பாட்டாளி மக்கள் கட்சி
பாட்டாளி மக்கள் கட்சி (Pattali Makkal Katchi, பா.ம.க) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இக்கட்சியை 1989களில், மருத்துவர் ராமதாஸ் தொடங்கினார். வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட வன்னியர் சங்கமானது, பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியாக மாறியது. இந்த கட்சியின் சின்னமாக 90-களில் 'யானை' சின்னமும், தற்போழுது 'மாம்பழம்' ஆகும்.
பாட்டாளி மக்கள் கட்சி | |
---|---|
சுருக்கக்குறி | பாமக |
தலைவர் | அன்புமணி ராமதாஸ் |
நிறுவனர் | ச. இராமதாசு |
பொதுச் செயலாளர் | வடிவேல் இராவணன் |
தொடக்கம் | 16 சூலை 1989 |
தலைமையகம் | தைலாபுரம், திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம், சென்னை - 604001, தமிழ்நாடு |
மாணவர் அமைப்பு | பாமக மாணவர் அணி |
இளைஞர் அமைப்பு | பாமக இளைஞர் அணி |
தொழிலாளர் அமைப்பு | பாட்டாளி தொழிற்சங்கம் |
கொள்கை | சமூகநீதி, சனநாயகம், சமத்துவம், மனித நேயம் |
நிறங்கள் | நீலம் மஞ்சள் சிவப்பு |
இ.தே.ஆ நிலை | மாநிலக் கட்சி[1] |
கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி (1998-2004, 2014 – தற்போது வரை) ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (2004-2009, 2011-13) ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி (2009-2010) |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 543
|
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 1 / 245
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (தமிழ்நாடு சட்டப் பேரவை) | 5 / 234
|
தேர்தல் சின்னம் | |
இணையதளம் | |
pmkofficial | |
இந்தியா அரசியல் |
இதுவரை இக்கட்சி தமிழ்நாடு சட்டமன்றத்திலும், இந்திய நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவை ஆட்சி செய்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.
சனநாயக முற்போக்கு கூட்டணியில் மார்ச் 26, 2009 வரை இருந்தது.[2] 14வது மக்களவையில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இரா. வேலு இரயில்வே இணை அமைச்சராக இருந்தார். இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தார்.
சூலை 29, 2010 ஆணையில் இந்திய தேர்தல் ஆணையம் மாநில கட்சிக்கான விதிகளை புதுச்சேரி பாமக பெறாததால் அங்கு பாமக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை பறித்துள்ளது. ஆனால் இக்கட்சி சின்னத்தை (மாம்பழம்) இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் என கூறியுள்ளது.[3][4]
தமிழகத்தின் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற 13வது சட்டமன்றத்தில் 18 உறுப்பினர்களை கொண்டு இருந்தது. 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 30 தொகுதிகளில் போட்டியிட்டதில் 3 தொகுதிகளில் வெற்றிபெற்றது.
15வது மக்களவைக்கான தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாமக 7 தொகுதிகளில் போட்டியிட்டது.[5][6] ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்தது.
பின்னர் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி வைத்து 23 தொகுதிகளில் போட்டியிட்டு, 5 தொகுதிகளில் வெற்றிபெற்றது மற்றும் 3.80% சதவீத வாக்குகளை பெற்றது.[7]
சின்னம்
இக்கட்சி ஆரம்பத்தில் யானை சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. பகுசன் சமாச் கட்சிக்கு தேசிய அரசியல் கட்சி என்று 1997இல் தகுதி உயர்த்தப்பட்டதாலும் யானை சின்னத்தை அது நாடு முழுக்க பயன்படுத்தியதாலும் யானை சின்னம் அதற்கு ஒதுக்கப்பட்டது.[8] பாமக தமிழ்நாடு மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை இழந்ததால் அதன் யானை சின்னம் பறிக்கப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் தகுதி இழக்காததால், அங்கு யானை சின்னத்தை பயன்படுத்திக்கொள்ள தேர்தல் ஆணையம் இசைந்தது.
1998இல் இக்கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது.[9] அன்றிலிருந்து மாம்பழம் சின்னத்திலேயே போட்டியிட்டு வருகிறது. விதிகளின் படி மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை தேர்தல் ஆணையம் பறித்து விட்டாலும், 2016 சட்டமன்ற தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட இக்கட்சிக்கு அனுமதி வழங்கியது.
தலைவர்
- பேராசிரியர் தீரன் (1989 முதல் - வரை)
- எடப்பாடி கணேசன்
- கோ. க. மணி (1998 முதல் 2022 வரை) [10]
- அன்புமணி இராமதாசு (2022 மே 28 முதல்)
பொதுச்செயலாளர்
முக்கியத் தலைவர்கள்
- ச. இராமதாசு - பாமக நிறுவனர்
- அன்புமணி ராமதாஸ் - பாமக மாநில தலைவர்
- கோ. க. மணி - முன்னாள் மாநில தலைவர்
- என். டி. சண்முகம் - முன்னாள் உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர்
- ஏ. கே. மூர்த்தி - பாமக துணை பொது செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய இரயில்வே துறை இணை அமைச்சர்
- அர. வேலு - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் இரயில்வே அமைச்சர்
- வடிவேல் இராவணன் - பாமக மாநிலப் பொதுச்செயலாளர்
- திலகபாமா - பாமக மாநிலப் பொருளாளர்
- கோ.க.ம.தமிழ்க்குமரன் - பா.ம.க. இளைஞரணித்தலைவர்[11]
- வழக்கறிஞர் கே. பாலு - பாமக பேச்சாளர்
தேர்தல் வரலாறு
தமிழ்நாடு
ஆண்டு | தேர்தல் | மொத்த வாக்குகள் | வென்ற தொகுதிகள் | மாற்றம் | கூட்டணி | முடிவு |
---|---|---|---|---|---|---|
1991 | 10ஆவது சட்டமன்றம் | 1,45,982 | 1 / 194
|
1 | எதிரணி | |
1996 | 11ஆவது சட்டமன்றம் | 10,42,333 | 4 / 116
|
3 | பாமக+திவாரி | எதிரணி |
2001 | 12ஆவது சட்டமன்றம் | 15,57,500 | 20 / 27
|
16 | அதிமுக+ | அரசு |
2006 | 13ஆவது சட்டமன்றம் | 18,63,749 | 18 / 31
|
2 | திமுக + | அரசு |
2011 | 14ஆவது சட்டமன்றம் | 19,27,783 | 3 / 30
|
15 | திமுக + | எதிரணி |
2016 | 15ஆவது சட்டமன்றம் | 23,00,775 | 0 / 234
|
3 | தோல்வி | |
2021 | 16ஆவது சட்டமன்றம் | 17,56,796 | 5 / 234
|
5 | அதிமுக+ | எதிரணி |
வருடம் | தேர்தல் | மொத்த வாக்குகள் | வென்ற தொகுதிகள் | மாற்றம் | கூட்டணி | முடிவு |
---|---|---|---|---|---|---|
1996 | 11ஆவது மக்களவை | 5,52,118 | 0 / 15
|
15 | பாமக + திவாரி காங்கிரசு | தோல்வி |
1998 | 12ஆவது மக்களவை | 15,48,976 | 4 / 5
|
4 | தேசகூ | அரசு |
1999 | 13ஆவது மக்களவை | 22,36,821 | 5 / 7
|
1 | தேசகூ | அரசு |
2004 | 14ஆவது மக்களவை | 19,27,367 | 5 / 5
|
மாற்றங்கள் இல்லை | மமுகூ | அரசு |
2009 | 15ஆவது மக்களவை | 19,44,619 | 0 / 6
|
5 | ஐதேமுகூ | தோல்வி |
2014 | 16ஆவது மக்களவை | 18,04,812 | 1 / 8
|
1 | தேசகூ | அரசு |
2019 | 17ஆவது மக்களவை | 22,97,431[12] | 0 / 7
|
1 | தேசகூ | அரசு |
மமுகூ - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தேசகூ - தேசிய சனநாயகக் கூட்டணி ஐதேமுகூ - ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி - பாமக-திவாரி காங்கிரசு முன்னணி
புதுச்சேரி
வருடம் | பொதுத் தேர்தல் | கிடைத்த வாக்குகள் | வெற்றி பெற்ற தொகுதிகள் |
---|---|---|---|
1989 | 9வது மக்களவை | 25,021 | 0 |
1991 | 8வது சட்டசபை | 11,402 | 0 |
1991 | 10வது மக்களவை | 13,375 | 0 |
1996 | 9வது சட்டசபை | 11,544 | 1 |
1996 | 11வது மக்களவை | 19,792 | 0 |
1999 | 13வது மக்களவை | 1,40,920 | 0 |
2001 | 10வது சட்டசபை | 36,788 | 0 |
2004 | 14வது மக்களவை | 2,41,653 | 1 |
2006 | 11வது சட்டசபை | 23,426 | 2 |
2009 | 15வது மக்களவை | 2,08,619 | 0 |
மக்களவை உறுப்பினர்கள்
எண் | வருடம் | தேர்தல் | உறுப்பினர் | தொகுதி | வகித்த பதவி |
---|---|---|---|---|---|
1 | 1998 | 12ஆவது மக்களவை | தலித் எழில்மலை | சிதம்பரம் | சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் (தனி பொறுப்பு), 1999 |
2 | 1998 | 12ஆவது மக்களவை | துரை | வந்தவாசி | |
3 | 1998 | 12ஆவது மக்களவை | கே. பாரிமோகன் | தருமபுரி | |
4 | 1998 | 12ஆவது மக்களவை | என். டி. சண்முகம் | வேலூர் | |
5 | 1999 | 13ஆவது மக்களவை | துரை | வந்தவாசி | 2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் |
6 | 1999 | 13ஆவது மக்களவை | பு. தா. இளங்கோவன் | தருமபுரி | |
7 | 1999 | 13ஆவது மக்களவை | ஏ. கே. மூர்த்தி | செங்கல்பட்டு | இரயில்வே துறை அமைச்சர் (சூலை 2002- 15 சனவரி, 2004) |
8 | 1999 | 13ஆவது மக்களவை | இ. பொன்னுசாமி | சிதம்பரம் | பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் (1999-2001) |
9 | 1999 | 13ஆவது மக்களவை | என். டி. சண்முகம் | வேலூர் | 2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு), சுகாதாரம் & குடும்ப நலத்துறை அமைச்சகம் (அக்டோபர் 1999 - மே 2000) இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு), நிலக்கரி அமைச்சகம் (மே 2000 - பிப்ரவரி 2001) இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு), உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் (சூலை 2002 - சனவரி 2004) |
10 | 2004 | 14ஆவது மக்களவை | கோ. தன்ராஜ் | திண்டிவனம் | |
11 | 2004 | 14ஆவது மக்களவை | ஏ. கே. மூர்த்தி | செங்கல்பட்டு | 2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் |
12 | 2004 | 14ஆவது மக்களவை | இ. பொன்னுசாமி | சிதம்பரம் | 2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் |
13 | 2004 | 14ஆவது மக்களவை | செந்தில் இராமன் | தருமபுரி | |
14 | 2004 | 14ஆவது மக்களவை | அர. வேலு | அரக்கோணம் | இரயில்வே துறை அமைச்சர் (2004) 29 மார்ச், 2009 அன்று இரயில்வே துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் |
15 | 2014 | 16ஆவது மக்களவை | அன்புமணி ராமதாஸ் | தருமபுரி |
மாநிலங்களவை உறுப்பினர்கள்
வ.எண் | பெயர் | பதவி | ஆண்டு |
---|---|---|---|
1 | அன்புமணி ராமதாஸ் | மாநிலங்களவை உறுப்பினர் | 2004 - 2010 |
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் | 2004 - 2009 | ||
2 | மாநிலங்களவை உறுப்பினர் | 2019 - தற்போது வரை |
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு
இக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்த கோரிக்கையின் படி, அதிமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, வன்னியர் சமூகத்தினருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் உள் ஒதுக்கீடாக 10.5% வழங்கி சட்டம் இயற்றியும், அரசாணையும் வெளியிட்டது. தமிழ்நாடு அரசு, வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு செய்தது தவறு என்று கூறிய வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம், 10.5% இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. எனவே திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு, 10.5% உள் ஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிட்டது.[13]
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
- ↑ http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=PMK+swings+AIADMK+way&artid=HtcJD1dO7X4=&SectionID=vBlkz7JCFvA=&MainSectionID=fyV9T2jIa4A=&SectionName=EL7znOtxBM3qzgMyXZKtxw==&SEO=
- ↑ http://eci.nic.in/eci_main/ElectoralLaws/PoliticalParties.pdf
- ↑ "தமிழகத்தில் மதிமுக-புதுச்சேரியில் பாமக கட்சி அங்கீகாரம் ரத்து!". Archived from the original on 2 ஆகஸ்ட் 2010. பார்க்கப்பட்ட நாள் 10 March 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "பாமக போட்டியிடும் தொகுதிகள்-ஜெ அறிவிப்பு!". பார்க்கப்பட்ட நாள் 10 March 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Parliament Elections 2009 - PMK Candidates, நாடாளுமன்றத் தேர்தல் 2009 - பாமக வேட்பாளர்கள் பயோடேட்டா". thatstamil.oneindia.in. Archived from the original on 9 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 10 March 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவியேற்பு எப்போது? எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்கு?".
- ↑ "BSP gets recognition as national party". ரி டிப். பார்க்கப்பட்ட நாள் 28 மார்ச் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "PMK allotted 'mango' symbol for 2016 polls". த இந்து. பார்க்கப்பட்ட நாள் 28 மார்ச் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ தினமணி மதுரை 2022 சூலை 2 சனிக்கிழமை, பக்.7
- ↑ தினமணி மதுரை 2022 10 23 ஞாயிறு பக்கம் 8, பாமகவின் இளைஞரணித் தலைவராக தமிழ்த்குமரன் நியமனம்
- ↑ "Archived copy". Archived from the original on 26 May 2019. பார்க்கப்பட்ட நாள் 12 June 2019.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ 10.5% இட ஒதுக்கீடு: மருத்துவ, பொறியியல் கல்வியில் அமல்படுத்த தமிழக அரசு முடிவு?
வெளி இணைப்புகள்
- பா. ம. க கட்சி தளம் பரணிடப்பட்டது 2020-02-20 at the வந்தவழி இயந்திரம்
- பா.ம.க கட்சி வலைப்பூ