விவேகானந்தா பிக்சர்ஸ்
விவேகானந்த பிக்சர்ஸ் (Vivekananda Pictures) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், சென்னையை மையமாகக் கொண்ட ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும். இந்த தயாரிப்பு நிறுவனம் 1977 ஆம் ஆண்டில் திருப்பூர் மணியால் நிறுவப்பட்டது. அவர் தனது பதாகையின் கீழ் சுமார் முப்பது திரைப்படங்களைத் தயாரித்தார். ஒரு இடைவெளிக்குப் பிறகு, திருப்பூர் விவேக்கினால் கைதி என்ற பெருவெற்றித் திரைப்படம் தயாரிக்கபட்டது, அவர் இப்போது நிறுவனத்தின் தலைமையிடத்தில் உள்ளார் [1][2]
நிறுவுகை | 1977 |
---|---|
தலைமையகம் | இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை |
முக்கிய நபர்கள் | திருப்பூர் மணி திருப்பூர் விவேக் |
உற்பத்திகள் | தயாரிப்பு நிறுவனம் திரைப்பட விநியோகஸ்தர் |
வரலாறு தொகு
தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படமான கண்ணன் ஒரு கைக்குழந்தை (1978) படத்தை வெங்கடேஷ் இயக்கினார், அதில் சிவகுமார், சுமித்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். அந்த படத்தைத் தொடர்ந்து, ரோசாப்பு ரவிக்கைகாரி, வண்டிச்சக்கரம், ஆணிவேர், ஆயிரம் முத்தங்கள் ஆகிய படங்களை முன்னணி வேடத்தில் சிவகுமார் நடிக்க தயாரிக்கபட்டது.[3] முதல் ஐந்து படங்களில் முன்னணி ஆண் வேடதில் சிவகுமார் நடித்தாலும், பெண் கதாபாத்திரங்களில் கண்ணன் ஒரு கைகுழந்தையில் சுமித்ராவும், ரோசாப்பூ ரவிக்கைக்காரியில் தீபாவும், ஆணிவேர், வண்டிச்சக்கரம் ஆகிய படங்களில் சரிதாவும், ஆயிரம் முத்தங்கள் படத்தில் ராதாவும் நடித்தனர்.[4][5] மறைந்த நடிகர் வினு சக்ரவர்த்தி கதை, திரைக்கதை எழுத்தாளராக வண்டிச்சக்காரத்தில் அறிமுகம் செய்யப்பட்டார், அதை இயக்கியவர் கே. விசயன் ஆவார். அது தமிழில் சில்க் ஸ்மிதாவின் அறிமுகப் படம் ஆகும். 1980 ஆம் ஆண்டிற்கான சிறந்த படத்திற்கான தமிழ்நாடு அரசு விருதில் வண்டிச்சக்கரம் மூன்றாம் பரிசை வென்றது. ரோசாப்பு ரவிக்கைகாரி படத்தில் வினு சக்ரவர்த்தி நடிகராக அறிமுகமானார், நகைச்சுவை நடிகர் லூசு மோகன் அதே படத்தின் மூலம் புகழ் பெற்றார். 1983 ஆம் ஆண்டில், சிவாஜி கணேசன், சரிதா, சரத் பாபு மற்றும் பலர் நடித்த இமைகள் படத்தை இந்நிறுவனம் தயாரித்தது. அப்படத்திற்கின இசையை கங்கை அமரன் அமைத்தார்.[6] இவர்களது அடுத்த படமான ஈட்டி படத்தில் விஜயகாந்த், விஷ்ணுவர்தன், நளினி, விஜி ஆகியோர் நடிக்க ராஜசேகர் இயக்கினார். அடுத்தபடமான விடிஞ்சா கல்யாணம் படத்தில் சத்யராஜ், ஜெயஸ்ரீ, சுஜாதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, மணிவண்ணன் இயக்கினார். 1988 ஆம் ஆண்டில், இவர்கள் மோகன்லால் மற்றும் கார்த்திகா நடித்த ஆகியோர் நடித்த மலையாள திரைப்படமான காந்திநகர் செகண்ட் ஸ்ரிட் படத்தை அண்ணாநகர் முதல் தெரு என்ற பெயரில் மறு ஆக்கம் செய்தனர். அந்தப் படத்தில் சத்தியராஜ் மற்றும் ராதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
திரைப்படவியல் தொகு
வெளி இணைப்புகள் தொகு
குறிப்புகள் தொகு
- ↑ "Tamil film producer Tirupur Mani passes away" (in en). Tamilstar. Archived from the original on 2017-06-06. https://web.archive.org/web/20170606183305/http://www.tamilstar.com/news-id-tamil-film-producer-tirupur-mani-passes-away-tirupur-mani-silk-smitha-10-09-1616687.htm.
- ↑ "IndiaGlitz – Vandichakkaram Vidinja Kalyanam producer Tiruppur Mani passed away in Chennai – Tamil Movie News". Archived from the original on 2016-09-13. https://web.archive.org/web/20160913061858/http://www.indiaglitz.com/vandichakkaram-vidinja-kalyanam-producer-tiruppur-mani-passed-away-in-chennai-tamil-news-166979.html.
- ↑ "Metro Plus Tiruchirapalli / Personality : Portrait of an actor". 2005-02-12. http://www.thehindu.com/thehindu/mp/2005/02/12/stories/2005021200940300.htm.
- ↑ "Aayiram Muthangal (1982) Cast and Crew". http://www.gomolo.com/aayiram-muthangal-movie-cast-crew/10542.
- ↑ "Ayiram Muthangal" (in en). http://spicyonion.com/movie/ayiram-muthangal/.
- ↑ "Nadigar Thilagam Sivaji Ganesan's filmography (pls refer page 24)". http://nadigarthilagam.com/Sivajimainc.htm.