புதுச்சேரி சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

புதுச்சேரி சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல் (List of constituencies of the Puducherry Legislative Assembly) என்பது இந்திய ஒன்றிய பகுதியானபுதுச்சேரி சட்டமன்றத்தின் 30 தொகுதிகளாகும். இது இந்திய ஒன்றியப் பிரதேசமான புதுச்சேரி ஒரே அவையின் சட்டமன்றமாகும். இது புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கியது. சட்டமன்றத்தில் 33 இடங்கள் உள்ளன. அவற்றில் 5 இடங்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் 3 உறுப்பினர்கள் இந்திய அரசால் நியமிக்கப்படுகிறார்கள். 33 உறுப்பினர்களில் 30 பேர் வாக்குரிமையின் அடிப்படையில் மக்களால் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

புதுச்சேரி சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்

Assemblée législative de Pondichéry
15ஆவது புதுச்சேரி சட்டப்பேரவை
வகை
வகை
ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள்
வரலாறு
தோற்றுவிப்பு1 சூலை 1963; 61 ஆண்டுகள் முன்னர் (1963-07-01)
முன்புபுதுச்சேரி பிரதிநிதித்துவ சட்டமன்றம்
தேர்தல்கள்
ஒற்றை ஓட்டு
அண்மைய தேர்தல்
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2021
அடுத்த தேர்தல்
2026
கூடும் இடம்
புதுச்சேரி சட்டமன்றம்
Map of Assembly constituencies in Puducherry
புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளின் வரைபடம்

வரலாறு

தொகு

ஒன்றிய பிரதேசங்கள் அரசு சட்டம், 1963-இன் விதிகளைப் பொறுத்தவரை, சட்டமன்றத்தின் சாதாரணப் பதவிக்காலம் விரைவில் கலைக்கப்படாவிட்டால் ஐந்து ஆண்டுகள் ஆகும். சட்டசபையில் 16 குழுக்கள் உள்ளன.

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் புதுச்சேரியின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் இந்திய எல்லை நிர்ணய ஆணையத்தால் மறுவடிவமைப்பு செய்யப்பட்டன.[1] சனவரி 4, 2008 அன்று, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்த முடிவு செய்தது.[2] கூடுதலாக, மூன்று உறுப்பினர்களை மத்திய அரசு சட்டமன்றத்திற்கு நியமிக்கலாம்.[3]

1963க்குப் பிறகு எல்லை நிர்ணயம்

தொகு

ஒன்றிய பிரதேசங்கள் சட்டம், 1963-இன் படி, முப்பது உறுப்பினர்கள் நேரடி வாக்குரிமை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.[4][5]1964 ஆகத்து முதல் பாண்டிச்சேரி சட்டமன்றத்தை அமைப்பதற்கான தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்பு, தொகுதிகள் எல்லை நிர்ணய ஆணையத்தால் (எல்லை நிர்ணய ஆணையம் சட்டம், 1962 இன் படி) வரையறுக்கப்பட்டன. மேலும் முழுப் பிரதேசமும் 30 ஒற்றை உறுப்பினர் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. பாண்டிச்சேரி பிராந்தியத்திற்கு 21, காரைக்கால் பிராந்தியத்திற்கு 6, மாகே பிராந்தியத்திற்கு 2 மற்றும் யானம் பிராந்தியத்திற்கு 1. இதில் 5 இடங்கள் பட்டியல் சாதியினருக்கும், பாண்டிச்சேரி பிராந்தியத்தில் நான்கு இடங்களும், காரைக்கால் பிராந்தியத்தில் ஒரு இடம் என ஒதுக்கப்பட்டன.[5]:965

2008ஆம் ஆண்டு எல்லை நிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்பு

தொகு

புதுச்சேரி சட்டப்பேரவையில் 30 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 21 தொகுதிகள் புதுச்சேரி மாவட்டத்திலும் 6 தொகுதிகள் காரைக்கால் மாவட்டத்திலும் 2 தொகுதிகள் மாகேவிலும் ஏனாம் பகுதியில் ஒரு தொகுதியும் உள்ளது.

புதுச்சேரியில் உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகள்: முத்தியால்பேட்டை, கேசிகேட், ராஜ் பவன், புஸ்ஸி, உப்பளம், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், ஏம்பலம் (ப.இ.), நெட்டப்பாக்கம், குருவிநத்தம், பாகூர் (ப.இ.), திருபுவனை (ப.இ.), மண்ணடாடிப்பேட்டை, ஓசூடு (ப.இ.), வில்லியனூர், உழவர்கரை, தட்டாஞ்சாவடி, ரெட்டியார்பாளையாம் மற்றும் லாஸ்பேட்டை.

காரைக்கால் மாவட்டத்தின் கீழ் பின்வரும் 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கோட்டுச்சேரி, காரைக்கால், காரைக்கால் தெற்கு, நிரவி-திருமலைராயன்பட்டினம், திருநள்ளாறு, நெடுங்காடு (ப.இ.).

மாகே மற்றும் பள்ளுர் சட்டமன்றத் தொகுதிகள் மாகே மாவட்டத்தைச் சேர்ந்தவை. யானம் மாவட்டத்தில், யானம் என்ற ஒற்றை சட்டமன்றத் தொகுதியைக் கொண்டுள்ளது.

2008ஆம் ஆண்டு எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு

தொகு

எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு, புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி முன்பு போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட 30 சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப்போது, யானம் மற்றும் மாகே மாவட்டங்கள் முறையே யானம் மற்றும் மாகே எனத் தலா ஒரு தொகுதியைக் கொண்டுள்ளன.[1] காரைக்கால் மாவட்டத்தின் கீழ் நெடுங்காடு, திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, காரைக்கல் தெற்கு மற்றும் நிரவி திருமலைராயன்பட்டினம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[1] புதுச்சேரி மாவட்டத்தின் கீழ் 23 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன, இவை மண்ணாடிப்பேட்டை, திருபுவனை, ஒசுடு, மங்கலம், வில்லியனூர், உழவர்கரை, கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சவாடி, காமராஜ் நகர், லாஸ்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, ராஜ் பவன், உப்பளம், உருளையான்பேட்டை, நெல்லித்தோப், முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மனவேலி, ஏம்பாலம், நெட்டப்பாக்கம் மற்றும் பாகுர் ஆகும்.[1]

திருப்புவனை, ஒசுடு, ஏம்பலம், நெட்டப்பாக்கம் மற்றும் நெடுஞ்காடு ஆகிய தொகுதிகள் பட்டியல் இன வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.[1]

தொகுதிகள்

தொகு
 
புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளின் வரைபடம்
 
தொகுதி வரைபடம்

2008ஆம் ஆண்டில் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டதிலிருந்து புதுச்சேரி சட்டமன்றத்தின் தொகுதிகளின் பட்டியல் பின்வருமாறு. தேர்ந்தெடுக்கப்பட்ட 30 தொகுதிகளில், 23 புதுச்சேரி பகுதியினையும், 5 காரைக்கால் பகுதியினையும் மாகே மற்றும் ஏனாம் தலா ஒரு தொகுதியையும் கொண்டுள்ளன. திருபுவனை, ஒசுடு, ஏம்பலம், நெட்டப்பாக்கம் மற்றும் நெடுங்சாடு ஆகிய தொகுதிகள் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.[6][7]

புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகள்
  பெயர் இடஒதுக்கீடு மாவட்டம் மக்களவை வாக்காளர்கள் (2021) [8]
தொகுதி வரைபடம்
1 மண்ணாடிப்பட்டு பொது புதுச்சேரி புதுச்சேரி 32,324  
2 திருபுவனை ப. இ. 32,908  
3 ஊசுடு 32,176  
4 மங்கலம் பொது 38,004  
5 வில்லியனூர் 42,329  
6 உழவர்கரை 41,890  
7 கதிர்காமம் 34,471  
8 இந்திரா நகர் 35,492  
9 தட்டாஞ்சவாடி 30,483  
10 காமராஜ் நகர் 37,491  
11 லாஸ்பேட்டை 32,359  
12 காலாப்பட்டு 34,547  
13 முத்தியால்பேட்டை 29,924  
14 ராஜ் பவன் 26,349  
15 உப்பளம் 27,913  
16 உருளையன்பேட்டை 24,723  
17 நெல்லித்தோப்பு 33,609  
18 முதலியார்பேட்டை 35,597  
19 அரியாங்குப்பம் 39,001  
20 மணவெளி 34,509  
21 ஏம்பலம் ப. இ. 34,810  
22 நெட்டப்பாக்கம் 32,707  
23 பாகூர் பொது 29,762  
24 நெடுங்காடு ப. இ. காரைக்கால் 31,494  
25 திருநள்ளாறு பொது 31,204  
26 காரைக்கால் வடக்கு 35,598  
27 காரைக்கால் தெற்கு 31,891  
28 நிரவி திருமலைராயன்பட்டினம் 31,277  
29 மாகே மாகே 31,092  
30 யானம் யானம் 37,747  

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Delimitation of Parliamentary and Assembly Constituencies in the UT of Pondicherry on the basis of 2001 Census" (PDF). Election Commission of India. 30 March 2005. பார்க்கப்பட்ட நாள் 25 January 2013.
  2. Sunil Gatade (2008). "Delimitation process now gets CCPA nod". The Economic Times. http://economictimes.indiatimes.com/News/PoliticsNation/Delimitation_process_now_gets_CCPA_nod/articleshow/2673204.cms. 
  3. "Centre can nominate 3 MLAs to Puducherry Assembly: SC". Deccan Herald (in ஆங்கிலம்). 2018-12-06. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
  4. Grover, Verinder, and Ranjana Arora. Encyclopaedia of India and Her States. Vol. 10. New Delhi [India]: Deep & Deep, 1996. p. 11
  5. 5.0 5.1 Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1964 TO THE LEGISLATIVE ASSEMBLY OF PONDICHERRY பரணிடப்பட்டது 27 சனவரி 2013 at the வந்தவழி இயந்திரம்
  6. "Schedule XXII Puducherry Table A - Assembly Constituencies" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2011-05-13.
  7. PUDUCHERRY ELECTIONS 2016 RESULTS
  8. "Integrated Electoral Rolls of 2021, published on 20th January, 2021 - Assembly Constituency-wise Electors". ceopuducherry.py.gov.in. 20 January 2021. Archived from the original on 7 March 2021. பார்க்கப்பட்ட நாள் 7 March 2021.