தென்னிந்தியாவின் புவியியல்

தென்னிந்தியாவின் புவியியல் (Geography of South India) இந்தியாவின் தெற்கில் அமைந்த தென்னிந்தியா பல்வேறுபட்ட தட்பவெப்பம் மற்றும் நில அமைப்புகள் கொண்டது. தென்னிந்தியாவின் பெருநிலப்பரப்புகள் தக்காண பீடபூமி, மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர்களும் ஆகும்.

நாசாவின் செய்மதிப் படம், தென்னிந்தியா ஆண்டு 31 சனவரி 2003

எல்லைகள் தொகு

இந்தியாவில் தெற்கில் தலைகீழ் முக்கோண வடிவ அமைப்பில் அமைந்த தென்னிந்திய தீபகற்பத்தின் எல்லைகளாக கிழக்கில் வங்காள விரிகுடா, தெற்கில் இந்தியப் பெருங்கடல், மேற்கில் அரபுக் கடல், வடக்கில் விந்திய மலைத்தொடர்களும் எல்லைகளாக உள்ளது.

மலைத்தொடர்கள் தொகு

தென்னிந்தியாவின் மேற்கே உயரமான மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களும், கிழக்கே சற்று உயரம் குறைந்த கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களும் உள்ளது.

தக்காண பீடபூமி தொகு

சாத்பூரா மலைத்தொடர்களுக்கு தெற்கே அமைந்த தக்காண பீடபூமி தென்னிந்தியாவின் பெரும்பகுதிகளை கொண்டுள்ளது. தக்காண பீடபூமியின் மகாராட்டிரா மாநிலத்தின் கிழக்கில் பருத்தி அதிகம் விளையும் வறட்சி மிக்க விதர்பா மற்றும் மரத்வாடா பிரதேசங்கள் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களுக்கும், அரபுக் கடலுக்கும் இடையே மலபார் பிரதேசம் மற்றும் கொங்கண் மண்டலம் உள்ளது.

வடக்கிலிருந்து தெற்காக அமைந்த மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கிடையே மலைநாடு, மலபார் கடற்கரை, நீலகிரி, வயநாடு ஆனைமலை மற்றும் சத்தியமங்கலம் மலைக்காடுகள் உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் திருமலை, ஸ்ரீசைலம் போன்ற திருத்தலங்களும், நல்லமலா மலைக்காடுகளும் அமைந்துள்ளது.

தட்பவெப்பம் மற்றும் வானிலை தொகு

தென்னிந்தியா வெப்ப மண்டல பகுதியில் உள்ளது. கோடைக் காலத்தில் தென்னிந்தியாவில் 42 பாகை செல்சியஸ் வரையும், குளிர்காலத்தில் இரவில் அதிகபட்சமாக 10 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளது. தென்னிந்தியாவில் சூன் முதல் அக்டோபர் வரை தென்மேற்கு பருவ மழையும், தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை வடகிழக்கு பருவ மழையும் பொழிகிறது.

மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளும் தொகு

தென்னிந்தியாவில் தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற ஐந்து மாநிலங்களும், புதுச்சேரி மற்றும் இலட்சத்தீவுகள் எனும் இரண்டு ஒன்றியப் பகுதிகள் உள்ளது. தென்னிந்தியாவில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளுவம், குடகு போன்ற வளமையான மொழிகள் பேசப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் மற்றும் தக்காண பீடபூமியின் வடக்கில் அமைந்த மகாராட்டிரா மாநிலம் மற்றும் கோவா பகுதிகளை மேற்கு இந்தியாவில் சேர்க்கப்பட்டுள்ளது.

பிரதேசங்கள் தொகு

தென்னிந்தியாவின் புவியியல் வரலாறு மற்றும் பண்பாட்டு மரபு அடிப்படையிலும் பல்வேறு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்:

நீர் நிலைகள் தொகு

 
தென்னிந்தியாவின் ஆறுகள்

தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் தோன்றி, தக்காண பீடபூமியை கடந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் கோதாவரி ஆறு, கிருஷ்ணா ஆறு, துங்கபத்திரை ஆறு முக்கியமானதாகும். குடகு மலையில் தோன்றும் காவேரி ஆறு கர்நாடகாவிலும், தமிழ்நாட்டிலும் பாய்கிறது. வைகை ஆறு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் பாய்கிறது. தாமிரபரணி ஆறு திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பாய்கிறது.

காடுகளும் விலங்களும் தொகு

தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்கள் அடர்ந்த காடுகளுக்கும் மற்றும் பல்வேறு உயரினங்களுக்கும் உறைவிடமாக உள்ளது.[2] மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்கள் என்றும் பசுமை மாறா மழைக் காடுகளாக உள்ளது.[3] கிழக்கு தொடர்ச்சி மலைகளில் நல்லமலா மலைக்காடுகள் உள்ளது.

தேசியப் பூங்காக்களும் காப்பகங்களும் தொகு

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் காடுகளை காப்பதற்கு தேசியப் பூங்காக்களும், விலங்குகளைக் காப்பதற்கு காட்டுயிர் காப்பகங்களும் உள்ளது. அவைகளில் புகழ்பெற்றது பெரியாற்றுத் தேசியப் பூங்கா, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் # நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம், பந்திப்பூர் தேசியப் பூங்கா, நாகர்ஹோளே தேசிய பூங்கா, அமைதிப்பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா, வயநாடு வனவிலங்கு காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம், எரவிகுளம் தேசிய பூங்கா, சின்னார் கானுயிர்க் காப்பகம், பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம், இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா ஆகும். பறவையினங்களை காப்பதற்கு வேடந்தாங்கல், ரங்கன்திட்டு பறவைகள் காப்பகம், குமரகம் பறவைகள் சரணாலயம், பழவேற்காடு ஏரி, பிச்சாவரம், வேம்பநாட்டு ஏரி, அஷ்டமுடி ஏரிகள் உள்ளது.

சுற்றுலாத்தலங்கள் தொகு

  1. நீலகிரி
  2. கொடைக்கானல்
  3. குற்றாலம்
  4. வயநாடு
  5. தேக்கடி

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. The Deccan Plateau
  2. "Indo-Malayan Terrestrial Ecoregions". பார்க்கப்பட்ட நாள் 15 April 2006.
  3. "Biodiversity Hotspot - Western Ghats & Sri Lanka, Conservation International". Archived from the original on 4 May 2006. பார்க்கப்பட்ட நாள் 15 April 2006.