விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு117

Project Tiger 2.0

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

இதன் திட்டப்பக்கத் தொடக்கம்

தொகு

விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 என்ற திட்டப்பக்கத்தினைத் தொடங்கியுள்ளேன். மேலதிகச் செய்திகளை அவ்வப்போது இற்றைப்படுத்துவேன். அனைவரும் இணைந்து இம்முறை நாம் முதலிடத்தை பெற முயற்சிப்போம். மறவாமல் அதன் துணைப்பக்கங்களையும் கண்டு, பின்னூட்டம் அளிக்கவும். குறிப்பாக கட்டுரைகளின் தலைப்புகளை நாம் பரிந்துரைக்க வேண்டும் என்பதே இதன் முதல் இலக்கு--உழவன் (உரை) 02:26, 27 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

New tools and IP masking

தொகு

14:18, 21 ஆகத்து 2019 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா பதினாறாம் ஆண்டு நிகழ்வு

தொகு

இலங்கையில் ஆகத்து 22இல் காலாவதியான அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படவில்லை. எனவே, அக்டோபர் 12, 13 இல் நிகழ்வை நடாத்தலாம் என முன்மொழிகிறேன். உங்கள் கருத்துகளை இங்கு இடவும். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 16:22, 26 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

மடிக்கணினிப் பெற ஆதரவு வேண்டல்

தொகு

1. தீபா அருள்

தொகு

எனக்கு என்று தனியாக மடிகணினி இல்லாமல் என் கணவரின் மடிகணினியையே பயன்படுத்தி வருகிறேன். அவர் மடிகணினியை பயன்படுத்தும்போதோ அல்லது அவர் வெளியே எடுத்துச் செல்லும்போதோ என்னால் பங்களிப்பை வழங்க இயலுவதில்லை. எனவே வேங்கைத் திட்டம் 2.0 வில் எனக்கு மடிகணினி வேண்டி விண்ணப்பித்துள்ளேன். உங்கள் ஆதரவை இங்கு அளிக்குமாறு வேண்டிகிறேன்--தீபா அருள் (பேச்சு) 10:08, 27 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

2. பார்வதிஸ்ரீ

தொகு

வீட்டிலுள்ள கணினி பழுதடைந்த நிலையில் இருப்பதாலும், போதுமான இணைய வசதியின்மையாலும் தற்பொழுது எனது பங்களிப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளன. எனவே வேங்கைத் திட்டம் 2.0 இல் முழு மூச்சுடன் பங்களிக்க எனக்கு மடிக்கணினி வேண்டி விண்ணப்பித்துள்ளேன். எனக்கு தங்களின் மேலான ஆதரவினை இங்கு வழங்குமாறு தமிழ் விக்கிச் சமூகத்தினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:06, 28 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

3. Sridhar G

தொகு

எனக்கு இங்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.ஸ்ரீ (talk) 01:50, 29 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

4. சே. கார்த்திகா

தொகு

புதுப்பயனர் போட்டியின் போது தான் எனது பயணத்தை விக்கிப்பீடியாவில் தொடங்கினேன். ஆங்கில கட்டுரைகளை மொழிமாற்றம் செய்தேன், எனக்கு அது மிகவும் சவாலாக இருந்தது. ஏனெனில் ஆங்கிலம் மொழியில் எனக்கு சிறிது தடுமாற்றம் உண்டு. எழுத துவங்கும் பொழுது மிகவும் கடினமாக இருந்தது. முதல் கட்டுரை முடித்த பிறகு தான் எனக்கு எழுதுவதில் அதிகம் ஆர்வம் வந்தது. தொடர்ந்து கட்டுரை எழுதுவதன் மூலமாக அதிகம் கற்றுக்கொண்டேன். நான் தொடர்ந்து முயற்சி செய்து அந்த போட்டியின் வெற்றியாளர்களின் ஒருவராக இருந்தேன். அதே கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் பங்குபெற ஆசை. என் கணவரின் மடிக்கணினியை பயன்படுத்தி வந்தேன் தற்போது பழுதாகிவிட்டதால் புதிய மடிக்கணினி வழங்க ஆதரவு கேட்கிறேன். நன்றி. இங்கு. -சே. கார்த்திகா (பேச்சு) 16:20, 29 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

5. பாத்திமா ரினோசா

தொகு

தமிழ் விக்கிபீடியாவின் பயனாளரான நான் புதுப் பயனர் போட்டியில் இலங்கையிலிருந்து பங்குபற்றி 30 கட்டுரைகளை எழுதினேன். பொழுது போக்கிற்காக எழுத தொடங்கிய நான் எனது திறன்பேசியின் மூலம் visual editing இனால் பெரும்பாலும் போட்டிக்காக கட்டுரை எழுதி வந்தேன். கணனி வகுப்பின் கணனியையும் பாவிப்பதுண்டு. திறன்பேசியில் கட்டுரை எழுதுவது இலகுவானதல்ல. கணனி இல்லாததால் மடிக்கணனி வேண்டி விண்ணப்பித்துள்ளேன். இங்கு உங்கள் ஆதரவு வழங்கக் கோருகிறேன். என்னால் முடிந்தளவு பங்களிப்பை விக்கிபீடியாவின் வேங்கை திட்டத்தில் வழங்குவேன்.

பயனர்: Fathima rinosa ([[பயனர் பேச்சு:|Fathima rinosa]]) 8:04, 31 ஆகத்து 2019 (UTC)

Only residents of India are eligible to receive support due to auditing requirements. --AntanO (பேச்சு) 16:52, 3 செப்டம்பர் 2019 (UTC)

6. தகவலுழவன்

தொகு

எனது மடிக்கணினி சரிவர இயங்கா நிலைமையில் இருப்பதால், நான் வேங்கைத் திட்டம் 2.0 வழி, மடிக்கணினிப் பெற இங்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். .--உழவன் (உரை) 02:36, 3 செப்டம்பர் 2019 (UTC)

7.ஹிபாயத்துல்லா

தொகு

என்னிடம் மடிகணினி இல்லாத காரணத்தால் விக்கி பயிலகங்களில் கூட சக விக்கிபீடியர்களிடம் இரவல் வாங்கி பயன்படுத்தி வந்தேன் என்பது முன்னணி விக்கிபீடியர்கள் அனைவரும் அறிந்ததே. தற்போது அலுவலக மேஜைக்கணினியை பயன்படுத்தி வருகிறேன். ஆகையால் என்னால் பங்களிப்பை வழங்க இயலுவதில்லை. எனவே வேங்கைத் திட்டம் 2.0 வில் எனக்கு மடிகணினி வேண்டி விண்ணப்பித்துள்ளேன் . உங்கள் ஆதரவை இங்கு அளிக்குமாறு வேண்டுகிறேன்.ஹிபாயத்துல்லா (பேச்சு) 06:25, 3 செப்டம்பர் 2019 (UTC)

8. VASANTHALAKSHMI V

தொகு

தமிழ் விக்கிபீடியாவின் பயனராகிய நான் புதுப்பயனர் போட்டியில் பங்கு கொண்டு 181 கட்டுரைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்ப்பு செய்து இரண்டாம் இடம் பிடித்துள்ளேன். மேலும், தமிழ் விக்கி மூலத்தில் இதுவரை நான்கு புத்தகங்கள் மெய்ப்புப் பணி செய்துள்ளேன். நான் தற்போது மேஜைக்கணினியை பயன்படுத்தி வருகிறேன். விரைவான இணைய வசதி சரியாக இல்லாத காரணத்தால் அதிக பங்களிப்பு செய்ய இயலவில்லை. எனவே, நான் வேங்கைத் திட்டம் 2.0 வில் எனக்கு மடிகணினி வேண்டி விண்ணப்பித்துள்ளேன் . உங்கள் ஆதரவை இங்கு அளிக்குமாறு வேண்டுகிறேன்--வசந்தலட்சுமி (பேச்சு) 16:29, 3 செப்டம்பர் 2019 (UTC)

9. balu1967

தொகு

தமிழ் விக்கிபீடியாவின் பயனராகிய நான் புதுப்பயனர் போட்டியில் பங்கு கொண்டு 261 கட்டுரைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்ப்பு செய்து முதலாம் இடம் பிடித்துள்ளேன். இந்த கட்டுரைகள் அனைத்தும் என்னுடைய அலுவலக கணிணியை பயன்படுத்தியே பங்கு கொண்டேன். மேலும், தமிழ் விக்கி மூலத்தில் இதுவரை மூவாயிரத்திற்கும் மேலான பிழைத் திருத்தங்களை முடித்துள்ளேன். ஆறு புத்தகங்கள் மெய்ப்புப் பணி முழுமையாக (பக்கங்கள் மஞ்சள்) செய்துள்ளேன். எனவே, தமிழ் விக்கிபீடியாவில் மேலும் அதிக பங்களிப்பினை மேற்கொள்ள எனக்கு வேங்கைத் திட்டம் 2.0 வில் எனக்கு மடிகணினி வேண்டி விண்ணப்பித்துள்ளேன். உங்கள் ஆதரவை இங்கு அளிக்குமாறு வேண்டுகிறேன்--பாலசுப்ரமணியன் (பேச்சு) 16:50, 3 செப்டம்பர் 2019 (UTC)

10. TVA ARUN

தொகு

தமிழ் இணையக்கல்விக்கழகத்தின் உதவி இயக்குநர் (இணைய மேலாண்மை) பொறுப்பில் முனைவர் தமிழ்ப்பரிதி பணியாற்றியபோது தமிழ் உள்ளடக்கம் கொண்ட ஆங்கில விக்கிபீடியர்களுக்கான பயிலரங்கை தமிழ் இணையக்கல்விக்கழகத்தில் (14 & 15 நவம்பர் 2015) அவருடன் இணைந்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு நடத்தினோம். அந்நிலையில் பங்கேற்பாளர்களுக்கு கூடுதல் மடிக்கணினி தேவைப்பட்ட நிலையில் எனது மடிக்கணினியை வழங்கினேன். சென்னை பெரு வெள்ளத்தின் முதல் இரு நாட்களில் சனி, ஞாயிறு அன்று நிகழ்வு முடிந்த நிலையில் அலுவலகம் வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில் எனது மடிக்கணினி நீரில் முழுமையாக மூழ்கிப்போனது. அத்தகைய நிலையிலும் இன்று வரை எனது விக்கி பங்களிப்பு தொடர்ந்தே வருகிறது. தமிழக அரசு சார்பில் த.இ.க. பங்களிப்பில் விக்கியினை தொடர்ந்து மாணவர்களிடத்தில் கொண்டு சேர்த்து வருகிறேன். பணி தொடர ஊக்கமளிக்ககும் விதமாக மடிக்கணினி வழங்க விண்ணப்பித்துள்ளேன். ஆதரவு வழங்க அன்புடன் அழைக்கின்றேன். விண்ணப்பம் --TVA ARUN (பேச்சு) 04:53, 10 செப்டம்பர் 2019 (UTC)

இதற்கான காலம் முடிவடைந்துவிட்டதால் இனிமேல் யாரும் விண்ணப்பிக்க வேண்டாம் ஸ்ரீ (✉) 07:43, 15 செப்டம்பர் 2019 (UTC)

Project Tiger important 2.0 updates

தொகு

For any query, feel free to contact us on the talk page 😊
Thanks for your attention
Ananth (CIS-A2K) using MediaWiki message delivery (பேச்சு) 13:20, 29 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் 2.0 : பங்களிப்பாளர்கள் பதியத் தொடங்கலாமா?

தொகு

விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் 2.0 என்ற பக்கத்தில், பங்களிப்பாளர்கள் பதிவு குறித்த உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்--உழவன் (உரை) 02:49, 1 செப்டம்பர் 2019 (UTC)

Wikimedia movement strategy recommendations India salon

தொகு

Please translate this message to your language if possible.

 

Greetings,

You know Strategy Working Groups have published draft recommendations at the beginning of August. On 14-15 September we are organising a strategy salon/conference at Bangalore/Delhi (exact venue to be decided) It'll be a 2 days' residential conference and the event aims to provide a discussion platform for experienced Wikimedians in India to learn, discuss and comment about the draft recommendations. Feedback and discussions will be documented.

If you are a Wikipedian from India, and want to discuss the draft recommendations, or learn more about them, you may apply to participate in the event.

Please have a look at the event page for more details The last date of application is 7 September 2019.

It would be great if you share this information who needs this. For questions, please write on the event talk page, or email me at tito+indiasalon@cis-india.org

Thanks for your attention
Ananth (CIS-A2K) sent through MediaWiki message delivery (பேச்சு) 09:15, 2 செப்டம்பர் 2019 (UTC)

மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தில் பரப்புரை

தொகு

பல முயற்சிகளுக்குப் பிறகு, மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தில் அதன் மாணவர்களுக்கு விக்கிப்பீடியா தொடர்பான ஒரு பரப்புரையைத் திட்டமிட்டுள்ளேன். பிற நிறுவனங்களின் ஏற்பாட்டில் பயிற்சி அளித்திருந்தாலும், முதல்முறையாக சிஐஎஸ் உதவியுடன் முழுத் திட்டமும் இடுவதால் பட்டறையைச் சுருக்கமாகவும், இடரில்லாமலும் திட்டமிட்டுள்ளேன். முன்பதிவு படிவத்தை கூகிள் பாரத்தில் உருவாக்கிப் பகிர்ந்துள்ளோம், மேலும் பயனர் கணக்கைத் தொடங்கிய பின்னர்தான் முன்பதிவு செய்யச் சொல்லிக் கேட்டுள்ளோம், நிறுவனத்தினரும் ஆர்வமாக ஊக்குவிக்கவுள்ளார்கள். அதில் முதலில் வரும் 50 மாணவர்களுக்கு முதல் தொகுதியாக செப்டம்பர் 30 2019 அன்று, பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு பயிற்சிப் பட்டறை நடத்தவுள்ளோம். மதுரையைச் சுற்றியுள்ள விக்கிப்பீடியர்கள்(தங்கும் ஏற்பாடு இல்லை என்பதால்) வாய்ப்பிருந்தால் கலந்து கொண்டு பட்டறையை மேலும் சிறப்பாக்கலாம். வேங்கைத் திட்டத்திற்குச் சில புலிக்குட்டிகளை அங்கே தேடுவோம்.-நீச்சல்காரன் (பேச்சு) 17:04, 4 செப்டம்பர் 2019 (UTC)

  1. நிகழ்வு சிறக்க வாழ்த்துகள்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:41, 4 செப்டம்பர் 2019 (UTC)
  2. நான் வருகிறேன். ஸ்ரீ (✉) 01:41, 5 செப்டம்பர் 2019 (UTC)
  3. அட்ரா சக்கை! அட்ரா சக்கை!! மேன்மை மிகு நிகழ்வு--உழவன் (உரை) 02:24, 5 செப்டம்பர் 2019 (UTC)
  4. நான் வருகிறேன். மகாலிங்கம் இரெத்தினவேலு, --TNSE Mahalingam VNR (பேச்சு) 17:20, 15 செப்டம்பர் 2019 (UTC)
வாழ்த்தியவர்களுக்கு நன்றி. @ஞா. ஸ்ரீதர் and TNSE Mahalingam VNR: தனியே தொடர்பு கொள்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 04:33, 18 செப்டம்பர் 2019 (UTC)
நிகழ்வு குறித்த மேல்விக்கிப் பக்கம் -நீச்சல்காரன் (பேச்சு) 15:43, 25 செப்டம்பர் 2019 (UTC)

பயிற்சிப் பட்டறை சிறப்பாக நிறைவு பெற்றது. முதுபெரும் எழுத்தாளர் கர்ணன் முன்னிலை வகித்து நிகழ்வைத் தொடங்கி வைத்தார். இரு தலைமுறை இடைவெளியுள்ள எழுத்தாளர் மாணவர்களிடம் எழுத்தின் மதிப்பையும், தேவையையும் குறிப்பிட்டுப் பேசினார். மொத்தமாக இந்த நிகழ்வின் மூலம் 55+ மாணவர்களிடம் விக்கிப்பீடியா குறித்த ஆழமான அறிமுகத்தை வழங்கமுடிந்தது, அதில் 46 மாணவர்களுக்குப் பயனர்பெயர் உருவாக்கப்பட்டது. அதில் 15 மாணவர்கள் விக்கிப்பீடியாவில் மணல்தொட்டியில் தொகுக்கத் தொடங்கினர், அதில் 4 மாணவர்கள் முதன்மைவெளியிலும் தொகுக்கத் தொடங்கினர். இரு மாணவிகள் புதுக் கட்டுரையையும் தொடங்கிவிட்டார். மாணவர்களுக்குச் சிறப்பாகப் பயிற்சியளித்த @TNSE Mahalingam VNR and ஞா. ஸ்ரீதர்: மற்றும் வாய்ப்பை வழங்கிய பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும், ஒருங்கிணைப்பில் உதவிய களம் அமைப்பினர்க்கும் நன்றிகள். ஊடகச் செய்தியில் சில தொடர்பில்லாத தகவல்கள் இருந்தாலும் எங்கள் பயிற்சிப் பட்டறையின் இலக்கு சிதறவில்லை செய்தி1, மேல்விக்கி பக்கம் -நீச்சல்காரன் (பேச்சு) 00:31, 2 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடித்த என் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும், என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:03, 3 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

வழிமாற்று நீக்கல்

தொகு

வேங்கைத் திட்டம் முன்னேற்பாடு செய்து கொண்டு இருந்த போது, அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பின்விளைவை ஏற்படுத்தும் மூலிகைகளை படித்துக் கொண்டு இருந்த போது, இத்தவறை க்கண்டேன். பேச்சு:சிவந்தி#வழிமாற்று என்பதில் எண்ணமிடவும்--உழவன் (உரை) 02:22, 5 செப்டம்பர் 2019 (UTC)

புதுக்கோட்டையில் விக்கிப்பீடியா பயிற்சி

தொகு

புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச் சங்கம் சார்பாக அடுத்த மாதம் 12/13 இல் இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் நடக்கவுள்ளது. அதில் தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிக்கு ஒரு அமர்வு ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜம்புலிங்கம் ஐயா பயிற்சி அளிக்கிறார். அழைப்பிதழ் 1, 2. அங்கும் வேங்கைத் திட்டத்திற்கான புலிக்குடிகளைப் பிடிப்போம்.:) -நீச்சல்காரன் (பேச்சு) 09:24, 5 செப்டம்பர் 2019 (UTC)

வணக்கம்,நீச்சல்காரன். விக்கிபீடியாவில் கற்றதைப் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பு. முடிந்தவரை பகிர்ந்துகொள்ள முயற்சிப்பேன். செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:57, 7 செப்டம்பர் 2019 (UTC)

தொகுத்தல் சாளரத்தினுள்ளேயே, போட்டிகளுக்கான சொற்களின் எண்ணிக்கைக் காட்டும் கருவி

தொகு

நம் விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதும் போட்டிகள் அவ்வப்போது நடந்தே வருகின்றன. ஒவ்வொரு போட்டிகளின் விதிகளும் மாறும் என்றாலும், சொற்களின் எண்ணிக்கையும், கட்டுரை அளவும் அவ்விதிகளில் ஒன்றாக இருக்கும். எனவே அவ்விரண்டையும் (சொற்களின் எண்ணிக்கை, சொற்களின் அளவு) கட்டுரை எழுதும் போதே தெரிந்து கொள்ள ஒரு கருவியொன்ற, நம் விக்கியில் ஏற்படுத்த வேண்டும். இதனால் பிற தளத்திற்கு சென்று, கட்டுரையைக் குறித்தவற்றை ஒட்டி, அறியும் காலம் மீதமாகிறது. அக்காலத்தினைக் கொண்டு விரைந்து செயல்படுவது எளிமையாகும். அதற்கான நுட்பம் ஒன்றை நீச்சல்காரன் இந்த தளத்தில் செய்துள்ளார். அந்த கருவியை இங்கு நிறுவ, இந்த அறிவிப்பு இங்கு இடப்படுகிறது. --உழவன் (உரை) 01:15, 13 செப்டம்பர் 2019 (UTC)

சமூக எண்ணங்கள்

தொகு
  1.   விருப்பம் --உழவன் (உரை) 01:15, 13 செப்டம்பர் 2019 (UTC)
  2. உபயோகமானது.   விருப்பம் ஸ்ரீ (✉) 02:41, 13 செப்டம்பர் 2019 (UTC)
  3.   விருப்பம் த.சீனிவாசன் (பேச்சு) 03:03, 13 செப்டம்பர் 2019 (UTC)
  4.   விருப்பம். மகாலிங்கம் இரெத்தினவேலு
  5.   விருப்பம்--திவ்யாகுணசேகரன் (பேச்சு) 04:15, 13 செப்டம்பர் 2019 (UTC)
  6.   விருப்பம்.--அருளரசன் (பேச்சு) 12:44, 13 செப்டம்பர் 2019 (UTC)
  7.   விருப்பம் - இரா. பாலாபேச்சு 15:06, 13 செப்டம்பர் 2019 (UTC)
  8. உபயோகமானது.   விருப்பம்--வசந்தலட்சுமி (பேச்சு) 09:07, 15 செப்டம்பர் 2019 (UTC)
  9.   விருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 09:41, 15 செப்டம்பர் 2019 (UTC)
  10.   விருப்பம் -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:47, 15 செப்டம்பர் 2019 (UTC)
  11. உபயோகமானது.   விருப்பம்--பாலசுப்ரமணியன் (பேச்சு) 06:51, 17 செப்டம்பர் 2019 (UTC)
@Info-farmer: விவாதித்தது போல கருவியை உருவாக்கியுள்ளேன். எனது காமென்ஸ்.ஜேஎஸ் பக்கதில் உள்ளது போல importScript('User:Neechalkaran/contentcounter.js'); கொடுத்தால் வார்ப்புருக்கள், மேற்கோள்கள் நீங்கலாக மொத்த சொற்களின் எண்ணிக்கை மற்றும் பைட்களின் எண்ணிக்கை, ஒவ்வொருமுறை சுட்டியை எடுக்கையில் தொகுத்தல் பெட்டிக்குக் கீழே காட்டப்படும். இதன் துல்லியத்தில் முரணிருந்தால் வேங்கைத் திட்டத்தின் பவுண்டைன் கருவி செயல்பாட்டிற்கு வந்ததும் சீர்செய்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 13:28, 18 செப்டம்பர் 2019 (UTC)
செய்து பார்த்தேன். இந்நுட்பத்தினை அனைத்து இந்திய மொழிகளுக்கும் கொண்டு செல்வோமா?--உழவன் (உரை) 00:13, 19 செப்டம்பர் 2019 (UTC)

கூகிள் தமிழ்த் தேடல்

தொகு

நேற்றைய "இந்தியாவில் கூகிள்" நிகழ்வினை அடுத்து, கூகிள் தேடலின் தமிழ் இடைமுகத்தை அமைத்துப் பார்த்தேன். தமிழ் விக்கிப்பீடியக் கட்டுரைகள் பக்கவாட்டில்(Knowledge Graph) காட்டப்படுகின்றன. இந்தப் பயன்பாடு ஆங்கிலத்தில் ஏற்கனவே இருந்தது, ஆனால் தமிழுக்கு எப்போது தான் வந்தது எனத் தெரியவில்லை ஆனால் இப்போதே கவனிக்கிறேன். நீங்கள் எழுதிய தமிழ்க் கட்டுரையின் தலைப்பைக் கூகிள் இட்டுப்(ஆங்கிலத்தில் கூட இடலாம்) பார்த்தால் நீங்கள் எழுதியவை கூகிளின் வலது புறத்தில் காணப்படும். கூகிள் வேங்கைத் திட்டத்தின் கூட்டு முயற்சியின் பலன்களாக இதைப் பார்க்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 06:12, 20 செப்டம்பர் 2019 (UTC)

கட்டற்ற பனுவல் பயன்பாடு

தொகு

விக்கிப்பீடியா_பேச்சு:பிற மூலங்களிலிருந்து, பனுவல்களை நகல் எடுத்தல் என்ற பக்கத்தினை வளர்த்தெடுக்க எண்ணமிடுங்கள். ஏனெனில் கட்டற்ற தமிழ் பனுவல்களை இப்பொழுது இணையத்தில் காண இயலுகிறது. எடுத்துக்காட்டக, இப்பக்கத்தினைச் சொல்லலாம். முதலில் அவற்றை இங்கு கொண்டு வர வேண்டும். பிறகு முழுமையான விக்கியாக்கக் கலைகளஞ்சிய நடைக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும். புதியவர்களை முதற்கட்ட பணிக்கு பயன்படுத்தலாம். அனுபவம் உள்ளவர்கள் அதனை தொடர்ந்து மேம்படுத்த இயலும். கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுக்கு தனி பகுப்பு இருப்பது போல, இவற்றிற்கு என பகுப்பிடலாம்.--உழவன் (உரை) 13:29, 20 செப்டம்பர் 2019 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா பதினாறாம் ஆண்டு நிகழ்வு நல்கை பெறுவோர்

தொகு

தமிழ் விக்கிப்பீடியா பதினாறாம் ஆண்டு நிகழ்வு நல்கை பெறுவோர் பட்டியல் அறிவிக்கப் பட்டுள்ளது. பட்டியலை இங்கு காணலாம். உங்கள் பெயர், தகவல் பரிமாற்றப் பிழை காரணமாக விடுபட்டிருப்பதாகக் கருதினால், விரைந்து தெரிவிக்கவும். பட்டியல் விக்கிமீடியா அறக்கட்டளை அனுமதிக்காகத் திங்கட்கிழமை அனுப்பப்படும். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 15:23, 21 செப்டம்பர் 2019 (UTC)

கைப்பாவை - நிருவாகிகள், பக்கங்கள் கவனிப்போர் கவனத்திற்கு

தொகு

Lina Merlin, AakashAH120, AshwinAsh22 ஆகிய கணக்குகள் ஒருவருடையது என்பதை தொகுக்கும் முறையை வைத்து, பயனர் கணக்கு சோதனை இல்லாமலே கண்டுபிடிக்கலாம். புதிய கைப்பாவைக் கணக்குகள் உருவாக்க வாய்ப்புள்ளது. அப்படி உருவாக்கி, வேண்டத்தகாத தொகுப்புக்கள் இடம்பெற்றால், ஓர் இறுதி எச்சரிக்கையுடன் தடை செய்ய வேண்டும். மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவியுங்கள். --AntanO (பேச்சு) 04:12, 22 செப்டம்பர் 2019 (UTC)

ஆம், கைப்பாவைக் கணக்குகள் ஓர் எச்சரிக்கையின் பின் தடைசெய்யப்பட வேண்டும். --சிவகோசரன் (பேச்சு) 11:26, 22 செப்டம்பர் 2019 (UTC)
சந்தேகத்துக்குரிய தொகுப்புகள். Ilavarasan Prince, GangadharGan26. --AntanO (பேச்சு) 01:48, 24 செப்டம்பர் 2019 (UTC)
மேல் விக்கியில் கைப்பாவை சோதனை செய்ததில் பரிச்சயமான கணக்கு ஒன்றையும் முடக்க வேண்டியதாயிற்று. முன்னர் குறிப்பிட்டதைப்போல் எழுத்து நடையிலும் தொடர்பு உள்ளது. பெரும்பாலாக தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கு கிறிஸ்தவ, இஸ்லாமியப் பெயர்கள் இருக்கும். இங்கு கணக்கு உருவாக்கத்திலும் அதே நடைமுறை. :) நிர்வாகிகளும் தொடர் பங்களிப்பாளர்களும் கைப்பாவை விடயத்தில் கவனமான இருக்க வேண்டும். --AntanO (பேச்சு) 18:18, 27 செப்டம்பர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 - 500 தலைப்புகள்

தொகு
  • வேங்கைத்திட்டம் 2.0 நடைபெறும் அனைத்து மொழிகளுக்குமான ஒருங்கிணைப்புப் பகுதியில் தமிழுக்குரிய இடத்தில்(இந்த பக்கத்தில்,) அனைவரது முன்மொழிவுகளையும் உள்வாங்கி, கொடுக்கத் தகுந்த வடிவில் இருந்தவற்றில், 500 தலைப்புகளைத் தந்துள்ளேன்.--உழவன் (உரை) 18:29, 22 செப்டம்பர் 2019 (UTC)
  • 11 இந்திய மொழிகளில் நடைபெறும் வேங்கைத்திட்டத்தை நடத்துபவர், ஒவ்வொரு சமூகமும், கூகுள் தமிழ் மொழிக்குத் தந்த தலைப்புகளோடு, நம் சமூகம், மேலும் 500 தலைப்புகளை தரலாம் எனக் கேட்டுள்ளது. அவற்றைத் தருவதற்கான கால நீட்டிப்பு, இம்மாதம் 30-ந்தேதி என, முகநூலில் கூறப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. அச்செய்தி சரியா என, இத்திட்டத்தை ஒருங்கிணைக்கும் பங்களிப்பாளரிடம் கேட்டுள்ளேன். அவர் அனைத்து மொழி விக்கியின் ஆலமரத்தடியிலும், விரைவில் கால நீட்டிப்பு அறிவிப்பைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். எனவே, ஆர்வம் உள்ளவர் தங்களுக்கு பிடித்தத் தலைப்புகளைத் தருக. நேற்று மேலே தந்துள்ள இணைப்பில், நம் சமூகத்தின் 12 பங்களிப்பாளர் முன்மொழிவு செய்ய தலைப்புகளை இணைத்துள்ளேன். யார்யார் என்னென்ன தலைப்புகளைத் தந்துள்ளனர் என்று அறிய விருப்பம் இருந்தால், இந்த கூகுள் ஆவணத்தின் வழி தெரிந்து கொள்ளலாம். ஒருவாரம் இருப்பதால், மேலும் பலரை இணைக்க முயற்சி எடுப்போம். இம்முறை தமிழ் முதலிடம் பெற உங்கள் வழிமுறைகளை அறியத்தருக.--உழவன் (உரை) 15:53, 23 செப்டம்பர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 - மடிக்கணினிக்கான நடுவர்

தொகு

மடிக்கணினிக்கு, 127 விக்கிமீடியப் பங்களிப்பாளர்கள் விண்ணபித்துள்ளனர். அவர்களில் 10 தமிழ் பங்களிப்பாளர்கள் அடங்குவர். யாருக்கத் தரலாம் ?என்பதற்கான நடுவராக நீங்கள் இருக்க விரும்பினால், m:Growing Local Language Content on Wikipedia (Project Tiger 2.0)/Jury என்ற பக்கத்தில், உங்களைக் குறித்து சுருக்கமாகக் கூறி விண்ணபிக்கலாம். மடிக்கணினிக்கு விண்ணப்பித்தவர் நடுவராக இருக்க இயலாது. --உழவன் (உரை) 02:11, 23 செப்டம்பர் 2019 (UTC)

2014 ஆம் ஆண்டு பெற்ற கலைக்களஞ்சியத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சி குறித்து எண்ணமிடுக

தொகு
  • சூலை, 2014-செல்வா அவர்கள் முயற்சியால் பத்தாண்டுகளுக்கும் மேற்பட்டு பலரால் உருவாக்கப்பட்ட கலைக்களஞ்சியம் , பொதுஉரிமத்தில் கிடைத்தது. அந்த ஆவணத்தை, இரவி பொதுவகத்தில் பதிவேற்றியுள்ளார். காண்க:c:File:Letter_from_Tamil_Development_Board_donating_20_volumes_of_encyclopedia_in_Tamil_under_Creative_Commons_license.jpeg
  • ஏப்ரல் 2015 அதன் பிறகு அதன் அடுத்தக்கட்ட வளர்ச்சி, இந்தப் பக்கத்தில் உள்ளன. அதில் மூலப்பக்கமும் இணைக்கப்பட்டுள்ளது அதன் சிறப்பாகும். இந்த அருமையான அடித்தளப்பணியை நீச்சல்காரன் செய்துள்ளார்.
  • செப் 2019 நீச்சல்காரனின் அட்டவணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை, இங்கு படிப்படியான நிலைகளில் தான் உருவாக்க இயலும். அது குறித்த எண்ணங்களை விக்கிப்பீடியா_பேச்சு:வேங்கைத்_திட்டம்_2.0#கட்டற்ற_பனுவல்_பயன்பாடு என்பதில் இடுக. பலரும் கவனிக்கும் இச்சூழ்நிலையில், அப்பொது உரிமத் தரவுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், புதியவர்களுக்கு இதனால் ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்க்கும் திறன் தேவையில்லை. அவர்களுக்கு பங்களிப்பு செய்ய நல்லதொரு தொடக்கமாக அமையும். நம் மொழி முதலிடம் பெற்று வெற்றி அடைய இது ஒரு நல்ல தொடக்கமாகும் என்பதால் வினவுகிறேன்
  • எண்ணங்களையும், வழிமுறைகளையும் இடும் போது, en:Wikipedia:Text of Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License என்ற ஆங்கிலவிக்கிப்பீடியாவின் வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு, நமது சூழலுக்கு ஏற்றவாறு வழிகாட்டவும்.--உழவன் (உரை) 16:36, 23 செப்டம்பர் 2019 (UTC)

பதிப்புரிமை வார்ப்புரு உருவாக்கம்

தொகு

வார்ப்புரு பேச்சு:கொள்கைகள் பட்டியல் என்பதில் விக்கிக்கு வெளியே கிடைக்கும் பனுவல்களை பயன்படுத்துதல் குறித்த பலவித சட்ட விவரங்களைத் தரும் வார்ப்புருவைக் குறித்து உங்களின் எண்ணங்களைத் தருக.--உழவன் (உரை) 00:49, 24 செப்டம்பர் 2019 (UTC)

ஒளிப்படப் போட்டி

தொகு

விக்கிமீடியா அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் "விக்கி நினைவுச்சின்னங்களை விரும்புகிறது" போட்டி குறித்தான வலைப்பதிவு. போட்டிக்கான காலம் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ளது. நீங்களோ மற்றவர்களோ கலந்துகொள்ளலாம். https://tamilwikipedia.blogspot.com/2019/09/2019.html -நீச்சல்காரன் (பேச்சு) 06:48, 25 செப்டம்பர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 - 500 தலைப்புகளின் அளவு

தொகு

விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-2 பரிந்துரை#பயனர்கள் முன்மொழிந்துள்ள தலைப்புகளின் கட்டுரை அளவு என்ற பக்கத்திற்காக, இதுவரை 14 பங்களிப்பாளர்கள் தலைப்புகளை முன்மொழிவுகளாகத் தந்துள்ளனர். அவற்றின் மொத்த எண்ணிக்கை ஏறத்தாழ 650 ஆகும். அவற்றில் ஆங்கிலக் கட்டுரைகளின் அளவை பைட்டுகளில் அப்பக்கத்தில் தெரிவித்துள்ளேன். எனவே, அதனைக் கண்டு கருத்திடவும். 30ந்தேதி இறுதிநாள் என்று சொல்லப்படுகிறது. எனவே, இன்று, நாளை, நாளைமறுநாள் நேரிய முறையில் நம் மொழியின் பரிந்துரையாக 500 தலைப்புகளைத் தர உதவுங்கள். இப்பொழுது இந்திய அளவில் மேலும் சில மொழிகள் இணைந்து, மொத்திம் 15 இந்திய மொழியினருடன், இப்போட்டி நடக்கவுள்ளது. நம் மொழி முதலிடம் பெற கைகொடுங்கள். மேலும் பலர் இணைந்தால் இந்த இலக்கு எளிமையாகும். அவரவர் தலைப்பு என்றால் சற்று வேகத்துடன் செயல்படுவரென்று எண்ணுகிறேன். எனவே, ஊக்கப்படுத்தி, மேலும் சிலரை இணைக்குமாறு வேண்டுகிறேன். ஆவலுடன்--உழவன் (உரை) 06:24, 27 செப்டம்பர் 2019 (UTC)

Project Tiger Article writing contest Update

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

The consultation on partial and temporary Foundation bans just started

தொகு

-- Kbrown (WMF) 17:14, 30 செப்டம்பர் 2019 (UTC)

GLOW edit-a-thon starts on 10 October 2019

தொகு
Excuse us for writing in English, kindly translate the message if possible

Hello everyone,

 
tiger face

Hope this message finds you well. Here are some important updates about Project Tiger 2.0/GLOW edit-a-thon.

  • The participating communities are requested to create an event page on their Wikipedia (which has been already updated with template link in the last post). Please prepare this local event page before 10 October (i.e. Edit-a-thon starting date)
  • All articles will be submitted here under Project Tiger 2.0. Please copy-paste the fountain tool link in the section of submitted articles. Please see the links here on this page.

Regards. -- User:Nitesh (CIS-A2K) and User:SuswethaK(CIS-A2K) (on benhalf of Project Tiger team) using MediaWiki message delivery (பேச்சு) 19:41, 4 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

ஐதிராபாத்தில் விக்கி இந்திய மாநாடு 2020க்கான முன்மொழிவு

தொகு

அன்புடையீர், ஆந்திர மற்றும் தெலுங்கானா விக்கிப்பீடியர்கள் ஐதராபாத்தில் விக்கி இந்திய மாநாடு 2020 நடத்துவதற்காக முன்மொழிந்துள்ளனர். இதன் சார்பாக இந்தத் தகவலை இங்கு பகிர்கிறேன். தேசிய அளவிலான மாநாடு பல தரப்பட்ட மக்களை இணைக்கிறது. இதனால் பல நன்மைகள் ஏற்படுகிறது. கடைசியாக இந்தியாவில் 2016 இல் மாநாடு நடந்தது. அதன் பிறகு மூன்று வருடங்களாக எந்த தேசிய அளவிலான மாநாடும் நடக்கவில்லை. இது போன்று மாநாடுகள் நடக்காமல் போனால் பல தரப்பட்ட சமூகங்களுக்கு மத்தியிலான கருத்துப் பரிமாற்றம் குறைந்து, புரிதல் இல்லாமல், இந்திய அளவில் இணக்கமில்லாமல் போய்விடும். அதனைத் தவிர்க்க விரைவில் இந்திய தேசிய அளவில் மாநாடு நடந்தால் சிறப்பாக அமையும். மூன்று வருடங்கள் எந்த சமூகமும் இப்படிப்பட்ட மாநாட்டை நடத்த முன்னெடுப்பு செய்யவில்லையாதலால், ஆந்திர தெலுங்கானா விக்கிபீடியர்கள் ஐதராபாத்தில் நடத்த முன்மொழிந்துள்ளனர்.

இந்தியாவிலுள்ள அனைத்து விக்கி சமூகங்களையும் இணைக்கும் விதமாக இந்த மாநாடு நடைபெற வேண்டும் என்பதனால் அனைத்து சமூகங்களின் கருத்தும், ஆதரவும் இருந்தால் சிறப்பாக இருக்கும்.

இந்த முன்மொழிவைப் பற்றிய விவரங்கள், திட்டங்கள் பற்றி மேல் விக்கியில் ஒரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. தயவு செய்து அவ்விவரங்களை இங்கு பார்க்கவும். பிற சமூகங்களின் ஆதரவை இப்பிரிவில் பார்க்கலாம்.

இப்படியாக 18 அக்டோபர் 2019 க்குள் சமூகங்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்தால், பிறகு நவம்பரில் சமூக கருத்துக்கணிப்பு நடித்தி திசம்பரில் இம்மாநாட்டிற்கான நல்கை ஒப்புதலைப் பெறலாம். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 20:18, 5 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

ஆதரவு அல்லது எதிர்ப்பு

தொகு
  1.   ஆதரவு. முன்மொழிவு செய்த விக்கிபீடியர்கள் ஏற்கனவே தேசிய அளவிலான பல பயிற்சிகள், மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தி நல்ல அனுபவம் பெற்றவர்கள். ஐதிராபாத் இந்தியாவின் அனைத்து நகரங்களும் சிறப்பாக இணைக்கப்பட்ட ஊர். மேலும் இப்படிப்பட்ட மாநாடு நடந்தால் பிற சமூக பணிகள், மக்கள் போன்ற அறிமுகம் கிடைக்கும். அதனால் மேலும் சிறப்பான விக்கிப்பணியைச் செய்யலாம். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 20:23, 5 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
  2.   ஆதரவு. 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது விக்கிப்பீடியா இந்தியாவில் தற்போது பரவலாக அறியப்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் இந்நேரத்தில் மாநாடு நடப்பது மிகப் பயனுள்ளதாக அமையும். அனைத்து சமூகங்களும் ஒருங்கிணைந்து இயங்கவும் விக்கித்திட்டங்கள் பலவும் மேலும் முன்னேற்றம் காணவும் இந்நிகழ்வு உதவும்--கி.மூர்த்தி (பேச்சு) 23:57, 5 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
  3.   ஆதரவு ஸ்ரீ (✉) 02:46, 6 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
  4.   ஆதரவு--அருளரசன் (பேச்சு) 03:17, 6 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
  5.   ஆதரவு--பாலசுப்ரமணியன் (பேச்சு) 07:10, 6 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
  6.   ஆதரவு--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:39, 6 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
  7.   ஆதரவு இந்தியாவில் பல நகரங்களிலும் நடத்துவது மக்களிடையே விக்கியைக் கொண்டு சேர்க்க உதவும். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:05, 6 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
  8.   ஆதரவு --வசந்தலட்சுமி (பேச்சு) 16:58, 6 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
  9.   ஆதரவு கடந்த மூன்று வருடங்களாக எவருமே முன்வராத நிலையில் இவர்கள் நடத்த முன்மொழிந்திருப்பது பாராட்டத்தக்கது. --இரா. பாலாபேச்சு 23:01, 6 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
  10.   ஆதரவு - ஹிபாயத்துல்லா (பேச்சு) 07:10, 7 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
  11.   ஆதரவு--மகாலிங்கம் இரெத்தினவேலு--TNSE Mahalingam VNR (பேச்சு) 04:51, 8 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
  12.   ஆதரவு--நந்தகுமார் (பேச்சு) 08:22, 8 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
  13.   ஆதரவு-- சோபியா (பேச்சு) 01:43, 10 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
  14.   ஆதரவுசஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:21, 10 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
  15.   ஆதரவு --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:55, 10 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
  16.   ஆதரவு --சிவகோசரன் (பேச்சு) 07:15, 12 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

கருத்துக்கள்

தொகு

எதிர்ப்புகள் ஏதும் இல்லாததால் தமிழ் விக்கிச் சமூகம் சார்பாக இம்மாநாட்டுக்கான ஆதரவை தெரிவித்துவிடுகிறேன். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:51, 14 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

Project Tiger 2.0: Article contest jury information

தொகு
Excuse us for writing in English, kindly translate the message if possible

Hello everyone,

 
tiger face

We want to inform you that Project Tiger 2.0 is going to begin on 10 October. It's crucial to select jury for the writing contest as soon as possible. Jury members will assess the articles.

Please start discussing on your respective village pump and add your name here as a jury for writing contest if you are interested. Thank you. --MediaWiki message delivery (பேச்சு) 17:06, 8 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

Attention @Parvathisri and கி.மூர்த்தி: --ஸ்ரீ (✉) 17:28, 8 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

 Y ஆயிற்று நன்றி ஸ்ரீதர்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:44, 9 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

Feedback wanted on Desktop Improvements project

தொகு

07:18, 16 அக்டோபர் 2019 (UTC)

Project Tiger Article writing contest Jury Update

தொகு

Hello all,

 

There are some issues that need to be addressed regarding the Juries of the Project Tiger 2.0 article writing contest. Some of the User has shown interest to be a jury and evaluate the articles created as the part of the writing contest. But they don't meet the eligibility criteria. Please discuss this aspect with the community, if the community feel that they have the potential to be a jury then we can go ahead. If not please make a decision on who can be the jury members from your community within two days. The community members can change the juries members in the later stage of the writing contest if the work done is not satisfactory or the jury member is inactive with the proper discussion over the village pump.

Regards,
Project Tiger team at CIS-A2K
Sent through--MediaWiki message delivery (பேச்சு) 10:51, 17 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவின் 16 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் - 2019

தொகு

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கியதன் 16 ஆவது நிறைவு தொடர்பான நிகழ்வுகள் இம்மாதம் 19, 20 ஆம் திகதிகள் யாழ்ப்பாணத்தில் இனிதே நிறைவேறியுள்ளன. தமிழ் நாட்டில் இருந்து 22 விக்கிப்பீடியர்கள் இரண்டு நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து நிகழ்வுகளில் கலந்துகொண்டது சிறப்பாக இருந்தது. குறிப்பாக பெண்களும் அதிக அளவில் கலந்துகொண்டது மகிழ்ச்சிக்குரியது. குறிப்பாக, முதல்நாள் பிற்பகலில் தொடங்கி இடம்பெற்ற பொது நிகழ்வில் இளம் விக்கிப்பீடியர்களான சிறீதர், ஆதவன், சிறீஹர்சன் ஆகியோர் இணைந்து வழங்கிய விக்கிப்பீடியாவில் பங்களிப்பது தொடர்பான பயிற்சி வந்திருந்தவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தொடர்பில் பல பாராட்டுக்கள் கிடைத்துள்ளன. மூவருக்கும் வாழ்த்துக்கள்.

நிகழ்வுக்கான "ஏற்பாட்டுக் குழு" எனப் பல இடங்களில் நாம் குறிப்பிட்ட போதிலும், நிகழ்வைத் தனியாளாக ஒழுங்கு செய்து மிகச் சிறப்பாக நடத்திக் காட்டிய பெருமை விக்கிப்பீடியர் சிவகோசரனுக்குச் சேரவேண்டியது. இவருக்கு நிகழ்வில் முறைப்படி பாராட்டுத் தெரிவிக்க எண்ணியிருந்தபோதும், இறுதிநேர நெருக்கடிகளினால் செய்ய முடியாமல் போய்விட்டது. விக்கிப்பீடியர் சமூகத்துக்காக அவர் செய்த இப்பணிக்காக அவருக்கு எனது பாராட்டுக்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 05:31, 21 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

  1. சிவகோசரனுக்கு பாராட்டுகளும் நன்றிகளும். அவருக்கு துணையாக நின்ற இலங்கை சகோதரர்களுக்கு நன்றிகள். அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 07:29, 21 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
  2. அதே. அதே. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:57, 21 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
  3. தமிழ் விக்கிப்பீடியா 16- கொண்டாட்டங்களில் முனைப்புடன் கலந்து கொண்ட இந்தியப் பயனர்களுக்குப் பாராட்டுகள். பல்வேறு பொறுப்புகளை விட்டுவிட்டு இலங்கை வந்திருந்தீர்கள். மயூரநாதன் அவர்கள் குறிப்பிட்டதுபோல நிகழ்ச்சி ஒழுங்கமைப்புக் குழு என பொதுவில் கூறிக்கொண்டாலும் எங்களது பங்களிப்பு நேரடியாக முழுமைபெற வழங்க முடியவில்லை. அடிக்கடி எப்படிப் போகுது சிவகோசரன் என தென்பூட்டியது மட்டுமே எனக்கு முடிந்தது. முழுப்பொறுப்புகளையும் கச்சிதமாகச் செய்த சிவகோசரனுக்கு நன்றிகளும் பாராட்டுகளும். சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:36, 25 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
  4. தமிழ்விக்கி16 நிகழ்வில் கலந்து கொண்டது மறக்க முடியாத அனுபவம். மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. தமிழ்நாட்டுப் பயனர்களுக்கு இலங்கையைப் பற்றிய மேம்பட்ட புரிதலை இந்த வாய்ப்பு அளித்திருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். பல சிரமங்களுக்கு இடையே இரண்டு ஆண்டுகளாக இந்த நிகழ்வு தொடர்பான முயற்சிகளை ஒருங்கிணைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள். குறிப்பாக, ஒரு நல்கையைப் பெற்று இதனைத் தொடக்கி வைத்த சிறீகரனையும் கிட்டத்தட்ட தனியொரு ஆளாக அனைத்துப் பொறுப்புகளையும் சுமந்து நிகழ்வை வெற்றிகரமாக நடத்திய சிவகோசரனுக்கும் பாராட்டுகள். யாழ்ப்பாணத்திற்குச் சென்னையில் இருந்து விமானம் விட இருக்கிறார்கள். அடுத்து எங்களை எப்போது அழைப்பீர்கள் என்று காத்திருக்கிறோம் :) --இரவி (பேச்சு) 07:19, 25 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
  5. மிக இனிய நிகழ்விற்கு நன்றிகள். இலங்கை பற்றிய எமது புரிதலை பல்மடங்கு அதிகரித்துள்ளது. நிகழ்வுக்கும், பிற பங்களிப்புகளுக்கும் பல்லாயிரம் நன்றிகள் த.சீனிவாசன் (பேச்சு) 06:18, 28 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

Beta feature "Reference Previews"

தொகு

-- Johanna Strodt (WMDE) 09:47, 23 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

யாழ்ப்பாணத்தில் வாங்கிய இரு நூல்கள்

தொகு

யாழ்ப்பாணத்தில், பண்பாட்டுச் சுற்றுலாவின் போது, யாழ் கோட்டையில் இரு நூல்கள் வாங்கினேன்.

1. இலங்கைத் தமிழர் - ஒரு சுருக்க வரலாறு 2. ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்

இவை இரண்டும் தலா 2,500 இலங்கை ரூ.

அவற்றை வாங்குவதற்கு தக்க நேரத்தில் பண உதவி அளித்த மேதினி அவர்களுக்கும், அவற்றை தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நன்கொடையாக அளித்த CIS-A2K அமைப்பினருக்கும் நன்றிகள்.

இப்போது இந்த இரு நூல்களும் தமிழ்ப்பரிதி மாரி அவர்களிடம் உள்ளன. த.சீனிவாசன் (பேச்சு) 07:07, 28 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

நல்ல முயற்சி. இது போல தமிழ் விக்கிப்பீடியாவிற்கு இதற்கு முன் பொதுக் கணினி வழங்கப்பட்டதாக நினைவு. இது போல குழுமத்திற்கு வழங்கப்பட்டவற்றை ஓர் இடத்தில் ஆவணப்படுத்தலாம் எனப் பரிந்துரைக்கிறேன். மற்றவர்களின் கருத்தை அறிய ஆவல்-நீச்சல்காரன் (பேச்சு) 08:12, 28 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

Project Tiger update: Let's walk together with Wikipedia Asian Month and WWWW

தொகு
 
The Tiger says "Happy Dipavali" to you
Apologies for writing in English, Kindly translate this message if possible.

Greetings!

First of all "Happy Dipavali/Festive season". On behalf of the Project Tiger 2.0 team we have exciting news for all. Thanks for your enthusiastic participation in Project Tiger 2.0. You also know that there is a couple of interesting edit-a-thons around. We are happy to inform that the Project Tiger article list just got bigger.

We'll collaborate on Project Tiger article writing contest with Wikipedia Asian Month 2019 (WAM2019) and Wiki Women for Women Wellbeing 2019 (WWWW-2019). Most communities took part in these events in the previous iterations. Fortunately this year, all three contests are happening at the same time.

Wikipedia Asian Month agenda is to increase Asian content on Wikipedias. There is no requirement for selecting an article from the list provided. Any topic related to Asia can be chosen to write an article in WAM. This contest runs 1 November till 30 November. For more rules and guidelines, you can follow the event page on Meta or local Wikis.

WWWW focus is on increase content related to women's health issues on Indic language Wikipedias. WWWW 2019 will start from 1 November 2019 and will continue till 10 January 2020. A common list of articles will be provided to write on.

In brief: The articles you are submitting for Wikipedia Asian Month or WWWW, you may submit the same articles for Project Tiger also. Articles created under any of these events can be submitted to fountain tool of Project Tiger 2.0. Article creation rule will remain the same for every community. -- sent using MediaWiki message delivery (பேச்சு) 12:44, 29 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

Wikipedia Asian Month 2019

தொகு

Please help translate to your language

 

Wikipedia Asian Month is back! We wish you all the best of luck for the contest. The basic guidelines of the contest can be found on your local page of Wikipedia Asian Month. For more information, refer to our Meta page for organizers.

Looking forward to meet the next ambassadors for Wikipedia Asian Month 2019!

For additional support for organizing offline event, contact our international team on wiki or on email. We would appreciate the translation of this message in the local language by volunteer translators. Thank you!

Wikipedia Asian Month International Team.

MediaWiki message delivery (பேச்சு) 16:57, 31 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2019

தொகு

வணக்கம். விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2019 இன்று முதல் துவங்குகிறது. வழக்கம் போல் பங்களிப்பு செய்யுமாறு பயனர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். திட்டப்பக்கம், இங்கு பங்களிப்போர்கள் தங்கள் பெயரை இணைத்துக் கொள்ளவும். வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைகளையும் ஆசிய மாத கட்டுரைகளும் ஒன்றாகவும் இருக்கலாம் (இரண்டு போட்டிகளின் விதிமுறைகளையும் பார்க்கவும்). நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:07, 1 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

சென்னையில் விக்கி நிகழ்வு

தொகு

வேங்கைத் திட்டம் மற்றும் இதர போட்டிகளை மையமாக வைத்து சென்னையில் தொடர் தொகுப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.-நீச்சல்காரன் (பேச்சு) 07:33, 5 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

பங்களிப்பாளர் அறிமுகம்

தொகு

மீண்டும் முதற்பக்கத்தில் விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பகுதியை இடம்பெறச் செய்வது புதிதாக வந்துள்ள பல பயனர்களுக்குத் தக்க அங்கீகாரம் வழங்குவதாக அமையும். இதைப் பொறுப்பெடுத்து இற்றைப்படுத்த யாராவது முன்வர வேண்டுகிறேன். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை புதிய பயனர் ஒருவரின் சிறு அறிமுகம், புகைப்படத்தைப் பெற்று முதற்பக்கத்தில் இற்றைப்படுத்த வேண்டும். இப்பணியைச் செய்வதற்கு நிருவாக அணுக்கம் தேவை இல்லை. இப்பணியைப் பொறுப்பெடுக்க முன்வருவோருக்குக் கூடுதல் வழிகாட்டல் வழங்குவதோடு உறுதுணையாகவும் இருக்க விரும்புகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 19:12, 5 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

இப்பணியைப் பொறுப்பெடுத்து செய்ய விரும்புகிறேன-.ஹிபாயத்துல்லா (பேச்சு) 09:42, 6 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

  விருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 14:55, 7 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

  விருப்பம் --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 15:26, 7 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

@Hibayathullah: மகிழ்ச்சி. கூடுதல் விவரங்களை உங்கள் பேச்சுப் பக்கத்தில் உரையாடுகிறேன். --இரவி (பேச்சு) 17:49, 7 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

புதுப்பயனர் கட்டுரைகள்

தொகு

இன்று புதுப்பயனர் நடமாட்டம் கூடுதலாகத் தென்படுகிறது. கல்லூரி மாணவர்களாக இருக்கலாம். யாராவது விக்கிப்பீடியர் இவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறீர்களா? நிருவாகிகள் இக்கட்டுரைகளை உடனுக்கு உடன் நீக்காமல், தகுந்த வார்ப்புரு இட்டு, இயன்ற அளவு கட்டுரைகளை மேம்படுத்திக் காட்டினால் புதுப்பயனர்களை அரவணைத்து வளர்க்க உதவியாக இருக்கும். பார்க்கவும் - விக்கிப்பீடியா பேச்சு:துரித நீக்கல் தகுதிகள்#கொள்கை மீளாய்வு--இரவி (பேச்சு) 17:48, 7 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

இவ்வாறு பயிற்சி கொடுப்பவர்கள் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 11:11, 8 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

Project Tiger 2.0 - Hardware support recipients list

தொகு
Excuse us for writing in English, kindly translate the message if possible

Hello everyone,

 
tiger face

Thank you all for actively participating and contributing to the writing contest of Project Tiger 2.0. We are very happy to announce the much-awaited results of the hardware support applications. You can see the names of recipients for laptop here and for laptop see here.

78 Wikimedians will be provided with internet stipends and 50 Wikimedians will be provided with laptop support. Laptops will be delivered to all selected recipients and we will email you in person to collect details. Thank you once again.

Regards. -- User:Nitesh (CIS-A2K) and User:SuswethaK(CIS-A2K) (on benhalf of Project Tiger team)
using --MediaWiki message delivery (பேச்சு) 07:15, 8 நவம்பர் 2019 (UTC)
[பதிலளி]

சுழற்சங்கம், சேலத்தில் தமிழ் விக்கிப்பீடியா பரப்புரை நிகழ்வு

தொகு

08.11.2019 அன்று மாலை 6 மணியளவில் சேலம் சுழற்சங்க அலுவலகக்கூடத்தில் தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகள் என்னும் தலைப்பில் உரையாற்ற உள்ளேன்; வாய்ப்புள்ளோர் கலந்து கொள்ள விழைகிறேன்.--Thamizhpparithi Maari (பேச்சு) 10:53, 8 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்கள்--கி.மூர்த்தி (பேச்சு) 11:17, 8 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
தங்களின் பணி மேன்மேலும், சிறக்க வாழ்த்துக்கள்-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 12:59, 8 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

பொதுவகத்தின் எந்திர ஒலிக்கோப்புகளை நீக்கலாமா என்ற உரையாடலில் உங்கள் எண்ணமிடுக

தொகு

பொதுவகத்தில் எந்திரவழியே ஒலிக்கோப்புகள் உருவாக்கப்பட்டன. அவற்றை சில ஆண்டுகளுக்கு முன் கேட்டு பின்னூட்டத்தை 2015 ஆம் ஆண்டு அளித்து இருந்தேன். அவற்றை விட, தற்போது எந்திரம் வழியே உருவாக்கப்படும் ஒலிக்கோப்புகளை சிறந்தவையாக உள்ளன என்பதால் அவற்றை நீக்க எண்ணுகிறேன். https://commons.wikimedia.org/wiki/Commons:Categories_for_discussion/2019/11/Category:Machine_pronunciations_of_Tamil_language

உங்களின் மேலான எண்ணங்களை உரையாடற் பக்கத்தில் இடுக. --உழவன் (உரை) 10:04, 12 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

பேச்சுப் பக்கச் செய்தியை முன்னிலைப்படுத்தல்

தொகு

16 ஆவது ஆண்டிவிழாவில் விவாதித்ததன் அடிப்படையில் புதுப்பயனர்களைத் தக்கவைக்க/ஊக்கப்படுத்த முன்னெடுக்கும் திட்டத்தில் ஒன்றாக இந்தப் பரிந்துரையை இங்கு வைக்கிறேன். மற்ற விக்கியில் உள்ளதா என்று தெரியவில்லை. பல புதுப் பயனர்கள் கணக்கைத் தொடங்கி பங்களிக்கையில் அவர்களின் கேள்விக்கோ, அவர்களின் பிழைக்கோ நாம் சில செய்திகளைப் பேச்சுப் பக்கத்தில் இடுவோம். ஆனால் அந்தப் புதிய பயனர்க்குப் பேச்சுப்பக்கம் என்றால் என்னவென்றே அறியாததால் அதைக் கண்டுகொள்ளாமல் படிக்காமல் போவதுண்டு. அதற்கு ஒரு நுட்பத் தீர்வினை உருவாக்கியுள்ளேன். இதனை பயனரின் common.js இல் இடுவதன் மூலம் அந்தப் பயனருக்குப் பேச்சுப் பக்கத்தின் கடைசிப் பகுதி முன்பக்கத்தில் காணக்கிடைக்கும். உள்நுழைந்தவுடன் அந்தச் செய்தி காட்டும், sitenotice போல வேண்டாம் என்றால் நீக்கிக் கொள்ளலாம். செய்தி அவரை அடைந்த பிறகு, அந்த நிரலினை நீக்கிக் கொள்ளலாம். இந்த யோசனை குறித்த கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம். சோதனையிட்டுப்பார்க்க எனது காமன்ஸ்.ஜேஎஸ் போல உங்கள் பக்கத்தில் importScript('User:Neechalkaran/talkboard.js'); என்று இட்டுக்கொள்ளலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 13:49, 14 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

  ஆதரவு - இது மிக நல்ல ஒரு முயற்சி. அண்மைய பரப்புரகளில் பேச்சுப்பக்கம் குறித்து நான் கூறிவருகிறேன். புதிய பயனர்களுக்குப் பேச்சுப்பக்கம் என்று ஒன்று இருப்பதே தெரியாது. அவர்கள் தவறு செய்யும்போது, அவற்றைத் திருத்துமாறோ அல்லது எச்சரிக்கைச் செய்தியோ பேச்சுப்பக்கத்தில் விடுக்கப்பட்டாலும் சிலவேளைகளில் அவர்கள் அவற்றைப்பற்றி அறியாமலே தொடர்ந்து அறியாமையால் தவறு செய்கின்றனர். இந்தப் பிரச்சனையை இது தீர்க்கும். இதனைச் செயற்படுத்தப் பேராதரவு வழங்குகிறேன். --சிவகோசரன் (பேச்சு) 13:16, 16 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
  ஆதரவு - எல்லா புதுப்பயனர்களுக்கும் தானியக்கமாக இதனைச் செய்யலாம். இதற்கான தொழில்நுட்பச் சாத்தியங்கள் குறித்து என் கருத்துகளை நீச்சல்காரனிடம் தெரிவித்து உள்ளேன். --இரவி (பேச்சு) 14:23, 18 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
  ஆதரவு-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:34, 19 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
  ஆதரவு - மிக நல்ல முயற்சி. கண்டிப்பாக செயல் வடிவம் கொடுக்கவும்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 16:04, 4 சனவரி 2020 (UTC)[பதிலளி]

கருத்து

தொகு

அனைத்துப் புதுப் பயனருக்கும் இடவேண்டிய தேவையிருப்பது தெரிகிறது. அனைவரது பக்கத்திற்கும் தனித்தனியாக இடுதல் பின்னர் நீக்குதல் என்பது என்பது ஒரு வழி. அல்லது பயனர் பக்கத்திற்குப் பதில் நேரடியாகவே விக்கியில் செயல்படுத்தித் தானாக உறுதிபடுத்தப்படாத + ஒரு தொகுப்பாவது செய்த பயனர்கள் அனைவருக்கும் இதனைச் செயல்படுத்தலாம் என்பது அடுத்த வழி. சாத்தியங்கள் குறித்தும் சோதித்துப் பார்க்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 06:23, 19 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

சிலர் பேச்சுப்பக்கத்தைப் பார்த்தார்களா இல்லையா என்பது கூடத் தெரிய வருவதில்லை.எந்த மறுமொழியும் இடுவதும் இல்லை. எனவே இது பொருந்துவதற்கான சாத்தியம் உள்ளது. செயல்படுத்திப் பார்த்து பின் நீக்கலாம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:34, 19 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவில் தமிழ் நாட்காட்டி

தொகு

பிற மொழிகள் போல் அல்லாமல் தமிழுக்குத் தனிக் கால அளவை உள்ளது, அது சர்வதேச முறைக்கு மாற்றாக மாதமும், ஆண்டுகளும் கொண்டுள்ளது. "2050 கார்த்திகை 8" என்று கொடுப்பதால் தமிழ் நாட்காட்டியின் பயன்பாடு அதிகரிக்கும். இதை விக்கிப்பீடியாவில் கொண்டு வரலாம் என்று பயனர் பிச்சைமுத்து ஒரு முன்வைப்பையும், ஏற்ற நிரலாக்கமும் செய்து கொடுத்துள்ளார். மொத்தமாக தமிழ் விக்கிப்பிடியாவில் இதனைச் செயல்படுத்தலாம் அல்லது விருப்பத்தேர்வில் ஒரு வசதியாகக் கொடுக்கலாம். அதில் முதல் பக்கத்தில் நாளிதழ்கள் போல காட்டலாம் அல்லது எல்லாப் பக்கத்திலும் பயனர் பெயர்க்கு அருகே சிறிய எழுத்தளவில் நாளைக் காட்டலாம் அல்லது வேறு இடத்தையும் பரிந்துரைக்கலாம். சில மேம்பாடுகளைச் சொல்லியுள்ளேன். விக்கிப்பீடியாவில் இதைப் பற்றி மற்றவர்களின் கருத்தை அறியத் தரலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 15:58, 24 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

[தாங்கள் கூறிய மாற்றங்களை] முடித்து உள்ளேன் தற்போது பாருங்கள்--Pitchaimuthu2050 (பேச்சு) 06:11, 26 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

மதுரையில் தொடர் தொகுப்பு நிகழ்வு

தொகு

வேங்கைத் திட்டப் பரப்புரையின் ஒரு பகுதியாகச் சென்னையை அடுத்து மதுரையில் தென்புலம் அறக்கட்டளையுடன் இணைந்து தொடர் தொகுப்பு நிகழ்வைத் திட்டமிட்டுள்ளோம். நவம்பர் 30 சனிக்கிழமையன்று மதுரை மன்னர் கல்லூரியில் காலை 10 முதல் 5 வரை தொடர் தொகுப்பு நடைபெறும். பயனர்கள் Mohammed Ammar, TNSE Mahalingam VNR & Neechalkaran கலந்து கொள்கிறோம். மதுரையைச் சுற்றியுள்ள தமிழ் விக்கிப்பீடியர் கலந்து கொள்ள வேண்டுகிறோம். போட்டியில் கலந்து கொள்ளும் ஆர்வமுள்ள புதியவர்களுக்காகவே இந்த வாய்ப்பு என்பதால் இத்தகவலை பரப்பிப் பலரைப் பங்கெடுக்க வைக்கலாம். இணைய இணைப்புள்ள மடிக்கணினியுடன் கலந்து கொள்ள வேண்டும். முன்பதிவுப் படிவம். -நீச்சல்காரன் (பேச்சு) 13:34, 25 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019

தொகு

வேங்கைத் திட்டம் 2.0 உடன் ஒருங்கிணைந்து பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் நடத்தப்படுகிறது. இதற்காக கடந்த ஆண்டின் பக்கத்தை நகலெடுத்து இந்தப் பக்கத்தை உருவாக்கியுள்ளேன். சரியாக அமைந்துள்ளதா என யாரேனும் சரிபார்த்து உதவவும். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:33, 25 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

Extension of Wikipedia Asian Month contest

தொகு

In consideration of a week-long internet block in Iran, Wikipedia Asian Month 2019 contest has been extended for a week past November. The articles submitted till 7th December 2019, 23:59 UTC will be accepted by the fountain tools of the participating wikis.

Please help us translate and spread this message in your local language.

Wikipedia Asian Month International Team

--MediaWiki message delivery (பேச்சு) 14:16, 27 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

WikiConference India 2020 - Community Engagement Survey

தொகு

குறிப்பு: தங்களால் இயன்றால் இந்த அறிவிப்பை மொழிபெயர்க்கவும்

This announcement is to invite all to participate in the Community Engagement Survey for WikiConference India 2020. The Community Engagement Survey is one of the key requirements for drafting the Conference & Event Grant application for the Wikimedia Foundation.

The survey will have questions regarding a few demographic details, your experience with Wikimedia, challenges and needs, and your expectations for WCI 2020. The responses will help us to form an initial idea of what is expected out of WCI 2020, and draft the grant application accordingly. Please note that this will not directly influence the specificities of the program, there will be a detailed survey to assess the program needs after funding.

Please fill the survey using the linked form. The survey will be open until 23:59 hrs of 22 December 2019.

--Kaartic (பேச்சு) 18:22, 10 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா பரப்புரைப்பணி

தொகு

கோயம்புத்தூரில் உள்ள சிறீ இராமகிருட்டிணா மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியாவும் கட்டற்றப்பண்பாடும் என்ற பயிலரங்கினை 11.12.2019 அன்று முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 4.30 வரை ஒருங்கிணைக்க உள்ளேன். வாய்ப்புள்ள கோவைப்பகுதி விக்கிப்பயனர்கள் பங்கேற்க விழைகிறேன்.--Thamizhpparithi Maari (பேச்சு) 19:06, 10 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

அருமையான முயற்சி வாழ்த்துகள்--Sgvijayakumar (பேச்சு)

திண்டுக்கல்லில் விக்கிப்பீடியா பயிற்சி

தொகு

திண்டுக்கல்லில் டிசம்பர் 19,20 ஆகிய நாட்களில் நடக்கவுள்ள ஒரு கணித்தமிழ் பயிற்சியில் பயிற்றுநர்களிலிருந்தால் தமிழ் விக்கிப்பீடியாவையும் ஒரு பகுதியாகச் சேர்த்துக் கொள்ள ஆர்வமாகவுள்ளனர். பயிற்சியளிக்க விருப்பமுள்ள விக்கிப்பீடியர்கள் விரைவாகத் தொடர்பு கொள்க. -நீச்சல்காரன் (பேச்சு) 07:59, 17 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

எவரும் முன்வரவில்லையெனில் நான் பயிற்சியளிக்கிறேன். --இரா. பாலாபேச்சு 08:43, 17 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]
இதுவரை எவரும் தொடர்பு கொள்ளாததாலும், இனிமேல் தொடர்பு கொண்டால் கால இடைவெளி குறைவாக இருப்பதாலும் என்னால் பயிற்சியளிக்க இயலாது. --இரா. பாலாபேச்சு 10:09, 18 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

[WikiConference India 2020] Invitation to participate in the Community Engagement Survey

தொகு

This is an invitation to participate in the Community Engagement Survey, which is one of the key requirements for drafting the Conference & Event Grant application for WikiConference India 2020 to the Wikimedia Foundation. The survey will have questions regarding a few demographic details, your experience with Wikimedia, challenges and needs, and your expectations for WCI 2020. The responses will help us to form an initial idea of what is expected out of WCI 2020, and draft the grant application accordingly. Please note that this will not directly influence the specificities of the program, there will be a detailed survey to assess the program needs post-funding decision.

MediaWiki message delivery (பேச்சு) 09:05, 18 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

Project Tiger updates - quality of articles

தொகு
Excuse us for writing in English, kindly translate the message if possible

Hello everyone,

 
tiger face

It has been around 70 days since Project Tiger 2.0 started and we are amazed by the enthusiasm and active participation being shown by all the communities. As much as we celebrate the numbers and statistics, we would like to reinstate that the quality of articles is what matters the most. Project Tiger does not encourage articles that do not have encyclopedic value. Hence we request participants to take care of the quality of the articles submitted. Because Wikipedia is not about winning, it is about users collectively building a reliable encyclopedia.

Many thanks and we hope to see the energy going! (on behalf of Project Tiger team)
sent using --MediaWiki message delivery (பேச்சு) 16:21, 19 திசம்பர் 2019 (UTC)
[பதிலளி]