பயனர் பேச்சு:Booradleyp/தொகுப்பு01
வாருங்கள், Booradleyp/தொகுப்பு01! உங்களை வரவேற்கிறோம்.
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.
விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
- பங்களிப்பாளர் கவனத்திற்கு
- தொகுத்தல் உதவிப் பக்கம்
- விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி
- விக்கிப்பீடியா:பயனர் பக்கம்
__________________________________________________________________________________________________________________
தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________
- தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.
__________________________________________________________________________________________________________________
- புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.
பாராட்டு
தொகுவாருங்கள் Booradleyp! நீங்கள் அண்மையில் விறுவிறுவெனப் பல கட்டுரைகளின் உரைகளை நன்கு திருத்தி வருகிறீர்கள், பாராட்டுகள். உங்கள் பணி தொடர வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 16:11, 22 செப்டெம்பர் 2010 (UTC)
- இவர் கொஞ்ச நாளாக நான் எழுதும் கட்டுரைகளில் எழுத்துப்பிழை அதிகமாக இருப்பதாகவும் எனக்கு தமிழ் தெரியாதென்றும் கிண்டல் செய்து வந்தார். பேசுவது எளிது, செய்வது கடினம் என்று கூறி உரை திருத்தம் செய்ய த. விக்கிக்கு அழைத்து வந்திருக்கிறேன். கொஞ்ச நாள் ஐபி யாக பங்களித்து வந்தார். இப்போது பயனர் கணக்கைத் தொடங்கியிருக்கிறார். ஆலமரத்தடியில் நான் குறிப்பிட்டிருந்த மீடியாவிக்கி எழுத்துப்பிழையை கண்டுபிடித்து சொன்னதும் இவரே.--சோடாபாட்டில் 16:27, 22 செப்டெம்பர் 2010 (UTC)
- உங்கள் கட்டுரைகளில் மட்டுமல்ல சோடாபாட்டில் விக்கியில் எங்கு வேண்டுமானாலும் எழுத்துப்பிழை இருக்க வாய்ப்புண்டு. அனைத்துக் கட்டுரைகளுமே பலரது பார்வைக்குட்பட்ட பின்னரே மேம்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் இப்பிழைகளே புதுப்பயனர்களை இங்குக் கவர்ந்திழுக்கும். அவரது பணி தொடரட்டும். -- சுந்தர் \பேச்சு 04:42, 23 செப்டெம்பர் 2010 (UTC)
- இப்போது தான் விக்கி மென்பொருளையும் தமிழ் தட்டச்சையும் பழகிக் கொண்டிருக்கிறார் (வேகமாக தட்டச்சு செய்ய முடியவில்லை என்று என்னை பதில் சொல்ல சொல்லிவிட்டார்). ஓரளவு பழகிய பின் மற்ற கட்டுரைகளைப் பார்ப்பதாகவும் புதிய கட்டுரைகளை எழுதுவதாகவும் சொல்கிறார்.--சோடாபாட்டில் 04:53, 23 செப்டெம்பர் 2010 (UTC)
- இரண்டொரு நாட்களில் பழகிவிடுவார். வாழ்த்துகள் பூ. :) -- சுந்தர் \பேச்சு 06:23, 23 செப்டெம்பர் 2010 (UTC)
- வணக்கம் Booradleyp. தமிழ் தட்டச்சு மென்பொருள் அழகி இலவசமாக கிடைக்கின்றது. இதை உங்கள் கணினியில் தரவிரக்கம் செய்து கொண்டால் இணையம் இல்லாமலேயே தட்டச்சு செய்யலாம். சுலபமாகவும் உள்ளது.--அராபத்* عرفات 06:33, 23 செப்டெம்பர் 2010 (UTC)
- சிறப்பான முறையில் நீங்கள் பல கணிதக் கட்டுரைகளில் பங்களித்திருப்பதைக் கண்டு பாராட்டுகிறேன். குறிப்பாக, நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பு கட்டுரையின் விரிவை இன்று கண்டேன். நன்று. தொடர்ந்து பங்களித்துச் சிறப்பிக்க வாழ்த்துகள். --இரா. செல்வராசு 10:56, 26 ஆகத்து 2011 (UTC)
- வணக்கம். உங்கள் பாராட்டுதலுக்கும் ஊக்குவித்தலுக்கும் நன்றி, செல்வராசு.--Booradleyp 00:15, 27 ஆகத்து 2011 (UTC)
முதற் பக்கத்தில் காட்சிபடுத்தப்பட்ட கட்டுரைகள்
தொகுகணிதவியல் கட்டுரைகள்
தொகுகார்த்தி, உங்களது பாராட்டுகளுக்கு நன்றி.--Booradleyp 11:55, 25 ஏப்ரல் 2011 (UTC)
Booradleyp, கணிதவியல் கட்டுரைகளை எழுதுவது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ் விக்கிப்பீடியா பல்துறைக் களஞ்சியமாய் மிளிரத் துணைநிற்கும் தங்களுக்கு நன்றிகள்! இன்னும் பல நல்ல கணிதவியற் கட்டுரைகளை எழுத வாழ்த்துகள்! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 06:02, 25 ஏப்ரல் 2011 (UTC)
உங்களது கணிதவியல் கட்டுரைகள் அட்டகாசமாக இருக்கிறது. தமிழ்வழி பயிலும் மாணவர்களுக்கு நல்ல பாடத்துணையாக அமையும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துகள் !!--மணியன் 06:48, 22 ஆகத்து 2011 (UTC)
மணியன், பாராட்டுகளுக்கு நன்றி.--Booradleyp 00:12, 23 ஆகத்து 2011 (UTC)
Invite to WikiConference India 2011
தொகுHi Booradleyp,
The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011. But the activities start now with the 100 day long WikiOutreach. Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)
We look forward to see you at Mumbai on 18-20 November 2011 |
---|
கணித வலைப்பதிவு தமிழில்
தொகுநாட்டுடைமை சர்ச்சை
தொகுநாட்டுடைமை குறித்த விளக்கம் http://www.payanangal.in/2009/05/blog-post_31.html http://www.payanangal.in/2009/02/blog-post_18.html மறுமொழிகளிலும் விளக்கங்கள் உள்ளன புருனோ மஸ்கரனாஸ் 14:07, 2 அக்டோபர் 2011 (UTC)
உங்களின் பணி அபாரம்!
தொகுஎனக்கு சிறுவயது முதல் கணிதம் மிகவும் பிடிக்கும். இன்றும் எனது குழந்தைகளுக்கு கணிதம் சொல்லித்தர எனக்குப் பிடிக்கும். நான் பத்தாம் வகுப்பு வரை தமிழ் ஊடகம் வழிதான் கற்றேன். இப்போது பல்வேறு கணித கூறுகளை நளினமான அருமையான தூய தமிழில் காணும்போது உள்ளம் பூரிக்கிறது. உங்களுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள். --பயனர்:Selvasivagurunathan mஉரையாடுக
உங்கள் பாராட்டுக்கு நன்றி, செல்வசிவகுருநாதன்.--Booradleyp 13:42, 28 நவம்பர் 2011 (UTC)
வாய்மொழி விண்மீன் | ||
நூற்றுக்கணக்கான தமிழ்ச்சொல் ஒலிப்புக்கோப்புகளை பதிவேற்றிய அரும்பணிக்காக உங்களுக்கு இந்த வாய்மொழி விண்மீன் பதக்கத்தை அளித்து மகிழ்கிறேன். -- சுந்தர் \பேச்சு 07:47, 29 நவம்பர் 2011 (UTC) |
E=mc² பதக்கம் | ||
நல்ல தமிழில் அருமையான பல கணக்கியல் கட்டுரைகளை எழுதியமைக்காக இந்த E mc² விண்மீன் பதக்கத்தை அளித்து மகிழ்கிறேன். -- சுந்தர் \பேச்சு 07:47, 29 நவம்பர் 2011 (UTC) |
நீங்கள் எடுத்துக் கொள்ளும் தலைப்புகளும், அவற்றை விரிவாக எழுதுவதும் அருமை. இது போன்ற தரமான கட்டுரைகளே தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வளம் சேர்க்கும். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்--இரவி 14:48, 19 திசம்பர் 2011 (UTC)
உதவி
தொகுநீங்கள் கணிதம் டொடர்பாக எழுதி வருவது குறித்து மகிழ்ச்சி. பகுப்பு பேச்சு:வடிவவியல் இப்பகுதியில் உள்ள கட்டுரைகளையும் எழுதி உதவவும் நன்றி.
முதற்பக்க அறிமுகம் வேண்டல்
தொகுவணக்கம். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/Booradleyp பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவல், புகைப்படத்தைப் பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி --இரவி 11:57, 3 சனவரி 2012 (UTC)
பாராட்டுகள்
தொகுநீங்கள் மிக அமைதியாய், மிக அருமையான கணிதக் கட்டுரைகள் எழுதிவருகின்றீர்கள். பேரா.வி.கிருட்டிணமூர்த்தி அவர்கள் முன்னர் இப்படி நிறைய கணிதக் கட்டுரைகள் எழுதினார். அவற்றுள் பல தமிழில் முதல்முதலாக எழுதப்படுவன என்றும், அவை அந்த வகையிலே வரலாறு படைக்கும் எழுத்துகள் என்றும் கூறினேன். உங்கள் கட்டுரைகள் பலவும் இப்படி வரலாறு படைப்பது கண்டு மிக மகிழ்கின்றேன். என் பாராட்டுகளை, உடன் பங்களிப்பாளன் என்னும் முறையில், தெரிவித்துக்கொள்கின்றேன். அது மட்டும் அல்லாமல் நீங்கள் நல்ல தெளிவான தமிழிலும் எழுதுவது ஊக்கம் ஊட்டுவதாக உள்ளது. --செல்வா 15:23, 1 பெப்ரவரி 2012
உங்கள் ஊக்குவித்தலுக்கு நன்றி.--Booradleyp 16:06, 1 பெப்ரவரி 2012 (UTC)
கட்டுரை வேண்டல்
தொகுDecimal, Binary system கட்டுரைகளைத் தமிழில் உருவாக்கித் தர வேண்டுகிறேன். நன்றி--இரவி 12:59, 4 பெப்ரவரி 2012 (UTC)
- Decimal - பதின்மம் ஆயிற்று. ---- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:45, 9 மே 2012 (UTC)
உதவி தேவை
தொகுஆள்கூற்று முறைமை குறித்த கட்டுரை தொடங்கி ஓரளவு முடித்தும் விட்டேன், ஆயினும் திருப்திகரமாக இல்லை, தமிழ்ச் சொற்கள் உதவி தேவை. ஒருமுறை தாங்கள் அக்கட்டுரையை பார்க்கவும். ---- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:45, 9 மே 2012 (UTC)
- என்னால் முடிந்தவரை இக்கட்டுரையைத் தொகுக்கிறேன்.--Booradleyp (பேச்சு) 13:29, 10 மே 2012 (UTC)
- -- நன்றி! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:16, 10 மே 2012 (UTC)
ஒரு வேண்டுகோள்!
தொகுவணக்கம்! உங்களைப் பற்றி முதற்பக்கத்தில் அறிமுகம் தர விரும்பி, இவ்வாண்டின் ஜனவரி மாதத்தில் இரவி ஒரு வேண்டுகோளை உங்களின் பேச்சுப் பக்கத்தில் விடுத்திருந்தார். இப்போது நானும் வேண்டுகிறேன். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/Booradleyp பக்கத்தில் சேர்க்கலாமே? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். மற்ற பயனர்களையும், புதுப் பயனர்களையும் இத்தகவல்கள் ஊக்கப்படுத்த உதவும் என நாம் நம்புகிறோம். மேலும் தமிழ் விக்கிக்கு தகவல் தேடலுக்காக வருகை தருவோரையும் ஈர்க்க உதவும். எங்களின் ஆசையை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவல், புகைப்படத்தைப் பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை மட்டுமாவது உங்களின் அறிமுக உரையில் அறியத் தாருங்கள். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:13, 13 மே 2012 (UTC) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:14, 26 சூலை 2012 (UTC)
வணக்கம். செல்வசிவகுருநாதன், உங்கள் வேண்டுகோளுக்கு எனது நன்றி. எனினும் மறுப்பதற்கு மன்னிக்கவும்.--Booradleyp (பேச்சு) 13:37, 13 மே 2012 (UTC)
வேண்டுகோள்!
தொகுஉங்கள் கருத்துக்கு நன்றி. தயவு செய்து உங்களால் முடிந்தால் ஜெர்ரி யாங் என்ற கட்டுரையுடன் ஒன்றிணைத்து விடுங்கள்.--dj fa (பேச்சு) 08:21, 23 மே 2012 (UTC)
பதக்கம்
தொகுசிறந்த உரைதிருத்துனர் பதக்கம் | ||
பல தமிழ் குறுங்கட்டுரைகளை சிறப்பாக திருத்தி விரிவாக்கம் செய்த உங்களுக்கு இந்த "சிறந்த உரைதிருத்துனர் பதக்கம்" அளித்து மகிழ்கிறேன். :) கிருஷ்ணா (பேச்சு) 16:56, 5 சூன் 2012 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
+1 --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 18:10, 5 சூன் 2012 (UTC)
- உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி, கிருஷ்ணா.--Booradleyp (பேச்சு) 17:07, 5 சூன் 2012 (UTC)
- இந்தப் பாராட்டுதலில் நானும் பங்கேற்கிறேன். நான் துவக்கிய பல கட்டுரைகளில் எழும் எழுத்து/கருத்துப் பிழைகளை திருத்தி உதவும் உங்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகும்.--மணியன் (பேச்சு) 12:51, 24 சூன் 2012 (UTC)
- வணக்கம், கார்த்தி, மணியன் உங்கள் இருவரின் பாராட்டுக்கும் நன்றி. மணியன், உங்கள் இருவரது கட்டுரைகளில் எழுத்துப் பிழை என்பது அபூர்வம். ஏதோ ஒன்றிரண்டு தெரியாமல் நிகழ்பவை மட்டுமே. கருத்துப் பிழை திருத்தும் அளவிற்கு எனக்கு எல்லாத் துறைகளிலும் அதிக ஆழமில்லை. எனினும் உரை திருத்தும் பணியினால் எனக்கும் மிக்க பயன்பாடு உள்ளது. உங்களது போன்ற கட்டுரைகளை வாசிக்க வாசிக்க எனக்கும் பலவிதமான தலைப்புகளில் உள்ள விஷயங்கள் அறிந்து கொள்வது சுவாரசியமாக உள்ளது. நன்றி.--Booradleyp (பேச்சு) 14:03, 24 சூன் 2012 (UTC)
மரக்காலாட்டம் என்பதில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிழைநீக்கியமைக்கு நன்றி. கணக்கு என்றாலே, காதா தூரம் ஓடுபவன் நான். கணக்கியலில் உங்கள் கட்டுரைகள் அற்புதம். உங்கள் கட்டுரைகளால் கணக்கு பற்றிய எனது எண்ணங்கள் மேம்படுகின்றன. வணக்கம்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
- பாராட்டுக்கு நன்றி, தகவலுழவன்.--Booradleyp (பேச்சு) 15:12, 19 சூன் 2012 (UTC)
கொத்தணி பாடசாலை
தொகுகொத்தணி பாடசாலை (கள்) என்று கூகிளில் தேடிய போது சிறு சிறு பாடசாலைகள் ஒருங்கிணைக்கப்பட்ட ஒர் நிர்வாக அமைப்பு என்று கூறுகிறது. எ.கா --Natkeeran (பேச்சு) 03:33, 24 சூன் 2012 (UTC)
உங்கள் உதவிக்கு நன்றி. அது ஒரு இலங்கை வழக்குச் சொல்லாக இருக்குமென நினைத்ததால் உங்களிடம் கேட்டேன்.நன்றி நட்கீரன்.--Booradleyp (பேச்சு) 03:37, 24 சூன் 2012 (UTC)
வளைவரை
தொகுநீங்கள் வளைவரைப் பகுப்பு ஆக்கிய முறை சரியே. பகுப்பு:வளைவரை அதற்கு நான் தாய்ப் பகுப்பையும், ஆங்கில விக்கி இடை இணைப்பையும் குடுத்துள்ளேன். எவ்வாறு என்பதை வரலாற்றுப் பக்கத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். --Natkeeran (பேச்சு) 16:38, 8 சூலை 2012 (UTC)
- கணிதம் தொடர்பாக நீங்கள் ஏற்படுத்தும் பகுப்புகள் மிகப் பொருத்தமாக அமையும். தயந்து ஏற்றபடி மாற்றி அமைக்கவும். நன்றிகள். --Natkeeran (பேச்சு) 13:28, 11 சூலை 2012 (UTC)
விக்கிமேனியா 2012
தொகுநீங்கள் ஐக்கிய அமெரிக்காவில் நடந்த விக்கிமேனியா, 2012 நிகழ்வில் கலந்து கொண்டதாக அறிந்து மகிழ்ந்தேன். பாராட்டுகள் ! அது குறித்த அறிக்கையை/சிறு குறிப்பை வெளியிடுவீர்கள் என ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். --மணியன் (பேச்சு) 02:41, 26 சூலை 2012 (UTC)
Hello and more
தொகுHello Ma'am! Hope you're doing well. It was wonderful meeting you at Wikimania DC. I'm glad that you could make it and I got the opportunity to meet you. From our talks at Wikimania I understand that you want to help build Wikipedia community in India and especially the Tamil Wikipedia community. I was wondering if I can support you in any way. Would you have some ideas or plans? I was thinking of the possibility of starting a Tamil Eduation Program. Want to take your opinon and thoughts on same. Nitika.t (பேச்சு) 12:13, 6 ஆகத்து 2012 (UTC)
உதவி
தொகுவணக்கம், வட்ட நாற்கரம், பிரம்மகுப்தர் நாற்கரம் இவ்விரு கட்டுரைகளும் ஒன்றா? அவ்வாறெனில் ஒன்றிணைக்கலாமா?.. ஒன்றிணைக்கலாம் எனில் உள்ளடக்கத்தை ஒன்று சேர்த்து தர வேண்டுகிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 15:46, 23 ஆகத்து 2012 (UTC)
- மீண்டுமொரு உதவி, இந்திய கணிதவியலாளர்களின் பட்டியல் கட்டுரையில் உள்ளடக்கத்தையும் ஒன்றிணைத்து தர வேண்டுகிறேன். நான் ஒன்றிணைக்க முயன்றேன், இரண்டிலும் உள்ளடக்கம் சற்று மாறுபட்டுள்ளது, இயலவில்லை :)--சண்முகம்ப7 (பேச்சு) 17:23, 25 ஆகத்து 2012 (UTC)
தொகுத்தல்
தொகுதொகுத்தல் வேகம் இப்பொழுது சரி போல் தெரிகிறது. உறுதிப்படுத்த முடியுமா? --Natkeeran (பேச்சு) 14:36, 4 செப்டெம்பர் 2012 (UTC)
நிகழ்படங்கள்
தொகு
இந்த நிகழ்படங்கள், உங்களுக்கு பயனாகலாம்.--த♥ உழவன் +உரை.. 18:26, 5 செப்டெம்பர் 2012 (UTC)
- இவற்றைப் பார்க்க முடியவில்லையே.--Booradleyp (பேச்சு) 02:48, 6 செப்டெம்பர் 2012 (UTC)
- அடடா! தொடுப்பினைக் கொடுக்கும் போது, |(pipeline) கொடுத்துவிட்டேன். இப்ப போகிறது. மேலும், விக்கிப்பொதுவகத்தின் குறிப்பிட்ட பகுப்பில், ஊடகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவ்வப்போது கவனிக்கவும். அடுத்தமுறை கவனமாக செயல்படுகிறேன்.வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 03:43, 6 செப்டெம்பர் 2012 (UTC)
- உங்கள் உதவிக்கு நன்றி.--Booradleyp (பேச்சு) 05:54, 6 செப்டெம்பர் 2012 (UTC)
உழுந்து-உளுந்து
தொகுபார்க்க: பேச்சு:உழுத்தம் சுவாலை --மதனாகரன் (பேச்சு) 13:05, 11 செப்டெம்பர் 2012 (UTC)
பொன்னியின் செல்வன் வார்ப்புரு
தொகுபொன்னியின் செல்வன் வார்ப்புருவில் சோழர் வம்சம், படகோட்டி குடும்பம் என்று சிறு சிறு பிரிவுகளாக்கியுள்ளேன். அவைகளை சரிபார்த்து தரவேண்டுகிறேன். தவறுகள் இருப்பின் திருத்தங்கள் செய்து தரவேண்டுகிறேன். இம்முறை சரியல்ல என்று நினைத்தால் அந்த திருத்தங்களை அகற்றிவிடுங்கள். நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:00, 2 அக்டோபர் 2012 (UTC)
- வணக்கம் தோழமையே, பொன்னியில் செல்வன் கதாப்பாத்திரங்கள் பெரும்பாலும் வரலாற்றில் வாழ்ந்த நபர்களாக இருப்பதால் கதையின் நிகழ்வுகளையும், வரலாற்றில் நிகழ்ந்தவைகளையும் தனித்து காட்ட திட்டமிட்டே,. (கதைமாந்தர்கள்) என்ற அடைப்புக்குறிக்குளான பக்கங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. உ.தா செம்பியன் மாதேவி கட்டுரை வரலாற்றில் வாழ்ந்த செம்பியன் மாதேவியைப் பற்றி தொகுக்க வேண்டிய பக்கமாகும், பொன்னியின் செல்வனில் செம்பியன் மாதேவி கதையை செம்பியன் மாதேவி (கதைமாந்தர்) எனும் பக்கத்தில் தொகுக்கலாம். இரண்டுக்குமிடையே குழப்பங்கள் வேண்டாமென விக்கிப்பீடியாவின் மூத்த பதிவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன் கதாப்பாத்திரங்களை தொகுக்கும் தங்களுக்கும் இச்செய்தியை தெரிவிப்பதில் கடமைப்பட்டுள்ளேன். வரலாற்றில் போதிய அறிவு இன்மையால் வரலாற்று நபர்கள் பற்றிய கட்டுரைகளை நான் தொகுக்கவில்லை. தங்களுக்கு ஈடுபாடு இருந்தால் அத்தகைய பக்கங்களையும் சற்று கவனிக்க வேண்டுகிறேன். நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:16, 3 அக்டோபர் 2012 (UTC)
- வணக்கம். கதாபாத்திரங்களை வரலாற்று நபர், கதைமாந்தர் என இருவிதமாக அடையாளம் காட்டும் முறை வரவேற்கத்தக்கது. வரலாற்றுக் கட்டுரைகளை கவனிக்கும் அளவுக்கு எனக்கும் அதில் போதிய அளவு ஆழம் கிடையாது.--Booradleyp (பேச்சு) 16:38, 3 அக்டோபர் 2012 (UTC)
மாட்டுத்தாவணி
தொகுமாட்டுத்தாவணி கட்டுரையை விரைந்து வளர்த்தமைக்கு நன்றி. :) -- சுந்தர் \பேச்சு 08:59, 7 அக்டோபர் 2012 (UTC)
- பாராட்டுக்கு நன்றி சுந்தர். மதுரையில் வளர்ந்த பாசமும் ஒரு காரணம்.--Booradleyp (பேச்சு) 13:07, 7 அக்டோபர் 2012 (UTC)
- அண்மைய மாற்றங்களில் நீங்கள் பங்களிப்பதைப் பார்த்துவிட்டு தான் நான் நுழைந்தேன். மலர்ச் சந்தை, காய்கறிச் சந்தை இரண்டையும் இணைக்கலாம் என்று நினைத்திருந்தேன். தேனி சுப்பிரமணியன் அழகாக இணைத்துள்ளார். உங்கள் இருவருக்கும் நன்றி. புகைப்படங்கள் இணைக்க முடியுமா என்று முயற்சிக்கலாம்.--Booradleyp (பேச்சு) 13:13, 7 அக்டோபர் 2012 (UTC)
- நன்றி பூராடுலி. நானும் மதுரையில் வளர்ந்தவன் என்ற பற்றினால்தான் ஆர்வம் கொண்டேன். :) -- சுந்தர் \பேச்சு 13:16, 7 அக்டோபர் 2012 (UTC)
மன்னிக்கவும்
தொகுநான் சில நாட்களாக விக்கியில் சரிவர ஊன்றி இயங்கவில்லை. நீங்கள் நீளுருண்டை பற்றிய கருத்தொன்று இட்டிருந்ததற்கு இன்னும் நான் கருத்திடவில்லை. நாளை இடுகின்றேன். இங்கு இரவு 12:37 இப்பொழுது. பொருத்தருள்க! --செல்வா (பேச்சு) 04:38, 10 அக்டோபர் 2012 (UTC)
- பேச்சு:கோளவுரு பக்கத்தில் என் கருத்தைப் பகிர்ந்திருக்கின்றேன். பார்க்கவும். நன்றி.--செல்வா (பேச்சு) 18:13, 11 அக்டோபர் 2012 (UTC)
வழி மாற்று > நன்றிகள்
தொகுநீளுருண்டை என்ற பக்கத்தை கோளவுரு என்ற பக்கத்துக்கு வழிமாற்ற வேண்டுமென்றால், நீளுருண்டை கட்டுரையினைத் தொகுத்து பின்வரும் கட்டளையினை அமைத்தால் போதுமானது.
- #REDIRECT[[கோளவுரு]]
ஏற்கெனவே நீளுருண்டை கட்டுரையினுள் இவ்வாறு இருந்தது,
- #REDIRECT[[நீள்வட்டத்திண்மம்]]
அதேபோன்று நீள்வட்டத்திண்மம் என்ற பெயர்தான் சரியானது வழிமாற்று தேவையற்றது என்றால், நீளுருண்டை கட்டுரையினைத் தொகுத்து {{delete}} கட்டளையினை அமைத்துவிடலாம். விக்கிப்பீடியா:வழிமாற்று - இங்கும் சில தகவல்களைப் பெறலாம்.
- நன்றிகள்!
நான்தான் உங்களுக்கு நன்றி கூறவேண்டுமென்றிருந்தேன். எழுத்துப் பிழைகள், உள்ளிணைப்பு, திருத்தம் என நீங்கள் நுணுக்கமாக மேற்கொள்ளும் உரைதிருத்தங்கள் மிகவும் பயனுள்ளவை. மிக்க நன்றி! --Anton (பேச்சு) 13:11, 24 அக்டோபர் 2012 (UTC)
வழிமாற்றுகள், மேலும்..
தொகுகட்டுரைத் தலைப்பு ஒன்றை, வழிமாற்றுகள் உட்பட, நீக்குவதற்கு நிருவாக அணுக்கம் தேவை. அந்த அணுக்கம் இல்லாதவர்கள் தலைப்பு ஒன்றை நீக்குவதற்கு {{delete}} என்றவாறு எழுதிச் சேமியுங்கள். வழிமாற்றம், அல்லது தலைப்பை வேறொரு தலைப்புக்கு மாற்றுவது போன்றவற்றை எவரும் செய்யலாம். வெள்ளிமணி இணைப்பைத் தந்திருக்கிறேன். சரி பாருங்கள்.--Kanags \உரையாடுக 06:14, 26 அக்டோபர் 2012 (UTC)
வணக்கம் - உதவி தேவை
தொகுஇந்த உரையை தமிழில் மொழிபெயர்ப்பில் உதவி தேவை. உதவவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:13, 28 அக்டோபர் 2012 (UTC)
- நான் கொஞ்சம் செய்திருக்கிறேன்--சோடாபாட்டில்உரையாடுக 13:26, 28 அக்டோபர் 2012 (UTC)
\\நான் தற்போது வகுப்பறையில் இல்லை. ஆயினும் வருங்கால மாணவ சந்ததியினர் நான் விரும்பும் மொழியின் வாயிலாக கற்க உதவி வருகிறேன்.\\-இது இருமுறை வருகிறது. அதை மட்டும் மாற்றிவிடுங்கள். மற்றபடி சரியாக உள்ளது. --Booradleyp (பேச்சு) 16:15, 29 அக்டோபர் 2012 (UTC)
- எங்கிருந்து வந்தது சதுரம் (புதிர்) கட்டுரையைக் கவனிப்பீர்களா?--Kanags \உரையாடுக 11:36, 8 நவம்பர் 2012 (UTC)
- ஆயிற்று--Booradleyp (பேச்சு) 13:52, 10 நவம்பர் 2012 (UTC)
- நன்றி Booradleyp.--Kanags \உரையாடுக 21:44, 10 நவம்பர் 2012 (UTC)
இந்த உரையை தமிழில் மொழிபெயர்க்க உதவி தேவை. உதவவும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:26, 5 திசம்பர் 2012 (UTC)
எனது டெஸ்ட் பக்கத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன். நீங்களும் ஒருமுறை பார்த்து விட்டு தேவைக்கு ஏற்றமாதிரி பிரித்துக் கொள்ளுங்கள்.--Booradleyp (பேச்சு) 16:25, 5 திசம்பர் 2012 (UTC)
தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு
தொகுஆய்வுக்கட்டுரை சமர்ப்பது பற்றி பரிசீலிக்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:52, 26 நவம்பர் 2012 (UTC)
உதவி
தொகு- வணக்கம் பூ. ராம் மனோகர் லோகியா கட்டுரையில் உள்ள ஆங்கிலப் பகுதியைத் தமிழ்ப்படுத்தித் தரமுடியுமா?-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:11, 1 திசம்பர் 2012 (UTC)
லோகியோவின் படைப்புகள், லோகியாவைப் பற்றிய சில நூல்கள் இரண்டு தலைப்புகள் தான் ஆங்கிலத்தில் உள்ளன. புத்தகப் பெயர்களை எவ்வாறு தமிழுக்கு மாற்றுவது என்று தெரியவில்லை. --Booradleyp (பேச்சு) 18:23, 1 திசம்பர் 2012 (UTC)
முடிந்தவரை தமிழ்ப்படுத்தியுள்ளேன். சரிபார்த்துக் கொள்ளுங்கள்.--Booradleyp (பேச்சு) 19:01, 1 திசம்பர் 2012 (UTC)
தங்கள் உதவிக்கு மிக்க நன்றி பூ. என்னாலியன்றவரை நானும் செய்துள்ளேன். பார்க்கவும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:22, 2 திசம்பர் 2012 (UTC)
பதக்கம்
தொகுசிறந்த உரைதிருத்துனர் பதக்கம் | ||
நாங்கள் உருவாக்கும் கட்டுரைகளை உடனுக்குடன் உரைதிருத்தி மேம்படுத்துவது கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை வழங்குகிறேன். தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:48, 2 திசம்பர் 2012 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
நன்றி, தமிழ்க்குரிசில்.--Booradleyp (பேச்சு) 14:51, 2 திசம்பர் 2012 (UTC)
மனதில் இடம் பிடித்தவர்
தொகுஅன்புடன் Booradleyp, உங்கள் நேர்காணலில் "I love my students." எனும் சொற்றொடரே நீங்கள் உங்கள் பணியை எவ்வாறு செய்துள்ளீர்கள் என்பதன் ஊடாக மனதில் இடம் பிடித்துவிட்டீர்கள். மாணவர்களை நேசிக்கும் ஒரு ஆசிரியரால் மட்டுமே ஒரு சமுதாயத்தின் அடுத்த தலைமுறையினருக்கான சிறந்த வழிக்காட்டியாக இருக்க முடியும். மாணவச் சமுதாயத்தின் மனதில் இடம் பிடிப்பதற்கு இணையான பேரு உலகில் வேறேதும் இருக்க முடியாது. நேர்காணலில் உங்கள் பேச்சு விக்கிப்பீடியா தொடர்பானது என்றாலும், எனக்கு அதனை தாண்டிய விடயங்களே மனதில் பதிந்தது செல்கிறது. மாணவர்கள் மீது கொண்டுள்ள பற்று, கணிதத் துறையில் கொண்டுள்ள ஈடுபாடு, வார்த்தைகளிடையே தென்படும் தெளிவு, தன்னிறைவு என பல ஆளுமைகளையும் உங்கள் பேச்சு வெளிப்படுத்துகிறது. அவைகளே உங்கள் மீதான மதிப்பை உண்டுபண்ணுகிறது. உங்கள் பணி ஓய்வு உங்கள் மாணவர்களுக்குக்கான இழப்பாக இருக்கும் என கருதுகிறேன். உங்களை போன்றோர் விக்கிக்கு கிடைத்தது தமிழ் விக்கியின் பாக்கியம். தொடர்ந்தும் தமிழ் விக்கியின் வழிகாட்டியாக உங்கள் பயணம் தொடர வேண்டும். உங்களுடன் பயணிப்பதில் எமக்கும் மகிழ்ச்சியே! நன்றி. --HK Arun (பேச்சு) 20:12, 4 திசம்பர் 2012 (UTC) விருப்பம்--இரவி (பேச்சு) 06:42, 7 திசம்பர் 2012 (UTC)
உங்கள் மகிழ்விற்கும் பாராட்டுக்கும் நன்றி அருண்.--Booradleyp (பேச்சு) 02:47, 5 திசம்பர் 2012 (UTC)
- விருப்பம் பாக்கியமே! உங்கள் வழிகாட்டுதல் எங்களுக்குத் தேவை! உடல்நலத்தில் கவனம் செலுத்தி, மேலும் பல சிறந்த பங்களிப்புகளை வழங்குங்கள். நன்றி-தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:40, 7 திசம்பர் 2012 (UTC)
தமிழ்க்குரிசில், ரவி, இருவருக்கும் நன்றி.--Booradleyp (பேச்சு) 13:30, 7 திசம்பர் 2012 (UTC)
இந்திய கணித மேதைகள்
தொகுதங்களது நிகழ்பட உரையாடலை பலமுறை கண்டு, மிக்க மகிழ்ச்சியடைந்தேன். ஒருவாறு உங்களை காணும் ஆவல் நிறைவேறியது. விக்சனரிக்காக நீங்கள் செய்தவைகளைப் பற்றி ஏதும் வரவில்லையே என்று ஏங்கி வருத்தம் அடைந்தேன். தங்களது ஆற்றலை வேண்டி பின்வரும் கணினியியல் சார்ந்த அறிஞர் பற்றிய கட்டுரைகளை உருவாக்க வேண்டுகிறேன். en:List of Indian mathematicians, en:Pingala(இரும எண்களை குறித்தவர்), en:Hero of Alexandria(தானியங்கிக்கு வித்திட்டவர்) வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 09:58, 8 திசம்பர் 2012 (UTC)
நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?
தொகுவணக்கம், பூராடுலி. நீங்கள் நிருவாகப் பொறுப்பு எடுத்துப் பங்களித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். தங்களுக்கு விருப்பம் எனில், விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் பரிந்துரைக்கிறேன். நன்றி--இரவி (பேச்சு) 12:52, 4 சனவரி 2013 (UTC)
- மறுப்புக்கு மன்னிக்கவும் ரவி--Booradleyp (பேச்சு) 15:50, 4 சனவரி 2013 (UTC).
பரவாயில்லீங்க. பல பயனர்களின் கட்டுரைகளை மேம்படுத்தும் தங்களுக்கு நிருவாக அணுக்கம் உதவியாக இருக்கும் என்று எண்ணினேன். நன்றி.--இரவி (பேச்சு) 04:24, 7 சனவரி 2013 (UTC)
தமிழாக்கம்
தொகுவணக்கம். isotomic conjugate-என்பதன் சரியான தமிழ்ச் சொல்லைப் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp (பேச்சு) 15:33, 10 நவம்பர் 2012 (UTC)
- trilinear coordinates என்பதை முக்கோட்டு ஆள்கூறு எனலாம் (ஒரு புள்ளியில் இருந்து ஒரு முக்கோணத்தின் பக்கங்களுக்கான தொலைவுக்கு ஏற்றபடி (விகிதப்படி) உள்ள, சீர்வரிசையாக அமைந்த மூன்று எண்கள் என்பார்கள்). ஒரு முக்கோணத்தின் முனை ஒன்றில் இருந்து அம்முக்கோணத்துக்குள் உள்ள ஒரு புள்ளி வழியாகச் சென்று எதிர்ப்பக்கத்தில் முட்டும் கோட்டை செவாக்கோடு (cevian) என்று கொள்ளலாம். இப்படி P என்னும் புள்ளி வழியே செல்லும் செவாக்கோடுகள் ஏதிர்ப்பக்கத்தில் முட்டும் அல்லவா? அப்படி முட்டும் புள்ளிகள் எவ்வாறு எதிர்ப்பக்கங்களை பகுக்கின்றனவோ அதே விகிதத்தில் அப்பக்கத்தின் மற்ற முனையில் இருந்து புள்ளிகளை கணக்கிட்டு, அம்முக்கோண முனைகளில் இருந்து இப்புள்ளிகளில் முடியும்படி விழுகோடுகள் அல்லது செவாக்கோடுகளை வரைந்தால் அவை கூடும் இடத்தைக் Q என்றும் குறித்தால், இந்தக் Q என்பது P என்னும் புள்ளிவழி பாயும் செவாக்கோடுகள் (விழுகோடுகள்) பகுக்கும் அதே விகிதத்தில் பகுக்கும். எனவே ஒரேவிகிதத்தில் பகுக்கும் பிணைப் புள்ளி என்பதால் isotomic conjugate என்பதை ஒரேவிகிதப் பகுப்புப் பிணை என்று கூறலாம் அல்லது ஒரேபகுபிணை என்று கூறலாம் என்று நினைக்கின்றேன். விடை பகர நேர்ந்த காலத்தாழ்ச்சிக்கு வருந்துகிறேன். இதில் விழுகோடுகள் முட்டும் புள்ளிகள் முக்கோணத்தின் நடுப்புள்ளியில் இருந்து ஒரே தொலைவு இருக்கும். படத்துடன் விளக்கினால் எளிதாகப் புரியும். --செல்வா (பேச்சு) 12:01, 17 நவம்பர் 2012 (UTC) (நீங்கள் முன்னர் கேட்டிருந்த கேள்விக்கு என் பேச்சுப்பக்கத்தில் மறுமொழி இட்டிருந்தேன் (காலத்தாழ்வுடன்; ஏனெனில் அப்பொழுது பயணத்தில் இருந்தேன்) இது பயன்படுமா எனத் தெரியாது.--செல்வா (பேச்சு) 17:50, 8 சனவரி 2013 (UTC)
தள அறிவிப்புகளில் உங்கள் விக்கிமேனியா நிகழ்படம்
தொகுதற்போது, தள அறிவிப்புகளில் பங்களிப்பாளர் அறிமுகங்களை இடுவதன் மூலம் புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க முயன்று வருகிறோம். சென்ற முறை இவ்வாறு செய்த போது நல்ல பயன் கிடைத்தது. இந்த அறிமுகங்களில் பலருக்கும் முனைப்பு தர வல்ல உங்களின் விக்கிமேனியா நேர்காணல் நிகழ்படத்தையும் காட்சிப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஏற்கனவே என்னுடைய பல வேண்டுகோள்களை மறுத்து விட்டீர்கள் :) இதற்காவது ஒப்புதல் தருவீர்கள் என்று வேண்டுகிறேன் :)--இரவி (பேச்சு) 06:58, 27 சனவரி 2013 (UTC)
செய்யலாம் ரவி. (முழுவதும் நனைந்த பின் முக்காடெதற்கு!!!)--Booradleyp (பேச்சு) 07:08, 27 சனவரி 2013 (UTC)
- :-) விருப்பம் --Anton (பேச்சு) 07:12, 27 சனவரி 2013 (UTC)
- மிக்க மகிழ்ச்சி. பங்களிப்பாளர் அறிமுகத்திலும் ஆவணப்படுத்திவிடலாமா? உங்களின் பங்களிப்புகள் பலருக்கும் முன்மாதிரியாக உந்துதல் அளிக்க வல்லவலை என்பதால் தான் விடாமல் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறேன் :)--இரவி (பேச்சு) 07:21, 27 சனவரி 2013 (UTC)
தாராளமாக. --Booradleyp (பேச்சு) 07:26, 27 சனவரி 2013 (UTC)
நன்றிங்க ! விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பூங்கோதை பார்த்து தேவைப்படும் திருத்தங்களைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--இரவி (பேச்சு) 08:36, 27 சனவரி 2013 (UTC)
விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:55, 27 சனவரி 2013 (UTC)
ஒரு வழியாக...!
தொகுவணக்கம்!
ம்... ஒரு வழியாக, உங்களைப் பற்றி அதிகாரப்பூர்வமாக தெரிந்து கொண்டாயிற்று! 'பங்களிப்பாளர் அறிமுகம்' படித்தேன்; அதையே இவ்விதம் குறிப்பிடுகிறேன்! முன்பு ஒருமுறை உங்களின் பேச்சுப்பக்கத்தில் எழுதியபோது 'ஐயா' என எழுதிவிட்டேன். 2 தினங்கள் கழித்து நம் சக பயனர் ஒருவர் எனக்கனுப்பிய மின்னஞ்சலைப் படித்ததும், முதல் வேலையாக அந்த 'ஐயா'வினை நீக்கிவிட்டேன்; நல்ல நகைச்சுவை!
உங்களின் அயராத உழைப்பிற்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:25, 30 சனவரி 2013 (UTC)
நன்றி, செல்வகுருநாதன்.--Booradleyp (பேச்சு) 15:31, 30 சனவரி 2013 (UTC) விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:38, 30 சனவரி 2013 (UTC)
முதற்பக்கக் கட்டுரைக்கான பரிந்துரைகள்
தொகுவணக்கம். நீங்கள் பங்களித்த சிறந்த கட்டுரை அல்லது நீங்கள் சிறந்த கட்டுரையாகக் கருதும் கட்டுரையை முதல் பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்காக இப்பக்கத்தில் தங்களின் பரிந்துரைகள் வேண்டப்படுகின்றன.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:52, 31 சனவரி 2013 (UTC)
மாதம் 1000 தொகுப்புகள் மைல்கல்
தொகுவணக்கம், Booradleyp/தொகுப்பு01!
நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)