பயனர் பேச்சு:Rsmn/தொகுப்பு 1
வாருங்கள், Rsmn/தொகுப்பு 1!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--சிவக்குமார் \பேச்சு 17:04, 18 ஜூன் 2009 (UTC)
மறுமொழி: வரவேற்பு
வரவேற்பிற்கு நன்றி சிவகுமார்.
என்னால் த.வியில் குறிப்பிடும்படியான உள்ளுரையை இடவியலுமா என்பது ஐயமே. இருப்பினும் ஊர் கூடி தேர் இழுப்பதில் வடத்தையாவது தொட இருக்கிறேன். தமிழகத்தின் வெளியே நிகழும் செய்திகளை இட ஆவல்.
வெவ்வேறு பகுதிகளை படித்துக் கொண்டு இருக்கிறேன். உதவி தேடும்போது அஞ்சேல் என நீங்கள் கூறியதை நினைவில் கொள்வேன்.
கோவை மாவட்டக்காரன். மும்பை வாசி. மணிமலர் என தமிழ்ப்பதிவு எழுதி வருபவன் வந்தவன்(?).
Rsmn 05:56, 19 ஜூன் 2009 (UTC)
- உங்கள் வரவு நல்வரவாகுக! கட்டாயம் நீங்கள் அருமையான ஆக்கங்கள் தர இயலும். உங்களைப் போல நன்றாக எழுதக்கூடிவர்கள் இன்னும் பலர் வந்து நீங்கள் கூறுவது போல "ஊர் கூடி தேர்" இழுக்கவேண்டும். ஏதும் உதவிகள் வேண்டின் தயங்காமல் கேளுங்கள். கொங்கு நாடா, நானும், சிவக்குமாரும் இன்னும் பலரும் அந்தப் பகுதிதான். ஆனால் உலகமே நம்ம உள்ளூர்தான். சில தெருக்களுக்கு இன்னும் போகவில்லை அவ்வளவுதான்.--செல்வா 22:11, 26 ஜூன் 2009 (UTC)
இலத்தீன் எழுத்துகளில் மாற்றுவழி தர வேண்டாம் என வேண்டல்
அருள்கூர்ந்து இலத்தீன் எழுத்துகளில் மாற்றுவழி தர வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன். நன்றி.--செல்வா 22:11, 26 ஜூன் 2009 (UTC)
உங்கள் ஊக்கமொழிகளுக்கு நன்றிகள் செல்வா. முதற்கட்ட நிலையில் எழும் பிழைகளை மன்னிக்கவும். இனி கவனம் கொளவேன். -- 04:12, 30 ஜூன் 2009 (UTC)
வேண்டப்பட்ட பக்கங்கள்
வணக்கம் Rsmn. வேண்டப்பட்ட பக்கங்கள் (wanted pages) சென்று பாத்தேன். நீங்கள் கூறியவாறு 10-20 ஆங்கில தலைப்புகள் உள்ளன. அவற்றில் பெரும்பானவை வார்ப்புருக்களில் (Templates) இடப்பட்டவை. எனவே அங்கு முழுமையாக தமிழாக்கம் செய்தால் இவை மறைந்துவிடும். நீங்கள் கூறுவது போல தேசிய தலைநகர் வலயம் (இந்தியா) என்று மாற்றலாம். பல்வேறு நாடுகளில் தேசிய தலைநகர் வலயப் பகுதிகள் இருப்பதால் அடைப்புக்குறிக்குள் இந்தியா என்று தருவது நன்று. பொதுவாக தெளிவாக பிழையானவற்றை மாற்றா எந்த தயக்கமும் காட்ட தேவை இல்லை. பெரிய மாற்றங்கள் என்றால் பேச்சுப் பக்கத்தில் குறிப்புத் தருவது நன்று. உங்களின் பங்களிப்பு மிக்க நன்றி. குறிப்பாக வேண்டப்பட்ட பக்கங்கள், வார்ப்புருக்கள், படங்கள் பற்றி கவனம் எடுத்தற்கு. --Natkeeran 23:29, 29 ஜூன் 2009 (UTC) நன்றிகள் நற்கீரன்..தேசிய தலைநகர் வலயம் (இந்தியா) பக்கம் எழுதியுள்ளேன். -- 04:14, 30 ஜூன் 2009 (UTC)
பயனர் தகவல்களுக்கு நன்றி
மணியன், உங்கள் பயனர் பக்கத்தை உருவாக்கி, உங்களைப்பற்றிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி. உங்களுடைய பல நல்ல பங்களிப்புகளைக் கண்டு மகிழ்பவர்களில் நானும் ஒருவன். நீங்களும் கோவைக்காரரா? பயனர் சிவக்குமாரும் இன்னும் பலரும் கோவையைச் சேர்ந்தவர்கள். நானும் கோவைக்காரன்தான், எனக்கு சொந்த ஊர் உலகம். பக்கத்து ஊர் அண்டம். --செல்வா 16:43, 10 ஜூலை 2009 (UTC)
- :)--சிவக்குமார் \பேச்சு 18:11, 10 ஜூலை 2009 (UTC)
- நன்றி செல்வா. உங்கள் ஊக்கமொழிகளும் ஒத்துழைப்பும் எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகின்றன. கோவை என்றதும் ஒரு பிணைப்பை ஏற்படுத்தும் மண்ணின் வாசனை சுகம் தருகிறது. சிவக்குமாருக்கும் நன்றி. 02:51, 11 ஜூலை 2009 (UTC)
- மணியன் மிக்க மகிழ்ச்சி, நன்றி.மணியன் மிக்க மகிழ்ச்சி, நன்றி. கோவை என்றால் சுவையான சிறுவாணித் தண்ணீரும் மலைகளும், வினைத்திறம் மிக்க மக்களும், நீட்டி முழக்கி பேசும் கொங்குநாட்டுப் பேச்சும், கண்ணு, அம்மணி என்னும் இனிய மொழிகளும் நினைவுக்கு வரும் :)--செல்வா 04:23, 11 ஜூலை 2009 (UTC)
- நன்றி செல்வா. உங்கள் ஊக்கமொழிகளும் ஒத்துழைப்பும் எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகின்றன. கோவை என்றதும் ஒரு பிணைப்பை ஏற்படுத்தும் மண்ணின் வாசனை சுகம் தருகிறது. சிவக்குமாருக்கும் நன்றி. 02:51, 11 ஜூலை 2009 (UTC)
மகிழ்ச்சி
அடடா, பல மாதங்கள் கழித்து உங்களை விக்கிப்பீடியாவில் கண்டு மிகவும் மகிழ்கிறேன். வருக! வருக!--ரவி 06:19, 14 ஜூலை 2009 (UTC)
- ஆம்,ரவி..இணையத்தில் முன்புபோல உலாவ காலம் கிடைப்பதில்லை..உங்கள் சென்னை பேச்சின் தாக்கம் கொஞ்சகாலம் இருக்கும் என நினைக்கிறேன்..;) நன்றி!!-- 06:35, 14 ஜூலை 2009 (UTC)
:) --ரவி 13:38, 14 ஜூலை 2009 (UTC)
- உங்கள் பங்களிப்புகள் மிக நன்று. உங்கள் நடையும் அருமையாக ஒள்ளது. தொடர்ந்து எழுதுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். ரவியின் பேச்சின் பயனாக வந்தவரென்று அறிந்து கூடுதல் மகிழ்ச்சி. ரவியை அடிக்கடி பட்டறைகளில் பேச வேண்டுமென்று அழைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 16:56, 15 ஜூலை 2009 (UTC)
- வணக்கம் மணியன், உரையாடல் பக்கங்களில் உள்ள உங்கள் கையொப்பங்களில் உங்கள் பயனர் பெயர் பதியப்படுவதில்லையே:) காரணம் என்ன?--Kanags \பேச்சு 08:22, 16 ஜூலை 2009 (UTC)
- நானும் அதையே கேட்க எண்ணியிருந்தேன். நான்கு ~~~~ போட்டும், தொகுப்புகருவியில் அதற்கான பொத்தானை அழுத்தியும் என் பயனர் பெயர் பதிவாவதில்லை. ஏதேனும் அமைப்பு மீளமைக்க வேண்டுமாயின் யாரேனும் அறிந்தவர்கள் உதவவும்.-- 09:19, 16 ஜூலை 2009 (UTC)
- உங்கள் விருப்பத்தேர்வுகளில் கையொப்பம் என்ற பெட்டியில் என்ன இருக்கிறது என்று தெரிவித்தால் சிக்கலைக் கண்டுபிடிக்க வாய்ப்புண்டு. -- சுந்தர் \பேச்சு 09:24, 16 ஜூலை 2009 (UTC)
- நானும் அதையே கேட்க எண்ணியிருந்தேன். நான்கு ~~~~ போட்டும், தொகுப்புகருவியில் அதற்கான பொத்தானை அழுத்தியும் என் பயனர் பெயர் பதிவாவதில்லை. ஏதேனும் அமைப்பு மீளமைக்க வேண்டுமாயின் யாரேனும் அறிந்தவர்கள் உதவவும்.-- 09:19, 16 ஜூலை 2009 (UTC)
- வணக்கம் மணியன், உரையாடல் பக்கங்களில் உள்ள உங்கள் கையொப்பங்களில் உங்கள் பயனர் பெயர் பதியப்படுவதில்லையே:) காரணம் என்ன?--Kanags \பேச்சு 08:22, 16 ஜூலை 2009 (UTC)
மிகச் செம்மையாக பல முக்கிய தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள் ! நன்றி.--ரவி 13:24, 25 ஜூலை 2009 (UTC)
- மணியன் நீங்கள் மிக அருமையாக பல பயனுடைய தலைப்புகளில் பங்களித்து வருகின்றீர்கள். என் நெஞ்சார்ந்த பாராட்டுகள். உங்கள் நல்ல பங்களிப்புகள் மற்றவர்களுக்கும் ஊக்கம் அளிப்பாதாக அமையும் என்பது என் கருத்து. நன்றி.--செல்வா 12:56, 29 ஜூலை 2009 (UTC)
- நான் இதுவரை ஆங்கில விக்கியிலிருந்து மொழி பெயர்ப்பு மட்டுமே செய்கிறேன். உங்களைப் போன்றவர்கள் ஆதரவு அளிக்கும்போது செயல்படும் சூழல் இனிமையாக உள்ளது. நன்றி ரவி மற்றும் செல்வா ! --மணியன் 17:47, 29 ஜூலை 2009 (UTC)
உதவிக்கு நன்றி
- மிக்க நன்றி மணியன் ஐயா. ஒரு சில நாட்களாக எப்படி இதை கொண்டு வருவது என்று தேடிக் கொண்டிருந்தேன். இப்போது தெரிந்து கொண்டேன். --Ragunathan 09:27, 23 ஆகஸ்ட் 2009 (UTC)
தமிழில் உதவிகள் வழிகாட்டிகள்
நீண்ட காலம் தமிழ் விக்கியில் உதவிகள், வழிகாட்டிகள் தமிழில் எழுத வேண்டும் என்று இருந்தோம், சிறிது செய்தோம். நீங்கள் ஒரு புது வீச்சோடு முன்னெடுக்கிறீர்கள். நன்றி. --Natkeeran 00:29, 28 ஆகஸ்ட் 2009 (UTC)
Re: லேக் வாலேசா
Hello! Thank you so much for your help :) Best wishes, Patrol110 11:58, 22 செப்டெம்பர் 2009 (UTC)
பங்களிப்பாளர் அறிமுகம்
வணக்கம் மணியன், விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் இடம்பெறச் செய்யும் வகையில் உங்களைப் பற்றிய சிறு அறிமுகம், புகைப்படம் தந்து உதவுவீர்களா? நன்றி--ரவி 08:47, 5 அக்டோபர் 2009 (UTC)
விக்கிசெய்தி
மணியன், நோபல் பரிசு அறிவிப்பு பற்றிய செய்திக்கு நன்றி. அச்செய்தி ஏற்கனவே விக்கிசெய்தியில் உள்ளது. அதனால் உங்களது செய்தியை வழிமாற்றியிருக்கிறேன். விக்கியில் உள்ள அண்மைய 10-12 நாட்களில் வெளியான செய்திகள் அனைத்தும் முதற்பக்கத்தில் உள்ளன. உங்கள் செய்தி ஏற்கனவே வெளியானதா என்பதை முதல் பக்கத்தை பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 06:57, 6 அக்டோபர் 2009 (UTC)
ஆங்கில சொல்லிடல்
மணியன், பொதுவாகக் கலைச்சொற்கள், மற்றும் வேற்று மொழிப் பெயர்ச்சொற்கள் கட்டுரைத் தலைப்பாக இடும்போது அதற்கிணையான ஆங்கிலச்சொற்களை முதற்பந்தியில் அடைப்புக்குறிக்குள் இடல் ஒரு நல்ல நடை முறை. பலர் ஆங்கிலச் சொல்லை தமிழ் விக்கியில் இட்டுத் தேடும் போது அதற்கிணையான தமிழ்க் கட்டுரை கிட்டும். கூகுளில் தேடும் போது கிடைக்கும். பலரையும் சென்றடையும் வாய்ப்புள்ளது. இந்நடைமுறை விக்கியில் பல வேற்று மொழிகளில் உள்ளது. ஆனால் இங்கு எவரும் கடைப்பிடிப்பதில்லை. பாருங்கள், தமிழ்விக்கியில் தமிழ்நாட்டில் உள்ள ஊர்களின் கட்டுரைகளைப் பாருங்கள். அனைத்துக்கும் ஏதோ காரணத்தினால் அடைப்புக்குறிக்குள் அதன் ஆங்கிலப் பெயர்களயும் தருகிறார்கள். அதில் எனக்குப் பெரும் உடன்பாடில்லை என்றாலும், கூகுளில் தேடும் போது கிட்டும் என்ற ஒரே காரணத்துக்காக ஏற்றுக் கொள்ளலாம். எப்படியேன்றாலும், கலைச்சொற்கள், அறிவியல் சொற்களுக்கு கட்டாயம் ஆங்கிலச் சொற்களைத் தருதல் முக்கியமெனக் கருதுகிறேன்.--Kanags \பேச்சு 08:07, 15 அக்டோபர் 2009 (UTC)
- நன்றி.இந்நடைமுறையை நானும் இனி பாவிக்கிறேன்.--மணியன் 09:05, 15 அக்டோபர் 2009 (UTC)
தமிழ் விக்கி வலைப்பதிவுக்கு கட்டுரைகள்
வணக்கம் மணியன்.
உதவிப் பக்கங்களை சீர் செய்வது நெடுங்காலமாக கிடப்பில் இருந்தது. சிறப்பாக நீங்கள் ஆக்கித் தந்திருக்கிறீர்கள்: விக்கிப்பீடியா:பயிற்சி(வரவேற்பு. இதைப் பற்றி ஒரு சில கட்டுரைகளை நீங்கள் வலைப்பதிவுப் பயனர்களுக்காக எழுதித் தர முடியுமா. 2-4+ பந்திகள்.
- தமிழ் விக்கிப்பீடியா உதவிப் பக்கங்கள்
- விக்கியில் கட்டுரைகள் தொகுத்தல்
நன்றி
Ram Narayan
Hi Manian, I'm Hekerui from the English Wikipedia. Unfortunately I don't speak Tamil so I wanted to ask whether you could help start an article on the Tamil Wikipedia about Ram Narayan. I saw you live in Mumbai like he does :-) I love Indian music and I have also worked a lot on the English Wikipedia article on Ravi Shankar. Thank you! Hekerui 20:59, 26 அக்டோபர் 2009 (UTC)
- Hi Hekerui, It is created at ராம் நாராயண் pl.--மணியன் 07:38, 27 அக்டோபர் 2009 (UTC)
- Thank you :-) Hekerui 12:00, 27 அக்டோபர் 2009 (UTC)
நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?
வணக்கம் மணியன். நீங்கள் விரும்பினால், உங்கள் பெயரை நிருவாகப் பொறுப்புக்கு முன்மொழிய விரும்புகிறோம். இது மேலும் சிறப்பாகவும் இலகுவாகவும் உங்கள் பங்களிப்புகளை நல்க உதவும். நன்றி--ரவி 16:33, 29 அக்டோபர் 2009 (UTC)
- தற்போதைய பொருளாதார சுணக்கம் சற்று நேரம் கொடுத்துள்ளது.இந்த நேரத்தில் த.வியை முன்னெடுத்துச் செல்ல இது உதவுமானால் பொறுப்பு எடுத்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.என் மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு நன்றி.--மணியன் 04:15, 30 அக்டோபர் 2009 (UTC)
அட, பொருளாதார சுணக்கத்தால் இப்படி ஒரு நன்மையா :) இந்தப் பக்கத்தில் நிருவாகப் பொறுப்பு ஏற்க உங்களுக்கு விருப்பம் என்ற தெரிவித்தால், மற்றவர்கள் தங்கள் ஆதரவை நல்குவர். நன்றி--ரவி 09:33, 30 அக்டோபர் 2009 (UTC)
Translation request
Hi Rsmn! Would you be so kind to help me translate this article into the wonderful Tamil language? Please. If you think that article is too long, here is a short version: "Lu Xun was a Chinese short story writer, editor, translator, critic, essayist and poet. He was most famous for the novella The True Story of Ah Q." Thanks a lot and best regards:)--Amaqqut 06:49, 5 நவம்பர் 2009 (UTC)
வாழ்த்துகள்
நிருவாக அணுக்கம் கிடைத்தமைக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும். தங்களது பங்களிப்புகளை இப்பொறுப்பு மேலும் இலகுவாக்கும் என்பதில் ஐயமில்லை.--Kanags \பேச்சு 04:59, 7 நவம்பர் 2009 (UTC)
நிருவாக அணுக்கத்துடன் தங்களின் தமிழ் விக்கி பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்--கார்த்திக் 06:56, 7 நவம்பர் 2009 (UTC)
சிறு தொகுப்புகள்
பயனர் பக்க வரவேற்பு போன்ற ஒரே மாதிரியான சிறிய மாற்றங்களை சிறு தொகுப்புகளாக குறிக்க வேண்டுகிறேன். அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் சிறு தொகுப்புகளை மறைத்துப் பார்க்கலாம் என்பது முக்கியமான மாற்றங்களை மட்டும் கவனிக்க இயலும். நன்றி--ரவி 10:08, 12 நவம்பர் 2009 (UTC)
செய்தி தொடர்பான கட்டுரைகள்
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. ஆமா. அண்மையில் ஒரு வானொலி சென்று இருந்தேன். அவர்கள் த.வி அதிகம் பயன்படுத்துவது தெரிய வந்தது. எ.கா ஒருவர் செய்தியில் வரும் போது அவர் பற்றி கட்டுரை விக்கியில் வருவது கண்டு அவர்கள் மகிழ்ச்சிப் பட்டார்கள். அவர்களுக்கு வேலை குறைவு. த.வி கட்டுரையை படித்து விடலாம். --Natkeeran 02:51, 19 டிசம்பர் 2009 (UTC)
இன்றைப்படுத்தல்
வணக்கம் மணியன்:
முதற்பக்க பகுதிகள் எதுவாகினும் (கட்டுரைகள், உங்களுக்குத் தெரியுமா, படம்) நீங்கள் தொடர்ச்சியாக சில மாதங்கள் இன்றைப்படுத்த முடிந்தால் கூறவும். நன்றி. --Natkeeran 23:30, 3 ஜனவரி 2010 (UTC)
- வணக்கம் நற்கீரன், என்னால் எந்த அளவு தொடர்ச்சியாக செய்யவியலும் என தற்போது கூறவியலவில்லை.இருப்பினும் ஏதாவது ஒரு பகுதியை இன்றைப்படுத்த முயல்கிறேன். செயல்முறைகளை எனக்கு தெரிவிக்கவும்.--மணியன் 04:46, 5 ஜனவரி 2010 (UTC)
Hi Rsmn: Would you please update the picture, and perhaps another essay for the second first page article. Thank you. (excuse the use of English) --Natkeeran 14:20, 11 ஜனவரி 2010 (UTC)
- நற்கீரன்,இன்றைய படத்தை இன்றைப்படுத்தி யுள்ளேன். இனி வாரம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ இன்றைப்படுத்துகிறேன்.
- முதற்பக்கக் கட்டுரைகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது ? காட்டாக நான் விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சனவரி 17, 2010 என்ற பக்கத்தைத் துவக்கி அதில் ஒரு கட்டுரையை மட்டும் கொடுத்தால் போதுமா ? அல்லது வேறொருவர் துவங்கும் பக்கத்தில் நான் இரண்டாவது கட்டுரையை இட வேண்டுமா ? அல்லது வேறு பக்கம் இதற்காக உள்ளதா ?--மணியன் 05:22, 12 ஜனவரி 2010 (UTC)
நன்றிகள்
மணியன், உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக தவியில் என்னை இயக்குவது உடன் பங்களிப்பாளர்கள் தரும் ஊக்கம் தான். இது இன்னும் நீண்டகாலம் என்னை ஊக்குவிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. மயூரநாதன் 16:27, 13 ஜனவரி 2010 (UTC)
வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
மணியன், நீங்கள் மிகவும் அற்புதமாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நல்லாக்கங்கள் தந்து வளர்த்து வருகின்றீர்கள். இதுகாறும் 312 வளமான கட்டுரைகளைத் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதியுள்ளீர்கள் என்று அறிந்து மிகவும் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன். என் மகிழ்ச்சியைத் தெரிவிக்கவும் பகிர்ந்துகொள்ளவும் உடன் பங்களிப்பாளனாகிய நான் ஒரு பதக்கம் தருகின்றேன். --செல்வா 14:06, 25 ஜனவரி 2010 (UTC)
முதற்பக்க கட்டுரைகள்
தவற என்னது, மன்னிக்க. நான் கவனிக்கவில்லை. பொதுவாக ஒழுங்கமைப்பை இங்கு விக்கிப்பீடியா:முதற்பக்கம் இன்றைப்படுத்தல் ஒழுங்கமைவு செய்யலாம். இந்திய தேசியக் கொடி ஏற்கனவே இரு முறை வந்திருப்பதால் தற்போது மாற்ற வில்லை. நீங்கள் பரிதிமதி பங்கெடுப்பதற்கு மிக்க நன்றிகள். --Natkeeran 02:52, 27 ஜனவரி 2010 (UTC)
- நன்றி மணியன். நிச்சியமாக நீங்களே இற்றைப்படுத்தலைச் செய்யலாம். --Natkeeran 01:34, 2 பெப்ரவரி 2010 (UTC)
சந்தேகம்
மணியன் அண்ணே நான் துவங்கியுள்ள கட்டுரைகைளை தெரிந்து கொள்வது எப்படி ???
நன்றி
பங்களிப்பாளர் அறிமுகத்தைச் சரியான நேரத்தில் பொறுப்பெடுத்து மாற்றியமைக்கு நன்றி :) --ரவி 08:07, 7 பெப்ரவரி 2010 (UTC)
- எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தங்களுக்கு என் இனிய நன்றிகள்... --Theni.M.Subramani 16:47, 23 பெப்ரவரி 2010 (UTC)
விடுப்பு
மணியன், நீங்கள் மார்ச் 4 வரை விடுப்பில் இருப்பீர்களா? உங்கள் விடுப்பு அறிக்கையில் குறிப்பில் சிறு பிழி உள்ளது (பெப் 4 என்று உள்ளது). நல்லபடியாக விடுப்பில் இருந்து வாருங்கள்.--செல்வா 12:19, 27 பெப்ரவரி 2010 (UTC) அவசரத்தில் விழுந்த பிழை ;)ஆன்மீகப் பயணம் இனிதே நிறைவுற்றது.--மணியன் 11:17, 3 மார்ச் 2010 (UTC)
உதவி
மணியன், விக்கி பொது கோப்பகத்தில் இருக்கும் படங்களை சிறிது மாற்றி மீண்டும் இங்கு பதிவேற்றுவது எப்படி?--Arafat 13:33, 3 மார்ச் 2010 (UTC)
- அராபத், விக்கி பொது கோப்பகத்தில் உள்ள படங்களின் பெயரைக் குறிப்பிட்டாலே போதுமானது.(பார்க்க:விக்கிப்பீடியா:படிமம் பயிற்சி). நீங்கள் ஏதேனும் மாற்றங்கள் செய்தால் அதனை புதுப்பெயரிட்டு பதிவேற்றம் (கோப்பைப் பதிவேற்று இணைப்பு மூலமாக) செய்ய வேண்டும்.அதே பெயரில் பதிவேற்றம் செய்ய வியலாது. --மணியன் 04:56, 4 மார்ச் 2010 (UTC)
கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பக்கங்கள் உருவாக்கும் போட்டி
மணியன்! கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பக்கங்கள் போட்டி பக்கம் பார்க்கவும். திருத்தங்கள் இருந்தால் செய்யவும். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் ஒரு மாணவர் த.வி.யின் முதற்பக்கத்திற்கு வந்தவுடனேயே முதல் சொடுக்கிலேயே இப்பக்கம் வர வேண்டும். (பல சொடுக்குகள் மாணவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி, முக்கிய பக்கத்திற்கு வராமலேயே போய்விடச் செய்துவிடலாம்.)
இப்பக்கத்திலும் இரண்டே உட்தலைப்புகள் உள்ளவாறு அமைத்துள்ளேன். அவை 1. தலைப்புகள் 2. விதிகள்.
மேலும் பேசுவோம்.
அமைச்சர், செயலாளர் சந்திப்பின் சாரத்தை உங்களுக்கு மின்னஞ்சல் செய்துள்ளேன். தயந்து பார்க்கவும்.
நன்றி. பரிதிமதி
நன்றி
தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் வெளியான என் அறிமுகம் கண்டு வாழ்த்துக்கள் வழங்கிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்... --Theni.M.Subramani 06:20, 18 மார்ச் 2010 (UTC)
பரிந்துரை பக்கம்
மணியன், இன்றைய சிறப்பு படத்திற்கான பரிந்துரை பக்கங்கள் ஏதேனும் உள்ளனவா? இந்த படிமத்தை Media:அன்னபூரணி.jpg நான் பரிந்துறைக்கின்றேன்.--Arafat 05:05, 24 மார்ச் 2010 (UTC)
- விக்கிப்பீடியா:முதற்பக்கம் இன்றைப்படுத்தல் ஒழுங்கமைவு பக்கத்தில் இன்றைய சிறப்புப் படம் மற்றும் முதற்பக்கக் கட்டுரைகள் ஒழுங்கமைக்கப்படுகிறது. அங்கு நீங்கள் நேரடியாக மார்ச் 29 பக்கத்தில் இதற்கான விவரங்களை இணைக்கலாம். அல்லது படம் மற்றும் தொடுப்புகளைக் கொடுத்து பரிந்துரைக்கலாம்.--மணியன் 05:17, 24 மார்ச் 2010 (UTC)
- பரிந்துரைகளை விக்கிப்பீடியா பேச்சு:இன்றைய சிறப்புப் படம் என்ற பக்கத்தில் பரிந்துரைகள் என்ற தலைப்பின் கீழ் சேர்க்கலாம். ஓரளவு பெரிய படங்களாக இருப்பது நன்று--ரவி 05:29, 24 மார்ச் 2010 (UTC)
நெறிமுறைப் பக்கங்கள்
மணியன், தொடர்ந்து நெறிமுறைப்பக்கங்களை உருவாக்கி வருகிறீர்கள். உளமாறப் பாராட்டுகிறேன். எதிர்வரும் காலத்தில் பல புதிய பயனர்கள் வருகையில் இது அரும்பயன் தரும். -- சுந்தர் \பேச்சு 08:11, 5 ஏப்ரல் 2010 (UTC)
சிறப்பான பக்கங்கள்
மணியன்! நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு பக்கத்திலும் உங்கள் தீவிர, செம்மையான உழைப்பு தெரிகிறது; புதுப்பயனர்களுக்கான உதவிப்பக்கங்களிலும் உங்கள் சீரிய முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். ஓப்ரா வின்ஃப்ரே பற்றிய பக்கம் சிறப்பாக வருகின்றது. தொடருங்கள். நன்றி. --பரிதிமதி 05:54, 11 ஏப்ரல் 2010 (UTC)
நன்றி
சுந்தர் மற்றும் பரிதிமதி, உங்கள் ஊக்கமொழிகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி. அவை எனது பங்களிப்பை மேலும் சிறப்பாக ஆற்றிட உந்துதல் கொடுக்கின்றன. --மணியன் 05:24, 12 ஏப்ரல் 2010 (UTC)
சுவடியின் குறிப்பு
நன்றி மணியன் அவர்களே. யான் இத் தளத்திற்குப் புதிதாகையால் தங்கள் உதவி பேருதவி. எங்கள் பணி சிறக்க உங்களைப் போன்றவர்கள் உதவுவது பேருவகை தருகிறது
விக்கிப்பீடியா கலைச்சொற்கள்
விக்கிப்பீடியா உதவிபக்கங்கள் தமிழாக்கம் செய்யப்பட வேண்டும். வார்ப்புருவில் transclusion மற்றும் substitution இவற்றிற்கு புழங்கிவரும் சொற்கள் யாவை ?
- substitution = மாற்றீடு. Transclusion என்னும் சொல்லை ஆங்கில விக்கியில் தந்துள்ளவாறு டெட்' நெல்சன் என்பார் 1982 இல் உருவாக்கினாராம். லிட்டரரி மசீ^ன்சு (Literary machines) என்னும் நூலில் குறிப்பிட்டாராம். இதனைப் புறச்சுட்டு எனலாம். புறத்தே உள்ள விளக்கத்துக்குச் சுட்டு தருதல் அல்லது அதனை சேர்த்தல். எனவே புறச்சேர்ப்பு என்றும் கூறலாம். புறத்தே கூறியுள்ளவற்றை சேர்த்தல் (ஒரு சுட்டின் வழியாக இணைத்தல்). எனவே புறக்கூட்டு என்றும் சொல்லலாம்.
- [நீங்கள் வெகு நாட்களுக்கு முன் கேட்டிருந்த கேள்வியை இப்பொழுதுதான் பார்த்தேன். (ஆகத்து மாதம் (2009) நான் கலிவோ'ர்னியாவில் இருந்தேன் (கடுநடைச் செலவில் இருந்தேன். கடுவரை (கடுவல்) ஏறுவதில் இருந்தேன்) ஆகவே பார்க்க இயலாது போயிற்று)] --செல்வா 20:01, 27 ஏப்ரல் 2010 (UTC)
முதற்பக்க அறிமுகம்
வணக்கம் மணியன் உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/மணியன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.--ரவி 05:53, 25 மே 2010 (UTC)
வணக்கம் மணியன்.அடுத்த இரு வாரங்களுக்கு, உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் இடுவதில் மகிழ்கிறோம். --ரவி 07:52, 15 ஜூலை 2010 (UTC)
- மிகுந்த நன்றி ரவி. மிகச்சிறப்பாகத் தொகுத்துள்ளீர்கள்.தற்போது தடைபட்டுள்ள எனது பங்களிப்பு இன்னும் இரு மாதங்கள் கழித்துத் தொடரும்.தொடர்ந்து கொடுத்து வரும் ஊக்கத்திற்கு அனைவருக்கும் நன்றி.--மணியன் 02:34, 18 ஜூலை 2010 (UTC)
உங்கள் ஒளிப்படம்
உங்கள் ஒளிப்படம் கண்டு மகிழ்ந்தேன், மணியன்.--செல்வா 18:14, 30 மே 2010 (UTC)
உதவி!!
சிறிது நேரம் முன்பு, விழுப்புரம் மாவட்டத்திற்கான வார்ப்புருவில் இருந்த Block என்ற சொல்லை நீக்கிவிட்டு ஊராட்சி ஒன்றியம் என்று மாற்றினேன். அது மட்டும் அல்லது ஆங்கில Villupuram District ல் உள்ள Block பகுதியை அதற்கான விளக்க பக்கத்துடன் இணைத்தேன். ஆனால் தமிழில் ஊராட்சி ஒன்றியத்திதிற்கான (Block) பக்கம் இன்னும் உருவக்க படவில்லை. ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள விளக்கதினை கொண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு யாரேனும் தமிழாக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். ----ராஜ்6644 09:39, 30 ஜூலை 2010 (UTC)
- எனது கருத்துக்களையும் உதவி வேண்டுகோளையும் விக்கிப்பீடியா:ஆலமரத்தடியில் பதிந்துள்ளேன்.--மணியன் 16:09, 30 ஜூலை 2010 (UTC)
மகிழ்ச்சி
உங்கள் அறிமுகத்தை முதற்பக்கத்தில் பார்த்து மிக மகிழ்ந்தேன். பாராட்டுகள் :) மிகச்சிறப்பாக பணியாற்றி,பற்பல உதவிப்பக்கங்கள் உருவாக்கியும், பல அருமையான கட்டுரைகளை எழுதியும் (எடுத்துக்காட்டாக இ.தொ.க ) மிகுந்த நல்லாக்கங்கள் தந்த உங்கள் படத்தை முதற்பக்கத்தில் பார்க்க மகிழ்ச்சியாய் இருந்தது. --செல்வா 23:07, 11 ஆகஸ்ட் 2010 (UTC)
நன்றி
நிருவாகி அணுக்கம் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தமைக்கு மிக்க நன்றி --ஜெ.மயூரேசன் 04:00, 18 ஆகஸ்ட் 2010 (UTC)
நன்றிகள்
என்னுடைய பிறந்த நாளையொட்டி நீங்கள் தெரிவித்த வாழ்த்துக்களுக்கு எனது மனம் கனிந்த நன்றிகள். --மயூரநாதன் 16:27, 8 செப்டெம்பர் 2010 (UTC)
ஐயம்
பிரீஜா சிறீதரனின் படத்தை நான் கூகுள் தேடலில் கண்டெடுத்தேன். மேலும் அது இந்தியன் எக்ஸ்பிரசு நாளிதழில் வெளியான படமாகும். அதற்கு எத்தகைய காப்புரிமை அளிப்பது? என் ஐயம் களைவீர்!
- அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 17:15, 6 திசம்பர் 2010 (UTC)
- சூர்ய பிரகாசு, கூகுள் தேடல் மற்றும் செய்தித்தாள் படங்கள் காப்புரிமை உடையவை. அவற்றை விக்கியில் ஒருவார கால இடைவெளியில் நீக்கப்படலாம். படம் எடுத்தவர் மற்றும் (படநாயகர் உயிருடன் இருப்பவரானால்) படநாயகர் (அதாவது பிரீஜா சிறீதரன்) அனுமதியுடன் உள்ள படங்களையே பதிவேற்ற வேண்டும்.விக்கி காமன்சில் இவை தீவிரமாக கடைபிடிக்கப்படுகின்றன.விக்கிப்பீடியாக்களில் நிர்வாகிகளின் பளுவைப் பொறுத்தும் சில தளர்வான கண்காணிப்பினாலும் சில காப்புரிமை உள்ள படங்கள் இடம் பெறுகின்றன.--மணியன் 17:28, 6 திசம்பர் 2010 (UTC)
மணியன்,
இது [[படிமம்:Joseph abraham.jpg]]வும் நீங்கள் குறிப்பிட்ட வாழும் மாந்தர் பகுப்பில் வரும். நியாயமான பயன்பாட்டுக்கு உபயோகிக்க முடியாது. நீக்கி விடவா?--சோடாபாட்டில் 08:49, 8 திசம்பர் 2010 (UTC)
- நிச்சயமாக :))--மணியன் 08:57, 8 திசம்பர் 2010 (UTC)
நன்றி
தோர்ச்யீ காண்டு என்னும் கட்டுரையின் தலைப்பை மாற்றியதற்கு நன்றி. இராச்யேந்திரன் என்றால் இராஜேந்திரன் என்னும் ஒலிப்பு ஏறத்தாழ வருவதை உணரலாம். மீண்டும் நன்றி.--செல்வா 03:46, 9 திசம்பர் 2010 (UTC)
2010 ஆண்டு அறிக்கை, 2011 திட்டமிடல்
வணக்கம் Rsmn/தொகுப்பு 1:
தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கியூடகங்களுக்கான தங்களின் தொடர் பங்களிப்புகளுக்கு நன்றி. நமது 2010ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கிப்பீடியா அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையில் விடுபட்டதாகக் கருதும் கருத்துக்களைத் தாங்கள் சேர்க்கலாம். மேலும் அதன் பேச்சுப் பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கியூடகத் திட்டங்கள் 2011 ஆம் ஆண்டு முன்னெடுக்கக் கூடிய செயற்பாடுகள் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் நம் திட்டங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவின் குறைகளையும், தடைகளையும் சுட்டிக் காட்டிக் கூட உங்கள் கருத்துக்கள் இருக்கலாம். நன்றி.
கட்டுரை ஒன்றிணைப்பு
கட்டுரைகளை ஒன்றிணைக்க முன்பு எனக்காக எழுதி வைத்திருந்த how to:
- Two articles are there for same subject : Article OLD, Article NEW
- Update Article NEW with stuff from OLD
- delete OLD
- move NEW to OLD without leaving a redirect, now only OLD title remains
- delete OLD again
- restore OLD. while doing it choose all versions
- now histories are merged in OLD title (with contents of updated NEW from step 2)
- move article to one of the two earlier titles with other as a redirect
விளக்கமாக இங்கு - en:Wikipedia:How to fix cut-and-paste moves--சோடாபாட்டில்உரையாடுக 07:59, 30 சனவரி 2011 (UTC)
- தொடுப்புகளுக்கும் cheatsheetக்கும் நன்றி சோடாபாட்டில்.
நானும் விக்கிப்பீடியா:எப்படி_ஒரு_பக்கத்தின்_பெயரை_மாற்றுவது என உதவிப்பக்கம் எழுதியுள்ளேன். இருப்பினும் சற்று தயக்கமாகவே உள்ளது. மேலும் நான் உடனே மாற்றங்களை மேற்கொள்ளாததால் இடையில் வேறு யாரேனும் குழப்பாமல் இருக்கவும் விளக்கவுரைகளை பேச்சுப்பக்கங்களிலும் தொகுப்புச் சுருக்கத்திலும் அளித்தேன்.--மணியன் 08:58, 30 சனவரி 2011 (UTC)
- ஆகா தமிழில் இருக்கிறதா. இது தெரியாமல் போனதே இவ்வளவு நாளா!--சோடாபாட்டில்உரையாடுக 09:02, 30 சனவரி 2011 (UTC)
மனித உயிரணு
மனித உயிரணு என்ற பக்கத்தினை உருவாக்கியவன் நானே. அதில் கட்டுரைகள் எதுவும் இல்லை. மேலும் தாங்கள் கீழ்கண்ட வாசகத்தினை எழுதும் முன் அந்தக் கட்டுரையில் நடந்தவகளை பார்த்துவிட்டோ, Karthi.dr எழுதியதை எதற்காக என்று அவரிடமே கேட்டிருக்கலாம்.
தவறு நான் செய்யவில்லை என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டாலே எனக்கு மகிழ்ச்சி.
எனக்கு வழிகாட்ட உதவி நீங்கள் குறிப்பு தந்தமைக்கு நன்றி.!. தொடர்ந்து உதவுங்கள் என்றே கேட்டுக் கொள்கிறேன். ---
- பக்கத்தை வழிமாற்றும்போது அந்தப் பெயரில் வேறு உள்ளடக்கம் உள்ளதா என்று பார்க்கவும். உள்ளடக்கமும் வரலாறும் அழிய வாய்ப்பிருந்தால் அதனை பேச்சுப் பக்கத்தில் உரையாடிவிட்டு மாற்றுங்கள். இதுவே விக்கி சமூகத்தில் வழமை; தவிர தங்கள் நேரத்தையும் உழைப்பையும் தரும் தன்னார்வலர்களுக்கு நீங்கள் தரும் சன்மானம் இதுவே.-
---
சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு
- உங்கள் விளக்கங்களுக்கு நன்றி. சோடாப்பாட்டிலும் விளக்கியிருந்தார். எனது கருத்துகள் பொது வழிகாட்டல்களே எனினும் அவை உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மிகவும் வருந்துகிறேன். உங்கள் ஆர்வமிக்க பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். தொடர்ந்து தமிழ் விக்கியை முன்னெடுத்துச் செல்ல உதவுவீர்.--மணியன் 08:47, 30 சனவரி 2011 (UTC)
Many many thanks
Dear Rsmn, I want to thank you for your kindness. If you need a translation into Italian, please contact me at my Italian account. Best greetings from Italy. Ciao = Bye :))--Alessandroga80 09:11, 1 பெப்ரவரி 2011 (UTC)
பதக்கம்
சிறப்புப் பதக்கம் | ||
மணியன்! உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை! நீங்கள் ஆலமரத்தடியில் கொடுத்த சிந்தனையின் விளைவுகள் இப்போது தெரிகின்றன. sitenotice இட்டதால் எழுத்துப்பிழைகள் பல அடையாளம் காட்டாப் பயனர்களால் திருத்தப்பட்டு வருகின்றன. (அண்மைய மாற்றங்களைப் பார்க்கவும்) உங்களது அழகிய எண்ணத்திற்கு இந்தச் சிறப்புப் பதக்கத்தை வழங்குகிறேன். :) சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 13:23, 6 மே 2011 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- சூரியப் பிரகாசு, பதக்கமெல்லாம் கொடுத்துப் பாராட்டுவதற்கு நன்றிகள் .. இது கூட்டாக உரையாடியதன் விளைவாக எழுந்த எண்ணமேயன்றி எந்தளவில் நான் மட்டுமே இதற்கு தகுதி உடையவன் எனத் தெரியவில்லை. இருப்பினும் இது ஆக்கபூர்வ விளைவுகளை ஏற்படுத்துமாயின், அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன, நானும் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.--மணியன் 13:57, 6 மே 2011 (UTC)
கருவிகள்
தமிழாக்கம், வார்ப்புரு கருவிகளில் இருந்த வழுக்களை நீக்கியிருக்கிறேன். தாமதத்திற்கு வருந்துகிறேன். -- மாகிர் 12:57, 1 சூன் 2011 (UTC)
பதக்கம்
சிறந்த உழைப்பாளர் பதக்கம் | |
சென்னை கட்டுரையைத் தொடர்ந்து இற்றைப்படுத்திச் செம்மைப் படுத்துவதைக் கண்டு மகிழ்வுற்று இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன் மணியன். மேலும், உடனுக்குடன் தேவைப்படும் புதிய கட்டுரைகளையும் நீங்கள் உருவாக்கிவிடுகிறீர்கள். :) உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் மணியன். :) சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 14:26, 7 சூன் 2011 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
ஆண்டுகள் கட்டுரைகள்
மணியன், ஆண்டுகள் கட்டுரைகளுக்கு ஏற்கனவே உள்ள வார்ப்புருக்களைப் பயன்படுத்துங்கள். மேலும் ஓரிரு நிகழ்வுகளையாவது தருவது நல்லது. மூன்று வரிகள் போதாது என நினைக்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 13:07, 8 சூன் 2011 (UTC)
- கவனத்தில் கொள்கிறேன். --மணியன் 13:28, 8 சூன் 2011 (UTC)
நிருவாக அணுக்கம்
- நிருவாக அணுக்கம் பெற வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 03:09, 16 சூன் 2011 (UTC)
நிர்வாக அணுக்கம் - நன்றி
தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாக அணுக்கப் பணிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்து உதவிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:42, 28 சூன் 2011 (UTC)
உ.தெ பதக்கம்
உங்களுக்குத் தெரியுமா பங்களிப்புப் பதக்கம் | ||
|
முதற்பக்கக் கட்டுரை
நீங்கள் பங்களித்த பழசி இராசா என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 3 சூலை 2011 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் பங்களித்த குடிப்பழக்கம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் செப்டம்பர் 4, 2011 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
Kalita
Hello! Would it be possible to translate in Tamil this article about an important Indian journalist? [1] Thanks for all! --Amiens984
தெற்கு சூடான்
தெற்கு சூடான் கட்டுரை பகுப்பு:தெற்கு சூடான் இற்குள் மட்டுமே இருக்கலாம். பகுப்பு:தெற்கு சூடான் உப பகுப்பாக ஆப்பிரிக்க நாடுகள் பகுப்பில் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 04:57, 9 சூலை 2011 (UTC
- தெற்கு சூடான் ஓர் புதிய நாடு என தெரியப்படுத்தவும் தெற்கு சூடான் பகுப்பில் வேறு கட்டுரைகள் இல்லாமையாலும் அவ்வாறு பகுப்பில் இட்டேன். மேலும் எனக்கு இந்த நாடு கிழக்கு ஆபிரிக்க நாடா, வடக்கு ஆபிரிக்க நாடா என்ற குழப்பமும் இருந்தது. நீங்கள் கூறுவதும் சரியே.--மணியன் 06:13, 9 சூலை 2011 (UTC)
பதக்கம்
விக்கிப்புயல் பதக்கம் | ||
மும்பை தொடர்குண்டுவெடிப்பு கட்டுரைக்கு உடனடியாகத் தேவைப்பட்ட கைவினை வெடி குண்டு என்ற கட்டுரையை உடனடியாகத் தொடங்கியதோடு நிறைவான உள்ளடக்கத்துடன் வளர்த்தும் உள்ளீர்கள். நான், பல இடங்களில் இதனைக் கவனித்துள்ளேன். நீங்கள், விக்கியின் அவசரகாலப் படை. :) வாழ்த்துகள். பணி சிறக்க வாழ்த்துகள். சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 13:33, 14 சூலை 2011 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- "அவசர காலப் படை” என்பது மிகப் பொருத்தம் :-)--சோடாபாட்டில்உரையாடுக 13:41, 14 சூலை 2011 (UTC)
இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011 |
---|
வணக்கம் Rsmn,
முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். |
Invite to WikiConference India 2011
Hi Rsmn,
The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011. But the activities start now with the 100 day long WikiOutreach. Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)
We look forward to see you at Mumbai on 18-20 November 2011 |
---|
ஆயிரவர் பதக்கம்
மணியன், தமிழ் விக்கியில் இன்று வரையில் 1000 கட்டுரைகள் உருவாக்கி அரும்பணி ஆற்றியுள்ளமைக்கு ஆயிரவர் என்னும் பட்டம் அளித்து எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். தொடர்ந்து பல்லாயிரம் கட்டுரைகளை எழுத வேண்டும் என வாழ்த்துகிறேன். வாழ்க உங்கள் நற்பணி.--Kanags \உரையாடுக 09:48, 14 ஆகத்து 2011 (UTC)
- மிகுந்த நன்றிகள் சிறீதரன். விரைவாக பங்களிக்க முடியாவிடினும் வளர்முகமாக பங்கேற்பது என்னளவில் மகிழ்ச்சியளிக்கும் உணர்வே.--மணியன் 16:25, 14 ஆகத்து 2011 (UTC)
+1 ஆழமான அட்டகாசமான ஆயிரம் கட்டுரைகள் எழுதிய உங்கள் பணி தொடர் என் வாழ்த்துகள்--சோடாபாட்டில்உரையாடுக 16:29, 14 ஆகத்து 2011 (UTC)
- தமிழ் விக்கிக்கு ஆயிரம் கட்டுரைகளைத் தந்து “ஆயிரமவர்” பதக்கம் பெற்றிட்ட மணியன் தொடர்ந்து பல்லாயிரம் கட்டுரைகளைத் தந்திடவும், தொடர்ந்து அவர் சிறப்புடன் செயலாற்றிடவும் என் இனிய நல்வாழ்த்துகள். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:02, 15 ஆகத்து 2011 (UTC)
Hello
Sorry to bother you, but we need to find someone who could translate and upload on ta.wikipedia Kara and Josh Duhamel. Can you help us ? Thanks a lot Tsuchiya Hikaru 20:31, 22 அக்டோபர் 2011 (UTC)
ஊடகப் போட்டி வலைவாசல்
நீங்கள் சுட்டிக்காட்டியவற்றை விதிகள் மற்றும் அ.கே.கே. பக்கங்களில் சேர்த்துள்ளேன். விளக்கம் போதுமானதாக உள்ளதா என்று சரிபார்க்க வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 15:43, 3 நவம்பர் 2011 (UTC)
- நன்றி! இன்றுதான் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை முழுமையாக அறிய முடிந்தது. மிகச் சிறப்பான முறையி்ல் ஒருங்கிணைத்து வரும் சோடாபாட்டில் பாராட்டுக்குரியவர். அவருடன் தோள்கொடுத்து நடத்தும் மற்ற பங்களிப்பாளர்களுக்கும் கருத்துரை தந்து ஊக்குவித்தவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்!! இந்தக் குழு முயற்சி மிகவும் பெருமை சேர்ப்பதாக உள்ளது. --மணியன் 00:38, 4 நவம்பர் 2011 (UTC)
ஊடகப் போட்டி சோதனை
மணியன்,
ஊடகப் போட்டி ஏற்பாடுகள் முடிந்து விட்டன. வலைவாசலையும், பதிவேற்றத்தையும் சோதித்துப் பார்க்க வெளிச் சோதனையாளர்கள் தேவைப்படுகின்றனர் :-). எனவே வலைவாசல்:ஊடகப் போட்டி வழியாக காமன்சு போய் பதிவேற்றி ஏதேனும் முறிந்துள்ளதா, சிக்கல் உள்ளதா என்று சொதித்துப் பார்க்க வேண்டுகின்றேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:23, 8 நவம்பர் 2011 (UTC)
- வலைவாசல் மிகவும் அருமையாக உள்ளது. விளக்கங்கள் தெளிவாக உள்ளன. ஓர் படிமத்தை பதிவேற்றம் செய்து பார்த்தேன். எளிதாகவும் சிக்கலின்றியும் இருந்தது. சில மேம்படுத்தல் கருத்துகள்:
- முகப்பிலேயே "பங்கெடுப்பீர்" என்று "பங்கேற்க" தத்தலுக்கு இணைப்புக் கொடுக்கலாம். தற்போது "விதிகள்", "பங்கேற்க " என்ற இரு தத்தல்களிலும் கோப்பை பதிவேற்ற இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதால் சிலர் குழம்பலாம்.
- காமன்சு இடைமுகத்தில் நரையம் நிரல் இல்லாததால் என்னைப் போன்ற தமிழ்விக்கியில் பழகிவிட்டவர்களுக்கு தமிழில் விளக்கங்கள் தர கடினமாக உள்ளது.
- காமன்சில் TamilWiki Media Contest பகுப்பில் படிமம் காணப்படவில்லை. வழங்கிகள் இற்றைப்படுத்தலில் தாமதமேற்படும் எனில் அதனை "பங்கேற்க" தத்தலில் அறிவிக்கலாம். ஆனால் தமிழ் விக்கியில் தொடர்புடைய கட்டுரையில் உடனடியாக பயன்படுத்த முடிந்தது..எனவே பதிவேற்றியவர்களுக்கு எளிதான பகுப்பினுள் தேடுதல் பொறியை தமிழ் காமன்சில் ஏற்படுத்தினால் tamil.wikipedia [at] gmail.com மின்னஞ்சல்களைக் குறைக்கலாம். --மணியன் 09:34, 8 நவம்பர் 2011 (UTC)
- சோதித்து உதவியதற்கு நன்றி மணியன்
- 1) முகப்பில் கொடுத்து விட்டேன். சிலர் விதிகளிலிருந்து நேரடியாகப் பங்கேற்க விரும்பலாம் என்பதால் இரு பக்கங்களிலும் சேர்த்துள்ளேன்.
- 2) காமனிசில் நரையம் இணைப்பது கடினம் (அங்குள்ள சமூகம் இதனை அவர்களாகக் கேட்க வேண்டும்). நரையம் குழுவினர் அனைத்து விக்கித் திட்டங்களிலும் இணைக்கத் திட்டம் வைத்துள்ளனர். ஆனால் எப்போது நடக்கும் என்பது. விக்கிமீடியா உள் அரசியல் நிலவரத்தைப் பொறுத்து மாறும் :-).
- 3) இதற்காக சுருக்கத்தில் ஒரு “வார்ப்புரு” இணைக்கத் திட்டமிட்டுள்ளோம் (காமன்சு நிருவாகி துணை தேவையென்பதால் உடனடியாக செய்ய இயலவில்லை. எனினும் செய்ய முயன்று வருகிறோம்.
--சோடாபாட்டில்உரையாடுக 08:12, 10 நவம்பர் 2011 (UTC)வருகிறோம்)
- காமன்சில் நரையம் சேர்த்துவிட்டோம் (ஸ்ரீகாந்த் முயற்சியில்). தமிழ் வலைவாசல் வழியாக காமன்சு தரவேற்ற விசார்டிற்கு சென்றால், நரையம் தோன்றும்.--சோடாபாட்டில்உரையாடுக 19:33, 24 நவம்பர் 2011 (UTC)
- மிக்க நன்றி பாலா,ஸ்ரீகாந்த் டீம் ;) ; எனது வேலைப்பளுவால் இப்போதுதான் பார்த்தேன்.இன்னும் சிலகாலம் என் பங்களிப்புகளும் பதிலளிப்புகளும் தாமதமாகவே இருக்கும் --மணியன் 04:28, 30 நவம்பர் 2011 (UTC)
ஆயிரவர் பதக்கம்
ஆயிரவர் பதக்கம் | ||
மணியன், தமிழ் விக்கியில் அண்மையில் ஆயிரம் கட்டுரைகளையும் தாண்டி இன்றளவில் 1135 கட்டுரைகளை உருவாக்கியமைக்காக உடன் பங்களிப்பாளன் என்ற வகையில் ஆயிரவர் என்னும் பட்டம் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வளர்க உங்கள் நற்பணி!--Kanags \உரையாடுக 02:20, 12 நவம்பர் 2011 (UTC) |
Suggestion
Hi, I suggest you to write about communes of France and it have more than 36,000 articles. Communes_of_France then you create about thei departement. It have more articles. You can take from English resource then translated to Tamil wikipedia. I'm sure Tamil Wikipedia can go to 100,000 articles--Aplikasi 07:37, 12 நவம்பர் 2011 (UTC)
உங்களுக்குத் தெரியுமா? திட்டம்
நீங்கள் பங்களித்த பிரெட்டன் வுட்சு முறைமை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 25, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த சுப்ரமண்யம் பாரதி விருது என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 11, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த எண்டோசல்ஃபான் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 4, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த வரவுச்செலவு சமநிலை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூன் 1, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த சக்தி நடவடிக்கை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூன் 15, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த தலிகோட்டா சண்டை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூன் 29, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த வூடூ என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஆகஸ்ட் 3, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த இந்தியாவின் அலுவல் மொழிகள் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூலை 6, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த முலை ஊடுகதிர்ப்படச் சோதனை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூலை 13, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த கைவினை வெடி குண்டு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஆகஸ்ட் 10, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த கொள்வனவு ஆற்றல் சமநிலை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஆகஸ்ட் 17, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த கோப்பா அமெரிக்கா என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஆகஸ்ட் 31, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த பெர்சி கூட்டணி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் செப்டம்பர் 7, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த சம இரவு நாள் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் செப்டம்பர் 7, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த நாச்சோ என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் செப்டம்பர் 21, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த பர்கர் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் அக்டோபர் 12, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த பெருவெற்றித் தொடர் (டென்னிசு) என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் நவம்பர் 30, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த முஜாஹிதீன் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த பரம வீர சக்கரம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் டிசம்பர் 7, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த கர்வா சௌத் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் டிசம்பர் 21, 2011 அன்று வெளியானது. |
வாழ்த்துகள்
மணியன், காலம் கடந்தே கவனித்தேன். உங்கள் மகனின் திருமணம் இனிதே நடந்தேறியமைக்கு வாழ்த்துகள். பலதும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்ந்திட தம்பதிகளுக்கு தமிழ் விக்கி சமூகத்தினரின் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.--Kanags \உரையாடுக 08:12, 12 திசம்பர் 2011 (UTC)