பெசுட் மக்களவைத் தொகுதி

பெசுட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Gua Musang; ஆங்கிலம்: Gua Musang Federal Constituency; சீனம்: 勿述国会议席) என்பது மலேசியா, திராங்கானு, பெசுட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P033) ஆகும்.[8]

பெசுட் (P033)
மலேசிய மக்களவைத் தொகுதி
 திராங்கானு
Besut (P033)
Federal Constituency in Terengganu
பெசுட் மக்களவைத் தொகுதி
(P033 Besut)
மாவட்டம் பெசுட் மாவட்டம்
 திராங்கானு
வாக்காளர்களின் எண்ணிக்கை112,718 (2023)[1][2]
வாக்காளர் தொகுதிபெசுட் தொகுதி
முக்கிய நகரங்கள்பெசுட் மாவட்டம், கோலா பெசுட், கம்போங் ராஜா, பெர்கெந்தியான் தீவு, ஜெர்த்தே
பரப்பளவு1,027 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1958
கட்சி      பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்சே முகமட் சுல்கிப்ளி ஜூசோ
(Che Mohamad Zulkifly Jusoh)
மக்கள் தொகை127,825 (2020)[4]
முதல் தேர்தல்மலாயா பொதுத் தேர்தல், 1959
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]




2022-இல் பெசுட் மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[6][7]

  மலாயர் (99.9%)
  சீனர் (0.1%)
  இதர இனத்தவர் (0%)

பெசுட் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1959-ஆம் ஆண்டில் இருந்து பெசுட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]

பெசுட் மாவட்டம்

தொகு

பெசுட் மாவட்டம், திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். திராங்கானு மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.

பெசுட் மாவட்டத்திற்கு கிழக்கில் தென் சீனக்கடல்; வடக்கிலும் மேற்கிலும் கிளாந்தான் மாநிலம் எல்லைகளாக உள்ளன. இந்த மாவட்டம் திராங்கானு மாநிலத்தின் வடக்கு நுழைவாயிலாக அமைகின்றது.

ஜெர்த்தே நகரம்

தொகு

கம்போங் ராஜா நகரம் (Kampung Raja), பெசுட் மாவட்டத்தின் தலைநகரம். இருப்பினும் பெசுட் மாவட்டத்தில் உள்ள மற்றொரு நகரான ஜெர்த்தே நகரம் (Jerteh), கம்போங் ராஜா நகரத்தைவிட மிகவும் வளர்ச்சி அடைந்த நகரமாகத் திகழ்கின்றது.

மற்றொரு முக்கிய நகரம் மீன்பிடித் துறைமுகமான கோலா பெசுட் (Kuala Besut). தவிர சாபி (Jabi), அப்பால் (Apal), பாசிர் அகார் (Pasir Akar) மற்றும் தெம்பிலா (Tembila) போன்ற பிற சிறிய நகரங்களும் கிராமங்களும் இந்த மாவட்டத்தில் உள்ளன.

பெசுட்டில் உள்ள பெரும்பாலான மலாய்க்காரர்கள், திராங்கானிய அடையாளத்தை விட கிளந்தானிய அடையாளத்துடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். திராங்கானு மலாய் மொழிக்குப் பதிலாக கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழியை (Kelantanese Malay) பேசுகிறார்கள்.

பெசுட் மக்களவைத் தொகுதி

தொகு
பெசுட் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1958-ஆம் ஆண்டில் பெசுட் தொகுதி உருவாக்கப்பட்டது
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம்
1-ஆவது மலாயா மக்களவை P025 1959–1963 புர்கானுதீன் அல்-எல்மி
(Burhanuddin al-Helmy)
மலேசிய இசுலாமிய கட்சி
மலேசிய நாடாளுமன்றம்
1-ஆவது மலேசிய மக்களவை P025 1963–1964 புர்கானுதீன் அல்-எல்மி
(Burhanuddin al-Helmy)
மலேசிய இசுலாமிய கட்சி
2-ஆவது மக்களவை 1964–1969 முகமது தாவூத் அப்துல் சமாட்
(Mohd. Daud Abdul Samad)
1969–1971 நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[10]
3-ஆவது மக்களவை P025 1971–1973 உசைன் சுலைமான்
(Hussain Sulaiman)
மலேசிய கூட்டணி
(அம்னோ)
1973–1974 பாரிசான் நேசனல்
(அம்னோ)
4-ஆவது மக்களவை P028 1974–1978 சக்காரியா அப்துல் ரகுமான்
(Zakaria Abdul Rahman)
5-ஆவது மக்களவை 1978–1982
6-ஆவது மக்களவை 1982–1986
7-ஆவது மக்களவை P030 1986–1990
8-ஆவது மக்களவை 1990–1995 முகமது யூசுப் முகமது நூர்
(Mohamed Yusof Mohamed Noor)
9-ஆவது மக்களவை P033 1995–1999 இட்ரிசு ஜூசோ
(Idris Jusoh)
10-ஆவது மக்களவை 1999–2004 அசன் முகமது
(Hassan Mohamed)
மாற்று முன்னணி
(மலேசிய இசுலாமிய கட்சி)
11-ஆவது மக்களவை 2004–2008 அப்துல்லா முகமது ஜின்
(Abdullah Md Zin)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
12-ஆவது மக்களவை 2008–2013
13-ஆவது மக்களவை 2013–2018 இட்ரிசு ஜூசோ
(Idris Jusoh)
14-ஆவது மக்களவை 2018–2022
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் சே முகமட் சுல்கிப்ளி ஜூசோ
(Che Mohamad Zulkifly Jusoh)
பெரிக்காத்தான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)

பெசுட் தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ∆%
மலேசிய இசுலாமிய கட்சி சே முகமட் சுல்கிப்ளி ஜூசோ
(Mohd Azizi Abu Naim)
49,569 59.85% + 17.93%  
பாரிசான் நேசனல் நவி முகமது
(Nawi Mohamad)
30,903 37.41% - 4.51%
பாக்காத்தான் அரப்பான் அப்துல் ரகுமான் அசீசு அபாஸ்
(Abd Rahman @ Abd Aziz Abas)
4,339 2.50% - 4.18%
தாயக இயக்கம் வான் நசாரி வான் ஜூசோ
(Wan Nazari Wan Jusoh)
553 0.24% + 0.24%  
செல்லுபடி வாக்குகள் (Valid) 84,831 100%
செல்லாத வாக்குகள் (Rejected) 877
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) 246
வாக்களித்தவர்கள் (Turnout) 86,487 79.06% - 4.43%
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) 111,650
பெரும்பான்மை (Majority) 18,666 22.44% + 15.96%  
மலேசிய இசுலாமிய கட்சி வெற்றி பெற்ற கட்சி (Hold)
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[11]

மேற்கோள்கள்

தொகு
  1. "Semakan Keputusan Pilihan Raya". Semakan Keputusan Pilihan Raya. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 5. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  7. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  8. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  9. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A) Polling Hours For the General Eelection of the Legislative Assembly of the State of Kelantan" (PDF). Attorney General's Chambers. 15 July 2023.
  10. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-16.
  11. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெசுட்_மக்களவைத்_தொகுதி&oldid=4034304" இலிருந்து மீள்விக்கப்பட்டது