யாழ்ப்பாண தமிழர்

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் ஒரு குடாவாகும். இது நெடுந்தீவு, காரைநகர், மண்டைதீவு, நைநதீவு ,அணலைதீவு போண்ற தீவுகளயும் உள்ளடக்கியது. இதன் தைரயைமப்பு சுண்ணாம்புக்கற்பாறைகளைக் கொண்டது. கடற்கரை பிரதேசங்களில் முருகைக்கற்பாறைகள் காணப்படுவதோடு விவசாயத்திற்கு வளமான செம்மண்ணும் காணப்படுகிறது. இலங்கையில் ஏற்பட்ட உள் நாட்டு போரின் விளைவாக இவர்களில் அதிகமானோர் சர்வதேச அளவில் இடம்ெபயர்ந்துள்ளனர். ஐரோப்பா, இந்தியாஇந்தியா ,கனடா, அவுஸ்ரேலிய,ஆத்திரேலியா,ஆப்பிரிக்கா மற்றும் மேலசியா ஆகிய தேசங்களில் சிதறியுள்ளனர்.

நீண்ட காலமாக தமது அரசியல் உரிமைகளுக்காக போராடுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சைவர்களாக உள்ளனர். இராசதானிகள் காலத்தில் யாழ்பாண இராட்சியத்தின் கீழ் வாழ்ந்துள்ளனர். இவ் இராட்சியாத்தின் இறுதி மன்னனாக சங்கிளிய மன்னன் இருந்துள்ளான். யாழ்ப்பாண இராட்சியத்தின் தலைநகரமாக நல்லூர் இருந்துள்ளது.

1505ல் போத்துக்கீசர் மற்றும் 1638ல் ஒல்லாந்தர் ஆகியோரின் வருகையினால் புரொட்டஸ்தாந்தும் 1808ல் ஆங்கிலேயர் வருகையினால் கத்தோலிக்கமும் பரவியது. இதன் விளைவால் தற்போது யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள் கிறிஸ்தவர்கள் கூடுதலானோர் உள்ளனர். ஒல்லாந்தர் காலத்து கோட்டை யாழ் பண்ணை கடற்கரையை அன்மித்துள்ளது. ஒல்லாந்தர் காலத்தில் கணிசமான பாடசாலைகளும் தேவாலயங்களும் யாழ்பாணத்தில் கட்டப்பட்டன. ஆங்கிலேயர் காலத்தில் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் ஆறுமுகநாவலராலல் தமிழில் மொழிபெயர்கபட்டது.


சமூகஅமைப்பு

ஆரம்ப காலத்தில் இவர்களின் சமூக அமைப்பு சாதியின் அடிப்படையிலே இருந்துள்ளது. மேல் சாதிகளாக வேளாளர் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் வேளான்மை செய்பவர்களாகவும் சமூகத்தில் அதிக மதிப்பு மிக்கவர்களாகவும் செல்வந்தர்களாகவும்ரஇருந்தனர். இவர்களின் வீடுகளில் பண்ணையாட்களாக மேல்சாதி அல்லாத கோவியர் இருந்தனர்.

பழந் தமிழர்
யாழ்

கீழ்சாதிகள்

கீழ்சாதிகளான பள்ளர், பறையர், நளவர் , அம்பட்டர், வண்ணார் ஆகியோர் உள்ளனர். இவர்கள் வெள்ளாளருக்கு பண்னையை தாண்டிய வெளிவேலைகளை செய்பவர்களாக இருந்தனர்.பள்ளர் நளவர் கள் சீபுபவர்களாகவும் பறையர் துப்புரவு வேலை செய்பவர்களாகவும் இழவு வீடுகளிலும் கிராமியதெய்வ ஆலயங்களில் பறை எனும் வாத்தியம் வாசிப்பவர்களாகவும் உள்ளனர்.

அம்பட்டர் முடி வெட்டுதல் வண்ணார் துணிதுவைப்பவர்களாகவும் இருந்தனர்.1960களில் இந்து ஆலயங்களில் அனுமதிக்கப்படாமையினால் இவர்கள் ஆலயங்களில் புகு போராட்டங்களை நடாத்தினர். இதன் பின்னர் கீழ்சாதியினர் ஆலயங்களிற்குள் அனுமதிக்கப்பட்டனர் இக் காலத்தில் விரக்தியடைந்த சிலர் கிறிஸ்தவர்களாக மதம் மாறினர் மாறியவர்கள் வேதப்பள்ளர், வேதப் பறையர் எனவும் அழைக்கப்பட்டனர். கீழ் சாதியினர் மேல்சாதியினருடன் சம பந்திகளில் அனுமதிக்கப்படவில்லை ஆண்கள் மேல்சட்டை அணிவதும் தோலில்துண்டு போடுவதும் பெண்கள் ஜாக்கெட் சட்டை அணிவதற்கும் அனுமதிக்கவில்ைல. தற்போது இவர்கள் வெள்ளாளர் கோவியர்களுக்கு இனையாக சமுக அந்தஸ்தில் உயர்ந்துள்ளனர்.

மணியகாரர்

இவர்கள் வெள்ளாளரிலும் உயர்ந்த சாதியினராக இருந்துள்ளனர். அதிகமான நிலங்களையும் விவசாய காணிகளையும் வைத்திருந்த விவசாய நிலங்களை அதிகளவில் வெள்ளாளருக்கு குத்தகைகளுக்கு வழங்கியிருந்தனர். யாழ்பாணத்தில் உள்ள பெரும்பாலான இந்து ஆலயங்களிற்கும் இந்து பாடகாலைகளுக்கும் காணிகளை வழங்கியுள்ளனர்.ஆலயங்கள் பெரும்பாலானவற்றின் தர்மகர்தாவாக உள்ளனர். இது பரம்பரையாக நடைமுறையில் உள்ளது. தற்போது இவர்கள் யாழ்பாணத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே உள்ளனர்.

பிராமணர்இவர்கள் ஆலயங்களில் பூசகர்களாக உள்ளனர். தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது இங்கு இவர்களின் செல்வாக்கு இல்லையென்றே கூறலாம்

பண்டாரம்

இவர்கள் ஆலயங்களில் பிராமணர்களுக்கு உதவியாளராக இருக்கின்றனர்.

நட்டுவர்

இவர்கள் ஆலயங்களில் மேளம் நாதஸ்வரம் போண்ற இசைக் கருவிகளை வாசிப்பவர்களாகவுள்ளனர்.இவர்களும் பிராமணர் பண்டாரங்களை போன்றே சமூதாயம் சார்ந்த விடயங்களில் ஈடுபாடு குறைவானவர்கள.

பத்தர்

இவர்கள் நகைசெய்பவர்களாகவும் நகை வியாபாரிகளாகவும் உள்ளனர். இவர்களுடன் தச்சர் கொள்ளர் குயவர் முக்கியர் போன்ற சாதியினரும் உள்ளனர்.

கரையார்

இவர்கள் பெரும்பாலும் யாழ்பாயத்தின் கரையோர பிரதேசங்களில் செறிந்துள்ளனர். இவர்கள் அதிகமானோர் மீனவர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர்.

குறவர்

நாடோடிகளாக இருந்த இவர்கள் தமக்கென ஒரு அடையாளத்தையும் ஆக்கிகொள்ளவில்லை கைரேகை பார்து யோசியம் (குறி சொல்வோர்) சொல்வதை குல தொழிலாக செய்துவந்தனர் தற்போது இவர்களை யாழ்பாணத்தில் சிலரையே காணமுடிகிறது.

வீடு

ஆரம்ப கால இவர்களளின் வீடுகள் மண் குடிசைகளாகவே இருந்தன. இந்த வீடுகளின் சுவர்கள் களிமண் கற்களாலும் கூரை பின்னப்பட்ட தென்னோலைகள் மற்றும் பனை ஓலைகளால் வேயப்பட்டிருக்கும். நிலம் சாணகத்தால் மெழுகப்பட்டிருக்கும் வாஸ்து பிரகாரம் எதுவும் பார்பதில்லை தமது வசதிக்கேற்றால்போல் அமைத்தனர்.ஒரு காணிக்குள் 3 குடிசைகள் தனித்தனியாக இருக்கும் பெரியவீடு குசினி தலைவாசல் என இருக்கும் பெரியவீட்டினுள் கோற்காரி அமைந்திருக்கும. இது 4 மரத்தூன்களால் செய்யப்பட்டு வீட்டினுள் ஒருபுறம் வைக்கப்பட்டிருக்கும.இது தற்காலத்தின் அலுமாரிகள் போன்று பயன்படுத்தப்பட்டது.

காணியின் ஒரு பக்கத்தில் புகையிலைக்குடில் அமைந்திருக்கும் புகையிலைகளை வாட்டுவதற்காக இது பயன்படுத்தப்பட்டது. புகையிலைகுடில் மற்றும் கோற்காலிகள் வைத்திருந்தவர்களும் ஒரு அந்தஸ்து உடையவர்களாக கருதப்பட்டனர். இவை பெரும்பாலும் வெள்ளாளரிடமே இருந்தன.

தாவரங்கள்

பனை, தென்னை, பூவரசு ,வேம்பு, பலா, மா, முள்முருங்கை, கிளுவை ,வாழை, முருங்கை, கற்றாளை, ஈச்சை, ஆமணக்கு போண்ற தாவரங்கள் குறிப்பிடத்தக்கவை வேம்பு மா போண்றவை தளபாடங்கள் தயாரிப்பதற்கு பயன்படுகின்றன. முள்முருங்கை திருமண சடங்கின்போது முக்கிய இடம்பெறுகிறது வேப்ப மரத்தினால்செய்யப்பட்ட பொருட்களை சமயலறையிலும் உணவறையிலும் பயன்படுத்துவதில்லை

ஆமணக்கு, கற்றாைளை, துளசி போண்ற மருத்துவ குணமுள்ள தாவரங்களும் உள்ளன.

பனை

யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பிரதேசங்கள் பனந்தோப்புக்களாக உள்ளன. யாழ்ப்பாணத்தின் அடையாளங்களுள் பனையும் ஒன்று போர்காலங்களில் ஏராளமான பனைகள் அழிந்துள்ளன. இங்கு சிறுகைத்தொழில்களில் பனம்பொருள் உற்பத்தி முக்கியம் பெறுகிறது.

ஆயுதப்போராட்டம்

1970 களின் பின்னர் அகிம்சை போராட்டங்களில் நம்பிக்கை இழந்த யாழப்பாண இளைஞர்கள் ஆயுதம் ஏந்த தொடங்கினர் ரெலோ, புளொட், ஈபி ஆர்எல்எவ, தமிழீழ விடுதலைபுலிகள் ஆகிய போராட்ட இயக்கங்கள் போராடத் தொடங்கின 1986 வரை ஏனைய இயக்கங்கள் ஆயுதப்போராட்டத்தை நடத்தினர். 2009 வரை புலிகள் இயக்கம் போராட்டத்தை தொடர்ந்தது. இக் காலப்பகுதியிலும் அகிம்சாவழி போராட்டத்தில் தியாகிதிலீபன் மற்றும் அன்னைபூபதி ஆகியோர் ஈடுபட்டனர்.

கல்வி

யாழ்ப்பாணபல்கலைக்கழகம் 01 தை 1979 ஆரம்பிக்கப்பட்டது. பல்கலைகழகத்திற்கான காணி சேர் ெபான் இராமநாதன் அவர்களால் வழங்கப்பட்டது.இதன் முதல் துனைவேந்தராக டாக்டர் கே.கைலாசபதி அவர்கள் இருந்துள்ளார்.ஆரம்ப காலத்தில் பல்கலைகழகங்களை அதிகளவில் நிரப்பியவர்கள் யாழ்பாண மாணவர்கள் பின்னர் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட விகிதாசாரமுறையிலான மாணவர் சேர்கையினால் யாழ் மாணவர்களின் அளவு குறையப்பெற்றது. பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளிற்கான மாணவர்களில் பெரும்பாலானோர் வடமராட்சி பிரதேசத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர்.

யாழ்ப்பாண பல்கைைல கழகம்
யாழ்

யாழ்ப்பாணநூலகம்

யாழ்பாணத்தின் மிகப்பெரிய அடையாளமாக யாழ் நூலகம் உள்ளது. யாழ் நகரிலிருந்து 1 கீ மீ தூரத்திற்குள் அமைந்துள்ளது. 1933ல் கட்டுமாணபணிகள் ஆரம்பிக்கப்பட்டன. தனியார் மூலம் ஆரம்பிக்கப்பட்டாலும் பின்னர் உளளுர் மக்களின் ஆதரவுடன் 1959ல் யாழ் மேயர் அல்ப்றெட் துரையப்பா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.1981 மே 31 ம் திகதி யாழ்ப்பாணம் அப்போதைய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னனி ஆட்சியிலிருந்தபோது இலங்கை இராணுவம் இலங்கை பொலிஸ் ஆகியோரால் எரிக்கப்பட்டது. இதன்போது97000 புத்தகங்கள் எரிந்து நாசமாகின. இச் சம்பவம் இடம்பெறும்போது தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய நூலகமாக விளங்கியது.

                     விவசாயம்

வடகீழ்பருவக்காற்றின் மூலம் கிடைக்கின்ற மழையை நம்பியே நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. மிளகாய், திராட்சை, வெங்காயம், தக்காளி போன்ற பயிர்செய்கை அதிகம் இடம்பெறுகிறது. புகையிலை செய்கைக்கு நன்கு பெயர் போன இடமாகவும் திகழ்கிறது. இங்கு வாய்க்கால் நீர்பாசனமும் தூறல்நீர்பாசனமும் அதிகம் இடம்பெறுகிறது. இங்கு கிடைக்கின்ற நிலத்தடிநீரின்மூலம் விவசாயம் செய்யப்படுவதோடு பெரும்பாலான மக்களின் குடிநீர் தேவையும் பூர்தி செய்கிறது. அன்மைக்காலமாக இந்த நீர்மாசடைந்து வருவதனால் வலிகாமபிரதேச மக்களுக்கான நீர் விநியோகம் அரசால் செய்யப்படுகிறது.தற்போதும் மாடுகள் மூலம் உழவு மேற்கொள்ளப்படுகின்றது.

சூடுமிதித்தல்

மாடுகள் மூல் மிதித்து நெல்மணிகள் பெறப்பட்டன. கால் நடைகளின் உணவுத் தேவயான வைக்கோல்களும் இம் முறையால் கிடைக்கப்பெற்றது.

   துலா மிதித்தல்

கிணற்றிலிருந்து நீரைப்பெறுவதற்கு துலா மிதிக்கப்படும். பனை மரத்தால் செய்யப்பட்ட துலாவின் நுனிப்பகுதியில் கட்டப்பட்ட கையிற்றில் பட்டை தொங்கவிடப்பட்டிருக்கும். துலாவை தாங்குவதற்கு இரு பக்கங்களுக்கு பொறுப்புகள் தாங்கிக்கொள்ளும் துலாவின் அடிப்பகுதியின் மேல் ஒருவர் அல்லது இருவர் நின்று முன்ேநாக்கி நடக்கும்போது பட்டையாள் நீர் கோழப்படும் பின்னோக்கி நகரும்போது பட்டை மேல் நோக்கி வரும் துலாவின் நுனிபகுதியில் தரையில் உள்ளவர் பட்டையை எடுத்து வாய்க்காலில் நீரை ஊற்றுவார் பெரும்பாலும் விவசாயதேவைக்கே இது பயன்பட்டது.

களைபிடுங்குதல்

வயல்களில் நெல்லுக்கு இனையாக வளர்கின்ற புற்களை கைகளால் எடுக்கிக்ற இந்த முறை தற்போது குறைவடைந்து விட்டது.

தற்போது களைநாசினிகள் மூலம் களைகள் அகற்றப்படுகின்றன இம் முறைமையால் நிலம் மற்றும் நீர் மாசடைவு அதிகரிக்கின்றது.

இங்கு காணப்படுகின்ற சிறுகுளங்கள் மற்றும் குட்டைகள் சிறு கடல்நீரேரிகள் மூலம் கால்நடைகளின் குடிநீர்தேவை பூர்தி செய்யப்படுகிறது.கால்நடை வளர்பு முக்கியத்துவம் பெறுகிறது. அதிகளவான ஆடு வளர்பு இறைச்சி தேவைக்காக வளர்கப்படுவதோடு மேச்சல் ஆடுகளும் வளர்கப்படுகின்றன. பால் தேவைக்காக மாடுகள் வளர்கப்படுவதோடு உழவுக்காகவும் மாடுகள் வளர்கப்படுகின்றன.


வேள்வி

யாழ்பாணத்தின் அநேக ஊர்களில் இந்த வழிபாட்டுமுறை உள்ளது. சுண்ணாகம் கவணாவத்தை வேள்விக்கு பெயர்போண ஒரு ஆலயமாக விளங்கியது. யாழ்பாணத்தின் அனேக ஊர்களில் இருந்து கிடாய்கள் கொண்டுவரப்படும் இந்த வேள்வியின்போது பெரும்பாலான கிடாய் இனங்களை காணமுடியும்.இது இலங்கை அரசாங்கத்தால் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.

இலக்கியன்
ேவள்வி

சனசமூகநிலையங்கள்

ஒல்லாந்தர் காலத்தில் தமது ஆட்சியில் மக்களின் எண்ணங்களை அறிவதற்காய் உருவாக்கப்பட்ட ஒரு சமூக நிலையம் பிற்காலத்தில் இதனை மக்கள் தாமே நடைமுறைபடுத்தினர் .பல சனசமூக நிலையங்களை மக்கலே ஆரம்பித்தனர். இவற்றின் ஊடாக மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள் சமூக பொருளாதார வளர்சிக்கு பெரிதும் பங்காற்றி வருகின்றன. இந் நிைலயங்கள் மூலம் வருடந்தோறும் விளையாட்டு நிகழ்வுகள் கலை கலாச்சார நிகழ்வுகளை நடாத்தி ஊக்குவிக்கப்படுகின்றது. இவர்களுக்கான நிதிகள் பெரும்பாலும் புலம்பெயர் வாழ் அங்கத்தவர்களால் வழங்கப்படுகிறது.

ஆலயங்கள்

கீரிமலை நகுலேச்சரம் நயினை நாகபூசனிஅம்மன், நல்லூர் முருகன், செல்வசந்நிதிமுருகன், வல்லிபுரத்துஆழ்வார், பண்றிதலைச்சிஅம்மன், காரைநகர் ஈழத்துசிதம்பரம் ஆகியவை வரலாற்று புகழ்பெற்ற திருத்தலங்கலாகும். போர்க் காலத்தில் செல்வசந்நிதி நயினை நாகபூசனி அம்மன் ஆகியவற்றின் தேர்கள் இலங்கை இரானுவத்தால் எரிக்கப்பட்டன.

படிமம்:நல்லு+ர் ஆலயம்.jpg

உணவுப்பழக்கவழக்கம்

பிரதான உணவாக சோறுள்ளது. இடியப்பம் பிட்டு இட்லி றொட்டி வடை தோசை போன்ற உணவுகளை உண்கிறார்கள் சாப்பிடும்போது தேனீர் அருந்துவது இவர்களின் வித்தியாசமான உணவுப்பழக்கமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமைகளில் மாமிச உணவுகளை தவிர்கின்றனர் அத்தோடு வடமராட்சி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஞாயிற்று கிழமைகளில் மாமிசத்தை தவிர்கின்றனர் இந்த நாட்களை தமது இறைவனிற்காக ஒதுக்குகின்றனர்.

குழல் பிட்டு
யாழ்ப்பாணம்

குடும்பஅமைப்பு

கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த இவர்கள் தற்போது அதிகமாக தனிக் குடும்பங்களாகவே வாழ்கின்றனர். இதற்கு இங்கு இடமடபெற்ற உள்நாட்டு போரும் சர்வதேச இடப்பெயர்வுகளும் காரணமாகும். உறவில் திருமணம் செய்பவர்கள் மாமன் மகளை மணம் செய்வர் தற்போது கணிசமான சாதி மாற்றுதிருமணங்களும் நடைபெறுகின்றன. சொத்துக்கு வாரிசு பெண்பிள்ளைகளே சில குடுப்பங்களில் மூத்த மகன் இருப்பார்

விளையாட்டு பொழுதுபோக்கு

வடக்கின் மாபெரும் போரென வர்னிக்கப்படும் யாழ்மத்தியகல்லூரி பரியோவான்கல்லூரிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி நூற்றாண்டு பழமை வாய்ந்ததாக உள்ளது.தேசியரீதியாக இடம்பெறும் தடகளபோட்டிகளில் யாழ் அருனோதயாகல்லூர கணிசமான பங்களிப்பு செய்கிறது. இவர்களின் பாரம்பரிய விளையாட்டாக கிளித்தட்டு உள்ளது ஏனைய சர்வதேச விளையாட்டுக்களுக்கு இனையாக இவ் விைளயாட்டு ரசிக்கப்படுகிறது.மாட்டுவண்டிச்சவாரி பண்டிகை காலங்களில் சிறப்பாக நடைபெறுகிறது. நீர்வேலி மாட்டுவண்டிச்சவாரித்திடல் குறிப்பிடதக்கது.

பட்டம்விடுதல்

அதிகமாக பண்டிகை காலங்களில் பட்டம் விடும் போட்டிகள் நடைபெறுகின்றன. அதிகளவில் வடமராட்சி பிரதேசத்தில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.

தென்னிந்திய சினிமா தென்னிந்திய திரையிசை பாடல்கள் கர்நாடகசங்கீதம்ஆகியவற்றின் செல்வாக்கு மிகுந்துள்ளது. இன்றைய நாட்களில் இங்கு 8 திரையரங்குகள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:இலக்கியன்&oldid=2413149" இலிருந்து மீள்விக்கப்பட்டது