விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு98
கட்டுரைப் போட்டியாளர்களுக்கு அறிவிப்பு
தொகுகட்டுரைப் போட்டிக்காக பைட்டுக்களின் அளவினை வலிந்து அதிகரிக்க வேண்டாம். கட்டுரையில் உள்ள தகவல் சட்டம், வார்ப்புருக்கள், உசாத்துணைகள், மேற்கோள்கள், வெளியிணைப்புக்கள், பகுப்புக்கள், படங்கள், படங்களுக்கான குறிப்புக்கள், அட்டவணைகள், தலைப்புக்கள் என்பனவெல்லாம் உரைப்பகுதியல்ல. தொடர் கட்டுரைப் போட்டியின் நோக்கத்தையும், அதன் போட்டி விதிகளையும் நன்கு விளங்கிக் கொண்டு பங்களியுங்கள்.
தங்கள் அறிவிப்புக்கு நன்றி அன்ரன் அவர்களே, தனி கட்டுரைப்பகுதியை மட்டும்தான் விரிவாக்க வேண்டுமா?' அல்லது தகவல் சட்டம், வார்ப்புருக்கள், உசாத்துணைகள், மேற்கோள்கள், வெளியிணைப்புக்கள், பகுப்புக்கள், படங்கள், படங்களுக்கான குறிப்புக்கள், அட்டவணைகள், தலைப்புக்கள் போன்றவற்றை வைத்து விரிவாக்கினால் அவை குறைந்தது எவ்வளவு பைட்டில் இருக்க வேண்டும்?, அதாவது ஐயா, ஒருவர் 4360 பைட் உள்ள கட்டுரையை மேலே குறிப்பிட்டவற்றை வைத்து 11000 பட்டை மேலதிகமாகக் கூட்டி கட்டுரையை விரிவாக்குகிறார், பின்பு மீண்டும் அதே கட்டுரையை வேறொருவர் 11000 பைட்டளவிற்கு கட்டுரைப்பகுதியை மட்டும் வைத்து விரிவாக்குகின்றார் எனின் எவரின் பெயரில் கட்டுரை சேர்க்கப்படும்?, விரிவான கட்டுரைக்குப் போட்டியிடுவோர் தகவல் சட்டம், வார்ப்புருக்கள், உசாத்துணைகள், மேற்கோள்கள், வெளியிணைப்புக்கள், பகுப்புக்கள், படங்கள், படங்களுக்கான குறிப்புக்கள், அட்டவணைகள், தலைப்புக்கள் இவற்றை வைத்துத்தான் வெற்றிபெறலாம் என்ற இக்கட்டான நிலைவந்தால் என்ன செய்வது? தகவல் சட்டம், வார்ப்புருக்கள், உசாத்துணைகள், மேற்கோள்கள், வெளியிணைப்புக்கள், பகுப்புக்கள், படங்கள், படங்களுக்கான குறிப்புக்கள், அட்டவணைகள், தலைப்புக்கள் போன்றவற்றை வைத்துத்தான் கட்டுரையை விரிவாகுகின்றார் என வைத்துக்கொள்வோம் அக்கட்டுரை கட்டுரைப்போட்டிக்கு சேர்த்துக்கொள்ளப்படுமா? அல்லது அவை நீக்கப்படுமா? அவை பயனுள்ள தகவல்களாக இருந்தால் அவற்றை நீக்கினால் பாதிப்பு ஏற்படாதா? இவ்வாறான 6 கேள்விகளுக்கும் தயவு செய்து பதிலளிக்கவும். இப்படிக்கு விக்கிக்கு இளையோன் --யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:58, 5 ஏப்ரல் 2014 (UTC)
மேற்குறிப்பிட்டவற்றுள் உசாத்துணைகள், வெளியிணைப்புக்கள் என்பவை கட்டுரைப்போட்டி விதிப்படி 15360 பைட்டைத் தாண்டிய பின்னரே கட்டுரைக்கு வழங்கப்படவேண்டும். இவ்விதி விரிவான கட்டுரைக்குப் பொருந்தாது என நினைக்கின்றேன். ஆனால் தகவற் சட்டம், அட்டவணை, வார்ப்புருக்கள், மேற்கொள்கள், பகுப்புக்கள் போன்றன கட்டுரையில் இணைக்கப்படலாம் அல்லவா. அத்துடன் இது 12 மாதம் நடக்கும் தொடர் கட்டுரைப்போட்டி ஆகையால் அனைத்து மாதங்களிலும் போட்டி விதிகள் சமச்சீராகப் பேணப்படவேண்டும் அல்லவா.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 14:36, 5 ஏப்ரல் 2014 (UTC)
- நீங்கள் கூறியது சரி. சிறு திருத்தம், கட்டுரைப்போட்டி விதி-
- 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
- 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பது யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையிலும் தக்க சான்றுகள் சேர்க்க வேண்டும்.--குறும்பன் (பேச்சு) 15:39, 5 ஏப்ரல் 2014 (UTC)
புறவயமான மதிப்பீட்டு முறை வேண்டும் என்றே 15360 பைட்டு என்ற அளவு தரப்பட்டது. ஆனால், அது வெற்றிக் கோட்டில் உள்ள நாடாவைப் போன்றது அன்று :) அதனைத் தொட்டவுடன் கட்டுரையை வளர்ப்பதை நிறுத்தி விட வேண்டாம் :) முக்கியமான குறுங்கட்டுரைகளை விரிவாக்க வேண்டும் என்று நோக்கிலேயே இப்போட்டி நடைபெறுகிறது. எனவே, இந்த உணர்வையும் நோக்கத்தையும் மதித்து செறிவான உள்ளடக்கத்தைச் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். போட்டியின் முதல் சில மாதங்களில் கூட இவ்வாறே செயல்பட்டு வந்தோம். நன்றி. --இரவி (பேச்சு) 10:28, 8 ஏப்ரல் 2014 (UTC)
- யாழ்ஸ்ரீ, வார்ப்புருக்கள், உசாத்துணைகள், மேற்கோள்கள், வெளியிணைப்புக்கள் என்பன அளவில் மாறுபடலாம் என்பதால், இவ்வளவு பைட்டுக்கள் இருக்க வேண்டும் என்று கூறுவது கடினமானது, அதனால் உரைப்பகுதி 15360 தாண்டிய பின் பிற விடயங்கள் இணைப்பதே சிறப்பு. நிர்ணயிக்கப்பட்ட அளவை யார் தொடுகிறாரோ அவர் பெயரில் கட்டுரை சேர்க்கப்படும். உரைப்பகுதி அற்ற பிற விடயங்களை வைத்து வெற்றி தீர்மானிப்பது நடுவரின் பொறுப்பில் உள்ளதால், அவரே தீர்மானிப்பார். பொதுவாக, கட்டுரையின் உரைப்பகுதி தவிர்ந்த மேலதிக அல்லது அளவுக்கு அதிகமான வார்ப்புருக்கள், வெளியிணைப்புக்கள், படங்கள், அட்டவணைகள் போன்றவை நீக்கப்படும். மேலும், போட்டியின் நோக்கம் கட்டுரையின் உரைப்பகுதியை பெரிதாக்குவதுதான். இதற்கு ஏற்ப இருக்கும் கட்டுரைகள் மேம்படுத்துவது வரவேற்கப்படுகின்றது. --AntonTalk 13:08, 28 ஏப்ரல் 2014 (UTC)
தங்கள் பதிலுக்கு நன்றி!--யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:52, 29 ஏப்ரல் 2014 (UTC)
ஸ்ரீ ராமநவமி வாழ்த்துகள்
தொகுஅனைவருக்கும் ஸ்ரீ ராமநவமி வாழ்த்துகள்--✍☪mohamed ijazz☪® (பேச்சு) 08:55, 8 ஏப்ரல் 2014 (UTC)
- ஒரு குறிப்புக்கு: தீபாவளி, ஆயுத பூசை / சரசுவதி பூசை, விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை விளக்கு போன்றவை (அதே வரிசையில்) தமிழகத்தில் இந்துக்கள் மட்டும் கொண்டாடும் திருநாட்களில் முதன்மையானவை. இராமநவமி, கிருசுண செயந்தி போன்றவை பரவலான சமூகத்தால் கொண்டாடப்படுவதில்லை. --இரவி (பேச்சு) 10:32, 8 ஏப்ரல் 2014 (UTC)
விக்கிமேற்கோளில் பங்களிக்க வேண்டுகோள்
தொகுதமிழ் விக்கிமேற்கோள் தளத்தில் தற்போது தமிழினியன், சிறீகர்சன் ஆகிய இருவரும் ஆர்வத்தோடு செயல்பட்டு வருகின்றனர். கூட ஓரிருவர் சேர்ந்து பங்களித்தாலும் வெகு விரைவாக இந்திய விக்கிகளில் முன்னணி இடத்தைப் பிடிக்கலாம். பார்க்க: http://wikistats.wmflabs.org/display.php?t=wq
தேர்தல் நேரம் என்பதால் பல்வேறு தலைப்புகள், தலைவர்கள் குறித்த மேற்கோள்களையும் தொகுக்க நல்ல வாய்ப்பு. இந்த ஆண்டு இறுதிக்குள் 1000 பக்கங்கள் என்று இலக்கு வைப்போமா? மாதம் 100 பக்கங்கள். மொத்தம் 4 பயனர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பக்கம் சேர்த்தால் கூட போதும். ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கும் முக்கிய ஆளுமைகளின் மேற்கோள்களைத் தொகுக்குத் துவங்கினால் விக்கியிடை இணைப்புகளும் தரலாம். நன்றி.--இரவி (பேச்சு) 10:51, 8 ஏப்ரல் 2014 (UTC)
தமிழில் விக்கி செய்திகள் தொடங்கப்பட்டபோது அது தேவையில்லை என வாக்களித்திருந்தேன். இப்போதும் அக்கருத்தில் மாற்றமில்லை. என்னைப் பொறுத்தவரை தமிழ் விக்கிசெய்திகள் பலமணிநேர உழைப்பினை வீணாக்கிய இடமாகவே இப்பொழுதும் தெரிகிறது. அங்கே நாம் இழந்த விக்கிநேரம் விக்கிப்பீடியாவில் பயன்பட்டிருந்தால் அதிக பயனுள்ளதாக இருந்திருக்கும்.
அவ்வாறேதான் விக்கிமேற்கோளையும் பார்க்கிறேன். அவ்விடத்துக்கு செல்லும் விக்கி உழைப்பு விக்கிப்பீடியாவின் இழப்பாகவே முடியும். இந்திய விக்கிகளில் முன்னணிக்கு வருவோம், ஆயிரம் பக்கங்களை அடைவோம் என்பவையெல்லாம் பயனற்ற இலக்குக்கள்.
பல்லாயிரம் விக்கிப்பீடியர்கள் உள்ளனர் என்றால் அவரவர் தமக்கு விரும்பியவகையில் பங்களிக்கலாம் என விக்கிமேற்கோள், விக்கிசெய்தி என எல்லாவற்றிலும் இலக்குக்கள் வைக்கலாம். ஆனால் பங்களிப்பதோ சிலர். அவர்களது உழைப்பும் சிதறிப்போனால் இழப்பே எஞ்சும்.
ஓர் உள்ளடக்கத் தொகுதி அதன் பயனர்களுக்குப் பயன்படக்கூடியதாக மாறுவதற்கு அது தன்னளவில் முழுமையாக இருக்க வேண்டும். அவ்வாறான முழுமை எய்தப்படாமல் எவ்வளவு பெரிய அளவில் உள்ளடக்கத்தினைத் திரட்டினாலும் அது பயனற்றதே.
தமிழ் விக்கிப்பீடியாவினை பயன் தகுநிலைக்குக் கொண்டுபோவதனை கட்டுப்படுத்துவதாக உள்ள செயற்றிட்டங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் விளம்பரப்படுத்தப்படுவது சரியானதல்ல. நன்றி. கோபி (பேச்சு) 12:13, 8 ஏப்ரல் 2014 (UTC)
கோபி, கூடுதல் தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் குறித்த உங்கள் கருத்து அறிவேன். எனினும்,
//தமிழ் விக்கிப்பீடியாவினை பயன் தகுநிலைக்குக் கொண்டுபோவதனை கட்டுப்படுத்துவதாக உள்ள செயற்றிட்டங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் விளம்பரப்படுத்தப்படுவது சரியானதல்ல//
என்ற அளவுக்கு மற்ற திட்டங்களைப் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை. விக்கிமேற்கோளில் சிலர் தற்போது முனைப்புடன் பங்களிக்கின்றனர். இன்னும் சிலர் இணைந்தால் உற்சாகமாக இருக்குமே என்னும் நோக்கிலேயே இவ்வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. ஒரு தலைப்பு சார்ந்த அனைத்து உள்ளடக்கங்களையும் விக்கிப்பீடியாவிலேயே குவிக்க முடியாது அல்லவா? தலைப்புடன் தொடர்புடைய படங்களை் தேட விக்கி பொதுவகமும் பொருள் தேட விக்சனரியும் ஆக்கங்களைத் தேட விக்கிமூலமும் இருப்பது போல் விக்கி மேற்கோளும் இருப்பதில் பாதகம் இல்லை. நெடுநாளாக இங்கு பங்களித்து வருவோருக்கு ஒரு மாறுதலாகக் கூட இருக்கலாம் :) மற்றபடி, இலக்குகள் அனைத்தும் நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ளவே. திட்டத்தின் தொடக்க காலங்களில் இது போன்ற இலக்குகள் பயனுடையவையாக இருந்துள்ளன. நன்றி.--இரவி (பேச்சு) 12:19, 8 ஏப்ரல் 2014 (UTC)
- இரவி,
ஓர் உள்ளடக்கத் தொகுதி அதன் பயனர்களுக்குப் பயன்படக்கூடியதாக மாறுவதற்கு அது தன்னளவில் முழுமையாக இருக்க வேண்டும். அவ்வாறான முழுமை எய்தப்படாமல் எவ்வளவு பெரிய அளவில் உள்ளடக்கத்தினைத் திரட்டினாலும் அது பயனற்றதே.
எத்தனை விக்கித்திட்டங்கள் தொடங்கப்பட்டாலும் பயனர் பங்களிப்பு இருந்தாலும் போதிய உள்ளடக்கம் இல்லாவிடின் தமிழ் மொழி சார்ந்து இயங்க முடியாது. கூகிள் குப்பைகளையே பல்லாண்டுகளின் பின்னரும் திருத்த முடியாத நிலையில் த.வி. இருக்கும் நிலையில் விக்கிமேற்கோளைப் பிரித்துத்தான் பார்க்க வேண்டும். விக்சனரி தவிர ஏனைய விக்கித்திட்டங்களால் பயனேதுமில்லை. காரணம் போதிய உள்ளடக்கமின்மை. கோபி (பேச்சு) 12:35, 8 ஏப்ரல் 2014 (UTC)
கோபி, அனைத்து விக்கிமீடியா திட்டங்களும் உறவுத் திட்டங்கள் தாம். எனவே, அவற்றைப் பற்றி இங்கு குறிப்பிடுவதே "விளம்பரம்" என்ற நோக்கில் பார்க்கத் தேவையில்லை. நானே முதலில் விக்சனரியில் பங்களித்து, பிறகு தான் விக்கிப்பீடியாவுக்கு வந்தேன். இது போல் இன்னும் சிலர் உள்ளனர். எனவே, பிற விக்கிமீடியா திட்டங்கள் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பாளர்கள் வரக்கூடிய வாய்ப்பையும் பார்க்க வேண்டும். மலையாள விக்கி மூலம் போன்ற தளங்கள் பெரும் வளர்ச்சி கண்டுள்ளதுடன் அத்திட்டத்தின் மூலமாக பள்ளிக் குழந்தைகள் போன்றோருக்கு விக்கி இயக்க அறிமுகத்தைத் தருகிறார்கள். ஒவ்வொரு திட்டமும் தன்னளவில் முழுமையானதா என்பதைப் போலவே ஒட்டு மொத்த விக்கியூடகத் திட்டங்களின் ஊடாட்டத்தையும் கவனிக்க வேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவைப் பல பள்ளிக் குழந்தைகள் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்றவற்றுக்குப் பயன்படுத்துகிறார்கள். ஆளுமைகளின் மேற்கோள்கள் போன்றவற்றைத் தொகுப்பது அவர்களுக்கு உதவும். ஒரு கலைக்களஞ்சியத்தைப் போலவோ அகரமுதலியைப் போலவோ இலட்சக்கணக்கான, விரிவான பக்கங்கள் இருந்தால் தான் பயன் என்றில்லை. சில நூறு முக்கியமான தலைப்புகளில் மேற்கோள்களைத் தொகுத்தால் கூட பயனுள்ளதாகவே அமையும். நன்றி.--இரவி (பேச்சு) 12:42, 8 ஏப்ரல் 2014 (UTC)
இரவி, விக்கிமீடியா நிறுவனத்துக்கு எல்லா விக்கிமீடியாத் திட்டங்களும் உறவுத்திட்டங்கள் தாம்.
நான் விக்கிமேற்கோளின் உள்ளடக்கம் பற்றிக் குறிப்பிடவில்லை. ஒட்டுமொத்தமாக உள்ள கட்டற்ற தமிழ் உள்ளடக்கம் பற்றியே குறிப்பிடுகிறேன். மேலே கடைசியாக உள்ள உங்கள் கருத்தினை வாசித்தபின்னர் விக்கிமேற்கோளுக்குச் சென்றேன். முதற்பக்கத்தில் சேர்ச்சிலின் ஒரு மேற்கோள் இருந்தது. அதனை அழுத்தி உள்ளே நுழைய அவரது 13 மேற்கோள்கள் உள்ளன. அங்கிருந்து விக்கிப்பீடியாவில் அவர் பற்றிய கட்டுரைக்கு வந்தேன். வின்ஸ்டன் சர்ச்சில். இந்தக் கட்டுரை சேர்ச்சில் பற்றி ஒரு முழுமையான சித்திரத்தினை வழங்கவில்லை. அவ்வாறிருக்கையில் 13 மேற்கோள்கள் திரட்டப்பட்டுள்ளது. அங்கிருந்து விக்கிப்பீடியாக் கட்டுரையினைக் காணவரும் பள்ளிக்குழந்தை ஏமாற்றப்படும். ஓர் அரைகுறைக் கட்டுரையும் அது தொடர்பான மேற்கோள்களும் பேச்சுப்போட்டிக்கும் கட்டுரைப்போட்டிக்கும் போதுமானது. ஆனால் அந்தக் குழந்தை குறித்த போட்டியில் பரிசு வாங்கலாம். ஆனால் சேர்ச்சில் பற்றி எதுவும் தெரியாமலேயே இருக்கும். ஒட்டுமொத்தக் குழந்தைகளையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.
குறிப்பு: இலங்கையின் யாழ்ப்பாணத்தில் 1990களின் ஆரம்பத்தில் அறிவுக்களஞ்சியம் என்று மாணவர்க்கான ஓர் அறிவியற் சஞ்சிகை வெளிவந்தது. அதன் இரண்டாவது இதழ் 32 அல்லது 40 பக்கங்கள் என நினைக்கிறேன். அந்த இதழைக் கிழி கிழியென்று கிழித்து ஒரு நூல் 88 பக்கங்களில் வந்தது. http://noolaham.net/project/89/8858/8858.pdf அதிலிருந்து ஒரு மேற்கோள். அறிவுக்களஞ்சியத்தின் நோக்கம் அறிவை வளர்ப்பதென்ற போர்வையில் தமிழ்ச் சமூகத்தின் அறிவு வளர்ச்சியை மழுங்கடிப்பதாகும். கோபி (பேச்சு) 13:16, 8 ஏப்ரல் 2014 (UTC)
- தமிழ் விக்கிமேற்கோளின் தற்போதைய தொடர் பங்களிப்பாளன் என்ற வகையில் இங்கு கருத்திடுகின்றேன். தமிழ் விக்கிமேற்கோள் ஏற்கனவே செத்துப் பிழைத்தவன்.[1] தற்போது நானும், தமிழினியனும் தொடர்ந்து அங்கே பங்களித்து வருகின்றோம்.
- //ஓர் உள்ளடக்கத் தொகுதி அதன் பயனர்களுக்குப் பயன்படக்கூடியதாக மாறுவதற்கு அது தன்னளவில் முழுமையாக இருக்க வேண்டும். அவ்வாறான முழுமை எய்தப்படாமல் எவ்வளவு பெரிய அளவில் உள்ளடக்கத்தினைத் திரட்டினாலும் அது பயனற்றதே.//
- இக்கருத்தைக் கடுமையாக எதிர்க்கின்றேன். ஒருபோதும் தமிழ் விக்கிமேற்கோள் பயனற்றதாகாது. நான் இலங்கையைச் சேர்ந்த பள்ளிமாணவன். எமது வரலாறு, குடியுரிமைக்கல்வி, விஞ்ஞானம், புவியியல், சைவசமயம் போன்ற பல்வேறு தரங்களுக்குரிய பாடப்புத்தகங்களில் பெரியோர்கள் கூறிய மேற்கோள்கள் தேவையான இடங்களில் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் குறித்த தலைப்பில் இடம்பெறும் போது மாணவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.
- அதுமட்டுமல்லாமல் மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், வின்ஸ்டன் சர்ச்சில், நெல்சன் மண்டேலா, சுவாமி விவேகானந்தர், அறிஞர் அண்ணா, பெரியார் போன்ற பல பெரியோரின் மேற்கோள்கள் ஒரு பக்கத்தில் தொகுக்கப்படும் போது பேச்சுக்களின் போதோ அல்லது பட்டிமன்றங்களின் போதோ அவற்றினை பயனுள்ள வகையில் உபயோகித்துக்கொள்ளலாம். இவ்வாறான மேற்கோள் தொகுப்புத் தளங்கள் தமிழில் வேறெங்கும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான மேற்கோள்கள் விக்கிப்பீடியாவில் இடம்பெறப் பொருத்தமற்றன. அதுமட்டுமல்லாமல் பழமொழிகளின் தொகுப்பாகவும் விக்கிமேற்கோள் காணப்படுகின்றது.
- //அவ்விடத்துக்கு செல்லும் விக்கி உழைப்பு விக்கிப்பீடியாவின் இழப்பாகவே முடியும்.// இக்கருத்தையும் எதிர்க்கின்றேன். விக்கிப்பீடியாவில் இருக்கும் நபர்கள் தொடர்பான கட்டுரைகளில் உள்ளடக்கப்படமுடியாத அவர்களது மேற்கோள்களை விக்கிமேற்கோளில் இட்டு விக்கிப்பீடியாவில் ஒரு இணைப்புக் கொடுத்துவிடலாம் விக்கிமேற்கோளில் இவ்வாறே செய்கின்றோம். எடுத்துக்காட்டாக - வின்ஸ்டன் சர்ச்சில், பெரியார் போன்ற கட்டுரைகளைப் பாருங்கள். சான்றுகளுடன் பூரணத்துவமான கட்டுரைகளாக உள்ளன. இவ்வாறு உரையாடுவதன் மூலம் விக்கிமேற்கோளைப் பற்றி பயனர்கள் மத்தியில் நேர்மாறான எண்ணத்தை உருவாக்கி விடாதீர்கள்.
விக்கிமேற்கோளில் எம்முடன் இணைந்துபங்களிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:45, 8 ஏப்ரல் 2014 (UTC)
சான்று;
- ↑ தமிழ் விக்கிமேற்கோள் தளத்தை முடக்குவதற்கான பரிந்துரை, மேல்-விக்கியில் நடைபெற்ற உரையாடல்
மன்னிக்கவேண்டும் கோபி அவர்களே நான் முதலிலேயே தொகுக்கத் தொடங்கிவிட்டேன். முரண்பாடுகளை தொகுக்க என்று வந்த பின்னர் நான் இட்ட கருத்தை மீண்டும் வெட்டி ஒட்டினேன். அதனால் நீங்கள் இறுதியாக இட்ட கருத்தை வாசிக்கத் தவறிவிட்டேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:50, 8 ஏப்ரல் 2014 (UTC)
- மேலே கோபி குறிப்பிட்ட கருத்து தொலைநோக்கு இல்லாதாது. விக்கி செய்திகள் ஒரு வெற்றிகரமான செயற்திட்டமே. இன்றைய செய்தி நாளை வரலாறு. அறிவியல் செய்திகள் போன்ற தமிழில் கவனிக்கப்படாத துறைகளுக்கனா களம். முன் மாதிரி. பலரும் பல மாதிரி பங்களிப்பதற்கு ஏதுவான களங்கள் முக்கியமானவை. விக்கிமேற்கோள் மீண்டும் துளிர்விடுவது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. --Natkeeran (பேச்சு) 13:58, 8 ஏப்ரல் 2014 (UTC)
சிறீகர்சன், நான் நினைத்ததை நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்கள்.
- உங்களைப் போன்ற ஒரு பயனர் விக்கிமேற்கோளில் தொடர்ச்சியாகச் செயற்படுவது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு இழப்பு
- வின்சுடன் சேர்ச்சில் பற்றி ஒரு முழுமையான கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாத நிலையில் விக்கிமேற்கோளில் விரிவான பக்கம் இருப்பது தமிழ் சார்ந்த உள்ளடக்கத் தொகுதியின் பொருத்தமான வளர்ச்சி அல்ல.
- வின்சுடன் சேர்ச்சில் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளப் போதுமான உள்ளடக்கம் தமிழில் இல்லாத நிலையில் அவரது மேற்கோள்களை விரிவாக்குவது பள்ளியில் பேச்சுக்கும் பட்டிமன்றத்துக்கும் பயன்படலாம். அது மேலோட்டமான அறிவைக் கொண்ட ஒரு சமூகத்தினையே வளர்த்தெடுக்கும்.
நன்றி கோபி (பேச்சு) 14:02, 8 ஏப்ரல் 2014 (UTC)
நற்கீரன், தமிழ் விக்கிசெய்திகளின் உள்ளடக்கம் பயன்படக்கூடிய உள்ளடக்கம் அல்ல. அது தோல்வியடைந்த ஒரு செயற்றிட்டம். critical mass எட்டப்படாத ஓர் உள்ளடக்கத் தொகுதி பயனற்றது. கோபி (பேச்சு) 14:06, 8 ஏப்ரல் 2014 (UTC)
- சிறீகர்சன், "உங்களைப் போன்ற ஒரு பயனர் விக்கிமேற்கோளில் தொடர்ச்சியாகச் செயற்படுவது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு இழப்பு" என்ற கோபியின் கருத்தை கருத்தில் எடுத்துக் கொள்ளாதீர்கள். எங்கு பங்களித்தாலும் சிறப்பே. உங்களுக்கு எங்கே ஈடுபாடோ, அங்கே ஈடுபடுங்கள். பல களங்களை உருவாக்குவதே விக்கியூடகங்களில் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய உந்துகோல். கோபியின் தற்போதைய, (ஒரு காலம் நான் ஒரு போது கொண்டிருந்த) ஒழுங்குபடுத்தப்பட்ட அல்லது மேல் இருந்து கீழ் பாயும் செயற்திட்டங்கள் தமிழ் விக்கியில் உறுதியாக மறுக்கப்பட்டுள்ளன, அந்த அணுகுமுறை வேலைசெய்யாது என்று விளங்கப்பட்டுள்ளது. --Natkeeran (பேச்சு) 14:09, 8 ஏப்ரல் 2014 (UTC)
நற்கீரன், விக்கிமீடியா நிறுவனத்துக்காக உரையாடதீர்கள். தமிழில் உள்ள உள்ளடக்கத்தினைக் கருத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ் விக்கிப்பீடியா தமிழில் இருக்கின்ற, இருக்கப்போகின்ற ஒரேயொரு பொதுக் கலைக்களஞ்சியம் என்பதே எனது புரிதல்.
ஆங்கிலத்தில் வாசித்து ஆங்கிலத்தில் யோசித்து ஆங்கிலத்தில் வாழ்ந்து கொண்டு (நானும் தான்) தமிழ்க் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேசி எழுதிவிட்டுப் போவது இலகுவானது. ஒரு குறித்த மொழியில் குறித்த விடயங்கள் முழுமையாக இல்லாவிடின் அம்மொழியில் அவ்விடயம் சார்ந்த அறிவோ சிந்தனையோ வளராது. கருநாடக இசை போன்ற தமிழ்ச் சமூகங்களுடன் மிக நெருக்கமான கலைகளின் கலைச்சொற்கள் தமிழிலில்லாதது இப்படித்தான் நடந்தது.
நான் மேலிருந்து கீழ் நோக்கி எதை எவர் எப்போது எப்படிச் செய்ய வேண்டுமென்று அறிவுறுத்த வரவில்லை. critical mass என்பதாக நான் குறிப்பிட்டது “போதுமான உள்ளடக்கம்” என்பதனை. ஒரு குறித்த விடயப்பரப்புத் தொடர்பாக போதிய உள்ளடக்கம் இல்லாவிடின் அவ்விடயப்பரப்பில் தொடர்ச்சியான அறிவு வளர்ச்சி சாத்தியமில்லை.
சேர்ச்சில் பற்றி மூன்று வரி எழுதினோம்; இரண்டு படம் போட்டோம்; நான்கு மேற்கோள் தொகுத்தோம் என்பது ஏமாற்று வேலை. நம்மை நாமே ஏமாற்றும் வேலை. கோபி (பேச்சு) 14:24, 8 ஏப்ரல் 2014 (UTC)
- ஒன்றுமே இல்லாத போது "சேர்ச்சில் பற்றி மூன்று வரி எழுதினோம்; இரண்டு படம் போட்டோம்; நான்கு மேற்கோள் தொகுத்தோம்" என்பது முக்கியம் வாய்ந்த ஒரு பங்களிப்பே. மைக்ரோசோப்ட் போல கட்டற்ற மென்பொருட்கள் வேலை செய்வது இல்லை, அதிகம் பேர் பயன்படுத்தின இல்லை. உபுண்டு ஒரு படு தோல்வி. கூகிள் போன்று நாம் இயங்க முடியாது, நூலகத் திட்டம் படு தோல்வி. தனி ஈழம் இல்லை சுழியம். நாம் அனுபவப்பட்டது போதாதா. இந்த மனப்பான்மை என்னவென்று சொல்வது. --Natkeeran (பேச்சு) 15:24, 8 ஏப்ரல் 2014 (UTC)
நற்கீரன், இங்கே த.வி.யில் பங்களிப்பு என்பது பெருமிதத்துக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. பயனற்ற பங்களிப்பு குப்பை என்கிறேன் நான். சேர்ச்சில் என்ற மனிதரை அறிந்து கொள்ளப் போதிய உள்ளடக்கம் இல்லாத ஒரு மொழியில் இரண்டு படம், நான்கு மேற்கோள் பயனில்லை என்கிறேன். நீங்கள் சொல்கிறீர்கள் சேர்ச்சிலைப் பற்றி விளங்குவது விளங்காதது பிரச்சனையில்லை. மேற்கோள் போடுறவர் மேற்கோள் போடு; படம் போடுறவர் படம் போடு என்று. சரி. அவ்வாறே செய்துகொண்டிருங்கள். ஆனால் தமிழ் உள்ளடக்கத்துக்கு பங்களிப்பதாக மட்டும் புளகாங்கிதமடைய வேண்டாம் என்கிறேன்.
அவரவர் விருப்பத்திற்கேற்பவே அவரவர் பங்களிக்க முடியுமென்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சேர்ச்சில் பற்றி ஆங்கிலத்தில் வாசித்து அவ்விடயப்பரப்பில் தன் அறிவினை விருத்தியாக்கி அதனைத் தமிழுக்குக் கொண்டுவரக்கூடிய ஒருவர் சேர்ச்சில் பற்றி எழுதாமல் அவரது மேற்கோளை எழுதினால் அது ஒட்டுமொத்தமாகத் தமிழுக்கு இழப்பே. கோபி (பேச்சு) 15:36, 8 ஏப்ரல் 2014 (UTC)
- யார் புளகாங்கிதம் அடைந்தார்கள். யார் மாலைகள், பொன்னாடைகள் கேட்டார்கள். பெரும்பாலும், இவை உங்கள் கற்பனைகள். இது ஒரு சுழியக் கூட்டு விளையாட்டு இல்லை. ஒரு இடத்தில் வளர மறு இடத்தில் தேய. சேர்ச்சில் பற்றி முனைவர் பட்டம் பெற்று தமிழ் விக்கிக்க்ப் பங்களிக்க எத்தனை பேர் உள்ளார்கள். நமக்கு எல்லோருக்கும் இருக்கும் குறைபாடுகளுக்கு மத்தியில் தான் பங்களிக்கிறோம். அதுதான் விக்கி. சிறுவர், முனைவர், முதியவர், எல்லோரும் சிறுகச் சிறுகச் சேர்ந்துப் பங்களித்தல். சேர்ச்சில் பற்றி தமிழில் விரிவான உள்ளக்கம் தேவை என்று நீங்கள் உணர்ந்தால் விக்கிக்கு வெளியில் ஊதியத்துக்கு மொழிபெயர்ப்புத் திட்டம் ஒன்றைத் தொடங்கலாமே. அப்படி முக்கியமான தலைப்புகளில் தொடங்கினால், அதில் என்னால் பங்களிப்புச் செய்வது பற்றி சிந்திக்க முடியும். ஆனால் எல்லாச் சிக்கல்களுக்கும் விக்கி தீர்வு இல்லை. --Natkeeran (பேச்சு) 15:45, 8 ஏப்ரல் 2014 (UTC)
நற்கீரன், மேலே கடைசியாக நீங்கள் எழுதிய கருத்துக்கு நன்றி, உங்கள் முதலிரு வசனங்கள் தவிர ஏனைய அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன்.
சேர்ச்சில் பற்றி முனைவர் பட்டம் பெற்று எவரும் தமிழில் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இங்கிலாந்தின் வரலாறு தொடர்பாகவோ இரண்டாம் உலகபோர்கள் தொடர்பாகவோ தமிழில் உள்ளடக்கம் இல்லை. உள்ளடக்கம் இல்லை என்றால் அது சார்ந்த அறிவும் இல்லைதானே. (இவ்விடயப்பரப்புகளில் தமிழில் அறிவு இருந்திருந்தால் மேற்கின் அரசியல் சார்ந்த அறிவும் வளர்ந்திருக்கும். அது வளர்ந்திருந்தால் சர்வதேச அரசியலில் தன்னை நிலைநிறுத்தத் தமிழ்ச் சமூகத்துக்குத் தெரிந்திருக்கும். அது தெரிந்திருந்தால்....)
இது ஒரு நச்சுவட்டம். முனைவர் இல்லை என்பதால் உள்ளடக்கம் இல்லை; உள்ளடக்கம் இல்லை என்பதால் முனைவர் இல்லை. இங்கே ஓர் இடையீடு ஏற்பட வேண்டும். விரிவான உள்ளடக்கங்கள் உருவானால் அதுசார்ந்து அறிவுத்தொகுதி விருத்தியாகும். அதுவே தேவை.
உள்ளடக்கம் இருந்தால் அது விரிவடைவது இலகுவானது. நான்கு பந்திக் கட்டுரையினை வைத்துக் கொண்டு பத்து மேற்கோள்களைத் தொகுக்க இரண்டுபேர் தான் இருக்கிறார்கள் என்றால் அதற்கான காரணம் தமிழில் உள்ளடக்கம் இல்லை என்பதுதான். ஆங்கிலம் சார்ந்து இயங்கும் பல்லாயிரம் தமிழர்கள் இருந்தும் அதுசார்ந்த அறிவுச் செயற்பாடு தமிழில் இல்லாமைக்கான காரணங்களுள் ஒன்று உள்ளடக்கமின்மையே.
அறிவுச்செயற்பாடுகள் Snowball effect போன்றது. ஆரம்பத்தில் மெதுவாகச் சென்றாலும் பின்னர் வேகம் பெற முடியும். சேர்ச்சில் பற்றிய மேற்கோள்கள் தேவையில்லை என நான் சொல்ல வரவில்லை. தமிழ் விக்கிப்பீடியா ஆழமான கலைக்களஞ்சியமாக வளர்ந்தால் அறிவுச்செயற்பாடுகள் பின்னர் வேகமெடுக்கும்; பலர் வருவார்கள் என்கிறேன்.
தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலேயே செய்திகளும் மேற்கோளும் அகரமுதலியும் விக்கிமூலமும் தொடங்கப்பட்டிருந்தால் அதாவது உழைப்புச் சிதறடிக்கப்பட்டிருந்தால் த.வி. கூட இன்றுள்ள அளவுக்கு வளர்ந்திராது என்று நான் திடமாக நம்புகிறேன். இவ்வளவு வளர்ந்த பிறகும் அது ஆழம் பெறாத நிலையில் ஏனைய திட்டங்கள் அதற்கான முழுப்பயனைத் தராது.
இது விக்கி. யார் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது. அதுகூடத் தெரியாமல் நான் இங்கே உரையாடவில்லை. கனகு போன்றோர் விக்கிசெய்திகளில் பங்களித்தமை வெறுமனே ஆர்வம் சார்ந்து என்று நான் நினைக்கவில்லை. தமிழ் உள்ளடக்கம் சார்ந்தே.
எல்லா விக்கிமீடியாத் திட்டங்களும் தமிழில் வெற்றிகரமாகச் செயற்பட வேண்டுமானால் த.வி. மிகவும் செழுமையுற வேண்டும். அவ்வாறு செழுமைப்படாத நிலையில் எல்லாத்திசைகளிலும் உழைப்புச் செலுத்தப்படுவது பயன் தராது. நன்றி. கோபி (பேச்சு) 16:22, 8 ஏப்ரல் 2014 (UTC)
- தமிழ் கல்வி ஏன் இல்லை. ஏன் இல்லை என்றால் தமிழில் பாட நூல்கள் இல்லை. இது பொய். அவர்களுக்கு அரசியல் துணிவு இல்லை. தமிழில் உள்ளடக்கமின்மைக்கு காரணம் தமிழில் கல்வி இல்லாமையே. இதை அடித்துச் சொல்ல முடியும். இருக்கும் உள்ளடக்கம் தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களாளேலேயே பெரிதும் உருவாக்கப்பட்டது. குறிப்பாக ஈழத்தமிழர்களால்.
- மேலும் மேலும் கொள்கைகளை, வழிகாட்டல்களை இறுக்குவதால் "விக்கி. யார் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது" என்பதைக் கட்டுப்படுத்துகிறோம்.
- உள்ளடக்கத்தை விரிவுபெற செய்ய ஒர் எளிய வழி: விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் விக்கியாக்கம். இதை நிறைவேற்றுவது. நான் தொடப்போவதில்லை. பட்டது போது. --Natkeeran (பேச்சு) 16:38, 8 ஏப்ரல் 2014 (UTC)
- ஒரு பொதுவான வேண்டுகோள்: விக்கியில் பங்களிப்பது, ஒரு தன்னார்வப் பணி. 'இதைச் செய்வதால் என்ன பயன்?' என யாரையும் நாம் கேட்க வேண்டாம்; அவரவர்களுக்கு விருப்பமானதை, இயன்றதைச் செய்யட்டும். ஏனையத் திட்டங்களில் பங்களிப்பது குறித்த வினாக்களை எழுப்புதல், ஊக்கக் குறைவினை ஏற்படுத்தும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:57, 10 ஏப்ரல் 2014 (UTC)
எல்லா விக்கித் திட்டங்களிலும் ஒரே குழுவினரே ஈடுபடுகின்ற நிலை இருக்கும்போது வளங்கள் சிதறும் என்கிற கருத்து உண்மைதான். இதில் கோபியோடு எனக்கு மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது. அத்துடன், "உள்ளடக்கங்கள் தம்முள் முழுமையாக இருக்கவேண்டும்" என்பது போன்ற கோபியின் நீண்ட நாள் கருத்துக்களும் மிகவும் முக்கியமானவை. கோபியின் இவ்வாறான சில நிலைப்பாடுகள் தமிழ் விக்கியில் ஆரம்ப காலத்திலேயே நமது கொள்கை உருவாக்கங்களில் நன்மை தரக்கூடிய தாக்கங்களைக் கொண்டிருந்திருக்கின்றன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
அதே வேளை, பல்வேறு விக்கித் திட்டங்களையும் இணையாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற கருத்தையும் பயனற்றது என்று ஒதுக்கிவிடலாம் என்று தோன்றவில்லை. இது குறித்த சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்களை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் எல்லோருக்கும் கட்டுரைகளை எழுதும் ஆர்வம் இருக்கும் என்பதில்லை. மேற்கோள்களைச் சேகரிப்பதில் ஆர்வம் கொண்ட பலரை நான் சிறுவனாக இருந்த காலம் முதற்கொண்டே பார்த்திருக்கிறேன். இதுபோலவே விக்கி மூலத்துக்கான உள்ளடக்கங்களைச் சேகரிப்பதும் விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவதிலிருந்தும் வேறுபட்டது என்பதுடன் இந்த விடயத்தில் சிறப்பு ஆர்வம் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். விக்கிமேற்கோள், விக்கிமூலம் போன்றவற்றுக்குப் பங்களிப்புச் செய்வதற்கு சிறப்பான விடய அறிவு அதிகம் தேவையில்லை என்பதால் பள்ளிமாணவர்களைக் கூடுதலாக இதில் ஈடுபடுத்தக்கூடிய வாய்ப்பு உண்டு. இது அவர்களுக்குக் கட்டற்ற உள்ளடக்க உருவாக்கத்துக்கான ஒரு நுழைவாயிலாக அமையக்கூடும். தற்போது இத்திட்டங்களுக்குப் போதுமானவர்களைக் கவர முடியாமல் இருப்பதற்கு இத்திட்டங்களில் "critical mass" இல்லாமை ஒரு முக்கிய காரணம் எனலாம்.
தற்போது, விக்கிப்பீடியாவுக்கு வருபவர்களே அதனூடாகப் பிற விக்கித்திட்டங்களையும் அறிந்து கொள்கிறார்கள். இவ்வாறான ஒர் நிலையில், மேற்படி திட்டங்களில் "critical mass" ஐ உருவாக்குவதற்கு விக்கிப்பீடியர்களே உதவ வேண்டிய நிலையும் உள்ளது. நீண்டகால நோக்கில் பார்க்கும்போது மேற்குறித்த விக்கித் திட்டங்களை வளர்த்தெடுப்பதற்குத் தனித்தனிக் குழுக்கள் அமையும் என்பது எனது நம்பிக்கை. இவ்வாறான நிலையை அடைவதற்கான பாதையில் விக்கிப்பீடியர்கள் கொஞ்சம் வளங்களைச் செலவு செய்வதில் குற்றம் இல்லை என்பதே எனது கருத்து. ---மயூரநாதன் (பேச்சு) 03:45, 10 ஏப்ரல் 2014 (UTC)
- நான் சர்ச்சிலின் அல்லது விவேகானந்தரின் அல்லது அண்ணாவின் அல்லது மற்றொருவரின் பல மேற்கோள்களை படிக்கிறேன் அவை எல்லாவற்றையும் விக்கிப்பீடியாவில் எழுத முடியாது, அவற்றை படித்ததால் விக்கிப்பீடியாவில் கட்டுரையை விரிவாக்கம் செய்யவேண்டுமா என்ன? அது தனி இது தனி அல்லவா?. விக்கி மேற்கோள்கள் இருந்தால் படித்த மேற்கோளை எழுதலாம் இல்லையெனில் படித்தது எனக்குள் மட்டும் இருக்கும். குறைந்த நேரம் பிடிக்கும் என்பதால் இதில் முனைப்பாக செயல்படாதபோது(சில சமயம் முடியாது :( ) அதில் ஈடுபடலாம். --குறும்பன் (பேச்சு) 01:32, 11 ஏப்ரல் 2014 (UTC)
விக்கிமேற்கோள் பயன்படுவதில்லை என்பது எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவேளை கோபி அது பயன்படும் இடங்கள் பற்றி தெரியாதவராக இருக்கலாம். சேகுவேரா, நேதாஜி, பிரபாகரன் போன்றவர்களின் மேற்கோள் பக்கங்கள் நான் பகிரும் போது எல்லாம் நிறைய பேர் படித்து விரும்பி இருக்கிறார்கள். அதுவும் ஈர்ப்பு கூட்டும் திட்டம் தான். விக்கி மேற்கோளில் வரும் பக்கங்கள் எல்லாம் தமிழ் விக்கியில் இணைக்கப்பட வேண்டும்.
திரை வசனக்களை எல்லம் விக்கியில் எழுத முடியாது. விக்கி மேற்கோளில் எழுதலாம். நேரம் செலவாவது எல்லாம் மிகக்குறைவே. அதனால் ஏற்படக்கூடிய நல்விளைவே அதிகம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:31, 11 ஏப்ரல் 2014 (UTC)
விருப்பம் தமிழ் விக்கிமீடியா என்ற குடும்பத்தில் விக்கிப்பீடியா அண்ணா என்றால் விக்கிமேற்கோளும் ஏனைய பிறதிட்டங்களும் சகோதரர்கள். ஒரு குடும்பத்தில் அண்ணா மட்டும் கெட்டிக்காரனாகவும் ஏனையோர் அறிவில் (உள்ளடக்கத்தில்) குறைந்தவர்களாகவும் இருப்பதை யார் விரும்புவார்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 14:56, 11 ஏப்ரல் 2014 (UTC)
ஒரு கலைக்களஞ்சியமாக தகவல்களைத் தருவதோடு முழுமையானப் பார்வையைப் பெற்றுக்கொள்ள இதுபோன்ற விக்கி துணைத்திட்டங்களின் தேவை கட்டாயம் என்பதே எனது கருத்து.
வின்ஸ்டன் சர்ச்சில் இந்தியர்கள் மீதும், இந்தியா பற்றியும் ஏளனப்பார்வை கொண்டிருந்தார் என்று தகவலைக் குறிப்பிடுவது விக்கிப்பீடியாவாக இருந்தால், "இந்தியா விரைவாகப் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காட்டுமிராண்டித் தனத்துக்குச் சென்று விடும்." என்று அவர் கூறிய மேற்கோள் விக்கிப்பீடியா தந்த தகவலோடு மேலதிகச் சிந்தனைக்கு உதவுவதாக இருக்கும். விக்கி மேற்கோள் இந்த வேலையையே செய்கிறது. இதை ஒரு உதாரணமாக மட்டுமே கூறுகிறேன். இந்த விக்கித்துணைத்திட்டங்கள் தான் முழுமையைத் தருகிறது. அதிகம் விக்கிப்பீடியாவில் பங்களிக்காத நான் விக்கிமேற்கோளில் கொஞ்சமாகப் பங்களிக்கக் காரணமே இதுதான். --தமிழினியன் (பேச்சு) 11:26, 12 ஏப்ரல் 2014 (UTC)
நற்கீரன், செல்வகுருநாதன், மயூரநாதன், குறும்பன், தென்காசியார், சிறீகர்சன், தமிழினியன் அனைவரது கருத்துக்களுக்கும் நன்றிகள். உங்கள் கருத்துக்களை வாசித்த பின்னரும் எனது கருத்தில் மாற்றமில்லை. அது ஏன் என்பதனை முன்வைக்கிறேன்.
- நான் விக்கிமீடியா நிறுவன விசுவாசி அல்லன். விக்கிமீடியா ஏன் ஒவ்வொரு திட்டத்தினையும் முன்வைக்கிறது என்பதற்கு ஆங்கிலச் சூழல் சார்ந்து அதற்கான தேவைகள் உள்ளன. தமிழ்ச் சூழலில் தமிழுக்கு என்ன தேவை என்பதனை மட்டுமே நான் கவனத்திலெடுக்கிறேன்.
- தமிழில் என்ன தேவை, யார் என்ன செய்ய வேண்டும் என்பதனைத் தீர்மானிப்பதுவும் கோருவதும் கூட எனது நோக்கங்கள் அல்ல. ஒரு பயனராக எனது தேவைக்கு தமிழ் விக்கிப்பீடியா பயனுள்ளதா என்பதனை மட்டுமே பார்க்கிறேன். அது சார்ந்தே கோரிக்கை விடுகிறேன்.
- மேற்கில் கடுங்குளிரில் போடும் கோட்டுக்களைக் கடும் வெயிலில் போட்டுக் கொண்டு வேர்த்து விறுவிறுத்து ஆனந்தமடைபவர்கள் நாம். அதனையே விக்கிமீடியாச் செயற்றிட்டங்களில் செய்கிறோம் என்பதே எனது ஆதங்கம். மாட்டுவண்டி ஓடும் தெருவில் பனிச்சறுக்குவண்டிகளைக் கொண்டுவந்து இழுத்துக் கொண்டிருக்கிறோம்.
- மேற்குச் சூழலில் அறிவுத் துறைகளும் தகவற் திரட்டுக்களும் வளர்ந்துவந்த நெடிய வரலாறு உள்ளது. அந்த வரலாறே அவர்களது அறிவுத் தேவையினையும் அறிவு விருத்தியினையும் தீர்மானிக்கிறது. அதற்கேற்பவே அவர்களது செயற்றிட்டங்கள் தோன்றுகின்றன.
- மேற்கில் அறிவுத்துறைகள் பல்கலைக்கழகங்கள் சார்ந்தும் ஆய்வு நிறுவனங்கள் சார்ந்தும் பல நூற்றாண்டுகளாக விரிவாக முன்னெடுக்கப்பட்டது. தகவற்குவிப்பு மிகப்பெருமளவில் நடந்துவந்துள்ளது. அவர்களது பல்கலைக்கழகங்களும் நூலகங்களும் அதற்கான சான்றுகள்.
- கலைக்களஞ்சியக் கலை என்ற ஒன்றே மிகப்பிரமாண்டமானது. வணிக ரீதியில் கலைக்களஞ்சியங்களைத் தொகுக்கும் பல நிறுவனங்கள் உள்ளன. அதன் தொடர்ச்சியும் விரிவுமே ஆங்கில விக்கிப்பீடியா.
- தமிழில் தமிழ்க் கலைக்களஞ்சியம், அதன்பின்னர் வந்த வாழ்வியல், அறிவியல் களஞ்சியங்கள் மற்றும் மருத்துவக் களஞ்சியம் போன்ற மிகச்சிலவே உள்ளன. அவற்றிலிருந்து இன்ன்னொரு பாய்ச்சலுக்குத் தயாராவதற்கான சொற்கள், உள்ளடக்கம், அறிவு என்பனகூட தமிழில் இல்லை.
- இந்த நிலையில் தமிழ்ச் சூழலுக்குத் தமிழ் விக்கிப்பீடியாவின் தேவையும் முக்கியத்துவமும் ஆங்கில விக்கிப்பீடியாவைவிட முற்றிலும் மாறுபட்டது; பிரமாண்டமானது.
- விக்கிமேற்கோள்கள், விக்கிச்செய்திகள் தமிழுக்குத் தேவையே இல்லை என நான் சொல்லவரவில்லை. அவற்றினை விட த.வி அவசியமானது என்கிறேன். அதற்கு வளங்கள் குவிக்கப்படவேண்டுமென்கிறேன்.
- அவை தேவை என்பது வேறு; அவற்றினை த.வி.க்குச் சமனாகப் பார்ப்பது என்பது வேறு. அப்படிப் பார்ப்பதனூடாகத் தமிழில் அறிவுச்செயற்பாடுகளில் ஈடுபட நினைப்போருக்குத் துரோகமிழைக்கப்படுகிறது.
- நீங்கள் சொல்வீர்கள் அவரவர் அவரவர்க்கு ஆர்வமான விதத்தில் தான் பங்களிக்க முடியும் என. அவ்வாறே ஆகுக. நன்றி கோபி (பேச்சு) 14:23, 12 ஏப்ரல் 2014 (UTC)
- தனது கருத்தோடு ஒத்துப் போகாதவர்களை கிண்டல் செய்வது, தமிழ் விக்கியில் அதிகரித்துவிட்டது. தொடர்ந்து இப்பகுதியில் உரையாடுவதை விட்டுவிட்டு ஏதேனும் ஒரு கட்டுரையில் என்னால் இயன்ற ஏதேனும் முன்னேற்றங்களை செய்ய முயற்சி செய்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:08, 12 ஏப்ரல் 2014 (UTC)
உங்கள் விக்கிப்பீடியாவின் கடவுச்சொல்லை மாற்றவும்
தொகுWebsites are racing to patch the Heartbleed bug, the worst security hole the Internet has ever seen. Change these passwords now (they were patched)
- Google, YouTube and Gmail
- Yahoo, Yahoo Mail, Tumblr, Flickr
- OKCupid
- Wikipedia
2014 விக்கிமேனியா
தொகு2014 விக்கிமேனியாவில் கலந்து கொள்வோர் / கலந்து கொள்ள எண்ணியிருப்போர் இங்கு தெரிவிக்க இயலுமா? ஏனெனில், உதவித் தொகை விண்ணப்பித்த சிலர் தங்களுக்கு வாய்ப்பு உண்டா இல்லையா என்று தெளிவின்றி உள்ளனர். நன்றி. --இரவி (பேச்சு) 10:47, 14 ஏப்ரல் 2014 (UTC)
- இரவி, எனக்குத் தெரிந்து சுமார் 1168 நபர்கள் விக்கிமேனியாவில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்களுள் 580 நபர்கள் இரண்டாம் கட்ட தகுதித்தேர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 100 நபர்களுக்கு 100% உதவித்தொகை கிடைக்கும். பிற நபர்களுக்கு பகுதி அளவு உதவித்தொகையும், சிலருக்கு வேறு நிறுவனம் அளிக்கும் உதவித்தொகையும் வழங்கப்படும். தமிழ் விக்கிப்பீடியர்கள் எவ்வளவு பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்ற கணக்குத் தெரியவில்லை. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:01, 16 ஏப்ரல் 2014 (UTC)
- என்னுடைய பெயர் இரண்டாம்கட்டத்தேர்வுக்குச் சென்றுள்ளதாக மடல்வந்துள்ளது. அவர்களது முடிவுக்கு முன்னர் (ஒருவேளை உதவித்தொகை கிடைத்தால்) செல்வதா வேண்டாமா என நானும் எண்ணிப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். போவதாக இல்லை எனில் விரைந்துதெரிவிப்பேன். -- சுந்தர் \பேச்சு 07:44, 19 ஏப்ரல் 2014 (UTC) விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:37, 21 ஏப்ரல் 2014 (UTC)
- இறுதிமுடிவை வெளியிடத்தொடங்கியுள்ளார்கள். எனக்கு உதவித்தொகை அளிக்கமுடியவில்லை என மடலனுப்பியுள்ளார்கள். சூரியாவுக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள். நம்மில் வேறுயாருக்கும் கிடைத்திருந்தால் தெரிவிக்கவும். பயணத்திட்டமிடலுக்கு உதவும். -- சுந்தர் \பேச்சு 12:55, 2 மே 2014 (UTC)
குறும்பக்கங்கள் துப்புரவு
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு கிலோ பைட்டுக்கும் குறைவாக உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை 2724. அதாவது, மொத்தக் கட்டுரைகளில் 4.4%. ஒரு Tweet கூட 140 எழுத்துகளைக் கொண்டிருக்கும் காலத்தில் அவற்றை விடச் சிறிய கட்டுரைகளை கலைக்களஞ்சியக் கட்டுரைகளாக கொண்டிருப்பது முரணாக உள்ளது. இவற்றில் தேவையற்ற வழிமாற்றுப் பக்கங்களையும் கூடுதல் உள்ளடக்கம் சேர்க்க வாய்ப்பில்லா பக்கங்களையும் விட்டால் கூட, முக்கியமான பல கட்டுரைகள் பல ஆண்டுகளாக விரிவு பெறாமல் உள்ளன. இவற்றை விரிவாக்கும் நோக்கில், கவன ஈர்ப்புக்காகவும் துப்புரவுப் பணிகளைப் பின்தொடரவும் குறித்த கால நீக்கல் வார்ப்புரு உள்ளிட்ட பராமரிப்பு வார்ப்புருக்கள் இடப்பட்டு வருகின்றன.
பார்க்க: பகுப்பு:காலக்கெடு உள்ள நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்
இவற்றில் உங்களால் மேம்படுத்தக்கூடிய பக்கங்களை விரிவாக்கி உதவ வேண்டுகிறேன். எந்த நேரத்திலும் இப்பகுப்பில் 100 கட்டுரைகளுக்கு மேல் இல்லாமல் பார்த்துக் கொள்ள உறுதியளிக்கிறேன். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு மூன்று அல்லது நான்கு கட்டுரைகள் வைத்தாலும் கூட மாதம் 100 கட்டுரைகளை மேம்படுத்தலாம். மூன்று அல்லது நான்கு பேர் நாளும் ஒரு கட்டுரையை விரிவாக்கினாலும் போதும். என்னளவில் நான் ஒவ்வொரு நாளும் ஒரு கட்டுரையை மேம்படுத்த உறுதியளிக்கிறேன். இன்னும் பலர் இத்துப்புரவுப் பணியில் இணைந்து கொண்டால் நன்றாக இருக்கும். இதற்கான பங்களிப்புகளைத் தூண்டும் வகையில் தள அறிவிப்பு, அண்மைய மாற்றங்கள் ஆகியவற்றில் தூண்டல்கள் இட உள்ளேன். இவற்றுக்கான வரவேற்பைப் பொருத்து எதிர்காலத்தில் எவ்வாறு துப்புரவைச் சிறப்பாக மேற்கொள்ளலாம் என்று உத்திகள் வகுக்கலாம். எனவே, தகுந்த காரணமோ கட்டுரையில் மேம்பாடோ இன்றி துப்புரவு வார்ப்புருக்களை நீக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:10, 15 ஏப்ரல் 2014 (UTC)
- குறுங்கட்டுரைகள், எற்கனவே உள்ள கொள்கைகளுக்கு (3 வரிகள்) ஏற்ப உருவாக்கப்பட்டு இருந்தால் அவற்றை நீக்கவேண்டாம். மேம்படுத்துக, விரிவாக்குக என்ற ஒரு புதுப் பகுப்புக்குள் சேர்க்கவும். 3 வரிக் கட்டுரைகள் ஏற்கப்படுவதில்லை என்று கொள்கை வகுப்பதாயின், வழமை போல இணக்க முடிவு எடுத்துச் செய்யவும். --Natkeeran (பேச்சு) 19:00, 15 ஏப்ரல் 2014 (UTC)
- குறித்த கால நீக்கல் வேண்டுகோள்களை எதிர்கொள்ளும் பின்வரும் கட்டுரைகளை விரிவாக்கி உதவுங்கள் எனும் தூண்டல் அறிவிப்பிற்கு, தொடர் பங்களிப்பாளர்கள் செவிசாய்த்து விரிவாக்குவதை காண்கிறோம். இதுபோன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் நாம் ஈடுபடவேண்டும் என்பது எனது ஆசை! இது தொடரவேண்டும் என்பது எனது பேராசை!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:28, 17 ஏப்ரல் 2014 (UTC)
விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 09:01, 17 ஏப்ரல் 2014 (UTC)
கொலம்பியா பிக்சர்ஸ் கட்டுரையை விரிவாக்கிவிட்டேன். தொடர்ந்து ஏனைய கட்டுரைகளையும் விரிவாக்குகின்றேன். மீடியாவிக்கி:Recentchangestext இல் விரிவாக்கிய கட்டுரைகளை நீக்கி புதிய மீகுறுங்கட்டுரைகளை சேர்க்கும் படி கேட்டுக்கொள்கின்றேன். அனைவரும் ஆர்வமாகக் குறுங்கட்டுரைகளை விரிவாக்குவதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:11, 17 ஏப்ரல் 2014 (UTC)
குறுங்கட்டுரைகள் விரிவாக்கத்தில் பங்களிக்கும் அனைவரையும் கண்டு நானும் மகிழ்கிறேன். பங்களிப்புகளைக் கூட்டும் வண்ணம் குறிப்பிட்ட கட்டுரைத் தலைப்புகளில் ஆர்வமுடைய பங்களிப்பாளர்கள், கட்டுரைகளை உருவாக்கியவர்கள், தொடர்புடைய திட்டங்கள் ஆகியவற்றிலும் அறிவிப்புகளை இடலாம்.
நற்கீரன், பகுப்பு:விக்கிப்பீடியா துப்புரவு பார்த்தால், ஆண்டுக்கணக்கில் தேங்கியுள்ள பல பணிகளைக் காணலாம். எனவே தான், குறித்த கால நீக்கல் வேண்டுகோள் விடுக்கிறோம். கட்டுரைகளை நீக்கியே தீர்வது இங்கு நோக்கம் இல்லை. மேம்படுத்தவே முடியாத அல்லது ஆர்வமூட்டாத பல கட்டுரைகளை விடுத்து, பலரும் பங்களிக்கக் கூடிய தலைப்புகளுக்கு மட்டுமே இப்போது வார்ப்புரு இட்டு வருகிறேன். கடந்த இரு நாட்களில் மட்டும் தோராயமாக 15 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில மிகச் சிறப்பாக விரிவாக்கப்பட்டுள்ளன. இதே உற்சாகத்தைத் தக்க வைக்கும் வகையிலும் அதே வேளை விக்கிச் சமூகத்துக்கு அழுத்தம் கூட்டா வகையிலும் தொடர்ந்து செயற்படுவோம்.
எது போதிய உள்ளடக்கம் என்பது தொடர்பான கொள்கை உரையாடலை விக்கிப்பீடியா பேச்சு:அடிப்படை தகவல் பக்கத்தில் மேற்கொள்வோம். நன்றி.--இரவி (பேச்சு) 14:25, 17 ஏப்ரல் 2014 (UTC)
ஏப்ரல் 14, 2014 தொடங்கிய இச்சோதனை முறை துப்புரவு முயற்சியை இன்று மே 15, 2014 உடன் முடித்துக் கொள்கிறேன். இன்று இன்னும் ஒரு சில (பொருத்தமான) கூடுதல் கட்டுரைகளுக்கு மட்டும் மேம்படுத்தும் நோக்கில் நீக்கல் வார்ப்புரு இட எண்ணியுள்ளேன். அடுத்த ஒரு மாதத்துக்கு இவற்றை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளில் மட்டும் கவனம் செலுத்த விரும்புகிறேன். பிறகு, இச்சோதனை முயற்சியின் தரவுகளை ஆய்ந்து அதன் அடிப்படையில் அடுத்த கட்ட முயற்சிகளை அவ்வப்போதோ ஒவ்வொரு ஆண்டுமோ செய்யலாம். மற்றபடி, வழக்கம் போல விடப்படும் நீக்கல் வேண்டுகோளை என் கணக்கில் சேர்த்து மொத்த வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் :) இச்சோதனை முறை துப்புரவாக்க முயற்சியைத் தக்க புரிந்துணர்வோடு நிறைவான பங்களிப்பு தந்த அனைவருக்கும் நன்றி. --இரவி (பேச்சு) 14:20, 15 மே 2014 (UTC)
வார்ப்புருவை மாற்றுக - நீக்க -> விரிவாக்குகள்
தொகுஆக்கபூர்வமான அணுகுமுறையை வரவேற்கிறேன். நீக்குக என்ற வார்ப்புருவை மாற்ரி விரிவாக்கு என்ற வார்ப்புருவை இடுவது இந்த அணுகுமுறைக்குப் பொருந்தும். ஆட்சோபனை இல்லாவிடின், அந்த மாற்றத்தை நான் செய்கிறேன். நீக்க என்ற வார்ப்புரு, விதிகளை மீறிய கட்டுரைகளுக்கு மட்டும் இடவும். --Natkeeran (பேச்சு) 15:48, 17 ஏப்ரல் 2014 (UTC)
- நற்கீரன் சொல்வது சரியென்று எனக்குத் தோன்றுகிறது. புதிதாக எழுதப்படும் 'விதிகளை மீறும் கட்டுரைகளுக்கு' அண்மைக்காலங்களில் நாம் செய்து வருவதைப்போல நீக்கல் வார்ப்புருவினை இடலாம். ஆனால், முன்பு எழுதப்பட்ட கட்டுரைகளுக்கு 'விரிவாக்குக' எனும் புதிய வார்ப்புருவினை இடலாம். மனித வளம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருக்கும் நமது தமிழ் விக்கியில் இந்த அணுகுமுறையினால் தேவையற்ற அழுத்தங்கள் ஏற்படாமல் இருக்கும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:17, 18 ஏப்ரல் 2014 (UTC)
- @அன்டன்... புதிதாக எழுதப்படும் குறுங்கட்டுரைகளுக்கு (போதிய தகவல்கள் இல்லாதவை) நீக்கல் வார்ப்புரு இடுவதை நாம் strictஆக தொடருவதால், தேங்கியுள்ளவைகளின் எண்ணிக்கை மேற்கொண்டு உயராது என்பதே எனது கருத்து. தேங்கியுள்ளவைகளை தூண்டுதல் அறிவிப்புகள் மூலமாகவும், தனிப்பட்ட ஊக்கங்களின் மூலமாகவும் நம்மால் குறைக்க இயலும் என திடமாக நம்புகிறேன். தேவைப்படின் வார்ப்புரு:Refimproveஇல் இருப்பது போன்று உறுதியான வாசகங்களை புதிய வார்ப்புருவில் இடலாம்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:57, 18 ஏப்ரல் 2014 (UTC)
- செல்வசிவகுருநாதன், உங்கள் நம்பிக்கை நியாயமானதே. பொறிமுறை இல்லாவிட்டால் எதுவும் நிகழாது என்பதுதான் என் வாதம். மேலும், துப்புரவு பணியில் ஈடுபடும் பயனர் எண்ணிக்கையையும் அவர்களின் உற்சாகத்திற்குத் தடைவிதிக்கும் செயற்பாடுகள் பற்றியும் கருத்திற் கொள்வது அவசியம். வெறுமனே கட்டுரைகள் உருவாகிக் கொண்டிருந்தால் தரமும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் (Quantity vs. Quality). எ.கா: மூலக்கூற்றுப் பொறியியல் (Molecular engineering) பற்றி அறிந்து கொள்ள முனையும் ஒருவருக்கு த.வி.யால் எந்தளவிற்கு உதவ முடியும்? அகரமுதலியாக அக்கட்டுரை உள்ளது. வார்ப்புரு:Refimprove என்ற வார்ப்புருவோடு வருடக் கணக்கில் இருக்கும். --AntonTalk 04:24, 18 ஏப்ரல் 2014 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது எவ்வளவு எவ்வளவு முக்கியமோ அதேபோல எழுதப்படும் கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமானவையாக உள்ளனவா? அதன் தரம் குறித்த கொள்கைகளுக்கு அமைவாக உள்ளனவா என்பதைக் கவனித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதும் முக்கியமே. அதனால், கட்டுரைகளின் பொருத்தத்தன்மை, தரம் போன்றவை குறித்து, வார்ப்புரு இடுவதும் தேவையான ஒன்று என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்காது என எண்ணுகிறேன். எனவே, இவ்விரு முக்கியமான பணிகளில் ஈடுபடுவோரும் "தரமான தமிழ் விக்கிப்பீடியா" என்ற ஒரே நோக்கத்துக்காகவே செயல்படுகிறோம் என்பதை மனதிற்கொண்டு செயல்பட வேண்டும்.
- கட்டுரைகளைப் பொறுத்தவரை தம்முள் முழுமையான கட்டுரைகளை எழுதவேண்டும் என்னும் இலக்கு சரிதான். ஆனால், விக்கிப்பீடியாவில் குறுங் கட்டுரைகள் எழுதுவது குற்றம் அல்ல என்பதையும் உணர்ந்துகொள்வது அவசியம். குறுங்கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் மட்டும் எழுதப்படுவதில்லை. மில்லியன் கணக்கில் கட்டுரைகளையும், ஆயிரக்கணக்கில் முனைப்பான பங்களிப்பாளர்களைக் கொண்ட ஆங்கில விக்கியிலும்கூடக் குறுங்கட்டுரைகள் எழுதப்படுகின்றன. கூட்டு முயற்சியாகக் கட்டுரைகளை எழுதுவது என்னும் சூழலில் குறுங்கட்டுரைகளுக்கும் ஒரு முக்கியமான இடம் உண்டு. திட்டத்தின் தொடக்க நிலைகளில் கட்டுரை எண்ணிக்கையை விரைவாகக் கூட்டும் எண்ணம், பங்களிப்பதற்குக் குறைவான நேரமே ஒதுக்கக்கூடியவர்கள் படிப்படியாக விரிவாக்கலாம் என்னும் எண்ணத்தில் எழுதுதல், குறித்த ஒரு தலைப்பில் கட்டுரை இருக்கவேண்டும் என்று விரும்புபவர்கள் மற்றவர்கள் விரிவாக்குவதை எதிர்பார்த்து தமக்குத் தெரிந்ததை எழுதுதுதல், புதிய பயனர்கள் ஆரம்ப முயற்சியாக எழுதுதல் என்பன போன்ற பல வழிகளில் குறுங்கட்டுரைகள் எழுதப்படுகின்றன. இந்த முயற்சிகள் அனைத்தும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு அவசியமானவையே. அதனால், இந்த வகையில் தமிழ் விக்கிக்குப் பங்களிப்புச் செய்பவர்களுக்கு உற்சாகக் குறைவை ஏற்படுத்தும் வகையில் வார்ப்புருக்கள் இடுவதைத் தவிர்ப்பது நல்லது. சில வேளைகளில் நீண்டகாலப் பயனர்களுக்கே சலிப்பை உண்டாக்கும் வகையில் வார்ப்புருக்கள் இடப்படுகின்றன.
- தொடக்கத்தில் நான் பல குறுங்கட்டுரைகளை எழுதியிருப்பதும் அவற்றுட் பல இன்னும் இருப்பதும் உண்மைதான் ஆனால் அண்மைக் காலங்களில் சான்றுகள் போன்றவற்றோடு கூடிய ஓரளவு முழுமையான கட்டுரைகளையே எழுதிவருகிறேன். சில நாட்களுக்கு முன் நான் ஒரு கட்டுரையை எழுதிக்கொண்டிருந்தேன். இடையில் தண்ணீர் குடித்துவிட்டுத் திரும்பிவரும் முன்பு ஒரு பயனர் "சான்றில்லை" என்று வார்ப்புரு இட்டுவிட்டார். இது போன்ற செயற்பாடுகளைத் தவிர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும். கட்டுரைகள் எழுதப்பட்ட பின்னர் சில நாட்கள் விட்டுவிட்டு வார்ப்புரு இடுவது நல்லது.
- அதே வேளை கட்டுரை எழுதுபவர்களும், தமிழ் மக்களுக்குப் பயனுள்ளவையாக அமையும் வகையில் கூடிய வரை போதிய தகவல்களைக் கொண்டவையாகக் கட்டுரைகளை எழுதுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அத்துடன், தரம் காப்பதற்காக வார்ப்புரு இடுவதன் தேவையை உணர்ந்து அப்பணியில் ஈடுபடுபவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களது ஊக்கத்தைக் குறைக்காமல், உரிய வகையில் கலந்துரையாடிப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
---மயூரநாதன் (பேச்சு) 09:08, 18 ஏப்ரல் 2014 (UTC)
விக்கிப்பீடியர்களை இரண்டு விசயங்கள் தாம் பெரிதும் உந்துகின்றன.
1. ஒரு முக்கிய கட்டுரை இல்லாமல் சிகப்பு இணைப்பாக இருப்பது.
2. ஒரு கட்டுரை நீக்கப்பட்டு சிகப்பு இணைப்பாகும் நிலை.
இதனால் தான் 10,000 முக்கிய தலைப்புகளில் குறுங்கட்டுரைகளையாவது உருவாக்கி இருக்கிறோம். எவ்வளவு முக்கியம் இல்லாத கட்டுரை என்றாலும் நீக்கி விடக்கூடாது என்று வாதிடுகிறோம். வேறு எந்த வகையான துப்புரவு அணுகுமுறையும் தூண்டல்களும் உரிய விளைவுகளைக் தர வில்லை.
குறுங்கட்டுரைகள் பயனுடையவே. ஆனால், குறைந்த அளவு பயனையாவது தர ஏற்றுக் கொள்ளத்தக்க உள்ளடக்கம் என்ன என்பது பற்றித் தான் விக்கிப்பீடியா பேச்சு:அடிப்படை தகவல் பக்கத்தில் உரையாடி வருகிறோம். முன்னேறிய விக்கிப்பீடியாக்களில் விரிவாக்க வழியேயில்லாத கட்டுரைகள் தான் குறுங்கட்டுரைகளாக உள்ளன. ஆனால், நாம் பல முக்கிய தலைப்புகளையும் கூட ஆண்டுக்கணக்கில் சில வரி கட்டுரைகளாக கொண்டிருக்கிறோம் என்பது தான் சிக்கல்.
தமிழ் விக்கிப்பீடியாவில் 2 கிலோ பைட்டுக்குக் குறைவாக 18 ஆயிரம் கட்டுரைகள் உள்ளன. புதிதாக குறுங்கட்டுரைகள் தேங்காமல், ஒவ்வொரு மாதமும் 100 கட்டுரைகள் என்று மேம்படுத்தினால் கூட இவற்றை மேம்படுத்த 15 ஆண்டுகள் ஆகும். உண்மையில், இவற்றில் பல விரிவாக்கவே முடியாத, ஆனால் கலைக்களஞ்சியத்தில் இருக்க வேண்டிய தலைப்புகள். சில, எழுதியவரைத் தவிர வேறு பலருக்கும் ஆர்வம் தராத தலைப்புகள். எனவே, நீக்கல் வேண்டுகோள் என்ற பெயரில் இருக்கிற எல்லா கட்டுரைகளையும் நீக்கித் தள்ளுவது நோக்கம் இல்லை. கடந்த முறை அண்மைய மாற்றத் தூண்டல்கள், கட்டுரைகள் மேம்பாட்டு முயற்சிகளை மேற்கொண்ட போது ஒரு கட்டத்துக்கு மேல் உற்சாகம் வடிந்து போவதைக் காண முடிகிறது. எனவே, தற்போதுள்ள அணுகுமுறை வேலை செய்யும் வரை இதனைச் செய்து பார்ப்போமே?
அவ்வப்போது அல்லது ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டு தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தைத் தொடர்ந்து மேம்படுத்த முனைய வேண்டும் என்பது தான் நோக்கம். நன்றி.--இரவி (பேச்சு) 11:25, 21 ஏப்ரல் 2014 (UTC)
- மேம்படுத்தும் நோக்குடன் வார்ப்புரு இடப்பட்ட கட்டுரைகள் சில அண்மையில் நீக்கப்பட்டுள்ளன. இந்தக் குளப்பத்தை தவிர்க்க வார்ப்புருவை மாற்றவுள்ளேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 19:15, 9 மே 2014 (UTC)
- மாற்றவிரும்பினால் முறையாக வாக்கெடுப்பு நடத்துங்கள். ஏற்கெனவேயும் நீங்கள் துரித நீக்கல் வார்ப்புருவின் போக்கையே நீங்கள் மாற்றியிருந்தீர்கள். இவ்வாறு வார்ப்புருவின் நோக்கையே தலைகீழாக மாற்றுவது தவறு. துரித நீக்கல் என்பது கட்டுரையை நீக்கவே. ஆனால், ஒரு நல் நோக்கில் இங்கு மேம்படுத்துத்திக் கொண்டிருக்கிறோம். மேலும் துரித நீக்கலுக்கு ஒரு மாத அவகாசமும் வழங்குகிறோம். ஏன் உங்களால் மற்றவர்கள் போல் இதில் பங்கு பெற முடியவில்லை? நீங்கள் 2005 உருவாக்கிய மனித முடிவு சாத்தியக்கூறு காரணிகள் கட்டுரை 2014 இல் முறையாக கட்டுரையாக்கப்பட்டுள்ளது. இதனால் படிப்போருக்கு விளங்கும். இவ்வாறு முன்பு இருந்நதால் படிப்போருக்கு என்ன பயன்? --AntonTalk 02:14, 10 மே 2014 (UTC)
- அன்ரன், உங்கள் கருத்து மிகக் கடுமையானது. //ஏன் உங்களால் மற்றவர்கள் போல் இதில் பங்கு பெற முடியவில்லை?// என்ற கருத்து விக்கி நடைமுறைக்கே முரணானது. இக்கருத்தை நீங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு நிருவாகப் பயனர் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். மேலும், வார்ப்புரு இடப்பட்டது நன்நோக்கங் கொண்டே. ஆனாலும், எல்லாக் கட்டுரைகளுக்கும் வார்ப்புருக்களை இட்டு விட்டு, அனைத்தையும் ஒரே மாதத்தில் மேம்படுத்தச் சொன்னால் அது முடியாத காரியம் என்பது நீங்கள் அறியாததல்ல. எனவே காட்சிப்படுத்தப்படும் கட்டுரைகளுக்கு மட்டும் வார்ப்புருக்களை சேர்ப்பது நல்லது. அல்லது நற்கீரன் கூறியது போல புதிய வார்ப்புரு ஒன்றை உருவாக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 02:27, 10 மே 2014 (UTC)
- //வார்ப்புருவை மாற்றவுள்ளேன்// என்பதும் என் பேச்சுப்பக்கத்தில் //தவறு// என்று குறிப்பிட்டதும் கடுமை குறைவானவையா? நிருவாகப் பயனர் யாரோ அவர்கள் அணைவரும் கருத்திற் கொள்ளத்தான் வேண்டும். வரலாறுகளில் இருந்து என்னாலும் பல உதாரணங்களைச் சுட்ட முடியும். எல்லாக் கட்டுரைகளுக்கும் வார்ப்புருக்கள் இடப்படவில்லை. கிட்டத்தட்ட 50 கட்டுரைகள்தான் உள்ளன. --AntonTalk 02:45, 10 மே 2014 (UTC)
- //வார்ப்புருவை மாற்றவுள்ளேன்// என்பதும் என் பேச்சுப்பக்கத்தில் //தவறு// என்று குறிப்பிட்டதும் கடுமை குறைவானவையா?///. ஆம் அவை கடுமை குறைவு மட்டுமல்ல, ஏற்றுக் கொள்ளத்தக்கதும் ஆகும். எது எப்படி என்றாலும், நீங்கள் கூறியது சரி என்றாகாது. ஒருவர் நீக்கல் வார்ப்புரு இட்டவுடன், அதனைச் சரி பார்க்காமல் நீங்கள் சில கட்டுரைகளை நேற்று நீக்கியிருந்தீர்கள். அவற்றை நான் பின்னர் மீள்வித்திருந்தேன்.--Kanags \உரையாடுக 03:03, 10 மே 2014 (UTC)
- அதற்காக கடுமை குறைவு என்று நீங்கள் சொல்வதால் கொள்ளத்தக்கதாகாது. மீள்வித்த நியாயக் காரணத்தை கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்க முடியுமா? --AntonTalk 03:17, 10 மே 2014 (UTC)
- புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் மரியாகிரி, தேற்றாத்தீவு, நிதி கணக்கு இவற்றை மீள்வித்தேன். வார்ப்புரு இருந்தது, அதனால் நீக்கினேன் என நீங்கள் காரணம் கூறுவீர்களா?--Kanags \உரையாடுக 03:31, 10 மே 2014 (UTC)
- அதற்காக கடுமை குறைவு என்று நீங்கள் சொல்வதால் கொள்ளத்தக்கதாகாது. மீள்வித்த நியாயக் காரணத்தை கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்க முடியுமா? --AntonTalk 03:17, 10 மே 2014 (UTC)
- //வார்ப்புருவை மாற்றவுள்ளேன்// என்பதும் என் பேச்சுப்பக்கத்தில் //தவறு// என்று குறிப்பிட்டதும் கடுமை குறைவானவையா?///. ஆம் அவை கடுமை குறைவு மட்டுமல்ல, ஏற்றுக் கொள்ளத்தக்கதும் ஆகும். எது எப்படி என்றாலும், நீங்கள் கூறியது சரி என்றாகாது. ஒருவர் நீக்கல் வார்ப்புரு இட்டவுடன், அதனைச் சரி பார்க்காமல் நீங்கள் சில கட்டுரைகளை நேற்று நீக்கியிருந்தீர்கள். அவற்றை நான் பின்னர் மீள்வித்திருந்தேன்.--Kanags \உரையாடுக 03:03, 10 மே 2014 (UTC)
நற்கீரன், குறித்த கால நீக்கல் வேண்டுகோள் இடும் வழக்கமும் அதன் மீதான நீக்கல் நடவடிக்கையும் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இவ்வேண்டுகோளைப் பலரும் விடுக்கிறார்கள். பல நிருவாகிகளும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அன்டன் நீக்கிய பலியை பழித்தல், வணக்கம் பண்பலை 105.9 கட்டுரைகளில் இந்த வேண்டுகோள்கள் மார்ச்சு 2014 முதலே உள்ளன. குறித்த காலத்துக்கு மேலும் ஒரு மாதம் கழித்தே அன்டன் நீக்கியுள்ளார்.
குறிப்பாக குறுங்கட்டுரைகளை மேம்படுத்தும் நோக்குடன் நான் வார்ப்புருக்கள் இடத் தொடங்கியது, ஏப்ரல் 15, 2014ஐ ஒட்டியே. புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் மரியாகிரி, தேற்றாத்தீவு, நிதி கணக்கு என்று Kanags சுட்டிக்காட்டியுள்ள கட்டுரைகள் இவ்வாறு ஏப்ரல் 15க்கு முன்பு பிற பயனர்களால் நீக்கல் வேண்டுகோள் இடப்பட்டவையே. எனவே, இதற்கு முந்தைய வேண்டுகோள்களின் மீதான முறையான நடவடிக்கைகளை இதனுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். காலம் கடந்த நீக்கல் வார்ப்புருக்கள் மீது நிருவாகப் பயனர்கள், தங்கள் மதிப்பீட்டுக்கு உட்பட்டு, நடவடிக்கை எடுப்பது சரியே. இதன் மீது மாற்றுக் கருத்து இருந்தால் பேச்சுப் பக்கத்தில் உரையாடலாம். எடுத்துக்காட்டுக்கு, புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் மரியாகிரி, தேற்றாத்தீவு, நிதி கணக்கு என்று Kanags சுட்டிக்காட்டிய கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்களில் சில தெளிவுகளைக் கோரியுள்ளேன்.
குறுங்கட்டுரைகளை மேம்படுத்தும் நோக்குடன் நான் வார்ப்புருக்கள் இடத் தொடங்கி கட்டுரைகளில் பெரும்பாலானவை சிறப்பான மேம்பாடு கண்டுள்ளன. எடுத்துக்காட்டுக்கு, அணுவுலை விபத்துகள், பணப்பயிர், அறுதி விகிதசம விதி போன்ற கட்டுரைகளைக் காணலாம். சற்று ஓய்வில் இருந்த பல பயனர்கள் முனைப்போடு இவற்றில் பங்களிக்கின்றனர். அண்மைய மாற்றம், தள அறிவிப்புத் தூண்டல்களுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அழியும் நிலையில் உள்ள கட்டுரைகளைக் காப்பாற்றுங்கள் என்று முகநூலில் கூட பாலா வேண்டுகோள் விடுத்திருந்தார். இன்னும் கூட எப்படி கூடுதல் பயனர்களை இதில் ஈடுபடுத்துவது என்று முனைவோம். மாதம் 100 கட்டுரைகள் என்ற நிலையில் இருந்து தற்போது தோராமயமாக 50 கட்டுரைகளிலேயே இவ்வார்ப்புரு இட்டிருக்கிறோம். இந்த எண்ணிக்கையும் கூட பலதரப்பட்ட பயனர்களின் ஆர்வத்துக்குத் தோதான கட்டுரைகள் இடம்பெற வேண்டும் என்றே. எனவே, இதற்குக் கீழும் கட்டுரை எண்ணிக்கையைக் குறைப்பது உதவுமா என்று தெரியவில்லை. ஆனால், இவ்வளவு முயற்சிக்குப் பிறகும் அசம்பு, வகுரம்பட்டி போன்ற கட்டுரைகள் எஞ்சுமானால், வார்ப்புரு அறிவிப்புக்கு ஏற்ப அவற்றைக் குறித்த காலத்தில் நீக்குவதே முறை. ஏனெனில், இவை வழக்கமான மூன்று வரி வரையறையின் படி முன்பே நீக்கப்பட்டிருக்க வேண்டியவை. குறித்த காலம் கடந்தால் கட்டுரை நீக்கப்படும் என்ற தெளிவான நிலைப்பாடே இக்கட்டுரைகள் மீதான பங்களிப்புகளை ஈர்க்கின்றன. அந்த நிலைப்பாட்டை மாற்றி வேறு வார்ப்புருக்கள் இட்டால், இதே போன்ற துப்புரவுப் பங்களிப்பை ஏதிர்பார்க்க முடியும் என்பதற்கு உங்களிடம் நிறுவப்பட்ட வழிமுறை இருந்தால் பரிந்துரையுங்கள். அதனையும் ஒரு மாதத்துக்கு முயன்று பார்ப்போம். நன்றி.--இரவி (பேச்சு) 14:28, 11 மே 2014 (UTC)
- மூன்று வரி இருக்க வேண்டும் என்பதுவே அடிப்படை விதி. வணக்கம் பண்பலை 105.9 அதற்கு ஏற்ப உள்ளது. அதற்கு நீக்கல் வார்ப்புரு இடப்பட்டது தவறு. அதை கண்மூடித்தனமாக நீக்கியது தவறு. --Natkeeran (பேச்சு) 16:37, 12 மே 2014 (UTC)
பகுப்பு நீக்க வேண்டுகோள்
தொகுபகுப்பு:உலகப்புகழ் பெற்ற துடுப்பாட்டக்காரர்கள் இப்பகுப்பானது ஒரு பொருத்தமற்ற பகுப்பு என நினைக்கின்றேன். உலகப்புகழ் பெற்ற துடுப்பாட்டக்காரர்கள் என்று யாரையும் வகைப்படுத்திவிட முடியாது. பிற பயனர்களின் கருத்துக்காக இங்கு குறிப்பிடுகின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 05:45, 16 ஏப்ரல் 2014 (UTC)
- விருப்பம்--✍☪mohamed ijazz☪® (பேச்சு) 06:10, 16 ஏப்ரல் 2014 (UTC)
- விருப்பம்--குறும்பன் (பேச்சு) 02:40, 17 ஏப்ரல் 2014 (UTC)
இது போன்ற வேண்டுகோளைப் பகுப்பின் பேச்சுப் பக்கத்திலேயே இட்டால் மற்றவர்கள் கவனித்து நடவடிக்கை எடுப்பார்கள். நன்றி.--இரவி (பேச்சு) 13:01, 17 ஏப்ரல் 2014 (UTC)
நான் முன்னர் பணிபுரிந்த ஈராக் நாட்டில் கிரிக்கட் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் இருக்கிறார்கள். அமெரிக்கர் ஒருவருக்கு கிரிக்கெட் பேஸ்பால் போன்றது என்று விளங்கப்படுத்தியது இன்னமும் ஞாபகம் இருக்கிறது. துடுப்பாட்டக்காரர்கள் என்ற பகுப்பு போதுமானது எனநினைக்கிறேன். --உமாபதி \பேச்சு 07:58, 18 ஏப்ரல் 2014 (UTC)
பெயரிடல் மரபு
தொகுமுனைவர் பட்டம் பெற்ற நபர்களின் கட்டுரைக்கு முன்பு முனைவர் என்று இடுவது விக்கிப்பீடியா:பெயரிடல் மரபிற்கு எற்ப சரியானதா? அவ்வாறு முனைவர் என்ற முன்னொட்டுச் சுட்டியுடன் வழிமற்றுப்பக்கங்கள் இருக்கலாம் ஆனால் சில கட்டுரைகளும் அவ்வாறு உள்ளன. அவ்வாறான கட்டுரைகள்,
இக்கட்டுரைகளை சரியான தலைப்பிற்கு நகர்த்தலாமா?--ஸ்ரீகர்சன் (பேச்சு) 06:13, 16 ஏப்ரல் 2014 (UTC)
- முனைவர் என்ற பட்டம் தலைப்பில் இருக்கக்கூடாது. மலையமான் (எழுத்தாளர்) என்று வேண்டுமானால் இருக்கலாம். கட்டுரையினுள் அவரின் முனைவர் பட்டம் பற்றி குறிப்பிடலாம். --குறும்பன் (பேச்சு) 02:00, 17 ஏப்ரல் 2014 (UTC)
இது போன்ற ஐயங்களை குறித்த பேச்சுப் பக்கத்திலேயே இட்டால் மற்றவர்கள் கவனித்து நடவடிக்கை எடுப்பார்கள். நன்றி.--இரவி (பேச்சு) 13:02, 17 ஏப்ரல் 2014 (UTC)
- ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 06:34, 18 ஏப்ரல் 2014 (UTC)
முதற்பக்க இற்றைப்படுத்தல் பணி
தொகுமுதற்பக்க கட்டுரைகள், உங்களுக்குத் தெரியுமா பக்கள் நீண்ட காலம் இற்றைப்படுத்தப்படாமல் இருந்தால், கடந்த சில கிழமைகளாக நான் அப் பணியைச் செய்து வருகிறேன். இப் பணியை வேறு யாரும் செய்ய முன்வந்தால், உதவியாக இருக்கும். நன்றி. --Natkeeran (பேச்சு) 22:40, 27 ஏப்ரல் 2014 (UTC)
- விருப்பம் வணக்கம் நற்கீரன் நான் உங்களுக்கு உதவ ஆர்வமாக இருக்கிறேன் --✍ mohamed ijazz ☪® (பேச்சு) 02:42, 28 ஏப்ரல் 2014 (UTC)
விருப்பம் உங்களுக்கு உதவ ஆர்வமாக உள்ளேன். முதற்பக்க கட்டுரைகளுக்குரிய பக்கத்தை உருவாக்குகிறேன். ஆனால் நிர்வாகியொருவர் திங்கள் தோறும் இற்றைப்படுத்தி உதவ வேண்டும்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:01, 28 ஏப்ரல் 2014 (UTC)
- முன்வந்தமைக்கு பாரட்டுக்கள், ஸ்ரீகர்சன். ஞாயிறு இற்றைப்படுத்தப்படல் வேண்டும். தற்போது உள்ளதுபோல் "அடுத்து இடம்பெற இருப்பவை" என்பதில் இரு கட்டுரைகள் இடப்படும்போது அது தொடர்பில் மற்றவர்கள் கருத்து அறிய உதவும். நற்கீரன், "உங்களுக்குத் தெரியுமா" இற்றைப்படுத்தலுக்கு பலர் உள்ளனர். எதற்கும் அவர்களுக்கு ஓர் குறிப்பு இட்டுப்பாருங்கள். --AntonTalk 13:17, 28 ஏப்ரல் 2014 (UTC)
விருப்பம் அன்ரன் ஐயா, நற்கீரன் ஐயா அவர்களே! நானும் எனது அண்ணனுக்கு சில உதவிகள் செய்யலாம் என நினைக்கின்றேன், நானும் என் அண்ணுக்கு துணையாக இருக்க விரும்புகின்றேன். முதற்கட்டமாக சில கட்டுரைகளை பரிந்துரைத்துள்ளேன்.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 05:18, 3 மே 2014 (UTC)
- Mohamed ijazz, ஸ்ரீகர்சன், யாழ்ஸ்ரீ மூவருக்கும் நன்றியும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகளும். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:23, 13 மே 2014 (UTC)
அறிவியல் தலைப்புக்கள்
தொகுஇங்கு நகர்த்தப்பட்டுள்ளது. --AntonTalk 12:07, 1 மே 2014 (UTC)
விக்கிமேனியா 2014
தொகுவணக்கம். நீண்ட விடுப்புக்கு மன்னிக்கவும். தேர்வுகள் நடந்து கொண்டிருந்தமையால் தொடர்ந்து தொடர்பிலிருக்கவியலாமல் போனது குறித்து வருந்துகிறேன். ஒரு மகிழ்ச்சியான விடயம். இலண்டனில் ஆகத்து மாதம் நடக்கவுள்ள விக்கிமேனியா கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கு எனக்கு விக்கிமீடியா நிறுவனத்திடமிருந்து முழு உதவித் தொகை கிடைத்துள்ளது. சென்று வரலாம் என்று விருப்பமும் தெரிவித்துள்ளேன். நம்மில் வேறு யாருக்கேனும் கிடைத்திருக்கிறதா என்று தெரிந்துகொள்ள ஆசை. நன்றி. --Surya Prakash.S.A. (பேச்சு) 13:57, 3 மே 2014 (UTC)
- வாழ்த்துக்கள் அண்ணா !!!!--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:04, 3 மே 2014 (UTC)
- வாழ்த்துக்கள் சூர்ய பிரகாஷ் அண்ணா !-- நி.மாதவன் ( பேச்சு ) 14:16, 3 மே 2014 (UTC)
- வாழ்த்துக்கள்..... வாழ்த்துக்கள் .....சகோ--✍ mohamed ijazz ☪® (பேச்சு) 14:47, 3 மே 2014 (UTC)
- வாழ்த்துக்கள் அண்ணா--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:52, 3 மே 2014 (UTC)
- கலக்குங்க.தம்பி!பி.பி.சி.(தமிழோசை)யில் தொடர்பு கொள்வர் என்றே எண்ணுகிறேன். --≈ த♥உழவன் ( கூறுக ) 04:23, 4 மே 2014 (UTC)
- வாழ்த்துக்கள்!!! அண்ணா--யாழ்ஸ்ரீ (பேச்சு) 04:50, 4 மே 2014 (UTC)
- வாழ்த்துக்கள் சூர்யா. ---மயூரநாதன் (பேச்சு) 08:24, 4 மே 2014 (UTC)
- வாழ்த்துகள்!--நந்தகுமார் (பேச்சு) 08:41, 4 மே 2014 (UTC)
- வாழ்த்துகள் தம்பி சூர்யபிரகாஷ் - முனைவர் துரை.மணிகண்டன்.
- வாழ்த்துகள் விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:40, 8 மே 2014 (UTC)
- அட! நற்செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி ! கலக்குங்க !! வாழ்த்துகள்!!! --மணியன் (பேச்சு) 03:57, 10 மே 2014 (UTC)
- நல்வாழ்த்துகள்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:48, 10 மே 2014 (UTC)
- வாழ்த்துக்கள் சூர்யா. --கலை (பேச்சு) 08:26, 13 மே 2014 (UTC)
- வாழ்த்துக்கள் சூர்யா.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:25, 13 மே 2014 (UTC)
- வாழ்த்துக்கள் சூர்யா!!--ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 01:37, 17 மே 2014 (UTC)
இலண்டனில் ஆகத்து 8-10, 2014 இல் நிகழவுள்ள விக்கிமேனியாவில் பயனர் தமிழ்பரிதி மாரியும் கலந்து கொள்ளவுள்ளார். விக்கிமீடியாவின் இந்தியப்பிரிவு அவருக்கான முழு உதவித்தொகையை அளித்துள்ளது. தமிழ் விக்கியில் இருந்து இருவர் கலந்துகொள்வது தெரிகிறது வேறு யாராவது கலந்து கொள்கிறார்களா? --குறும்பன் (பேச்சு) 16:03, 31 சூலை 2014 (UTC)
No one needs free knowledge in Esperanto
தொகுThere is a current discussion on German Wikipedia on a decision of Asaf Bartov, Head of WMF Grants and Global South Partnerships, Wikimedia Foundation, who rejected a request for funding a proposal from wikipedians from eowiki one year ago with the explanation the existence, cultivation, and growth of the Esperanto Wikipedia does not advance our educational mission. No one needs free knowledge in Esperanto. On meta there has also started a discussion about that decision. --Holder (பேச்சு) 10:53, 5 மே 2014 (UTC)
வார்ப்புரு:பண்டங்கள்
தொகுவார்ப்புரு:பண்டங்கள் என்ற வார்ப்புருவுக்கு ஏன் நீக்கல் வார்ப்புரு இடப்பட்டது? ஒரு விளக்கமும் தரப்பட வில்லை. பல கட்டுரைகளைப் பாதித்து இருந்தது. சோதனை என்றால் உடனடியாக நீக்கல் தகவல் நீக்கப்பட்டு இருக்க வேண்டும். --Natkeeran (பேச்சு) 16:50, 12 மே 2014 (UTC)
- ஏன் சோதனை முயற்சி வார்ப்புரு இடப்பட்டது என்று எனக்கும் புரியவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட அனுபவம் உள்ள பயனர்கள் இதில் பங்களிப்புச் செய்துள்ளனர் என்பதையும் கவனிக்கவும். இவ்வார்ப்புருவை மேம்படுத்துவதற்கு இடம் உண்டு. ஆனால், நீக்கவேண்டியது இல்லை என்பது எனது கருத்து. --- மயூரநாதன் (பேச்சு) 03:58, 15 மே 2014 (UTC)
- முக்கிய காரணம் வார்ப்புரு இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகளின் தோற்றம் நன்றாகவில்லை. மேலும் 8 கட்டுரைகளுக்கே இணைப்புள்ளது. 22 இல் கட்டுரைகள் இணைப்பற்றவை அல்லது ஆங்கிலத்தில் உள்ளன. வார்ப்புரு இட்டால் தன்னிச்சையாக நீக்கும்போது விளக்கமும் தரப்படவில்லை என்ற கேள்வியில் என்ன நியாயம்? இவ்வாறான கலந்துரையாடல்களை குறித்த பகுதிகளில் தொடர்ந்தால் என்ன? --AntonTalk 18:02, 16 மே 2014 (UTC)
இதை அந்த வார்ப்புருவின் பேச்சுப் பக்கத்திலேயே கேட்டிருக்கலாமே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:07, 16 மே 2014 (UTC)
- நற்கீரன் சொன்னதில் கவனத்தில் கொள்ள வேண்டியது: //பல கட்டுரைகளைப் பாதித்து இருந்தது// என்பது. பொதுவாக வார்ப்புரு ஒன்றில் நீக்க்கல் வார்ப்புரு இடும் போது கவனிக்க வேண்டியது: நீக்கல் வார்ப்புருவை <includeonly>{{delete}}</includeonly> எனச் சேர்க்க வேண்டும். இதனால் குறிப்பிட்ட வார்ப்புரு இணைக்கப்பட்ட கட்டுரைகளிலும் நீக்கல் வார்ப்புரு வராமல் காக்கலாம். இதனை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.--Kanags \உரையாடுக 22:09, 16 மே 2014 (UTC)
unreferenced வார்ப்புரு
தொகுunreferenced வார்ப்புரு, ஆதாரம்/மேற்கோள்/சான்று/வெளி இணைப்பு இல்லாத புதுக்கட்டுரைகளுக்கு இட ஆரம்பித்த பிறகு நல்ல முன்னேற்றம் தெரிகிறது. முன்பு 8/10 கட்டுரைகளுக்கு இவை இருக்காது; தற்போது 2/10 கட்டுரைகளே இவ்வாறு உள்ளது. இவைகளை உடனுக்குடன் இணைத்த அனைத்து விக்கிப்பீடியர்களுக்கும் எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இத்திட்டத்தில் தற்போது பழைய கட்டுரைகளையும் இணைத்து அனைத்து கட்டுரைகளுடைய தரத்தினையும் உயர்த்த எண்ணியுள்ளேன். தொடர்ந்து உங்களுடைய ஆதரவும், ஊக்கமும் வழக்கம் போல எனக்கு அளித்து இத்திட்டத்தினை நிறைவு செய்ய உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:48, 13 மே 2014 (UTC)
- விருப்பம்! பழைய கட்டுரைகளில் இணையுங்கள்; ஆனால், மெல்ல மெல்ல செய்யுங்கள். இல்லையெனில் பளு தாங்காது!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:57, 13 மே 2014 (UTC)
பயனர்:Dineshkumar Ponnusamy வரலாற்றுக்கட்டுரையில் எதுக்காவது மேற்கோள் இல்லாது இருப்பதை பார்த்தால் என் முகநூலில் சேட்டில் அனுப்பவும். நேரம் கிடைக்கும் போது இற்றைப்படுத்தலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:45, 13 மே 2014 (UTC)
- தினேசு, தொடக்க கால எதிர்ப்பையும் பொறுத்துக் கொண்டு, இத்துப்புரவு முயற்சியில் ஈடுபடுவதற்கு நன்றி. சிவகுரு வேண்டுவது போல் விக்கிச்சமூகத்தின் பளு கூட்டாமல் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்வோம். சில வேளை, ஒரே பயனர் உருவாக்கிய அல்லது ஒரே துறை சார்ந்த நூற்றுக் கணக்கான கட்டுரைகள் மேற்கோள்கள் இல்லாமல் இருக்கின்றன. இவை அனைத்திலும் வார்ப்புரு இணைக்கும் முன், அக்கட்டுரைகளை உருவாக்கியோர், துறை சார் ஆர்வம் உடையோர் பக்கத்தில் மேற்கோள் சேர்க்க வேண்டுகோள் விடுக்கலாம். இவ்வாறான கட்டுரைகள் ஒரே மூலத்தின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்க வாய்ப்புண்டு என்பதால் வார்ப்புரு இட்டு நீக்கும் வேலை மிஞ்சும். அதே போல், தேதியும் கூடிய வார்ப்புரு இடுங்கள் (இங்குள்ளது போல). இதன் மூலம் தரக் கண்காணிப்பை கால எல்லைக்குட்பட்டு செய்ய இயலும். நானும் இப்பணியில் இணைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 14:16, 15 மே 2014 (UTC)
- இரவி, கொஞ்சம் கொஞ்சமாக அல்லாமல் அனைத்து ஆதாரமற்ற கட்டுரைகளை முதலில் அடையாளம் காண முனைகிறேன். ஒரே பயனர், ஒரே துறை சார்ந்த கட்டுரைகள் என பகுப்பு வாரியாக பிரிப்பாது அவ்வளவு இலகுவான காரியமல்ல என்பது நீங்கள் அறிந்ததே. பல கட்டுரைகளை உருவாக்கியவர்கள் தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது இல்லை. சில கட்டுரைகளை உருவாக்கியவர்கள் நெடுநாள் பங்களிப்பாளர்களே, மறதியினாலோ அல்லது கட்டுரை உருவாக்கும்போது அதாரம் இல்லாததாலோ இணைக்காமல் இருந்திருக்கலாம். கட்டுரையில் அவ்வார்ப்புரு இடும்போது, கட்டுரை உருவாக்கியவர், பங்களித்தவர், அக்கட்டுரையை கவணிப்பவர் என அனைவரின் கவணிப்பு பட்டியலில் இக்குறிப்பு தெரியவரும்.
- ஒவ்வொரு தனிப்பயனர் பக்கத்தில் வேண்டுகோள் விடுக்கும் தருவாயில் அதை தவறாக புரிந்து கொள்ள நிறைய வாய்ப்பு இருக்கின்றது. உதாரணத்திற்கு இவ்வுரையாடலைப் பார்க்கவும், ஆக கட்டுரையை உருவாக்கியவர் மட்டுமின்றி அனைத்து பயனர்களிடமும் ஆதாரம் குறித்த விழிப்புணர்வு தேவை; அனைவரின் பேச்சுப் பக்கத்திலும் இட்டுவிடலாம். தேதியுடன் இனி வார்ப்புருவை இணைக்கிறேன். தரக்கட்டுப்பாடு முயற்சியில் இது சிறு துவக்கமே. பிற விக்கிப்பீடியாவில் இருக்கும் பல்வேறு தரக் கண்காணிப்பு கொள்கைகளையும் இன்னும் 5 ஆண்டுகளிலாவது தமிழ் விக்கிப்பீடியாவில் இணைத்து விடவேண்டும் என்பது என்னுடைய குறிக்கோள். இப்பணியில் பங்குகொள்ள விருப்பம் தெரிவித்தமைக்கு நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 02:50, 17 மே 2014 (UTC)
- ஆம், கட்டுரையை உருவாக்கியவர்களின் பேச்சுப் பக்கத்தில் இடும்போது பிழையாக புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. அண்மைய குறுங்கட்டுரைத் துப்புரவு முயற்சியின் போது நானும் இதனை உணர்ந்து கொண்டேன். ஆனால், துறை குறித்த ஆர்வமுடையவர்களின் பேச்சுப் பக்கத்தில் இட்டால் நல்ல பலன் இருக்கும் என்று நம்புகிறேன். இன்னொன்று, இப்பணியைத் தானியங்கியாகச் செய்ய முடியுமா? செய்வதில் ஏதேனும் சிக்கல் வருமா? ஒரேயடியாக இல்லாமல் மாதத்துக்கு சில கட்டுரகைள் வரை மட்டும் என்ற வரையறை கொடுத்து ஓட்டலாம். கவனிக்க: நீச்சல்காரன்--இரவி (பேச்சு) 17:38, 21 மே 2014 (UTC)
- விருப்பம் நானும் இப்பணியில் ஈடுபடுகிறேன்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 16:28, 15 மே 2014 (UTC) விருப்பம் --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 02:50, 17 மே 2014 (UTC)
அடுத்தடுத்து என்ன செய்யவேண்டும் என்று ஒரு முறையான வழிமுறை கொண்ட எந்தவொரு பணியையும் விக்கிப்பீடியாவில் தானியக்கம் செய்யமுடியும். மேற்கண்ட விவாதத்தின்படி மேற்கோள் இல்லாத கட்டுரைகளில் எல்லாம் குறிப்பிட வார்ப்புருவைத் தானியக்கத்தில் இடமுடியும். 30 நாளுக்கு மேல் நாள்வாரியாகக் கட்டுரைகளை எடுக்கமுடியாது. பகுப்புவாரியாகக் கட்டுரைகளை எடுத்தால் பகுப்பில்லாத கட்டுரைகள் விடுபடும். அதனால் பயனர்வாரியாகக் கட்டுரைகளை எடுப்பது ஓரளவு சரியான யுக்தி. தானியக்க சுயதூண்டுதலில் நாள் ஒன்றிற்கு ஈராயிரம் கட்டுரைகள் என்று கொண்டு சுமார் ஒரு மாதத்தில் அனைத்துக் கட்டுரையையும் சோதனை செய்து காலவாரியாக வார்ப்புரு இடமுடியும். அல்லது குறிப்பிட்ட கட்டுரைகளை மட்டும் சோதிக்க வேண்டுமென்றால் அதற்கான பிரத்யேக நிரலை எழுதி ஆப்ஸ்விக்கி போன்ற செயலியாக வழங்கமுடியும். பயனர் யார்வேண்டுமென்றாலும் மொத்தமாகக் கட்டுரைகளை இட்டு தானியக்கம் செய்துகொள்ளலாம். ஒரு கட்டுரையில் {{மேற்கோள்பட்டியல்}}, {{Reflist}}, <references/> போன்ற குறிச்சொல் மூலம் மேற்கோள் இருப்பதையும் http://, https:// போன்ற குறிச்சொல் மூலம் வெளியிணைப்பு உள்ளதையும் உறுதிசெய்யலாம் என நினைக்கிறேன். இதுதவிர வேறு குறிச்சொல், விதிவிலக்கு இருந்தால் குறிப்பிடுக --நீச்சல்காரன் (பேச்சு) 02:09, 22 மே 2014 (UTC)
- ஒரு நாளைக்கு இரண்டாயிரம் கட்டுரை என்று வார்ப்புரு சேர்த்தால், தமிழ் விக்கிப்பீடியா தாங்காது. காலத்துக்கும் வார்ப்புருக்கள் தேங்கிப் போகலாம். மாதம் 100 கட்டுரைகள் என்று சேர்ப்பது சரியாக இருக்கும். அகர வரிசை, ஏதாவது ஒரு கட்டுரை வரிசையில் கட்டுரைகளை ஆய்வு செய்யலாம். வெளியிணைப்பை மேற்கோள் / உசாத்துணை / ஆதாரமாக கருத முடியாது. --இரவி (பேச்சு) 15:17, 22 மே 2014 (UTC)
[பயனர்:Dineshkumar Ponnusamy]] கேட்டகரி கம்பேரட்டர் கருவிகள் சில மீடியாவிக்கியில் உள்ளன. அதன் மூலம் வரலாற்றுப் பகுப்பிலும் அன்ரெபரன்சுடு பகுப்பிலும் உள்ள கட்டுரைகளை தனிப்பட்டியலாக வரும்படி செய்ய இயலும். அதாவது நீங்கள் வரலாற்றுப் பகுப்பிலுள்ள களப்பிரர் கட்டுரையில் நீங்கள் அன்ரெபரன்சுடு வார்ப்புரு இட்டால் அது அன்ரெபரன்சுடு பகுப்புக்குள்ளும் இருக்கும். இதைப் போன்றவற்றை ஒப்பிட்டு இரண்டு பகுப்பிலும் இருக்கும் கட்டுரைகளை கண்டறியலாம். உயிரியல் ஆர்வம் உள்ளவர்களுக்கு உயிரியல் + அன்ரெபரன்சுடு பகுப்பில் உள்ள கட்டுரைகளையும் கணித ஆர்வம் உள்ளவர்களுக்கு கணிதம் + அன்ரெபரன்சுடு பகுப்பில் உள்ள கட்டுரைகளையும் பரிந்துரைத்தால் வேலை எளிது. பயனர்:Sodabottle அந்த கருவிகளின் இணைப்பை எங்கொ கொடுத்ததாக நினைவு. வேறு யாருக்கும் அது தெரிந்தாலும் சொல்லவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:17, 22 மே 2014 (UTC)
தற்போது, மேற்கோள் தேவை வார்ப்புரு சேர்க்கும் வசதி தொடுப்பிணைப்பி மூலமாகவும் கிடைக்கிறது.--இரவி (பேச்சு) 14:05, 24 மே 2014 (UTC)
ஈழப்போராட்டத்தில் கொல்லப்பட்ட முக்கிய நபர்கள் பட்டியல்
தொகுநான் பேச்சு:ஈழப்போராட்டத்தில் கொல்லப்பட்ட முக்கிய நபர்கள் பட்டியல் என்ற இடத்தில் சில கேள்வி எழுப்பியிருந்தேன். யாரும் பதில் தரவில்லை. அதேநேரம் அப்பட்டடிலில் delete என்பதை சேர்த்திருந்தேன். அது நீக்கப்பட்டுவிட்டது. காரணம் அறியலாமா?
- கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் மறுமொழி இட்டுள்ளேன். அங்கு உரையாடலைத் தொடர்வோம். நன்றி.--இரவி (பேச்சு) 10:27, 16 மே 2014 (UTC)
விடுதலைப்புலிகளின் சின்னம்
தொகுவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள் - இதனை தொகுக்க முடியாதுள்ளது. அங்கு முறையாக இணைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னம் நீக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னம் இருந்தால் தொடர்ந்து அது இருந்தால் விக்கிப்பீடியாவிலிருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும் என்று ஒருவர் கூற சின்னம் இடுவது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டிய விடயம் எனவும் சிலர் சொல்கின்றனர். விக்கிப்பீடியாவிலும் தணிக்கை உள்ளதா? பேச்சு:முதற் பக்கம் என்பதில் என் கருத்துக்களை இட்டுள்ளேன். பதில் தருக.
- அரச நடவடிக்கை குறித்த அச்சம் தெரிவித்த தமிழ் விக்கிப்பீடியர்கள், குறிப்பாக பள்ளி மாணவர்களின், நலனைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடக்கும் உரையாடலின் முடிவை ஒட்டி இப்பிரச்சினையை எவ்வாறு அணுகுவது என்று முடிவு செய்யப்படும். அந்த இறுதி முடிவு தணிக்கைக்கு எதிராகவும் இருக்கலாம். எனவே, பொறுமை காக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 10:22, 16 மே 2014 (UTC)
விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை வாக்கெடுப்பு - துடுப்பாட்டக்காரர்கள்
தொகுமுதற்பக்க சிறப்புப் படம்
தொகுதமிழ் விக்கிக் கட்டுரைகளில் இடம்பெறாத படங்களும் சிறப்புப் படமாக இடப்படுகிறது. இது சரியானதா?? மேலும் பரிந்துரைப் பக்கங்களையும் கவனிக்குமாறு இர்ரைப்பைடுத்துவோரை கேட்டுக்கொள்கிறேன்.--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:16, 19 மே 2014 (UTC)
- தமிழ் விக்கிக் கட்டுரைகளில் இடம்பெறாத படங்கள் இடம்பெறுவதில் சிக்கலில்லை. விக்கிமீடியா காமன்சிலிருந்து சிறப்புப் படங்களை எடுப்பதும், தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளுடன் தொடர்புபட்டிருப்பதும் சிறப்பு. சிறப்புப் படங்களை பரிந்துரைக்கலாம். தற்போதுள்ள பரிந்துரைகள் தேவையில்லை என நினைக்கிறேன். --AntonTalk 18:06, 19 மே 2014 (UTC)
- ஆதவன், சரியானதே. படங்களைத் தேர்ந்தெடுக்கும் போது மூன்று கூறுகளை கவனத்தில் கொள்கிறேன் - 1) பொதுவகத்தில் Featured images / Quality Images பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும் (படத்தின் தரத்திற்காக). 2) படப்பொருளுக்கு தமிழ் விக்கியில் கட்டுரை இருக்க வேண்டும் (படத்தின் மூலம் ஈர்க்கப்பட்டவர் தொடுப்பினை சொடுக்கி உள்ளே பக்கத்தை சென்று பார்க்க) 3) படம் சித்தரிக்கும் பொருட்கள் (இயன்றவரை) பலதரப்பட்டதாக இருக்க வேண்டும்.
- எனவே கட்டுரையில் இடம் பெற்றிருக்கத் தேவையில்லை. தொடர்பான கட்டுரை தமிழ் விக்கியில் இருந்தால் போதுமானது. ஏனெனில் சில நேரங்களில் த.விக்கி்யில் கட்டுரை எழுதப்பட்ட பின்னர் அப்பொருளுக்கான சிறந்த படம் பொதுவகத்தில் ஏற்றப்பட்டிருக்கலாம். அல்லது த. விக்கியில் சிறிய கட்டுரை இருந்து அதற்கு தேவையான அளவு படங்கள் முன்பே இணைக்கப்பட்டிருக்கலாம்.
- பரிந்துரைகளையும் கவனித்தே செய்து வருகிறேன். மேற்குறிப்பிட்ட மூன்று கூறுகளுக்கும் பொருந்திய பரிந்துரை கிட்டும்போது காட்சிபடுத்துகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 02:22, 20 மே 2014 (UTC)
- விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:04, 20 மே 2014 (UTC)
- விருப்பம் , சோடாபாட்டில் அவர்களுடைய விளக்கத்துக்கு நன்றி....--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:35, 20 மே 2014 (UTC)
- இங்கு தங்கள் ஆதரவு எதிர்ப்புக்களை தெரிவிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.... வருக வாழ்க.. நன்றி..--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:21, 20 மே 2014 (UTC)
முதற்பக்க பட தெரிவு வரையறைகள்
தொகுதமிழ் விக்கியின் முதற்பக்க தெரிவு வரையறைகள் யாரால்?? எங்கு உரையாடி எடுக்கப்பட்டன???? இணைப்புக்கள் தரமுடியுமா??? அல்லாவிடில் கொள்கைகளை உரையாடி உருவாக்க வேண்டும். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:17, 21 மே 2014 (UTC)
Media Viewer
தொகு
Greetings, my apologies for writing in English.
I wanted to let you know that Media Viewer will be released to this wiki in the coming weeks. Media Viewer allows readers of Wikimedia projects to have an enhanced view of files without having to visit the file page, but with more detail than a thumbnail. You can try Media Viewer out now by turning it on in your Beta Features. If you do not enjoy Media Viewer or if it interferes with your work after it is turned on you will be able to disable Media Viewer as well in your preferences. I invite you to share what you think about Media Viewer and how it can be made better in the future.
Thank you for your time. - Keegan (WMF) 21:29, 23 மே 2014 (UTC)
--This message was sent using MassMessage. Was there an error? Report it!
தொடுப்பிணைப்பியில் மாற்றம் தேவை
தொகுஏற்கனவே தமிழ் விக்கிபீடியாவில் உபயோகத்தில் உள்ள பக்கத் தொடுப்பிணைப்பியில் சில புதிய இணைப்புகள் தேவைப்படுகிறது. {{Refimprove}}, {{unreferenced}} ஆகிய இரண்டு வார்ப்புருக்களை இதில் சேர்க்க வேண்டுகிறேன். பிற பயனர்களின் கருத்துகளும், எவ்வாறு செய்வது என்ற விளக்கமும் தேவை. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:27, 25 மே 2014 (UTC)
- தினேஷ்குமார் பொன்னுசாமி அண்ணா இங்கு நடந்த உரையாடலைக் கவனியுங்கள். இரவி அவர்கள் கோரிய படி கருவியை மாற்றி அமைத்துக் கொடுத்திருந்தேன். நீங்கள் தந்த படிமத்திலும் அது இவ்வாறு {{Refimprove|date={{subst:CURRENTMONTHNAME}} {{subst:CURRENTYEAR}}}} உள்ளது. நான் நிர்வாகி இல்லாததால் மீடியாவிக்கி:Gadget-tagadder.js இல் தொகுக்க முடியாதுள்ளது. நீங்கள் கேட்டுக்கொண்டபடி பயனர்:Shrikarsan/தொடுப்பிணைப்பி.js இல் {{unreferenced}} ஐயும் இணைத்துள்ளேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:50, 25 மே 2014 (UTC)
- ஏற்கனவே உள்ள {{Refimprove|date={{subst:CURRENTMONTHNAME}} {{subst:CURRENTYEAR}}}} போதுமானது அல்லவா? {{Refimprove}}, {{unreferenced}} இடுவதற்குத் தனிப்பட்ட தேவை இருக்கிறதா?--இரவி (பேச்சு) 08:52, 26 மே 2014 (UTC)
{{Refimprove}} ஐ மேலதிகமாக இணைக்கத் தேவையில்லை. {{unreferenced}} ஐ இணைக்கலாம். ஏனெனில், {{Refimprove}} வார்ப்புரு குறைந்தளவு மேற்கோள் உள்ள கட்டுரைகளுக்கு மேலதிக மேற்கோள்கள் தேவைப்படின் இடப்பயன்படுத்தப்படுகின்றது. {{unreferenced}} வார்ப்புரு மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகளுக்கு இடப்படுகின்றது.
பி.கு:-{{unreferenced}} வார்ப்புருவை வேண்டுமென்றால் {{unreferenced|date={{subst:CURRENTMONTHNAME}} {{subst:CURRENTYEAR}}}} என்றும் இடலாம்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:17, 26 மே 2014 (UTC)
- இந்த வார்ப்புருக்களைக் கட்டுரைகளில் இடும் போது அந்தந்த மாதங்களுக்குரிய பகுப்புகளும் கட்டுரைகளில் தானியங்கியாக சேர்க்கப்படுகின்றன. உ+ம்: பகுப்பு:மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள் மே 2014 இல் இருந்து, இந்தப் பகுப்பை உருவாக்கியவர் அதனை எந்தத் தாய்ப்பகுப்புக்குள்ளும் சேர்க்கவில்லை. இதனால் இப்பகுப்பை வைத்திருப்பதில் எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை. உருவாக்கப்படும் ஒவ்வொரு பகுப்புக்கும் குறைந்தது ஒரு தாய்ப்பகுப்பாவது சேர்க்கப்பட வேண்டும் என்பது விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுப்பாடு. மேலும், ஆங்கில விக்கிக் கட்டுரைகளில் இவ்வாறான பகுப்புகள் கட்டுரைகளில் இருந்து மறைக்கப்படுகின்றன. இங்கு எவ்வாறு அவற்றை செயல்படுத்துவது? விக்கித் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் யாராவது இதனைப் பாருங்கள். இவ்வுரையாடலை ஆலமரத்தடி/தொழிநுட்பத்துக்கு மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 10:34, 26 மே 2014 (UTC)
- அந்தந்த மாதங்களுக்குரிய பகுப்புகளும் கட்டுரைகளில் சேர்க்கப்படும் வகையில் இரவி அவர்கள் கேட்ட்டுக்கொண்டதால் அவ்வறு வடிவமைத்தேன். பொருத்தமான தாய்ப்பகுபை முன்மொழிந்தால் அத்தாய்ப்பகுப்பை இட்டுவிடலாம். இவ்வாறான பகுப்புக்களை காடுரைகளிலிருந்து மறைப்பது இலகு. மறைக்கப்படவேண்டிய பகுப்பில் {{Hidden category}} வார்ப்புருவை இணைத்துப் பகுப்பை மறைக்க முடியும்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:57, 26 மே 2014 (UTC)
- ஸ்ரீகர்சன், நான் நீங்கள் கொடுத்த தொடுப்பிணைப்பியில் பயனர்:Dineshkumar_Ponnusamy/தொடுப்பிணைப்பி.js சில மாறுதல்களும், தமிழாக்கமும் செய்துள்ளேன். இதனை எவ்வாறு சோதனை செய்வது? --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:22, 26 மே 2014 (UTC)
- @தினேஷ்குமார் பொன்னுசாமி அண்ணா தங்களுக்குப் பேச்சுப்பக்கத்தில் பதிலளித்துள்ளேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:48, 27 மே 2014 (UTC)
வார்ப்புரு இடும் பயனர்களுக்கு
தொகுநீக்கல் மற்றும் சான்று கோரல் வார்ப்புரு இடும் பயனர்களுக்கு மீண்டும் ஒரு தாழ்மையான வேண்டுகோள். தயவு செய்து எழுதிக்கொண்டிருக்கும் போதே கட்டுரைகளுக்கு வார்ப்புரு இடாதீர்கள். இங்கே பார்க்கவும். ஏற்கெனவே ஒரு முறை இது குறித்துச் சுட்டிக்காட்டினேன். ஒரு நாள் இரண்டு நாளாவது பார்த்துவிட்டு வார்ப்புரு இடுங்கள். எழுதிக்கொண்டிருக்கும்போதே வார்ப்புரு இடுவது எழுதுபவர்களுக்குச் சவால் விடுவது போல் இருக்கிறது. மேலே குறிப்பிட்ட கட்டுரையில் நீக்கல் வார்ப்புரு இருந்தது. அதை விரிவாக்கி வார்ப்புருவை நீக்கிவிட்டு மேலும் விரிவாக்கிக்கொண்டு இருக்கும்போதே "சான்றில்லாவிட்டால் நீக்கப்படும்" என்ற அடுத்த வார்ப்புரு போடப்படுகிறது. "ஒரு வார்ப்புருவை நீக்கினாயா? இந்தா அடுத்ததற்குப் பதில் சொல்" என்பதுபோல் இருக்கிறது. இது கட்டுரைகளை மேம்படுத்த முயல்பவர்களுக்கு உக்கத்தைத் தராது. பல ஒரு வரி இரு வரிக் கட்டுரைகளை ஏற்கத்தக்க அளவு நீளத்துக்கு விரிவாக்குவதற்குத் தகவல்களைத் தேடுவதே நீண்ட நேரம் எடுக்கக்கூடியது. இதற்கிடையே புதிது புதிதாக அழுத்தம் கொடுக்காமல் இருப்பது நல்லது. வார்ப்புருக்களில் உள்ள "..... நீக்கப்படலாம்" என்பதற்குப் பதிலாக "positive" ஆக ஏதாவது சொல் இருந்தால் நல்லது. --மயூரநாதன் (பேச்சு) 19:04, 27 மே 2014 (UTC)
- விருப்பம்
- ஒருநாளில் உள்ளடக்கத்தைச் சேர்க்கும் தொகுப்புக்களின் எண்ணிக்கையை விட நீக்கல் வார்ப்புரு தொகுப்புக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். துப்புரவு ஆர்வலர்களின் ஆர்வத்தைப் பார்த்தால் இப்போதிருக்கும் த.வியை அப்படியே ஒதுக்கிவிட்டு (abandon) புதியதாக உருவாக்குவது நலமோ எனத் தோன்றுகிறது. இன்று நான் எனது நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு ஆக்கும் கட்டுரைகள் நாளை ஏதேனும் ஒரு காரணியால் நீக்கப்படலாம் என்ற பயம் கட்டுரை ஆக்குபவர்களுக்கு தயக்கத்தைத் தரும். "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்ற முதுமொழி இங்கு நினைவு கூறத்தக்கது.--மணியன் (பேச்சு) 04:01, 28 மே 2014 (UTC)
- விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 04:12, 28 மே 2014 (UTC)
- மயூரநாதன்,உருவாக்கத்தில் இருக்கும் கட்டுரைகளை மற்ற பயனர்கள் அடையாளம் காண்பதற்காக {{underconstruction}}, {{தொகுக்கப்படுகிறது}}, {{In edit}}, {{In use}} போன்ற வார்ப்புருக்களை இடவேண்டும். குறுங்கட்டுரைகளை விரிவாக்கவும் என்ற கோரிக்கை தகவல்களை அதிகமாக சேர்க்க வேண்டும் என்பது மட்டுமல்ல, தகவல்களும் அதற்கான சான்றுகளும் சேர்க்க வேண்டுமென்பதே. positive சொல் வேண்டவே வேண்டாம், ஏனெனில் ஆதாரம் அல்லாத தகவல்கள் விக்கிப்பீடியா போன்ற பல்வேறு தரப்பட்ட மக்கள் பார்க்கும் கலைக்களஞ்சிய கட்டுரையில் கொடுக்கப்பது தவிர்க்கப்பட வேண்டும், அவை நீக்கப்படலாம் என்பது தொகுப்பாளருக்குத் தெரிய வேண்டும். மணியன், // ஒருநாளில் உள்ளடக்கத்தைச் சேர்க்கும் தொகுப்புக்களின் எண்ணிக்கையை விட நீக்கல் வார்ப்புரு தொகுப்புக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் // ஒருநாளில் செய்யப்பட்ட தவறு அல்லவே, இவ்வாறு செய்தால் இன்னும் 10-ஆண்டுகளாகும் விக்கிப்பீடியாவின் அனைத்துக் கட்டுரைகளையும் சரிசெய்வதற்கு. //நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு ஆக்கும் கட்டுரைகள் நாளை ஏதேனும் ஒரு காரணியால் நீக்கப்படலாம் // நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு ஆக்கும் கட்டுரைகள் தரமானதாகவும், உண்மைத்தகவல்களையும், அதற்கான சான்றுகளையும் கொண்டு இருக்க வேண்டும். எனது கட்டுரை உனது கட்டுரை என்ற கோட்பாடு விக்கிப்பீடியாவில் இல்லை. //அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு// ஆமாம், அளவுக்கு மிஞ்சி ஆதாரமற்ற கட்டுரைகளை தமிழ் விக்கீப்பீடியா கொண்டுள்ளது என்பது கவலைக்கிடமான உண்மையே. அதனை விரைந்து சரிசெய்ய என்னால் முடிந்த முழு பங்களிப்பை வழங்குகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:29, 28 மே 2014 (UTC)
- விருப்பம்--AntonTalk 04:33, 28 மே 2014 (UTC)
- தினேஷ், இச்சிக்கலைக் கையாள்வது எளிது. ரோந்து வேலைகளை (நீக்கல், வார்ப்புரு சேர்த்தல், இணைத்தல்) என்றும் முந்தைய நாள் வரை உருவாக்கப்பட்ட கட்டுரைகள் வரை வைத்துக்கொள்ளுங்கள். நான் முன்பு சுடச்சுடச் ரோந்து வேலை செய்து வந்த போது கற்றுக் கொண்ட “ட்ரிக்” இது :-). கட்டுரை உருவாக்குபவர்களுக்கும் சங்கடம் வராது. ரோந்து வேலையும் செவ்வனே நடக்கும்.--சோடாபாட்டில்உரையாடுக 05:01, 28 மே 2014 (UTC)
- சோடாபாட்டில், மயூரநாதன் குறிப்பிடுவது ... நீக்கல் வேண்டுகோள் வார்ப்புரு இடப்பட்டுள்ள கட்டுரைகளை அவர் தொகுத்துக் கொண்டிருக்கும்போதே இன்னொரு வார்ப்புரு இடப்படுதலை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:06, 28 மே 2014 (UTC)
- சமநிலையாக்கி போன்ற கட்டுரைகளுக்கு இணையான ஆங்கில விக்கிக் கட்டுரைகூட இல்லாத நிலையில், அவற்றை விரிவுபடுத்தும் பயனர்களுக்கு நாம் அழுத்தம் தரக்கூடாது. அதேவேளையில், {{underconstruction}} எனும் வார்ப்புருவினை பயனர்கள் பயன்படுத்தலாம்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:13, 28 மே 2014 (UTC)
- தினேஷ், இச்சிக்கலைக் கையாள்வது எளிது. ரோந்து வேலைகளை (நீக்கல், வார்ப்புரு சேர்த்தல், இணைத்தல்) என்றும் முந்தைய நாள் வரை உருவாக்கப்பட்ட கட்டுரைகள் வரை வைத்துக்கொள்ளுங்கள். நான் முன்பு சுடச்சுடச் ரோந்து வேலை செய்து வந்த போது கற்றுக் கொண்ட “ட்ரிக்” இது :-). கட்டுரை உருவாக்குபவர்களுக்கும் சங்கடம் வராது. ரோந்து வேலையும் செவ்வனே நடக்கும்.--சோடாபாட்டில்உரையாடுக 05:01, 28 மே 2014 (UTC)
- underconstruction வார்ப்புருக்களை இடுபவர்கள் பலர் சிறிது காலத்தில் இக்கட்டுரைகளை மறந்து விடுகிறார்கள். இவ்வாறு பல கட்டுரைகள் (வார்ப்புருக்களுடன்) நீண்ட காலமாகத் தேங்கி நிற்கின்றன. இக்கட்டுரைகளில் வேறு பயனர்கள் (குறிப்பாகப் புதிய பயனர்கள்) திருத்தங்கள் செய்வதற்குத் தயங்குவார்கள். நானும் சில வேளைகளில் தயங்கியதுண்டு. எனவே இவார்ப்புருவை மிக அவசியமானபோது மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 08:00, 28 மே 2014 (UTC) விருப்பம்
நன்றி சோடாபாட்டில், இன்றிலிருந்து 7-10 நாட்கள் வரை பழைய கட்டுரைகளுக்கு வார்ப்புரு இடுவதை நிறுத்துகிறேன். (வேறு பயனர்கள் இட்டால் நான் பொறுப்பில்லை ;)). இக்காலகட்டத்தில் வார்ப்புரு இடப்பட்ட கட்டுரைகளில் என்னால் முடிந்த அளவு வெளி இணைப்புகள், உசாத்துணை, சான்று, மேற்கோள் போன்றவற்றை இணைக்க முயல்கிறேன். எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு சேர்க்கிறேன். சமநிலையாக்கி ஆங்கில விக்கியில் உருவாக்கிவிட்டேன் மா. செல்வசிவகுருநாதன் . நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:17, 28 மே 2014 (UTC)
- விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:31, 28 மே 2014 (UTC)
- விடுமுறை முடிந்துவிட்டது, வார்ப்புரு இடும் பணி இன்றிலிருந்து துவங்குகிறது. கடந்த ஏழு நாட்களில் சுமார் 400-500க்கும் அதிகமான கட்டுரைகளில் வார்ப்புருவை நீக்கியும், ஆதாரங்களை இணைத்தும் உள்ளேன்; அதுமட்டுமின்றி நூற்றுக்கும் மேற்பட்ட படிமங்களையும் இணைத்து உள்ளேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:14, 10 சூன் 2014 (UTC)
தினேஷ்குமார் பொன்னுசாமி, சான்று கோரும் பண்பாடும் சான்று சேர்க்கும் பண்பாடும் தமிழ் விக்கிப்பீடியாவில் வளரத் தொடங்கியிருப்பது நன்று.. ஆனால், மேற்கோள் இல்லாத கட்டுரைகள் பகுப்பில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான கட்டுரைகள் குவிந்திருக்கும் நிலையில் மேற்கொண்டு பழைய கட்டுரைகளுக்கும் வார்ப்புரு இடுவதைத் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். ஏனெனில்:
- இப்பிரச்சினை ஒரே நாளில் வந்தது இல்லை என்பது போல் ஒரே நாளில் தீர்க்கவும் முடியாது. மொத்தமாக ஆயிரக்கணக்கான பக்கங்களில் வார்ப்புரு இடும்போது அவை ஆண்டுக் கணக்கில் அப்படியே தங்கும் அபாயமே உள்ளது. எவ்வளவு தான் நாம் முனைந்தாலும் உடனடியாக அவற்றில் சான்று சேர்க்க முடியாது. இது நேரமும் உழைப்பும் கோரும் வேலை. ஒரு மாதத்தில் 20 பயனர்கள் முனைப்பாக இருக்கிறோம் என்றால் 4,5 பேர் அளவுக்குத் தான் இதில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு உண்டு.
- மணியன், பூங்கோதை, மயூரநாதன், சிவகுரு போன்றோரின் கருத்துகளைக் கவனியுங்கள். யார் இதற்காக உழைக்கிறார்களோ அவர்களை அயர வைத்து விட்டு இதில் முன்னேற்றம் காண முடியாது. குறிப்பாக, தமிழ் விக்கிப்பீடியாவை விட்டு ஒதுங்கலாமா என்ற அளவுக்கு அயர்ந்துள்ள மணியனின் கருத்தைக் கவனியுங்கள். காடுகளில் புதிதாக மரம் நட்டு வளரும் வேகத்தைக் காட்டிலும் மரங்களை வெட்டும் வேகம் குறைவாக இருக்க வேண்டும் என்பார்கள். அப்பொழுது தான் எப்போதும் தழைத்திருக்கும் காடு இருக்கும். இதே போன்ற அணுகுமுறையைத் தான் பங்களிப்பாளர்களை அரவணைப்பதிலும் மேற்கொள்ள வேண்டும்.
- மொத்தமாக ஆயிரக்கணக்கான பக்கங்களில் வார்ப்புரு இட்டு முடித்து விட்டு அப்புறம் முதலில் இருந்து ஒவ்வொன்றாக சரி செய்வோம் என்ற அணுகுமுறையில் மாற்றம் தேவை. இப்பணியில் ஈடுபடுவோருக்கு ஆயிரக்கணக்கில் கட்டுரைகள் குவிந்துள்ளன என்பதே அயர வைப்பதாக இருக்கும். உந்துதலைக் குறைக்கும். ஒரு கட்டத்துக்குப் பிறகு இந்த அறிவிப்புகளைக் கண்டும் காணாமல் நம்மை அறியாமல் புறக்கணிக்கும் மனநிலையும் உருவாகும் (எண்ணற்ற கட்டுரைகளில் எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை இருந்தாலும் காணாமல் செல்வது போல்).
- நமக்குச் சின்னச் சின்ன வெற்றிகள், மைல்கற்கள், படி நிலைகள் தேவை. எடுத்துக்காட்டுக்கு, குறித்த கால நீக்கல் வேண்டுகோள்களை இடும்போது பலரும் அவற்றை மேம்படுத்தினார்கள். ஆனால், சிறுகச் சிறுகச் செய்வது இலகுவாக இருந்தது. அண்மைய மாற்றங்களில் காட்டிய கட்டுரைகளுக்கு நல்ல பங்களிப்பு வந்தது. 70 கட்டுரைளில் நீக்கல் அறிவிப்பு இருக்கிறதா? அதனை 50க்குக் கீழ் குறைக்கும் போது நமக்கு ஒரு உற்சாகம் வரும். அத்தகைய களிப்பு ஆயிரக்கணக்கான கட்டுரைகள் குவிந்திருக்கும் போது வருவதில்லை. இத்தகைய துப்புரவுப்பணிக்குப் பின் உள்ள உளவியலையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
- பங்களிப்பாளர்களுக்குச் சவால் விடுவதற்காக நாம் வார்ப்புரு சேர்க்கவில்லை. ஆனால், இப்படியும் புரிந்து கொள்ளப்படுகிறது என்பதை உணர்ந்து நமது அணுகுமுறையை மாற்ற வேண்டும். இது ஏதோ இரு அணிகளுக்கு இடையான மல்லுக்கட்டு போல் ஆகி விடக்கூடாது. இருவரும் ஒரே நோக்கத்துக்காகத் தான் உழைக்கிறோம். அந்தப் புரிதலும் ஒருங்கிணைந்த அணுகுமுறையும் வர காலம் தேவை.
எனவே, தற்போது வார்ப்புரு இருக்கிற கட்டுரைகளை மட்டும் எப்படி மேம்படுத்தலாம் என்று கவனம் செலுத்துவோமே?
எடுத்துக்காட்டுக்கு, ஒவ்வொரு முறையும் அண்மைய மாற்றங்களைப் பார்க்கும் போது புதிது புதிதாக 20 கட்டுரைகளைக் காட்சிப்படுத்தி மேற்கோள் சேர்க்க கோரலாம். ஒவ்வொரு வாரமும் ஒரு துறை குறித்த மேற்கோள்களைச் சேர்க்க முனையலாம். எடுத்துக்காட்டுக்கு, திரைப்படம் குறித்த கட்டுரைகளுக்கான மேற்கோள்களை இனங்காண்பது எப்படி என்ற வழிகாட்டல்கள், முக்கியமான மேற்கோள் கிடைக்கும் தளங்களைத் திரட்டித் தரலாம். இன்னும் வேறு முறைகளில் அணுகுவதற்கான ஆலோசனைகளை வரவேற்கலாம். அருள்கூர்ந்து இந்த வேண்டுகோளைக் கவனியுங்கள். ஒட்டு மொத்தமாக வார்ப்புரு இடுவது நல்ல பயனைத் தராது என்றே நம்புகிறேன். இப்போது எண்ணிக்கையை விட அணுகுமுறை தான் முக்கியம். நல்ல அணுகுமுறையைச் செம்மைப்படுத்தி உருவாக்கினோம் என்றால் எத்தனை எண்ணிக்கை இருந்தாலும் எதிர்கொள்ளலாம்.
மற்ற அனைவருக்கும், நானும் சில வார்ப்புருக்களை இட்டிருக்கிறேன் என்ற வகையில் எப்போதும் ஒருவரை நோக்கி சவால் விடுவதற்காக அதனைச் செய்தது இல்லை. அந்தந்த கட்டுரைகளுக்கு என்ன மேம்பாடு தேவையோ அதனைக் குறிக்கும் வகையிலேயே வார்ப்புரு இட்டிருக்கிறேன். ஒரே கட்டுரையைப் பல முறை பார்ப்போம். சில கட்டுரைகள் ஏதாவது ஒரு கட்டுரையில் சிக்கும். பிறகு மறந்து விடக்கூடாது என்பதற்காக நேரம் கிடைக்கும் போது வார்ப்புருக்களை இட நேர்கிறது. மற்ற பல பணிகளைப் போலவே இந்தத் துப்புரவுப் பணியிலும் ஈடுபடுகிறார்கள் என்றே புரிந்து கொள்ள வேண்டுகிறேன். இன்னொன்று, நாம் எழுதும் கட்டுரைகள் பிற்காலத்தில் ஒட்டு மொத்தமாக அழிக்கப்படுமா என்பது தேவையற்ற அச்சம். தமிழ் விக்கிப்பீடியாவைப் பொருத்துவரை குப்பை கட்டுரைகளைத் தவிர்த்து மற்ற எதனையும் நிருவாகிகள் ஒட்டு மொத்தமாகவோ யாரையும் கலந்தாலோசிக்காமலோ அழித்து விட முடியாது. பல கட்டுரைகளுக்கும் நீண்ட நெடிய நீக்கல் வாக்கெடுப்பு உரையாடல்கள் நடப்பதை அறிவீர்கள். எனினும், மேற்கோள் தேவைப்படுவதின் முக்கியத்துவத்தைப் புதியவர்களுக்காவது உணர்ந்த வார்ப்புருவில் சற்று தெளிவும் கடுமையும் தேவைப்படுகிறது. மற்றபடி, மேற்கோள் இல்லை என்ற காரணத்துக்காக இது வரை எந்த கட்டுரையும் அழிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இனியும் அதற்கான வாய்ப்பு இல்லாமல் உள்வாங்கி நிலைப்பாடு (inclusionist) உள்ள பயனர்கள் பார்த்துக் கொள்வார்கள் :) --இரவி (பேச்சு) 05:19, 30 மே 2014 (UTC)
- // பழைய கட்டுரைகளுக்கும் வார்ப்புரு இடுவதைத் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளுமாறு // ஏற்கனவே ஏழு நாட்கள் தற்காலிக விடுமுறை அளித்துள்ளேன். ஏற்கனவே ஆயிரக்கணக்கான கட்டுரைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது என எடுத்துக்கொள்ளலாம், கட்டுரைகளில் இவ்வார்ப்புரு இடவில்லை என்றாலும் அவை ஆதாரமற்றவை என்பதனை உணரவேண்டும். ஒரே நாளில் தீர்க்கவும் முடியாது எனப்தை அறிந்தே ஒவ்வொரு நாளும் சிறு சிறு பங்களிப்பை அளித்து வருகிறேன். 4,5 பேர் அளவுக்குத் தான் இதில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு உள்ளபோதிலும் நான் தனியாக யாரிடமும் இது குறித்து உதவி கேட்கவில்லை. அனைவரிடமும் இதுகுறித்து தெரிவித்துள்ளேன். விருப்பமுள்ளவர்கள் பங்களிக்கட்டும், மற்ற பணிகளை நான் செய்கிறேன், இதில் எந்தவித கவலையோ வருத்தமோ இல்லை. மணியன், பூங்கோதை, மயூரநாதன், சிவகுரு என்று பயனர் வாரியாக பாகுபாடு எதுவும் எனக்கு இல்லை. பயனர்கள் பங்களிக்கத் தயங்குவார்கள் என்ற பயமில்லை, ஆதாரம் இல்லாமல் எழத தயங்குவார்கள் அதுவே விக்கிப்பீடியாவின் கோட்பாடும் கூட. புறக்கணிக்கும் மனநிலை ஏற்கனவே உள்ளது, அதனை மாற்றவே இவ்வார்ப்புரு புதியதாக வரும் பயனர்களாவது ஆதாரத்துடன் எழுதத் தொடங்கட்டும். // புதிதாக 20 கட்டுரைகளைக் காட்சிப்படுத்தி மேற்கோள் சேர்க்க கோரலாம். // ஒரு வாரத்திற்கு 20 கட்டுரைகள் என்று இட்டால் கூட தற்போது அடையாளம் காணப்பட்டிருக்கும் 2068 கட்டுரைகளுக்கு சுமார், உங்கள் கணக்குப்படி பார்த்தால், 2068/20 = 104 வாரங்கள் அதாவது 2 ஆண்டுகள் ஆகும். நான் இரண்டு மாதங்களில் நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறேன்.
- // தற்போது வார்ப்புரு இருக்கிற கட்டுரைகளை மட்டும் எப்படி மேம்படுத்தலாம் என்று கவனம் செலுத்துவோமே // ஏற்கனவே செலுத்தப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளுக்கான ஆதாரம் திரட்டியுள்ளேன். 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகளில் அவற்றை இணைத்தும் உள்ளேன். //எடுத்துக்காட்டுக்கு, திரைப்படம் குறித்த கட்டுரைகளுக்கான மேற்கோள்களை இனங்காண்பது எப்படி என்ற வழிகாட்டல்கள், முக்கியமான மேற்கோள் கிடைக்கும் தளங்களைத் திரட்டித் தரலாம். இன்னும் வேறு முறைகளில் அணுகுவதற்கான ஆலோசனைகளை வரவேற்கலாம். // இது குறித்து தகவலறிய என் பேச்சுப் பக்கத்தில் நடந்த உரையாடலை பார்க்கவும். //ஒட்டு மொத்தமாக வார்ப்புரு இடுவது நல்ல பயனைத் தராது என்றே நம்புகிறேன்.// அடையாளம் காணப்பட வேண்டாம் என்கிறீர்களா? மேலே கூறிய பதில் தான் இதற்கும். கட்டுரைகளில் இவ்வார்ப்புரு இடவில்லை என்றாலும் அவை ஆதாரமற்றவையே. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:36, 30 மே 2014 (UTC)
- தினேஷ்குமார் பொன்னுசாமி, இந்த செயற்பாட்டில் தங்கள் தனிப்பட்ட உழைப்பு அனைவரும் அறிந்ததே. இன்னும் பலரும் பங்கு கொண்டு படிப்படியாக சீர் செய்வது குறித்த அணுகுமுறை தேவை என்பதே என் வேண்டுகோள். இது குறித்துச் சிந்தித்து ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 08:56, 3 சூன் 2014 (UTC)
- இரவி, அணுகுமுறையை உருவாக்க முயற்சி செய்து வருகிறேன், அதுகுறித்து விரைந்து ஒரு வழிகாட்டியை உருவாக்குகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 18:00, 8 சூன் 2014 (UTC)
- வார்ப்புருவை இடும்போது கட்டுரை தொடங்கியவருக்கு தனிச் செய்தி அனுப்பினால் அக்கட்டுரையை அவர் மேம்படுத்த வாய்ப்பிருக்கிறது. மேலும் நான் எழுதிய ஜிசாட்-8 கட்டுரை நீக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. அறிவியல் கட்டுரைகளையும் நீக்க வேண்டுமா என்ன? தொடக்க காலத்தில் எழுதிய சில கட்டுரைகள் சரியான விக்கி விதிகளுடன் பொருந்தாமல் இருக்கலாம். அவற்றை மேம்படுத்தக் கட்டுரையைத் தொடங்கியவருக்கு வாய்ப்பளிக்கலாம். மேலும் நான் எழுதிய எல்லாக் கட்டுரையும் எனது கவனிப்புப் பட்டியலில் இல்லை. எனவே வார்ப்புரு இட்ட தகவலும் தெரிவதில்லை. :( --ஆர்.பாலா (பேச்சு) 03:31, 6 சூன் 2014 (UTC)
- இங்கு பதில் அளித்துள்ளேன்.--இரவி (பேச்சு) 03:42, 6 சூன் 2014 (UTC)
- ஆர்.பாலா, //வார்ப்புருவை இடும்போது கட்டுரை தொடங்கியவருக்கு தனிச் செய்தி அனுப்பினால் அக்கட்டுரையை அவர் மேம்படுத்த வாய்ப்பிருக்கிறது// நல்ல யோசனை, ஆயினும் வார்ப்புரு இடும் போது அக்கட்டுரையை உருவாக்கியவர் என ஒருவருக்கு மட்டும் செய்தி அளிப்பது சரியாக இருக்காது என்பது என் தனிப்பட்ட கருத்து. //அறிவியல் கட்டுரைகளையும் நீக்க வேண்டுமா// நிச்சயமாக, அறிவியல் கட்டுரைகள் தமிழில் இருக்க வேண்டுமென்பது எந்த அளவிற்கு முக்கியமோ அதை விட முக்கியம் அவை உண்மையாகவும் ஆதாரத்துடனும் இருக்க வேண்டும் என்பது. //அவற்றை மேம்படுத்தக் கட்டுரையைத் தொடங்கியவருக்கு வாய்ப்பளிக்கலாம்// வாய்ப்புகளை நாம் தான் உருவாக்கி கொள்ள வேண்டும். கட்டுரையை உருவாக்கும் போதே தேவையான ஆதாரங்களை இணைத்துவிட்டால் பிற பயனர்களும் அக்கட்டுரையை விரிவாக்க எளிமையாகவும் உதவியாகவும் இருக்கும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 18:00, 8 சூன் 2014 (UTC)
விக்கிப்பீடியா நடப்பு நிகழ்வுகள்
தொகு- விக்கிப்பீடியா:நடப்பு நிகழ்வுகள் பக்கத்தில் வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் சூன் 2014 வார்ப்புருவில் செய்யப்படும் தொகுப்புகள் நடப்பு நிகழ்வுகள் பக்கத்தில் காண முடியவில்லை --✍ mohamed ijazz ☪ ® (பேச்சு) 20:35, 1 சூன் 2014 (UTC)
- விக்கிப்பீடியா:Statistics/June 2014 ஒவ்வொரு நாள் முடிவில்தான் அந்நாளைய மாற்றங்கள் இற்றை செய்யப்படுகிறது. இப்போது பார்க்கவும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:45, 2 சூன் 2014 (UTC)
- -✍ mohamed ijazz ☪ ® , இப்போது வார்ப்புரு சரியாங்க ஒத்தியங்குவதைக் காண முடிகிறது. இது போன்ற சிக்கல்களை அந்தந்த பக்கங்களின் உரையாடல் பக்கங்களிலேயே தெரிவிக்கலாமே? ஆலமரத்தடியில் ஒட்டு மொத்த திட்டம் குறித்த பொதுவான விசயங்களை மட்டும் உரையாடுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 08:53, 3 சூன் 2014 (UTC)
- ம்ம்ம் சரி இரவி நன்றி --✍ mohamed ijazz ☪ ® (பேச்சு) 08:58, 3 சூன் 2014 (UTC)
- இவ்வாறான சமயங்களில் நடப்பு நிகழ்வுகள் பக்கத்தில் மேற்பகுதியில் உள்ள "இப்பக்கத்தின் தேக்கத்தை நீக்கு" என்பதைச் சொடுக்குங்கள்.--Kanags \உரையாடுக 09:01, 3 சூன் 2014 (UTC) படிமம் சேர்க்கை----மணியன் (பேச்சு) 09:59, 3 சூன் 2014 (UTC)
விக்கிப்பீடியா பேருந்து
தொகு- இது போல தமிழ் விக்கிப்பீடியாவிற்கு செய்யலாமா??? --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:25, 5 சூன் 2014 (UTC)
- தமிழுக்கும் இது போல் செய்ய வேண்டும் என்று எனக்கும் ஆவல். தெலுங்கு விக்கிப்பீடியர்கள் இத்திட்டத்தை நிறைவேற்றிய பிறகு, அதன் நல்வழிமுறைகளைப் பின்பற்றி நாம் முயல்வது சிறப்பாக இருக்கும். இத்திட்டத்தைச் செய்ய நிறைய பணம் (அல்லது பேருந்து / ஓட்டுநரை இலவசமாகத் தரும் ஏதாவது ஒரு நிறுவனத்தின் ஆதரவு !), தன்னார்வல உழைப்பு தேவைப்படும். தனியாக இத்திட்டத்துக்கென ஒரு தற்காலிக பணியாளரையும் நியமிக்க வேண்டி வரலாம். யாராவது பொறுப்பு எடுத்துச் செய்ய முன்வந்தால் விக்கிமீடியாவிடம் நல்கை கோரலாம். --இரவி (பேச்சு) 03:44, 6 சூன் 2014 (UTC)
- தெலுங்கு விக்கிப்பீடியர்கள் இத்திட்டத்தினை நிறைவேற்றிய பிறகு நாம் செய்யலாம் என்பது மகிழ்ச்சியான செய்தி; ஓட்டுநர் அல்லது பேருந்தை தருபவர்களை தேட தொடங்கலாம். தன்னார்வ உழைப்பு என்னால் முடிந்த வரையிலும் நான் செய்கிறேன். பணியாளர்களியும் தேட வேண்டும். பொறுப்பெடுத்து செய்ய நான் தயாராக உள்ளேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:11, 6 சூன் 2014 (UTC)
வாழ்த்துக்கள் தினேஷ்குமார். பொறுப்பெடுக்க முன்வந்தமைக்கு நன்றிகள். நல்லதொரு திட்டம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:24, 6 சூன் 2014 (UTC)
விருப்பம் நல்லதொரு திட்டம் மட்டுமல்ல வித்தியாசமான திட்டமும் கூட. பேருந்து கடல் தாண்டி யாழ்ப்பாணம் வந்தால் நானும் இணைந்துகொள்கின்றேன் :)--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:47, 6 சூன் 2014 (UTC) விருப்பம்-- நி.மாதவன் ( பேச்சு ) 15:30, 8 சூன் 2014 (UTC)
நன்றி
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் செய்யப்படும் தொகுப்புகளுக்கு நன்றி தெரிவிக்கலாம் என்பதை அறிவீர்களா? ஒவ்வொரு பக்கத்தின் வரலாற்றுப் பக்கத்திலும் போய் பார்த்தால் ஒவ்வொரு தொகுப்புக்கும் ஒரு thank இணைப்பு இருக்கும். அதனைச் சொடுக்கினால் குறிப்பிட்ட பயனர் புகுபதியும் போது நன்றி அறிவிப்பை அவருக்குக் காட்டும். இது ஒரு வகையில் முகநூலின் விருப்பங்கள் போல் பங்களிப்பாளர்களை ஊக்கப்படுத்துவதாக இருக்கும். வெளிப்படையாக பதிவாகாது என்பதால் விருப்ப வார்ப்புரு இடுவது போல் தொகுப்புகளைக் கூட்டி அண்மைய மாற்றங்களை நிறைப்போமோ என்ற கவலை இன்றி தாராளமாக நிறைய நன்றி சொல்லலாம். பயனர்கள் நல்ல புதிய கட்டுரைகளை உருவாக்கும் போதும்., விரிவாக்கும் போதும், துப்புரவில் ஈடுபடும் போதும், சிறப்பான பங்களிப்புகளை நல்கும் போதும் என்று எனக்குப் பிடித்த பல்வேறு பங்களிப்புகளுக்கு நன்றி சொல்லி வருகிறேன். பதக்கம் அளிப்பது போல் நன்றி சொல்வதும் நன்று சொல்பவர், நன்றிக்குரியவர் இருவருக்கும் ஒரு மகிழ்ச்சியான மனநிலையைத் தரக்கூடும். நீங்களும் இந்த வசதியை முயன்று பாருங்கள். இது பங்களிப்பாளர்களுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்தி உற்கசாகமான பங்களிப்பு மனநிலையைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கிறேன். --இரவி (பேச்சு) 08:06, 8 சூன் 2014 (UTC)
- விருப்பம் இவ்வாறாகத் தெரிவிக்கப்பட்ட நன்றிகளை இங்கு காணலாம்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:09, 8 சூன் 2014 (UTC)
- நன்றி எப்படி தெரிவிக்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தது. இப்ப புரியுது, விக்கியில் உள்ள பல பயன்கள் மக்களுக்கு (குறிப்பா எனக்கு :) ) தெரிவதில்லை எனவே இதற்கு என்று தனி பக்கம் தொடங்கி அதில் தெரிந்த விக்கியில் உள்ள சில நுணுக்கங்களை தெரிவித்தால் என்ன? --குறும்பன் (பேச்சு) 16:25, 8 சூன் 2014 (UTC)
- ஸ்ரீகர்சன், சிறப்பு:Log/thanks இணைப்புக்கு நன்றி. அண்மைய நாட்களில் நன்றி கூறுவது கூடியுள்ளது போல் தெரிகிறது. மகிழ்ச்சி :) குறும்பன், விக்கிப்பீடியா:விக்கிப்பீடியா உங்களுக்குத் தெரியுமா பக்கத்தில் இது போன்ற செய்திகளை அனைவரும் பகிர்ந்து கொண்டால் பல வசதிகள், குறுக்கு வழிகளைத் தெரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன்.--இரவி (பேச்சு) 13:59, 14 சூன் 2014 (UTC)