பயனர் பேச்சு:பா.ஜம்புலிங்கம்/தொகுப்பு 2
தற்காவல்
தொகுவணக்கம். உங்கள் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும். --AntanO 07:52, 21 சூலை 2016 (UTC)
வணக்கம், AntanO. என் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டதை அறிந்தேன். தங்களைப் போன்றோரின் வழிகாட்டுதல்களுடன் விக்கியில் எனது பங்களிப்பினைத் தொடர்வேன். நன்றி.
வணக்கம், AntanO. என் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டதை அறிந்தேன். தங்களைப் போன்றோரின் வழிகாட்டுதல்களுடன் விக்கியில் எனது பங்களிப்பினைத் தொடர்வேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:22, 21 சூலை 2016 (UTC)
விக்கிக்கோப்பை 2016
தொகுவிக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)
விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம்!
சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.
- பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
- கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
- கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்
இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)
தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!
விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம்!
சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.
- பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
- கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
- கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்
இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)
தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!
-- இரவி
விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்
தொகுவிக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.
3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற மாதவன், உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.
மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)
வணக்கம், வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துகள் --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:41, 31 சூலை 2016 (UTC)
உதவி தேவை
தொகுவணக்கம், --பா.ஜம்புலிங்கம் நான் எழுதிய பாரீசுவ ஜீனாலயம் என்ற கட்டுரையில் ஒசூரில் எடுத்த இரண்டு படங்களை படங்களை இணை்துள்ளேன் இவற்றில் ஒரு தீர்த்தரங்கர் பார்சுவநாதர் என கருதுகிறேன் காரணம் அவரின் தலைக்கு மேல் பாம்பு படமெடுத்துள்ளது போன்ற அமைப்பு உள்ளதாக தெரிகிறது. அது சரியா, இன்னொரு படம் எந்த தீர்தரங்கருக்கானது என்பது சரியாக தெரியவில்லை இந்த தீர்தரங்கருக்கு அருகில் மான் அல்லது மாடு போன்ற ஏதோ ஒரு விலங்கு அதன் கன்றுடன் உள்ளது. இதை ஆராய்ந்து இந்த இரு சிற்பங்கள் யாருடையவை என கூறி உதவுகிறீர்களா நன்றி arulghsrArulghsr (பேச்சு) 04:01, 17 செப்டம்பர் 2016 (UTC)
- வணக்கம் Arulghsr, சில சிலைகளில் உள்ள உருவங்கள் தெளிவின்றி இருக்கும். களப்பணியில் நாங்கள் எதிர்கொண்ட சிரமங்களில் இதுவும் ஒன்று. சிற்பத்தில் தெளிவாக இல்லாத நிலையில் தீர்த்தங்கரர் என்றே கூறிவிடுவது நலம் என்று நினைக்கிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 03:20, 18 செப்டம்பர் 2016 (UTC)
விக்கிக்கோப்பை
தொகுவணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.
இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.
போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..
விக்கிக்கோப்பை:அறிவிப்பு 1
தொகு
விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...
விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்
தொகு
உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.
அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!
விக்கிக்கோப்பை:ஞாபகம் ஊட்டி
தொகு
|
விக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:43, 31 திசம்பர் 2016 (UTC)
விக்கிக்கோப்பை-இரண்டாம் சுற்று
தொகுவிக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி!. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளீகளூம் வழங்கப்படும். அப்பகுப்புகள்
*மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் * மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்* மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:36, 25 சனவரி 2017 (UTC)
- வணக்கம், ஸ்ரீஹீரன் ஜனவரி 31இல் முடிவடையும் போட்டிக்காக தற்போது ஆயத்தப்பட்டு வருகிறேன். வாய்ப்பிருப்பின் நேரத்திற்குத் தகுந்தாற்போல் இரண்டாம் சுற்றிலும் பங்களிப்பேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:37, 25 சனவரி 2017 (UTC)
- பதிலளித்தமைக்கு நன்றி, போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:48, 25 சனவரி 2017 (UTC)
கவனிக்க
தொகுநபர்களின் பெயர்களில், முதலெழுத்துக்கும், பெயருக்கும் இடையில் ஒரு இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும். உ+ம்: சி. என். அண்ணாதுரை. நன்றி.--Kanags \உரையாடுக 08:18, 7 பெப்ரவரி 2017 (UTC)
- வணக்கம், Kanags. நான் ஆரம்பிக்கும் கட்டுரைகளில் உள்ள அறிஞர்களின் பெயர்களைப் பற்றி குறிப்பிடுகின்றீர்களா? பயனர் பெயரில் என் பெயரே இடைவெளி இல்லாமல் இருக்கிறது அதனைக் கூறுகின்றீர்களா? நான் ஆரம்பிக்கும் கட்டுரைகள் எனில் உரிய மாற்றம் செய்துவிடுவேன். பயன்ர் என்ற நிலையில் என் பெயரை மாற்றமுடியுமா எனத் தெரியவில்லை. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:35, 7 பெப்ரவரி 2017 (UTC)
- நான் உங்கள் பெயரைச் சொல்லவில்லை. உங்கள் பயனர் பெயர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அதில் தலையிட எனக்கு என்ன உரிமை உண்டு? நான் கூறுவது விக்கிப்பீடியா கட்டுரைகள் மட்டுமே.--Kanags \உரையாடுக 08:57, 7 பெப்ரவரி 2017 (UTC)
- நன்றி. அவ்வாறே செய்வேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:28, 7 பெப்ரவரி 2017 (UTC)
விக்கிக்கோப்பை : முடிவுகள் அறிய ஆவல்
தொகுவணக்கம், ஸ்ரீஹீரன், இவ்வாண்டிற்கான விக்கிக்கோப்பைப் போட்டி அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்பு 1, அதற்கடுத்து விசேட அறிவித்தல், நினைவூட்டும் நிலையில் ஞாபகம் ஊட்டி என்றளவில் எங்களை போட்டியில் ஈடுபடுத்தியதை எண்ணி மகிழ்கின்றேன். குழுவினரின் அறிவிப்புகள் எங்களை மென்மேலும் எழுதத் தூண்டின. பிப்ரவரி 10இல் முடிவுகள் அறிவிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. முடிவுகளை அறிய ஆவலோடு காத்திருக்கிறோம். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:49, 18 பெப்ரவரி 2017 (UTC)
- மகிழ்ச்சி! முடிவுகள் இரண்டாம் சுற்றும் முடிவடைந்த பின்னரேயே அறிவிக்கப்படும், அத்துடன் முதலாம் சுற்றின் முடிவுகளை இங்குள்ள தரவரிசையில் பார்க்கலாம், அத்துடன் இரண்டாம் சுற்று இம்மாதத்துடன் முடிவடைகின்றது. அச்சுற்றும் முடிவடைந்த பின்னர் மறுநாளே பதக்கங்கள் வழங்கப்படும். அத்துடன் தாங்கள் சற்று மாதங்களில்அறிமுகமாகவிருக்கும் ஓர் போட்டியில் பங்குபற்றி பணப்பரிசில்களை வெல்லுங்கள். விக்கிக்கோப்பையில் வெற்றிபெற வாழ்த்த்துகள்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:01, 18 பெப்ரவரி 2017 (UTC)
- செய்தியறிந்தேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:59, 18 பெப்ரவரி 2017 (UTC)
பதக்கம்
தொகுவிக்கிக்கோப்பை வெற்றியாளர் பதக்கம் | |
தமிழ் விக்கிப்பீடியாவின் 2017 விக்கிக்கோப்பையில் மூன்றாம் இடத்தினை பெற்று அசத்தி கோவில்கள் தொடர்பான கட்டுரைகளை உருவாக்கிய தங்களுக்கு இப்பத்தக்கம் உரித்தாகட்டும். தொடரட்டும் தங்கள் பணி! வாழ்க வளமுடன்! நன்றி! --ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:34, 2 மார்ச் 2017 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
- : விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:56, 2 மார்ச் 2017 (UTC)
- : விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 01:11, 3 மார்ச் 2017 (UTC)
- : விருப்பம்--Arulghsr (பேச்சு) 03:51, 3 மார்ச் 2017 (UTC)
- : விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 04:04, 3 மார்ச் 2017 (UTC)
- : விருப்பம்--எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 06.30, 3 மார்ச் 2017 (UTC)
- வணக்கம், போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தினைப் பெற்றமைக்கு மகிழ்ச்சியடைகின்றேன். போட்டியில் கலந்துகொண்ட சக விக்கிபீடிய நண்பர்கள் அனைவருக்கும், வெற்றி பெற்ற பிற நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். போட்டி ஏற்பாடு செய்த குழுவினருக்கு நன்றி. விருப்பம் தெரிவித்த மா. செல்வசிவகுருநாதன் நந்தகுமார் Arulghsr Booradleyp1 ஆகியோருக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:04, 3 மார்ச் 2017 (UTC)
- விருப்பம்--Kanags \உரையாடுக 07:47, 3 மார்ச் 2017 (UTC)
- : விருப்பம்----கி.மூர்த்தி (பேச்சு) 13:30, 3 மார்ச் 2017 (UTC)
- நன்றி, Kanags,கி.மூர்த்தி.
- விருப்பம் அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 02:40, 04 மார்ச் 2017 (UTC)
- வாழ்த்துகள். விருப்பம் --AntanO 09:27, 4 மார்ச் 2017 (UTC)
- நன்றி,Anbumunusamy, AntanO--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:05, 4 மார்ச் 2017 (UTC)
தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு
தொகுஉங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 13:45, 10 மார்ச் 2017 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1
தொகு
அறிவிப்பு
•
போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
•
போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
•
போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:55, 12 மார்ச் 2017 (UTC)
விக்கிமீடியா வியூகம் 2017
தொகுதமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 17:48, 3 ஏப்ரல் 2017 (UTC)
விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!
தொகு--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:03, 30 ஏப்ரல் 2017 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு
தொகுபோட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
- ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
- ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
- 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
- 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:58, 21 மே 2017 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு
தொகுபோட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:
- 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
- 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
- ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
- ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
- 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:31, 31 மே 2017 (UTC)
பரிந்துரை...
தொகுவணக்கம். கட்டுரை வடிவமைப்பில் மேற்கோள்களுக்குப் பிறகு வெளியிணைப்புகளை காட்டுதல் சிறப்பு. இவ்வாறே விக்கியில் நடைமுறை உள்ளது; நன்றி!
- வணக்கம், மா. செல்வசிவகுருநாதன். நான் ஆரம்பித்த பதிவுகளில் ஏதாவது மாற்றம் செய்யவேண்டுமா? இனி அவ்வாறு எழுத வேண்டுமா? நான் மேற்கோளில் எதுவும் விடுபாடு செய்துள்ளேனா? தாங்கள் கூறியுள்ள பரிந்துரை தொடர்பாக தாங்கள் தந்துள்ள இணைப்பிலிருந்து என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. உதவ வேண்டுகிறேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:27, 5 சூன் 2017 (UTC)
மன்னிக்கவும். நான் இன்னமும் விளக்கமாக தெரிவித்திருக்க வேண்டும். திருவாலம்பொழில் ஆத்மநாதேசுவரர் கோயில் எனும் கட்டுரையில், வெளியிணைப்புகள் எனும் உட்தலைப்பு முதலாவதாகவும், மேற்கோள்கள் எனும் உட்தலைப்பு இரண்டாவதாகவும் இருந்தது. இதனை மாற்றியமைத்தேன். இதனையே - மேற்கோள்கள் எனும் உட்தலைப்பு முதலாவதாகவும், வெளியிணைப்புகள் எனும் உட்தலைப்பு அதற்குப் பிறகு இருப்பதாகவும் இருக்குமாறு வடிவமைத்தலே விக்கி நடைமுறையாகும் என தங்களுக்கு தெரிவித்தேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:43, 5 சூன் 2017 (UTC)
- வணக்கம், மா. செல்வசிவகுருநாதன், விவரம் அறிந்தேன். தெளிவாக்கியமைக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:48, 5 சூன் 2017 (UTC)
துப்புரவுப் பணியில் உதவி தேவை
தொகுவணக்கம். இது பலருக்கும் பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.
சென்ற மாதம், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய விக்கிப்பீடியா பயிற்சிகள் நடைபெற்றன. இந்த மாதமும் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். பெருமளவில் வரும் புதுப்பயனர்களினால் புதிய கட்டுரைகளின் எண்ணிக்கையும் அண்மைய மாற்றங்களில் தொகுப்புகளும் கூடி வருகின்றன. இவர்களுக்கு வழிகாட்ட கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 12:28, 7 சூன் 2017 (UTC)
உதவி...
தொகுவணக்கம்! கீழ்காணும் கட்டுரைகளை கவனித்து, மேம்படுத்த வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:05, 18 சூன் 2017 (UTC) 1 ஆரல்வாய்மொழி மீனாட்சி அம்மன் திருக்கோவில்
- வணக்கம், மா. செல்வசிவகுருநாதன். கடந்த வாரம் இப்பதிவை மேம்படுத்த முனைந்தபோது இக்கோயில் பரகோடி கண்டன் சாஸ்தா, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் என்று பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. இக்கோயிலின் மூலவராக சாஸ்தா உள்ளாரா, மீனாட்சிசுந்தரேஸ்வரர் (அதாவது சிவபெருமான் லிங்கத்திருமேனியாக) உள்ளாரா என்பதை அறியமுடியவில்லை. தவிரவும் கட்டுரையின் தலைப்பு ஆரல்வாய்மொழி மீனாட்சி அம்மன் திருக்கோயில் என்றிருப்பதைக் காணமுடிந்தது. நாளிதழ் செய்திகளை நோக்கும்போது அவற்றில் சில இடங்களில் சாஸ்தா மேஷ வாகனத்தில், அம்பாள் அன்ன வாகனத்தில் உலா வருவர் என்றும், சாஸ்தா குதிரை வாகனத்திலும், அம்பாள் கிளி மற்றும் அன்ன வாகனத்திலும் வருவர் என்றும் கூறப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. இது முறையே சுந்தரேசுவரர் மற்றும் மீனாட்சி என்ற வகையில் கொள்ளவேண்டுமா என்று புரிந்து கொள்ள இயலா நிலையில் இப்பதிவினை மேம்படுத்துவது பற்றி சற்று யோசித்தேன். தற்போது உரிய மேற்கோள்களுடன், அவற்றின் அடிப்படையில் பதிவினை மேம்படுத்தியுள்ளேன். நேரில் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்போது பதிவினை இன்னும் மேம்படுத்துவேன். இவ்விவரத்தினை கட்டுரையின் பேச்சுப்பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:13, 19 சூன் 2017 (UTC)
2 கங்கா செகதேசுவரர் கோவில் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:38, 24 சூன் 2017 (UTC) 3 அருள்மிகு முக்குட்டீஸ்வர் கோவில் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:21, 24 சூன் 2017 (UTC)
- வணக்கம், மா. செல்வசிவகுருநாதன், தற்போது உங்களால் இரு கோயிலின் தலைப்புகள் தரப்பட்டுள்ளன. எதற்காக இந்த தலைப்புகள் தரப்பட்டுள்ளன என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நீங்கள் கூறிய ஆரல்வாய்மொழி மீனாட்சி அம்மன் திருக்கோவில் பதிவினை மேம்படுத்தியுள்ளேன். சரியாக உள்ளதா? --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:03, 25 சூன் 2017 (UTC)
ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை
தொகுவணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 08:14, 20 சூன் 2017 (UTC)
- வணக்கம், அருகிலுள்ள (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர்) மாவட்டங்களில் பயிற்சி எடுக்க பிற நண்பர்கள் பெயர் தந்துள்ளதை அறிந்தேன். தற்போது நூலாக்கப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பிற மாவட்டங்களுக்குச் செல்ல இயலா நிலையில் உள்ளேன். பின்னர் வாய்ப்பு கிடைக்கும்போது கலந்துகொள்வேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:20, 25 சூன் 2017 (UTC)
- தற்போது, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நாம் ஒரு நாளாவது செல்வதை பெரும்பாடாக உள்ளது. மூன்று நாள்களும் யாராவது பயிற்சிக்குச் சென்றால் தான் நல்ல விளைவுகள் கிட்டுகின்றன. எனவே, உங்களால் இயலுமா என்று பாருங்கள். மற்றபடி, வழமையான பங்களிப்புகளைத் தொடர்ந்து தருவதற்கு நன்றி. --இரவி (பேச்சு) 12:40, 25 சூன் 2017 (UTC)
- வேலூர்க் கோட்டை, அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் இந்தக் கட்டுரையை தகுந்த தலைப்புக்கு நகர்த்தி செம்மைப்படுத்தி உதவுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 04:25, 15 சூலை 2017 (UTC)
- வணக்கம், Kanags வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் என்ற பெயரில் முன்னரே நான் ஆரம்பித்த கட்டுரை உள்ளது. நான் வேலூருக்கு நேரில் சென்றபோது கோயிலில் பார்த்த செய்திகளையும், எடுத்த புகைப்படங்களையும் மேற்கொண்டு பதிவினை அப்போது தொடங்கியுள்ளேன். அக்கட்டுரையுடன் இதனை இணைக்க ஆவன செய்ய வேண்டுகிறேன். இணைத்தபின் வாக்கிய அமைப்பு உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வேன். இது பற்றி தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.
- இரு கட்டுரைகளையும் இணைத்திருக்கிறேன். மாற்றங்களை இங்கு காணலாம். திருத்தி உதவுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 09:10, 17 சூலை 2017 (UTC)
- வணக்கம், Kanags வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் பதிவினை இயன்றவரை திருத்தம் செய்துள்ளேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:09, 17 சூலை 2017 (UTC)
விக்கித் தரவுகள் இணைப்பு
தொகுபா.ஜம்புலிங்கம் வணக்கம் தஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் நொடங்கிய கட்டுரைகளை தாங்கள் துப்புரவு செய்துவருவதில் மிக்க மகிழ்ச்சி துப்புரவு செய்யும்போது அக்கட்டுரை ஆங்கிலத்தில் இருந்தால் அந்த இரண்டு கட்டுரைகளுக்குமான தரவை இணைத்துவிடுங்கள். இல்லை என்றால் எதிர்காலத்தில் ஆங்கிலக் கட்டுரையை கண்டு அதில் இணைப்பில்லாததைக் கண்டு அக்கட்டுரை தமிழில் இல்லை என்று கருதி மீண்டும் யாராவது கட்டுரையை எழுதவது தடுக்கப்படும். நன்றி--Arulghsr (பேச்சு) 09:09, 9 ஆகத்து 2017 (UTC)
- வணக்கம், Arulghsr. ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள தரவினை தமிழ் விக்கிபீடியாவில் விடுபாடின்றி இணைக்கவேண்டும் என்று தாங்கள் கூறியபடி இனி செய்வேன். நான் துப்புரவு செய்வதில் வேறு ஏதேனும் மேம்படுத்தவேண்டுமாயின் தெரிவித்துதவ வேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:33, 10 ஆகத்து 2017 (UTC)
துப்புரவு கட்டுரைகள் பகுப்பு
தொகுவணக்கம். அண்மைக்காலமாக 'தஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்' என்ற பகுப்பில் காணப்படும் கட்டுரைகளில் சிலவற்றை அவ்வப்போது திருத்தி/மேம்படுத்தி வருகிறேன். பணி நிறைவுற்றதும் 'தஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்' என்ற பகுப்பில் உள்ள அத்தலைப்பினை நீக்கிவிட்டு, 'துப்புரவு முடிந்த தஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்' என்ற பகுப்பில் சேர்த்துவிடுகிறேன். இவ்வாறே தொடரலாமா? (அல்லது) திருத்தம் செய்யப்பட்ட கட்டுரையில் 'தஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்' மற்றும் 'ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்' என்ற இரு பகுப்புகளும் இருப்பதுபோலவே அமைக்கலாமா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:55, 23 ஆகத்து 2017 (UTC)
- திருத்தம் செய்யப்பட்ட கட்டுரைகளில் துப்புரவு முடிந்த தஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் பகுப்பு மட்டுமே இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 12:53, 23 ஆகத்து 2017 (UTC)
- வணக்கம், Kanags. தற்போது அவ்வாறுதான் செய்துவருகிறேன். தாங்கள் கூறியபடி அந்த முறையையே கடைபிடிப்பேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:59, 23 ஆகத்து 2017 (UTC)
10,000 ஆவது தொகுப்பு
தொகுவணக்கம், இன்று (2 செப்டம்பர் 2017) 10,000 தொகுப்புகளை நான் நிறைவு செய்துள்ளதாக எனக்கு (Notice: You just made your ten thousandth edit; thank you so very much) என்று செய்தி வந்துள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். என் எழுத்துக்கு ஊக்கம் தரும் அனைத்து விக்கிபீடியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:52, 2 செப்டம்பர் 2017 (UTC)
2014 இஸ்ரேலில் எண்ணெய்க் கசிவு
தொகுவணக்கம். 2014 இஸ்ரேலில் எண்ணெய்க் கசிவு என்ற தலைப்பிலான கட்டுரையில் ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள உரிய மேற்கோள்களை இணைத்து பதிவினை மேம்படுததிய பின்னர் துப்புரவு முடிந்த தஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் என்ற தலைப்பினை பகுப்பில் இணைக்கும்போது அச்சொற்றொடர் திரையில் தோன்றவில்லை. இதனால் இக்கட்டுரை துப்புரவு முடிந்ததை உறுதி செய்ய முடியா நிலை உள்ளது. பகுப்பில் தட்டச்சு செய்யும்போது அந்த பகுப்புப்பக்கத்தில் இந்த பக்கம் இணையாததற்குக் காரணம் தெரியவில்லை. ஆவன செய்ய வேண்டுகிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:26, 11 செப்டம்பர் 2017 (UTC)
- இக்கேள்வியை நீங்கள் கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலோ, அல்லது ஒத்தாசைப் பக்கத்திலோ அல்லது பயனர் ஒருவரின் உரையாடல் பக்கத்திலோ கேட்டிருக்க வேண்டும்:) ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் தொடர்பான அனைத்துப் பகுப்புகளும் இப்போது மறைக்கப்பட்டுள்ளன போல் தெரிகிறது. இந்தக் காரியத்தை @Aswn: இன் தானியங்கி செய்துள்ளது. இது குறித்து அவர் பொதுவில் அறிவித்ததாகத் தெரியவில்லை. ஏராளமான கட்டுரைகள் துப்புரவு செய்யப்படாத நிலையில் உள்ளன. மறைக்கப்பட்டால் துப்பரவுப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு சிரமமாக இருக்கும் என்பது உண்மை.--Kanags \உரையாடுக 07:31, 11 செப்டம்பர் 2017 (UTC)
- வணக்கம்,Kanags. தற்போது இக்கேள்வியை பேச்சுப்பக்கத்தில் கேட்டுள்ளேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:44, 11 செப்டம்பர் 2017 (UTC)
- @Kanags:இத்தொகுப்புகள் பகுப்புகளை மறைக்க செய்யப்பட்டுள்ளன. இதில் எவற்றை மீளமைக்கலாம் என்று சொல்லுங்கள் --அஸ்வின் (பேச்சு) 19:19, 11 செப்டம்பர் 2017 (UTC)
கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு
தொகுஅன்புள்ள ஜம்புலிங்கம்,
உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது தான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.
இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:
தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படு்ம் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.
நாம் ஏற்கனவே சிறப்பாக்கச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:
இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.
வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேச்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில் நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன் மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.
2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.
ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியில் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழ வாய்ப்பாகவும் அமையும்.
இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். இங்கு காணப்படும் தலைப்புகள் யாவும் தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் தேடி ஆங்கில விக்கிப்பீடியாவில் படிக்கப்படும் பக்கங்கள். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தல் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதலாகப் பல புதிய வாசகர்களும் பங்களிப்பாளர்களும் கிடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், அறிவியல், நுட்பம், நல வாழ்வு, பெண்கள் என்று இன்னும் பல்வேறு துறைகளில் கூடுதல் தலைப்புகளைப் பெற முயன்று கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.
வழமைய போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.
இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.
நன்றி. --இரவி (பேச்சு) 09:42, 10 மார்ச் 2018 (UTC)
நன்றி, கலந்துகொள்கிறேன்
தொகுவணக்கம், இரவி. நான் எதிர்கொண்ட எதிர்மறை நிகழ்வுகள் என் வேகத்தைக் குறைத்தன. ஆதலால் எழுதுவதற்கு முன்பாக அதிகம் யோசிக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. வேங்கைத் திட்டம் கட்டுரை போட்டியைப் பொறுத்தவரை தமிழுக்குத் தொடர்பில்லாத பல பொருண்மைகளைக் கண்டேன். சற்றும் தொடர்பில்லாத பல தலைப்புகளில் கூடுதல் செய்திகளை சேர்ப்பது முடியுமா/மொழிபெயர்ப்பு சாத்தியமா என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது. ஆதலால் சற்றே யோசித்தேன். உங்களது கடிதம் பலவற்றைத் தெளிவுபடுத்தியது. என்னாலான பங்களிப்பினை செய்வேன். போட்டியில் கலந்துகொள்வேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:26, 10 மார்ச் 2018 (UTC)
- வணக்கம். உங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களுக்கு வருந்துகிறேன். என்னுடைய ~13 ஆண்டு கால விக்கிப் பங்களிப்பில் எனக்கும் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. வருந்தி சில காலம் பங்களிக்காமல் இருந்தாலும், தமிழ் விக்கிப்பீடியா மீதுள்ள பிணைப்பால் மீண்டும் திரும்ப வருகிறேன். நீங்களும் அவ்வப்போது ஓய்வு எடுத்து பிற ஈடுபாடுகளில் கவனம் செலுத்துவது உதவும். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியின் கீழ், ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். போட்டியில் பெயர் பதிந்தமைக்கு நன்றி. உங்கள் சிறப்பான பங்களிப்புகளை எதிர்நோக்குகிறேன். --இரவி (பேச்சு) 11:26, 13 மார்ச் 2018 (UTC)
- வணக்கம். என்னால் இயன்ற பங்களிப்பினைச் செய்வேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:17, 14 மார்ச் 2018 (UTC)
வேங்கைத் திட்டம் - புதிய தலைப்புகள் அறிவிப்பு, தமிழ் இரண்டாம் இடத்தில்!
தொகுவணக்கம், ஜம்புலிங்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு கொண்டு கட்டுரைகள் எழுதி வருவதற்கு நன்றி. இப்போட்டி 45 நாட்களைக் கடந்து பாதி நிறைவடைந்துள்ளது. தனிப்பட்ட பரிசுகள் போக, இந்திய அளவில் நடைபெறும் இப்போட்டியில் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும் விக்கிச்சமூகத்தைச் சேர்ந்த 40 விக்கிப்பீடியர்களுக்கு 3 நாட்கள் சிறப்புப் பயிற்சி அளிப்பதற்கான நிதியுதவியும் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது. தற்போது, பஞ்சாபி மொழி விக்கிப்பீடியா இப்போட்டியில் 300 கட்டுரைகளுக்கு மேல் உருவாக்கி முதல் நிலையில் இருக்கிறது. தமிழ் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. நேற்று முதல் இன்னும் பல கூடுதல் தலைப்புகளையும் சேர்த்துள்ளோம்.
குறிப்பாக,
- ஒவ்வொரு விக்கிப்பீடியாவிலும் இருக்க வேண்டிய 10,000 கட்டுரைகள் (தமிழில்)
- ஒவ்வொரு இந்திய மொழி விக்கிப்பீடியாவிலும் இருக்க வேண்டிய கட்டுரைகள்
- மேற்கண்டவை தவிர, தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்க வேண்டிய முக்கியமான கட்டுரைகள் என்று இனங்கண்டு 500 கட்டுரைகள் வரை போட்டிக்குச் சேர்க்கலாம். இவை தமிழ் ஆளுமைகள், படைப்புகள், வரலாறு, இடங்கள் (இவை எடுத்துக்காட்டுக்கு மட்டுமே) போன்ற 5 பகுப்புகளின் கீழ் அமையலாம். உங்கள் பரிந்துரைகளைத் தெரிவித்தால், இவ்வாறான தலைப்புகளையும் அறிவிக்கலாம்.
எனவே, தொடர்ந்து உற்சாகத்துடன் போட்டியில் பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவை வெற்றி பெற வைக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:08, 16 ஏப்ரல் 2018 (UTC)
வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்
தொகுவணக்கம்.
வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.
வழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.
இது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
எடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
நாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.
போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள்.
நன்றி.
Thank you for keeping Wikipedia thriving in India
தொகுI wanted to drop in to express my gratitude for your participation in this important contest to increase articles in Indian languages. It’s been a joyful experience for me to see so many of you join this initiative. I’m writing to make it clear why it’s so important for us to succeed.
Almost one out of every five people on the planet lives in India. But there is a huge gap in coverage of Wikipedia articles in important languages across India.
This contest is a chance to show how serious we are about expanding access to knowledge across India, and the world. If we succeed at this, it will open doors for us to ensure that Wikipedia in India stays strong for years to come. I’m grateful for what you’re doing, and urge you to continue translating and writing missing articles.
Your efforts can change the future of Wikipedia in India.
You can find a list of articles to work on that are missing from Wikipedia right here:
https://meta.wikimedia.org/wiki/Supporting_Indian_Language_Wikipedias_Program/Contest/Topics
Thank you,
— Jimmy Wales, Wikipedia Founder 18:18, 1 மே 2018 (UTC)
தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்!
தொகுவணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.
போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)
வேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறது
தொகுவணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவோர் அனைவருக்கும் பொதுவான செய்தி.
நேற்று (சனி) அனைவரும் அயராது கட்டுரைகளை அளித்ததில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் பஞ்சாபியை முந்தி இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் - 981. பஞ்சாபி - 974. இந்த முன்னணியைத் தக்க வைப்பது நமது வெற்றிக்கு மிகவும் முக்கியம். இன்று முதல் போட்டி முடியும் மே 31 வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 50+ கட்டுரைகளை எழுதுவது வெற்றியை உறுதி செய்யும். இது வரை 44 பேர் போட்டியில் கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். எல்லாராலும் இந்த வாரம் பங்களிப்பது இயலாது என்பதால், ஒவ்வொருவரும் அடுத்த ஐந்த நாட்களும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் போட்டியை வெல்லலாம். போட்டி முடியும் வரை ஒவ்வொரு நாள் நிலவரத்தை இங்கு இற்றைப்படுத்துகிறேன். நன்றி -- இரவி
மீண்டும் பஞ்சாபியர் முன்னணி!!
தொகுவணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள்! தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி
வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை!
தொகுவணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --இரவி
வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்
தொகுவணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி
பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018
தொகுபெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)
விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018 பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம்.
2015-ம் ஆண்டு முதல் விக்கிப்பீடியா ஆசிய மாதம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த வருடமும், விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018, நவம்பர் மாதம் 1-ஆம் முதல் நடந்துகொண்டிருக்கிறது. நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:15, 3 நவம்பர் 2018 (UTC)
வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை
தொகுவேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்ள தங்களுக்கு ஆர்வம் உள்ளதா? தங்களை போன்ற அனுபவம் உள்ளவர்கள் கலந்து கொண்டால் பயிற்சி வகுப்புகள் சிறப்பாக இருக்கும். கலந்துகொள்ள விருப்பம் இருந்தால் இங்கு தெரிவிக்கவும். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:59, 5 நவம்பர் 2018 (UTC)
- வணக்கம். சொந்த அலுவல் காரணமாக தற்போது கலந்துகொள்ள இயலா நிலை. வாய்ப்பு அமையும்போது அவசியம் கலந்துகொள்வேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:26, 5 நவம்பர் 2018 (UTC)
பதினாறாம் ஆண்டு கொண்டாட்டம்
தொகுவணக்கம், நெடுநாள் பயனர் என்ற அடிப்படையிலும், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் என்ற அடிப்படையிலும் நமது விக்கிப்பீடியாவின் பதினாறாம் ஆண்டு கொண்டாட்டத்தில் தங்கள் வரவைப் பெரிதும் விரும்புகிறேன். வர வாய்ப்பிருந்தால் இலங்கையில் நடக்கும் நிகழ்விற்கு உதவுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 13:33, 19 சூன் 2019 (UTC)
விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 14:54, 19 சூன் 2019 (UTC)
வணக்கம், நீச்சல்காரன். என் எழுத்தின்மீதான தங்களின் ஆர்வத்திற்கு மனமார்ந்த நன்றி. சொந்த காரணங்களால் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள இயலா நிலையில் உள்ளேன். பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். உங்களைப் போன்றோரின் ஊக்கத்துடன் விக்கிபீடியாவில் என் எழுத்துப்பயணம் தொடரும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:32, 20 சூன் 2019 (UTC)
Project Tiger 2.0
தொகுSorry for writing this message in English - feel free to help us translating it
Hello,
We are glad to inform you that Project Tiger 2.0/GLOW is going to start very soon. You know about Project Tiger first iteration where we saw exciting and encouraging participation from different Indian Wikimedia communities. To know about Project Tiger 1.0 please see this page
Like project Tiger 1.0, This iteration will have 2 components
- Infrastructure support - Supporting Wikimedians from India with internet support for 6 months and providing Chromebooks. Application is open from 25th August 2019 to 14 September 2019. To know more please visit
- Article writing contest - A 3-month article writing contest will be conducted for Indian Wikimedians communities. Following community feedback, we noted some community members wanted the process of article list generation to be improved. In this iteration, there will be at least two lists of articles
- Google-generated list,
- Community suggested list. Google generated list will be given to the community members before finalising the final list. On the other hand, the community may create a list by discussing among the community over Village pump, Mailing list and similar discussion channels.
Thanks for your attention,
Ananth (CIS-A2K) (talk)
Sent by MediaWiki message delivery (பேச்சு) 11:41, 21 ஆகத்து 2019 (UTC)
Community Insights Survey
தொகுShare your experience in this survey
Hi பா.ஜம்புலிங்கம்/தொகுப்பு 2,
The Wikimedia Foundation is asking for your feedback in a survey about your experience with விக்கிப்பீடியா and Wikimedia. The purpose of this survey is to learn how well the Foundation is supporting your work on wiki and how we can change or improve things in the future. The opinions you share will directly affect the current and future work of the Wikimedia Foundation.
Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages.
This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English).
Find more information about this project. Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey.
Sincerely,
RMaung (WMF) 15:55, 9 செப்டம்பர் 2019 (UTC)
Reminder: Community Insights Survey
தொகுShare your experience in this survey
Hi பா.ஜம்புலிங்கம்/தொகுப்பு 2,
A couple of weeks ago, we invited you to take the Community Insights Survey. It is the Wikimedia Foundation’s annual survey of our global communities. We want to learn how well we support your work on wiki. We are 10% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! Your voice matters to us.
Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages.
This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English).
Find more information about this project. Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey.
Sincerely,
RMaung (WMF) 19:35, 20 செப்டம்பர் 2019 (UTC)
Reminder: Community Insights Survey
தொகுShare your experience in this survey
Hi பா.ஜம்புலிங்கம்/தொகுப்பு 2,
There are only a few weeks left to take the Community Insights Survey! We are 30% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! With this poll, the Wikimedia Foundation gathers feedback on how well we support your work on wiki. It only takes 15-25 minutes to complete, and it has a direct impact on the support we provide.
Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages.
This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English).
Find more information about this project. Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey.
Sincerely,