விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி

(விக்கிப்பீடியா:TIGER இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி
குறுக்கு வழி:
WP:TIGER
வேங்கைத் திட்டம்

2017 - 2018 இல், விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் (CIS), விக்கிமீடியா இந்தியா, இந்திய விக்கிமீடியா சமூகங்கள் மற்றும் பயனர் குழுக்களின் உறுதுணையுடன் இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் உள்ளூர் வாசகர்களின் தேவைக்குத் தக்க உயர் தர கட்டுரைகளை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுக்கிறது. இத்திட்டத்தின் விளைவுகளை அறிந்து இந்தியாவிலும் உலகெங்கிலும் தக்கவாறு விரிவுபடுத்துவதற்காக, தற்போது சிறு அளவிலேயே இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இத்திட்டம் அ) இந்திய மொழி விக்கிப்பீடியர்களில் முனைப்பாகச் செயற்படும் அனுபவம் மிக்க விக்கிப்பீடியர்களுக்கு இணையம், கணினி தேவை அறிந்து உதவி நல்கும். ஆ) ஆங்கிலத்திலும் இந்திய மொழிகளிலும் உள்ள இணைய உள்ளடக்கத்தின் இடைவெளி அறிந்து அதனை நிரப்புவதற்கான கட்டுரைப் போட்டி ஒன்றை முன்வைக்கிறது.

இந்தக் கட்டுரைப் போட்டியில் ஆர்வம் உள்ள இந்திய மொழி விக்கிப்பீடியா சமூகங்கள் ஒன்றிணைந்து இக்கட்டுரைப் போட்டியை முன்னெடுக்கும். மூன்று மாதங்களுக்கு இப்போட்டி நடைபெறும். ஒவ்வொரு மாதமும் சிறப்பாகப் பங்களிப்பவர்களுக்குத் தனிப்பட்ட பரிசுகள் வழங்குவதுடன், ஒட்டு மொத்தமாகச் சிறப்பாகச் செயற்படுகிற விக்கிப்பீடியா சமூகத்துக்குத் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பயிற்சி முகாம் ஒன்றும் நடத்தப்படும்.

விதிகள்

சுருக்கம்: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து புதிய கட்டுரைகளை உருவாக்குங்கள். அல்லது, ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்குங்கள். இவை குறைந்தது 9000 பைட்டுகள் மற்றும் 300 சொற்கள் அளவு அமைய வேண்டும். மார்ச்சு 1, 2018 முதல் மே 31, 2018 வரை போட்டி நடைபெறும்.

  • கட்டுரை மார்ச்சு 1, 2018 0:00 தொடங்கி சூன் 1, 2018 காலை 05:29:59 (இந்திய நேரம்) இடைப்பட்ட காலத்தில் விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • கட்டுரை ஏற்கனவே என்ன அளவு இருந்தாலும், அதில் கூடுதலாக 9000 பைட்டுகள் மற்றும் 300 சொற்கள் சேர்க்க வேண்டும். புதிதாக உருவாகும் கட்டுரைகளும் குறைந்தது இந்த அளவாவது இருக்க வேண்டும். https://wordcounttools.com/ கருவி கொண்டு சொற்களின் எண்ணிக்கையை அறியலாம். (வார்ப்புரு, தகவற் பெட்டி, உசாத்துணை, மேற்கோள் போன்ற பகுதிகள் நீங்கலாக.)
  • கட்டுரையில் போதிய அளவு தக்க சான்றுகள் இடம் பெற வேண்டும். இச்சான்றுகள் கட்டுரையில் ஐயம், சர்ச்சை தோற்றுவிக்கக் கூடிய கூற்றுகளை தெளிவுபடுத்தும் வகையில் அமைய வேண்டும்.
  • கட்டுரையை நீங்களே இயல்பான நடையில் எழுத வேண்டும். தக்கவாறு உரை திருத்தி இருக்க வேண்டும். எந்திர மொழிபெயர்ப்புகள் ஏற்கப்பட மாட்டா.
  • கட்டுரையில் பதிப்புரிமை மீறல் போன்ற பெரும் தரச் சிக்கல்கள் இன்றி பார்த்துக் கொள்ளுங்கள்.
  • கட்டுரை தகவல் நிறைந்ததாக அமைய வேண்டும்.
  • கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும். இத்தலைப்புகள் ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் இணையத்தில் உள்ள இடைவெளியை நிரப்பும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவை.
  • ஒருங்கிணைப்பாளர் ஒருவர் எழுதிய கட்டுரைகளை மற்றொரு ஒருங்கிணைப்பாளர் சரி பார்க்க வேண்டும்.
  • ஒரு கட்டுரை போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறதா இல்லையா என்பதில் ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.

பரிசுகள்

  • ஒவ்வொரு மாதமும் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும்/விரிவாக்கும் முதல் மூன்று பேருக்குப் பரிசுகள் வழங்கப்படும். இவை 3,000 INR, 2000 INR, மற்றும் 1,000 INR மதிப்புடையனவாக அமையும்.
  • மூன்று மாதங்களின் முடிவில், கூடுதலாக கட்டுரைகளை உருவாக்கியுள்ள விக்கிப்பீடியா சமூகத்துக்குப் பரிசு அளிக்கப்படும். அவர்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான மூன்று நாள் பயிற்சியாக இப்பரிசு அமையும். ஆங்கில விக்கிப்பீடியா சமூகம், இந்தச் சமூகப் பரிசுக்கான போட்டியில் இடம் பெறாது. தங்கள் சொந்த முயற்சியில் இந்தியாவுக்கான விசா பெற்று வர இயலும் எனில், அனைவரும் இந்தப் பயிற்சியில் பங்கு கொள்ள முடியும். போக்குவரத்து, உறைவிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும்.
  • இந்தியா, இலங்கையில் வசிக்கும் பயனர்கள் தனிப்பட்ட பங்களிப்புகளுக்கான பரிசுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஒருங்கிணைப்பாளர்கள்

இப்போட்டியில் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயற்பட விரும்புவோர் தங்கள் பெயர்களைக் கீழே இட வேண்டுகிறோம்.

  • தினேஷ்குமார் பொன்னுசாமி
  • இரவி - பொறுப்புத் துறப்பு: என்னுடைய முழு நேரப் பணியின் காரணமாக இந்திய அளவிலான இத்திட்டத்தை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவைப் பொருத்தவரை என் பங்களிப்புகள் எப்போதும் போல் தன்னார்வத்தின் அடிப்படையிலேயே அமையும்.


பங்கேற்கவும்

இங்கே பதிவு செய்து உங்கள் பங்களிப்புக்களைக் குறிப்பிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைகள் போட்டி விதிகளுக்கு ஏற்ப உள்ளதா எனக் கவனிப்பார்கள். கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

பங்கேற்பாளர்களின் பட்டியல்

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற விரும்பும் பயனர்கள் கீழே தங்கள் பெயர்களைப் பதியவும்.

  1. பயனர்:TNSE Pooranisankar vlr, வேலூர்
  2. [[பயனர்:TNSE G KANDAVEL KPM]

]#[[பயனர்:TNSE AM vlr], வேலூர்

  1. அப்சர் அலி (பேச்சு) 08:04, 28 மே 2018 (UTC)[பதிலளி]
  2. பயனர்:TNSE sankarkuppan vlr, வேலூர்
  3. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு)
  4. பயனர்:Raja S [ Tirupur }
  5. பயனர்:இராச்மோகன், சென்னை
  6. பயனர்:குமார்ak20
  7. பொன் குலேந்திரன், மிச்சிசாக ஒன்றடாறியோ. கனடா
  8. லயனல் ஃபேபtர் , சென்னை
  9. லொகெஷ்வர் குமார், சென்னை
  10. பயனர்: மதுபாலன், இராமநாதபுரம்
  11. பயனர்:சாய்ராம் கண்ணா
  12. கணேஷ் மனோகரன் வேளச்சேரி, சென்னை
  13. மயூரன் மோகன்
  14. MALINISEETHA
  15. அன்பரசன் இளங்கோ
  16. யாசிர்
  17. பயனர்: கோவை.ரங்க நாதன்
  18. பயனர்:இராமன் காசம்
  19. இரவி
  20. ஸ்ரீதர்.ஞா
  21. பாலாஜி ரவிச்சந்திரன்
  1. கார்த்திகா
  2. எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
  3. நந்தினி கந்தசாமி
  4. சரவணன் பெரியசாமி
  5. புதுவை பிரபு
  6. சிவகோசரன்
  7. தியாகு கணேஷ்
  8. அசோக்குமார் மாதேஸ்வரன்
  9. மகாலிங்கம்
  10. ஹிபாயத்துல்லா
  11. குறும்பன்
  12. Vivekanand Selvaraj
  13. மயிலம் இளமுருகு
  14. தேவராஜ் அன்னூர்
  15. ச.பத்மாவதி காஞ்சிபுரம்
  16. தமிழ்ப்பரிதி மாரி (பேச்சு) 08:13, 2 மார்ச் 2018 (UTC)
  17. சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:49, 2 மார்ச் 2018 (UTC)
  18. பயனர்:Santhoshi
  19. [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|# உலோ.செந்தமிழ்க்கோதை
  20. க.ஆனந்த் விழுப்புரம் மாவட்டம்
  21. பயனர் :கரிகாலன் கு தருமபுரி மாவட்டம்
  22. பயனர் :Wiki tamil 100 காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி
  23. அனிட்டாகண்ணம்மா.திருச்சி மாவட்டம்.
  24. பா. ஜம்புலிங்கம்
  25. ---செல்வா (பேச்சு) 16:43, 10 மார்ச் 2018 (UTC)
  26. திருவேங்கடம் ஸ்ரீனிவாசன்--09:20, 5 மே 2018 (UTC)
  27. Kurinjinet (பேச்சு)
  28. பயனர்:கி.மூர்த்தி--கி.மூர்த்தி (பேச்சு) 12:13, 11 மார்ச் 2018 (UTC)
  29. அன்புமுனுசாமி
  30. இரா. பாலா
  31. மயூரநாதன் (பேச்சு) 15:04, 16 மார்ச் 2018 (UTC)
  32. சு.மணிவண்ணன்
  33. பயனர்:Ranjith Kumar Tamil Yadav
  34. நிகிலா . ஜெ புதுச்சேரி
  35. --சி.செந்தி (உரையாடுக) 19:34, 18 மார்ச் 2018 (UTC)# --சி.செந்தி (உரையாடுக) 19:34, 18 மார்ச் 2018 (UTC)
  36. உமாசங்கர் --உமாசங்கர் (பேச்சு) 06:22, 19 மார்ச் 2018 (UTC)
  37. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:14, 19 மார்ச் 2018 (UTC)
  38. --அஞ்சனன்.வி (பேச்சு) 08:30, 20 மார்ச் 2018 (UTC)
  39. --மணியன் (பேச்சு) 16:06, 21 மார்ச் 2018 (UTC)
  40. நீச்சல்காரன் (பேச்சு) 16:56, 22 மார்ச் 2018 (UTC)
  41. ராவணன்
  42. பெ. நவநீதம்
  43. சாக்கீர்
  44. சி.முத்துக்குமரன்
  45. Prasa Praveen
  46. பயனர்:அ.ம.அப்துல் ரவூஃப்
  47. செ.இளங்கோவன்
  48. velumani1
  49. ஓட்டமாவடி ஹில்மி ஸலாமி
  50. ஜே விக்கி தமிழ்
  51. --அருளரசன் (பேச்சு) 11:41, 5 ஏப்ரல் 2018 (UTC)
  52. Rahini
  53. விமலா எல்லப்பன்
  54. சிவகார்த்திகேயன் (பேச்சு)
  55. அரவிந்தன்
  56. Rk
  57. arun mani
  58. Lakshman, Bangalor
  59. --$Yajiv Vijay P$ (உரையாடுக) 19:34, 14 ஏப்ரல் 2018 (UTC)
  60. Mohan Munusamy
  61. sathiya praba
  62. பயனர்:Shahul 144.36.210.110 08:41, 13 ஏப்ரல் 2018 (UTC)--
  63. அரவிந்தன்
  64. சௌந்தர்மோகன்
  65. Padhmavathi salem
  66. Prakash Parasuraman
  67. பா.மோகன சேகரன்
  68. நா.விவேக் ஆனந்த்
  69. சி.திருநாவுக்கரசு, பொள்ளாச்சி
  70. Lakshmipriya D (பேச்சு) 08:27, 14 ஏப்ரல் 2018 (UTC)
  71. Boopathi.S Salem
  72. Velu.narasimman
  73. Illanghkumaran.T Salem
  74. சுந்தர் \பேச்சு 08:09, 15 ஏப்ரல் 2018 (UTC)
  75. Tambaram
  76. ashok kumar
  77. கிஷோர் குமார்
  78. சாய் ஸ்ரீ
  79. பவித்ரா சுந்தர்ராஜன் , சேலம்.
  80. ஹரீஷ் சின்னராஜன்
  81. குருபொளதிகம்
  82. Karthick Miller, CBE , 9566923370
  83. karthikeyan p, trichy
  84. சுரேஷ் மா காந்தலூர்
  85. Hameem fasith
  86. ஆதர்ஸ், சென்னை
  87. Premkumar, Erode
  88. senthilmailan
  89. சரவணன் பிள்ளை. சோ
  90. முத்துகுமரேஷ்
  91. பால் சாம்சன்
  92. [[பயனர்:MUTTUVANCHERI NATARAJ
  93. சுபாஷ் லோகநாதன், தென்காசி
  94. பயனர் :மோகன்-கோபி
  95. பயனர் : கார்த்திக்
  96. பயனர் :NAGARAJ Odp
  97. பயனர் :கரிசல் மாறன்
  98. பயனர் :rami®
  99. [ரவி நடராஜன், கனடா]
  100. Basheer Ahmed
  101. BadhruTnj
  102. பொன்தென்
  103. TNSEponnthenKGI
  104. ப.இரமேஷ் காஞ்சிபுரம்
  105. Deadrat
  106. பயனர் :V.B.மாதவன்
  107. யு.ஷந்தோஷ்ராஜா (பேச்சு)
  108. பயனர்:ரூபி
  109. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:07, 24 ஏப்ரல் 2018 (UTC)
  110. mohangopi new --122.178.139.131 10:29, 13 ஏப்ரல் 2018 (UTC)
  111. பயனர்: Mohanapourani Horto;lml
  112. பயனர்:Vinod Selvin
  113. [[r.gurusamy
  114. பயனர் :Sujanawrites
  115. அன்டோ அஜய்
  116. திருவேங்கடம் முனுசாமி
  117. --Booradleyp1 (பேச்சு) 13:48, 2 மே 2018 (UTC)[பதிலளி]
  118. KANTHARAJAN G MUMBAI
  119. பயனர்:அஜய்சுந்தர்
  120. பூங்குழலி11
  121. தே.நீதிதாஸ்
  122. பி.கலைவாணி
  123. {பயனர்:தமிழரசன் நாமக்கல்}
  124. {பயனர்:மது ஸ்ரீதரன்,சென்னை}
  125. வசந்தி
  126. பயனர்:ஏ.ஜே.ஞானேந்திரன் யாழ்ப்பாணம், இலங்கை
  127. சுப்ரமணியம் வேலுச்சாமி தமிழ்நாடு இந்தியா
  128. கார்த்திகேயன் பக்கிரிசாமி திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
  129. மதனாகரன்
  130. தகவலுழவன்
  131. முருகெசன் தமிழ்நாடு
  132. கேசவன்
  133. கார்த்திகேயன் ஓசூர்
  134. Kanags
  135. கலை
  136. பயனர்:TNSE BORAN PDKT
  137. பயனர்:TNSE SANTHANA VNR
  138. பயனர்:TNSE BALAJI GMV VLR
  139. பிரேம் ஆனந்த்
  140. பயனர்:TNSE TPR TAMILSAAVI
  141. பயனர் : அமீர் முகைதீன் - கடையநல்லூர், திருநெல்வேலி மாவட்டம்
  142. பயனர்:TNSE HARIKUMAR N CHN
  143. கணிஞன் மணி மு. மணிவண்ணன் சென்னை தமிழ்நாடு
  144. மாகிர், சிங்கப்பூர்
  145. பயனர்:TNSE MEENAKSHI TVM திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
  146. பயனர்:Balajijagadesh
  147. பயனர்:BASKAR KESAVAN
  148. பயனர்:Natkeeran
  149. பயனர்:TNSE Parameswari KPM

போட்டி விதிகளின் படி தகுதி பெற்ற கட்டுரைகளைப் பதிவு செய்வதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுங்கள். தொடர்ந்து சிக்கல் நீடித்தால், போட்டிக்குத் தகுதி பெறுமாறு நீங்கள் விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு குறிப்பிடலாம்.

கேள்விகள்

1. இத்திட்டத்தில் கூகுள் மற்றும் விக்கிமீடியா அறக்கட்டளையிலன் பங்கு என்ன?

கூகுள் மற்றும் விக்கிப்பீடியா அறக்கட்டளை ஆகிய இரு நிறுவனங்களும் இணையத்தில் இந்திய மொழிகளில் தரமான உள்ளடக்கம் கூடுவதில் அக்கறை கொண்டுள்ளன. இந்தப் பொது நோக்கத்தை அடைவதற்கு இணைந்து செயற்பட விரும்புகின்றனர். கூகுள் இத்திட்டத்துக்கான நிதியை ஒரு நல்கை மூலம் வழங்கியுள்ளது. அத்தோடு, இணையத்தில் இந்திய மொழிகளில் எத்தகைய உள்ளடக்கம் விடுபட்டுள்ளது என்ற பயனுள்ள தகவலையும் தந்து உதவுகிறது.

2. இத்திட்டத்தில் இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் (CIS), விக்கிமீடியா இந்தியா, இந்திய விக்கிமீடியா சமூகங்கள் மற்றும் பயனர் குழுக்களின் பொறுப்பு என்ன?

இப்போட்டியில் பங்கு கொள்ளும் இந்திய மொழி விக்கிப்பீடியா சமூகங்கள், விக்கிப்பீடியா ஆசிய மாதம், பஞ்சாப் மாதம், பெண்கள் மாதம் முதலிய பல்வேறு போட்டிகள், தொடர் தொகுப்புகளை ஒருங்கிணைத்தது போலவே இந்தப் போட்டியையும் ஒருங்கிணைக்கும்.

CIS போட்டிகளுக்கான பரிசுகளை வழங்குவதிலும் வெல்லும் சமூகத்துக்கான திறனளி பயிற்சிகளை ஒருங்கிணைக்கவும் உதவும்.

விக்கிமீடியா இந்தியாவும் பயனர் குழுக்களும் போட்டி தொடர்பான பரப்புரைகளில் பங்கு கொள்வார்கள்.

3. இப்போட்டியில் பங்கு கொள்வது கட்டாயமா?

இல்லை. அனைத்துப் போட்டிகளைப் போலவே, இதுவும் நீங்கள் விரும்பினால் பங்கு பெறலாம். இணையம், கணினி உதவி பெறுவோர் வழமை போல் தங்கள் விக்கிப்பீடியா பங்களிப்புகளில் ஈடுபடலாம். அவர்களின் நெடுங்கால, வழமையான பங்களிப்புகளுக்கு உறுதுணையாகவே அவ்வுதவிகள் வழங்கப்படுகின்றன.

4. எனக்கு ஆர்வமுள்ள தலைப்புகளில் கட்டுரைகளை உருவாக்கலாமா?

இந்தியாவின் இணையப் பயனர்கள் இணையத்தில் தேடும் போது ஆங்கிலத்தில் கண்டடைய முடிகிற ஆனால் தமிழில் இல்லாத உள்ளடக்கத்தை உருவாக்கும் நோக்கத்துடனே இப்போட்டி நடத்தப்படுகிறது. இதன் மூலம், இயன்ற அளவு கூடுதலான பயனர்களுக்குக் கட்டற்ற அறிவைக் கொண்டு சேர்க்க முனைகிறோம். எனவே, கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டும் கட்டுரைகளை எழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம். எனினும், தங்களுக்கு விருப்பமான துறைகளின் கீழ் கூடுதல் தலைப்புகள் தேவைப்பட்டால் பேச்சுப் பக்கத்தில் தெரிவியுங்கள். இயன்ற அளவு, கூடுதல் தலைப்புகளைப் பெற்றுத் தர முனைவோம்.

5. ஏன் இதனை வேங்கைத் திட்டம் என்று அழைக்கிறீர்கள்?

இந்தியாவில் புலிகளைக் காப்பதற்காகச் செயற்படுத்தப்பட்ட திட்டத்தின் உந்துலில் இப்பெயரிடப்பட்டுள்ளது. அத்திட்டத்தைப் போலவே, இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் உள்ளடக்கம் உருவாகும் சுற்றுச்சூழலைக் கருத்திற் கொண்டு இந்த வேங்கைத் திட்டம் செயற்பட முனைகிறது.