சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(சிந்து வெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள், 2019 ஆண்டு முடிய 1,500 சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் பாகிஸ்தானில் 475 மற்றும் இந்தியாவில் 925 தொல்லியல் களங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [1] [2]மேலும் ஆப்கானிஸ்தானில் இரண்டு வணிகக் குடியிருப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[3]

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானித்தான் நாடுகளில் உள்ள சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள்

சிந்துவெளி நாகரிகத்தின் எல்லைகள் தொகு

சிந்துவெளி நாகரிகத்தின் தெற்கு எல்லையாக தற்கால மகாராட்டிரா மாநிலத்தின் தைமாபாத் தொல்லியல் களமும், வடக்கு எல்லையாக ஆப்கானித்தான் நாட்டின் சார்டுகாய் தொல்லியல் களமும், மேற்கு எல்லையாக பாகிஸ்தானின் சுத்கஜன் தோர் தொல்லியல் களமும், கிழக்கு எல்லையாக உத்தரப் பிரதேசத்தின் ஆலம்கீர்பூர் தொல்லியல் களமும் விளங்குகிறது.

சிந்துவெளி தொல்லியல் களங்கள் தொகு

அரப்பா, மொகெஞ்சதாரோ, மெஹெர்கர், கோட் திஜி, தோலாவிரா, இராக்கிகர்கி, லோத்தல், காளிபங்கான் முதலியன சிந்துவெளி நாகரிகத்தின் முக்கியத் தொல்லியல் களங்கள் ஆகும். சிந்துவெளி நாகரிகத்தின் சில முக்கிய தொல்லியல் களங்களின் பட்டியல்:

தொல்லியல் களம் மாவட்டம் மாநிலம் / மாகாணம் நாடு படிமம் அகழ்வாய்வுகள் / கண்டுபிடிப்புகள்
ஆலம்கீர்புர் மீரட் மாவட்டம் உத்தரப் பிரதேசம் இந்தியா தொட்டியில் துணியின் பதிப்பு
அல்லாடினோ கராச்சி சிந்து பாக்கிஸ்தான்
அம்ரி தாது மாவட்டம் சிந்து பாக்கிஸ்தான் காண்டாமிருகத்தின் சிதிலங்கள்
பாபர் கொட் பவநகர் மாவட்டம் குஜராத் இந்தியா கற்கோட்டைச் சுவர்[4]செடிகளின் தானியங்கள் & சிறுதானியங்கள்[4][5]
பலு, அரியானா கைத்தல் மாவட்டம் அரியானா இந்தியா வெள்ளைப்பூண்டு[6] வாற்கோதுமை, கோதுமை, அரிசி, பச்சை தானியங்கள், கொள்ளு, திராட்சை, பேரீச்சம் போன்ற பல செடிகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. (சரசுவாத் & பொகாரியா, 2001-2)[4]
பனாவலி பத்தேஹாபாத் மாவட்டம் அரியானா இந்தியா பார்லி, தொட்டி வடிவ சுடுமண் சிற்பம்
பர்கோன் [7] சகாரன்பூர் மாவட்டம் உத்தரப் பிரதேசம் இந்தியா
பரோர் ஸ்ரீ கங்காநகர் மாவட்டம் இராஜஸ்தான் இந்தியா மனித எலும்புக்கூடு, நகையணிகள், 5 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலமுடைய களிமண் அடுப்பு, 8,000 முத்துக்கள் நிரம்பிய ஒரு குடுவை [8]
பேட் துவாரகை தேவபூமி துவாரகை குஜராத் இந்தியா பிந்தைய அரப்பா காலத்திய முத்திரை, எழுத்துக்களுடன் கூடிய நீர்க்குடுவை, தாமிர அச்சு, தாமிர மீன்பிடி கொக்கி[9][10]
பகவத்ரவ் பரூச் மாவட்டம் குஜராத் இந்தியா
பீர்த்தனா பத்தேஹாபாத் மாவட்டம் அரியானா இந்தியா பானை மீது நடனமாடும் பெண்ணின் படம்
சன்குதரோ நவாப்ஷா மாவட்டம் சிந்து பாக்கிஸ்தான்   மணிகள் தயாரிக்கும் ஆலை[11] அடிப்படை இடம் இல்லாத சிந்து தளம்
தைமாபாத் அகமது நகர் மாவட்டம் மகாராட்டிரம் இந்தியா   பிந்தைய அரப்பா பண்பாட்டு காலத்திய, இரு எருதுகள் இழுக்க, ஒரு மனிதன் ஓட்டும் சிற்பம், 45 செமீ நீளம், 16 செமீ அகலம் கொண்ட வெண்கலத் தேர் சிற்பம் மற்றும் 3 பிற வெண்கலச் சிற்பங்கள்[12]
தேசல்பூர் கட்ச் மாவட்டம் குஜராத் இந்தியா உயரமான கற்கோட்டை, அரப்பா காலத்து மட்பாண்டங்கள், எழுத்துக்களுடன் கூடிய இரண்டு முத்திரைகள், ஒன்று செப்பிலானது, மற்றொன்று சோப்புக் கல்லால் ஆனது. சுடுமண் முத்திரைகளில் எழுதப்பட்ட எழுத்துக்கள்[13]
தோலாவிரா கட்ச் மாவட்டம் குஜராத் இந்தியா   நிர்வாண மனிதன் ஓட்டும், இரண்டு எருதுகள் பூட்டிய தேரின் சிற்பம், நீர்த்தேக்கங்கள், கட்டுமானத்திற்கான பாறைக் கற்கள்
பர்மானா ரோத்தக் மாவட்டம் அரியானா இந்தியா 65 நபர்களை புதைத்த பெரும் கல்லறை
கானேரிவாலா பகவல்பூர் மாவட்டம் பஞ்சாப் பாக்கிஸ்தான் அரப்பா மற்றும் மொகெஞ்சதாரோவிற்கு சமகாலத்தியது.

காகர் நதியின் வறண்ட படுகையில் உள்ளது.

கோலா தோரோ கட்ச் மாவட்டம் குஜராத் இந்தியா சங்கு வளையல்கள் மற்றும் அழகிய மணிகள் தயாரிப்புத் தொழில்
அரப்பா சக்வால் மாவட்டம் பஞ்சாப் பாக்கிஸ்தான்   தானியக் களஞ்சியங்கள், கல்லறைப் பெட்டிகள், தொல்பொருட்கள், முதலில் கண்டுபிடிக்கப்பட்டு, அகழ்வாய்வு செய்யப்பட்ட சிந்துவெளி நாகரிகத்தின் முக்கிய நகரம்
பிரோஸ் ஷா அரண்மனை வளாகம், ஹிசார் ஹிசார் மாவட்டம் அரியானா இந்தியா   அகழ்வாய்வு செய்யாத களம்
உல்லாஸ் சகாரன்பூர் மாவட்டம் உத்தரப் பிரதேசம் இந்தியா
ஜுனி குரான் கட்ச் மாவட்டம் குஜராத் இந்தியா கோட்டையுடன் கூடிய அரண்மனை, நகரம், பொதுமக்கள் கூடுமிடம்[14]
ஜாக்நக்கேரா குருச்சேத்திரம் அரியானா இந்தியா செப்பை உருக்கும் பானைகள், செப்பு துகள் மற்றும் கசடுகள்[15]
கஜ் கிர் சோம்நாத் மாவட்டம் குஜராத் இந்தியா கிண்ணங்கள் உள்ளிட்ட பீங்கான் கலைபொருட்கள், பண்டைய துறைமுகம்.[16][17]
கஞ்செத்தர் கிர் சோம்நாத் மாவட்டம் குஜராத் இந்தியா அரப்பா காலத்து தொல்லியல் களம்.[16][17]
காளிபங்கான் அனுமான்காட் மாவட்டம் இராஜஸ்தான் இந்தியா சுட்ட களிமண் வளையல்கள், தீக்குண்டங்கள், சிவலிங்கம், ஒட்டக எலும்புகள், மட்பாண்டங்கள், பெரிய வட்டங்களைக் கொண்ட சிறிய வட்ட குழிகள் மற்றும் மட்பாண்டங்கள்
கரண்புரா அனுமான்காட் மாவட்டம் இராஜஸ்தான் இந்தியா   குழந்தையின் எலும்புக்கூடு, அரப்பா தொல்லியல் களத்தில் கிடைத்தது போன்ற சுடுமண் பாண்டங்கள், வளையல்கள், முத்திரைகள், [18]
கிராசரா கட்ச் மாவட்டம் குஜராத் இந்தியா   சிந்துவெளி எழுத்துகள், தங்கம், செப்பு, மணிகள், சங்கு அணிகள் மற்றும் எடைக்கற்கள்
பத்திரி சௌராட்டிர தீபகற்பம் குஜராத் இந்தியா உப்பளத் தொழில்[19]
கோட் பாலா லஸ்பேலா மாவட்டம் பலூசிஸ்தான் பாக்கிஸ்தான் துவக்கால உலைகள், துறைமுகம்
கோட் திஜி கைப்பூர் மாவட்டம் சிந்து பாக்கிஸ்தான்
குனால் பத்தேஹாபாத் மாவட்டம் அரியானா இந்தியா துவக்க கால அரப்பா தொல்லியல் களம், செப்பு உருக்குதல்[20]
குண்டசி மோர்பி மாவட்டம் குஜராத் இந்தியா சிறு துறைமுகம்
லெக்கூஞ்சதாரோ சுக்கூர் மாவட்டம் சிந்து பாக்கிஸ்தான் 40 ஹெக்டேர் பரப்புக்கு மேற்பட்ட பெரிய தொல்லியல் களம்
லர்கானா லர்கானா மாவட்டம் சிந்து பாக்கிஸ்தான்
லோத்தேஸ்வர் பதான் மாவட்டம் குஜராத் இந்தியா பண்டைய தொல்லியல் களம்[21]
லோத்தல் அகமதாபாத் மாவட்டம் குஜராத் இந்தியா   மணிகள் தயாரிப்பு தொழிற்ச்சாலை, துறைமுக கிட்டங்கி, பித்தான் அளவான முத்திரைகள், தீக்குண்டங்கள், ஓவியம் தீட்டப்பட்ட குடுவைகள்,
மன்டா ஜம்மு மாவட்டம் ஜம்மு காஷ்மீர் இந்தியா இமயமலை அடிவாரத்தில் அமைந்த அரப்பா காலத்து தொல்லியல் களம்[22]
மால்வான் சூரத் மாவட்டம் குஜராத் இந்தியா அரப்பா தொல்லியல் களத்திற்கு தென்கோடியில் உள்ள தொல்லியல் களம்[23]
மண்டி முசாபர்நகர் மாவட்டம் உத்தரப் பிரதேசம் இந்தியா
மெஹெர்கர் கச்சி மாவட்டம் பலூசிஸ்தான் பாக்கிஸ்தான்   துவக்க வேளாண் குடிகள்
மிட்டதால் பிவானி மாவட்டம் அரியானா இந்தியா
மொகெஞ்சதாரோ லர்கானா மாவட்டம் சிந்து பாக்கிஸ்தான்   பெரும் பொதுக் குளியல் தொட்டி, பெரும் தானியக் களஞ்சியம், வெண்கலத்தினாலான நடனமாடும் பெண் சிற்பம், மீசைக்கார மனிதன், சுடுமண் பொம்மைகள், எருது முத்திரை, பசுபதி முத்திரை, மெசொப்பொத்தேமியா மாதிரியான மூன்று உருளை வடிவ முத்திரைகள், கம்பிளி ஆடையின் துண்டு
முண்டிகாக் காந்தாரம் கந்தகார் மாகாணம் ஆப்கானித்தான்
நவினா கட்ச் மாவட்டம் குஜராத் இந்தியா [24]
நௌசரோ கச்சி மாவட்டம் பலூசிஸ்தான் பாக்கிஸ்தான்
ஓங்கார் ஐதராபாத் சிந்து பாக்கிஸ்தான்
பபுமத் கட்ச் மாவட்டம் குஜராத் இந்தியா ஒரு பெரிய கட்டிட வளாகம், யூனிகார்ன் முத்திரை, ஓட்டு வளையல்கள், மணிகள், செப்பு வளையல்கள், ஊசிகள், ஆன்டிமோனி தண்டுகள், ஸ்டீடைட் மைக்ரோ மணிகள்; மட்பாண்டங்களில் பெரிய மற்றும் நடுத்தர அளவிலான குடுவைகள், குவளை, உணவுகள், தட்டுகள்-தட்டு தாங்கிகள், துளையிடப்பட்ட குடுவைகள். கருப்பு வர்ணம் பூசப்பட்ட வடிவமைப்புகள் போன்ற நல்ல சிவப்பு மட்பாண்டங்கள்.[25]
பீர் ஷா ஜுரி கராச்சி சிந்து பாக்கிஸ்தான்
பீராக் சிபி பலூசிஸ்தான் பாக்கிஸ்தான்
இராக்கிகர்கி ஹிசார் மாவட்டம் அரியானா இந்தியா   பெரும் தொல்லியல் களம், மனித எலும்புக்கூடு, சுடுமண் சக்கரங்கள், பொம்மைகள், மட்பாண்டங்கள்
ரங்க்பூர் அகமதாபாத் மாவட்டம் குஜராத் இந்தியா பண்டைய துறைமுகம்
ரேமான் தேரி தேரா இஸ்மாயில் கான் மாவட்டம் கைபர் பக்துன்வா மாகாணம் பாக்கிஸ்தான்
ரோஜ்டி ராஜ்கோட் மாவட்டம் குஜராத் இந்தியா
ரூப்நகர் ரூப்நகர் மாவட்டம் பஞ்சாப் இந்தியா   சிந்துவெளி நாகரிகக் கட்டிடம்
சினௌலி[26] பாகுபத் மாவட்டம் உத்தரப் பிரதேசம் இந்தியா 125 கல்லறைகளின் களம் கண்டறியப்பட்டது.
செரி கான் தரக்கை பன்னு மாவட்டம் கைபர் பக்துன்வா மாகாணம் பாக்கிஸ்தான் மட்பாண்டங்கள்ள், கற்களால் ஆன கலைப்பொருட்கள்
சிக்கார்பூர்[27] கட்ச் மாவட்டம் குஜராத் இந்தியா அரப்பாவின் உணவுப் பழக்கவழக்கங்கள்
சார்டுகாய் தார்காட் மாவட்டம் தகார் மாகாணம் ஆப்கானித்தான்
சிஸ்வால் ஹிசார் மாவட்டம் அரியானா இந்தியா
சோக்தா கோ மக்ரான் பலூசிஸ்தான் பாக்கிஸ்தான் மட்பாண்டங்கள்
சோத்தி பாகுபத் மாவட்டம் உத்தரப் பிரதேசம் இந்தியா
சூர்கோட்டதா கட்ச் மாவட்டம் குஜராத் இந்தியா குதிரையின் எலும்புகள் கிடைத்த ஒரே தொல்லியல் களம்
சுத்ககான் தோர் மக்ரான் பலூசிஸ்தான் பாக்கிஸ்தான் களிமண்னாலான வளையல்கள்[28]
வெஜல்கா போடாட் மாவட்டம் குஜராத் இந்தியா மட்பாண்டம்
கோட்டடா பத்லி கட்ச் மாவட்டம் குஜராத் இந்தியா புதிய கோட்டை வீடுகளுக்கான அடித்தளங்கள் [29]
அக்லதினோ கராச்சி சிந்து பாக்கிஸ்தான் தரை தளத்தில் பதிக்கும் ஓடுகள்[30]
நாகேஷ்வர் கட்ச் மாவட்டம் குஜராத் இந்தியா சங்கு வேலைப்பாடுகள் கொண்ட அணிகலன்கள் தயாரிப்பு ஆலைகள் [31]
பதானி தாம்பு மக்ரான் பலூசிஸ்தான் பாக்கிஸ்தான் 100 ஹெக்டேர் பரப்பிலான தொல்லியல் களம் [32]
சாபுவாலா சோலிஸ்தான் பாலைவனம் பஞ்சாப் பாக்கிஸ்தான் 9.6 ஹெக்டேர் பரப்பிலான அகழ்வாய்வு செய்யப்படாத தொல்லியல் களம்[33]
சுத்கஜன் தோர் மக்ரான் பலூசிஸ்தான் பாக்கிஸ்தான்

மேற்கோள்கள் தொகு

  1. McIntosh 2008, ப. 39.
  2. Singh, Upinder (2008). A History of Ancient and Early medieval India : from the Stone Age to the 12th century. New Delhi: Pearson Education. பக். 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131711200. https://books.google.com/books?id=H3lUIIYxWkEC&dq=Upinder+Singh&q=malvan#v=snippet&q=malvan&f=false. 
  3. Francfort: Fouilles de Shortughai, pl. 75, no. 7
  4. 4.0 4.1 4.2 Singh, Upinder (2008). A History of Ancient and Early Medieval India : from the Stone Age to the 12th century. New Delhi: Pearson Education. பக். 222. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131711200. https://books.google.com/?id=H3lUIIYxWkEC&pg=PA222&dq=babar+kot#v=onepage&q=babar%20kot&f=false. 
  5. Agnihotri, V.K.(Ed.) (1981). Indian History. Mumbai: Allied Publishers. பக். A–82. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788184245684. https://books.google.com/?id=MazdaWXQFuQC&pg=SL1-PA82&dq=babar+kot#v=onepage&q=babar%20kot&f=false. 
  6. Singh, Upinder (2008). A History of Ancient and Early Medieval India : from the Stone Age to the 12th century. New Delhi: Pearson Education. பக். 137, 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131711200. https://books.google.com/?id=H3lUIIYxWkEC&printsec=frontcover&dq=upinder+singh#v=onepage&q=Balu&f=false. 
  7. Archaeological Survey of India Publication:Indian Archaeology 1963-64 A Review [1]
  8. "Baror near Ramsinghpur". Rajasthan patrika newspaper. 19 June 2006. 
  9. Rao, S. R.; Gaur, A. S. (July 1992). "Excavations at Bet Dwarka". Marine Archaeology (Marine Archaeological Centre, Goa) 3: 42–. http://drs.nio.org/drs/bitstream/2264/3085/2/J_Mar_Archaeol_3_42.pdf?origin=publication_detail. பார்த்த நாள்: 1 January 2015. 
  10. Gaur, A. S. (25 February 2004). "A unique Late Bronze Age copper fish-hook from Bet Dwarka Island, Gujarat, west coast of India: Evidence on the advance fishing technology in ancient India". Current Science (IISc) 86 (4): 512–514. http://www.iisc.ernet.in/currsci/feb252004/512.pdf. பார்த்த நாள்: 1 January 2015. 
  11. "Indus Valley Civilization". Archived from the original on 20 சூன் 2012.
  12. [2]
  13. Ghosh, A., தொகுப்பாசிரியர் (1967). "Explorations and excavations: Gujarat: 19. Excavation at Desalpur (Gunthli), District Kutch". Indian Archaeology 1963-64, A Review. Indian Archaeology (1963–64): 10–12. http://www.asi.nic.in/nmma_reviews/Indian%20Archaeology%201963-64%20A%20Review.pdf. பார்த்த நாள்: 19 July 2012. 
  14. https://www.researchgate.net/publication/263580655_Was_the_Rann_of_Kachchh_navigable_during_the_Harappan_times_Mid-Holocene_An_archaeological_perspective
  15. Sabharwal, Vijay (2010-07-11). "Indus Valley site ravaged by floods". The Times Of India இம் மூலத்தில் இருந்து 2011-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811093449/http://articles.timesofindia.indiatimes.com/2010-07-11/india/28284466_1_furnaces-site-floods. 
  16. 16.0 16.1 Farooqui, Anjum; Gaur, A.S.; Prasad, Vandana (2013). "Climate, vegetation and ecology during Harappan period: excavations at Kanjetar and Kaj, mid-Saurashtra coast, Gujarat". Journal of Archaeological Science (Elsevier BV) 40 (6): 2631–2647. doi:10.1016/j.jas.2013.02.005. பன்னாட்டுத் தர தொடர் எண்:0305-4403. 
  17. 17.0 17.1 Gaur, A.S.; Sundaresh; Abhayan, G.S.; Joglekar, P.P. "Excavations at Kanjetar and Kaj on the Saurashtra Coast, Gujarat". AGRIS: International Information System for the Agricultural Science and Technology. பார்க்கப்பட்ட நாள் 2017-05-28.
  18. "seals found at Karanpura" இம் மூலத்தில் இருந்து 2015-09-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923091700/http://m.bhaskar.com/article/referer/521/t/240/MAT-RAJ-OTH-c-194-161415-NOR.html?1722. 
  19. McIntosh 2008, ப. 221.
  20. McIntosh 2008, ப. 68,80,82,105,113.
  21. McIntosh 2008, ப. 62,74,412.
  22. India Archaeology 1976-77, A Review. Archaeological Survey of India.Page 19.
  23. Singh, Upinder (2008). A history of ancient and early medieval India : from the Stone Age to the 12th century. New Delhi: Pearson Education. பக். 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131711200. https://books.google.com/books?id=H3lUIIYxWkEC&dq=hulas%2Bsaharanpur+district&q=rangpur#v=onepage&q=malwan&f=false. 
  24. https://www.researchgate.net/publication/315796119_Fish_Otoliths_from_Navinal_Kachchh_Gujarat_Identification_of_Taxa_and_Its_Implications
  25. Mittra, Debala, தொகுப்பாசிரியர் (1983). "Indian Archaeology 1980-81 A Review". Indian Archaeology 1980-81 a Review (Calcutta: Government of India, Archaeological Survey of India): 14. http://asi.nic.in/nmma_reviews/Indian%20Archaeology%201980-81%20A%20Review.pdf. பார்த்த நாள்: 2019-09-26. 
  26. Archaeological Survey of India
  27. Department of Archaeology and Ancient History, Maharaja Sayyajirao University, Baroda. Excavations at Shikarpur, Gujarat 2008-2009."Archived copy" (PDF). Archived from the original (PDF) on 21 செப்தெம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2012.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  28. Possehl, Gregory L. (2003). The Indus Civilization : A Contemporary perspective ([3rd printing]. ). New Delhi: Vistaar Publications. பக். 79–80. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8178292915. https://books.google.com/?id=pmAuAsi4ePIC&printsec=frontcover&dq=possehl#v=onepage&q=Sutkagan&f=false. 
  29. SHIRVALKAR, PRABODH (2012). "A PRELIMINARY REPORT OF EXCAVATIONS AT KOTADA BHADLI, GUJARAT: 2010-11". Bulletin of the Deccan College Research Institute 72/73: 55–68. 
  30. (in en) Indian History. Tata McGraw-Hill Education. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781259063237. https://books.google.com/?id=ORnlAAAAQBAJ&pg=SL1-PA42&lpg=SL1-PA42&dq=kalibangan+tiles#v=onepage&q=kalibangan%20tiles&f=false. 
  31. "Nageswara: a Mature Harappan Shell Working Site on the Gulf of Kutch, Gujarat". www.harappa.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-16.
  32. "What have been the most interesting findings about the Harappan Civilization during the last two decades?". www.harappa.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-16.
  33. "Hidden agenda testing models of the social and political organisation of the Indus Valley tradition" (PDF).

ஆதார நூற்பட்டியல் தொகு