விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/முந்தைய வேண்டுகோள்கள் 9

சண்முகம் (மே 18, 2012-மே 25, 2012) (வாக்கு: 30|0|0) தொகு

சண்முகம், தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பல்வேறு வகைகளில் பங்களித்து வருகிறார். கட்டுரையாக்கத்துடன் கட்டுரைகளில் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். பகுப்புகள் இணைக்கப்படாத கட்டுரைகளுக்கு ஆட்கேட்டு மூலம் பகுப்புகளை இணைத்து வருகிறார். மொழிபெயர்ப்பு விக்கியில் ஏராளமான சொற்றொடர்களை மொழிபெயர்த்துள்ளார். புதுப்பயனர்களை வரவேற்பதிலும் காப்புரிமை விபரங்கள் தரப்படாத படிமங்கள் பற்றியும் கவனஞ்செலுத்தி வருகிறார். விக்கித் தானுலாவி மூலமும் தொகுப்புகளைச் செய்து வருகிறார். சண்முகத்துக்கு நிருவாக அணுக்கம் அளிப்பது அவர் தனது பணிகளைத் திறம்படச் செய்வதற்கு உதவும். எனவே, சண்முகத்துக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 10:59, 18 மே 2012 (UTC)[பதிலளி]

நன்றி மதனாஹரன்.. தளப் பராமரிப்பு பணிகளுக்கு இது உதவும் என்பதால் ஏற்றுக்கொள்கிறேன், மேலும் என்னால் இயன்ற அளவு சிறப்பாக பங்களிக்க முயல்வேன்--shanmugam (பேச்சு) 11:11, 18 மே 2012 (UTC)[பதிலளி]
இந்தியச் சீர் நேரத்தின்படி இன்று 16:29இற்கு வாக்கெடுப்பு நிறைவு பெறுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 02:07, 25 மே 2012 (UTC)[பதிலளி]
வாக்கெடுப்பு நிறைவு பெற்றுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 04:21, 26 மே 2012 (UTC)[பதிலளி]
வாக்கெடுப்பு முடிவுக்கு ஏற்ப, சண்முகத்துக்கு நிருவாக அணுக்கத்தைச் செயற்படுத்தி உள்ளோம். வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 06:21, 26 மே 2012 (UTC)[பதிலளி]
வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள், அனைவரின் நம்பிக்கைக்கு ஏற்ப சிறப்பாக செயல்படுவேன்--சண்முகம் (பேச்சு) 06:47, 26 மே 2012 (UTC)[பதிலளி]

ஆதரவு தொகு

  1. மதனாகரன் (பேச்சு) 10:59, 18 மே 2012 (UTC)[பதிலளி]
  2. தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:07, 18 மே 2012 (UTC)[பதிலளி]
  3. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு)11:22, 18 மே 2012 (UTC)[பதிலளி]
  4. பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
  5. ஸ்ரீகாந்த் (பேச்சு) 11:55, 18 மே 2012 (UTC)[பதிலளி]
  6. மணியன் (பேச்சு) 13:48, 18 மே 2012 (UTC)[பதிலளி]
  7. தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:58, 18 மே 2012 (UTC)[பதிலளி]
  8. கலை (பேச்சு) 15:05, 18 மே 2012 (UTC)[பதிலளி]
  9. கிருஷ்ணபிரசாத் /உரையாடுக 15:44, 18 மே 2012 (UTC)[பதிலளி]
  10. கார்த்தி கரூர் 21.33, மே 2012.
  11. மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 16:24, 18 மே 2012 (UTC)[பதிலளி]
  12. Nan (பேச்சு) 16:56, 18 மே 2012 (UTC)[பதிலளி]
  13. பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:02, 18 மே 2012 (UTC)[பதிலளி]
  14. பவுல்-Paul (பேச்சு) 17:05, 18 மே 2012 (UTC)[பதிலளி]
  15. இந்த நிருவாக அணுக்கம் இன்னும் சிறப்பாகப் பணியாற்ற உதவும் என்பது என் நம்பிக்கை. --Kanags \உரையாடுக 22:14, 18 மே 2012 (UTC)[பதிலளி]
  16. சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 22:42, 18 மே 2012 (UTC)[பதிலளி]
  17. சோடாபாட்டில்உரையாடுக 01:37, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  18. மாகிர் (பேச்சு) 01:56, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  19. --Natkeeran (பேச்சு) 02:56, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  20. மயூரநாதன் (பேச்சு) 04:37, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  21. --சிவக்குமார் \பேச்சு 07:52, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  22. --எஸ்ஸார் (பேச்சு) 08:29, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  23. ---பயனர்:Fasly (பேச்சு)--dj fa (பேச்சு) 09:17, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  24. --பரிதிமதி (பேச்சு) 10:14, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  25. ---செல்வா (பேச்சு) 14:20, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  26. --Sengai Podhuvan (பேச்சு) 09:58, 20 மே 2012 (UTC)[பதிலளி]
  27. சுந்தர் \பேச்சு 06:19, 21 மே 2012 (UTC)[பதிலளி]
  28. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 08:45, 21 மே 2012 (UTC)[பதிலளி]
  29. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:18, 22 மே 2012 (UTC)[பதிலளி]
  30. --இரவி (பேச்சு) 12:02, 23 மே 2012 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு தொகு

நடுநிலை தொகு

கருத்து தொகு

  • சண்முகம் மிகவும் பயனுள்ள பராமரிப்புப் பணிகளை சீராகச் செய்து வருகிறார். நிர்வாகப் பொறுப்பு வழங்கப்பட்டால் நிச்சயமாக சிறப்பாகப் பணியாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. நானே அவரைப் பரிந்துரைக்க எண்ணியிருந்தேன். தக்க சமயத்தில் பரிந்துரைத்த மதனாஹரனுக்கும் நன்றிகள்.--மணியன் (பேச்சு) 13:52, 18 மே 2012 (UTC)[பதிலளி]
நன்றி மணியன். நிச்சயம் தங்கள் நம்பிக்கைக்கு ஏற்றவாறு பங்களிப்பேன்--சண்முகம் (பேச்சு) 15:11, 18 மே 2012 (UTC)[பதிலளி]

கேள்விகள் தொகு

நற்கீரனின் கேள்விகள் தொகு

பின்வரும் கேள்விகளுக்கு பதில் தந்து உதவ முடியுமா. நன்றி.

  • தமிழ் விக்கிப்பீடியாவில் நாம் இன்னும் மேலும் சிறப்பாகச் செய்யக் கூடிய மூன்று விடயங்களைக் கூற முடியுமா?
  • தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாகிகள் எதிர்நோக்கும் முக்கிய சிக்கல்கள் எவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
  • புதுப் பயனர் வந்து ஒருவரிக் கட்டுரைளை இடுகிறார். இதை எவ்வாறு கையாள்வீர்கள்?

--Natkeeran (பேச்சு) 01:17, 19 மே 2012 (UTC)[பதிலளி]

பதில்கள்

  1. அனைத்து விதமான கொள்கை மற்றும் வழிகாட்டுதல் பக்கங்களையும் தமிழ் விக்கிக்கேற்ப தமிழில் உருவாக்க வேண்டும். ஏற்கனவே முக்கியமான கொள்கைகள் இருந்தாலும் பலவற்றிற்கு ஆங்கில விக்கியையே நாட வேண்டியுள்ளது.
  2. ஏற்கனவே நடந்த உரையாடல்படி கட்டுரைகளை மேம்படுத்துதல் மற்றும் ஆதாரங்களைச் சேர்த்தல் ஆகியன நமது விக்கியை மேம்படுத்தும்.
  3. இப்போதுள்ள படி ஆரோக்கியமான உரையாடல்கள் மூலம் அனைத்திற்கும் தேவையான அனைத்து மாற்றங்களையும் செய்வது நமது விக்கிசமூகத்தை மேலும் சிறப்பாக்கும்.
  4. இதுதவிர முக்கிய கட்டுரைகள் உருவாக்கம் போன்றவை ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது.
  • தமிழ் விக்கிப்பீடியாவைப் பொருத்தவரை அவ்வப்போது சாதி தொடர்பான கட்டுரைகளில் எழும் தொகுப்புப் போர், தானியங்கித் தமிழாக்க கட்டுரைகளை இடுபவர்கள், விசமிகள் அதிகமாக தொகுப்பதில்லை எனினும் சில நேரங்களில் செய்யும் தொகுப்புகள், பயனர் தகவல்கள் மற்றும் பதிப்புரிமை உள்ள தகவல்களை கட்டுரையில் இடுபவர்கள், இப்பகுப்பில் உள்ள பணிகளைச் செய்தல் போன்றவையே செய்ய வேண்டிய பராமரிப்பு மற்றும் நிர்வாகப் பணிகள் எனினும் நான் அறிந்தவரை தற்போதைக்கு பெரிய சிக்கல்கள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. edit warring, content dispute போன்ற சிக்கல்கள் சமூகம் இன்னும் வளரும் போது வருங்காலத்தில் நடக்க வாய்ப்புள்ளது.
  • புதுப்பயனர் ஒரு வரிக் கட்டுரையை முதலில் இட்டால் கலைக்களஞ்சியத்திற்கு பொருத்தமான கட்டுரை எனில் சிறிது மேம்படுத்தி அந்தப் பயனரிடம் வேண்டுகோள் விடுப்பேன். மீண்டும் மீண்டும் அதே போல செய்தால் குறித்த கால நீக்கல் வேண்டுகோள் விடுக்கலாம்.
அருமையான, எடுத்துக்க்காட்டுக்களுடனான பதில்கள். மிக்க நன்றிகள். --Natkeeran (பேச்சு) 02:56, 19 மே 2012 (UTC)[பதிலளி]
நல்ல பதில்கள் சண்முகம். துடிப்பான இளையவர்களின் வருகை விக்கியை செம்மைப்படுத்தட்டுமாக! -- மாகிர் (பேச்சு) 03:49, 19 மே 2012 (UTC)[பதிலளி]
இரவியின் கேள்விகள் தொகு

சண்முகம், பின்வரும் சூழ்நிலைகளில் உங்கள் அணுகுமுறைய அறிந்து கொள்ள விரும்புகிறேன்:

  • புதிய பயனர்களின் ஒருவரிக் கட்டுரைகள் பற்றிய தங்கள் அணுகுமுறை நன்று. இதே புதுப்பயனர் ஒரு முதியவராக, விக்கி நடைமுறைகளைப் புரிந்து கொள்ள முடியாதவராக இருக்கிறார். அவர் இடும் உள்ளடக்கம் பயனுள்ளதாக இருந்தாலும் கலைக்களஞ்சிய நடையில் இல்லை. இதனை எப்படி அணுகுவீர்கள்?
  • பேச்சு:காப்பி போன்ற உரையாடலில் இரு பயனர்கள் தங்கள் கருத்துகளில் விடாப்பிடியாக மாற்றி மாற்றிக் கட்டுரையைத் தொகுத்துக் கொண்டிருந்தால் அதனை எப்படி அணுகுவீர்கள்?
  • தமிழ் விக்கிப்பீடியா கொள்கைகள் / நடைமுறைகளில் எவை மிகக் கடுமையாக உள்ளதாக நினைக்கிறீர்கள்? எவை அளவுக்கு மீறி மிகவும் இளக்கமாக உள்ளதாக எண்ணுகிறீர்கள்? தமிழ் விக்கிப்பீடியாவை மேம்படுத்த புதிதாக சில கொள்கைகளை உருவாக்கலாம் எத்தகைய கொள்கைகளை உருவாக்கலாம் என இரு எடுத்துக்காட்டுகள் தருவீர்களா?
  • ஒரு நிறுவனம் அல்லது பயனர் பல ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தி ஒரே பயனர் கணக்கின் கீழ் கட்டுரைகளைப் பதிவேற்றும் போது வரக்கூடிய சிக்கல் என்ன? இதில் உங்கள் அணுகுமுறை / நிலைப்பாடு என்னவாக இருக்கும்? சிக்கலாக நீங்கள் கருதக்கூடியதை எவ்வாறு தீர்க்க முனைவீர்கள்?

நன்றி--இரவி (பேச்சு) 08:20, 19 மே 2012 (UTC)[பதிலளி]

பதில்கள்

  • முதலில் அக்கட்டுரையை கலைக்களஞ்சிய நடைக்கு மாற்றி விட்டு அந்த பயனருக்கு விளக்க முயல்வேன். பிறகும் அந்த பயனருக்கு புரியவில்லை எனில் அதற்குரிய tag (விக்கியாக்கம், துப்புரவு) போன்றவற்றை இணைத்து விடுவேன் (நேரம் கிடைக்கும்போது நானோ மற்ற பயனர்களோ கலைக்களஞ்சிய நடைக்கு மாற்றிவிடக்கூடுமல்லவா அதனால்).
  • கட்டுரையை விடாமல் தொகுத்துக் கொண்டிருந்தால் கட்டுரையை காப்பு செய்து விட்டு உரையாடல் பக்கத்தில் உரையாடி முடிவுக்கு வரச்சொல்லலாம். அப்படியும் ஒரு முடிவுக்கு வரவில்லையெனில் மற்ற விக்கியர்களின் கருத்துக்களைக் கேட்டு அனைவரின் முடிவுக்கேற்ப சரியான கருத்தை சேர்க்க முயல்வேன்.
  • தமிழ் விக்கி கொள்கைகளைப் பொறுத்த வரை மிக கடுமையாகவோ அல்லது மிக இளக்கமாகவோ உள்ளதாக எதுவும் எனக்கு தோன்றவில்லை. நான் சில பயனர்களின் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட சரியான கொள்கைகள் மற்றும் வழிகாட்டி பக்கங்களை தேடியபோது சில தமிழ் விக்கியில் இல்லை அல்லது பகுதியாக இருந்தது (எனவே அவற்றை முழுவதுமாக உருவாக்க வேண்டும் என்பது எனது விருப்பம்).
புதிதாக கொள்கைகளை உருவாக்குவது என்பது ஒரு குறிப்பிட்ட சூழல் வரும்போது அதற்கேற்றவாறு உருவாக்கலாம் என கருதுகிறேன். எகாவாக ஏதாவதொன்றை பற்றி உரையாடல் வரும்போது அதற்கேற்ற கொள்கைளை உருவாக்கலாம் என்பது எனது கருத்து. உதவி மற்றும் வழிகாட்டுதல் பக்கங்களை உடனே தமிழில் உருவாக்குவது நல்லது. எகாவாக தற்போது ஒரு தொகுத்தல் முரண்பாடு தொடர்பான உரையாடலில் en:Help:Edit conflict இதையே கூற வேண்டியிருந்தது.
en:Category:Wikipedia_humor போன்ற சில கொள்கைகள் பயனர்களுக்கு இடையே இறுக்கத்தை குறைக்க இயலும். மேலும் புதிய கொள்கைகள் பற்றி கூறவேண்டுமானால் விக்கியில் நடக்கும் நிகழ்வுகளைப் பொறுத்து தேவைப்படும் கொள்கைகளை அனைவரின் கருத்தையறிந்து உருவாக்குவதே சிறந்தது என்பது எனது கருத்து.
  • ஒரு நிறுவனத்தின் பல ஊழியர்கள் ஒரே பயனர் கணக்கின் கீழ் பல கட்டுரைகளைத் தொகுப்பது சரியானதில்லை என எனக்குத் தோன்றுகிறது (முதலில் அவ்வாறு பலர் ஒரே கணக்கின் கீழ் தொகுப்பது கொள்கைப்படி சரியா? நானறிந்தவரை தவறு என்றே நினைக்கிறேன்). இங்கு பங்களிப்பவர்கள் யாவரும் தன்னார்வலர்களே. ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் ஒரே கணக்கின் கீழ் பங்களிக்க செய்வதென்பது மற்ற பங்களிப்பாளர்களின் மதிப்பை குறைக்கலாம். எனவே தனித்தனி கணக்குகளில் பங்களிக்க செய்யலாம். நிறுவனம் பணிக்கு அமர்த்துவதன் மூலம் உருவாக்கப்படும் கட்டுரைகள் தரமிக்கதா என ஆராய வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கலாம். அப்படியும் தரமற்ற கட்டுரைககளை பதிவேற்றினால் அனைத்து பயனர்களின் கருத்துக்கேற்ப தடுப்பது அல்லது நீக்குவது குறித்து முடிவு செய்யலாம்.--சண்முகம் (பேச்சு) 10:16, 19 மே 2012 (UTC)[பதிலளி]

சண்முகம், தங்கள் தெளிவான பதில்களைக் கண்டு மகிழ்ச்சி.

1. சிலருக்குப் பேச்சுப் பக்கம் இருப்பதே தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்கள். எனவே, பயனர் பக்கத்தில் தொடர்பு விவரங்கள் இருந்தால், மின்மடல் மூலமாகவும் தொலைபேசி வாயிலாகவும் கூட முயலலாம். இவ்வாறு தொடர்பு கொண்டு நேரடியாக ஒருவர் பேசும் போது இன்னும் இலகுவாகப் புரிந்து கொள்வார்கள். அவரது ஊருக்கு அருகில் விக்கி பயிற்சிப் பட்டறைகள் நடக்கும் போது அவரை அழைக்கலாம். இது சற்று கூடுதல் முயற்சி தான். ஆனால், தமிழ் விக்கிப்பீடியா போன்ற வளரும் சிறிய விக்கிகளில் இணையத்துக்கு வெளியேயான தொடர்புகளும் பெரிதும் உதவி வருகின்றன.

2. மூன்றாவது கேள்விக்கான உங்கள் பதில் தான் இரண்டாம் கேள்விகான பதில் :) காப்பியா குளம்பியா, பாலமா அணையா, சூரியனா பரிதியா என்று தனித்தனியாக ஒவ்வொரு பக்கமாக உரையாடுவதை விட தனித்தமிழ்ச் சொற்கள் பயன்பாடு பற்றிய கொள்கை முடிவு / வழிகாட்டலை நோக்கி நகரலாம்.

3. கொள்கைப் பக்கங்கள், உதவிப் பக்கங்களைத் தமிழாக்க வேண்டிய தேவையை நினைவூட்டியதற்கு நன்றி. செய்வோம்.

4. ஒரே பயனர் கணக்கில் பலர் பங்களிப்பது, பல பயனர் கணக்குகளில் ஒரே ஆளே அடையாளம் மாற்றி மாற்றிப் பங்களிப்பது இரண்டுமே தவறு தான்.

//நிறுவனம் பணிக்கு அமர்த்துவதன் மூலம் உருவாக்கப்படும் கட்டுரைகள் தரமிக்கதா என ஆராய வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கலாம். அப்படியும் தரமற்ற கட்டுரைககளை பதிவேற்றினால் அனைத்து பயனர்களின் கருத்துக்கேற்ப தடுப்பது அல்லது நீக்குவது குறித்து முடிவு செய்யலாம்//

இதைத் தான் கூகுள் திட்டத்தில் செய்தோம். கட்டணத் தொகுப்புகள் / ஊழியத் தொகுப்புகள் பற்றிய உங்கள் கருத்தையும் தெரிவிப்பீர்கள் என்று எண்ணினேன். எனினும், விரிவாக உரையாடுவதற்கு இது சரியான இடம் இல்லை.

நீங்கள் அண்மைய மாற்றங்களைக் கவனித்து உடனுக்கு உடன் சரியான நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டுக்குரியது. மணியன் சொன்னபடி, நானும் உங்களை நிருவாகப் பணிக்கு முன்மொழிய எண்ணியிருந்தேன். நிருவாகப் பொறுப்பு பெற்று தொடர்ந்து சிறப்புடன் பங்களிக்க என் உளமார்ந்த வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 11:06, 23 மே 2012 (UTC)[பதிலளி]

நன்றி இரவி--சண்முகம் (பேச்சு) 06:45, 26 மே 2012 (UTC)[பதிலளி]

பார்வதிஸ்ரீ (மே 19, 2012-மே 26, 2012) (வாக்கு: 29|0|0) தொகு

பார்வதிஸ்ரீ அவர்கள் கட்டுரை ஆக்கம், திருத்தம், ஒழுங்குபடுத்தல் பணிகளிலும், தமிழ் விக்கிப்பீடியாவை பல முனைகளில் அறிமுகப்படுத்துவதிலும், ஊடகப் போட்டி, குறுவட்டுத் திட்டம் போன்ற பல்வேறு செயற்பாடுகளிலும் மிகச் சிறப்பாகப் பங்களித்து வருகிறார். தமிழாரிசியர் என்ற வகையிலும் சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறார். இவரை நிர்வாகியாகப் பெறுவது தமிழ் விக்கிப்பீடியாவிற்கும், விக்கித் திட்டங்களுக்கும் வளம் சேர்க்கும். பார்வதிஸ்ரீ அவர்களுக்கு நிர்வாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கின்றேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 05:43, 19 மே 2012 (UTC)[பதிலளி]

இந்தியச் சீர் நேரப்படி இன்று 11:13இற்கு வாக்கெடுப்பு நிறைவு பெறுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 04:21, 26 மே 2012 (UTC)[பதிலளி]
வாக்கெடுப்பு நிறைவு பெற்றது. --மதனாகரன் (பேச்சு) 05:43, 26 மே 2012 (UTC)[பதிலளி]
வாக்கெடுப்பு முடிவுக்கு ஏற்ப, பார்வதிக்கு நிருவாக அணுக்கத்தைச் செயற்படுத்தி உள்ளோம். வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 06:21, 26 மே 2012 (UTC)[பதிலளி]

ஆதரவு தொகு

  1. --Natkeeran (பேச்சு) 05:45, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  2. --Kanags \உரையாடுக 05:46, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  3. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:52, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  4. --Nan (பேச்சு) 06:03, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  5. சண்முகம் (பேச்சு) 06:16, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  6. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:46, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  7. --சிவக்குமார் \பேச்சு 07:56, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  8. --எஸ்ஸார் (பேச்சு) 08:29, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  9. மயூரநாதன் (பேச்சு) 09:04, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  10. ----கலை (பேச்சு) 10:07, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  11. --பரிதிமதி (பேச்சு) 10:15, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  12. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 10:18, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  13. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 11:25, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  14. --மணியன் (பேச்சு) 13:42, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  15. ---செல்வா (பேச்சு) 14:29, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  16. மதனாகரன் (பேச்சு) 15:41, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  17. --சோடாபாட்டில்உரையாடுக 19:15, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  18. ஸ்ரீகாந்த் (பேச்சு) 21:08, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  19. பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
  20. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 22:56, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  21. --கார்த்தி கரூர்,11.46, 20 மே 2012 (UTC)
  22. --Sengai Podhuvan (பேச்சு) 09:55, 20 மே 2012 (UTC)[பதிலளி]
  23. ----பவுல்-Paul (பேச்சு) 01:34, 21 மே 2012 (UTC)[பதிலளி]
  24. சுந்தர் \பேச்சு 06:19, 21 மே 2012 (UTC)[பதிலளி]
  25. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 08:50, 21 மே 2012 (UTC)[பதிலளி]
  26. மாகிர் (பேச்சு) 01:29, 22 மே 2012 (UTC)[பதிலளி]
  27. --கிருஷ்ணபிரசாத் /உரையாடுக 16:26, 22 மே 2012 (UTC)[பதிலளி]
  28. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:24, 22 மே 2012 (UTC)[பதிலளி]
  29. --இரவி (பேச்சு) 12:02, 23 மே 2012 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு தொகு

நடுநிலை தொகு

கருத்து தொகு

  • மிகச்சிறந்த முறையில் பல வகையான தலைப்புகளில் மிக விரைவாக பங்களிப்பவர் என்பது மட்டும் அல்லாமல், கட்டுரையாக்கத்தில் கூட்டுழைப்பு நல்குவது மட்டும் அல்லாமல், மிகசிறந்த ஊடகக்கோப்புகள் தந்தவர் என்பது மட்டும் அல்லாமல், பொதுவாக தமிழ் விக்கியின் வளர்ச்சியில் பார்வதி காட்டும் ஆர்வம் நல்வளர்ச்சிக்கு இடம் தரும் என்று நம்புகின்றேன்.

கேள்விகள் தொகு

இரவி கேள்விகள் தொகு
  1. மேலும் பல புதிய பயனர்களை ஈர்க்க, இருக்கிற பயனர்களை இன்னும் உற்சாகமாக பங்களிக்க வைக்க, என்ன வகையான முயற்சிகளைத் தமிழ் விக்கிப்பீடியா மேற்கொள்ளலாம் என்று எண்ணுகிறீர்கள்?
  2. தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைகள் ஏதேனும் பங்களிப்பு ஆர்வத்தைக் குன்றச் செய்வதாக, போதிய உதவியை அளிக்காமல் உள்ளதாக எண்ணுகிறீர்களா? இவற்றை எப்படித் தீர்க்க முனைவீர்கள்?
  3. ஒரு புதிய கட்டுரைப் பக்கம் தவறானது எனக் கருதி உடனடியாக நீக்கி விடுகிறீர்கள். ஆனால், கட்டுரையை உருவாக்கிய பயனர் தொடர்ந்து கடுமையான மறுப்பு தெரிவித்து உரையாடுவதோடு மட்டும் அல்லாமல் மீண்டும் மீண்டும் அக்கட்டுரையை உருவாக்க முனைகிறார். இதனை எப்படி அணுகுவீர்கள்?
  4. தமிழ் விக்கிப்பீடியாவின் மொழி நடை குறித்த சில உரையாடல்கள் தங்களுக்கு அயர்வளிப்பதாகவும் நேர விரயமாக உள்ளதாகவும் என முன்பு குறிப்பிட்டு உள்ளீர்கள். ஒரு தமிழாசிரியர் என்ற முறையிலும் ஒரு நிருவாகப் பயனர் என்ற முறையிலும் வருங்காலத்தில் இச்சிக்கலைத் தீர்க்க தமிழ் விக்கிப்பீடியர்கள் என்ன வகையான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று எண்ணுகிறீர்கள்?

நன்றி--இரவி (பேச்சு) 08:37, 19 மே 2012 (UTC)[பதிலளி]

பார்வதி ஸ்ரீ பதில்கள் தொகு
    • கட்டுரைப்போட்டி, ஊடகப்போட்டி போன்ற போட்டிகள் மூலம் நிறைய புதுப்பயணர்கள் வருகை அதிகரித்துள்ளது. மேலும் புதியவர்களை ஈர்க்க, விக்கி பட்டறைகளை ஏற்பாடு செய்யலாம். குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட ஊர்களில் இணைந்து நடத்தத் திட்டமிடலாம். (குறிப்பாக கல்லூரி மற்றும் பள்ளிகளில்)
    • ஏதேனும் ஒரு சிறப்புநாள் கொண்டாட்டத்துடன் இணைந்து விக்கிபீடியாவில் கட்டுரையாக்கத்திற்கான அழைப்பு விடலாம் உதாரணமாக விடுதலை நாள், புத்தக நாள், மே நாள், மகளிர் நாள், அறிவியல் நாள் போன்றவை. அன்றைய தினம் அல்லது வாரம் அல்லது அந்த மாதங்களில் அக்குறிப்பிட்ட தலைப்புகளுள்ள கட்டுரைகளை, உருவாக்க, மேம்படுத்த வேண்டுகோள் விடுக்கலாம். (அன்மைய மாற்றங்கள் பக்கத்தில் தேவைப்படும்கட்டுரைகள், கூட்டுமுயற்சி- உள்ளதுபோல்)
    • மேலும் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் தேவையான ஏராளமான கட்டுரைகள் புதையல் போல விக்கியில் உள்ளதால் கல்வித்துறையினர் மற்றும் அரசுத் துறையினருடன் கைகோர்த்து சில திட்டமிடல்களில் ஈடுபடலாம். இதற்கு பிழைகளற்ற மற்றும் தரமான கட்டுரைகள் அவசியம் எனவே இதனை மேம்படுத்தத் திட்டமிடலாம். குறுந்தட்டுத் திட்டம் இதற்கு பெருவலிமை சேர்க்கும் என நினைக்கிறேன்
    • கட்டுரையாக்கங்களைப் பொறுத்தவரையில் எனக்கு தொடக்கம் முதலே நிர்வாகிகளின் வழிகாட்டுதல்கள் இருந்து வந்துள்ளன. எனவே அவ்வழிகாட்டுதல்களால் தான் நான் இங்கு வரையில் வந்துள்ளதாக எண்ணுகிறேன். மேலும் உரையாடித் தீர்வுகாணுதல், நாகரிகம் பேணுதல், பாராட்டு, பதக்கம் போன்ற நடைமுறைகளால், ஆர்வம் குறைதல் எனபதற்கு இடமில்லை. அது ஒரு பயனரின் நேரம் மற்றும் மனநிலையைப் பொறுத்ததே.
    • ஓரு பயனரின் பங்களிப்பு குறித்தது இது. எனவே அவர் தொடர்ந்து பங்களிக்கும் பயனரா, புதுப் பயனரா என்பதைப் பொறுத்தது. அவருக்குத் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் மட்டுமே திருத்த முயல்வேன். தொடர்ந்து அவ்வாறு முயல்வாராயின் ஒரு குறிப்பை இட்டு மற்ற நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். பின் அனைவரின் கருத்துகளுக்கும் ஏற்ப முடிவு செய்வேன்.
    • தமிழ் விக்கியின் மொழிநடை பற்றிய உரையாடல்களுள் கிரந்தம் கிரந்தமகற்றல் தொடர்பான உரையாடலை மட்டுமே நான் குறிப்பிட்டிருந்தேன்.... எனது தனிப்பட்ட கருத்தாயின் பங்களிப்பாளர்கள் குறைவாயுள்ள தமிழ் விக்கியில் கிரந்தம், கிரந்தமகற்றல் போன்ற இன்றுவரை முடிவு எட்டப்படாத மிக நீண்ட உரையாடல்கள் அயர்வளிப்பவையே எனவே இவற்றை சற்று மறந்து அப்பங்களிப்பை ஊக்குவிப்பேன்.. பின்னர் உரிய வழிகாட்டுதல் தந்து திருத்தம் செய்யக் கோருவேன் அல்லது நானே திருத்தம் செய்துவிட்டு அதற்கான குறிப்பொன்றையும் இட்டுவிடுவேன்.....
    • நிர்வாகப்பயனர் என்ற முறையில் இச்சிக்கல் குறித்து ஒரு கொள்கை முடிவு எட்டப்படுதல் அவசியமென்றே கருதுகிறேன்....... இதற்கான மொழிநடை குறித்த கொள்கைகள், விளக்கங்கள், நிச்சயம் தேவை.. முதலில் தனித்தமிழ் குறித்து பங்களிப்பாளர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இது குறித்து கலந்துரையாடி பெரும்பான்மையோரின் கருத்துக்கொப்பவே செயல்படுவேன்.

நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:15, 19 மே 2012 (UTC)[பதிலளி]

பார்வதிக்கு வணக்கம். சீரிய திட்டங்களைக் கொண்டுள்ளீர்கள். சிறப்பாகச் செயல்படுங்கள் என வாழ்த்துகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 23:29, 21 மே 2012 (UTC)[பதிலளி]

பார்வதி, விருப்பத் தெரிவில் விடாமல் எல்லா கேள்விகளுக்கும் பதில் தந்ததற்கு நன்றி :)

1. நம்மில் பலரும் பயிற்சிப் பட்டறைகள் நடத்திய அனுபவத்தில், அதற்குத் தேவைப்படும் நேரம் / உழைப்பு / செலவு ஆகியவற்றை ஒப்பிடும் போது, அதன் மூலம் கிடைக்கும் பலன் குறைவு எனவே கருதுகிறோம். அதே வேளை, தள அறிவிப்பில் வெளியிட்ட பங்களிப்புத் தூண்டல்கள் போன்றவை நல்ல பலன் அளித்துள்ளதாக உணர்கிறோம். எனவே, அடுத்தடுத்த பயிற்சிப் பட்டறைகளைத் திட்டமிடும் போது, இதனைக் கருத்தில் கொள்வது நன்று. பள்ளி / கல்லூரிகளை விட, சில இலக்குப் பயனர்களைக் குறிவைத்து பட்டறை நடத்துவது பயனுள்ளதாக இருக்குமா என்று எண்ணுகிறேன். எடுத்துக்காட்டுக்கு, ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், இதழாளர்கள், நூலகர்கள் போன்றவர்கள். இவர்கள் மூலம் இன்னும் பலருக்கும் சென்றடையக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இது பயன் அளிக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால், முயன்று பார்த்தால் தான் தெரியும்.

குறிப்பிட்ட தலைப்பில், ஒரு நாள் / வாரம் கட்டுரை ஆக்கங்கள் செய்வது நன்று. மணியனும் இதைப் பற்றிக் கூறி இருந்தார். வரும் ஒலிம்பிக் விளையாட்டுகளை முன்னிட்டு இதனைச் செய்து பார்க்கலாம் என்று கருதுகிறேன். அதன் பயனைக் கண்ட பிறகு, அதைப் போன்ற இன்னும் பல தலைப்புகளை முயலலாம்.

3. உங்கள் முடிவில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் பயனருக்கு முறையான மூன்று எச்சரிக்கைகள் தந்த பிறகு சில நாட்களுக்குப் பயனர் கணக்கைத் தடை செய்யலாம். தங்கள் இயல்பின் காரணமாக மென்மையான அணுகுமுறை கொண்டிருந்தாலும், தேவைப்படும் இடங்களில் ஒரு நிருவாகியாக நடவடிக்கை எடுக்கத் தயங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

4. இடாயிட்சுலாந்தா செருமனியா என்பது கிரந்தப் பிரச்சினை இல்லை. அங்கு நீங்கள் அவ்வாறு குறிப்பிட்டிருந்ததாலேயே மொழிநடை என்று பொதுவாக குறிப்பிட்டேன். திரும்பத் திரும்ப ஒரே விசயம் பல்வேறு பக்கங்களில் பேசப்படும் போது அயர்வாகத் தோன்றுவது எல்லாருக்கும் உள்ளது தான். எனவே, அதில் இருந்து கொள்கை முடிவுகள் / வழிகாட்டல்கள் நோக்கி நகர முற்படுவது தான் திறன் வாய்ந்ததாக இருக்கும். கிரந்தம் குறித்த இத்தகைய முயற்சிக்கு முன் அது குறித்த விளக்கக்குறிப்புகள், தனித்தமிழ் பற்றிய சரியான விழிப்புணர்வு தேவை என்ற தங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.

மேற்கண்ட கேள்விகள் / தேவைகள் குறித்து உரிய நேரத்தில் அதற்குத் தகுந்த பக்கங்களில் தொடர்ந்து உரையாடுவோம்.

அண்மைக் காலத்தில் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கிடைத்த மிகச் சிறந்த பங்களிப்பாளர்களில் ஒருவராக உங்களைக் கருதுகிறேன். நீங்கள் மிகவும் மாறுபட்ட தலைப்புகளில் கூட கவனம் செலுத்தி முழுமையாக்குவதும் திட்டமிட்டு முறையாக கட்டுரையாக்கம் செய்வதும் அரிய பணி. நீங்கள் நிருவாகப் பொறுப்பு ஏற்பது இன்னும் பலரையும் ஊக்கம் பெறச் செய்யும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 12:00, 23 மே 2012 (UTC)[பதிலளி]

ஸ்ரீகாந்த் (மே 19, 2012-மே 26, 2012) (வாக்கு: 28|1|0) தொகு

பயனர் ஸ்ரீகாந்த் தமிழ் விக்கிப்பீடியாவில் கடந்த மூன்றாண்டுகளாகவும் ஆங்கில விக்கியில் 2007 முதலும் பங்களித்து வருகிறார். கட்டுரைத் திருத்தங்களில் மட்டுமல்லாமல் விக்கித் தொழில்நுட்பம் சார்ந்து தனது சிறப்பான பங்களிப்புகளைத் தருகிறார். மீடியாவிக்கி வழு மேலாண்மை, நிரலாக்கம், நீட்சிகள் சோதனை போன்றவற்றில் இவர் திறமையாகச் செயல்பட இவருக்கு நிருவாக அணுக்கம் உதவும். எனவே, ஸ்ரீகாந்திற்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கின்றேன். --Kanags \உரையாடுக 03:24, 19 மே 2012 (UTC)[பதிலளி]

பரிந்துரைத்தமைக்கு மிக்க நன்றி. பல்வேறு நுட்ப வேலைகளுக்கு நிர்வாக அணுக்கம் முற்றிலுமாக அவசியமில்லை. இதுவரை பிற நிருவாகிகளின் உதவியுடன் பல்வேறு மாற்றங்களை செய்து வந்தேன். ஒரு விதத்தில் இது சோதனை செய்யவும் வசதியாக இருந்து வந்தது (நுட்ப மாற்றங்களை என்னை தவிர மற்றொருவரும் பார்த்து சோதிக்கும் வாய்பு இருந்தது. ஆனால் சில நேரங்களில் கூடுதலாக காத்திருக்க வேண்டியுருக்கும். அச்சமையங்களில் நிருவாகி அணுக்கம் உதவும். விக்கி நுட்பம் சார்ந்து செய்யும் எந்த பெரிய மாற்றமும் முன்பு போல் ஆலமரத்தடியில் இட்டு கருத்து கேட்டபின்னரே செய்வேன்.பக்கங்களை பூட்டுதல், நீக்குதல், தொகுத்தல் / கருத்து போர்களில் தீர்ப்பு வழங்குவது போன்ற பணிகளில் முயன்றவரை தலையிடுவதைத் தவிற்ப்பேன். நன்றி ஸ்ரீகாந்த் (பேச்சு) 19:54, 19 மே 2012 (UTC)[பதிலளி]

இந்தியச் சீர் நேரப்படி 08:54இல் வாக்கெடுப்பு நிறைவு பெற்றுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 04:18, 26 மே 2012 (UTC)[பதிலளி]

செல்வா, சிறீக்காந்த் உரையாடல் நிறைவடைந்த பிறகு, வாக்கெடுப்பு முடிவைச் செயற்படுத்துவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். --இரவி (பேச்சு) 06:21, 26 மே 2012 (UTC)[பதிலளி]
இரவி, என் வாக்கை மாற்றியுள்ளேன்.

நன்றி, செல்வா. உரையாடல் தொடர்வதாலும் வார இறுதியாக இருப்பதாலும் வேறு சிலரும் கருத்துகளைத் தெரிவிக்க காலம் தரும் பொருட்டு, இன்னும் மூன்று நாட்கள் பொறுத்திருக்க விரும்புகிறேன். அதன் பிறகு வாக்கெடுப்பு முடிவைச் செயற்படுத்துவது நல்ல அவைப்பண்பாக இருக்கும் என்று கருதுகிறேன். இதில் மற்ற அதிகாரி நிலை பயனர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது என்று நம்புகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 11:36, 27 மே 2012 (UTC)[பதிலளி]

ஆதரவு தொகு

  1. Kanags \உரையாடுக 03:24, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  2. --Natkeeran (பேச்சு) 03:33, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  3. இவருக்கு நிருவாக அணுக்கம் இல்லை என்றே தெரியவில்லையே ;) --மணியன் (பேச்சு) 03:47, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  4. too late -- மாகிர் (பேச்சு) 03:52, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  5. சண்முகம் (பேச்சு) 04:03, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  6. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:23, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  7. மயூரநாதன் (பேச்சு) 04:38, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  8. --Nan (பேச்சு) 04:40, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  9. --கிருஷ்ணபிரசாத் /உரையாடுக 04:43, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  10. இவர் நிர்வாகியில்லையா? -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:51, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  11. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:45, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  12. --சிவக்குமார் \பேச்சு 07:55, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  13. --எஸ்ஸார் (பேச்சு) 08:29, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  14. ----கலை (பேச்சு) 10:07, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  15. --பரிதிமதி (பேச்சு) 10:15, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  16. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 10:17, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  17. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 11:24, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  18. --செல்வா (பேச்சு) 14:23, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  19. மதனாகரன் (பேச்சு) 15:41, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  20. --சோடாபாட்டில்உரையாடுக 19:14, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  21. பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
  22. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 22:55, 19 மே 2012 (UTC)[பதிலளி]
  23. --கார்த்தி கரூர், 11.46, 20 மே 2012
  24. --Sengai Podhuvan (பேச்சு) 09:56, 20 மே 2012 (UTC)[பதிலளி]
  25. --பவுல்-Paul (பேச்சு) 01:31, 21 மே 2012 (UTC)[பதிலளி]
  26. சுந்தர் \பேச்சு 06:19, 21 மே 2012 (UTC)[பதிலளி]
  27. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 08:48, 21 மே 2012 (UTC)[பதிலளி]
  28. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:21, 22 மே 2012 (UTC)[பதிலளி]
  29. --இரவி (பேச்சு) 12:02, 23 மே 2012 (UTC)[பதிலளி]
  30. --சிவகோசரன் (பேச்சு) 16:12, 28 மே 2012 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு தொகு

  1. --செல்வா (பேச்சு) 14:57, 26 மே 2012 (UTC) (இவருடைய மறுமொழிகளில் இருந்து நான் புரிந்துகொண்டது என் கணிப்பில் இன்னும் இவர் தகுதி அடையவில்லை. எனவே என் வாக்கை மாற்றியிருக்கின்றேன்). அவர் தேர்வு பெற்றாலும் இதுவே என் கணிப்பு இப்போதைக்கு.[பதிலளி]

நடுநிலை தொகு

கேள்விகள் தொகு

இரவி கேள்விகள் தொகு
  1. சிறீக்காந்த், நீங்கள் ஆங்கில விக்கிப்பீடியா நடைமுறைகளை நன்கு அறிந்தவர். தமிழ் விக்கிப்பீடியாவை மேம்படுத்த ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள எந்த விதமான நடைமுறைகள் / கொள்கைகளை இங்கு அறிமுகப்படுத்தலாம் என்று இரு எடுத்துக்காட்டுகள் தர முடியுமா?
  2. நீங்கள் ஒரு நுட்பவியலாளர் என்ற முறையில் பல விசயங்களைத் தானியக்கமாகச் செய்யலாம் என்று எண்ணக்கூடியவர். தமிழ் விக்கிப்பீடியாவில் அவ்வாறு செய்யலாம் என்று எண்ணக்கூடிய பணிகள் என்ன? தானியக்கமாகச் செய்வதால் சமூகத்தின் உளநிலையில், செயல்பாட்டு முறையில் ஏதேனும் மாற்றங்கள் / தாக்கங்கள் இருக்கும் என்று எண்ணி, தானியக்கமாகச் செய்ய வேண்டாம் என்று எண்ணக்கூடிய விசயம் ஏதும் உள்ளதா?
  3. நீங்கள் ஒரு பயனராக உங்கள் கருத்துகளை மிகக் கடுமையாகவும், நேரடியாகவும் முன்வைப்பவர் என்று அறிவேன் :) ஆனால், நிருவாகப் பயனர்களின் மொழி நடை, உரையாடும் பாங்கு மற்ற பயனர்களின் நடத்தை மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. இச்சூழ்நிலையில், நீங்கள் நிருவாகி ஆன பிறகு உங்கள் உரையாடல் பாங்கு எவ்வாறு இருக்கும்?
  4. சில வேளைகளில், தமிழ்ச் சமூக நோக்கு, தமிழ் மரபு போன்ற உரையாடல் நடக்கும் இடங்களில், ஆங்கில விக்கி நடைமுறைகளையும் உலகாளவிய நோக்கையும் வலியுறுத்தியுள்ளீர்கள். வருங்காலத்தில் இவ்விரண்டு அணுகுமுறைகளையும் எவ்வாறு எதிர்கொள்வீர்கள்? எச்சூழ்நிலையில், எதை முன்னிறுத்தலாம்? தொலைநோக்காக கருதியும், தமிழ்ச் சூழலின் போதாமைகளை எண்ணியும் சில நடைமுறைகளை விட்டுக் கொடுக்காலமா? சில மாறுபட்ட, புதிய கொள்கைகளை உருவாக்கலாமா?
  5. தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தப் பயன்பாடு குறித்த சிக்கலை எவ்வாறு தீர்க்க முனைவீர்கள்?

நன்றி.--இரவி (பேச்சு) 08:20, 19 மே 2012 (UTC)[பதிலளி]

பதில்கள்

1. சுட்டிய கொள்கைகளை நீங்களே எழுதுங்கள் போன்ற வீட்டுப்பாடங்கள் தராமலிருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் கீழே இடுகிறேன்.

  • en:Wikipedia:Harassment -- பயனர்களிடையே கருத்துவேறுபாடுகள்(கூடுதல் பயனர்கள் ஆக, இது அதிகரிக்கவே போகிறது) அளவுக்கு மீறின எல்லையைத் தொடுவதால் இந்த கொள்கையைப் பற்றி யோசிப்பது நல்லது.
  • en:Wikipedia:DR -- கருத்து மோதல்களில் அனைவரும் கருத்து கொண்டு அதனை வெளிப்படுத்துவதால், சில பல விவாதங்கள்(கிரந்தம் போன்றவற்றை கூறவில்லை) முடிவே எட்டுவதில்லை. சாதிய கட்டுரைகள் முதலிய எண்ணம்சார்ந்த(POV based content) பிரச்சனைகளை கையாள நிழற்சாலைகளை அமைப்பது நல்லது. இதுவும் மற்ற சிலவற்றையும் செய்யத் தவறிய மற்றொரு இந்திய விக்கி மிக மோசமான நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது.

2. தானியக்கமாக என்ற சொல்லை தொழில் உத்திகை(technocracy) என்ற கண்ணோட்டத்தில் பார்க்க விரும்புகிறேன். புதுப்பயனர் அச்சங்களைத் தவிர்க்க "மனநிலைப் பட்டை"(வழுக்கள் விரைவில் களையப்படும் என எண்ணுகிறேன்) போன்ற தொழில் நுட்ப அணுகுமுறைகள் செய்யலாம்.

  • இப்பொழுது செய்யாமல் தவிர்க்கலாம் என எண்ணுவது : விக்கியின் கொள்கையான 'அனைவருக்கும் கட்டற்ற தகவல்' என்ற கோட்பாட்டை பல தளங்கள் தாண்டிச்செல்ல தமிழை தமிழ் எழுத்துக்கள் மட்டுமல்லாமல் ஆங்கில எழுத்துக்களிலும் இருப்பது நல்லது. ஏற்கனவே கூகிள் scriptconv என்ற ஒரு தொழில் நுட்பத் தீர்வை வழங்கிவந்தது. அது போன்ற கட்டற்ற தீர்வு ஒன்றும் வேண்டும். மொழி கணினியியலில் அது பல ஆக்கங்களை மொழிக்கணிமைக்கு தர இயலும். ஆனால் தமிழ் (பொதுவாக மொழிகள்) அழிந்துவிடும் என்ற அச்சத்துடன் (நியாயமா இல்லையா என்பதற்குள் செல்லவில்லை) இருக்கும் இந்தச் சமூகத்திற்கு இப்பொழுது இத்தகைய விடயம் தவிர்க்கலாம்.
  • தானியங்கி மொழிபெயர்ப்பு தொழில் நுட்பம் இவ்வாறான உரையாடலில் பேசக்கூடிய அளவிற்குக் கூட வராததால் பிரச்சனையே இல்லை :D

மற்ற பதில்கள் விரைவில்.நான் இந்த வார-இறுதியில் வெளியூரில் இருப்பதால் பதில்களுக்கு தாமதமாகும். (தவிர பின் வரும் கேள்விகள் 16 மதிப்பெண் கேள்விகள் (அண்ணா பல்கலை மாணவர்களுக்குப் புரியும் :D, தமிழில் பதிலளிக்க நேரமாகும்) நன்றி ஸ்ரீகாந்த் (பேச்சு) 21:00, 19 மே 2012 (UTC)[பதிலளி]

3. முதலில் அந்த ஆய்வு ஆங்கில மொழியியல் சார்ந்து உளவியல் முதற்கோள் வைக்கின்றது. பிற மொழிகளுக்கு எவ்வளவு எளிதாக புறச்செருக முடியும் என தெரியவில்லை. உதாரணமாக -- "If you are communicating with someone who uses a lot of articles — or prepositions, orpersonal pronouns — then you will tend to increase your usage of these types of words as well, even if you don't consciously realize it". இது தமிழில் உண்மையா என்று கூற பல ஆண்டுகளாகும் (மொழிகணினியியல் வளர). தமிழ் விக்கி போன்ற சிறிய விக்கிகளை (நிருவாகி செயல்கள் எண்ணிக்கையில்) ஒருவர் நிருவாகி என வெளிக்காட்டும் சாலைகள் மிகக்குறைவு. வாக்களிப்பில் கூட இருவர் நான் நிருவாகி என்றே ஊகம் செய்திருந்தனர் :). எப்படியிருப்பினும் (நிருவாகியோ/இல்லையோ/ஆங்கிலமோ/தமிழோ) ஒரு தொடர் பங்களிப்பாளரின் தாக்கங்கள் சமூகத்தின் மீது இருக்கலாம். கருத்துக்களை நேரடியாக முன்வைப்பதில் என்ன தவறிருக்க முடியும்? அரசியல் தோதுக்காக சுற்றி வளைத்தோ வாய் பேசாமலோ இருப்பது குற்றம் எனக் கருதுபவன் நான். மிகக் கடுமை என்பது ஒருவரின் அகம்சார்ந்த ஒன்று. விளக்கமுடியுமா?. என்னுடைய ஆங்கிலம் சார்ந்த மொழி நடையினால் பிறர் மீது தாக்கம் ஏற்படலாம், ஆனால் அண்மையில் நான் விக்சனரி அதிகம் பயன்படுத்துகிறேன். நான் தமிழில் உரையாடும் பொழுது தமிழ் விக்சனரியில் பக்கம் இல்லை என்றால் தான் ஆங்கில சொற்கள் பயன்படுத்துகிறேன். :)

4. எந்த மொழியாக இருந்தாலும், விக்கி கலைக்களஞ்சியம் என்பது ஐந்து தூண்களைக் கடைபிடிக்க வேண்டும். மாறுபட்ட, புதிய கொள்கைகளை உருவாக்கலாம், ஆனால் அது மற்ற விக்கி கொள்கைகளை குழிப்பறிக்காமல் இருந்தால் சரி. அது தானே ஐந்தாவது தூணே. தமிழ்ச் சூழலுக்கு மாற்றக்கூடாது. தமிழ் விக்கி சூழலை ஒரு காரணியாக எடுத்துக்கொள்ளலாம். இதற்கிடையே பல ஆயிரம் கி.மீ இடைவெளி உள்ளது. :) எதை முன்னிறுத்துவது என்பது கூடியமானவரை எண்ணம் சார்ந்து இல்லாமல், தரவு சார் (தரவுசார் என்பது வாக்களிப்பாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை) முடிவாக இருக்கவேண்டும். (Data driven decision making instead of opinion based decision making.)

5. கோடி ரூபாய் கேள்வியை 15வதாக இல்லாமல் 5வது கேள்வியாக கேட்டமைக்கு நன்றி ;). கிரந்தப் பயன்பாடு குறித்த சிக்கலை நான் தீர்க்க முடியும் என்ற உங்களின் நம்பிக்கைக்கு நன்றிகள் :) LanguageConverter ஒரு நுட்பம் சார்ந்த தீர்வு (இது விக்கியைப் பிரிக்காது, ஆனால் அவரவர் விருப்பப்படி படிக்கலாம், தொகுக்கலாம்.) ஆனால் நுட்பத்தில் கிரந்தம் / கிரந்தமற்ற வழக்குகளிடையே முன்னும் பின்னுமாக 1-1 மாற்ற விதிகள் வகுக்கப்பட வேண்டும். எளிதான காரியமில்லை இது, ஆனால் பலரும் கூட்டாக முயலலாம். தரவு சார்ந்த முடிவு இதற்கு ஒரு தீர்வாக இருக்க முடியும். போதிய தரவுகள் (ஆய்வுக் கட்டுரைகள், பாட நூல்கள், செய்தி (ஏற்கனவே இருக்கிறது) முதலிய) மின்மயமாகவும் இணையத்தில் இல்லாமல் இருப்பதும் இப்பொழுது காரணமாக சுட்டப்படுகிறது. சில வருடங்கள் காத்திருந்தால் அவை கிடைக்கும். அப்பொழுது தரவு சார் முடிவெடுக்க இயலும். தமிழ் மக்களின் பொது வழக்கும் இணையத்தில் (எழுதவும், படிக்கவும்) வருங்காலங்களில் எளிதாக கிடைக்க இயலும். அப்பொழுது தரவு சார்ந்த முடிவெடுக்க நிறைய வாய்ப்புள்ளது. அது வரை அருள்கூர்ந்து தொகுத்தல் போர்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கலாம். கிரந்தம் சேர்ப்பதாகவோ நீக்குவதாகவோ மட்டுமே தொகுப்பில் இருத்தல் கூடாது என்பது என் கருத்து. ஸ்ரீகாந்த் (பேச்சு) 20:30, 22 மே 2012 (UTC)[பதிலளி]

சிறீக்காந்த், தங்கள் மறுமொழிகளுக்கு நன்றி. என் கருத்து பின்வருமாறு:
1. Harassment, DR தேவைப்படும் அளவுக்கு இப்போது இங்கு பிரச்சினை இருக்கிறதா :) எனினும், வருங்காலத்தில் தேவைப்படும் ஒன்று. நன்றி.
2. இப்பொழு செய்ய வேண்டாம் என்று நீங்கள் கருதுவதை எப்போதுமே செய்ய வேண்டாம் என்று கருதுகிறேன் :) மற்றபடி, உங்கள் அணுகுமுறை நன்று.
3. அந்த ஆய்வு சுட்டும் உளவியல் அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும் என்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன் :) தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி. இங்கு நிருவாகிகள் தலைவர்களைப் போன்றவர்கள் இல்லை என்றாலும், பல வகைகளில் எடுத்துக்காட்டாகச் செயற்பட வேண்டிய பொறுப்பு உண்டு என்று நம்புகிறேன். கருத்துகளை நேரடியாக முன்வைக்கும் உங்கள் அணுகுமுறையை வரவேற்கிறேன். என்னுடைய அணுகுமுறையும் ஓரளவு அதைப் போன்றதே. மிகக் கடுமை என்பதும் அகம் சார்ந்தது தான். எனினும், சிலர் இத்தகைய உரையாடல்களின் போது மனம் நோவதையும் அத்தகைய உரையாடல் போக்கைத் தவிர்க்க வேண்டியதையும் கண்டிருப்பதால், இதனைக் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டுகிறேன்.
4. தரவு சார் அணுகுமுறை நன்று. தரவு இல்லாத இடங்களில் தொலைநோக்கும் அனுபவமும் கை கொடுக்கலாம் என்று நினைக்கிறேன் :)
5. நீங்கள் கிரந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று எண்ணவில்லை :) எல்லா பிரச்சினைகளிலும் அனைவருக்கும் பெரும்பாலும் கருத்து மட்டுமே உள்ளது. அதையே ஒவ்வொருவரும் தீர்க்க முனைந்தால் என்ன வகையான அணுகுமுறைகள் கிடைக்கும் என்று அறிய விரும்பினேன். முயற்சிப்பேன் என்று இலட்சம் முறை எழுதினாலும் முயல்வேன் என்பது தான் இலக்கண அடிப்படையில் சரி. எனவே, தரவுகளை மட்டுமே வைத்து மொழி நடையைத் தீர்மானிக்க முடியாது என்று கருதுகிறேன். மொழியை முறையாகப் படித்தவர்களின் கருத்துக்கும் வெவ்வேறு மாந்த, சமூக நோக்குகளுக்கும் இடம் இருக்க வேண்டும்.
மேற்கொண்டு இங்கு எழுப்பியுள்ள கேள்விகள் / தேவைகள் தொடர்பாக உரிய நேரத்தில் அவை தொடர்பான கொள்கைப் பக்கங்களில் உரையாடுவோம். மீடியாவிக்கி நுட்பம் தொடர்பான பல முயற்சிகளில் நீங்கள் ஈடுபடும் போது, தங்களுக்கு நிருவாக அணுக்கம் இருந்தால் சிறப்பாக இருக்குமே என்று எண்ணியுள்ளேன். எனவே, தற்போதைய அணுக்கம் மிகவும் உதவியாக இருக்கும் என்று கருதுகிறேன். நிருவாகியாக பொறுப்பேற்று சிறப்புடன் செயல்பட உளமார்ந்த வாழ்த்துகள் :)--இரவி (பேச்சு) 11:46, 23 மே 2012 (UTC)[பதிலளி]
செல்வா கேள்விகள் தொகு
  1. தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கும்பொழுது பொறுப்புணர்வுடனும், பண்புடனும், தக்கவாறு கருத்துகளை முன்வைத்து உரையாட வேண்டுவது தேவை என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றே நம்புகின்றேன். இது எல்லோருக்கும் பொருந்தும் எனினும் குறிப்பாக நிருவாகியாக இருப்பவருக்குத் தேவை என்பதையும் நீங்கள் அறிவீர்கள் என்றே நினைக்கின்றேன். அப்படி ஒருவர் நடந்துகொள்ளாமல், எடுத்தெறிந்தாற்போல் பேசுவதும், உடன் பங்களிப்பவரை முறைமீறி குற்றம்சாட்டும் முகமாகவும் தாக்கியும் உரையாடினால் எப்படி எதிர்கொள்வீர்கள்? ஆக்கம் விளையும் இப்பணியில் முறைபிசகி உரையாடப் புகுந்தால் உரையாடல் ஒழுக்கம்-சூழல் கெடும், நல்லுணர்வு, ஒத்துழைப்புணர்வு கெடும் (யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம்..) என்று உணர்ந்தால், என்ன நடவடிக்கைகளை நடுநிலைசார்ந்து எடுப்பீர்கள்?
  2. தமிழர்கள் பல நாடுகளில் பல வரலாற்றுப்பின்னணியுடன் வாழ்கின்றார்கள். அவர்களால் உருவாக்கப்பெறும் இக் கலைக்களஞ்சியத்தில் எழுத்து நடை என்று வரும்பொழுது (அது பல விதமாக பல இடங்களில் இருக்கையில்), தக்க இலக்கண இலக்கியம் கொண்ட தமிழ் மொழியில், கலைக்களஞ்சியத்துக்கு உகந்த நடை என்று வரும் பொழுது, கருத்து மாறுபாடுகள் வரும்பொழுது எவ்வாறு அணுகுவீர்கள்? (விக்கிப்பீடியாவில் பெரும்பான்மை மட்டுமே அளவீடாகக் கொண்டு முடிவுகள் எடுப்பதில்லை, கருத்துகளில் வலு, சாரம் முதலியவற்றையும் தக்கவாறு நடுநின்று கணித்துத்தேற வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு உங்கள் கருத்தை அளிக்க வேண்டுகிறேன்).

--செல்வா (பேச்சு) 15:03, 19 மே 2012 (UTC)[பதிலளி]

பதில்கள்

முதலில் ஒரு விளக்கம், பிறகு பதில். பரிந்துரையின் கீழ், நான் தெளிவாக இது போன்று தீர்ப்பு வழங்கும் பணிகளில் ஈடுபட ஆர்வமில்லை என்று தெரிவித்துள்ளேன்.உங்கள் கேள்விகள் பற்றி என் எண்ணத்தை இங்கு பகிர்கிறேன்.

  • 1. கருத்துக்களை முன்வைத்து உரையாடுவது நல்ல பழக்கம் என்பதில் உடன்படுகிறேன். எடுத்தெறிந்தாற்போல் பேசுவது -- அகம்சார்ந்த ஒன்று. பிறர் மனது எதனால் நோகும் என்று யோசிக்கா ஆரம்பித்தால் எல்லையே இல்லை. இலகுவான மனம் கொண்டவர்கள், மனம் நோகக்கூடாதென்றால் உரையாடல்களில் பங்கேற்பதைத் தவிர்க்கவேண்டும். தனிப்பட்ட நபர் தாக்குதல் அவசியமற்றது/கூடாது, ஆனால் அவர்களின் செயல்களை சபையில் பேசக்கூடிய சொற்களை கொண்டு விமர்சிப்பது / உரையாடுவதில் என்ன தவறு? (யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம்) --> யாரும் இங்கு அநாகரீகமான உரையாடவதில்லை என்பதால் என் எண்ணம். பிரச்சனைகள் தீர உரையாடல்கள் முக்கியம், சூழல் கெடும், நல்லுணர்வு, ஒத்துழைப்புணர்வு கெடும் என்பதற்காக உரையாடலை தவிர்ப்பது பிரச்சனைகளை தீர்க்காது.
  • 2. மொழிநடை பொறுத்த வரை தரவு சார்ந்த முடிவுகளை(மேலே பார்க்க) நான் ஆதரிப்பேன். மொழிகள் காலப்போக்கில் மாறுவது இயல்பு. நாம் இங்கு கூடுவது கலைக்களஞ்சியம் படைக்க, மொழியின் பண்டைத்தன்மையைக் காக்க அல்ல. உலகளவில் என்ன தமிழ் பயன்பாட்டில் உள்ளதோ அதிலிருந்து நாம் மிகவும் விலகியிருந்தால் இத்தளத்தை பயன்படுத்த ஆட்கள் இருக்க மாட்டார்கள். ஆகவே மொழிநடை என்பது பயன்பாட்டை கூட சார்ந்து இருக்க வேண்டும். சில நேரங்களில் A/B சோதனை முறைகளைக் கூட கையாளலாம்.

ஸ்ரீகாந்த் (பேச்சு) 20:23, 25 மே 2012 (UTC)[பதிலளி]

1. சிறீக்காந்த், அகவயமான நோக்கு என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளீர்கள். ஆனால், பலரின் அகவயமான நோக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் போது "தரவு அடிப்படையில்" அது புறவயமான நோக்காகவும் கருதப்படலாம் :) //எடுத்தெறிந்து பேசுவது// - இதில் முதன்மைக் குற்றவாளி, இணையம் தரும் முகம் பார்க்காதிருக்கக்கூடிய சூழல். ஒரே பிரச்சினை குறித்து பலருடன் நான் விக்கியிலும் (அல்லது வேறு இணையக் களத்திலும்) நேரடியாகவும் கூகுள் அரட்டையிலும் பேசி உள்ளேன். உரையாடல் நட்புடனும் பண்புடனும் இருக்கும். குறிப்பாக, முகத்துக்கு நேராக அடித்துப் பேசவே முடியாது. 2005 முதல் இணையத்தில் பல சண்டைகளைப் போட்டிருக்கிறேன் :) (விக்கிப்பீடியாவுக்கு வெளியே. இங்கு அவ்வாறாகச் செயற்படத் தூண்டும் பண்பற்ற சூழல் இல்லை). ஆனால், அதே ஆட்கள் வாதம் முற்றும் போது தொலைபேசியிலோ நேரிலோ சந்தித்தால் தடித்த சொற்களைப் பயன்படுத்தவே முடியாது. தவிர, இணையம் பொது வெளி என்பதால் அனைவரும் நம்மைக் கவனிக்கிறார்கள், வாதத்தில் வெல்ல வேண்டும் என்ற உளத் தூண்டலும் இருக்கும். எனவே, கடுமையான இணைய உரையாடல்கள் வந்தாலும் உளக் கசப்பு இல்லாமல் எடுத்துக் கொள்ளப் பழகி இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் இந்தப் பக்குவம் வருவதற்கான நேரம் உள்ளது. ஆனால், அதற்குள் அவர்கள் மனம் நொந்து பங்களிப்புச் சூழலை விட்டு விலகுமாறு அமைந்து விடக்கூடாது. சுருக்கமாகச் சொன்னால், ஒருவரின் அகவயமான அணுகுமுறை என்பது அவருக்கே பல்வேறு சூழல்களில் பல்வேறு விதமாக வெளிப்படும். எனவே, இதனைக் கருத்தில்கொண்டு விக்கி உரையாடல்களில் ஈடுபடலாம். கனியிருப்பக் காய் கவர்ந்தற்று :) கண்டிப்பாக அவரவர் கருத்துகளை நேர்படவும், உறுதிபடவும் தெரிவிக்க வேண்டும். அதே வேளை அவற்றை முறையாக, எதிர் கருத்து உள்ளோரும் காழ்ப்புணர்வு இன்றி செவி மடுத்துக் கேட்குமாறு கனிவுடன் கூறுவதும் பயன் அளிக்கலாம். இதற்கும் சுற்றி வளைத்து வழ வழா கொழ கொழா என்று கூறுவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.
2. எந்திர மொழிபெயர்ப்பு கூட தரவுகள் அடிப்படையிலேயே செயல்படுகிறது. ஆனால், இன்னும் அதனால் இயல்மொழியின் தரம், இயல்பை எட்டிப் பிடிக்க முடியவில்லை. எனவே, தரவு அடிப்படையிலேயே எல்லா இடங்களிலும் மொழிநடையை அணுகுவது என்பது ஏற்புடையதாக இருக்காது. எழுத்து நடை ஒரு கலை போன்றது என்ற நோக்கும் இருப்பது நல்லது. இலங்கை வழக்கு, இந்திய வழக்கு போன்ற விசயங்களில் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள அணுகுமுறை போன்று புரிந்துணர்வின் அடிப்படையிலும், அறிவார்ந்த நோக்கின் அடிப்படையிலும் கூட சீரான மொழிநடையை உருவாக்க முடியும். கலைக்களஞ்சியத்துக்கு என்று ஒரு மொழி நடை உண்டு. அதே போல், ஒவ்வொரு துறையிலும் ஆழமான கருதுகோள்களை அலச என்று ஒரு மொழிநடை உண்டு. எல்லா மொழிகளிலுமே இவை பரவலான பயன்பாட்டு மொழியில் இருந்து தனிப்பட்டு இருக்கும். எடுத்துக்காட்டுக்கு: மருத்துவ ஆங்கிலம். இதில் உள்ள பல சொற்கள் பண்டைய கிரேக்க, இலத்தீன சொல் மூலங்களைக் கொண்டவை. இது எந்த வகையிலும் அப்பண்டைய செம்மொழிகளைக் காப்பதற்கான முயற்சி அன்று. அது போலவே, தேவைப்படும் இடங்களில் தகுந்த தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதும் மொழிக் காப்பு நடவடைக்கையாக காணப்படக்கூடாது என்று கருதுகிறேன். --இரவி (பேச்சு) 07:01, 26 மே 2012 (UTC)[பதிலளி]
//எந்திர மொழிபெயர்ப்பு கூட தரவுகள் அடிப்படையிலேயே செயல்படுகிறது// தவறு. நான் தரவு என்று கூறியதை தாங்கள் நேரடி மொழிபெயர்ப்பை எடுத்துள்ளீர்கள். தரவு என்னவென்பதற்கு நான் மேலே விளக்கியிருந்தேன். எந்திர மொழிபெயர்ப்புக்கான போதிய "தரவு"(data) மற்றும் படிமுறையும் போதுமான அளவிற்கு வளரவில்லை என்பது தமிழுக்கு மட்டுமல்ல பல மொழிகளுக்கும் பொறுந்தும். ஸ்ரீகாந்த் (பேச்சு) 13:37, 26 மே 2012 (UTC)[பதிலளி]

//மொழிகள் காலப்போக்கில் மாறுவது இயல்பு. நாம் இங்கு கூடுவது கலைக்களஞ்சியம் படைக்க, மொழியின் பண்டைத்தன்மையைக் காக்க அல்ல. உலகளவில் என்ன தமிழ் பயன்பாட்டில் உள்ளதோ அதிலிருந்து நாம் மிகவும் விலகியிருந்தால் இத்தளத்தை பயன்படுத்த ஆட்கள் இருக்க மாட்டார்கள்.//

மாற்றம் என்பது இயல்பு என்பது உண்மைதான். ஆனால், மாறமல் இருக்க முயல்வதும் இயல்புதான் என்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் மறந்து விடுகிறோம். எந்த ஒரு விடயத்திலும் இரண்டுக்கும் இடையிலான சமநிலைதான் நிலவுகின்றது என்பதை உணர வேண்டியது அவசியம். இதற்கான பொறிமுறை எல்லா விடயங்களிலுமே உண்டு. ஒருவிடயத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேற்பட மாற்றங்கள் நிகழுமானால் அது பயனற்றது ஆகிவிடக்கூடிய ஆபத்து உண்டு. மொழியும் இதற்கு விதிவிலக்கானது அல்ல. மொழி என்பது ஒருவரும் அவருக்கு முன்னால் உள்ளவரும் தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான ஊடகம் மட்டும் அல்ல. அது பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ளவர்களும், முன்னும் பின்னும் பல தலைமுறைகளைச் சேர்ந்தவர்களும் தம்மிடையே பல விடயங்களைப் பரிமாறிக் கொள்வதற்கானதும் கூட. எனவே மாற்றம் கட்டுப்பாடாக நிகழாவிட்டால் அம்மொழி மேற்படி பயன்பாட்டுக்கு உதவாது. ஒவ்வொரு பகுதியிலும் மொழி கட்டுப்பாடின்றி மாறிக்கொண்டே போகுமானால் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழைப் புரிந்துகொள்ள முடியாமல் போய்விடும். தென் தமிழ் நாட்டினர் வட தமிழ்நாட்டு மொழியையும், நகரத்தினர் கிராமப் புறத்து மொழியையும் புரிந்து கொள்ளமுடியாத நிலையும் ஏற்படலாம். இன்றைய தமிழை 50 ஆண்டுகளுக்குப் பின்வருவோர் புரிந்துகொள்ள மாட்டார்கள். தமிழைப் பொறுத்தவரை பேச்சுத் தமிழ் எழுத்துத் தமிழ் எனும் இரட்டைப் பயன்பாட்டு நிலை மாற்றங்களின் தீய விளைவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு பொறிமுறை. எழுத்துத் தமிழ் மிக மிக மெதுவாகவே மாறுகின்றது. எழுத்துத் தமிழே கற்பித்தலுக்கான தமிழாகவும் இருப்பதால் பேச்சுத்தமிழ் ஒரு அளவுக்கு மேல் மாறாமல் இருப்பதை உறுதி செய்கிறது. கலைக்களஞ்சியம் எழுத்துத் தமிழைச் சார்ந்தது. அதில் கட்டுப்பாடு அவசியம். மாற்றங்களைக் கட்டுப்படுத்துவது என்பது "பண்டைத்தன்மையைப் பேணுவது" அல்ல. "உலக அளவில் பயன்பாட்டில் உள்ள தமிழ்" என்றால் என்ன? சென்னைத் தமிழா? மதுரைத் தமிழா? இலங்கைத் தமிழா? எது? அல்லது "ஒரு ஸ்பூன் சில்லிப் பவுடரை அட் பண்ணிக்குங்க. டேஸ்ட்டுக்குத் தக்கபடி ஒன்று அல்லது இரண்டு பிஞ்ச் சால்ட் அட் பண்ணிக்கலாம்" என்னும் தொலைக்காட்சி/வானொலித் தமிழா? தமிழ் பெயரளவில் மட்டுமன்றித் தமிழாகவே இருக்கவேண்டும் எனில் மாற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். கலைக்களஞ்சியங்களை உருவாக்குபவர்களும் இதனைக் கவனத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து. ---மயூரநாதன் (பேச்சு) 10:47, 26 மே 2012 (UTC)[பதிலளி]

மயூரநாதன், "மொழிநடை பொறுத்த வரை தரவு சார்ந்த முடிவுகளை(மேலே பார்க்க) நான் ஆதரிப்பேன்". இது என் கருத்து. மேலே, தரவு என்பதற்கு

போதிய தரவுகள் (ஆய்வுக் கட்டுரைகள், பாட நூல்கள், செய்தி (ஏற்கனவே இருக்கிறது) முதலிய)

என்ற உதாரணங்களை தெரிவித்திருந்தேன். "உலக அளவில் பயன்பாட்டில் உள்ள தமிழ்" என்றால் என்ன? --> சென்னைத் தமிழோ, மதுரைத் தமிழோ, இலங்கைத் தமிழோ இல்லை. ஆய்வுக் கட்டுரைகள், பாட நூல்கள், செய்திகளில், இலக்கிய படைப்புக்கள் பிற தமிழாக்கங்களில் இருக்கக்கூடிய எழுத்துத் தமிழ். எந்த ஆய்வுக்கட்டுரையிலும் "டேஸ்ட்டுக்குத் தக்கபடி ஒன்று அல்லது இரண்டு பிஞ்ச் சால்ட் அட் பண்ணிக்கலாம்" போன்ற தமிழ் பயன்படுத்தப்படவில்லை என நினைக்கிறேன்.ஆனால் ஆய்வுக்கட்டுரையில் அது போன்ற ஒரு சொற்றொடர் வருமாயின் அச்சொற்கள் விக்கியில் இருப்பது தவறேயில்லை. உலக மக்களால் இராஜஸ்தான் என்று எழுதப்படும் தமிழை, இராச்சசுத்தான் என எழுதுவதால் படித்த, கிரந்தப் பிரச்சனை பற்றி தெரியாத ஒரு தமிழனுக்கு தகவலை கொண்டு சேர்ப்பதில் சிக்கல் ஏற்ப்படுத்தக்கூடும். ஒரு கலைக்களஞ்சியத்தின் மொழி நடை(கிரந்தமும் மொழிநடைக்குள் அடங்கும்) ஒருவனுக்கு புரியவில்லை எனில் பயன்படுத்துவதை தவிர்ப்பார்கள் என்பது என் கருத்து. அக்கருத்தின் ஓர் நீட்சியாகத்தான்(என் பார்வையில், நீங்கள் மிகைப்படுத்தல் என கருத்து கொள்வது உங்கள் உரிமை) "இத்தளத்தை பயன்படுத்த ஆட்கள் இருக்க மாட்டார்கள்" என்று கூறினேன். நன்றி. ஸ்ரீகாந்த் (பேச்சு) 13:37, 26 மே 2012 (UTC)[பதிலளி]
நிர்வாகி தேர்வுக்கான கேள்வி - பதில்களில் பங்கேற்பதில் எனக்கு விருப்பமில்லை. இருப்பினும் ஸ்ரீகாந்த்தின் பதிலில்

இருக்கும்

//மொழிகள் காலப்போக்கில் மாறுவது இயல்பு. நாம் இங்கு கூடுவது கலைக்களஞ்சியம் படைக்க, மொழியின் பண்டைத்தன்மையைக் காக்க அல்ல. உலகளவில் என்ன தமிழ் பயன்பாட்டில் உள்ளதோ அதிலிருந்து நாம் மிகவும் விலகியிருந்தால் இத்தளத்தை பயன்படுத்த ஆட்கள் இருக்க மாட்டார்கள்.//

என்பது ஏற்றுக் கொள்வதாக இல்லை. இதில் மயூரநாதன் கருத்துடன் உடன்படுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:39, 26 மே 2012 (UTC)[பதிலளி]

நானும் மயூரநாதன் கருத்துடன் உடன்படுகிறேன்--Nan (பேச்சு) 17:20, 26 மே 2012 (UTC)[பதிலளி]

உங்கள் மறுமொழிகள் என் வாக்கை மாற்ற வைத்துவிட்டன. நீங்கள் தேர்வு பெற்றாலும் இது பற்றி விரிவாகப் பின்னர் நடுநின்று பேச வேன்டிய தேவை ஏற்படலாம், ஆனால் என் கணிப்பில் நீங்கள் போதிய காலமோ, போதிய அளவோ பங்களிக்காத போதும், நுட்பம் சார்ந்த பங்களிப்புகளில் நீங்கள் பங்களித்து உதவ நிருவாகி பொறுப்பு உதவுமே என்றே கேள்விகள் கேட்டு விடைகள் தெரிந்துகொள்ளும் முன்னமே ஆதரவு வாக்கு அளித்தேன். உங்கள் கருத்துகளை அமைதியாக அறிவடிப்படையில் அலசலாம், தேவை ஏற்படும் பொழுது. வெற்றி பெற்றால் என் வாழ்த்துகள், ஆனால் இன்னும் தகுதியை நீங்கள் எட்டவில்லை என்பது என்னுடைய நேர்மையான கணிப்பு எனவே வாக்கை எதிர்ப்பாகப் பதிவு செய்துள்ளேன். இது தொழிலொழுக்கம் சார் (professional) மதிப்பீடு. --செல்வா (பேச்சு) 15:08, 26 மே 2012 (UTC)[பதிலளி]
உங்கள் தொழிலொழுக்க மதிப்பீட்டை தெரிவுபடுத்தியமைக்கு நன்றி. என் கணிப்பில் நீங்கள் போதிய காலமோ, போதிய அளவோ பங்களிக்காத போதும் --> மிக்க நன்றி, உங்கள் கருத்தை பேச்சுப்பக்கத்தில் இடுங்கள், ஏனென்றால் பண்புகள் பகுதியில் இப்பொழுது கொடுக்கப்பட்டுள்ள கால,பங்களிப்பு அளவுகோல்கள் உங்கள் கணிப்பில் போதுமானதாக இல்லை. சமூகம் உரையாடி இதனை மாற்றினால் பலரின் நேரம் மிச்சமாகும் அல்லது நீங்கள் உங்கள் மதிப்பீட்டை மாற்றிக்கொள்ள அந்த உரையாடல் வழிவகுக்க உதவும். உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது அமைதியாக அறிவடிப்படையில் அலசி என் பேச்சுப் பக்கத்திலோ வேறு எங்கோ கருத்துக்களை இடுங்கள். வாக்கு இருக்கும் எல்லாவற்றையும் வெற்றி / தோல்வி என்று நான் பார்ப்பதில்லை, எனினும் உங்கள் வாழ்த்துக்களுக்கும் நேர்மையான கணிப்பிற்கும் நன்றி. ஸ்ரீகாந்த் (பேச்சு) 09:02, 27 மே 2012 (UTC)[பதிலளி]

சிறீக்காந்த், இறுதியாக சில கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன்.

1. தங்கள் மறுமொழிகளில் எனக்கு ஒரே ஒரு விசயம் மட்டுமே உறுத்தலாக இருந்தது:

//எடுத்தெறிந்தாற்போல் பேசுவது -- அகம்சார்ந்த ஒன்று. பிறர் மனது எதனால் நோகும் என்று யோசிக்கா ஆரம்பித்தால் எல்லையே இல்லை. இலகுவான மனம் கொண்டவர்கள், மனம் நோகக்கூடாதென்றால் உரையாடல்களில் பங்கேற்பதைத் தவிர்க்கவேண்டும்.//

உரையாடும் பாங்கு அகவயமானது என்றால் அலைக்கழித்தல் என்பது கூட அகவயமானது தான். முடிந்தவர்கள் இருங்கள், மற்றவர்கள் விலகுங்கள் என்று நாம் சொல்ல முடியாது அல்லவா? அதனால் தான் ஆங்கில விக்கிப்பீடியாவில் இது குறித்தும் விக்கி நற்பழக்கவழக்கங்கள் குறித்தும் கொள்கைகள் கொண்டுள்ளனர்.

தமிழ் விக்கிப்பீடியாவில் பெருமளவு உரையாடல்கள் சீரிய பண்புடன் நடைபெற்றாலும் எப்போதாவது சில விதிவிலக்குகளும் இருப்பதும் உண்டு: எடுத்துக்காட்டு: பேச்சு:கிட் (மென்பொருள்) , பேச்சு:பதிப்புக் கட்டுப்பாடு ஆகியவற்றில் Naancoder உரையாடியுள்ள முறை. வேறு சில எடுத்துக்காடுகளையும் தர முடியும். ஆனால், அது தேவையற்ற குழப்பங்களை உருவாக்கி, சிலரை மனம் நோகச் செய்யலாம் என்பதால் கருத்தளவிலேயே உரையாட விரும்புகிறேன். எப்படி பிணக்குத் தீர்வு, அலைக்கழித்தல் ஆகியவற்றுக்குக் கொள்கைகள் கொண்டு வரலாம் என்று நீங்கள் பரிந்துரைத்தீர்களோ அது போலவே முறையான உரையாடல் பண்புக்கும் ஒரு கொள்கை / வழிகாட்டலை உரிய நேரத்தில் கொண்டு வரலாம் என்று கருதுகிறேன். முறையற்று உரையாடுபவர்கள் மீது எந்த வகையான நடவடிக்கைகள் எடுக்கலாம் எனபதற்கு இதில் தீர்வு காணலாம். அனைவருமே விக்கிப்பீடியா நடைமுறைகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் தாம். யாரையும் மனம் குளிர்விப்பதற்காக விக்கி நடைமுறைகளை விட்டுக் கொடுக்கப் போவது இல்லை. அதே வேளை, விக்கி நடைமுறைகளை நன்றாகப் புரிந்து கொண்டு நன்றாகப் பங்களிக்கக்கூடிய ஒருவரையும் கூட முறையற்ற உரையாடல் பாங்கினால் விக்கிப்பீடியாவை விட்டு விலகுமாறு செய்திடக்கூடாது என்பதே கவலை. ஒரே ஆளே கூட வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு கனிவு நிலைகளில் பேசக் கூடும் என்பதை முன்பு சுட்டியிருந்தேன். எனவே, இயன்ற அளவு கனிவுடன் தங்கள் கருத்துகளை முன்வைப்பதுடன் //இலகுவான மனம் கொண்டவர்கள், மனம் நோகக்கூடாதென்றால் உரையாடல்களில் பங்கேற்பதைத் தவிர்க்கவேண்டும்// என்ற தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் ஒரு முறை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.

2. தரவு குறித்த தங்கள் கருத்தைத் தெளிவு படுத்தியமைக்கு நன்றி. கூகுள் நிறுவனத்தில் வேலை பார்த்த ஒரு வடிவமைப்பாளர், வடிவமைப்பு தொடர்பாக கூகுளின் தரவு அடிப்படை அணுகுமுறை பிடிக்காமல் விலகினார் என்ற ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. எவ்வளவு சிறந்த நுட்பம் வளர்ந்து. மொழியைத் தரவாகப் பார்க்க முடியும் என்றாலும், எழுத்து நடையை ஒரு கலையாகவும் பார்க்கவும் வேண்டும். இதில் எழுதுபவர்களின், தமிழ் விக்கி சமூகத்தின் கூட்டு மதிநுட்பத்தின் திறனாய்வு மதிப்பீட்டுக்கும் இடம் இருக்க வேண்டும். பொது வழக்கை மட்டுமே பார்த்தால் பட்டாம்பூச்சி போன்ற ஒரு கட்டுரை கிடைக்காது. "டேஸ்ட்டுக்குத் தக்கபடி ஒன்று அல்லது இரண்டு பிஞ்ச் சால்ட் அட் பண்ணிக்கலாம்" என்று எந்த ஆய்வுக் கட்டுரையிலும் எழுதுவது இல்லை. எனினும், பெரும்பாலான சமையல் வலைப்பதிவர்கள் இவ்வாறு எழுதுவதுண்டு. நாளை இணையத்தில் உள்ள தமிழ் கட்டுரைகளையும் ஆய்ந்து சொற்கள் பற்றி தரவுகளை எடுக்கும் போது, ஆங்கிலம் கலந்த தமிழ் தான் பொதுவழக்கு என்றும் தமிழ் விக்கிப்பீடியாவும் அதனைத் தான் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்த முடியாது. ஏனெனில் கலைக்களஞ்சியத்துக்கு என்று ஒரு எழுத்து நடை இருக்கலாம். ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு தமிழில் எத்தனை கலைக்களஞ்சிங்கள் உள்ளன? ஒரு காலத்தில் மணிப்பிரவாள நடை பொதுவழக்காக இருந்தது. இன்று இல்லை. இன்று ஆங்கிலம் கலந்த பொது வழக்கு இருக்கிறது. நாளை எப்படி இருக்கும் என்று தெரியாது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு விக்கிப்பீடியா என்ற ஒரு கருத்துருவே இல்லை. இன்று அது ஒரு புரட்சி. விக்கிப்பீடியாவின் இருப்பே அறிவு ஆவணப்படுத்தலில் இருந்த நடப்பு முறைக்கும் பொது வழக்குக்கும் விடுக்கப்பட்ட அறைகூவலாக இருக்கும் போது, அதனைப் பயன்படுத்தி நாம் எழுதும் கலைக்களஞ்சியம் மட்டும் கண்மூடித்தனமாகப் பொதுவழக்கைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. நாம் எழுதுகிற மொழிநடை மக்களுக்குப் புரியாமல் போனால் மக்கள் புறக்கணிப்பார்கள் என்பது நியாயமான கவலை. இந்த அகவயமான கவலையைத் தங்களால் தரவுகள் கொண்டு நிறுவ முடியுமானால், அதனைப் பற்றி முறையாக உரையாடலாம் :)

செல்வா, வாக்கெடுப்பில் தங்கள் நிலையைத் தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. உரையாடும் பாங்கு, மொழிநடை குறித்து உங்களுக்கு இருக்கும் கருத்து மாறுபாட்டை ஏற்கிறேன். இவை குறித்து உரிய கொள்கைப் பக்கங்களில் உரையாடி ஒரு முடிவுக்கு வரத் தேவையான பொறிமுறைகளையும் விக்கிப்பீடியா வழங்கியுள்ளது. எனினும், சிறீக்காந்த் போதிய காலமோ அளவோ பங்களிக்கவில்லை என்ற தங்கள் கருத்தில் இருந்து மாறுபடுகிறேன். சிறீக்காந்த், கட்டுரையாக்கத்தில் ஈடுபடுபவர் அல்லர். ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நுட்ப அடிப்படையில் பெரும் பங்காற்றி இருக்கிறார். ஒரு சில திட்டங்களில் நானும் ஓரளவு அவருக்குச் சிறு துணையாக இருந்துள்ளேன் என்பதால் இதனை உறுதியாகச் சொல்ல முடியும். குறிப்பாக, தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் கடுமையான உழைப்பை நல்கியுள்ளார். சென்னை, மும்பை, பெங்களூர் என்று பல ஊர்களில் நடந்த மீடியாவிக்கி நிரலாக்கத்தில் இந்திய மொழிகள் / தமிழ் சார்ந்த நுட்பங்களைக் கொண்டு வர பெரு முயற்சி எடுப்பவர். பல இளம் நிரலாளர்களைத் தமிழ் விக்கிப்பீடியாவின் தேவைகள் பால் ஈர்த்து வருகிறார். பல பரப்புரை முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். தள அறிவிப்பில் பங்களிப்பாளர்களை அறிமுகப்படுத்துவதில் அவருக்கு இருந்த நுட்ப ஈடுபாடு குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக விக்கிப்பீடியா இயக்கத்தில் உள்ளார். இந்திய விக்கிகள் அளவில் அவர் வைக்கும் கருத்துகள் நேர்மையானவை. ஆக்கம் சேர்ப்பவை. விக்கிப்பீடியா கொள்கைகள் பற்றி ஆழ்ந்த புரிதல் உள்ளவர். வெறும் விமரிசனங்களை மட்டும் முன்வைக்காமல் அவற்றுக்கான தீர்வுகளையும் காண முனைபவர். எனவே, தனக்குக் கிடைக்கும் நிருவாகப் பொறுப்பின் மூலம் தமிழ் விக்கிபீடியாவுக்கு வளம் சேர்ப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 11:29, 27 மே 2012 (UTC)[பதிலளி]

1. Naancoder உரையாடியுள்ள முறை உகந்ததல்ல. நான் முன்பே கூறினேன் தனிப்பட்ட தாக்குதல்கள் கூடாது என்று. நீங்கள் சுட்டிய பக்கங்கள் அதையும் தாண்டி தூண்டுதலின்றி பொதுவாக தாக்குவது கண்டிக்கத்தக்கது. எ.கா "யோவ்" போன்றவை. இதுவரை உரையாடல் பாங்கினால்(below the belt attacks) மட்டும் விக்கிப்பீடியாவை விட்டு விலகியவர்கள் உண்டா? அவ்வாறு இருந்தால் கொள்கை வேண்டும். நான் மீண்டும் வலியுறுத்துகிறேன், மனம் நோகடித்தல் என்பது தனி நபர் சார்ந்த ஒன்று. கடுஞ்சொல் என்பது அகண்ட வார்த்தை. சிலருக்கு ஃபாசிசம் கடுஞ்சொல், சிலருக்கு அது மற்றொரு சபையில் பேசக் கூடிய சொல். நாம் இங்கு கருத்தடிப்படையில் உரையாடுகின்றோம், ஒரு கருத்தை வலியுறுத்தும் பொழுது கருத்தை தனிப்பட்ட முறையில் பயனர்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது. இயன்ற அளவு கனிவு என்பது போல் இயன்ற அளவு சகிப்புத்தன்மையும் நன்று/தேவை. அதுவே நடுநிலையாக இருக்க முடியும்.
2. // இந்த அகவயமான கவலையைத் தங்களால் தரவுகள் கொண்டு நிறுவ முடியுமானால், அதனைப் பற்றி முறையாக உரையாடலாம்// --> கண்டிப்பாக, சில நாட்களில் பின்னூட்ட தரவுகளுடன் (மொழிநடை மட்டுமல்லாது, பொதுவான பின்னூட்டங்கள்) கொண்ட பிறகு இதனையும் முறையாக உரையாடலாம். ஸ்ரீகாந்த் (பேச்சு) 20:29, 27 மே 2012 (UTC)[பதிலளி]

தனக்குக் கிடைக்கும் நிருவாகப் பொறுப்பின் மூலம் தமிழ் விக்கிபீடியாவுக்கு ஸ்ரீகாந்த் வளம் சேர்ப்பார் என்று நானும் உறுதியாக நம்புகிறேன். எனது வாக்கில் எவ்வித மாற்றமும் இல்லை. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 13:46, 27 மே 2012 (UTC)[பதிலளி]

  • இரவி, நீங்கள் அவருடைய பங்களிப்புகளைப் பற்றி கொண்டிருக்கும் நன்மதிப்பையே நானும் கொண்டிருந்ததாலேயே முதலில் ஆதரவு வாக்களித்தேன். கட்டுரையின் எண்ணிக்கையையோ மொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கையையோ மட்டும் கருத்தில் கொண்டு ( த.வி-யில் 2 கட்டுரைகள் தொடங்கியுள்ளார், 1376 தொகுப்புகள் செய்துள்ளார்), என் மதிப்பீட்டை முன் வைக்கவில்லை. வெறும் எண்ணிக்கைகளை மட்டும் கருத்தில் கொள்வதாயின், தானியக்கமாகவே நிருவாகிகள் தேர்வு செய்யலாமல்லவா? அதுவல்லவே குறிக்கோள். நிருவாகிகளாக இருப்பவர்கள் உரையாடல்களில் நற்பண்பு கொண்டவர்களாகவும், கருத்துகளை முதன்மைப்படுத்தி கண்ணியமாகக் கருத்துரைப்பவர்களாகவும், மாற்றுக்கருத்துகள் கொண்டிருந்தாலும், அவற்றை முன்வைப்பதில் பாங்குடன் செயல்படுபவர்களாகவும் இருக்க வேண்டும். அதற்கேற்ப பல உரையாடல்களிலும் கலந்துகொன்டிருந்தால் அவற்றைக் கணிக்கவும் பயன்படும். இங்கே நிருவாகி தரத்துக்கான பக்கத்திலேயே, அதனால் அவர்கள் நற்பண்புகள் கொண்டவர்களாகவும், மற்றப் பயனர்களுடன் பழகும் போது நல்ல மதிப்பிடு திறன் மற்றும் பொறுமையைக் கடைப்பிடிப்பவராயும் இருக்க வேண்டும். என்று கூறப்படுகின்றது. இவற்றில் பலவற்றில் போதாமை இருப்பதாக என் கணிப்பு. மேலும் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் பற்றிய ஆழ்ந்த புரிதல் கொண்டவர் என்று நீங்கள் கூறுவதில் இருந்து என் கணிப்பு மாறுபட்டதாக உள்ளது - குறிப்பாக தமிழ் விக்கிப்பீடியா பற்றியும் அதன் குறிக்கோள், தேவை, பயன், நடைமுறை பற்றி. எ.கா: உங்கள் கருத்தை பேச்சுப்பக்கத்தில் இடுங்கள், ஏனென்றால் பண்புகள் பகுதியில் இப்பொழுது கொடுக்கப்பட்டுள்ள கால,பங்களிப்பு அளவுகோல்கள் உங்கள் கணிப்பில் போதுமானதாக இல்லை. என்கிறார். ஆங்கிலத்திலே சொல்வார்களே, "Letter and spirit of the law" (ஒரு விதியை மேலோட்டமாக எழுத்தளவாகப் பின்பற்றல் வேறு உண்மைப்பொருள், குறிக்கோள் உணர்ந்து பின்பற்றல் வேறு). வெறும் எண்ணிக்கை, அல்லது ஏட்டளவான விதிகளை மட்டும் முன்வைத்துச் செல்லும் முறைகளின் செல்லாமைகள் இருக்கும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். "Logicwiki" பயனரின் நிரலாக்கம் சார்ந்த பங்களிப்புகள் பற்றி நன்மதிப்பையே நானும் கொண்டிருக்கின்றேன், ஆனால் அவற்றோடு வேறுசில பண்புகளும் நிருவாகிகளாக இருப்பவர்களுக்கு இருத்தல் வேண்டும். "Logicwiki" பயனரின் (பயன், தரம் கணிக்காத வெறும்) எண்ணிக்கைசார்ந்த பங்களிப்புகளைக் கீழே காணலாம்:
  • அனைத்து விக்கி பங்களிப்புகள்
  • தமிழ்விக்கி தொகுப்புகள்; தமிழ் விக்கி தொகுப்புகள்-இன்னொரு முறையில்,
  • தொடங்கிய கட்டுரைகள்
  • பதிவேற்றிய கோப்புகள்


என் வாக்கு எதிர்ப்பாகவே உள்ளது இரவி.
--செல்வா (பேச்சு) 16:43, 27 மே 2012 (UTC)[பதிலளி]

செல்வா, முதலிலேயே குறிப்பிட்டவாறு, அவர் கட்டுரையாக்கத்தில் ஈடுபடுபவர் இல்லை என்பதால், அவரது தொகுப்புகள் எண்ணிக்கையை முன்வைத்து மட்டும் அவரது பங்களிப்பை அளக்க முடியாது. குறிப்பாக, அவருடைய நுட்பப் பணிகளுக்கு இந்த நிருவாக அணுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்பதே பொதுக் கருத்தாக இருப்பதால், அதைச் சார்ந்து அவருடைய பங்களிப்புகளை நோக்க விரும்புகிறேன்.

சிறீக்காந்த், பெரும் பொறுப்பு எடுத்து ஒருங்கிணைத்த / கலந்து கொண்ட பயிற்சிப் பட்டறைகளில் சில பின்வருமாறு:

சிறீக்காந்தும் யுவராசும் இணைந்து அண்மையில் சென்னையில் ஒருங்கிணைத்த மீடியாவிக்கி நிரலாக்க முயற்சி தமிழ் விக்கிப்பீடியா சார்ந்த பல பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இம்முயற்சியின் ஒருங்கிணைப்புத் திறம் உலகளவிலான மீடியாவிக்கி நிரலாளர்களின் கவனத்தை ஈர்த்தது. விக்கிப்பீடியா:இணைய எழுத்துரு தொடர்பான தொடர் சோதனைகளில் சிறீக்காந்தும் சோடாபாட்டிலும் ஆற்றிய பங்களிப்பு இந்திய மொழிகள் அனைத்துக்கும் பயன்பட்டது. அவர் ஆற்றிவரும் நுட்பப் பணிகள் குறித்த அவரது பயனர் பக்க ஆவணப்படுத்தலைக் காணலாம். ஒரு சில வரிகளில் குறிப்பிட்டுள்ள இப்பணிகளைச் செய்ய பல நூற்றுக்கணக்கான மணி நேர உழைப்பு உள்ளது. குறிப்பாக, தமிழ் விக்கியூடகப் போட்டியில் அவர் ஆற்றிய பின்புலப் பணிகள், நுட்பப் பணிகள். இதனைக் கட்டுரையாக்கம் போல் நேரடியாக ஆவணப்படுத்த வழி இல்லை. தமிழ் விக்கிப்பீடியாவின் வழு நிலவரங்கள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இது தொடர்பான இவரது பங்களிப்புகளை பக்சில்லா தளத்தில் பின்தொடர்ந்து காணலாம். சுருக்கமாகச் சொன்னால், இந்திய மொழிகள் / தமிழ் தொடர்பான பல்வேறு மீடியாவிக்கி நுட்பப் பணிகளுக்கான ஒரு அச்சாணியாக, தொடர்புப் புள்ளியாகச் செயல்பட்டு வருகிறார். இது தொடர்பாக பல்வேறு மடல் உரையாடல்கள் தவிர, நேரடியாகவும் சந்தித்தும் பேசி உள்ளேன் என்பதால் அவருடைய விக்கி பங்களிப்புகள் பல்வேறு வகையிலும் மெச்சத்தக்கவை என்பதில் உறுதியாக இருக்கிறேன். நன்றி--இரவி (பேச்சு) 18:25, 27 மே 2012 (UTC)[பதிலளி]

நன்றி இரவி, இவற்றை நானும் அறிவேன். நானும் மெச்சுகின்றேன். நான் மேலேயும் என் நன்மதிப்பைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். கட்டுரை எண்ணிகையை/தொகுப்புகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு நான் என் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. நான் ஒருவன் எதிர்ப்பதால், தவறில்லை, முறைப்படி முடிவெடுத்து அறிவிப்பு செய்யுங்கள். என் கணிப்பு தவறாக இருப்பின் நானே யாவரைக் காட்டிலும் மகிழ்ச்சி அடைவேன்! தமிழ் விக்கிப்பீடியாவின் உள்ளடக்கத்தைப் பற்றியும், நடையைப் பற்றியும், கருத்து மாறுபடும் இடங்களில் அவர் உரையாடல் பற்றியும் அவருடைய அணுமுறை இன்னும் பாங்குற வேண்டும். நல்ல ஒரு கலைக்களஞ்சியம் இருந்தால்தான், அது நல்ல முறையில் சீர்மைபேணி வளர்ந்து வந்தால்தால்தான் நிரலாக்கங்களும் பயன்பெருக்கும். --செல்வா (பேச்சு) 19:23, 27 மே 2012 (UTC)[பதிலளி]
என்னுடைய பங்களிப்புகளை எடுத்துரைத்தமைக்கும் உங்கள் நம்பிக்கைக்கும் நன்றி இரவி. செல்வா, தமிழ் விக்கிப்பீடியாவின் குறிக்கோள், தேவை, பயன், நடைமுறை பற்றி நேரம் கிடைத்தால் ஓர் வலைப்பதிவாக எழுதுங்கள், எனக்கு பயன்படுகின்றதோ இல்லையோ, இங்கும் இணையத்திலும் பலரும் படித்து புரிந்துகொள்ள உதவும். ஸ்ரீகாந்த் (பேச்சு) 20:29, 27 மே 2012 (UTC)[பதிலளி]