தமிழ்நாட்டில் தேர்தல்கள்

(தமிழகத் தேர்தல்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இக்கட்டுரை
தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல்
என்ற தொடரில் ஒரு பகுதி

தமிழ்நாட்டில் சட்டமன்றம், இந்திய நாடாளுமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றுக்கு தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

நேரடித் தேர்தல் தொகு

தமிழ் நாடு மாநிலத்தில் பொதுத் தேர்தலாகிய தமிழ் நாடு சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையிலும் உள்ளாட்சித் தேர்தல்கள் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையிலும் என இருத் தேர்தல்கள் நேரடித் தேர்தல்களாக நடைபெறுகின்றன.

மறைமுகத் தேர்தல் தொகு

இது தவிர மறைமுகத் தேர்தலாக மாநிலங்களவை உறுப்பினர்களின் தேர்தல் மற்றும் குடியரசுத தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்கள் தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையில் நடைபெறுகின்றன. உள்ளாட்சியிலும் மறைமுகத் தேர்தல்கள் மாநிலத் தேர்தல் ஆணையரால் நடத்தப் பெறுகின்றன.


தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையால் நடத்தப்படும் தேர்தல்கள் தொகு

நேரடித் தேர்தல்கள்[1]
எண் தேர்தல்கள் தொகுதிகள்
1 சட்டப் பேரவை 234
2 மக்களவை 39
மறைமுகத் தேர்தல்கள்[1]
எண் தேர்தல்கள் தொகுதிகள்/இருக்கை
1 மாநிலங்களவை 18
2 குடியரசுத் தலைவர் 1
3 குடியரசுத் துணைத் தலைவர் 1

மாநிலத் தேர்தல் ஆணையரின் மேற்பார்வையில் நடத்தப் பெறும் தேர்தல்கள் தொகு

உள்ளாட்சி நேரடித் தேர்தல்கள்[2]
எண் அலுவலகம் இருக்கைகள் / அலுவலகம்
1 மாநகராட்சி மேயர் 6 (தற்பொழுது 10)
2 மாநகராட்சி உறுப்பினர்கள்
(கவுன்சிலர்-நகாரட்சி உறுப்பினர்)
474
3 நகராட்சித் தலைவர்கள் 102
4 நகராட்சி உறுப்பினர்கள் 3,392
5 மூன்றாம் படி நகராட்சித் தலைவர்கள் 50
6 மூன்றாம் படி நகராட்சி உறுப்பினர்கள் 969
7 மாவட்ட ஊராட்சி வட்ட (வார்டு) உறுப்பினர்கள் 656
8 ஊராட்சி ஒன்றிய வட்ட உறுப்பினர்கள் 6,570
9 பேரூராட்சித் தலைவர்கள் 561
10 பேரூராட்சி வட்ட உறுப்பினர்கள் 6,825
11 கிராம ஊரட்சித் தலைவர்கள் (பிரசிடன்ட்) 12,618
12 கிராம ஊராட்சி வட்ட உறுப்பினர்கள் 97,458


உள்ளாட்சி மறைமுகத் தேர்தல்கள்[2]
எண் அலுவலகம்
1 நகராட்சி அமைப்புகள்
2 மாநகர மேயர் மற்றும் துணை மேயர்
3 நகராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர்
4 மூன்றாம் படி நகரமன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்
5 பேரூராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர்
6 சட்டப்படித் தேவைப்படக்கூடிய நிரந்தர உறுப்பினர்க்ள

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு