வாருங்கள்!

வாருங்கள், ஜெ.ஜெயகிரிசாந், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- Kanags (பேச்சு) 07:42, 30 திசம்பர் 2018 (UTC) வணக்கம் என்னுடைய கணக்கிற்கான கடவுச்சொல்லை மறந்துவிட்டேன். எவ்வாறு என் கணக்கினுள் மீள நுழைவது என அறியத்தாருங்கள்.

மாதவி கட்டுரைதொகு

விக்கிப்பீடியா புதுப்பயனர் போட்டிக்குக் கட்டுரை எழுத முன்வந்ததற்கு வாழ்த்துகள்! மேற்படி கட்டுரையை விக்கி நடைமுறையைப் பின்பற்றி சற்று சீராக்க முயலுங்கள். மேலும் பொருத்தமான சான்றுகளை இணையுங்கள். கட்டுரை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்திருந்தால் அங்குள்ள சான்றுகளை நீங்கள் இணைக்கலாம். தேவையான சந்தேகங்களை இங்கேயோ அல்லது கட்டுரையின் பேச்சுப்பக்கத்திலோ கேளுங்கள். --சிவகோசரன் (பேச்சு) 15:39, 6 சனவரி 2019 (UTC)

பீடை நாசினிகள்தொகு

வணக்கம் பயனர்:ஜெ.ஜெயகிரிசாந் பீடைநாசினிகள் கட்டுரையின் முதல் பத்தியில் சான்றுகளை இணைத்து சில திருத்தங்கள் செய்துள்ளேன். கவனித்து அதே போல (ஆங்கிலக் கட்டுரையைப் பார்த்து) மற்ற பத்திகளிலும் திருத்தங்கள் செய்யவும். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:56, 10 சனவரி 2019 (UTC)

பீடைநாசினிகள்தொகு

பீடைநாசினிகள் கட்டுரை தொடர்பாக பல திருத்தங்களை செய்துள்ளேன். தயவுசெய்து சரிபார்பதுடன் அதனை விக்கி தரவுத்தளத்துடன் இணைக்கவும். ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) 04:05, 12 சனவரி 2019 (UTC)

தீங்குயிர்கொல்லி என்ற இன்னும் ஒரு கட்டுரை உள்ளது. இரண்டும் ஒன்றைப்பற்றியே கூறுவதாக நினைக்கிறேன்.--Kanags (பேச்சு) 04:19, 12 சனவரி 2019 (UTC)

பீடைநாசினிகள்தொகு

இரண்டும் ஒரே மாதிரியானவைதான். இருப்பினும் நான் ஆங்கில கட்டுரையில் இருந்து அதிகளவு மொழிபெர்துள்ளேன்.தவிர Pesticide எனும் தலைப்பு போட்டியின் தலைப்புகளில் ஒன்றாகும்.அதைத்தான் நான் தெரிவு செய்தேன். ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) 04:29, 12 சனவரி 2019 (UTC)

சந்தேகம்தொகு

எனது சில கட்டுரைகளுக்கு ஏன் புள்ளிகள் வழங்கபடவில்லை என்பதனை அறியத்தருவீர்களா? ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) 05:31, 14 சனவரி 2019 (UTC)

அக்கட்டுரைகள் இன்னும் மேம்படுத்தப்படவேண்டும். உதாரணமாக அவசேபம் என்ற கட்டுரை, அதில் தமிழ் அல்லாத சொற்கள் அதிகமாக விரவியுள்ளன. அதுபோல சில கட்டுரைகள் விக்கியாக்கம் செய்யப்படவேண்டியுள்ளது. இதனால் தாங்கள் சோர்வெதுவும் கொள்ளத் தேவையில்லை. புதுப்பயனரான தாங்கள் நல்லமுறையில் பங்களித்து வருகிறீர்கள். தங்கள் உரையாடலைக் கவனித்து கட்டுரையை மேம்படுத்துங்கள். தொடர்ந்து பங்களித்து வாருங்கள். நன்றி.--அபிராமி (பேச்சு) 04:04, 16 சனவரி 2019 (UTC)

தங்கள் கவனத்திற்குதொகு

வணக்கம். ஆங்கில விக்கிக் கட்டுரையை மொழிபெயர்க்கும் முன்பாக அதன் இடப்பக்கப் பட்டையின் கீழ்புறமுள்ள \languages\ என்ற தலைப்பின் கீழ் 'தமிழ்' உள்ளதா இல்லையா என்று பார்த்து, இல்லையென உறுதி செய்த பின்னர் மொழிபெயர்க்கத் துவக்கவும். உங்களது கட்டுரை காற்றின் மொழி (திரைப்படம்) ஏற்கனவே தமிழ் விக்கியில் உள்ளது. நன்றி. --Booradleyp1 (பேச்சு) 04:53, 16 சனவரி 2019 (UTC)


இதுபோன்றே தங்களது கட்டுரை பீடைநாசினிகள், ஏற்கனவே தீங்குயிர்கொல்லி என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ளதையும் கவனிக்கவும். கட்டுரை உருவாக்கத்திற்கு முன்பாக அக்கட்டுரை ஏற்கனவே உள்ளதா என்பதை நான் மேலே கூறிய வழியில் உறுதிசெய்து கொள்ளுங்கள். புதுப்பயனரான உங்கள் பணி சிறக்க எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:58, 16 சனவரி 2019 (UTC)

வணக்கம் ஜெ.ஜெயகிரிசாந்!

  • உங்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகளுக்கு செவிசாய்த்து, ஏற்கனவே தமிழ் விக்கியில் இல்லாதவையாகத் தேர்ந்தெடுத்து திரைப்படக் கட்டுரைகளை உருவாக்குவதற்கு நன்றி. மேலும் ஒரு வேண்டுகோள்.
  • உங்கள் கட்டுரையில் பிற பயனர்கள் மேற்கொள்ளும் திருத்தங்களைக் கூர்ந்து கவனித்துச் அவற்றை உங்களது அடுத்த கட்டுரையில் செயற்படுத்துங்கள். இதனால் விக்கியில் உங்கள் கட்டுரையாக்கத் திறன் மென்மேலும் சிறப்பாக வளரும். உங்களது பங்களிப்புகள் சிறப்பாக வளர எனது வாழ்த்துகள்.--Booradleyp1 (பேச்சு) 17:13, 17 சனவரி 2019 (UTC)

மனிதன் (2016 திரைப்படம்)தொகு

வணக்கம்! நீங்கள் எழுதிய மனிதன் (திரைப்படம்) எனும் கட்டுரை மனிதன் (2016 திரைப்படம்) எனும் தலைப்பிற்கு நகர்த்தப்பட்டுள்ளது. மனிதன் (1953 திரைப்படம்), மனிதன் (1987 திரைப்படம்) ஆகிய கட்டுரைகள் இருப்பதால் சீர்மை (uniformity) கருதி இவ்வாறு செய்யப்பட்டுள்ளது; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:36, 19 சனவரி 2019 (UTC)

மாதங்களின் பெயர் தமிழில்தொகு

வணக்கம். நீங்கள் மொழிபெயர்க்கும் கட்டுரைகளில் ஆண்டு/மாதம்/தேதி - இதில் மாதத்தை மட்டும் தமிழ் மாதமாக மாற்றி எழுதுகிறீர்கள். அது தவறான தகவலாகி விடும்.

உதாரணம்: கட்டுரை: மெரினா (திரைப்படம்); 2012 /பிப்ரவரி/ 3ம் திகதி என்பதை 2012 /மாசி/ 3ம் திகதி என மாற்றியிருந்தீர்கள்.

பிப்ரவரி மாதத்தில் 3 ஆம் நாளானது மாசி மாதத்தில் 3 ஆம் நாளாக இருக்காது என்பதைக் கவனிக்கவும்.
இனிவரும் கட்டுரைகளில் இவ்வாறான மாற்றத்தைக் தொடரவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:42, 19 சனவரி 2019 (UTC)

வணக்கம் நீங்கள் திரைபடங்கள் குறித்து எழுதும் கட்டுரைகளின் தகவல் சட்டங்களை முதல் பத்தி முடிந்த பிறகு துவக்குகிறீர்கள் அவ்வாறில்லாமல் தகவல் சட்டத்தை கட்டுரையின் துவக்கத்திலேயே அமைத்திடுங்கள். நன்றி--அருளரசன் (பேச்சு) 02:01, 20 சனவரி 2019 (UTC)

கவிதா (1962 திரைப்படம்)தொகு

கவிதா (திரைப்படம்) எனும் கட்டுரை ஏற்கனவே இருக்கிறது. எனவே உங்களின் கவிதா (1962 திரைப்படம்) ஏற்கனவே இருக்கும் கட்டுரையுடன் விரைவில் இணைக்கப்படும். புதிய கட்டுரையைத் தொடங்கும்போது ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கிறதா என தேடிப் பாருங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:18, 20 சனவரி 2019 (UTC)

சந்தேகம்தொகு

சில ஆங்கில விக்கிக் கட்டுரை இடப்பக்க பட்டையின் கீழ்புறமுள்ள \languages\ என்ற தலைப்பின் கீழ் 'தமிழ்' எனும் சொல் காணப்படுவதில்லை. இருப்பினும் அக் கட்டுரைகளின் தமிழ் வடிவம் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளது. எனவே நான் எவ்வாறு அவை முன்னரே தமிழில் உள்ளது என்பதை கண்டறிவது? ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) 06:28, 20 சனவரி 2019 (UTC)

நல்ல கேள்வி. தமிழ் விக்கிக் கட்டுரை ஆங்கில விக்கிக்க கட்டுரையுடன் இணைக்கப்படாமலும் பல கட்டுரைகள் உள்ளன. அவை இனங்காணப்பட்டு இணைக்கப்பட வேண்டும். இவ்வாறான கட்டுரைகளைக் காணும் போது அவற்றைத் தெரியப்படுத்துங்கள்.--Kanags (பேச்சு) 06:56, 20 சனவரி 2019 (UTC)

ஜெ.ஜெயகிரிசாந், உங்கள் சந்தேகத்திற்கு விக்கிப்பீடியா பேச்சு:புதுப்பயனர் போட்டி/உதவி#கட்டுரைகளை அறிதல் இங்கு காணவும்.--Booradleyp1 (பேச்சு) 08:28, 20 சனவரி 2019 (UTC)

தகவலுக்காக...தொகு

வணக்கம். ஆவாரம்பூ (திரைப்படம்) எனும் உங்களின் கட்டுரை, ஆவாரம் பூ (திரைப்படம்) என்பதாக நகர்த்தப்பட்டுள்ளது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:00, 21 சனவரி 2019 (UTC)

புதிய கட்டுரைதொகு

வணக்கம் ஜெ. ஜெயகிரிசாந். புதிய கட்டுரைகளை எழுத முனையும் போது ஏற்கனவே அக்கட்டுரை உள்ளதா எனத் தேடிப்பாருங்கள். திரும்பத் திரும்ப இருக்கும் கட்டுரைகளை மீண்டும் எழுதுவதால் அக்கட்டுரை நீக்கப்படலாம். உங்களுக்கும் காலவிரயம். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:44, 21 சனவரி 2019 (UTC)

அவ்வாறே செய்கிறேன்.

இந்தியா பாகிஸ்தான்தொகு

இந்தியா பாகிஸ்தான் (2015 திரைப்படம்) என்ற கட்டுரை 150 சொற்களுக்கும் குறைவாக உள்ளது சற்று விரிவாக்குஙகள். மேலும் அவசேபம் என்ற தங்களின் கட்டுரை ஏற்கனவே சிதைமாற்றம் என்ற பெயரில் உள்ளது. நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:47, 21 சனவரி 2019 (UTC) நன்றி.

சந்தேகம்தொகு

இருவர் ஓரே தலைப்புகளில் இரு கட்டுரைகளை உருவாக்கினால் அதற்கு எவ்வாறு புள்ளி வழங்குவீர்கள் ? ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) 13:36, 21 சனவரி 2019 (UTC)

பதக்கம்தொகு

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய கட்டுரைகளை ஆர்வமுடன் எழுதிவருவதற்கு நன்றி பாராட்டி, இந்தப் பதக்கத்தை வழங்குகின்றேன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:33, 22 சனவரி 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 04:15, 22 சனவரி 2019 (UTC)
  விருப்பம் -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:30, 22 சனவரி 2019 (UTC)
  விருப்பம்--அருளரசன் (பேச்சு) 04:31, 22 சனவரி 2019 (UTC)
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 04:42, 22 சனவரி 2019 (UTC)
  விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 04:50, 22 சனவரி 2019 (UTC)
  விருப்பம்--SRIDHAR G (பேச்சு) 07:20, 24 சனவரி 2019 (UTC)

கவனியுங்கள்தொகு

நான் மொழிபெயர்த்த "வாய்மையே வெல்லும்" திரைப்படம் இன்னமும் விக்கி தரவுத்தளத்துடன் இணைக்கப்படவில்லை. நன்றி ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) 11:00, 24 சனவரி 2019 (UTC)

வேண்டுகோள்தொகு

வணக்கம். தொடர் பங்களிப்புகளுக்கு நன்றி. எழுதும் ஆர்வம் உள்ளவர்களை ஊக்குவித்து, அவர்களை விக்கிப்பீடியாவில் பங்களிக்க வைப்பதற்காக 'புதுப் பயனர் போட்டி' நடைபெறுகிறது. கட்டுரைகள் தரமாக இருக்க வேண்டும் என்பதனையும் விக்கி சமூகம் உறுதிசெய்கிறது. அதன் காரணமாக, நீங்கள் எழுதும் கட்டுரைகளில் மற்ற பயனர்கள் திருத்தங்களை மேற்கோள்கிறார்கள். எவ்வகையான திருத்தங்களை அவர்கள் மேற்கொள்கிறார்கள் என்பதனை கவனித்து புதிய கட்டுரைகளில் அவற்றை செய்யுங்கள். இதன் மூலமாக மற்ற பயனர்களுக்கு வேலைப்பளு குறையும். சில உதவிக் குறிப்புகளை கீழே காணலாம். ஏதேனும் ஐயமிருப்பின் கேளுங்கள்.

  1. References என ஆங்கிலத்தில் இருக்காமல், மேற்கோள்கள் என துணைத் தலைப்பு இருக்க வேண்டும்.
  2. பகுப்புகள் இட வேண்டும். காண்க: விக்கிப்பீடியா:பயிற்சி (பகுப்புகள்)
  3. மணற்தொட்டியிலிருந்து கட்டுரையை பொதுவெளிக்கு நகர்த்தும் முன்பு, கட்டுரையை படித்துப் பார்த்து பிழைகளை திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். எழுத்துப் பிழைகள், சொற்பிழைகள், இலக்கணப் பிழைகள் இவற்றைத் தவிர்ப்பது நமக்கு இன்றியமையாதது என்பதனை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:02, 25 சனவரி 2019 (UTC)

கருத்தரங்குகள்தொகு

தமிழ் விக்கிப்பீடியா தொடர்பிலான கருத்தரங்குகள் இலங்கையில் நடைபெறுகின்றனவா? அவ்வாறு இருந்தால் தெரிவியுங்கள். கலந்து கொண்டு மேலும் பயன்பெறும் விருப்பம் உள்ளது. ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) 14:10, 26 சனவரி 2019 (UTC)

விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் பக்கத்தைக் கவனித்து, உங்கள் கருத்துக்களையும் அங்கே இடலாம். நீங்கள் இலங்கையில் இருப்பதால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பிலும் உதவலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 14:28, 31 சனவரி 2019 (UTC)

உங்கள் உதவிக்குதொகு

ஆங்கில விக்கியில் இருந்து கட்டுரைகளை மொழிபெயர்க்கிறீர்கள். இதற்கு உங்களுக்கு இந்தக் கருவி நிச்சயம் உதவும். இதனை நிறுவுங்கள். கட்டுரையில் உள்ள விக்கியிடை இணைப்புகளை ஒரு நொடியில் இணைத்துவிடும்.--Booradleyp1 (பேச்சு) 15:25, 26 சனவரி 2019 (UTC)

பரிந்துரைதொகு

நண்பருக்கு வணக்கம் மிகச் சிறப்பாக கட்டுரைகள் எழுதிவருவதற்கு வாழ்த்துகள். சிலபரிந்துரைகள்

  • //அதனால் சர்க்கரை தாமரையுடன் உடல்ரீதியிலான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டான்// இதனை உறவு கொள்கிறான்.
  • //அடித்துத் துவம்சம் செய்தார்.//
  • //1995/பிப்ரவரி/24// பிப்ரவரி 24, 1995
  • தகவற்பெட்டியில் உள்ள சிவப்புவண்ணம் கொண்ட வார்த்தைகளை சரியான இணைப்பில் சேர்க்கவும். அல்லது [[]] குறியினை நீக்கவும்.

தங்கள் கட்டுரையில் செய்துள்ள மாற்றங்களைக் கவனிக்கவும். நன்றிSRIDHAR G (பேச்சு) 01:56, 27 சனவரி 2019 (UTC)

எனக்கு இன்னொரு பெயர் இருக்கு (திரைப்படம்)தொகு

எனக்கு இன்னொரு பெயர் இருக்கு (திரைப்படம்)கட்டுரையில் உள்ள சிவப்பு வார்த்தைகள் (தவறான இணைப்பு) உள்ள வார்த்தைகளை நீக்கவும். நன்றி.SRIDHAR G (பேச்சு) 07:19, 27 சனவரி 2019 (UTC)

தகவலுக்கு நன்றி. மாற்றிவிட்டேன்.

வெகாசி பொறந்தாச்சிதொகு

தாங்கள் உருவாக்கிய வைகாசி புறந்தாச்சி (திரைப்படம்) பக்கத்தை அதச் சரியான பெயரான வைகாசி பொறந்தாச்சு என்ற தலைப்புக்கு நகர்த்தியுக்கேன்.--அருளரசன் (பேச்சு) 06:22, 30 சனவரி 2019 (UTC)

தெரியவில்லைதொகு

சில இன்னமும் வெளிவராத திரைப்பட கட்டுரைகளில் "TBA" எனும் எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை எதற்காக அங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன? ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) 09:49, 30 சனவரி 2019 (UTC)


இன்னும் வெளிவராத திரைப்படங்கள் குறித்த கட்டுரையில் சிலதகவல்கள் வெளியிடப்படாமல் இருக்கும். அந்த இடங்கிலில் "TBA" என குறிப்பர். அத்தகவல் வெளயிடப்பட்ட காலத்தில் "TBA" என்பதை எடுத்து அங்கு உரிய தகவலை இட்டு திருத்துவர்--அருளரசன் (பேச்சு) 10:01, 30 சனவரி 2019 (UTC).

பதக்கம்தொகு

  அசத்தும் கலையுலகப் பயனர்
புதுப்பயனர் போட்டியில் தொடர்ந்து திரைப்படக் கட்டுரைகளை எழுதி சளைக்காத போட்டியைக் கொடுப்பதற்குப் பாராட்டுகிறேன். அடுத்த இரு மாதங்களில் முதலிடத்தைப் பிடிக்கவும் வாழ்த்துகிறேன். --நீச்சல்காரன் (பேச்சு) 14:32, 31 சனவரி 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  விருப்பம்--அருளரசன் (பேச்சு) 14:40, 31 சனவரி 2019 (UTC)
  விருப்பம்ஸ்ரீ (talk) 06:55, 1 பெப்ரவரி 2019 (UTC)
  விருப்பம்..'சபாஷ் சரியான போட்டி!' எனச் சொல்லுமளவிற்கு களைப்படையாமல் கட்டுரைகளை ஆக்கியமைக்கு வாழ்த்துகள்.முதலிடம் பிடிக்க வாழ்த்துகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:52, 1 பெப்ரவரி 2019 (UTC)

மிக்க நன்றி.

சந்தேகம்தொகு

வணக்கம். நான் இலங்கை தமிழன். எனக்கு அறிவியல் பகுதியில் கட்டுரைகளை உருவாக்க மிகவும் ஆசை. இருப்பினும் நாங்கள் பயன் படுத்தும் வார்த்தைகள் இந்திய தமிழர்களால் பயன்படுத்தும் வார்த்தைகளில் இருந்து பெரிதும் வேறுபடுகிறது. உதாரணமாக- வேதியியல் என்பது இலங்கையில் இரசாயனவியல் ஆகும். இலங்கையில் வேதியியல் என்ற வார்த்தையை பயன்படுத்துவது குறைவு அல்லது இல்லை. அதேபோல இயற்பியல் - பௌதிகவியல் இதேபோல பல வார்த்தை பிரயோகங்கள் மாறுபடும் போது எவ்வாறு கட்டுரைகளை உருவாக்குவது. உதாரணமாக நான் முன்னர் உருவாக்கிய சிதைமாற்றம் எனும் கட்டுரையில் பல வார்த்தைகள் இலங்கையில் பயன்படுத்த படுவதில்லை அல்லது வழக்கில் இல்லை. இவ்வாறு இருக்கும் போது கட்டுரைகளை எவ்வாறு உருவாக்குவது? ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) 03:09, 1 பெப்ரவரி 2019 (UTC)

அறிவியல் கட்டுரைகளை நீங்கள் ஈழத்தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தியே எழுதலாம். அதற்கு எவ்விதத் தடையும் இல்லை. கலைச்சொற்கள் வேறுபடுமிடத்து, கட்டுரைகளைத் திருத்துபவர்கள் தமிழகக் கலைச்சொற்களையும் சேர்ப்பார்கள். ஈழத்தில் பல நல்ல கலைச்சொற்கள் உருவாகியுள்ளன. ஆனாலும் சில சொற்கள் (இரசாயனம், பௌதிகம் போன்றவை) வடமொழி (சமற்கிருதக்) கலப்புக் கொண்டவை. அவற்றைத் தவிர்க்க வேண்டும். இச்சொற்கள் இப்போதும் தமிழ்நாட்டில் பயன்பாட்டில் உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.--Kanags (பேச்சு) 03:18, 1 பெப்ரவரி 2019 (UTC)

வேண்டுகோள்தொகு

நண்பருக்கு வணக்கம் சிறபாக எழுதிவருகிறீர்கள். தாங்கள் எழுதும் பெரும்பாலான கட்டுரைகளின் தகவற் பெட்டிகளில் சிவப்பு வண்ணம் கொண்ட வார்த்தைகளை சரியான இணைப்பில் சேர்க்கவும். அல்லது [[]] குறிகளை நீக்கவும்.ஸ்ரீ (talk) 06:55, 1 பெப்ரவரி 2019 (UTC)

மீண்டும் நினைவூட்டல்தொகு

உங்கள் கட்டுரைகளில் சிவப்பு இணைப்புகளைத் தவிர்ப்பதற்கும் அறிவியல் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் உங்களுக்குப் பெரும் உதவியாக இந்தக் கருவி இருக்கும். நீங்கள் மொழிபெயர்க்க விரும்பும் ஆங்கிலக் கட்டுரையில் [[]] என்ற உள்ளிணைப்புக் குறிக்குள் அமைந்த சொற்களுக்குரிய தமிழ் விக்கிக் கட்டுரையை இக்கருவி தந்துவிடும். தவறாது இக்கருவியை நிறுவி, அதனைப் பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இக்கருவியை நிறுவுவதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். அனைவரும் உதவ முன்வருவர். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 10:07, 1 பெப்ரவரி 2019 (UTC)

சரிபார்க்கவும்தொகு

பெருமளவு சிவப்பு குறிகளை நீக்கிவிட்டேன் சரிபார்க்கவும். ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) 16:37, 1 பெப்ரவரி 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி- சனவரி மாத பரிசுதொகு

வணக்கம் ஜெ.ஜெயகிரிசாந் புதுப்பயனர் போட்டிக்கான சனவரி மாதத்தில் 49 கட்டுரைகளை சிறப்பாக உருவாக்கி இரண்டாம் இடத்திற்கான பரிசினைப் பெறுகிறீர்கள் என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். வரும் மாதங்களிலும் தொடர்ந்து மாதாந்திரப் பரிசுகள் வழங்கப்படும். பரிசு பற்றிய விவரங்கள் தங்களுக்கு தனிமடலாக பின்னர் தெரிவிக்கப்படும். ஏனைய மாதப் போட்டிகளிலும் சிறப்பாகப் பங்காற்றி பரிசுகளை வெல்வதற்கும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பிற்கும் வாழ்த்துகளும், நன்றிகளும். வாழ்க வளமுடன்.ஸ்ரீ (talk) 14:13, 7 பெப்ரவரி 2019 (UTC)

புதுப்பயனர் போட்டிதொகு

தங்களுக்கான பரிசானது இலங்கையில் நடக்கும் நிகழ்வின் போது வழங்கப்படும் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறோம். நன்றி-- ஸ்ரீ (talk) 10:20, 3 மார்ச் 2019 (UTC)

முனைப்பான பங்களிப்புதொகு

கட்டுரைப்போட்டி முடிய இன்னும் குறைந்த நாட்களே உள்ளமையால் ஊக்கம் குறையாமல் தொடர்ந்து இலக்கு வைத்து, முனைப்புடன் தங்களது பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:23, 23 மார்ச் 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி- 2019தொகு

 
நன்றி ஜெயகிரிசாந்

வணக்கம்.விக்கிப்பீடியா புதுப்பயனர் போட்டியில் கலந்துகொண்டதற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். இந்தப் போட்டியில் தாங்கள் 53 கட்டுரைகள் உருவாக்கி/ விரிவாக்கியுள்ளீர்கள். தங்களின் விக்கிப்பீடியா பங்களிப்பு தொடர்வதற்கு எனது வாழ்த்துகள். வாழ்க வளமுடன். ஸ்ரீ (talk) 12:49, 1 ஏப்ரல் 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி முடிவுகள்தொகு

புதுப்பயனர் போட்டியில் தங்களின் சிறப்பான பங்களிப்புக்கு நன்றிகள். பரிசு விவரஙகளை இங்கே காணலாம். தொடர்ந்து பங்களித்து விக்கிப்பீடியாவுடன் இணைந்திருங்கள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:19, 7 ஏப்ரல் 2019 (UTC)

Wikkimaniya 2020தொகு

இந் நிகழ்ச்சி திட்டம் பற்றி தமிழில் அறியத்தாருங்கள். ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) 06:03, 16 சூலை 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

கவனிக்கதொகு

தாங்கள் வேங்கை திட்டத்தில் கலந்து கொள்ள விரும்பினால், தங்களுடைய பயனர் கணக்கு மூலம் புகுபுதிகை செய்து பெயரை பதிவு செய்யுங்கள். ஆனால் ஐ.பி முகவரி மூலம் பெயரை பதிவு செய்தால், ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 04:09, 15 நவம்பர் 2019 (UTC)

சந்தேகம்தொகு

புதுக்கட்டுரைகளை எங்கே உருவாக்கலாம். ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) 16:23, 14 மார்ச் 2020 (UTC)

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 என்ற திட்டப்பக்கத்தில் தரப்பட்டுள்ள கட்டுரைத் தலைப்புகளைப் பார்க்கவும். கடந்தமுறை தாங்கள் உருவாக்கியது போன்றே இம்முறையும் உருவாக்கலாம். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:05, 14 மார்ச் 2020 (UTC)

விக்கி பெண்களை நேசிக்கிறது- இறுதி வாரம்தொகு

வணக்கம் விக்கி பெண்களை நேசிக்கிறது போட்டி இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளது. தற்போதுவரை (24-03-2020) வங்காளமொழி 408 கட்டுரைகளுடன் முதல் இடத்திலும் தமிழ் 352 கட்டுரைகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. எனவே தங்களது பங்களிப்பினை தொடர்ந்து வழங்கி தமிழ் வெற்றி பெற உதவுங்கள். நன்றி ஸ்ரீ (✉) 13:05, 24 மார்ச் 2020 (UTC)

Wiki Loves Women South Asia Barnstar Awardதொகு

Greetings!

Thank you for contributing to the Wiki Loves Women South Asia 2020. We are appreciative of your tireless efforts to create articles about Women in Folklore on Wikipedia. We are deeply inspired by your persistent efforts, dedication to bridge the gender and cultural gap on Wikipedia. Your tireless perseverance and love for the movement has brought us one step closer to our quest for attaining equity for underrepresented knowledge in our Wikimedia Projects. We are lucky to have amazing Wikimedians like you in our movement. Please find your Wiki Loves Women South Asia postcard here. Kindly obtain your postcards before 15th July 2020.

Keep shining!

Wiki Loves Women South Asia Team

MediaWiki message delivery (பேச்சு) 13:27, 5 சூலை 2020 (UTC)