பட்டை ஒன்று பாதை ஒன்று
பட்டுச் சாலை பொருளாதாரப் பட்டையும், 21 ஆம் நூற்றாண்டு கடல்வழிப் பட்டுப் பாதையும் (சீனம்: 丝绸之路经济带和21世纪海上丝绸之路) என்பது சீன மக்கள் குடியரசு முன்வைத்துள்ள ஒரு மேம்பாட்டுச் செயல்நெறியும், சட்டகமும் ஆகும். இது பட்டையும் பாதையும் அல்லது பட்டை ஒன்று, பாதை ஒன்று (சீனம்: 一带一路; பின்யின்: Yídài yílù) அல்லது பட்டை மற்றும் பாதை முன்னெடுப்பு என்றும் வழங்கப்படுகிறது. முதன்மையாக யூரேசிய நாடுகளுக்கிடையே இணைப்புகளையும், ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதைக் குவிமையமாகக் கொண்ட இந்த உத்தியில் நிலவழி பட்டுச் சாலைப் பொருளாதாரப் பட்டை, கடல்வழி பட்டுப் பெரும்பாதை ஆகிய இரண்டு முக்கியப் பகுதிகள் உள்ளன. சீனா உலக நடப்புகளில் தமது பங்களிப்பைக் கூடுதலாக்க முயற்சிப்பதன் ஒரு பகுதியாகவும், தாம் மிகை உற்பத்தி செய்யும் எஃகு போன்ற பொருட்களின் ஏற்றுமதி கருதியும் இந்த செயல்திட்டத்தை முன்னெடுப்பதாகக் கருதப்படுகிறது.[1]
பட்டை ஒன்று பாதை ஒன்று
மற்றும் தொடர்புடைய திட்டப் பணிகள் | |
சுருக்கம் | BRI |
---|---|
உருவாக்கம் | 2013 2017 (கூட்டம்) 2019 (கூட்டம்) 2023 (கூட்டம்) |
நிறுவனர் | சீனா |
சட்ட நிலை | செயல்பாட்டில் உள்ளது |
நோக்கம் | பொருளாதார வளர்ச்சி மற்றும் பிராந்தியங்களுக்கு இடையிலான வணிகப் போக்குவரத்தை ஊக்குவிப்பது |
தலைமையகம் |
|
வலைத்தளம் | www |
சீனக் குடியரசின் தலைவர் சீ சின்பிங் செப்டம்பர் 2013 இல் பட்டுச் சாலை பொருளாதாரப் பட்டையையும், அக்டோபர் 2013 இல் பட்டு கடற்பெருவழியையும் அறிவித்தார்.
உள்கட்டமைப்பு வலையமைவு
தொகுஇந்த முன்னெடுப்பின் முதன்மையான உள்ளடக்கப் பரப்பாக ஆசியாவும், ஐரோப்பாவும் இருந்தபோதும், கிழக்கு ஆப்பிரிக்காவும், ஓசியானியாவும் கூட சேர்க்கப்பட்டுள்ளன.
செப்டெம்பர், அக்டோபர் 2013 இல் ஜி ஜிங்பின் மத்திய, தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தபோது இப்பாதையையும், பட்டையையும் நாடுகள் சேர்ந்து கட்டமைக்கவேண்டியதன் தேவையை முன்வைத்தார்.
பட்டுச் சாலை பொருளாதாரப் பட்டை
தொகுமத்திய ஆசியா, மேற்காசியா, மத்தியகிழக்கு ஐரோப்பாவில் அமைந்த பழைய பட்டுச் சாலையில் உள்ள நாடுகளே இப்பட்டையில் இடம்பெற்றுள்ளன. உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பண்பாட்டுப் பரிமாற்றங்களை அதிகரித்தல், வணிகத்தை விரிவாக்குதல் ஆகியவற்றின் வழியே இப்பகுதியை ஒரு ஒருங்கிணைந்த பொருளாதார மண்டலமாக மாற்றுவதை இத்திட்டம் முன்வைக்கிறது. தொன்மையான பட்டுச் சாலையில் அமைந்த இப்பகுதியைத் தவிர தெற்கு, தென்கிழக்காசியாவும் இப்பட்டையின் விரிவாக்கமாக உள்ளடக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. இப்பட்டை மற்றும் பாதையில் அமைந்துள்ள நாடுகள் பலவும் சீனா தலைமையிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உறுப்பு நாடுகளாகும்.
கடல்வழி பட்டுச் சாலை
தொகு21 ஆம் நூற்றாண்டு கடல்வழி பட்டுப் பெரும்பாதை (சீனம்: 21世纪海上丝绸之路)என்பது நிலவழிப் பட்டுச் சாலை திட்டத்தோடு தொடர்புடைய மற்றொரு முன்னெடுப்பாகும். தொடர்ச்சியுற அமைந்த நீர்நிலைகளான தென்சீனக்கடல், தென் பசிபிக் பெருங்கடல், அகன்ற இந்தியப் பெருங்கடல் பகுதி வழியே தென்கிழக்காசியா, ஓசியானியா, வட ஆப்பிரிக்காவில் முதலீடு செய்வதும், கூட்டுச் செயல்பாட்டை ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.[2][3][4]
கடல்வழி பட்டுச் சாலையை இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் அக்டோபர் 2013 இல் ஆற்றிய உரையின்போது சீ சின்பிங் முதலில் முன்வைத்தார்.[5]
கிழக்கு ஆப்பிரிக்கா
தொகுநைரோபிக்கும் மொம்பாசாவுக்கும் இடையே நவீனமான, செந்தர அகலமுடைய ஒரு தொடர்வண்டிப் பாதையைக் கட்டிமுடிப்பது, உள்நாட்டுத் துறைமுகங்களை மேம்படுத்துவது ஆகிய பணிகள் முடியும்பொழுது கிழக்கு ஆப்பிரிக்கா, குறிப்பாக கென்யா, கடல்வழி பட்டுச் சாலையின் ஒரு பகுதியாகிவிடும்.[6]
தொடர்புடைய பிற வலையமைவுகள்
தொகுசீன பாகிஸ்தான் பொருளாதாரப் பாட்டையும், வங்காளதேசம் - சீனா - இந்தியா - மியான்மர் பொருளாதாரப் பாட்டையும் அதிகாரப்பூர்வமாக பாதையும் பட்டையும் திட்டத்தோடு "நெருக்கமான தொடர்புடையவையாக" வகைப்படுத்தப்பட்டுள்ளன.[7] இருந்தாலும் ஊடக தகவல்கள்படி இப்பாட்டைகள் நெருக்கமான தொடர்புடையவை என்பதைவிட "பாதையொன்று, பட்டையொன்று" திட்டத்தில் உள்ளடங்கிய பகுதிகளாகவே கருதப்படுகின்றன.
நிதி நிறுவனங்கள்
தொகுஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி
தொகுசீனாவும், இன்னும் 56 நாடுகளும் இணைந்து இச்செயல்நெறியோடு தொடர்புடைய திட்டங்களுக்கு கடன்வழங்குவதற்காகவே ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி என்ற வளர்ச்சி வங்கியினை 2014 இல் ஏற்படுத்தியுள்ளன.
29 ஜூன் 2015 அன்று இவ்வங்கியின் சட்டமுறைக் கட்டமைப்பு பெய்ஜிங்கில் கையெழுத்தானது. இந்த பலதரப்பு வங்கியின் ஏற்பளிக்கப்பட்ட முதலீட்டுத் தொகையான $100 பில்லியனில் 75% ஆசிய நாடுகளிலிருந்தே வரும். 26% வாக்களிப்பு உரிமையுடன் சீனாவே இவ்வங்கியின் தனிப்பெரும் பங்குதாரராக உள்ளது. இவ்வாண்டின் இறுதியில் இவ்வங்கி செயல்பாட்டினைத் தொடங்கும்.[8]
பட்டுச் சாலை நிதி
தொகுஇத்திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட வங்கிகள் தவிர்த்து $40 பில்லியன் வளர்ச்சி நிதி ஒன்றினையும் உருவாக்குகிற திட்டத்தை சீ சின்பிங் நவம்பர் 2014 இல் அறிவித்தார். இந்நிதியானது செயல்திட்டங்களுக்கு கடன்வழங்குவது என்றில்லாமல் தொழில்வணிகத்தில் முதலீடு செய்வதற்குப் பயன்படுத்தப்படும். சீனா பாகிஸ்தான் பொருளாதாரப் பாட்டை முதலீடுகளில் உள்ளடங்காத, பாகிஸ்தானிலுள்ள கரோத் நீர்மின் நிலையத் திட்டம் பட்டுச்சாலை நிதியின் முதலாவது முதலீட்டுத் திட்டமாகும்.[9]
உறுப்பினர்கள்
தொகு- ஆப்கானித்தான்[10]
- அல்பேனியா[10]
- அல்ஜீரியா[10]
- அங்கோலா[10]
- அன்டிகுவா பர்புடா[10]
- ஆர்மீனியா[10]
- ஆஸ்திரியா[10]
- அசர்பைஜான்[10]
- பகுரைன்[10]
- வங்காளதேசம்[10]
- பார்படோசு[10]
- பெலருஸ்[10]
- பெனின்[10]
- பொலிவியா[10]
- பொசுனியா எர்செகோவினா[10]
- போட்சுவானா[10]
- புரூணை[10]
- பல்கேரியா[10]
- புர்க்கினா பாசோ[11]
- புருண்டி[10]
- கம்போடியா[10]
- கேப் வர்டி[10]
- கமரூன்[10]
- மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு[10]
- சாட்[10]
- சிலி[10]
- சீனா[10]
- கொமொரோசு[10]
- காங்கோ மக்களாட்சிக் குடியரசு[10]
- காங்கோ[10]
- குக் தீவுகள்[10]
- கோஸ்ட்டா ரிக்கா[10]
- குரோவாசியா[10]
- கியூபா[10]
- சைப்பிரசு[10]
- செக் குடியரசு[10]
- சீபூத்தீ[10]
- டொமினிக்கா[10]
- டொமினிக்கன் குடியரசு[10]
- எக்குவடோர்[10]
- எகிப்து[10]
- எல் சல்வடோர[10]
- எக்குவடோரியல் கினி[10]
- எரித்திரியா[10]
- எதியோப்பியா[10]
- பிஜி[10]
- காபொன்[10]
- கம்பியா[10]
- சியார்சியா[10]
- கானா[10]
- கிரேக்க நாடு[10]
- கிரெனடா[10]
- கினியா[10]
- கினி-பிசாவு[10]
- கயானா[10]
- ஒண்டுராசு[12]
- அங்கேரி[10]
- இந்தோனேசியா[10]
- ஈரான்[10]
- ஈராக்[10]
- ஐவரி கோஸ்ட்[10]
- ஜமேக்கா[10]
- யோர்தான்[13]
- கசக்கஸ்தான்[10]
- கென்யா[10]
- கிரிபட்டி[10]
- குவைத்[10]
- கிர்கிசுத்தான்[10]
- லாவோஸ்[10]
- லாத்வியா[10]
- லெபனான்[10]
- லெசோத்தோ[10]
- லைபீரியா[10]
- லிபியா[10]
- லித்துவேனியா[10]
- லக்சம்பர்க்[10]
- மடகாசுகர்[10]
- மலாவி[10]
- மலேசியா[10]
- மாலைத்தீவுகள்[10]
- மாலி[10]
- மால்ட்டா[10]
- மூரித்தானியா[10]
- மொரிசியசு[14]
- மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்[10]
- மல்தோவா[10]
- மங்கோலியா[10]
- மொண்டெனேகுரோ[10]
- மொரோக்கோ[10]
- மொசாம்பிக்[10]
- மியான்மர்[10]
- நமீபியா[10]
- நேபாளம்[10]
- நியூசிலாந்து[10]
- நிக்கராகுவா[10]
- நைஜர்[10]
- நைஜீரியா[10]
- நியுவே[10]
- மாக்கடோனியக் குடியரசு[10]
- ஓமான்[10]
- பாக்கித்தான்[10]
- பலத்தீன்[10]
- பனாமா[10]
- பப்புவா நியூ கினி[10]
- பெரு[10]
- பிலிப்பீன்சு[10] (2024இல் வெளியேறுகிறது)[15]
- போலந்து[10]
- போர்த்துகல்[10]
- கத்தார்[10]
- உருமேனியா[10]
- உருசியா[10]
- ருவாண்டா[14]
- சமோவா[10]
- சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி[16]
- சவூதி அரேபியா[10]
- செனிகல்[14]
- செர்பியா[10]
- சீசெல்சு[10]
- சியேரா லியோனி[10]
- சிங்கப்பூர்[10]
- சிலவாக்கியா[10]
- சுலோவீனியா[10]
- சொலமன் தீவுகள்[10]
- சோமாலியா[10]
- தென்னாப்பிரிக்கா[10]
- தெற்கு சூடான்[10]
- இலங்கை[10]
- சூடான்[10]
- சுரிநாம்[10]
- சிரியா[10]
- தஜிகிஸ்தான்[10]
- தன்சானியா[10]
- தாய்லாந்து[10]
- கிழக்குத் திமோர்[10]
- டோகோ[10]
- தொங்கா[10]
- டிரினிடாட் மற்றும் டொபாகோ[10]
- தூனிசியா[10]
- துருக்கி[10]
- துருக்மெனிஸ்தான்[10]
- உகாண்டா[10]
- ஐக்கிய அரபு அமீரகம்[10]
- உருகுவை[10]
- உஸ்பெகிஸ்தான்[10]
- வனுவாட்டு[10]
- வெனிசுவேலா[10]
- வியட்நாம்[10]
- யேமன்[10]
- சாம்பியா[10]
- சிம்பாப்வே[10]
பார்வையாளர்கள்
தொகுஇத்திட்டத்தில் சேர பரிசீலிக்கும் நாடுகள்:
விலகிய நாடுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "One Belt, One Road". Archived from the original on 2016-09-12. பார்க்கப்பட்ட நாள் 2015-11-08.
- ↑ "Sri Lanka Supports China's Initiative of a 21st Century Maritime Silk Route". Archived from the original on 2015-05-11. பார்க்கப்பட்ட நாள் 2015-11-08.
- ↑ Shannon Tiezzi, The Diplomat. "China Pushes 'Maritime Silk Road' in South, Southeast Asia – The Diplomat". The Diplomat.
- ↑ "Reflections on Maritime Partnership: Building the 21st Century Maritime Silk Road". Archived from the original on 2015-04-03. பார்க்கப்பட்ட நாள் 2015-11-08.
- ↑ "Xi in call for building of new 'maritime silk road'[1]-chinadaily.com.cn".
- ↑ Jeremy Page (8 November 2014). "China to Contribute $40 Billion to Silk Road Fund". WSJ.
- ↑ "Vision and Actions on Jointly Building Belt and Road". Xinhua. March 29, 2015 இம் மூலத்தில் இருந்து மார்ச் 4, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304085441/http://english.cri.cn/12394/2015/03/29/2941s872030_1.htm.
- ↑ "One Belt, and One Road". Xin Hua Finance. Archived from the original on 2016-03-29. பார்க்கப்பட்ட நாள் 2015-11-08.
- ↑ "Commentary: Silk Road Fund's 1st investment makes China's words into practice". english.gov.cn. பார்க்கப்பட்ட நாள் 2015-07-15.
- ↑ 10.000 10.001 10.002 10.003 10.004 10.005 10.006 10.007 10.008 10.009 10.010 10.011 10.012 10.013 10.014 10.015 10.016 10.017 10.018 10.019 10.020 10.021 10.022 10.023 10.024 10.025 10.026 10.027 10.028 10.029 10.030 10.031 10.032 10.033 10.034 10.035 10.036 10.037 10.038 10.039 10.040 10.041 10.042 10.043 10.044 10.045 10.046 10.047 10.048 10.049 10.050 10.051 10.052 10.053 10.054 10.055 10.056 10.057 10.058 10.059 10.060 10.061 10.062 10.063 10.064 10.065 10.066 10.067 10.068 10.069 10.070 10.071 10.072 10.073 10.074 10.075 10.076 10.077 10.078 10.079 10.080 10.081 10.082 10.083 10.084 10.085 10.086 10.087 10.088 10.089 10.090 10.091 10.092 10.093 10.094 10.095 10.096 10.097 10.098 10.099 10.100 10.101 10.102 10.103 10.104 10.105 10.106 10.107 10.108 10.109 10.110 10.111 10.112 10.113 10.114 10.115 10.116 10.117 10.118 10.119 10.120 10.121 10.122 10.123 10.124 10.125 10.126 10.127 10.128 10.129 10.130 10.131 10.132 10.133 10.134 10.135 10.136 10.137 10.138 10.139 10.140 10.141 10.142 10.143 Nedopil, Christoph. "Countries of the Belt and Road Initiative (BRI) – Green Finance & Development Center". Archived from the original on 18 May 2022. பார்க்கப்பட்ட நாள் 30 July 2023.
- ↑ "【The Chinese Government and the Government of Burkina Faso Signed the Belt and Road Initiative Cooperation Document】-National Development and Reform Commission (NDRC) People's Republic of China". en.ndrc.gov.cn. Archived from the original on 27 June 2023. பார்க்கப்பட்ட நாள் 30 July 2023.
- ↑ "What Will Honduras Gain By Establishing Ties With China?". The Dialogue. 24 March 2023. Archived from the original on 29 May 2024. பார்க்கப்பட்ட நாள் 10 May 2023.
- ↑ Chau, Jocelyn; Times, The Jordan. "China welcomes Jordan's active participation in Belt and Road Initiative". www.zawya.com. Archived from the original on 30 July 2023. பார்க்கப்பட்ட நாள் 30 July 2023.
- ↑ 14.0 14.1 14.2 "China's Belt and Road Makes Inroads in Africa". The Diplomat. Archived from the original on 17 May 2023.
- ↑ "After Italy, Philippines To Exit China's Belt and Road Initiative". 4 November 2023. Archived from the original on 5 November 2023. பார்க்கப்பட்ட நாள் 5 November 2023.
- ↑ "China, Sao Tome and Principe vow to strengthen pragmatic cooperation". www.news.cn. Archived from the original on 13 May 2023. பார்க்கப்பட்ட நாள் 30 July 2023.
- ↑ "China Invites North Korea to Belt and Road Summit". Archived from the original on 1 September 2023. பார்க்கப்பட்ட நாள் 1 September 2023.
- ↑ "BRI and Brazil's contribution to a more inclusive international system". global.chinadaily.com.cn. Archived from the original on 14 May 2023. பார்க்கப்பட்ட நாள் 14 May 2023.
- ↑ "The Goal Is to Join the Belt and Road — Interview with Luis Diego Monsalve, Colombian Ambassador to China". China Today. Archived from the original on 14 May 2023. பார்க்கப்பட்ட நாள் 14 May 2023.
- ↑ "China calls for cooperation with Denmark under Belt and Road initiative - Xinhua | English.news.cn". www.xinhuanet.com. Archived from the original on 17 May 2023. பார்க்கப்பட்ட நாள் 15 May 2023.
- ↑ "Ireland willing to deepen cooperation with China under BRI". ie.china-embassy.gov.cn. Archived from the original on 31 May 2023. பார்க்கப்பட்ட நாள் 10 May 2023.
- ↑ "San Marino and BRI". 21 August 2019. Archived from the original on 14 May 2023. பார்க்கப்பட்ட நாள் 14 May 2023.
- ↑ "Spain to boost cooperation with China under Belt & Road Initiative - Xinhua Silk Road". en.imsilkroad.com. Archived from the original on 13 May 2023. பார்க்கப்பட்ட நாள் 13 May 2023.
- ↑ "China | Välisministeerium". Archived from the original on 20 April 2024. பார்க்கப்பட்ட நாள் 16 April 2024.
- ↑ "Why is Italy Withdrawing from China's Belt and Road Initiative?". Archived from the original on 14 May 2024. பார்க்கப்பட்ட நாள் 29 August 2023.