இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2024–25

இந்தியத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் 2024 நவம்பர் முதல் 2024 சனவரி வரை ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடுகிறது.[1] தேர்வுப் போட்டிகள் 2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக விளையாடப்படுகின்றன.[2][3][4] 1992 இற்குப் பின்னர் இரு நாடுகளுக்குமிடையே ஐந்து தேர்வுப் போட்டிகள் நடைபெறும் முதலாவது தேர்வுத் தொடராகும்.[5][6]

இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2024–25
பார்டர்-கவாஸ்கர் கிண்ணம்
ஆத்திரேலியா
இந்தியா
காலம் 22 நவம்பர் 2024 – 7 சனவரி 2025
தலைவர்கள் பாட் கம்மின்ஸ் ரோகித் சர்மா[a]
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்

முந்தைய 2023 தொடரில் இந்தியா ஆத்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வென்று பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தைத் தக்க வைத்திருந்தது..[7][8]

விளையாடும் இடங்க்ள்

தொகு

கிரிக்கெட் ஆத்திரேலியா தமது கோடை-காலத் துடுப்பாட்டக் கால நிரலை 2024 மார்ச்சில் அறிவித்தது.[9] தேர்வுத் தொடர் ஆத்திரேலியாவின் முதன்மை ஐந்து நகரங்களின் துடுப்பாட்டத் திடல்களில் நடைபெறுகிறது. 1991/92 இற்குப் பின்னர் இரண்டு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் முதலாவது ஐந்து-ஆட்டத் தொடர் இதுவாகும்.

தேர்வு அமைவிடம் திடல் இருக்கைகள் நாள்
1-வது பேர்த் பேர்த் திடல் 61,266 22–26 நவம்பர்
2-வது அடிலெயிட் அடிலெய்டு நீள்வட்ட அரங்கம் 53,500 6–10 திசம்பர்
3-வது பிரிஸ்பேன் பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம் 37,000 14–18 திசம்பர்
4-வது மெல்பேர்ண் மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம் 100,024 26–30 திசம்பர்
5-வது சிட்னி சிட்னி துடுப்பாட்ட அரங்கம் 48,000 3–7 சனவரி

அணிகள்

தொகு
  ஆத்திரேலியா[10]   இந்தியா[11]

பார்டர்-கவாசுகர் பதக்கம்

தொகு

1-ஆவது தொடர்

தொகு
22–25 நவம்பர் 2024
ஆட்டவிபரம்
150 (49.4 நிறைவுகள்)
நித்தீசு குமார் ரெட்டி 41 (59)
ஜோஷ் ஹேசல்வுட் 4/29 (13 நிறைவுகள்)
104 (51.2 நிறைவுகள்)
மிட்செல் ஸ்டார்க் 26 (112)
ஜஸ்பிரித் பும்ரா 5/30 (18 நிறைவுகள்)
6/487 (134.3 நிறைவுகள்)
யசஸ்வி ஜைஸ்வால் 161 (297)
நேத்தன் லியோன் 2/96 (39 நிறைவுகள்)
238 (58.4 நிறைவுகள்)
திராவிசு கெட் 89 (101)
ஜஸ்பிரித் பும்ரா 3/42 (12 நிறைவுகள்)
இந்தியா 295 ஓட்டங்களால் வெற்றி
பெர்த் திடல், பேர்த்
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: ஜஸ்பிரித் பும்ரா (இந்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • நேத்தன் மெக்சுவீனி (ஆசி), அர்சித் ராணா (இந்), நித்தீசு குமார் ரெட்டி (இந்) மூவரும் தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
  • கே. எல். ராகுல் (இந்) தனது 3,000-ஆவது தேர்வு ஓட்டத்தை எடுத்தார்.[12]
  • விராட் கோலி ஆத்திரேலியாவில் இந்தியாவுக்காக விளையாடி அதிக தேர்வுச் சதங்களை (7) எடுத்து சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.[13]
  • இது பெர்த் திடலில் ஆத்திரேலியா அடைந்த முதலாவது தேர்வுத் தோல்வி ஆகும்.[14]
  • ஆத்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் (ஓட்டக் கணக்கில்) இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.[15]
  • ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 12, ஆத்திரேலியா 0.

2-ஆவது தொடர்

தொகு

3-ஆவது தொடர்

தொகு

4-ஆவது தொடர்

தொகு

5-ஆவது தொடர்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. ஜஸ்பிரித் பும்ரா முதலாவது தேர்வில் தலைவராக விளையாடினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "India vs Australia Test series: Adelaide in the fray to host another pink-ball Test". Firstpost. 18 March 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-03-19.
  2. "Men's Future Tours Program" (PDF). பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. பார்க்கப்பட்ட நாள் 18 August 2022.
  3. "Tentative Schedule For India's Tour Of Australia 2024-25 Out, Perth Likely To Host 1st Test". OneCricket (in ஆங்கிலம்). 18 March 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-03-19.
  4. "Cricket Australia announces venues for 5-match Test series against India". Times of Oman. பார்க்கப்பட்ட நாள் 2024-03-19.
  5. "Border Gavaskar Trophy In WTC 2023-25 Cycle To Be Played Over Five Tests For First Time Since 1992". India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-19.
  6. "MCG to host historic women's Ashes Test to mark 90-year anniversary of format". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ (in ஆங்கிலம்). 26 March 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-03-27.
  7. "India win series 2-1 after fourth Test with Australia ends in a draw". தி கார்டியன். 14 March 2023. பார்க்கப்பட்ட நாள் 4 October 2024.
  8. "India retain Border-Gavaskar Trophy after dull draw". டெக்கன் ஹெரால்டு. 14 March 2023. பார்க்கப்பட்ட நாள் 4 October 2024.
  9. "Five-Test India series, Ashes crown epic summer | cricket.com.au". Cricket Australia. 2024-03-26. பார்க்கப்பட்ட நாள் 2024-10-14.
  10. "McSweeney, Inglis named in Border-Gavaskar Test squad". Cricket Australia. 10 November 2024.
  11. "Squads for India's tour of South Africa & Border-Gavaskar Trophy announced". இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம். 25 October 2024.
  12. "KL Rahul crosses 3000 Test runs during Australia vs India match at Perth". ஸ்போர்ட்ஸ்டார். பார்க்கப்பட்ட நாள் 22 November 2024.
  13. "Virat Kohli shatters Sachin Tendulkar's record, roars back to form with blazing century vs Australia to reclaim throne". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 26 November 2024.
  14. "India creates history with 1st win over Australia at Perth's Optus Stadium". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 25 November 2024.
  15. "AUS vs IND: Bumrah's historic feat, India's biggest win in Australia – Stat Pack". India Today. பார்க்கப்பட்ட நாள் 25 November 2024.

வெளி இணைப்புகள்

தொகு