விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி (பிறப்பு: சூலை 24, 1975)[1] இந்தியா, தமிழ்நாட்டின் ஓர் முன்னணி திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தற்போது திரைப்படத்தில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
விஜய் அண்டனி | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ராஜா அந்தோனி |
பிறப்பு | சூலை 24, 1975 |
இசை வடிவங்கள் | திரையிசை, இசையமைப்பாளர் |
தொழில்(கள்) | இசையமைப்பாளர், பாடகர், நடிகர், பின்னனிப் பாடகர், தயாரிப்பாளர் |
இசைத்துறையில் | 2005 – இன்றுவரை |
இணையதளம் | vijayantony.com |
வாழ்க்கை வரலாறுதொகு
விஜய் ஆண்டனி தமிழ்நாடு மாநிலம், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 1975 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை இவருக்கு 7 வயது இருக்கும் போது இறந்து விட்டார். இவர் பண்டைய எழுத்தாளர் மாயூரம் வேத நாயகம் பிள்ளை அவர்களின் கொள்ளுப் பேரன் ஆவார்.
விஜய் ஆண்டனி துவக்கத்தில் ஒலிப் பொறியாளராகப் பணி புரிந்து பின்னர் இசையமைப்பாளரானவர். தமது கல்லூரிப் படிப்பை முடித்தப் பின்னர் தாமே ஆடியோபைல்ஸ் என்ற ஒலியரங்கை நிறுவினார். அங்கு ஒலி பொறியாளராக சோதனைகள் செய்து தொலைக்காட்சிகளுக்கும் ஆவணப்படங்களுக்கும் சில இசைத்துண்டுகளை (jingles) அமைத்தார்.[2] அப்போது ஆஸ்கார் ரவிச்சந்திரன் தமது டிஷ்யூம் என்ற திரைப்படத்திற்கு இசையமைக்க அழைத்தார். ஆனால் விஜய் இசையமைத்த முதல் திரைப்படமாக சுக்ரன் திரைப்படம் முதலில் வெளிவந்தது.
இவரது அண்மைய திரைப்படம் விஜய் நடித்த வேட்டைக்காரன் படமாகும்.
மேலும் இவர் கன்னடப் படம் புத்திவந்தா விற்கு இசையமைத்துள்ளார், இது தமிழ்ப்படம் நான் அவனில்லையின் மறுபதிப்பு திரைப்படமாகும்.
2009ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற கான் கோல்டன் லயன் விருதை சிறந்த இசைக்காக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்காக தயாரித்த "நாக்க முக்கா" வணிகப்படத்திற்காகப் பெற்றார்.
தமது இசையமைப்பில் பல புதுமுக பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பவர் என்ற பெருமை உடையவர்.
மேலும் 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக்கொண்ட விட்டார் என்றே கூற வேண்டும்.
திரைப்படங்கள்/தொகுப்புகள்தொகு
ஆண்டு | பெயர் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
2005 | சுக்ரன் | தமிழ் | |
2006 | பை2 | தமிழ் | |
டிஷ்யூம் | தமிழ் | ||
2007 | நினைத்தாலே இனிக்கும் | தமிழ் | |
நான் அவன் இல்லை | தமிழ் | ||
2008 | பந்தயம் | தமிழ் | |
காதலில் விழுந்தேன் | தமிழ் | ||
புத்திவந்தா | கன்னடம் | நான் அவனில்லை மறுபதிப்பு | |
பசும்பொன்தேவர் வரலாறு | தமிழ் | ||
2009 | அ ஆ இ ஈ | தமிழ் | |
தநா-07 அல் 4777 | தமிழ் | ||
மரியாதை | தமிழ் | ||
நினைத்தாலே இனிக்கும் | தமிழ் | ||
மகாத்மா | தெலுங்கு | ||
வேட்டைக்காரன் | தமிழ் | ||
2010 | ரசிக்கும் சீமானே | தமிழ் | |
உத்தம புத்திரன் | தமிழ் | எடுக்கப்படுகிறது | |
கனகவேல் காக்க | தமிழ் | ஒலிப்பேழை வெளியிடப்பட்டுள்ளது | |
அங்காடித்தெரு | தமிழ் | ||
அவள் பெயர் தமிழரசி | தமிழ் | ||
2012 | நான் | தமிழ் | |
2014 | சலீம் | தமிழ் | |
2015 | இந்தியா பாக்கிஸ்தான் | தமிழ் | |
2016 | பிச்சைக்காரன் | தமிழ் | |
சைத்தான் | தமிழ் | ||
2017 | எமன் | தமிழ் | |
அண்ணாதுரை | தமிழ் | இரு வேடங்களில் நடித்துள்ளார் |
மேற்கோள்கள்தொகு
- ↑ "விஜய் ஆண்டனி குறிப்புகள்".
- ↑ Kalpagam Sarma. "'Naaka Mukka' Antony". goergo.in. 2011-01-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-01-19 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)