Diacritic mark/accent

தொகு

வணக்கம் ஜோர்ஜ், உங்கள் கட்டுரைகள் அனைத்தும் சிறந்த முறையில் எழுதப்பட்டுள்ளன. பாராட்டுக்கள். //Pieta என்னும் சொல்லில் இட வேண்டிய grave accent எழுதும் முறை அறிய விழைகின்றேன்// என்று கேட்டிருந்தீர்கள். நீங்கள் எதைப் பற்றிக் கேட்கிறீர்கள் என்பது விளங்கவில்லை. சற்று விளக்கமாக எழுதினால் முடிந்தால் உதவுவேன். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.--Kanags \உரையாடு 10:12, 3 ஏப்ரல் 2010 (UTC)

இதற்கு இலகுவான வழி: தமிழ் விக்கியின் Beta பக்கத்தில் உள்ளிடுங்கள். அதாவது இப்பக்கத்தின் மேலேயுள்ள menuக்களில் Try Beta என்பதைச் சொடுக்கி பீட்டா தளத்தினுள் செல்லுங்கள். பீட்டாவில் ஒரு பக்கத்தைத் தொகுக்கும் போது special characters உள்ளிடுவதற்கு வசதிகள் உள்ளன. பீட்டாவைப் பாவித்துப் பாருங்கள்.--Kanags \உரையாடு 11:43, 3 ஏப்ரல் 2010 (UTC)

நன்றி

தொகு

பவுல் லியோன் வறுவேல் ஐயா, நீங்கள் மீப்பெரு பொது வகுத்தி என்னும் கட்டுரையில் செய்த திருத்தங்களுக்கு நன்றி.--செல்வா 00:24, 9 ஏப்ரல் 2010 (UTC)

சாதி குறித்த கட்டுரைகள்

தொகு

தாங்கள் பயனர் பேச்சு:Mayooranathan பக்கத்தில் குறிப்பிட்டபடி சாதி குறித்த கட்டுரைகள் எழுதுவதில் பல இடையூறுகள் உள்ளது. தாங்கள் சொன்னபடி ஒவ்வொருவருக்கும் அவரவர் சாதி குறித்த பெருமை உள்ளது. அந்தப் பெருமையான தகவல்களை (வரலாறு மற்றும் சிறப்புத் தகவல்கள்) இங்கு பதிவு செய்யலாம். ஆனால் ஒரு சிலர் அவர்கள் சாதியில் மட்டும் முக்கியமானவர்களாக இருப்பவர்களையெல்லாம் பட்டியலிடத் தொடங்கி விடுகின்றனர். இதை நீக்கும் போது பிரச்சனை தொடங்கி விடுகிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் பல சாதி குறித்த கட்டுரைகளைத் தொடங்கி எழுதியிருக்கிறேன். அந்தக் கட்டுரைகளில் அந்த சாதிக்குப் பெருமை சேர்க்கும் பல தகவல்களை இணைத்திருக்கிறேன். தமிழ்நாட்டில் இணையத்தில் தேடுபவர்கள் பலர் தங்கள் ஊர், தங்கள் சாதி போன்ற தகவல்களைத்தான் முக்கியமாகத் தேடுகிறார்கள். இதனால் தமிழ் விக்கிப்பீடியாவில் ஊர், சாதி போன்ற கட்டுரைகள் இடம்பெறுவதும் தவிர்க்க முடியாத ஒன்றுதான். இருப்பினும் சாதி குறித்த கட்டுரைகளில் தாங்கள் குறிப்பிட்டபடி எவையெல்லாம் இருக்க வேண்டும் எவையெல்லாம் இருக்கக் கூடாது என்கிற ஒரு நிலைப்பாடு எடுத்திட ஆலமரத்தடி பகுதியில் விவாதித்து முடிவுக்கு வரவேண்டியதும் அவசியமாகிறது.--Theni.M.Subramani 04:35, 13 ஏப்ரல் 2010 (UTC)

கூகுள் திட்டம் குறித்த வாக்கு

தொகு

வணக்கம் பவுல். (தயவு செய்து பெயர் சொல்லி அழைப்பதைத் தவறாக கருத வேண்டாம். விக்கியில் அனைவரும் பெயர் சொல்லி அழைப்பதே தோழமை உணர்வுக்கு உகந்ததாக உள்ளது.) கூகுள் திட்டம் குறித்த உங்கள் வாக்கையும் செலுத்தினால் நன்று--ரவி 04:02, 22 ஏப்ரல் 2010 (UTC)

  • வணக்கம், ரவி. பெயர் சொல்லி அழைப்பதில் தடையில்லை. கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்றொரு கருத்தை ஆலமரத்தடியில் தெரிவித்தேன். செல்வாவும் இசைவு தெரிவித்தார். ஆனால் யாரோ அப்பகுதியை அகற்றியிருக்கிறார்கள். "நிறுத்துவோம்" அல்லது "தொடர்வோம்" என்று கூற மனம் வரவில்லை. கூகுள் மொழிபெயர்ப்பின் தரத்தை உயர்த்த வழியுண்டா என ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதே நல்லது என்பது அடியேன் கருத்து. --George46 05:53, 22 ஏப்ரல் 2010 (UTC)

நன்றி பவுல். நிறுத்துவோம் - தொடர்வோம் என்ற வாக்களிப்பு மனத்தடையை உருவாக்குகிறது என்று புரிகிறது. வாக்களிப்புக் கேள்வியைச் சற்று மாற்ற வேண்டும். உங்கள் கருத்து ஆலமரத்தடியில் தான் இருக்கிறது. அனைவரின் கருத்துகளுடன் தொடர்ச்சியாக இருக்கட்டும் என்று கருத்து என்ற பகுதியின் கீழ் நகர்த்தியுள்ளேன்.--ரவி 06:07, 22 ஏப்ரல் 2010 (UTC)

தமிழாக்கம் தேவை

தொகு

நான் துவங்கியுள்ள இலயோலாக் கல்லூரி, சென்னையின் முழுமைக்காக கீழ்காணும் இரு ஆங்கிலக் கட்டுரைகளை தமிழாக்கி உதவ முடியுமா ? கிறித்தவ இறையியல்/அமைப்பு சொற்கள் மிகுந்துள்ளதால், உங்களால் மிகச்சரியான மொழிமாற்றம் செய்ய முடியும் என எண்ணி உங்களை நாடுகிறேன். உங்களுக்குச் நேரக்குறைவு இருந்தால் குறிப்பிட்டச் சொற்களுக்கு சரியான மொழிபெயர்ப்பு கொடுத்தால் நான் நிறைவு செய்கிறேன். இதனை இந்நாளுக்குள் முடிக்க வேண்டும் என்ற அவசரமும் இல்லை.

இவற்றிற்கான தமிழ்த் தலைப்புகள் இலயோலாக் கல்லூரி கட்டுரையில் சிவந்த இணைப்புகளாக உள்ளன. அவற்றை மாற்றுவதாயிருந்தால், இலயோலாக் கல்லூரி கட்டுரையிலும் அந்த மாற்றங்களைச் செய்து விடவும். நன்றி.--மணியன் 08:49, 23 ஏப்ரல் 2010 (UTC)

  • திரு மணியன் அவர்களுக்கு, வணக்கம்! தாங்கள் கேட்டுள்ள இரு கட்டுரைகளையும் தமிழாக்க விருப்பம்தான். ஆனால் நேரம் இல்லாததால் அதைச் செய்யவில்லை. ஐயத்துக்கு இடமான சொற்களை ஆங்கிலத்திலேயே விட்டுவிட்டு, கட்டுரைகளை மொழிபெயர்த்து அனுப்புவீர்கள் என்றால் இணையான தமிழ்ச் சொற்களைப் பிறகு சேர்க்கலாம். எனக்கும் வேலை சிறிது எளிதாகும். உங்கள் கருத்து என்ன?
பவுல் அவர்களுக்கு வணக்கம். நீங்கள் கூறியபடியேச் செய்யலாம். கிறித்துவின் குமுகாயம் என்ற கட்டுரையை உரை திருத்தி தமிழாக்கமும் நிறைவு செய்க. மற்ற கட்டுரையை நாளை இடுகிறேன்.ஆங்கில கட்டுரையை முழுமையாக தமிழாக்கம் செய்யத் தேவையில்லை. ஓர் குறுங்கட்டுரை மூலம் அறிமுகப்படுத்தி விட்டால் நாளடைவில் பிறர் வளர்த்தெடுப்பர்.நன்றி !--மணியன் 09:55, 24 ஏப்ரல் 2010 (UTC)


மணியன், தாங்கள் செய்துள்ள தமிழாக்கம் அருமை! கட்டுரை "இயேசு சபை" என்னும் தலைப்பில் அமைய வேண்டும். பழைய பெயர் "சேசு சபை" (சுருக்கம்: சே.ச.). கட்டுரையில் சொல்திருத்தம் விரைவில் செய்கிறேன்.--George46 14:55, 24 ஏப்ரல் 2010 (UTC)
  • மணியன், தாங்கள் கேட்டபடி மேதகு கர்தினால் லூர்துசாமி பற்றிய கட்டுரையைத் திருத்தி, கூடுதல் தகவல்களும் இணைத்துள்ளேன். வெளி இணைப்புகள் பல உள்ளன. குறிப்பாக, புதுச்சேரி உயர் மறைமாவட்ட வலைத்தளம் பாருங்கள் (http://www.archdiocesepondicherry.com/History_%20Archdiocese_1.html). கர்தினால் அவர்களையும் அவர்தம் தம்பியார் அருள்திரு அமலோற்பவதாசு அடிகளாரையும் நன்கு அறிவேன். எனவே இக்கட்டுரை உருவாக்கத்தில் பங்கேற்றது பற்றி மிக்க மகிழ்ச்சி!--George46 00:58, 27 ஏப்ரல் 2010 (UTC)
கட்டுரையை அழகாக மெருகேற்றியுள்ளீர்கள். மிக்க நன்றி. இவர்களைப் பற்றி அறிய கிடைத்த இந்த வாய்ப்பு எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. --மணியன் 05:11, 27 ஏப்ரல் 2010 (UTC)
மணியன், தங்கள் கட்டுரையில் "கார்டினல்" என்றிருப்பதை "கர்தினால்" என்று எழுதுவதே கிறித்தவ வழக்கு. முடிந்தால் மாற்றம் செய்யவும்.--George46 01:59, 28 ஏப்ரல் 2010 (UTC)

உதவி!!

தொகு

உங்களிடம் இருந்து ஒரு சிறு உதவி எதிர் பார்க்கிறேன்!!! சிறிது நேரம் முன்பு, விழுப்புரம் மாவட்டத்திற்கான வார்ப்புருவில் இருந்த Block என்ற சொல்லை நீக்கிவிட்டு ஊராட்சி ஒன்றியம் என்று மாற்றினேன். அது மட்டும் அல்லது ஆங்கில Villupuram District ல் உள்ள Block பகுதியை அதற்கான விளக்க பக்கத்துடன் இணைத்தேன். ஆனால் தமிழில் ஊராட்சி ஒன்றியத்திதிற்கான (Block) பக்கம் இன்னும் உருவக்க படவில்லை. ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள விளக்கதினை கொண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு யாரேனும் தமிழாக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். ----ராஜ்6644 05:48, 31 ஜூலை 2010 (UTC)

கூகுள் கட்டுரைகள் மதிப்பீட்டுப் பணியில் உதவ வேண்டல்

தொகு

வணக்கம். விக்கிப்பீடியா பேச்சு:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு/மதிப்பீடு பக்கத்தில் குறிப்பிட்டுள்ள படி 10 கட்டுரைகளை மதிப்பிட்டுத் தர தங்களுக்கு நேரமும் விருப்பமும் இருக்குமா என்று அறிய விரும்புகிறேன். நன்றி--ரவி 20:18, 5 ஆகஸ்ட் 2010 (UTC)

  • ரவி, தாங்கள் கேட்டுக்கொண்டுள்ளவாறே கட்டுரைகளை மதிப்பிட விழைகின்றேன். பத்து நாள்கள் மட்டும் போதுமா? மேலொரு வாரம் கொடுத்தால் நன்றாயிருக்காதா?--பவுல்-Paul 20:42, 5 ஆகஸ்ட் 2010 (UTC)

நன்றி

தொகு

நிருவாகி அணுக்கம் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தமைக்கு மிக்க நன்றி --ஜெ.மயூரேசன் 03:59, 18 ஆகஸ்ட் 2010 (UTC)

ஏற்ற தமிழ்ச் சொல் தேவை

தொகு

திரு. பவுல் அவர்களே, நான் துவங்கிய கட்டுரைகள் பலவற்றை மெருகேற்றியுள்ளீர்கள். மிக்க நன்றி. கத்தோலிக்க கிறித்தவ புனிதர்களை வகுக்கும் முறையில் Confessor என்னும் பதத்திற்கு ஏற்ற தமிழ்ச் சொல், எங்கு தேடியும் கிடைக்கவில்லை. தயவுசெய்து உதவவும். -- ஜெயரத்தின மாதரசன் 09:35, 29 ஆகஸ்ட் 2010 (UTC)

கிறித்தவப் புனிதர்: சிறப்புச் சொற்கள்

தொகு
  • திரு ஜெயரத்தின, கத்தோலிக்க கிறித்தவ புனிதர்களை அடையாளம் காட்டுவதற்காகப் பயன்படும் சொற்பட்டியலை ஆங்கிலத்திலும் தமிழிலும் கீழே காண்க. பழைய வழக்கு அடைப்புக் குறிகளுக்குள் தரப்படுகிறது:
  1. martyr - மறைச்சாட்சி, மறைச் சான்றாளர் (வேதசாட்சி)
  2. virgin - கன்னி (கன்னிகை)
  3. doctor of the church - மறைவல்லுநர் (வேதபாரகர்)
  4. pope - பாப்பு, திருத்தந்தை (போப்பாண்டவர், பாப்பானவர்)
  5. bishop - ஆயர் (மேற்றிராணியார்)
  6. priest - குரு
  7. pastor - மேய்ப்பர்
  8. religious - துறவி
  • confessor என்னும் சொல் தற்போது புனிதரைக் குறிக்க பயன்பாட்டில் இல்லை. கிறித்தவ நம்பிக்கைக் காப்பதற்காகக் கொலையுண்டு இறந்த புனிதரே martyr என்று அறியப்பட்டனர். பல துன்பங்கள் அனுபவித்தும் கொலையுண்டு இறக்காமல் சான்றுபகர்ந்த பெரியோர் confessors என்று அழைக்கப்பட்டனர். பழைய தமிழ் வழக்கில் துதியர் என்பது confessor-ஐக் குறித்தது. அதாவது, அப்பெரியோர் தம் வாழ்க்கைமுறையால் கடவுளுக்குத் துதி (praise, honor) செலுத்தினர் என்பது பொருள்.
  • மேலும் விளக்கம் தேவையானால் தொடர்புகொள்ளுங்கள். வணக்கம்!--பவுல்-Paul 19:21, 29 ஆகஸ்ட் 2010 (UTC)


நன்றிகள்

தொகு

என்னுடைய பிறந்த நாளையொட்டி நீங்கள் தெரிவித்த வாழ்த்துக்களுக்கு எனது மனம் கனிந்த நன்றிகள். --மயூரநாதன் 16:28, 8 செப்டெம்பர் 2010 (UTC)Reply

தொகு

பவுல்,

உங்கள் புதிய கட்டுரைகளில் இரு விஷயங்களை மாற்றியுள்ளேன்

  • 1) ஆங்கில் விக்கி இணைப்பை வெளி இணைப்பிலிருந்து interwiki link ஆக மாற்றியுள்ளேன். கட்டுரையின் இறுதியில் [[en:Book of Exodus]] என்று கொடுத்தால் இடது பட்டையில் “ஏனைய மொழிகள்” தலைப்பின் கீழ் ஆங்கிலம் வந்து விடும். விக்கியில் இயங்கும் தானியங்கிகள் இதனை அடையாளம் கண்டு பிற மொழி விக்கிகளின் இணைப்புகளையும் இணைத்து விடும் (பிற மொழி விக்கி கட்டுரைகளிலிம், தமிழ் கட்டுரை இணைப்பு சேர்ந்து விடும்)
  • 2) பகுதிகளின் தலைப்புகளை இரண்டாம் நிலை தலைப்பாக ஆரம்பியுங்கள் (=== வேண்டாம் == வேண்டும்). இப்போதுள்ள வெக்டார் தோலில் இரண்டாம் நிலை தலைப்பு நன்றாக தெரிவதில்லை. ஆனால் விக்கிக் கட்டுரையை பிற ஊடங்கள் வழியாகப் (RSS feeds, pdf export, mobile apps etc) பார்த்தலுக்கு இந்த இரண்டு /மூன்று பத்தி தலைப்பு கொஞ்சம் அவசியம் (இல்லையெனில் அங்கு அலைன்மெண்ட் கெட்டுவிடும்) --சோடாபாட்டில் 05:12, 2 அக்டோபர் 2010 (UTC)Reply

நிறுத்தக்குறிகள்

தொகு

பவுல்,

நீங்கள் எழுதி வரும் நிறுத்தக் குறிகள் கட்டுரைகள் தமிழ் நடைக்கு மட்டுமா. அல்ல பொதுவாக நிறுத்தக் குறிகளைப்பற்றியும் விரிவாக்கப் போகிறீர்களா?. எனேனில் தற்போது தலைப்பு பொதுவாக உள்ளது, உள்ளடக்கம் தமிழ் நடைக்கு மட்டுமாக உள்ளது. இது தமிழ்நடைக்கு மட்டுமெனில், தலைப்பை வேறுபடித்திக் காட்ட வேண்டும். எ. கா அரைப்புள்ளி (தமிழ்நடை) போன்று. தமிழ்நடை மட்டுமெனில் தலைப்பை மாற்றி விடவா?--சோடாபாட்டில் 05:40, 9 அக்டோபர் 2010 (UTC)Reply

  • சோடாபாட்டில், விக்கி வருநர்களுக்குப் பயனுள்ள முறையில் இக்கட்டுரைகளைத் தொகுப்பதுதான் என் நோக்கம். பொதுவான செய்திகள் ஆங்காங்கே வரும் என்றாலும் தமிழ் நடையே மையமாக இருக்கும். நிறுத்தக்குறிகள் பற்றிய கட்டுரையில் தற்போது இருக்கும் உள்ளடக்கத்தைப் படிப்படியாகத் தனித் தலைப்புகளின்கீழ் கொண்டுவருவதும், அதைத் தொடர்ந்து "சொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல்", "சந்தி", "சொல் தேர்வும் பொருள் தெளிவும்", "எழுத்துப்பெயர்ப்பு", "அடிக்குறிப்பும் துணைநூற்பட்டியலும்" என்னும் தனித் தலைப்புகள் கொண்ட கட்டுரைகளை வடிப்பதும் என் திட்டம். இவ்வாறு, தமிழ் நடைக் கையேட்டை ஓரளவு முழுமையாக உருவாக்கிட வேண்டும் என்றே செயல்படுகின்றேன். ஆக, "தமிழ் நடை" என்று அடைப்புக்குறிகளுக்குள் தருவது பொருத்தமாக இருக்கும் என்றே நினைக்கிறேன். மாற்றிவிடுங்கள். வணக்கம்!--பவுல்-Paul 09:54, 9 அக்டோபர் 2010 (UTC)Reply
    • பவுல், இது மிகச்சிறந்த பணி. மணியன் பல உதவிப்பக்கங்களை எழுதி வைத்துள்ளதைப் போலவே, இந்த நடைக்கையேடும் புதுப்பயனர்களுக்கு மிக மிக உதவியாக இருக்கும். உங்களுக்கு இயலும்போது இறையியல் கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 06:40, 14 அக்டோபர் 2010 (UTC)Reply

பக்கங்களை நகர்த்துதல்

தொகு

பக்கங்களின் தலைப்புக்களை மாற்றும்போது ஏற்கனவே இருப்பவற்றை நகர்த்துவதே பொருத்தமானது. நன்றி. கோபி 02:29, 23 அக்டோபர் 2010 (UTC)Reply

பவுல், தற்போது நீங்கள் பக்1. பக்2 க்கு நகர்த்துவதற்கு பக்1 ல் உள்ளடக்கங்களை நீக்காமல், மேலே ஒரு #redirect இணைப்பைக் கொடுத்து விட்டு, பக்2 ஐ மீண்டும் உருவாக்குகிறீர்கள். இப்படிச் செய்தால், பக்1, பக்2 இரண்டிலும் உள்ளடக்கங்கள் இரட்டிப்பாக தேங்கி விடுகின்றன. இதற்கு பதில், பக்1 இன் மேலுள்ள “நகர்த்துக” தொடுப்பை சொடுக்கி அதில் வரும் பக்கத்தில் பக் 2அன் தலைப்பைக் கொடுத்தால், பக்1 லிருக்கும் உள்ளடக்கங்கள் அப்படியே பக் 2க்கு போய் விடும். ஈரிடங்களில் உள்ளடக்கங்கள் இரா.--சோடாபாட்டில் 04:43, 29 அக்டோபர் 2010 (UTC)Reply

Vicar apostolic

தொகு

Vicar apostolic தமிழ்ச் சொல் தேவை.--Kanags \உரையாடுக 05:07, 23 அக்டோபர் 2010 (UTC)Reply

  • Kanags, தாங்கள் தேடும் சொல் திருச்சபைச் சட்டத்தொகுப்பில் (Code of Canon Law) வருகிறது. அத்தொகுப்பின் தமிழாக்கம் உள்ளது. ஆங்கிலப் பெயர்ப்பின் கீழ் அதைத் தருகிறேன்:

Can. 371 §1. An apostolic vicariate or apostolic prefecture is a certain portion of the people of God which has not yet been established as a diocese due to special circumstances and which, to be shepherded, is entrusted to an apostolic vicar or apostolic prefect who governs it in the name of the Supreme Pontiff.

தி.ச. 371 - §1. திருத்தூதரக மறைஆட்சிவட்டம் அல்லது திருத்தூதரக ஆளுகை வட்டம் என்பது, சிறப்பான சூழ்நிலைகளின் பொருட்டு, இன்னும் மறைமாவட்டமாக நிறுவப்படாத இறைமக்களின் ஒரு பகுதியாகும்; அதன் மேய்ப்புப்பணி உச்சத் தலைமைக்குருவின் பெயரால் அதை ஆளுகின்ற ஓர் திருத்தூதரகப் பதில்ஆள் அல்லது ஓர் திருத்தூதரக ஆளுநரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

ஆக, Apostolic vicariate = திருத்தூதரக மறைஆட்சிவட்டம்; Vicar apostolic (apostolic vicar) = திருத்தூதரகப் பதில்ஆள். --பவுல்-Paul 05:26, 23 அக்டோபர் 2010 (UTC)Reply

நன்றி பவுல்.--Kanags \உரையாடுக 10:43, 23 அக்டோபர் 2010 (UTC)Reply

mormon

தொகு

பின் வரும் திருச்சபை வகைகளை தமிழில் எப்படி எழுதுவது? 1)mormon / latter day saints 2) seventh day adventists 3) unitarian --சோடாபாட்டில் 11:04, 23 அக்டோபர் 2010 (UTC)Reply

  • சோடாபாட்டில், நீங்கள் கேட்ட சொற்களின் பொருளடிப்படையில் கீழ்வரும் முறையில் தமிழ்ப் பெயர்ப்பு அமையலாம்:

Mormon = மோர்மோன்;
Mormonism = மோர்மோன் சபை;
Church of Jesus Christ of the Latter-day Saints (LDS) = இறுதிக்காலத் தூயோரின் இயேசு கிறித்து சபை;
Mormon Fundamentalism = மோர்மோன் அடிப்படைவாத சபை (பலதார மணத்தை ஆதரிக்கிறது);
Cultural Mormonism = பண்பாட்டு மோர்மோன் சபை (சமய உண்மைகள் சிலவற்றை ஏற்பதில்லை).

Seventh-day Adventist Church = ஏழாம் நாள் வருகை சபை (பொது வழக்கில் "சனிக்கிழமை வேதம்").

Unitarianism = இறையொருமை வாத சபை.
"Nontrinitarianism" = மூவொரு இறைவன் மறுப்பு கொள்கை (சபை).
Unitarian (noun) = இறையொருமை வாத சபையார் (சபையினர்).
Unitarian (adj.) = இறையொருமை வாதம் சார்ந்த.
--பவுல்-Paul 19:39, 23 அக்டோபர் 2010 (UTC)Reply

நன்றி பவுல்--சோடாபாட்டில் 09:20, 24 அக்டோபர் 2010 (UTC)Reply

முதற்பக்க அறிமுகம்

தொகு

வணக்கம் பவுல். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பவுல் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி --இரவி 07:49, 18 நவம்பர் 2010 (UTC)Reply

  • இரவி, முதற்பக்க அறிமுகத்தில் இணைந்திட அழைத்தமைக்கு நன்றி. நீங்கள் கேட்டபடியே சிறு தகவல் தொகுப்பினை உடனே அனுப்புகிறேன். வணக்கம்!--பவுல்-Paul 17:19, 18 நவம்பர் 2010 (UTC)Reply

முதற்பக்க அறிமுகத்தை எழுதியமைக்கு நன்றிங்க. முதற்பக்க இடப்பற்றாக்குறை காரணமாக, தங்கள் உரையைச் சற்றுச் சுருக்கியுள்ளேன். சனவரி 15, 2011 முதல் இரு வாரங்களுக்குத் தங்களைப் பற்றிய அறிமுகம் இடம்பெறும். --இரவி 08:49, 30 திசம்பர் 2010 (UTC)Reply

அடுத்த இரு வாரங்களுக்கு உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் இடுவதில் மகிழ்கிறோம்--இரவி 07:35, 20 சனவரி 2011 (UTC)Reply

  • இரவி, முதல் பக்க அறிமுகத்தில் என்னைப் பற்றிக் குறிப்பு அளித்துச் சிறப்பித்தமைக்கு உளமார்ந்த நன்றி! தொடர்ந்து விக்கியின் வளர்ச்சியில் பங்கேற்க அவா. வாழ்த்துகள்!--பவுல்-Paul 11:44, 20 சனவரி 2011 (UTC)Reply

பெருங்க் கட்டுரை

தொகு

மூன்று விடயங்கள்:

  • ஆங்கில விக்கிக்கு இணைப்புத் தருவதாயின் en:rotestant_Reformation என்று இடுவதே போதுமானது. முழுமையான எ.டி.டி.பி இணைப்புத் அவசியமில்லை.
  • மிக நீண்ட பெரும் கட்டுரை ஒன்றை உருவாக்கி உள்ளீர்கள். அவை பல கட்டுரைகளாக ஆக்கப்படத் தக்கவை. அப்படி ஆக்கி, இதை ஒரு பொது அறிமுகக் கட்டுரையாகத் தரலாம். பின்னை {{main|முதன்மைக் கட்டுரை}} என்று முக்கிய பகுதிகளுக்கு இணைப்புத் தரலாம்.
  • மேற்கோள்ளை சுட்டும் போது மூல மேற்கோள்களைச் சுட்டுவது கூடிய பெறுமதிமிக்கது.

நன்றி. --Natkeeran 05:31, 27 நவம்பர் 2010 (UTC)Reply

கத்தோலிக்க திருச்சபை வரலாறு: நெடுங் கட்டுரை

தொகு
  • நற்கீரன், தாங்கள் தெரிவித்த மூன்று கருத்துகளுக்கும் நன்றி. இக்கட்டுரையை ஆக்கும்போது "Timeline of the Roman Catholic Church" என்னும் ஆங்கில விக்கி கட்டுரையை அடிப்படையாகக் கொண்டேன். வரலாற்று நிகழ்வுகள் பற்றிய கட்டுரையாதலால் விக்கி பயனர்கள் உடனடியாக ஒரு செய்திக்கான ஆதாரம் தேடும்போது எளிதில் அதைக் கண்டறிய ஆங்கில விக்கி கட்டுரைகள் பயன்படும் என்றும், அக்கட்டுரைகளில் மூல மேற்கோள்கள் வேறு ஆங்கில (அல்லது செருமானியம் போன்ற பிறமொழி) குறிப்புகளாக அமைந்துள்ளதால் தொடர்ந்து இன்னும் ஆய்வு மேற்கொள்ள விரும்புவோர் அங்கிருந்து செய்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும் கருதியே மூல மேற்கோள்களைத் தமிழ்க் கட்டுரையில் இணைத்து அதை இன்னும் நீண்டதாக்கிட விரும்பவில்லை.
  • ஆங்கில விக்கி இணைப்புகளை http எனத் தொடங்கும் நீண்ட இணைப்பாகவன்றி குறுக்கமாக இடுகிறேன்.
  • இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றுக் குறிப்புகள் என்பதால் கட்டுரை நீண்டு போகிறது. அதைக் குறைந்தது பத்து பிரிவுகளாக்கி, தனிக்கட்டுரைகளாக இடலாம். முதல் பத்திகளை அறிமுகக் கட்டுரையாக வைத்துக்கொண்டு,

இயேசு திருச்சபையை நிறுவுகிறார்,
தொடக்க காலக் கிறித்தவம் (கி.பி. 34 முதல் கி.பி. 312 வரை,
கி.பி. 313 முதல் கி.பி. 476 வரை,
கி.பி. 477 முதல் 799 வரை,
கி.பி.800 முதல் 1453 வரை,
கி.பி. 1454 முதல் கி.பி. 1600 வரை,
கி.பி. 1600 முதல் கி.பி. 1800 வரை,
கி.பி. 19ஆம் நூற்றாண்டு,
கி.பி. 20ஆம் நூற்றாண்டு,
கி.பி. 21ஆம் நூற்றாண்டு
என்று பிரிவுகளாக்கலாம். அவ்வாறு செய்யப் பார்க்கிறேன்.
கருத்துகளுக்கு நன்றி!--பவுல்-Paul 15:55, 27 நவம்பர் 2010 (UTC)Reply

genesis க்கு ஏற்கனவே ஆதியாகமம் என்றொரு கட்டுரையுள்ளது.--சோடாபாட்டில் 05:50, 30 நவம்பர் 2010 (UTC)Reply

பயனர் பக்கம்

தொகு

உங்கள் பங்களிப்புகளைக் கீழே தந்துள்ளேன். இவற்றை ஒற்றி உங்கள் பயனர் பக்கத்தில் ஒட்டிவிடுங்கள்.

விக்கிப்பணி:

--செல்வா 02:45, 9 திசம்பர் 2010 (UTC)Reply

சில கிருத்துவ இறையியல் வார்த்தைகளும் சந்தேகங்களும்

தொகு

பவுல்,

  1. ) Anabaptism, Restorationism ஆகியவற்றுக்கான தமிழ் சொற்கள் யாவை?
  2. ) Eastern Orthodox, Oriental Orthodox இரண்டையும் தமிழில் எப்படி வேறுபடுத்திக் காட்டுவது? முன்னதை கிழக்கு மரபுவழி திருச்சபை என்று எழுதுகிறோம், பின்னதை கிழக்கத்திய அல்லது கீழைத்தேய மரபுவழித் திருச்சபை என்று எழுதலாமா?
  3. ) heresy என்ற சொல்லை கிருத்துவ இறையியலில் எப்படி வழங்குவது? எ.கா. Arianist heresy. எதிர்ப்பு/ மறுப்பு போன்ற வார்த்தைகளையே இவற்றுக்கும் பயன்படுத்தலாமா?

--சோடாபாட்டில் 20:11, 9 திசம்பர் 2010 (UTC)Reply

கிறித்தவம் சார்ந்த சில சொற்கள் தமிழில்

தொகு

சோடாபாட்டில், தாங்கள் கேட்டவற்றிற்கு இணையான தமிழ்ச் சொற்கள்:

  1. Heresy = தப்பறை (தப்பறைக் கொள்கை) (சென்னை அகரமுதலியில்)
  2. Anabaptism, Anabaptist = மீள்திருமுழுக்கு (மீள்திருமுழுக்குக் கொள்கை)
  3. Restorationism = (கிறித்தவ) மூலமீளமைக் கொள்கை
  4. Eastern Orthodox Church = கிழக்கு மரபுவழி திருச்சபை
  5. Oriental Orthodox Church = கீழைமுறை மரபுவழி திருச்சபை
  6. "Arianism is a heresy" = "ஆரியுசுக் கொள்கை ஒரு (தப்பறை) தப்பறைக் கொள்கை ஆகும்"

--பவுல்-Paul 05:09, 10 திசம்பர் 2010 (UTC)Reply

நன்றி பவுல்--சோடாபாட்டில் 05:30, 10 திசம்பர் 2010 (UTC)Reply

நன்றி

தொகு

தமிழ் அச்சிடல் வரலாறு பக்கத்தில் மொழிமாற்ற உதவிகளுடன் கட்டுரையை சீரமைத்து வளப்படுத்தியதற்கு நன்றிகள் பல. --மணியன் 04:30, 9 பெப்ரவரி 2011 (UTC)

Tamil Christian Writings in the European Libraries

தொகு

http://www.jstor.org/pss/25211846 --Natkeeran 17:06, 9 பெப்ரவரி 2011 (UTC)

  • தகவலுக்கு நன்றி! தமிழ் ஆய்வு ஒரு தொடர் நிகழ்வு என்பது தெளிவு! --பவுல்-Paul 18:38, 9 பெப்ரவரி 2011 (UTC)

உதவி

தொகு

பவுல், ஒருவர் en:Papal Orders of Chivalry உறுப்பினர் என்றால் அதை எப்படி தமிழில் எழுதுவது?. எ. கா ஜே. எல். பி. ரோச் விக்டோரியா en:Order of St. Gregory the Great சேர்ந்தவர். இந்த knighthood அமைப்புகளுக்கு தமிழில் பெயருண்டா? --சோடாபாட்டில்உரையாடுக 04:51, 14 பெப்ரவரி 2011 (UTC)

  • Knight, knighthood, chivalry போன்ற சொல்வழக்கு நடுக்கால கிறித்தவ வரலாற்றில் எழுந்தது. பகைவர் கையிலிருந்து கிறித்தவத்தைக் காக்கும் கருத்து அதில் தொக்கிநிற்கின்றது. சிலுவைப் போரின் பின்னணியும் உண்டு. ஆனால் இன்று அத்தகைய போர்மனப்பான்மை இல்லை. மாறாக, கிறித்தவ சபை அமைப்பில் சீரிய பணி ஆற்றியோருக்கு வழங்கப்படுகின்ற சிறப்பு இங்கே குறிக்கப்படுகிறது. எனவே,

Papal Order of Chivalry - போப்பாண்டவர் வீரர் அணி Order of St. Gregory - புனித கிரகோரி அணி Knight - வீரர் Knighthood - வீரர் நிலை என மொழிபெயர்க்கலாம்.--பவுல்-Paul 06:04, 14 பெப்ரவரி 2011 (UTC)

நன்றி பவுல்.--சோடாபாட்டில்உரையாடுக 07:42, 14 பெப்ரவரி 2011 (UTC)

முதற்பக்கத்தில் உங்கள் அறிமுகம்

தொகு

உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் கண்டு மிக மகிழ்ந்தேன்! பலருக்கும் உங்க அரிய ஆக்கங்கள், எடுத்துக்காட்டான நல்ல தமிழ் நடை ஆகியவை பெரும் ஊக்கமாக இருக்கும் என மிக நம்புகின்றேன். --செல்வா 01:16, 21 பெப்ரவரி 2011 (UTC)

  • வாழ்த்துக்கு நன்றி, செல்வா. நான் விக்கிக்கு அறிமுகமானதில் உங்களது பங்கும் பெரிதுதானே! --பவுல்-Paul 00:56, 23 பெப்ரவரி 2011 (UTC)

விவிலிய இடங்கள் வார்ப்புரு

தொகு

பவுல்,

பட்டியலாக இருந்த விவிலிய இடங்கள் வாருப்புருவை, navbox வார்ப்ப்ரு கொண்டு மாற்றியமைத்துள்ளேன். தற்போதைய வடிவமைப்பு கட்டுரையில் இறுதியில் இடுமாறு (பக்கவாட்டில் நீண்டு) உள்ளது. கட்டுரையில் நடுப்பகுதியில் செங்குத்தாக அமைவதற்கு ஏற்றார் போல சேய்யவேண்டுமெனில் சொல்லுங்கள் அவ்வாறு வடிவமைப்பை மாற்றிவிடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 19:30, 26 மார்ச் 2011 (UTC)

  • சோடாபாட்டில், திருத்தத்துக்கு நன்றி! நான் செய்ய நினைத்து முயன்றதை நன்முறையில் செய்துவிட்டீர்கள். பக்கவாட்டில் இறுதியில் இருப்பது நன்றாகவே உள்ளது. அப்படியே இருக்கட்டும். வாழ்த்துகள்! --பவுல்-Paul 19:51, 26 மார்ச் 2011 (UTC)

உதவி

தொகு

பவுல், Ichthys சின்னத்தை எப்படி தமிழில் அழைப்பது?. ”இயேசு மீன்” எனலாமா?--சோடாபாட்டில்உரையாடுக 15:16, 11 ஏப்ரல் 2011 (UTC)

இயேசுவுக்கு Ichthys ("மீன்") என்னும் சிறப்புப் பெயர்

தொகு
  • சோடாபாட்டில், நீங்கள் எதைப் பற்றிக் கூறுகிறீர்கள் என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால், மீன் என்பது இயேசுவோடு இணைத்துக் கூறப்படுவது இரண்டு இடங்களிலாகும். இயேசு அப்பத்தையும் மீனையும் பலுகச் செய்து மக்களின் பசியாற்றினார் என்பது ஒரு நிகழ்வு. மற்றது இயேசு யார் என்று விளக்கும் சொல். "கடவுளின் மகனும் மீட்பருமான இயேசு கிறிஸ்து" (Jesus Christ Son of God and Savior) என்னும் கிறித்தவ நம்பிக்கையைச் சுட்டுகின்ற "முதலெழுத்துக் கோப்பு" (acronym) கிரேக்க மொழியில் "ichthys" என்றாகும். அதற்கு "மீன்" என்று பொருள்Ichtys - "மீன்". எனவே, சூழமைவைப் பொறுத்து விளக்கம் தருவது சிறப்பு. --பவுல்-Paul 16:02, 11 ஏப்ரல் 2011 (UTC)
 

நான் இந்த சின்னத்தைப் பற்றி கேட்டேன். இந்த சின்னத்தைக் குறிப்பிடுகையில் “மீன் சின்னம்” என்று எழுதினால் போதுமா?--சோடாபாட்டில்உரையாடுக 16:18, 11 ஏப்ரல் 2011 (UTC)

  • இச்சின்னத்தின் அடியில் ஒரு குறிப்பு எழுதுவதாக இருந்தால் "இயேசு கிறித்துவைக் கடவுளின் மகன் என்றும் மீட்பர் என்றும் குறிக்கும் மீன் சின்னம்" எனலாம். அல்லது, சுருக்கமாக, "இயேசு யார் என விளக்கும் மீன் (Ichthys) சின்னம்" எனலாம்.--பவுல்-Paul 16:29, 11 ஏப்ரல் 2011 (UTC)
நன்றி பவுல்--சோடாபாட்டில்உரையாடுக 16:44, 11 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி மற்றும் உதவி

தொகு

ஐயா, தங்கள் ஊக்கத்திற்கும் பாராட்டுதலுக்கும் என் உளமார்ந்த நன்றி.

கத்தோலிக்கம் அல்லது கிறித்தவம் தொடர்பான விக்கி வலைவாசல் (wiki portal) துவங்க இயலுமா? இவ்வாறு செய்தால், கட்டுரைகளை பின்தொடர்வது மற்றும் கருத்து பரிமாற்றங்களுக்கு ஏற்றதாய் இருக்கும் என நினைக்கிறேன். --ஜெயரத்தின மாதரசன் 17:08, 22 ஏப்ரல் 2011 (UTC)

கிறித்தவம் நுழைவாயில் உருவாக்கல் பற்றி

தொகு

மாதரசன், இதுவரை நுழைவாயில் (Portal) பற்றி நான் அதிகம் சிந்திக்கவில்லை. ஆனால் உங்கள் செய்தி கண்டதும் ஆங்கில விக்கியிலும் பிற மொழி விக்கிகளிலும் (தமிழ் உட்பட) தேடிப்பார்த்தேன். தமிழில் "நுழைவாயில்:கிறித்தவம்" என உருவாக்குவதற்குப் போதிய கட்டுரைகள் உள்ளன என்றே நினைக்கிறேன். கணிணித் தொழில்நுட்பம் சிறிதே தெரிந்த என்னைவிட நீங்கள் இத்துறையில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நம்புகிறேன். எனவே, கருத்துகளைப் பகிர்ந்துகொள்வோம்: எவ்வாறு வடிவமைப்பது? தலைப்புகள் எவ்வாறு இடுவது? பிரிவுகள், உட்பிரிவுகள் எவ்வாறு அமைக்கலாம்? - இது போன்ற கருத்துகளை முதலில் பகிர்ந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும். கிறித்தவமா கத்தோலிக்கமா என்று கேட்டால், முதலில் கிறித்தவம் என்று பரந்த அளவில் தொடங்குவதே நல்லது என நினைக்கிறேன்.--பவுல்-Paul 21:31, 22 ஏப்ரல் 2011 (UTC)

திரு. பவுல் அவர்களே, கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்கள்.
  • நான் ஒருவருடத்திற்கும் குறைவாகவே விக்கியில் பங்களித்து வருகிறேன். ஆகவே இதனை செயல் படுத்த விக்கி நிர்வாகிகளாயிருக்கும் மூத்த உறுபினர்களின் ஆலோசனையும் உதவியும் தேவை. அதோடு கூட உங்களை போன்ற துறை வல்லுனர்களின் வழிகாட்டலும் மிக அவசியம்.
  • பிரிவுகள், உட்பிரிவுகளை பொருத்தவரை, முன்னரே இருக்கும் பகுப்புகளை முதலில் சரிசெய்து ஒருங்கிணைக்க வேண்டும். இப்பகுப்புகளைக் அடிப்படையாகக் கொண்டே ஆரம்பிக்களாம். காலப்போக்கில் கூடுதலாக சேர்க்கலாம்.
  • தேவையான கட்டுரைகள் என ஒரு தலைப்பின் கீழ் கிறித்தவம் தொடர்பான மிக அவசியமான, ஆனால் இதுவரை இல்லாத கட்டுரைகளை பட்டியலிடலாம்.
  • இந்நுழைவாயிலை அமைக்க முக்கிய காரணம், சிதருன்டு கிடக்கும் கிறித்தவம் தொடர்பாண பக்கங்களை ஒன்றிணைப்பதாகவும், இருக்கும் கட்டுரைகளுக்கு முகப்பாகவும் இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.
  • நுழைவாயில்:கிறித்தவம் என அமைத்துவிட்டு, அதன் உள் பகுப்பாக பகுப்பு:கத்தோலிக்கம் என பட்டியலிடலாம். (காண்: வலைவாசல்:தமிழ் -> தமிழர்)
--ஜெயரத்தின மாதரசன் 06:33, 25 ஏப்ரல் 2011 (UTC)

பவுல், மாதரசன் மற்றும் அனைவருக்கும் உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்கள். கிறித்தவம் தொடர்பான வலைவாசல் அமைப்பது குறித்து மகிழ்ச்சி. வலைவாசல்:கிறித்தவம் எனப் பெயரிட்டு முதலில் ஆரம்பியுங்கள். அதனை வளர்த்தெடுப்பதில் அனைத்துப் பயனர்களும் உதவுவார்கள். வாழ்த்துக்கள்.--Kanags \உரையாடுக 06:48, 25 ஏப்ரல் 2011 (UTC)

திரு. Kanags அவர்களே, நீங்கள் கூறியபடியே செய்துள்ளேன். ஏதேனும் தவறு இருப்பின் தயவு செய்து திருத்தவும் --ஜெயரத்தின மாதரசன் 11:10, 25 ஏப்ரல் 2011 (UTC)

கிறித்தவம் வலைவாசல் பற்றிக் கருத்துப் பகிர்வு

தொகு
  • Kanags, மாதரசன், வாழ்த்துக்கு நன்றி! மாதரசன் உருவாக்கிய வலைவாசலைப் பார்த்தேன். அதை மெருகூட்ட சில பரிந்துரைகள் இதோ:
  1. தலைப்பு "கிறித்தவம் வலைவாசல்" என்றிருந்தால் நல்லது. ("கிறித்தவ" என்பது உரிச்சொல் பொருள் தருவதால் இம்மாற்றம்).
  2. கிறித்தவம் வலைவாசல் செருமானிய மற்றும் பிரான்சிய விக்கிகளில் எவ்வவாறு உள்ளது என்று பார்த்தேன். அதன் அடிப்படையில் சில கருத்துகள்:
  3. "விவிலியம் வலைவாசல்" தனியாக உருவாக்குதல் நல்லது (காண்க: பிரான்சிய விக்கி). அதை "கிறித்தவம் வலைவாசலில்" மேற்பகுதியில் "தொடர்புடைய வலைவாசல்" (Related Portal) என்று கொடுக்கலாம். அந்த வலைவாசலில் கீழ்வரும் பிரிவுகள் கொடுக்கலாம்:
  • முதல் பக்க கட்டுரைகள்
  • விவிலியப் படிமம்
  • விவிலிய மையக் கருத்துகள்
  • உங்களுக்குத் தெரியுமா?
  • சிறப்புக் கட்டுரைகள்
  • விவிலிய வினா-விடை
  • பழைய ஏற்பாடு
  • புதிய ஏற்பாடு
  • விவிலிய மனிதர்கள்
  • விவிலிய மக்கள்
  • விவிலிய இடங்கள்
  • விவிலியப் பெயர்ப்புகள்
  • தமிழ் விவிலியம்
  • விக்கி மூலத்தில் விவிலிய நூல்கள்
  • விவிலியம் இணையத்தளங்கள்

4. "கிறித்தவம் வலைவாசலில்" கீழ்வரும் அமைப்பு பொருத்தமாய் இருக்கும் (காண்க: செருமானிய விக்கி):

  • முதன்மைக் கட்டுரைகள்
  • இன்றைய கட்டுரை
  • கிறித்தவம்: சபைப் பிரிவுகள்
  • விரிவாக்க வேண்டிய கட்டுரைகள்
  • இறையியல்
  • வரலாறு
  • வழிபாடும் திருநாட்களும்
  • நிறுவனமும் அமைப்பும்
  • துறவற சபைகள்
  • சமூகப் பணி
  • கலைகளும் பண்பாடும்
  • இந்தியாவில் கிறித்தவம்
  • தமிழுலகில் கிறித்தவம்

5. மேற்கூறிய பெரும் பிரிவுகளின்கீழ் உட்பிரிவுகள் மற்றும் தனிப் பதிவுகள் வரலாம்.
பணி தொடர்க!--பவுல்-Paul 17:53, 25 ஏப்ரல் 2011 (UTC)

பவுல், மாதரசன், மேலுள்ள கருத்துப் பகிர்வுகளை வலைவாசல் பேச்சு:கிறித்தவம் இற்கு மாற்றியிருக்கிறேன். இது தொடர்பான கருத்துக்களை அங்கே தெரிவித்தால் பயனுடையதாக இருக்கும்.--Kanags \உரையாடுக 10:45, 19 மே 2011 (UTC)Reply

உதவி

தொகு

பவுல், "patron saint" என்பதை தமிழில் எவ்வாறு பெயர்ப்பது?. “ஆதரவு புனிதர்” அல்லது “காப்புப் புனிதர்” சரியாக வருமா?--சோடாபாட்டில்உரையாடுக 05:29, 3 மே 2011 (UTC)Reply

  • Patron Saint என்பது தமிழில் "பாதுகாவலர்" (பாதுகாவல் புனிதர்) என்று வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட தேவைகளில் ஒரு குறிப்பிட்ட புனிதரை நோக்கி வேண்டுதல் எழுப்பி, உதவி கோருவது வழக்கம். அவர் கடவுளிடம் மனிதருக்காகப் பரிந்துபேசுவார் என்னும் நம்பிக்கையே இதற்கு அடிப்படை. எடுத்துக்காட்டாக, புனித பிரான்சிஸ் சவேரியார் "இந்தியாவின் பாதுகாவலர்" (இந்திய நாட்டில் அவர் சிறப்பாகப் பணிபுரிந்ததின் அடிப்படையில்). புனித கிறிஸ்தோபர் "பயணம் செய்வோரின் பாதுகாவலர்". இவ்வாறே பிறரும் என்க.--பவுல்-Paul 10:50, 3 மே 2011 (UTC)Reply
நன்றி பவுல்--சோடாபாட்டில்உரையாடுக 11:08, 3 மே 2011 (UTC)Reply

நன்றி

தொகு

ஐயா, நீங்கள் வார்ப்புரு:தகவற்சட்டம் கிறித்தவத் தலைவர்-இல் செய்த பிழை திருத்தங்களுக்கு மிக்க நன்றி.

அருளாளர் பட்டம் என்று நான் போட்டிருந்ததை முத்திப்பேறு பெற்ற பட்டம் என்று மாற்றியுள்ளீர். காரணம் தெரிந்தால், நானும் இனி அவ்வாறே செய்வேன்.

--ஜெயரத்தின மாதரசன் 12:02, 4 மே 2011 (UTC)Reply

"அருளாளர்" பற்றி

தொகு
  • மாதரசன், "அருளாளர்" என்று நீங்கள் போட்டிருந்ததை மாற்றுவதற்குத் தயக்கமாகவே இருந்தது. எனினும், மாற்றத்தைச் செய்துவிட்டு அதற்கான காரணங்களைக் குறிப்பிடலாம் என்று முடிவுசெய்தேன். அருளாளர் என்னும் சொல் பற்றி "அருளாளர் பட்டம்" என்பதன் உரையாடல் பக்கத்தில் விளக்கியிருந்தேன் (இங்கே). Saint, Blessed, Venerable, Servant of God என்னும் சொற்பயன்பாடுகள் கத்தோலிக்கத்துக்குச் சிறப்பானவை என்பதால் அங்கு வழக்கத்திலுள்ள சொற்களைக் கையாளுவது பொருத்தம். முத்தி என்பது முக்தியிலிருந்து வருவது - வீடுபேறு என்பது அதன் பொருள். Blessed என்பதும் "பேறுபெற்ற" என்னும் பொருளைக் கொண்டது (காண்க: மலைப்பொழிவு: மத் 5:1-12ஆங்கிலத்திலும் தமிழிலும்).

Saint என்னும் சொல் முன்னாட்களில் (இப்போதும் சில வேளைகளில்) "அர்ச்சயசிஷ்ட(வர்)" என்றிருந்தது. ஆனால் தற்போது "புனித(ர்) என்பது வழக்கம். "தூய, தூயவர்" என்பதும் உண்டு. இச்சொற்களையும் இவற்றோடு தொடர்புடைய martyr (மறைச்சாட்சி), virgin (கன்னியர்), doctor (மறைவல்லுநர்), pastor (மறைப்பணியாளர்), pope (திருத்தந்தை), bishop (ஆயர்) என்னும் சொற்களையும் தேர்வுசெய்வதில் கத்தோலிக்க திருச்சபை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தும் சொற்களை விக்கியிலும் பயன்படுத்துவது சாலச் சிறந்தது. இச்சொற்களை எல்லாம் கத்தோலிக்க சபைக் கோவில்களில் பயன்படுத்தப்படுகின்ற "திருப்பலிப் புத்தகம்" மற்றும் "வாசகப் புத்தகங்களில்" காணலாம்.

"முத்திப்பேறு பெற்ற" என்பது நீண்டதாகப் படின் "முத்தி." என்று சுருக்குவதும் வழக்கம் (Blessed-ஐ Bl. என்பது போல).

"கர்தினால்", "கருதினால்" என்பவற்றுள் முதல் சொல்லே சிறந்தது. இரண்டாம் சொல் "எண்ணினால்" என்னும் பொருள் தரக்கூடும் என்பதால் அதைத் தவிர்க்கலாம்.

கிறித்தவம் தொடர்பாக பதிவுகள் செய்துவருகிறீர்கள். பாராட்டு! பணி தொடர்க! --பவுல்-Paul 12:43, 4 மே 2011 (UTC)Reply


விளக்கம் அளித்தமைக்கு நன்றிகள் பல. கோவிலில் கொடுத்த prayer card-ஐ வைத்தே அருளாளர் என் மொழிபெயர்த்தேன். மேலும் ஒரு சில மண்றாட்டு மலைகளிலும் அவ்வாறே பயண்படுத்தியிருந்தனர். ஆனால் தாங்கள் கூறியது போல் "திருப்பலிப் புத்தகம்" மற்றும் "வாசகப் புத்தகங்களில்" பயன்படுத்தப்படும் வரை முத்திப்பேறு எனவே கொள்ளலாம்.
தங்கள் பாராட்டுதலுக்கும் ஊக்கத்திற்கும் என் உளமார்ந்த நன்றி.
பி.கு: சென்ற முறை கையொப்பம் இட மறந்துவிட்டேன். இப்போது திருத்திவிட்டேன். சிறமத்திற்கு மன்னிக்கவும். --ஜெயரத்தின மாதரசன் 21:19, 4 மே 2011 (UTC)Reply


உங்களது அண்மைய வேண்டுகோளை விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் உயிரியல் என்ற பக்கத்திற்கு நகர்த்தியுள்ளேன். கருத்துகளைப் பேச்சுப் பக்கத்தில் கூறவும். திட்டப்பக்கத்தில் வேண்டாமே!

--சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:31, 27 மே 2011 (UTC)Reply

genome கருத்து

தொகு
  • சூர்யபிரகாசு, நான் பேச்சுப் பக்கத்தில் இருந்ததாக எண்ணிவிட்டேன். நகர்த்தியமைக்கு நன்றி!--பவுல்-Paul 13:56, 27 மே 2011 (UTC)Reply

நிருவாக அணுக்கம்

தொகு
நிருவாக அணுக்கம் பெற வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 03:08, 16 சூன் 2011 (UTC)Reply

நிர்வாக அணுக்கம் - நன்றி

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாக அணுக்கப் பணிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்து உதவிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:56, 28 சூன் 2011 (UTC)Reply

Invite to WikiConference India 2011

தொகு
 

Hi George46,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

நன்றி

தொகு

இலத்தீன் கிரேக்க அறிவியற்பெயர் தமிழாக்கத்தை விரிவாக்கியதற்கு நன்றி :) --செல்வா 03:15, 25 சனவரி 2012 (UTC)Reply

வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயம்

தொகு

பவுல் ஐயா, en:Westminster Cathedral ஒட்டி வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயம் என்ற தமிழாக்கப் பக்கத்தை துவக்கி உள்ளேன். இதில் நிறைய கிறித்தவக் கலைச்சொற்கள் இருப்பதால் தாங்கள் மீளாய்ந்து திருத்த வேண்டுகிறேன்.--மணியன் 10:04, 25 சனவரி 2012 (UTC)Reply

  • மணியன், நீங்கள் கேட்டவாறே மீளாய்வு செய்கிறேன். சும்மா பவுல் என்றே அழையுங்கள். :-) --பவுல்-Paul 13:50, 25 சனவரி 2012 (UTC)Reply
    • பவுல், மிக்க நன்றி. கத்தோலிக்க தமிழ்தான் எத்துணை அழகாக உள்ளது.கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பது இவ்வாறான செயல்களைக் குறித்தே எழுந்திருக்க வேண்டும்.--மணியன் 16:55, 25 சனவரி 2012 (UTC)Reply

விக்கிமூலத்தில் மிக நீண்ட பக்கங்கள் சிலவற்றை அகற்ற வேண்டுகோள்

தொகு

பவுல் ஐயா, உங்கள் விக்கிமூலப் பயனர் உரையாடல் பகுதியில் எனது கருத்தைத் தெரிவித்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 11:19, 2 பெப்ரவரி 2012 (UTC)

பாராட்டுகள்

தொகு
 
பவுல் ஐயா, தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் அரும்பணியையும் வழிகாட்டுதலையும் கருதி உடன்பங்களிப்பாளன் ஆகிய என் உவப்பைத் தெரிவிக்க இப்பதக்கத்தை அளிக்கின்றேன். பிப் 4,2012 செல்வா
  • நன்றி, செல்வா. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன். "ஐயா" என்றல்லாமல் "பவுல்" என்றே அழைக்கலாமே! :) --பவுல்-Paul 20:22, 4 பெப்ரவரி 2012 (UTC)


நல்ல பழக்கவழக்கங்கள்

தொகு

வணக்கம் ஐயா, என்னுடைய பெயர் கார்த்தி, நான் நல்ல பழக்கவழக்கங்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தொடக விரும்புகிறேன். மேலும் எனக்கு கட்டுரை தொடகுவது சற்று தடுமாற்றமாக உள்ளது, தாங்கள் இந்த கட்டுரையை சற்று ( முன்னுரை, சில எடுகோள்கள், நூல்களில் இருந்து எடுத்துக்காடுதல்) தொடங்கி தந்தாள் மிக்க சிறப்பாக இருக்கும்.

என்னுடைய இந்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படுமா? கார்த்தி

நன்றி ஐயா, தங்களின் விளக்கம் சரியாக என்னக்கு புரிந்தது,

நன்றி

தொகு

தங்களின் வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன். கடுமையான சூழ்நிலைகளில் கூட மிகுந்த பண்புடனும் வளர்முகமாகவும் செயல்பட தங்களைப் போன்றோர் முன்மாதிரியாக உள்ளீர்கள். தங்களைப் போன்ற இன்னும் பலரின் நற்பண்புகளை உள்வாங்கி இன்னும் சிறப்பாக விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்க வேண்டும் என்று உணர்கிறேன். நன்றி--இரவி (பேச்சு) 09:39, 14 மார்ச் 2012 (UTC)

உதவி

தொகு

வணக்கம் பவுல் கீழ்கண்டமேரி பென்னிங்டன்‎ கட்டுரையில் இந்தப் பகுதியை எனக்கு மொழி பெயர்த்து உதவிட முடியுமா?


She contributed to many scientific and medical journals and was a member of the American Chemical Society and the Society of Biological Chemists. She was a fellow of the American Association for the Advancement of Science, and a member of the Philadelphia Pathological Society, Sigma XI, and the Kappa Kappa Gamma Sorority.

Awards

Mary Engle Pennington was the recipient of the Garvan-Olin Medal, the highest award given to women in the American Chemical Society. She is also an inductee of both the National Women's Hall of Fame and the ASHRAE Hall of Fame.நன்றி--பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:53, 18 மார்ச் 2012 (UTC)

  • பார்வதிஸ்ரீ, ஆங்கிலப் பகுதியைத் தமிழ்க் கட்டுரையில் இப்போதுதான் பார்த்தேன். எனவே, மொழிபெயர்ப்பை அங்கேயே நேரடியாக இடுகை செய்து பிழைதிருத்தமும் செய்துள்ளேன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்!--பவுல்-Paul (பேச்சு) 20:21, 18 மார்ச் 2012 (UTC)
தங்களின் உதவிக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி பவுல்--பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:43, 19 மார்ச் 2012 (UTC)

பழைய நகர் (யெரூசலம்)

தொகு

வணக்கம்! வார்ப்புரு:பழைய நகர் (யெரூசலம்) இங்கேயுள்ள மொழிபெயர்ப்புக்களை சரிபார்த்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். வார்ப்புரு பேச்சு:பழைய நகர் (யெரூசலம்) இதையும் பார்க்கவும் --Anton (பேச்சு) 04:05, 24 மார்ச் 2012 (UTC)

  • Anton, மாற்றங்கள் செய்துள்ளேன். உரையாடல் பக்கத்தில் விளக்கம் உள்ளது.--பவுல்-Paul (பேச்சு) 05:33, 24 மார்ச் 2012 (UTC)
மிக்க நன்றி!!! --Anton (பேச்சு) 09:27, 24 மார்ச் 2012 (UTC)

தலைதாழ் வணக்கங்கள்!

தொகு

ஐயா... வணக்கம்!
உங்களின் ஆர்வமும், கடும் உழைப்பும் என்னை வியக்க வைக்கிறது. உங்களின் மொழியறிவும், எழுத்தாற்றலும் ... என்னுள் அடங்காத வேகத்தை கிளப்புகின்றன. 'தேவைப்படும் முக்கிய கட்டுரைகளை' நீங்கள் மிகுந்த முனைப்புடன் எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றிகள்! (உங்களிடம் பேசவேண்டும் என நீண்ட நாளாக ஆசை, இன்றுதான் அது நடந்துள்ளது) நட்புடன் - --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:20, 26 மார்ச் 2012 (UTC)

நன்றி!

தொகு
  • செல்வசிவகுருநாதன், உங்கள் வாழ்த்துக்கு நன்றிகூறுகின்றேன். தமிழ் விக்கியில் உங்கள் பங்களிப்புகளைக் கண்டேன். தமிழ் விக்கிக்கு வரும் பயனர்கள் நல்ல, தரமான கட்டுரைகளைப் பெற வேண்டும் என்னும் ஆர்வமே கட்டுரையாக்கத்திற்கு உந்துதலாக உள்ளது. உங்கள் விக்கிப்பணி சிறந்தோங்கிட வாழ்த்துகின்றேன்! வணக்கம்!--பவுல்-Paul (பேச்சு) 22:34, 26 மார்ச் 2012 (UTC)

பண்டைய ரோம்

தொகு

வணக்கம். நீங்கள் எழுதிய பண்டைய ரோம் கட்டுரையை பார்த்தேன். அதில் கீழுள்ள கட்டுரைகளில் உள்ளதை தேவையானவற்றைச் சேர்த்தால் இன்னும் மெருகேரும். நன்றி.

  1. யவனர்
  2. தமிழகத்தில் ரோமானியக் காசுகள்

மேலும் அனைத்து விதக் கட்டுரைகலும் எழுத வாழ்த்துக்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:44, 27 மார்ச் 2012 (UTC)

  • தென்காசி சுப்பிரமணியன், பரிந்துரைக்கு நன்றி. நீங்கள் கூறிய இரு கட்டுரைகளும் தமிழகத்துக்கும் பண்டைய உரோமைக்கும் இடையே நிலவிய தொடர்புகளைக் காட்டுகின்றன. அவற்றிற்கான இணைப்புகளைக் கொடுக்கிறேன். கட்டுரை உரையாக்கத்தை இன்னும் விரிவாக்க எண்ணியுள்ளேன். தமிழ் விக்கிக்குத் தாங்கள் அளித்துவரும் பங்களிப்புக்குப் பாராட்டுகள்! வணக்கம்!--பவுல்-Paul (பேச்சு) 17:00, 27 மார்ச் 2012 (UTC)

நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?

தொகு

வணக்கம், பவுல். தாங்கள் கடந்த இரு ஆண்டுகளாக தமிழ் விக்கிப்பீடியாவுக்குச் சீரிய பங்களிப்புகளை அளித்து வருகிறீர்கள். பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கியுள்ளீர்கள். முக்கிய கொள்கைப் பக்கங்களில் சரியான கேள்விகளைக் கேட்டு, நடுநிலையான கருத்துகளைத் தெரிவிப்பதன் மூலம், அவற்றை மேம்படுத்த உதவியுள்ளீர்கள். இவற்றை ஒரு நல்ல நிருவாகிக்கான பண்புகளாகக் கருதுகிறேன். எனவே, நடந்து வரும் நிருவாகிகள் தேர்ந்தெடுப்பில் உங்கள் பெயரைப் பரிந்துரைக்க விரும்புகிறேன். உங்களுக்கு ஒப்புதலைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 07:46, 19 மே 2012 (UTC)Reply

இரவி, என் பங்களிப்பைப் பாராட்டியதற்கு உளமார்ந்த நன்றி! வேறுபல பணிகளுக்கு நடுவே நேரம் கிடைப்பதற்கு ஏற்ப விக்கிப் பணியும் செய்வதால் நிருவாகப் பணி வேண்டாம் என்றே முடிவுசெய்துள்ளேன். பொறுத்தருள்க! --பவுல்-Paul (பேச்சு) 01:23, 21 மே 2012 (UTC)Reply

பவுல், உங்கள் முடிவை ஏற்றுக் கொள்கிறேன். நேரம் கிடைக்கும் போது வழமை போல் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவுக்குச் சிறப்பாக பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 05:29, 21 மே 2012 (UTC)Reply

பவுல், நீங்கள் இங்கே தந்துள்ள கருத்தை அறியாமல், நான் இரவிக்கு இன்றுதான் ஒரு வேண்டுகோள் விடுத்தேன் (உங்களை நிருவாக அணுக்கத்துக்குப் பரித்துரைத்து)!!விக்கிப்பீடியாவின் தொடர்ந்த நல்வளர்ச்சிக்கு உங்களைப் போன்றவர்கள் நிருவாகியாக இருந்தால் அது பெருமையும், சிறப்பும் தரும் என்று நான் கருதுகின்றேன். மிக்க நடுநிலமையுடனும், ஆழமாகவும் பலதரபப்ட்ட பங்களிப்புகளை நீங்கள் நல்கி வருகின்றீர்கள், பல சிக்கலான கருத்துரையாடல்களிலும் நடுநிலைமை தவறாது ஆக்கமான வழிகளின் நீங்கள் கருத்துரைத்து வந்துள்ளீர்கள். நிருவாகியாக இல்லாமலும் இவை அனைத்தையும் செய்ய இயலும், ஆனால் தங்களைப்போன்றவர்கள் நிருவாகியாக இருந்தால் இன்னும் வலுவூட்டும். இது பெரிய சுமை ஏதும் அன்று. பலரும் பலவகையான பொறுப்புகளைப் பகிர்ந்தே செய்கின்றனர். உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது இயன்றவாறு உழைத்தால் போதும். எனவே சுமையாக நினைக்க வேண்டாம். நீங்கள் நிருவாகிப் பொறுப்புக்கான பரிந்துரையை ஏற்க வேண்டும் என்று விண்ணப்பிக்கின்றேன். நீங்கள் இயலாது என்று கூறினால், நான் தவறாக நினைக்கமாட்டேன், ஆனால் ஏற்பீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன் :) --செல்வா (பேச்சு) 03:26, 3 சூலை 2012 (UTC)Reply

  • செல்வா, இரவியைப் போன்று நீங்களும் விண்ணப்பித்துள்ளதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி. இருப்பினும் (!) ஒருசில காரணங்களை முன்னிட்டுத்துத்தான் நிருவாகப் பணி வேண்டாம் என்றிருக்கின்றேன். என்னால் இயன்ற அளவு விக்கிப் பணியைத் தொடர்வது என்பதிலும் உறுதிகொண்டுள்ளேன். பொறுத்தருள்க. நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 03:52, 3 சூலை 2012 (UTC)Reply
உங்கள் மறுமொழிக்கு நன்றி பவுல். உங்கள் முடிவை முற்றிலும் மதிக்கின்றேன். உங்கள் தொடர்ந்த நல்பங்களிப்பு மிக வேண்டும்! தமிழுக்கும் தமிழர் நல்வாழ்வுக்கும் மிகவும் தேவை. நன்றி.--செல்வா (பேச்சு) 04:05, 3 சூலை 2012 (UTC)Reply

நன்றி

தொகு
 
நன்றி!
நிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.

-பார்வதிஸ்ரீ


-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:26, 26 மே 2012 (UTC) +1 மிக்க நன்றி--சண்முகம் (பேச்சு) 11:38, 26 மே 2012 (UTC) +1 நன்றி. ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:24, 30 மே 2012 (UTC)Reply

மறுமொழி - தேவாலயங்களின் பெயர்

தொகு
 
உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
வணக்கம், George46. உங்களுக்கான புதிய தகவல்கள் Anton இன் பேச்சு பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.


+1 -- பயனர்:Anton

விவிலியம் பகுப்பு

தொகு

பவுல், இங்கே உங்களுக்கு ஒரு செய்தி உள்ளது. நன்றி.--Kanags \உரையாடுக 03:02, 3 சூலை 2012 (UTC)Reply

தமிழ்ப் பதங்கள்

தொகு

வணக்கம், பின்வருவனவற்றிற்கான தமிழ்ப் பதங்களை தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். பதிலை இங்கேயே இடுங்கள். நான் வந்து இங்கேயே பெற்றுக் கொள்கிறேன்.

--Anton (பேச்சு) 03:13, 10 சூலை 2012 (UTC)Reply

தமிழில்...

தொகு
  • Anton, Via Dolorosa என்னும் இலத்தீன் சொற்களைத் "துன்பப் பாதை" என்று தமிழாக்கலாம். எருசலேமில் இயேசு கொலைத் தண்டனை பெற்று, சிலுவையைச் சுமந்து நடந்து சென்ற பாதை.
    Messianism, Messianic Judaism, Supersessionism என்னும் சொற்களுக்கு நேரடித் தமிழாக்கம் தருவதைவிடப் பொருள் விளக்கம் அளிப்பது எளிது. முதல் சொல்லுக்குக் கிறித்தவத்தில் "மெசியா நம்பிக்கை" என்பது பொருள் (இயேசுவே மெசியா). அச்சொல்லைப் பல்வேறு மத நம்பிக்கைகளின் பின்புலத்தில் பார்த்தால், "நிறைவுக்காலப் பெருமான் நம்பிக்கை" என்னும் பொதுவான சொல் பயன்படலாம். அதை இசுலாம், இந்து மற்றும் பௌத்த சமய நம்பிக்கைகளோடு இணைக்கலாம் (ஆங்கிலக் கட்டுரையில் உள்ளது போல). இரண்டாம் சொல்லை "மெசியா நம்பிக்கை யூதம்" எனலாம். இறுதிச் சொல்லை "நிறைவு வாதம்" எனலாம். அதாவது கடவுள் இசுரயேலோடு செய்த உடன்படிக்கை இயேசுவின் சிலுவைச் சாவின் வழியாக ஏற்படுத்தப்பட்ட (புதிய) உடன்படிக்கையால் "நிறைவு" பெற்றது. --பவுல்-Paul (பேச்சு) 04:52, 10 சூலை 2012 (UTC)Reply

தமிழ்ப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. --Anton (பேச்சு) 06:07, 10 சூலை 2012 (UTC)Reply

உதவி வேண்டல்

தொகு

தமிழ்க் கிறித்தவர்கள் சிலுவை நட்டு பொப்பிலிப் பொங்கல் கொண்டாடுவதாக அறிந்திருக்கிறேன். இது தொடர்பான கட்டுரை எழுதி உதவுங்களேன். உக்ரைனியர்கள் கட்டுரையில் வார்ப்புருவில் கிறித்தவ சமய உட்பிரிவுகள் தெரியாததால், அப்படியே எழுதியுள்ளேன். தமிழ்ப் படுத்தித் தாருங்கள். நன்றி! --தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:22, 26 நவம்பர் 2012 (UTC)Reply

நன்றி

தொகு
  நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:16, 14 சனவரி 2013 (UTC)Reply


நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:35, 14 சனவரி 2013 (UTC) +1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:02, 15 சனவரி 2013 (UTC)Reply

அரசு, பிற நிறுவனங்களுடன் தமிழ் விக்கிப்பீடியா உறவாட்டம் குறித்த கொள்கை

தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவுக்கு அரசும் பள்ளிச் சூழலும் நடைமுறையில் எவ்வாறு, எந்த அளவு உதவக்கூடும் என்ற உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். உங்கள் பரிந்துரைகள், ஆதரவை இங்கு தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 16:28, 25 பெப்ரவரி 2013 (UTC)

பதக்கம்

தொகு
  சிறந்த கிறித்தவக் கட்டுரைகளின் பங்களிப்பாளர் பதக்கம்
தாங்கள் திருத்தந்தைத் தேர்தல்களைக்குறித்து எழுதிவரும் கட்டுரைகள் மிக அருமை. அவை விக்கிபீடியாவுக்கும், பின்நாட்களில் தமிழ் கத்தோலிக்கத்துக்குமே மிகப்பெரும் கொடையாக இருக்கும். என் மனம் நிறைந்த நன்றிகள் பல.--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 10:02, 10 மார்ச் 2013 (UTC)


  விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:11, 10 மார்ச் 2013 (UTC)
  • ஜெயரத்தின மாதரசன், தங்கள் பாராட்டுக்கும் பதக்கத்திற்கும் நன்றி! கிறித்தவம் பற்றிய தங்கள் கட்டுரைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் சிறப்பாக உள்ளன. பணி தொடர வாழ்த்துகிறேன்!--பவுல்-Paul (பேச்சு) 16:33, 10 மார்ச் 2013 (UTC)

தமிழில் எப்படி எழுதுவது?

தொகு

Apostolic Nunciature மற்றும் Nuncio ஆகியவற்றுக்கான தமிழ் சொற்கள் யாவை? --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 19:52, 15 மார்ச் 2013 (UTC)

  • ஜெயரத்தின மாதரசன், Nuncio என்னும் சொல் Nuntius என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறக்கிறது. அதற்கு "தூதர்" (Ambassador) என்பது பொருள். ஒரு நாட்டுக்குத் திருத்தந்தையின் தூதராகச் செல்பவர் Nuncio. Apostolic Nuncio = திருத்தந்தைத் தூதர். கத்தோலிக்க திருச்சபையின் ஆட்சி தொடர்பான தமிழ்-ஆங்கில-தமிழ் கலைச்சொல் தொகுதி இங்கே உள்ளது: கலைச் சொல் தொகுதி. --பவுல்-Paul (பேச்சு) 20:11, 15 மார்ச் 2013 (UTC)
  மிக்க நன்றி ஐயா. நான் முதலில் அங்கு சென்று பார்த்து விட்டு பொருள் கிடைக்காததாலேயே உங்களிடம் கேட்டேன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 17:31, 16 மார்ச் 2013 (UTC)

நன்றி!

தொகு

வணக்கம் ஐயா!
வரலாற்றில் இனப்படுகொலைகள் எனும் முக்கியக் கட்டுரையை எழுத ஆரம்பித்தமைக்கு மிக்க நன்றி. உங்களைப் போன்ற பொறுமைவாய்ந்த, சிறந்த தமிழறிஞர்களால் மட்டுமே இம்மாதிரியான கட்டுரைகளை உருவாக்கி வளர்த்திட இயலும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:18, 29 மே 2013 (UTC)Reply

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:56, 24 சூன் 2013 (UTC)Reply

மணப்பாடு

தொகு

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களுடன் தொடர்பு கொள்வதில் மகிழ்கிறேன்.வீரமாமுனிவர் இறந்த இடமான மணப்பாடு ஊரின், தேவாலயப் படங்கள் தங்களிடம் உள்ளனவா? இல்லையாயின், உங்கள் நண்பர்கள் வழியே ஆவணப்படுத்தக் கோருகிறேன். மேலும், அங்குள்ள ஆலயத்தார், தேம்பாவணியின் ஒரு பகுதியை இசைப் பாடல்களாக பாடியுள்ளனர். அது குறித்தும் அறிய ஆவல். இது போல, பல கிறித்தவ மாமுனிகள் குறித்த, பல வரலாற்று படங்கள் விக்கியில் இல்லை. அத்தகைய ஆவணங்கள் இருப்பின், அவைகளை பொதுவகத்தில்(Commons) பதிவேற்ற நான் எனது உதவிட விரும்புகிறேன். பொதுவகத்தில் பதிவேற்றினால், இருநூற்றிற்கும் மேற்பட்ட பிறமொழி விக்கிப்பீடியாவின் திட்டங்களிலும், பிற விக்கித்திட்டங்களிலும் தெரியும் என்பதால், இந்த வேண்டுகோளை முன் வைக்கிறேன். காலத்தையும் கடந்து நிற்கும் அவர்களைப் பற்றிய ஆவணங்களை விரிவாக்க, என் நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம். tha.uzhavanATgmailCOM -9095343342.வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 01:59, 31 சூலை 2013 (UTC)Reply

  • வணக்கம், தகவலுழவன். நீண்டகாலமாக விக்சனரிக்குப் பங்களிக்காத நிலை. கிறித்தவப் பெருமக்கள் தொடர்பான படங்கள் குறித்து நீங்கள் கூறுவதோடு உடன்படுகிறேன். படங்கள் பெற முயல்கிறேன். நன்றியும் வாழ்த்தும்!--பவுல்-Paul (பேச்சு) 02:35, 31 சூலை 2013 (UTC)Reply
மிக்க மகிழ்ச்சி. மேலும், சில எண்ணங்கள்:-
  1. படங்களைப் பெற்றவுடன், என் உரையாடற்பக்கத்தில் மறவாமல் தெரிவிக்கவும். ஆவண செய்வோம்.
  2. ஆயிரகணக்கான படங்கள் இருந்தாலும், தானியக்கமாக எளிதில் பொதுவகத்தில் ஏற்றிவிடலாம். பிறகு நேரம் கிடைக்கும் போது, படக்குறிப்புகளை எழுத. அங்கு வசதிகள் உள்ளன.விடைபெறுகிறேன். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 03:02, 31 சூலை 2013 (UTC)Reply
திருக்குறளுக்குப் பெருமை சேர்க்கும் செவ்விய பணியைச் செய்துள்ளீர்கள். உண்மையில் இது தேவனின் திருநெறி. மகிழ்ச்சி. வாழ்த்தி அருளுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 11:41, 3 ஆகத்து 2013 (UTC)Reply
  • திருக்குறள் பற்றிய செய்திகளை இன்னும் விரிவாக விக்கியில் ஏற்றுவது காலத்தின் தேவை என்றே நானும் கருதுகிறேன். தங்கள் குறட்பணி வளர வாழ்த்துகிறேன்!--பவுல்-Paul (பேச்சு) 15:24, 3 ஆகத்து 2013 (UTC)Reply
வணக்கம் ஐயா! தங்களைப் போன்று விரிவான, விளக்கமான, அழகான கட்டுரைகளை எழுத எனக்கும் ஆசை...
திருக்குறள் உரை அச்சேற்றப் பட்டியல் கட்டுரைக் குறித்து கருத்தினைச் சொல்ல என்னிடம் வார்த்தைகளில்லை; அத்துணை அருமையான கட்டுரை! நன்றி! அன்புடன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:02, 7 ஆகத்து 2013 (UTC)-Reply
  • மிக்க நன்றி, செல்வசிவகுருநாதன். விக்கியில் தாங்கள் கருநாடக வலைவாசல் தொடங்கியுள்ளதைப் பார்த்தேன். தமிழ் இசை பற்றிய ஆய்வுநூல்களில் காணும் தகவல்களைத் தொகுத்து கட்டுரைகளாக வடித்து விக்கியில் தரவேற்றினால் பலருக்கும் பயனாகுமே! உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.--பவுல்-Paul (பேச்சு) 05:10, 7 ஆகத்து 2013 (UTC)Reply

குறள் வாசிப்பு (நூல்)

தொகு

வணக்கம் ஐயா! இந்த நூல் குறித்த கட்டுரையின் ஆரம்பத்தில் 2002இல் வெளியிடப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது. குறிப்பு எனும் தலைப்பின்கீழ் 2001 என்றுள்ளது. ஒருமுறை சரிபார்த்து திருத்தம் செய்ய வேண்டுகிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:07, 15 ஆகத்து 2013 (UTC)Reply

ஆரம்பத்தில் இருந்தத் தகவலுக்கும் பகுப்பிற்கும் வித்தியாசம் இருந்தமையால் உடனடியாக கவனிக்க முடிந்தது; உரிய பகுப்பினை இப்போது கொணர்ந்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:23, 15 ஆகத்து 2013 (UTC)Reply

Return to the user page of "George46/தொகுப்பு 1".