பயனர் பேச்சு:Selvasivagurunathan m/தொகுப்பு 3

பதக்கம்

தொகு
  சிறந்த வழிகாட்டுனர் பதக்கம்
எல்லா பயனர் பேச்சுப் பக்கங்களிலும் உங்கள் கையெழுத்தைக் காண முடிகிறது. விக்கிப்பீடியாவின் ஒவ்வொரு கட்டத்திலும் இது போல் மற்ற பயனர்களுக்கு உறுதுணையாக இருப்போரின் பங்கு பெரிது. தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியா சமூகத்தை வளர்ப்பதற்கான உங்கள் பங்களிப்பை நோக்கி... இரவி (பேச்சு) 17:52, 15 சூன் 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

தங்களின் பதக்கத்திற்கு மிக்க நன்றி இரவி! தமிழ் விக்கியில் ஆர்வமுடன் பங்களிக்கும் பயனர்களுக்கு எனக்குத் தெரிந்த/என்னால் இயன்ற உதவிகளைச் செய்வதன் மூலம் அவர்களைத் தொடர்ந்து இங்கு பணிபுரிய வைத்தலே எனது நோக்கமாகும். நேசத்துடன் - --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:47, 20 சூன் 2013 (UTC)Reply
  விருப்பம்--Yokishivam (பேச்சு) 07:25, 21 சூன் 2013 (UTC)Reply
  விருப்பம்♥-தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:16, 2 நவம்பர் 2013 (UTC)Reply
  விருப்பம் - Uksharma3 (பேச்சு) 01:08, 22 திசம்பர் 2013 (UTC)Reply

அன்பு செல்வா!மிக்க நன்றி! ஓர் அரைத்திங்கள் மருத்துவ சிகிச்சைக்காக செல்கிறேன், சூலையில் அசுவமேத யாகத்தையும்,ஆடிக் கிருத்திகையையும் முடித்துவிடுகிறேன். அன்புடன்--Yokishivam (பேச்சு) 07:25, 21 சூன் 2013 (UTC)Reply

உதவி

தொகு

எவ்வாறு கட்டுரையில் படத்தை இணைப்பது.--Jeevan jaffna (பேச்சு) 11:58, 30 செப்டம்பர் 2013 (UTC)


பாராட்டுப் பத்திரப் பணி

தொகு

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் தொடர்பாக பாராட்டுப் பத்திரம் வழங்கலாம் என்ற உங்கள் பரிந்துரையைப் பொறுப்பேற்றுச் செய்ய முடியுமா? பத்திர வடிவமைப்பு, அச்சிடல் ஆகியவற்றை உடனடியாகச் செய்ய வேண்டியுள்ளது. இயன்றால், சிம்மி வேல்சின் வாழ்த்து / கையெழுத்தை நேரிலோ அஞ்சலிலோ பெற முயல்வோம். இதற்கு முன்கூட்டியே திட்டமிட வேண்டியுள்ளது.--இரவி (பேச்சு) 11:23, 24 சூன் 2013 (UTC)Reply

நேரமின்மை எனும் பிரச்சினை இருந்தபோதிலும், நம் தமிழுக்காக இதைக்கூட செய்யாவிட்டால் எப்படி? பொறுப்பேற்றுக் கொள்கிறேன். தங்களின் நகர்பேசி எண்ணை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்; விரிவாகப் பேசவும், முடிவுகளை வேகமாக எடுக்கவும் உதவியாக இருக்கும்.
பொறுப்பெடுத்துக் கொள்வதற்கு நன்றிங்க. ஒரு மாதிரிச் சான்றிதழை வடிவமைத்து அனைவரின் கருத்தையும் அறிந்து உறுதிப்படுத்தியவுடன் அச்சடிக்கும் பணியைச் செய்யலாம். என் தொலைப்பேசி எண் 9943168304. --இரவி (பேச்சு) 05:52, 28 சூன் 2013 (UTC)Reply

பல்கலைகழகப் பொறியியற் கல்லூரி

தொகு

University college of engineering , arani அரசால் நிர்மாணிக்கப்பட்ட பெயராகும். தமிழில் அது பல்கலைகழகப் பொறியியற் கல்லூரி" மேலும் உசீடமாக பல்கலைகழகப் பொரியியலுக்கானக் கல்லூரி என்பதே சரியாகும். மேலும் அதை நீங்கள் , "ஆரணி பல்கலைகழக ........." என்றுவழிமாற்று இன்றி மாற்றியுள்ளீர்கள். அது நேரிடையாகவே ஆரணியில் ஏதோ பல்கலைகழகம் உள்ளதை போல உள்ளது . "ஆரணி பல்கலைகழகம் " என்பது சரியா? ரோஹித் (பேச்சு) 10:30, 2 சூலை 2013 (UTC) மறைமுகமாகக்கூட இல்லாமல் , நேரிடையாக ஆரணி பல்கலைகழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி என பொருள்படுகிறது. ரோஹித் (பேச்சு) 10:33, 2 சூலை 2013 (UTC)

பகுப்பு:பள்ளிக்கல்வி*தமிழகத்தில் இருக்கும் பள்ளிக்கல்வி குறித்தவைகளை நீங்கள் உருவாக்குவீர்கள் எனில், இத்தலைப்பை தமிழகப் பள்ளிக்கல்வி என மிகப்பொருத்தமாக மாற்றக் கோருகிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 04:11, 12 சூலை 2013 (UTC)Reply

வணக்கம் தகவலுழவன்! பள்ளிக்கல்வி குறித்த பொதுவான கட்டுரைகளை பகுத்தலின் பொருட்டு இந்தப் புதிய பகுப்பினை உருவாக்கினேன். இப்போது 'மான்டேசொரி கல்வி' எனும் கட்டுரையையும் இப்பகுப்பின்கீழ் கொண்டு வந்துள்ளேன். தொடக்கக் கல்வி, மேல்நிலை பள்ளிக்கல்வி போன்ற கட்டுரைகள் உருவாக்கப்பட்டால், அக்கட்டுரைகளை இப்பகுப்பின்கீழ் கொண்டு வரலாம். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:36, 12 சூலை 2013 (UTC)Reply

Vandalism revert

தொகு

I'm not sure if you speak English or not, but if you do, I would like to thank you for helping to revert the vandalism you received on this project! Thanks again, Razorflame (பேச்சு) 21:09, 22 சூலை 2013 (UTC)Reply

நன்றி

தொகு

தங்களின் அன்பிற்கு நன்றி அண்ணா, உடனே நீக்கி விடுகிறேன்.

கட்டுரைக் வேண்டுதல்

தொகு

வணக்கம். விக்கிப்பீடியா பற்றி பொது ஊடகங்களில் பரப்புரை செய்யவும், பத்தாண்டுகளை பதிவு செய்யவும் சிறப்புக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிடுதல் உதவும். அந்த வகையில் தொடர் பங்களிப்பாளரான நீங்கள் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள்#கட்டுரைத் தலைப்புக்கள் கட்டுரை எழுதித் தர முடிந்தால் சிறப்பு. 400 அல்லது 800 சொற்கள். செப்டெம்பர் 11 2013 திகதிக்குள். குறிப்பாக பின்வரும் தலைப்புக்களில் ஒன்று:

  • தமிழ் விக்கிச் சமூகம்
  • இந்திய விக்கிகளும் தமிழ் விக்கியும் ஓர் ஒப்பீடு

உங்கள் பரிசீலனைக்கும் பங்களிப்புக்கும் நன்றி. --Natkeeran (பேச்சு) 00:24, 12 ஆகத்து 2013 (UTC)Reply

பகுப்பு:2004 தமிழ் நூல்கள்

தொகு

பகுப்பு:2004 தமிழ் நூல்கள் பகுப்பிலும் இட்டு அதன் தாய்ப் பகுப்பிலும் இடுவது அவசியமில்லை. அதனால் நீக்கியுள்ளேன். --Natkeeran (பேச்சு) 21:19, 16 ஆகத்து 2013 (UTC)Reply

நல்லது; பவுல் அவர்கள் 20ஆம் நூற்றாண்டு நூல்கள் எனும் பகுப்பினைச் சேர்த்திருந்தார். அதனை நான் திருத்தியிருந்தேன். தாங்கள் செய்தது சரியே! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:23, 16 ஆகத்து 2013 (UTC)Reply

நன்றி

தொகு

நன்றி அண்ணா , ஆனால் பெயர் கூறி அழைக்க மனம் வரவில்லை. பெரியவர்கள் என்று தெரிந்தும் பெயர் சொல்லி அழைக்க மனம் ஒப்பவில்லை அண்ணா.

நன்றி அண்ணா

நன்றி

தொகு

:நன்றி சொல்ல உமக்கு, வார்த்தையில்லை எனக்கு...
தமிழ் விக்கிக்கு புதியவனான எனது கட்டுரைகளைப் பாராட்டி, எனக்கு பதக்கத்தை தந்தருளியமைக்கு நன்றி... --ர.க. ரத்ன சபாபதி (பேச்சு) 00:00, 23 ஆகத்து 2013 (UTC)Reply

உங்களுக்குத் தெரியுமா இற்றைப்படுத்தல், நன்றி

தொகு

உங்களுக்குத் தெரியுமா இற்றைப்படுத்துவதற்கு நன்றி. மேலும் உங்களுக்குத்தெரியுமா முன் போல் சிறு துணுக்குகளாக இல்லாமல் நிறைவாக முதற்பக்கத்தை நிறைக்கிறது. வாழ்த்துக்கள். இப்பணியை தொடர்ந்து செய்யவும். மேலும் பழைய உங்களுக்குத்தெரியுமா வை கவனித்த போது நீல இணைப்புக்கள் அதிகமாக உள்ளது. நீங்கள் இணைத்தவற்றிலும் நிறைய இணைப்புக்கள் இருந்தால் நன்று என நினைக்கிறேன். மேலும் விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகஸ்ட் 14, 2013 விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகஸ்ட் 7, 2013

இந்தக் கிழமைகளுக்கான வார்ப்புருக்கள் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்திலும் பயனர் பேச்சுப் பக்கத்திலும் இடப்படவில்லை. தாங்கள் அதை நிறைவேற்ற வேண்டுகிறேன்.-- நி ♣ ஆதவன் ♦   (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 04:08, 28 ஆகத்து 2013 (UTC)Reply

வணக்கம் செல்வசிவகுருநாதன், வழக்கமாக உ.தெ. இங்கிருந்துதான் இற்றைப்படுத்தப்படும். நானும் அவ்வப்போது இதில் சேர்ப்பதுண்டு. இங்கிருந்துதான் இற்றைப்படுத்தல் தேவையில்லையென்றால் இப்பக்கத்தை விட்டுவிடலாம். --Anton (பேச்சு) 10:22, 2 செப்டம்பர் 2013 (UTC)

வணக்கம், வேலைப்பபளுவினால் கருத்திட முடியாதுள்ளது. சற்று கால அவகாசம் வேண்டும்.--Anton (பேச்சு) 07:06, 25 செப்டம்பர் 2013 (UTC)

ஒலிக்கோப்பு

தொகு

ஒலிக்கோப்புக்கு நீங்கள் தந்துள்ள நியாயப் பயன்பாடு போதுமானதாக உள்ளது. கட்டுரையில் உள்ள ஒலிக்கோப்பின் இணைப்பில் பாடலின் பெயர், இராகம் போன்றவற்றையும் தந்தால் நல்லது.--Kanags \உரையாடுக 11:13, 29 ஆகத்து 2013 (UTC)Reply

நன்றி

தொகு

வாழ்த்துக்கு மிக்க நன்றி.நான் தற்போது கல்வியை முடித்து விட்டேன். ஆதலால் பங்களிக்கிறேன். ஆனால் தோழிகள் வருவார்களா என்பது சந்தேகமே.ஆனால் கண்டிப்பாக கூறுகிறேன் . போட்டி முடிவுகள் எப்போது வெளியிடப்படும். நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:10, 2 செப்டம்பர் 2013 (UTC)

என்னுடைய முகநூல் வழியாக நான் 77 நபர்களுக்கு தகவல் அறிவித்து உள்ளேன். நிறைய நபர் வருவதாக கூறியுள்ளனர்.விக்கியின் தரம் மலயாளத்திற்கு மேல் உயரும் என் நம்புகிறேன். நந்தினிகந்தசாமி (பேச்சு) 06:53, 2 செப்டம்பர் 2013 (UTC) ஒரு பயணர் சேர்ந்து விட்டார்.நந்தினிகந்தசாமி (பேச்சு) 07:35, 2 செப்டம்பர் 2013 (UTC)

வாழ்த்துக்கள்,நன்றிகள் நந்தினி, வருவோம் என கூறுவோரை ஊக்கப்படுத்துங்கள். நானும் அதன் மூலம் நான்கு பயனர்களை வரவழைத்தேன்.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:58, 2 செப்டம்பர் 2013 (UTC)

தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.நந்தினிகந்தசாமி (பேச்சு) 03:02, 15 அக்டோபர் 2013 (UTC)Reply

தமிழகத்தில் பிறந்தவனுக்கு, தமிழ் கற்றுத்தர வேண்டுமா..??

தொகு

பிற மொழியினர், தங்களது மொழியினை வெறும் கருத்துப் பரிமாற்றத்திற்காக மட்டுமே பயன்படுத்தினர். ஆனால் தமிழராகிய நாம் தான் அதை மொழி என்றளவில் பார்க்காமல், தாயாய், தந்தையாய், தோழனாய், தோழியாய், காதலனாய், காதலியாய், தனக்கு நேர் உயிராய், கோவிலாய், கடவுளாய் இன்னும் பிற எடுத்துரைக்க முடியா உணர்வாய் பார்த்தோம். அந்த உணர்வு என்னுள்ளும் தோன்றியது. அதற்கான முயற்சிகளை எடுத்தேன்.. ஆனால் நீங்கள் வியக்கும் படியாய் நான் எதுவும் செய்து விட வில்லை. நமது மொழி, அள்ள அள்ளக் குறையா அட்சையப் பாத்திரம் போன்றது. அந்த பாத்திரத்தின் அளவைப் பார்க்காமல் அதன் திறனை மட்டும் பார்த்தால், அந்தத் தமிழமுது என்றும் நமக்கு விருந்து படைக்கும். -ர.க. ரத்தின சபாபதி (பேச்சு) 02:10, 3 செப்டம்பர் 2013 (UTC)

  விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:47, 2 செப்டம்பர் 2013 (UTC)

  விருப்பம்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 09:47, 3 செப்டம்பர் 2013 (UTC)

மா.செல்வசிவகுருநாதன் அவர்களே, அகநானூரு பற்றிய கட்டுரை இருப்பதை தெரிவித்ததற்க்கு நன்றி. அதை அப்போதே நீங்கள் சரி செய்திருக்க வேண்டாமா?--Muthuppandy pandian (பேச்சு) 08:59, 4 செப்டம்பர் 2013 (UTC)

நண்பரே, 21.8.2013 அன்று ஆங்கிலத்தில் "Marriage" என்ற தலைப்பிற்க்கான தமிழ் வடிவம் "திருமணம்"என்ற தலைப்பில் உப தலைப்பான "திணைக் கலப்பு மணம்" என்று உள்ளது. அதில் "அகநானூறு" என்ற இடம் தொகுப்பு பகுதியாக இருந்தது. அதனை நான் தொகுத்தேன். நீங்கள் அப்படி ஒரு தலைப்பு உள்ளதை தெரிவித்து, நான் தொகுத்ததையும் நீக்கி விட்டீர்கள். நன்றி. ஆனால் அதை நீங்கள் சரிசெய்து இருக்கலாமே என்று சொன்னேன்.--Muthuppandy pandian (பேச்சு) 10:06, 4 செப்டம்பர் 2013 (UTC)

உங்களுக்குத் தெரியுமா? இற்றைப்படுத்தல்

தொகு

வணக்கம், உங்களுக்குத் தெரியுமா பகுதியை இற்றைப்படுத்துவதற்கு நன்றி. இன்றைய பகுதி முதற்பக்கத்தில் தெரியாமல் இருந்ததற்குக் காரணம் செப்டெம்பர் மாதத்தை மீடியாவிக்கியில் யாரோ செப்டம்பர் என மாற்றிவிட்டார்கள். இதனால், தானியங்கிகள் அனைத்தும் செப்டெம்பரை விடுத்து செப்டம்பரைத் தேடியிருக்கின்றன. ஏற்கனவே இன்று... பகுதியிலும் இத்தவறை செப்டெம்பர் 1 இலேயே அவதானித்து மாற்றிவிட்டேன். செப்டம்பரா, செப்டெம்பரா சரியானது எனத் தெரியவில்லை. எது எப்படியானாலும், இன்றைய இற்றைப்படுத்தலை செப்டம்பருக்கு வழிமாற்றியிருக்கிறேன். இனி வருவனவற்றையும் அவ்வாறே தலைப்பிடுங்கள்.--Kanags \உரையாடுக 10:53, 4 செப்டம்பர் 2013 (UTC)


வணக்கம் செல்வசிவகுருநாதன், தாமதமான பதிலுக்கும், நீங்கள் இற்றைப்படுத்தும் நேரத்தில் என் பரிந்துரை பின்வாங்கியதற்கும் வருந்துகிறேன். என் பரிந்துரைகளை முதற்பக்கக் கட்டுரை, முதற்பக்க படம் ஆகிய இடங்களிலிருந்து பின்வாங்கியதன் தொடர்ச்சியாக உ.தெ.விலிருந்தும் பின்வாங்கினேன். அதற்கு உங்கள் செயற்பாடு காணமல்ல! நீங்கள் வலிந்து இற்றைப்படுத்தியது, இற்றைப்படுத்தலில் சக பயனர்களின் கருத்துக்கு மதிப்பளித்தது, என் பேச்சுப் பக்கத்தில் வினவியது என்பன உங்கள் ஆளுமையின் வெளிப்பாடுகள். நடைமுறை ஒழுங்கு இல்லாத செயற்பாடுகளுக்கு எதிர்ப்புக்காட்டவே அவ்வாறு செய்தேன். கட்டுக்கோப்புடன் அல்லது ஒழுங்கு மீறாது செயற்பட வேண்டும் என்பது நிலைப்பாடு. கருத்துக்களை கவனியாது செயற்படும் அல்லது மெளனமாக இருக்கம் இடத்தில் கருத்துக்களை மீண்டும் மீண்டும் தெரிவிப்பதில் என்ன பயன்? இசுரேலிய பழமொழியென்று இப்படிக் கூறுகின்றது; Commit a sin twice and it will not seem a crime. நேரம் கிடைத்தால் ஆலமரத்தடியில் உரையாடலாம் என எண்ணியுள்ளேன், ஆனால் நிச்சயமில்லை. --Anton (பேச்சு) 16:45, 3 அக்டோபர் 2013 (UTC)Reply

ஊக்கமுடையோரின் ஊட்டச்சத்தே... (அரசியல் என்று எண்ணிவிடாதீர்)

தொகு

பள்ளிப் படிப்பும், கல்லூரிப் படிப்பும் ஆங்கிலத்தில் படித்தமையால், விக்கி ஆங்கிலத்தில் தான் முதலில் தொகுக்க ஆரம்பித்தேன். பட்டம் முடித்து மேற்படிப்பிற்காக சென்னை வந்தேன். இங்கு பயன்படுத்தும் தமிழைக் கண்டு(கேட்டு), நமது மொழியும், கலாச்சாரமும் பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதை உணர்ந்தேன். அதற்கான தேடலில் தான், என் கவனம் தமிழ் விக்கியின் மீது திரும்பியது. ஆங்கிலத்தில் ஏற்பட்ட அனுபவமும், தமிழ் மீதுள்ள ஆர்வமும் என்னை இங்கு ஈர்த்தது. அதனால் எனது பணியை இங்கிருந்தே தொடங்கினேன். மேலும், எனக்கு யாரும் ஒத்தாசை செய்யமாட்டார்களா என எண்ணியபோது தான்.. நீங்கள் எனக்கு அறிமுகமானீா். ஆகையால் எனது பங்களிப்புகள் ஒவ்வொன்றுக்கும் நீங்களே ஊட்டச்சத்து என்பதனை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.--ர.க.ரத்தின சபாபதி (பேச்சு) 22:51, 05 செப்டம்பர் 2013 (UTC)


சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த தூங்கா நகரத்தில் பிறந்தவன் நான். வாணிபத்திற்காக தூக்கத்தை துறந்தவர்கள், எம் குல மக்கள். தமிழுக்காக நானும், என் தூக்கத்தை துறந்தேன். எதுவாயினும், தங்களது அறிவுரைக்கு எனது கோடி நன்றிகள்...--ர.க.ரத்தின சபாபதி (பேச்சு) 13:21, 06 செப்டம்பர் 2013 (UTC)

அன்புக்கு நன்றி

தொகு

தமிழ் விக்கி கூடலுக்கான தங்கள் அழைப்புக்கு நன்றி.எனக்கும் கலந்துகொள்ள விருப்பமே.அதற்க்காண பக்கத்தில் என் விருப்பத்தை பதிவு செய்து விட்டேன்.ஏதேனும் உதவிகள் தேவையெனில் அவசியம் தங்களை தொடர்பு கொள்கிறேன். மேலும் தற்போது மாணவன் அல்ல.கல்லூரி படிப்பை நிறைவு செய்து விட்டு வேலை தேடிகொண்டிருக்கிறேன்...முத்துராமன் (பேச்சு) 12:24, 7 செப்டம்பர் 2013 (UTC)

:o , :! , :) :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:06, 7 செப்டம்பர் 2013 (UTC)

நன்றி--Muthuppandy pandian (பேச்சு) 07:05, 16 செப்டம்பர் 2013 (UTC) நான் விக்கிக்கு புதிய பயனர். அதனால் இதை தெரியப்படுத்தியதற்க்கு நன்றி--Muthuppandy pandian (பேச்சு) 07:25, 16 செப்டம்பர் 2013 (UTC) thomas j. sargent படிமத்தை பதிவேற்றுங்கள்.--Muthuppandy pandian (பேச்சு) 05:16, 18 செப்டம்பர் 2013 (UTC) 17.09.2013 அன்று இவரின் பெயரில் தமிழ்படுத்தினேன். ஆனால் படிமம் மட்டும் சேர்க்கவேண்டும். உதவிக்குக் எனது நன்றிகள்--Muthuppandy pandian (பேச்சு) 06:11, 18 செப்டம்பர் 2013 (UTC)

நன்றி

தொகு

தகவலுக்கு நன்றி. "தாமஸ் ஜான் சார்ஜெண்ட்" என்ற தலைப்பில் எழுதிவிட்டேன்--Muthuppandy pandian (பேச்சு) 06:22, 18 செப்டம்பர் 2013 (UTC) செல்வசிவகுருநாதன் அவர்களுக்கு, வணக்கம். நீங்கள் எனக்கு வழங்கிய பதக்கத்திற்க்கு மிக்க நன்றி. என்னால் முடிந்த பங்களிப்பை செய்கிறேன்.--Muthuppandy pandian (பேச்சு) 05:26, 20 செப்டம்பர் 2013 (UTC)

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு

தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 19:55, 18 செப்டம்பர் 2013 (UTC)

நன்றி

தொகு

அன்புள்ள செல்வசிவகுருநாதன் அவர்களுக்கு, வணக்கம்.உங்களது பாராட்டிற்கு மிக்க நன்றி. உங்களது பாராட்டு என்னை இன்னும் ஊக்கப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. இன்னும் அதிக கட்டுரைகள் எழுத உங்களைப் போன்றவர்களின் அன்பும் வழிகாட்டுதலும் எனக்குத் தேவை.ஆர்.பாலா (பேச்சு) 03:55, 20 செப்டம்பர் 2013 (UTC) உங்களின் மால்வா கட்டுரையிலுள்ள தகவல்களை மால்வா (மத்தியப் பிரதேசம்) எனும் கட்டுரையில் சேர்க்கவும்; அதன்பிறகு மால்வா கட்டுரையை நீக்கி உதவுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:55, 20 செப்டம்பர் 2013 (UTC)

ஏற்கனவே இருந்ததை நான் கவனிக்கவில்லை. அதனால்தான் புதியதாகத் தொடங்கினேன். இரண்டையும் இணைத்துவிடலாம்.உங்களின் கருத்துக்கு நன்றி.ஆர்.பாலா (பேச்சு) 13:05, 20 செப்டம்பர் 2013 (UTC)

ஊடகச் சந்திப்பில் கலந்து கொள்ள முடியுமா?

தொகு

வணக்கம் சிவகுரு. செப்டம்பர் 25, சென்னை ஊடகச் சந்திப்பில் கலந்து கொள்ள முடியுமா?--இரவி (பேச்சு) 04:28, 23 செப்டம்பர் 2013 (UTC)

மன்னிக்க வேண்டும்; அலுவலகப் பணியின் காரணமாக நாளையிரவு வெளியூர் கிளம்புவதால், பத்தாண்டுகள் கொண்டாட்டத்திலும் கலந்து கொள்ள இயலாத நிலையில் உள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:26, 23 செப்டம்பர் 2013 (UTC)
ஓ :( --இரவி (பேச்சு) 05:18, 24 செப்டம்பர் 2013 (UTC)

சந்தேகம்

தொகு

உசாகி சூறாவளி என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். அது ஆங்கிலத்திலும் உள்ளது. கட்டிரையை முடித்து மேற்கோள் தொகுத்தபின் en:Typhoon Usagi (2013) என தொகுத்தவுடன் மற்ற மொழிகள் பகுதியில் தொடர்பைக்காட்டியது. இப்படி செய்யலாமா? மற்றும் அக்கட்டுரையின் கீழ் பக்கத்தில் ஒரு படம் காட்டி உசாகி சூறாவளி "உறுவாக்கு" என வருகிறது. நான் ஏதாவது தவறு செய்துள்ளேனா? கட்டுரையை கவனிக்கவும்.--Muthuppandy pandian (பேச்சு) 13:37, 24 செப்டம்பர் 2013 (UTC)

சந்தோச செய்தி

தொகு

நண்பர் செல்வசிவகுருநாதன் அவர்களே பாராட்டு பத்திரத்திற்க்கு நன்றி. என்னால் இந்த விழாவில் கலந்துகொள்ளமுடியவில்லை. வருந்துகிறேன். முடிந்தால் இந்த விலாசத்திற்க்கு அனுப்புங்கள்.--Muthuppandy pandian (பேச்சு) 10:01, 27 செப்டம்பர் 2013 (UTC)

திருத்தம்

தொகு

குஜராத் தலைநகர் காந்திநகர்(Gandhinagar) ஆங்கில விக்கியிலிருந்து தமிழ் விக்கிக்கு செல்லும்போது காந்திநகர் (திருவண்ணாமலை) வருகிறது. அதே நேரம் தமிழ் (காந்திநகர் (திருவண்ணாமலை)) என்பதிலிருந்து ஆங்கிலத்திற்க்கு செல்லும் போது (Gandhinagar, thiruvannamalai) என்று வருகிறது, இதை சரிசெய்யவும்.--Muthuppandy pandian (பேச்சு) 06:05, 1 அக்டோபர் 2013 (UTC) school என்ற கட்டுரை தமிழுக்கு மாற்றும்போது பள்ளிக்கூடம் என்று வருகிறது, பின்னர் அது வழிமாற்றம் என்று பள்ளிவாசல் செல்லுவது போல் அமைந்துள்ளது கவனிக்கவும்.--Muthuppandy pandian (பேச்சு) 05:03, 14 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றி செல்வசிவகுருநாதன் அவர்களே.--Muthuppandy pandian (பேச்சு) 07:11, 15 அக்டோபர் 2013 (UTC)Reply

சான்றிதழ் சார்ந்த கேள்வி

தொகு
  • அங்குள்ள பயனர்கள் பட்டியலைப் பார்த்தேன். பெரும்பாலானா நல்ல பங்களிப்பாளர்கள் பெயர்கள் இருக்கின்றன. விரைவில் மீள்பார்வை இட்டு, யாருடைய பெயெஅரேனும் விடுபட்டிருந்தால் தெரிவிக்கின்றேன்.--செல்வா (பேச்சு) 09:19, 26 செப்டம்பர் 2013 (UTC)
புதிதாக 25 பெயர்களைச் சேர்த்திருக்கிறேன். இவர்களில் சிலர் கடந்த காலத்தில் சிறப்பாகப் பங்களித்தவர்கள். சிலர் இப்போதும் தொடர்ந்து பங்களிப்புச் செய்பவர்கள். பெரும்பாலான பெயர்களை பயனர் தொடர்பான புள்ளிவிபரங்களில் இருந்து பெற்றேன். பயனர்கள் அமலசிங்கும், முகுந்தும் தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்கத்தோடு தொடர்பு உள்ளவர்கள் என்பதால் அவர்களுடைய பெயரையும் சேர்த்துள்ளேன். புதிதாகச் சேர்ந்து சிறப்பாகப் பங்களிப்பவர்களின் பெயர்களை நான் சேர்க்கவில்லை. ஆனால், இவர்களையும் சேர்த்துக்கொள்வது நல்லது. ---மயூரநாதன் (பேச்சு) 09:32, 26 செப்டம்பர் 2013 (UTC)
இன்னும் சில பெயர்களைச் சேர்த்துள்ளேன். இன்னும் சிறிது நேரத்தில் வானூர்தி நிலையத்துக்குப் புறப்படவுள்ளேன். நாளை அதிகாலை சென்னையில் இருப்பேன். வந்ததும் இரவியைத் தொடர்பு கொள்ளுவேன். ஏதாவது தேவையானால் இரவியூடாகத் தொடர்பு கொள்ளலாம். ---மயூரநாதன் (பேச்சு) 11:30, 26 செப்டம்பர் 2013 (UTC)
பட்டியலில் மாணவர்களையும் இணைக்கலாம் எனத் தோன்றுகின்றது. அவர்களை மேலும் ஊக்கப்படுத்தியதாக இருக்கும். வேறு சில நபர்களின் பெயர்கள் நினைவுக்கு வருகின்றது. சரியாக ஒருமுறை பட்டியலை மீண்டும் சரிபார்த்து விட்டுச் சொல்கின்றேன்.--கலை (பேச்சு) 11:44, 26 செப்டம்பர் 2013 (UTC)
நான் நினைத்த ஒருசில பயனர்கள் பெயரை மயூரநாதன் சேர்த்திருக்கின்றார். மேலும் எவராவது உள்ளனரா என அறிய பயனர் தொடர்பான புள்ளிவிபரத்தைப் பார்த்தேன். மயூரநாதன் கூறியிருப்பதும் அதுவேதானோ தெரியவில்லை. 20 recently absent wikipedians, ordered by number of contributions என்ற பட்டியலில் இருக்கும் பயனர்:Bpselvam என்ற பயனர் பெயரை நீங்கள் தயாரித்த பட்டியலில் காணவில்லை. ஏனைய பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.--கலை (பேச்சு) 13:24, 26 செப்டம்பர் 2013 (UTC)
கலை, செல்வம் தவிக்கு நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் பிற்காலத்தில் விக்கிக் கொள்கைகளுக்கு அமைவாக நடந்துகொண்டதாகத் தெரியவில்லை. ----மயூரநாதன்
ஓ, அப்படியா? நான் இதனை அறிந்திருக்கவில்லை. செல்வசிவகுருநாதன் கேட்டபடியால் புள்ளிவிபரத்தைப் பார்த்துவிட்டே எழுதினேன்.--கலை (பேச்சு) 21:53, 26 செப்டம்பர் 2013 (UTC)
என்னுடைய தனிக்கருத்தாக செல்வம்தமிழ் முதன்மைத் தலைப்புகளில் பல கட்டுரைகளை துவக்கியவராக இருப்பதால் அவருக்கும் பாராட்டுப் பத்திரம் வழங்குதலே சிறப்பு. விக்கிகொள்கைகளுக்கு எதிராக பலர் உரையாடல்களில் பங்கேற்றுள்ளார்கள். மேலும் இரவி முன்பே கூறியபடி விருப்பு வெறுப்பின்றி புறவயமானத் தரவுகளைக் கொண்டு மட்டுமே பாராட்டுகள் தரப்படுதலே நன்று. எதிர்நிலை கொண்டவர்களின் பங்களிப்புகள் புறக்கணிக்கபடுவது சரியன்று.--மணியன் (பேச்சு) 21:42, 3 அக்டோபர் 2013 (UTC)Reply

கவனிக்கவும்

தொகு

Ajith photo‎ இந்த கட்டுரையை கவனிக்கவும்.

ஏன் மறந்துவிட்டீர்கள்

தொகு

வணக்கம் செல்வ சிவகுருநாதன். விக்சனரியில் அதிகமாகப் பங்களித்து வரும் பயனர்:பழ.கந்தசாமி அவர்களை ஏன் மறந்துவிட்டீர்கள்? தற்பொழுது, எனக்கு அளிக்க உள்ள சான்றிதழை அவருக்கு அளித்துவிடுங்கள். எனக்குப் பிறகு புதியதாக அடிக்கும்போது பார்த்துக்கொள்ளலாம். நன்றி--நந்தகுமார் (பேச்சு) 20:13, 27 செப்டம்பர் 2013 (UTC)

பாராட்டுப் பத்திரம்

தொகு

இன்னும் சில மணி நேரங்கள் முதல் நிகழ்வு முடியும் வரை அவ்வளவாக கணினியில் அமர முடியாது. பாராட்டுப் பத்திரம் கைக்கு வந்தவுடன் இற்றைப்படுத்துகிறேன். நிகழ்வுக்கு வருகிறவர்களில் நல்ல கையெழுத்து (கையொப்பம் அன்று) உள்ளவர்களாகப் பார்த்து பாராட்டுப் பத்திரத்தில் பெயர், சிறப்புப்பங்களிப்புகளைக் குறிப்பிடச் செய்து விடுவோம். யாருடைய கையொப்பத்தைப் பெறுவது என்று ஓடும் கருத்து வேறுபாடுகளுக்கு இணக்க முடிவு காணும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன் :) அச்சில் இருந்து வந்த பத்திரங்களை ஒப்படைப்பதோடு என் பணி முடிந்து விடும் :) --இரவி (பேச்சு) 22:12, 26 செப்டம்பர் 2013 (UTC)

புதுப்பயனர் கட்டுரை வார்ப்புரு

தொகு

வணக்கம் நண்பரே,

விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்த்தின் காரணமாக பல புதிய பயனர்கள் வருகை தருகின்றார்கள். அவர்களின் கட்டுரைகளில் விக்கியின் புரிதல் இன்றி இருப்பதனால் சில காலம் தாமதித்து நீக்கம் செய்ய வேண்டுகிறேன். உடனடியாக நீக்கப்பெறும் பொழுது பயனர்களுக்கு விக்கியின் மீதான ஆர்வம் குறையவும் புரிதலில் தவறு ஏற்படவும் வாய்ப்புள்ளது என்பதனால், புதிய பயனர்களின் கட்டுரைகளில் சேர்க்க புதிய வார்ப்புரு அமைக்கப்பெற்றுள்ளது. இதனை பயன்படுத்த: {{புதுப்பயனர் கட்டுரை|புதுப்பயனரின் பெயர்|date=இன்றய திகதி}} என இடுக. இதில் புதுப்பயனரின் பெயரும், திகதி கட்டாயமல்ல. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:50, 30 செப்டம்பர் 2013 (UTC)

நன்றி

தொகு

தங்களின் அன்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி .ஆர்.பாலா (பேச்சு) 06:51, 2 அக்டோபர் 2013 (UTC)Reply

தமிழ் விக்கிக்கு தேவைப்படும் கருவிகள் குறித்து வழிகாட்டல் தேவை

தொகு

வணக்கம் நண்பரே, தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்ட சென்னை கூடலின் பொழுது பல பயனர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் தேவைப்படுகின்ற கருவிகள் குறித்து அறிய முடிந்தது. அவ்வாறான தேவைகளை ஒருங்கினைத்து ஒரே பக்கத்தில் சரியான விளக்கத்துடன் தரும் பொழுது நிரலியில் பயற்சிப் பெற்ற தன்னாலர்வர்கள் உதவ முன்வருவார்கள் என்பதால் இங்கு அதற்கான பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பக்கத்தில் தங்களுடைய மேலான வழிகாட்டல்களையும், சிறப்பான எண்ணங்களையும் முன்வைக்க வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:34, 4 அக்டோபர் 2013 (UTC)Reply

முன்பக்க இற்றைப்படுத்தல்

தொகு

முன்பக்க இற்றைப்படுத்தல் தொடர்பாக ஆலமரத்தடியில் கருத்திட்டுள்ளேன். ஆர்முள்ள பயனர்களை இதில் சேர்த்துக் கொள்ளப்படுவது ஏற்கெனவே இற்றைப்படுத்தலில் ஈடுபட்டுள்ள உங்களுக்கு உதவியாக அமையும். உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். நன்றி. --Anton·٠•●♥Talk♥●•٠· 03:17, 11 அக்டோபர் 2013 (UTC) வணக்கம், தங்களது செய்திக்கு நன்றி. என்னால் முடிந்த பங்களிப்பை வழங்குகிறேன். நன்றி. ஆர்.பாலா (பேச்சு) 19:18, 13 அக்டோபர் 2013 (UTC)Reply

அடையாளம் காட்டா பயனரின் தொகுப்புகள்

தொகு

அடையாளம் காட்டா பயனரின் தொகுப்புகள் சிலவற்றை முன்னிலைப்படுத்தியுள்ளீர்கள். அத்தொகுப்புகளில் சில உரையாடலுக்கு உரியவையே. உரையாடி விட்டு முன்னிலைப்படுத்தியிருக்கலாம். அல்லது, அவரது பேச்சுப் பக்கத்தில் ஒரு குறிப்பிட்டிருக்கலாம். இதன் மூலம் இத்தகைய தொகுப்புகள் பற்றி அனைவருக்கும் ஒரு தெளிவிருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 06:54, 15 அக்டோபர் 2013 (UTC)Reply

குறிப்பிட்ட பயனரின் குறிப்புக்கள் தனிப்பட்ட பயனர்களைத் தாக்கும் நோக்கம் கொண்டவை. இவ்வாறான கருத்துக்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பாதகமானவை. இக் குறிப்புக்களில் உரையாடலுக்கு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தனிப்பட்ட பயனர்களைப் பற்றி இங்கே உரையாடுவது பொருத்தமற்றது. இது பிழையான முன்னுதாரணமாக அமையக்கூடும். ---மயூரநாதன் (பேச்சு) 09:35, 15 அக்டோபர் 2013 (UTC)Reply
மயூரநாதன், என்னுடைய கருத்தைச் சரியாக விளக்காததற்கு வருந்துகிறேன். நான் தேனி சுப்பிரமணியின் பேச்சுப் பக்கத்தில் நடந்த உரையாடல் பற்றிக் குறிப்பிடவில்லை. ஏன் அப்பயனரைத் தடுத்தீர்கள் என்றும் கேட்கவில்லை. அதே பயனர் கட்டுரைப் பெயர்வெளியில் சில தொகுப்புகளையும் செய்துள்ளார். எடுத்துக்காட்டுக்கு, இங்கும் இங்கும் (கட்டுரை ஒரு செய்திக் குறிப்பு என்று தொகுப்புச் சுருக்கத்துடன்) பார்க்கலாம். இவ்வாறான தொகுப்புகளை முன்னிலைப்படுத்தும் போது தகுந்த விளக்க அளித்தால் அவருடைய பங்களிப்புகளை மேம்படுத்திக் கொள்ள முடியும். --இரவி (பேச்சு) 09:52, 15 அக்டோபர் 2013 (UTC)Reply
  விருப்பம்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:40, 15 அக்டோபர் 2013 (UTC)Reply
இரவி, நீங்கள் சுட்டிக்காட்டிய பக்கங்களில் உள்ளவற்றையும் சுப்பிரமணியின் பேச்சுப் பக்கத்தில் உள்ளவைகளையும் வெவ்வேறாகப் பார்க்க முடியவில்லை. அவை எல்லாம் ஒரே நோக்கத்தைக் கொண்டவை என்பது மிகத் தெளிவாகவே உள்ளது. என்னைப் பொறுத்தவரை, பல பயனர்கள் சூட்டைத் தணிப்பதற்கு அரும்பாடுபட்டு முயற்சி செய்வதைக் குலைக்கும் நோக்குடனேயே அடையாளம் காட்டாத பயனர் முயற்சி செய்கிறார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தற்போதைய சூழ்நிலையில், இவ்வாறான கருத்துக்களை உரையாடலுக்கு எடுத்துக்கொள்வது விசமத்தனத்தை ஊக்குவிப்பதாகவும், நிலைமையை மேலும் சிக்கலாக்குவதாகவுமே முடியும். ஓரிரு வரிக் கட்டுரைகள் ஆயிரக் கணக்கில் உள்ளன. பல பயனர்கள் எழுதியுள்ளனர். இப்போது அந்தப் பிரச்சினையை எடுத்து பல பயனர்களுடைய அதிருப்திக்கு ஆளாக வேண்டாம். தேனி சுப்பிரமணியின் பேச்சுப் பக்கத்தில் அடையாளம் காட்டாத பயனரால் இடப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட வேண்டியவையே. தற்போது தமிழ் விக்கிக்குள் சிலர் அடையாளம் காட்டிக்கொள்ளாமல் பலமுனைத் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு நல்ல நோக்கம் எதுவும் இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை. இத்தகைய செயற்பாடுகளுக்கு இடங்கொடுத்து நம்முடைய பல ஆண்டுகால உழைப்பை வீணடித்துவிட வேண்டாம் என்று எல்லப் பயனர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.--- மயூரநாதன் (பேச்சு) 21:09, 15 அக்டோபர் 2013 (UTC).-  விருப்பம்--Kanags \உரையாடுக 21:30, 15 அக்டோபர் 2013 (UTC)--  விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:35, 17 அக்டோபர் 2013 (UTC)Reply
//நீங்கள் சுட்டிக்காட்டிய பக்கங்களில் உள்ளவற்றையும் சுப்பிரமணியின் பேச்சுப் பக்கத்தில் உள்ளவைகளையும் வெவ்வேறாகப் பார்க்க முடியவில்லை.// நான் இரண்டையும் தனித்தனியாகவே பார்க்கிறேன். தனியொரு பயனரைக் குறி வைத்துத் தாக்கும் போது உரிய நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், இது போல் கட்டுரைப் பக்கங்களில் நியாயமான கேள்விகளைக் கேட்கும் போது அதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றே கருதுகிறேன். இல்லாவிட்டால், அதே போன்றதொரு நடவடிக்கையைத் தொடர்ந்து வெவ்வேறு IPகளில் செய்யக்கூடியது இலகுவான ஒன்றே. எத்தனை IPகளைத் தடுத்துக் கொண்டும், பக்கங்களை மீள்வித்துக் கொண்டும் இருக்கப் போகிறோம்? முறையான விளக்கம் அளிப்பது உதவலாம். நன்றி.--இரவி (பேச்சு) 11:38, 16 அக்டோபர் 2013 (UTC)Reply
தடை செய்யப்படும் பங்களிப்பாளரின் சரியான தொகுப்புகளை நாம் முன்னிலையாக்க வேண்டாம். அவ்வாறு செய்வது கிட்டத்தட்ட அந்த அடையாளம்காட்டா பயனருக்கு எதிரான en:WP:POINT நடவடிக்கை போன்ற செயற்பாடாகும். நோக்கம் தவறாக இருந்தால்கூட சரியான தொகுப்புக்களை நாம் ஏற்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 05:55, 17 அக்டோபர் 2013 (UTC)   விருப்பம்--இரவி (பேச்சு) 12:15, 17 அக்டோபர் 2013 (UTC)Reply


அடையாளம் காட்டா பயனர்கள்

தொகு

சமீப காலமாக உரையாடல் பக்கங்களில் அடையாளம் காட்டும் பயனர்கள் தேவைக்கும் மிகுதியாக நீண்ட உரையாடல்களை செய்வது, ஏனைய பயனர்களுக்கு உரையாடல்களை வாசிப்பதில் மிகுந்த அயர்ச்சியை தோற்றுவிக்கலாம். இவ்வாறான சூழலில் வெறுப்புற்றவர்கள் தம்மை அடையாளம் காட்டாமல் பங்களித்து இருப்பர்.

சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் நன்று --ஸ்ரீதர் (பேச்சு) 05:08, 17 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றியுரைத்தல்

தொகு
  நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:45, 15 அக்டோபர் 2013 (UTC)Reply
 
நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:48, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

மிக்க நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி!!
--அஸ்வின் (பேச்சு) 03:19, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

 --நந்தகுமார் (பேச்சு) 08:16, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

அனைவரின் நன்றியுரைகளையும் உவகையுடன் ஏற்கிறேன். அனைவரும் இணைந்து தமிழ் விக்கியின் முன்னேற்றத்திற்கு உழைப்போம்! - நட்புடன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:56, 17 அக்டோபர் 2013 (UTC)Reply

இற்றைப்படுத்தல்

தொகு

வணக்கம் சிவகுருநாதன், முதற்பக்க வார்ப்புரு, வலைவாசல் இற்றைப்படுத்தலுக்கு ஜெகதீஸ்வரனை அழைத்ததற்கு நன்றி. அவருக்கு வேண்டிய உதவிகள் தேவைப்பட்டால் செய்கிறேன். இன்றைய மு.பா. இன்றைப்படுத்தலை யாரும் செய்யாததால் நானே செய்துவிட்டேன். உ.தெ. இற்றைப்படுத்தலுக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்கிறேன். அதனை சற்று சிறப்பாக்குதல் பற்றி பின்பு கருத்து தெரிவிப்பேன். பரிந்துரைகளையும் இடுவேன். குழப்பத்திலும் த.வி. இயக்கம் நின்றுவிடாதிருக்க முயல்வோம்.

உ.தெ: முன்பக்கத்தில் காட்சிப்படுத்துகையில் 2 அல்லது 3 வரிகள் இருக்குமாறு இருந்தால் நல்ல தோற்றம் கொடுக்குமா எனப் பாருங்கள். மேலும். ஒவ்வொரு வரிகளின் இடையிலும் இடைவெளி வருவது நன்றா என்பதையும் கவனியுங்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 12:38, 20 அக்டோபர் 2013 (UTC)Reply

  விருப்பம்
  • இவ்வார இற்றையிலேயே வரிகளின் இடையே இடைவெளி தந்துள்ளேன். எப்படி இருக்கிறது என்பதனைச் சொல்லுங்கள்!
  • வலைவாசலுக்கு ஜெகதீஸ்வரன், வார்ப்புருவிற்கு மாதரசன், கட்டுரைக்கு நந்தகுமார் இவர்களுக்கு அழைப்பு விடுத்தேன். நந்தகுமாரால் இப்போதைக்கு இயலாது என்பது அவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உங்களின் பரிந்துரைகள், வலு சேர்க்கும்! நன்றி.
  • எனக்கு இறை நம்பிக்கை உண்டு; நல்லதே நடக்கும்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:52, 20 அக்டோபர் 2013 (UTC)Reply
இவ்வார இற்றையிலேயே வரிகளின் இடையே இடைவெளி நல்ல தோற்றத்தையும், வாசிப்பவருக்கு இலகுவாக இருக்கும் என்று கருதுகிறேன். //நல்லதே நடக்கும்//   விருப்பம் --Anton·٠•●♥Talk♥●•٠· 13:05, 20 அக்டோபர் 2013 (UTC)Reply


உ.தெ , மகிழ்ச்சி

தொகு

தங்களுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு நான் தான் மகிழ வேண்டும். மேலும் பரிந்துரைகளில் கவனம் செலுத்துகிறேன். மூன்று வார இற்றைப்படுத்தலில் எவ்வாறு உதவுவது என செய்யக் கூறுங்கள், காத்திருக்கிறேன் :). மேலும் நீங்கள் சொல்லும் பணிகளை சொல்லும் நேரத்தில் செய்யத் தயாராக உள்ளேன் ! --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:53, 20 அக்டோபர் 2013 (UTC)Reply

டைம் ஆப் லவ் (திரைப்படம்)

தொகு
  • தமிழில் வெளி வந்த ஒரு வீடு இரு வாசல் திரைப்படத்தைப் போல அல்லது ஜப்பானியத் திரைப்படமான ரஷ்மோன் போல ஒரே படத்தினுள் மூன்று பாகங்கள். ஒவ்வொரு பாகத்திலும் அப்பெண் ஒரு இளைஞனை மணந்து கொண்டு மற்றவருடன் ரகசியக்காதலில் உள்ளார். இதில் குழப்பம் இருக்காது என நினைக்கிறேன்.
  • எழுத்துப் பிழைகளை சரிசெய்கிறேன். அலுவலகக் கணினியில் தொகுக்கும் போது பிழை திருத்துவதில் சில சங்கடங்கள். நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 04:11, 21 அக்டோபர் 2013 (UTC)Reply

முதற்பக்க வலைவாசல் தெரிவு

தொகு

வணக்கம் நண்பரே, விக்கிப்பீடியா:முதற்பக்க வலைவாசல் பக்கத்தின் பரிந்துரைப் பகுதியில் இரு வலைவாசல்களை தெரிவு செய்துள்ளேன். மற்ற வலைவாசல்களில் சில மேம்பாடுகள் தேவைப்படுகின்றன, அதனையும் பட்டியலி்ட்டுள்ளேன். இப்பக்கத்தினைக் கண்டு தங்களின் மேலான கருத்தினையும் வழிகாட்டலையும் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி, --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:17, 22 அக்டோபர் 2013 (UTC)Reply

நண்பரே,ஒரு நாள் நேர அவகாசம் தாருங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:23, 22 அக்டோபர் 2013 (UTC)Reply
அவரசம் ஏதுவும் இல்லை நண்பரே, ஏற்ற காலத்தினை எடுத்துக் கொள்ளுங்கள். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:30, 23 அக்டோபர் 2013 (UTC)Reply
தொடர்ந்து இங்கு உரையாடுவோம். நன்றி--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:27, 24 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றி அண்ணா

தொகு

அண்ணா,நீங்கள் நான் தொடஙகிய மிகிந்தலை எனும் கட்டுரையில் சில திருத்தங்கள் செய்திருந்தீர்கள். மிக்க நன்றி அண்ணா, இப்படிக்கு,உங்கள் அன்புத்தம்பி லோ.ஸ்ரீஹீரன்.

 

பயனர்களை உ.தெ கட்டுரைகளை உருவாக்க தூண்டல்

தொகு

காண்க: விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா#பயனர்களை உ.தெ கட்டுரைகளை உருவாக்க தூண்டல் --Anton·٠•●♥Talk♥●•٠· 15:21, 25 அக்டோபர் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி

தொகு
வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:56, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் நியமித்தல் பெற தொடர்பான பரிந்துரைக் குழு

தொகு

நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் நியமித்தல் தொடர்பான பரிந்துரைக் குழு உங்களை ஓர் உறுப்பினராக பங்களிக்க வேண்டுகிறேன். பங்களிக்க இசைவு எனில் குழு என்ற பகுதியில் உங்கள் பெயரைச் சேர்த்து விடுங்கள். நன்றி. --Natkeeran (பேச்சு) 02:22, 28 அக்டோபர் 2013 (UTC)Reply

முதற்பக்கத்தில் தமிழலக்கிய வலைவாசல்

தொகு

தாங்களும் பார்வதி அவர்களும் இணைந்து மேம்படுத்திய தமிழிலக்கிய வலைவாசலை முதற்பக்கத்தில் காட்சிபடுத்தியுள்ளோம். இந்த வலைவாசல் ஒரு மாதகாலத்திற்கு முதற்பக்கத்தில் காட்சிபடுத்தப்பட்டிருக்கும். தொடர்ந்து வலைவாசல்களில் ஈடுபாடு கொண்டு மேம்படுத்தி தரவும் வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:57, 1 நவம்பர் 2013 (UTC)Reply

தகவலுக்கு நன்றி, நண்பரே! தமிழீழ வலைவாசலின் உள்ளடக்கங்களை என்னால் முடிந்த அளவு மேம்படுத்தித் தர முயற்சிக்கிறேன். டிசம்பர் மாதத்தில் காட்சிப்படுத்துங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:01, 5 நவம்பர் 2013 (UTC)Reply

பதக்கம்

தொகு
  செயல்நயம் மிக்கவர் பதக்கம்
செயல் ந்லம் கொண்டு உழைப்பதற்க்கு வாழ்த்துக்கள் ♥ ஜீவதுவாரகன் ♥ ♀ பேச்சு ♀ 06:08, 2 நவம்பர் 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

அன்பிற்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:50, 4 நவம்பர் 2013 (UTC)Reply


 
உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
வணக்கம், Selvasivagurunathan m. உங்களுக்கான புதிய தகவல்கள் [[பயனர் பேச்சு: --அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:40, 5 நவம்பர் 2013 (UTC). |பயனர் பேச்சு: --அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:40, 5 நவம்பர் 2013 (UTC).]] பக்கத்தில் உள்ளன.Reply
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.


குறிப்பு

தொகு

ஈழத்தமிழர்கள் உரிமைகள் என்பது தமிழக் கோரிக்கையோடு முழுமையாகத் தொடர்புபடும் ஒன்றில்லை. ஆகவே இரு பகுப்புக்கள் இருப்பது பொருத்தமானது.--Natkeeran (பேச்சு) 16:13, 6 நவம்பர் 2013 (UTC)Reply

சரி, நட்கீரன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:35, 6 நவம்பர் 2013 (UTC)Reply
நற்கீரன் : )--Natkeeran (பேச்சு) 16:50, 6 நவம்பர் 2013 (UTC)Reply
மன்னிக்கவும் நற்கீரன்! இரண்டாவது முறையாக தவறாக அழைத்துவிட்டேன்; திருத்திக்கொள்கிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:57, 6 நவம்பர் 2013 (UTC)Reply

சர்தார் வல்லப்பாய் படேல்

தொகு

அன்பரே, நீங்கள் நீக்கிய இத்தலைப்பு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. விக்கிப்பீடியாவிலும் ஐம்பதற்கும் மேல் உள்ளிணைப்புள்ள இப்பக்கத்தைமட்டும் நீக்குவதால் கட்டுரைகளில் சிவப்பு இணைப்புகள் தெரிகிறது. தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். --நீச்சல்காரன் (பேச்சு) 09:56, 9 நவம்பர் 2013 (UTC)Reply

வழிமாற்று ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 10:31, 9 நவம்பர் 2013 (UTC)Reply
ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறேன். இனி மிகுந்த கவனத்துடன் இருப்பேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:15, 9 நவம்பர் 2013 (UTC)Reply

நன்றி

தொகு

நன்றி ஐயா, தெரியவில்லை என்றால் கற்றுக்கொள், தெரிகிறது என்றால் கற்றுக்கொடு- பிடல் காஸ்ட்ரோ. இதன்படி நடக்கவே முயல்கிறேன்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 03:32, 19 நவம்பர் 2013 (UTC)Reply

நன்றி

தொகு

நம் வீடு செழிப்பாய் இருந்தால் தானே நம் நாடும் செழிப்படையும்... அதுபோல, விக்கியிலும் அவரவர் ஊரை மேம்படுத்தினாலே போதுமே.. மொத்த விக்கியுமே செழிப்படையுமே... --ரத்தின சபாபதி(பேச்சு) 11:06, நவம்பர் 2013 (UTC)

உங்களுக்குத் தெரியுமா நவம்பர், 20

தொகு

வணக்கம் சிவகுரு. உங்களுக்குத் தெரியுமா தொகுப்பில் நான் சேர்த்த ஒரு குறிப்பைக் களைந்து விட்டீர்கள். காரணம் தெரியவில்லை.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:33, 20 நவம்பர் 2013 (UTC)Reply

Return to the user page of "Selvasivagurunathan m/தொகுப்பு 3".