இந்திய ரூபாய்
இந்தியாவின் நாணயம் இந்திய ரூபாய் என அழைக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயை வெளியிடுகிறது. INR என்பது இந்திய ரூபாயின் ஐஎஸ்ஓ 4217 குறியீடு.
| |||||
ஐ.எசு.ஓ 4217 | |||||
---|---|---|---|---|---|
குறி | INR (எண்ணியல்: 356) | ||||
சிற்றலகு | 0.01 | ||||
அலகு | |||||
அலகு | ரூபாய் | ||||
குறியீடு | ₹ | ||||
மதிப்பு | |||||
துணை அலகு | |||||
1⁄100 | பைசா | ||||
குறியீடு | |||||
பைசா | |||||
வங்கித்தாள் | |||||
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | ₹10, ₹20, ₹50, ₹100, ₹200, ₹500 | ||||
அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | ₹1, ₹2, ₹5 | ||||
Coins | |||||
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | ₹1, ₹2, ₹5 | ||||
அரிதாக பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | 50, ₹10, ₹20 | ||||
மக்கள்தொகையியல் | |||||
அதிகாரப்பூர்வ பயனர்(கள்) | |||||
அதிகாரப்பூர்வமற்ற பயனர்(கள்) | |||||
வெளியீடு | |||||
நடுவண் வங்கி | இந்திய ரிசர்வ் வங்கி[5] | ||||
இணையதளம் | www | ||||
அச்சடிப்பவர் | இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயங்கள் உற்பத்திக் கழகம்[6] | ||||
இணையதளம் | spmcil | ||||
காசாலை | இந்திய அரசு காசாலை[6] | ||||
இணையதளம் | spmcil | ||||
மதிப்பீடு | |||||
பணவீக்கம் | ▼5.02% (அக்டோபர் 2023) | ||||
ஆதாரம் | இந்திய ரிசர்வ் வங்கி | ||||
முறை | நுகர்வோர் விலை குறியீட்டு எண் (இந்தியா)[8] | ||||
மூலம் இணைக்கப்பட்டது | பூட்டான் நகுல்ட்டிரம் (சம அளவில்) நேபாள ரூபாய் (அதிக மதிப்பு) [1 இந்திய ரூபாய்=1.6 நேபாள ரூபாய்][7] | ||||
ரிசர்வ் வங்கியால் ₹5, ₹10, ₹20, ₹50, ₹100, ₹500 வரையிலான ரூபாய் தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன. ஒரு ரூபாய் தாள்கள் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரையிலான நாணயங்களை வெளியிடும் அதிகாரம் இந்திய அரசுக்கு மட்டுமே உண்டு.[9] உலோக நாணயங்கள் ₹1, ₹2, ₹5, ₹10 மற்றும் ₹20 வரையிலான மதிப்புகளில் வெளியிடப்படுகின்றன. ₹20 க்கு அதிகமான மதிப்புடைய நாணயங்கள் புகழ்வாய்ந்த நபர்களையோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்வையோ குறிப்பிடும் வகையில் நினைவு நாணயங்களாக வெளியிடப்படுகின்றன. 50 பைசாவுக்கு குறைவான பைசா நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை.
சொற்பிறப்பியல்
தொகுபாணினி (கிமு 6 முதல் 4 ஆம் நூற்றாண்டு) ரூப்யா (रूप्य) என்ற வார்த்தையை குறிப்பிடுகிறார்.[10] முதல் மௌரியப் பேரரசர் சந்திரகுப்த மௌரியர் (கி.மு. 340-290) காலத்தில் சாணக்கியர் எழுதிய அர்த்தசாத்திரதம் வெள்ளி நாணயங்களைக் ரூப்யா எனக் குறிப்பிடுகிறது.[11] ரூபாய் என்கிற பதம் சமசுகிருத வார்த்தையான "ரூப்யா" என்கிற வார்த்தையிலிருந்து வந்தது. ரூபாயின் உடனடி முன்னோடியான ரூபியா 178 தானியங்கள் எடையுள்ள வெள்ளி நாணயங்களாக வட இந்தியாவில் ஷேர் ஷா சூரியால் 1540 இல் அச்சிடப்பட்டது. இது பின்னர் முகலாயப் பேரரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[12]
உற்பத்தி
தொகுநாணயங்களையும். ஒரு ரூபாய் நோட்டையும் அச்சடிக்க இந்திய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது. நாணயங்கள் அச்சடிக்கும் உரிமை 1906 ஆம் வருட நாணயச் சட்டதால் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மதிப்புகளில் நாணயங்களை வடிவமைத்து அச்சிடுவதும் இந்திய அரசின் பொறுப்பாகும். மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் நொய்டா ஆகிய நான்கு இடங்களில் நாணயங்கள் அச்சிடப்படுகின்றன.[13] இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 அடிப்படையில் ரிசர்வ் வங்கி மூலம் மட்டுமே நாணயங்கள் புழக்கத்திற்கு வெளியிடப்படுகின்றன.[14] இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகம் நான்கு அச்சகங்களை கொண்டுள்ளது.[15] பணத்தாள் அச்சிடும் அச்சக ஆலை 1928 ஆம் ஆண்டில் நாசிக்கில் நிறுவப்பட்டது.[16] முதல் பணத்தாள் அச்சிடும் அச்சகம் நாசிக்கில் நிறுவப்பட்டது.[17] தேவாஸ், மைசூர் மற்றும் சல்போனியிலும் காகிதப் பணத்தை அச்சிடும் அச்சகங்கள் உள்ளன.[15][18]
மொழிகள்
தொகுஇந்தியாவில் பெரும்பான்மையாக ருபீ, ரூபாய், ரூபயி போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது, ஆனால் கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காளம், ஒரிசா, அசாம் போன்ற மாநிலங்களில் "டாக்கா" என்னும் சமசுகிருதப் பெயரிலிருந்து தோன்றிய பெயரால் அழைக்கப்படுகிறது.[19]
பல்வேறு இந்திய மொழிகளில் இந்திய ரூபாய் உச்சரிக்கப்படும் விதம்:
- টকা (tôka) அசாமிய மொழி
- টাকা (taka) பெங்காலி
- ଟଙ୍କା(tanka) ஒரிய மொழி
- રૂપિયો (rupiyo) குஜராத்தி
- रुपया (rupayā) இந்தி
- روپے (rupay) காஷ்மீரி, உருது
- ರೂಪಾಯಿ (rūpāyi) கன்னடம், துளு
- रुपया (rupayā) கொங்கணி
- രൂപ (rūpā) மலையாளம்
- रुपये (rupaye) மராத்தி
- रुपियाँ (rupiya) நேபாளி
- ਰੁਪਈਆ (rupiā) பஞ்சாபி
- रूप्यकम् (rūpyakam) சமசுகிருதம்
- रुपियो (rupiyo) சிந்தி
- ரூபாய் (rūpāi) தமிழ்
- రూపాయి (rūpāyi) தெலுங்கு
இந்திய பணத்தாள்களின் முதற்பக்கத்தில் பணத்தின் மதிப்புடன் ரூபாய் என்கிற வார்த்தையும் ஆங்கிலத்திலும், இந்தியிலும் குறிக்கப்பட்டுள்ளது. பணத்தாளின் பின்புறம் மற்ற 15 இந்திய மொழிகளிலும் ஆங்கில அகரவரிசைப்படி எழுதப்பட்டுள்ளது [20].
Language | ₹1 | ₹2 | ₹5 | ₹10 | ₹20 | ₹50 | ₹100 | ₹500 | ₹1000 | ₹2000 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆங்கிலம் | One Rupee | Two Rupees | Five Rupees | Ten Rupees | Twenty Rupees | Fifty Rupees | Hundred Rupees | Five Hundred Rupees | One Thousand Rupees | Two thousand rupees |
பெங்காலி | এক টাকা | দুই টাকা | পাঁচ টাকা | দশ টাকা | কুড়ি টাকা | পঞ্চাশ টাকা | শত টাকা | পাঁচশত টাকা | এক হাজার টাকা | দুই হাজার টাকা |
குஜராத்தி | એક રૂપિયો | બે રૂપિયા | પાંચ રૂપિયા | દસ રૂપિયા | વીસ રૂપિયા | પચાસ રૂપિયા | સો રૂપિયા | પાંચ સો રૂપિયા | એક હજાર રૂપિયા | બે હજાર રૂપિયા |
இந்தி | एक रुपया | दो रुपये | पाँच रुपये | दस रुपये | बीस रुपये | पचास रुपये | एक सौ रुपये | पांच सौ रुपये | एक हज़ार रुपये | दो हज़ार रुपये |
நேபாளி | एक रुपियाँ | दुई रुपियाँ | पाँच रुपियाँ | दश रुपियाँ | बीस रुपियाँ | पचास रुपियाँ | एक सय रुपियाँ | पाँच सय रुपियाँ | एक हज़ार रुपियाँ | दुई हजार रुपियाँ |
கன்னடம் | ಒಂದು ರುಪಾಯಿ | ಎರಡು ರೂಪಾಯಿಗಳು | ಐದು ರೂಪಾಯಿಗಳು | ಹತ್ತು ರೂಪಾಯಿಗಳು | ಇಪ್ಪತ್ತು ರೂಪಾಯಿಗಳು | ಐವತ್ತು ರೂಪಾಯಿಗಳು | ನೂರು ರೂಪಾಯಿಗಳು | ಐನೂರು ರೂಪಾಯಿಗಳು | ಒಂದು ಸಾವಿರ ರೂಪಾಯಿಗಳು | ಎರಡು ಸಾವಿರ ರುಪಾಯಿಗಳು |
கொங்கணி | एक रुपया | दोन रुपया | पांच रुपया | धा रुपया | वीस रुपया | पन्नास रुपया | शंभर रुपया | पाचशें रुपया | एक हज़ार रुपया | दोन हजार रुपया |
மலையாளம் | ഒരു രൂപ | രണ്ടു രൂപ | അഞ്ചു രൂപ | പത്തു രുപ | ഇരുപതു രൂപ | അമ്പതു രൂപ | നൂറു രൂപ | അഞ്ഞൂറു രൂപ | ആയിരം രൂപ | രണ്ടായിരം രൂപ |
மராத்தி | एक रुपया | दोन रुपये | पाच रुपये | दहा रुपये | वीस रुपये | पन्नास रुपये | शंभर रुपये | पाचशे रुपये | एक हजार रुपये | दोन हजार रुपये |
அசாமி | এক টকা | দুই টকা | পাঁচ টকা | দহ টকা | বিছ টকা | পঞ্চাশ টকা | এশ টকা | পাঁচশ টকা | এক হাজাৰ টকা | দুহেজাৰ টকা |
சமசுகிருதம் | एकं रूप्यकम् | द्वे रूप्यके | पञ्च रूप्यकाणि | दश रूप्यकाणि | विंशती रूप्यकाणि | पञ्चाशत् रूप्यकाणि | शतं रूप्यकाणि | पञ्चशतं रूप्यकाणि | सहस्रं रूप्यकाणि | द्विसहस्रं रूप्यकाणि |
தமிழ் | ஒரு ரூபாய் | இரண்டு ரூபாய் | ஐந்து ரூபாய் | பத்து ரூபாய் | இருபது ரூபாய் | ஐம்பது ரூபாய் | நூறு ரூபாய் | ஐந்நூறு ரூபாய் | ஆயிரம் ரூபாய் | இரண்டாயிரம் ரூபாய் |
தெலுங்கு | ఒక రూపాయి | రెండు రూపాయిలు | ఐదు రూపాయిలు | పది రూపాయిలు | ఇరవై రూపాయిలు | యాభై రూపాయిలు | నూరు రూపాయిలు | ఐదువందల రూపాయిలు | వెయ్యి రూపాయిలు | రెండు వేల రూపాయలు |
பஞ்சாபி | ਏਕ ਰੁਪਏ | ਦੋ ਰੁਪਏ | ਪੰਜ ਰੁਪਏ | ਦਸ ਰੁਪਏ | ਵੀਹ ਰੁਪਏ | ਪੰਜਾਹ ਰੁਪਏ | ਇਕ ਸੋ ਰੁਪਏ | ਪੰਜ ਸੋ ਰੁਪਏ | ਇਕ ਹਜਾਰ ਰੁਪਏ | ਦੋ ਹਜ਼ਾਰ ਰੁਪਏ |
உருது | ایک روپیہ | دو روپے | پانچ روپے | دس روپے | بیس روپے | پچاس روپے | ایک سو روپے | پانچ سو روپے | ایک ہزار روپے | دو ہزار روپے |
ஒரியா | 1 ଟଙ୍କ | 2 ଟଙ୍କ | ୫ ଟଙ୍କ | ୧୦ ଟଙ୍କ | ୨୦ ଟଙ୍କ | ୫୦ ଟଙ୍କ | ୧୦୦ ଟଙ୍କ | ୫୦୦ ଟଙ୍କ | ୧୦୦୦ ଟଙ୍କ | ଦୁଇ ହଜାର ଟଙ୍କା |
ரூபாய் தாள்கள்
தொகுஅசோக ஸ்தூபி வரிசை
தொகு1950இல் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ரூபாய் தாள்கள் ஆங்கிலேயே ரூபாயின் அம்சங்களுடன், ஜார்ஜ் IV படத்திற்கு பதிலாக ‘அசோக ஸ்தூபி’ சின்னத்தை நீர்க்குறியாக கொண்டிருந்தன. அதன் பின்னர், தொழில்நுட்ப வளர்ச்சியால், இந்தியக் கலை வடிவங்களைக் கொண்ட படங்கள் ரூபாய் தாள்களில் இடம்பெற்றன. 1980இல் “வாய்மையே வெல்லும்” என்று தேசிய சின்னத்தில் பொறிக்கப்பட்டது. இந்த ரூபாய் தாள்கள் யாவும் ‘அசோக ஸ்தூபி’ வரிசை எனப்பட்டன.[21]
மகாத்மா காந்தி வரிசை
தொகு1996 முதல் மகாத்மா காந்தி வரிசை ரூபாய் தாள்கள் வெளியிடப்பட்டன. 2005க்கு பிறகு புதிய மகாத்மா காந்தி வரிசை ரூபாய் தாள்கள் வெளியிடப்பட்டன. இவற்றில் மகாத்மா காந்தி நீர்க்குறி இருக்கும்.[21] இவற்றின் பாதுகாப்பு சிறப்பம்சங்கள் பின்வருமாறு
- ஐம்பது ரூபாய் வரை உள்ள தாள்களில் பாதுகாப்பு நூல் முன்புறம் சாளரம் வடிவில் தெரியும், பின்புறம் மறைந்திருக்கும். புற ஊதாக் கதிரில் பார்க்கும்போது இரு புறத்திலும் இந்த பாதுகாப்பு நூல் மஞ்சள் நிறத்தில் தெரியும். சாதாரண வெளிச்சத்தில் ஒரே நேர்கோடாகத் தெரியும்.
- நூறிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை உள்ள தாள்களில் பாதுகாப்பு நூல் இயந்திரத்தால் கண்டறியக்கூடியது. இந்த நூலின் நிறம் வெவ்வேறு கோணங்களில் நீலத்திலிருந்து பச்சையாக மாறும். புற ஊதாக் கதிரில் பார்க்கும்போது வாசகங்கள் பிரகாசமாகத் தெரியும்.
- காந்தி, ரிசர்வ் வங்கி முத்திரை, உறுதி வாசகம், அசோக ஸ்தூபி, ஆளுநர் கையொப்பம், பார்வையற்றோர்க்கான குறி ஆகியவை செறிவூட்டப்பட்ட இன்டளிக்ளோவில் அச்சிடப்பட்டவை.
- முன்னும் பின்னும் எண்கள் சரியாக அச்சிடப்பட்டுள்ளதால் எவ்வாறு பார்த்தாலும் ஒன்றுபோல் தெரியும்.[21]
இந்திய அரசாங்கம் மகாத்மா காந்தி தொடரின் அனைத்து ₹500/- மற்றும் ₹1,000/- ரூபாய் நோட்டுகளையும் புழக்கத்தில் இருந்து நீக்குவதாக 2016 ஆம் ஆண்டில் அறிவித்தது.[22][23][24]
மகாத்மா காந்தி புதிய வரிசை
தொகுமகாத்மா காந்தி புதிய வரிசை ரூபாய் தாள்கள், நவம்பர் 8, 2016ல் அறிவிக்கப்பட்டது.[25] நவம்பர் 10, 2016ல் இந்திய ரிசர்வ் வங்கியால் 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் தாள்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டது. இத்தாள்களின் முகப்பில் மகாத்மா காந்தி படமும், மறுபக்கத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் சின்னமும் இடம்பெற்றிருக்கின்றன.[26][27] பாதுகாப்பு நடவடிக்கையாக, புதிய இந்திய ரூபாய் நோட்டுத் தொடரில் பல்வேறு இடங்களில் நுண் அச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.
புழக்கத்தில் உள்ள பணத்தாள்கள்
தொகுபடம் | மதிப்பு | பரிமாணங்கள் | முக்கிய நிறம் | விளக்கம் | வெளியிடப்பட்ட தேதி | |||
---|---|---|---|---|---|---|---|---|
முகப்பு | பின்புறம் | முகப்பு | பின்புறம் | நீர்க்குறி | ||||
₹1 | 97 mm × 63 mm | இளஞ்சிவப்பு | புதிய ₹1 நாணயம் | சாகர் சாம்ராட் எண்ணெய் ஆலை | இந்திய தேசிய இலச்சினை | 2020 | ||
₹5 | 117 mm × 63 mm | பச்சை | மகாத்மா காந்தி | உழவு இயந்திரம் | மகாத்மா காந்தி | 2002 / 2009 |
படம் | மதிப்பு | பரிமாணங்கள் | முக்கிய நிறம் | விளக்கம் | வெளியிடப்பட்ட தேதி | |||
---|---|---|---|---|---|---|---|---|
முகப்பு | பின்புறம் | முகப்பு | பின்புறம் | நீர்க்குறி | ||||
₹10 | 123 mm × 63 mm | பழுப்பு | மகாத்மா காந்தி | கொனார்க் சூரியக் கோயில் | மகாத்மா காந்தி மற்றும் பணத்தின் மதிப்பு |
2017 | ||
₹20 | 129 mm × 63 mm | பச்சை-மஞ்சள் | எல்லோரா குகைகள் | 2019 | ||||
₹50 | 135 mm × 66 mm | பச்சை-நீலம் | ஹம்பி தேர் | 2017 | ||||
₹100 | 142 mm × 66 mm | இளஞ்சிவப்பு (லாவண்டர்) | ராணி கி வாவ் | 2018 | ||||
₹200 | 146 mm × 66 mm | மஞ்சள் | அசோக சிங்கத் தூபி | 2017 | ||||
₹500 | 150 mm × 66 mm | சாம்பல் | செங்கோட்டை | 2016 | ||||
₹2000 | 66 mm × 166 mm | ஆழ்ந்த சிவப்பு | மங்கள்யான் | 2016 |
2023 ஆம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கி 19 மே அன்று ₹ 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.[28]
ரூபாயின் மதிப்பு
தொகு1947க்கு முன்னர் ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாயாக இருந்தது. 1952ல் ஒரு டாலர் ரூ4.79 என நிர்ணயிக்கப்பட்டது. 1966ல் ரூபாயின் மதிப்பை ரூ7.57 என்ற அளவுக்கு குறைக்கும் அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டது.[29] 1975ம் ஆண்டில் அமெரிக்க டாலர், ஜப்பானிய யென் மற்றும் ஜெர்மன் மார்க் ஆகிய மூன்று நாணயங்களின் பரிவர்த்தனை மதிப்புடன் இந்திய ரூபாய்க்கு இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.[30] 1993ல் தாராளமயக் கொள்கையின் அடியொற்றி பரிவர்த்தனை மதிப்பினை பணச்சந்தை தீர்மானிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.[31] அதே நேரத்தில் கடுமையான ஏற்ற இறக்கங்களை தவிர்க்கும் விதத்தில் தலையிடுவதற்கான உரிமை ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டது.1995ல் ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 32.42 ஆக இருந்தது. 2000 முதல் 2010 வரை இது சற்றே குறையாக ரூ.45 என்ற நிலையில் இருந்து வந்தது. 2013 ஆகத்தில் 50 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்து ஒரு டாலர் 68 ரூபாய் என்ற நிலையிலான கடும் சரிவை எதிர்கொண்டது.[32][33]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Frequently Asked Questions". en:Royal Monetary Authority of Bhutan. பார்க்கப்பட்ட நாள் 20 January 2020.
- ↑ "Nepal writes to RBI to declare banned new Indian currency notes legal". en:The Economic Times (en:Times Internet). 6 January 2019. https://economictimes.indiatimes.com/news/economy/policy/nepal-writes-to-rbi-to-declare-banned-new-indian-currency-notes-legal/articleshow/67406624.cms.
- ↑ "Indian Rupee to be legal tender in Zimbabwe". டெக்கன் ஹெரால்டு. 2014-01-29. https://www.deccanherald.com/content/383402/indian-rupee-legal-tender-zimbabwe.html.
- ↑ Hungwe, Brian (2014-01-29). "Zimbabwe's multi-currency confusion". en:BBC. https://www.bbc.com/news/world-africa-26034078.
- ↑ "FAQ – Your Guide to Money Matters". en:Reserve Bank of India. Archived from the original on 12 January 2012. பார்க்கப்பட்ட நாள் 5 November 2014.
- ↑ 6.0 6.1 Ministry of Finance – Department of Economic Affairs [in ஆங்கிலம்] (30 April 2010). Sixth Report, Committee on Public Undertakings – Security Printing and Minting Corporation of India Limited (PDF). en:Lok Sabha Secretariat. p. 8. பார்க்கப்பட்ட நாள் 8 June 2020.
- ↑ "Nepal to keep currency pegged to Indian rupee". en:Business Line. 11 January 2018. பார்க்கப்பட்ட நாள் 13 May 2019.
- ↑ "Reserve Bank of India - Annual Report". rbi.org.in. பார்க்கப்பட்ட நாள் 9 April 2022.
- ↑ "Government of India can print Re 1 note: Law Ministry". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 8 September 2014.
- ↑ Goyal, Shankar (1999), "The Origin and Antiquity of Coinage in India", Annals of the Bhandarkar Oriental Research Institute, Bhandarkar Oriental Research Institute, 80 (1/4): 144, JSTOR 41694581
- ↑ R Shamasastry (1915), Arthashastra Of Chanakya, pp. 115, 119, 125, பார்க்கப்பட்ட நாள் 15 April 2021
- ↑ "Mogul Coinage". [eserve Bank of India. Archived from the original on 5 October 2002.
- ↑ About Us – Dept. of Commerce பரணிடப்பட்டது 23 சனவரி 2021 at the வந்தவழி இயந்திரம். Reserve Bank of India.
- ↑ Reserve Bank of India – Coins பரணிடப்பட்டது 28 சூன் 2013 at the வந்தவழி இயந்திரம். Rbi.org.in. Retrieved 28 July 2013.
- ↑ 15.0 15.1 Thorpe Edgar. The Pearson Guide to the Central Police Forces. Pearson Education India. p. 209. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-1569-7.
- ↑ "Notes from the mint". Business Standard. 28 ஆகஸ்டு 2010. http://www.business-standard.com/article/beyond-business/notes-from-the-mint-110082800019_1.html.
- ↑ Pathak (1 செப்டம்பர் 2007). The Indian Financial System: Markets, Institutions And Services, 2/E. Pearson Education India. p. 729. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7758-562-9.
{{cite book}}
: Check date values in:|date=
(help) - ↑ "India Security Press stir at Nashik called off: Union". Zee News. 14 April 2013. http://zeenews.india.com/news/maharashtra/india-security-press-stir-at-nashik-called-off-union_842153.html.
- ↑ "டங்கா என்கிற வார்த்தையின் பொருள்". பார்க்கப்பட்ட நாள் 17 March 2013.
- ↑ "இந்திய ரூபாயின் விவரங்கள்". பார்க்கப்பட்ட நாள் 17 மார்ச்சு 2013.
- ↑ 21.0 21.1 21.2 "ரூபாய் தாள்களின் அம்சங்கள்". தி இந்து. 23 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2013.
- ↑ "Withdrawal of Legal Tender Status for ₹ 500 and ₹ 1000 Notes: RBI Notice (Revised)". Reserve Bank of India. 8 November 2016. Archived from the original on 18 November 2016. பார்க்கப்பட்ட நாள் 8 November 2016.
- ↑ "Here is what PM Modi said about the new Rs 500, Rs 2000 notes and black money". India Today. 8 November 2016. Archived from the original on 18 November 2016. பார்க்கப்பட்ட நாள் 9 November 2016.
- ↑ "Notes out of circulation". The Times of India. 8 November 2016. Archived from the original on 18 November 2016. பார்க்கப்பட்ட நாள் 3 June 2017.
- ↑ "ஆர்.பி.ஐ. செய்திக் குறிப்பு". இந்திய ரிசர்வ் வங்கி. 8 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2016.
- ↑ "500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது". இந்துஸ்தான் டைம்ஸ். 9 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2016.
- ↑ "புதிய 500, 2000 ரூபாய் தாள்கள்". தி எக்கணாமிக் டைம்ஸ். 9 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2016.
- ↑ ET Online. "Rs 2,000 notes to be withdrawn from circulation, exchange window open till September 30". The Economic Times. Archived from the original on 19 May 2023. பார்க்கப்பட்ட நாள் 19 May 2023.
- ↑ "Integrated approach to economic issues". The Hindu. Sep 13, 2003. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2013.
- ↑ "The Implications of Renminbi Revaluation On India's Trade - A Study". RBI. 1 April 2011. பார்க்கப்பட்ட நாள் 14 October 2013.
- ↑ "Devaluation of the Rupee: Tale of Two Years, 1966 and 1991" (PDF). Centre for Civil Society. Archived from the original (PDF) on 2013-06-26. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2013.
- ↑ "Rupee's journey since Independence: Down by 65 times against dollar". Economic Times. Aug 24, 2013. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2013.
- ↑ "ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஏன்? எதனால்? எப்படி?". தீக்கதிர். பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2013.