வாருங்கள், Jenakarthik!

வாருங்கள் Jenakarthik, உங்களை வரவேற்கிறோம் ! :D
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--கார்த்திக் 06:29, 30 ஏப்ரல் 2009 (UTC)

சிவகாமியின் சபதம்தொகு

சிவகாமியின் சபதத்தின் முதல் பாகத்தின் பெயர், "பரஞ்சோதி யாத்திரை". இச்சுட்டியை பாருங்கள். என்னிடம் உள்ள பிரதியிலும் (1980 களின் இறுதியில் கல்கியில் தொடராக வந்தபோது, பிரித்து பைண்ட் செய்யப்பட்டது) "பரஞ்சோதி யாத்திரை" என்றே உள்ளது. மதுரைத் திட்டத்தில் மின்னூலாக்கியவர்கள் தவறுதலாக பூகம்பம் என்று இட்டு விட்டனர் என நினைக்கிறேன். முதல் பகுதியில் பூகம்பம் எதுவும் நிகழ்வதாக எனக்கு நினைவில்லை. எனவே "பரஞ்சோதி யாத்திரை" தான் சரியானது என நினைக்கிறேன்.--Sodabottle 07:57, 1 ஜூன் 2010 (UTC)

மாற்றியதற்கு நன்றி கார்த்திக்--Sodabottle 04:15, 2 ஜூன் 2010 (UTC)

பிரச்சினை தமிழ் அல்ல ;)தொகு

பிரச்சினை என்ற சொல் கேள்வி என்ற பொருள் கொண்ட வடமொழிச் சொல்லைக் கடனாகப் பெற்றுச் சிக்கல் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. சிக்கல் நல்ல பொருத்தமான தமிழ்ச்சொல். இடர், பேரிடர், இடைஞ்சல், தடை போன்ற சொற்களை இடத்துக்கேற்றவாறு பயன்படுத்தலாம். தமிழில் சொல்லுக்கா பஞ்சம், கார்த்தி? :) -- சுந்தர் \பேச்சு 14:44, 12 ஜூன் 2010 (UTC)

ஓ! சுந்தர் ஏற்கனவே மறுமொழி இட்டிருக்கின்றாரே!! நான் என் பேச்சுப்பக்கத்தில் இட்ட மறுமொழியைக் கீழே தந்துள்ளேன்.--செல்வா 18:57, 12 ஜூன் 2010 (UTC)
வணக்கம் கார்த்திக். பிரச்சனை (பிரச்சினை) என்று நாம் தமிழில் சொல்வது சமசுக்கிருதத்தில் प्रश्न (ப்ரச்^ந) என்னும் சொல்லின் வடிவம். இதன் பொருள் கேள்வி, வினா, கேள்விகேட்டல் என்பது (வேறுபொருள்களும் உண்டு, அவற்றுள் disputed point , controversy , problem என்பனவும் அடங்கும்). அங்கே என்ன பிரச்சன? என்று கேட்டால், அங்கே என்ன கேள்வி, அங்கே என்ன சிக்கல், அங்கே என்ன பிணக்கு என்று பொருள். மிகப்பெரும்பாலான இடங்களில் சிக்கல், பிணக்கு என்பன மிகவும் சரியான பொருள் (இப்பொருளிதான் தமிழில் இதனை ஆள்கிறோம்), ஆனால் சில இடங்களில் பிரச்சனை என்னவென்றால் என்று பேசத் தொடங்கினால், கேள்வி என்னனெறால் என்று பொருள்படும். மிகச்சில இடங்களில் இடர், இடக்கு, முடை, முட்டுக்கல் போன்ற பிறசொற்களும் பயன்படக்கூடும். இந்தப் பிரச்சனை, ரீதி முதலான விளங்காத சொற்களை விட்டுவிட்டு நல்ல தமிழ்ச்சொற்களை ஆண்டால் அது நம் புரிந்துகொள்ளும் திறத்தை ஆழப்படுத்தும். ஆகவே சிக்கல், பிணக்கு, இடர், கேள்வி, முடை, முட்டு ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.--செல்வா 18:57, 12 ஜூன் 2010 (UTC)

பேரா. செல்வா, இவ்வளவு ஆளமான கருத்துக்கள் விக்சனரி பிரச்சினை பேச்சுப்பக்கத்தில் சேர்த்தால் நன்றாயிருக்கும். --மாஹிர் 04:58, 13 ஜூன் 2010 (UTC)

ஒரு ஆலோசனைதொகு

ஜெனாகார்த்திக், நீங்கள் ஆர்வத்துடன் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்புச் செய்வதையிட்டு மகிழ்ச்சி. தொடர்ந்தும் பங்களித்து தமிழ் விக்கிப்பீடியா வளம் பெற உதவுங்கள். ஒரு சிறிய ஆலோசனை. நீங்கள் "கடையநல்லூரா" என்ற ஒரு வழிமாற்றுப்பக்கம் உருவாக்கியிருப்பதைப் பார்த்தேன். இது தேவையில்லை. கட்டுரைக்குள் வரும் "கடையநல்லூராகும்" என்பதிலிருந்து "கடையநல்லூர்" கட்டுரைக்கு இணைப்புக் கொடுக்க வேண்டுமானால் கட்டுரைக்கு உள்ளேயே "இரட்டைச் சதுர அடைப்புக் குறிகளுக்குள் 'கடையநல்லூர்|கடையநல்லூராகும்' என எழுதுங்கள். இணைப்பு நேரடியாகவே கடைய நல்லூர் பக்கத்துக்குச் செல்லும். தொகுப்புப் பக்கத்தைத் திறந்து "கடையநல்லூராகும்" இல் இணைப்புக் கொடுத்திருக்கும் விதத்தைப் பாருங்கள். நன்றி. ---மயூரநாதன் 18:45, 13 ஜூன் 2010 (UTC)

சொற்கள் மெய்யெழுத்தில் தொடங்கலாகாதுதொகு

இங்கே காட்டியுள்ளபடி மெய்யெழுத்தில் தொடக்கி எழுத வேண்டாம் என வேண்டுகிறேன். தமிழில் இது தவறு. உயிரொலி சேர்த்து எழுதுதல் முறை. சிலர் தவறாக, மீறி எழுதுகிறார்கள் என்பதால் நாமும் அப்படிச் செய்ய வேண்டுவதில்லை. புரோட்டான் என்று எழுத வேண்டும். ப்ரோட்டான் என்று எழுதுதல் தவறு. ஒவ்வொரு மொழிக்கும் ஓர் இயல்பு உண்டு அதனைக் கூடிய அளவு போற்றிக் கொள்ளுதல் கடமை எனப் போற்றப்படுகின்றது. --செல்வா 05:44, 18 ஜூன் 2010 (UTC)

அறிவியல் கட்டுரைகள்தொகு

கார்த்திக், நீங்கள் பல அறிவியல் குறுங் கட்டுரைகளை எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள். இது குறித்து ஒரு வேண்டுகோள்: அறிவியல் கட்டுரையின் தலைப்பை அதற்குரிய ஆங்கில சொல்லை முதற் வசனத்தில் அடைப்புக் குறிக்குள் கட்டாயம் இட வேண்டும். இதன் மூலம் ஏனைய பயனர்கள் இக்குறுங்கட்டுரைகளை மேலும் மேன்மைப்படுத்த உதவும். அது மட்டுமல்லாமல் அதற்குரிய ஆங்கிலக் கட்டுரையை ஆங்கில விக்கியில் தேடிப்பிடித்து அதற்குரிய உள்ளிணைப்பைத் தரலாம். இது மிக மிக அவசியம். உதாரணத்திற்கு, உங்கள் புரோலாக்டின் ஹார்மோன் என்ற கட்டுரையில் சிறிதளவாவது மேலதிக தகவல் தரவேண்டி அதன் ஆங்கில சொல்லைத் தேடிப்பிடித்து ஆங்கில விக்கியில் சென்று பார்த்தால் அதற்கு ஏற்கனவே தமிழ் விக்கியில் ஒரு கட்டுரை இருப்பதாக ஆங்கில விக்கி தெரிவித்தது. அது: புரோலாக்டின் என்ற கட்டுரை. இந்த இரண்டு கட்டுரைகளும் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். ஒரே பொருளில் இரண்டு கட்டுரைகள் இருக்க முடியாது. உங்கள் புரோலாக்டின் ஹார்மோன் கட்டுரையின் முதல் வசனம் பின்வருமாறு எழுதப்பட வேண்டும்: புரோலாக்டின் (Prolactin) அல்லது லூட்டியோடிரோபிக் ஹார்மோன் (Luteotropic hormone, LTH) மற்றும் லூட்டியோடிரோபின், லூட்டியோடிரோபிக் ஹார்மோன், லாக்டோஜெனிக் ஹார்மோன், மாம்மோடிரோபின் போன்ற பல்வேறு பெயர்களால் புரோலாக்டின் அழைக்கப்படுகிறது. இனிமேல் அறிவியல் கட்டுரைகள் எழுதும் போது இதனைக் கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளில் குறைந்தது இந்த மேலதிக தகவல்களையாவது தருவீர்கள் என எதிர்பார்க்கிறோம். நன்றி.--Kanags \உரையாடுக 02:59, 28 ஜூன் 2010 (UTC)

சிங்கப்பூர் தமிழர்தொகு

வணக்கம் கார்த்திக்: தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நல்வரவு. சிங்கப்பூரில் இருந்து அதிகம் பங்களிக்கும் முதல் நபர் நீங்களே என்று நினைக்கிறன். அங்கே தமிழும், தமிழரும் சிறப்பாக வாழ்வதாக அறிகிறோம். உங்களுக்கு ஈடுபாடு இருந்தால், பின்வரும் கட்டுரைகளை உருவாக்கினால்/விரிவாக்கினால் நன்று.

--Natkeeran 03:05, 1 ஜூலை 2010 (UTC)

மகிழ்ச்சிதொகு

வணக்கம் கார்த்திக். நீங்கள் குறுகிய காலத்தில் மிகச் சிறப்பான பங்களிப்புகளைத் தந்து வருவதைக் கண்டு மகிழ்கிறேன். நன்றி--ரவி 18:34, 11 ஜூலை 2010 (UTC)

கார்த்திக், நானும் அண்ணா + NTUவில் படித்திருக்கிறேன் என்பதைச் சொல்ல மறந்து விட்டேன். அதனாலேயே உங்களைக் கண்டு கூடுதல் மகிழ்ச்சி. விக்கியில் அனைத்து வயதினரையும் பெயர் சொல்லியே அழைத்துத் தோழமையுடன் பழகலாம். --ரவி 16:04, 12 ஜூலை 2010 (UTC)

கோத்திரம்] கட்டுரையில் சில கேள்விகள்தொகு

கோத்திரம் என்னும் குறுங்கட்டுரையில் சில சான்று தேவை ஏன்னும் அறிவிப்புச் சுட்டிகள் ஒட்டியுள்ளேன். நீங்கள் ஆங்கிலவிக்கியில் இருந்து ஒரு பகுதியை தமிழாக்கி இட்டிருக்கின்றீர்கள் என எண்ணுகிறேன். எனினும், சில கூற்றுகளுக்குச் சான்றுகோள் இருப்பது தேவை என நினைக்கின்றேன். பார்த்து ஆவன செய்ய வேண்டுகிறேன்.--செல்வா 17:36, 15 ஜூலை 2010 (UTC)

விக்கிகளுக்கிடையிலான இணைப்புதொகு

நீங்கள் எழுதியிருந்த பிரம்மரிஷி கட்டுரை படித்தேன். நன்று. ஆங்கில விக்கிக்கு தொடுப்பு கொடுக்கும் போது வெளி இணைப்புகள் பக்கத்தில் கொடுக்கதேவையில்லை மாறாக [[en:EnglishWikiArticle]] என்ற முறையில் கொடுக்கலாம். நன்றி --ஜெ.மயூரேசன் 15:48, 16 ஜூலை 2010 (UTC)

அண்ணா என்றெல்லாம் அழைக்கத் தேவையில்லை. நான் ஒன்றும் பெரிய தாத்தாவில்லையே ;).. சும்மா சொன்னேன். விக்கிபீடியாவில் எல்லாரையும் பெயரைச் சொல்லியே அழைப்போம். மயூரேசன் என்றே என்னை நீங்கள் அழைக்கலாம். நன்றி :) --ஜெ.மயூரேசன் 04:49, 19 ஜூலை 2010 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:06, 21 சூலை 2011 (UTC)

என் வேண்டுகோளுக்கிணங்க இன்று தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்பு கண்டேன். மகிழ்ச்சி. நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:38, 26 சூலை 2011 (UTC)

அன்பு நண்பரே, மிக்க நன்றி, என் பனி இனி தடை இன்றி நடக்கும் என்று நினைக்கிறன்.--Jenakarthik 13:52, 28 சூலை 2011 (UTC)

வாழ்த்துகள்தொகு

உங்களது ஹஜ் கட்டுரை சிறப்பாக வந்துள்ளது. சற்று ல.ள ர,ற வேறுபாடுகளை கவனித்துக் கொள்ள வேண்டும். தங்களது பங்களிப்பு மீண்டும் தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.--மணியன் 16:12, 3 ஆகத்து 2011 (UTC)

நன்றி,நிச்சயமாக அதை நான் சரி செய்துகொள்கிறேன் --Jenakarthik 06:17, 4 ஆகத்து 2011 (UTC)

பதக்கம்தொகு

  சிறப்புப் பதக்கம்
தமிழ் விக்கியில் உங்கள் பங்களிப்புகளைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். சோடாபாட்டில்உரையாடுக 15:13, 10 ஆகத்து 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

Invite to WikiConference India 2011தொகு


Hi Jenakarthik,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

Period n தனிமம்தொகு

Period 6 தனிமம் என்பதில் period என்பதற்கு பதில் கிடைக்குழு என்று பயன்படுத்தலாமே? மேலும் Period 6 தனிமம் போன்ற பக்கங்கள் வெற்று பக்கங்களாக உள்ளது, கவனிக்கவும். நீங்கள் வளர்த்தெடுப்பீர்கள் என்று கருதியதால் அவற்றை நீக்கவில்லை --குறும்பன் 14:55, 14 ஆகத்து 2011 (UTC)

ஆங்கிலப் பெயர்களில் வழிமாற்றுகள் தமிழ் விக்கியில் வைப்பதில்லை. நீங்கள் உருவாக்கிய வழிமாற்றுகளை நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 21:58, 14 ஆகத்து 2011 (UTC)

முதற்பக்கக் கட்டுரைதொகுமுதற் பக்க அறிமுகம்தொகு

உங்களைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பை முதற்பக்கத்தில் காட்சி படுத்த விரும்புகிறோம். எனவே உங்களைப் பற்றிய குறிப்பினை பின்வரும் சிவப்பிணைப்பில் இணைக்க வேண்டுகிறென்.--சோடாபாட்டில்உரையாடுக 19:39, 4 செப்டெம்பர் 2011 (UTC)

கார்த்திக் ராமானுஜம், திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட மதுரை தமிழர். தற்பொழுது சிங்கப்பூரில் பொறியியலில் பட்ட மேற்படிப்பு முடித்து அங்கேயே பணியாற்றி வருகிறார். 2007 ஆம் ஆண்டு ஆங்கில விக்கியில் தன் பணியை தொடங்கிய இவர், 2009 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். அறிவியல், சமயம், தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூர் சார்ந்த தலைப்புகளில் விருப்பமுடையவர். விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புகளுள் ஒரு சில: சிலம்பு, வாத்தலகி, ஹஜ், இந்து சமய மெய்யியலாளர்கள், ஹராம், சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள், சிங்கப்பூரில் தமிழ் கல்வி, சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில். தற்பொழுது இந்திய நகரங்கள் குறித்த கட்டுரைகளை முன்னிலைப்படுத்தி எழுதி வருகிறார்.

அன்புள்ள சகோதரரே, நான் இன்னும் சரியாக 100 கட்டுரைகள் கூட நல்ல தரத்துடன் எழுதவில்லை, எனவே சிறுது காலம் சென்ற பின் இதை செய்யலாம் என்று நினைக்கிறேன். தங்கள் முயற்சிக்கு நன்றி.--Jenakarthik 14:09, 9 செப்டெம்பர் 2011 (UTC)
கார்த்திக், என் பார்வையில் உங்கள் பங்களிப்பு ஏனையோருக்கு இணையானதே. :-). பல ஆண்டுகளாக பிழையற்ற நேர்த்தியான கட்டுரைகளை எழுதி வந்திருக்கிறீர்கள். உங்களைப் போன்ற இளைஞர்களை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவது பிறரை ஊக்குவிக்கவும் செய்யும். எனவே இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டிக் கொள்கிறேன் :-)--சோடாபாட்டில்உரையாடுக 14:15, 9 செப்டெம்பர் 2011 (UTC)
சரி, எனக்கு நீங்கள் ஒரு வாரம் அவகாசம் தாருங்கள். அதற்குள் முடிந்த அளவு பங்களித்துவிட்டு, அடுத்த சனிக்கிழமை நான் என்னை பற்றிய குறிப்புகளை பதிவேற்றுகிறேன்.--Jenakarthik 02:19, 10 செப்டெம்பர் 2011 (UTC)
நன்றி கார்த்திக்.--சோடாபாட்டில்உரையாடுக 06:28, 10 செப்டெம்பர் 2011 (UTC)
முதற்பக்கத்தில் காட்சிபடுத்தியுள்ளேன். இன்னும் இரு வாரங்கள் அங்கிருக்கும்.--சோடாபாட்டில்உரையாடுக 04:33, 6 நவம்பர் 2011 (UTC)

வாழ்த்துகள்தொகு

உங்களைப் பற்றிய முதற் பக்க அறிமுகம் கண்டு மகிழ்வடைகிறேன் கார்த்திக் இராமானுஜம்.விக்கியில் உங்கள் பணி மேலும் சிறக்கட்டும் --P.M.Puniyameen 06:38, 6 நவம்பர் 2011 (UTC)

உங்களது முதற் பக்க அறிமுகம் கண்டு மகிழ்கிறேன். பாராட்டுக்கள்!--பாஹிம் 07:03, 6 நவம்பர் 2011 (UTC)

பாராட்டுகள்தொகு

அண்மை நாட்களில் உங்கள் தொடர் பங்களிப்புகள் கண்டு மிக மகிழ்கிறேன். தமிழர்கள் மிகுந்து வாழும் சிங்கப்பூர் குறித்து தமிழில் தகவல் இடம்பெறுவது மிகச் சிறப்பான ஒன்று. நன்றியும் பாராட்டும்--இரவி 15:47, 15 செப்டெம்பர் 2011 (UTC)

உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி ரவி. எனக்கு தெரிந்த வரை சிங்கப்பூரில் இருக்கும் ஒரே தமிழ் விக்கி பங்களிப்பாளர் நான் தான் என்று நினைக்கிறேன். எனவே இது எனது கடமையாக கருதுகிறேன்.--Jenakarthik 00:02, 16 செப்டெம்பர் 2011 (UTC)

இந்த நேரத்திலே சிங்கப்பூரில் இருந்து முதன்முதலில் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்தது யாமே என்பதை நினைவு கூர்கிறேன் :) 2005ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் படித்துக் கொண்டிருந்த போது தான் எனக்கு த.வி அறிமுகமானது. ஆனால், அப்போது சிங்கப்பூர் குறித்த கட்டுரைகளை உருவாக்கத் தோன்றாமல் போய்விட்டது. தொடர்ந்து உங்கள் பங்களிப்புகளை எதிர்ப்பார்க்கிறேன். நன்றி--இரவி 03:31, 22 செப்டெம்பர் 2011 (UTC)

தொடருந்துதொகு

ரயில் என்ற ஒலிப்பெயர்ப்புச் சொல்லை விட தொடருந்து என்ற சொல் கூடப் பொருத்தமானது என்பது எனது தனிப்பட்ட கருத்து. குறிப்பாக தொடருந்து, பேருந்து, மகிழுந்து, தானுந்து போன்ற சொற் சூழலில். இருப்பவற்றை மாற்றா வேண்டிய அவசியமில்லை. இனி எழுதவிருக்கும் கட்டுரைகளுக்கு இப் பரிந்துரைப் பரிசீலிக்கவும். நன்றி. --Natkeeran 17:55, 16 செப்டெம்பர் 2011 (UTC)

நன்றி Natkeeran, அப்படியே செய்கிறேன்.--Jenakarthik 23:59, 16 செப்டெம்பர் 2011 (UTC)

ஆறுகள்தொகு

கார்த்திக்,

ஒரு வரிக் கட்டுரைகள் உருவாக்குவதில்லை என்று தமிழ் விக்கியில் வழமை கொண்டுள்ளோம். (its been found one line stubs are unhealthy for smaller wikis) எனவே தனித்தனி நதிக்கட்டுரைகள் உருவாக்குவதற்கு பதிலாக ஒரு பட்டியல் கட்டுரையாக உருவாக்கிவிடுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 03:23, 15 அக்டோபர் 2011 (UTC)

அய்யோ, மன்னித்துவிடுங்கள், இனி உள்ள ஆறுகளை பற்றிய தகவல்களை தமிழக நதிகள் பக்கத்தில் எழுதுகிறேன்.--Jenakarthik 03:30, 15 அக்டோபர் 2011 (UTC)
பட்டியல் கட்டுரை ஒன்று உள்ளது - தமிழக ஆறுகளின் பட்டியல். இதில் மாவட்ட வாரியாக பகுதிகளை உருவாக்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 03:33, 15 அக்டோபர் 2011 (UTC)
ஆம், அதை தான் செய்துகொண்டிருக்கிறேன்.--Jenakarthik 03:35, 15 அக்டோபர் 2011 (UTC)

தமிழக ஆறுகள்தொகு

தங்களின் தமிழக ஆறுகள் குறித்த புதிய கட்டுரைகள் அருமையான பதிவுகள். ஆனால் இவையனைத்தும் ஒரு வரித் தகவல்களாக உள்ளன. இவற்றை குறைந்தது மூன்று வரிகளுக்கு மேல் விரிவுபடுத்த வேண்டுகிறேன். மேலும் தாங்கள் சில ஆறுகளின் தலைப்பில் இரண்டாவதாகவும் ஆறு என்று பயன்படுத்தியுள்ளீர்கள். உதாரணமாக, வைப்பாறு (ஆறு)‎, கோரையாறு (ஆறு), ராஜசிங்கியாறு (ஆறு)‎ போன்ற சில தலைப்புகள். இங்கு வைப்பாறு, கோரையாறு, ராஜசிங்கியாறு என்று இருந்தாலே போதுமே... மேலும் சில ஆறுகளின் பெயர்கள் ஆறு என்கிற பொருளில் நதி என்று முடிவுற்றிருக்கும். இங்கு தாங்கள் அதற்குப் பின்பும் ஆறு என்று குறிப்பிடுவது தேவையற்றது. உதாரணமாக கெளசிகா நதி (ஆறு)‎, நாகா நதி ஆறு‎, கௌண்டின்ய நதி (ஆறு) என்று தலைப்பிடுவது எனக்கு சரியானதாகத் தோன்றவில்லை. மாற்றத்திற்கு முயற்சியுங்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:24, 15 அக்டோபர் 2011 (UTC)

சரி, தவறை திருத்திக் கொள்கிறேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.--Jenakarthik 03:32, 15 அக்டோபர் 2011 (UTC)

பதக்கம்தொகு

  சிறப்புப் பதக்கம்
விக்கியில் உங்கள் அற்பணிப்பை பாராட்டுகிறேன் Jegan2visit 10:53, 9 நவம்பர் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


நாமதேவர்தொகு

கட்டுரையை விரிவு படுத்தவும். ஆ.வியில் இருந்து எடுத்தது என்றால் எல்லா உள்ளடக்கமும் தவறு. மேற்கொள், வெளியிணைப்பு இருந்தால் தரவும்--குறும்பன் (பேச்சு) 19:24, 26 சூலை 2012 (UTC)

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவுதொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:54, 24 சூன் 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்புதொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

வணக்கம் Jenakarthik! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:00, 17 மே 2014 (UTC)

மலேசியா, சிங்கப்பூரில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்தொகு

வரும் வார இறுதியில், மலேசியா, சிங்கப்பூரில் நடைபெறும் தமிழ் விக்கிப்பீடியா அறிமுக நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன். பார்க்க: விக்கிப்பீடியா:மலேசியா, சிங்கப்பூரில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம். நன்றி.--இரவி (பேச்சு) 09:34, 25 மே 2014 (UTC)

நலமா?தொகு

உங்களைக் கண்டு நீண்ட நாட்கள் ஆகின்றது. நலமாக உள்ளீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 06:09, 8 ஆகத்து 2014 (UTC)

விக்கித் திட்டம் 100 அழைப்புதொகு

வணக்கங்க. இம்மாதம் தமிழ் விக்கிப்பீடியர் கூடி ஒரே மாதத்தில் 100 பயனர்கள் 100 தொகுப்புகளைச் செய்யும் சாதனை முயற்சியில் இறங்கி உள்ளோம். நீங்களும் இணைந்து பங்களிக்க வேண்டுகிறேன். உங்கள் பெயர் பதிந்து வைத்தாலும் கூட அனைவருக்கும் உற்சாகம் தொற்றும். மீண்டும் உங்கள் முனைப்பான பங்களிப்புகளை எதிர்நோக்கி...--இரவி (பேச்சு) 15:34, 11 சனவரி 2015 (UTC)

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்புதொகு

அன்புள்ள கார்த்திக்,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தக்க பங்களிப்பு அளிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு சரியான வாய்ப்பு. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவில் மீண்டும் முனைப்பாக பங்களிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு நல்ல வாய்ப்பு.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி.--இரவி (பேச்சு) 15:49, 24 மார்ச் 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Jenakarthik&oldid=2501805" இருந்து மீள்விக்கப்பட்டது