வாருங்கள்!

வாருங்கள், Parvathisri, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சோடாபாட்டில்உரையாடுக 04:15, 2 செப்டெம்பர் 2011 (UTC)Reply

 
பார்வதி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை. தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம், அறிவியல் சார்ந்த தலைப்புகளில் பங்களித்து வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?


பரிந்துரை

தொகு

வணக்கம் பார்வதி, தங்களுடைய பங்களிப்பிற்க்கு நன்றி, தங்களுடைய பயனர் பக்கத்தை பார்வையிட்டேன் தங்களுடைய பிறந்த தினம், ஊர் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களை அனைவரும் பார்க்கும் வகையில் அமைத்து உள்ளீர்கள், இது பிறரால் தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது. முக்கியமான தகவல்களை நீக்கும் மாறு பரிந்துரை செய்கிறேன்.

பரிந்துரைக்கு நன்றி தினேஷ். செய்துவிட்டேன்.

கட்டுரைகள்

தொகு

வணக்கம் பார்வதி,

தங்கள் பங்களிப்புகள் கண்டு மகிழ்ந்தேன். விக்கிப்பீடியாவில் ஒரு விசயம் குறித்து ஒரு தலைப்பில் அனைத்து தகவல்களையும் இணைப்பது விதிமுறை. எனவே சீனா ஒரு கண்ணோட்டம் என்ற கட்டுரையின் தாங்கள் எழுதியதை சீன மக்கள் குடியரசு என்ற கட்டுரையில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 06:16, 2 செப்டெம்பர் 2011 (UTC)Reply

சீன மக்கள் குடியரசு என்ற கட்டுரைக்குச் சென்று “தொகு” தொடுப்பை அழுத்துங்கள். அதில் ஏற்கனவே பல விசயங்கள் உள்ளன. நீங்கள் சேர்க்க நினைப்பவற்றை தனிப் பகுதிகளாக அதில் இணையுங்கள் (ஏற்கனவே இல்லாத தகவல்களை). விக்கி நடைக்கேற்ப உங்கள் சேர்க்கைகளை நான் மாற்றியமைத்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:18, 2 செப்டெம்பர் 2011 (UTC)Reply


வணக்கம்.

  1. கட்டுரை தொடர்பான படங்களை பதிவிறக்கம் செய்ய என்ன செய்ய வேன்டும்?
  2. sri என்ற எழுத்தினை தட்டச்சு செய்ய விசைப்பலகையில் உள்ள விசைகள் எவை?
  1. பதிவிறக்கம் (download) செய்ய உள்ள படங்களை right click செய்து "save as" தெரிவு மூலம் கணினியில் சேர்க்கலாம். விக்கியில் பதிவேற்ற (upload) இடப்பக்கம் கருவிப் பெட்டியில் “கோப்பைப் பதிவேற்று” என்றொரு இணைப்பு உள்ளது. அதன் மூலம் பதிவேற்றலாம். (விக்கிப்பீடியாவில் பதிப்புரிமை விதிகள் சற்றே இறுக்கமானவை- பிற தளங்களில் வெளியான படங்களை உரிய அனுமதியின்றி இங்கு மறு பயன்பாடு செய்ய இயலாது.)
  1. sri எழுதும் வசதியைச் சேர்த்துள்ளேன். விக்கியின் தட்டச்சுக் கருவியைப் பயன்படுத்தினால் shift+S, r ஆகியவிசைகளை தொடர்ந்து அழுத்தினால் ஸ்ரீ உருவாகும். (புதிய வசதி வருவதில் சற்று சிக்கல் இருக்கலாம். இது வேலை செய்யாவிட்டால், மொஸில்லா பயர்ஃபாக்ஸ் உலாவி: Shift+reload, இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவி: ctrl-f5 அழுத்திக் கொள்ளுங்கள். பக்கம் மீண்டும் திறக்கும், திறந்த பின்னால் ஸ்ரீ எழுதும் வசதி இருக்கும்)
  1. வெளிக்கருவிகள் கொண்டு தட்டச்சுகிறீர்கள் என்றால் (முரசு, எ-கலப்பை, என்ஹெச்எம் ரைட்டர் போன்றவற்றில்) s, r, ஆகிய வற்றை தொடர்ந்து அழுத்தினால் ஸ்ரீ உருவாகும் --சோடாபாட்டில்உரையாடுக 08:49, 4 செப்டெம்பர் 2011 (UTC)Reply

வணக்கம். நான் கோப்பை பதிவேற்று மூலம் என் படத்தை பதிவேற்றிவிட்டேன் அதனை நீக்கத் தெரியவில்லை. தயவு செய்து அதனை நீக்கிவிடவும். நன்றி.

நீக்கப்பட்டுவிட்டது.--சோடாபாட்டில்உரையாடுக 06:10, 6 செப்டெம்பர் 2011 (UTC)Reply
  1. வணக்கம் ,
விக்கிநூல்கள் தமிழில் எழுத, தேட உதவிகள் தேவை. மேலும் கட்டுரை அல்லது நூல்கள் தொடர்பான படஙளை எவ்வாறு இணைப்பது என்பது எனக்கு இன்னும் விளங்கவில்லை. படிப்படியான விளக்கங்களைத் தயவு செய்து தெரிவிக்கவும். ( இன்னும் sri தட்டச்சு செய்ய இயலவில்லை) நன்றி!--Parvathisri 18:02, 7 செப்டெம்பர் 2011 (UTC)Reply
  1. விக்கிநூல்களில் இன்னும் தட்டச்சு கருவி இணைக்கப்படவில்லை. ஓரிரு வாரங்களில் இணைக்கபடும். (விக்கி நூல்களில் கருவியை நிறுவியவுடன் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்). அது வரை எ. கலப்பை, என் ஹெச். எம் ரைட்டர் போன்ற புற கருவிகளை உங்கள் கணினியில் நிறுவினால் எழுத முடியும்.
  2. சில நாட்கள் முன்பு படம் பதிவெற்ற கற்றுக் கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். அவ்வாறு ஏற்றிய படத்தை ஒரு கட்டுரையில் இணைக்க பின்வரும் நிரல் துண்டினை கட்டுரையில் இணையுங்கள்.
 
Kavery
[[File:Water above the Hogenakkal falls.jpg|right|thumb|250px|காவேரி]]
இவ்வாறு செய்தால் வலப்புறம் தெரியும் படம் இணையும். இந்த நிரல் துண்டில் "Water above the Hogenakkal falls" என்பது இணைக்கும் படிமத்தின் பெயர்; right என்பது படம் வலப்புறம் அமைய வேண்டும் என்பதைக் குறிக்கிறது. 250px என்பது படத்தின் அளவைக் குறிக்கிறது. “காவேரி” என்பது படத்தின் கீழ் இடப்படும் குறிப்பு. விக்கிப்பீடியா:படிமம் பயிற்சி என்ற பக்கத்தில் விவரமான செய்முறை விளக்கம் உள்ளது.
படத்தைப் பதிவேற்றிவிட்டு முயற்சி செய்து பாருங்கள். சிக்கல் ஏற்படின் நான் உதவுகிறேன்.
  1. ஸ்ரீ வரவேண்டுமே (இந்த ஸ்ரீ கருவி மூலம் தான் தட்டச்சுகிறேன்). உங்கள் உலாவியின் cache காலி செய்ய வேண்டும். அதை செய்ய மொசில்லா பயர்ஃபாக்ஸ் உலாவி: Shift+reload, இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவி: ctrl-f5 அழுத்திக் கொள்ளுங்கள். பக்கம் மீண்டும் திறக்கும். இங்கு உள்ள படிமுறை விளக்கத்தின் மூலம் செய்ய முயலுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 19:27, 7 செப்டெம்பர் 2011 (UTC)Reply

நன்றி

தொகு

வணக்கம்.

திரு சோடாபாட்டில் அவர்களுக்கும் திரு இரவி அவர்களுக்கும், விக்கியன்புக்கு என் மனமார்ந்த நன்றிகள். விக்கியில் எனது பங்களிப்பும் உள்ளது என்னும்போது பெருமையாகவே உள்ளது. என் கட்டுரைகள் குறித்த வழிகாட்டுதல், மதிப்புரைகள் அளித்தால் அது என்னை திருத்திக்கொள்ள உதவும்.


இதுவரை மிகச்சிறப்பாகவே பங்களித்து வருகிறீர்கள். சற்றே மாற்றி செய்ய வேண்டியன
1) ஏற்கனவே கட்டுரை உள்ளதா என்று பலமுறை தெடிப் பார்த்து விடுங்கள். எ.கா. ஓணத்திருநாள் கட்டுரை எழுதும் முன் “ஓணம்” “ஓணப் பண்டிகை”, போன்ற பல பெயர்களையும் மேல் வலது மூலையிலுள்ள தேடு பெட்டியில் இட்டுப் பார்த்து விடுங்கள். (பயனர்கள் வேறு பல பெயர்களில் ஒரு தலைப்பைக் குறித்து எழுதியிருக்கக் கூடும் எனவே ஏற்கனவே கட்டுரை இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டியதாகிறது). இரண்டாவது முறை எழுதியிருந்தால் கவலை கொள்ளவேண்டாம், நிருவாகிகள் யாரேனும் ஒன்றிணைத்து விடுவொம்.
2) படங்கள் இணைத்தல். விக்கிப்பீடியா அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட தளமென்பதால் கடுமையான அமெரிக்க பதிப்புரிமை விதிகளைப் பின்பற்றுகிறது. கல்வி/விளக்க நோக்கத்துக்கு கூட பிற தளங்களில் வெளியான படங்களைப் இங்கு பயன்படுத்த இயலாது. (இவ்விதிக்கு சில விலக்குகளும் உள்ளன எ.கா. தற்போது உயிருடன் இல்லாதவர் படங்கள்). எனவே நீங்கள் எடுத்த படங்களை மட்டும் பதிவேற்றும்படி கேட்டுக் கொள்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 17:51, 12 செப்டெம்பர் 2011 (UTC)Reply

படங்கள்

தொகு

உங்களைச் சந்திப்பதிலே மகிழ்கிறேன்.நான் சேலம் மாவட்டத்தின் ஆத்தூர் நகரத்தில் வசிக்கிறேன். விக்கித்திட்டங்களில் விக்சனரியிலும், விக்கி ஊடகப் பதிவேற்றுதலிலும் ஈடுபாடு கொண்டவன். இங்குஓணத்திருநாள் கட்டுரையின் படங்களைக் கண்டேன். அருமை. அதனை விக்கி ஊடக நடுவத்தில் (commons) பதிவேற்ற எண்ணம் கொண்டுள்ளேன். உங்களின் கருத்தறிய ஆவல்.17:43, 12 செப்டெம்பர் 2011 (UTC)உழவன்+உரை..


வணக்கம்.மிக்க மகிழ்ச்சி. தாரளமாகச் செய்யுங்கள். எனக்கும் அந்தத் திட்டங்கள் - முறைகள் குறித்து தெரிவியுங்கள். நன்றி. --Parvathisri 17:47, 12 செப்டெம்பர் 2011 (UTC)Reply
நன்றி.அங்கு இணைத்திட படவணுக்கள் (pixels) அதிகமாக இருக்கும் படங்கள் இருந்தால் நல்லது.உங்களிடம் உள்ளதா? அங்கு பதிவேற்றினால்,அனைத்து மொழி திட்டங்களிலும் தெரியும். இங்கு பதிவேற்றினால், பிறமொழிகளில் தெரியாது. அது பற்றி தமிழில் அறிய இதனைச்சொடுக்கவும். ஏதேனும் ஐயங்கள் இருப்பின், இவ்வார இறுதியில் சனி/ஞாயிறு பார்ப்போம்.எனது மின்னஞ்சல் tha.uzhavanATgmailCOM வணக்கம்.18:22, 12 செப்டெம்பர் 2011 (UTC)உழவன்+உரை..


ஓணம் கட்டுரை

தொகு

வணக்கம் பார்வதி,தங்களுடைய ஓணம் கட்டுரை நன்றாக உள்ளது, மேலும் உங்கள் பங்களிப்புகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். ஆனால் இந்த விழாவை தாய்லாந்துடன் இணைத்து நீங்கள் கூறி இருப்பது புதுமையாக இருந்தது. எனினும் அதற்க்கு சான்றுகள் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.--Jenakarthik 04:40, 13 செப்டெம்பர் 2011 (UTC)Reply

வணக்கம் கார்த்திக்,தகுந்த இணைப்புகளை இணைக்க நான் இன்னும் பயிற்சி பெறவில்லை. -- தந்துள்ளேன் இதுபோலத்தான் இணைக்க வென்டுமெனில் இனி தொடர்கிறேன்.நன்றி.--Parvathisri 14:11, 13 செப்டெம்பர் 2011 (UTC)Reply
வணக்கம் பார்வதி, நீங்கள் அங்கு தந்துள்ள இணைப்பானது ஆங்கில விக்கிபீடியாவிற்கு எடுத்துச் செல்கிறது. இப்படி இருக்கும் இணைப்புகளை en: என்ற குறிகளின் வாயிலாக இணைக்க வேண்டும். அதுவும் அந்த இணைப்பு தாங்கள் தமிழில் எழுதி உள்ள கட்டுரையின் ஆங்கில கட்டுரையாக இருக்க வேண்டும், எனவே இவை மேற்கோள்களாக கருதப்படாது. அதுபோல் தாங்கள் இணைத்துள்ள சிஆங்க்மாய் பூக்கள் திருவிழா இதனுடன் ஒத்துபோவதாக எனக்கு தெரியவில்லை. எனினும் இதை பற்றி மேலும் சில விக்கி நபர்களிடம் கலந்த பின்னர் முடிவெடுக்கலாம்.--Jenakarthik 15:00, 13 செப்டெம்பர் 2011 (UTC)Reply
பார்வதி, இந்த தாய்லாந்து பண்டிகை ஓணம் போன்றுள்ளது என்று வேறு யாரேனும் ஒப்பீடு செய்துள்ளார்களா?. ஏனெனில் முதல் ஆய்வு /ஒப்பீடு நாம் விக்கிப்பீடியாவில் செய்ய இயலாது. பிறர் செய்த ஆய்வு/முடிவு/ஒப்பீடுகளை மட்டும் இங்கு குறிப்பிட முடியும் (காண்க விக்கிப்பீடியா:புத்தாக்க ஆய்வு கூடாது). இந்த ஒப்பீடு உங்களுக்கு முதலில் தோன்றியதென்றால், அப்பத்திக்கு பதில் “மேலும் காண்க” என்றொரு சிறு தலைப்பிட்டு, அந்த இணைப்பை மட்டும் கொடுத்து விடுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 15:27, 13 செப்டெம்பர் 2011 (UTC)Reply
வணக்கம்,திணத்தந்தி 6-9-2011 நாளிதழில் சிறப்பு இணைப்பாக வந்துள்ள ஆண்மிக மலரில் பூத் திருவிழா ஓணத்துடன் ஒப்பிடப்பட்ட இச் செய்தி இடம் பெற்றுள்ளது. நீங்கள் கூறியபடி இணைப்பை மாற்றி விடுகிறேன். நன்றி.--Parvathisri 15:54, 13 செப்டெம்பர் 2011 (UTC)Reply
நன்றி பார்வதி.--சோடாபாட்டில்உரையாடுக 16:00, 13 செப்டெம்பர் 2011 (UTC)Reply

பாராட்டுக்கள்

தொகு

பார்வதி, உங்கள் ஆக்கங்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. புதுப்பயனராக அசத்துகிறீர்கள்! உங்கள் பங்களிப்புகள் தொய்வின்றி தொடர வாழ்த்துகள் !! --மணியன் 03:02, 17 செப்டெம்பர் 2011 (UTC)Reply

மிக்க நன்றி --Parvathisri 15:44, 17 செப்டெம்பர் 2011 (UTC)Reply

பார்வதி, தமிழ் இலக்கணம் தொடர்பான உங்கள் கட்டுரைகள் கண்டு மகிழ்ந்தேன். இன்னும் நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள். -- மயூரநாதன் 11:54, 9 செப்டெம்பர் 2011 (UTC)Reply
வணக்கம் ஐயா,

தஙகள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல. தங்களைப் போன்றோரின் வாழ்த்துகள் என்னைப் போன்ற 'கத்துக் குட்டி'களை ஊக்கப்பபடுத்துகிறது. நன்றி!


குறுகிய காலத்தில், உங்களின் அருமையான தொடர் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். நீங்கள் ஒரு ஆசிரியர் என்பது இன்னும் கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி.--இரவி 16:12, 12 செப்டெம்பர் 2011 (UTC)Reply

அபாரம்!

தொகு

அம்மா, உங்களின் பங்களிப்பு... மிகப் பிரமாதம்! என்னை வியக்க வைக்கிறது! வாழ்த்துகள், தொடரட்டும் உங்களின் சீரிய பணி! --பயனர்:Selvasivagurunathan mஉரையாடுக

நன்றி அய்யா!--Parvathisri 14:30, 28 நவம்பர் 2011 (UTC)Reply

படிமங்கள்

தொகு

வணக்கம். எனது கட்டுரைக்கான படிமங்களை ஒரு சிலவற்றைத்தவிர நான் கூகுள் இமேஜ் போன்ற இனைய தளங்களில் பதிவிறக்கம் செய்துள்ளேன். மற்றவை எனது பள்ளியில் கற்றல் கற்பித்தலுக்காக பள்ளிக் கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட படங்கள் இவற்றை கட்டுரைகளில் பயன் படுத்தலாமா? பயன் படுத்துவதென்றால் என்ன செய்ய வென்டும்?. ஒரு சில படங்கள் விக்கி காமென்ஸ்- ல் உள்ளது என வருகிறது. அந்த படங்களை எவ்வாறு கட்டுரைக்குப் பயன்படுத்துவது? என் கவணிப்புப் பட்டியலில் படிமங்களுக்கான் காப்புரிமை விவரங்கள் கேட்கப் பட்டுள்ளது. அதைப் பற்றித் தெரியவில்லை. உதவவும். நன்றி! --Parvathisri 08:12, 21 செப்டெம்பர் 2011 (UTC)Reply

பார்வதி,
உங்கள் படிமங்களில் வார்ப்புரு இணைத்தது நான் தான். நானே இன்னும் ஓரிரு நாட்களில் தேவையானதை செய்து விடுகிறேன். விக்கிப்பீடியாவில் பதிப்புரிமை பற்றிய பொதுக் கூறுகள் பின்வருமாறு
1) கூகுள் இமேஜ் தேடலில் கிடைப்பவை அனைத்தும் பதிப்புரிமை விலக்கு பெற்றவை அல்ல. அவற்றில் பெரும்பான்மையானவை விக்கி பதிப்புரிமை விதிகளுக்கு ஒத்து வராதவை. கற்றல் கற்பித்தலுக்காக எடுக்கும் படங்கள் அனைத்தையும் இங்கு பயன்படுத்த முடியாது. ஏனெனில் விக்கிப்பீடியாவின் பதிப்புரிமக் கொள்கை, கட்டுரைகளை வர்த்தக நோக்குக்கு பயன்படுத்த பிறரை அனுமதிக்கிறது. எனவே கற்றல் நோக்கில் பயன்படுத்தக் கூடியவற்றை இங்கு சேர்க்க இயலாது.
2) மேற்சொன்ன விதிக்கு சில விலக்குகள் உண்டு. சில படிமங்களை மட்டும் நியாயப் பயன்பாட்டுக் காரணங்கள் (fair use) சுட்டி பயன்படுத்தலாம் - இவ்வாறு பயன்படுத்துபவை எண்ணிக்கையில் அதிகமாக இருக்கக்கூடாது. ஒரு கட்டுரைக்கு ஒன்று அல்லது இரண்டிற்கு மேல் இருக்கக்கூடாது.
3) விக்கி காமன்சில் உள்ள படங்களை மீண்டும் இங்கு பதிவேற்றத் தேவையில்லை. அப்படியே படிமப்பெயர்களைப் பயன்படுத்தினால் அவை இங்கு வந்து விடும்.
பதிப்புரிமம் சற்று சிக்கலான குழப்பம் தரக்கூடிய விசயமாதலால், கவலை கொள்ளவேண்டாம். (நான் உடபட அனைவருக்கும் விக்கிப்பீடியா விதிகள் குழப்பம் தரக்கூடியவையே :-)).--சோடாபாட்டில்உரையாடுக 08:35, 21 செப்டெம்பர் 2011 (UTC)Reply

வணக்கம்

தொகு
ஆர்டிக் நரி கட்டுரையில் இவை ஓநாய்களின் எதிரிகள் என்ற விவரமும் (artic fox) என்றும் குறிப்பிட்டு இருந்தது. ஓநாய் என்றே திருத்தி விடுங்கள் நன்றி. --Parvathisri 08:52, 2 அக்டோபர் 2011 (UTC)Reply

வணக்கம்

தொகு

நான் தொடங்கிய கட்டுரைகள் மற்றும் தொகுப்பு எண்னிக்கைகள் பற்றிய விவரங்களைக் காட்டும் ( tool server) பக்கத்தில் (error) காட்டுகிறது. --Parvathisri 03:42, 29 அக்டோபர் 2011 (UTC)Reply

இந்தக் கருவியில் தேடிப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 03:58, 29 அக்டோபர் 2011 (UTC)Reply

உங்களுக்குத் தெரியுமா பரிந்துரை

தொகு

உங்களுக்குத் தெரியுமா பகுதிக்கான பரிந்துரைகளை விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா என்ற பக்கத்தில் “பரிந்துரைகள்” பகுதியில் செய்ய வேண்டுகிறேன். நீங்கள் சாக்கையர் கூத்துக்கான பரிந்துரை இட்டிருந்த பக்கம் முன்பு உபயோகத்தில் இருந்தது. இப்போது இல்லை. சாக்கைக் கூத்து பரிந்துரையை உரிய இடத்துக்கு நகர்த்தி விட்டேன். --சோடாபாட்டில்உரையாடுக 03:48, 3 நவம்பர் 2011 (UTC)Reply

முதற்பக்க அறிமுகம்

தொகு

வணக்கம் பார்வதி,

தங்களைப்பற்றிய ஒரு சிறு அறிமுகக் குறிப்பை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். எனவே தங்களைப் பற்றிய தகவல்களை பின்வரும் இணைப்பில் தரும்படி வேண்டுகிறேன்.

 

பார்வதிஸ்ரீ, தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்தவர். அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களும், பெரியார் பலகலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். செப்டெம்பர் 1, 2011 முதல் விக்கியில் பங்களித்து வருகிறார். தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம், சிற்றிலக்கியம் அறிவியல் அறிஞர்கள், கணிதம் முதலியன குறித்த கட்டுரைகளை எழுதுவதில் ஆர்வமுடையவர். இவர் பங்களித்த கட்டுரைகளில் ஓணம், மதுரை சுங்குடி சேலை, தலையாட்டி பொம்மை, தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும், பிள்ளைத்தமிழ், நெப்பந்திசு, சிலப்பதிகாரத்தில் சமயக் கோட்பாடுகள், பட்டினப் பாலை, நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், செம்பகராமன் பிள்ளை, ஆனந்த ரங்கம் பிள்ளை, ஆர்தர் சி. கிளார்க்‎, கப்ரேக்கர் முதலியன சிலவாகும். இவர் விக்கி நூல்கள், பொது போன்ற விக்கியின் பிற திட்டங்களிலும் பங்களித்து வருகிறார்.

அறிமுகக் குறிப்பு எழுதுவதற்கு விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் என்ற பக்கத்தில் உள்ள பிற அறிமுகங்களை முன்னுதாரணங்களாகக் கொள்ளலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 15:32, 16 நவம்பர் 2011 (UTC)Reply

நன்றி பார்வதி. நவம்பர் 20 தேதி முதல் இரு வாரங்கள் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்படும்.--சோடாபாட்டில்உரையாடுக 18:53, 16 நவம்பர் 2011 (UTC)Reply
முதற்பக்கத்தில் காட்சிப் படுத்தியுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:44, 20 நவம்பர் 2011 (UTC)Reply

வாழ்த்துகள்

தொகு
முதற்பக்க அறிமுகம் பார்த்தேன். மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்--சஞ்சீவி சிவகுமார் 06:07, 20 நவம்பர் 2011 (UTC)Reply
முதற்பக்க அறிமுகம் கண்டு தங்களைப் பற்றி அறிந்து மகிழ்ந்தேன், உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் !!--மணியன் 06:21, 20 நவம்பர் 2011 (UTC)Reply
முதற்பக்க அறிமுகம் கண்டேன். மகிழ்ச்சி. உங்களது பணி மென்மேலும் சிறக்கட்டும்.--பாஹிம் 06:47, 20 நவம்பர் 2011 (UTC)Reply
உங்கள் அறிமுகம் கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 07:29, 20 நவம்பர் 2011 (UTC)Reply
வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். நான் பங்களித்த கட்டுரை மற்றும் அருகிலேயே எனது அறிமுகம் என முதல் பக்கம் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. என்னால் இயன்ற வரை என் பங்களிப்பைத் தொடருவேன். நன்றி.--Parvathisri 09:59, 20 நவம்பர் 2011 (UTC)Reply
வணக்கம் பார்வதி, தங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் பார்த்து மகிழ்ந்தேன். தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்--P.M.Puniyameen 10:06, 20 நவம்பர் 2011 (UTC)Reply
உங்கள் முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி. உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்.

நீங்கள் இனி எழுதும் ஊனுண்ணி தாவரங்கள் பற்றிய கட்டுரைகளில் [[பகுப்பு:ஊனுண்ணித் தாவரங்கள்]] என்ற பகுப்பை சேர்த்து விடுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் 08:54, 21 நவம்பர் 2011 (UTC)Reply

வாழ்த்துகள். :) சேலத்திற்கு வந்த பின்னர் உங்களைச் சந்திக்க வேண்டும். :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 09:35, 21 நவம்பர் 2011 (UTC)Reply
முதற்பக்கம் கண்டேன்.மகிழ்ந்தேன்.இதன் மூலம் தங்களை அறிய ஆரம்பித்தேன். சூர்யா! சந்திக்கும் போது எனக்கும் தெரிவியுங்கள்.எனது அலைப்பேசி எண்:90 95 34 33 42 பலரும் சந்திப்போம்.வணக்கம்.07:00, 23 நவம்பர் 2011 (UTC)உழவன்+உரை..
திரு புன்னியாமீன் ஐயா அவர்களுக்கு என் நன்றி! தங்கள் சாதனைகளின் முன் நான் ஒரு புள்ளியே. மேலும் சூர்யா மற்றும் உழவன் அவர்களுக்கும் என் நன்றிகள். சேலம் வந்தால் உறுதியாக சந்திப்போம். ஏற்பாடு செய்யுங்கள் உழவன். --Parvathisri 06:22, 24 நவம்பர் 2011 (UTC)Reply

வாழ்த்துக்கள் ஸ்ரீ. பார்வதி! உங்கள் பங்களிப்புகளுக்குப் பாராட்டுக்கள். அமீபா கட்டுரைபற்ரிக் குறிப்பிட்டிருந்தீர்கள். பார்க்கின்றேன். நன்றி. --கலை 23:57, 27 நவம்பர் 2011 (UTC)Reply

பகுபதம் (இலக்கணம்)

தொகு

வணக்கம். உங்களது பகுபதம் (இலக்கணம்) கட்டுரையில் பொன்னன் என்ற சான்று, பெயர்ப் பகுபதம் மற்றும் குறிப்பு வினைப் பகுபதம் இரண்டிற்குமே எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது. எவ்வாறு பொன்னன் என்ற பதம் பெயர்ப் பகுபதமாகிறது என்பது புரிகிறது. அதே பொன்னன் எவ்வாறு குறிப்பு வினைப் பகுபதமாகும் என்பது எனக்குத் தெரியவில்லை. எனக்கு அந்த விளக்கத்தைக் கொஞ்சம் தாருங்கள். நன்றி.--Booradleyp 13:57, 28 நவம்பர் 2011 (UTC)Reply

பகுபதம்

தொகு
  1. பொன்னன் என்பது பெயர் பகுபதமாகும் போது பொன்+ ன்+ அன் என நிற்கிறது. இங்கு பொன்னன் என்பது பொருள் பெயராகிறது. அன் என்ற விகுதி பெறுகிறது.(முதல் பெயர்)
  2. பொன்+ன்+அன் என வினைப் பதமாய் நிற்கும் போது பொன்னன் = பொன்னை உடையவன் என்றோ, பொன்னை உடையவனாக இருந்தான் என்றோ குறிப்பாக காலத்தையும் செய்பவனையும் காட்டும்.( காலத்தைக் குறிப்பாகக் காட்டுவன வினைச் சொற்கள்) எனவே இது குறிப்பு வினை ஆயிற்று. இனியன், புகழன் போன்றவையும் அவ்வாறே.


சேத்திரக்கோவை நூல் கூறும் முருகனின் திருத்தலங்கள்

தொகு

வணக்கம் பார்வதிஸ்ரீ, சேத்திரக்கோவை நூல் கூறும் முருகனின் திருத்தலங்கள் கட்டுரையில் திருத்தலங்களில் பழமுதிர்ச் சோலை இருமுறை தரப்பட்டுள்ளது.--Booradleyp 10:09, 30 நவம்பர் 2011 (UTC)Reply

நன்றி கவனிக்கிறேன்.--Parvathisri 16:58, 1 திசம்பர் 2011 (UTC)Reply


விக்கிப் பட்டறை அழைப்பு

தொகு

டிசம்பர் 11, 2011, தமிழ் விக்கிப் பட்டறை, சேலம்

வணக்கம் Parvathisri,

சேலத்தில் முதல் விக்கிப்பட்டறை டிசம்பர் 11, 2011 அன்று பாவடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம். மேலும், உங்களுக்குத் தெரிந்த விக்கி ஆர்வமுடையவர்களையும் அழைத்து வரவும்.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால் உங்களையும் இப்பட்டறைக்கு அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 11, டிசம்பர் 2011 இல், சேலம் பட்டறையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். மேலதிக தகவல்களுக்கு இங்கு சொடுக்கவும்.

--சூர்யபிரகாசு உரையாடுக... 15:10, 7 திசம்பர் 2011 (UTC)Reply

ஒரு கோரிக்கை

தொகு

நீங்கள் கலந்துகொள்வதை உறுதி செய்து உங்கள் கையொப்பத்தை "பங்குகொள்வோர்" பட்டியலில் இடவும். மேலும், உங்களுடன் வரும் உங்கள் நண்பர்கள் பெயரையும் சேர்க்கவும். நன்றி. --சூர்யபிரகாசு உரையாடுக... 12:43, 8 திசம்பர் 2011 (UTC)Reply

உதவி

தொகு

எம் பள்ளி மாணவர்கள் தப்பட்டை ஒலித்ததை ஒளிக்காட்சியாக எடுத்துள்ளேன். அவை எம்.பி3 மற்றும் எம்.பி4 ஒலிக்கோப்புகள். அவற்றைக் காமன்ஸில் பதிவேற்ற முடியவில்லை. பதிவேற்ற என்ன செய்ய வேண்டும்?--Parvathisri 15:48, 29 திசம்பர் 2011 (UTC)Reply

விக்கி காம்ன்ஸில் பதிவேற்ற .ogv (Ogg theora) கோப்பு முறைகள் தேவை. .avi, mpeg போன்ற கோப்புகளை .ogv கோப்புகளாக மாற்ற பல இலவச மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்துவது பற்றிய உதவிக் குறிப்புகளுக்கு இப்பக்கத்தைக் காணவும்.--சஞ்சீவி சிவகுமார் 16:11, 29 திசம்பர் 2011 (UTC)Reply
மிக்க நன்றி ஐயா, கோப்பைப் பதிவேற்றியுள்ளேன். (A tamil thappu)--Parvathisri 17:24, 29 திசம்பர் 2011 (UTC)Reply

தங்களின் விக்கியன்புக்கு மிக்க நன்றி ஐயா.--Parvathisri 11:37, 30 திசம்பர் 2011 (UTC)Reply

விக்கிக் குறுந்தகடு திட்டம்=

தொகு

விக்கிக் குறுந்தகடுத் திட்டத்தில் பங்கேற்க முன்வந்தமைக்கு மிக்க நன்றி. செய்ய வேண்டிய வேலைகள் விக்கிப்பீடியா:குறுந்தட்டு திட்டம்/முதற்பக்கக் குறுந்தட்டு/கட்டுரைகள் என்ற பக்கத்தில் உள்ளன. இதில் உள்ள கட்டுரைகளில் ஐந்து வேலைகள் செய்ய வேண்டும்

  1. இற்றை / விரிவாக்கம் - இதில் நிறைய நேரம் செலவழிக்க வேண்டாம். தகவல்கள் 2012 க்கு ஏற்றவாறு இற்றையாக இருந்தால் போதும். மற்றபடி இப்போதுள்ள உள்ளட்டக்கங்களே போதுமானவை
  2. விக்கியாக்கம் - விக்கி நடைக்கேற்ப உள்ளதா, தகவல்சட்டம், வெளி இணைப்புகள், போன்றவை முறியாமல் உள்ளனவா என்று சோதித்தல்
  3. உரை திருத்தம் சுற்று 1 - இலக்கணப் பிழை அகற்றல் + எழுத்துப்பிழை அகற்றல்
  4. உரை திருத்தம் சுற்று 2 - இலக்கணப் பிழை அகற்றல் + எழுத்துப்பிழை அகற்றல்; சுற்று 1 செய்தவர் தவிர இன்னொருவர் செய்ய வேண்டும்.

சில கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவற்றின் எண் காலத்தில் உங்கள் பெயரை இட்டு விடுங்கள் - நீங்கள் அதைத் தெரிவு செய்திருக்கிறீர்கள் என்பதை பிறர் அறிந்து கொள்ளும் விதமாக. --சோடாபாட்டில்உரையாடுக 15:44, 8 சனவரி 2012 (UTC)Reply

இப்பகுதியில் நான் செய்துள்ள வேலைகள் சரியானவைதானா என அறிய விரும்புகிறேன்.--Parvathisri 18:43, 9 சனவரி 2012 (UTC)Reply
சரியானவையே.--சோடாபாட்டில்உரையாடுக 06:46, 10 சனவரி 2012 (UTC)Reply

விக்கி அஞ்சற் படி

தொகு

உங்களுக்கு அனுப்பியுள்ள விக்கி அஞ்சலின் படியைக் குறிப்புக்காக இங்கு இட்டுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 10:52, 21 சனவரி 2012 (UTC)Reply


அன்புள்ள பார்வதி அவர்களுக்கு,

இந்திய விக்கிப்பீடியாக்களைப் பற்றிய செய்திக் கட்டுரையை எழுதிவரும் சாரு என்பவர் தமிழ் மொழியைப் பற்றியும், பண்பாட்டைப் பற்றியும் எழுதும் பங்களிப்பாளர் யாரையாவது ஒருவரை அடையாளங் காட்டுமாறு கேட்டார். உங்களைப் பற்றி அவரிடம் கூறியுள்ளேன். உங்களைத் தொடர்பு கொள்ள மின்மடல் முகவரியைக் கேட்டுள்ளார். அதை எனக்கு அனுப்ப முடியுமா?

நன்றி.

சுந்தர்


பி.கு. செங்கைப் பொதுவன் ஐயாவைப் பற்றியும் சாருவிடம் சொன்னேன். ஏற்கனவே அவரைப் பற்றி வெகுவாக எழுதப்பட்டுள்ளதால் உங்களைப் பற்றி எழுத விரும்பினார்.

பதக்கம்

தொகு

தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சூர்யா. தற்போது கட்டுரையை ஒரு முறை பார்த்துவிடுங்கள்--Parvathisri 06:21, 22 சனவரி 2012 (UTC)Reply

அம்மானை

தொகு

குறுந்தட்டுத் திட்டத்தில் இரண்டாவது நபர் ஒருவர் உரைதிருத்தம் செய்ய வேண்டியிருப்பதால் நீங்கள் உரை திருத்தம் செய்த அம்மானை கட்டுரையில் சில உரை திருத்தங்களைச் செய்துள்ளேன். சில கூடுதல் தகவல்களைப் பேச்சுப் பக்கத்தில் தந்துள்ளேன். ஏதேனும் மறுப்பிருந்தால் கூறுங்கள். இல்லை என்றால் இரண்டாம் உரைதிருத்தம் முடிந்ததாய்க் கருதிப் பதிப்பெண் தந்து விடலாம். நன்றி!--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 19:26, 21 சனவரி 2012 (UTC)Reply

நன்றி கார்த்தி. இத் தகவல்களையும் கட்டுரையில் இணைத்து விடுங்கள். எனக்கு மறுப்பேதும் இல்லை--Parvathisri 19:33, 21 சனவரி 2012 (UTC)Reply
நாளை காலை செய்து விடுகிறேன். உ.தி.2 முடிந்ததாயும் தந்து நாளை பதிப்பெண் தந்து விடலாம். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 20:55, 21 சனவரி 2012 (UTC)Reply

சோளப்பொரி

தொகு

சோளப்பொரி கட்டுரையில் இரண்டாம் உரை திருத்தம் செய்துள்ளேன். சில வெளியிணைப்புகள் அறுபட்டிருந்தன. மற்றபடி பெரிய திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. எனவே உரைதிருத்தம் 2 முடிந்ததாய்க் கருதலாம் என நினைக்கிறேன். ஒருமுறை நீங்கள் பார்த்து விட்டுச் சொன்னால் முடிந்ததாய்க் கொள்ளலாம். பொருத்து சரியா பொறுத்து சரியா என ஐயம் ஏற்பட்டது. அது பற்றிய உரையாடல் இப்பக்கத்தில் இருந்தது. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 17:57, 22 சனவரி 2012 (UTC)Reply

ஒரு கோரிக்கை!

தொகு

இன்றைய சிறப்புப் படம் திட்டப் படங்களின் விளக்கங்கள் பொதுவாக 3, 4 வரிகளே இடம்பெறுகின்றன. எனவே, அவற்றை கட்டுரையில் இடம்பெறுவது போல் அதிக தகவல்கள் தரத் தேவையில்லை. நீங்கள் செய்த தொகுப்புகளில் சில மாற்றங்கள் செய்துள்ளேன். மேலும், பரிசல் கட்டுரையில் நீங்கள் மேலும் விரிவாக்கம் செய்யலாம். :) உதவிக்கு நன்றி பார்வதி -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 14:07, 23 சனவரி 2012 (UTC)Reply

வாழ்த்துகிறேன்

தொகு

விக்கி பரப்புரை-சேலம் தொடர்பான செய்தி அறிந்தேன். பார்வதி உங்கள் பணி மென்மேலும் சிறப்படைய வாழ்த்துகிறேன்.--P.M.Puniyameen 15:36, 25 சனவரி 2012 (UTC)Reply

வாழ்த்துக்கள் பார்வதி. உங்கள் பணி தொடரட்டும்.--கலை 14:06, 27 சனவரி 2012 (UTC)Reply

ஐயம்

தொகு

பயனர் வெளி,பொது வெளி, மணல் தொட்டி பற்றி விளக்கம் தேவை. மணல் தொட்டியில் தொகுப்பவை பிறருக்குத் தெரியாதா? --Parvathisri 09:30, 26 சனவரி 2012 (UTC)Reply

பொதுவெளி/மையவெளி என்பது தற்போது நாம் கட்டுரைகளை உருவாக்கும் இடம். பயனர்வெளி/மணல்தொட்டி ஆகியவை வரைவுகளை எழுதிப்பார்க்கும் சோதனைக் களங்கள். அனைத்தும் பிற பயனர்களுக்குத் தெரியும். ஆனால் தேடல்களில் பயனர்வெளி/மணல்தொட்டி ஆகியவை முதலில் வரா. பயனர்வெளியை சோதனை முயற்சிகள் / சிறிது சிறிதாகக் கட்டுரை உருவாக்கம் போன்றவற்றுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

எ.கா. பயனர் பேச்சு:Parvathisri/சோதனைப் பக்கம் - இதனை உருவாக்கினால் இது உங்கள் பயனர்வெளிப்பக்கமாகி விடும்.--சோடாபாட்டில்உரையாடுக 11:13, 26 சனவரி 2012 (UTC)Reply

செய்தி

தொகு

படிமப் பேச்சு:Parvathisri.jpg இப்பக்கத்தில் பின்வரும் செய்தி இடப்பட்டிருந்தது. இட்டவர் பயனர்:Premalathajawahar --சோடாபாட்டில்உரையாடுக 11:13, 26 சனவரி 2012 (UTC)Reply

வணக்கம் பார்வதிஸ்ரீ தங்கள் புகைப்பட இணைப்புகளைப் பார்த்தேன். சிறப்பான செயல். உங்களின் முயற்சி பாராட்டுக்குரியது.நான் பணியாற்றும் கல்லூரி, தமிழ் இலக்கிய மாணவர்களுக்கும் விக்கியை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். நானும் மேலும் பங்களிக்க விரும்புகிறேன். நன்றி. பழந்தமிழரின் சூழல் காப்புணர்வு மற்றும் பாவலர் மணிவேலனாரின் எனது கட்டுரைகளைப் பார்வையிட்டு உதவுங்கள். சில கட்டுரைகளை மேலதிகத் தகவல்கள் தர கற்றுக் கொண்டுள்ளேன். ஆனால் புதிய தலைப்புகளிலும் பங்காற்ற விரும்புவதால், தயக்கம் ஏற்படுகிறது. நான் எழுதியுள்ள கட்டுரைகளைப் பார்வையிட்டு திருத்தம கூறினால் உதவியாக இருக்கும் நன்றி.

சோழர்

தொகு

வணக்கம் நீங்கள் பேச்சு:தத்தராய ராமச்சந்திர கப்ரேக்கர்ப் பக்கத்தில் சோழர் பற்றியும் அடிமை பற்றியும் ஒரு குறிப்பு இட்டிருந்தீர்கள். அது சோழர்#அடிமைகள் என்னும் பகுதியா என்று உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். நன்றி--செல்வா 21:53, 26 சனவரி 2012 (UTC)Reply

ஆம். நான் சோழர் கட்டுரை உரையாடல் பக்கத்தில் (அடிமைகள் பற்றிய குறிப்பு) என்ற தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டிருந்தேன்.அதாவது சோழர்கள் பிற நாட்டுப் பெண்களைக் குடியமர்த்திய மாளிகையே வேளம் எனப்பட்டது.அது வேழம்[[1]] அல்ல வேளம் என்றே இருக்க வேண்டும்[[2]]

தமிழகராதியிலும் வேளம் என்றே உள்ளது.விக்சனரியில் இதற்கான பொருள் தவறாக இடப்பட்டுள்ளது. அதற்கான கலிங்கத்துப் பரணி பாடல் ஒன்றையும் மேற்கோளாகக் காட்டி சோழர் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் செய்தி இட்டிருந்தேன். ஆனால் அச்செய்தி நீக்கப்பட்டுள்ளது.(பேச்சு வரலாற்றுப் பக்கங்களில் கூட இல்லை). --Parvathisri 13:45, 27 சனவரி 2012 (UTC)Reply

மேலே நீங்கள் குறிப்பிட்டது சரியே. வேழம் என்றால் யானையல்லவா. இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது வேளம் என்பதைப் பற்றி. வேளக்காரப் படை என்பதுவும் சோழர் சிறப்புப் படையணிகளுள் ஒன்றல்லவா.--பாஹிம் 13:22, 28 சனவரி 2012 (UTC)Reply

உங்கள் கேள்வி ப்ற்றிய குறிப்பு ஒன்றை பேச்சு:சோழர்#வேழமா வேளமா? என்னும் பகுதியில் இட்டுள்ளேன். இது பற்றி எனக்குத் தெரியாது. சோழர் பக்கத்தில் தொடர்வது பின் வருபவர்களுக்கும் உதவியாக இருக்கும்.--செல்வா 22:46, 28 சனவரி 2012 (UTC)Reply

நன்றி

தொகு

சத்திமுத்தப் புலவர் கட்டுரை கண்டேன். மிக்க நன்றி. கோபி 14:26, 27 சனவரி 2012 (UTC)Reply

கட்டுரைத் தலைப்புகள்

தொகு

"எனக்கும் தொகுப்பதற்குத் தலைப்புகள் கிடைக்கும் " என்று நீங்கள் கோபியின் உரையாடல் பக்கத்தில் எழுதியிருந்ததைப் பார்த்தேன். இரண்டு முக்கியமான பட்டியல்கள் உள்ளன ("எல்லா மொழி விக்கிகளிலும் இருக்க வேண்டிய கட்டுரைகள்"). இவற்றை நீங்கள் பார்வையிட்டு, உங்களுக்குப் பிடித்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுதலாம்.

விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்-2 (விரிவாக்கப்பட்டவை)
விக்கிப்பீடியா:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள் (அதனுள்ளே இற்றைபடுத்தப் பட்ட இன்னொரு பட்டியல்: விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள் )

--செல்வா 19:14, 27 சனவரி 2012 (UTC)Reply

ஆசிரியர்களுக்கு அறிமுகம்

தொகு

ஒரு ஆசிரியருக்கு விக்கியை அறிமுகம் செய்வது என்பது ஒரே கல்லில் ஒரு மரத்தையே வீழ்த்துவதற்கு சமம். ஒரு ஆசிரியர் அதை பரப்ப வேண்டுமென எண்ணினால் ஒரு வகுப்புக்கு 50 பேர் என்று வைத்துக்கொண்டாலும் 20 ஆசிரியர்கள் 1000 பேருக்கு விக்கியை அறிமுகப்படுத்த முடியும். மிக துல்லியமான பயன்தரக்கூடிய இலக்கு.--தென்காசி சுப்பிரமணியன் 12:15, 28 சனவரி 2012 (UTC)   விருப்பம் -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 12:39, 28 சனவரி 2012 (UTC)Reply

கூட்டு முயற்சிக் கட்டுரை

தொகு

நீங்கள் தீவு கட்டுரையை மேம்படுத்தியது கண்டு மகிழ்ந்தேன். அடுத்தடுத்த வாரங்களில் எடுத்துக் கொள்ளும் கூட்டு முயற்சிக் கட்டுரைக்கு ஏதேனும் தலைப்பைப் பரிந்துரைக்க விரும்பினீர்கள் என்றால் இங்கு தெரிவிக்கலாம். நன்றி--இரவி 16:56, 29 சனவரி 2012 (UTC)Reply

வணக்கம் சகோதரி
நான் பதிவேற்றிய 'கொலுசு' கட்டுரையில் தாங்கள் இணைத்துள்ள படிமங்கள் கட்டுரைக்கு மேலும் மதிப்புக் கூட்டுகின்றன மிக்க நன்றி. திருவிளக்கு வழிபாடு என்ற கட்டுரையை அரும்பாடுபட்டு திருத்தி அமைத்தமைக்கும் என் இதயங்கனிந்த நன்றி. --Iramuthusamy 18:57, 8 பெப்ரவரி 2012 (UTC)

நீங்கள் தொடங்கிய கட்டுரைகள்

தொகு

இங்கே நீங்கள் தொடங்கிய கட்டுரைகளைப் பார்க்கலாம்

--செல்வா 19:56, 9 பெப்ரவரி 2012 (UTC)

பாராட்டுகள்

தொகு

இவ்வளவு குறுகிய காலத்தில் 169 கட்டுரைகள் தொடங்கி எழுதியதும் அல்லாமல் பற்பல கட்டுரைகளைப் பெரிய அளவில் விரிவுபடுத்தியும் திருத்தியும் நற்பங்களிப்புகள் தந்துள்ளீர்கள். நெஞ்சார்ந்த பாராட்டுகள்!--செல்வா 20:01, 9 பெப்ரவரி 2012 (UTC)

தங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. --Parvathisri 17:48, 10 பெப்ரவரி 2012 (UTC)

தளிச்சேரி

தொகு

தளிச்சேரி குறித்து முயற்சி எடுத்து எழுதியமைக்கு நன்றி. உள்ளடக்கம் நிறைவாக உள்ளது. வரி கொடுக்க இயலாதோரும் பிற நாட்டு அடிமைகளும் தளிச்சேரியில் கட்டாயமாய்க் குடியமர்த்தப்பட்டனர் என்று கருதுவோருமுளர். இது போன்று கருதுவோர் சோழர் வரலாற்றில் சேறு அள்ளிப் பூச முனைவோர் என எதிர்சாரார் குற்றஞ்சாட்டுகின்றனர். மாற்றுக் கருத்துக்களை வேறு யாரேனும் வந்து இங்கு முன்வைக்கும் வரை அவற்றை உள்ளடக்கத்தில் இட வேண்டாம் எனவே நினைக்கிறேன். நன்றி!--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 00:14, 16 பெப்ரவரி 2012 (UTC)

பார்வதிஸ்ரீ, உங்களது கட்டுரையாக்கம் சிறப்பாக உள்ளது. உள்ளடக்கத்திற்கான உசாத்துணைகளை இறுதியில் பட்டியலிட்டுள்ளீர்கள். இருப்பினும் இதன் விக்கித்தன்மையைக் கூட்ட எழுதிய வரிகளை அடுத்தே உசாத்துணை (Inline reference) தருதல் இன்னும் சிறப்பாகும். இது குறித்து உதவி இங்குள்ளது. முனைப்பாக செயலாற்றும் தாங்கள் சிறந்த விக்கிப்பீடியராக அடுத்த அடி எடுக்கவே இந்த கருத்துக்களை முன்வைக்கிறேன். --மணியன் 03:57, 16 பெப்ரவரி 2012 (UTC)

'வழிநடத்துதல்' வார்ப்புரு தயார்!

தொகு

வார்ப்புரு:Parvathisri/navbar எனும் பெயரில் 'வழிநடத்துதல்' வார்ப்புருவினை (navigation bar) நீங்கள் கேட்டுக்கொண்டதன்படி உருவாக்கியுள்ளேன். வார்ப்புரு:Parvathisri/navbar என்பதனை copy செய்து உங்களின் பயனர் பக்கத்தின் ஆரம்பத்தில் எங்கு தேவையோ அங்கு paste செய்துவிடுங்கள். Paste செய்யப்பட்ட வார்ப்புரு:Parvathisri/navbar என்பது, {{ }} எனும் அடைப்புக்குறிக்குள் இருக்குமாறு செய்ய வேண்டும். இப்போது icons உங்களின் முகப்புப் பக்கத்தில் தோன்றும். ஒவ்வொரு உருவாக நீங்கள் click செய்தால் உங்களுக்குத் தேவையான பக்கங்கள் (மணல்தொட்டி உள்பட) தோன்றும். அந்த துணைப்பக்கங்கள் இன்னமும் உ ருவாக்கப்படவில்லை என்பதால் பக்கத்தின் பெயர்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஒவ்வொரு பக்கத்திலும் நீங்கள் ஏதேனும் எழுதி சேமிக்கும்போது அப்பக்கம் உருவாகிவிடும். இப்போது நீல நிறத்தில் பக்கத்தின் பெயர்கள் தோன்றிவிடும். அதற்குப்பிறகு நீங்கள் உங்கள் விருப்பம் போல இத்துணைப்பக்கங்களை பயன்படுத்தலாம். நான் சரியாக விளக்கியுள்ளேன் என நம்புகிறேன். மேலும் உதவி தேவைப்பட்டால்... கேளுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் 06:31, 20 பெப்ரவரி 2012 (UTC)

செல்வசிவகுருநாதன், அன்று நீங்கள் என்னிடம் எவ்வாறு செய்வது என்று கேட்ட போது நேரமில்லாததால் [ இப்போதும் நேரமில்லை தான், ஒரு நாளில் 36 மணிநேரம் இருந்திருக்கக் கூடாதா ? :-( ] நானே மாதிரிக்குச் செய்து விட்டேன். இதனால் உங்களுக்குச் செய்யத் தெரியாதென நான் கருதியதாய் நினைக்க வேண்டாம். ஏற்கனவே உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்திருந்ததன் மூலம் தங்கள் கல்விப்புலம் அறிந்திருந்ததால் தங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை என உணர்ந்து கொண்டேன். நன்றி! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 06:46, 20 பெப்ரவரி 2012 (UTC)
கார்த்தி... நீங்கள் எனக்கு உருவாக்கித்தந்த பிறகுதான் அந்த வார்ப்புருவை நான் ஆராய்ந்து கற்றுக்கொண்டேன். அதன்பிறகு இரண்டு பயனர்களுக்கு உதவினேன். நான் எதுவும் தவறாக நினைக்கமாட்டேன்! மென்மேலும் கற்றுக்கொண்டே இருந்தால்தானே வாழ்க்கை முழுமை பெறும்? (நீங்க வேற... என் கல்வித்தகுதி மிகக்குறைவு. அடுத்த பிறவியிலாவது நிறைய 'படிப்புப் பட்டம்' வாங்கணும்!) என்றென்றும் அன்புடன்...--மா. செல்வசிவகுருநாதன் 07:34, 20 பெப்ரவரி 2012 (UTC)
பார்வதிஸ்ரீ... திட்டத்திற்குரிய icon 'ஐ (கனசதுரப் பெட்டியை) click செய்யும்போது ஒரு பக்கமும், 'திட்டம்' என்பதனை click செய்யும்போது வேறொரு பக்கமும் வந்த பிரச்சினையை நீங்கள் எதிர்கொண்டீர்கள். இப்போது அது சரிசெய்யப்பட்டது. சரிபாருங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் 10:00, 20 பெப்ரவரி 2012 (UTC)

பார்வதிஸ்ரீ...ஒவ்வொரு துணைப்பக்கத்திலும் வார்ப்புருவை இட்டுருக்கிறீர்கள். இது உங்கள் விருப்பம் எனில் பரவாயில்லை. ஆனால்... நீங்கள் மீண்டும் உங்களின் முகப்பு பக்கத்திற்கு வர வழி இருக்கிறதே?! ஒவ்வொரு துணைப்பக்கத்திலும் உள்ள < பயனர்:Parvathisri எனும் இணைப்பை சொடுக்கினால், உங்களின் முகப்பு பக்கம் வந்துவிடுமே!
இது தவிர... கருவிகள் எனும் துணைப்பக்கத்தை இங்கு கண்டுள்ளபடி உபயோகிக்கலாம்.
மணல்தொட்டி எனும் துணைப்பக்கத்தை இங்கு கண்டுள்ளபடி உபயோகிக்கலாம்.--மா. செல்வசிவகுருநாதன் 18:02, 21 பெப்ரவரி 2012 (UTC)

Return to the user page of "Parvathisri/தொகுப்பு 1".