பயனர் பேச்சு:Inbamkumar86/தொகுப்பு01
வாருங்கள், Inbamkumar86/தொகுப்பு01!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--சிவக்குமார் \பேச்சு 18:41, 10 ஆகஸ்ட் 2009 (UTC)
பகுப்புகள்
தொகுதமிழீழம் என்ற பகுப்பு ஏற்கனவே உள்ளது. எனவே ஈழம் என்ற தனிப்பகுப்பு தேவையில்லை. அதனை நீக்கியுள்ளேன்.--Kanags \பேச்சு 12:02, 11 ஆகஸ்ட் 2009 (UTC)
மகிழ்ச்சி
தொகுதங்களுடைய துடிப்பான பங்களிப்பைக் காண மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து பங்களியுங்கள்.--சிவக்குமார் \பேச்சு 19:00, 11 ஆகஸ்ட் 2009 (UTC)
நன்றி !
2010 செயற்திட்டம்
தொகுநாம் ஒவ்வொரு ஆண்டும், இறுதியில் அடுத்த ஆண்டு தொடர்பாக ஒரு திட்டமிடல் செய்வோம். 2010 இல் தமிழ் விக்கிப்பீடியாவின், தமிழ் விக்கித் திட்டங்களில் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான உங்கள் எண்ணக்கருக்களை பகிர்ந்தால் உதவியாக இருக்கும். நன்றி.
- விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
- விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
--Natkeeran 01:39, 30 டிசம்பர் 2009 (UTC)
நாமகிரிப் பேட்டை
தொகுஅவற்றை நீக்கத் தேவையில்லை. வழிமாற்றியிருக்கிறேன். வழிமாற்றுகள் இருப்பதில் தவறில்லை. அவை இருப்பதால் எதிர்காலத்தில் வேறு எவரும் புதிதாக அத்தலைப்பில் எழுத மாட்டார்கள்:).--Kanags \பேச்சு 10:04, 31 டிசம்பர் 2009 (UTC)
2000கள் தமிழர் கண்ணோட்டத்தில்
தொகுAlso see: 2000கள் தமிழர் கண்ணோட்டத்தில்
வேண்டுகோள்
தொகுஇராஜ்குமார், நீங்கள் மிகவும் உற்சாகமாக தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்புச் செய்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்தும் முனைப்பாகத் த.வி.க்கு நீங்கள் பங்களிப்புச் செய்ய வேண்டும். ஒரு சிறிய வேண்டுகோள். "படம்பிடி கருவி" என்னும் கட்டுரையின் தலைப்பை நீங்கள் "நிழற்பட ஒளிவாங்கி"என மாற்றியிருப்பதைப் பார்த்தேன். தலைப்புக்களை மாற்ற விரும்புவர்கள் மாற்றுவதற்கு முன்னர் உரையாடல் பக்கத்தில் கலந்துரையாடிவிட்டு மாற்றுவது தான் த.வி.யின் மரபு. தயவு செய்து இம் முறையைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். மயூரநாதன் 16:43, 3 ஜனவரி 2010 (UTC)
ஆடி
தொகுஇயற்பியலில் ஆடி என்பது mirror ஐக் குறிக்கும். plane mirror தளவாடி, convex mirror குவிவாடி, concave mirror குழிவாடி என்போம். ஈழத்தில் மட்டும் தான் இச்சொற்கள் உபயோகத்தில் உள்ளன போற் தெரிகிறது. தமிழ்நாட்டில் இவற்றை எப்படிச் சொல்கிறீர்கள்?--Kanags \பேச்சு 11:00, 4 ஜனவரி 2010 (UTC)
- தமிழகத்தில் mirror என்பது கண்ணாடியையும், lens என்ற சொல் ஆடியையும் குறிக்கின்றனர். வில்லை என்று சொல், பொதுவான ஒரு துண்டு(சிறுபகுதி) என்ற பொருளில் பயனாகிறது. குவியாடி, குழியாடி(concave lens) த* உழவன் 05:14, 9 ஜனவரி 2010 (UTC)
- தமிழ்நாட்டு அரசு பாடப் புத்தகங்களில்
- mirror = ஆடி
- lens = லென்சு (அ) வில்லை
- plane mirror = சமதள ஆடி (அ) தள ஆடி
- concave mirror = குழியாடி; convex mirror = குவியாடி
- concave lens = குழி லென்சு (அ) குழி வில்லை; convex lens = குவி லென்சு (அ) குவி வில்லை. -- பரிதிமதி 11:31, 9 சனவரி 2010 (இந்திய நேரம்)
- நானும் பாடப் புத்தகங்களில் தேடினேன் . அதிக நேரங்கள் செலவிடாத காரணங்களால் என்னால் கண்டறிய முடியவில்லை . இந்த தலைப்பில் கட்டுரை தொகுக்கலாம் என்று தான் இந்த பேச்சை தொடங்கினேன் . பரிதிமதி அவர்கள் எந்த வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்து எடுத்தார்கள் என்று சொன்னால் உதவியாக இருக்கும் . யாரேனும் ஆடி என்ற தலைப்பில் கட்டுரை தொடங்கினால் நானும் சேர்ந்து பங்களிக்க விருப்பம் . - இராஜ்குமார் 13:16 , ஜனவரி 2010 ரியாத்
சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்
தொகுவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:37, 18 பெப்ரவரி 2010 (UTC)
நன்றி!!
தொகுமதிப்பிற்குரிய நண்பர் திரு.இராஜ்குமார் அவர்களுக்கு நேச வணக்கம்!
UTC பற்றிய தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி!!--இ.பு.ஞானப்பிரகாசன் 4:50pm, 29 மார்ச் 2010 (IST)
ஒளியிழை
தொகுஅருமையாக வளர்த்து வருகின்றீர்கள். பாராட்டுகள். Core என்பதற்கு அச்சுள் எனலாம். Cladding என்பதற்கு உறை என்றே சொல்லலாம். ஒளியிழை அல்லது ஒளிநாரில், ஒளி செல்லும் அச்சுப்பகுதியை அச்சுள் என்றும், ஒளி நாரில் இருந்து அல்லது ஒளி இழையில் இருந்து ஒளி வெளியேறிவிடாமல் இருக்க அச்சுள்ளைச் சுற்றி ஒருகுறிபிட்ட பண்பு கொண்ட உறைப்பகுதி இருக்கும். இந்த உறைப்பகுதியாய் அமைந்துள்ள பொருளின் ஒளிவிலகெண் (refractive index) பண்பால் அச்சுள்ளில் இருந்து விலகும் ஒளி முற்றுமாய் உள்முகமாய் எதிருமாறு (முற்றுள்ளுறு விலக்கம்/முறிவு) அமைக்கப்பட்டிருக்கும். எனவே அச்சுள், உறை ஆகிய இரண்டு சொற்களும் இப்போதைக்குப் பயன்படுத்தலாம் என நினைக்கின்றேன்.--செல்வா 17:11, 31 மார்ச் 2010 (UTC)
ஒளிவிலகல் குறிப்பெண்/ஒளிவிலகுக் குறிப்பெண்/விலகுசுட்டெண் என்பனவற்றில் ஒன்றை ஆளலாம். பாடப்புட்த்தகங்களில் (தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா) என்ன்ன கொடுத்துள்ளார்கள் என்று பார்த்து ஒப்பிட்டபிறகு மாற்றத்தேவை இருந்தால் கலந்து பேசி முடிவெடுக்கலாம் என நினைக்கின்றேன்.--செல்வா 19:25, 31 மார்ச் 2010 (UTC)
சிறு தொகுப்பு
தொகுபகுப்பு சேர்த்தல் போன்ற ஒரே மாதிரியான சிறிய தொகுப்புகளைச் செய்யும் போது, சேமிக்கும் முன் "இது ஒரு சிறு தொகுப்பு" என்ற பெட்டியைத் தெரிவு செய்யலாமே? இதன் மூலம் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் நெரிசல் குறையும். நன்றி--ரவி 06:04, 1 ஏப்ரல் 2010 (UTC)
விக்கிநூல்
தொகுவிக்கிநூல் மற்றும் விக்கிமூலம் விக்கிப்பீடியாவின் சகோதரத் திட்டங்களே. விக்கிப்பீடியாவில் இருந்து சில பகுதிகளை தாராளமாக அங்கு தரலாம். விக்கிப்பீடியா கட்டுரைக்கு பின்வருமாறு உள்ளிணைப்பும் கொடுக்கலாம்: [[w:கட்டுரைத் தலைப்பு|கட்டுரைத் தலைப்பு]].--Kanags \உரையாடுக 11:15, 4 ஏப்ரல் 2010 (UTC)
கையொப்பங்களில் இணைப்பு
தொகுஉங்களின் விருப்பத் தேர்வுகளைப் [2] பாருங்கள்.--Kanags \உரையாடுக 11:21, 5 ஏப்ரல் 2010 (UTC)
- நன்றி . இப்பொழுது வருகிறது -- இராஜ்குமார் 11:25, 5 ஏப்ரல் 2010 (UTC).
கருத்துக்கு நன்றி
தொகுபேச்சு:வொக்கலிகர் பக்கத்தில் தங்கள் கருத்து கண்டேன். மிக்க மகிழ்ச்சி. வரலாற்றுச் செய்திகள் அல்லது ஆதாரப்பூர்வமான செய்திகளாக இருந்தால் தாங்கள் குறிப்பிட்டபடி அந்த இடத்தில் மேற்கோள்கள் தேவை (citation needed) என்று குறிப்பிட்டிருக்கலாம். தேவையற்ற தனிப்பட்ட நபர்கள் செய்திகளைப் பதிவிட்டதை வேறு யாராவது நீக்கம் செய்திருக்கலாம். முடியாத நிலையில் என்னால் நீக்கப்பட்டது. இதுபோன்ற சிலரின் செயல்களால் பிற கட்டுரைகளிலும் இது போன்ற தனிநபர் செய்திகள் அதிகமாகி விடும் என்பதால் மட்டுமே நீக்கப்பட்டுள்ளது. தாங்கள் அக்கட்டுரையின் வரலாறு பகுதியை முழுவதுமாகப் பார்த்தால் தங்களுக்குப் புரியும். பேச்சுப் பக்கத்தில் அவருடைய கடிதங்களே அவருடைய தனிப்பட்ட செயல்பாட்டைத் தெரிவிப்பதாக இருப்பதை தாங்கள் அறிந்து கொள்ள முடியும். மேலும் அவருடைய இயலாமையையும் அறிய முடியும். இவர்களைப் போன்றவர்களால் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு எவ்வித நலனுமிருக்கப் போவதில்லை... தங்கள் கருத்துக்கு நன்றி.--Theni.M.Subramani 16:06, 5 ஏப்ரல் 2010 (UTC)
உங்கள் கேள்விகள்
தொகுகேள்விகள் இருந்தால் கட்டாயம் கேளுங்கள். யாருக்கு நேரம் இருக்கிறதோ அவர்கள் கட்டாயம் மறுமொழி தருவர். என் பேச்சுப் பக்கத்தில் உங்கள் நன்றியைத் தெரிவித்து இருந்தீர்கள். நான் செய்தது ஒன்றும் பெரிதைல்லை ஐயா. நீங்கள் மின்னழுத்தமானி போன்ற கட்டுரைகள் எழுதுகின்றீர்களே அதுதான் ஐயா அருமை. --செல்வா 17:38, 10 ஏப்ரல் 2010 (UTC)
பாராட்டு
தொகுதங்கள் தொடர் பங்களிப்புகள், கட்டுரைத் தெரிவுகள் அருமை. நன்றி--ரவி 03:48, 12 ஏப்ரல் 2010 (UTC)
விக்சனரி பங்களிப்பு
தொகுInbamkumar86! உங்கள் தொடர்ந்த சீரிய நேர்த்தியான பங்களிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. உங்களுக்கு ஆர்வம் இருந்தால் தமிழ் விக்சனரியிலும் உங்கள் பங்களிப்புகளைச் செய்ய அழைக்கின்றேன். இதுவும் ஒரு முக்கியமான தளமே. [3] --பரிதிமதி 03:31, 17 ஏப்ரல் 2010 (UTC)
- நன்றி Inbamkumar86! விக்சனரி உங்களை வரவேற்கிறது.--பரிதிமதி 16:09, 17 ஏப்ரல் 2010 (UTC)
முதற்பக்க அறிமுகம்
தொகுவணக்கம் இராஜ்குமார். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/இராஜ்குமார் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி--ரவி 10:52, 15 மே 2010 (UTC)
- வணக்கங்க. அடுத்த இரு வாரங்களுக்கு உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். நன்றி--இரவி 04:41, 12 அக்டோபர் 2010 (UTC)
வார்ப்புரு அமைத்தல்
தொகுராஜ்குமார், வார்ப்புருக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை. எப்படியான வார்ப்புரு எந்தக் கட்டுரைக்கு அமைக்கவிருக்கிறீர்கள் என்பதைத் தெரிவித்தீர்களானால் உதவ முடியும்.--Kanags \உரையாடுக 10:35, 31 ஜூலை 2010 (UTC)
- நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது. எனக்கு ஒரு வார்ப்புருவை வடிவமைக்க கற்று தர தேவை இல்லை. ஒரு வார்ப்புரு பக்கத்தை எப்படி உருவாக்குவது. இதை கட்டுரை அப்படி தொகுக்கீர்களா? அல்லது தனியாக ஒரு பக்கத்தை உருவாக்கி அதனை கட்டுரையில் செர்க்குரீர்களா ? இதனை அறிந்தால் தற்போது உதவியா இருக்கும். --இராஜ்குமார் 10:45, 31 ஜூலை 2010 (UTC)
- இராச்குமார், வார்ப்புரு:என்வார்ப்புருப்பெயர் என்று ஒரு பக்கம் தொடங்கி அதில் தேவையான விக்கி நிரல்மொழிகள் அல்லது விக்கிப்பக்கம் போன்ற ஒன்றை உருவாக்கினால் அப்பெயரில் (இந்த எடுத்துக்காட்டில் என்வார்ப்புருப்பெயர்) உள்ள வார்ப்புரு உருவாகிவிடும். பிறகு எங்கு (எந்த விக்கிப்பக்கத்தில்) வேண்டுமோ அங்கு உள்ளே{{என்வார்ப்புருப்பெயர்}} என்று இட்டீர்கள் என்றால் நீங்கள் முன்னே உருவாக்கிய வார்ப்புருவில் உள்ள உள்ளடக்கத்துக்கு ஏற்றவாறு இந்தப் புதிய பக்கத்தில் பதிவாகும். இது பற்றி உதவிப் பக்கத்தில் குறிப்புகள் இருக்கும் (இருக்கவேண்டும்).--செல்வா 14:39, 31 ஜூலை 2010 (UTC)
விளக்கு பற்றிய கேள்வி
தொகுநீங்கள் என் பேச்சுப் பக்கத்தில் ஒரு விளக்கு பற்றிக் கேட்டிருந்ததற்கு அங்கு மறுமொழி தந்திருக்கின்றேன்.--செல்வா 13:08, 31 ஜூலை 2010 (UTC)
ஆர்வத்துக்கு நன்றி நண்பரே!
தொகுஅன்பு வணக்கம் இராஜ்குமார்!நான் இதுவரை ஓரெழுத்தொருமொழி என்ற ஒரு கட்டுரைதான் எழுதியிருக்கிறேன். ஆனால் பல கட்டுரைகளைத் திருத்தியும் மேம்படுத்தியும் இருக்கிறேன். (எ.டு: பின்னம், பாலகுமாரன், சுஜாதா போன்ற சில கட்டுரைகளின் வரலாற்றைப் பாருங்கள்!) இப்பொழுதுக்கு நபர்கள் தலைப்பில் நான் ஆர்வம் காட்டி அதை மேம்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதாவது மாபெரும் தமிழ்ப் படைப்பாளிகள் பற்றிய விக்கிப்பீடியாவின் கட்டுரைகளில் அவர்தம் படைப்புகளின் பெயர்களைப் பதிவேற்றி வருகிறேன். மேம்படுத்தல் பணிகளே நிறைய இருப்பதால் கட்டுரைகள் எழுதுவது தாமதமாகிறது. விரைவில் நான் படித்த தமிழ் இலக்கிய நூல்கள், நான் கண்டு களித்த தமிழ்த் திரைப்படங்கள், நான் அறிந்த தமிழ்ப் பிரபலங்கள் பற்றிய கட்டுரைகள் பலவற்றை எழுதவிருக்கிறேன். 'ஆலமரத்தடி' யில் நீங்கள் பதிலிட்டமைக்கும் என் மீதான உங்கள் ஆர்வத்துக்கும் நன்றிகள்!!
உங்கள் அன்பன்--இ.பு.ஞானப்பிரகாசன் 08:17, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
சரி!
தொகுசரி நண்பரே!--இ.பு.ஞானப்பிரகாசன் 09:53, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி இராஜ்குமார்! கண்டிப்பாக த.வி-க்கு நான் பல சிறப்புகளைத் தேடித் தருவேன். நன்றி! வணக்கம்!
உங்கள் அன்புள்ள--இ.பு.ஞானப்பிரகாசன் 10:19, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
விக்கி மாரத்தான்
தொகுவிக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:24, 27 அக்டோபர் 2010 (UTC)
விக்கி மாரத்தான்
தொகுநினைவூட்டல்: இன்று விக்கி மாரத்தான் :) --இரவி 09:38, 14 நவம்பர் 2010 (UTC)
மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்
தொகுவணக்கம் ராஜ்குமார். நலமா? கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா? நன்றி--இரவி 13:21, 2 மே 2011 (UTC)
பங்களிப்பு வேண்டுகோள்
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:09, 21 சூலை 2011 (UTC)
புறக்கோள்
தொகுராஜ்குமார், கெப்லர்-16பி கட்டுரையை மேம்படுத்தியமைக்கு நன்றிகள்.--Kanags \உரையாடுக 00:58, 17 செப்டெம்பர் 2011 (UTC)
- ஒரு கட்டுரையை ஒருவர் மட்டுமே எழுதாமல் பலர் எழுதினால் நன்றாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். அப்பொழுது தான் தமிழ் விக்கி நன்கு விரிவடையும்.--இராஜ்குமார் 05:28, 17 செப்டெம்பர் 2011 (UTC)
நரையம் வழு
தொகுஉங்கள் வழு எனக்கு சரியாக புரியவில்லை. விக்கிப்பீடியா:தமிழ்த்_தட்டச்சு/நரையம் இங்கு மறுபடியும் சரிபாக்க முடியுமா ? நன்றி ஸ்ரீகாந்த் 17:33, 23 செப்டெம்பர் 2011 (UTC)
- இவ்வழு நீங்கியது. குறிப்பினை அப்பக்கத்திலே பதிந்துள்ளேன். நன்றி ஸ்ரீகாந்த். --இராஜ்குமார் 18:42, 23 செப்டெம்பர் 2011 (UTC)
உங்களுக்கு தெரியுமா திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த கெப்லர்-16பி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஜனவரி 25, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த தொடுதிரை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் 18 சூலை, 2012 அன்று வெளியானது. |
நலமா?
தொகுவணக்கம், Inbamkumar86/தொகுப்பு01! உங்களைத் தமிழ் விக்கிப்பீடியா பக்கம் நீண்ட நாட்களாகக் காணவில்லையே?! நலமாக உள்ளீர்களா? தற்போது, நாம் 1,70,409 கட்டுரைகளைக் கொண்டு நன்றாக வளர்ந்து வருகிறோம். நீங்களும் அவ்வப்போது பங்களித்து வந்தால் மிக்க உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்! நன்றி.--இரவி 22:36, 19 பெப்ரவரி 2012 (UTC)
ஒருங்குறி
தொகுவணக்கம் Inbamkumar86, இரண்டு கட்டுரைகளை awb கொண்டு உருவாக்கியிருந்தீர்கள், ஒருங்குறி பிரச்சினை என நினைக்கிறேன். இரண்டுமே கேள்விக்குறியாகவே தெரிந்தது. மேலும் உள்ளடக்கமும் தேவையில்லாத வார்ப்புருக்களாக இருந்தது. இரண்டுமே நீக்கப்பட்டுவிட்டது. இப்பிரச்சினையை சரிபார்க்கவும்.--சண்முகம் (பேச்சு) 15:17, 28 மே 2012 (UTC)
- நன்றி விக்சனரி தொகுப்பதற்கு பதிலாக இங்கு எழுதப்பட்டுவிட்டது. நீங்கள் கூறவில்லையெனில் என்னால் அறிந்திருக்க இயலாது. --இராஜ்குமார் (பேச்சு) 16:00, 28 மே 2012 (UTC)
பிறழ்ச்சனை
தொகுவணக்கம், இன்பம்குமார்...! பிரச்சினை என்பது சரியான தமிழ் வார்த்தைதான்! அதனை 'பிறழ்ச்சனை' என பல இடங்களில் நீங்கள் மாற்றிவருவது... பிரச்சினையில் முடியும்! இங்கு பார்க்க: [[4]] --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:34, 27 சூன் 2012 (UTC)
- பிரச்சனை என்பது தமிழ்ச் சொல் தான். ஆனால், பேச்சு வழக்கில் பிறழ்ச்சனை என்பதையே பிரச்சனை என்று மொழியப்பட்டு தற்போது அதனை சமசுகிருத ஒலிப்பிலே தான் பேசிவருகிறோம். இதனைச் சுட்டிக்காட்டவே நான் அவ்வாறு செய்தேன். --இராஜ்குமார் (பேச்சு) 08:42, 27 சூன் 2012 (UTC)
- பிரச்சனை என்பது தூயதமிழ்ச் சொல் அல்ல, வடமொழி தழுவியது. அதேபோல பிறழ்ச்சனையும் தமிழ்ச்சொல்லா என்பது ஐயமே. இணையத்தில் தேடியபோது இராம.கி ஐயா மட்டுமே இதனைப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. வேறு நல்லத் தமிழ்ச் சொல்லாகத் தாருங்கள். அல்லது பிரச்சனையாகவே இருக்கட்டும்.--Kanags \உரையாடுக 08:47, 27 சூன் 2012 (UTC)
- திண்ணை வலைப்பக்கங்களிலும் இதனைப் பயன்படுத்தியுள்ளனர். "பிறழ்ச்சனை" என்ற தமிழ்ச் சொல்லை தழுவியதே பிரச்சனை என்ற வடமொழிச் சொல். பிறகு நாம் மீண்டும் வடமொழியிலிருந்து கடன்வாங்கி பிரச்சனை என்று குறிப்பிடுகிறோம். 'ழ்'என்ற ஒலியை மெதுவாக ஒலித்து பாருங்கள். இரு சொல்லும் ஒரே சொல்லாகும். இது யானை ஆனையாக ஒலிப்பதைப் போன்றது. --இராஜ்குமார் (பேச்சு) 08:59, 27 சூன் 2012 (UTC)
- இல்லையெனில் 'பிறழ்ச்சிகள்' என்று கூட சொல்லலாம். 'காஷ்மீர் பிறழ்ச்சிகள்', 'அயோத்தி பிறழ்ச்சிகள்' என்றும் மாற்றலாம். இன்னும் வேண்டுமானால் பிறழ்வு, பிறழ்வினை, பிறழ்ந்தவை என்று எத்தனையோ சொற்கள். எது நன்கு பொருந்தும் என பார்க்கவேண்டும்.--இராஜ்குமார் (பேச்சு) 09:24, 27 சூன் 2012 (UTC)
மேலும் உரையாடல் இங்கு காணவும். --இராஜ்குமார் (பேச்சு) 10:53, 27 சூன் 2012 (UTC)
- பிரச்சனை அல்லது பிரச்சினை என்றே எழுதலாம். பிரச்சனை என்றால் "கேள்வி" என்றே பொருள் (வடமொழியில்). ஆனால், நாம் தமிழில் குறிப்பிடும் பொருள் "சிக்கல்", "சண்டை", "கருத்துவேறுபாடு", "மாறுபாடு" என்பதே. பிறழ்-பிறழ்ச்சி என்பன நல்ல தூய தமிழ்ச்சொற்கள், ஆனால் மாறுபாடு என்பதற்கு ஈடாக இங்கு ஆள்வது புது வழக்காக இருக்கும். அது கூடாது என்று சொல்லவில்லை. தமிழில் சிக்கல் என்னும் சொல் பிரச்சனை என்பதற்குப் பல இடங்களிலும் பொருந்துவது. எனவே பிரச்சனை அல்லது சிக்கல் என்பதைப் பயன்படுத்தலாம்.--செல்வா (பேச்சு) 20:55, 27 சூன் 2012 (UTC)
- தங்கள் கருத்துக்கள் நிறைவை அளிக்கிறது. நன்றி திரு செல்வா. --இராச்குமார் (பேச்சு) 21:05, 27 சூன் 2012 (UTC)
- பிரச்சனை அல்லது பிரச்சினை என்றே எழுதலாம். பிரச்சனை என்றால் "கேள்வி" என்றே பொருள் (வடமொழியில்). ஆனால், நாம் தமிழில் குறிப்பிடும் பொருள் "சிக்கல்", "சண்டை", "கருத்துவேறுபாடு", "மாறுபாடு" என்பதே. பிறழ்-பிறழ்ச்சி என்பன நல்ல தூய தமிழ்ச்சொற்கள், ஆனால் மாறுபாடு என்பதற்கு ஈடாக இங்கு ஆள்வது புது வழக்காக இருக்கும். அது கூடாது என்று சொல்லவில்லை. தமிழில் சிக்கல் என்னும் சொல் பிரச்சனை என்பதற்குப் பல இடங்களிலும் பொருந்துவது. எனவே பிரச்சனை அல்லது சிக்கல் என்பதைப் பயன்படுத்தலாம்.--செல்வா (பேச்சு) 20:55, 27 சூன் 2012 (UTC)
வெட்டுத்துண்டு-இடைவெட்டு
தொகுவணக்கம். வெட்டுத்துண்டுத் தேற்றம் தலைப்பை இடைவெட்டுத் தேற்றம் என மாற்றும் வேண்டுகோளைப் பேச்சுப் பக்கத்திலிட்டுவிட்டு மற்ற பயனர்களின் கருத்துக்களுக்காகச் சற்றேனும் காத்திருந்திருக்கலாம். பிறரின் கருத்தாலோசனைகள் வராவிட்டால் பிறகு உங்களது தேர்வைச் செயல்படுத்துதல் நலம் என்பது எனது வேண்டுகோள்.--Booradleyp (பேச்சு) 16:01, 27 சூன் 2012 (UTC)
- நன்றி Booradleyp. அச்சொல் விக்சனரியிலும், த.இ.ப அகராதிகளிலும் தரப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்தேன். ஆகையாலே மாற்ற நேர்ந்தது. பிழையென்றால், மன்னிக்கவும். --இராச்குமார் (பேச்சு) 20:48, 27 சூன் 2012 (UTC)
வலைபூ ஆதாரம்
தொகுஐயா, நீங்கள் குமரிக்கண்டம் கட்டுரையில் வலைபூ ஆதாரத்தை தர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். அக்கட்டுரையில் ஏற்கனவே பற்பல சர்ச்சைகள் வந்துள்ளன. நீங்கள் கூறிய கருத்து [5] இவர் எழுதிய புத்தகங்களில் உண்டு. இது நம்பகமான தளம் என்பதால் இதிலிருந்து உங்கள் கருத்துக்களை கையாளலாம். மேலதிகத் தகவல்களுக்கு பேச்சு:குமரிக்கண்டம் பார்க்கவும். --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:42, 1 சூலை 2012 (UTC)
குச்சாட்டம்
தொகுவணக்கம். குச்சாட்டம் கட்டுரையும் கிச்சுக் கிச்சுத் தம்பலம் கட்டுரையும் ஒன்றாக உள்ளது. இரண்டையும் இணைத்து விட்டு வழிமாற்று கொடுத்து விடுங்கள். நன்றி.--Booradleyp (பேச்சு) 03:57, 20 சூலை 2012 (UTC)
- நன்றி.--Booradleyp (பேச்சு) 15:14, 20 சூலை 2012 (UTC)
மீண்டும் பங்களிக்க வந்தமைக்கு மகிழ்ச்சி
தொகுவணக்கம் இராஜ்குமார், ஒரு இடைவெளிக்குப் பிறகு பங்களிக்க வந்துள்ளீர்கள் மகிழ்ச்சி. மேலும், சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள்.... :) --அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 15:05, 14 ஏப்ரல் 2013 (UTC)
- வாழ்த்துக்களுக்கு நன்றி. --இராஜ்குமார் (பேச்சு) 15:09, 14 ஏப்ரல் 2013 (UTC)
- அவ்வண்ணமே வாழ்த்தும், இரவி மற்றும் விக்கிப்பீடியா உறவின்மார் :)--இரவி (பேச்சு) 16:17, 17 ஏப்ரல் 2013 (UTC)
- நன்றி. திரு இரவி.--இராஜ்குமார் (பேச்சு) 07:23, 19 ஏப்ரல் 2013 (UTC)
- அவ்வண்ணமே வாழ்த்தும், இரவி மற்றும் விக்கிப்பீடியா உறவின்மார் :)--இரவி (பேச்சு) 16:17, 17 ஏப்ரல் 2013 (UTC)
வணக்கம் இராஜ்குமார்! கலக்குறீங்க... இங்கும் விக்கிசெய்தியிலும் கடந்த சில தினங்களாக இரவும் பகலும் கடுமையாக உழைக்கிறீங்க! மகிழ்ச்சி, நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:45, 20 ஏப்ரல் 2013 (UTC)
- நன்றி. செல்வசிவகுருநாதன். சொந்த வேலைகள் நிறைய இருந்ததினால், சில மாதங்களாக விக்கியில் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. தொடர்ந்து கலக்குவோம். :))--இராஜ்குமார் (பேச்சு) 19:49, 20 ஏப்ரல் 2013 (UTC)
- விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:27, 21 ஏப்ரல் 2013 (UTC)
- விருப்பம்--சங்கீர்த்தன் (பேச்சு) 06:52, 21 ஏப்ரல் 2013 (UTC)
- தமிழ்க்குரிசில், சங்கீர்த்தன். இருவருக்கும எனது நன்றி.--இராஜ்குமார் (பேச்சு) 07:11, 21 ஏப்ரல் 2013 (UTC)
பயனர் வரவேற்பு
தொகுஇராஜ்குமார், அடையாளம் காட்டாத புதுப் பயனர்களை வரவேற்பதற்கு {{anonymous}} என்பதைத் தேர்ந்தெடுங்கள்.--Kanags \உரையாடுக 10:33, 19 ஏப்ரல் 2013 (UTC)
- நன்றி. கனகு அவர்களே!--இராஜ்குமார் (பேச்சு) 10:42, 19 ஏப்ரல் 2013 (UTC)
ஐபி தொகுப்பு
தொகுஅனைத்தையும் மாற்ற முடியாது. ஆனால், அந்த ஐபி யில் நீங்கள் தொடங்கிய இரு கட்டுரைகளை உங்கள் பெயருக்கு மாற்ற வழி உள்ளது. மாற்றி விடுகிறேன்.--Kanags \உரையாடுக 09:53, 26 ஏப்ரல் 2013 (UTC)
- நன்றி சிறீதரன். --இராஜ்குமார் (பேச்சு) 07:46, 27 ஏப்ரல் 2013 (UTC)
திட்டம்
தொகுதிட்டம் தீட்டி செயல்படும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:11, 28 ஏப்ரல் 2013 (UTC)
- நன்றி. பார்வதிஸ்ரீ --இராஜ்குமார் (பேச்சு) 05:49, 29 ஏப்ரல் 2013 (UTC)
- தமிழ்த் திரைப்படம் மீதான வலைவாசல் ஒன்றினைத் துவக்க நீங்களே பொருத்தமானவர் என்பது எனது கருத்து. போதிய நேரம்தான் வேண்டும், என்ன சொல்கிறீர்கள்?! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:42, 4 மே 2013 (UTC)
- நானும் அவ்வாறே எண்ணிக்கொண்டிருந்தேன். விரைவில் உருவாக்கிவிடுகிறேன். நன்றி செல்வசிவகுருநாதன். --இராஜ்குமார் (பேச்சு) 04:32, 5 மே 2013 (UTC)
- தமிழ்த் திரைப்படம் மீதான வலைவாசல் ஒன்றினைத் துவக்க நீங்களே பொருத்தமானவர் என்பது எனது கருத்து. போதிய நேரம்தான் வேண்டும், என்ன சொல்கிறீர்கள்?! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:42, 4 மே 2013 (UTC)