விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு73

தரக்கண்காணிப்பு

தொகு

விக்கிப்பீடியா:தர மேம்படுத்தல் யோசனைகள் இப்பக்கத்தில் தர மேம்படுத்தல் யோசனைகளை பகிரலாமே. உதாரணத்திற்கு இங்கு நிர்வாக தரத்திலுள்ளவரகள் மேற்கோள் சேர்க்கும் போதோ, படிமப் பயன்பாடு பற்றி அறிவதற்கோ (காப்புரிமை - டின் ஐ) சில குறுக்கு வழிகளை பயன்படுத்துவர். அதை இங்கு பகிரலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:38, 3 ஏப்ரல் 2012 (UTC)

ஒப்பளிக்கப்பட்ட சொற்றொகை (authorized terms) தேவை

தொகு
ஆலமரத்தடியில் சில கருத்துக்களை முன் வைக்க ஆசைப்படுகிறேன் . சற்று நீண்ட தொகுப்பு இது.
கட்டுப்படுத்தப்பட்ட சொற்றொகை (Controlled vocabularies) என்பது அறிந்த செய்தி; தகவல் (knowledge) போன்றவற்றை (எ.கா.விக்கிபீடியா கட்டுரைகள்) அமைத்து பின்னர் தேவைக்கேற்ப ஆவணமீட்பு அல்லது தகவல் மீட்பு (document retrieval or information retrieval ) தற்பரிமாறல்களைச் (service) செய்வதற்குப் பெரிதும் துணைபுரிகிறது எனலாம்.
கட்டுரைகளைக் குறியீடு செய்தற்கு தேவைப்படுவன பொருளடைவு (subject index) எனப்படும் பொருள் அட்டவணையும் பொருள் பகுப்புகளும் (subject categories) ஆகும். கட்டுப்படுத்தப்பட்ட சொற்றொகை திட்டங்கள் கட்டாயம் வேண்டுவது முன்வரையரை (predefined) செய்து ஒப்பளிக்கப்பட்ட சொற்றொகை (authorized terms) ஆகும். இந்த சொற்றொகை இயற்கை மொழியில் (Natural Language) காணப்படும் வழுக்களை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கபடுவாதால் தகவல் அமைவும தகவல் மீட்பும் எளிதாகிறது.
இது குறித்து பல விவாதங்கள் ஆலமரத்தடியில் நடந்ததைத் தெரிந்துகொண்டேன். என்றாலும் இவை சிறிது சிறிதாகவே தேவை கருதி நடைபெறுகின்றன. கட்டுரைகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே செல்லும் இந்நிலையில் இது குறித்த பணிகள் நிறையவே உள்ளன. இது குறித்து உடனடியாக பரவலான கொள்கைகள் (Broader Policies) இருந்தால் நலம்.
பொருள் பகுப்புகளிலேயே (subject categories) சில முரண்பாடுகள் உள்ளன உதாரணமாக:
பகுப்பு:இந்தியக் கோயில்கள் -> துணைப் பகுப்புகள் [×] கேரள இந்துக் கோயில்கள்‎ (27 P), [+] தமிழ்நாட்டுக் கோயில்கள்‎ (5 C, 133 P), [×] மகாராட்டிர இந்துக் கோவில்கள்‎ (2 P)
தகவல் நாடும் முனைவு (Information seeking behaviour) எவ்வாறெனில் பயனர்கள் தங்களுக்குத் தெரிந்த கருத்தை (concept) தங்களுக்கு மிகவும் தெரிந்த திரவுச் சொற்களின் (keywords அல்லது descriptors) துணை கொண்டு தேடுகிறார்கள். நம் மொழி வளமிக்கது ஒரு கருத்துக்கு (concept) பல பொருள்கள் (meaning) உள்ளன (polysemy). ஒரு சொல் பல பொருளிலும் கையாளப் படுகின்றன. (homonyms). எனவே தான் கட்டுப் படுத்தப்பட்ட சொல் தொகுதிகள் (controlled vocabulary) விக்கிப்பீடியாவிற்கு மிகவும் இன்றியமையாததாகிறது. ஒப்பளிக்கப்பட்ட சொற்றொகை (authorized terms) படைக்க வேண்டிய திட்டங்கள் மேற்கொள்ளப்படுவது நல்லது. கொள்கைகளின் அடிப்படையில் தடுப்பு சொற்கள் (stop words) அமைக்கலாம்
கீழே சில எடுத்துக்காட்டுகளைக் கொடுத்துள்ளேன்

மாறுபட்ட எழுத்துக் கோர்வை (ஸ்பெல்லிங்)

(எ.கா) கோவில் கோயில், வமிசம், வம்சம்

கொள்கை தேவை

ஒருமை பன்மை

(எ.கா) கோவில் கோவில்கள், பெற்றோர் பெற்றோர்கள், பழம் பழங்கள், கொட்டை கொட்டைகள், கோட்டை கோட்டைகள், அரண்மனை அரண்மனைகள், குழு குழுக்கள், கொள்கை கொள்கைகள், விக்கிபீடியர் விக்கிபீடியர்கள், நிர்வாகி நிவாகிகள், கட்டுரை கட்டுரைகள், பிழை பிழைகள், பட்டியல் பட்டியகள், மேற்கோள் மேற்கோள்கள், இணைப்பு இணைப்புக்கள், உசாத்துணை உசாத்துணைகள்

கொள்கை தேவை

தனி நபர் பெயர் (விவரிப்புச் சொல் - Descriptors)

(எ.கா) ராமானுஜர், ராமானுசர், இராமானுஜர், இராமனுசர், தமிழ் நாடு, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஆந்திரப்பிரதேசம் எம்.ஜி.ஆர், ஜி.கே.வாசன்,

கொள்கை தேவை

அலகுகள்

(எ.கா) மில்லியன், பில்லியன், அங்குலம் இஞ்சு இன்ச் சென்டிமீட்டர், மீட்டர், லிட்டர், காலன், கேலன், கிலோமீட்டர், கிலோவாட், கிலோ பைட், மெகா பைட், மெகாவாட், பிக்ஸெல், பாரன்ஹீட், செல்சியஸ், நானோ தொழில் நுட்பம்,

கொள்கை தேவை

தமிழில் குறுக்கம் (Abbreviations)

(எ.கா) சென்டிமீட்டர் செ.மீ., கிலோமீட்டர் கி.மீ., தமிழ்நாடு அரசு .த.அ,, கி.மு., கி.பி.,

கொள்கை தேவை [International vocabulary of metrology]

ஆண்பால் பெண்பால்

(எ.கா) நடிகர் நடிகையர், ஆசிரியர் ஆசிரியை, தலைவர் தலைவி

கொள்கை தேவை (gender inclusive or gender exclusive)

எண்கள்

(எ.கா) எண்ணால் எழுதுதல், எழுத்தால் எழுதுதல்

கொள்கை தேவை [Rules for writing numbers: Spelling out numbers]

இணைப்பெயர் (Related Terms)

(எ.கா) வண்டி, சக்கரம், பொறி, தடுப்பான்

ஒருபொருள் பன்மொழி (Synonym ) (Homonym)

(எ.கா) நடுவன் அரசு, மைய அரசு., பருவ இதழ், பருவ வெளியீடு,.

பலபொருள் ஒருசொல் (Polysemes)

(எ.கா) வானிலை, தட்ப வெப்ப நிலை, காலநிலை; படைத்துறை, படையாள், பட்டாளம், பட்டாளர், படையாட்கள்; கோவில் கோயில், ஆலயம், வழிபாட்டுத் தலம்

கிரந்தம்

(எ.கா) அகதி, அகராதி, அகிம்சை, அங்கத்தினர், அஞ்சலி, ஆசனம், ஆசை, ஆச்சரியம், ஆதாரம், ஆபாசம், ஆயுதம், ஆலயம், ஊனம், ஏலம், ஐக்கியம், கலசம், கலாசாலை, கலாச்சாரம், சக்கரம், சக்தி, சந்தர்ப்பம், நகல், நவீன, நாத்திகம், மண்டபம், மரணம், மரியாதை, ருசி, லாபம், வக்கிரம், வங்கி,

[Information seeking behavior] (தகவல் நாடும் முனைவு (Information seeking behavior) அடிப்படையில் கொள்கை தேவை)

மேலதிக தகவல்களுக்கு சில ஆங்கிலக் கட்டுரைகள்

  1. [Controlled vocabulary/terminology concepts]
  2. [Keywords and Controlled Vocabulary Terms]
--Iramuthusamy (பேச்சு) 19:45, 6 ஏப்ரல் 2012 (UTC)

"Imagine a world in which every single human being can freely share in the sum of all knowledge."

தொகு

"Imagine a world in which every single human being can freely share in the sum of all knowledge." என்ற விக்கியூடக வாசகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு தேவை. பகிருங்கள். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:08, 7 ஏப்ரல் 2012 (UTC)

மொத்த அனைத்து அறிவையும் ஒவ்வொரு தனி மனிதனும் இலவசமாக பகிரக்கூடிய உலகத்தை கற்பனை செய்க ! --மணியன் (பேச்சு) 01:48, 7 ஏப்ரல் 2012 (UTC)
"can freely share" என்பதில் "freely" என்பது இலவசமாக என்னும் பொருளை மட்டும் குறிப்பதில்லை. காப்புரிமை போன்ற கட்டுப்பாடுகள் இன்றிப் பகிர்ந்து கொள்வதையே இது குறிக்கிறது. எனவே மணியனின் மொழி பெயர்ப்பில் "இலவசமாக" என்பதற்குப் பதிலாக "கட்டின்றிப்" என்று மாற்றவேண்டும் என்பது எனது கருத்து. "மொத்த அனைத்து அறிவையும்" என்பதையும் சற்று மாற்றினால் நல்லது என்று தோன்றுகிறது. "அனைத்து அறிவுகளின் திரளையும்" என்பது எனது முன்மொழிவு. அனைத்து அறிவுகளின் திரளையும் ஒவ்வொரு தனி மனிதனும் கட்டின்றிப் பகிரக்கூடிய உலகத்தை கற்பனை செய்க!--- மயூரநாதன் (பேச்சு) 03:53, 7 ஏப்ரல் 2012 (UTC)
“ஒவ்வொரு தனி மனிதனும் அனைத்து அறிவுத் திரள்களையும் கட்டின்றி பகிரக்கூடிய உலகத்தைக் கற்பனை செய்க!” என்றிருந்தால் சரியாக இருக்குமா?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 07:35, 7 ஏப்ரல் 2012 (UTC)

திரள்கள் என்று சொல்வது பொருத்தமானதாக அமைவதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு தனி மனிதனும் அறிவுத் திரள் முழுவதையும் கட்டின்றிப் பகிரக்கூடிய உலகொன்றைக் கற்பனை செய்க! என அமையலாமே. --மதனாஹரன் (பேச்சு) 09:23, 7 ஏப்ரல் 2012 (UTC)


அனைவருக்கும் நன்றி. மதனாஹரனின் இறுதி வடிவம் பொருத்தம் போல் எனக்குப் படுகிறது. இப்போதைக்குப் பயன்படுத்திக் கொள்கிறென். பிறகு இறுதி செய்யலாம். --Natkeeran (பேச்சு) 14:13, 7 ஏப்ரல் 2012 (UTC)
sum of all knowledge என்பதற்கு "அறிவுத் திரள் முழுவதையும்" என்ற மொழி பெயர்ப்புச் சரியாகத் தெரியவில்லை. "உலகிலுள்ள எல்லா அறிவுகளினதும் மொத்த அளவு" என்னும் பொருள் வரவேண்டும் என்பது எனது கருத்து ---மயூரநாதன் (பேச்சு) 18:05, 8 ஏப்ரல் 2012 (UTC)

அறிவுகள் என்று சொல்வது என்னவோ பொருத்தமானதாகத் தெரியவில்லை. அறிவு என்பது பன்மை விகுதி பெற்று வருமா? --மதனாஹரன் (பேச்சு) 13:30, 9 ஏப்ரல் 2012 (UTC)

“ஒவ்வொரு தனிமனிதனும் ஒட்டுமொத்த அறிவையும் கட்டுப்பாடின்றி பகிர முடிகின்ற ஒரு உலகை கற்பனை செய்யுங்கள்” --arasu:delhi

அரசு: தில்லியின் கூற்றுப் பொருத்தமாகத் தெரிகின்றது. கட்டுப்பாடின்றி என்பதைக் கட்டின்றி என மாற்றினால் நன்று! --மதனாஹரன் (பேச்சு) 11:48, 14 ஏப்ரல் 2012 (UTC)
ஒவ்வொரு தனிமனிதனும், ஒட்டுமொத்த அறிவைக் கட்டுப்பாடின்றி, பகிர முடிகின்ற ஒரு உலகை எண்ணிப் பாருங்கள் -ஜிம்மி வேல்சு. என தமிழ்நடை படுத்தலாமென எண்ணுகிறேன்.வணக்கம்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

Picture archiving and communication system - DICOM

தொகு

ஆங்கிலத்தில் PACS மற்றும் DICOM என்று குறிப்பிடப்படும் இதனை குறித்த கட்டுரைகளை தொடங்கலாமென்று எண்ணி உள்ளேன், இதற்கு பொருத்தமான தமிழ் பெயர் தேவை. -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 09, ஏப்ரல், 2012.

"புகைப்பட காப்பக மற்றும் தொடர்பு அமைப்பு(PACS)", "மருத்துவத்துறையின் எண்முறை படமாக்கல் மற்றும் தொடர்பு (DICOM)" என்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். (குறிப்பு இவை இரண்டும் அஃகுப்பெயர்(acronym) ஆதலால் என்னைப்பொறுத்தவரையில் பெக்ஸ், டைகாம் என பெயரிடுவதே சரியாக இருக்கும். எ-கா லேசர், எய்ட்ஸ்) கி. கார்த்திகேயன் (பேச்சு) 06:01, 10 ஏப்ரல் 2012 (UTC)

தங்களுடைய தகவலுக்கு நன்றி. இவை இரண்டிற்கும் தமிழில்,
  • படிமங்கள் சேமிப்பகம் மற்றும் பறிமாற்றகம் (PACS - Picture archiving and communication system)(பேக்ஸ்)
  • மருத்துவ படிமங்கள் எண்ணிம முறையாக்கம் மற்றும் பறிமாற்றம் (DICOM - Digital Imaging and Communication in Medicine) (டைகாம்)
என பெயர் சூட்ட எண்ணியுள்ளேன்; அஃகுப்பெயராக இருந்தாலும், தமிழில் பெயர் சூட்டி விட்டு ஆங்கில பெயரை வழிமாற்றம் செய்துவிடலாம். (எ- கா எண்ணிம முறை). கருத்து தேவை. -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 10, ஏப்ரல், 2012.

தமிழில் பெயர் சூட்டுவதே சிறந்தது. கட்டுரையின் உள்ளே ஆங்கில அஃகுப் பெயரையும் அடைப்புக்குள் கொடுத்து விடுங்கள். PACS என்பதற்கு படிம ஆவணமாக்கலும் தொடர்பாடல் முறைமையும் என்றும் DICOM என்பதற்கு மருத்துவத்தில் எண்ணிமப் படிமமாக்கலும் தொடர்பாடலும் என்று பயன்படுத்துவதே மேலும் பொருத்தமாக இருக்கும். மற்றும் என்ற சொல்லைப் பயன்படுத்துவது பொருத்தமானதாகத் தோன்றவில்லை. Archiving என்பது ஆவணமாக்குதலையே குறிக்கும். --மதனாஹரன் (பேச்சு) 11:09, 10 ஏப்ரல் 2012 (UTC)

ஆவணமாக்கல் என்ற சொல் நேரடியாக documentation என்ற பொருளையே சுட்டி நிற்கிறது. ஆவணகமயமாக்கல் !! --Natkeeran (பேச்சு) 14:32, 10 ஏப்ரல் 2012 (UTC)
மதனாஹரன் மற்றும் Natkeeran இருவருக்கும் நன்றிகள், வேண்டுமானால் PACS என்பதனை படிமங்கள் சேமிப்பகமும் பறிமாற்றகமும் எனவும், DICOM என்பதை மருத்துவ படிமங்கள் எண்ணிம முறையாக்கமும் பறிமாற்ற முறையும் எனவும் பெயர் சூட்டலாம். மேலும் Natkeeran சொன்னது போல ஆவணமாக்கல் என்ற சொல் நேரடியாக documentation என்ற பொருளை குறிக்கும். முறைமை என்ற சொல் PACS-ற்கு பொருந்தாது, வேண்டுமானால் DICOM-ற்கு பொருந்தும். மேலும் கருத்துகளும் கலைச் சொற்களும் தேவை. -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 10, ஏப்ரல், 2012.
சமூகவியல் தளங்களில் system என்பதற்கு முறை, முறைமை போன்ற சொற்களும் அறிவியல் தளங்களில் தொகுதி, அமைப்பு, ஒருங்கியம் போன்ற சொற்களும் பொதுவாக வழங்குகின்றன. ஆவணகம், ஆவணக் காப்பகம், ஆவணக்குவை போன்ற சொற்கள் archive குறிக்கப் பயன்படுகின்றன. --Natkeeran (பேச்சு) 17:28, 10 ஏப்ரல் 2012 (UTC)

இது போன்ற உரையாடல்களை கலைச்சொல் ஒத்தாசை பக்கத்தில் மேற்கொள்ளலாம். நன்றி--இரவி (பேச்சு) 18:45, 11 ஏப்ரல் 2012 (UTC)

இரவி இப்பகுதியை கலைச்சொல் ஒத்தாசை பக்கத்திற்கு நகர்த்தவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 12, ஏப்ரல், 2012.

கவனிப்புப்பட்டியல் மாற்றம் - மின்னஞ்சல்

தொகு

நமது கவனிப்ப்புப்பட்டியலில் உள்ள கட்டுரைகளில் மாற்றம் ஏற்பட்டால் மின்னஞ்சல் மூலம் தகவல் பெற wgEnotifWatchlist என்ற தெரிவு மீடியாவிக்கியில் உள்ளது - தற்போது பயனர் பேச்சுப்பக்கத்தில் ஏற்படும் மாற்றங்களை மின்னஞ்சல் மூலம் பெறுவது போல. காமன்ஸ், மேல்விக்கி போன்ற திட்டங்களில் பயன்படுத்துகின்றனர். தமிழ் விக்கியிலும் அதைக் கொண்டு வருதல் பயனுள்ளதாக இருக்கும் (சில நாட்களுக்கு முன்னர் புதிய பயனர் ஒருவர் இவ்வசதி போல ஒன்று வேண்டுமென்று கேட்டுள்ளார்). இதனை தமிழ் விக்கிக்கும் செயல்படுத்த (பக்சில்லாவில் வழு பதிய வேண்டும்) சமூகத்தின் இணக்க முடிவு தேவைப்படுகிறது. இதற்கு சமூகத்தின் இசைவைக் கோருகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:47, 10 ஏப்ரல் 2012 (UTC)

 Y ஆயிற்று,வழு பதியப்பட்டு, மாற்றம் செய்யப்பட்டது. வாக்கெடுப்பு விக்கிப்பீடியா:நுட்ப_மாற்ற_வாக்கெடுப்பு பக்கத்திற்கு நகற்றப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் (பேச்சு) 18:04, 12 ஏப்ரல் 2012 (UTC)

கருத்து

இது போன்ற நீட்சி முடுக்க வாக்கெடுப்புகள் கூடி வருவதால், இதற்கு ஒரு தனிப்பக்கத்தை உருவாக்குவது ஆவணப்படுத்த உதவும். --இரவி (பேச்சு) 18:45, 11 ஏப்ரல் 2012 (UTC)

 Y ஆயிற்று விக்கிப்பீடியா:நுட்ப_மாற்ற_வாக்கெடுப்பு பக்கத்தை விரைவில் புதிய மாற்றம் கொண்டு வருவதற்கான வழிமுறைகளையும் இடுகிறேன். ஸ்ரீகாந்த் (பேச்சு) 18:04, 12 ஏப்ரல் 2012 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா நூல் - தமிழ்நாடு அரசு பரிசு - நன்றி

தொகு
 
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் 2010 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் நூல்களில் கணினியியல் துறையிலான வகைப்பாட்டில் சிறந்த நூலாகத் தமிழ் விக்கிப்பீடியா நூல் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் நூலாசிரியர் தேனி எம். சுப்பிரமணிக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ‎31 வகைப்பாடுகளில் சிறந்த நூல் மற்றும் நூலாசிரியர், பதிப்பகங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2010 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் நூல்களில் தமிழ் விக்கிப்பீடியா பயனர் தேனி எம்.சுப்பிரமணி என்கிற நான் எழுதிய தமிழ் விக்கிப்பீடியா நூல் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாகக் கணினியில் துறையின் கீழான வகைப்பாட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான செய்தி தமிழ்நாடு அரசால் வெளியிடப் பெற்றுள்ளது.பார்க்க தமிழ்நாடு அரசு செய்தி. சென்னையில் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் பரிசு வழங்கி சிறப்பிக்க உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சிறப்பு எனக்குக் கிடைக்க உதவிய அனைத்துத் தமிழ் விக்கிப்பீடியா பயனர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள் பல.

சென்னையில் நடைபெற்ற விக்கிப்பீடியா 10 ஆம் ஆண்டு விழா நிகழ்வில் இந்நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது குறித்தும் நன்றியுடன் இங்கு நினைவு கூற விரும்புகிறேன். இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்த அனைவருக்கும் என் நன்றியை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். இதற்காக முயற்சிகள் மேற்கொண்ட தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள் பல.

2010 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டின் ஒரு நிகழ்வாக கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் விக்கிப் பக்கப் போட்டிக்கான குழுவிலும் என்னை ஒருவராக இடம் பெறச் செய்த தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள் பல.

தமிழ் இணைய மாநாட்டில் “தமிழ் விக்கிப்பீடியா எனும் தகவல் கலைக்களஞ்சியம்” எனும் தலைப்பில் என் கட்டுரை வாசிப்பு நிகழ்வு இருந்தது என்பதையும் இங்கு நினைவு கூற விரும்புகிறேன்.

மேலும் இம்மாநாட்டில் “தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தமிழ் வலைப்பூக்கள்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்விலும் தமிழ் விக்கிப்பீடியா சார்பில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டதையும் இங்கு நினைவு கூற விரும்புகிறேன்.

தொடர்ந்து என் சிறப்பிற்கு உதவி வரும் தமிழ் விக்கிப்பீடியாவிற்கும், என்னுடன் இணைந்து செயல்படும் அனைத்துத் தமிழ் விக்கிப்பீடியா பயனர்களுக்கும் மீண்டும் என் இதயப்பூர்வமான நன்றிகள் பல.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:37, 10 ஏப்ரல் 2012 (UTC)

வாழ்த்துக்கள். --Natkeeran (பேச்சு) 17:29, 10 ஏப்ரல் 2012 (UTC)
நண்பரே! மிகவும் மகிழ்ச்சி. மேலும் பற்பல நூல்களை எழுதுங்கள். இப்பரிசு தமிழ் விக்கிப்பீடியாவின் பெயரை பல்வேறு மட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் என நம்புகிறேன்.--பரிதிமதி (பேச்சு) 01:16, 11 ஏப்ரல் 2012 (UTC)
வாழ்த்துகள் தேனியார்.--Kanags \உரையாடுக 01:25, 11 ஏப்ரல் 2012 (UTC)

வாழ்த்துக்கள்! --மதனாஹரன் (பேச்சு) 01:43, 11 ஏப்ரல் 2012 (UTC)

வாழ்த்துக்கள் தேனி எம்.சுப்பிரமணி.மேலும் மேலும் தங்கள் புகழ் வளரட்டும். தமிழ்விக்கிபீடியாவில் பங்களித்தவன் என்ற வகையில் தமிழ்விக்கிபீடியாவிற்கு தங்களால் ஆற்றப்படும் பணிபற்றி நான் நன்கு அறிவேன். தங்கள் பணி தொடரப் பிரார்த்திக்கின்றேன்.--P.M.Puniyameen (பேச்சு) 02:46, 11 ஏப்ரல் 2012 (UTC)
  • தேனி எம். சுப்பிரமணிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுதலையும் உரித்தாக்குகின்றேன்! --பவுல்-Paul (பேச்சு) 04:52, 11 ஏப்ரல் 2012 (UTC)
வாழ்த்துக்கள் தேனி எம்.சுப்பிரமணி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு)
வாழ்த்துக்கள்! மிகவும் மகிழ்ச்சி!--Anton (பேச்சு) 06:31, 11 ஏப்ரல் 2012 (UTC)
வாழ்த்துக்கள் தேனி எம்.சுப்பிரமணி.. ! அடுத்த நூல் சோடாபாட்டிலிடமிருந்து விருதுக்கு செல்லட்டும்.. --எஸ்ஸார் (பேச்சு) 15:23, 11 ஏப்ரல் 2012 (UTC)
வாழ்த்துக்கள் சுப்பிரமணி. உங்கள் பணிகளை மேலும் உற்சாகத்துடன் தொடர இது ஒரு ஊக்கமாக இருக்கட்டும். -- மயூரநாதன் (பேச்சு) 18:20, 11 ஏப்ரல் 2012 (UTC)
வாழ்த்துகள், சுப்பிரமணி. பரிசு பெறும் நூல் பரவலான கவனத்தைப் பெறும் என்பதால் விக்கிப்பீடியா பற்றிய விழிப்புணர்வும் கூடும் என்று எதிர்பார்க்கிறேன்.--இரவி (பேச்சு) 18:45, 11 ஏப்ரல் 2012 (UTC)
மகிழ்ச்சியான செய்தி. வாழ்த்துக்கள், சுப்பிரமணி. --சிவக்குமார் \பேச்சு 09:07, 12 ஏப்ரல் 2012 (UTC)

மகிழ்ச்சியான செய்தி. வாழ்த்துக்கள்--ஹிபாயத்துல்லா (பேச்சு) 15:12, 12 ஏப்ரல் 2012 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா நூலுக்காக வழங்கப்பட்ட பரிசைத் தேனி எம் சுப்பிரமணி தமிழக முதல்வரிடமிருந்து பெற்றுக்கொள்வதைச் சற்று முன்னர் ஜெயா தொலைக்காட்சியில் பார்த்தேன். வாழ்த்துக்கள். --- மயூரநாதன் (பேச்சு) 07:57, 13 ஏப்ரல் 2012 (UTC)

தேனி சுப்ரமணிக்கு எனது மகிழ்ச்சியும் பாராட்டுக்களும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:21, 24 ஏப்ரல் 2012 (UTC)

நன்றிகள்

தொகு
  • நிகழ்வினைத் தொலைக்காட்சியில் பார்த்து அதை இங்கு பகிர்ந்து கொண்ட இ. மயூரநாதன் அய்யா அவர்களுக்கு மேலும் நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:47, 14 ஏப்ரல் 2012 (UTC)

சி மொழி மற்றும் ஏனைய மொழிகளில் நிரலி குறித்து

தொகு
XLabel = 5;



// சி நிரலி
int i =5;

போன்ற நிரலிகளை காட்டும் குறிச்சொல் தமிழில் சரியாக இல்லை (சிறியதாகவும், படிப்பதற்கு அரிய வகையில் உள்ளது) இதற்கான் மாற்றங்களை செய்யவும். பார்க்க சி - ஆங்கில விக்கியில், இங்கு சி மொழியில் எழுதிய நிரலியை தனியாக காட்டப்பட்டுள்ளது. இதேபோல மற்ற மொழிகளிலும் காட்டப்பட்டுள்ளது. இவை தமிழில் சரியாக இயங்கவில்லை, பார்க்க மேட்லேப். -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 12, ஏப்ரல், 2012.

இது உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டும். மணல்தொட்டியில் பரிசோதித்துப் பார்த்தேன். ஆங்கில விக்கியில் வரும் பெட்டி இங்கே வரவில்லை. --மதனாஹரன் (பேச்சு) 09:45, 12 ஏப்ரல் 2012 (UTC)
இதனுடைய மீடியாவிக்கி இணைப்பு இதோ! --மதனாஹரன் (பேச்சு) 09:50, 12 ஏப்ரல் 2012 (UTC)
mw:Extension:SyntaxHighlight_GeSHi#Configuration இல் சில மாற்றங்கள் கூறப்பட்டுள்ளன. விரைவில் இதனை செய்து பார்க்கிறேன். நீங்களும் முயற்சிக்கலாம், உங்கள் பயனர் css மாற்றங்கள் சரியாயிருப்பின், common.css இல் அதனை சேர்த்துவிடலாம். ஸ்ரீகாந்த் (பேச்சு) 09:55, 12 ஏப்ரல் 2012 (UTC)
விளக்கத்திற்கு நன்றி முயற்சி செய்து பார்க்கிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 13, ஏப்ரல், 2012.
ஸ்ரீகாந்த், நான் முயன்று பார்த்தேன், சரியாக வரவில்லை, உதவவும். நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 16, ஏப்ரல், 2012.
தற்காலிக வழியாக கீழ்கண்ட விதத்தில் பயன்படுத்தலாம் --நீச்சல்காரன் (பேச்சு) 03:47, 19 ஏப்ரல் 2012 (UTC)
 >> x = 17
 x =
 17
 >> x = 'hat'
 x =
 hat
 >> y = x + 0
 y =
      104        97       116
 >> x = [3*4, pi/2]
 x =
    12.0000    1.5708
 >> y = 3*sin(x)
 y =
    -1.6097    3.0000
இவ்வாறு பயன்படுத்தும்போது, நிரலியில் நிறம் சரியாக வராது, பின்னாளில் இந்த நிரலிகளை சரிசெய்யும் பொழுது, பிரச்சனையாக மாறும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 19, ஏப்ரல், 2012.

எழுத்தின் அளவுமட்டுமா சிக்கல் அல்லது குறிசொல் highlighting சிக்கலா.

  >> x = 17
  x =
  17
  >> x = 'hat'
  x =
  hat
  >> y = x + 0
  y =
       104        97       116
  >> x = [3*4, pi/2]
  x =
     12.0000    1.5708
  >> y = 3*sin(x)
  y =
     -1.6097    3.0000

--Natkeeran (பேச்சு) 17:49, 19 ஏப்ரல் 2012 (UTC)

பார்க்க சி - ஆங்கில விக்கியில், அளவு, முன்னிலைப்படுத்தல் (highlighting), மற்றும் தனிப்படுத்தும் (differentiation) பெட்டி, என அனைத்தும் ஒருங்கிணைக்க வேண்டும். தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:38, 20 ஏப்ரல் 2012 (UTC)

சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்

தொகு

உலகத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் , ஏன், தமிழை விரும்புவருக்கும் , தமிழைக்கண்டு வியப்பவருக்கும், எல்லோருக்கும் , என் உளம் கனிந்த இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்…

இந்த நந்தன ஆண்டு மகிழ்ச்சியும் உற்சாகத்தையும் வெற்றியையும் கொடுக்கட்டும்.....

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.... -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 13, ஏப்ரல், 2012.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 02:33, 13 ஏப்ரல் 2012 (UTC)

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள.--karthim02

புத்தாண்டு வாழ்த்துகள்! --மதனாஹரன் (பேச்சு) 09:54, 13 ஏப்ரல் 2012 (UTC)

உலோகப் பிணைப்பு

தொகு

அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் முக்கிய கட்டுரைகளின் பட்டியலில் உலோகப் பிணைப்பு என்று உள்ளது. இலங்கையில் Metallic bond என்பதற்கு மின்வலுப் பிணைப்பு, அயன் பிணைப்பு ஆகிய சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். மின்வலுப் பிணைப்பு என்பதே பொருத்தமாகப் படுகிறது. ஆகவே, மின்வலுப் பிணைப்பு எனத் தலைப்பை மாற்றுமாறு கேட்டுக் கொள்கின்றேன். --மதனாஹரன் (பேச்சு) 13:07, 13 ஏப்ரல் 2012 (UTC)

இதன் தொடர்பான உரையாடலை பேச்சு:உலோகப் பிணைப்பு பக்கத்தில் தொடர வேண்டுகிறேன்.--மணியன் (பேச்சு) 15:27, 13 ஏப்ரல் 2012 (UTC)

கோரிக்கை:விருப்பத்தேர்வு கடிகாரம்

தொகு

விக்கிப்பீடியாவில் புகுபதிகை செய்தவுடன், வலப்பக்க மூலையிலுள்ள தேடல் பெட்டிக்கு மேலே கடிகாரம் எண்களாக, விடுபதிகை என்ற சொல்லுக்கு அடுத்து ஓடுகிறது. அத்தகைய கடிகாரம், விக்சனரியில் வருவதில்லை. அதனை அங்கும் கொண்டு வர, அது குறித்த தொழில் நுட்பம் அறிந்தவர்கள் உதவுங்கள்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

 Y ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 11:42, 14 ஏப்ரல் 2012 (UTC)
நீண்டநாள் தேவை நிறைவேறியது. நன்றி.சோ.பா.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

கோரிக்கை: பக்க மதிப்பீடுகள்

தொகு

ஆங்கில விக்கிப்பீடியாவிலுள்ள பக்க மதிப்பீடுகள் (Page Ratings) முறையைத் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அறிமுகப்படுத்தலாமே... இது கட்டுரையொன்றின் நம்பகத்தன்மையை வாசகர்களுக்குத் தெளிவுபடுத்த உதவுமே! --மதனாஹரன் (பேச்சு) 11:02, 15 ஏப்ரல் 2012 (UTC)

+1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:54, 16 ஏப்ரல் 2012 (UTC)
  விருப்பம்-- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 16, ஏப்ரல், 2012.
பக்க மதிப்பீடுகள், பக்க கருத்து தெரிவிக்கும் கருவி நீட்சி மூலம் ஆங்கில விக்கிப்பீடியாவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நீட்சியே ௫ முறை மாற்றி எழுதப்பட்டது. இது ஆ.விக்கியில் கூட இன்னும் சோதனைக் கட்டத்தில் தான் உள்ளது. இது ஒரு புறம் இருக்க, ஆ.விக்கியில் பல ஆயிரம் முறை பார்க்கப்படும் கட்டுரைகளில் கூட சில நூறு மதிப்பீடுகள் தான் உள்ளன. நம் விக்கியில் ஒரு பக்கம் சில நூறு பயனர்கள் மட்டுமே பார்வையிடுவார்கள், அதில் மதிப்பீடு செய்வோரின் எண்ணிக்கை சொர்பமாகத் தான் இருக்கும். ஆ.விக்கியில் அந்த கருவி மாற்றியமைக்கப்பட்ட பிறகு, சில மாதங்கள் கழித்து, நாம் இதனைப் பற்றி யோசிக்கலாம் எனபது என் கருத்து. ஸ்ரீகாந்த் (பேச்சு) 12:19, 16 ஏப்ரல் 2012 (UTC)   விருப்பம் --மதனாஹரன் (பேச்சு) 12:44, 16 ஏப்ரல் 2012 (UTC)

Updates & Ideas from and for Indic Communities

தொகு

Greetings all! I thought it would be useful to share the following updates from various Indic communities - which you might find interesting for the Tamil community.

  • Odia community had a great weekend between March 30 and April 2 - including 3 outreach sessions and 1 community meetup. They shared a great report that includes lessons, solutions and next steps on outreach & community collaboration - which are applicable across many communities.
  • India Program worked to several Indic communities on outreach, ideas for helping newbies, Wikiprojects as well as other technical support - and have prepared the following report for March. In April, the plan is to continue this support including Hindi editing at the Crafts Museum GLAM project as well as planning the 10th anniversaries of Nepali and Assamese.

Please reach out to Shiju or I for any support you need. (Our email IDs are shiju@wikimedia.org and noopur@wikimedia.org respectively.)

Please share your comments and ideas below on any of these updates. Noopur28 (பேச்சு) 05:09, 16 ஏப்ரல் 2012 (UTC)

பகுப்புகளில் தானியங்கி

தொகு

பல மொழி கட்டுரைகளின் இணைப்பை ஒரே கட்டுரையில் தானியங்கி இடுவது போல் பகுப்புகளில் ஏன் இடுவதில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:55, 16 ஏப்ரல் 2012 (UTC)

நான் முயன்ற வரையில் பகுப்புகளில் பன்மொழி சேர்த்தால், அப்பகுப்பை உபயோகிக்கும் அனைத்து பக்கங்களிலும், அதனுடைய தொடர்பும் வரும், இதனை எவ்வாறு சரி செய்வது? (As far as I know, You will get the link for all the category for all the pages. How to do that without the issue?) -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 16, ஏப்ரல், 2012.
தினேஷ்குமார், நீங்கள் குறிப்பிட்ட பிரச்சினைக்கு உதாரணம் ஒன்று தர முடியுமா?--Kanags \உரையாடுக 12:12, 16 ஏப்ரல் 2012 (UTC)

தினேஷ்குமார் குறிப்பிட்ட பிரச்சினை இருப்பதாக தெரியவில்லையே..! நான் சிலவற்றில் செய்து பார்த்தேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:37, 16 ஏப்ரல் 2012 (UTC)

அநேகமாக தினேஷ்குமார் கூறுவது வார்ப்புருவாக இருக்கும் என நினைக்கிறேன்... அதில்தான் <noinclude></noinclude> விற்கு வெளியே சேர்ப்பது கட்டுரையிலும் வரும் (அனுபவம்   )... பகுப்பில் நான் அறிந்தவரை அவ்வாறு வர வாய்ப்பில்லை --shanmugam (பேச்சு) 15:48, 16 ஏப்ரல் 2012 (UTC)...
w:en:Template:User Erode பக்கத்தினையும், வார்ப்புரு:பயனர் ஈரோடு பக்கத்தினையும், இணைக்க முயன்ற போது, இவ்வார்ப்புரு பயன்படுத்திய பயன்ர் பக்கங்களிலும், அதனுடைய தொடர்பு வந்தது, சன்முகம் சொன்னது போல இது, வார்ப்புரு காரணமாக வந்தது, பகுப்பில் அல்ல. -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 17, ஏப்ரல், 2012.
வார்ப்புருக்களில் வேறு மொழி இணைப்புகளை இடும் போது சண்முகம் குறிப்பிட்டது போல தவறாமல் <noinclude>[[en:Template:User Erode]]</noinclude> உள் இணைக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 05:10, 17 ஏப்ரல் 2012 (UTC)
விளக்கத்திற்கு நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 17, ஏப்ரல், 2012.

பகுப்புகளிலும் பன்மொழி விக்கியினைப்புகளை இடும் பழக்கம் உள்ளது. ஆனால் அதற்கான ஆரம்ப இணைப்பினை (from english wiki mostly) கட்டுரைகளில் செய்வதினைப் போல பகுப்பினை உருவாக்குபவர் அல்லது பிறர் இணைப்பதில்லை. இதனாலேயே பல பகுப்புகள் விக்கியிடை இணைப்புகளின்றி உள்ளன --அஸ்வின் (பேச்சு) 15:58, 16 ஏப்ரல் 2012 (UTC)

இக் கட்டுரைகளைத் தனியே அடையாளம் காண முடியுமா. அப்படிச் செய்தால் நாம் மெதுவாக ஆங்கில விக்கிக்கு இணைப்புக்களைச் சேர்த்து விடலாம். --Natkeeran (பேச்சு) 13:32, 18 ஏப்ரல் 2012 (UTC)

தாய் பகுப்புகளில் இருந்து இப்பணியை தொடங்கினால் நல்ல பலன் கிடைக்கும் எனத் தோன்றுகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:26, 18 ஏப்ரல் 2012 (UTC)

அனைத்துத் தமிழ் விக்கிதிட்டங்களிலும், அத்தகைய பகுப்பிடை விக்கியிணைப்புகளை பெரும்பாலும் செய்வதில்லை என்றே எண்ணுகிறேன். இங்கு என்னால் இயன்றவரை அத்தகைய விக்கியிடை இணைப்புகளை ஏற்படுத்தி வருகிறேன். இருப்பினும், தானியங்கி மூலம், இதனைச் செய்தல் நலம். விக்சனரியில் பெரும்பான்மையான பகுப்புகள் அப்படிதான் இருந்தன. அதனை ஒரு தமிழ் விக்சனரி அல்லாத ஒருவர் சுட்டிய பிறகு, அதனை நிறைவு செய்து இருக்கிறோம்.வணக்கம்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

தமிழ்க்கணினிப் பயிலரங்கில் விக்கிப்பீடியா அமர்வு

தொகு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையப் பணியாளர்களுக்கு, சென்னையில், ஏப்பிரல் 19, 20 மற்றும் 21, 2012 ஆகிய நாட்களில் தமிழ்க்கணினிப் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பெற்று நிகழ்ந்து வருகின்றது. இப்பயிலரங்கில் தமிழ் ஒருங்குகுறியின் பயன்பாடு, தமிழ்க்கணிமை, விக்கிப்பீடியா திட்டங்கள், புதுபுகுகை, தொகுத்தல் குறித்து ஒரு அமர்வு மூன்று நாள் நிகழ்வுகளிலும் நடைபெறும். ஏப்பிரல் 19 அன்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தலைவர் மாண்பமை ஆர். நடராஜ், இ. கா. ப. மேனாள் காவல் துறை இயக்குநர் அவர்கள் தொடங்கி வைத்து தலைமையுரை நிகழ்த்தினார், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையச் செயலாளர் திரு. தா. உதயச்சந்திரன், இ.ஆ.ப அவர்கள் சிறப்புரை வழங்கினார். இப்பயிலரங்கினை பெரியார் பல்கலைக்கழக இதழியல், மக்கள் தொடர்பியல் துறை பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி கருத்தாளராக நெறிப்படுத்தி வருகிறார்.

நிகழ்வு சிறக்க வாழ்த்துகள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:19, 20 ஏப்ரல் 2012 (UTC)
ஊடகப் போட்டிப் பங்கேற்பைத் தொடர்ந்து இத்தகைய பரப்புரை முயற்சிகளையும் மேற்கொள்வது பாராட்டுக்குரியது. நன்றி--இரவி (பேச்சு) 14:27, 22 ஏப்ரல் 2012 (UTC)

ஆங்கில பக்க முகவரி

தொகு

விக்கிப்பீடியா பேச்சு:வழிமாற்று பக்கத்தில் உரையாடலைத் தொடர வேண்டுகிறேன். இது வழிமாற்று தொடர்பான கொள்கைப் பக்கமாக விளங்கும் என்பதால் வருங்காலத்தில் பார்வையிடுவோருக்கு உதவும்.--இரவி (பேச்சு) 12:24, 22 ஏப்ரல் 2012 (UTC)

விக்கிப்பீடியாச் சின்னத்தை மாற்றுவதற்கான வேண்டுகோள்

தொகு
 
புதிய சின்னம்

தற்போதைய விக்கிப்பீடியாச் சின்னத்திலே விக்கிப்பீடியா என்பதும் கட்டற்ற கலைக்களஞ்சியம் என்பதும் தவறான எழுத்துருவில் எழுதப்பட்டுள்ளன. கி, சி, தி ஆகிய எழுத்துக்களுக்கு விசிறியானது முன்னிருந்தே தொடங்க வேண்டும். அதுவே சரியான வழக்கு. ஆயினும் ஒருங்குறியிலும் பல எழுத்துருக்களிலும் தவறாகவே இவ்வெழுத்துக்கள் எழுதப்படுகின்றன. என்றாலும் தொல்காப்பியம், வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம், தமிழ் விருந்து என அக்கால நூல்களிலும் இலங்கைத் தபால் அடையாள அட்டையிலும் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி போன்ற தற்கால நூல்களிலும் தினமணி, தினக்குரல், வீரகேசரி போன்ற தற்காலப் பத்திரிகைகளிலும் சரியான எழுத்துருக்களே பயன்படுத்தப்படுகின்றன. விக்கிப்பீடியாக் கட்டுரைகளில் எழுத்துரு ஆதரவுக்காக ஒருங்குறியைப் பயன்படுத்தினாலும் விக்கிப்பீடியாச் சின்னத்தில் அதனைத் தவிர்க்கலாம் தானே. வரலாற்று ஆவணமாகிய விக்கிப்பீடியா எதிர்காலச் சந்ததியினருக்குத் தவறான எழுத்துருவை முன்மாதிரியாகக் காட்டக்கூடாது என்பதற்காகப் புதிய சின்னத்தைக் கொண்டு வருவதற்கு அனைவரினதும் இணக்க முடிவினை வேண்டி நிற்கின்றேன். புதிய சின்னத்தின் மாதிரியுரு அருகே தரப்பட்டுள்ளது (முக்கிய குறிப்பு: ஒருங்குறியிலேயே சின்னமும் இருக்க வேண்டும் என்றும் நீங்கள் எண்ணலாம். ஆனாலும் ஓர் உண்மை என்னவென்றால் தற்போதுள்ள சின்னம் ஒருங்குறியில் இல்லை!!! வேறோர் எழுத்துருவிலேயே உள்ளது!!!). --மதனாஹரன் (பேச்சு) 12:46, 20 ஏப்ரல் 2012 (UTC)
  ஆதரவு

இரா♣முத்துசாமிஉரையாடுக 15:22, 23 ஏப்ரல் 2012 (UTC)


  எதிர்ப்பு

கருத்து

  • மதனாகரன் தரவேற்றியிருக்கும் படிமத்தில் எழுத்துகள் இன்னும் தெளிவாக வரலாம் என நினைக்கிறேன். அல்லது வேறு எழுத்துருக்களையும் பயன்படுத்திச் சோதிக்கலாம்.--Kanags \உரையாடுக 22:37, 20 ஏப்ரல் 2012 (UTC)
கனக்ஸ் குறிப்பிடுவது போல் படிமத்திலுள்ள எழுத்துகள் தடிமனாகவும் அழுத்தமாகவும் தெரிந்தால் நன்றாக இருக்கும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:22, 21 ஏப்ரல் 2012 (UTC)

தெளிவான, தடித்த எழுத்துருவில் அமைந்த படிமத்தை இன்று பதிவேற்றி விடுகிறேன். --மதனாஹரன் (பேச்சு) 01:55, 21 ஏப்ரல் 2012 (UTC)

முழுப் பக்கத்தையுமே இவ்வாறு சரியான எழுத்துருவில் பார்ப்பதற்கான வழிமுறையைப் பற்றியும் இன்று நாளை குறிப்பிடுகிறேன். ஆனாலும் எழுத்துருத் தெளிவின்மையைச் சீர்செய்ய வேண்டியுள்ளது. இன்று சீர்செய்து விட்டுக் குறிப்பிடுகிறேன். --மதனாஹரன் (பேச்சு) 02:40, 21 ஏப்ரல் 2012 (UTC)

கி வின் கொக்கி தொங்குவது போல் உள்ளது. இதை svg ஆக வடிவமைக்க முடிந்தால் சிறப்பாக இருக்கும். --Natkeeran (பேச்சு) 03:28, 21 ஏப்ரல் 2012 (UTC)
நக்கீரனின் கூற்றை ஆமோதிக்கிறேன். ஆரம்பத்திலேயே svg ஆக வடிவமைத்தால் எதிர்காலத்தில் உயர் செறிவான கோப்பு தேவைப்படும் இடங்களுக்கு உதவியாக இருக்கும். --Anton (பேச்சு) 13:13, 21 ஏப்ரல் 2012 (UTC)
இங்கு மாதிரிக்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் அடையாளச் சின்னம் 2010க்கு முன்னர் பாவிக்கப்பட்டது. எனவே தற்போது பாவனையில் இருக்கும் அடையாளச் சின்னத்தைப் பாவிப்பது சிறப்பு. ஆங்கில விக்கியில் எழுத்துரு வடிவம் பற்றிய கொள்கையுள்ளது. தமிழ் விக்கிக்கு உள்ளதா எனத் தெரியவில்லை(?). --Anton (பேச்சு) 13:40, 21 ஏப்ரல் 2012 (UTC)

உயர் தரத்தில் pngஆக வடிவமைத்துள்ளேன். கி எழுத்தின் கொக்கி தொங்குவது போல் இருந்ததைச் சரிசெய்து விட்டேன். தமிழ் முறையின்படி ற் எழுத்தில் ஒரு சிறிய வளைவு வர வேண்டும். ற் என்ற கட்டுரையிலுள்ள படத்தில் அது தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அவ்வாறான ஓரெழுத்துருவில் கட்டற்ற கலைக்களஞ்சியம் என்பதையும் எழுதிச் சீரமைத்துள்ளேன். --மதனாஹரன் (பேச்சு) 14:24, 21 ஏப்ரல் 2012 (UTC)

@Anton: இந்த அடையாளச் சின்னம் அப்போது பயன்படுத்தப்படவில்லை. அப்போதும் தவறான, தற்போதுள்ளது போன்ற அடையாளச் சின்னமே பயன்படுத்தப்பட்டது. இந்த இணைப்பில் நீங்கள் அதனைப் பார்த்துக் கொள்ளலாம். மேலும் எதிர்காலத்தில் வரலாற்று ஆவணமாக இருக்கப் போகும் (இன்றும் கூட) விக்கிப்பீடியாவில் தவறான எழுத்துருப் பயன்பாடு நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியதே! --மதனாஹரன் (பேச்சு) 14:25, 21 ஏப்ரல் 2012 (UTC)

இவ்வாறான எழுத்துருவைத் தரவிறக்கம் செய்த பின்பு, இன்டர்நெட்டு எக்சுப்புளோரர் பயனர்கள் இன்டர்நெட்டு எக்சுப்புளோரரில் Tools என்பதினுள் Internet Options என்பதிற்குச் சென்று Fonts என்பதை அழுத்த வேண்டும். Language script: என்பதில் Tamil என்பதைத் தெரிவு செய்து விட்டுச் சரியான எழுத்துருவைத் (எ-டு: TAU_ELANGO_ARUNTHATHI) தெரிவு செய்ய வேண்டும். எழுத்துரு அளவு போதாதிருந்தால் View என்பதில் Text size எனும் தெரிவில் Larger என்பதைத் தெரிவு செய்யவும். ஏனைய மேலோடிகளிலும் இது போன்ற வசதி இருக்கும். --மதனாகரன் (பேச்சு) 13:52, 23 ஏப்ரல் 2012 (UTC)

மதன், நுணுக்கமான விசயத்தைக் கவனித்துச் செயல்படுகிறீர்கள். பாராட்டுகள். .svg கோப்பாகவும் செய்து வைத்துக் கொள்வது உதவும். படிமத்தில் உள்ள எழுத்துரு எந்தக் குறிமுறையில் இருந்தாலும் சரி தான். இணையத்தில் பரவலாக உள்ள எழுத்துருக்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக ஒரு அறிக்கை எழுத இயலுமானால், எழுத்துரு உருவாக்குநர்களுக்கு அனுப்பி வைக்கலாம்--இரவி (பேச்சு) 14:27, 22 ஏப்ரல் 2012 (UTC)

svg கோப்பை எவ்வாறு உருவாக்குவது என்று தெரியவில்லை. உதவ முடியுமா? தாங்களே இக்கோப்பை svg ஆக மாற்றியிட்டால் நன்று. எழுத்துருக்களில் உள்ள சிக்கல்கள் குறித்து விரைவில் குறிப்பிடுகிறேன். --மதனாகரன் (பேச்சு) 13:52, 23 ஏப்ரல் 2012 (UTC)
svg கோப்புக்களை Inkscape போன்ற திசையன் வரைகலை மென்பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கலாம். எனினும் தற்போதுள்ள படத்தின் தெளிவு நன்றாக உள்ளது. கொக்கிகள் இன்னும் பிழையாகவே உள்ளன. கி, சி ஆகியவற்றின் கொக்கிகள் எழுத்தின் நடுப் பகுதியில் இருந்து தொடங்குவது இல்லை, இல்லையா. --Natkeeran (பேச்சு) 14:47, 23 ஏப்ரல் 2012 (UTC)

அப்படியானால், எங்கிருந்து தொடங்கும் என அறியத் தர முடியுமா? --மதனாகரன் (பேச்சு) 14:50, 23 ஏப்ரல் 2012 (UTC)

க வின் அல்லது சி னாவின் மேல் கோட்டின் இடதுபக்க தொடக்கப் புள்ளியில் தொடங்கும் என்று நான் கருதுகிறேன். பிற பயனர்களின் கருத்துக்களைக் கேட்டு உறுதி செய்யலாமே. --Natkeeran (பேச்சு) 15:13, 23 ஏப்ரல் 2012 (UTC)

இல்லை... இவ்வெழுத்துருவில் உள்ளபடியே தொடங்கும். இந்த இணைப்பில் மேலே உள்ள >>ஐச் சொடுக்கிச் செய்தித்தாளில் பாருங்கள். தினக்குரற்செய்தித்தாளிலும் பார்த்து உறுதிப்படுத்தினேன். நீலாம்பிகையம்மையாரின் இந்த நூலிலும் பாருங்கள். பழைய நூல்களிலும் இவ்வாறே உள்ளது. --மதனாகரன் (பேச்சு) 15:26, 23 ஏப்ரல் 2012 (UTC)

கி, சி, தி ஆகிய எழுத்துகளுக்கு "கொக்கி" ("விசிறி") வைப்பது எப்படி?

தொகு

பயனர் மதனாகரன் தொடங்கிய உரையாடல் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதை ஒரு முடிவுக்குக் கொண்டுவருதல் நலம் என்று நினைக்கிறேன். வெவ்வேறு காலங்களில் வெளியான மூன்று நூல்களைக் கவனமாக ஆய்வுசெய்ததில் நான் பெற்ற முடிவு இது: விசிறியை க,ச,த ஆகிய எழுத்துகளின் மேல் வலது ஓரத்திலிருந்து இட்டாலும் சரி, இடது புறம் நடுவிலிருந்து இழுத்து அரை நிலவு போல இட்டாலும் சரி, இரு முறைகளும் ஏற்புடையவையே. இவற்றுள் ஒன்று மற்றதைவிட சிறந்தது என்று வாதாட இடமில்லை.

நான் ஆய்ந்த நூல்கள் இவை: 1) நல்லூர், சுவாமி ஞானப்பிரகாசர், தமிழ் அமைப்புற்ற வரலாறு: சொற்களின் உண்மைப் பிறப்பை விளக்கும் புதியநூல் (சுன்னாகம், இலங்கை, 1927).

2) டாக்டர் மு. வரதராசனார், திருக்குறள் தெளிவுரை', முதல் பதிப்பு, 1912; பார்வையிட்டது 176ஆவது பதிப்பு (சென்னை, 2004).

3) க்ரியவின் தற்காலத் தமிழ் அகராதி, விரிவாக்கித் திருத்திய பதிப்பு (க்ரியா, சென்னை, 2008).

முதல் நூலில் அதிகாரங்களின் தலைப்புகளும் பாட உரையமைப்பும் இடது புற விசிறி முறையில் உள்ளன. ஆனால், துணைத் தலைப்புகளும், தடித்த எழுத்துகளும் (bold) வலது புற விசிறி முறையில் உள்ளன.

இரண்டாம் நூலின் பொருளடக்கத்தில் இடது புற விசிறி முறை உள்ளது. ஆனால் நூலின். உள்ளே திருக்குறள் பக்கங்களிலும் அவற்றிற்கான உரைப் பக்கங்களிலும் வலது புற விசிறி முறை உள்ளது.

மூன்றாம் நூலின் முகப்பிலும் முதுகுத் தண்டிலும் கொட்டை எழுத்தில் வலது புற விசிறி முறை உள்ளது. நூலின் உள்ளே பெரும்பாலும் இடது புற விசிறி முறை உள்ளது.

முடிவு: மதனாகரன் விக்கிப்பீடியாவின் சின்னத்தின் எழுத்து அமைப்பைத் திருத்தி இடது புற விசிறி போடுவதில் எனக்கு உடன்பாடே. ஆனால், அது பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக எனக்கு சரியெனப் படுகிறது. இடது புற விசிறியும் வலது புற விசிறியும் பல்லாண்டுகளாகத் தமிழ் அச்சுக் கலையில் இருந்துவந்துள்ளன என்பதே உண்மை. மதனாகரனுக்கு பாராட்டுகள்!--பவுல்-Paul (பேச்சு) 17:23, 23 ஏப்ரல் 2012 (UTC)

எழுதும்போது தி, கி, சி முதலியவற்றுக்கு இடது புறத்திலேயே இன்றும் விசிறி போடுகின்றோம் (பெரும்பாலானவர்கள்). பண்டைய கால அச்சு எழுத்துருக்கள் அனைத்திலும் இடது புறத்திலேயே இவற்றுக்கு விசிறி இடப்பட்டன. தமிழில் மூன்று வகையான விசிறிகள் இருந்து வந்திருக்கின்றன (அவை மூன்றுக்கும் எடுத்துக்காட்டுகள்: கி, பி, டி). ஆயினும் ஆங்கிலக் கணினி விசைப்பலகையில் இடமின்மையாலேயே டி தவிர்ந்த அனைத்து விசிறிகளும் வலது புறத்தில் இடம்பெறச் செய்யப்பட்டன. தற்காலத்தில் ஒருங்குறி வசதி உள்ளதால் பழைய முறைக்கே மாற வேண்டுமென்பதே எனது கருத்து. --மதனாகரன் (பேச்சு) 10:35, 24 ஏப்ரல் 2012 (UTC)
எழுத்துருக்களில் விசிறி அமைப்பு பற்றி மதனாகரன் காட்டிய அக்கறைக்கும் கருத்துக்களுக்கும் பாராட்டுகள். நான் அறிந்தவரை தீர்க்கமாக இவைபற்றிய விதிகளை காணமுடியவில்லை. ஆயினும் இவைபற்றிய வேறுபட்ட முறைகள் நடைமுறையில் இருப்பதால் இதை காட்டுகின்ற கட்டுரைப் பதிவு ஒன்றை உருவாக்கலாம் அல்லது எழுத்துரு பற்றி உள்ள கட்டுரையில் இதை உள்ளடக்கலாம். பண்டைய எழுத்துருவில் இருந்து இது எவ்வாறு மாறுபடுகின்றது என்பதையும் படிவாக்கலாம். இதே போலவே பூ, சூ என்பவற்றில் இறுதியில் சுழி போட வேண்டுமா இல்லையா என்பதிலும் விவாதமுள்ளது. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:54, 24 ஏப்ரல் 2012 (UTC)

எழுத்துகளில் எவ்வாறு விசிறி போட வேண்டுமென ஒரு நூலில் வாசித்தேன். எந்த நூலிலென நினைவுக்கு வரவில்லை. --மதனாகரன் (பேச்சு) 11:02, 24 ஏப்ரல் 2012 (UTC)

எனக்கு இது பற்றிய விளக்கம் மட்டுப்படுத்தப்பட்டதே. இடது பக்கத்தில் இருந்து விசிறி என்றதைத் சற்று தெளிவுபடுத்த வேண்டுகிறேன். மேல் கோட்டின் இடது பக்க தொடக்கப் புள்ளியில் இருந்தா?--Natkeeran (பேச்சு) 13:02, 24 ஏப்ரல் 2012 (UTC)

அவ்வாறும் வைப்பதுண்டு. பெரும்பாலும் மேலேயுள்ள படத்திலுள்ளது போன்றே வைப்பதுண்டு. --மதனாகரன் (பேச்சு) 07:36, 25 ஏப்ரல் 2012 (UTC)

மதன், மிக நுணுக்கமாகப் பார்க்கின்றீர்கள், பாராட்டுகள். சரி என்று நீங்கள் நினைப்பதை மாற்ற வேண்டும் என்று முனைவதையும் பாராட்டுகின்றேன். ஆனால் நீங்கள் கூறும் "தவறான எழுத்துருவில் எழுதப்பட்டுள்ளன. கி, சி, தி ஆகிய எழுத்துக்களுக்கு விசிறியானது முன்னிருந்தே தொடங்க வேண்டும். அதுவே சரியான வழக்கு." என்று நீங்கள் கூறுவதற்கு என்ன அடிக்கோள்/அடிச்சான்று என்று விளங்கவில்லை. விசிறியானது புள்ளி நீக்கிய மெய்யெழுத்தோடு ஒட்டி, பெரும்பாலும் மேல் கிடைக்கோட்டுடன் ஒட்டி எழுதுவது வழக்கம். துல்லியமாய் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளோ, அல்லது தொடர்ந்த வரலாறோ இருப்பதாக அறியேன். நீங்கள் தந்த புதிய சின்னம் அழகாகவே இருப்பதாக நான் கருதுகின்றேன், ஆனால் கட்டாயம் மாற்ற வேண்டுமா என்றால் தேவை இல்லை என்றே நினைக்கின்றேன். --செல்வா (பேச்சு) 14:17, 28 ஏப்ரல் 2012 (UTC)

பழைய கால நூல்களையே ஆதாரமாகக் கூற முடியும். விசிறி இடும் முறை பற்றியும் ஏதோ ஒரு நூலில் படித்த நினைவு. எந்த நூல் என நினைவுக்கு வரவில்லை. --மதனாகரன் (பேச்சு) 09:29, 30 ஏப்ரல் 2012 (UTC)

கொக்கி(விசிறி)

தொகு

தமிழ் எழுத்துக்கள் எதன் மீது எழுதப்படுகிறதோ, அதற்கு ஏற்றவாறு அதன் தோற்றம் மாறியே வந்திருக்கிறது.ஓலை,கல், ஓவியம், அச்சு, தற்பொழுது கணினி. மதனாகரன் சொல்வது, இக்கணினி காலத்தில் தோன்றிய வடிவியல் மாற்றம்.அது அழகியல் மாற்றமே ஆகும்.அரிச்சுவடியைக் கற்றுத்தரும் தமிழகக்கல்விக்கூடங்களில், இம்முறை பின்பற்றப் படுவதில்லை. இவ்வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னே இருந்த முறையே, இன்றளவும் கோடிக்கணக்கானவர் கற்றனர்.கற்பிக்கப்படுகின்றனர். எதிர்காலத்தில் மாறுவதற்கான அறிகுறி தெரியவில்லை.வணக்கம்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன். ஆனால் பழைய எழுத்துமுறையையும் கணினியில் பாதுகாக்கலாம். எப்படி, இவ்வெழுத்துக்கள் எழுதும் முறை மாறினாலும், அதை எழுதுவது எப்படி என சொல்லும் நூல் இருப்பது போல, கணினியிலும் சில எழுத்துருக்களில் இவை பாதுகாத்து வைக்கப் படலாம். அண்மையில் லொஹித் தமிழில் பண்டை எழுத்துரு ஒன்றை உருவாக்கும் முயற்சி தொடங்கப்பட்டது. (Lohit-Tamil Classic font). அதில் பாரம்பரிய எழுத்தொழுங்கு(Traditional orthography) முறையில் யானை தும்பிக்கை மூலம் னை ணை எழுதும்படி எழுத்துரு மாற்றம் செய்யப்பட்டது. இது விரைவில் வெளிவரும். மதனஹரனின் இந்தப் பரிந்துரையை அந்த எழுத்துரு உருவாக்குபவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். விக்கிப்பீடியா:இணைய எழுத்துரு மூலம் விக்கிமூலம் தளத்தில் பழைய எழுத்துருக்களை தேர்ந்தெடுக்கும் வசதியை ஏற்கணமே பிற மொழி திட்டங்களில் பயன்படுத்துகிறார்கள். தமிழ் விக்கித்திட்டங்களுக்கு இணைய எழுத்துரு வரும் பொழுது அத்தகைய வசதி நம் விக்கிமூலத்திற்கும் கிடைக்கும். இதனை கண்டறிந்த மதனஹரனுக்கு பாராட்டுக்ள். நன்றி ஸ்ரீகாந்த் (பேச்சு) 11:57, 24 ஏப்ரல் 2012 (UTC)

தற்போது சின்னத்தை மாற்றுவது தொடர்பான இறுதி முடிவை எடுப்பதில் உதவி புரியுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 13:34, 24 ஏப்ரல் 2012 (UTC)

ஹைபீம் ஆவணக்காப்பகம் கணக்கு

தொகு

இதழ்கள், செய்தித்தாள்கள், ஆய்விதழ்கள் ஆகியவற்றின் ஆவணக் காப்பகமாகச் செயல்படும் ஹைபீம் நிறுவனம் விக்கிப்பீடியர்களுக்காக 1000 கணக்குகளை (ஓராண்டு சந்தா) இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. இது அனைத்து மொழி விக்கிப்பீடியர்களுக்கும் பொருந்தும். இதற்கு தகுதி பெற கணக்கு தொடங்கி ஓராணடாகியிருக்க வேண்டும், குறைந்த பட்சம் 1000 தொகுப்புகள் செய்திருக்கவேண்டும். இதற்காக ஆங்கில விக்கியில் விண்ணப்பிக்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 13:41, 21 ஏப்ரல் 2012 (UTC)

ஐபீம் திட்டத்துக்கான பக்கம் தமிழ் விக்கிப்பீடியாவில் இங்கே உருவாக்கப்பட்டுள்ளது. ஐபீம் பற்றிய சிறு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. --மதனாஹரன் (பேச்சு) 15:52, 21 ஏப்ரல் 2012 (UTC)