புகழ்பெற்ற ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இங்கு பல உலகத் தலைவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளின் வரையறையானது வெவ்வேறு இடங்களில் மாறுபடுகிறது. ஒரு சட்டப்பூர்வ வரையறையின் படி, "இரு பெற்றொரின் இறப்பு அல்லது தொலைதல், பெற்றோரால் கைவிடப்பட்ட அல்லது பெற்றோரிடமிருந்து பிரிந்த" ஒரு குழந்தை ஆதரவற்றதாகவோ மற்றும் கைவிடப்பட்டதாகவோ கருதப்படும்.[1]
பண்டைய வரலாறும் சமயத் திருநூல்களும்
தொகுஆப்பிரிக்கா
தொகு- மூன்றாம் அமென்கோதேப், எகிப்தின் பதினெட்டாம் வம்சத்தின் பார்வோன்
- ஆட்செப்சுட்டு, எகிப்தின் பதினெட்டாம் வம்சத்தின் பார்வோன்
- மூன்றாம் தூத்மோஸ், எகிப்தின் பதினெட்டாம் வம்சத்தின் பார்வோன்
ஆசியா
தொகு- ஆண்டாள், தமிழ் வைணவ ஆழ்வார், கோயில் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டார்
- மகா மூன்றாம் அன்டியோச்சுஸ், எலனியக் கிரேக்க மன்னன், செலூக்கியப் பேரரசின் 6வது ஆட்சியாளர்
- கன்பூசியஸ், சீன அறிஞர் மற்றும் அரசியல்வாதி
- சைரசு, பாரசீகப் பேரரசர், குழந்தைப் பருவத்திலேயே ஆதரவற்று விடப்பட்டார்
- எஸ்தர், பாரசீக மன்னன் அகாசுவேருசுவின் யூத இராணி
- மோசே, சமயத் தலைவர், குழந்தைப் பருவத்திலேயே கைவிடப்பட்டவர்
- சர்கோன், செமித்திய மொழி பேசிய அக்காடியப் பேரரசின் ஆட்சியாளர்
- நிக்கலசு, குழந்தைகளுக்கான புனிதப் புரவலர், குழந்தைப் பருவத்தின் ஆரம்பத்திலேயே ஆதரவற்று விடப்பட்டார்
- புலச்சேரியா, உரோமானிய ஆட்சியாளர்
ஐரோப்பா
தொகு- அரிசுட்டாட்டில், கிரேக்கத் தத்துவவாதி, அறிவியலாளர், குழந்தைப் பருவத்தின் ஆரம்பத்திலேயே ஆதரவற்று விடப்பட்டார்
- மார்க்கஸ் அரேலியஸ், உரோமானியப் பேரரசர்
- பிரித்தானிகஸ், உரோமானியப் பேரரசர் கிளவுடியஸ் மற்றும் அவரின் 3ஆம் மனைவி வலேரியா மெசலீனாவின் மகன்
- காலிகுலா, உரோமானியப் பேரரசர் கி. பி. 37–41
- இளம் காட்டோ, உரோமானியக் குடியரசு, ஆதரவற்று விடப்பட்டு இவரது உறவினரால் வளர்க்கப்பட்டவர்
- அத்ரியன், உரோமானியப் பேரரசர்
- இரண்டாம் ஜூபா, நுமீடியாவின் மன்னன், இவரது மனைவி கிளியோபாட்ரா செலினெ
- சூலியன், உரோமானியப் பேரரசர் மற்றும் தத்துவவாதி
- ஓடிபஸ், கிரேக்கப் புராண மன்னன், ஒரு மலையில் கைவிடப்பட்டார்
- பன்க்ராஸ், உரோமானிய சமயத் தலைவர்
- கல்லா பிலாசிடியா, உரோமானிய அரசியலில் முக்கிய சக்தி
- உரோமுலஸ் மற்றும் ரீமஸ், பண்டைய ரோமைத் தோற்றுவித்தவர்கள், குழந்தைப் பருவத்திலேயே ஆதரவற்று விடப்பட்டனர்
- சுல்லா, உரோமானியத் தளபதி மற்றும் அரசியல் மேதை
- லூசியஸ் வேருஸ், உரோமானியப் பேரரசர்
அரசியல் மற்றும் சமயத் தலைவர்கள்
தொகுஆப்பிரிக்கா
தொகு- அல் அக்கீம் பி அமர் அல்லா, பாத்திம கலீபகத்தின் 6வது கலீபா மற்றும் 16வது இஸ்மாயிலி இமாம்
- ஜீன் கிலாரி அவுபமே, காபோனின் அரசியல்வாதி
- ஜீன் பெடேல் போக்சா, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் இராணுவ அதிகாரி, நாட்டுத் தலைவர் மற்றும் மத்திய ஆப்பிரிக்காவின் பேரரசர்
- பியட் ஜோபெர்ட், தென்னாப்பிரிக்கக் குடியரசின் இராணுவத் தலைவர்
- ஜோமோ கென்யட்டா, கென்யாவின் அரசியல்வாதி மற்றும் முதல் அதிபர்
- வின்னி மண்டேலா, தென்னாப்பிரிக்க செயற்பாட்டாளர் மற்றும் அரசியல்வாதி
- நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் அதிபர்
- இரண்டாம் மெனெலிக், எத்தியோப்பியாவின் பேரரசர்
- மொபுட்டு செசெ செக்கோ, காங்கோ மக்களாட்சிக் குடியரசின் இராணுவ சர்வாதிகாரி மற்றும் அதிபர்
- முதலாம் ஹைலி செலாசி, எத்தியோப்பியாவின் பேரரசர்
- ஜமால் அப்துல் நாசிர், எகிப்தின் இரண்டாம் அதிபர்
ஆசியா
தொகு- அப்பாஸ், சபாவித்து அரசமரபின் 5வது ஷா
- அக்பர், முகலாய அரசமரபின் 3வது பேரரசர்
- யாசிர் அரஃபாத், பாலத்தீனத் தலைவர்
- முஸ்தாபா கெமால் அத்தாதுர்க், துருக்கிய உயர்நிலை கள அலுவலர், அரசியல் புரட்சி மேதை, எழுத்தாளர், துருக்கிக் குடியரசின் நிறுவனத் தந்தை
- சுலலாங்கொர்ன், சியாமின் ஆட்சியாளர்
- சாயாஜி ராவ் கெய்க்வாட் III, பரோடா அரசின் மகாராசா
- கோ மோமோசோனோ, யப்பானின் பேரரசர்
- கோ சகுரமச்சி, யப்பானின் பேரரசர்
- கோ டோபா, யப்பானின் பேரரசர்
- கோங்வு, சீனாவின் பேரரசர்
- குயினெங், சான் பௌத்தத்தின் மிக முக்கிய நபர்களில் ஒருவரான பௌத்த பிக்கு
- சதாம் உசேன், ஈராக்கின் 5வது குடியரசுத் தலைவர்
- கூ சிங்தாவ், சீன அரசியல்வாதி மற்றும் முதன்மைத் தலைவர்
- சங் கை செக்,சீனக் குடியரசின் தலைவராகச் சேவையாற்றிய சீன அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்
- செங்கிஸ் கான், மங்கோலியத் தலைவர்
- பேரரசர் மெய்சி, யப்பானின் 122வது பேரரசர்
- முகமம்து மொசாத்தெக், ஈரானிய அரசியல்வாதி, சனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைவர் மற்றும் பிரதமர்
- முகம்மது நபி, சமயத் தலைவர், 6 வயதில் ஆதரவற்றவரானார்
- நிரிபேந்த்ரா நாராயணன், கூச் பெகர் சமஸ்தானத்தின் மகாராசா
- லி பெங், சீன அரசியல்வாதி
- புயி, கடைசிச் சீனப் பேரரசர்
- இட்சாக் ரபீன், இஸ்ரேல் அரசியல்வாதி, அரசியல் மேதை, தளபதி மற்றூம் இஸ்ரேலின் 5வது பிரதமர்
- இரண்டாம் மாதவ் சிங், ஜெய்பூரின் மகா இராஜாதி இராஜா
- செயிவா, யப்பானின் பேரரசர்
- நாதிர் ஷா, ஈரானிய ஆட்சியாளர்
- ரேசா ஷா பகலவி, ஈரானின் (பாரசீகத்தின்) ஷா
- ஆதி சங்கரர், அறிஞர், தத்துவவாதி, சீர்திருத்தவாதி, அத்வைதம் ஒருமைநிலைவாதம்
- தைக்சு, பௌத்த நவீனவாதி, செயற்பாட்டாளர் மற்றும் சிந்தனையாளர், சீனப் பௌத்தத்தை சீர்திருத்த மற்றும் புதுப்பிக்க பரிந்துரைத்தவர்
- தியோடோரா, பைசாந்தியப் பேரரசின் பேரரசி
- பால கங்காதர திலகர், இந்தியத் தேசியவாதி, ஆசிரியர், வழக்கறிஞர் மற்றும் விடுதலைச் செயற்பாட்டாளர்
- மினமோட்டோ னோ யோரிமோட்டோ, யப்பானின் கமகுரா சோகுனரசின் தொற்றுவிப்பாளர் மற்றும் முதல் சோகுன்
- சூ சுங்ச்சி, சீனப் பிரதமர்