குவாந்தான் மக்களவைத் தொகுதி
குவாந்தான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kuantan; ஆங்கிலம்: Kuantan Federal Constituency; சீனம்: 关丹国会议席) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், குவாந்தான் மாவட்டத்தில் (Kuantan District); அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P083) ஆகும்.[5]
குவாந்தான் (P083) மலேசிய மக்களவைத் தொகுதி பகாங் | |
---|---|
Kuantan (P083) Federal Constituency in Pahang | |
குவாந்தான் மக்களவைத் தொகுதி (P083 Kuantan) | |
மாவட்டம் | குவாந்தான் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 87,597 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | குவாந்தான் |
முக்கிய நகரங்கள் | குவாந்தான், பெக்கான் |
பரப்பளவு | 165 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | வான் ரசாலி வான் நோர் (Wan Razali Wan Nor) |
மக்கள் தொகை | 128,247 (2020)[4] |
முதல் தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1959 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
குவாந்தான் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டில் இருந்து குவாந்தான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
குவாந்தான் மாவட்டம்
தொகுகுவாந்தான் மாவட்டம், பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் குவாந்தான். பகாங் மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் வடக்கில் திராங்கானு மாநிலத்தின் கெமாமான் மாவட்டம்; கிழக்கில் தென்சீனக் கடல்; மேற்கில் மாரான் மாவட்டம் மற்றும் ஜெராண்டுட் மாவட்டம்; தெற்கில் பெக்கான் மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.
இந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குவாந்தான் மற்றும் பண்டார் இந்திரா மக்கோத்தா (Bandar Indera Mahkota). இதர நகரங்கள் பஞ்சிங், சுங்கை லெம்பிங், கம்பாங் மற்றும் பெசெரா. 11-ஆம் நூற்றாண்டில், குவாந்தான் நிலப்பகுதி, சயாமியர்களால் கையகப்படுத்தப் படுவதற்கு முன்பு, பெங்-கெங் (Pheng-Kheng) எனும் மற்றும் ஒரு சிறிய பேரரசால் ஆளப்பட்டது. 15-ஆம் நூற்றாண்டில், சிறிது காலம் மலாக்கா அரசாலும் ஆளப்பட்டது.
குவாந்தான் மக்களவைத் தொகுதி
தொகுகுவாந்தான் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1958-ஆம் ஆண்டில் குவாந்தான் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம் | ||||
1-ஆவது மலாயா மக்களவை | P061 | 1959–1963 | அப்துல் ரகுமான் தாலிப் (Abdul Rahman Talib) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
மலேசிய மக்களவை | ||||
1-ஆவது மலேசிய மக்களவை | P061 | 1963–1964 | அப்துல் ரகுமான் தாலிப் (Abdul Rahman Talib) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
2-ஆவது மக்களவை | 1964–1968 | |||
1968–1969 | முகமது தாயிப் (Mohamed Taib) | |||
1969–1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[8] | |||
3-ஆவது மக்களவை | P061 | 1971–1973 | முகமது தாயிப் (Mohamed Taib) |
{மலேசிய கூட்டணி (அம்னோ) |
1973–1974 | பாரிசான் நேசனல் (அம்னோ) | |||
4-ஆவது மக்களவை | P067 | 1974–1978 | முகமது அலி சரீப் (Mohd Ali M. Shariff) | |
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | அப்துல் ரகீம் அபு பக்கர் (Abdul Rahim Abu Bakar) | ||
7-ஆவது மக்களவை | P075 | 1986–1990 | ஆதாம் அப்துல் காதிர் (Adam Abdul Kadir) | |
8-ஆவது மக்களவை | 1990–1995 | பவுசி அப்துல் ரகுமான் (Fauzi Abdul Rahman) | ||
9-ஆவது மக்களவை | P078 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | முகமது காலில் யாக்கோப் (Mohd Khalil Yaakob) | ||
11-ஆவது மக்களவை | P083 | 2004–2008 | பு ஆ கியாவ் (Fu Ah Kiow) |
பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) |
12-ஆவது மக்களவை | 2008–2013 | புசியா சாலே (Fuziah Salleh) |
பாக்காத்தான் ராக்யாட் (மக்கள் நீதிக் கட்சி) | |
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) | ||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | வான் ரசாலி வான் நோர் (Wan Razali Wan Nor) |
பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) |
குவாந்தான் தேர்தல் முடிவுகள்
தொகுவேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
வான் ரசாலி வான் நோர் (Wan Razali Wan Nor) | பெரிக்காத்தான் நேசனல் | 25,514 | 37.65 | 37.65 | |
புசியா சாலே (Fuziah Salleh) | பாக்காத்தான் அரப்பான் | 22,648 | 33.42 | 11.15 ▼ | |
அப்துல் அமீது முகமது நசார் (Ab Hamid Mohd Nazahar) | பாரிசான் நேசனல் | 19,114 | 28.21 | 1.56 | |
அனுவார் தஜுதீன் (Anuar Tajuddin) | தாயக இயக்கம் | 486 | 0.72 | 0.72 | |
மொத்தம் | 67,762 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 67,762 | 98.90 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 753 | 1.10 | |||
மொத்த வாக்குகள் | 68,515 | 100.00 | |||
பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [9] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 10 ஜூலை 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
- ↑ "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-16.
- ↑ "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF PAHANG" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.