சிவ வடிவங்களின் பட்டியல்
அறுபத்து நான்கு சிவவடிவங்கள் என்பவை சைவர்களின் கடவுளான சிவனின் அறுபத்து நான்கு வடிவங்களாகும். இதனை சதுஷஷ்தி மூர்த்திகள் என்று சமசுகிருத மொழியில் அழைப்பர்.
64 வடிவங்கள்
தொகுஅஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் இரா. இராமகிருட்டிணனின் நூலில் சிவனின் அறுபத்து நான்கு வடிவங்களும், அவ்வடிவங்களின் மூலம் அடியார்களுக்குச் சிவன் அருளியமையும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஈக்காடு இரத்தினவேலு முதலியாரின் சிவ பராக்கிரமம் எனும் தமிழ் நூலிலும் இந்த அறுபத்து நான்கு வடிவங்கள் கூறப்பட்டுள்ளன.[1]
சதாசிவ மூர்த்தியின் வடிவத்தில் உள்ள ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் போன்ற ஐந்து முகங்களிலிருந்து, முகத்திற்கு ஐந்தாக இருபத்தியைந்து வடிவங்கள் தோன்றின. இவை மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த மகேசுவர மூர்த்தங்களுடன் வேறு சில வடிவங்களும் இணைந்து அறுபத்து நான்கு வடிவங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.[2]
எண் | பெயர் | விளக்கம் |
---|---|---|
1 | இலிங்க மூர்த்தி | இலிங்கமாக மாறி இருக்கிற வடிவம் |
2 | இலிங்கோத்பவ மூர்த்தி | இலிங்கத்தின் உள்ளே இருக்கும் வடிவம் |
3 | முகலிங்க மூர்த்தி | இலிங்கத்தில் முகம் உள்ள வடிவம் |
4 | சதாசிவ மூர்த்தி | ஐந்து முகத்துடன் உள்ள வடிவம் |
5 | மகா சதாசிவ மூர்த்தி | இருபத்தியைந்து முகத்துடன் உள்ள வடிவம் |
6 | உமாமகேசுவர மூர்த்தி | உமையுடன் பொருந்திய வடிவம் |
7 | சுகாசன மூர்த்தி | நல்லிருக்கை நாதர் வடிவம் |
8 | உமேச மூர்த்தி | உமையுடன் நின்றருளும் வடிவம் |
9 | சோமாஸ்கந்த மூர்த்தி | உமை மற்றும் கந்தன் உடனாகிய வடிவம் |
10 | சந்திரசேகர மூர்த்தி | பிறை சூடியுள்ள வடிவம் |
11 | இடபாரூட மூர்த்தி | விடையேறி வடிவம் (காளையின் மீது அமர்ந்திருக்கும் வடிவம்) |
12 | இடபாந்திக மூர்த்தி | அறவெள் விடைக்கு அருளிய வடிவம் |
13 | புஜங்கலளித மூர்த்தி | பாம்புகளைக் காத்து அருளிய வடிவம் |
14 | புஜங்கத்ராச மூர்த்தி | பாம்புகளை அடக்கிய வடிவம் |
15 | சந்த்யான்ருத்த மூர்த்தி | மாலைநேர நடன வடிவம் |
16 | சதாநிருத்த மூர்த்தி | எஞ்ஞான்றும் நடனமாடும் வடிவம் |
17 | சண்டதாண்டவ மூர்த்தி | காளி காண ஆடிய நடன வடிவம் |
18 | கங்காதர மூர்த்தி | கங்கையணிந்த வடிவம் |
19 | கங்காவிசர்ஜன மூர்த்தி | முடியிலிருந்து கங்கையை விடுவிடுக்கும் வடிவம் |
20 | திரிபுராந்தக மூர்த்தி | முப்புரமெரி செய்த வடிவம் (முப்புரமெரித்த வடிவம்) |
21 | கல்யாணசுந்தர மூர்த்தி | மணவழகர் வடிவம் |
22 | அர்த்தநாரீஸ்வர மூர்த்தி | உமைப்பங்கன் வடிவம் (உமையை ஒரு பாகமாகக் கொண்ட வடிவம்) |
23 | கஜயுக்த மூர்த்தி | கஜசுரனை கொன்ற வடிவம் |
24 | ஜ்வாரபக்ன மூர்த்தி | சுரம் தீர்த்த வடிவம் |
25 | சார்த்தூலஹர மூர்த்தி | புலியினை கொன்ற வடிவம் |
26 | பாசுபத மூர்த்தி | அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரத்தை அளித்த வடிவம் |
27 | கங்காள மூர்த்தி | வாமன வடிவத் திருமாலை கொன்ற வடிவம் |
28 | மாலொருபாக மூர்த்தி | மாலொருபாகன் வடிவம் (திருமாலை ஒரு பாகமாகக் கொண்ட வடிவம்) |
29 | பிட்சாடன மூர்த்தி | பலிகொள் செல்வர் வடிவம் |
30 | சரபா மூர்த்தி | சிங்க வடிவத் திருமாலை கொன்ற வடிவம் |
31 | சண்டேச அனுக்கிரக மூர்த்தி | சண்டேசருக்கு அருளிய வடிவம் |
32 | தட்சிணாமூர்த்தி | தென்முகக் கடவுள் வடிவம் |
33 | யோக தட்சிணாமூர்த்தி | தவநிலைத் தென்முகக் கடவுள் வடிவம் |
34 | வீணா தட்சிணாமூர்த்தி | வீணையேந்திய தென்முகக் கடவுள் வடிவம் |
35 | கால சம்ஹார மூர்த்தி | காலனை கொன்ற வடிவம் |
36 | காம சம்ஹார மூர்த்தி | காமனை கொன்ற வடிவம் |
37 | இலகுளேஸ்வர மூர்த்தி | புவனங்கள் தோறும் எழுந்தருளும் வடிவம் |
38 | பைரவ மூர்த்தி | தபசி போல் நாய் வாகனம் கொண்ட வடிவம் |
39 | ஆபத்தோத்தரண மூர்த்தி | முனிவர்களின் இடர் களைந்த வடிவம் |
40 | வடுக பைரவ மூர்த்தி | முண்டாசுரனைக் கொன்ற வடிவம் |
41 | சேத்திரபால மூர்த்தி | ஊழிக்காலத்தில் உலகைக் காத்த வடிவம் |
42 | வீரபத்திர மூர்த்தி | தக்கன் வேள்வியை அழித்த வடிவம் |
43 | அகோர அத்திர மூர்த்தி | சச்தந்துவை கொன்ற வடிவம் |
44 | தட்சயஞ்யஷத மூர்த்தி | தக்கனை கொன்ற வடிவம் |
45 | கிராத மூர்த்தி | வேட்டுருவனாக அர்ஜுனனை போரிட்டு வீழ்த்திய வடிவம் |
46 | குரு மூர்த்தி | வேதங்கள் மற்றும் ஆகமங்கள் இரண்டையும் ரிஷிகளுக்கு உபதேசம் செய்யும் வடிவம் |
47 | அசுவாருட மூர்த்தி | குதிரையேறு செல்வர் வடிவம் |
48 | கஜாந்திக மூர்த்தி | ஐராவதத்திற்கு அருளிய வடிவம் |
49 | சலந்தராகர மூர்த்தி | சலந்தரனைக் கொன்ற வடிவம் |
50 | ஏகபாதத்ரி மூர்த்தி | ஒற்றைத் திருவடியுடைய மும்மூர்த்தி வடிவம் |
51 | திரிபாதத்ரி மூர்த்தி | மூன்று திருவடியுடைய மும்மூர்த்தி வடிவம் |
52 | ஏகபாத மூர்த்தி | ஒற்றை திருவடியுடைய வடிவம் |
53 | கௌரிவரப்ரத மூர்த்தி | உமைக்கு பொன்னிறம் அளித்த வடிவம் |
54 | சக்கரதான மூர்த்தி | திருமாலுக்கு சக்கரம் அளித்த வடிவம் |
55 | கௌரிலீலாசமன்வித மூர்த்தி | உமையுடன் கேளிக்கைகள் புரிந்த வடிவம் |
56 | விசாபகரண மூர்த்தி | நீலகண்ட வடிவம் |
57 | கருடன் அருகிருந்த மூர்த்தி | கருடனுக்கு அருளிய வடிவம் |
58 | பிரம்ம சிரச்சேத மூர்த்தி | பிரம்மனின் தலையை வெட்டிய வடிவம் (அயனின் ஆணவ சிரம் அறுத்த வடிவம்) |
59 | கூர்ம சம்ஹார மூர்த்தி | கூர்ம வடிவத் திருமாலை கொன்ற வடிவம் |
60 | மச்ச சம்ஹார மூர்த்தி | மச்ச வடிவத் திருமாலை கொன்ற வடிவம் |
61 | வராக சம்ஹார மூர்த்தி | வராக வடிவத் திருமாலை கொன்ற வடிவம் |
62 | பிரார்த்தனா மூர்த்தி | உமையின் ஊடலைத் தணித்த வடிவம் |
63 | இரத்த பிட்சா பிரதான மூர்த்தி | தேவர்களின் செருக்கினை அடக்கிய வடிவம் |
64 | சிஷ்ய பாவ மூர்த்தி | முருகனிடம் பிரணவப் பொருளைக் கேட்க மாணவனாக மாறிய வடிவம் |
வகைப்பாடு
தொகுஇந்த அறுபத்து நான்கு சிவவடிவங்களும் போக வடிவங்கள், யோக வடிவங்கள், கோப வடிவங்கள் (வேக வடிவங்கள்) என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன.[3]
போக வடிவம்
தொகு- உமாமகேஸ்வர மூர்த்தி
- சந்திரசேகர மூர்த்தி
- ரிஷபாரூட மூர்த்தி
- அர்த்தநாரீஸ்வர மூர்த்தி
யோக வடிவம்
தொகு- தட்சிணாமூர்த்தி
- ஞான தட்சிணாமூர்த்தி
- யோக தட்சிணாமூர்த்தி
- வீணா தட்சிணாமூர்த்தி
- சுகாசன மூர்த்தி
குரோத வடிவம்
தொகு- கங்காள மூர்த்தி
- வீரபத்திர மூர்த்தி
- திரிபுராந்தக மூர்த்தி
- கஜயுக்த மூர்த்தி
- காலந்தக மூர்த்தி
பிற சிவ வடிவங்கள்
தொகு64 சிவ வடிவங்கள் தவிர்த்து எண்ணற்ற சிவ வடிவங்களை புராணங்கள் கூறுகின்றன. சைவ சமயக் கலைக்களஞ்சியம் கஜாரி, கஜமுக அனுக்கிரக மூர்த்தி, இராவண அனுக்கிரக மூர்த்தி, ஹரிவிரிஞ்சதாரணர், உருத்திரர்கள், முயலகவத மூர்த்தி, சர்வ சம்ஹாரர், யக்ஞேசுவரர், உக்கிரர் ஆகியவற்றை பட்டியலிடுகிறது.
காண்க
தொகுவெளி இணைப்புக்கள்
தொகுஆதாரம்
தொகு- ↑ அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும் - இரா. இராமகிருட்டிணன் பக்கம் 12
- ↑ அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும் - இரா. இராமகிருட்டிணன் பக்கம் 12
- ↑ அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும் - இரா. இராமகிருட்டிணன் பக்கம் 14