பொந்தியான் மக்களவைத் தொகுதி
பொந்தியான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pontian; ஆங்கிலம்: Pontian Federal Constituency; சீனம்: 笨珍国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு மாவட்டம்; கூலாய் மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P164) ஆகும்.[6]
பொந்தியான் (P164) மலேசிய மக்களவைத் தொகுதி ஜொகூர் | |
---|---|
Pontian (P164) Federal Constituency in Johor | |
பொந்தியான் மக்களவைத் தொகுதி (P164 Pontian) | |
மாவட்டம் | ஜொகூர் பாரு மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 75,212 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | பொந்தியான் தொகுதி |
முக்கிய நகரங்கள் | பொந்தியான் கிச்சில்; தஞ்சோங் பியாய்; பீசாங் தீவு; மெரம்போங் தீவு; குக்குப் தீவு; குக்குப், பெக்கான் நானாஸ் |
பரப்பளவு | 444 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பாரிசான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அகமட் மசுலான் (Ahmad Maslan) |
மக்கள் தொகை | 81,778 (2020)[4][5] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
பொந்தியான் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து பொந்தியான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]
பொந்தியான் மாவட்டம்
தொகுபொந்தியான் மாவட்டம் என்பது ஜொகூர் மாநிலத்தின், தென் மேற்கில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு பொந்தியான் கிச்சில் நகரம் தலைநகரமாக உள்ளது.
பொந்தியான் மாவட்டம், அன்னாசிப் பண்ணைகள் மற்றும் செம்பனை தோட்டங்களின் மையமாக இருந்தது. தற்போது இந்த மாவட்டத்தின் முக்கியப் பொருளாதார நடவடிக்கைகள் இயற்கைச் சூழல் சுற்றுலா, மீன்பிடி, கடல்சார் மீன் வளர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் உணவு பதப்படுத்துதல் ஆகும்.[8]
இங்குள்ள பெரும்பாலான பகுதிகள் சதுப்பு நிலங்களைக் கொண்டவை; அவற்றின் முக்கியத் தொழிலாக மீன்பிடித் தொழில் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள இரண்டு நகரங்களின் பெயர்களிலும் பொந்தியான் எனும் பெயர் பயன்படுத்தப்படுகிறது; பொந்தியான் பெசார் மற்றும் பொந்தியான் கிச்சில்.
பொந்தியான் மக்களவைத் தொகுதி
தொகுபொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
பொந்தியான் தொகுதி 1974-ஆம் ஆண்டில் பொந்தியான் உத்தாரா தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P112 | 1974–1977 | அலி அகமட் (Ali Ahmad) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
1978 | இக்வான் நாசிர் (Ikhwan Nasir) | |||
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | மொக்தாராம் ரபிதீன் (Mokhtaram Rabidin) | ||
7-ஆவது மக்களவை | P132 | 1986–1990 | லாவ் லாய் கெங் (Law Lai Heng) |
பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) |
8-ஆவது மக்களவை | 1990–1995 | ஓங் கா திங் (Ong Ka Ting) | ||
9-ஆவது மக்களவை | P144 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P164 | 2004–2008 | அசுனி மொகமட் (Hasni Mohammad) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
12-ஆவது மக்களவை | 2008–2013 | அகமட் மசுலான் (Ahmad Maslan) | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
தேர்தல் முடிவுகள்
தொகுவேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
அகமட் மசுலான் (Ahmad Maslan) | பாரிசான் நேசனல் | 23,201 | 40.81 | 5.40 ▼ | |
இசா அப்துல் அமீட் (Isa Ab Hamid) | பெரிக்காத்தான் நேசனல் | 17,448 | 30.69 | 30.68 | |
சிசுவான் சைனல் அபிதீன் (Syazwan Zdainal Abdin) | பாக்காத்தான் அரப்பான் | 15,901 | 27.97 | 16.42 ▼ | |
ஜமாலுதீன் முகமட் (Jamaluddin Mohamad) | தாயக இயக்கம் | 306 | 0.54 | 0.54 | |
மொத்தம் | 56,856 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 56,856 | 98.22 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 1,030 | 1.78 | |||
மொத்த வாக்குகள் | 57,886 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 75,212 | 57881 | 8.42 ▼ | ||
Majority | 5,758 | 10.13 | 8.31 | ||
பாரிசான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [10] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ "PRU-15: Parlimen Tebrau pengundi paling ramai di Johor [METROTV]". 27 October 2022.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 29 ஜூலை 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Muafakat ke Arah #Johor Berkemajuan" (PDF). Muafakat Johor. பார்க்கப்பட்ட நாள் 23 November 2021.
- ↑ "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
- ↑ "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF JOHOR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.