நன்றி தொகு

 
நன்றி!
நிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.

-பார்வதிஸ்ரீ


-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:19, 26 மே 2012 (UTC)+1 மிக்க நன்றி--சண்முகம் (பேச்சு) 11:42, 26 மே 2012 (UTC) +1 நன்றி ஹை. ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:21, 30 மே 2012 (UTC)Reply

மகிழ்ச்சி தொகு

 
மீண்டும் சோடாபாட்டில்! --மதனாகரன் (பேச்சு) 15:08, 26 ஆகத்து 2012 (UTC)Reply

வணக்கம் பாலா, உங்களை மீண்டும் விக்கியில் காண்பது மகிழ்ச்சியாய் உள்ளது.--Kanags \உரையாடுக 22:32, 25 ஆகத்து 2012 (UTC)Reply

தேனியில் மழை இல்லையே என்றிருந்த நிலையில் நேற்று சாரல் மழை பெய்தது மகிழ்ச்சியாக இருந்தது. இதுபோல் இன்னொரு நிகழ்வும் நேற்று நடந்திருந்தது. ஆம், சோடாபாட்டில் விக்கியில் சிறிது எட்டிப் பார்த்திருந்தார்...!--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 01:19, 26 ஆகத்து 2012 (UTC)Reply
  விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 03:02, 26 ஆகத்து 2012 (UTC)Reply
:-) கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தைக் கூட்ட எண்ணியிருக்கிறேன். பார்ப்போம்..--சோடாபாட்டில்உரையாடுக 03:13, 26 ஆகத்து 2012 (UTC)Reply
இனி சோடாபாட்டில் பறக்கும் போலிருக்கிறது. தூள் கிளப்புவோம். :-) -- சுந்தர் \பேச்சு 04:36, 26 ஆகத்து 2012 (UTC)Reply
  விருப்பம்--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 08:34, 26 ஆகத்து 2012 (UTC)Reply
  விருப்பம்--கலை (பேச்சு) 08:40, 26 ஆகத்து 2012 (UTC)Reply
  விருப்பம்----Nan (பேச்சு) 08:44, 26 ஆகத்து 2012 (UTC)Reply
  விருப்பம்--மணியன் (பேச்சு) 14:20, 26 ஆகத்து 2012 (UTC)Reply
  விருப்பம்----தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:38, 26 ஆகத்து 2012 (UTC)Reply
  விருப்பம்--சங்கீர்த்தன் (பேச்சு) 15:50, 26 ஆகத்து 2012 (UTC)Reply
  விருப்பம்----சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:00, 26 ஆகத்து 2012 (UTC)Reply
  விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:14, 22 அக்டோபர் 2012 (UTC)Reply
  விருப்பம்--மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 17:14, 22 மார்ச் 2013 (UTC)

இங்கு யாரோ ஒரு தெரியாத புதுப்பயனரின் பேச்சுப்பக்கத்தில் ஏன் இத்தனை பேர் பதிலளிக்கிறார்கள் என்று தெரியவில்லையே..? இருந்தாலும் இந்த புதுப்பயனர் மற்றவர் கட்டுரைகளில் மாற்றம் செய்வதால் இவருக்கு அசத்தும் புதுப்பயனர் பதக்கம் வேண்டுமானால் தரலாம். அதை விட்டுவிட்டு ஏன் இத்தனை பேர் பாராட்டுகிறீர்கள். :-)--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:53, 27 ஆகத்து 2012 (UTC)Reply

அடப்பாவி ஒரு மூணு மாசம் காணாம போனா, புதுப்பயனராக்கிடீங்களேப்பு :-)--சோடாபாட்டில்உரையாடுக 17:18, 27 ஆகத்து 2012 (UTC)Reply

மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி! இரண்டாம் உலகப் போர் (கட்டுரைகள்) மீண்டும் ஆரம்பமாகும் என நினைக்கிறேன். உங்கள் ஒடெசா முற்றுகைதான் என்னை கிழக்குப் போர்முனையை ஆரம்பிக்க வைத்தது. --Anton (பேச்சு) 17:39, 27 ஆகத்து 2012 (UTC)Reply

நன்றி அன்டன். கிழக்கில் மீண்டும் போர் மூண்டு விட்டது :-)--சோடாபாட்டில்உரையாடுக 17:45, 27 ஆகத்து 2012 (UTC)Reply

இந்திய தேசிய இராணுவத்தினருக்கு ஏன் தேசிய ஓய்வூதிய தொகை இல்லை? தொகு

ஜான்சி ராணி படை கோவிந்தம்மாள் தமிழ்க அரசின் நிதி மட்டுமே பெறுகிறார். தேசிய ஓய்வுதியம் கிடைக்கவில்லை. ஒட்டு மொத்த தேசிய இராணுவத்தின் கதியும் இதுதானா? இல்லை தமிழகத்தில் மட்டும் தான் இந்த கதியா? நீங்கள் இது பற்றி ஏதேனும் தகவலறிவீர்களா?

கோவிந்தம்மாள் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தானே தன் நகைகளையும் சீதனமாக கிடைத்த நிலத்தையும் தந்தார். இருந்தும் தமிழக அரசு மட்டும் ஓய்வூதியம் குடுப்பானேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:25, 14 செப்டெம்பர் 2012 (UTC)

வருக! வருக!! தொகு

தமிழ் விக்கிப்பீடியாவிற்கான சோடாபாட்டிலின் மறு வருகை மகிழ்ச்சியளிக்கிறது. அவர் தொகுத்தலில் காட்டும் வேகம் வியக்க வைக்கிறது!! வருக! வருக!!--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 10:57, 23 அக்டோபர் 2012 (UTC)Reply

செய்ய நினைத்து தங்கிப்போனவற்றை ஏதோ கொஞ்சம் செய்து கொண்டிருக்கிறேன். மீண்டும் நேரமும் தெம்பும் ஒருங்கே கிடைப்பது எப்போது எனத் தெரியவில்லை. உள்ள போதே கொஞ்சம் தொண்டாற்றுகிறேன் :-)--சோடாபாட்டில்உரையாடுக 11:02, 23 அக்டோபர் 2012 (UTC)Reply

பிரெஞ்சுப் புரட்சி தொகு

சோடா, பிரெஞ்சுப் புரட்சி பற்றிய கட்டுரையை இவ்வளவு விரிவாக விளக்கமாக எழுதி முடித்தமைக்கு எனது பாராட்டுகள்.--Kanags \உரையாடுக 11:45, 31 அக்டோபர் 2012 (UTC)Reply

நன்றி கனக்ஸ். மீண்டும் களத்திலிறங்கும் முயற்சி தான். இரு மாதங்களாகி விட்டது. முதல் படி தாண்டியாகி விட்டது. இனி தினம் பங்களிக்கும் வழக்கத்தை மீண்டும் கொள்ளவேண்டும். :-)--சோடாபாட்டில்உரையாடுக 12:07, 31 அக்டோபர் 2012 (UTC)Reply

Tidel Park CBE தொகு

Hi Sodabottle, I just created my first article: டைடல் பூங்கா, கோயம்புத்தூர். Please let me know if it is alright. --Rsrikanth05 (பேச்சு) 06:43, 8 திசம்பர் 2012 (UTC)Reply

படம் தொகு

தாரிக் இப்னு சியாத் கட்டுரையில் படம் சரியாக வரவில்லை. அதைச் சற்றுக் கவனிக்க முடியுமா?--பாஹிம் (பேச்சு) 15:56, 26 திசம்பர் 2012 (UTC)Reply

குறிப்பிட்ட கட்டுரையில் சரி செய்திருக்கிறேன். வார்ப்புருவையும் திருத்தலாம். ஆனால் அவ்வார்ப்புரு இணைக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கட்டுரைகளையும் திருத்த வேண்டி வரும். அதனால் இப்போதைக்கு அப்படியே விட்டு விடுகிறேன்.--Kanags \உரையாடுக 22:19, 26 திசம்பர் 2012 (UTC)Reply

தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு தொகு

இம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும்.

சோடா, உங்கள் ஊட்கப் போட்டி அனுபவங்களை வைத்து பல்லூடக ஆவணப்படுத்தல் தொடர்பான ஒரு கட்டுரையை சமர்ப்பித்தால் சிறப்பாக இருக்கும். அது நுட்ப அணுகுமுறையிலோ அல்லது சமுக அணுகுமுறையிலோ அல்லது இரண்டும் சேர்தகாவோ அமையலாம். --Natkeeran (பேச்சு) 19:42, 26 திசம்பர் 2012 (UTC)Reply

செய்கிறேன் நற்கீரன். :-)--சோடாபாட்டில்உரையாடுக 06:47, 28 திசம்பர் 2012 (UTC)Reply
நன்றி. --Natkeeran (பேச்சு) 01:44, 29 திசம்பர் 2012 (UTC)Reply

உதவவும்... தொகு

'காரைக்குடி மணி' கட்டுரையில் பயன்படுத்த ஒரு gif கோப்பினை காமன்சில் 'manual upload' செய்தேன். காப்புரிமை குறித்த சில தகவல்களை அப்போது தரத் தெரியாததால், ஏழு தினங்களுக்குள் அகற்றப்படும் நிலை உள்ளது. அந்தப்படத்தை தற்சமயம் கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். பிரச்சினையைத் தீர்க்க உதவவும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:40, 29 திசம்பர் 2012 (UTC)Reply

 Y ஆயிற்று. தேவையான காப்புரிமைத் தகவல்களை இணைத்திருக்கிறேன். இப்போது சரியாகிவிட்டது.--சோடாபாட்டில்உரையாடுக 18:52, 29 திசம்பர் 2012 (UTC)Reply

மிக்க நன்றி! உங்களை மீண்டும் இங்கு தொடர்ந்து பார்ப்பது, மகிழ்ச்சியைத் தருகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:15, 29 திசம்பர் 2012 (UTC)Reply

இன்னும் சில நாட்கள் இருப்பேன். அரையாண்டு விடுமுறை முடிந்தபின் மீண்டும் களப்பணி (களைப்பு தரும் பணி :-)) தொடங்கும். அப்போது பங்களிப்புகள் குறைந்துவிடும்.--சோடாபாட்டில்உரையாடுக 01:50, 30 திசம்பர் 2012 (UTC)Reply
உங்களின் பங்களிப்பு குறைவு விக்கிமீடியா நிறுவனத்தில் ஏதும் பணியில் அமர்ந்துவிட்டீர்களோ என்றே நினைத்தேன். ஆனால் //அரையாண்டு விடுமுறை முடிந்தபின் மீண்டும் களப்பணி (களைப்பு தரும் பணி// இந்த வரிகள் ஆசிரியர் பணியில் அமர்ந்துவிட்டீர்களோ என்று நினைக்க வைக்கிறது. இருப்பினும் எப்பணியாயினும் அப்பணியை சிறப்பாக செய்வீர்கள் என்று கருதுகிறேன். --HK Arun (பேச்சு) 03:45, 30 திசம்பர் 2012 (UTC)Reply
அருண், ஆசிரியர் வேலை தான் :-). ஆனால் நிரந்தரப் பணியல்ல. அரசு சாரா நிறுவனம் ஒன்றில் ஃபெல்லோவாக இருக்கிறேன். ஈராண்டுகள் சமூக-பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய இடத்தில் இயங்கும் பள்ளியில் ஆசிரியனாக இருக்க வேண்டும். தற்போது அரசு பள்ளியொன்றில் மூன்றாம் வகுப்பு ஆசிரியனாக இருக்கிறேன். பணி நேரம் குறைவெனினும், எதிர்நோக்கும் சிக்கல்களும், பணிச்சுமையும் அதனால் விளையும் உளச்சோர்வும் அதிகமென்பதால் விக்கிப்பீடியாவைப் படிக்க மட்டுமே முடிந்து வந்தது. இப்போது கொஞ்சம் பழகிவிட்டதால் விக்கித் திட்டங்களில் பங்களிப்புகளை அதிகரிக்க முயன்று வருகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 03:58, 30 திசம்பர் 2012 (UTC)Reply
உங்கள் ஆசிரியர் பணி எப்படி இருக்கும் என்று சிந்தித்தால், சாட்டை சமுத்திரக்கனி நினைவுக்கு வருகிறார். மகிழ்ச்சி! சாதியுங்கள் :-)--HK Arun (பேச்சு) 04:20, 30 திசம்பர் 2012 (UTC)Reply
நன்றி அருண். சாட்டை சமுத்திரக்கனியை விட வாகை சூட வா விமல் போன்ற வேலை (ஆனால் அந்தளவு கடினம் இல்லை. :-) )--சோடாபாட்டில்உரையாடுக 04:28, 30 திசம்பர் 2012 (UTC)Reply
அப்ப்டி எனில் செங்கற்சூழை பொன்வண்ணன் யாராம்? சத்தியமா நா இல்லீங்க :)---தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:10, 4 சனவரி 2013 (UTC)Reply

சிறந்த நிர்வாக பங்களிப்பும் இழப்பும் தொகு

அன்புடன் சோடாபாட்டில், உரையாடல்களின் போது கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதுண்டு. ஆனால் ஒரு நிர்வாக அணுக்கம் பெற்ற விக்கிப்பீடியர் என்ற வகையில் அந்த நிர்வாக அணுக்கத்தை எந்தளவிற்கு சிறப்பாக செய்யமுடியுமோ அந்தளவிற்கு உங்கள் பங்களிப்புகள் முன்சான்றாக காட்டி நிற்கின்றன. அதற்கு என்றும் எனக்கு மதிப்பு உண்டு. அந்த இடத்தை நிரப்பும் அளவிற்கு இதுவரை தமிழ் விக்கியில் ஒருவரும் இல்லை என்பது தமிழ் விக்கிப்பீடியாவின் இழப்பாகவே நான் பார்க்கிறேன். இருப்பினும் நேரம் கிடைக்கும் போது விக்கியில் உங்கள் பங்களிப்பு தொடரும் என எதிர்ப்பார்க்கிறேன். நன்றி! --HK Arun (பேச்சு) 04:20, 30 திசம்பர் 2012 (UTC)Reply

மலேசியாவில் ஒரே விக்கிபீடியர் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் தொகு

மலேசியாவைப்பற்றி 128 கட்டுரைகள். மலேசியாவிற்கு ஓர் இடம் கொடுங்கள். எனக்கு உதவி செய்ய வேண்டாம். மலேசியாவில் இருக்கும் 22 இலட்சம் தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதி. கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நான் எழுதி கொண்டுதான் இருப்பேன். ஆளை விடுங்கள்.--ksmuthukrishnan 15:17, 12 சனவரி 2013 (UTC)

வணக்கம் முத்துகிருஷ்ணன். இக்குறிப்பு நிருவாக அணுக்கம் குறித்தானது என்ற ஊகத்தில் பின்வரும் விடையளிக்கிறேன். உங்கள் குறிப்பு வேறொரு விசயத்தைப் பற்றியதானதெனில் இதனைக் கண்டுகொள்ள வேண்டாம்.
விக்கித்திட்டங்களில் "நிருவாகி" என்பது பதவியோ, பட்டமோ, பிரதிநிதித்துவமோ அல்ல. அது ஒரு அணுக்கம். விக்கியின் பராமரிப்பு வேலைகளில் குறிப்பிட்டவை - கட்டுரைகளை, நீக்குதல், ஒன்றாக்குதல், விசமிகளைத் தடைசெய்தல் - போன்றவை மட்டும் செய்ய உதவும். சுருங்கச் சொல்லின் விக்கிப்பீடியா "நிருவாகி" என்பவரும் பயனர் போன்றவரே. கூடுதலாகத் துப்புரவு மற்றும் காவலாளிப் பணியினைச் செய்வார். அவ்வளவுதான். யாருக்கு நிருவாக அணுக்கம் வழங்கப் பரிந்துரைக்கப்படுகிறதென்பதையும் இதுவே தீர்மானிக்கின்றது. ஒரு பயனர் புதிய கட்டுரைகளைக் கண்காணித்தல், அண்மைய மாற்றங்களை ரோந்து செய்தல், கட்டுரைகளை ஒன்றிணைத்தல் போன்ற வேலைகளைச் செய்து அவை பற்றிய கொள்கைகளை நன்கு அறிந்திருப்பாரெனின் அவரை நிருவாகியாக்க பரிந்துரை செய்யப்படுகிறது. இது அவருக்குக் கிடைக்கும் அங்கீகாரமோ பதவி உயர்வோ அல்ல. அவர் செய்யும் பணிகளுக்கு பிற நிருவாகிகளை அணுகி காலம் வீணாகாது அவரே செய்ய ஏற்பாடு செய்வதே ஆகும். "நிருவாகி" அணுக்கம் நாடு, சமூகம், மதம், சாதி, பாலினம், அனுபவம், வயது அடிப்படையில் பகிர்ந்தளிக்கபடுவதும் இல்லை. குறிப்பிட்ட பராமரிப்பு வேலைகளைச் செய்வதில் நாட்டம் காட்டி அவற்றை செவ்வனே செய்து வருபவர்களுக்கு அவர்களது வேலையை எளிதாக்க வழங்கப்படுகிறது. எ.கா. எனக்கு தமிழ் விக்கியில் 2011 இல் நிருவாக அணுக்கம் வழங்கப்பட்டது. ஏனெனில் நான் பராமரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வந்தேன். அப்போதிருந்த நிருவாகிகளிடம் அடிக்கடி இதற்காக உதவி கேட்டு வந்தேன். எனக்கே நிருவாக அணுக்கம் வழங்கப்பட்டதால் அப்பணிகளை விரைவாக நானே செய்து முடிக்க இயலுகின்றது. தமிழ் விக்கிக்கு முன்னரே ஆங்கில விக்கியில் பங்களிக்கத் தொடங்கி விட்டேன். ஆனால் அங்கு பெரும்பாலும் பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுவதில்லை (விரும்பவும் இல்லை) எனவே எனக்கு அங்கு நிருவாக அணுக்கம் வழங்கப்படவில்லை.
நீங்களும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டால் உங்களையும் நிருவாகியாக்கப் பரிந்துரைப்பர். ஏனெனில் விக்கியில் பராமரிப்பு வேலைகள் தான் கடினமானவை, அலுப்பூட்டக் கூடியவை. மேன்மேலும் பலர் இவற்றைச் செய்வதில் முனைப்பு காட்டுவரென்றால் அது மிகவும் வரவேற்கக் கூடிய விசயம். நிருவாகிகள் எண்ணிக்கை உயருவதில் இப்போதுள்ள நிருவாகிகளுக்கு மிகவும் விருப்பமே. வேலைப் பளு குறையுமே. எனவே உங்களையோ மலேசியத் தமிழர்களையோ புறக்கணித்து விட்டதாக அருள் கூர்ந்து எண்ண வேண்டாம். இதனைப் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். இது பற்றி வேறென்ன ஐயமிருப்பினும் கேளுங்கள். என்னால் இயன்ற வரை விளக்குகின்றேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:14, 14 சனவரி 2013 (UTC)Reply

நன்றி தொகு

  நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:09, 14 சனவரி 2013 (UTC)Reply


நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:24, 14 சனவரி 2013 (UTC) +1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:53, 15 சனவரி 2013 (UTC)Reply

இரண்டாம் உலகப்போரில் சோடா தொகு

சோடாபாட்டில் தான் 2ஆம் உலகப்போரை கிழக்கு முனையில் முதலில் ஆரம்பித்து வைத்தார். ஆதாரம் கூடிய விரைவில் சேர்க்கப்படும். :)- --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:50, 16 சனவரி 2013 (UTC)Reply

ஆதாரமற்ற இத்தகவல் நீக்கப்பட்டு விட்டது ;-)--சோடாபாட்டில்உரையாடுக 15:25, 16 சனவரி 2013 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரைக்கான பரிந்துரைகள் தொகு

நீங்கள் பங்களித்த சிறந்த கட்டுரை அல்லது நீங்கள் சிறந்த கட்டுரையாகக் கருதும் கட்டுரையை முதல் பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்காக இப்பக்கத்தில் தங்களின் பரிந்துரைகள் வேண்டப்படுகின்றன.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:46, 31 சனவரி 2013 (UTC)Reply

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல் தொகு

வணக்கம், Sodabottle/தொகுப்பு18!

 

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 09:16, 2 பெப்ரவரி 2013 (UTC)

எம்.ஐ.டீ.கணினி பயிலரங்கம்/செயல்விளக்க அரங்கத்தில் தமிழ் விக்கி தொகு

நண்பர்! எம்.ஐ.டீ. பயிலரங்கம் பற்றி ஏதும் தகவல் உண்டா?--பரிதிமதி (பேச்சு) 13:46, 10 பெப்ரவரி 2013 (UTC)

சென்னை விக்கியர் சந்திப்பு தொகு

தவிர்க்கவே இயலாத காரணம். மாலை வர இயலாது. 9 அன்று பகலில் (பிற்பகல் 2 மணிக்குள் இருந்தால்) வர முடியும்.--பரிதிமதி (பேச்சு) 03:08, 5 மார்ச் 2013 (UTC)

பரவாயில்லை. இனி அடிக்கடி சென்னையில் சந்திப்பு நடத்தும் எண்ணம் உள்ளது. அப்போது உங்களை சந்தித்து விடுகிறோம் :-)--சோடாபாட்டில்உரையாடுக 12:24, 5 மார்ச் 2013 (UTC)

அழைப்பிற்கு நன்றி! சொந்தப் பிரச்சினைகளின் காரணமாக விக்கியில் எனது பங்களிப்பும் கடந்த அக்டோபர் மாதம் முதல் குறைந்துவிட்டது; இன்னொருமுறை நல்ல சூழ்நிலையில் சந்திக்கிறேன். நட்புடன் - --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:06, 7 மார்ச் 2013 (UTC)

பதக்கத்திற்கு நன்றி தொகு

எனது பங்களிப்புகளைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்கிய சோடாபாட்டில் அவர்களுக்கு மிக்க நன்றி. --செ. செல்வக்குமார் (பேச்சு) 16:15, 9 மார்ச் 2013 (UTC)

பயனர் பக்க திருத்தம் நீக்கக் கோரல் தொகு

என் பயனர் பக்கத்தின் சில திருத்தங்களை நீக்க வேண்டுகிறேன். தனிப்பட்ட சில தகவல்கள் தந்துள்ளமையால், பொது வெளியில் தவறாக பயன்படுத்தப்படுமோ என்று அஞ்சுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:53, 11 மார்ச் 2013 (UTC)

 Y ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 15:58, 11 மார்ச் 2013 (UTC)
நன்றி-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:06, 11 மார்ச் 2013 (UTC)

என்ன வேறுபாடு தொகு

வணக்கம், ஒரு சந்தேகம். சிறப்பு:Log/newusers பக்கத்தில் இரண்டுவிதமான கணக்குகள் காட்டப்படுகின்றன 1)தானாக உருவாக்கப்பட்டது 2) ஒரு புதிய பயனர் கணக்கை உருவாக்கியுள்ளார். 2-க்கும் என்ன வித்தியாசம்? ஏன் 2 விதமாக காட்டப்படுகிறது? இதில் தானாக உருவாக்கப்பட்டது என்பது Bot-ஆல் (அ) Bot-க்காக உருவாக்கப்படுகிறதா? அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 19:18, 18 மார்ச் 2013 (UTC)

”தானாக உருவாக்கப்பட்ட” கணக்குகள் பிற விக்கித்திட்டங்களில் யாரேனும் கணக்கு துவங்கும் போது தமிழ் விக்கியிலும் உருவாகும் கணக்குகள். --சோடாபாட்டில்உரையாடுக 00:51, 19 மார்ச் 2013 (UTC)
நன்றி, தானாக உருவாக்கப்பட்ட கணக்குகளுக்குப் பேச்சுப் பக்கத்தில் புதுப்பயனர் வார்ப்புரு இடத்தேவையில்லைதானே? கி. கார்த்திகேயன் (பேச்சு) 05:38, 19 மார்ச் 2013 (UTC)
தமிழ் விக்கியில் தோன்றும் புதிய பயனர்கள் அனைவருக்கும் பேச்சுப் பக்கங்களில் செய்தி இடுவது தானே முறை? வேறுபாடுகள் தேவையில்லை. நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:21, 19 மார்ச் 2013 (UTC)
ஆம் அனைவருக்கும் வரவேற்பு செய்வது நல்லது. ஆர்வமுள்ளவர்கள் த.வி.யின் பால் ஈர்க்கப்படலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:28, 19 மார்ச் 2013 (UTC)
இடுவதென்றால் இடலாம். நேரடிப் பலன் எதுவும் இல்லை என்று எண்ணியதால் இதுவரை இடுவதில்லை. தாராளமாக செய்ல்லாம்: :-)--சோடாபாட்டில்உரையாடுக 10:26, 19 மார்ச் 2013 (UTC)
நன்றி :) கி. கார்த்திகேயன் (பேச்சு) 11:50, 19 மார்ச் 2013 (UTC)

தானாக உருவாகும் பயனர் கணக்குகளுக்கு வரவேற்பு இடுவது பயன் தராது என்பது என் எண்ணம். இவற்றில் பல பிற மொழிப் பயனர்களுடையது. ஏன், நேரடியாக இங்கு கணக்கு உருவாக்குபவர்களுகுக இடும் வார்ப்புருவின் பயனே மிகக் குறைவு தான். அதை எப்படி மேம்படுதல்லாம் என்று சிந்திக்கலாம்.--இரவி (பேச்சு) 12:39, 19 மார்ச் 2013 (UTC)

பதக்கம் தொகு

  சிறந்த வழிகாட்டுனர் பதக்கம்
மிகவும் தாமதமாக வழங்கப்படும் பதக்கம். ஒரு காலத்தில் சோடா செய்த புயல் வேக வழிகாட்டுதல்களுக்கு.

பின்குறிப்பு : இதை இரவியின் பக்கத்தில் இருந்து ஈயடிச்சான் காப்பி பண்ணேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:41, 28 மார்ச் 2013 (UTC)விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

"ஒரு காலத்தில்". இன்னும் இங்கதாம்லே இருக்கேன். "ஓய்வு பெற்ற விக்கியர் சோடா" ன்னு போஸ்டர் அடிச்சிராதீங்கப்பா :-)--சோடாபாட்டில்உரையாடுக 15:58, 28 மார்ச் 2013 (UTC)

நான் கூறியதை முழுதாக படிக்கவும். ஒரு கால்த்தில் செய்த புயல் வேக வழிக்காட்டுதல்களுக்கு. தற்போது பங்களிப்பு உள்ளது. ஆனால் புயல் கரையோரங்களில் தான் தான் தென்படுகிறது. மீண்டும் நிலத்துக்கு வந்து சுற்றி சூறாவளியாக அடிக்க வேண்டும் என்பதால் அப்படி எழுதினேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:48, 28 மார்ச் 2013 (UTC)

  விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:32, 29 மார்ச் 2013 (UTC)
Return to the user page of "Sodabottle/தொகுப்பு18".