அ. செ. இப்ராகிம் இராவுத்தர்

அ. செ. இப்ராகிம் இராவுத்தர் (A. S. Ibrahim Rowther) மதுரையைச் சேர்ந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். கேப்டன் பிரபாகரன், புலன்விசாரணை , உழவன் மகன், தாலாட்டுப் பாடவா உட்பட 28 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.[1] நடிகர் விஜயகாந்த்தின் திரை அறிமுகத்திற்கு முதன்மை காரணமாக இருந்தார். நெருங்கிய நண்பர்களாக இருவரும் திகழ்ந்தனர். பல புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தியதற்காகவும் ஊக்குவித்ததற்காகவும் அறியப்படுகின்றார்.

தமது 63ஆவது அகவையில் உடல்நலக்கேடால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இராவுத்தர் சூலை 22, 2015 அன்று மரணமடைந்தார்.[1][2]

மேற்சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 "பிரபல தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் மரணம்". நக்கீரன் (22 சூலை 2015). பார்த்த நாள் 22 சூலை 2015.
  2. "Tamil film producer Ibrahim Rowther dead". இந்தியன் எக்சுபிரசு (22 சூலை 2015). பார்த்த நாள் 22 சூலை 2015.