பயனர் பேச்சு:Sundar/தொகுப்பு04

புலவர், பண்டிதர், கவிஞர்...

தொகு

சுந்தர் பின்வரும் சொற்களை பல இடங்களில் காணக் கூடியதாக உள்ள்து.

  • புலவர்
  • உரையாசிரியர்
  • பண்டிதர்
  • கவிஞர்
  • கவிராயர்
  • அறிஞர்
  • கலைஞர்
  • ஓதுவார்
  • பண்டாரம்
  • நாயனார்
  • யோகி
  • சாது
  • முனிவர்
  • சித்தர்
  • சன்யாசி
  • குரு

இதில்

இதில் ஒவ்வொன்றுக்கு கட்டுரை வேண்டுமா. --Natkeeran 14:39, 12 நவம்பர் 2008 (UTC)Reply

பண்டிதர் என்ற வடமொழி ஆற்றுச்சொல்லை எந்தத் துறையில் தேர்ச்சி பெற்றவரையும் குறிக்கப் பயன்படுத்துகின்றனர். பண்டாரம் என்பவர்கள் பொதுவாகச் சிற்றூர்களில் ஊர்ப்பொதுவிலிருந்து ஊதியம் பெற்று காவல்தெய்வங்களுக்கு பூசை செய்பவர்கள் என்று நினைக்கிறேன். யோகியின் வரைவிலக்கணம் எனக்குத் தெரியவில்லை. ஆனால், சுவாமி விவேகானந்தர் போன்றோரை யோகி என்று விளிப்பர். சன்யாசி என்ற வடமொழிச்சொல் இல்லறம் துறந்து துறவரம் பூண்டுள்ளவர்களைக் குறிக்கும். அதைத் துறவிக்கு வழிமாற்றலாம். குரு என்பவர் இந்தியச்சூழலில் ஆசானாவார். (மேல்நாட்டவர், தேர்ச்சி பெற்றவர் என்ற பொருளில் இச்சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.) இந்தத் தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்தால் நல்லதுதான். எனினும், எனக்கு இது தொடர்பில் தற்போது மிகுதியான அறிவு இல்லை. சிறுவயதில் படித்திருக்கிறேன், வீட்டில் எண்ணற்ற நூற்கள் உள்ளன. சிலவற்றைப் பெற்றுவர முயல்கிறேன். -- சுந்தர் \பேச்சு 06:17, 13 நவம்பர் 2008 (UTC)Reply

நூறாவது கட்டுரை

தொகு

சுந்தர் கொட்டாவி என்னும் உங்கள் கட்டுரை உங்களது நூறாவது கட்டுரை என்பதால் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். உங்களைப் போல தேர்ந்தாய்ந்து அரிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவோர்கள் இங்கு இல்லை என்றே சொல்லலாம்! உங்களுடைய மௌடம், சுற்றிழுப்பசைவு போன்ற கட்டுரைகள் பலவும் தனித்தன்மை வாய்ந்தவை. விரைவில் 200 ஆவது கட்டுரையை முடிப்பீர்கள் என்று நம்புகிறேன்.--செல்வா 20:27, 12 நவம்பர் 2008 (UTC)Reply

பாராட்டுக்கு நன்றி, செல்வா. சுற்றி இருப்பவர்களெல்லாம் ஆயிரக்கணக்கில் கட்டுரைகள் துவக்கி வந்தாலும், என்னால் இயன்ற அளவு குறைந்த எண்ணிக்கையிலாவது ஆர்வமூட்டும் கட்டுரைகளாகவும், நமது களத்தை விரிவுபடுத்துவனவாகவும் எழுத முயன்று வருகிறேன். உங்களது மற்றும் அனைத்துப் பயனர்களது தொடர் ஊக்கத்துக்கு நன்றி. விரைவில் 200 ஆவது கட்டுரையை முடிக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 06:24, 13 நவம்பர் 2008 (UTC)Reply
எனது நடையை நானே கிண்டல் செய்யும் வண்ணமாகவே கொட்டாவி என்ற தலைப்பை நூறாவது கட்டுரைக்குத் நான் தேர்ந்தெடுத்தேன். :-) மௌடம், கேண்டரின்_கோணல்கோடு_நிறுவல்முறை, கிப்பன் பண்டம், பகடிப்பட_இயற்பியல் போன்றவை எனக்கு உளநிறைவை அளித்தவை. -- சுந்தர் \பேச்சு 06:41, 13 நவம்பர் 2008 (UTC)Reply

பகுப்பு தொடர்பாக

தொகு

வாழ்த்துகள்

தொகு

சுந்தர் பயனுடைய இரண்டு கட்டுரைகளை நீங்கள் நேற்று (எங்கள் நேரவலயத்தில்) வழங்கியமைக்கு நன்றி. அவை: (1) தமிழில் மெய்யொலிக் கூட்டம், (2) மகரக்குறுக்கம்.--செல்வா 14:30, 3 டிசம்பர் 2008 (UTC)

இரண்டு பக்கங்களையும் இணைத்துத் தந்தமைக்கு நன்றி. --செல்வா 04:51, 4 டிசம்பர் 2008 (UTC)

புதுப்பயனர் பக்கம்

தொகு

புதுப்பயனர்களை வரவேற்க {{புதுப்பயனர்}} என்னும் வார்ப்புருவை இடலாம். --செல்வா 15:00, 6 டிசம்பர் 2008 (UTC)

சுந்தர், இங்கே பாருங்கள். கருத்து ஏதும் இருந்தால் தெரிவியுங்கள் நன்றி.--செல்வா 16:19, 6 டிசம்பர் 2008 (UTC)

Fixed vs Relative

தொகு

சுந்தர் தற்போது பின்வரும் பகுதியை இணைத்துள்ளேன். பிற பகுதிகள் பக்கத்தை resize செய்யும் பொழுது தாமாக resize செய்கின்றன. இது fixed ஆக இருக்கிறது. இதையும் relative ஆக எப்பிடி மாற்றுவது என்று கூறமுடியுமா. நன்றி. --Natkeeran 03:36, 9 டிசம்பர் 2008 (UTC)

சரி செய்துள்ளேன். கேட்ட மாதிரி உள்ளதா எனப் பாருங்கள். -- சுந்தர் \பேச்சு 04:15, 9 டிசம்பர் 2008 (UTC)
நன்றி சுந்தர். வேலை செய்வது மாதிரித்தான் தெரிகிறது. --Natkeeran 04:21, 9 டிசம்பர் 2008 (UTC)

கணிதவியல் மற்றும் அறிவியல் இலக்கியங்கள் வரலாறு

தொகு

இதனைப் பார்க்க வேண்டுகிறேன் --செல்வா 16:56, 16 டிசம்பர் 2008 (UTC)

வலைப்பதிவு

தொகு

சுந்தர், உங்கள் கருத்துகளுக்கு நன்றி. இது பற்றி தனிமடல்களாக ஒரு 8-10 பேருடன் அண்மையில் உரையாடினோம் (நண்பர் கணேசன் அவர்கள் விடுத்திருந்த மடலை ஒட்டி). பல கருத்துகள் என் வலைப்பதிவில் நான் இன்னும் இடவில்லை. நீங்கள் கூறிய அதே கருத்துகளை சற்றே வேறுவிதமாக இட்டிருந்தேன். ஓர் எகர உயிர்மெய் எழுத்தைக் குறிக்க சிலர் ஒற்றைக்கொம்பை எழுத்துக்கு வலப்புறம் இட வேண்டும் என்கிறார்கள்; இதே போல ஏகார, ஒகர, ஓகார உயிர்மெய்களையும். நண்பர் கணேசனுக்கு நான் இட்ட என் மடல்களில் ஆ என்பதை அ என்று எழுதி கால் இட்டு ஒலிநீட்டத்தைக் காட்டலாம் என்பர் சிலர், ஈ என்பதை இ + கால் என்று.. இப்படியாக சொல்லி, பின்னர் எல்லா எழுத்துகளையுமே 0,1 ஆகிய இரண்டை இரண்டை வைத்தே எழுதலாமே என்று முடித்தேன். cognitive load என்று கூறியது சுருக்கமாக கருத்தை நடுமைப் படுத்தும். தமிழில் ஆக்க வேண்டிய பணிகள் நூறாயிரக்கணக்காக, மில்லியன் கணக்காக இருக்கையில், இப்படி இருப்பதையும் கெடுக்க வழி வகுக்கிறார்கள் (இவர்களும் நன்னோக்கம் கொண்டே செய்கின்றனர், அவர்கள் என்னுடைய மதிப்புகுரிய பேராசிரியர்களும் நண்பர்களும்தான்). இப்பொழுது சீர்திருத்தத் தொடங்கினால் விளையும் கெடுதி அளப்பரியது. ஆங்கில விக்கியில் உள்ள அத்தனை கட்டுரைகளையும் ஒரு சின்ன குச்சி நினைவகத்தில் அடக்கக்கூடிய இந்நாளையை கணினி தொழில்நுட்ப வளர்ச்சியில் இவை எல்லாம் அறுதியாகத் தேவை இல்லாதது என்பது என் கருத்து. விரித்தால் பெருகும். மீண்டும் கருத்துக்கு நன்றி.--செல்வா 18:20, 19 டிசம்பர் 2008 (UTC)

2009 தமிழ் விக்கிப்பீடியா வேலைத்திட்டம்

தொகு

வணக்கம் சுந்தர்:

வழமைபோல உங்கள் பங்களிப்பு இவ்வாண்டு சிறப்பாக அமைந்தன. இந்த செய்தியில் உங்களின் கருத்து உள்வாங்கப்பட்டிருக்க்மோ என்று இருக்கிறது. நன்றி

அடுத்த ஆண்டு நமது வேலைத்திட்டம் என்னவாக அமையவேண்டும் என்ற உங்கள் பரிந்துரைகளை இங்கு பகிர்தால் நன்றி. மூன்று முக்கிய துறைகள், மூன்று சந்தைப்படுத்தல் வழிகள் பற்றியும் குறிப்பிட்டால் நன்று. --Natkeeran 03:50, 24 டிசம்பர் 2008 (UTC)

நல்வாழ்த்துகள்!

தொகு

அன்புள்ள சுந்தர், அருமையான மகிழ்ச்சியான செய்தி!! உங்கள் மகனுக்கும், உங்கள் மனைவிக்கும், உங்களுக்கும் எங்கள் யாவருடைய இனிய நல்வாழ்த்துகள், பாராட்டுகள்! எல்லா வளமும் நலமும் பெற நல்வாழ்த்துகள்! பெயர் பரிந்துரைகளை தனி மடலில் விடுக்கின்றேன்.--செல்வா 05:39, 29 டிசம்பர் 2008 (UTC)

சுந்தர், மிக்க மகிழ்ச்சி. இளைய சுந்தர் பல்கலையும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்திட வாழ்த்துக்கள். உங்களுக்கென்றே இவ்வாரத்தில் விசேடமாக உருவாக்கப்பட்டது போலும் இக்கட்டுரை:-)--Kanags \பேச்சு 06:00, 29 டிசம்பர் 2008 (UTC)

சுந்தர் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் முதற்கண் வாழ்த்துக்கள். உங்கள் குடும்பத்துக்கு இனிமை தர வந்திருக்கும் மகன் எல்லா நலமும் பெற்று வளர்ந்து வளம் பெருக்கிப் பெற்றோருக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார். மயூரநாதன் 16:18, 29 டிசம்பர் 2008 (UTC)

செல்வா, கனகு, மயூரநாதன்: உங்கள் வாழ்த்துகளுக்கு மிக நன்றி. கனகு, இந்நேரத்தில் தமிழ்ப்பெயர்களைப் பற்றிய கட்டுரை துவக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி்யோடு வியப்பூட்டுகிறது. நானும் சேர்த்து வைத்துள்ள பெயர்களை இணைக்கிறேன். மற்றபடி, நான் மேலே குறிப்பிட்டபடி ஐந்தெழுத்து என்பது திட்டவட்டமான வரம்பு இல்லை, சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். முடிந்தால் சிறப்பு ழகரத்தைத் தவிர்க்கலாம். அதை ஆங்கிலத்தில் எழுதி கண்டபடி மொழிவதை நான் விரும்பவில்லை. -- சுந்தர் \பேச்சு 16:26, 29 டிசம்பர் 2008 (UTC)
வாழ்த்துக்கள் சுந்தர். குழந்தைகளுக்கான பெயர் என்ற தலைப்பில்தான் சிறு சிக்கல். குழந்தைக்கு ஒரு பெயர், பெரியவரான பின் வேறு ஒரு பெயர் வைப்பது இல்லைத்தானே! --Natkeeran 16:33, 29 டிசம்பர் 2008 (UTC)
நல்ல கண்டுபிடிப்பு. :-) மக்கட்பெயர்கள் என்றிருக்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 16:45, 29 டிசம்பர் 2008 (UTC)

வாழ்த்துக்கள் சுந்தர்--கார்த்திக் 16:54, 29 டிசம்பர் 2008 (UTC)

நன்றி கார்த்திக். -- சுந்தர் \பேச்சு 17:03, 29 டிசம்பர் 2008 (UTC)

வாழ்த்துக்கள் சுந்தர். (நீங்கள் கேட்ட ஐந்து எழுத்துப் பெயர்)

“மொழி” என்பது தூயத் தமிழ் சொல். “தமிழ்” ஒரு வளமிக்க மொழி; வளமிக்க ஒரு மொழிக்கு உரித்தாளன் எனும் பொருற்பட “மொழிவளன்” எனும் பெயரை நான் பரிந்துரைக்கின்றேன். -- HK Arun
வாழ்த்துக்கும் பரிந்துரைக்கும் நன்றி, அருண். மொழிவளன் நல்ல பெயர். -- சுந்தர் \பேச்சு 17:38, 29 டிசம்பர் 2008 (UTC)

மகிழ்ச்சியான செய்தி. வாழ்த்துக்கள் சுந்தர்.--சிவக்குமார் \பேச்சு 15:37, 30 டிசம்பர் 2008 (UTC)

நன்றி சிவா. -- சுந்தர் \பேச்சு 15:41, 30 டிசம்பர் 2008 (UTC)

வாழ்த்துக்கள் சுந்தர். அகிலன், முகிலன், கபிலன், கவின், (கதிர் - கதிரவன், கதிர்வேல்) ஆகியவை என் பரிந்துரைகள். --குறும்பன் 16:42, 30 டிசம்பர் 2008 (UTC)

வாழ்த்துகளுக்கும் பரிந்துரைகளுக்கும் நன்றி குறும்பன். -- சுந்தர் \பேச்சு 09:45, 31 டிசம்பர் 2008 (UTC)

LocalSettings.php

தொகு

த.வி LocalSettingsTa.php இப்போது இல்லையா. மாற்றம் செய்ய வேண்டும் என்றால் என்ன process?

require_once 'http://svn.wikimedia.org/svnroot/mediawiki/trunk/extensions/Quiz';

நன்றி. --Natkeeran 03:12, 31 டிசம்பர் 2008 (UTC)

நற்கீரன், இப்போது அந்தந்த விக்கிகளில் LocalSettings.php என்பதைத் தொகுத்தால் போதும் போலிருக்கிறது. m:Manual:LocalSettings.php என்ற உதவிப்பக்கத்தைப் பாருங்கள். -- சுந்தர் \பேச்சு 09:48, 31 டிசம்பர் 2008 (UTC)


அந்த Manual இல்லை. LocalSettingsTa.php இல்லை. --Natkeeran 23:47, 11 ஜனவரி 2009 (UTC)

சமன்பாடு

தொகு

மேலே உள்ள பக்கத்தில் சமன்பாடு ஏன் சரிவர வரவில்லை என்று பாக்கவும். நன்றி. --Natkeeran 23:46, 11 ஜனவரி 2009 (UTC)

வரவேற்பை வரவேற்கிறேன்

தொகு

பயனர்களை வரவேற்பது தமிழ் விகிபீடியாவின் வளர்சிக்கு வலிமை சேர்ப்பதாக உள்ளது. பலர் தமிழ் விகிபீடியாவில் எழுதாமல் இருப்பதற்கு காரணம் தமிழ் தட்டச்சில் இருக்கும் சிறு இன்னல்கள் தான். இதற்கு ஓர் புரட்சிகரமான தீர்வு காணும் வரை தமிழ் கணிமையின் வளர்ச்சி வலிமையற்றதாகத்தான் இருக்கும். நானும் விக்கிபீடியாவில் எழுதாமல் இருப்பதற்கு காரணம் அது தான். ஆனால் ஒரே ஒரு வேறுபாடு. நான் கைப்பேசியிலிருந்து எழுதுகிறேன்; எனது கைப்பேசியில் தமிழ் விசைப்பலகை இல்லை :-(

படங்கள்

தொகு

WP:2009Bangalore மறக்காமல் படங்களை சேர்த்து விடுங்கள். நன்றி. --Natkeeran 14:12, 1 பெப்ரவரி 2009 (UTC)

நற்கீரன், நான் படங்கள் எதுவும் எடுக்கவில்லை. மற்ற நண்பர்கள் எடுத்து வைத்துள்ளனர். அவர்களிடம் கேட்கிறேன். -- சுந்தர் \பேச்சு 15:28, 1 பெப்ரவரி 2009 (UTC)


என்ன இது

தொகு

என்ன இது சுந்தர்!  :-( --கார்த்திக் 15:12, 3 பெப்ரவரி 2009 (UTC)

கார்த்தி, அது புகுபதிகை செய்யாத பயனர் ஒருவர் கட்டுரையில் இட்டது. அதிலிருந்து தகவல்களை கட்டுரையில் சேர்ப்பதற்காக நற்கீரன் பேச்சுப் பக்கத்தில் வைத்திருந்திருக்கிறார். இனியும் தேவையில்லை என்பதால் நீக்கியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 16:10, 3 பெப்ரவரி 2009 (UTC)

மாதப் பெயர்கள்

தொகு

வார்ப்புரு:மாதங்கள்

  • ஜனவரி -> சனவரி
  • ஜூன் -> யூன் சூன் ??
  • ஜுலை -> யூலை சூலை ??
  • ஆகஸ்ட் -> ஆக?ட் ??

அவசியமா? தமிழ் ஒலிப்புமுறைக்கு ஏற்ப எழுதுவது? முடியுமா? --Natkeeran 22:38, 23 பெப்ரவரி 2009 (UTC)

தமிழக வழக்கு: சனவரி, சூன், சூலை. இவை ஓரளவு பொதுப்பயன்பாட்டிலும் உள்ளதால் கட்டாயம் ஏற்றுக்கொள்ளலாம். ஆகசிட்டு மட்டும்தான் பேரிடர் தருவது சற்றே மாறுபட்டு நிற்கிறது. என்ன செய்யலாம் எனத் தெரியவில்லை. டிசம்பரையும் திசம்பர் எனலாம். டகரத்தில் சொற்கள் தொடங்கா. -- சுந்தர் \பேச்சு 05:16, 24 பெப்ரவரி 2009 (UTC)
ஆகசுட்டு, ஆகசட்டு என்னும் கூட்டல்களையும் சிந்திக்கலாம். பேரிடர் என்றெல்லாம் ஏதும் இல்லை. பழக்கம்தான் காரணம். நாம் ஆகஸ்டு என்று எழுதினாலும், பலரும் ஆகசட்டு மாசம் வரேன் என்று சொன்னான் என்று ஒலிக்கக் கேட்டிருக்கின்றேன் (இடையே வரும் சகரம் சற்றே குறுகி ஒலிக்கின்றது). ஆக˘ச்ட்டு மாதம் என்றும் எழுதலாம் :) ஒரு சிலவற்றைத் தவிர்ந்த மெய்யொலிக் கூட்டங்கள் தமிழில் கிடையாது. மொழி மரபை மதித்தால், விரித்து எழுதுவது தவறாகப் படாது.--செல்வா 14:08, 24 பெப்ரவரி 2009 (UTC)
ஆகசட்டு நன்றாகவே உள்ளது. பொது வழக்கில் நீங்கள் கூறுவதைப்போல பல வடமொழிச் சொற்களை தமிழ் மரபுப்படி தான் மக்கள் ஒலிக்கின்றனர். அதிலும் சிற்றூர்களில் தற்போது நான் அடிக்கடி பயணம் செய்கையில் இதை மிகுதியாக உணர்கிறேன். மெய்யொலிக் கூட்டங்கள் பற்றிய உங்கள் கருத்துடன் முழுவதும் உடன்படுகிறேன். -- சுந்தர் \பேச்சு 14:54, 24 பெப்ரவரி 2009 (UTC)
சுந்தர்...இலங்கை வழக்கில் யூன், யூலை என்றே எழுதுவோம்...எனினும் பெரும் வழக்கம் கருதி சூன், சூலை எனலாம். கிறித்தவம் என்றுதான் உரையாடலில் வருகிறது. --Natkeeran 22:19, 24 பெப்ரவரி 2009 (UTC)
நன்றி, நற்கீரன். -- சுந்தர் \பேச்சு 04:58, 25 பெப்ரவரி 2009 (UTC)
'தமிழர் ஒலிப்பு முறையில்’ இந்த எல்லா ஒலிகளும் இருக்கின்றன, அதனால்தான் கிரந்த எழுத்துகள். இல்லாவிட்டால், சில சமீப கட்டுரை தலைப்புகளை பார்த்தாலே தெரிந்து விடும்: ஏபெல் டாஸ்மான்,,அலெஸ்ட்டீடீ, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் படுகொலை‎, ஜெயகாந்தன்‎, ஜெய் பாடிபில்டிங் மாஸ்டர் (இதழ்)‎, ஹைன்ரிச் ஹிம்லர், வின்ஸ்டன் சர்ச்சில்‎, ஸ்கெச்சப், இளையராஜா, ஜெர்மன் ரெய்க், கிரிஸ்டல்நாக்ட்‎, ஹாலஜன்கள்‎, மூன்றாம் இராஜேந்திர சோழன், எமிரேட்ஸ் கிரவுன், விஜய். --92.39.207.120 20:30, 25 பெப்ரவரி 2009 (UTC)
வழக்கில் இவை இல்லை என்று நான் கூறவில்லை. ஒரு கலைக்களஞ்சியம் போன்ற ஆவணத்தில் செந்தமிழ் நடை, செவ்விலக்கண மரபு ஆகியவற்றைப் பின்பற்றுவதில் தவறு இல்லை என்றே கருதுகிறேன். இது பொதுநடையைக் காட்டிலும் சற்று இறுக்கமானதாக ஆங்கில விக்கியில் பரிந்துரைப்பதை இங்கு காணலாம். ஆங்கிலத்தைக் காட்டிலும் தமிழில் பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் இருதரத்தன்மையின் (diglossia)காரணமாக இங்கு இத்தகைய கொள்கை இன்னும் கூடுதலாகத் தேவைப்படுகிறது. நீங்கள் குறிப்பிட்ட ஒவ்வொரு கட்டுரையையும் வழிமாற்ற வேண்டும் என்பதே என் தனிப்பட்ட விருப்பம். அதிலும் அலெசுட்டீட்டி போன்றவற்றை முதன்முதலாக தமிழில் இங்குதான் நாம் அறிமுகப்படுத்துவதால், அதில் கிரந்தம் தேவையில்லை என்பது என் கருத்து. விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு, விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு/கலந்துரையாடல் 01, விக்கிப்பீடியா பேச்சு:கிரந்த எழுத்துப் பயன்பாடு, விக்கிப்பீடியா பேச்சு:ஒலிபெயர்ப்புக் கையேடு, விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இலக்கணக் கொள்கைகள் போன்ற உரையாடல்களைப் பாருங்கள். -- சுந்தர் \பேச்சு 06:01, 26 பெப்ரவரி 2009 (UTC)
"ஒரு கலைக்களஞ்சியம் போன்ற ஆவணத்தில் செந்தமிழ் நடை, செவ்விலக்கண மரபு ஆகியவற்றைப் பின்பற்றுவதில் தவறு இல்லை என்றே கருதுகிறேன்" - விக்கி எல்லோராலும் எழுதப்பட்டு, எல்லோராலும் படிக்கப்படிகிறது. அதனால் சரள எழுத்து முறை, எழுத்து நடைகளே இங்கு பொருந்தும். சரள எழுத்து என்றால் பொதுவாக பத்திரிகைகள், தர பிளாக்குகள், தமிழ் எழுத்தாளரகள் (எகா: ஜயகாந்தன், எஸ்.ராமகிருஷ்ணன், தமிழவன், ஜயமோகன்)எழுதுவது. இங்கே நீங்கள் புது உலகத்தை உருவாக்க வில்லை.--87.254.72.54 10:24, 27 பெப்ரவரி 2009 (UTC)
அதெப்படிங்க, இதேபோன்று பொதுமக்களால் எழுதப்படும் ஆங்கில விக்கிப்பீடியாவில் ஒரு சிறப்பு கலைக்களஞ்சிய நடையைப் பயன்படுத்தினால், பரிந்துரைத்தால் ஏற்றுக்கொள்கிறீர்கள். தமிழென்று வந்தால் மட்டும் ஏற்க மறுக்கிறீர்கள்? -- சுந்தர் \பேச்சு 15:13, 27 பெப்ரவரி 2009 (UTC)
உங்கள் கருத்துக்கு நன்றி. அவற்றுடன் நான் உட்பட பல பயனர்கள் வேறுபடுகிறோம். ஊடகங்களில் ஆங்கிலம்/சமசுகிருதம் மிகுந்து இருப்பதால், அதை பின்பற்று என்று வேண்டுவது போதிய காரணம் இல்லை. தொல்காப்பியம், திருக்குறள், திருமந்திரம், கம்பராமாயணம் போன்றவற்றில் கிரந்தம் இல்லை...ஏன் அவற்றின் மரபை பின்பற்றக் கூடாது. சீரிய தமிழ் இலக்கணப்படி, ஒலிப்புமுறைப்படி நாம் எழுத முயற்சி செய்வதை நீங்கள் எதிர்ப்பது எதற்காக? உங்கள் பெயரை குறிப்பிட்டு கருத்து தெரிவித்தால், சற்று கூடிய கனமாக இருக்கும். --Natkeeran 13:50, 27 பெப்ரவரி 2009 (UTC)
பெயர் அறிவிக்காத பயனர்கள் இங்கு கூறும் கருத்துகளுடன் உடன்பட இயலாது. எளிமையாக, தெளிவாக விளங்கும் படியாக எழுதுவதும் அதே நேரத்தில் இலக்கண வரம்புடைய செம்மொழியாகிய தமிழ் மொழியின் இலக்கணம் மற்றும் பிற நன்மரபுகளை இயன்றவரை பின்பற்றி எழுதுவதே நல்லது. நெடுங்காலத்துக்குப் பயன் படுவது மட்டுமல்லாமல், பல நாடுகளில், பல மாவட்டங்களில் வாழும் தமிழ்ர்களும், தமிழர்களுக்குள்ளேயே உள்ள பல குமுகங்களாக வாழும் பலருக்கும் புரியுமாறும் இருக்கும் நல்ல பொது நடையில் எழுதுவது நல்லது. கலைக்களஞ்சியம் என்பது சீரான நல் மரபுடன் நன் நடையில் எழுதும் ஓர் ஆக்கம். அசட்டு பிசட்டு என்றோ, கொச்சை நடையிலோ எழுததல் கூடாது. ஞானசம்பந்தனை, அழகப்பனை, யாழினியை எப்படி ஆங்கிலத்தில் திரித்து எழுதுவார்களோ, அப்படித்தான் நாமும் செயகாந்தன், செயமோகன் இராமகிருட்டினன், சகன்னாதன் என்று நம் முறைக்கு ஏற்றவாறு எழுதுவதே முறை. செயகாந்தன் பெயரை டாய்ட்சு (செருமன்) மொழியாளர் யெயகான்ட்டன் என்பதுபோலத்தான் எழுதுவார்கள். --செல்வா 14:11, 27 பெப்ரவரி 2009 (UTC)
தமிழ் விக்கியிலேயே ஜெயகாந்தன் எனதான் இருக்கிறது; மேலும் ஜெயகாந்தனே தன் பெயரை அபப்டித்தான் எழுதுகிறார். ஒருவர் தன் பெயரை எப்படி எழுதுகிறாரொ, அப்படியே எழுதுவதுதான் நாகரீகம்; பொய் காரணங்களால் ஒருவர் பெயரை மாற்றி எழுதுவது ஒரு மனிதனை அவ மதிப்பதாகும். மேலும் ஜெயகாந்தன், எஸ்.ராமகிருஷ்னன் போன்றொர் தமிழ் இல்லக்கியத்திற்க்கு செய்த சேவையில் நீங்கள் லட்சத்தில் ஒரு பகுதி கூட செய்யவில்லை. அவர்கள் பிழைப்பு தமிழ் எழுத்துதான் - உங்களைப்போல் ஆங்கிலத்தில் படித்து, ஆங்கிலத்தில் பிழத்து, மற்றவர்களுக்கு ஆங்கிலத்தில் பாடம் சொல்லித் தருவதல்ல. அவர்களுக்கெல்லாம் இல்லாத தமிழ் நடை இங்கு மரபு பேசும் யாருக்கும் வந்துவிடப் போவதில்லை. அதனால் நல்ல தமிழ் எழுத்தாளர்கள் எழுத்தை எப்படி கையாளுகிறார்களோ, அப்படியே கையாளுவது நல்லது. மேலும் ஜெர்மன் விக்கியில் பார்த்தால் உஙகள் பொய் வெளீயாகிறது. ஜெர்மன் விகியில் ஜெயகாந்தனுக்கு ஒரு கட்டுரை இல்லை. ஜெயாபச்சன், ஜயா பாதுரி, ஜயப்ரகாஷ் நாராயணன் போன்றவர்கள் பெயர் அப்படித்தான் இருக்கு - யெய என்று இல்லை. வீணாக இல்லாததை போட்டு குழப்புகிறீர்கள்.--217.28.2.87 20:05, 27 பெப்ரவரி 2009 (UTC)
பெயரிலி நபரே...மற்றுவர்களுக்காக நீங்கள் கருத்துக்கூறுவதை விடுத்து, நீங்கள் தமிழ் மொழிக்கு என்ன பங்களிப்பு செய்தீர்கள் என்று கூறுங்கள். வெறும் "வாய்சொல்லில் வீரராக" மட்டும் இருந்துகொண்டு கருத்துக் கூறுவது எவ்வளவு பொருத்தம். --Natkeeran 20:20, 27 பெப்ரவரி 2009 (UTC)
பெயரிலி (217.28.2.87) அவர்களே, ஒருவர் தன் பெயரை எப்படி வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம், ஆனால் அவருடைய பெயரை வழங்கு மொழிகளில் உள்ள எழுத்துக்களாலும், மொழி ஒலிப்பு மரபுகளாலும்தான் வழங்க இயலும். இது பொது விதி. சகன்னாதன், இராமன், அனுமான், சீனிவாசன், சிரீதரன் (ஆழ்வார் பாடல்) என்றெல்லாம் எழுதுவது போல செயகாந்தன், செயமோகன் என்பன. நானும் எழுத்தாளர் செயகாந்தனின் எழுத்தின் காதலன் தான், அவரை நோபல் பரிசு ஆசிரியருக்கு நேராகத்தான் நினைத்துப் போற்றுகிறேன், ஆனால் அவர் பெயரை தமிழில் செயகாந்தன் என்றுதான் எழுத இயலும் (கிரந்தம் தவிர்த்து எழுதுவதென்றால்) என்பது எளிய உண்மை. செயகாந்தன், செயமோகன், எசு. இராமகிருட்டினன் போன்றோர் ஆற்றிவரும் பணியை நானும் போற்றுகின்றேன், ஆனால் அவர்கள் பெயரை எப்படி டாய்ட்சு (செருமன்) மொழியில் யெயகான்ட்டன், யெயமோஃகன் என்பதுபோல ஒலிப்பார்களோ அது போலவே தமிழிலும் சிறு திரிபுகள் நிகழும். நீங்கள் கூறும் செயாபச்சன், செயப்பிரக்காச நாராயண் பெயர்களும் டாய்ட்சு மொழியில் யெயாபச்சன், யயப்ப்ரகா^ச நாராயந் என்றுதான் எழுதமுடியும் ஒலிக்க முடியும். நாராயண் என்னும் சொல்லில் உள்ள ணகரமும் முதல் எழுத்தாகிய "ஞ்ச" 'சகரமும் டாய்ட்சு மொழியில் இயலாது. ஞானசம்பந்தன், யாழினி, அழகப்பன் என்னும் பெயர்களை ஆங்கிலேயர் எப்படி எழுதி பலுக்குவார்கள்? அதுபோலத்தான். --செல்வா 23:43, 27 பெப்ரவரி 2009 (UTC)
மேலும் ஒன்று சொல்ல வேண்டும். செயகாந்தன், எசு. இராமகிருட்டினன் போன்றோர் எழுதும் கதை நடை வேறு கவிதை எழுதுவோர் நடை வேறு, பாட நடை வேறு இங்கே ஆளும் கலைக்களஞ்சிய நடை வேறு. ஆகவே //அவர்களுக்கெல்லாம் இல்லாத தமிழ் நடை இங்கு மரபு பேசும் யாருக்கும் வந்துவிடப் போவதில்லை.// என்னும் உங்கள் கூற்று பொருந்தாத ஒன்று. இங்கு கதையில் வருவது போன்ற உரையாடல்கள், பேச்சு நடை முதலியன இங்கு கையாளல் முறையாகாது. --செல்வா 00:29, 28 பெப்ரவரி 2009 (UTC)
நாம் ஆழவார் காலத்திலும் இல்லை; ஜெர்மன் மொழியினர் தங்கள் மொழியை வைத்து என்ன செய்கிறார்கள் என்பதும் வீண்வாதம். நாம், இன்று தமிழகத்தில், ஈழத்தில், மலேசியாவில் தமிழ் வார்த்தைகள் எப்படி எழுத்தாளர்களால் எப்படி எழுதப் படுகின்றனவோ, அப்படித்தான் எழுத வேண்டும். ஜெகந்நாதன், ஜேசுதாசன் என்றுதான் தமிழ் கூரும் நல்லுலகத்தில் சொல்லப் படுகின்றன, எழுதப் படுகின்றன. இங்கேயும் அம்முறைகளை பிரதிபலிக்க வேண்டும். விக்கி உங்கள் சொந்த சொத்தோ, மேடையோ அல்ல. 1 தமிழ் நூல்கள் கூட எழுதி, 10000 பிரதிகள் கூட விற்காத ’மொழி விற்பன்னர்’களின் கொட்டம் பயங்கரம்.--217.28.2.87 12:08, 28 பெப்ரவரி 2009 (UTC)
பெயரிலி அவர்களே, உங்களுக்கு விருப்பமான சொற்களுடன், உங்களுக்கு எது நல்ல மொழி நடை என்று தோன்றுகின்றதோ அந்த நடையில், கிரந்தம் கலந்தோ கலக்காமலோ,எழுதுங்களேன். ஏன் இந்த வாதம் எல்லாம். தமிழில் கிரந்தம் கலந்து எழுதலாம், கலக்காமல் எழுத வேண்டும், அதிகம் கலக்காமல் எழுதவேண்டும் என்று பல நிலைப்பாடுகள் உள்ளன. இவற்றின் நிறைகுறைகளை, நேர்மையுடன் கருத்தாடலாம், பலமுறை கருத்தாடி இருக்கின்றோம். மேலும் மேலும் இது பற்றி இங்கு பேசுவதால் பயன் இல்லை. எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும், அதன் மெய்ப்பொருளைக் காணும் பக்குவம் வேண்டும். டாய்ட்சு மொழியை எதற்காக எடுத்துக்காட்டினேன், ஆழ்வார்களை ஏன் எடுத்துக்காட்டினேன் என்பதனை கருத்துடனும் நேர்மையுடன் எண்ணிப்பார்த்தால் விளங்கும். வெறுப்புடனும் தனிமனிதகாழ்ப்புடனும் பேசும் உங்களுக்கு நான் எது கூறினாலும் தவறாகப் படக்கூடும். நானோ பிறரோ இங்கு கொட்டம் அடிக்கவில்லை. ஏராளமான பொன்னான நேரத்தை நல்ல ஆக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறோம். எங்களுக்குத் தெரிந்த கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறோம், எடுத்துரைக்கிறோம். --செல்வா 14:38, 28 பெப்ரவரி 2009 (UTC)

மேலுள்ள இரண்டு பெயர் அறிவிக்காமல் இணையமுகவரிகளுடன் வரும் கருத்துகள் ஆம்சிட்டர்டாமில் உள்ள RIPE Network Coordination Centre என்னும் இடத்தில் இருந்து வருகின்றன. இரு வேறு இணைய முகவரி கொண்டிருந்தாலும் ஒரே இடத்தில் இருந்து வருகின்றது என்னும் ஒரு குறிப்புக்காக மட்டுமே இங்கு இதனை இடுகின்றேன்.--செல்வா 14:22, 27 பெப்ரவரி 2009 (UTC)

ஐயா, துப்பறியும் சாம்பு. உங்கள் நடைமுறை அபத்தத்தையும், முரண்பாடுகளையும் சுட்டிக் காட்டினால், கருத்தைப் பரிசீலிக்காமல், யார் கருத்தை கொண்டுவருகிறான் /ள் என தேடுகிறீகள்--217.28.2.87 20:05, 27 பெப்ரவரி 2009 (UTC)
யார் கருத்தைக் கொண்டுவருகிறார் என்பதற்காக அல்ல, ஏதோ வெவ்வேறு நபர்கள் கூறும் கருத்து போல உள்ளது ஒரே இடத்தில் இருந்து வருவதுதான் (அது ஒருவராகவோ பலாராகவோ இருக்கலாம்) என்பதற்காக அதனைப் பகிர்ந்தேன். வளர்முகமாகப் புரிந்து கொள்ள முற்படுங்களேன்.--செல்வா 23:43, 27 பெப்ரவரி 2009 (UTC)
en:Wikipedia:Sock puppetry....பொய் வேடம் போடுபவர்களைப் பற்றி விக்கிப்பீடியா தெளிவாக இருக்கிறது. அது நல்ல பண்பல்ல. --Natkeeran 20:20, 27 பெப்ரவரி 2009 (UTC)
சாக் பபெட்ரியின் இலக்கணம் “A sock puppet is an alternative account used for fraudulent, disruptive, or otherwise deceptive purposes that violate or circumvent enforcement of Wikipedia policies.”. இங்கே மாற்று அகௌண்டை பயன்படுத்தவில்லை. அதனால் உங்கள் குழப்பம்தான் தெளிவாகிறது.
ஆனால் "or otherwise deceptive purposes" என்பதனையும் நோக்குங்கள். உங்கள் நோக்கம் அப்படி இல்லாமல் இருக்கலாம், ஒப்புக்கொள்கிறேன், னால் வெவ்வேறு இணைய முகவரிகள் இருப்பது அவ்வகைத் தோற்றம் தர வாய்ப்புள்ளது. --செல்வா 23:43, 27 பெப்ரவரி 2009 (UTC)
"வெவ்வேறு இணைய முகவரிகள் இருப்பது அவ்வகைத் தோற்றம் தர வாய்ப்புள்ளது" - இனைய முகவரிகள் என் கையில் இல்லை. உலகத்தில் சில பாக்கியவான்களே சொந்த இனைய முகவரி வைத்துள்ளனர். உங்கள் முகவரியும் உங்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு, எப்போதும் ஒன்றாக இருப்பது என நப்மவில்லை. இணைய முகவரி மாற்றாம் ஒருகாலும் deceptive purposes ஆகாது. கருத்துகளை பார்க்காமல், பிரச்சினைகளை obfuscate செய்கின்றீர்.--217.28.2.87 10:16, 28 பெப்ரவரி 2009 (UTC)
உங்கள் கூற்றுச் சரியே. தவறு என்னது...மன்னிக்க. பெயர் குறிப்பிடாமல் கருத்து தெரிவிக்க உங்களுக்கு பூரண உரிமை உண்டு. --Natkeeran 22:49, 27 பெப்ரவரி 2009 (UTC)
என்று ஒரு பகுப்பில் இவ்வுரையாடலை இட வேண்டுகிறேன்.

பெயரில்லா நண்பருக்கு, செருமனியில் jeyakanthan என்றே எழுதுகிறார்கள் என்று நீங்கள் கூறியதால் தான் செல்வா அவர்கள் அதை மறுத்து எழுதினார். உங்கள் வாதத்தில் பிழை இருப்பதை அறிந்தவுடன் செருமன் காரன் எப்படி எழுதினால் என்கிறீர்கள். செருமன் காரனை இழுத்ததே நீங்கள் தானே! நான் செருமன் நாட்டில் 8 மாதங்களும் நெதர்லாந்தில் 2 ஆண்டுகளும் வாழ்ந்திருக்கிறேன். அந்நாட்டு மொழிகள் படிக்க, கேட்கத் தெரியும். அவர்கள் எழுதுவது J என்றாலும் அந்த Jயும் ஆங்கில Jயும் ஒரே ஒலி தரா. ஐரோப்பிய மொழிகளின் J பெரும்பாலும் ய ஒலி தரும். Jesus எப்படி ஏசு ஆனார் என்று எண்ணிப் பாருங்கள். என் அறையில் தங்கி இருந்த அந்நாட்டு நண்பன் Jonathanஐ யோனத்தன் என்றே அழைப்பேன். இன்னும் சொல்லப் போனால் செருமன் மொழியில் J, G ஒலிப்பே இல்லை. germany என்பதே அந்நாட்டின் ஆங்கிலப் பெயர் தான்.

எழுத்தாளர் பா. ராகவன் உடன் பேசிய போது அவர் கருத்தைச் சொன்னார். தமிழ் வெகு மக்கள் ஊடக எழுத்து வெகுவாக மாறி வருகிறது. 5 ஆண்டுக்கு முன்பு எழுதியது போல் இப்போது எழுதுவதில்லை. அது ஒரு போக்கு (fashion). எழுத்து நடை என்பது குறுகிய காலத்தில் மாறுவது. அதற்கேற்ப விக்கி நடையையும் மாற்றுவது நடைமுறைச் சாத்தியம் அற்றது.

"செயமோகன், எசு. இரா எழுதுவது தான் தமிழ் நடை. அது போலத் தான் அனைவரும் எழுத வேண்டும்" என்பதை அவர்களே கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழின் இலக்கணச் சீர்மை தமிழுக்கு எப்படி உதவுகிறது என்பதை செயமோகனே இங்கு கூறி உள்ளார்.

தமிழுக்கு ஒரே ஒரு பொது நடை என்பதே கிடையாது. நீங்கள் குறிப்பிடும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை நாடுகளுக்கு எனத் தனித்தனி அடையாளங்களுடன் கூடிய நாட்டு இலக்கியங்கள் உண்டு. நாம் தமிழ்நாட்டு நடையில் மட்டும் தான் எழுதுவோம் என்றால், அது அவர்கள் மேல் ஆன திணிப்பு ஆகாதா? இங்கே பங்களிப்போரில் பாதி பேர் ஈழத்தவர்கள். "நாமும் பங்களிக்க மாட்டோம். பங்களிக்கும் மற்றவர்களும் எங்கள் நடையில் எழுதுங்கள்" என்று சொல்வது சரியா?

விக்கியில் என்ன நடை என்ற உரையாடலைச் சற்று ஒதுக்கி வைத்து விட்டு, உங்களுக்கு எந்த நடை உவப்போ அதே நடையைப் பின்பற்றி ஒரு 100 கட்டுரைகள் எழுதிக் காட்டுங்கள். நீங்கள் ஒரு கட்டுரையும் எழுதாமல் பிறர் எழுதி இருக்கிற 1000 கணக்கான கட்டுரைகளையும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிப்பது நாகரிகம் ஆகாது. --ரவி 15:44, 28 பெப்ரவரி 2009 (UTC)

திருவாளரே, ஜெர்மனி பேச்சை யார் முதலில் எடுத்தார் என சரியாக படித்து பாருங்கள். ஜெயமோகன் இலக்கண எண்ணம் எதுவாயிருந்தும், தன் பெயரை அப்ப்டிதான் எழுதுகிறார்,ஜ, ஸ முதலிய எழுத்துகளை பயன்படுத்த தயங்குவதில்லை. சிறிய உதாரணமாக, ஒரு தமிழ் டெலிவிஷன் செய்தியை கேளுங்கள் http://www.youtube.com/watch?v=qI-U_55PxZg&NR=1 . 32 வது வினாடியில் ‘ஜெயா செய்திகளூக்காக சந்தியா ராஜகோபால்’ என செய்தியாளர் சொல்கிறார். இதுவே, ஜெர்மன் செய்தி படிப்பாளர் தன் பெயரை, ய போட்டுதான் பேசுவார். அதனால் ஜெர்மன் பற்றி இங்கே இழுக்க வேண்டாம். தமிழ் விக்கியில் பெரிய ‘சலவை பட்டாளம்’ இயங்குகிறது. மற்றவர்கள் எழுத வேண்டும் - சலவை பட்டாளம் மற்றவர் எழுதியதை ‘இலக்கணமில்லை’ என தன் விருப்பத்திற்கு மாற்ற வேண்டும் - இந்த குறுகிய, சுய நலப் போக்கில் யார் கட்டுரை எழுத விரும்புவர்? −முன்நிற்கும் கருத்து 217.28.2.87 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
நீங்கள் தமிழுக்கு செய்த பங்களிப்பை கூறுங்கள். ஏன் செயமோகனையும், செயகாந்தனையும் துணைக்கு அழைக்கிறீர்கள். நீங்கள் எழுதிய பத்து நல்ல கட்டுரைகளை சுட்டங்கள், அதன் பின் பேசுவோம். --Natkeeran 16:26, 28 பெப்ரவரி 2009 (UTC)
முதலில் மற்றவர்களை மதிக்க கற்றுக் கொள்ளூங்கள். மேல் குறித்த இரு நபர்களும் தங்கள் பெயர்கலை ஜெ வில் தான் ஆரம்பிக்கிறனர். இது சலவைப் பட்டாளத்தின் வேலைக்கு நல்ல உதாரணம்--217.28.2.87 16:37, 28 பெப்ரவரி 2009 (UTC)
எங்கே...சுட்டிகள்...உங்கள் கட்டுரைகளுக்கு....மீண்டும் பிறரை உங்கள் வாதத்துக்கு இழுக்கிறீர்கள். அவர்களே அதை ஏற்றுக்கொள்வார்களோ தெரியாது. நல்லது நாங்கள் "சலவைப் பட்டாளம்"...உங்கள் அறிவுரையை நீங்களே கேப்பது நன்று. --Natkeeran 16:40, 28 பெப்ரவரி 2009 (UTC)

பெயரில்லா நண்பரே, செருமனியைப் பற்றி நீங்கள் முதலில் குறிப்பிட்டிருக்கவில்லை. ஒப்புக் கொள்கிறேன். மன்னிக்கவும். ஆனால், செருமன் விக்கியில் Jeyakanthan என்று தான் எழுதுகிறார்கள் என்ற உங்கள் வாதம் தவறானது தானே? Jeyakanthan என்று தான் எழுதுவார்கள். ஆனால், உச்சரிப்பு வேறு. தமிழில் எப்படி உச்சரிக்கிறோமோ அப்படித் தான் எழுதுகிறோம்.

செயமோகன், இராமகிருசுணன் வலைப்பதிவுகளை, படைப்புகளை நானும் தொடர்ந்து படித்து வருகிறேன். அவர்களின் எழுத்துத் திறனில் மதிப்பும் உண்டு. ஆனால், அவர்கள் எழுதுவது போல எழுதுவது தான் தமிழ்நடை அல்ல என்பது மண்டையில் மசாலா உள்ள எவருக்கும் புரியும். சில பத்தாண்டுகளுக்கு முன்பு மு. வ, நா. பா, கல்கி, சாண்டில்யன் போன்றோர் பெரும் படைப்பாளிகள். ஆனால், அவர்கள் நடை இன்று காலாவதியான ஒன்று.

எப்படி எல்லா நாட்டுக்கும் ஒரே நடை இல்லையோ அதே போல் தமிழின் பல்வேறு களங்களில் கூட ஒரே நடை கிடையாது. வெகு மக்கள் ஊடகத் தமிழ், சிற்றிதழ்த் தமிழ், திரைப்படத் தமிழ், நாடகத் தமிழ், பாடநூல் தமிழ், வலைத் தமிழ் என்று பல்வேறு நடைகள் உண்டு. வெகு மக்கள் ஊடக நடை மட்டுமே தமிழ் நடை என்பது சரி அல்ல.

தமிழ் இலக்கியம் எழுதுவோர் செய்வது தான் சேவை, மற்றவர்கள் செய்வது எல்லாம் புண்ணாக்கு என்றால், தெருவுக்குத் தெரு நான்கு கவிஞர்களாவது இருக்கும் தமிழ்நாட்டில் இன்னேரம் தமிழ் எவ்வளவு முன்னேறி இருக்க வேண்டும்? எழுத்தை முழு நேரப் பணியாக கொண்டிருக்கும் எவர் ஒருவராலும் அதன் வணிகக் கூறுகளை மறுத்துப் பேசலாகாது. வீணே எழுத்துத் தொழிலின் மேல் புனிதத் தன்மை ஏற்றி வியக்க ஒன்றுமில்லை. முழு நேர எழுத்தாளருக்கு உள்ள மரியாதை முழு நேரப் பணியில் உள்ள எவருக்கும் ஈடாக உள்ள ஒன்றே. நீங்கள் இவ்வளவு வியந்து கூறும் படைப்பாளிகள், இலாப நோக்கற்று தங்கள் உழைப்பை எவ்வாறு எல்லாம் சமூக நோக்குக்காத் தந்திருக்கிறார்கள் என்று தெரிவிக்க இயலுமா? குறைந்தபட்சம் அவர்கள் படைப்பை நாட்டுடமை ஆக்கவாவது விடுவார்களா? இங்கு பங்களிக்கும் ஒவ்வொருவரின் ஒவ்வொரு மணி நேரமும் அறிவும் அவர்கள் தொழிலுக்குச் செலவிட்டிருந்தால் பல நூறு / ஆயிரம் ரூபாயை ஈட்டித் தரும். உங்களின் ரசிக மனப்பான்மை காரணமாக பிற தொழில்களை இழித்துக் கூறுவது தவறு. ஆங்கிலத்தில் ஆராய்ச்சி செய்தாலும் சூலு மொழியில் ஆராய்ச்சி செய்தாலும் அதன் பயன் மனித குலம் மொத்தத்துக்கும் அல்லவா சென்று சேருகிறது?

பிறரை கட்டுரைகள் எழுதச் செய்து, நாங்கள் எங்கள் கொள்கைகளைத் திணித்து மாற்றுகிறோம் என்பது ஆதாரமற்ற பழி. உங்கள் கருத்தை ஒத்த வினோத் விக்கியை விட்டு வெளியேறிச் சென்று பல மாதங்கள் ஆகியும் அவரது கட்டுரைகள் எந்த அளவுக்கு மாறாமல் இருக்கின்றன என்று நீங்களே பார்க்கலாம்--ரவி 16:55, 28 பெப்ரவரி 2009 (UTC).

திருவாளர் ரவி,பழந்தமிழ் இலக்கணம் ப்டி நீங்கள் இரவி என எழுதவேண்டும், இத்தனைநாள் ஆங்கிலத்தில் எழுதிவிட்டு, திடீலென்று பழந்தமிழ் இலக்கணத்தின் விசிறி ஆகி விட்டீர்கள். அது போகட்டும், உங்கள் எல்லா இலக்கண குளறுகளையும் நான் இங்கு பேச வில்லை. பொது மக்கள் பேச்சில், பொது மக்கள் புரிந்து கொள்ளும் பேர்களையும், எழுத்துகளையும் ஆழவார், நாயன்மார் கால இலக்கணத்தால் தள்ளுவது தவறு; விக்கி கொள்கைகளுக்கு எதிரானது. இதை புரிந்து கொள்ளாமல் வார்த்தைகளை வளர்த்துவதை, ஆங்கிலத்தில் verbal diarrhoea என்பார்கள். --217.28.2.87 00:05, 1 மார்ச் 2009 (UTC)
ரவி, இவருடன் பேசிக்கொண்டிருப்பது வீணானது என்றே தோன்றுகிறது. வேண்டுமானால் கிரந்தப்பயன்பாட்டோடு ஒரு கட்டுரையாவது எழுதிக்காட்டட்டும். பிறகு பேசலாம். -- சுந்தர் \பேச்சு 17:34, 28 பெப்ரவரி 2009 (UTC)

விக்கிப்பீடியா:அகர வரிசையில் கட்டுரைகள்

தொகு

விக்கிப்பீடியா:அகர வரிசையில் கட்டுரைகள்

  • இதில் தமிழ் மெய்யெழுத்துக்கள் வரிசை சரியாக இல்லை. ர, ர, ர என்று மூன்று முறை உள்ளன. --Natkeeran 22:16, 24 பெப்ரவரி 2009 (UTC)
சரி செய்துள்ளேன், நற்கீரன். -- சுந்தர் \பேச்சு 05:04, 25 பெப்ரவரி 2009 (UTC)

விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்

தொகு

பயனர் செல்வம் ஒரு கேள்வி கேட்டுள்ளார். விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்...முடிந்தால் பதிலளிக்கவும். நான் நாளை பாக்கிறேன். இப்போது நித்திரை செல்ல வேண்டும் :-; --Natkeeran 04:38, 4 மார்ச் 2009 (UTC)

தக்க நேரத்தில் உதவ முடியவில்லை. நல்லவேளை செல்வா வேண்டியன செய்துள்ளார். -- சுந்தர் \பேச்சு 14:33, 4 மார்ச் 2009 (UTC)

எங்கள் மகன் பெயர்

தொகு

எங்கள் மகனுக்கு முகிலன் என்று பெயரிட்டுள்ளோம். நல்ல பல பெயர்களைப் பரிந்துரைத்த அனைவருக்கும் நன்றி. அவனது படங்கள் இங்கே.-- சுந்தர் \பேச்சு 09:16, 6 மார்ச் 2009 (UTC)

அந்தப் படத்தை ஏற்கனவே போட்டாச்சு :-)

தொகு

--Natkeeran 12:09, 15 மார்ச் 2009 (UTC)

விசமிகள்

தொகு

முந்திய காப்பில் இடப்பட்ட தொகுப்புகளைக் குளப்புவது விசம செயற்பாடாகவே படுகிறது. அந்த கலைந்துரையாடல் பின்புலத்தைப் புருந்து கொள்ளாமல் இடைக்கிடையே கருத்துக்களை புகுத்துவது அவ்வளவு பண்பாக தெரியவில்லை. --Natkeeran 23:42, 18 மார்ச் 2009 (UTC)

விசமி என்று கருத இயலாது. அவருக்கு விக்கிப்பீடியா உரையாடல் வழமைகள் தெரியாமல் இருக்கலாம்--ரவி 02:28, 19 மார்ச் 2009 (UTC)
ஆம், கூடுமானவரை நன்னயம் கருதுவோம். -- சுந்தர் \பேச்சு 04:59, 19 மார்ச் 2009 (UTC)
மேலும், அந்த உரையாடலை நீக்காமல் தற்போதைய ஆலமரத்தடியிலோ அல்லது கொள்கைப் பக்கப் பேச்சுப் பக்கத்திலோ பதிய வேண்டும். இல்லையெனில் நாம் ஏதோ தணிக்கை செய்வது போன்ற தோற்றத்தைத் தரும். -- சுந்தர் \பேச்சு 05:02, 19 மார்ச் 2009 (UTC)

இந்த முறை

தொகு

இந்த முறை படங்கள் எடுக்க மறந்து விடாதீர்கள்....--Natkeeran 01:22, 21 மார்ச் 2009 (UTC)

சரி நற்கீரன். உங்கள் ppt கோப்பைத்தான் பயன்படுத்த எண்ணியுள்ளேன் (அறிமுகத்துக்கு). -- சுந்தர் \பேச்சு 02:17, 21 மார்ச் 2009 (UTC)


உபுண்டு தமிழ் குழுமம்

தொகு

சுந்தர், இவர்களோடு தொடர்பு கொள்ள முடியுமா: (http://ubuntu-tam.org/vaasal/)..உபுண்டு தமிழ்க் குழுமம். முன்னர் ஆமசு என்பவர் த.வி சில காலம் பங்களித்தார். மயூரன் இலங்கையில் உள்ளார். ஓரளவு grass roots work (கீழ்நிலை செயற்பாடுகள்) இவர்கள் நிறைய செய்வது போல தெரிகிறது. அவர்களின் கருத்தோட்டத்துக்கும் எமக்கும் நெருங்கிய ஒத்துப் போகும் என நினைக்கிறேன். --Natkeeran 18:26, 21 மார்ச் 2009 (UTC)

பல பகுதிகளில் செயல்படுவது தெரிகிறது. தொடர்பு கொள்வோம். Knowledge Commons குழுவினர் வந்திருந்து ஒரு நூலைப் பரிசாகவும் வழங்கினார்கள். தமிழ் விக்கியை அவர்களது பரப்புரைகளில் சேர்த்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளனர். அவர்களையும் தொடர்பு கொள்ள வேண்டும். -- சுந்தர் \பேச்சு 18:31, 21 மார்ச் 2009 (UTC)
அண்மைக் காலமாக பணியியல உபுண்டுதான் பயன்படுத்துகிறன். சூப்பர். பலவற்றை தரவிறக்கி இலகுவாகப் பரிசோதித்துக் கொள்ளலாம். விண்டோசை Viritual ஆக நிறுவிக் கொள்ளலாம். ஒரு சில வழுக்க இருக்கத்தான் செய்யுது....--Natkeeran 18:28, 21 மார்ச் 2009 (UTC)
நானும் பெரும்பாலும் உபுண்டுவைத்தான் பயன்படுத்துகிறேன். -- சுந்தர் \பேச்சு 18:31, 21 மார்ச் 2009 (UTC)

பருப்பொருள் அறிவியல் ...

தொகு

சுந்தர்: நேற்று நீங்கள் நடத்திய பட்டறை முடிந்த பின் நான் செய்த முதல் காரியம் Materials Science-க்கான தமிழ் மொழிபெயர்ப்பைத் தேடியதுதான்! அப்போதுதான் எனக்குத் தெரிந்தது தமிழில் அறிவியலைப் பற்றி எழுதுவது எவ்வளவு கடினமானதென்று. தற்போதைக்கு, சுலபமான செயல்களுடன் ஆரம்பித்து, பிறகு (11 மற்றும் 12ம் வகுப்புப் பாடபுத்தகங்களை வாங்கியபின் ;-) பருப்பொருள் அறிவியலில் இறங்கலாம் என எண்ணம். ஊக்கமளித்தமைக்கும் (நினைவூட்டியதற்கும் கூட ;-) மிக்க நன்றி! Abinandanan 13:36, 22 மார்ச் 2009 (UTC)

நல்லது, அபினந்தனன். முதலில் சிறிய தொகுப்புகளில் துவங்குவது சரியான அணுகுமுறைதான். ஆங்கிலச் சொற்களுக்கு ஈடான தமிழ்ச் சொற்களைப் பெற இங்கு தரப்பட்டுள்ள இணைப்புகளைப் பயன்படுத்தலாம். தமிழ்வழிக்கல்விப் பாடநூல்கள் இணையத்தில் தமிழ்நாட்டு அரசின் தளத்திலும் கேரள அரசின் தளத்திலும் கிடைக்கின்றன. -- சுந்தர் \பேச்சு 13:55, 22 மார்ச் 2009 (UTC)

பொருள் அறிவியல் --Natkeeran 13:42, 22 மார்ச் 2009 (UTC)

நற்கீரன், பொருள் என்பது சிறப்பாக கருப்பொருள் (கருத்தளவில் இருக்கும் subject) எனவும் பருப்பொருள் (உருவம் கொண்டது) எனவும் வேறுபடுத்திக் காட்டப்படுவதால் பருப்பொருள் அறிவியல் என்றேன். விக்சனரியிலும் இப்பயன்பாட்டைக் கண்டேன். மற்றவர்களும் சரியெனக் கருதினால் அந்தத் தலைப்புக்கே நகர்த்திவிடலாம். -- சுந்தர் \பேச்சு 13:55, 22 மார்ச் 2009 (UTC)
நற்கீரன்: தமிழில் பொருளியல் என்பது Economics-ஐக் குறிக்கும். எனவே, பொருள் அறிவியல் என்பது Economic Science ஆகி விடாதோ? குழப்பம் ஏற்படாதோ? அபிநந்தனன் 14:54, 22 மார்ச் 2009 (UTC)
உங்கள் கருத்துக்கள் சரியே. எனினும் பருப்பொருள் சற்று நீண்டதாகப் படுகிறது. எனினும் சுந்தர் சுட்டியது போன்று வழக்கத்தில் பருப்பொருள் என்று இருந்தால், அவ்வாறு மாற்றுவதே நன்று. --Natkeeran 14:05, 22 மார்ச் 2009 (UTC)
ஆமாம், சுந்தர் சுட்டிய படி, தமிழ்நாடு/கேரளா தமிழ் பாட நூல்கள் இணையத்தில் உள்ளன. --Natkeeran 15:38, 22 மார்ச் 2009 (UTC)


பாக்க பருப்பொருளியல்  ???? --Natkeeran 16:28, 22 மார்ச் 2009 (UTC)

Code update

தொகு

Hello Sundar,
please see MediaWiki_talk:Common.js#Code_update_of_de:MediaWiki:If-search.js. --- Best regards, Melancholie 06:25, 26 மார்ச் 2009 (UTC)

நன்றி

தொகு

பயனர் பெயர் மாற்றம் செய்து உதவியமைக்கு நன்றி. --தாமரைப்பூ 05:57, 3 ஏப்ரல் 2009 (UTC)

த.வி தரவுதள அனுமதி

தொகு

சுந்தர், தவி தரவுதள அனுமதி பெற முடியுமா. எ.கா ஒரு நபர் எழுதியா கட்டுரைகளை பட்டியலுடுவது போன்ற Script போல. நன்றி. --Natkeeran 21:35, 4 ஏப்ரல் 2009 (UTC)

தரவு தள அனுமதி கிடைப்பது அரிது. குறிப்பிட்ட வினவல்களை ஏற்கனவே அணுக்கம் பெற்றவர்கள்வழி பெறலாம். ஒருவர் துவக்கிய கட்டுரைகளை இங்கு காணலாம். -- சுந்தர் \பேச்சு 10:34, 9 ஏப்ரல் 2009 (UTC)

Tamil Eelam

தொகு

Please can you help us. We are students in London and we want to create awareness in Sri Lanka. We need to create a Tamil version of this website: http://www.tamileelamonline.com/en/Main_Page . Can you help us? Please we need your help.

Our Email is sachein2000@hotmail.co.uk

Sachein 11:18, 10 ஏப்ரல் 2009 (UTC)

Tamil Wikipedia a case study

தொகு

Hello Sundar...It is a good article. I did not realize the deadline. Thanks. --Natkeeran 23:50, 15 ஏப்ரல் 2009 (UTC)

நன்றி நற்கீரன். பல்வேறு அலைச்சல்களால் முன்னமே எழுத முடியவில்லை. நேற்று பின்னிரவு வரை எழுதி எப்படியோ முடித்தாகி விட்டது. இருந்தாலும் முழு நிறைவு இல்லை. தொடர்ந்து மேம்படுத்தி கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டால் மேம்பட்ட வரைவைத் தர வேண்டும். -- சுந்தர் \பேச்சு 05:07, 16 ஏப்ரல் 2009 (UTC)

http://ta.wikipedia.org/wiki/படிமம்:TamilWikiChart.png படத்திலிருக்கும் மஞ்சள் நிற கோடு எதை குறிக்கிறது புருனோ மஸ்கரனாஸ் 07:04, 20 ஏப்ரல் 2009 (UTC)

அவை தமிழ் விக்கி கட்டுரை எண்ணிக்கை வளர்ச்சியின் மூன்று நிலைகளைச் சுட்டிக் காட்டும் வண்ணம் நான் வரைந்தவை. கீழே சிவப்பில் உள்ள கோட்டின் மூன்று பகுதிகளைச் சுட்டுகின்றன. -- சுந்தர் \பேச்சு 07:23, 20 ஏப்ரல் 2009 (UTC)

உதவி தேவை

தொகு

சுந்தர் வல்லநாடு_வெளிமான்_காப்பகம் பக்கத்தில் வார்புரு சரியாக வரவில்லை, கவணிக்கவும். நன்றி--கார்த்திக் 03:42, 28 ஏப்ரல் 2009 (UTC)

சுந்தர் இந்த வார்புருவை மொழி பெயர்க்கனும் en:Template:2009_swine_flu_outbreak_table எப்படின்னு சொல்லுங்க--கார்த்திக் 18:05, 29 ஏப்ரல் 2009 (UTC)

இன்று இயலுமா எனத்தெரியவில்லை, கார்த்திக். வரைபடங்கள் உருவாக்க வேண்டியிருக்கிறது. -- சுந்தர் \பேச்சு 18:18, 29 ஏப்ரல் 2009 (UTC)

வல்லநாடு_வெளிமான்_காப்பகம் கட்டுரையில் வார்ப்புரு:Infobox Indian Jurisdiction-2 ஐ இணைத்துள்ளேன். பார்க்கவும். மயூரநாதன் 20:06, 29 ஏப்ரல் 2009 (UTC)

நன்றாக உள்ளது, மயூரநாதன். நன்றி. -- சுந்தர் \பேச்சு 04:02, 30 ஏப்ரல் 2009 (UTC)

Re: A case study

தொகு

சுந்தர், இன்னும் 2-3 மணி நேரத்திற்குள் நான் எனக்குத் தெரிந்த திருத்தங்களைச் செய்து தருகின்றேன். மன்னிக்கவும், காலம் தாழ்ந்துவிட்டது!! --செல்வா 19:15, 29 ஏப்ரல் 2009 (UTC)

கூடற்ற நத்தை வகை

தொகு

சுந்தர் பல வருடங்களுக்கு (!) முன்பு பூமிநாதனிடம் கேட்க கேள்விக்கான[1] விடை : கூடற்ற நத்தை வகை ஆகும், இதற்கு இலையட்டை என்ற பெயரும் உண்டு; ஆங்கிலத்தில் en:Slug --கார்த்திக் 19:28, 23 மே 2009 (UTC)Reply

கருத்து வேண்டல்

தொகு

மேற்கத்திய மொழிகளின் இலக்கணக் குறியீடுகளுக்கு நேரான தமிழ்ச் சொற்கள் கட்டுரையைப் பார்த்து தேவையான மாற்றங்கள், கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி--ரவி 16:05, 9 ஜூன் 2009 (UTC)

கட்டாயம் செய்கிறேன், ரவி. எனக்கு மிகவும் விருப்பமானது தான் அத்தலைப்பு. -- சுந்தர் \பேச்சு 16:43, 9 ஜூன் 2009 (UTC)

Translation Request

தொகு

Hi! Could you translate and add this article into your wonderful wikipedia? You can reach me here. Thanks. With Kind Regards --Warayupay 12:37, 19 ஜூன் 2009 (UTC)

Tacloban

 

Tacloban is a port city in the Philippines. It is approximately 360 miles southeast of Manila. It is the capital of the province of Leyte. It is also the regional center of Eastern Visayas.

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Category:Tacloban City
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

en:Tacloban

மிக்க நன்றி

தொகு

இசுலாவியர் கட்டுரையை சிலாவிக் மக்கள் கட்டுரையுடன் இணைத்தற்கு மிக்க நன்றி சுந்தர். --செல்வா 03:25, 1 ஜூலை 2009 (UTC)

அந்த இடத்தில் முன்னரிருந்த உள்ளடக்கத்திற்கும் தற்போதுள்ள உள்ளடக்கத்துக்கும் வேறுபாடு கண்டு ஏதேனும் தகவல்களைச் சேர்க்க முடியுமா பாருங்கள். நானும் இயலும்போது பார்க்கிறேன். -- சுந்தர் \பேச்சு 05:05, 1 ஜூலை 2009 (UTC)

கனடா நாள்

தொகு

கனடா நாள் வாழ்த்துகள், செல்வா. -- சுந்தர் \பேச்சு 06:01, 1 ஜூலை 2009 (UTC)

ஓ! மகிழ்ச்சி! நன்றி சுந்தர்! வாழ்க வாழ்க கனடா! வாழ்க வாழ்க அமைதி போற்றும், உண்மையான வடக்கு என்று போற்றப்படும் கனடா!உலகில் பன்னாட்டில் பிறந்த பல மொழி பேசும் பல மதம் பின்பற்றும் பல இன மக்கள் நல்லுரிமையுடம் வாழும் அழகு கொழிக்கும், நீர்வளம் மிக்க எம் கனடா வாழ்க வாழ்க! நேர்மையிலும், பழங்குடிகளின் உரிமை போற்றுதல்களிலும் இன்னும் சில தொலைவு செல்ல வேண்டிய எம் கனடா, வெற்றியுடன் அடையட்டும் தன் நன்னோக்கை. அன்புடன் --செல்வா 15:17, 1 ஜூலை 2009 (UTC)


இந்திய பாலூட்டிகள்

தொகு

en:List of mammals of India இந்த கட்டுரையை மொழி பெயர்த்து பின் ஒவ்வொன்றாக மொழி பெயர்க்கலாம். இதில் தேர்ந்தெடுத்த 50 விலங்கிகளை மட்டும் முதல் கட்டத்தில் எடுத்துக்கொள்வோம். மொத்த எண்ணிக்கை 400யை தாண்டுகிறது.--கார்த்திக் 09:57, 8 ஜூலை 2009 (UTC)

விக்கிசெய்திகள்

தொகு

சுந்தர், விக்கியில் உள்ள நடப்பு நிகழ்வுகள் வார்ப்புருவை நேரடியாக விக்கிசெய்திகளில் இணைப்பது முடியாது என்றே நினைக்கிறேன். மேலும், விக்கிசெய்திகளில் logo வை இணைக்க முடியாமல் உள்ளது. தெரன்சு ஒரு லோகோவைத் தமிழில் தயாரித்திருக்கிறார். அதனை அங்கு பதிவேற்ற முடியாமல் உள்ளது. விக்கிசெய்திகளில் உள்ள பதிவேற்றல் விக்கி காமன்சிற்குச் செல்கிறது. அந்த லோகோவை உங்களுக்கு அனுப்பி வைத்தால் உங்களால் அதனை உரிய இடத்தில் இணைக்க முடியுமா?--Kanags \பேச்சு 10:40, 8 ஜூலை 2009 (UTC)

மறுமொழி

தொகு

நன்றி சுந்தர், உங்களின் மூளை பற்றிய கட்டுரை உங்களின் தன் விளக்க குறிப்பை பார்த்தேன். நீங்கள் சோழவந்தான் என்பதை அறிந்தவுடன் மிக்க நன்றி... நாம் சந்திப்போம் மிகு விரைவில்... தற்பொழுது எங்கு உள்ளீர்கள்...--Munaivar. MakizNan 19:04, 8 ஜூலை 2009 (UTC)

விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல்

தொகு

விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல் திட்டத்தை தொடங்கியாச்சு:) இத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது--கார்த்திக் 17:07, 19 ஜூலை 2009 (UTC)

பாலூட்டிகள்

தொகு

இந்த வார்புருவையும் வார்ப்புரு:இந்திய_பாலூட்டிகள் இதன் பேச்சு பக்கத்தையும் பார்க்கவும்--கார்த்திக் 04:05, 27 ஜூலை 2009 (UTC)

அர்ச்சென்டினா

தொகு

அர்ச்சென்டினா பயணம் எப்போது. நிறையப் படங்கள் எடுத்துச் சேர்த்தால் சிறப்பாக இருக்கும். நேரடியாக கண்ட சில பற்றியும் சில கட்டுரைகள் எழுதினால் நன்று. --Natkeeran 13:39, 2 ஆகஸ்ட் 2009 (UTC)

கட்டாயம் செய்வேன், நற்கீரன். :) -- சுந்தர் \பேச்சு 15:04, 2 ஆகஸ்ட் 2009 (UTC)

புதிய திட்டம்

தொகு

சுந்தர். விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்ட பாலூட்டிகள் திட்டபக்கத்தை பாருங்கள் உங்களின் கருத்துக்களை கூறுங்கள். இத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பு மிகவும் தேவை--கார்த்திக் 19:40, 3 ஆகஸ்ட் 2009 (UTC)

விடுப்பு

தொகு

தேங்கிய அலுவல்களினாலும் சிறு உடல்நலக்குறைவினாலும் இன்னும் 2-3 நாட்களுக்குப் பங்களிக்க இயலாது. விக்கிமேனியா குறிப்புகளை இதுவரை இடாததற்கு வருந்துகிறேன். -- சுந்தர் \பேச்சு 04:39, 8 செப்டெம்பர் 2009 (UTC)Reply

உடம்பைப் பார்த்துக்கங்க சுந்தர். நேரம் கிடைக்கும் போது மாநாட்டு விவரங்களைச் சேர்க்கலாம். 2,3 நாளுக்கு எல்லாம் விடுப்புக் கடிதம் எழுதுவதைக் கண்டிக்கிறேன் :) --ரவி 05:49, 8 செப்டெம்பர் 2009 (UTC)Reply
சுந்தர் உங்க கடமை உணர்ச்சியை நினைத்தால் புல்லரிக்கிறது :) விரைவில் நலமடைய வேண்டுகிறேன். --சிவக்குமார் \பேச்சு 08:41, 8 செப்டெம்பர் 2009 (UTC)Reply
நன்றி இரவி, சிவா. இப்போது அலுவல்கள் குறைந்துள்ளன. இருந்தாலும் முழு பங்களிப்புக்கு நாளாகும். உடல் நலமாக உள்ளது. -- சுந்தர் \பேச்சு 16:42, 15 செப்டெம்பர் 2009 (UTC)Reply
உடல் நலமானது அறிந்து மகிழ்ச்சி. இயன்றபொழுது பங்களியுங்கள். அருச்செண்ட்டீனா பயணம், விக்கிமேனியா பற்றிய உங்கள் கருத்துகளை அறிய ஆவலாக உள்ளோம். நானும் இரண்டு கிழமைகள் விடுப்பில் இருந்தேன். --செல்வா 18:50, 15 செப்டெம்பர் 2009 (UTC)Reply

விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்

தொகு

படங்களுக்கு நன்றி. இச் சிக்கலை ஒருமுறை பாக்கவும். --Natkeeran 15:22, 11 அக்டோபர் 2009 (UTC)Reply

விக்சனிரி யில் மற்றொரு தானியங்கி முயற்சி.

தொகு
  • நம் விக்சனிரியில் பழ. கந்தசாமி(கலிபோர்னியாவில் கணினித்துறையிலிருக்கிறார் - மின்னஞ்சல் முகவரி- kandy.pal AT ஜிமெயில்) தானியங்கி முயற்சி செய்கிறார். நீங்கள் இருவரும், பேசிக் கொண்டால் நேரவிரயம் தவிர்க்கலாம். மேலும் நல்விளைவுகள் உண்டாகுமென நம்புகிறேன். எனக்கு கணினி நிரலறிவு இல்லையென்பதால் ஒதுங்கியிருக்க விரும்புகிறேன். தமிழ் விக்சனிரிக்கு வந்து செல்பவர்களைப் பற்றி எப்படி அறிந்து கொள்வது? வணக்கம்த* உழவன் 07:03, 12 டிசம்பர் 2009 (UTC)
நல்ல முயற்சி. திங்கட் கிழமை வாக்கில் அவருக்கு மடலனுப்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 18:13, 12 டிசம்பர் 2009 (UTC)

உங்களது எண்ணக்கள்

தொகு

நல்ல கருத்து. த.வி பயனர்கள் பற்றி ஒரு பத்தி சேக்க உள்ளேன்.

மேலும், குறிப்பாக நாம் என்ன செய்யலாம் என்று கூறினால் நன்றாக இருக்கும். எ.கா இந்த இந்த துறைகளில் கவனம் தரலாம். இந்த இந்த வழிகளில் த.வி மக்களுக்கு எடுத்துச் செல்லாம். இந்த விமர்சனங்களை இப்படிக் கையாளலாம். எந்தளவு கட்டுரைகளின் எண்ணிக்கையை இலக்காக் கொள்ளாம் என்பது பற்றி. நாம பல திட்டங்கள் போட்டம். எல்லாம் கிடப்பில் இருக்கு. அதையும் வலையேற்றி சுட்ட வேண்டும். நன்றி. --Natkeeran 02:19, 19 டிசம்பர் 2009 (UTC)

ஆம் அடுத்த கட்டமாக அந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இப்போது பல ஆர்வமுள்ள பங்களிப்பாளர்கள் வந்துள்ளது நம்பிக்கையளிக்கிறது, அவர்களின் ஒத்துழைப்போடு திட்டங்களை நிறைவேற்றலாம். இயற்பியல் போன்ற அடிப்படைத் துறைகளில் கவனம் செலுத்தலாம். -- சுந்தர் \பேச்சு 08:29, 19 டிசம்பர் 2009 (UTC)

கொஞ்சம் உதவவும்

தொகு

சுந்தர், தமிழ் விக்கியில் எந்த இடத்திலும் {NUMBEROFARTICLES} என்ற வார்ப்புருவை இடும்பொழுது தமிழ் விக்கியின் மொத்த கட்டுரைகளின் எண்ணிக்கை வருகின்றது. இதே போல் மற்ற விக்கிகளின் மொத்த கட்டுரைகளைன் எண்ணிக்கையை தானியங்கியாக இட எதேனும் வார்ப்புருகள் உள்ளனவா?--Arafat 13:44, 4 ஜனவரி 2010 (UTC)

ஆர்வமூட்டும் கேள்வி, அராஃபத்! வார்ப்புருவைப் போன்றே குறியீடுகளைக் கொண்டு பயன்படுத்தினாலும் இவை மாயச்சொற்கள் என இப்போது படித்தறிந்தேன். m:Help:Magic words என்ற உதவிப் பக்கத்தைப் பார்த்தால் இது இயலாதென்றே தோன்றுகிறது. mw:Extension:Variables - இங்கு தரப்பட்டுள்ள வழிமுறையைப் பயன்படுத்த முடியுமா பாருங்கள். -- சுந்தர் \பேச்சு 16:48, 4 ஜனவரி 2010 (UTC)


விக்கி செய்திகளில் ஒரு உதவி

தொகு

அன்பின் சுந்தர், விக்கி செய்திகளுக்கு RSS செய்தியோடையை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இதற்கான தொழில்நுட்ப அறிவு எம்மிடம் இல்லை.

இந்த இணைப்பில் ஆங்கில விக்கிசெய்திக் காரர்கள் சில உதவித் தகவல்களைத் தந்துள்ளார்கள். இவற்றை பயன்படுத்தி எமது தமிழ் விக்கி செய்திகள் இணையத்தளத்திலும் RSS செய்தியோடையை உருவாக்க முடியுமா? --ஜெ.மயூரேசன் 20:15, 11 ஜனவரி 2010 (UTC)

சுந்தர், விக்கிசெய்தியோடை இப்போது வேலை செய்கிறது. பார்க்க: [2]. இதனை மேலும் மேம்படுத்த தங்களின் மேலான ஆலோசனைகளை இங்கு தாருங்கள். நன்றி.--Kanags \பேச்சு 12:45, 12 ஜனவரி 2010 (UTC)
இப்போது தான் கவனித்தேன், மயூரேசன், கனகு. எனது கருத்துக்களை தகுந்த பேச்சுப் பக்கத்தில் பதிகிறேன். -- சுந்தர் \பேச்சு 16:35, 12 ஜனவரி 2010 (UTC)

பொருளடக்கம்

தொகு

--Natkeeran 02:11, 21 ஜனவரி 2010 (UTC)

சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்

தொகு

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:43, 18 பெப்ரவரி 2010 (UTC)--செல்வா 02:04, 20 பெப்ரவரி 2010 (UTC)

ஊர்-நகரம் பற்றிய கட்டுரைகள்

தொகு

முன்பு கணேசு அவர்கள் ஊர்கள் பற்றித் தானியங்கி வழியாக உருவாக்கிய கட்டுரைகளில் விடுபட்ட தமிழ்நாடு மற்றும் இந்திய ஊர்களைப் பற்றிக் கட்டுரைகள் எழுதப் பரிந்துரைக்கலாம். எவை விடுபட்டுள்ளன என்று எப்படித் தெரிந்து கொள்வது. சுந்தர் உங்களுக்குத் தெரியுமா ? --செல்வா 03:59, 9 மார்ச் 2010 (UTC)

செல்வா, பயனர்:Ganeshbot பக்கத்தைப் பார்க்கையில் நாம் ஒலிபெயர்த்த தலைப்புகளில் எல்லாம் கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளது போலத் தெரிகிறது. இங்கு உள்ள பட்டியலை ஒலிபெயர்த்தால் எஞ்சிய கட்டுரைத் தலைப்புகள் கிடைக்கும். -- சுந்தர் \பேச்சு 03:44, 10 மார்ச் 2010 (UTC)

கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பக்கங்கள் உருவாக்கும் போட்டி

தொகு

கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பக்கங்கள் போட்டி பக்கம் பார்க்கவும். திருத்தங்கள் இருந்தால் செய்யவும். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் ஒரு மாணவர் த.வி.யின் முதற்பக்கத்திற்கு வந்தவுடனேயே முதல் சொடுக்கிலேயே இப்பக்கம் வர வேண்டும். (பல சொடுக்குகள் மாணவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி, முக்கிய பக்கத்திற்கு வராமலேயே போய்விடச் செய்துவிடலாம்.)

இப்பக்கத்திலும் இரண்டே உட்தலைப்புகள் உள்ளவாறு அமைத்துள்ளேன். அவை 1. தலைப்புகள் 2. விதிகள்.

மேலும் பேசுவோம்.

அமைச்சர், செயலாளர் சந்திப்பின் சாரத்தை உங்களுக்கு மின்னஞ்சல் செய்துள்ளேன். தயந்து பார்க்கவும்.

நன்றி. பரிதிமதி

நன்றி, பரிதிமதி. மின்னஞ்சல் கிடைத்தது. அடுத்த கட்ட வேலைகளை முடுக்கி விடுவோம். -- சுந்தர் \பேச்சு 05:21, 11 மார்ச் 2010 (UTC)

ஐ.இ பிரச்சினை

தொகு

மீடியாவிக்கி:Sitenotice ஐ.இ முழு நீளமா தெரியேல்லை. --Natkeeran 02:16, 30 மார்ச் 2010 (UTC)

சில மாற்றங்களைச் செய்துள்ளேன். இப்போது தெரிகிறதா பாருங்கள். உபுண்டுவில் ஃபயர்ஃபாக்சிலும் கூட முழு நீளமாத் தெரியல. -- சுந்தர் \பேச்சு 06:04, 30 மார்ச் 2010 (UTC)

நீக்க வேண்டுகிறேன்

தொகு

யாரோ இங்கு Sex Video என்று ஒரு கட்டுரை தொடங்கிருக்கிரார்கள் . அதனை நீக்க வேண்டுகிறேன் . - இராஜ்குமார் 3.31 pm ரியாத்,30 மார்ச் 2010

மன்னிக்கவும் . அதை ஏற்க்கனவே ஒருவர் பயனர்:Rsmn நீக்கிவிட்டார் . - இராஜ்குமார் 3.35 pm ரியாத்,30 மார்ச் 2010

நெறிமுறைப் பக்கங்கள்

தொகு

ஊக்கம் தரும் உங்கள் பாராட்டுக்கு நன்றி சுந்தர். நீங்களெல்லாம் முள்வெட்டி பாதை அமைத்துக் கொடுத்தப்பிறகு பின்தொடர்வது எளிதாக உள்ளது. --மணியன் 05:00, 6 ஏப்ரல் 2010 (UTC)

கூகுள் திட்டம் குறித்த வாக்கு

தொகு

சுந்தர், கூகுள் திட்டம் குறித்த உங்கள் வாக்கையும் செலுத்தினால் நன்று--ரவி 04:00, 22 ஏப்ரல் 2010 (UTC)

உதவி தேவை

தொகு

வணக்கம் சுந்தர், விக்கிசெய்திகளுக்கு உங்கள் expert உதவி தேவையாயுள்ளது. தற்போது வலைவாசல்களை உருவாக்க முடியவில்லை. வலைவாசல் அல்லது Portal பக்கம் கட்டுரைப் பக்கமாகச் சேமிக்கிறது. (பார்க்க: வலைவாசல்கள்). அத்துடன், Wikinews என்ற பெயர்வெளியை தமிழில் விக்கிசெய்தி (விக்கிசெய்தி என்றா அல்லது விக்கிசெய்திகள் என்றிருக்க வேண்டுமா?) என மாற்ற வேண்டும். இவை குறித்து உங்களால் தகுந்த இடத்தில் வழு பதிவு செய்ய முடியுமா? இங்கு உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.--Kanags \உரையாடுக 00:21, 26 ஏப்ரல் 2010 (UTC)

பார்க்கிறேன், சிறீதரன். இன்றைக்குள் பதிவு செய்கிறேன். அதற்கிடையில் இங்கே உள்ள செய்திகள் முழுமையும் தமிழாக்கப்பட்டுள்ளனவா எனப் பார்க்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 04:25, 27 ஏப்ரல் 2010 (UTC)

சாந்தகுமாரின் மறுமொழி

தொகு

நன்றி சுந்தர். பழைய கட்டுரைகளைத் திருத்தும் பணிகள் தொடங்கியாயிற்று. தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும். விக்கிப்பிடியா இடைமுகத்திலான உரையாடல் எனக்குப் புதிது ஆகெவே தான் மறுமொழியளிப்பதில் சிறிது தடுமாற்றம்!

அவ்வப்போது திருத்தம் செய்த பழைய கட்டுரைகளைப் பற்றியும் புதிதாக மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகளைப் பற்றியும் அவ்வப்போது விக்கி சமூகத்திற்கு தெரியப்படுத்துகிறேன், தாங்கள் எங்கள் கட்டுரைகளை மேம்படுத்த பரிந்துரைகளையும் கருத்துகளையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி --சாந்த குமார் 15:50, 29 ஏப்ரல் 2010 (UTC)

(சாந்த குமார், வார்ப்புருப் பக்கத்தில் இட்டிருந்த செய்தியை இங்கு நகர்த்தி உள்ளேன்.--ரவி 16:50, 29 ஏப்ரல் 2010 (UTC))

நல்லது சாந்தகுமார். நல்ல பயன் விளையுமென நம்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 08:05, 30 ஏப்ரல் 2010 (UTC)

Tamil language Literature section

தொகு

Hi Sundar:

Why there is not a separate section for Tamil literature. Literature is an important part of any language, and specially Tamil.−முன்நிற்கும் கருத்து 69.158.7.13 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

I don't know whether you can read Tamil, hence responding in English. When we pitched the Tamil language article for featured status on the English Wiki, we didn't include a literature section because of concerns that people will thwart the FAC by harping on dating controversies. And, since we largely translated from that version here, it's missing in the Tamil version too. But, I admit that it's a very important section to be missed. I would invite you to summarise en:Tamil literature and/or ta:தமிழ் இலக்கியம் to be added to the respective articles if you've got some time. -- சுந்தர் \பேச்சு 07:11, 4 மே 2010 (UTC)Reply

குரும்பனின் செயல்கள்

தொகு

விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளில் இஸ்லாம் அல்லது முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட எந்த கட்டுரையையும் திருத்தவோ பகுப்பிடவோ திரு.குரும்பன் அவர்கள் செய்யக்கூடாது. ஏனெனில், அவர் தொடர்ந்து ஒரு தலைபட்சமாக துவேச உணர்வுடன் செயல்பட்டு வருகிறார். --Hibayathullah 18:38, 4 மே 2010 (UTC)Reply

இபயத்துல்லா, குறும்பனுடைய தொகுப்புகளை நான் இன்னும் பார்க்கவில்லை. இயன்ற அளவு நல்லெண்ண நம்பிக்கை கொள்ளுங்கள். எவ்வெவ் கட்டுரைகளில் சிக்கல்கள் உள்ளன என்பதைத் தொகுத்து வையுங்கள். மற்ற பயனர்களையும் கலந்து பேசி, தேவையான மாற்றங்களைப் பரிந்துரைக்களாம். அப்படி மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டு அவர் ஏற்கும் நிலையில் யாருக்கும் எந்த இடைஞ்சலும் இல்லையே? மற்றபடி குறிப்பிட்ட பகுப்பிலுள்ள கட்டுரைகளை ஒரு பயனர் தொகுப்பதைத் தடுப்பது இறுதிக்கட்ட முடிவாக மட்டுமே இருக்க முடியும். -- சுந்தர் \பேச்சு 06:54, 5 மே 2010 (UTC)Reply

பிற

தொகு

பாராட்டிற்கு நன்றி -- −முன்நிற்கும் கருத்து பரிதிமதி (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

வணக்கம் சுந்தர். ஒரு உதவி..

எனது பயனர் பெயரில் முழுவதும் திருத்தம் முடியாத ஒரு கட்டுரை தவறுதலாக பதிவேற்றப்பட்டுவிட்டது. தயவுசெய்து அதை (அல்லது அந்தப் பக்கத்தை, ஏனெனில் உள்ளடக்கம் முழுவதும் நான் நீக்கிய பின்னர் தலைப்பு மட்டும் எஞ்சி நிற்கிறது) நீக்க வேண்டுகிறேன். முகவரி:

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

நன்றி.--Babramt 02:53, 14 மே 2010 (UTC)Reply

பாபுராம், சிறீதரன் நீக்கியுள்ளார். -- சுந்தர் \பேச்சு 05:08, 14 மே 2010 (UTC)Reply

தானியங்கி அணுக்கம் வேண்டல்

தொகு

சுந்தர், தானியங்கி அணுக்கம் தரவேண்டுகிறேன். -- Mahirbot 10:54, 17 மே 2010 (UTC)Reply

கொஞ்சம் உதவவும்

தொகு

அன்புள்ள சுந்தர், நான் ஒரு கட்டுரையில் சிகப்பு இணைப்புகளை நீக்கிவிட்டு மீண்டும் தொகுக்க முயன்றேன். ஆனால் அது பிரிதொரு பக்கத்திற்கு மாற்றப்படுகிறது. நிறமாலை ஒளிமானி என்பது கட்டுரையின் தலைப்பு. ஏன் இவ்வாறு நேர்கிறது என்று எனக்குப் புரியவில்லை. தயவு செய்து எனக்கு உதவுவீர்களா... --பாபு 13:17, 17 மே 2010 (UTC)Reply

முதற்பக்க அறிமுகம்

தொகு

வணக்கம் சுந்தர். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சுந்தர் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். --ரவி 05:56, 25 மே 2010 (UTC)Reply

சரி ரவி. விரைவில் எழுதப் பார்க்கிறேன். கலைக்களஞ்சியக் கட்டுரை எழுதுவதைக் காட்டிலும் கடிதாக இருக்கும் போல. நீங்களும் கை கொடுங்கள். :) -- சுந்தர் \பேச்சு 06:31, 25 மே 2010 (UTC)Reply

உள்ளதை எழுதியதற்கு நன்றி எதற்கு? நிறைய பங்களிப்புகளைச் சுருக்கி எழுத வேண்டிய சிரமமான பணிக்கு வேண்டுமானால் நன்றி சொல்லலாம் :) --ரவி 10:36, 27 மே 2010 (UTC)Reply

சுந்தர், இன்று முதல் அடுத்த இரு வாரங்களுக்கு உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் இடுவதில் மகிழ்ச்சி. தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்--ரவி 13:04, 2 ஜூன் 2010 (UTC)

சுந்தர் உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். பாராட்டுகள்! இந்த சூலை 19 நாள் வந்தால் உங்கள் அரும் ஆறு ஆண்டுகள் பணி நிறைவேறும். நீங்கள் தந்த நுட்ப உதவிகள், கண்காணிப்பு, வழிகாட்டல் தனித்தன்மையானவை. என் நன்றியினை இந்த அறிமுகம் தொடர்பார்கத் தெரிவித்துக்கொள்கிறேன். பல்லாண்டு உங்கள் நற்பணி தொடர வேண்டுகிறேன்.--செல்வா 02:31, 5 ஜூன் 2010 (UTC)
சுந்தர் முதற்பக்கத்தில் உங்களைப் பற்றிய அறிமுகம் கண்டேன். மகிழ்ச்சி. தமிழ் விக்கிப்பீடியாவிக்குக் கடந்த ஆறு ஆண்டுகளாக நீங்கள் ஆற்றிவரும் பணி அளப்பரியது. அவற்றை முழுதாக எழுதி உங்களை அறிமுகப்படுத்துவதாயின் பல பக்கங்களுக்கு நீளும். உங்கள் பணிகள் நீண்ட காலம் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவை வளம்படுத்த எனது வாழ்த்துக்கள். -- மயூரநாதன் 04:15, 5 ஜூன் 2010 (UTC)
வாழ்த்துகளுக்கு நன்றி, செல்வா, மயூரநாதன்! உங்கள் தொடர் ஊக்கமே எனக்கும் மற்ற பங்களிப்பாளர்களுக்கும் உந்துதலாக இருந்து வருகிறது. இனி வரும் ஆண்டுகளிலும் உங்களுடன் இணைந்து பணியாற்றிட ஆவலாக உள்ளேன். :-) -- சுந்தர் \பேச்சு 04:56, 5 ஜூன் 2010 (UTC)

தகவற்பெட்டி வசதி

தொகு

கறையான், எறும்பு ஆகிய கட்டுரைகளில் அதிக படங்களுடன் கட்டுரைகள் எழுத முயற்சிகிறேன். படங்கள் அடங்கிய தகவற்பெட்டி வேண்டிய போது மட்டும்(தற்போதுள்ள கறையான் தகவற்பெட்டி, அப்பக்கம் திறக்கும் போது, திறந்த நிலையிலேயே வருகிறது) திறந்துபார்க்கும் வசதியைப் பெற என்ன செய்ய வேண்டும். எறும்பு கட்டுரையில் அத்தகைய பெட்டியை, இணைக்க வேண்டுகிறேன்.ஆவலுடன்..த* உழவன் 07:20, 25 மே 2010 (UTC)Reply

உள்ளது போலச் செய்து பாருங்கள், த*உழவன். en:Help:Collapsing, en:WP:NAVFRAME போன்ற உதவிப் பக்கங்களும் உங்களுக்கு உதவக்கூடும். -- சுந்தர் \பேச்சு 07:25, 25 மே 2010 (UTC)Reply
  • கறையான் படங்கள் திறந்த நிலையில் தான் வருகிறது. வேண்டும் போது திறந்து பார்க்கும் வசதி வேண்டும். வேண்டும் போது, மறைக்கும் வசதியே தற்போது கறையான்-இல் உள்ளது. ஆங்கில விக்சனரியில்wood இருப்பது போல..முன்பு விக்சனரியில் வந்தது.(அ-தமிழ் விக்சனரி). குழப்பமாக இருக்கிறது.எதிர்பார்ப்புடன் த* உழவன் 08:05, 28 மே 2010 (UTC)Reply


தொழில்நுட்ப உதவி தேவை

தொகு

1. விக்கி செய்தியில் தகவற் பெட்டியில் <DynamicPageList> category=இந்தியா count=5 addfirstcategorydate=true suppresserrors=true namespace=0 </DynamicPageList> உபயோகிக்கும் போது தவறான தேதியை காட்டுகிறது. உதா. இந்தியா வார்ப்புரு. DynamicPageList இந்த extension லில் வழு உள்ளது போல் தெரிகிறது. இதனை எப்படி களைவது?

2. இதுவும் விக்கி செய்தி தொடர்பானது. அங்கு பகுப்புகளுக்கு தேதியை தானியக்கமாக தர Daycategory1 என்கிற வார்ப்புருவை உருவாக்கினேன். ஆனால் மேஜிக் வார்த்தை {{#time F j|{{PAGENAME}}}}ல் querystring ல் தமிழில் (PAGENAME is ஜூன் 8) இருப்பதால் வழு காட்டுகிறது. ஆனால் அதனை ஆங்கிலத்தில் June 8 என்று மாற்றினால் சரிசெய்துவிடல்லாம். இதற்கு எனக்கு replace string மேஜிக் வேர்ட் ({{#replace}} not working) இருந்தால் {{ஆங்கிலமாதம்}} இதனை செய்ய முடியும். இதனால் ஒவ்வொரு நாளுக்கும் பகுப்பு உருவாக்கும் வேலை குறையும். --மாஹிர் 13:04, 10 ஜூன் 2010 (UTC)

பார்க்கிறேன் மாகிர். உடனடியாகத் தெரியவில்லை. -- சுந்தர் \பேச்சு 13:34, 10 ஜூன் 2010 (UTC)
முதலாவது கேள்வி தொடர்பானது: Publish என்ற வார்ப்புருவில் ஏதாவது ஒரு மாற்றம் செய்தாலும் இந்தியா போன்ற தகவற்பெட்டிகளில் காணப்படும் செய்திகளில் உள்ள தேதிகள் Publish வார்ப்புரு மாற்றப்பட்ட தேதியைக் காட்டுகிறது. பார்க்க: உ+ம்: n:வார்ப்புரு:இந்தியா. மேலும் சுந்தர், வலைவாசல் தொடர்பாக வழு பதியச் சொல்லி முன்னர் ஒரு வேண்டுகோள் உங்களிடம் விடுத்திருந்தேன். அது குறித்துக் கவனிப்பீர்களா? அவசரம் இல்லை.--Kanags \உரையாடுக 21:13, 10 ஜூன் 2010 (UTC)
நீங்கள் இருவரும் குறிப்பிட்ட வழுக்களைத் தீர்க்க இன்னும் எனக்கு நேரம் வாய்க்கவில்லை. -- சுந்தர் \பேச்சு 14:45, 12 ஜூன் 2010 (UTC)

மிக மிக நன்றி!

தொகு

மதிப்பிற்குரிய நண்பருக்கு அன்பு வணக்கம்!

'ஒத்தாசை' பக்கத்தில் ' + ' குறி இல்லையென்று நான் சொன்னதைக் கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்கு முதலில் நன்றி! வெறுமே குறைபாட்டைச் சரி செய்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் இந்தக் குறைபாட்டைச் சரி செய்வது எப்படியென்று எனக்கும் கற்றுக் கொடுத்தீர்களே அதற்கு என் உளமார்ந்த நன்றிகள் பற்பல!

நீங்கள் கற்றுக் கொடுத்ததால் 'உசாத்துணை' பக்கத்திலும் இருந்த இதே குறையை நானே சரி செய்து விட்டேன். இது உங்களால்தான் இயன்றது. மிக்க நன்றி!!

வணக்கம்!--இ.பு.ஞானப்பிரகாசன் 08:13, 11 ஜூன் 2010 (UTC)

நல்லது ஞானப்பிரகாசன். மகிழ்ச்சி. -- சுந்தர் \பேச்சு 08:23, 11 ஜூன் 2010 (UTC)


உதவி வேண்டும்

தொகு

அன்புடைய சுந்தர் அண்ணா அவர்களே, பிரச்சனை என்ற தமிழ் சொல்லிற்கு இணையான செந்தமிழ் வார்த்தை என்ன என்பதை கூற இயலுமா?--Jenakarthik 09:15, 12 ஜூன் 2010 (UTC)

மிக மிக நன்றி!

தொகு

விரைந்து விடையளித்து என் சந்தேகம் தீர்த்த சுந்தர் அண்ணாவிற்கு என் உளம்கனிந்த நன்றி --Jenakarthik 23:45, 12 ஜூன் 2010 (UTC)

அடையாள அட்டைக்கான தகவல்கள்

தொகு

சுந்தர்,

  • வணக்கம். தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக (இணைய மாநாடு) உங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கும் என நம்புகிறேன். வழங்கப்படவில்லை எனில், கீழுள்ளபடி செய்யவும்.
  • கீழ்க்காணப்படும் URL -ஐ ஒற்றி புதிய URL-இல் ஒட்டவும்; பின்னர் Enter செய்தால் ஒரு பக்கம் வரும். அதில் உங்களைப் பற்றிய சில தகவல்கள் கேட்கப்பட்டு இருக்கும். அவற்றை உள்ளிட்டு விட்டு Update செய்யவும்.
  • http://www.wctc2010.org/idcards/updatedetails.php?a=bWVtYmVyIHVwZGF0ZSBpbmZvMTI3Njg0ODM4MA%3D%3D&z=MjczNV8xMjc2ODQ4Mzgw
  • மின்னஞ்சல் முகவரி என்னுடையதாக இருக்கும். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.--பரிதிமதி 18:18, 18 ஜூன் 2010 (UTC)

தானியங்கி மாற்றங்கள்

தொகு

சுந்தர், உங்கள் sundarbot தானியங்கி மூலம் இன்று வார்ப்புரு:Cite web இல் செய்த மாற்றம் தவறாக இருந்ததை அவதானித்து அதனை மீள்வித்திருக்கிறேன். சரியா என்பதைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 12:02, 22 ஜூன் 2010 (UTC)

அனுமதி

தொகு

உயர்திரு நிர்வாகி அவர்களுக்கு --சூர்ய பிரகாசு.ச.அ. 11:16, 24 ஜூன் 2010 (UTC) எழுதுவது. டுவிட்டரில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பார்த்தேன். ஆனால் இடுகைகள் குறைவாக உள்ளன! நான் அப்பணியையும் சேர்த்துச் செய்ய விழைகிறேன்! இது குறித்து யாரேனும் கருத்து கூறுங்கள்! தமிழ் விக்கியின் பேரில் நான் டுவிட்டரில் ஒரு புதிய கணக்கு தொடங்க உள்ளேன்! அனுமதி வேண்டிக் காத்துள்ளேன்!
டுவிட்டர் மக்கள் அதிகம் புழங்கும் ஒரு சமூக தளம் எனவேதான் இவ்வேண்டுகோள். அருள் கூர்ந்து ஏற்பீர் என நினைக்கிறேன். --சூர்ய பிரகாசு.ச.அ. 11:16, 24 ஜூன் 2010 (UTC)
\உரையாடுக

உங்கள் விழைவுக்கு நன்றி. அந்த டுவிட்டர் கணக்குக்கான அணுக்கம் வத்சனிடம் உள்ளதென்று நினைக்கிறேன். அவரை அணுகவும். இருவர் ஒரு கணக்கைப் பயன்படுத்த Cotweet போன்ற ஏதாவது ஒரு வசதியைப் பயன்படுத்தலாம். -- சுந்தர் \பேச்சு 08:11, 28 ஜூன் 2010 (UTC)

ஆமோதிக்கிறேன்!

தொகு

மதிப்பிற்குரிய நண்பரே!

அன்பு வணக்கம்! நக்கீரனாரின் பேச்சுப் பக்கத்தில் நான் இட்டிருந்த மடலுக்கு நீங்கள் தெரிவித்திருந்த பதிலைக் கண்டேன். நீங்கள் கூறுவது முற்றும் உண்மையே. ஒரே சொல் வடமொழியிலும் தமிழிலும் இருந்தாலே அதை வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்த சொல் எனப் பலரும் கருதுகிறார்கள். ஆனால் அது தவறு. தமிழிலிருந்தும் பல சொற்கள் வடமொழிக்குப் போயிருக்கின்றன. இதைப் பற்றி ஒரு பழமொழி கூட உண்டு. 'தமிழுக்கு முகம் இல்லை சமசுகிருதத்துக்கு வாய் இல்லை' என்று. அதாவது தமிழில் முகத்தைக் குறிப்பதற்கென்று தனிச் சொல் எதுவும் கிடையாது, முகம் என்னும் சொல் உட்பட முகத்தைக் குறிப்பதற்குத் தமிழில் பயன்படுத்தப்படும் எல்லாச் சொற்களுமே வடமொழிச் சொற்கள்தாம் என்பதும் இதே போல் வடமொழியில் வாயைக் குறிப்பதற்கென்று தனிச் சொல் எதுவும் கிடையாது, வாயைக் குறிப்பதற்கு வடமொழியில் பயன்படுத்தப்படும் எல்லாச் சொற்களுமே தமிழ்ச் சொற்கள்தாம் என்பதும் இதன் பொருள். அவ்வளவு ஏன், கோயில் கட்டுவதற்கான விதிமுறைகளைக் கூறும் 'ஆகம சாஸ்திர'மே தமிழிலிருந்து வடமொழிக்குப் போனதுதான் என்கிறார் தமிழ்ப் பேரறிஞர். சத்தியவேல் முருகனார் அவர்கள்.

ஆனால் 'மீன்' என்பது தமிழிலிருந்து வடமொழிக்குப் போன சொல் என்றா கூறுகிறீர்கள்? நான் கேள்விப்பட்ட வரை தமிழிலிருந்து வடமொழிக்குப் போனவையா வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்தவையா என இதுவரை எந்தத் தமிழறிஞராலும் கண்டுபிடிக்க முடியாத சொற்கள் நீரும் மீனும் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். பேரறிஞர். கால்டுவெல் தனது 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற புகழ்பெற்ற நூலில் அப்படித்தான் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதில் வியப்பு என்னவெனில் மேற்கண்ட எனது இதே நீர், மீன் பற்றிய கருத்தை எடுத்துக்காட்டாகவும் முதன்மையானதொரு வாதமாகவும் முன்வைத்து விக்கிப்பீடியா_ பொதுவான குறைகள் பகுதியில் ஒரு மடலை இன்றோ நாளையோ எழுதவுள்ளேன். ஆனால் நீங்கள் இதே விஷயம் தொடர்பாக ஏற்கனவே ஒரு கருத்தை, அதுவும் எனக்கான மடலில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்! வியப்பாக இருக்கிறது இல்லையா?--இ.பு.ஞானப்பிரகாசன் 12:34, 30 ஜூன் 2010 (UTC)

மீனும் நீரும் திராவிட மொழிச்சொற்கள் என்பது ஐயம் திரிபற நிறுவப்பட்டுள்ளது. எப்படியெனில் இவ்விரண்டு சொற்களுக்கும் மலைவாழ் பழங்குடியினர் பேசும் திராவிட மொழிகள் உட்பட அனைத்திலும் உள்ளன. தவிர இவற்றின் எண்ணற்ற கிளைச்சொற்களும் இம்மொழிகளில் உள்ளன. மேலும் இவை சுட்டும் பொருட்களுக்கு இவைதான் இம்மொழிகளில் முதன்மைச் சொற்கள். இந்த அடிப்படையிலும் வேறு சான்றுகளையும் கொண்டு இவ்வுண்மை நிறுவப்பட்டுள்ளது. அண்மையில் கூட ஆசுக்கோ பருப்போலோ இதை நினைவுகூர்ந்தார். பரோவின் திராவிட வேர்ச்சொல்லகராதியில் பாருங்கள். (மின்னுவதால் மீன்.) டர்னரின் வடமொழி வேர்ச்சொல்லகராதியிலும் இவ்வுண்மையைக் குறிப்பிட்டுள்ளார். -- சுந்தர் \பேச்சு 16:40, 30 ஜூன் 2010 (UTC)

நவில்கிறேன் நன்றி!

தொகு

மதிப்பிற்குரிய நண்பருக்கு அன்பார்ந்த வணக்கம்!

'மீன்' பற்றிய உங்கள் விளக்கம் பார்த்தேன். நெகிழ்ந்தேன்! நான் எழுப்பிய அந்த ஒரு சிறு கேள்விக்காக இவ்வளவு வினைகெட்டு, இப்படியொரு அருமையான விளக்கத்தை எழுதி, அதற்கான ஆதாரங்களையும் தேடி எடுத்து, அவற்றையும் இதனுள் இணைத்து எவ்வளவு உழைத்திருக்கிறீர்கள்!! மிக மிக மிக நன்றி ஐயா! மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்களுடைய அந்த விளக்கம்.--இ.பு.ஞானப்பிரகாசன் 17:31, 30 ஜூன் 2010 (UTC)

நல்லது. உங்களுக்கான விடை கிடைத்ததோடு, நீங்கள் இன்னும் சிலருக்கு எடுத்துச் சொல்லவும் உதவுமல்லவா? -- சுந்தர் \பேச்சு 02:37, 1 ஜூலை 2010 (UTC)

பாராட்டுப் பதக்கம்

தொகு

சுந்தர், ஏறத்தாழ கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ் விக்கியில் ஈடரிய அரும்பணியாற்றி, பலரையும் நெறிப்படுத்தி நல்வழிகாட்டும் உங்களை உடன் பங்களிப்பாளனான நான் நெஞ்சாரப் போற்றி பாராட்டி இப்பதக்கத்தை அளிக்கின்றேன். --செல்வா 20:24, 11 ஜூலை 2010 (UTC)

 
சுந்தர் உங்கள் அயராத அரும்பணியையும் வழிகாட்டுதலையும் கருதி என் உவப்பை தெரிவிக்க இப்பதக்கத்தை அளிக்கின்றேன்-செல்வா
மிக்க நன்றி, செல்வா. உங்களிடம் பதக்கம் பெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்களைப் போல் உடன்பணியாற்றும் விக்கிப்பீடியர்களின் தொடர் ஊக்கம் தான் ஒவ்வொரு நாளும் உந்துதலாக இருக்கிறது. தொடர்ந்து என்னாலாகும் வழியிலெல்லாம் பங்களிப்பேன். -- சுந்தர் \பேச்சு 16:25, 12 ஜூலை 2010 (UTC)

தானியங்கி

தொகு

Diego Grez, சுந்தர் இவரது தானியங்கி உரிமையை மீள் பெற முடியுமா/தடுக்க முடியுமா. செல்வா சிலவற்றைச் சுட்டிக் காட்டி உள்ளார். --Natkeeran 03:23, 13 ஜூலை 2010 (UTC)

சுந்தர்... நான் தனிப்பட்ட முறையில் ஒரு கட்டுரையை (ரவியின் பேச்சுப்பக்கத்தில் என்று நினைக்கிறேன், எழுத வேண்டிய கட்டுரைகளின் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துள்ளேன்..) உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்...!!

கட்டுரை: ஹைகன்ஸ்–ப்ரனெல் தத்துவம்

நன்றி - அன்புடன் --சாந்த குமார் 13:09, 15 ஜூலை 2010 (UTC)

கட்டாயம் பார்க்கிறேன், சாந்தகுமார். :) -- சுந்தர் \பேச்சு 13:22, 15 ஜூலை 2010 (UTC)

சுந்தர் பேச்சு:கடமா என்னும் பக்கத்தில் நீங்கள் விட்டிருந்த கருத்துக்கு மறுமொழி இட்டிருக்கின்றேன்.பார்க்கவும்.--செல்வா 23:21, 25 ஜூலை 2010 (UTC)

விக்சனரி வழு

தொகு

சுந்தர், விக்சனரியில் ஒரு வழு அதற்கு இங்கு பதிவது சரியா?. ஆங்கில விக்சனரியின் common.css, monobook.js கோப்புகளை(conrad.irwin importscript தவிர்த்து ) தமிழ் விக்சனரியில் update செய்யக் கோரலாமா? -- மாஹிர் 16:13, 29 ஜூலை 2010 (UTC)

நன்றி

தொகு

நிருவாகி அணுக்கம் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தமைக்கு மிக்க நன்றி --ஜெ.மயூரேசன் 04:01, 18 ஆகஸ்ட் 2010 (UTC)

Message on en:User:Sundar. Shyamal 16:55, 29 ஆகஸ்ட் 2010 (UTC)

Responded at en:User_talk:Shyamal#Lycodon_aulicus. -- சுந்தர் \பேச்சு 17:11, 29 ஆகஸ்ட் 2010 (UTC)

வாக்கெடுப்பு

தொகு

n:Wikinews:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள். நன்றி.--Kanags \உரையாடுக 14:44, 4 செப்டெம்பர் 2010 (UTC)Reply

நன்றி

தொகு

தடித்த எழுத்தில் தலைப்பு, சாய்வெழுத்தில் ஆங்கில வடிவு எனும் முறைமையைச் சுட்டி கட்டுரையை திருத்தியமைக்கு நன்றி.--சி. செந்தி 18:13, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply

தேனுறிஞ்சும் பட்டாம்பூச்சி நிகழ்படம்

தொகு

சுந்தர், மிக்க நன்றி. எத்தனை மெல்லிய கால்கள் உணர்விழைகள். எப்படித் துருவித் துருவித் தேடுகின்றது. மிக நேர்த்தியாய் நிகழ்ப்டமாக்கியிருக்கின்றார்கள்! இங்கு சேர்த்ததற்கு நன்றி.--செல்வா 19:07, 6 செப்டெம்பர் 2010 (UTC)Reply

பிபிசி - தமிழோசை

தொகு

தங்கள் பயனர் பக்கத்தின் மூலம் பிபிசி பெட்டகத் தொடர்களின் அறிமுகம் கிடைத்தது. திரையிசை வரலாறு, தமிழிசை, மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் பல தொடர்களும் அருமை. அனைத்தையும் பதிவிறக்கம் செய்து ‌கொண்டேன். உண்மையில் பெட்டகமாய்ப் பாதுகாக்க வேண்டியவை தான்! நன்றிகள் பல! --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 15:36, 7 செப்டெம்பர் 2010 (UTC)Reply


நன்றிகள்

தொகு

என்னுடைய பிறந்த நாளையொட்டி நீங்கள் தெரிவித்த வாழ்த்துக்களுக்கு எனது மனம் கனிந்த நன்றிகள். --மயூரநாதன் 16:29, 8 செப்டெம்பர் 2010 (UTC)Reply

கவிதை கவிதை...

தொகு

பிறந்தது ... எனத் தொடங்கும் உங்கள் பயனர் பக்கப் பாட்டு...கவிதை.. காவியம்.. அருமை :) ஏதாவது மரபுப் பாவா? விசை நெறியில் விட்டுப் பார்க்கலாமா ;)--இரவி 16:22, 18 செப்டெம்பர் 2010 (UTC)Reply

உங்களுக்குப் பிடித்திருப்பது கேட்டு மகிழ்ச்சி, இரவி. மரபுப்பாவெல்லாம் எனக்கு இன்னும் தொலைவு தான். (ஆனால் வெண்பா எழுதும் ஆவல் கட்டாயம் உண்டு. அப்படி எழுதினால் விசை நெறியில் இடலாம்.) நீங்க பாட்டுக்கு சுவப்பு இணைப்பு தந்துட்டீங்க, ஒரு பழக்கத்தில கட்டுரையை எழுதிட்டா சிக்கல். விசைநெறிக்கு இன்னும் விக்கியில் குறிப்பிடத்தக்க தகுதிகள் வந்துள்ளதாகத் தெரியல. :) -- சுந்தர் \பேச்சு 16:37, 18 செப்டெம்பர் 2010 (UTC)Reply

எது சரியான தேதி

தொகு

சுந்தர், தங்களால் எனக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் செப்டம்பர் 21 ஆம் நாள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மலையாள விக்கிப்பயிலரங்கு நடப்பதாக இருந்தது. ஆனால் ஆலமரத்தடியில் அக்டோபர் 29 என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எது சரியானது?--தேனி.எம்.சுப்பிரமணி. 18:46, 18 செப்டெம்பர் 2010 (UTC)Reply

தரவேற்றுதல்

தொகு

வணக்கம் சுந்தர். கட்டுரைப் போட்டியை தரவேற்ற ஒரு அணியையும், திட்டத்தையும், கால அட்டவணையும் செய்தல் அவசியாமாக உள்ளது. நான் செய்ய முடியும் என்றே நினைத்தேன், ஆனால் அதில் தடங்கல்கள் உள்ளன. இன்னுமொரு கட்டுரைப் போட்டி நடத்த கனடா அமைப்பு ஒன்று நிதி உதவி செய்ய (50 000 இந்திய ரூபாய்கள்) முன் வந்து உள்ளார்கள். ஆனால் நாம் போட்டு நடத்தும் முறையை முன்னேற்றாமல், எமது கற்கைகளைப் பெறாமல் அதைச் செய்வதில் அர்த்தமில்லை. கலையிடம் பரிந்துரைகள் கேட்போம், ஆனால் பணியில் ஈடுபடுத்த வேண்டாம். அவர்கள் அந்தத் திட்டத்திற்கு நிறைய நேரம் தந்துள்ளார். --Natkeeran 15:57, 19 செப்டெம்பர் 2010 (UTC)Reply

கலை ஆவணப்படுத்துவதாகச் சொல்லியிருக்கிறார். பதிவேற்றத்துக்கு சோடாபாட்டிலும் உதவி செய்வதாகச் சொல்லியுள்ளார். அந்தத் திட்டத்துக்கான பக்கத்தில் பணிகளை இடுங்கள். விரும்புபவர்கள் பங்களிக்கட்டும். அதன்பின்னர் சற்று இடைவேளை விட்டு அடுத்த கட்டுரைப்போட்டி நடவடிக்கையைத் தொடங்கலாம். -- சுந்தர் \பேச்சு 02:23, 20 செப்டெம்பர் 2010 (UTC)Reply

கூகுள் தேடுபொறியில் பின்தங்குதல்

தொகு

த.வி. பக்கங்கள் கூகுள் தேடுபொறி தேடல் முடிவுகளில் பின்தங்கியிருப்பது பற்றி சமீபமாய்ப் பேசப்பட்டதைப் பார்த்தேன். wisdom tooth என்ற கட்டுரையை ஞானப்பல் என்று எழுதாமல் அறிவுப்பல் என எழுதியிருந்தேன். ஞானப்பல் என்பது தான் பொதுவழக்கிலிருப்பதால் ஒரு பக்க வழிமாற்று கொடுத்திருந்தேன். எனினும் கூகுளில் ஞானப்பல் எனத் தேடினால் அறிவுப்பல் பக்கம் முதலில் வரவில்லை. இதர பக்கங்கள் தான் வருகின்றன. ஏன் ? --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 17:09, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply

கார்த்தி, வழிமாற்றுகள் தேடுபொறியில் சிக்கவதில்லை. கட்டுரையுள் கொடுத்தால் மட்டுமே சிக்கும். கிரந்த தவிர்ப்பு, தனித்தமிழ் போன்ற கொள்கைகள் இருந்தாலும், பொது வழக்கில் உள்ளவற்றை அடைப்பு குறிகளுக்குள் ஓரிடத்திலாவது கொடுக்க வேண்டும், மற்ற கட்டுரைகளிலிருந்து உள்ளிணைப்பு கொடுக்கையில் பொதுவழக்குக்கான இணைப்பை பயன்படுத்துவது போன்றவை தேடுபொறியில் முன் கொண்டுவரும்--சோடாபாட்டில் 17:19, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply
சோடாபாட்டில் கூகுள் தேடல் முடிவுகளைப்பற்றிக் கீழே கொடுத்துள்ளதைப் பார்க்க வேண்டுகிறேன். ஒரு குறிப்பிட்டத் தலைப்பின் ஒருவர் ஒன்றைத் தேடினால் அத்தலைப்புக்கு நேர் தொடர்புள்ள கட்டுரை த.வி-யில் இருந்தால் அது தெரியும். இதுவே இங்கு முக்கியம். ஆனால் கூகுள் தேடலில் முடிவுகளில் முன்னிற்பதற்குக் காரணங்கள் வேறு. இது நேரத்துக்கு நேரம் மாறக்கூடியதும் ஆகும். நாம் கட்டுரையின் தரம், ஒழுங்குபாடு, கருத்துச் செறிவு, நல்ல நடை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதே நல்லது என்பது என் கருத்து.--செல்வா 17:28, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply
செல்வா, இணையத்தில் தேடு பொறிகளில் சிக்குவது மிக முக்கியம். விக்கிபீடியாவின் வளர்ச்சிக்கு கூகுள் பேஜ் ரேங்க் அல்காரிதம் அதற்கு அளிக்கும் முக்கியத்துவம் மிக முக்கியமான காரணம். கருத்து செறிவு, ஆழம் போன்றவற்றுடன் சரி சமமான நிலையில் தேடுபொறி தர நிலைக்கு நாம் கவனம் தர வேண்டும். ஒரு விஷயத்தைப் பற்றி தெடுபவர்கள் த. விக்கியின் முதற்பக்கத்துக்கு வந்து தேடபோவதில்லை. நேரே கூகுள் போன்ற தேடு பொறிக்கு தான் செல்வார்கள். தமிழ் உள்ளடக்கம் மிகக் குறைவாக உள்ள போதே நாம் பின் தங்கியுள்ளோம் என்றால், அதிகமாகும் போது நாம் காணாமல் போய் விடுவோம். அடைப்பு குறிகளுள் ஓரிடத்தில் கொடுப்பதால் (இதனால் நமது தரம் குறையாது என்பது என் கருத்து), நாம் தேடுபவரை இங்கு வரவழைப்பதோடு, சரியான பயன்பாட்டை அவர்களுக்கு உணர்த்தவும் முடியும். எ.கா. ஞானப்பல் என்று தேடுபவரை வேறெங்கோ செல்ல விடுவதை விட, இங்கு அழைத்து வந்து, அறிவுப்பல் தான் சரியான பயன்பாடு என்று உணர்த்துவது நல்லது. இன்று தமிழறிவு உள்ள நிலையில் சரியான பயன்பாடு எது என்பது பரவலாக யாரும் உணர்ந்திருப்பதில்லை என்பதால் இது அவசியமாகின்றது. --சோடாபாட்டில் 17:42, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply
சோடாபாட்டில், கார்த்தியின் பேச்சுப்பக்கத்தில் உங்களுக்கு ஒரு மறுமொழி இட்டிருக்கின்றேன். நீங்கள் கூறுவதூ புரிகின்றது, ஆனால் பிறைக்குறிகளுக்குள் ஒரு சொல் இருந்துவிட்டால் முன்னுக்கு வந்துவிடுமா? அதனை அறியத்தாருங்கள். கூகுள் தேடலில் வழிமாற்றில் இருப்பது சிக்காது என்பது உண்மையா? (என் துய்ப்பறிவு வேறாக உள்ளது. மீண்டும் தேர்வு செய்து பார்க்கின்றேன்). கார்த்தியின் கருத்துப்படி அறிவுப்பல் என்று இட்டாலே த.வி முன்னுக்கு வரவில்லை என்பது வேறு குறைபாட்டைக் காட்டுகின்றது தெளிவாகின்றது அல்லவா?--செல்வா 17:51, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply
சோடாபாட்டில், நான் உங்களுக்கு மேலே மறுமொழி இட்டவுடன் கூகுளில் ஞானப்பல், அறிவுப்பல் என்னும் இரண்டையும் இட்டுத்தேடிப்பார்த்தேன். இரண்டிலுமே த.வி-யும், தமிழ் விக்சனரியுமே முன்னிற்கின்றன. அறிவுப்பல் 288 முறையும் (த-வி முதல்), ஞானப்பல் 215 முறையும் (தமிழ் விக்சனரி முதல்) காட்டுகின்றது. எனவே கவலை என்னவென்று புரியவில்லை.--செல்வா 17:55, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply

இதுபற்றியெல்லாம் இன்னமும் முயற்சியாக சில தேர்வுகள் செய்துபார்க்க வேண்டும். தொன்மா என்று தேடினால் 809 தேர்வுகள் காட்டுகின்றது கூகுள். முதலில் நிற்பது த.வி. டயனசோர் என்றால் மொத்தம் எட்டே எட்டு (8) பொறுக்குகள் காட்டுகின்றது, இதிலும் த.வி முதல் (கட்டுரையில் உள்ள சொல்), ஆனால் ச்ச்ங்கிலத்தில்தவறான ஒலிப்பாகக் கருதப்படும் (ஆனால் தமிழர்கள் கூறும்) டயனோசர் என்னும் சொல்லை இட்டுத்தேடினால் 337 பொறுக்குகள் காட்டுகின்றது (இதில் முதல் பக்கத்தில் காட்டும் 10-12 இல் த.வி இல்லை; தமிழ் விக்கிப்பீடியாவில் டயனோசர் என்னும் சொல்லில் வழிமாற்று உள்ளது)--செல்வா 18:13, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply

வழிமாற்று சிக்காதென்பதில் சந்தேகமே இல்லை செல்வா. மற்ற பக்கங்களை வடிகட்ட கூகுளில் “site:ta.wikipedia.org" என்று சேர்த்து தேடிப்பாருங்கள். ஒரு எடுத்துக்காட்டு ஆபரேஷன் சீலயன். இதற்கு த. விக்கியில் வழிமாற்று கொடுத்துள்ளேன் ஆனால் சீலயன் நடவடிக்கை கட்டுரையுள் இந்தத் தொடரை ப்யன்படுத்தவில்லை.--சோடாபாட்டில் 18:29, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply

வழிமாற்றுகள் கூகுளில் சிக்காதென்பது உண்மையே (ஆ. விக்கியிலும் இதே நிலை. பல முறை இதை அங்கு விவாதித்துள்ளனர்). ஞானப்பல் என்று தேடினால் விக்சனரி தானே முதலாவதாக வருகிறது. விக்கிபீடியா அல்லவே. அது ஏழாவது இடத்திலில்லவா வருகிறது. அதுவும் ”இது அறிவுப்பல் அல்லது ஞானப்பல்” என்ற தொடர் கட்டுரைக்குள் இருப்பதால் தான். “ஞானப்பல்” எனற சொல் கட்டுரை உள்ளடக்கத்தில் இல்லாமல் வெறும் வழிமாற்றாக மட்டுமிருந்திருந்தால் வந்திராது. நான் சொல்வது இதைத்தான். கட்டுரையின் உள்ளடக்கத்தில் ஓரிடத்திலாவது பொது வழக்கு இருக்க வேண்டும். என் கவலை இது தான் மக்கள் “ஞானப்பல்” என்ற வழக்கையே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள் (என்று வைத்துக் கொள்வோம்), நாம் உள்ளடக்கதில் அது இல்லாமல் வழிமாற்றில் மட்டும் வைத்திருந்தால், தேடுபொறி மூலம் அவர்கள் “ஞானப்பல்” என்று தேடினால் இங்கு வரமாட்டார்கள். உள்ளடக்கத்தில் இருக்க வேண்டுமென்று நான் கூறுவது இதனால் தான்.--சோடாபாட்டில் 18:06, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply

கருத்துக்கு நன்றி (வழிமாற்றுகள் கூகுளில் சிக்காதென்பது). ஆனால் எல்லா தவறான வழக்குகளையும் குறிப்பிட முடியாதுதானே. டயனசோர் தவிர டயனாசர், டயனாசொர், டைனசோர், டைனாசர் என்று பற்பல இருக்குமே. என் கருத்து என்னவென்றால் கூகுள் தேடல் பற்றிக் கவலைப்படுவது தவறான வழியில் இட்டுச்செல்லும். அதுவும் இன்று இருக்கும் 50-100 தேடல்களில். ஒரு நல்ல கலைக்களஞ்சியத்தின் குறிக்கோள்களுள் ஒன்றாக சரியான, துல்லியமான கருத்துகளை முன்னிறுத்துதல் என்பது இருக்க வேண்டும். இதில் சொல்லாட்சிகளும் அடங்கும். செறிவான கருத்துகள் இருந்தால் தானே அது புகழ் ஈட்டும். கூகுளில் பொறுக்கபடுதலுக்கு வேறு வழிமுறைகளைக் கையாள வேண்டியிருக்கலாம். வலைப்பதிவுகள் எழுதுதல், கூகுள் குழுமங்களில் எழுதுதல், வலை இதழ்களில் எழுதுதல் போன்று. ஒருகால் கட்டுரைக்குள் (வெளியே தெரியாமல் பிற தொடர்களை இணைத்தால் கூகுளில் கிட்டுமா என்றும் அறிய வேண்டும்.). என்னைப் பொருத்த அளவிலே, ஒரு கட்டுரை கூகுளில் பொறுக்கப்பட வேண்டும் எனில் அக்கட்டுரை பல முறைபார்க்கப்பட்டிருக்க வேண்டும். இங்கே பல முறை என்பது நாளுக்கு நாள் மாறக்கூடியது. எந்தத் தலைப்பாக இருந்தாலும் இதே முறைதான். ஞானப்பல் என்பதை விட அறிவுப்பல் என்பது கூடுதலான பொறுக்கெண்ணிக்கைப் பெற்றுள்ளது. அதுவும் முக்கியம். ஒருவர் ஞானப்பல் என்று தேடியிருந்தாலும், வேறு காரணங்களுக்காக விக்சனரியையோ, பிறிதொரு வலைப்பதிவையோ சிலர் தேர நேர்ந்திருந்தால், அவையே முன்னிற்கும் (ஞானப்பல் என்றே த.வி கட்டுரை இருந்தாலும் கூட). ஆங்கில விக்கியிலும் இதனை நான் கண்டிருக்கின்றேன் (எடுத்துக்காட்டுகள் தர இயலும்). இக்கருத்துகளை தக்க முறைகளில் உள்வாங்கிச் செயல்படுத்தலாம்.--செல்வா 20:05, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply
1) வலைப்பதிவுகள் எழுதுதல், கூகுள் குழுமங்களில் எழுதுதல், வலை இதழ்களில் எழுதுதல் போன்று - இணையத்தில் தேடுபொறி முன்னிலைக்கு இவை எந்நாளும் ஈடாகா. இவ்வளவு நாட்கள் செய்து தானே வந்திருக்கிறோம் நம்மால் த. விக்கியை எவ்வளவு தூரம் இணைய பயன்பாட்டாளர்களிடம் கொண்டு செல்ல முடிந்துள்ளது? விக்கியைப் பற்றி கேள்விப்பட்டிருப்பவர்கள் கூட செய்முறை என்று வந்தால் நேரே தேடுபொறிக்குத்தான் செல்கிறார்கள்
2) ஒரு கட்டுரை கூகுளில் பொறுக்கப்பட வேண்டும் எனில் அக்கட்டுரை பல முறைபார்க்கப்பட்டிருக்க வேண்டும். - இதை விட உள்வரும் இணைப்புகளின் எண்ணிக்கையும் (incoming links), தளத்துக்கு கூகுள் அளிக்கும் மதிப்பும் தான் கூடுதல் கனம் கொண்டவை.
3) ”ஆனால் எல்லா தவறான வழக்குகளையும் குறிப்பிட முடியாதுதானே” - ஆம். ஆனால் முடிந்த வரை குறிப்பிட முயல்வது நல்லது.
4)ஆங்கில விக்கியிலும் இதனை நான் கண்டிருக்கின்றேன் - இது மிக மிகக் குறைவான தருணங்களிலெயே நடைபெறுகிறது. (ஆனாலும் மிகப்பெரும்பாலும் விக்கிப் பக்கம் முதல் ஐந்து ரிசல்டுகளுக்குள் வந்துவிடும்)
5)வெளியே தெரியாமல் பிற தொடர்களை இணைத்தால் - கட்டுரை உள்ளடக்கத்தில் இல்லாமல் கீழே வெக்டார் தோலில் “தேதிக்கு மாற்றப்பட்டது” செய்திக்கு கீழே வைத்து சோதனை செய்யலாம் என்று என் எண்ண்ம். இதற்கு மீடியா விக்கியில் கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
பொதுவாக நான் சொல்வது இதுதான் - இணையத்தில் நாம் தழைக்க தேடு பொறி தரம் மிக முக்கியம். அதற்காக நம்மால் முடிந்த வரை அனைத்தையும் செய்ய வேண்டும்.--சோடாபாட்டில் 20:40, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply
தேடுபொறிகளில் சிக்குவது முக்கியமானதுதான் என்றாலும் தரத்துக்கும் செறிவுக்கும் ஈடாக அதைப் பார்க்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. கட்டுரை உள்ளடக்கத்தைப் பெரிதும் மாற்றாமல் பல வழிகளில் தேடுபொறி வரிசையில் நம்மால் முன்னேற முடியும். அவற்றைக் கண்டறிய வேண்டும். meta துண்டுகளைச் சேரக்க இயலாமா பார்க்கலாம். வெளித்தளங்களில் இருந்து இணைப்புகள் நிறைய வருவது முக்கியம். ஆங்கில விக்கிக் கட்டுரைகளின் முன்வரிசைக்கு மிகப்பெரிய காரணம் அதுவே. அடுத்தது பாலாஜியும் இரவியும் உரையாடிய ஒன்று anchor text-ல் வருவது. இதை விக்கிக்குள்ளான இணைப்புகளில் செயல்படுத்த முடியாவிட்டாலும், விக்கிக்கு வெளியே நாமே ஒரு தளத்தில் இருந்து மாற்றுப்பயன்பாடுகளில் அமைந்த தலைப்புடன் இணைப்பு தரலாம். இவற்றைப் பற்றியெல்லாம் முறையாக அறிந்து செயல்படுத்துவோம். தேவைப்பட்டால் ஒரு தொழில்முறை SEO நுட்பவியலரையும் அணுகலாம். http://strategy.wikimedia.org/wiki/Proposal:SEO_Market_and_Contributor_Funnel என்ற எனது முன்வைப்பையும் பாருங்கள். மற்றபடி தேடுபொறிகளைப்பற்றி ஒன்று சொல்லுவர்: நீங்கள் கட்டி வையுங்கள், அவர்கள் தாமாக வருவார்கள். அதாவது நாம் தேடுபொறிகளில் முன்னால் வர முயலும் அதே வேளையில் அவர்களும் இந்த heuristics-ஐயும் தாண்டி தரமான உரைகளை முன்னால் கொண்டு வர பல முறைகளை ஆய்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். -- சுந்தர் \பேச்சு 02:03, 27 செப்டெம்பர் 2010 (UTC)Reply

கூகுள் தேடல் முடிவுகள்

தொகு

அறிவுப்பல், ஞானப்பல் என்பது பற்றி நீங்கள் சுந்தரின் பேச்சுப் பக்கத்தில் கருத்து இட்டிருந்தீர்கள். தேடல் முடிவுகள் தலைப்புச்சொல்லால் அல்ல, எத்தலைப்பாக இருந்தாலும் எத்தனை பேர் பார்க்கின்றார்கள் என்பதைப் பொருத்தது. கூகுள் தேடலில் முதலில் வர வேண்டும் என்றே சில நுட்பங்களையும் சிலர் கையாளக்கூடும். இன்றைய தமிழ்ச் சூழலில் சிற்றெண்ணிக்கையானோர் ஒரு பக்கத்தைப் பார்த்தாலும் தேர்வுகள் மாறக்கூடும். எனவே இது பற்றிக் கவலைப்பட வேண்டாம். தக்க தகவல்கள், தரமான தகவல்கள் இருக்குமாறும், அவை பெருகுமாறும் தொடர்ந்து உழைத்துவந்தால் கட்டாயம் மிகப்பலவற்றிலும் த.வி முன்னிற்கும் வாய்ப்பு மிகவுள்ளது.--செல்வா 17:28, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply

செல்வா, ஒரு பக்கத்தை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்து தேடு பொறிகளில் முடிவுகள் மாறும் என்று சில இடங்களில் குறிப்பிட்டு உள்ளீர்கள். நான் அறிந்த வரை ஒரு பக்கத்தின் நேரடி வரவு எண்ணிக்கை தேடு பொறியில் முந்த உதவாது. தேடல் முடிவுகளில் முதலாவது காட்டப்படும் முடிவை விட்டு அதற்கடுத்த முடிவுகளை நிறைய பேர் சொடுக்கினால், அந்தப் பக்கம் மேலே உயர்வதற்கு வாய்ப்பு உண்டு. எனினும், ஒரு பக்கத்தின் தலைப்புச் சொல், குறிச்சொல் (திரும்பத் திரும்ப வருவதால் இதனைக் குறித்த பக்கம் என்று உணர்த்தும் சொற்கள்) தேடு பொறி உகப்பாக்கத்தில் மிக முக்கியமான பங்காற்றுக்கின்றன. இதனை எனது தொழில் அனுபவத்தின் மூலம் உறுதியாக கூற முடியும். தங்கள் கருத்துக்குச் சான்றுகள் இருந்தால் அறிய விரும்புகிறேன். நன்றி--இரவி 07:38, 19 அக்டோபர் 2010 (UTC)Reply
இரவி, நான் தேடுபொறி வல்லுநன் அல்லன். நீங்கள் சொல்லும் ஒரு கருத்தே நான் மேலே கூறவதற்கு வலு சேர்பப்தாக எண்ணுகிறேன்: தேடல் முடிவுகளில் முதலாவது காட்டப்படும் முடிவை விட்டு அதற்கடுத்த முடிவுகளை நிறைய பேர் சொடுக்கினால், அந்தப் பக்கம் மேலே உயர்வதற்கு வாய்ப்பு உண்டு. உங்கள் கூற்றுப்படி தேடுதல் முடிவுகளில் "அடுத்த முடிவுகளைச்" சொடுக்கினால் அப்பக்கம் முந்துறும் என்னும் பொழுது அது மேலே நான் பொதுப்பட சொன்னதன் கருத்தேதானே. பின்னதைத் தேர்ந்தால் கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கலாம் (வெறும் சொடுக்கு பெறும் எண்ணிக்கையை விட - இது பற்றி உறுதியாகத் தெரியாது), அதனால் முந்துவது மதிப்பெண்ணைக் கொண்டுதானே. எவை எவைக்கு எத்தனை மதிப்பெண்கள் (பொறுக்குமைத் தகுதிக்கு) தருகிறார்கள் என்று உங்களைப் போல் துறையில் இருப்பவர்கள்தான் சொல்ல வேண்டும். என்னென்ன முறைகள் பயன்படுத்துகிறார்கள், அவற்றின் நிறைகுறைகள் என்ன, எங்கெங்கு எவை எவை கூடுதல் பயன் தரும் என்பதைப் பற்றி நீங்கள் ஒரு கட்டுரை எழுதலாமே. என் கருத்து என்னவென்றால், எதைத் தேற வேண்டும் எப்படித் தேர்வு செய்யவேண்டும் என்பது தேடுபொறிகளின் பணி. இதை ஓரளவுக்குக் கருத்தில் கொள்ளலாம், ஆனால் நம் பணி நல்ல கருத்துகளை நல்ல நடையில் பயன்கொள்வோர் நற்பயன் பெறுமாறு அமைப்பது. அளவுக்கு மிஞ்சிய இந்த தேடுபொறிக்கேற்ற மாற்றங்கள் செய்யத்தேவையில்லை. தேடுபொறிகளின் தேர்வு முறைகள் (அதன் குறிக்கோள்கள்), நம் குறிக்கோள்களில் இருந்து மாறுபட்டதாக இருக்கலாம். எ.கா. வணிகப்பெயரை முன்னிறுத்தினால், அதனை அதிக மதிப்பெண்களோடு தேர்வு செய்யக்கூடும் (செய்யும் என்று சொல்லவில்லை). நம் முழு கவனம் கட்டுரையின் தரம், பயன் முதலானவற்றைப்பற்றி இருப்பின் நல்லது என்பது என் கருத்து. தரம் என்பதில் கருத்து-தரவு துல்லியம், எளிமை, நடையொழுக்கம், கருத்து வரன்முறை முதலியன அடங்கும். --செல்வா 16:58, 19 அக்டோபர் 2010 (UTC)Reply

செல்வா, "எதைத் தேற வேண்டும் எப்படித் தேர்வு செய்யவேண்டும் என்பது தேடுபொறிகளின் பணி. இதை ஓரளவுக்குக் கருத்தில் கொள்ளலாம், ஆனால் நம் பணி நல்ல கருத்துகளை நல்ல நடையில் பயன்கொள்வோர் நற்பயன் பெறுமாறு அமைப்பது. அளவுக்கு மிஞ்சிய இந்த தேடுபொறிக்கேற்ற மாற்றங்கள் செய்யத்தேவையில்லை." என்பதை ஏற்றுக் கொள்கிறேன். எனினும், தற்போதைய தேடு பொறிகளின் இயங்கும் விதம் பற்றிய தவறான புரிதல் வரக்கூடாது என்பதற்காக குறிப்பினை இட்டேன். ஒரு பக்கத்தின் வருகை எண்ணிக்கைக்கும், தேடு பொறியில் பெறும் சொடுக்கு எண்ணிக்கைக்கும் வேறுபாடு உண்டு. வெறும் வருகை எண்ணிக்கையைத் தேடுபொறிகள் கணக்கில் கொள்வதில்லை. ஒரு பக்கம் முழுக்க அறிவுப்பல் என எழுதிவிட்டு ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஞானப்பல் என்று கொடுத்தால், ஞானப்பல் என்று தேடுவோருக்கு அது கிட்டும் என்று உறுதி கூற முடியாது. (ஞானப்பல் சரியா அறிவுப்பல் சரியா என்பது இங்கு விவாதப் பொருள் இல்லை) அதே வேளை, பல இடங்களில் ஞானப்பல் என்ற சொல்லை அறிவுப்பல் என்ற பக்கத்துக்கு இணைத்தோமானால், ஞானப்பல்லும் அறிவுப்பல்லும் தொடர்புடையது என புரிந்து கொள்ளும். விரித்து எழுதினால் நீளும் :) பிறகொரு முறை முயல்கிறேன்--இரவி 18:27, 19 அக்டோபர் 2010 (UTC)Reply

இரவி, இப்படியான தேடுபொறி-சார்ந்த சாய்வுகள் "வரக்கூடாது" (வரத்தேவை இல்லை, இதனால் பிற பிறழ்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு) என்பது என் தனிக்கருத்து. பல இடங்களில் ஞானப்பல் என்ற சொல்லை அறிவுப்பல் என்ற பக்கத்துக்கு இணைத்தோமானால் என்பது வேறு கருத்து என நினைக்கிறேன். நான் ஞானப்பல் (அல்லது அறிவுப்பல்) என வலைப்பதிவு எழுதி அறிவுப்பல் கட்டுரைக்கு இணைப்பு தரலாம். பல இணைப்புகள் பல தளங்களில் இருந்து கொண்டிருப்பதும் தேடுபொறிகள் கணிப்பில் அதிக மதிப்பெண் பெறலாம். ஆனால் இவையெல்லாம் கட்டுரையின் தரத்துக்குப் புறம்பான செய்திகள் என்பது என் கணிப்பு (தேடுபொறிகளில் சிக்குவதன் முக்கியத்துவத்தை நான் குறைத்து மதிப்பிடுவதாக எண்ண வேண்டாம், ஆனால் தேடுபொறிகளின் இயக்கங்களும் தேவைகளின் பன்வகைமை கருதி காலத்தால் மாறுபடவும் கூடும். நம் குறி தரத்தில் இருப்பது நல்லது. --செல்வா 20:57, 19 அக்டோபர் 2010 (UTC)Reply
கட்டுரையின் உள்ளடக்கதை மாற்றாமல் தேடுபொறிகளிலும் முந்த வாய்ப்பிருந்தால் மட்டும் அவற்றைத் தனியாக ஆராய்ந்து பார்க்கலாம். இதற்கென திட்டமிடல் விக்கியில் நான் தனியாக ஒரு திட்டமே தொடங்கியிருக்கிறேன். அங்கு இதுபற்றி உரையாடலாம். மிகுதியாகத் தேடுபொறிகளுக்காக நாம் மெனக்கெட வேண்டியதில்லை என்பதில் நாம் அனைவருமே ஒப்புகிறோம். ஏனெனில், அவர்களும் நல்ல தரமான உள்ளடக்கங்களை மேலே கொண்டுவருவதற்காகத்தான் நாள்தோறும் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பிறகு, இன்னொன்று. தேடுபொறிகளும் தங்கள் வரிசைப்படுத்தும் முறையை வளர்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். சிலவற்றை வேண்டுமென்றே தொழில்முறை SEO வல்லுனர்களிடம் இருந்து மறைக்கிறார்கள். (இருந்தாலும் அவர்களுக்கு உள்ளிருந்து உதவக்கூடியவர்களும் இருக்கிறார்கள். ;) நிற்க. பக்கத்துக்கு வருபவர்கள் எண்ணிக்கை பற்றிய உறுதியான தரவுகள் இருந்தால் அவர்கள் கட்டாயம் அதைப் பயன்படுத்துவார்கள். இதைவிடப் பெறுமதியான எளிதில் மாற்றியமைக்கமுடியாத மதிப்பீட்டுத் தரவு வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், பக்க இணைப்புகளைக் கொண்டு அவர்கள் கணிக்கும் PageRank-ன் நோக்கத்தை லாரி பேசும், பிரினும் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்: "The probability that the random surfer visits a page is its PageRank." இதற்காக அவர்கள் ISP-க்களுடன் உடன்பாடு கொண்டிருந்தாலும் வியக்க வேண்டியதில்லை. ஆனால், இப்போதைக்கு இம்முறைகள் முறைப்படி செயலாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. -- சுந்தர் \பேச்சு 03:12, 20 அக்டோபர் 2010 (UTC)Reply

ஒரு கருத்து

தொகு

சுந்தர், எக்சுப்பிரசு (ekchupirasu) என்று எழுதுவதினும் எக்ஃசுப்பிரசு (eksupirasu) என்று எழுதுவது பொருத்தமாக இருக்கும். வல்லின எழுத்துக்குப்பிறகு காற்றொலி சகரம் வந்தால் ஃசு போன்ற எழுத்துக்கூடல் தமிழ் முறையைப் பயன்படுத்தலாம். தமிழில் கஃசு என்று ஒரு சொல் உண்டு அதன் பொருள் காற்பலம் என்னும் எடை. அதாவது
நான்கு கஃசு = 1 பலம். திருக்குறளில் பொருட்பாலில் உழவு பற்றிக் கூறும் பொழுது இச்சொல் ஆளப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்:

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

இதில் வரும் கஃசு என்னும் சொல்லை kuxsu அல்லது kahsu என்று ஒலித்தல் வேண்டும். எனவே ஆக்ஃசுபோர்டு, லினக்ஃசு, பேட்ஃசின், சாக்ஃசன் (saxon) என்பன போன்றவற்றை ஏறத்தாழ மூல ஒலிப்பு ஒட்டியும், தமிழ் மரபு மாறாமலும் (கஃசு என்பது போல) எழுதலாம். நீங்களும் முயன்று பார்க்கலாம்.--செல்வா 17:32, 18 அக்டோபர் 2010 (UTC)Reply

கட்டாயம் கூடிய இடங்களில் இனிப் பயன்படுத்துகிறேன், செல்வா. -- சுந்தர் \பேச்சு 02:59, 19 அக்டோபர் 2010 (UTC)Reply
நன்றி சுந்தர் --செல்வா 20:59, 19 அக்டோபர் 2010 (UTC)Reply

புவியில் தமிழ் மக்களின் பரம்பல் அட்டவணை

தொகு

புவியில் தமிழ் மக்களின் பரம்பல் அட்டவணை பக்கத்தில் reflist இலக்கங்களைச் சரிசெய்து உதவ முடியுமா. நன்றி. --Natkeeran 02:49, 9 நவம்பர் 2010 (UTC)Reply

முதற்பக்க அறிமுகம்

தொகு

முதற்பக்க அறிமுக உரையை எழுதக் கேட்டதற்கு நன்றி, சுந்தர். எனது அறிமுகத்தை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/இரவி பக்கத்தில் எழுதி உள்ளேன். --இரவி 12:56, 18 நவம்பர் 2010 (UTC)Reply

சேர்க்கலாமா?

தொகு
Return to the user page of "Sundar/தொகுப்பு04".