ஓர் ஐயம் தொகு

திரு சோடாபாட்டில், எழுத்தாளர் காவேரி(எழுத்தாளர்)யின் பக்கத்தை நான்தான் தொகுத்துக் கொண்டிருந்தேன். முறையற்று எதுவும் செய்யவில்லை;ஆனால் அதைத் தொகுப்பது தடுக்கப்பட்டிருப்பதாக நீங்கள் சொன்னது வருத்தமளிக்கிறது. முறையான ஆதாரங்களைத் திரட்டி அந்தக் கட்டுரையை சிறப்பாக மேம்படுத்தவே நான் முயற்சித்துக் கொண்டிருந்தேன். அதை அனுமதிக்குமாறும் அதன் பிறகு தாங்கள் அதை சீராக்கிக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

கயல்கண்ணி,
தாங்கள் தொகுத்தல் முறையற்றது என்று கருதி நான் அதைப் பூட்டி வைக்கவில்லை. நீங்கள் செய்யும் மாற்றங்கள் முன்பு கனக்ஸ் சீர் செய்து மாற்றியிருந்ததை மீண்டும் மீண்டும் மாற்றுவது போல் இருந்ததால் தான் பூட்டினேன். நீங்கள் முன்பு எழுதியிருந்ததை கனக்ஸ் விக்கிக்கு ஏற்ப மாற்றியிருந்தார். அதனை மீண்டும் நீங்கள் முன்பிருந்தது போலவே மாற்றியமைப்பது விக்கி வழக்குகளுக்கு ஏற்றதன்று. எனவே, செய்யப்படும் மாற்றங்கள் எத்தகையன என்பதை கவனித்து, மேலும் தகவல்களைச் சேர்க்குமாறு வேண்டுகிறேன். இப்போது பூட்டியதை நீக்குகிறேன். வேண்டிய மாற்றங்களை செய்துவிட்டு சொல்லுங்கள், விக்கி நடைக்கும், முறைக்கும் ஏற்றார் போல் மாற்றி விடுகிறேன்--சோடாபாட்டில்உரையாடுக 13:47, 18 ஏப்ரல் 2013 (UTC)

சோடாபாட்டில் அவர்களே...மிக்க நன்றி, நான் விக்கி எழுத்துக்குப் புதியவள்.குறிப்பிட்ட எழுத்தாளரிடமிருந்தே தரவுகளைப் பெற்றபின்பே மாற்றங்களை ஆதார பூர்வமாகச் செய்கிறேன்.தற்போது தடை நீக்கப்பட்டமைக்கு நன்றி. தக்க தகவல்களை நான் சேர்த்ததும் விக்கிக்கு ஏற்பத் தாங்கள் மாற்றியமைத்தால் எனக்கு மகிழ்ச்சியே.

உதவி தொகு

ஒரு கட்டுரையின் தலைப்பை எப்படி சாய்வெழுத்தாக மாற்றுவது?? உங்கள் சேவை இங்கு தேவை :)--அராபத் (பேச்சு) 10:17, 23 ஏப்ரல் 2013 (UTC)

உங்கள் கருத்தை வேண்டுகிறேன் தொகு

வணக்கம் பாலா, இங்கு உங்கள் கருத்தை வேண்டுகிறேன். --அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 12:19, 23 ஏப்ரல் 2013 (UTC)

பகுப்பின் தலைப்பில் எழுத்துப்பிழை, பாரதிய ஜனதா கட்சித் தேசியத் தலைவர்கள் என தவறுதலாக இட்டுவிட்டேன். அதனால் தலைப்பை மாற்ற வேண்டியிருக்குமோ என்ற சந்தேகத்திலேயே கேட்டேன். மாற்றவேண்டிய அவசியம் இல்லையென்றால் மிக்க மகிழ்ச்சி, அவசியம் மாற்ற வேண்டுமாயின் பாரதிய ஜனதா கட்சி தேசியத் தலைவர்கள் (அ) பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர்கள் இரண்டில் ஏதாவது ஒன்றை பயன்படுத்துகிறேன். --கி. கார்த்திகேயன் (பேச்சு) 05:37, 24 ஏப்ரல் 2013 (UTC)

உதவி தேவை... தொகு

வணக்கம்! எனது தேவைகள்:

  1. 'கேட்பொலி கோப்புகளை' (audio file) கட்டுரைகளில் நேரடியாக சேர்த்தல்
  2. இணைய தளங்களில் இருக்கும் கேட்பொலி மற்றும் காணொளிகளுக்கு கட்டுரைகளிலிருந்து இணைப்பு தருதல்

இச்செயல்களுக்கு நாம் பின்பற்ற வேண்டிய காப்புரிமை மற்றும் இன்னபிற விதிமுறைகள் என்னென்ன? அறியத் தரவும், நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:06, 30 ஏப்ரல் 2013 (UTC)

1) ஒலிக்கோப்புகளை .ogg file ஆக மாற்ற வேண்டும். அதற்கு இலவசமான audacity மென்பொருளை பயன்படுத்தலாம். இதற்கு இவை நாம் உருவாக்கிய ஒலிக்கோப்புகளாக இருக்க வேண்டும். அல்லது நியாயப் பயன்பாட்டுக்காக பயன்படுத்த வேண்டுமெனில் 45 நொடிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் (எ.கா. குறையொன்றும் இல்லை பாடல் கட்டுரையில் எம். எஸ் பாடிய ஒலிக்கோப்பை சேர்க்க வேண்டுமெனில் 45 நொடிகளுக்கு மிகாமல் உள்ள துண்டினை சேர்க்க வேண்டும்).
2) புற இணைப்புகளாக தரும் போது, மேற்கோளாக இருந்தால் ஒரு சிக்கலும் இல்லை. வெளி இணைப்பாக இருந்தால், அவ்விணைப்பில் பதிப்புரிமை மீறல் இருக்கிறதா என்று உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். (யூடியூபில் உள்ள திரைப்படப் பாடல்கள் போன்றவை).--சோடாபாட்டில்உரையாடுக 04:26, 30 ஏப்ரல் 2013 (UTC)

தெரிந்து கொண்டேன்; மிக்க நன்றி, பாலா! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:54, 13 மே 2013 (UTC)Reply

ஓர் உதவி கோரி தொகு

நான் தொகுத்த காவேரி(எழுத்தாளர்)பக்கத்திலிருந்து முறையற்று நுழைந்த எவரோ ஒருவர் -nevercryஎன்று காட்டுகிறது - படத்தை நீக்கிவிட நான் மறுபடி சேர்த்திருக்கிறேன்.காப்புரிமைக்கட்டுப்பாடு அற்ற அந்தப்படம் பொதுத்தளத்திலும் உள்ளதாலேயே பயன்படுத்தி உள்ளேன். தகவல்கள் அனைத்தும் எழுத்தாளரிடமிருந்து பெறப்பட்டவை. எந்தப்பிழையும் அற்றவை.அதை மேலும் செம்மையாக்கி உதவக்கோருகிறேன். கயல்கண்ணி

"காப்புரிமைக்கட்டுப்பாடு அற்ற அந்தப்படம் பொதுத்தளத்திலும் உள்ளதாலேயே பயன்படுத்தி உள்ளேன்".பொதுத்தளத்தில் உள்ள படங்கள் அனைத்தும் காப்புரிமை கட்டுப்பாடு இல்லாதவை அன்று. அப்படத்தை எடுத்தவரே தெளிவாகக் கட்டுப்பாடு இல்லை என வெளிப்படையாக அறிவித்தால் தான் அதனை அவ்வாறு ஏற்க இயலும்.--சோடாபாட்டில்உரையாடுக 18:05, 6 மே 2013 (UTC)Reply

காவேரி (எழுத்தாளர்)பக்கத்தை நான் முழுவதும் செம்மை செய்து விட்டேன்.இன்னும் கூட விக்கிக்கேற்ப மாற்ற வேண்டுமெனக்காட்டுகிறது.தகவல்களை மாற்றாமல் உடன்...எவரேனும் உதவுக

Do we have any strict rules like en.wiki in Tamil for this area? —Vensatry(உரையாடுக) 16:20, 12 மே 2013 (UTC)Reply

no. as long the hook is interesting and fits the general size limit everything is accepted.--சோடாபாட்டில்உரையாடுக 16:27, 12 மே 2013 (UTC)Reply

தகவல் வேண்டி... தொகு

வணக்கம், பாலா!
நாள்தோறும் ஒரு திருக்குறளை அதன் பொருளுடன் வலைவாசல்:தமிழிலக்கியம் எனும் பக்கத்தில் காட்சிப்படுத்த நானும் பார்வதிஸ்ரீயும் திட்டமிட்டுள்ளோம். விக்கியின் ஏதேனும் ஒரு தளத்தில் அல்லது பயனரின் பக்கங்கள் எதிலாவதோ குறள்கள் தானியங்கியாக காட்சியாகும் வசதி ஏதேனும் உள்ளதா? நீங்கள் அறிந்திருந்தால் சொல்லவும். இருந்தால் அதனையே வலைவாசல்:தமிழிலக்கியம் எனும் பக்கத்திலும் பயன்படுத்தலாம். இல்லையெனில், 31 குறளை தெரிவுசெய்து ஒரு வடிவமைப்புப் பக்கத்தின் மூலமாக காட்சிப்படுத்த எண்ணியுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:59, 13 மே 2013 (UTC)Reply

செய்ய இயலும். விக்சனரியின் முதல் பக்கத்தில் “தினம் ஒரு சொல்” எப்படி மீடியாவிக்கியின் தேதி மாறிகளைப் பயன்படுத்தி காட்சிப்படுத்தப்படுகிறது என்பதைப் பார்க்கலாம். அதே முறைமையை இதற்கும் பயன்படுத்தலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 09:07, 13 மே 2013 (UTC)Reply

இல்லை, நான் கேட்பது என்னவென்றால்... திருக்குறளும் இதே மாதிரி 'தினம் ஒரு குறள்' என ஏற்கனவே எங்காவது காட்சிப்படுத்தப்பட்டு வரப்படின், அதை அப்படியே பயன்படுத்தலாம் என்பதுதான். செய்யப்பட்ட வேலையை திரும்பச் செய்யவேண்டாம் என நினைக்கிறேன். (மீடியாவிக்கியின் தேதி மாறிகளைப் பயன்படுத்தி காட்சிப்படுத்துதலை நான் ஏற்கனவே கற்றுக்கொண்டுள்ளேன்). --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:36, 13 மே 2013 (UTC)Reply

இல்லை. நானறிந்து இதுவரை யாரும் இது போன்று செய்யவில்லை.--சோடாபாட்டில்உரையாடுக 09:39, 13 மே 2013 (UTC)Reply

பகுப்பு தொகு

வணக்கம் சோடா. பகுப்புப் பக்கத்தினை உருவாக்குவது எப்படி? -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:16, 14 மே 2013 (UTC)Reply

சாதாரண பக்கம் போலவே தான். [[பகுப்பு:பகுப்பு பெயர்]] இது போன்று முன்னொட்டுடன் சிவப்பிணைப்பை உருவாக்கி அப்படியே பக்கத்தை உருவாக்கி (உள்ளே ஒன்றும் இல்லாமல்) சேமித்து விடுங்கள். பின்பு தேவையான தாயப் பகுப்பில் சேர்த்து விடுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 07:20, 14 மே 2013 (UTC)Reply

வணக்கம் தொகு

நான் எஸ் கே மகேந்திரன் என்னும் ஒருவரின் கட்டுரையை எழுதி இருந்தேன் நீக்கி விட்டீர்கள். காரணம் 1.பதிப்புரிமை மீறல் என்றுள்ளது .2.விக்கிபீடியாவில் இடம்பெறக் கூடியவர் அல்ல என்று

1. நீங்கள் காட்டி இருக்கும் வலைபதிவு என்னுடைய சொந்த தயாரிப்பு அதில் எழுதும்போது இங்கேயும் அதனை பதிவிட்டேன் என்ன தவறு இது பற்றி நான் நக்கீரன் கனீஸ் ஆகியோருக்கு ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன் .கூகுளே இல் நன் தமிழில் எழுதி இங்கே எடுத்து வருகிறேன் அவ்வளவு தான்.எனக்கு அந்த முறை இலகுவாக படுகிறது .தயவு செய்து அனுமதிப்பீர்கள்.என எனுகிறேன் நான் யாரும் எழுதுவதை பிரதி பண்ணி எழுதவில்லை எனத்கு சொந்த தயாரிப்பில் உருவான வலைபதிவுகளே அவை .

2.எஸ் கேமகேந்திரன் தீவுப்பகுதியில் பிறந்து தமிழரசுகட்சி கூட்டணி கட்சிகளின் முன்னணி பேச்சாளரும் இளைஞர் பேரவை,கூட்டணிதமிழர் சுயாட்சி கழகம் , தமிலரசுகட்சி ஆகியவற்றில் ன் அதியுயர் பதவிகளை வகித்தவர் .பிரபல சட்டத்தரணி , கனடா ஈழநாடு பத்திரிகை ஆசிரியர்க இருந்தவர் .ஏராளமான நூல்களை வெளியிடவர் .புங்குடுதீவின் முன்னணி வழிகாட்டி பெரியவர்கள் வரிசையில் முதல் 5 இடங்களில் வைக்கபட்டவ்ர் புங்குட்தீவில் சனசமூக நிலையம் கிராம முன்னேற்ற சங்கம் இளம் தமிழர் மன்றம் மது ஒழிப்புக் கழகம் என்பவற்றின் சமூக சேவை யாளர் நிர்வாகங்களை அலங்கரித்தவர்


எனவே இந்த மடல் கண்டு தொடர்ந்து இந்த கட்டுரையை எழுத அனுமதிப்பீர்கலேன நினைகிறேன் நன்றி --Siva-sandrabalan (பேச்சு) 21:30, 16 மே 2013 (UTC)Reply

விளக்கத்திற்கு நன்றி. மீண்டும் கட்டுரையை உருவாக்குங்கள். ஆனால் மிகவும் நடுநிலையான சொல்லாடல்கள் கொண்டு தகவல் கட்டுரையாக உருவாக்குங்கள் (வலைப்பதிவுக்குறிய நடையைப் பயன்படுத்தாமல் - வலைப்பதிவு நடையும் விக்கி நடையும் வெகுவாக வேறுபட்டவை).--சோடாபாட்டில்உரையாடுக 04:47, 17 மே 2013 (UTC)Reply

உதவி தொகு

இங்கு குறிப்பிட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண இயலுமா ?--மணியன் (பேச்சு) 00:34, 21 மே 2013 (UTC)Reply

 Y ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 05:49, 21 மே 2013 (UTC)Reply
அட, வேகமான வேலைதான் :) நன்றிகள் பல!! --மணியன் (பேச்சு) 06:07, 21 மே 2013 (UTC)Reply

என்ன செய்யலாம் தொகு

அண்டர்மகன் குறுவழுதியார்--Sengai Podhuvan (பேச்சு) 18:21, 23 மே 2013 (UTC)Reply

காணிக்கை தொகு

  • எளியேனுக்கு 1013 விக்கியேனியா கருத்தரங்கம் செல்ல முழு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
  • இது ஒரு நல்வாய்ப்பு.
  • "எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்."
  • வரவேற்றவர் நற்கீரன்
  • சங்க காலப் புலவர்கள் கட்டுரையில் தலைப்புப் பிரிப்பு செய்து வழிகாட்டியவர் கனகசீர்
  • விக்கியில் அடிக்குறிப்பு இடக் கற்றுத்தந்த இறைவன் பாலா.
  • பகுப்புக் குறிப்பு சேர்க்கக் கற்றுக்கொடுத்த இறைவன் தென்காசியார்.
  • இவர்களுக்கு இந்த நல்வாய்ப்பைக் காணிக்கை ஆக்கி நிறைவடைகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 18:54, 27 மே 2013 (UTC)Reply

மலேசிய வானொலி பேட்டி தொகு

அன்புள்ள சகோதர்களுக்கு, நம்முடைய விக்கிப்பீடியாவின் அதிகாரிகளில் ஒருவரான செல்வசிவகுருநாதன் Selvasivagurunathan நேற்று 30.05.2013இல் மலேசிய வானொலிக்கு ஒரு பேட்டி அளித்து இருந்தார். அதில் விக்கிப்பீடியாவின் செயலாக்கங்ளைப் பற்றி விரிவாகச் சொல்லி இருந்தார். மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பேட்டியின் இறுதியில் அவர் பயன்படுத்திய வாசகங்கள் என்னை மிகவும் பாதித்துவிட்டன.

அவர் சொன்னார் ‘மலேசியாவில் இருந்து இதுவரை யாரும் எழுதவில்லை. நிறைய பங்களிப்பாளர்கள் தேவை. நீங்களும் எழுதலாமே’ என்று பேட்டி எடுத்தவரையே கேட்டுக் கொண்டார்.

அதைக் கேட்ட போது என் மனம் நொறுங்கிப் போனது. என் பெயரைச் சொல்ல வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்க்கவும் கூடாது. ஆனால், யாருமே எழுதவில்லை என்று சொன்னதுதான் என்னையும் என் மனைவியையும் மிக மிகப் பாதித்துவிட்டது.

யார் என்ன சொன்னாலும் சரி சொல்லாவிட்டாலும் சரி, நான் எழுதிக் கொண்டுதான் இருப்பேன். இது என்னுடைய விக்கிப்பீடியா.மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு) --ksmuthukrishnan 05:46, 1 சூன் 2013 (UTC)Reply

மதிப்பிற்குரிய முத்துக்கிருஷ்ணன்,
சிவகுரு வானொலியில் என்ன கூறினார் என்று நான் கேட்கவில்லை. ஆனால் அது வானொலி நேர்காணலைத் தொகுத்தலில் out of context ஆக ஆனதாகத் தான் இருக்கும் என நம்புகிறேன். மேலும் நாங்கள் அனைவரும் நேர்காணல் அளித்துப் பழகியவர்கள் இல்லை. ஏதேனும் ஒன்று கூற வந்து வேறு மாதிரியாகக் கூட அதை வெளிப்படுத்தியிருக்கலாம். விக்கி பற்றிய எனது நேர்காணல்களிலும் ஊடகப் பேட்டிகளில் கூட இவ்வாறு நடந்துள்ளன. சிவகுருவும் நானும் பிற விக்கியர்களும் உங்கள் மீது நன்மதிப்பு கொண்டுள்ளோம். சென்ற வாரம் சென்னை சந்திப்பில் கூட உங்கள் பங்களிப்புகளைப் பற்றிப் பேசிக் கொண்டு தான் இருந்தோம். நீங்கள் சிறையில் இருந்து தொகுத்தது, சிபில் கார்த்திகேசுவின் கல்லறைக்கே சென்று ஆய்வு செய்தது போன்றவற்றை பிற மொழி விக்கிப்பீடியர்களிடம் இந்திய விக்கி மடலாடற் குழுமத்தின் மூலம் வியந்து பகிர்ந்திருக்கிறார் இரவி. இது போன்று விக்கி சமூகம் உங்கள் மீது கொண்டுள்ளா மதிப்பினைக் காட்ட பல நிகழ்வுகள் உள்ளன. இந்த நிகழ்வு நான் கூறினார் போல் விதிவிலக்காக அல்லது தவறுதலாக நிகழ்ந்திருக்ககூடுமெனவே உறுதியாக நம்புகிறேன். நீங்கள் வருத்தம் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 06:04, 1 சூன் 2013 (UTC)Reply
நானும் நேர்காணலைக் கேட்கவில்லை, இருப்பினும், மலேசிய வானொலியிலான நேர்காணல் எனும் போது செல்வசிவகுருநாதன், மலேசியாவிலிருந்து பங்களிப்பு செய்யும் சிலரைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். முக்கியமாக மலாக்கா முத்துக்கிருஷ்ணனை நேர்காணலில் குறிப்பிட்டு இருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். மலேசியாவிலிருந்து மேலும் பலரை விக்கிப்பீடியாவில் பங்களிப்பு செய்ய உதவியிருக்கும். (இங்கு மலாக்கா முத்துக்கிருஷ்ணன் உணர்வுகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்) சோடாபாட்டில் குறிப்பிட்டது போல் செல்வ சிவகுருநாதன் புதிதாக நேர்காணலில் பங்கேற்றிருப்பதால் விடுபட்டுப் போயிருக்கும். (இது போன்ற தவறுகள் அனைவருக்கும் வருவதுதான்.) ஊடகங்களுக்கான நேர்காணலுக்குப் போகும் போது/ நேர்காணல் அளிக்கும் போதும், ஊடகங்களில் முக்கியத் தகவல்கள் விடுபட்டுப் போய்விடாமல் இருக்க குறிப்புகள் எடுத்துச் செல்வது இது போன்ற பிழைகளை தவிர்க்க உதவும்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 10:00, 1 சூன் 2013 (UTC)Reply
பதற்றமே காரணமாக இருந்திருக்கும். ஏனெனில், நம்மில் பலரும் நேர்காணல்களுக்கு அறிமுகமற்றவர்கள். நான் பல நேரங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்கள் யாரும் பங்களிப்பதில்லை என்று என்னைத் தெரிந்தவர்களே எனக்கு முன்பே கூறக்கேட்டிருக்கிறேன். ஆனால், எனக்கு அப்படிக் கூறுவதே பிடித்திருந்தது. ஏனெனில், அப்போதாவது மாணவர்களுக்கு நாம் பங்களிக்க வேண்டும் என்று ஓர் எண்ணம் வரும். நான் பங்களிப்பது தெரிந்தால் அவர்களது தேடல்களும் வினவல்களும் நான் பதில் கூறுவதிலேயே முடிந்துவிடும். பார்வைகள் விரிவடைய வேண்டும். எனக்கு தற்போது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல்வேறு தொழில்களைச் செய்யும் பலர் நண்பர்களாக உள்ளார்கள். அந்த ஒரு வலையமைப்பையே நான் விரும்புகிறேன். இந்த உள்ளக அங்கீகாரங்கள் அந்நேரத்தில் நம்மை உயர்த்திக்காட்டினாலும் பல காலம் கழித்து அதன் பயன் ஒன்றுமில்லாதிருப்பதை நாம் உணர்வோம். மேலும், நீங்கள் அதனை உணர்ந்ததாலேயே 'தொடர்ந்து பங்களிப்பேன்' என்று தெளிவாகக் கூறியிருக்கிறீர்கள். நன்றி. விக்கியில் பெரிய பெரிய சில வேலைகள் செய்பவர்கள் இன்னும்கூட அறியாப்பயனராக (anonymous) இருக்க விரும்புகிறார்கள். ஆங்கில விக்கி சிறந்த எடுத்துக்காட்டு. அவர்களை ஊடகங்களிலோ வலைப்பதிவுகளிலோ கூட அவர்களது பொருளற்ற பயனர் பெயர்களைக் கொண்டே குறிப்பிடுகிறார்கள். உங்கள் பங்களிப்பைத் தொடர்ந்து எதிர்நோக்குகிறேன். நன்றி. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 20:35, 1 சூன் 2013 (UTC)Reply
செல்வசிவகுருநாதனுக்கும் இந்நிகழ்வுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அவர் விளக்கியிருக்கிறார். மேலும், சூரியப்பிரகாசு: //விக்கியில் பெரிய பெரிய சில வேலைகள் செய்பவர்கள் இன்னும்கூட அறியாப்பயனராக (anonymous) இருக்க விரும்புகிறார்கள்.// சோடாபாட்டிலும், booradlep உம் நல்ல உதாரணம்:).--Kanags \உரையாடுக 23:31, 1 சூன் 2013 (UTC)Reply
//சோடாபாட்டிலும், booradlep உம் நல்ல உதாரணம்// கனக்ஸ் என்னையும், பூங்கோதையையும் இப்போது பலர் சந்தித்து விட்டனர். மர்ம மனிதர் பட்டியலில் நீங்கள் மட்டும் தான் நீடிக்கிறீர்கள். :-)--சோடாபாட்டில்உரையாடுக 03:53, 2 சூன் 2013 (UTC)Reply

வணக்கம். selvasivagurunathan பேட்டி கொடுக்கவில்லை என்று சொல்கிறார். நல்லது. மலேசிய வானொலியின் தலைவர் பார்த்தசாரதி அவர்களுடன் பேசினேன். செல்வகுருநாதன் கொடுத்த பேட்டியை விக்கிப்பீடியாவுக்கு அனுப்பலாமா? போதுமான சான்றுகள் இல்லாமல் எதையும் எழுதக்கூடாது என்பது தொடர்ந்து வரும் நம்பிக்கை. மலாக்கா முத்துக்கிருஷ்ணன் நம்பிக்கையான மனிதர் என்பது மலேசிய இந்தியர்களின் கருத்துகள். பொய் சொல்ல வேண்டியது அவருக்கும் அவசியம் இல்லை.--ksmuthukrishnan 05:58, 2 சூன் 2013 (UTC)

உங்கள் விருப்பம். இது பற்றி எனக்கு பின்வருவது புரிகிறது: ”மலேசிய வானொலியின் தலைவர் பார்த்தசாரதி” என்று நீங்கள் சொல்வதிலிருந்து அது மின்னல் எப்.எம் என ஊகிக்கிறேன். செல்வ. சிவகுருநாதன் யாருக்கும் பேட்டியளிக்கவில்லை என்று சொல்லிவிட்டார். மேலும் மின்னல் எப்.எம்க்கு விக்கிப்பீடியா பற்றி பேட்டியளித்தது செல்வா (பேராசிரியர் செ. இரா. செல்வக்குமார்) என்று அவர் உங்கள் பேச்சுப் பக்கத்தில் இட்டிருக்கும் குறிப்பில் இருந்து தெரிகிறது. செல்வாவும் செல்வ. சிவகுருவும் இரு வேறு விக்கிப்பீடியர்கள். செல்வா கனடாவில் பேராசிரியர், சிவகுரு சென்னையில் இருக்கிறார். இருவருமே தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகிகள்.
செல்வா சொல்வது போல ஐந்து நிமிடத் செவ்வித் துளிக்கு முன்னுரையிலும் பின்னுரையிலும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஏதேனும் சேர்த்திருக்கலாம் அல்லது எளிதாக வெட்டி ஒட்டுவதில் out of context ஆக நேரிட்டிருக்கலாம் அல்லது ஐந்து நிமிடத்தில் அவசரமாகச் சொன்னதில் அப்படி நிகழ்ந்திருக்கலாம். மீண்டும் சொல்கிறேன் (மேலே சூர்யாவும் இதே தான் சொல்கிறார்). நாங்கள் அனைவரும் சாதாரண விக்கிப்பீடியர்களே. ஊடகப்பரப்புரை செய்வதில் தேர்ந்தவர்கள் அல்லர். கொடுக்கப்படும் வடிவத்திலும் நேரத்திலும் விக்கியை அறிமுகம் செய்து, பங்களிக்க வாருங்கள் என்று அழைப்பதே எங்கள் நோக்கம். குறைந்த நேரத்தில் பதற்றத்தில் பல விசயங்களையும் வெளிப்படுத்தும் அவசரத்தில், அதை ஊடக்காரர்கள் ஒலி/ஒளிபரப்பும் அடுக்குமுறையில், அல்லது அவர்கள் கூடுதலாக முன்னுரையும் பின்னுரையும் சேர்ப்பதில் எனத் தவறுகள் நிகழப் பல வாய்ப்புகள் உள்ளன. இது என் அனுபவத்தில் நான் உணர்ந்தது.--சோடாபாட்டில்உரையாடுக 06:48, 2 சூன் 2013 (UTC)Reply
முத்துக்கிருட்டிணன் அவர்களின் பக்கத்திலும் இங்கும் இந்த மலேசிய வானொலி நேர்காணல் பற்றி நீங்கள் கூறிய கருத்துகளுக்கு மிகவும் நன்றி. ஒலிப்பதிவு கிடைத்தால் பகிர்கின்றேன். --செல்வா (பேச்சு) 14:57, 3 சூன் 2013 (UTC)Reply

வலி சுமக்கும் வரலாறு தொகு

http://ksmuthukrishnan.blogspot.com/2013/06/blog-post.html இந்தத் தலைப்பில் என்னுடைய வலைப்பதிவில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். இதை எப்படி திருத்தி நம்முடைய விக்கிப்பீடியாவிற்கு கொண்டு வரலாம். உங்கள் கருத்துகள் தேவை. (மலாக்கா முத்துக்கிருஷ்ணன்) (பேச்சு)--ksmuthukrishnan 06:08, 3 சூன் 2013 (UTC)Reply

பதிப்புரிமை தொகு

தமிழ் விக்கியில் புகைப்படங்களுக்கான பதிப்புரிமை இல்லையா? —Vensatry(உரை) 07:42, 16 சூன் 2013 (UTC)Reply

இருக்கிறது. ஆனால் விழிப்புணர்வு அதிகம் கிடையாது.  :-) --சோடாபாட்டில்உரையாடுக 08:34, 16 சூன் 2013 (UTC)Reply

அவசர உதவி தேவை தொகு

பார்க்கவும் விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#உங்களுக்குத் தெரியுமா?. --அராபத் (பேச்சு) 04:46, 3 சூலை 2013 (UTC)Reply

மேற்காணும் திரைப்படத்தை பற்றிய புத்தகங்கள் ஏதேனும் தங்களிடம் உள்ளனவா? —Vensatry(உரை) 14:22, 2 ஆகத்து 2013 (UTC)Reply

பத்தாண்டு கொண்டாட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு தொகு

பாலா, தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்ட பொறுப்பாளர்களில் ஒருவராக பணியாற்ற இயலுமா? கள ஒருங்கிணைப்பு, மேல் விக்கியுடனான தொடர்பாடல், ஏற்கனவே இது போன்ற நிகழ்வுகளை நடத்திய அனுபவம் என்று உங்கள் பங்களிப்பு பெரிதும் உதவியாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 17:29, 23 ஆகத்து 2013 (UTC)Reply

வேலைப்பளு மிகுதியால் பொறுப்பேற்று பணியாற்ற இயலாது இரவி. --சோடாபாட்டில்உரையாடுக 17:49, 23 ஆகத்து 2013 (UTC)Reply
கௌரவப் பொறுப்பாளர்னு போட்டுக்கலாமா :) விடுறதா இல்ல :)--இரவி (பேச்சு) 18:01, 23 ஆகத்து 2013 (UTC)Reply
ம்ஹூம். வேணாமே. இப்பவே கண்ணைக்கட்டும் நிலையில் இருக்கிறேன். :-). --சோடாபாட்டில்உரையாடுக 18:07, 23 ஆகத்து 2013 (UTC)Reply
சரி, பேசுபுக்கைப் பார்த்தாலே புரியுது :) வழக்கம் போல, தேவைப்படும் போது ஆலோசனைகளைக் கோருகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 18:09, 23 ஆகத்து 2013 (UTC)Reply

ஊடக அறிக்கை எழுத உதவி தேவை தொகு

விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/இதழாளர் சந்திப்பு/அறிக்கை எழுத உங்கள் உதவி தேவைப்படுகிறது. வரும் 15ஆம் தேதித்துக்குள் எழுதி முடித்துவிட்டால் நன்றாக இருக்கும். சுந்தரின் உதவியையும் கோரியுள்ளேன். நன்றி.--இரவி (பேச்சு) 09:29, 12 செப்டம்பர் 2013 (UTC)

மீண்டும் நல்வரவு! தொகு

வாங்க, வணக்கம் ! மீண்டும் கலக்குங்க!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:56, 12 செப்டம்பர் 2013 (UTC)

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 19:58, 18 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்... தொகு

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:52, 27 செப்டம்பர் 2013 (UTC)

புதுப்பயனர் கட்டுரைகளை காலம் தாழ்த்தி நீக்க வேண்டுகோள். தொகு

வணக்கம் நண்பரே,

தங்களுடைய வழிகாட்டல்களில்தான் விக்கிப்பீடியாவில் என்னுடைய பங்களிப்பு சாத்தியப்பட்டது. தற்போது எண்ணற்ற புதுப்பயனர்களின் வருகை விக்கிப்பீடியாவிற்கு வருவதால் அவர்களை வழிநடத்துதல் நமக்கு அவசியமாகிறது. புதுப்பயனர்களுக்கு விக்கியைப் பற்றிய அறிவு அதிகம் இல்லாதமையால் பதிப்புரிமையுள்ள உள்ளடக்கம், தெளிவற்ற உள்ளடக்கம் போன்ற கட்டுரைகளை துவங்குகிறார்கள். அவற்றை உடனே நீக்கம் செய்ய வேண்டாம். அது அவர்களுக்கு புரிதல் இல்லாமையால் விக்கியை விட்டு வெளியேறிவிடும் அபாயத்தினை தருகிறது. எனவே சில காலம் உடனடி நீக்குதலை செய்யாமல் அவர்களின் கட்டுரைகளில் மேலதிக விவரங்களை சேர்க்கவும், உரிய நடையில் எழுதவும் வழிகாட்டல் வார்ப்புருகளை இணைக்க வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:40, 30 செப்டம்பர் 2013 (UTC)

சரி அப்படியே செய்கிறேன் :-)--சோடாபாட்டில்உரையாடுக 06:45, 30 செப்டம்பர் 2013 (UTC)
வேண்டுகோளை ஏற்றமைக்கு மிக்க நன்றிங்க. திடீரென புதுப்பயனர் வருகை அதிகரித்திருப்பதால் விக்கிப்பீடியா மேலாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இந்த சுமையை இன்முகத்துடன் ஏற்று எனக்கு வழிகாட்டியதைப் போல அவர்களுக்கு வழிகாட்ட தங்களுடைய ஆலோசனைகளையும் கூற வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:49, 30 செப்டம்பர் 2013 (UTC)
புதிய பயனர்களின் கட்டுரைகளில் சேர்க்க புதிய வார்ப்புரு அமைக்கப்பெற்றுள்ளது. இதினை பயன்படுத்த: {{புதுப்பயனர் கட்டுரை|புதுப்பயனரின் பெயர்|date=இன்றய திகதி}} என இடுக. இதில் புதுப்பயனரின் பெயரும், திகதி கட்டாயமல்ல. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:42, 30 செப்டம்பர் 2013 (UTC)

இருநாள் சென்னைக் கூடல் பற்றிய கருத்து தேவை தொகு

வணக்கம். இரு நாள் சென்னைக் கூடல் பற்றிய நிறை, குறைகள், கருத்துகளை விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/விமர்சனங்கள் பக்கத்தில் இட வேண்டுகிறேன். வருங்காலத்தில், இது போன்ற நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக திட்டமிட இது உதவும்.--இரவி (பேச்சு) 03:34, 1 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றியுரைத்தல் தொகு

  நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:00, 15 அக்டோபர் 2013 (UTC)Reply
 
நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 02:03, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

மிக்க நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி!!
--அஸ்வின் (பேச்சு) 03:38, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

 --நந்தகுமார் (பேச்சு) 08:30, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

உதவி தொகு

கவனிக்க:

 Y ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 13:38, 28 அக்டோபர் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி தொகு

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:04, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெற நியமித்தல் தொடர்பான பரிந்துரைக் குழு தொகு

நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் நியமித்தல் தொடர்பான பரிந்துரைக் குழு உங்களை ஓர் உறுப்பினராக பங்களிக்க வேண்டுகிறேன். பங்களிக்க இசைவு எனில் குழு என்ற பகுதியில் உங்கள் பெயரைச் சேர்த்து விடுங்கள். நன்றி. --Natkeeran (பேச்சு) 02:22, 28 அக்டோபர் 2013 (UTC)Reply

 Y ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 13:34, 28 அக்டோபர் 2013 (UTC)Reply
பங்களிக்க முன்வைந்தமைக்கு நன்றிகள். குழுவின் நோக்கம் கணிசமாக மாறியுள்ளது. அதனைக் கவனித்து உங்கள் பணியை நாளை தொடங்கலாம். மீண்டும் நன்றிகள். நீங்கள் இந்தக் குழுவின் செயற்பாட்டில் ஒரு ஒருங்கிணைப்பாளார்க செயற்பட முடிந்தால் சிறப்பு. --Natkeeran (பேச்சு) 14:06, 30 அக்டோபர் 2013 (UTC)Reply
சோடாபாட்டில், தமிழ் விக்கிப்பீடியாவில் நிறைய பங்காற்றியும் ஆங்கில விக்கி முறைமைகளை நன்கு அறிந்தும் (உள்வாங்கியும்) உள்ள நீங்கள் இப்பொறுப்பை ஏற்பது மிகவும் பயன் தரும். குழுவின் மற்ற நடுநிலையாளர்களுடன் கருத்தாடுவதற்குக் களமமைத்து ஒருங்கிணைத்து உதவுங்கள். -- சுந்தர் \பேச்சு 06:55, 1 நவம்பர் 2013 (UTC)Reply
ஒருங்கிணைப்பாளராக இருப்பதைக் காட்டிலும் (மாந்த உறவுச் செயல்பாடுகள்) முறைமை உருவாக்கலில் என் பங்களிப்புகள் அதிக பிரயோசனம் உள்ளவையாக இருக்கும் என நம்புகிறேன். எனவே அதில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 14:05, 2 நவம்பர் 2013 (UTC)Reply
நன்றி சோடா. -- சுந்தர் \பேச்சு 08:12, 4 நவம்பர் 2013 (UTC)Reply
கருத்துக்களைத் தொகுத்து, இறுதி முடிவுகளைத் தெரிவிக்கவும். கூடிய காலம் தேவைப்படின், அதையும் கூறவும். நன்றி.--Natkeeran (பேச்சு) 14:40, 7 நவம்பர் 2013 (UTC)Reply
சோடா, குழுவின் முடிவுகளைத் தொகுத்து தர முடியுமா. நன்றி. --Natkeeran (பேச்சு) 04:37, 12 நவம்பர் 2013 (UTC)Reply
செய்கிறேன் நற்கீரன். இரு நாட்கள் கால அவகாசம் தேவை. சனியன்று காலை பத்து மணிக்கு (இந்திய நேரம்) தொகுத்துத் தருகிறேன். கருத்திட்ட ஐவரின் கருத்துகளும் சிறிது விலகி நிற்கின்றன. ஆங்கில விக்கி arbcom முடிவுகளை சற்று ஆராய்ந்து கவனத்துடன் பொதுமைப்படுத்த இது தேவையென் உணர்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 11:46, 13 நவம்பர் 2013 (UTC)Reply

பயனர் பெயரை மாற்ற(தமிழிலிருந்து, ஆங்கிலத்திற்கு) மாற்ற இயலுமா? தொகு

இயலும் எனில் வழிகாட்டவும். --அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 14:27, 29 அக்டோபர் 2013 (UTC)Reply

விக்கிப்பீடியா:அதிகாரிகளுக்கான அறிவிப்புப்பலகை இங்கு உங்கள் கோரிக்கையை வைக்கவும் கார்த்திகேயன்--சண்முகம்ப7 (பேச்சு) 17:03, 29 அக்டோபர் 2013 (UTC)Reply

தெளிவுபடுத்தல் தொகு

பாலா, இங்கு மூன்று முறை என் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பாக சிலவற்றைத் தெளிவாக்க விரும்புகிறேன்.

  • விக்கி சமூக அவதூறு, நலமுரண் செயற்பாடு தொடர்பாக நான் தேனி சுப்பிரமணியிடம் விளக்கம் மட்டுமே கோரி இருந்தேன். அவரது பதில் நிறைவளிக்காவிட்டாலும் உரையாடலை முடித்துக் கொண்டதாக அறிவித்துள்ளேன். இது தொடர்பாக நான் எங்கும் குற்றச்சாட்டாக பதியவில்லை. தேனி சுப்பிரமணி எனக்குப் பதில் தரும் முன்னரே நான் கோரியிருந்த விளக்கங்களைக் குறிப்பிட்டு இராசன் முறையிட்டிருந்தார். ஆனால், அதற்கும் எனக்கும் தொடர்பில்லை. ஆகவே, இரவி பதிவு செய்த குற்றச்சாட்டு என்று இவற்றைக் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
  • இந்த நொடி வரை தேனி சுப்பிரமணி அரசுக்குக் கடிதம் எழுதினார் என்று நான் தமிழ் விக்கிப்பீடியாவில் எங்குமே குறிப்பிடவில்லை. எனவே, இதனை நான் குற்றச்சாட்டாக பதிவு செய்தேன் என்று குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுகிறேன்.

புரிதலுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி :)--இரவி (பேச்சு) 14:59, 3 நவம்பர் 2013 (UTC)Reply

ரவி, குழுவின் வேலைகளில் தேனி சுப்பிரமணி மீது சொல்லப்பட்ட அனைத்து விமர்சனங்களையும் (ராஜன் முன்வைத்தவை மட்டுமல்ல, மற்றவர்கள் கூறியதும்). குழு கருத்தில் கொள்ளும் என்று நற்கீரன் மயூரநாதனுக்கு அளித்த பதிலால், அனைத்தையும் எடுத்துக் கொண்டேன். நீங்கள் சொன்னது போல அடித்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 15:04, 3 நவம்பர் 2013 (UTC)Reply
உரிய மாற்றங்களைச் செய்ததற்கு நன்றி, பாலா. --இரவி (பேச்சு) 15:16, 3 நவம்பர் 2013 (UTC)Reply

விக்கித் திட்டம் தானியங்கிப் பராமரிப்பு தொகு

வணக்கம், புதிய தானியங்கிப் பராமரிப்புத் திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. உங்கள் தானியங்கி மூலமோ, ஆலோசனைகள் மூலமோ இத்திட்டத்திற்கு உதவலாம். --நீச்சல்காரன் (பேச்சு) 07:14, 20 நவம்பர் 2013 (UTC)Reply

பயன்படுத்தப்படாத நியாயமான பயன்பாட்டு படிமம் படிமம்:Times of India, Madurai edition, May 13, 2013.jpg தொகு

 

படிமம்:Times of India, Madurai edition, May 13, 2013.jpg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. இக்கோப்பின் சுறுக்க விளக்கம் இது இலவசமில்லாத படிமம் என்றும் இது நியாயமான பயன்பாடு என்பதன் கீழ் மட்டுமே பயன்படுத்தப்பட தகுதி பெறும் எனவும் குறிக்கின்றது. ஆயினும் இப்படிமம் எந்த ஒரு கட்டுரையிலும் பயன்படுத்தப்படவில்லை. இது முன்னர் ஒரு கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருப்பின் அக்கட்டுரைக்குச்சென்று இது நீக்கப்பட்டதற்கான அவசியத்தை அறிக. இது பயனுள்ள படிமம் என நீங்கள் கருதினால் இதை அக்கட்டுரையில் சேர்க்கலாம். எனினும் இலவச மாற்று அளிக்கப்படக்கூடிய ஆக்கங்களை விக்கிப்பீடியாவில் சேர்க்கலாகாது. (காண்க: இலவசமில்லாப்படிமங்களுகான வழிகாட்டுதல்).

விரைவு நீக்க விதி எண்:F5இன் கீழ் எந்த ஒரு கட்டுரையிலும் பயன்படுத்தப்படாத இலவசமில்லாத படிமங்கள் ஏழு நாட்களில் நீக்கப்படும் என்பதை அறிக. நன்றி ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 18:52, 4 திசம்பர் 2013 (UTC)Reply

Return to the user page of "Sodabottle/தொகுப்பு19".