இராணிப்பேட்டை மாவட்டம்

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்று
(ராணிப்பேட்டை மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இராணிப்பேட்டை மாவட்டம்
மாவட்டம்

டெல்லி நுழைவாயில்

இராணிப்பேட்டை மாவட்டம்:அமைந்துள்ள இடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் இராணிப்பேட்டை
பகுதி வட மாவட்டம்
ஆட்சியர்
திரு. தெ. பாஸ்கர
பாண்டியன், இ.ஆ.ப.
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

திரு. ஓம் பிரகாஷ்
மீனா, இ.கா.ப.
நகராட்சிகள் 6
வருவாய் கோட்டங்கள் 2
வட்டங்கள் 5
பேரூராட்சிகள் 9
ஊராட்சி ஒன்றியங்கள் 7
ஊராட்சிகள் 288
வருவாய் கிராமங்கள் 330
சட்டமன்றத் தொகுதிகள் 4
மக்களவைத் தொகுதிகள் 1
பரப்பளவு 2234.32 ச.கி.மீ.
மக்கள் தொகை
(2011)
12,10,277
அலுவல்
மொழி(கள்)

தமிழ்
நேர வலயம்
இ.சீ.நே.
(ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு
632 xxx
தொலைபேசிக்
குறியீடு

04172
வாகனப் பதிவு
TN-73
இணையதளம் ranipet

இராணிப்பேட்டை (Ranipet District) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் இராணிப்பேட்டை ஆகும். இராணிப்பேட்டை மாவட்டம், 2019-ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15-ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.[1][2] தமிழ்நாட்டின் 36-ஆவது மாவட்டமாக, இம்மாவட்டத்தை 28 நவம்பர் 2019 அன்று தமிழக முதல்வர் முறைப்படி இராணிப்பேட்டையில் துவக்கி வைத்தார்.[3]

மாவட்ட எல்லைகள்

தொகு

இராணிப்பேட்டை மாவட்டத்தின் தெற்கே திருவண்ணாமலை மாவட்டம், கிழக்கே காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டமும், மேற்கே வேலூர் மாவட்டம் மற்றும் வடக்கே ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

மாவட்ட நிர்வாகம்

தொகு

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் என என 2 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும், 18 குறுவட்டங்களும், 330 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.[4] [5] [6]

வருவாய் வட்டங்கள்

தொகு
  1. அரக்கோணம் வட்டம்
  2. வாலாஜா வட்டம்
  3. நெமிலி வட்டம்
  4. ஆற்காடு வட்டம்
  5. கலவை வட்டம்
  6. சோளிங்கர் வட்டம்

உள்ளாட்சி நிர்வாகம்

தொகு

இம்மாவட்டம் 5 நகராட்சிகளையும், 9 பேரூராட்சிகளையும்[7], 7 ஊராட்சி ஒன்றியங்களையும் மற்றும் 288 கிராம ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.[8]

நகராட்சிகள்

தொகு
  1. அரக்கோணம்
  2. ஆற்காடு
  3. இராணிப்பேட்டை
  4. வாலாஜாபேட்டை
  5. மேல்விஷாரம்

பேரூராட்சிகள்

தொகு
  1. சோளிங்கர்
  2. கலவை
  3. காவேரிப்பாக்கம்
  4. நெமிலி
  5. திமிரி
  6. பனப்பாக்கம்
  7. தக்கோலம்
  8. விளாப்பாக்கம்
  9. அம்மூர்

ஊராட்சி ஒன்றியங்கள்

தொகு
  1. அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம்
  2. வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியம்
  3. நெமிலி ஊராட்சி ஒன்றியம்
  4. ஆற்காடு ஊராட்சி ஒன்றியம்
  5. திமிரி ஊராட்சி ஒன்றியம்
  6. சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம்
  7. காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்

அரசியல்

தொகு

சட்டமன்றம்

தொகு

இம்மாவட்டம் அரக்கோணம், ஆற்காடு, இராணிப்பேட்டை மற்றும் சோளிங்கர் என 4 சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ளது.

வ. எண் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1 அரக்கோணம் சு. ரவி அதிமுக
2 சோளிங்கர் ஏ. எம். முனிரத்தினம் இதேகா
3 இராணிப்பேட்டை ஆர். காந்தி திமுக
4 ஆற்காடு ஜெ. இல. ஈசுவரப்பன் திமுக

மக்களவை

தொகு

இம்மாவட்டப் பகுதிகள் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் உள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள், அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் அடங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

வ. எண் மக்களவைத் தொகுதி மக்களவை உறுப்பினர் கட்சி
1 அரக்கோணம் எஸ். ஜெகத்ரட்சகன் திமுக

தொழில்கள்

தொகு

இராணிப்பேட்டை, தென்னிந்தியாவின் ஒரு தொழில்துறை மையமாகும். தோல் மற்றும் தோல் பொருட்கள் காலணிகள், ஆடைகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்யப்படுகிறது பல பெரிய மற்றும் நடுத்தர தோல் தொழில்கள் உள்ளன. இராணிப்பேட்டையில் மற்ற சிறிய அளவிலான தொழில்கள் உள்ளன, அவை பெரும்பாலும் ரசாயன, தோல் மற்றும் கருவி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்தத் தொழில்களே நகரத்தின் முக்கிய தொழிலாக உள்ளது.

வழிபாட்டுத் தலங்கள்

தொகு

லெட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில், சோளிங்கர் - இராணிப்பேட்டையில் இருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் உள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 65 வது திவ்ய தேசம் இத்தலத்தில் நரசிம்மரும், ஆஞ்சநேயரும் யோகசனத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. சிம்ஹ கோஷ்டாக்ருதி விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். மலைக்கோயிலின் நீளம் 200 அடி அகலம் 150 அடி ஏறத்தாழ் 1 ஏக்கர் பரப்பு 750 அடி உயரத்தில், சுமார் 1305 படிக்கட்டுகளோடு மலைமீது அமைந்துள்ளது. இங்கு பெரிய மலை, சிறிய மலை என இரண்டு மலைகள் உள்ளன.

இரத்னகிரி பாலமுருகன் கோயில், வேலூரிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் திருமணிக்குன்றம் அருகே உள்ள ஒரு பழமையான முருகன் கோயில் ஆகும். இது 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயில் மலை உச்சியில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராணிப்பேட்டை_மாவட்டம்&oldid=3859920" இலிருந்து மீள்விக்கப்பட்டது