தஞ்சோங் மாலிம் மக்களவைத் தொகுதி

தஞ்சோங் மாலிம் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tanjong Malim; ஆங்கிலம்: Tanjong Malim Federal Constituency; சீனம்: 丹绒马林国会议席) என்பது மலேசியா, பேராக், முவாலிம் மாவட்டம் (Muallim District); பத்தாங் பாடாங் மாவட்டம் (Batang Padang District) ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P077) ஆகும்.[7]

தஞ்சோங் மாலிம் (P077)
மலேசிய மக்களவைத் தொகுதி
பேராக்
Tanjong Malim (P077)
Federal Constituency in Perak
பேராக் மாநிலத்தில்
தஞ்சோங் மாலிம் மக்களவைத் தொகுதி

(P77 Teluk Intan)
மாவட்டம்முவாலிம் மாவட்டம்
பத்தாங் பாடாங் மாவட்டம்
பேராக்
வாக்காளர்களின் எண்ணிக்கை93,873 (2022)[1]
வாக்காளர் தொகுதிதஞ்சோங் மாலிம் தொகுதி[2]
முக்கிய நகரங்கள்தஞ்சோங் மாலிம், சிலிம் ரிவர், பேராங், சிலிம், சுங்கை, பீடோர், துரோலாக்
பரப்பளவு1,882 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1958
கட்சி பாக்காத்தான் அரப்பான்
மக்களவை உறுப்பினர்சாங் லி காங்
(Chang Lih Kang)
மக்கள் தொகை122,947 (2020)[4]
முதல் தேர்தல்மலாயா பொதுத் தேர்தல், 1959
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]




2022-இல் தஞ்சோங் மாலிம் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:[6]

  சீனர் (23.6%)
  இதர இனத்தவர் (8.4%)

தஞ்சோங் மாலிம் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1959-ஆம் ஆண்டில் இருந்து தஞ்சோங் மாலிம் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

தஞ்சோங் மாலிம்

தொகு

தஞ்சோங் மாலிம் நகரம், பேராக், முவாலிம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம்; மற்றும் மாவட்டத்தின் தலைப் பட்டணமும் ஆகும். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 70 கி.மீ. வடக்கே உள்ளது. இந்தத் தஞ்சோங் மாலிம் நகரம், பேராக் மாநிலத்தையும் சிலாங்கூர் மாநிலத்தையும் இணைக்கும் ஒரு பட்டணம் ஆகும்.

இந்த நகரத்திற்கு அருகில் புரோட்டோன் சிட்டி (Proton City), பேராங், பேராங் 2020, சுங்கை, சிலிம் ரிவர் எனும் அதன் துணை நகரங்கள் உள்ளன. வரலாற்றுப் புகழ் வாய்ந்த இந்த நகருக்கு நவீன மயமான தொடருந்து சேவைகள், கூடுதலானச் சிறப்புகளை வழங்கி மேலும் சிறப்புச் செய்து வருகின்றன.

சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம்

தொகு

அண்மைய காலங்களில் தஞ்சோங் மாலிம் மிகத் துரிதமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. புதிய தஞ்சோங் மாலிம் தொடருந்து நிலையம், நவீன பேருந்து நிலையம், சீரமைக்கப் பட்ட சாலைகள், புதிய பள்ளிக்கூடக் கட்டிடங்கள், புதிய தஞ்சோங் மாலிம் மருத்துவமனை ஆகியவை உருவாக்கப்பட்டு வளர்ச்சி அடைந்து உள்ளது.

1922-ஆம் ஆண்டில் மலேசியாவின் முதல் கல்வி பயிற்சி நிலையம் இங்குதான் கட்டப்பட்டது. அதன் பெயர் சுல்தான் இட்ரிசு பயிற்சிக் கல்லூரி. அந்தக் கல்லூரி 1997-ஆம் ஆண்டில் சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம் என தகுதி உயர்வு பெற்றது.

தஞ்சோங் மாலிம் மக்களவைத் தொகுதி

தொகு
தஞ்சோங் மாலிம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1958-ஆம் ஆண்டில் பத்தாங் பாடாங் தொகுதியில் இருந்து
தஞ்சோங் மாலிம் தொகுதி உருவாக்கப்பட்டது
மலாயா கூட்டரசின் மக்களவை
1-ஆவது மலாயா மக்களவை P058 1959–1963 லீ செக் பூன்
(Lee Seck Fun)
மலேசிய கூட்டணி
(மலேசிய சீனர் சங்கம்)
மலேசிய மக்களவை
1-ஆவது மக்களவை P058 1963–1964 லீ செக் பூன்
(Lee Seck Fun)
மலேசிய கூட்டணி
(மலேசிய சீனர் சங்கம்)
2-ஆவது மக்களவை 1964–1969
1969–1971 நாடாளுமன்ற இடைநிறுத்தம்[8][9]
3-ஆவது மக்களவை P058 1971–1973 லீ செக் பூன்
(Lee Seck Fun)
மலேசிய கூட்டணி
(மலேசிய சீனர் சங்கம்)
1973–1974 பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
4-ஆவது மக்களவை P063 1974–1978 மாக் ஓன் காம்
(Mak Hon Kam)
5-ஆவது மக்களவை 1978–1982
6-ஆவது மக்களவை 1982–1986
7-ஆவது மக்களவை P071 1986–1990 லோக் யுவென் இயூ
(Loke Yuen Yow)
8-ஆவது மக்களவை 1990–1995
9-ஆவது மக்களவை P074 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004
11-ஆவது மக்களவை P077 2004–2008
12-ஆவது மக்களவை 2008–2013 ஓங் கா சுவான்
(Ong Ka Chuan)
13-ஆவது மக்களவை 2013–2018
14-ஆவது மக்களவை 2018–2022 சான் லீ காங்
(Chang Lih Kang)
பாக்காத்தான் அரப்பான்
(மக்கள் நீதிக் கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

தஞ்சோங் மாலிம் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
93,873
வாக்களித்தவர்கள்
(Turnout)
70,928 74.22% - 7.00%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
69,671 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
143
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
1,144
பெரும்பான்மை
(Majority)
3,541 5.08% - 4.79
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[10]

தஞ்சோங் மாலிம் மக்களவை வேட்பாளர் விவரங்கள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி செல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
% ∆%
சாங் லி காங்
(Chang Lih Kang)
பாக்காத்தான் 69,671 25,140 36.08% - 9.36%
நோலி அசிலின் முகமது ரட்சி
(Nolee Ashilin Mohammed Radzi)
பெரிக்காத்தான் - 21,599 31.00% + 31.00%  
மா ஆங் சூன்
(Mah Hang Soon)
பாரிசான் - 20,963 30.09% - 5.48  %
சமாலுதீன் முகமது ரட்சி
(Jamaluddin Mohd Radzi)
சுயேச்சை - 1,032 1.48% + 1.48 %  
அமீர் அம்சா அப்துல் ரசாக்
(Amir Hamzah Abdul Rajak)
தாயக இயக்கம் - 609 0.87% + 0.87%  
இசத் சொகாரி
( Izzat Johari)
சுயேச்சை - 328 0.47% + 0.47 %  

மேற்கோள்கள்

தொகு
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 15 ஜூன் 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  7. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  8. Ahmad Fauzi Mustafa (2012-03-12). "Hanya Yang di-Pertuan Agong ada kuasa panggil Parlimen bersidang". Utusan Online. http://ww1.utusan.com.my/utusan/info.asp?y=2012&dt=0312&pub=Utusan_Malaysia&sec=Rencana&pg=re_05.htm. 
  9. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-14.
  10. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு