இங்கு இற்றைப்படுத்தி வருகிறேன். ஏதேனும் தகவல் விட்டுப் போவது போல் இருந்தாலோ கொடுத்துள்ள தரவில் ஐயம் இருந்தாலோ தயங்காமல் கேளுங்கள். விரிவான, முறையான அறிக்கையை இயன்ற அளவு விரைவாகத் தருகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 19:54, 14 அக்டோபர் 2013 (UTC)
பதக்கம்
தொகுசிறந்த உழைப்பாளர் பதக்கம் | |
விக்கிப்பீடியா பத்தாண்டுக் கொண்டாட்டங்கள் - சென்னைக் கூடலை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்தமைக்காக இப்பதக்கத்தை வழங்கி மகிழ்கிறேன் :) சிவகோசரன் (பேச்சு) 08:58, 13 அக்டோபர் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:05, 13 அக்டோபர் 2013 (UTC)
- விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:08, 13 அக்டோபர் 2013 (UTC)
- விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 15:00, 13 அக்டோபர் 2013 (UTC)
- நன்றி, சிவகோசரன், செகதீசுவரன், தமிழ்க்குரிசில், சிறீதர். --இரவி (பேச்சு) 18:24, 14 அக்டோபர் 2013 (UTC)
உடன் கவனிக்கவும்
தொகுஇப்பயனரை என்ன செய்யலாம்? பேச்சுப் பக்கத்திலும் கூறிவிட்டேன். கேட்கவில்லை. தற்போதைக்கு அலுவலில் உள்ளதால் வேறு நிர்வாகிகள் யாரவது இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:19, 15 அக்டோபர் 2013 (UTC)
- இவர் இலங்கையில் இருந்து பங்களிக்கும் பள்ளி மாணவர். புரிதல் பிழையால் இவ்வாறு செய்யலாம். மதனாகரன், ஆதவன் மூலமாக அணுக இயலுமா பார்க்கலாம். எப்படி இருந்தாலும் இவருடைய உற்சாகத்தைக் குலைக்குமாறு ஏதும் அவசரமாகச் செய்ய வேண்டாம். அவர் தொடர்ந்து தொகுக்கட்டும். முடிவுகளை அறிவிக்கும் போது போட்டித் தலைப்புகளில் உள்ள கட்டுரைகளை மட்டும் கணக்கில் எடுக்கலாம்.--இரவி (பேச்சு) 10:22, 15 அக்டோபர் 2013 (UTC)
பார்த்தால் புதுப்பயனர் போல் தெரிந்தது அதனால் தான் கேட்டேன். யாழ்பாண இளவரசர் அரண்மனையில் எனக்கு செல்வாக்கு அதிகம். அதனால் நானே இளவரசர் மூலம் இந்த பயனரை அனுகுகிறேன். உங்களிடம் கேட்டது நல்லதாய் போயிற்று.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:47, 15 அக்டோபர் 2013 (UTC)