அக்டோபர் 18
நாள்
(18 அக்டோபர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | அக்டோபர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMXXIV |
அக்டோபர் 18 (October 18) கிரிகோரியன் ஆண்டின் 291 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 292 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 74 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
தொகு- 320 – கிரேக்க மெய்யியலாளர் பாப்பசு வலய மறைப்பு ஒன்றை அவதானித்தார்.
- 1009 – எருசலேமின் திருக்கல்லறைத் தேவாலயம் என்ற கிறித்தவத் தேவாலயம் கலீபா அல்-அக்கீம் அல்லா என்பவரால் முற்றாக அழிக்கப்பட்டது.
- 1016 – அசான்டன் சமருடன் குனூக் த்னது இங்கிலாந்து மீதான படையெடுப்பை முடித்துக் கொண்டான்.
- 1081 – டிராச்சியம் நகரில் இடம்பெற்ற போரில் நோர்மானியர் பைசாந்தியரைத் தோற்கடித்தனர்.
- 1356 – சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பேசெல் நகரம் முற்றாக அழிந்தது.
- 1565 – சப்பானுக்கும் மேற்குலத்திற்கும் இடையே முதலாவது கடற் சமர் இடம்பெற்றது. புக்குடா குடாவில் சப்பானின் மத்சூரா கடற்படையினர் போர்த்துக்கீசரின் வணிகக் கப்பல்களைக் கைப்பற்றுவதில் தோல்வியடைந்தனர்.
- 1648 – அமெரிக்காவின் முதலாவது தொழிற்சங்கத்தை பாஸ்டன் செம்மார்கள் ஆரம்பித்தனர்.
- 1679 – கண்டி அரசனால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் காப்டன் இராபர்ட் நொக்சு அங்கிருந்து தப்பி மன்னார் அரிப்பு என்ற இடத்துக்கு வந்து சேர்ந்தார்.[1]
- 1748 – ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் முடிவுக்கு வந்தது.
- 1860 – இரண்டாம் அபினிப் போர் முடிவுக்கு வந்த்து.
- 1867 – உருசியப் பேரரசிடம் இருந்து அலாஸ்கா மாநிலத்தை ஐக்கிய அமெரிக்கா 7.2 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது. இந்நாள் அலாஸ்கா நாள் எனக் கொண்டாடப்படுகிறது.
- 1898 – ஐக்கிய அமெரிக்கா புவெர்ட்டோ ரிக்கோவை எசுப்பானியாவிடம் இருந்து கைப்பற்றியது.
- 1912 – முதலாம் பால்கான் போர்: செர்பிய மன்னர் முதலாம் பீட்டர் தனது நாடு போரில் இறங்குகிறது என செர்பிய மக்களுக்கு அறிவித்தார்.
- 1921 – சோவியத் ஒன்றியத்தில் கிரிமிய தன்னாட்சி சோவியத் சோசலிசக் குடியரசு அமைக்கப்பட்டது.
- 1922 – பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
- 1929 – கனடாவில் பெண்களும் மனிதர்கள் என சட்டபூர்வமாக எழுதப்பட்டது.
- 1944 – சோவியத் ஒன்றியம் செக்கோசிலோவாக்கியாவை முற்றுகையிட்டு நாட்சி ஜெர்மனியிடம் இருந்து கைப்பற்றியது.
- 1945 – வெனிசுவேலாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் அரசுத்தலைவர் இசாயசு மெதினா அங்கரீட்டா பதவியிழந்தார்.
- 1946 – இலங்கையில் யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த இரவுத் தொடருந்து அனுராதபுரத்திற்கு அருகாமையில் இரத்மலை என்ற இடத்தில் தடம் புரண்டதில் நால்வர் உயிரிழந்தனர், 14 பேர் காயமடைந்தனர்.[2]
- 1954 – அமெரிக்காவின் டெக்சாசு இன்ஸ்ட்ருமெண்ட்சு நிறுவனம் முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது.
- 1963 – பெலிசேட் விண்வெளிக்கு சென்ற முதலாவது பூனை என்ற பெயரைப் பெற்றது.
- 1967 – சோவியத் விண்கலம் வெனேரா 4 வெள்ளிக் கோளை அடைந்தது. வேறொரு கோளின் வளிமண்டலத்தை அளந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
- 1991 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்து விலகியது.
- 1991 – தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது.
- 2004 – சந்தனக் கடத்தல் வீரப்பன் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.
- 2006 – ஈழப்போர்: காலி கடற்படைத்தளத்தில் கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் பல கடற்படைக் கலங்கள் அழிக்கப்பட்டன.
- 2007 – கராச்சியில் முன்னாள் பாக்கித்தான் பிரதமர் பெனசீர் பூட்டோ மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 139 பேர் கொல்லப்பட்டனர், 450 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பூட்டோ காயமெதுவுமின்றி தப்பினார்.
- 2011 – ஐந்தாண்டுகள் அமாசின் கைதியாக இருந்த இசுரேலிய இராணுவ வீரர் கிலாத் சாலித் விடுவிக்கப்பட்டார்.
பிறப்புகள்
தொகு- 1130 – சூ சி, சீன மெய்யியலாளர் (இ. 1200)
- 1859 – என்றி பெர்குசன், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மெய்யியலாளர் (இ. 1941)
- 1882 – பல்லடம் சஞ்சீவ ராவ், தமிழக புல்லாங்குழல் கலைஞர் (இ. 1962)
- 1910 – வி. நவரத்தினம், இலங்கை அரசியல்வாதி (இ. 2006)
- 1915 – மகாதேவன் சதாசிவம், இலங்கைத் துடுபாட்ட வீரர் (இ. 1977)
- 1925 – நா. த. திவாரி, இந்திய அரசியல்வாதி (இ. 2018)
- 1950 – ஓம் பூரி, இந்திய நடிகர் (இ. 2017)
- 1952 – ரோய் டயஸ், இலங்கைத் துடுப்பாளர்
- 1956 – மார்ட்டினா நவரத்திலோவா, செக்-அமெரிக்க டென்னிசு வீராங்கனை
- 1960 – ஜான் குளோட் வான் டாம், பெல்சிய நடிகர்
- 1965 – சாகிர் நாயக், இந்திய இசுலாமிய மதகுரு
- 1973 – ஜேம்ஸ் ஃபோலி, அமெரிக்க ஊடகவியலாளர் (இ. 2014)
- 1974 – அமீஷ் திரிபாதி, இந்திய நூலாசிரியர்
- 1978 – ஜோதிகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1978 – செந்தில் குமார், தமிழகத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர், ஊடகவியலாளர்
- 1984 – பிரீடா பின்டோ, இந்திய நடிகை
- 1987 – சாக் எப்ரான், அமெரிக்க நடிகர்
இறப்புகள்
தொகு- 1417 – பன்னிரண்டாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1326)
- 1775 – சிலுவையின் புனித பவுல், இத்தாலிய கிறித்தவ புனிதர், திருப்பாடுகள் சபை நிறுவனர் (பி. 1694)
- 1871 – சார்ல்ஸ் பாபேஜ், ஆங்கிலேயக் கணிதவியலாளர், பொறியியலாளர் (பி. 1791)
- 1931 – தாமசு ஆல்வா எடிசன், கிராமபோனைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1847)
- 1934 – சான்டியாகோ ரமோன் கசல், நோபல் பரிசு பெற்ற எசுப்பானிய மருத்துவர் (பி. 1852)
- 1966 – எலிசபெத் ஆர்டன், கனடிய-அமெரிக்க தொழிலதிபர் (பி. 1878)
- 1975 – சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, கருநாடக வாய்ப்பாட்டுக் கலைஞர் (பி. 1898)
- 1985 – கே. ஆர். ராம்சிங், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1915)
- 2004 – வீரப்பன், சந்தனக் கடத்தல்காரர், (பி. 1952)
- 2015 – தமிழினி, விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவி (பி. 1972)
- 2018 – நா. த. திவாரி, இந்திய அரசியல்வாதி (பி. 1925)
சிறப்பு நாள்
தொகு- புனித லூக்கா விழா
- அலாஸ்கா நாள் (அலாஸ்கா, அமெரிக்கா)
- விடுதலை நாள் (அசர்பைஜான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து, 1991)
மேற்கோள்கள்
தொகு- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 5
- ↑ "Principal Ceylon Events, 1946". Ferguson's Ceylon Directory, Colombo. 1947.
வெளி இணைப்புகள்
தொகு- "இன்றைய நாளில்". பிபிசி.
- "அக்டோபர் 18 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்