வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் அக்டோபர் 2015
- அக்டோபர் 31:
- வங்காளதேசத்தில் சமயசார்பின்மையினருக்கு எதிரான தாக்குதல்கள்: படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர் அவிஜித் ராய் எழுதிய நூல்களை வெளியிட்ட இரண்டு பதிப்பாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். (டெய்லி ஸ்டார்)(கார்டியன்)
- பிலிப்பீன்சில் சந்தை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். (சீஎனென்)
- மெட்ரோஜெட் விமானம் 9268: உருசிய ஏர்பஸ் ஏ-321 விமானம் எகிப்தில் சினாய் பகுதியில் விபத்துக்குள்ளானதில் பயணம் செய்த அனைத்து 224 பேரும் உயிரிழந்தனர். (நியூஸ் அப்), (பிபிசி),
- 2015 டிபி145 என்ற விண்கல் ஒன்று புவிக்குக் கிட்டவாகக் கடந்து சென்றது. (டைம்)
- நியூசிலாந்து அணி ஆத்திரேலிய அணியை 34–17 என்ற கணக்கில் வென்று 2015 ரக்பி உலகக்கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது. (பிபிசி)
- அக்டோபர் 22:
- ஆந்திரப்பிரதேச புதிய தலைநகராக அமராவதி கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். (டைஆஇ)
- அக்டோபர் 21:
- சிரிய உள்நாட்டுப் போர்: அக்டோபர் 20 அன்று சிரியாவின் அரசுத்தலைவர் பசார் அல்-அசத், உருசியாவின் அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டினை மாஸ்கோவில் சந்தித்துப் பேசினார். இந்த விவரம் இன்று வெளியிடப்பட்டது.(பிபிசி)
- அக்டோபர் 20:
- ஐரோப்பியப் புலம்பெயர்வோர் நெருக்கடி:
- 2015ஆம் ஆண்டில் கிரீசை வந்தடைந்த புலம்பெயர்வோர் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை எட்டியதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்தது.(பிபிசி)
- புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தாமல், அவர்களை சுலோவேனியாவுக்கு குரோவாசியா அனுப்பிவருவதாக சுலோவேனியா குற்றஞ்சாட்டியது.(தி இந்து)
- ஐரோப்பியப் புலம்பெயர்வோர் நெருக்கடி:
- அக்டோபர் 19:
- ஐரோப்பியப் புலம்பெயர்வோர் நெருக்கடி: செர்பியாவுடனான தனது எல்லையை குரோவாசியா திறந்தது.(பிபிசி)
- அக்டோபர் 18:
- சிரிய உள்நாட்டுப் போர்: சிரியாவின் ஓம்சு நகரில் உருசிய வான்தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர். (அல்ஜசீரா)
- பிரான்சின் திருச்சபையின் மறைவல்லுநர் லிசியே நகரின் தெரேசாவின் பெற்றோர்கள் லூயிசு மார்ட்டின், மரீ-அசேலி மார்ட்டின் ஆகியோர் திருத்தந்தை பிரான்சிசுவினால் புனிதர்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டனர். (வத்திக்கான்)
- அக்டோபர் 17:
- சிரிய உள்நாட்டுப் போர்: அல் காயிதாவின் உயர் இராணுவத் தலைவர் சிரியாவில் நடைபெற்ற வான்தாக்குதலில் கொல்லப்பட்டார். (யூஎஸ்ஏ டுடே)
- சவூதி அரேபியாவில் இசுலாமிய அரசுப் போராளிகள் சியா மண்டபம் ஒன்றைல் நடத்திய தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- அக்டோபர் 16:
- கூகிள் நூலகத் திட்டம் பதிப்புரிமை சட்டத்தின் கீழ் சட்டபூவர்வமானது என அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. (யூஎஸ்ஏ டுடே)
- அக்டோபர் 15:
- ஆப்கானித்தானில் 5,500 அமெரிகப் படையினர் நிலை கொண்டிருப்பர் என அமெரிகத் தலைவர் பராக் ஒபாமா அறிவித்தார். (ஆர்டி)
- பர்மிய அரசு எட்டு ஆயுதக் குழுக்களுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. (ஏபி)
- நைஜீரியாவின் மைதுகிரி நகரில் பள்ளிவாசல் ஒன்றின் அருகில் இடம்பெற்ற இரண்டு குண்டுத் தாக்குதல்களில் 26 பேர் உயிரிழந்தனர். (வாசிங்டன் போஸ்ட்)
- இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலியர் ஒருவர் வேறொரு இசுரேலிய யூதரை தவறுதலாக அராபியர் எனக் கருதி கத்தியால் குத்தினார். (நியூயோர்க் டைம்சு)
- எகிப்து, செனிகல், உருகுவை, ஜப்பான், உக்ரைன் ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு 1016-17 ஆம் ஆண்டுக்கான நிரந்தரமல்லாத உறுப்பு நாடுகளாக சாட், சிலி, ஜோர்தான், லித்துவேனியா, நைஜீரியா ஆகியவைகளுக்குப் பதிலாக சேர்த்துக் கொள்ளப்பட்டன. (New York Times)
- அக்டோபர் 14:
- இலங்கையில் 2005 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் நவம்பர் 4 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். (ஐலண்டு)
- இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. (ஐலண்டு)
- அக்டோபர் 13:
- 2014 சூலை 17 இல் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் வந்த மலேசியா எயர்லைன்சு விமானம் 17 [[சோவியத் ஒன்றியம்|உருசியத் தயாரிப்பான பூக் ஏவுகணையாலேயே தாக்கப்பட்டதாக டச்சு அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இவ்விபத்தில் 298 பேர் உயிரிழந்தனர். (Sky News) (பிபிசி)
- இந்தோனேசியாவில் ஆச்சே மாகாணத்தில் கிறித்தவக் கோவில் ஒன்று தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். (சேனல் நியூஸ்)
- அக்டோபர் 12:
- சிரிய உள்நாட்டுப் போர்: சிரியாவில் அரசுக்கு எதிராகப் போரிடும் குருதியக் குழுக்கள் மற்றும் போராளிகளுக்கு அமெரிக்கா வானில் இருந்து ஆயுதங்களையும், மற்றும் உதவிப் பொருட்களையும் வீசியது. (Reuters)
- அமெரிக்காவின் ஆங்கசு டீட்டன் 2015 ஆம் ஆண்டுக்கான பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசைப் பெற்றார். (வாசிங்டன் போஸ்ட்)
- அக்டோபர் 11:
- இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேல் காசாக்கரையில் நடத்திய வான்தாக்குதலில் 30-வயதுக் கர்ப்பிணிப் பெண்ணும் அவரது 2 வயது மகளும் கொல்லப்பட்டனர். நால்வர் காயமடைந்தனர். (ராய்ட்டர்சு)
- கமரூனின் தூர வடக்குப் பகுதியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர். (பினெசு ஸ்டான்டர்டு)
- யெமனின் சிறைச்சாலை ஒன்றின் மீது சவூதிப் படையினர் வான்தாக்குதல் நடத்தியதில் 20 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டனர். (யாகூ)
- பெலருசில் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் அலெக்சாண்டர் லுகசெங்கோ பெரும் வெற்றி பெற்று ஐந்தாவது தடவையாக அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (ராய்ட்டர்சு)
- அக்டோபர் 10:
- துருக்கியின் தலைநகர் அங்காராவில் முக்கிய தொடருந்து நிலையம் அருகே இடம்பெற்ற அமைதிப் பேரணியின் போது இரண்டு குண்டுகள் வெடித்ததில் குறைந்தது 97 பேர் உயிரிழந்தனர், 400 பேர் வரை காயமடைந்தனர். (பிபிசி), (சீஎனென்)
- சாட்டில் போகோ அராம் போராளிகளிடம் இருந்து தப்பி இடம்பெயர்ந்த அகதிகள் வாழ்ந்து வந்த கிராமம் ஒன்றில் இடம்பெற்ற ஐந்து தற்கொலைத் தாக்குதல்களில் 36 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- ஓக்லகோமாவின் கசிங் நகரில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. (ராய்ட்டர்சு)
- அக்டோபர் 9:
- 2015 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு துனீசியாவைச் சேர்ந்த துனீசிய தேசியக் கலந்துரையாடல் நாற்கூட்டு அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டது.(பிபிசி)
- அக்டோபர் 8
- 2015 இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெலருசிய எழுத்தாளர் சிவெத்லானா அலெக்சியெவிச் பெற்றார்.(பிபிசி தமிழோசை)
- அக்டோபர் 7:
- 2015 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு சுவீடனின் தோமசு லின்டால், அமெரிக்காவின் பவுல் மோட்ரிச், துருக்கியின் அசீசு சாஞ்சார் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. (பிபிசி)
- இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு தமிழ்ப் பெண்கள் மீது 4 இராணுவ வீரர்கள் மேற்கொண்ட கூட்டுப்பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்கில், அந்த நால்வருக்கும் 30 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.(பிபிசி தமிழோசை)
- ஐரோப்பியப் புலம்பெயர்வோர் நெருக்கடி: புலம்பெயர்வோரை கடத்தல் முறையில் கொண்டுவரும் படகுகளை வழிமறித்து, விசாரணை செய்யும் கண்காணிப்புச் செயல்பாட்டினை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பித்தது. (பிபிசி)
- அக்டோபர் 6:
- இயெமனின் துணை அரசுத்தலைவரும், பிரதமரும் தங்கியிருந்த விடுதி மீது இசுலாமிய அரசுப் போராளிகள் நடத்திய குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 15 கூட்டுப் படையினர் கொல்லப்பட்டனர். (சீஎனென்)
- உருசிய வான்படையினர் சிரியாவின் பல்மைரா நகரில் உள்ள இசுலாமிய அரசுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தின.(Reuters)
- 2015 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு சப்பானின் தக்காக்கி கஜித்தா, கனடாவின் ஆர்தர் பி. மெக்டொனால்ட் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. (பிபிசி)
- அக்டோபர் 5:
- ஈராக்கின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகனக்குண்டு வெடிப்புகளில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- 2015 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையில் 9.6% மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதாக உலக வங்கி அறிவித்துள்ளது. 2012 இல் இம்மதிப்பீடு 12.8% ஆக இருந்தது. (Time) (கார்டியன்)
- ஆத்திரேலியாவுக்குப் புகலிடம் தேடி வருவோர் தடுத்து வைக்கப்பட்டிருந்த நவூரு தடுப்பு முகாம் "திறந்து" விடப்படவுள்ளதாக நவூரு அரசு அறிவித்தது. (ஏபிசி)
- கலிபோர்னியாவில் 2016 இறுதியில் வதையா இறப்பு சட்டபூர்வமாக அனுமதிக்கப்படவுள்ளது. (சீஎனென்)
- 2015 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு அமெரிக்க ஐரியரான வில்லியம் சி. கேம்பல், சப்பானின் சத்தோசி ஓமுரா, சீனாவின் தூ யூயூ ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. (பிபிசி)
- அக்டோபர் 4:
- துருக்கியின் வான்படைகள் வடக்கு ஈராக்கில் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி நிலைகள் மீது வான் தாக்குதல்களை மேற்கொண்டது. (ஏஎஃப்பி)
- பிரான்சின் தென்கிழக்கே பிரெஞ்சு ரிவேரியாவில் பெரு வெள்ளம் காரணமாக குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர். 35,000 வீடுகள் சேதமடைந்தன. (ஏஎஃப்பி)
- அக்டோபர் 3:
- ஆப்கானித்தான், குண்டூசு நகரில் எல்லைகளற்ற மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது அமெரிக்கா வான்தாக்குதல்களை நடத்தியதில் 12 ஊழியர்கள், 10 நோயாளிகள் கொல்லப்பட்டனர். 37 பேர் காயமடைந்தனர். (எம்எஸ்எஃப்) (வாசிங்டன் போஸ்ட்) (ராய்ட்டர்சு)
- வங்காளதேசத்தில் 65-வயது சப்பானிர் ஒருவர் கொல்லப்பட்டமைக்கு இசுலாமிய அரசு பொறுப்பேற்றது. (அல் அராபியா)
- 2015 ரக்பி உலகக்கிண்ணம்: இங்கிலாந்து அணி குழுநிலை ஆட்டத்தில் ஆத்திரேலியாவிடம் தோற்றதை அடுத்து, போட்டியில் இருந்து விலகியது. (பிபிசி)
- அக்டோபர் 2:
- சிரிய உள்நாட்டுப் போர்: உருசிய போர் விமானங்கள் சிரியாவில் இசுலாமிய அரசுப் போராளிகளின் தளங்கள் மீது மூன்றாவது நளாகத் தாகுதல் நடத்தியதாக உருசியா அறிவித்தது. (டெய்லிமெயில்)
- சிட்னியின் பரமட்டா என்ற புறநகரில் காவல்துறை தலைமையகத்தின் முன்னால் 15-வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் காவல்துறை ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். சிறுவன் பின்னர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டான். இது ஒரு தீவிரவாதத் தாக்குதல் என காவல்துறை கூறியுள்ளது. (டெய்லிடெலிகிராப்)
- அக்டோபர் 1:
- ஆப்கானித்தான் அரசப் படையினர் குண்டூசு நகரை தாலிபான்களிடம் இருந்து மீளக் கைப்பற்றி விட்டதாக அரசு அறிவித்தது. (ஏபிசி)
- ஆப்கானித்தானில் சி-130ஜே ரக சரக்கு வானூர்தி ஒன்று ஜலாலாபாது அருகே வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். (அல்ஜசீரா)
- சிரிய உள்நாட்டுப் போர்: உருசியாவின் வான் தாக்குதலில் அமெரிக்க சார்பு சிரியப் போராளிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறியது. (டெலிகிராப்)
- அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் ரோசபர்க் நகரில் சமூகப் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)